1 00:00:37,497 --> 00:00:39,249 "ஏசெரோடான் ஜூபேட்டஸ்." 2 00:00:46,006 --> 00:00:49,426 ஜேன், கிரேபியர்ட், தயாராக இருங்கள். நாம் கிட்டத்தட்ட குதிக்கும் இலக்கை நெருங்கிவிட்டோம். 3 00:00:51,553 --> 00:00:53,638 கேட்டது, டேவிட். நாங்கள் தயாராக இருக்கிறோம். 4 00:00:59,686 --> 00:01:01,730 திருத்தம், நான் குதிக்கத் தயாராக இருக்கிறேன். 5 00:01:02,731 --> 00:01:04,648 இது கொஞ்சம் பயமாக இருக்கும் என்று தெரியும், கிரேபியர்ட், 6 00:01:04,648 --> 00:01:07,193 ஆனால் கீழே இருக்கும் ஒரு விலங்குக்கு நம் உதவி தேவைப்படுகிறது. 7 00:01:07,193 --> 00:01:10,322 அதோடு, நம் அதிநவீன பாராசூட்டுகள் நம்மை பத்திரமாக தரையிறக்கும். 8 00:01:12,157 --> 00:01:16,620 நாம் குதிக்கும் இலக்குக்கு வந்துவிட்டோம். ஏர் டேவிட்டில் பயணம் செய்ததற்கு நன்றி. 9 00:01:18,955 --> 00:01:20,332 உன்னை கீழே பார்க்கிறேன், நண்பா. 10 00:01:29,883 --> 00:01:32,177 உனக்கு உதவி தேவைப்படுவது போல தெரிகிறது, கிரேபியர்ட். 11 00:01:37,140 --> 00:01:39,226 முதலில் வருபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். 12 00:01:41,269 --> 00:01:43,813 முதலில் வருபவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றா சொன்னாய்? 13 00:01:43,813 --> 00:01:47,817 இன்றில்லை, ஏனென்றால் இன்று, நாம் ஏசெரோடான் ஜூபேட்டஸுக்கு உதவுகிறோம். 14 00:01:49,069 --> 00:01:53,740 நான் சொல்கிறேன், அதுதான் வெளவால்களின் அறிவியல் பெயர். 15 00:01:53,740 --> 00:01:55,825 தொழில்நுட்ப ரீதியாக சொன்னால், பெரிய வெளவால்கள். 16 00:01:55,825 --> 00:01:59,829 பெரிய வெளவாலா? எந்தப் பெரிய விலங்குக்கும் நம் உதவி எதற்காக தேவைப்படுகிறது? 17 00:01:59,829 --> 00:02:02,332 ஏனென்றால் துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன. 18 00:02:02,332 --> 00:02:04,584 சில விலங்குகள் அழிந்து வருவதற்கு ஒரு காரணம் 19 00:02:04,584 --> 00:02:06,253 அவற்றுக்கு போதுமான உணவு இல்லாததுதான். 20 00:02:06,253 --> 00:02:08,921 எனவே, அவை என்ன சாப்பிடுகின்றன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். 21 00:02:08,921 --> 00:02:10,090 அது எளிது. 22 00:02:10,090 --> 00:02:12,217 இரத்தம். அது எல்லோருக்கும் தெரியுமே. 23 00:02:12,759 --> 00:02:14,135 அருமையாக தரையிறங்கினாய், கிரேபியர்ட். 24 00:02:21,351 --> 00:02:23,103 பெரிய வெளவாலை பார்த்துவிட்டேன். 25 00:02:25,480 --> 00:02:28,567 திருத்தம், பெரிய வெளவால்களை பார்த்துவிட்டேன். 26 00:02:30,569 --> 00:02:32,279 அமைதியாக இரு, கிரேபியர்ட். 27 00:02:32,279 --> 00:02:34,364 சில இரத்தக்காட்டேரி வௌவால்கள் இரத்தத்தைக் குடிக்கும், 28 00:02:34,364 --> 00:02:38,285 ஆனால் பெரும்பாலான வௌவால்கள் பூச்சிகளை, பழத்தை, மீன், எலி, பல்லிகளை சாப்பிடுகின்றன... 29 00:02:38,285 --> 00:02:40,078 சிம்பன்சிகளை. 30 00:02:40,078 --> 00:02:43,373 இல்லை. மற்ற வௌவால்களை. 31 00:02:43,373 --> 00:02:46,126 அட. மிகவும் மோசம். 32 00:02:46,126 --> 00:02:47,836 எல்லாமே உயிர் பிழைக்க வேண்டும், டேவிட். 33 00:02:49,212 --> 00:02:52,215 இந்த வௌவால்களை இராட்சத தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரி என்றழைக்கிறார்கள். 34 00:02:52,215 --> 00:02:54,968 எனவே நரிகள் சாப்பிடுவதையே இவை சாப்பிடுகின்றன என்பதுதான் என் எண்ணம். 35 00:02:54,968 --> 00:02:57,721 -நரிகள் மற்ற நரிகளை சாப்பிடுமா? -இல்லை. 36 00:02:58,889 --> 00:03:00,932 நம் உணவு பட்டியலில் இருந்து ஒன்றை நீக்கிவிடு. 37 00:03:01,516 --> 00:03:04,102 நான் இந்த கேமராவை வௌவால்கள் ஒன்றின் மீது பொருத்த முடிந்தால், 38 00:03:04,102 --> 00:03:06,897 அது என்ன சாப்பிடுகிறது என்பதை பார்த்து அவற்றுக்கு எப்படி உதவுவது என்பதை தெரிந்து கொள்ளலாம். 39 00:03:06,897 --> 00:03:09,482 கவனமாக இரு. கழுத்து பத்திரம். 40 00:03:10,942 --> 00:03:12,736 அவன் விளையாடுகிறான், கிரேபியர்ட். 41 00:03:12,736 --> 00:03:16,698 தவிர, அவை இரவில் சுற்றித் திரிபவை, அப்படி என்றால் இருட்டாகும் வரை அவை தூங்கி கொண்டிருக்கும். 42 00:03:16,698 --> 00:03:17,824 நமக்கு போதுமான நேரம் இருக்கிறது. 43 00:03:23,246 --> 00:03:24,539 அடடா. 44 00:03:30,837 --> 00:03:32,839 ஜேன், "நான் வேலை அழைப்பில் இருக்கும்போது அலறவோ, 45 00:03:32,839 --> 00:03:35,634 கத்தவோ, ஊளையிடவோ கூடாதென்று" உன்னிடம் பலமுறை சொல்லிவிட்டேன். 46 00:03:35,634 --> 00:03:39,304 மன்னித்துவிடுங்கள், அம்மா, ஆனால் பறக்கும் நரியின் மீது கேமராவைப் பொருத்த நெருங்கிவிட்டோம், 47 00:03:39,304 --> 00:03:40,472 எனவே அவை என்ன சாப்பிடுகின்றன என்பதைப் பார்க்க முடியும். 48 00:03:40,472 --> 00:03:43,266 அது நீ நினைப்பது போல இல்லை. அது வௌவால்கள். 49 00:03:43,266 --> 00:03:45,018 தொழில்நுட்ப ரீதியாக சொன்னால், பெரிய வௌவால்கள். 