1 00:00:36,454 --> 00:00:38,957 ”கார்ச்சரோடன் கார்ச்சேரியாஸ்.” 2 00:00:43,628 --> 00:00:44,880 கேனான்பால்! 3 00:00:48,466 --> 00:00:51,553 சாட்டிலைட் டேக்கர் தயார். கீழே பார்த்துக்கொள், டேவிட். 4 00:00:51,553 --> 00:00:54,222 சுறாக்கள் தங்கள் இரையை கீழேயிருந்து தாக்கக்கூடியவை. 5 00:00:54,222 --> 00:00:56,683 -என்ன? ஏன்? -நீ அவை வருவதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக. 6 00:00:57,976 --> 00:00:58,977 கடி! 7 00:00:59,603 --> 00:01:02,731 எதற்கும் பயப்படாதே, டேவிட். நாம் திடமான உலோகக் கூண்டில் இருக்கிறோம். 8 00:01:02,731 --> 00:01:04,983 இவற்றைத்தான் விஞ்ஞானிகள் சுறாக்களை ஆய்வுசெய்யப் பயன்படுத்துவார்கள். 9 00:01:04,983 --> 00:01:06,693 நாம் ஏன் இதைச் செய்கிறோம்? 10 00:01:06,693 --> 00:01:09,487 நமக்கு வெள்ளைச் சுறாக்கள் பற்றி தெரியாதவை இன்னும் நிறைய உள்ளன. 11 00:01:09,487 --> 00:01:12,866 அவை அற்புதமானவை. அவை சுறாக்கள். போதுமானளவு தெரிந்துள்ளது. 12 00:01:12,866 --> 00:01:14,534 நமக்கு குறைவாகத்தான் தெரியும். 13 00:01:14,534 --> 00:01:16,745 அவை பெரும்பாலான நேரம் எங்கே பொழுதைக் கழிக்கும் என நமக்குத் தெரியாது. 14 00:01:17,329 --> 00:01:19,331 இதுவரை. அது நமக்குத் தெரியவில்லை எனில்... 15 00:01:19,915 --> 00:01:21,625 அவை இன்னும் எத்தனை மீதமுள்ளன என நமக்குத் தெரியாது. 16 00:01:21,625 --> 00:01:24,669 ஆம். அதாவது, அவற்றுக்கு நம்மிடம் எவ்வளவு உதவி தேவை என்றும் தெரியாது. 17 00:01:25,170 --> 00:01:28,048 நமக்குத்தான் உதவி தேவைப்படும் என நினைக்கிறேன். 18 00:01:28,048 --> 00:01:29,716 அவை மனிதர்களைச் சாப்பிடாதா? 19 00:01:29,716 --> 00:01:31,051 தவறுதலாகத்தான் சாப்பிடும். 20 00:01:31,551 --> 00:01:33,678 எப்படித் தவறுதலாக ஒரு மனிதரைச் சாப்பிட முடியும்? 21 00:01:33,678 --> 00:01:35,680 ஏனெனில் நீ சாப்பிடும் விஷயம் என அதை நினைத்து, 22 00:01:35,680 --> 00:01:37,474 தெரியாமல் கடித்துவிடுவாய். 23 00:01:37,474 --> 00:01:38,558 நான் காட்டுகிறேன். 24 00:01:39,309 --> 00:01:40,477 கிரேபியர்ட், ஜேன் பேசுகிறேன். 25 00:01:40,977 --> 00:01:42,896 கிரேபியர்ட்? கிரேபியர்ட்! 26 00:01:46,274 --> 00:01:50,362 சீல் பொம்மையை நீரில் போடு, பிறகு நம் சுறா நண்பன் வருகிறதா எனப் பார். 27 00:02:01,498 --> 00:02:03,250 நாம் நிழல் விளையாட்டு ஆடுகிறோமா? 28 00:02:03,250 --> 00:02:06,920 கிட்டத்தட்ட. சுறாக்கள் கீழிருந்து தாக்கும் எனக் கூறியது நினைவுள்ளதா? 29 00:02:06,920 --> 00:02:09,381 அதை நான் மறக்கவே மாட்டேன். 30 00:02:09,381 --> 00:02:11,591 அப்படித்தான் அவற்றின் இரைகளையும் பார்க்கும். 31 00:02:11,591 --> 00:02:15,220 -அதைப் பார். -அந்த வடிவம் சீலுடையதா மனிதனுடையதா? 32 00:02:15,220 --> 00:02:18,932 சரியாகத் தெரியவில்லையா? அதேதான் சுறாக்களுக்கும். அவை மனிதர்களை வேட்டையாட முயல்வதில்லை, 33 00:02:18,932 --> 00:02:21,560 சில நேரம் தவறானவற்றை தெரியாமல் கடித்துவிடுகின்றன. 34 00:02:21,560 --> 00:02:23,103 நாம் பயப்பட வேண்டியதில்லையா? 35 00:02:29,818 --> 00:02:31,361 நான் சீல் இல்லை. 36 00:02:32,028 --> 00:02:34,573 -ஜேன்? -நம் பொம்மை எங்கே போனது? 37 00:02:35,156 --> 00:02:36,533 நமக்கு மேலே உள்ளது. 38 00:02:36,533 --> 00:02:39,119 சுறா நமக்குக் கீழே உள்ளது. 39 00:02:41,746 --> 00:02:42,747 டாட்டா. 40 00:02:42,747 --> 00:02:46,459 என்ன? உன்னை இதில் வைத்துக்கொண்டு தள்ளுவது எளிதானது இல்லை. 41 00:02:47,335 --> 00:02:50,422 மேலும் இப்படி விளையாடும் அளவுக்குச் சிறுமி இல்லையென்று தெரியவில்லையா? 42 00:02:51,381 --> 00:02:52,966 அவள் வருவதற்கான அறிகுறி தெரிகிறதா, டேவிட்? 43 00:02:52,966 --> 00:02:57,262 இல்லை, நல்ல வேளை. அது அவள் என்று உனக்கு எப்படித் தெரியும்? 