1 00:00:22,272 --> 00:00:23,857 அம்மா, பாரு. 2 00:00:27,444 --> 00:00:28,946 சார்ல்ஸ் டிக்கன்ஸ் "கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்" 3 00:00:28,946 --> 00:00:30,447 பெற்றுக்கொண்டவர் பெயர் கெல்வின் ஏவன்ஸ் 4 00:00:36,036 --> 00:00:38,747 ஆர்எஃப் - இந்தப் புத்தகத்தை நன்கொடையாக அளித்தது த ரெம்சன் ஃபௌண்டேஷன் 5 00:00:40,916 --> 00:00:42,000 இது என்னது? 6 00:00:43,085 --> 00:00:44,586 ஒரு துப்பு. 7 00:00:46,380 --> 00:00:50,634 சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் 8 00:00:50,634 --> 00:00:54,847 முப்பது வருடங்களுக்கு முன் 9 00:00:54,847 --> 00:00:56,431 அடக் கடவுளே, அது ஒரு லீமோ! 10 00:00:59,351 --> 00:01:00,561 அது ஒரு கேடிலெக்! 11 00:01:01,311 --> 00:01:04,647 கண்டிப்பா அவர் ஒரு பேஸ்பால் விளையாட்டு வீரரா இருப்பார். இல்ல, ஒரு திரைப்பட நடிகர். 12 00:01:31,717 --> 00:01:36,471 சார்... நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கணும். பிளீஸ். 13 00:01:37,723 --> 00:01:41,351 என் செக்ரெட்டரி இன்னிக்கு, சற்று நேரத்துக்கு முன்னாடி, ஃபோன்ல தப்பான தகவலை கொடுத்துட்டாங்க. 14 00:01:41,935 --> 00:01:43,145 அதெப்படி? 15 00:01:43,145 --> 00:01:45,647 கெல்வின் ஏவன்ஸ் இங்கே இருந்தான். 16 00:01:47,608 --> 00:01:48,859 ஆம், அவனை தத்து எடுத்துக் கொண்டார்கள். 17 00:01:48,859 --> 00:01:50,068 இல்லை, சார். 18 00:01:50,944 --> 00:01:52,404 அவன் நம்மைவிட்டுப் போய்விட்டான். 19 00:01:54,990 --> 00:01:56,617 காசநோய். 20 00:02:00,120 --> 00:02:01,663 இது எப்போ நடந்தது? 21 00:02:01,663 --> 00:02:03,040 கடந்த கோடைகாலத்தில். 22 00:02:14,635 --> 00:02:16,970 கெல்வின் ஒரு சிறந்த பையன். 23 00:02:17,721 --> 00:02:20,432 அறிவியல் விஷயங்கள்ல அவனுக்கு ஒப்பில்லாத திறமையுண்டு. 24 00:02:21,183 --> 00:02:24,561 அவன் ரெம்சன் ஃபௌண்டேஷன் கொடுத்த ஆதரவால நிறைய பயன் அடைஞ்சான். 25 00:02:39,952 --> 00:02:41,036 கெல்வின். 26 00:02:41,620 --> 00:02:45,040 என்னை மன்னிச்சிடு... ஆனால் அவருக்கு உன்னை எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. 27 00:04:02,618 --> 00:04:04,995 போன்னி கார்மஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 28 00:04:19,927 --> 00:04:20,761 சப்பர் அட் சிக்ஸ் மேடைக்குச் செல்லும் நுழைவாயில் 29 00:04:22,095 --> 00:04:25,474 - சப்பர் அட் சிக்ஸ். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? - சப்பர் அட் சிக்ஸ். சரி. 30 00:04:27,351 --> 00:04:29,061 அதெல்லாம் யாருக்கு? 31 00:04:29,061 --> 00:04:31,313 அடுத்த முறை, எங்கிட்ட சொல்லுங்க. நான் ஒரே ஃபுளாரிஸ்ட்டை ஏற்பாடு செய்யறேன். 32 00:04:31,313 --> 00:04:34,024 நான் அலுவலகத்துக்காக அதை வாங்கினேன். நீங்கதான் இங்கே நல்லாயில்லன்னு சொன்னீங்களே. 33 00:04:34,816 --> 00:04:36,777 அது அப்படி இருக்கக் கூடாதுன்னு விரும்பினேன். 34 00:04:38,612 --> 00:04:40,030 சரி, ரொம்ப அழகா இருக்கு. 35 00:04:42,658 --> 00:04:44,368 - அது அவ்வளவு கனமா இல்ல... - நன்றி. 36 00:04:44,368 --> 00:04:46,870 காலை வணக்கம். த ரெம்சன் ஃபௌண்டேஷன் திரும்பி அழைக்கவில்லை. 37 00:04:46,870 --> 00:04:48,121 நான் கேட்க நினைக்கல. 38 00:04:48,121 --> 00:04:50,082 ஆனால் நீ அதைப் பத்தி பேசியதால சொல்றேன், அது அவங்களை ரொம்ப மோசமா காட்டுது. 39 00:04:50,082 --> 00:04:52,292 நான் எனக்கு வந்த கால்களை கண்டிப்பா அன்னிக்கே, திரும்பி 40 00:04:52,292 --> 00:04:53,752 - அழைக்கிறது வழக்கம். - நிச்சயமா. 41 00:04:53,752 --> 00:04:55,462 ஏன்னா நீ ஒரு நாகரிக சமூகத்துல இருக்கும் ஒரு குடிமகள். 42 00:04:55,462 --> 00:04:57,297 அதாவது, மேட் கிட்டத்தட்ட தானே அங்கே போய்விடும் நிலையில இருக்கிறாள். 43 00:04:57,297 --> 00:04:58,298 - மிஸ் ஸாட். - மேலும்... 44 00:04:58,298 --> 00:04:59,216 - நன்றி. - சரி. 45 00:04:59,216 --> 00:05:00,592 - ஹலோ. - ஹை. 46 00:05:00,592 --> 00:05:01,593 அப்படியா? 47 00:05:01,593 --> 00:05:03,762 ஆனால், பரவாயில்ல. அதனால ஒண்ணுமில்ல. 48 00:05:04,471 --> 00:05:06,014 ஃப்ரான், நீ எப்பவுமே எதுவும் சொல்றதில்லை. 49 00:05:07,224 --> 00:05:09,643 அது சொந்த விஷயம். இதுக்கும் நிகழ்ச்சிக்கும் சம்மந்தம் இல்லை. அதனால நீ விரும்பினா... 50 00:05:09,643 --> 00:05:12,604 அது ரொம்ப சௌரியம்தான், ஏன்னா நானும் நீயும் நண்பர்கள், அதே சமயம் சக ஊழியர்களும் கூட. 51 00:05:13,939 --> 00:05:15,148 எனக்கு வால்டர் மீது ஒரு இது இருக்கு. 52 00:05:17,442 --> 00:05:19,695 - இது அற்புதமான விஷயம். - புன்னகை செய்யறதை நிறுத்து, சொல்றேன். 53 00:05:19,695 --> 00:05:22,990 என்னால நிறுத்த முடியல. நான் நிறுத்த மாட்டேன். நீ அவரை டின்னருக்கு கூப்பிடு. 54 00:05:23,532 --> 00:05:26,785 - இல்ல. ஆண்தான் அழைக்கணும். - அவர் கூச்சப்பட்டால், செய்யமாட்டார். 55 00:05:26,785 --> 00:05:28,579 ஒரு மனிதருக்கு தன்னம்பிக்கை இல்லாதபோது, அவர் அப்படிச் செய்யமாட்டார். 56 00:05:28,579 --> 00:05:31,582 ஆனால் பெண்ணுக்கு தன்னம்பிக்கை இருந்தால் செய்யலாம். அவள் தன்னை அறிந்திருந்தால் அப்படிச் செய்ய வேண்டாம். 57 00:05:32,291 --> 00:05:33,500 நான் சொன்னதையே மறந்துடு. 58 00:05:33,500 --> 00:05:35,919 அது முடியவே முடியாது. எனக்கு ஞாபக சக்தி அதிகம். நீ... 59 00:05:35,919 --> 00:05:38,672 - ஆம், ஹலோ. ஹை. - ஃபில் உங்க இருவரையும் மேடைக்கு அழைக்கிறார். 60 00:05:38,672 --> 00:05:41,466 - வால்டர் அங்கே இருக்கிறாரா? - ஆம், வால்டரும் அங்கே இருக்கிறார். 61 00:05:41,466 --> 00:05:43,260 நாங்க இப்போ வரோம். 62 00:05:43,260 --> 00:05:44,553 - நன்றி. - பரவாயில்லை. 63 00:05:44,553 --> 00:05:46,847 - இதைப் பார்க்க ஆவலா இருக்கேன். வால்டர்? - மறந்துடு. 64 00:05:46,847 --> 00:05:48,640 என்னால முடியாது. வால்டர். 65 00:05:48,640 --> 00:05:51,018 இனி ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நம்ம ஸ்பான்சர் இல்ல. 66 00:05:51,018 --> 00:05:53,437 ஏன்? நம்ம நிகழ்ச்சி நல்லாதானே போகுது. 67 00:05:54,104 --> 00:05:57,482 அவங்க அரசியலும், சமையலறையும் கலக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. 68 00:05:58,525 --> 00:06:01,111 - அமைதி கிடைக்கட்டும். - உனக்கு இது வேடிக்கையா இருக்கா? 69 00:06:01,111 --> 00:06:04,406 - இல்லை, இனப் பாகுபாடு எனக்கு வேடிக்கையா இல்ல. - சரி. சரி. 