50 00:03:45,018 --> 00:03:47,229 சரி. வாழ்த்துக்கள். 51 00:03:47,229 --> 00:03:49,898 -இருங்கள்... -அமைதியாக. 52 00:03:49,898 --> 00:03:52,317 நாங்கள் ஒரு வௌவாலை நெருங்க வேண்டுமென்றால் செய்யத்தான் வேண்டும். 53 00:03:52,317 --> 00:03:56,655 சொல்வதை புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை, அரை மணிநேரத்தில் இரவு உணவு தயாராகிவிடும். 54 00:03:57,322 --> 00:03:58,531 சரி. 55 00:03:58,531 --> 00:03:59,616 ஆம், இன்னும் அழைப்பில் தான் இருக்கிறேன். 56 00:04:00,325 --> 00:04:01,785 ஜேன்! கிரேபியர்ட் பறந்து போகிறது! 57 00:04:01,785 --> 00:04:03,078 அடக் கடவுளே! கிரேபியர்ட்! 58 00:04:03,078 --> 00:04:06,248 கிரேபியர்ட்! கவலைப்படாதே! நான் வருகிறேன்! 59 00:04:06,831 --> 00:04:08,124 தயவுசெய்து, பொறுங்கள். 60 00:04:08,124 --> 00:04:10,085 ஜேன், இப்போது உன்னிடம் என்ன சொன்னேன்? 61 00:04:10,627 --> 00:04:11,628 நீ எங்கே போகிறாய்? 62 00:04:11,628 --> 00:04:13,838 கிரேபியர்ட் பால்கனியில் இருந்து பறந்துவிட்டது. அது எங்கு போனது என்று தெரியவில்லை. 63 00:04:13,838 --> 00:04:17,466 கவலைப்படாதீர்கள், ஜேனின் அம்மா. நாங்கள் அதைக் கண்டுபிடிப்போம். நிலைமை சீராகிவிடும். 64 00:04:18,050 --> 00:04:21,304 கண்டிப்பாக. நல்லது! இரவு உணவுக்கு வந்துவிடுங்கள். 65 00:04:21,304 --> 00:04:22,806 என்ன சமைத்திருக்கிறீர்கள்? 66 00:04:22,806 --> 00:04:24,224 இன்னும் முடிவு செய்யவில்லை! 67 00:04:24,224 --> 00:04:25,684 டேவிட், வா போகலாம். 68 00:04:25,684 --> 00:04:28,144 நான் வரலாமா என்று யோசிக்கிறேன். 69 00:04:28,144 --> 00:04:29,187 பாஸ்தா? 70 00:04:29,938 --> 00:04:31,231 இரவு உணவின் போது உங்களை பார்க்கிறேன்! 71 00:04:33,233 --> 00:04:34,317 சரி. 72 00:04:39,030 --> 00:04:41,992 எங்கிருந்து தொடங்குவது? கிரேபியர்ட் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். 73 00:04:43,201 --> 00:04:45,287 நாம் பிரிந்து சென்றால் நிறைய இடங்களில் தேடலாம். 74 00:04:49,749 --> 00:04:51,877 கிரேபியர்ட்? கிரேபியர்ட், எங்கே இருக்கிறாய்? 75 00:04:52,586 --> 00:04:54,129 கிரேபியர்ட்? 76 00:04:54,754 --> 00:04:56,673 -அதைப் பார்த்தாயா? -எதுவும் தெரியவில்லை. 77 00:05:00,594 --> 00:05:02,012 அது இங்கேயும் இல்லை. 78 00:05:03,680 --> 00:05:06,057 கிரேபியர்ட் பாவம். அது ஒருவேளை மிகவும் பயந்திருக்கலாம். 79 00:05:06,057 --> 00:05:07,893 அது பயப்பட வேண்டும். 80 00:05:07,893 --> 00:05:11,146 அதைப் பார்த்துவிட்டேன், ஆனால் இடத்தை சொன்னால் நீ விரும்பமாட்டாய். 81 00:05:15,692 --> 00:05:19,529 அது இருக்கும் இடத்தை நான் ஏன் விரும்பமாட்டேன்? இந்த தோட்டம் அழகாக இருக்கிறது. 82 00:05:21,114 --> 00:05:22,866 இங்கே வாழ்வது யாரென்று உனக்குத் தெரியாதா? 83 00:05:22,866 --> 00:05:25,076 அவர் ஒருபோதும் வீட்டிற்கு வெளியே வந்ததில்லை என்கிறார்கள். 84 00:05:25,076 --> 00:05:28,121 அக்கம்பக்கத்தினர் வரலாற்றில் அவர்தான் மிகவும் மோசமானவர் என்கிறார்கள். 85 00:05:28,121 --> 00:05:29,581 -அவர்கள் சொல்கிறார்கள்... -யார் அவர்கள்? 86 00:05:30,165 --> 00:05:31,333 பெரும்பாலும், என் சகோதரிதான். 87 00:05:32,667 --> 00:05:35,712 வெளவால்களைப் பற்றி மக்கள் நினைக்கும் பல விஷயங்கள் உண்மையல்ல. 88 00:05:35,712 --> 00:05:37,756 இங்கே வாழ்பவர்களுக்கும் அதே மாதிரியாக இருக்கலாம். 89 00:05:37,756 --> 00:05:39,841 எனக்கு ஒன்று உறுதியாகத் தெரியும். 90 00:05:39,841 --> 00:05:42,677 இந்த இடத்தில் விழுந்த எதையும் இதுவரை யாரும் திரும்பப் பெற்றதில்லை. 91 00:05:42,677 --> 00:05:43,887 பார்த்தாயா? 92 00:05:45,847 --> 00:05:47,390 இது முதல் முறையாக இருக்கலாம். வா. 93 00:05:59,402 --> 00:06:00,362 சொன்னேனே. 94 00:06:01,279 --> 00:06:02,530 வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கலாம். 95 00:06:06,826 --> 00:06:08,411 ஹலோ. நான் ஜேன். 96 00:06:08,411 --> 00:06:09,496 தொந்தரவுக்கு மன்னியுங்கள், 97 00:06:09,496 --> 00:06:12,290 ஆனால் என் நண்பன் கிரேபியர்ட் உங்கள் கொல்லைப்புறத்தில் பாராசூட்டில் வந்துவிட்டான். 98 00:06:12,290 --> 00:06:14,000 அவனை திரும்பப் பெற வந்திருக்கிறோம். 99 00:06:16,586 --> 00:06:18,505 என் பொம்மைகளில் ஒன்றை கடனாக வாங்கிக் கொள்கிறாயா? 100 00:06:18,505 --> 00:06:20,465 நாம் கிரேபியர்டை அப்படியே விட முடியாது. 101 00:06:20,465 --> 00:06:22,676 அவன் சிக்கி இருக்கிறான். நீயே அதைப் பார்த்தாய். 102 00:06:23,843 --> 00:06:26,054 -எங்கே போகிறாய்? -என் நண்பனை திரும்பப் பெற. 103 00:06:26,054 --> 00:06:27,847 பொறு, ஜேன். வேண்டாம். 104 00:06:29,474 --> 00:06:30,475 தாமதமாகிறது. 