44 00:02:57,262 --> 00:02:59,306 பெண் சுறாக்கள் ஆண் சுறாக்களைவிடப் பெரிதாக இருக்கும். 45 00:02:59,306 --> 00:03:00,640 விளையாடியது போதும், டேவி. 46 00:03:00,640 --> 00:03:03,977 அப்பாவுக்குப் பிடித்த ரெசிபிக்குத் தேவையான அனைத்தும் அவருக்குத் தேவை. 47 00:03:04,644 --> 00:03:08,398 சாஸ் நிறைந்த கடல் உணவு பயெல்லா 48 00:03:08,398 --> 00:03:10,775 நாம் எதையும் மறந்தால் அவர் எப்படி இருப்பார் என உனக்குத் தெரியும். 49 00:03:14,362 --> 00:03:15,196 யார் தெரியுமா? 50 00:03:15,196 --> 00:03:16,281 ஹேய், அன்பே. 51 00:03:17,115 --> 00:03:18,533 லிஸ்ட்டில் பார்ஸ்லி உள்ளதா? 52 00:03:20,368 --> 00:03:21,244 ஆம். 53 00:03:21,244 --> 00:03:23,413 -குங்குமப்பூ? -உள்ளது. 54 00:03:23,413 --> 00:03:26,541 போம்பா அரிசி வேண்டும், போன முறை நீ வாங்கிய அரிசி இல்லை. 55 00:03:26,541 --> 00:03:27,667 போம்பா, ஸ்டிக்கி அரிசி இல்லை. 56 00:03:27,667 --> 00:03:28,960 புரிந்தது. 57 00:03:28,960 --> 00:03:32,756 சரி, நன்றி. கொஞ்சம் சீக்கிரம் வாங்கி வா, மில்லிக்குப் பசிக்கிறது. 58 00:03:32,756 --> 00:03:33,924 உன்னை நேசிக்கிறேன். 59 00:03:34,466 --> 00:03:35,675 நானும் உன்னை நேசிக்கிறேன். 60 00:03:36,509 --> 00:03:37,969 வா, மகனே. சீக்கிரம் போக வேண்டும். 61 00:03:37,969 --> 00:03:40,680 குங்குமப்பூ என்றால் என்ன? 62 00:03:42,265 --> 00:03:44,684 மன்னிக்கவும், ஜேன். மிஷன் இடையில் நின்றுவிட்டது. 63 00:03:46,394 --> 00:03:47,604 நிரந்தரமாக நின்றால் நன்றாக இருக்கும். 64 00:03:48,104 --> 00:03:51,191 ஆனால் கார்ச்சரோடன் கார்ச்சேரியாஸில் டிராக்கர் வைப்பது என்னாவது? 65 00:03:51,191 --> 00:03:53,652 கார்ச்ச... என்ன அது? 66 00:03:53,652 --> 00:03:56,446 கார்ச்சரோடன் கார்ச்சேரியாஸ். 67 00:03:56,446 --> 00:03:58,657 அது வெள்ளைச் சுறாவுக்கான அறிவியல் பெயர். 68 00:03:58,657 --> 00:04:00,450 அதை ஏன் நீ சொல்லக் கூடாது? 69 00:04:00,450 --> 00:04:02,494 அறிவியல் பெயரைப் பயன்படுத்துவது வேடிக்கையாக இருக்கும். 70 00:04:03,119 --> 00:04:06,623 வேடிக்கை என்பதை நீயும் நானும் வேறு மாதிரி புரிந்து வைத்துள்ளோம். 71 00:04:07,415 --> 00:04:09,042 பார், சூப்களில் தள்ளுபடி உள்ளது. 72 00:04:09,042 --> 00:04:09,960 சூப் ஒன்றின் விலையில் மூன்று 73 00:04:09,960 --> 00:04:11,044 ஆம், உண்மைதான். 74 00:04:11,044 --> 00:04:15,549 என்ன? ஒன்றின் விலையில் மூன்று. இதுபோல நடக்கவே நடக்காது. 75 00:04:15,549 --> 00:04:17,132 அதைவிட்டு இறங்கு, கண்ணே. 76 00:04:17,132 --> 00:04:19,427 வா. இறங்கு. 77 00:04:21,805 --> 00:04:25,725 இது என்ன மாதிரியான சுறா விளையாட்டு? 78 00:04:25,725 --> 00:04:28,728 அவை எங்கே பொழுதைக் கழிக்கும் எனப் பார்க்க, ஒரு சுறாவை டேக் செய்ய முயல்கிறோம். 79 00:04:28,728 --> 00:04:30,814 சுலபம், கடலில்தான். 80 00:04:30,814 --> 00:04:32,065 ஆனால் எந்த இடத்தில்? 81 00:04:32,065 --> 00:04:34,943 சுறாக்கள் பெரும்பாலான நேரம் மறைந்துவிடுகின்றன, 82 00:04:34,943 --> 00:04:37,904 -விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஏனென்று தெரியவில்லை. -அது ஏன் முக்கியம்? 83 00:04:38,488 --> 00:04:40,323 ஏனெனில் அவைதான் உச்சத்தில் இருக்கும் வேட்டை மிருகம். 84 00:04:40,323 --> 00:04:42,409 அதென்ன இன்னொரு அறிவியல் பெயரா? 85 00:04:42,409 --> 00:04:46,705 இல்லை, அவைதான் கடல் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் உள்ளன என்று அர்த்தம். 86 00:04:46,705 --> 00:04:48,873 அவை இல்லையெனில், அவற்றின் இரைகள் சாப்பிடப்படாது, 87 00:04:48,873 --> 00:04:52,043 எனில் அவை அதிகமாகச் சாப்பிடும், பிறகு உணவுச் சங்கிலியே அழிந்துவிடும். 