70 00:06:05,032 --> 00:06:07,951 எனவே நமக்கான வேலை இப்போ தெளிவாகிடுச்சு. நாம இன்னொரு ஸ்பான்சரைத் தேடணும். 71 00:06:07,951 --> 00:06:12,414 இல்லை. என் அழைப்புகளை ஒரு பூனை உணவு நிறுவனம் கூட ஏற்பதில்லை. 72 00:06:12,414 --> 00:06:13,832 என் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? 73 00:06:14,917 --> 00:06:16,001 என்ன தெரியுமா? 74 00:06:16,001 --> 00:06:20,756 நீ என்னை கிண்டலடிக்கிற, அவமானப் படுத்தற, என் ஸ்பான்சர்களை உதறி தள்ளற. 75 00:06:20,756 --> 00:06:23,800 இந்த நிகழ்ச்சி ஏதோ பொதுநலச் சேவைன்னு நினைக்கிற. 76 00:06:23,800 --> 00:06:26,678 சரி, என்ன தெரியுமா? இது அப்படி இல்ல. இது தொழில். 77 00:06:26,678 --> 00:06:28,055 இதோ உனக்கான கெடு. 78 00:06:28,055 --> 00:06:30,974 ஒரு ஸ்பான்சரைக் கண்டுபிடிக்க இரு வாரம் கெடு, இல்ல நீ வெளியே போக வேண்டியதுதான். 79 00:06:31,642 --> 00:06:33,685 இந்த கடைசி சில நாட்களை என்ஜாய் பண்ணு. 80 00:06:35,646 --> 00:06:39,107 நமக்கு இந்த ஃபிரீவே கட்டுமானத்தை நிறுத்த இன்னும் ஒரு வாக்குதான் தேவை. 81 00:06:39,107 --> 00:06:41,026 அதுல முடிவு எடுக்காதவங்க, தாம்சனும் சம்மர்ஸும் தான், 82 00:06:41,026 --> 00:06:43,195 இருவரும் ரொம்ப சௌரியமா, என் அழைப்புகளை ஏற்கவே மறுக்குறாங்க. 83 00:06:46,198 --> 00:06:47,324 நிஜமாவா? 84 00:06:48,742 --> 00:06:49,785 மிக்க நன்றி. 85 00:06:54,122 --> 00:06:55,415 எல்லாம் நலமா? 86 00:06:55,415 --> 00:06:56,834 நமக்குக் கிடைச்சிடுச்சு. 87 00:06:58,961 --> 00:07:01,839 தாம்சன் இல்ல, ஆனால் சம்மர்ஸ் ஒத்துக்கொள்கிறார்! அவருடைய வாக்கு நமக்குதான். 88 00:07:02,422 --> 00:07:03,590 உறுதியா சொல்றீங்களா? 89 00:07:03,590 --> 00:07:06,218 இந்த நிலைக்கு வர, ஏழு வருடங்களும் முன்னூறு மனுக்களும், ஆறு முறை 90 00:07:06,218 --> 00:07:09,012 சாக்ரமெண்டோவிற்கு போய் வந்ததும் தான் ஆகியிருக்கு, ஆனால், கண்டிப்பா, நம்ம 91 00:07:09,012 --> 00:07:10,764 அழகான சம்மர்ஸுடைய வாக்கு நமக்கு இருக்கே. 92 00:07:11,598 --> 00:07:13,559 - நான் ஏதாவது செய்யணுமா? - ஆமாம். 93 00:07:13,559 --> 00:07:15,435 மனிதர் செவ்வாய்க்கிழமை வாக்களிப்புக்கு முன்னால், இதய வலியால இறந்துவிடாமல் 94 00:07:15,435 --> 00:07:17,688 - இருக்கணும்னு வேண்டிக்கொள். - நான் ஆலயத்துக்குத்தான் போகிறேன். 95 00:07:17,688 --> 00:07:21,066 போய்வா. ஆம்! 96 00:07:21,066 --> 00:07:23,944 {\an8}ஹால்லிஸ், மாரிஸன் & டக்லஸ் அவர்களின் சட்ட அலுவலகங்கள் 97 00:07:24,528 --> 00:07:26,071 - அவள் மிக புத்திசாலி. - அடக் கடவுளே. 98 00:07:26,071 --> 00:07:27,948 அவங்களே கூப்பிட்டாங்கன்னு என்னால நம்பவே முடியல. 99 00:07:29,283 --> 00:07:30,993 - அவங்க நேர்ல வந்தா? - காலை வணக்கம். 100 00:07:32,160 --> 00:07:33,954 ஊருக்கு மீண்டும் உங்களை வரவேற்கிறோம், சார். 101 00:07:35,205 --> 00:07:36,456 எனக்குப் புரியாத விஷயம் ஏதோ இருக்கா? 102 00:07:36,456 --> 00:07:38,542 எலிசபெத் ஸாட் அவங்களே அழைச்சாங்க, 103 00:07:38,542 --> 00:07:40,460 ஒரு முறை இல்ல, ரெண்டு முறையில்ல, மூன்று முறை. 104 00:07:40,460 --> 00:07:41,753 யார் எலிசபெத் ஸாட்? 105 00:07:41,753 --> 00:07:45,382 எலிசபெத் ஸாட்! சப்பர் அட் சிக்ஸ்? டிவியில வருவாங்களே. 106 00:07:45,382 --> 00:07:47,134 அவங்க என்னுடன் என்ன பேச விரும்புறாங்க? 107 00:07:47,134 --> 00:07:48,427 அதைத்தான் நாங்களும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கோம். 108 00:07:48,427 --> 00:07:50,304 சரி, நான் ரொம்ப ஆவலா இருக்கேன். 109 00:07:50,304 --> 00:07:52,431 அவளை ஃபோன்ல அழையுங்க, பிளீஸ். 110 00:08:11,742 --> 00:08:15,495 சரி, காளான்களை ஸ்டஃப் செய்வதுக்கெல்லாம் கைத்தட்டிக்கிட்டு இருக்க முடியாது. 111 00:08:17,956 --> 00:08:21,418 உலகத்துல 10,000 வகையான காளான் வகைகள் உள்ளன, ஆனால் அதுல நாலோ 112 00:08:21,418 --> 00:08:23,378 ஐந்தோ சதவீதம்தான் உண்ணக்கூடியதுன்னு உங்களுக்குத் தெரியுமா? 113 00:08:25,964 --> 00:08:28,217 நீங்க யோசிச்சுப் பார்த்தா, அது கொஞ்சம் மனிதர்களைப் போலத்தான். 114 00:08:28,217 --> 00:08:30,886 நாலிலிருந்து ஐந்து சதவீதம் தான் என்னால கசித்துக்கொள்ள முடியறவங்களா இருக்காங்க, 115 00:08:30,886 --> 00:08:31,970 நீங்க ஒத்துக்குறீங்களா? 116 00:08:34,722 --> 00:08:37,267 இந்த காளான்கள், நல்லா வதங்கும்வரை, 117 00:08:37,267 --> 00:08:38,809 நாம ஏன் கேள்வி நேரத்தை வச்சுக்கக் கூடாது? 118 00:08:40,520 --> 00:08:42,063 இங்கேதான். 119 00:08:43,482 --> 00:08:44,900 பின்னாடியிலிருந்து ரெண்டாவது வரிசை. 120 00:08:46,610 --> 00:08:47,819 வொர்திங்டன் டாட்ஜ் வழங்கும் "சப்பர் அட் சிக்ஸ்" எலிசபெத் ஸாட் 121 00:08:47,819 --> 00:08:50,989 மிஸ் ஸாட், நிச்சயம் உங்களுக்கு என்னை ஞாபகமிராது. ஆனால் சில மாசத்துக்கு முன் நான் இங்கே வந்தேன். 122 00:08:51,657 --> 00:08:54,159 டாக்டர் ஃபில்லிஸ், ஒபன் ஹார்ட் சர்ஜன். நிச்சயம் ஞாபகம் இருக்கு. 123 00:08:55,327 --> 00:08:57,246 சரி, இன்னும் அப்படி ஆகல. 124 00:08:57,246 --> 00:09:00,707 ஆனால் எனக்கு யூஎஸ்சி மெடிக்கல் பள்ளியில் அட்மிஷன் கிடைச்சிருக்கு. 125 00:09:03,043 --> 00:09:05,963 உங்களுக்குக் கிடைக்கும்னு எனக்குத் தெரியும். 126 00:09:06,672 --> 00:09:09,925 நான்தான் வகுப்புலயே மிக வயதானவள், மேலும் எனக்கு எப்போதும் களைப்பா இருக்கும், 127 00:09:09,925 --> 00:09:12,845 ஆனால் ஒருபோதும் இவ்வளவு சந்தோஷமா இருந்ததில்லை. 128 00:09:13,929 --> 00:09:16,181 இப்போ, இதுக்குத்தான் நீங்க கைத்தட்டணும். 129 00:09:28,569 --> 00:09:31,613 எனக்கே தெரியாத ஒண்ணு ஏதோ எங்கிட்ட இருக்குன்னு நீங்க தெரிஞ்சுகிட்டதுக்கு, 130 00:09:31,613 --> 00:09:33,574 நான் நன்றி சொல்ல விரும்புறேன். 131 00:09:36,702 --> 00:09:37,703 மிக்க நன்றி. 132 00:09:41,665 --> 00:09:42,916 வேறு ஏதாவது கேள்விகள் இருக்கா? 133 00:09:42,916 --> 00:09:44,668 இந்தப் பக்கம். 134 00:09:45,586 --> 00:09:47,004 சப்பர் அட் சிக்ஸ் 135 00:09:47,004 --> 00:09:50,382 தெரியுமா, இன்னிக்கு இருந்த உற்சாகத்துல, 136 00:09:50,382 --> 00:09:55,345 ஒரு முக்கிய வாய்ப்பைப் பத்தி உங்ககிட்டச் சொல்ல மறந்துட்டேன். பெரியது. 137 00:09:55,929 --> 00:09:56,930 நான் கேட்டுட்டு இருக்கேன். 