105 00:06:31,142 --> 00:06:33,103 நாம் ஏன் உன் வீட்டில் இரவு உணவின் போது பேசக் கூடாது? 106 00:06:33,103 --> 00:06:35,480 அதை விரைவாக எடுத்துச் செல்வதை பொருட்படுத்தமாட்டார் என்று நம்புகிறேன். 107 00:06:35,480 --> 00:06:37,148 பொருட்படுத்துவார் என்று நம்புகிறேன். 108 00:06:43,780 --> 00:06:45,699 பொறு, கிரேபியர்ட். உன்னைப் பிடித்துக்கொண்டேன். 109 00:06:45,699 --> 00:06:48,493 ஜேன், சீக்கிரம். நாம் இங்கே மாட்டிக்கொள்ளக் கூடாது. 110 00:06:49,160 --> 00:06:50,370 கிட்டத்தட்டப் பிடித்துவிட்டேன். 111 00:06:51,413 --> 00:06:52,581 ஹேய்! 112 00:06:53,707 --> 00:06:55,750 அடடா. இதைக் கிழித்துவிட்டேன். 113 00:06:55,750 --> 00:06:57,961 இருவரும், என் தோட்டத்தை விட்டு வெளியேறுங்கள். 114 00:06:58,795 --> 00:07:02,424 -அடக் கடவுளே! -ஓ, இல்லை. ம். 115 00:07:02,424 --> 00:07:04,467 -நாங்கள் போகிறோம். -வெளியே போங்கள். 116 00:07:04,467 --> 00:07:05,552 தோட்ட தெளிப்பான் 117 00:07:05,552 --> 00:07:06,887 பூச்சி மருந்துகளை பயன்படுத்துகிறீர்களா? 118 00:07:06,887 --> 00:07:08,930 இப்போது இது நமக்கு முக்கியமான பிரச்சினை அல்ல. 119 00:07:08,930 --> 00:07:11,725 போங்கள். இப்போதே! 120 00:07:11,725 --> 00:07:13,518 அனுமதியின்றி நுழைந்திருக்கிறீர்கள். 121 00:07:13,518 --> 00:07:15,103 மன்னித்துவிடுங்கள்! 122 00:07:20,817 --> 00:07:23,278 பொறு, நாம் கிரேபியர்டை எடுக்க வேண்டும். 123 00:07:23,945 --> 00:07:25,030 என்ன அது? 124 00:07:25,947 --> 00:07:27,282 பறக்கும் நரி! 125 00:07:28,074 --> 00:07:30,035 அவை பகலில் தூங்கும் என்று சொன்னாய் தானே? 126 00:07:30,035 --> 00:07:32,078 அவை மாலை வேளையில் தான் வேட்டையாடத் தொடங்கும். 127 00:07:32,078 --> 00:07:34,414 அதன் இறக்கைகள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றன என்று பார். அது அற்புதமாக இருக்கிறது. 128 00:07:36,041 --> 00:07:38,627 பயமுறுத்துவது போல. ஓடு! 129 00:08:11,868 --> 00:08:13,411 ஓடு! 130 00:08:13,411 --> 00:08:16,623 -ஒருவேளை அவை மனிதர்களை சாப்பிடலாம். -அவை பெரிதுதான், ஆனால் அவ்வளவு பெரியது அல்ல. 131 00:08:19,501 --> 00:08:22,128 ஏன் நாம் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொன்றும் நம்மைத் தாக்குகின்றன? 132 00:08:22,128 --> 00:08:24,047 அது நம்மை தாக்குவதாக நான் நினைக்கவில்லை. 133 00:08:24,047 --> 00:08:26,424 தவிர, அது போய்விட்டது என்று நினைக்கிறேன். 134 00:08:26,424 --> 00:08:27,759 நிச்சயமாகவா? 135 00:08:27,759 --> 00:08:31,888 ஏனென்றால் நான் இரவு உணவுக்குத் தயார், ஆனால் நானே இரவு உணவாக விரும்பவில்லை. 136 00:08:33,682 --> 00:08:35,058 என்ன? 137 00:08:37,435 --> 00:08:39,688 அது என் மீது இருக்கிறது, இல்லையா? 138 00:08:41,188 --> 00:08:42,440 அது என் இரத்தத்தை உறிஞ்சுகிறதா? 139 00:08:44,526 --> 00:08:45,819 செய்யப் போகிறதா? 140 00:08:47,821 --> 00:08:50,740 வௌவால்கள் மனித இரத்தத்தை குடிப்பது மிகவும் அரிது. 141 00:08:50,740 --> 00:08:54,160 எனவே, ஒருவேளை. குடிக்கலாம் என்பதுதான் பதில். 142 00:08:54,828 --> 00:08:56,997 இதனால்தான் விமானத்திலேயே இருக்க முடிவு செய்தேன், ஜேன். 143 00:08:57,664 --> 00:08:59,249 அதை என் மீதிருந்து எடு! 144 00:08:59,249 --> 00:09:01,626 அதன் பெரிய கால்களை என்னால் உணர முடிகிறது! 145 00:09:02,919 --> 00:09:04,546 நீ இப்போது மிகவும் அற்புதமாக இருக்கிறாய். 146 00:09:06,214 --> 00:09:07,090 டேவிட்! 147 00:09:14,389 --> 00:09:16,141 அது நம் உதவியை விரும்பவில்லை என்று நினைக்கிறன், ஜேன். 148 00:09:16,141 --> 00:09:18,935 அதை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அது அழியும் நிலையில் இருக்கிறது. 149 00:09:18,935 --> 00:09:21,271 அது என்னைச் சாப்பிட முயற்சிப்பது எனக்குப் புரிகிறது என்று நினைக்கிறேன். 150 00:09:21,271 --> 00:09:22,772 இப்போது நான் அழியும் நிலையில் இருக்கிறேன். 151 00:09:22,772 --> 00:09:25,483 அது நமக்கு நிச்சயமாக... தெரியாது. 152 00:09:26,568 --> 00:09:27,903 ஒருவேளை என் அம்மா உதவலாம். 153 00:09:28,737 --> 00:09:30,447 அதோடு, இரவு உணவு தயாராக இருக்கும். 154 00:09:31,531 --> 00:09:33,867 இனிப்பு இருக்குமா? 155 00:09:35,702 --> 00:09:38,663 எனவே, அவை இரத்தத்தைக் குடிக்குமா இல்லையா என்பதை தெரிந்துகொண்டாயா? 156 00:09:38,663 --> 00:09:39,956 -இன்னும் இல்லை. -ஆம். 157 00:09:40,457 --> 00:09:42,918 அது நம்மை துரத்தியதற்கு வேறொரு காரணம் இருக்க வேண்டும். 158 00:09:42,918 --> 00:09:45,921 இரத்தக்காட்டேரி வௌவால்கள் கூட பொதுவாக மனித இரத்தத்தைத் தேடிப் போகாது. 159 00:09:45,921 --> 00:09:48,340 ஒருவேளை அப்படி செய்தால், அவற்றின் இரை தூங்கும் போது மட்டுமே செய்யும். 