88 00:04:52,544 --> 00:04:55,714 அதுபோன்ற விஷயங்கள் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? 89 00:04:55,714 --> 00:04:57,048 ஏனெனில் யாராவது கவலைப்பட வேண்டும். 90 00:04:59,676 --> 00:05:01,344 சுறாக்கள் மீன்களைத்தானே திண்ணும்? 91 00:05:01,928 --> 00:05:05,348 மீன்கள், சீல்கள், அவ்வப்போது இறந்த திமிங்கிலங்கள். 92 00:05:05,348 --> 00:05:08,894 இங்கே இறந்த திமிங்கிலங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, 93 00:05:08,894 --> 00:05:12,105 ஆனால் இங்கே மீன்கள் பிரிவு உள்ளது. 94 00:05:12,105 --> 00:05:14,441 உன் சுறா அங்கே இருக்கலாம். 95 00:05:14,441 --> 00:05:16,651 நல்ல யோசனை, டாட்டா. நான் வந்துவிடுகிறேன். 96 00:05:17,152 --> 00:05:21,114 பொறுமையாக வா. டிலாபியாவில் தள்ளுபடி இருந்தால் என்னிடம் சொல், சரியா? 97 00:05:21,114 --> 00:05:22,282 சொல்கிறேன். 98 00:05:31,374 --> 00:05:35,503 நாம் சுறாக்களைத் தேட வேண்டும், கிரேபியர்ட், செத்த மீன்களைக் குத்தக் கூடாது. 99 00:05:38,089 --> 00:05:39,841 மீனைப் பொறியாக வைக்க வேண்டுமா? 100 00:05:39,841 --> 00:05:41,426 உன் யோசனை பிடித்துள்ளது. 101 00:05:44,596 --> 00:05:45,972 என்னால் இதைப் படிக்கவே முடியவில்லை. 102 00:05:45,972 --> 00:05:47,057 நான் பார்க்கிறேன். 103 00:05:49,768 --> 00:05:53,563 ”உருளைக்கிழங்கு சிப்.” 104 00:05:54,397 --> 00:05:56,399 நல்ல முயற்சி, டேவி. உனக்குத்தான் அது வேண்டும். 105 00:05:57,400 --> 00:06:00,403 அரிசிப் பிரிவு. பாம்பா அரிசி எங்கே உள்ளது? 106 00:06:08,119 --> 00:06:11,039 -சுறாமீன்! -டேவி. அமைதி. 107 00:06:11,915 --> 00:06:12,958 சுறாமீன். 108 00:06:15,335 --> 00:06:16,711 என்ன? அமைதியாகத்தான் கூறினேன். 109 00:06:19,172 --> 00:06:21,174 ஜேன், சுறா இங்குதான் உள்ளது. 110 00:06:21,174 --> 00:06:23,843 தெரியும். அதை இங்கே வர வைக்க நான் தான் மீனைப் பயன்படுத்தினேன். 111 00:06:32,519 --> 00:06:34,020 அது அழகாக உள்ளது. 112 00:06:38,066 --> 00:06:40,360 அது நெருக்கத்தில் வரும்போது, அதை டேக் செய். 113 00:06:42,070 --> 00:06:43,071 முடியாது என்றால் என்ன அர்த்தம்? 114 00:06:45,115 --> 00:06:48,743 அது பெரிதாகத்தான் உள்ளது. அதுதான் உலகின் மிகப்பெரிய வேட்டையாடும் மீன். 115 00:06:55,166 --> 00:06:57,335 நீ தள்ளிவிடுவதை மேம்படுத்த வேண்டும். 116 00:07:04,342 --> 00:07:05,343 ஹாய். 117 00:07:07,929 --> 00:07:11,182 நான் உன்னை டேக் செய்ய முயற்சிப்பது உனக்குப் பிடிக்கவில்லை என நினைக்கிறேன், 118 00:07:12,642 --> 00:07:15,896 ஆனால் உன்னால் எவ்வளவு வேகமாக நீந்த முடியும் என்று இப்போது பார்க்கிறேன். 119 00:07:15,896 --> 00:07:17,063 கிரேபியர்ட், ஓடு! 120 00:07:22,819 --> 00:07:25,322 ஜேன், எங்கே இருக்கிறாய்? சொல். 121 00:07:26,072 --> 00:07:27,699 கடிபடாமல் இருக்க முயல்கிறேன். 122 00:07:27,699 --> 00:07:28,783 அதை டேக் செய்தாயா? 123 00:07:28,783 --> 00:07:30,994 இல்லை, ஆனால் அதைக் கோபப்படுத்திவிட்டேன். 124 00:07:33,914 --> 00:07:35,749 அற்புதம், கோபமான சுறா. 125 00:07:35,749 --> 00:07:38,793 நான் வருகிறேன், ஆனால் அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. 126 00:07:44,925 --> 00:07:47,010 {\an8}”ஒருவருக்கு ஆறுதான் வரம்பா?” 127 00:07:49,596 --> 00:07:50,931 இதை எடுத்துக்கொள்ளலாமா? 128 00:07:50,931 --> 00:07:52,641 சரி, டேவிட், 129 00:07:52,641 --> 00:07:55,310 ஆனால் அவற்றை திரும்ப வைக்க நீ எனக்கு உதவ வேண்டும். 130 00:07:55,310 --> 00:07:56,394 சரி. 131 00:08:00,982 --> 00:08:02,567 -வலதுபக்கம் திரும்பு. -சரி. 132 00:08:05,946 --> 00:08:07,155 இதைச் சாப்பிடு. 133 00:08:10,951 --> 00:08:12,535 அது அற்புதமாக இருந்தது. 