138 00:09:56,930 --> 00:09:59,057 ஊட்ரூ வில்சன் நடுநிலைப் பள்ளி உங்களை 139 00:09:59,057 --> 00:10:00,934 அவங்களுடைய ஆறாவது கிரேட் அறிவியல் விழாவின் நீதிபதியா இருக்க அழைச்சிருக்காங்க. 140 00:10:03,061 --> 00:10:05,856 நான் உங்க சார்புல, மரியாதையா முடியாதுன்னு சொல்லிட்டேன். 141 00:10:06,857 --> 00:10:10,319 இல்ல. நான் செய்யறேன். என் கவனத்தை திசைதிருப்ப எதுவும் செய்வேன். 142 00:10:11,278 --> 00:10:12,321 நிஜமாவா? 143 00:10:12,321 --> 00:10:13,655 நிஜமாத்தான். 144 00:10:14,406 --> 00:10:16,617 நான் அவங்களை அழைத்து அப்படியே சொல்றேன். 145 00:10:18,744 --> 00:10:20,245 வால்டர், நீங்க இப்போது யாரையாவது டேட் செய்யறீங்களா? 146 00:10:20,245 --> 00:10:23,207 இல்ல. நான் தனியா இருந்தால்தான் சிறப்பா இயங்குவேன். 147 00:10:24,208 --> 00:10:25,876 நானும் அப்படித்தான் நினைச்சேன். 148 00:10:26,835 --> 00:10:28,879 - அப்புறம் என்ன ஆச்சு? - நான் கெல்வினை சந்திச்சேன். 149 00:10:32,132 --> 00:10:36,261 ஒருவேளை அதற்கு வாய்ப்பு வந்தால்... காதல், அதாவது... 150 00:10:37,930 --> 00:10:39,264 நீங்க அதைக் கவனிக்கணும்னு விரும்புறேன். 151 00:10:42,184 --> 00:10:44,269 கடவுளே, நான் ஏதோ ஒரு மனோதத்துவ நிபுணரின் அலுவலகத்துல இருப்பது போல உணர்கிறேன். 152 00:10:45,687 --> 00:10:46,688 சரி... 153 00:10:48,440 --> 00:10:50,651 நான் இன்னும் நிறைய விளம்பரதாரர்களை அழைக்கப் போறேன். 154 00:10:50,651 --> 00:10:51,735 வால்டர்... 155 00:10:55,364 --> 00:10:59,826 இதைச் செய்யணும்னு... நான் கேட்கவோ, ஆசைப்படவோ இல்லை. 156 00:11:01,245 --> 00:11:04,665 இப்போ இந்த நிகழ்ச்சியே என் கையைவிட்டு போயிடும்னு தெரியும்போது, நான், 157 00:11:06,333 --> 00:11:09,002 என்னிடமிருந்து ஒரு பாகமே பிரிந்ததுப் போறதுப் போல உணர்கிறேன். 158 00:11:11,755 --> 00:11:12,923 எலிசபெத். 159 00:11:13,423 --> 00:11:14,883 நான் உங்கத் தயாரிப்பாளர். 160 00:11:15,509 --> 00:11:21,139 உங்களுக்கு ஆதரவு தருவது, என் தொழில் தர்மம் மற்றும் என் சொந்த விருப்பமும் கூட. 161 00:11:22,808 --> 00:11:24,518 என்ன ஆனாலும், அது மாறாது. 162 00:11:26,395 --> 00:11:27,396 மிக்க நன்றி. 163 00:11:27,396 --> 00:11:28,856 இப்போ, நான் கிளம்பணும், 164 00:11:28,856 --> 00:11:32,192 உங்க சார்புல, நான் பதிலுக்கு ஒரு ஆறாம் வகுப்பு மாணவர்களை சந்திக்கணும். 165 00:11:44,746 --> 00:11:45,998 எலிசபெத் ஸாட். 166 00:11:46,915 --> 00:11:48,917 ஆமாம், நிஜமான எலிசபெத் ஸாட் தான். 167 00:11:51,336 --> 00:11:54,673 ஆம், ஆனால் நான் நேரில் பேச விரும்புறேன். உங்க முகவரி என்ன? 168 00:12:01,972 --> 00:12:03,849 - நீ பதட்டமா இருக்கயா? - இல்லையே. 169 00:12:04,600 --> 00:12:07,269 ஏன்னா பதட்டமா இருந்தாலும் பரவாயில்லை. 170 00:12:07,269 --> 00:12:09,730 - எனக்குப் பதட்டமா இருக்கு. - அப்படியா? 171 00:12:10,939 --> 00:12:11,857 ஆமாம். 172 00:12:14,109 --> 00:12:15,527 இது நீயும் நானும் தான். 173 00:12:22,492 --> 00:12:24,745 இந்த கார் மேலே 174 00:12:24,745 --> 00:12:26,288 அமெரிக்கன் கெமிஸ்ட்ரி காலாண்டு பதிப்பு 175 00:12:29,666 --> 00:12:33,629 நான் இதைப் பார்த்ததேயில்ல. இதுல ரொம்ப சீரியஸா இருக்காரே. 176 00:12:35,464 --> 00:12:38,550 தாமதமானதுக்கு மன்னிக்கணும். ஹேரி வில்சன். 177 00:12:39,301 --> 00:12:41,303 என் மனைவியிடம் நீங்க வருவது குறித்து சொன்னேன், 178 00:12:41,303 --> 00:12:44,389 அப்போ, நீங்க எல்விஸ் மாதிரி அவள் கத்தினாள். 179 00:12:44,389 --> 00:12:46,099 நான் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? 180 00:12:48,018 --> 00:12:51,772 திரு வில்சன், இது கொஞ்சம் வினோதமா தோணலாம், 181 00:12:51,772 --> 00:12:54,858 ஆனால் கெல்வின் ஏவன்ஸைப் பத்தி சில கேள்விகளைக் கேட்கத்தான் இங்கே வந்திருக்கோம். 182 00:12:57,110 --> 00:13:00,280 எதுக்காக ரெம்சன் ஃபௌண்டேஷன் கெல்வினுக்கு அவர் வாழ்ந்தவரை நிதியுதவி செய்தது? 183 00:13:02,157 --> 00:13:04,743 என்னை மன்னிக்கணும், உங்களுக்கு கெல்வின் ஏவன்ஸை எப்படித் தெரியும்? 184 00:13:05,869 --> 00:13:07,204 அவர்... 185 00:13:11,208 --> 00:13:13,502 இது மேட், என் மகள். 186 00:13:14,419 --> 00:13:15,754 எனக்கும் கெல்வினுக்கும் பிறந்தவள். 187 00:13:23,637 --> 00:13:24,721 பிளீஸ்... 188 00:13:25,472 --> 00:13:31,353 பிளீஸ், காத்திருங்க. நான் அதை விளக்க முடியாது. 189 00:13:38,652 --> 00:13:40,070 அடக் கடவுளே. 190 00:13:53,959 --> 00:13:54,960 ஹை. 191 00:13:54,960 --> 00:13:57,838 மிஸ் பார்க்கர், உங்களுக்கு ஒரு அவசரத் தகவல் கொடுக்க வந்தேன். 192 00:14:18,775 --> 00:14:22,988 நீதான் மேட்னு நினைக்கிறேன். நான் ஏவரி. 193 00:14:23,739 --> 00:14:25,115 நான் உன்னுடைய... 194 00:14:27,743 --> 00:14:28,869 கெல்வினின் தாயார். 195 00:14:31,121 --> 00:14:32,247 பரவாயில்லை. 196 00:14:36,210 --> 00:14:37,294 - மிக்க நன்றி. - சரி. 197 00:14:39,004 --> 00:14:40,005 பரவாயில்லை, பன்னி. 198 00:14:50,140 --> 00:14:51,892 நான் நிறைய கேட்கணும்னு நினைக்கிறேன், ஆனால்... 199 00:14:51,892 --> 00:14:54,603 எங்க அப்பாவை ஏன் அனாதைக் குழந்தைகள் விடுதியில சேர்த்தீங்க? 200 00:14:57,356 --> 00:14:58,815 நான்... 201 00:15:02,653 --> 00:15:05,155 பரவாயில்லைன்னா, நான் ஆரம்பத்திலிருந்து சொல்லலாம்னு நினைக்கிறேன். 202 00:15:09,326 --> 00:15:10,661 எனக்கு 16 வயசாக இருந்தபோது, 203 00:15:11,745 --> 00:15:15,499 நான் தவறுதலா கர்ப்பம் ஆகிட்டேன். 204 00:15:19,294 --> 00:15:23,674 இந்தாங்க. சரிதான். லேசா பிடியுங்க. 205 00:15:23,674 --> 00:15:27,177 ஒரு குழந்தைக்குத் தாயாவது தான் எனக்குக் கிடைச்சதுலயே மிகப் பெரிய பேறுன்னு 206 00:15:27,177 --> 00:15:29,304 நான் நினைக்கிறேன். 207 00:15:30,722 --> 00:15:32,724 ஆனால், என் வாழ்க்கையில் நடந்த மற்ற பல விஷயங்களை போல, 208 00:15:32,724 --> 00:15:36,854 என் பெற்றோர்களுக்கு வேற திட்டங்கள் இருந்தன, என்னால அதை மீற முடியல. 209 00:15:36,854 --> 00:15:38,689 இல்லை. பிளீஸ். இல்லயில்ல. இல்ல. 210 00:15:41,775 --> 00:15:43,443 அவங்க அவனை எங்கே எடுத்துட்டுப் போனாங்கன்னு தெரியலை. 211 00:15:44,111 --> 00:15:45,529 அவனுடைய படம்கூட எங்கிட்ட கிடையாது. 212 00:15:47,114 --> 00:15:51,660 ஆனால் ஒரு ஆசையை மட்டும் அவங்க பூர்த்தி செய்தாங்க, அது தான் அவன் பெயர். கெல்வின். 213 00:15:53,370 --> 00:15:55,956 எனக்கு அவனை சில நிமிடங்கள் தான் தெரியும், 214 00:15:55,956 --> 00:16:00,419 ஆனால் அவனுடைய பிறப்பு என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. 