160 00:09:48,340 --> 00:09:50,508 நான் மீண்டும் தூங்க மாட்டேன் என்று நினைக்கிறேன். 161 00:09:51,760 --> 00:09:53,386 இந்த எறும்பு எங்கிருந்து வருகிறது? 162 00:09:53,887 --> 00:09:55,722 அதுவும்? 163 00:09:57,224 --> 00:09:59,851 உங்கள் இருவரையும் பாருங்கள். அவை உங்கள் மீதுதான் இருக்கின்றன. 164 00:10:01,603 --> 00:10:02,646 பதில் கிடைத்துவிட்டது! 165 00:10:02,646 --> 00:10:05,232 அதனால்தான் பறக்கும் நரி வௌவால் நம்மைப் பின்தொடர்ந்திருக்கிறது. 166 00:10:05,232 --> 00:10:07,317 அது எறும்புகளை சாப்பிட விரும்பியிருக்கிறது. 167 00:10:07,317 --> 00:10:10,153 சரி, ஆனால் ஏன் இருவரும் மீதும் பிசுபிசுப்பாக இருக்கிறது. 168 00:10:10,153 --> 00:10:12,239 தற்செயலாக சில பழங்களை நசுக்கி விட்டோம். 169 00:10:12,239 --> 00:10:15,033 ஆனால் கிரேபியர்டை எப்படி திரும்பப் பெறுவது என்பதை தெரிந்துகொண்டேன், 170 00:10:15,033 --> 00:10:17,077 அதைச் செய்ய நமக்கு பறக்கும் நரி உதவப் போகிறது. 171 00:10:18,161 --> 00:10:19,579 உன் விமானத்தின் ஒரு பகுதி எனக்கு வேண்டும். 172 00:10:19,579 --> 00:10:21,581 முதலில் சாப்பிட்டு முடிப்போமா? 173 00:10:21,581 --> 00:10:23,250 அதோடு எறும்புகளையும் சுத்தம் செய்யுங்கள். 174 00:10:29,172 --> 00:10:31,007 இது வேலை செய்யும் என்று நினைக்கிறாயா? 175 00:10:33,009 --> 00:10:34,094 செய்ய வேண்டும். 176 00:10:40,976 --> 00:10:43,812 அவர் கிரேபியர்டை உள்ளே கொண்டு போய்விட்டார். அவர் அதை திருடிவிட்டார். 177 00:10:43,812 --> 00:10:45,272 அவர் மோசமானவர் என்று சொன்னேனே. 178 00:10:51,361 --> 00:10:52,904 நீங்கள் என் உற்ற நண்பனை திருடிவிட்டீர்கள். 179 00:10:52,904 --> 00:10:54,531 நான்தான் உன் உற்ற நண்பன் என்று நினைத்தேன். 180 00:10:55,115 --> 00:10:56,992 என் உற்ற நண்பர்களில் ஒருவரை திருடிவிட்டீர்கள். 181 00:10:58,243 --> 00:11:01,621 என் பழ மரத்தை மிதித்துவிட்டீர்கள், எனவே நமக்குள் கணக்கு நேராகிவிட்டது. 182 00:11:01,621 --> 00:11:04,833 அது ஒரு விபத்து. எங்களை திடுக்கிட வைத்தீர்கள். 183 00:11:04,833 --> 00:11:06,585 இரண்டு அந்நியர்கள் என் கொல்லைப்புறத்தில் 184 00:11:06,585 --> 00:11:09,170 நுழைவதைப் பார்த்து நான் எவ்வளவு திடுக்கிட்டேன் தெரியுமா? 185 00:11:09,170 --> 00:11:10,672 நாங்கள் மணியை அடித்துப் பார்த்தோம். 186 00:11:11,214 --> 00:11:15,051 எனவே வீட்டில் யாருமில்லை என்றால், உள்ளே வந்துவிடுவீர்களா? 187 00:11:15,635 --> 00:11:17,095 எதற்காக இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? 188 00:11:20,098 --> 00:11:21,308 இங்கிருந்து வெளியேறுங்கள். 189 00:11:22,893 --> 00:11:24,895 பொறுங்கள்! உங்களுக்கு ஒன்று கொண்டு வந்தோம். 190 00:11:26,396 --> 00:11:28,315 நாங்கள் நசுக்கியதை ஈடுசெய்ய. 191 00:11:28,315 --> 00:11:31,318 அது ஒரு மாற்று பழ மரமாக இல்லாவிட்டால், எனக்கு அதில் ஆர்வமில்லை. 192 00:11:31,902 --> 00:11:32,986 இது ஒரு வெளவால் வீடு. 193 00:11:33,778 --> 00:11:35,238 இது என் விமானமாக இருந்தது. 194 00:11:36,781 --> 00:11:39,159 உங்கள் செடிகளுக்கு ஏன் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துகிறீர்கள்? 195 00:11:40,118 --> 00:11:41,995 பூச்சிகளை போக்க. 196 00:11:41,995 --> 00:11:44,414 பூச்சிக்கொல்லிகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடானவை. 197 00:11:44,414 --> 00:11:46,374 எல்லாமே சுற்றுச்சூழலுக்கு கேடுதான். 198 00:11:46,374 --> 00:11:48,710 அது மட்டும் உண்மை இல்லை. பாருங்கள். 199 00:11:49,920 --> 00:11:53,924 {\an8}"நம்முடைய உணவை விஷத்துடன் வளர்ப்பது நல்ல யோசனை என்று நாம் எப்படி நம்புகிறோம்?" 200 00:11:53,924 --> 00:11:55,133 இவ்வாறு ஜேன் குட்டால் சொல்லியிருக்கிறார். 201 00:11:55,842 --> 00:11:59,679 பூச்சிக்கொல்லிகள் விஷத்தன்மை கொண்டவை. பூச்சிகளை அகற்ற வேறு வழிகள் இருக்கின்றன. 202 00:11:59,679 --> 00:12:02,557 நிறைய வெளவால்கள் பூச்சிகளை சாப்பிடுவது போல. 203 00:12:06,895 --> 00:12:09,105 -அது ஒரு வெளவாலா? -எனக்கு அவ்வளவு நன்றாக வரைய வராது. 204 00:12:09,105 --> 00:12:11,566 ஆனால் ஒரு வெளவால் ஒரே இரவில் ஆயிரம் பூச்சிகளை உண்ணும், 205 00:12:11,566 --> 00:12:14,236 அது உங்கள் அழகான தோட்டத்தை பாதுகாக்க போதுமானதை விட அதிமானது. 206 00:12:15,153 --> 00:12:18,573 சின்னதோ பெரியதோ, ஊடுருவுபவற்றை எனக்குப் பிடிக்காது. 207 00:12:18,573 --> 00:12:19,491 குட்பை. 208 00:12:20,742 --> 00:12:21,743 ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வோம். 209 00:12:22,744 --> 00:12:25,121 இந்த வெளவால் வீட்டை ஒரு இரவு உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் வைத்து, 210 00:12:25,121 --> 00:12:27,707 உங்கள் தோட்டத்து பூச்சிகளை வெளவால் சாப்பிடுகிறதா என்பதைப் படம்பிடிப்போம். 