134 00:08:12,535 --> 00:08:14,788 நாம் அந்தச் சுறாவை டேக் செய்யவில்லை என்பதைத் தவிர. 135 00:08:16,873 --> 00:08:17,874 இருவரும் என்ன செய்தீர்கள்? 136 00:08:18,541 --> 00:08:20,293 -ஆய்வு. -சுறாவிடம் உயிர்பிழைத்தல். 137 00:08:21,127 --> 00:08:23,588 நீங்கள் இருவரும் கொஞ்சம் அமைதியாக உயிர்பிழைக்கலாம். 138 00:08:23,588 --> 00:08:25,257 ஆம், ரொம்பவே அமைதியாக. 139 00:08:25,257 --> 00:08:27,425 நீங்கள் செய்த காரியத்தைப் பாருங்கள். 140 00:08:27,425 --> 00:08:30,220 நீங்கள் ஏற்படுத்திய சங்கடம். உடனே இதைச் சுத்தப்படுத்துங்கள். 141 00:08:32,931 --> 00:08:33,932 பிளானெட் ஹோப் 142 00:08:33,932 --> 00:08:37,435 ”நம் எதிர்காலத்தின் மிகப் பெரிய ஆபத்து அக்கறையின்மைதான்.” 143 00:08:38,019 --> 00:08:41,523 -அக்கறையின்மை என்றால் என்ன? -எனக்கும் தெரியவில்லை. 144 00:08:41,523 --> 00:08:44,109 ஆர்வமோ அக்கறையோ இல்லாமல் இருப்பது. 145 00:08:44,609 --> 00:08:48,071 நீங்கள் இருவரும் இப்போது நீங்கள் தள்ளிவிட்டதைச் சுத்தம் செய்யாமல் இருப்பது போல. 146 00:08:48,071 --> 00:08:51,491 அல்லது மக்கள் சுறாக்களுக்கு உதவுவதில் அக்கறையின்றி இருப்பது போல. 147 00:08:51,491 --> 00:08:53,285 அதை அப்படியே அவர்கள் பக்கம் திருப்பியது பிடித்துள்ளது. 148 00:08:55,662 --> 00:08:58,540 நான் உதவுகிறேன். நான் நேசிக்கும் அப்பாவுக்கு. 149 00:08:59,416 --> 00:09:03,211 சுறாக்கள் பயங்கரமானவை என்பதால் மக்கள் அவற்றுக்கு உதவுவதில்லை, கண்ணே. 150 00:09:03,795 --> 00:09:05,755 இல்லை, அவற்றை தவறாகப் புரிந்துகொள்கின்றனர். 151 00:09:05,755 --> 00:09:08,800 நாம் பயப்படுவதற்காக, ஒரு விஷயத்தை அழிந்துபோகவிடக் கூடாது. 152 00:09:08,800 --> 00:09:11,845 மக்கள்தான் உலகத்தின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருப்பவர்கள், 153 00:09:11,845 --> 00:09:15,015 நாம் தான் உணவுச் சங்கிலி அழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 154 00:09:15,015 --> 00:09:16,266 அதை நாம் செய்வதில்லை. 155 00:09:20,353 --> 00:09:22,355 அவள் உண்மையாக உலகத்தைக் காப்பாற்ற முயல்கிறாள். 156 00:09:45,045 --> 00:09:48,465 நீ பயங்கரமானது இல்லை. மக்கள் உன்னை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. 157 00:09:52,052 --> 00:09:53,470 நான் தோல்வியடைந்ததற்கு மன்னித்துவிடு. 158 00:09:54,971 --> 00:09:59,559 பின்வாங்காதே. இன்னும் நேரம் உள்ளது. 159 00:10:00,143 --> 00:10:01,645 அவன் அப்படிப் பேச மாட்டான். 160 00:10:04,272 --> 00:10:05,523 ஓஹோ. 161 00:10:07,025 --> 00:10:08,985 உலகத்திற்கு நேரமில்லை. 162 00:10:09,778 --> 00:10:13,907 உன்னால் மாற்ற முடியாத விஷயங்கள் பற்றிக் கவலைப்படாதே. 163 00:10:13,907 --> 00:10:15,784 ஆனால் அதுதான் விஷயம், டாட்டா. 164 00:10:15,784 --> 00:10:19,746 நம்மால் மாற்ற முடியும். நாம் இன்னும் ஆர்வம் காட்ட வேண்டும். 165 00:10:19,746 --> 00:10:22,040 நாம் கவலைப்படும் விஷயத்தை மாற்ற நம்மை எதுவும் செய்ய வைக்கும் எனில் 166 00:10:22,040 --> 00:10:24,167 கவலைப்படுவது மோசமில்லை. 167 00:10:24,167 --> 00:10:26,545 உனக்கு மிகவும் பிடித்த பெண் போலவா? 168 00:10:26,545 --> 00:10:30,257 ஜேன் குட்டால் உலகத்தை மாற்றவும் விலங்குகளைக் காப்பாற்றவும் முயல்கிறாள். 169 00:10:30,257 --> 00:10:31,591 அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். 170 00:10:31,591 --> 00:10:33,051 நான் எப்படி உதவ முடியும்? 171 00:10:34,636 --> 00:10:37,305 நாம் கடலில் அதிகமாக மீன் பிடிப்பதாலும் சுறாக்களை அதிகமாகக் கொல்வதாலும் 172 00:10:37,305 --> 00:10:39,349 அவை பிரச்சினையில் உள்ளன. 173 00:10:39,349 --> 00:10:42,978 அவை எப்படி வாழ்கின்றன என நாம் அறிந்தால், அவற்றை எப்படிக் காப்பாற்றுவது என அறிய முடியும். 