215 00:16:02,880 --> 00:16:04,089 எனக்கு 25 வயது ஆனதும், 216 00:16:04,089 --> 00:16:06,925 எனக்குன்னு இருந்த டிரஸ்ட் நிதியை பயன்படுத்த முடிந்தது, 217 00:16:06,925 --> 00:16:11,138 அதனால நான் ஒரு வக்கீலின் உதவியுடன் கெல்வினைத் தேடினேன். 218 00:16:11,138 --> 00:16:13,599 வில்சன் எனக்குத் தந்தை மாதிரி ஆயிட்டார். 219 00:16:14,892 --> 00:16:17,394 நான் த ரெம்சன் ஃபௌண்டேஷனை தொடங்கி, 220 00:16:17,394 --> 00:16:21,356 {\an8}சுமார் 300-மைல் சுற்றில் உள்ள சிறுவர்களின் விடுதிகளுக்கு நிதியை நன்கொடையா கொடுத்து 221 00:16:21,356 --> 00:16:23,275 {\an8}தூரத்திலிருந்தாவது அவனுக்கு உதவி செய்யலாமேன்னு நம்பினேன். 222 00:16:23,275 --> 00:16:24,276 {\an8}பொதுவான முன்னேற்ற திட்டம் 223 00:16:25,068 --> 00:16:26,153 நாங்க தேடுவதை நிறுத்தவேயில்ல. 224 00:16:29,031 --> 00:16:30,949 அப்புறம், ஒரு நாள், 225 00:16:30,949 --> 00:16:35,412 திடீர்னு மேக மூட்டம் கலைந்து, வானம் வழிவிட்டது போல, 226 00:16:35,412 --> 00:16:37,581 வில்சன் அவனை கண்டுபிடித்தார், 227 00:16:38,916 --> 00:16:42,711 ஆனால் அவன் சமீபத்தில்தான் காலமாகிவிட்டதாக அறிந்துகொண்டார். 228 00:16:47,299 --> 00:16:50,135 அந்த நம்பிக்கை பலூன் உடைவது போல உடைந்துவிட்டது. 229 00:16:51,887 --> 00:16:52,971 நான் ரொம்ப வருத்தப்பட்டேன். 230 00:16:54,264 --> 00:16:56,808 தசாப்தங்களுக்குப் பிறகு, ஒரு பத்திரிகை அட்டையில் நான் 231 00:16:57,643 --> 00:17:02,105 அவனைத் திரும்பவும் பார்த்தேன். 232 00:17:15,618 --> 00:17:17,119 அமெரிக்கன் கெமிஸ்ட்ரி 233 00:17:17,119 --> 00:17:20,457 யார் அற்புதங்கள் நடக்க காரணம் என்பது பத்தி எல்லாம் எனக்கு அக்கறை இல்லை. 234 00:17:20,958 --> 00:17:23,292 இந்த அற்புதம் என்னுடையதா என்பது மட்டும்தான் என் கவலையாக இருந்தது. 235 00:17:24,586 --> 00:17:28,173 {\an8}நான் கடிதத்துக்கு மேல் கடிதமா எழுதினேன், அவனை சந்திக்க ஒரு வாய்ப்புக் கேட்டு... 236 00:17:28,173 --> 00:17:29,550 {\an8}ஹேஸ்டிங்க்ஸ் ஆய்வு லேப் கெல்வின் ஏவன்ஸ் 237 00:17:29,550 --> 00:17:31,134 ...ஆனால் எனக்கு பதிலே கிடைக்கவில்லை. 238 00:17:34,721 --> 00:17:36,014 அதுக்கு அப்புறம் ஒருநாள்... 239 00:17:39,685 --> 00:17:42,896 ஒரு வக்கீல் அலுவலகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 240 00:17:42,896 --> 00:17:44,815 அது நிறுத்தவும் மற்றும் இனி செய்யாமல் இருப்பதற்குமான கோரிக்கை. 241 00:17:45,983 --> 00:17:47,359 அவன் என்னை வெறுத்ததாக நினைத்தேன். 242 00:17:48,110 --> 00:17:50,153 என்னுடன் எந்த சம்மந்தத்தையும் அவன் விரும்பவில்லை என நினைத்தேன். 243 00:17:50,779 --> 00:17:54,658 மேலும் அவனுக்கு எல்லா உரிமையும் இருந்தது. வந்து, அவனிடத்தில் நானும் என்னை வெறுத்திருப்பேன். 244 00:17:58,704 --> 00:18:00,080 உங்க வீட்டுப் பக்கமா ஒருநாள் வந்தேன். 245 00:18:01,456 --> 00:18:05,002 நீங்க இருவரும் சேர்ந்து இருப்பதைக் கண்டேன். 246 00:18:06,336 --> 00:18:08,172 அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான். 247 00:18:08,922 --> 00:18:10,174 ரொம்ப அமைதியா இருந்தான். 248 00:18:13,594 --> 00:18:16,221 அதனால, இனி அவனைப் பத்தி நான் கவலைப்பட வேண்டியதில்லை என அறிந்தேன். 249 00:18:21,768 --> 00:18:24,271 அவனுக்கு குழந்தை இருப்பது எனக்குத் தெரிந்து இருந்தால்... 250 00:18:27,858 --> 00:18:29,318 என்னை மன்னிச்சிடுங்க. 251 00:18:30,527 --> 00:18:32,196 நீங்க இறந்துவிட்டதாக அவர் நினைத்தார். 252 00:18:33,989 --> 00:18:36,074 அப்படி நம்ப, அவன் எவ்வளவு அப்பாவி. 253 00:18:38,869 --> 00:18:40,204 சொல்லுங்க, 254 00:18:41,705 --> 00:18:43,040 நான் அனுபவிக்காதது என்னவெல்லாம் உள்ளது? 255 00:18:44,041 --> 00:18:45,751 இந்த மனிதன் யார்? 256 00:18:48,712 --> 00:18:52,758 அவர் ஒரு பெரிய புத்திசாலி, மரியாதையான, அன்பான மனிதர். 257 00:18:56,678 --> 00:18:59,806 ரொம்ப வேடிக்கையா டான்ஸ் ஆடுபவர். 258 00:18:59,806 --> 00:19:03,685 நானும் வேடிக்கையா டான்ஸ் ஆடுபவள்தான். நீயும் அப்படித்தானா? 259 00:19:05,521 --> 00:19:06,688 எனக்குத் தெரியாது. 260 00:19:09,483 --> 00:19:14,154 என்னன்னா, நாம ஒருவரையொருவர், கொஞ்சம் அதிகமா தெரிஞ்சுக்கலாம்னு நம்பினேன். 261 00:19:15,572 --> 00:19:17,241 கெல்வினைத் தெரிஞ்சுக்க எனக்கு வாய்ப்பு இல்லாமலே போனது, 262 00:19:17,241 --> 00:19:21,119 ஆனால் அவன் மகளைத் தெரிஞ்சுக்க நான் எதையும் செய்ய தயாரா இருக்கேன். 263 00:19:24,915 --> 00:19:26,542 என் பேத்தியை. 264 00:19:29,253 --> 00:19:34,842 நீண்ட பயணத்துக்குப் பின்தான் நாங்க இந்த நிலையை அடைந்தோம், ஆகவே எங்களுக்கு அவகாசம் தேவை. 265 00:19:35,676 --> 00:19:38,053 - கண்டிப்பா. - சரி. 266 00:19:40,472 --> 00:19:44,726 நீங்க அவருக்கு ஏன் கெல்வின்னு பேர் வச்சீங்க? அது குடும்பப் பெயரா? 267 00:19:45,519 --> 00:19:47,813 இல்லை, நான் ஜான் கெல்வினை நினைச்சு அந்த பெயரை அவனுக்கு வச்சேன். 268 00:19:49,147 --> 00:19:50,482 எனக்கு அவர் யாருன்னு தெரியாது. 269 00:19:51,942 --> 00:19:55,153 அவர் ஒரு 16-ம் நூற்றாண்டின் மத அறிஞர், 270 00:19:55,153 --> 00:19:58,365 அவருடைய புத்தகங்களைதான் உன் எள்ளுப் பாட்டி எனக்குப் படித்துக்காட்டுவார். 271 00:19:59,366 --> 00:20:01,451 அவர் விதியை மிகவும் நம்பினார். 272 00:20:04,496 --> 00:20:05,789 ஒரு மத அறிஞர். 273 00:20:07,916 --> 00:20:10,210 அது அவருக்கு சந்தோஷத்தைத் தந்திருக்கும். 274 00:20:13,338 --> 00:20:15,382 நீங்க சீக்கிரம் தொடர்பு கொள்வீங்கன்னு நம்பறேன். 275 00:20:36,820 --> 00:20:40,324 இன்னிக்கு நடந்ததைப் பத்தி பேசணுமா? உங்க பாட்டியை சந்திச்சதுப் பத்தி? 276 00:20:42,534 --> 00:20:45,621 மர்மத்துக்கு விடை கண்டுபிடிச்சதுக்கு அப்புறம், 277 00:20:46,121 --> 00:20:47,998 வித்தியாசமா உணர்வோம்னு, நான் நினைச்சேன். 278 00:20:50,042 --> 00:20:51,043 சரி, விஞ்ஞானத்துல, 279 00:20:51,043 --> 00:20:53,629 வழக்கமா, கண்டுபிடிப்புகள் இன்னும் அதிக கேள்விகளுக்கு வழி வகுக்கும். 280 00:20:54,838 --> 00:20:57,257 எனக்கு இனி கேள்விகள் கேட்க வேண்டாம். 281 00:20:57,799 --> 00:20:59,343 எனக்கு எங்க அப்பாதான் வேணும். 282 00:21:02,221 --> 00:21:05,474 தெரியும். நானும் அவரை ரொம்ப மிஸ் பண்ணறேன். 