211 00:12:27,707 --> 00:12:29,417 இப்போது கேமராவை அமைக்கிறீர்களா? 212 00:12:30,043 --> 00:12:33,505 இது வேலை செய்தால், பெட்டியை வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தேவையில்லை. 213 00:12:33,505 --> 00:12:35,715 பிறகு கிரேபியர்டைத் திரும்பக் கொடுக்க முடியுமா? 214 00:12:36,716 --> 00:12:37,968 அப்படி நடக்கவில்லை என்றால்? 215 00:12:37,968 --> 00:12:40,762 -கிரேபியர்டை வைத்துக்கொள்ளுங்கள். -ஜேன்? 216 00:12:42,639 --> 00:12:45,308 சரி. என்ன தெரியுமா? ஒப்புக்கொள்கிறேன். 217 00:12:46,393 --> 00:12:48,144 இந்த பூச்சிகளை போக்க எதையும் செய்வேன்... 218 00:12:51,940 --> 00:12:53,233 அதோடு உங்கள் இருவரையும். 219 00:13:10,000 --> 00:13:10,834 எல்லாம் நலமா? 220 00:13:12,043 --> 00:13:14,754 நாங்கள் வெளவால் வீட்டையும் டேவிட் அப்பாவின் பழைய கேமராவையும் அமைத்தோம். 221 00:13:14,754 --> 00:13:16,590 எங்கள் வெளவால் வெளிவரும் என்று நம்புகிறேன், 222 00:13:16,590 --> 00:13:19,384 அதன் மூலம் அது என்ன சாப்பிடுகிறது என்பதை கண்டுபிடித்து கிரேபியர்டை திரும்பப் பெறலாம். 223 00:13:20,802 --> 00:13:22,387 நீ நன்றாக இருக்கிறாயா? 224 00:13:24,014 --> 00:13:25,265 நான் ஏற்கனவே அதை மிஸ் செய்கிறேன். 225 00:13:25,932 --> 00:13:28,018 உனக்காக அந்த பெண்ணிடம் நான் ஏன் பேசக்கூடாது? 226 00:13:28,018 --> 00:13:29,185 என்னால் சமாளிக்க முடியும். 227 00:13:31,646 --> 00:13:32,647 உன்னால் முடியும் என்று தெரியும். 228 00:13:34,482 --> 00:13:36,192 சிலர் ஏன் கோபப்படுகிறார்கள்? 229 00:13:39,195 --> 00:13:40,822 வாழ்க்கை எளிதானது அல்ல, செல்லம். 230 00:13:40,822 --> 00:13:44,200 சில சமயங்களில், உலகத்தை மாற்றுவதற்கு ஏதாவது செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக 231 00:13:44,200 --> 00:13:46,286 மக்கள் உலகின் மீது கோபப்படுவது எளிது, 232 00:13:47,954 --> 00:13:50,665 இது உனக்கு எதிரானது. 233 00:13:53,752 --> 00:13:54,920 இதோ வருகிறேன். 234 00:14:04,304 --> 00:14:06,640 நான் சிறுமியாக இருந்தபோது வைத்திருந்த பொம்மை. 235 00:14:07,974 --> 00:14:11,269 -இன்றிரவு நீ ஏன் இதை வைத்துக்கொள்ளக் கூடாது? -நன்றி, அம்மா. 236 00:14:11,269 --> 00:14:12,187 உங்களை நேசிக்கிறேன். 237 00:14:13,396 --> 00:14:14,439 நானும் உன்னை நேசிக்கிறேன். 238 00:14:18,151 --> 00:14:21,154 -ஹால் லைட்டை அணைக்க மறக்காதீர்கள். -மாட்டேன். 239 00:15:08,493 --> 00:15:09,411 ஹாய். 240 00:15:10,870 --> 00:15:14,791 நீ என்னிடம் விளையாடுகிறாய். 241 00:15:21,298 --> 00:15:22,299 காலை வணக்கம். 242 00:15:23,216 --> 00:15:24,384 அப்படியென்றால் சரி. 243 00:15:24,926 --> 00:15:28,805 அவர் வாழ்த்து சொல்வதை விரும்புபவர் போல தெரியவில்லை. 244 00:15:31,308 --> 00:15:33,435 நாங்கள் உள்ளே வந்து வெளவால்கள் வந்ததா என்று கேமராவைப் பார்க்கலாமா? 245 00:15:34,227 --> 00:15:36,187 இந்த முறை அனுமதி கேட்டதற்கு நன்றி. 246 00:15:37,772 --> 00:15:40,108 எனவே, நேற்று இரவு ஏதாவது வெளவால் சத்தத்தைக் கேட்டீர்களா? 247 00:15:40,609 --> 00:15:42,485 வெளவால் சத்தம எப்படி இருக்கும்? 248 00:15:48,992 --> 00:15:50,285 கேட்டதற்கு வருந்துகிறேன். 249 00:15:51,119 --> 00:15:52,621 வெளவால்கள் என் கொல்லைப்புற 250 00:15:52,621 --> 00:15:55,790 அழிப்பாளர்களாக இருக்கலாம் என்ற யோசனைதான் நான் வெளவாலைப் பற்றி கேட்ட ஒரே விஷயம். 251 00:15:55,790 --> 00:15:57,334 நீங்கள் ஆச்சரியப்படலாம். 252 00:16:01,963 --> 00:16:04,299 என்னால் நம்ப முடியவில்லை. அது வேலை செய்தது. 253 00:16:04,299 --> 00:16:07,385 இது நல்லதுதான், ஆனால் இது டவுன்சென்டின் பெரிய காதுகள் கொண்ட வெளவால் போல தெரிகிறது. 254 00:16:07,385 --> 00:16:09,346 கண்டிப்பாக நம் பறக்கும் நரி இல்லை. 255 00:16:10,013 --> 00:16:11,514 அழகாக இருக்கிறது... 256 00:16:12,641 --> 00:16:15,018 ஒரு அசிங்கமான வழியில். 257 00:16:15,560 --> 00:16:16,561 அதோடு மிகவும் பயனுள்ளது. 258 00:16:16,561 --> 00:16:20,106 கூடுதலாக, வெளவால்கள் இரவில் வேட்டையாடுகின்றன, எனவே நீங்கள் அவற்றைப் பார்ப்பது அரிது. 259 00:16:20,106 --> 00:16:22,067 நான் அந்த பெட்டியை வைத்துக்கொள்ளலாம். 260 00:16:22,067 --> 00:16:23,902 பூச்சிக்கொல்லி பயன்பாட்டை நிறுத்துவீர்களா? 261 00:16:25,070 --> 00:16:26,279 அது எப்படி போகிறது என்று பார்ப்போம். 262 00:16:26,279 --> 00:16:27,781 அது ஒரு பெரிய முதல் படி. 263 00:16:27,781 --> 00:16:30,325 பறக்கும் நரி என்ன சாப்பிடுகிறது என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும். 264 00:16:30,325 --> 00:16:33,828 அது பூச்சிகள் இல்லை என்றால், அது வேறு ஏதாவது இறைச்சி அல்லது பழமாக இருக்க வேண்டும். 