174 00:10:43,895 --> 00:10:45,397 ஆம். 175 00:10:45,397 --> 00:10:48,275 அதற்குத்தான் அதைப் பின்தொடர்வதற்காக அதை டேக் செய்ய வேண்டுமா? 176 00:10:48,275 --> 00:10:49,401 அதேதான்! 177 00:10:49,401 --> 00:10:52,237 ஆனால் நாங்கள் முயற்சிக்கும்போதெல்லாம், அது வேலை செய்யவில்லை. 178 00:10:52,237 --> 00:10:55,907 நான் வேறொருவர் என்ன நினைக்கிறார் எனப் புரிந்துகொள்ள முயல்கிறேன் எனில், 179 00:10:56,908 --> 00:10:58,410 அவர்களைப் போல யோசிக்க முயல்வேன். 180 00:10:59,536 --> 00:11:02,497 ஒருவேளை நீ மனிதர் போல அதிகமாக யோசிக்கிறாய் போல. 181 00:11:03,331 --> 00:11:04,332 எனக்குப் புரியவில்லை. 182 00:11:04,332 --> 00:11:08,670 நீ சுறா போல யோசிக்கத் தொடங்க வேண்டும். 183 00:11:09,963 --> 00:11:12,299 சுறா போல. 184 00:11:12,299 --> 00:11:13,550 நன்றி, டாட்டா. 185 00:11:14,092 --> 00:11:15,093 நாங்கள் வந்துவிடுகிறோம். 186 00:11:19,431 --> 00:11:20,640 என்னைச் சாப்பிட்டுவிடாதே! 187 00:11:20,640 --> 00:11:23,560 மன்னித்துவிடு. உன் அப்பா இன்னும் கோபமாக இருக்கிறாரா? 188 00:11:25,312 --> 00:11:28,106 அவர் அப்பாவின் ரெசிபிக்கு ஷாப்பிங் செய்யும்போது எப்போதும் பதட்டமாக இருப்பார். 189 00:11:30,358 --> 00:11:31,359 அவர் சரியாகிவிடுவார். 190 00:11:31,985 --> 00:11:34,279 நம் சுறாவை எப்படி டேக் செய்வது என எனக்குத் தெரியுமென நினைக்கிறேன். 191 00:11:34,279 --> 00:11:36,615 அதில் ஆக்ஷனும் ஆபத்தும் உள்ளதா? 192 00:11:36,615 --> 00:11:37,908 ஆம். 193 00:11:37,908 --> 00:11:39,117 -நான் வரவில்லை. -என்ன? 194 00:11:39,117 --> 00:11:42,871 விளையாடினேன். நான் வருகிறேன், எனக்கு ஆபத்தில்லாதவரை. 195 00:11:43,955 --> 00:11:45,332 நான் ஆபத்தில் இருக்கிறேனா? 196 00:11:45,916 --> 00:11:47,918 உனக்கு சீல் போல குரல் எழுப்பத் தெரியுமா? 197 00:11:47,918 --> 00:11:49,294 நான் தான் அதில் சிறந்தவன். 198 00:11:53,757 --> 00:11:54,883 சத்தமாகவா? 199 00:11:57,469 --> 00:11:58,470 டேவிட். 200 00:12:00,722 --> 00:12:03,099 -என் தொண்டையில் ஏதோ உள்ளது. -ம்ம் ஹ்ம்ம். 201 00:12:04,809 --> 00:12:05,810 என்ன திட்டம்? 202 00:12:07,687 --> 00:12:10,398 இந்த விஷயத்தை முடிப்போம். 203 00:12:12,359 --> 00:12:13,944 இன்னும் நன்றாகச் சத்தமிடு. 204 00:12:17,781 --> 00:12:19,199 எதுவும் தெரிகிறதா, கிரேபியர்ட்? 205 00:12:24,162 --> 00:12:26,331 சரி. அவளைப் பார்த்தால் எங்களிடம் சொல். 206 00:12:32,254 --> 00:12:34,214 கவனத்தைச் சிதறவிடாதே. 207 00:12:38,969 --> 00:12:40,512 புரிகிறதா? 208 00:12:51,606 --> 00:12:53,817 {\an8}மீன் 209 00:12:55,443 --> 00:12:58,488 மீன் மட்டும்தான் உள்ளது. இப்போதும் உன்னால் முடியும். 210 00:13:08,123 --> 00:13:11,167 நான் வெள்ளைச் சுறாவை வரவைப்பதற்காக, சீல் போல நிற்கிறேன் 211 00:13:11,167 --> 00:13:12,752 அப்போதுதான் என் நெருங்கிய தோழியால் அதை டேக் செய்ய முடியும். 212 00:13:14,004 --> 00:13:15,005 அருமை. 213 00:13:21,887 --> 00:13:23,513 இன்னும் அவள் வருவது தெரியவில்லையா, கிரேபியர்ட்? 214 00:13:24,347 --> 00:13:25,974 கிரேபியர்ட், இருக்கிறாயா? 215 00:13:31,897 --> 00:13:33,648 கிரேபியர்ட், கேட்கிறதா? ஓவர். 216 00:13:36,359 --> 00:13:37,360 ஜேன்? 217 00:13:40,238 --> 00:13:42,490 நான் சீல் போலவே ஆடவும் செய்யலாம் போல? 218 00:13:46,119 --> 00:13:47,871 கிரேபியர்ட், பதில் சொல்! 219 00:13:55,712 --> 00:13:58,089 மீன்கள் பிரிவு எங்கே என்று சொல்ல முடியுமா? 220 00:14:00,884 --> 00:14:02,928 அவள் வருவதாக கிரேபியர்ட் கூறினான். 221 00:14:02,928 --> 00:14:05,013 குறைந்தது அவள் என்னைக் கீழிருந்து தாக்க மாட்டாள். 