283 00:21:08,227 --> 00:21:10,979 ஆனால் உனக்குத் தெரியுமா, உன்னிடத்துல நான் அவரைப் பார்க்கிறேன். 284 00:21:11,563 --> 00:21:12,773 அப்படியா? 285 00:21:18,278 --> 00:21:21,532 உனக்கு கோபம் வரும்போது நீ புருவத்தைச் சுருக்குற விதம், தெரியுமா உனக்கு? 286 00:21:22,032 --> 00:21:24,409 இல்ல, ஒரே சமயத்துல நீ எப்படி மூணு புத்தகத்தை வாசிக்கிற? 287 00:21:25,118 --> 00:21:29,915 இல்ல, சில சமயத்துல, ரொம்ப யோசிக்கிற போது, நீ எப்படி சாப்பிட மறந்துடுவ? அதெல்லாம் அவர்தான். 288 00:21:32,501 --> 00:21:37,172 வேக்லிகிட்ட, கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் தான் அவருக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம்னு அப்பா சொல்லியிருக்கார். 289 00:21:37,923 --> 00:21:38,924 அதுதான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். 290 00:21:42,636 --> 00:21:45,222 உங்கிட்ட அந்த எண்களை வச்சு வண்ணம் தீட்டும் புத்தகம் இருக்குத் தெரியுமா? 291 00:21:47,099 --> 00:21:52,229 நீ சந்திக்கிற ஒவ்வொரு மனிதரையும், நீ போகும் ஒவ்வொரு இடத்தையும், 292 00:21:52,896 --> 00:21:56,692 உன் அப்பாவைப் பத்தி நீ படிக்கும் ஒவ்வொரு எழுத்தும், அவரை ஓவியம் தீட்டுறபோது சேர்க்கும் 293 00:21:57,234 --> 00:21:58,652 இன்னொரு வண்ணம்னு கற்பனை செய்துகொள். 294 00:22:01,864 --> 00:22:03,448 அது ஒரு உருவகம். 295 00:22:03,448 --> 00:22:04,533 ஆமாம். 296 00:22:06,285 --> 00:22:08,036 ஹே, நீ நாளைக்கு என்னுடன் ஹூக்கி விளையாடுறயா? 297 00:22:08,620 --> 00:22:10,539 இன்னிக்குக் கூடதான் நான் உங்களுடன் ஹூக்கி விளையாடினேன். 298 00:22:10,539 --> 00:22:13,000 தெரியும். நீ அதுல ரொம்ப திறமைசாலி ஆயிட்டு இருக்க. 299 00:22:21,842 --> 00:22:25,012 உங்க கண்கள் அந்த உருவத்தை இந்த சிகப்பு மற்றும் நீல ஃபில்டர்கள் வழியா பார்க்குறபோது, 300 00:22:25,012 --> 00:22:27,222 அந்த உருவம் உங்களை நோக்கி வருவதுப் போலவே இருக்கும். 301 00:22:30,684 --> 00:22:34,688 சரி, அது சிறுத்தையை நல்லா சித்தரிக்குற ஒரு வரைப்படம். நன்றி. 302 00:22:37,107 --> 00:22:38,609 சரி, நீ என்ன நினைக்கிற? 303 00:22:39,276 --> 00:22:41,236 எனக்கு வாழ்வியல் படிப்பு பரவாயில்லை. 304 00:22:43,530 --> 00:22:44,740 இங்கே என்ன வச்சிருக்காங்க? 305 00:22:45,324 --> 00:22:47,326 சரி, என் அப்பா ஒரு பேக்கரி வச்சிருக்கார், 306 00:22:47,826 --> 00:22:50,037 அதனால நான் பூஞ்சகாளானின் வளர்ச்சியை நிதானப்படுத்த, வெவ்வேறு சூழல்களில் 307 00:22:50,037 --> 00:22:51,663 கிடைக்கும் வித்தியாசமான விளைவுகளை சோதிக்க விரும்பினேன். 308 00:22:51,663 --> 00:22:54,166 அடடே. ஆம், அது உன் அப்பாவுக்கு ரொம்ப உதவியா இருக்குமே. 309 00:22:54,166 --> 00:22:55,709 நீ வளர்ந்த பின் பேக்கராக விரும்புறயா? 310 00:22:56,293 --> 00:22:59,379 இல்லை, நான் ஒரு உயிரியல் அறிஞராக விரும்புறேன். 311 00:23:00,214 --> 00:23:04,510 அப்படியா? சரி, நீ சார்ல்ஸ் டார்வினின் "டிசென்ட் ஆஃப் மேன்" படிச்சிருக்கியா? 312 00:23:05,093 --> 00:23:07,763 இல்ல, எர்வின் ஷ்ரோடிங்கரின் "வாட் இஸ் லைஃப்" படிச்சிருக்கியா? 313 00:23:07,763 --> 00:23:09,932 இதுவரை படிக்கல, ஆனால் படிப்பேன். மிக்க நன்றி. 314 00:23:11,058 --> 00:23:12,601 கண்டிப்பாக. உனக்கு என் நல்வாழ்த்துகள். 315 00:23:15,771 --> 00:23:18,649 - டிவியில உங்களைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்... - ரொம்ப நன்றி, பன்னி. 316 00:23:19,983 --> 00:23:21,818 ...ஆனால் அது உங்களுக்கு உகந்ததா எனக்குத் தோணல. 317 00:23:23,987 --> 00:23:24,988 நான் எங்கே இருக்கணும்? 318 00:23:24,988 --> 00:23:26,573 ஒரு லேபாரட்டரியில. 319 00:23:28,325 --> 00:23:29,826 சரி, நான் ஒரு தேர்வு செய்திருக்கேன். 320 00:23:29,826 --> 00:23:32,329 நான் ஒரு ஆயிரம் முறை மீண்டும் அந்த தேர்வை செய்வேன். 321 00:23:32,329 --> 00:23:33,705 ஆனால் நான் எப்போதுமே ஒரு கெமிஸ்ட்டாகத்தான் இருப்பேன். 322 00:23:34,206 --> 00:23:35,999 கெமிஸ்ட்டுகள் கெமிஸ்ட்ரிதானே செய்வாங்க. 323 00:23:45,175 --> 00:23:47,135 நோயல் 324 00:23:48,428 --> 00:23:50,222 சார்லி, இது போதுமான அளவு நீளம் உள்ளதா என சொல்லுங்க. 325 00:23:50,222 --> 00:23:53,183 இது ரொம்ப நீளமா இருக்கு. இது சிறப்பா இருக்கு. 326 00:23:53,183 --> 00:23:55,185 - இன்னும் கொஞ்சம் நீளமா இருக்கட்டும். - உறுதியா சொல்றயா? 327 00:23:57,938 --> 00:23:58,939 இன்னும் கொஞ்சம் நீளமா இருக்கட்டும். 328 00:24:00,274 --> 00:24:02,568 வருடம் முழுவதும் நாம ஏன் காரமான சைடர் குடிக்கக் கூடாது? 329 00:24:02,568 --> 00:24:04,611 அதுவும் வாழ்க்கையின் பெரிய மர்மங்களில் ஒண்ணு. 330 00:24:05,445 --> 00:24:06,446 உனக்கு இந்தா, ஜூனியர். 331 00:24:06,947 --> 00:24:08,615 கெல்வினின் தாயாரைப் பத்தி மேட் என்ன நினைக்கிறாள்? 332 00:24:10,158 --> 00:24:11,159 தெரியலை. 333 00:24:11,952 --> 00:24:13,579 அவளுக்கு எது பொருத்தம்னு எனக்குத் தெரியல. 334 00:24:14,454 --> 00:24:17,541 நீங்க, சார்லி, லின்டா, ஜூனியர், நீங்க எல்லோரும் எங்க குடும்பம். 335 00:24:18,625 --> 00:24:20,836 நீயும் மேடும் கண்டிப்பா எங்க குடும்பத்துல ஒரு பாகம்தான், 336 00:24:21,336 --> 00:24:24,131 ஆனால் நீ யோசிச்சுப் பார்த்தா, அது அப்படி ஆரம்பிக்கலை. 337 00:24:25,549 --> 00:24:30,637 மேட் பாதுகாப்பாகவும், அவளுக்கு அன்பு கிடைக்குது என்றும் உணரணும். அதெல்லாம் இங்கே இருக்கு. 338 00:24:31,555 --> 00:24:33,682 அன்பு என்னவோ முடிந்துப் போறது போல நீ பேசுற. 339 00:24:34,975 --> 00:24:38,187 அந்த குட்டிப் பெண்ணுக்கு இன்னும் பலர் அன்பு காட்ட கிடைச்சா, நல்லதுதானே. 340 00:24:39,897 --> 00:24:43,192 எனக்கு இப்போ ஞாபகம் வருது, அந்தக் குட்டிப் பெண்ணின் வீட்டையும், மத்த சுத்து வட்டாரத்தையும் 341 00:24:43,192 --> 00:24:46,153 நீங்க காப்பாத்திக் கொடுத்ததுக்கு, நான் சரியா உங்களுக்கு இன்னும் நன்றி கூட சொல்லலை. 342 00:24:47,613 --> 00:24:48,614 கடவுளே. 343 00:24:49,323 --> 00:24:52,326 சரி, முடிவாகலை, ஆனால் செவ்வாய்க்கிழமை வாக்களிப்புக்குப் பின், 344 00:24:52,326 --> 00:24:55,537 முயற்சிக்கு, கண்டிப்பா வாழ்நாள் முழுவதும் பியரும் புளூபெர்ரி பையும் கிடைக்கும்னு நினைக்கிறேன். 345 00:25:00,209 --> 00:25:01,210 இங்கே வரும் அந்த ஃபிரீவே... 