265 00:16:33,828 --> 00:16:35,205 அல்லது மனிதன். 266 00:16:35,205 --> 00:16:39,000 ஒப்பந்தம் ஒப்பந்தம்தான். நான் உன் குரங்கு நண்பனை அழைத்து வருகிறேன். 267 00:16:39,000 --> 00:16:40,919 -அது ஒரு சிம்பன்சி. -எல்லாம் ஒன்றுதான். 268 00:16:40,919 --> 00:16:43,380 சிம்பன்சிகள் மனிதக்குரங்குகள், குரங்குகள் அல்ல... 269 00:16:45,632 --> 00:16:46,633 பொருட்படுத்தாதீர்கள்! 270 00:16:47,133 --> 00:16:49,553 எனவே, பறக்கும் நரிக்கு நாம் எப்படி உதவப் போகிறோம்? 271 00:16:49,553 --> 00:16:51,471 அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். 272 00:16:51,471 --> 00:16:54,891 உறுதியளித்தபடி, ஒரு பொம்மை. 273 00:16:56,601 --> 00:16:57,602 நன்றி. 274 00:16:59,813 --> 00:17:02,148 ஹலோ, கிரேபியர்ட். உன்னை மிகவும் மிஸ் செய்தேன். 275 00:17:03,316 --> 00:17:04,316 பொறுங்கள். 276 00:17:05,526 --> 00:17:06,987 நீங்கள் இதை சரிசெய்தீர்களா? 277 00:17:08,237 --> 00:17:09,531 அதே அதை சரிசெய்திருக்கும். 278 00:17:10,114 --> 00:17:11,908 நீங்கள் இரகசியமாக நல்லவரா? 279 00:17:13,535 --> 00:17:15,870 ஒரு நொடி காத்திருங்கள். உங்களுக்காக ஒன்று இருக்கிறது. 280 00:17:21,126 --> 00:17:23,378 ஹேய், நண்பா. நானும் உன்னை மிஸ் செய்தேன். 281 00:17:24,170 --> 00:17:26,214 இனி உன்னை என் பார்வையிலிருந்து போக விடமாட்டேன். 282 00:17:28,300 --> 00:17:29,634 நீங்கள் கிளம்பும் முன், 283 00:17:30,802 --> 00:17:34,806 உன் பறக்கும் நரி வெளவாலுக்கு பழங்களை பிடிக்குமா என்று சோதிக்க இவை உதவும் என்று நினைத்தேன். 284 00:17:34,806 --> 00:17:35,974 இவை பூச்சிக்கொல்லி இல்லாதவை. 285 00:17:35,974 --> 00:17:38,435 சுவை சோதனை. அருமையான யோசனை. 286 00:17:38,435 --> 00:17:40,437 இப்போது நமக்கு தேவையானது இறைச்சி மட்டுமே. 287 00:17:45,567 --> 00:17:48,612 ஆரஞ்சும் ஹாட் டாகும், உரிய இடத்தில இருக்கின்றன. 288 00:17:48,612 --> 00:17:51,364 எனக்கு ரொம்பவும் பசிக்கிறது. 289 00:17:51,364 --> 00:17:52,449 டேவிட்! 290 00:17:52,449 --> 00:17:55,201 என்ன? இதற்கு ரொம்ப நேரம் ஆகிறது. 291 00:17:56,494 --> 00:17:57,871 டேவிட், நாம் பொறுமையாக இருக்க வேண்டும், 292 00:17:57,871 --> 00:18:00,665 அப்போதுதான் பறக்கும் நரி பழம் சாப்பிடுகிறதா, இறைச்சி சாப்பிடுகிறதா என்று பார்க்க முடியும். 293 00:18:02,167 --> 00:18:04,044 கிரேபியர்ட், அது நம் தூண்டில். 294 00:18:04,044 --> 00:18:05,795 அது பறக்கும் நரி. 295 00:18:05,795 --> 00:18:06,922 கிரேபியர்ட், கவனி! 296 00:18:11,051 --> 00:18:12,219 ஓ, இல்லை! 297 00:18:15,055 --> 00:18:17,474 பறக்கும் நரி இறைச்சியையோ பழங்களையோ சாப்பிடுவதில்லை. 298 00:18:17,474 --> 00:18:21,019 ஆனால் நிச்சயமாக இரத்தத்தை உறிஞ்சுகிறது, அதுவும் கிரேபியர்ட் இரத்தத்தை. 299 00:18:22,270 --> 00:18:23,730 ஓடு, கிரேபியர்ட்! 300 00:18:27,067 --> 00:18:28,193 ஓடு, கிரேபியர்ட்! 301 00:18:31,988 --> 00:18:33,031 கவனி! 302 00:18:34,783 --> 00:18:36,576 தாவு, கிரேபியர்ட்! தாவு! 303 00:18:36,576 --> 00:18:37,744 போ! 304 00:18:37,744 --> 00:18:39,579 வெளவாலுக்கு என்னதான் வேண்டும்? 305 00:18:39,579 --> 00:18:42,832 அது கிரேபியர்டை துரத்தவில்லை, நம் மீது இருந்த எறும்புகளும் தேவையில்லை. 306 00:18:44,876 --> 00:18:46,294 அது பழம்! 307 00:18:46,294 --> 00:18:50,382 பறக்கும் நரி உன்னைத் துரத்தவில்லை, கிரேபியர்ட்! அதற்கு பழம் வேண்டும்! 308 00:18:50,382 --> 00:18:51,675 அதை வீசியெறி! 309 00:18:56,179 --> 00:18:58,056 வா, கிரேபியர்ட். இங்கே. 310 00:19:04,771 --> 00:19:06,314 நீ புத்திசாலி இல்லையா, ஜேன்? 311 00:19:06,314 --> 00:19:09,109 -புரிந்ததா? நீ... -எனக்குப் புரிந்தது. 312 00:19:14,364 --> 00:19:18,743 அதுதான். இரத்தத்தை விட மிகவும் சுவையானது, நான் சொல்வது சரிதானே? 313 00:19:30,672 --> 00:19:31,673 என்ன நடக்கிறது? 314 00:19:31,673 --> 00:19:34,175 எல்லோரும் தங்கள் பொருட்களை திரும்பப் பெற அனுமதிக்கிறார் என்று நினைக்கிறேன். 315 00:19:35,468 --> 00:19:36,469 அப்படியா? 316 00:19:37,888 --> 00:19:39,431 நான் வெளவால்களைப் பற்றி தவறாக நினைத்ததால், 317 00:19:39,431 --> 00:19:42,350 குழந்தைகள் அவ்வளவு மோசமாக இருக்க முடியாது என்று நினைத்தேன். 318 00:19:43,768 --> 00:19:45,854 ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. 319 00:19:45,854 --> 00:19:48,982 இங்கு எனக்கு நல்ல பெயர் இல்லை என்று தெரிகிறது. 320 00:19:48,982 --> 00:19:51,902 ஆம். இதையெல்லாம் யார் நம்புவார்கள்? 321 00:19:53,111 --> 00:19:57,032 -அதோடு? -நான் வெளவால்களைப் பற்றி தவறாக நினைத்தேன். 322 00:19:57,032 --> 00:19:59,409 -நானும்தான். -ஆம். 323 00:20:00,201 --> 00:20:02,078 இன்னும் பல வெளவால் வீடுகளை அமைத்தீர்களா? 