222 00:14:05,639 --> 00:14:09,017 சுறா போல யோசி. கீழிருந்து தாக்கு. 223 00:14:31,831 --> 00:14:32,832 டேக் செய்துவிட்டேன்! 224 00:14:33,541 --> 00:14:34,542 யா! 225 00:14:41,466 --> 00:14:42,634 கிரேபியர்ட். 226 00:14:50,559 --> 00:14:54,020 நாங்கள் பணம் கொடுக்கும் வரை உன்னால் காத்திருக்க முடியவில்லையா, கிரேபியர்ட்? 227 00:14:54,020 --> 00:14:55,313 அவன் பசியில் இருந்தான். 228 00:15:00,360 --> 00:15:02,112 அது நிறைய மீன்கள். 229 00:15:02,821 --> 00:15:04,948 கெவினுக்கு கடல் உணவு பயெல்லா செய்வது பிடிக்கும். 230 00:15:07,075 --> 00:15:08,076 என்ன ஆயிற்று? 231 00:15:08,702 --> 00:15:12,706 சுறாக்கள் பிரச்சினையில் இருப்பதற்கான காரணங்களில், நாம் அதிகமாக கடலில் மீன்பிடிப்பதும் ஒன்று. 232 00:15:12,706 --> 00:15:14,583 மீன்கள் இல்லையெனில், சுறாக்கள் இல்லை. 233 00:15:14,583 --> 00:15:17,711 அவை இந்த இறால்கள் இல்லாமல் வாடப் போவதில்லை தானே? 234 00:15:18,503 --> 00:15:21,798 இல்லை. ஆனால் இதைச் சாப்பிடும் மீன்கள் வாடும், அந்த மீன்களைச் சாப்பிடும் சீல்களும், 235 00:15:21,798 --> 00:15:24,885 அந்த சீல்களைச் சாப்பிடும் சுறாக்களும் வாடும். நாம் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளோம். 236 00:15:28,513 --> 00:15:30,098 இது உன் அப்பாவின் லிஸ்ட்டில் உள்ளது. 237 00:15:30,974 --> 00:15:33,727 இவர்களால் வெள்ளைச் சுறாக்களைக் காப்பாற்ற நினைக்க முடியுமெனில், 238 00:15:33,727 --> 00:15:35,979 நாமும் அவ்வப்போது வேறு விஷயங்களைச் 239 00:15:35,979 --> 00:15:38,899 சாப்பிடுவது பற்றி நினைக்கலாம். 240 00:15:38,899 --> 00:15:40,442 வாரம் ஒருமுறை இறைச்சி சாப்பிடாமல் இருப்பது, 241 00:15:40,442 --> 00:15:43,778 அல்லது நாம் சாப்பிடும் இறைச்சி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்வது போல. 242 00:15:44,905 --> 00:15:46,907 அப்பா ஏற்றுக்கொள்வார் என நினைக்கிறேன். 243 00:15:48,116 --> 00:15:50,410 உங்களிடம் சுற்றுச்சூழலுக்கேற்ற மீன்கள் உள்ளனவா? 244 00:15:50,410 --> 00:15:51,494 இந்தப் பக்கம். 245 00:15:56,291 --> 00:15:57,876 இந்த சிப்ஸ் எப்படி இதில் வந்தது? 246 00:16:12,974 --> 00:16:16,102 சாட்டிலைட் டேகிங் சிக்னல் தெளிவாகக் கிடைக்கிறது. 247 00:16:20,357 --> 00:16:21,691 அவள் எங்கே போகிறாள்? 248 00:16:21,691 --> 00:16:23,109 நாம் விரைவில் தெரிந்துகொள்வோம் என நம்புவோம். 249 00:16:26,780 --> 00:16:28,240 அவள் நம்மைச் சுற்றி வந்தாளா? 250 00:16:28,240 --> 00:16:30,742 இல்லை, அவள் இன்னும் நமக்கு முன்னால்தான் இருக்கிறாள். 251 00:16:32,827 --> 00:16:34,120 அங்கே இன்னொன்று உள்ளது. 252 00:16:38,541 --> 00:16:41,545 -அவை அவளைவிடச் சிறிதாக உள்ளன. -அதாவது... 253 00:16:41,545 --> 00:16:42,629 அவை ஆண் சுறாக்கள். 254 00:16:42,629 --> 00:16:45,340 ஏனெனில் பெண் சுறாக்கள் ஆண் சுறாக்களைவிடப் பெரிதாக இருக்கும். 255 00:16:46,424 --> 00:16:48,426 இதுதான் அவை இனப்பெருக்கம் செய்ய சந்திக்கும் இடமாக இருக்க வேண்டும். 256 00:16:51,513 --> 00:16:54,057 இதற்கு முன் யாரும் இதைப் பார்த்ததில்லை என நினைக்கிறேன். 257 00:16:57,686 --> 00:17:00,146 என்ன? என் அப்பா நான் ட்ரீட் சாப்பிடலாம் என்றார். 258 00:17:22,878 --> 00:17:24,795 வெள்ளைச் சுறாக்களைக் காப்பாற்ற உதவுங்கள். 259 00:17:30,135 --> 00:17:32,053 இருங்கள், டாட்டா. இதோ வந்துவிடுகிறேன். 260 00:17:32,679 --> 00:17:36,016 -எங்கே போகிறாய்? -நான் கார்லீ ஜாக்ஸனை அழைக்க வேண்டும். 261 00:17:36,016 --> 00:17:37,100 யார் அது? 262 00:17:37,100 --> 00:17:39,728 அவர் சுறாக்களை ஆய்வு செய்யும் கடல் உயிரியலாளர். 263 00:17:39,728 --> 00:17:41,104 நாம் சுறாக்களுக்கு உதவி செய்யவில்லையா? 