346 00:25:03,378 --> 00:25:06,131 நாடு முழுவதும் நம்மைப் போன்ற சமூகத்துக்கு அவங்க என்ன செய்யறாங்கன்னு 347 00:25:06,131 --> 00:25:07,216 ஒரு உதாரணம்தான். 348 00:25:09,218 --> 00:25:12,679 இந்த போராட்டம் ஷுகர் ஹில்லிலயோ, அல்லது கலிஃபோர்னியாவில கூட நிற்கக் கூடாது. 349 00:25:14,890 --> 00:25:18,519 இப்போ, நான் ஒரு பேச்சாளரா இல்லாம இருக்கலாம், ஆனால் நான் இதைப் பத்தி சத்தமா பேசுவேன். 350 00:25:21,271 --> 00:25:22,147 நீயும் அப்படித்தான். 351 00:25:23,357 --> 00:25:26,568 எப்படியிருந்தாலும், இன்னும் சில வாரங்களுக்குத்தான். எங்களுக்கு இன்னும் ஸ்பான்சர் கிடைக்கல. 352 00:25:27,569 --> 00:25:29,655 அது அவ்வளவு சீக்கிரம் முடியாதுன்னு எனக்குத் தோணுது. 353 00:25:34,201 --> 00:25:37,037 இது ரொம்ப சிறப்பா இல்ல? ஹம்? 354 00:25:37,663 --> 00:25:40,207 மேல கூரை மட்டும் இல்லன்னா, ரொம்ப அழகா இருக்குன்னு சொல்வேன். 355 00:25:42,334 --> 00:25:44,920 இப்போ, சரிதான். இந்த மனிதர் காயப்படறதுக்கு முன்னாடி நான் போறேன். 356 00:25:44,920 --> 00:25:47,506 எனக்குத் தெரியும், உங்க ஷூசை என் சோஃபாவுல போடக் கூடாது. 357 00:25:49,550 --> 00:25:50,551 இந்த மனிதர். 358 00:25:52,678 --> 00:25:55,681 - நாம இதைத் தொடரணுமா? - தொடர்வோம். 359 00:26:00,477 --> 00:26:02,729 - ஏதாவது தெரிஞ்சுதா? நாம என்ன செய்யறோம்? - அவங்க தாமதிக்கமாட்டாங்க. 360 00:26:02,729 --> 00:26:04,523 அவங்க வரலைன்னா நாம என்ன செய்ய? 361 00:26:04,523 --> 00:26:05,524 உங்களுக்கு சமைக்க வருமா? 362 00:26:05,524 --> 00:26:08,569 நான் ஐஸ் கிரீமை எடுத்து ஒரு கிண்ணத்துல போடுவேன். அது போதுமா? 363 00:26:08,569 --> 00:26:10,237 ம்ம்-ம்ம். 364 00:26:10,237 --> 00:26:12,489 என்ன தெரியுமா? நான் ஹேரியை அவங்க வீடு பக்கமா போகச் சொல்றேன். 365 00:26:12,489 --> 00:26:14,449 - ஹே, ஹேரி. ஹேரி... - கடவுளே. நல்ல வேளை. 366 00:26:14,449 --> 00:26:17,619 மன்னிக்கணும். என்னை மன்னிச்சிடுங்க. ஊரின் மறு பக்கம் ஒரு சந்திப்பு, அதுவும் நீண்டது. 367 00:26:17,619 --> 00:26:20,372 ஹேரி, இதெல்லாம் பார்வையாளர்களுக்கு. ஒவ்வொரு இருக்கைக்கு கீழேயும் ஒன்றை வச்சிடுங்க. 368 00:26:20,372 --> 00:26:21,707 - என் வண்டியில இன்னொரு பெட்டி இருக்கு. - சரி. 369 00:26:21,707 --> 00:26:24,251 ஹை, வால்டர். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், நான் ஒரு ஃபோன் கால் செய்யணும். 370 00:26:24,251 --> 00:26:26,920 - இப்போ நேரம் இல்ல. - மக்களே, ஐந்து நிமிடங்கள்! 371 00:26:27,546 --> 00:26:30,841 போகலாம். போகலாம். போகலாம். எல்லாமே கச்சிதமா இருக்கக் கூடாது. 372 00:26:31,925 --> 00:26:33,760 - நீங்க நலமா இருக்கீங்களா? - நான் நல்லாயிருக்கேன். நீங்க? 373 00:26:34,261 --> 00:26:36,180 உங்க முகத்துல ஏதோ ஒண்ணு தெரியுதே. அது என்ன? 374 00:26:36,680 --> 00:26:37,681 தெளிவு. 375 00:26:39,892 --> 00:26:41,894 சப்பர் அட் சிக்ஸ் 376 00:27:00,579 --> 00:27:03,165 இப்போது, எலிசபெத் ஸாட் வழங்கும், சப்பர் அட் சிக்ஸ். 377 00:27:11,548 --> 00:27:15,344 நாம் நேரலையில் போக இன்னும் ஐந்து, நாலு, மூணு... 378 00:27:27,648 --> 00:27:32,319 ஹலோ. என் பெயர் எலிசபெத் ஸாட், நீங்கள் பார்ப்பது சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சி. 379 00:27:37,950 --> 00:27:40,369 நான் சில அறிவிப்புகளுடன் இன்றைய நிகழ்ச்சியை ஆரம்பிக்கப் போகிறேன். 380 00:27:41,245 --> 00:27:45,415 ஒரு பேக்ட்-ஹேம் கிளேஸ் செய்ய தேவையான ரசாயன கலவைகளைப் பார்க்கும் முன், 381 00:27:45,415 --> 00:27:49,795 நம் செட்டுகளில் எந்த ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் பொருட்களும் இல்லை என பார்த்திருப்பீர்கள். 382 00:27:49,795 --> 00:27:52,130 சரி, அது ஏனெனில், அவர்கள் இந்த நிகழ்ச்சியை கைவிட்டுவிட்டனர். 383 00:27:52,756 --> 00:27:55,092 அதற்காக, நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். 384 00:27:57,094 --> 00:27:59,930 நான் நம்புவதே அனைவரின் நம்பிக்கையுமாக இருக்காது என்பதை நான் அறிவேன், 385 00:28:00,514 --> 00:28:02,766 ஆனால் நமது நம்பிக்கைகளை நான் வெளியே சொல்லவில்லை எனில், அதற்கு அர்த்தமே இராது. 386 00:28:02,766 --> 00:28:06,228 அடிப்படை ரசாயன அளவில், ஸ்விஃப்ட் & கிறிஸ்ப் நல்லதல்ல. 387 00:28:06,228 --> 00:28:08,772 விதை எண்ணைகள் உங்கள் மைட்டோகோன்ட்ரியாவை பாதிக்கும். 388 00:28:08,772 --> 00:28:10,816 அதோடு நான் அதை உங்கள் உடலில் போடச் சொன்னது 389 00:28:10,816 --> 00:28:12,651 என் வாழ்நாட்கள் முழுவதும் என்னை வாட்டி எடுக்கும். 390 00:28:13,777 --> 00:28:18,532 ஆனால் நல்லவேளையாக, நமக்கு ஒரு புதிய ஸ்பான்சர்கள் கிடைத்துவிட்டனர். நம் கொள்கைகளுக்கு ஒத்தவர்கள். 391 00:28:21,451 --> 00:28:22,703 டேம்பேக்ஸ். 392 00:28:25,414 --> 00:28:26,373 இது எப்போது நடந்தது? 393 00:28:27,332 --> 00:28:28,876 எனக்குத் தெரியாது. 394 00:28:28,876 --> 00:28:31,086 நான் டேம்பேக்ஸை பல வருடங்களாக உபயோகித்து வருகிறேன். 395 00:28:31,086 --> 00:28:33,964 அவை மென்மையாகவும், நீடித்து உழைப்பவை, சுகாதாரமானவையும் கூட. 396 00:28:33,964 --> 00:28:36,425 உங்கள் இருக்கைகளுக்குக் கீழே பாருங்கள். உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. 397 00:28:41,847 --> 00:28:45,434 இதைப் பார்த்துவிட்டு, மாதவிடாய் பற்றி கேட்க அக்கறையில்லாத ஆண்களுக்கு, 398 00:28:45,434 --> 00:28:46,518 நான் விளக்குகிறேன். 399 00:28:47,060 --> 00:28:50,606 ஒரு மாத இடைவெளியில், யூடிரஸிலிருந்து அதன் லையனிங்குடன் இரத்தப் போக்கும் 400 00:28:50,606 --> 00:28:52,983 உண்டாகும் உடலின் செயல்முறைதான் அது, 401 00:28:54,026 --> 00:28:56,695 பருவமெய்தியதிலிருந்து, கர்ப்ப காலத்தைத் தவிர, மாத விடாய் நிற்கும்வரை நடக்கும். 402 00:28:59,156 --> 00:29:02,284 இன்று மதியம், நான் இந்த நெட்வொர்க்கின் தலைவரை அழைத்து, இதைத் தெரிவித்தேன். 403 00:29:02,284 --> 00:29:03,535 அவரும் ஒப்புக்கொண்டார். 404 00:29:03,535 --> 00:29:05,704 "யூடிரஸ்" என்று கென்னத்திடம் சொன்னாரா? 405 00:29:05,704 --> 00:29:09,082 ...நாம் பெருமிதம் அடையும் ஒரு பார்ட்னர். ஆனால், நான் அவரை அழைத்தக் காரணம் அதுவல்ல. 406 00:29:13,629 --> 00:29:14,922 நான் சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன். 407 00:29:18,926 --> 00:29:22,679 உங்களுக்கு இது பத்தித் தெரியுமா? இதைப் பத்தி எதுவுமே சொல்லவில்லையே. 408 00:29:23,764 --> 00:29:26,099 நான் நேரலை டிவியில் தோன்றுவதைவிட்டு விலகிவிடுவேன். 