324 00:20:03,496 --> 00:20:05,206 சரி, முதலாவதற்கு கொஞ்சம் துணை தேவைப்பட்டது. 325 00:20:08,335 --> 00:20:10,629 -என் பெயர் ராபின். -ஜேன். 326 00:20:13,048 --> 00:20:15,508 டேவிட். தங்களுக்கான சேவையில். 327 00:20:17,427 --> 00:20:18,428 எல்லாவற்றுக்கும் நன்றி. 328 00:20:19,971 --> 00:20:22,766 அக்கம்பக்கத்தினருக்கு இன்னும் அதிகமான வெளவால் வீடுகளை செய்ய வேண்டுமா? 329 00:20:22,766 --> 00:20:23,892 நல்ல திட்டம். 330 00:20:23,892 --> 00:20:26,311 ஆனால் முதலில், பறக்கும் நரிக்கு உதவுவோம். 331 00:20:34,069 --> 00:20:36,905 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். பணியை முடிக்க வேண்டிய நேரம் இது. 332 00:20:40,283 --> 00:20:42,744 இப்போது அது என்ன சாப்பிடுகிறது என்பது நமக்கு தெரியும் என்பதால், பழ மரங்களை நடுவதன் மூலம் 333 00:20:42,744 --> 00:20:45,330 அதற்கு போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்து பறக்கும் நரிக்கு உதவலாம். 334 00:20:45,330 --> 00:20:46,790 போகலாம், கிரேபியர்ட். 335 00:20:46,790 --> 00:20:49,918 கவலைப்படாதே. இந்த முறை, நாம் ஒன்றாக குதிப்போம். 336 00:20:49,918 --> 00:20:52,837 நான் சொன்னது போல, உன்னை மீண்டும் என் பார்வையில் இருந்து போக விடமாட்டேன். 337 00:20:52,837 --> 00:20:54,130 தயாரா? 338 00:21:00,971 --> 00:21:02,222 ஆம்! 339 00:21:07,185 --> 00:21:08,478 ஆம்! 340 00:21:15,569 --> 00:21:17,821 பறக்கும் நரிகளைக் காப்பாற்ற உதவுங்கள். 341 00:21:24,578 --> 00:21:27,038 -ஜேன்? -டேவிட்? 342 00:21:27,038 --> 00:21:28,665 நீ இன்னும் அவரிடம் பேசவில்லையா? 343 00:21:28,665 --> 00:21:29,958 லிசா பாகுண்டலனிடமா? 344 00:21:29,958 --> 00:21:31,293 இல்லை, இன்னும் இல்லை. 345 00:21:31,293 --> 00:21:33,420 நான் கேட்கும் வகையில் உன் வாக்கியை ஆனில் வைத்திருக்க முடியுமா? 346 00:21:33,420 --> 00:21:35,297 நான் பறக்கும் நரியைப் பற்றி எல்லாவற்றையும் கேட்க விரும்புகிறேன். 347 00:21:35,297 --> 00:21:38,008 -சரியான பெயர், தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரி. -சரி. 348 00:21:38,008 --> 00:21:40,969 -நீ ஏன் கிசுகிசுக்கிறாய்? -நான் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். 349 00:21:40,969 --> 00:21:44,097 நீ அதிர்ஷ்டசாலி, லிசாவுடன் பேசுவதற்கு உன் அம்மா உன்னை விழித்திருக்க அனுமதிக்கிறார். 350 00:21:44,681 --> 00:21:46,892 அவர் பிலிப்பைன்ஸில் வசிப்பது அருமையான விஷயம். 351 00:21:46,892 --> 00:21:48,476 அவை வசிக்கும் ஒரே இடம் அதுதான். 352 00:21:48,476 --> 00:21:50,770 அதனால்தான் லிசாவுக்கு பறக்கும் நரி பற்றி எல்லாம் தெரிகிறது. 353 00:21:50,770 --> 00:21:53,273 சரியாகச் சொல்வதென்றால், தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரி. 354 00:21:54,482 --> 00:21:55,650 அவர் வந்துவிட்டார்! 355 00:21:56,443 --> 00:21:58,320 -ஹாய், லிசா. -ஹாய், ஜேன். 356 00:21:58,320 --> 00:21:59,696 ஹாய், லிசா. 357 00:21:59,696 --> 00:22:01,031 அது யார்? 358 00:22:01,031 --> 00:22:03,074 அது என் நண்பன், டேவிட், வாக்கி-டாக்கியில். 359 00:22:03,074 --> 00:22:04,743 அவனும் உங்களிடம் பேச விரும்பினான். 360 00:22:04,743 --> 00:22:06,369 ஹாய், டேவிட். 361 00:22:06,369 --> 00:22:10,832 எனக்கு நிஜமாகவே தெரிய வேண்டும், அது ஏன் தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரி என்று அழைக்கப்படுகிறது? 362 00:22:10,832 --> 00:22:13,251 உனக்கு ஒன்று காட்ட முடியுமா என்று பார்க்கிறேன். 363 00:22:13,251 --> 00:22:14,336 இதோ. 364 00:22:14,336 --> 00:22:17,464 -நானும் அதைப் பார்க்க முடிந்திருக்கலாம். -புகைப்படங்களை பிறகு அனுப்புகிறேன். 365 00:22:17,464 --> 00:22:22,302 பிலிப்பைன்ஸில் உள்ள 26 வகையான பழங்களை உண்ணும் வெளவால்களில், 366 00:22:22,302 --> 00:22:26,348 அதன் தலையின் மேல் V என்ற எழுத்தைப் போன்ற வடிவம் கொண்ட 367 00:22:26,348 --> 00:22:29,351 இந்த தங்க கிரீடம் இதற்கு மட்டுமே இருக்கிறது. 368 00:22:29,351 --> 00:22:30,560 மிகவும் அழகாக இருக்கிறது. 369 00:22:30,560 --> 00:22:33,271 சமீபத்தில் தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரிகளைப் பார்த்தீர்களா? 370 00:22:33,271 --> 00:22:35,649 ஆம், சில நாட்களுக்கு முன்புதான். 371 00:22:35,649 --> 00:22:39,110 -அவற்றைக் கண்டுபிடிக்க வயலுக்குச் சென்றேன். -நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. 372 00:22:39,110 --> 00:22:41,154 அவை சில வௌவால்களைப் போல இரத்தம் குடிப்பதில்லை. 373 00:22:41,154 --> 00:22:43,907 இரத்தக்காட்டேரி வெளவால்கள் பொதுவாக மனித இரத்தத்தை குடிப்பதில்லை என்று சொன்னேனே. 