264 00:17:41,104 --> 00:17:43,064 ஆம், ஆனால் எப்போதும் நாம் இன்னும் அதிகமாகச் செய்யலாம். 265 00:17:43,064 --> 00:17:46,735 சரி, ஆனால் ரொம்ப நேரம் ஆக்காதே, கண்ணே. சீக்கிரம் டின்னர் தயாராகிவிடும். 266 00:17:46,735 --> 00:17:47,986 சரி. 267 00:17:48,570 --> 00:17:50,989 -கார்லீ. -ஹாய். நீதான் ஜேனாக இருக்க வேண்டும். 268 00:17:50,989 --> 00:17:54,117 ஆம். என்னைச் சந்தித்து, சுறாக்கள் பற்றிப் பேசுவதற்கு நன்றி. 269 00:17:54,117 --> 00:17:57,245 பரவாயில்லை. நீ அனுப்பிய மின்னஞ்சல்கள் மெசேஜ்களைப் பார்த்தபிறகு 270 00:17:57,245 --> 00:17:59,164 எப்படி என்னால் மறுக்க முடியும்? 271 00:17:59,164 --> 00:18:01,166 உங்களுக்குப் பின்னால் பச்சை நிறத்தில் இருப்பவை என்ன? 272 00:18:01,166 --> 00:18:02,250 இவையா? 273 00:18:02,918 --> 00:18:07,130 நான் என் வேலையில் பயன்படுத்திய சுறா டேக்குகள். 274 00:18:07,130 --> 00:18:09,674 நாங்கள் இவற்றை சுறாக்களின் துடுப்புகளில் மாட்டுவோம், அவற்றின் துடுப்பில் 275 00:18:09,674 --> 00:18:12,177 சிறிய காதணி போல. 276 00:18:12,677 --> 00:18:15,680 மேலும் இவற்றின் பின்னால் எங்கள் ஃபோன் எண்களும் இருக்கும். 277 00:18:15,680 --> 00:18:17,682 யாராவது அந்தச் சுறாவைப் பிடித்தால், 278 00:18:17,682 --> 00:18:20,727 அவர்கள் எங்களுக்கு கால் செய்வார்கள், அந்தச் சுறா எங்கே இருந்ததென எங்களுக்குத் தெரியும். 279 00:18:20,727 --> 00:18:24,940 நான் சுறாவை டேக் செய்யும் வீடியோவைக் காட்டுகிறேன். 280 00:18:24,940 --> 00:18:26,942 இது பிளாக்டிப் சுறா. 281 00:18:26,942 --> 00:18:29,819 நீ பார்ப்பது போல, நாங்கள் சுறாவை அளவிடுகிறோம். 282 00:18:29,819 --> 00:18:31,071 அந்தக் குழாய் எதற்காக? 283 00:18:31,071 --> 00:18:34,950 சுறா சுவாசிப்பதற்காக, அதன் மூலம் அதன் வாயில் தண்ணீர் ஊற்றுவோம். 284 00:18:34,950 --> 00:18:37,077 பிறகு சுறாவை டேக் செய்வோம். 285 00:18:37,077 --> 00:18:40,330 வேலை முடிந்ததும், அந்தச் சுறாவை மீண்டும் தண்ணீரில் விட்டுவிடுவோம், 286 00:18:40,330 --> 00:18:42,207 அது ஆரோக்கியமாக நீந்திச் செல்லும். 287 00:18:42,207 --> 00:18:44,042 உங்களுக்கு எப்போதிலிருந்து சுறாக்களைப் பிடிக்கத் தொடங்கியது? 288 00:18:44,042 --> 00:18:50,423 எனக்கு ஐந்த அல்லது ஆறு வயது இருக்கும்போது, சுறாக்கள் பற்றிய இந்தப் புத்தகத்தைப் படித்தேன், 289 00:18:50,423 --> 00:18:52,384 அவற்றின் மீது எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. 290 00:18:52,384 --> 00:18:55,595 அப்போதுதான் நான் வளர்ந்தபிறகு சுறாக்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானி ஆக விரும்பினேன். 291 00:18:55,595 --> 00:18:57,180 நீங்கள் சுறாவுடன் நீந்தியுள்ளீர்களா? 292 00:18:57,180 --> 00:18:59,599 அந்த வீடியோ கிடைக்கிறதா எனப் பார்க்கிறேன். 293 00:18:59,599 --> 00:19:06,022 நான் பெலிஸில் இருந்தேன், இது நான் நர்ஸ் சுறாவுடன் நீந்தும் வீடியோ, 294 00:19:06,022 --> 00:19:07,691 நான் அப்போது ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். 295 00:19:07,691 --> 00:19:11,486 கடலில் கூண்டில்லாமல் சுறாவைப் பார்த்தால், டேவிட் மிகவும் பயந்துவிடுவான். 296 00:19:11,486 --> 00:19:14,906 நாம் சுறாக்களைப் பார்த்து பயப்படுவதைவிட, அவை நம்மைப் பார்த்து அதிகமாக பயப்படும். 297 00:19:14,906 --> 00:19:18,076 நிறைய முறை மக்கள் சுறாக்களால் தவறுதலாகத்தான் தாக்கப்படுகின்றனர், 298 00:19:18,076 --> 00:19:21,079 ஏனெனில் அவற்றின் பார்வைத்திறன் சிறப்பாக இருக்காது. 299 00:19:21,079 --> 00:19:24,332 அவை அவர்களை உணவு என நினைத்து, கடித்துப் பார்க்கும், பிறகு 300 00:19:24,332 --> 00:19:27,961 ”இது கேவலமாக உள்ளது” என்று விலகிச் சென்றுவிடும் அவை தவறு செய்துவிட்டதால். 