409 00:29:26,099 --> 00:29:28,810 டிவியைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்திருப்பதால், 410 00:29:28,810 --> 00:29:31,522 அடுத்த சில வாரங்களுக்கு இதைப் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என நினைக்கிறேன். 411 00:29:31,522 --> 00:29:35,817 இந்த நிகழ்ச்சியை தொகுத்து அளித்தது என் வாழ்க்கையின் மிக திரில்லிங்கான நிகழ்வு. 412 00:29:37,528 --> 00:29:40,447 அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். 413 00:29:42,533 --> 00:29:45,619 நாம் முக்கியமான ஒன்றை செய்ய நினைத்தோம், அதை சாதித்துவிட்டோம் என்றே நான் நினைக்கிறேன். 414 00:29:46,370 --> 00:29:47,371 அதோடு, கென்னத், 415 00:29:47,871 --> 00:29:50,666 மாற்றங்கள் நடக்கும் என்ற நிபந்தனையுடன் தான் நான் இதையெல்லாம் செய்வேன். 416 00:29:53,585 --> 00:29:56,964 கென்னத். நீங்க வரப் போவது தெரிந்திருந்தால், 417 00:29:56,964 --> 00:29:58,799 நான் நல்ல சரக்கை எடுத்திருப்பேன். 418 00:29:59,675 --> 00:30:00,676 உன்னை வேலையிலிருந்து நீக்குறேன். 419 00:30:01,552 --> 00:30:02,761 இந்த நிகழ்ச்சி உங்களுடையது. 420 00:30:10,269 --> 00:30:14,273 தினமும் இரவு, நான் உங்கள் குழந்தைகளை உங்களுக்கு ஒரு வினாடி தரும்படி கேட்டுக்கொள்வேன் 421 00:30:15,774 --> 00:30:19,069 ஆகவே, ஆம், இப்போது நானும் அதைச் செய்யும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். 422 00:30:21,321 --> 00:30:25,826 அடுத்தது என்ன செய்ய வேண்டும் என, நான் சிந்தித்து, மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது. 423 00:30:28,620 --> 00:30:32,291 சப்பர் அட் சிக்ஸ் நிகழ்ச்சியின் அடுத்தத் தொகுப்பாளர் யாராக இருக்கக்கூடும் என்று நீங்கள் யோசிப்பீர்கள். 424 00:30:33,375 --> 00:30:36,044 சரி, அது உங்களில் ஒருவராகத்தான் இருக்கும். 425 00:30:40,174 --> 00:30:41,925 இப்போது, அது மிக அச்சுறுத்துவதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். 426 00:30:42,467 --> 00:30:45,596 ஆனால் நினைவிருக்கட்டும், தைரியம்தான் மாற்றத்தின் ஆணிவேர். 427 00:30:45,596 --> 00:30:48,599 நாம் மாற்றத்திற்காகவே ரசாயன ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளோம். 428 00:30:50,392 --> 00:30:53,020 உங்களை நீங்களே முன்னேறப் பாருங்க என நான் கூற மாட்டேன் 429 00:30:53,020 --> 00:30:56,356 ஏனென்றால் பல பெண்களுக்கு அப்படி மேலெழுப்ப உதவிகள் இருப்பதில்லை. 430 00:30:58,108 --> 00:31:00,527 என் வாழ்க்கையைப் போல் உங்களுடையதும் இருந்தால், 431 00:31:01,278 --> 00:31:03,906 நீங்கள் காணும் கனவுகள் வரிசையாக உங்கள் முன் வராது. 432 00:31:05,991 --> 00:31:08,535 ஆனால் உங்கள் உரிமைகளை நிறைவேற்ற யாரும் இல்லை என நீங்கள் உணர்ந்தால், 433 00:31:10,162 --> 00:31:11,413 நீங்கள் எங்களை அணுகுவதை வரவேற்கிறோம். 434 00:31:17,169 --> 00:31:19,796 அதோடு, இப்போது கிளேஸ்டு ஹேம் விவரங்களைப் பார்ப்போம். 435 00:31:26,845 --> 00:31:28,263 இன்னிக்கு நான் வந்து உங்களை டின்னருக்குக் கூட்டிட்டுப் போகலாமா? 436 00:31:29,765 --> 00:31:34,645 நீ அந்த இடமாற்றத்தைப் பத்தி பேசணும்னு சொன்ன... 437 00:31:35,687 --> 00:31:39,358 உங்க மேலே எனக்குள்ள உணர்ச்சிகளைப் பத்தி பேச. 438 00:31:41,568 --> 00:31:43,612 என்ன? என்ன? சரி. சரி. 439 00:31:43,612 --> 00:31:46,698 நான் அதை ரொம்ப விரும்பறேன். 440 00:31:46,698 --> 00:31:48,242 நான் உங்களை மாலை 6:45 மணிக்கு அழைக்க வருகிறேன். 441 00:32:07,261 --> 00:32:08,595 தாமதத்துக்கு மன்னிச்சிடுங்க. 442 00:32:09,096 --> 00:32:12,182 கவுன்சிலர் சம்மர்ஸ் இங்கு வந்து சேர்ந்ததும் நாம் ஆரம்பித்து விடலாம். 443 00:32:19,857 --> 00:32:21,942 எங்களுடன் சேர்ந்ததுக்கு நன்றி, கவுன்சிலரே. 444 00:32:24,862 --> 00:32:25,737 இப்போது நான் பதிவில் உள்ளோம். 445 00:32:29,032 --> 00:32:32,286 இந்த இன்டர்ஸ்டேட் ஹைவே சிஸ்டம் என்பது நாட்டின் எதிர்காலம் 446 00:32:32,870 --> 00:32:36,957 பொருளாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும், மற்றும் தேசிய பாதுகாப்பிற்கும், 447 00:32:36,957 --> 00:32:38,458 ஒருவேளை தேவைப்பட்டால் உபயோகப்படும். 448 00:32:39,543 --> 00:32:42,462 கடந்த எட்டு வருடங்களாக, இரு தரப்பினரும் மிக தீவிரமாகவும், 449 00:32:42,963 --> 00:32:45,048 பேரார்வத்துடனும் வாதாடியதற்கு, என் நன்றியைச் சொல்கிறேன். 450 00:32:45,841 --> 00:32:47,885 நீண்ட காலமாக முன்னேற்றம் தடைப்பட்டுவிட்டது. 451 00:32:48,760 --> 00:32:52,139 எனவே, த கலிஃபோர்னியா இன்டர்ஸ்டேட் ஹைவே சிஸ்டத்திற்கு எதிராக 452 00:32:52,139 --> 00:32:53,891 வெஸ்ட் ஆடம்ஸ்/ஷுகர் ஹில் கமிட்டி தொடுத்த வழக்கில், 453 00:32:54,641 --> 00:32:58,729 வெஸ்ட் ஆடம்ஸ்/ஷுகர் ஹில் வழியாக ஹைவே போடுவதை யார் யார் எதிர்க்கிறீர்கள்? 454 00:33:07,571 --> 00:33:08,572 அதை ஆமோதிப்பவர்கள்? 455 00:33:12,826 --> 00:33:14,036 இந்த மோஷன் பாஸாகிறது. 456 00:33:40,646 --> 00:33:43,440 நான் அழைக்க முயற்சி செய்தேன். எனக்கு வருத்தமா இருக்கு. நான் என்ன செய்யட்டும்? 457 00:33:51,240 --> 00:33:52,491 ஏழு வருடங்கள். 458 00:33:55,327 --> 00:33:57,329 நான் பிரௌனிகளைச் சாபிட்டுட்டு அழணும் போல இருக்கு. 459 00:33:58,121 --> 00:33:59,373 என்னால அதுக்கு உதவி செய்ய முடியும். 460 00:34:01,124 --> 00:34:02,042 நான் பியர் கொண்டு வந்திருக்கேன். 461 00:34:03,168 --> 00:34:04,378 பியர் நல்லது செய்யலாம். 462 00:34:06,713 --> 00:34:08,130 இங்கே வாங்க. 463 00:34:24,523 --> 00:34:27,400 முக்காலில் இருந்து முழு அழுத்தத்திற்கு இரு நிமிடங்களில் போகணும். 464 00:34:28,694 --> 00:34:29,695 அது ஒண்ணு. 465 00:34:31,864 --> 00:34:32,864 அது இரண்டு. 466 00:34:33,782 --> 00:34:34,616 முழு அழுத்தம். 467 00:35:02,019 --> 00:35:04,605 இந்த இடத்திற்குதான், கெல்வின் தன் மனதை அமைதிப்படுத்த வருவார். 468 00:35:05,355 --> 00:35:09,443 நான் உங்களுடன் அதை பகிரணும்னு நினைச்சேன். இங்கேதான் நாங்க முதலில் முத்தமிட்டோம். 469 00:35:10,694 --> 00:35:12,112 என்னை இங்கே கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி. 470 00:35:13,447 --> 00:35:16,533 மேட்டை அந்த பெரிய, குறுகுறுப்பான கண்களுடன் பார்க்குறபோது 471 00:35:16,533 --> 00:35:18,869 அவனுடைய ஒரு பாகத்தைப் பார்ப்பதுபோல எனக்குத் தோணுச்சு. 