374 00:22:44,407 --> 00:22:46,534 தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரிகள் பழங்களை சாப்பிடுகின்றன, இல்லையா? 375 00:22:46,534 --> 00:22:50,830 ஆம். தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரிகளுக்கு பழங்கள்தான் பிடிக்கும், 376 00:22:50,830 --> 00:22:53,375 ஆனால் அவற்றுக்கு அத்திப்பழங்களை பிடிக்கும். 377 00:22:53,375 --> 00:22:57,045 அவை சாப்பிடுவதில் எழுபத்தொன்பது சதவீதம் அத்திப்பழங்கள்தான். 378 00:22:57,045 --> 00:22:59,339 அதோடு அத்திப்பழங்கள் வௌவால்களை நம்பியுள்ளன, 379 00:22:59,339 --> 00:23:04,052 ஏனென்றால் அவற்றின் விதைகளை பரப்ப பறக்கும் நரிகள் தேவை. 380 00:23:04,052 --> 00:23:06,471 எனவே அவை விதைகளை விதைக்கும் விவசாயிகளைப் போன்றவை. 381 00:23:06,471 --> 00:23:08,014 அது சரிதான், ஜேன். 382 00:23:08,014 --> 00:23:11,059 அது தொலைநோக்கியா? விண்வெளியையும் ஆய்வு செய்கிறீர்களா? 383 00:23:11,059 --> 00:23:12,143 எனக்கு விண்வெளியை பிடிக்கும். 384 00:23:12,143 --> 00:23:15,021 இது ஒரு கண்டறியும் தொலைநோக்கி. 385 00:23:15,021 --> 00:23:19,025 பறக்கும் நரிகளைத் தேட இதைத்தான் பயன்படுத்துகிறோம், 386 00:23:19,025 --> 00:23:21,361 அவற்றை அடையாளம் காணவும், எண்ணவும். 387 00:23:21,361 --> 00:23:23,071 அதை எப்படி செய்கிறோம் என்று காட்டுகிறேன். 388 00:23:23,071 --> 00:23:25,949 நாங்கள் மாலை வரை காத்திருக்க வேண்டும். 389 00:23:25,949 --> 00:23:29,869 அப்போதுதான் எல்லா வௌவால்களும் அவற்றின் ஓய்வெடுக்கும் இடத்திலிருந்து வெளிவரும், 390 00:23:29,869 --> 00:23:31,913 அப்போதுதான் நாங்கள் அவற்றை எண்ணுகிறோம். 391 00:23:31,913 --> 00:23:33,248 எத்தனை மீதம் உள்ளன? 392 00:23:33,248 --> 00:23:37,586 இந்த வெளவால்கள் சுமார் 10,000 முதல் 20,000 வரை மட்டுமே 393 00:23:37,586 --> 00:23:39,504 பிலிப்பைன்ஸில் எஞ்சியுள்ளன. 394 00:23:39,504 --> 00:23:41,548 பறக்கும் நரிகள் ஏன் ஆபத்தில் இருக்கின்றன? 395 00:23:41,548 --> 00:23:44,885 நாம் அவற்றின் வாழ்விடங்களுக்குள் செல்வதை வௌவால்கள் விரும்புவதில்லை. 396 00:23:44,885 --> 00:23:46,511 நாம் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். 397 00:23:47,012 --> 00:23:48,388 உதவி செய்ய நாம் என்ன செய்யலாம்? 398 00:23:48,388 --> 00:23:51,182 சமூகங்கள் மற்றும் தன்னார்வலர்களின் சக்தியை 399 00:23:51,182 --> 00:23:53,602 குறைத்து மதிப்பிட முடியாது. 400 00:23:53,602 --> 00:23:58,607 வௌவால்களைப் பாதுகாக்க எங்களுக்கு உதவும் பிலிப்பைன்ஸ்காரர்களின் புகைப்படங்களைப் பாருங்கள். 401 00:23:58,607 --> 00:24:01,985 வெளவால்களை எண்ணவும் அடையாளம் காணவும் அவர்களுக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன். 402 00:24:01,985 --> 00:24:04,654 இந்தப் பறக்கும் நரியின் 403 00:24:04,654 --> 00:24:09,784 வாழ்விடங்களும் இன்னும் இருக்கவும், இன்னும் அவை உயிர்வாழவும் அவர்கள் தான் காரணம். 404 00:24:09,784 --> 00:24:12,495 ஒரு பிலிப்பைன்ஸ் இனத்தின் இழப்பு 405 00:24:12,495 --> 00:24:16,958 பிலிப்பைன்ஸின் பல்லுயிர் இழப்பு மட்டுமல்ல, 406 00:24:16,958 --> 00:24:19,461 அது உலகத்தின் இழப்பு. 407 00:24:19,461 --> 00:24:22,756 ஏனென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் எல்லோரும் இணைக்கப்பட்டிருக்கிறோம். 408 00:24:22,756 --> 00:24:24,966 ஆனால் இங்கிருந்து நாம் எப்படி உதவ முடியும்? 409 00:24:24,966 --> 00:24:29,596 வௌவால் பற்றிய நல்ல கதையைப் பகிர்வது உண்மையில் உதவும். 410 00:24:29,596 --> 00:24:33,683 வெளவால்களுக்கு பயப்படும் மக்களின் மனதை மாற்ற அது உதவும். 411 00:24:33,683 --> 00:24:37,103 நீங்கள் புரிந்துகொள்ளத் தொடங்கும் போது, அக்கறை காட்ட தொடங்குவீர்கள். 412 00:24:37,103 --> 00:24:40,857 -நம்மால் அதைச் செய்ய முடியும், ஜேன். -ஆம், நம்மால் நிச்சயமாக முடியும். 413 00:24:40,857 --> 00:24:44,027 டேவிட், யாரிடம் பேசுகிறாய்? 414 00:24:44,527 --> 00:24:46,488 யாரிடமும் இல்லை. தூங்கு, மில்லி. 415 00:24:47,572 --> 00:24:49,866 நான் போக வேண்டும். நன்றி, லிசா. 416 00:24:49,866 --> 00:24:51,701 நாளை பேசுகிறேன், ஜேன். 417 00:24:51,701 --> 00:24:53,203 எங்களுடன் பேசியதற்கு நன்றி, லிசா. 418 00:24:53,203 --> 00:24:55,872 எங்களால் முடிந்த அளவு விலங்குகளுக்கு கண்டிப்பாக உதவுவோம். 419 00:24:55,872 --> 00:24:57,791 இங்கிருப்பதாக இருந்தாலும் பிலிப்பைன்ஸில் இருப்பதாக இருந்தாலும். 420 00:24:57,791 --> 00:24:58,917 குட் நைட். 421 00:25:00,460 --> 00:25:01,795 பை. 422 00:25:05,090 --> 00:25:07,717 {\an8}ஏசெரோடான் ஜூபேட்டஸ் - இராட்சத வெளவால் கிரகத்தைக் காப்பாற்றுங்கள் 423 00:25:11,304 --> 00:25:14,558 தங்க கிரீடம் கொண்ட பறக்கும் நரி லிசா பாகுண்டலன் 424 00:25:57,392 --> 00:25:59,394 வசனத் தமிழாக்கம் அருண்குமார்