301 00:19:28,545 --> 00:19:31,006 கடலில் மக்கள் சுறாவைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? 302 00:19:31,590 --> 00:19:34,259 தூரமாகவே இருங்கள், தொடாதீர்கள் என்று எப்போதும் குறிப்பிட்டுச் சொல்வேன். 303 00:19:34,259 --> 00:19:38,638 சுறாக்கள் மீதான பயத்தை அவற்றின் மீதான மரியாதையாக மாற்றுவது மிகவும் முக்கியம். 304 00:19:38,638 --> 00:19:39,848 நாம் எப்படி அவற்றுக்கு உதவலாம்? 305 00:19:39,848 --> 00:19:43,643 இளையவர்களால் சுறாக்களுக்கு உதவ நிறைய விஷயங்கள் செய்ய முடியும். 306 00:19:43,643 --> 00:19:47,147 அவற்றில் ஒன்று நிலையான கடல் உணவை உண்பது. 307 00:19:47,147 --> 00:19:50,942 அது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இடத்தில் இருந்தும் குறிப்பிட்ட மீன்களை அதிகமாகப் பிடிக்காத 308 00:19:50,942 --> 00:19:53,987 இடத்தில் இருந்தும் வருவதை உறுதிசெய்யவும். 309 00:19:53,987 --> 00:19:56,281 சில இளைஞர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, 310 00:19:56,281 --> 00:19:57,866 ஷார்க்ஸ் 4 கிட்ஸ் போன்ற புரோகிராம்களில் 311 00:19:57,866 --> 00:20:02,662 ஈடுபடுகின்றனர், அவை சுறா பற்றிய உரையாடலில் குழந்தைகளை அதிகமாக ஈடுபடுத்தச் செய்கின்றன. 312 00:20:02,662 --> 00:20:06,875 டைஸன் சீ போன்ற இளம் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களும் உள்ளனர். 313 00:20:06,875 --> 00:20:10,045 அவர் ஒட்டுமொத்தமாக நம் கடல்களுக்கு உதவ, தண்ணீரில் இருந்து 314 00:20:10,045 --> 00:20:12,255 பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற முயல்கிறார். 315 00:20:12,255 --> 00:20:14,507 நானும் சுறாக்களை ஆய்வு செய்யும் இன்னும் மூன்று கருப்பினப்... 316 00:20:14,507 --> 00:20:19,638 {\an8}...பெண்களுடன் சேர்ந்து சுறா அறிவியலில் சிறுபான்மையினர் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளேன். 317 00:20:19,638 --> 00:20:22,515 இந்தத் துறையில் எங்களைப் போலிருக்கும் வேறு யாரையும் நாங்கள் கண்டதில்லை, 318 00:20:22,515 --> 00:20:25,936 அதனால் எங்களைப் போல யாரும் உணரக் கூடாது என விரும்பினோம். 319 00:20:25,936 --> 00:20:29,397 சுறா அறிவியலில் இன்னும் பன்முகத்தன்மையைக் கொண்டுவருவதுதான் எங்கள் இலக்கு, 320 00:20:29,397 --> 00:20:33,318 ஏனெனில் சுறா அறிவியலில் எவ்வளவு பேர் ஆய்வு செய்கின்றனரோ, 321 00:20:33,318 --> 00:20:34,819 அவ்வளவு எங்களால் கண்டுபிடிக்க முடியும். 322 00:20:34,819 --> 00:20:36,905 அது ஒட்டுமொத்தமாக சுறாக்களைப் பாதுகாக்க உதவும். 323 00:20:36,905 --> 00:20:39,616 நீங்கள் சுறாக்களைக் காப்பாற்ற நிறைய மக்களைச் சம்மதிக்க வைப்பது எனக்குப் பிடித்துள்ளது. 324 00:20:39,616 --> 00:20:42,118 ஜேன், டின்னர் தயார்! 325 00:20:42,118 --> 00:20:44,204 -நீ போக வேண்டும் போலத் தெரிகிறது. -போக வேண்டாம் என விரும்புகிறேன். 326 00:20:44,204 --> 00:20:46,248 ஆனால் சுறாக்களைக் காப்பாற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். 327 00:20:46,248 --> 00:20:48,583 -என்னுடன் பேசியதற்கு நன்றி, கார்லீ. -பை, ஜேன். 328 00:20:48,583 --> 00:20:51,962 மறந்துவிடாதே, சுறாக்கள் அற்புதமானவை. 329 00:20:52,796 --> 00:20:55,298 டேவிட்டுக்கு அது பிடிக்கும். பை! 330 00:20:58,051 --> 00:20:59,177 கார்ச்சரோடன் கார்ச்சேரியாஸ் 331 00:20:59,177 --> 00:21:01,763 வெள்ளைச் சுறாக்கள் பெரும்பாலும் எங்கே பொழுதைக் கழிக்கும் எனக் கண்டறிவது 332 00:21:08,103 --> 00:21:10,522 ஜேன், கிரேபியர்ட் உன் உணவைச் சாப்பிடுகிறான்! 333 00:21:11,606 --> 00:21:13,066 கிரேபியர்ட்! 334 00:21:53,106 --> 00:21:55,108 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்