472 00:35:20,996 --> 00:35:22,206 அவள் புத்திசாலி, இல்ல? 473 00:35:22,706 --> 00:35:23,707 பயங்கரமான புத்திசாலி. 474 00:35:25,209 --> 00:35:26,752 அன்னிக்கு இரவு உன் நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீ விலகிட்டயே. 475 00:35:27,586 --> 00:35:30,047 ஆமாம். நான் திரும்பவும் அறிவியலுக்குப் போகணும்னு ஆசைப்படறேன். 476 00:35:31,507 --> 00:35:35,010 தெரியுமில்லையா, நான் ஒரு ஃபௌண்டேஷனை இதுக்காகவே 477 00:35:35,010 --> 00:35:37,304 உருவாக்கி, விஞ்ஞானிகளுக்கு நிதியுதவி செய்யறேன். 478 00:35:37,804 --> 00:35:38,805 அதுப் பத்தித் தெரியும். 479 00:35:39,681 --> 00:35:43,810 விண்ணப்பத்துல "திரு" தான் இருக்கு, "திருமதி" இல்லை, கண்டிப்பாக "மிஸ்" என்பதற்கு இடமேயில்லை. 480 00:35:45,896 --> 00:35:46,980 சரி, நான் அதைப் பார்த்துக்கறேன். 481 00:35:47,814 --> 00:35:48,649 நான் அதை சரிசெய்த பின், 482 00:35:49,483 --> 00:35:52,653 நீ எதுல ஆர்வமாக இருக்கயோ, அதில் உனக்கு உதவி செய்ய நான் உதவ விரும்புறேன். 483 00:35:53,862 --> 00:35:55,864 இருப்பினும், நீ உதவி பெறுவதை விரும்பலைனு எனக்குத் தோணுது. 484 00:35:57,533 --> 00:36:01,453 இல்லை. இப்போது வயதான பிறகு, உதவி என்பது ஒரு பரிசாக நினைக்கிறேன். 485 00:36:34,695 --> 00:36:37,489 மூன்று வருடங்களுக்குப் பிறகு 486 00:36:38,657 --> 00:36:43,328 ஹலோ. என் பெயர் எலிசபெத் ஸாட், கெமிஸ்ட்ரிக்கு அறிமுகம் வகுப்பிற்கு வருக. 487 00:36:44,705 --> 00:36:47,624 இதை தயவுசெய்து உங்க பக்கத்துல இருப்பவங்களுக்கோ, அல்லது பின்னாடி இருப்பவங்களுக்கோ கொடுக்கவும். 488 00:36:50,085 --> 00:36:52,838 மேலும் நான் என் பிஹெச்டி படிப்பை முடிக்கிற வரைக்கும், அது மிஸ் ஸாட் தான். 489 00:36:54,798 --> 00:36:57,301 உயிரினங்கள் அணுக்களால் ஆனவை. 490 00:36:57,801 --> 00:37:01,013 ஆனால், பெரும்பாலானவற்றில், அந்த அணுக்கள், தனித்தனியாக மிதப்பதில்லை. 491 00:37:01,597 --> 00:37:04,683 அதற்கு பதிலா, அவை வழக்கமா மற்ற அணுக்களுடன் பரிமாறிக்கொண்டு இருக்கின்றன. 492 00:37:05,934 --> 00:37:08,604 மாலிக்யூல்களை சேர்த்துப் பிடிக்கும் மிக கெட்டியான பாண்டுகளும் சரி, 493 00:37:08,604 --> 00:37:11,648 தற்காலிக தொடர்புகளை உருவாக்கும் பலவீனமான பாண்டுகளும் சரி, 494 00:37:11,648 --> 00:37:13,984 இரண்டு வகையும் உயிர் வாழ மிக முக்கியமானவை. 495 00:37:14,902 --> 00:37:16,028 அப்படியா? 496 00:37:16,028 --> 00:37:18,614 எந்த அணுக்கள் பிணைக்கப்பட்டுள்ளன என்பதில் முறையில்லாமல் உள்ளதா? 497 00:37:19,698 --> 00:37:21,450 உங்கள் வாழ்க்கையே யோசித்துப் பாருங்கள். 498 00:37:22,201 --> 00:37:23,911 எந்தத் தருணங்கள் எப்போது நடக்கும் என்று கூற இயலாது. 499 00:37:24,494 --> 00:37:27,623 பின்னோக்கிப் பார்க்கும்போதுதான், அவை அனைத்தும் எப்படி தொடர்புகொண்டுள்ளன என்பது புரிகிறது. 500 00:37:28,457 --> 00:37:30,083 இதற்கும் கெமிஸ்ட்ரிக்கும் என்ன சம்மந்தம்? 501 00:37:31,502 --> 00:37:32,503 எல்லாமே. 502 00:37:34,171 --> 00:37:37,758 ரசாயன எதிர்வினையில் உள்ள ஒரே ஒரு நிரந்தர மாறி என்பது, மாற்றம் மட்டுமே. 503 00:37:38,509 --> 00:37:39,510 எதிர்பாராதது. 504 00:37:40,844 --> 00:37:43,263 இங்கே நமது பணி, எதிர்பாராததைத் தவிர்ப்பது அல்ல. 505 00:37:44,014 --> 00:37:45,307 நாம அதைக் கட்டுப்படுத்த முடியாது. 506 00:37:45,891 --> 00:37:47,601 அதனால் நாம் ஒரு விஷயத்தைத்தான் செய்ய முடியும். 507 00:37:51,271 --> 00:37:52,397 சரணாகதி. 508 00:37:52,940 --> 00:37:56,026 இப்போது, நாம் கெட்ட விஷயங்களை ஏற்க வேண்டிய அவசியமில்லை, 509 00:37:56,026 --> 00:37:59,571 ஆனால் மாற்றத்தை கண்டிப்பாகத் தவிர்க்க முடியாது என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும். 510 00:38:00,405 --> 00:38:02,491 நமக்குள்ளேயும், நம் சூழலிலும். 511 00:38:06,662 --> 00:38:07,829 சார்ல்ஸ் டிக்கன்ஸ். 512 00:38:09,373 --> 00:38:11,542 அவர் விஞ்ஞானத்திற்கு பெயர் போனவர் இல்லை. 513 00:38:14,795 --> 00:38:17,172 ஆனால் நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானி, 514 00:38:17,172 --> 00:38:19,174 இந்த புத்தகத்தை தன் கட்டிலருகே வைத்திருந்தார். 515 00:38:19,967 --> 00:38:21,802 அது அவரை இன்னும் மேம்பட்ட கெமிஸ்ட்டாக ஆக்கியது என்றார். 516 00:38:22,636 --> 00:38:23,887 அந்த சமயத்தில் நான் சிரித்தேன் 517 00:38:23,887 --> 00:38:26,181 ஏனென்றால் அப்படிச் சொல்வது மிக பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியது, 518 00:38:26,181 --> 00:38:27,599 இப்போது உங்களுக்கும் அதுதான் தோன்றும் எனத் தெரியும். 519 00:38:28,684 --> 00:38:31,436 இருந்தாலும், காலப்போக்கில் நான் ஒப்புக்கொண்டேன்... 520 00:38:32,020 --> 00:38:33,981 அதோடு, இந்தப் பக்கத்தைத்தான் அவர் மடித்து வைத்திருந்தார். 521 00:38:38,527 --> 00:38:42,573 "அது என் நினைவில் நின்ற ஒரு நாளாக இருந்தது, ஏனெனில் என்னுள் முக்கிய மாற்றங்களை செய்தது. 522 00:38:47,160 --> 00:38:49,037 ஆனால், எந்த உயிரானாலும் இதுதான். 523 00:38:53,417 --> 00:38:55,794 ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நாளை எடுத்து, அதை அடித்துவிட்டுக் கற்பனை செய்யுங்கள், 524 00:38:57,754 --> 00:39:00,174 அதன் போக்கு எவ்வளவு வித்தியாசமாக இருந்திருக்கும் என் யோசித்துப் பாருங்கள்." 525 00:39:07,472 --> 00:39:08,473 அனுப்புனருக்கு மீண்டும் அனுப்பவும் 526 00:39:11,268 --> 00:39:13,020 "இதைப் படிப்பவரே, சற்று இருங்கள், 527 00:39:13,020 --> 00:39:17,316 ஒரு வினாடி, ஒரு நீண்ட இரும்பு சங்கிலியையோ, அல்லது தங்கச் சங்கிலியையோ, முட்களுடனோ, 528 00:39:18,692 --> 00:39:20,360 பூக்களுடனோ நினைத்துப் பாருங்கள்... 529 00:39:22,362 --> 00:39:23,864 ஏதோ ஒரு மறக்க முடியாத நாளில், 530 00:39:25,032 --> 00:39:27,826 அந்த முதல் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு 531 00:39:29,036 --> 00:39:31,288 அது உங்களுடன் பிணையவில்லை எனில் என்னவாகியிருக்கும். 532 00:39:40,214 --> 00:39:43,008 ஒ, மிக்க நன்றி! எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி. 533 00:39:50,265 --> 00:39:51,517 இதை நான் மிகவும் நேசிக்கிறேன். 534 00:39:59,525 --> 00:40:00,609 அதோடு, இங்கே என்ன வச்சிருக்காங்க? 535 00:40:38,814 --> 00:40:40,148 நாம ஆரம்பிக்கலாம், இல்லையா? 536 00:41:36,371 --> 00:41:38,373 தமிழாக்கம் அகிலா குமார்