1 00:00:36,413 --> 00:00:38,206 "அரசன் பட்டாம்பூச்சி (டானாஸ் பிளெக்ஸிப்பஸ்)." 2 00:00:45,714 --> 00:00:48,758 இதைப் பார்க்கிறாயா, டேவிட்? இது டானாஸ் பிளெக்ஸிப்பஸ். 3 00:00:48,758 --> 00:00:50,969 அது அரசன் பட்டாம்பூச்சிக்கான அறிவியல் பெயரா... 4 00:00:51,761 --> 00:00:52,596 டேவிட்? 5 00:00:52,596 --> 00:00:54,764 பொறு, ஜேன். யாரோ ஊடுருவுகிறார்கள். 6 00:00:58,059 --> 00:00:59,227 டேவிட்? 7 00:00:59,227 --> 00:01:02,522 என் பக்கம் வராதே. நான் இப்போது வேலையாக இருக்கிறேன், மில்லி. 8 00:01:02,522 --> 00:01:04,148 என்ன செய்கிறாய்? 9 00:01:04,148 --> 00:01:05,275 ஒன்றைக் காப்பாற்றுகிறேன். 10 00:01:05,275 --> 00:01:06,735 எதைக் காப்பாற்றுகிறாய்? 11 00:01:06,735 --> 00:01:08,445 அரசன் பட்டாம்பூச்சிகள். 12 00:01:09,821 --> 00:01:11,197 ஆம். அதோடு... 13 00:01:11,197 --> 00:01:14,284 அது மிகவும் முக்கியமான வேலை, எனவே நான் அதை கவனிக்கிறேன். 14 00:01:18,788 --> 00:01:20,040 அது என்ன செய்கிறது? 15 00:01:20,790 --> 00:01:21,875 எரிச்சலூட்டுகிறாள். 16 00:01:22,918 --> 00:01:25,170 -நீ பட்டாம்பூச்சியை சொன்னாயா? -ஆம். 17 00:01:25,170 --> 00:01:26,504 சாப்பிடுகிறதா? 18 00:01:27,464 --> 00:01:30,717 இல்லை. பட்டாம்பூச்சிகளுக்கு நீண்ட நாக்கு உண்டு, அதைப் பயன்படுத்தி அவை சாப்பிடும். 19 00:01:33,887 --> 00:01:36,681 அது எப்படி சுருள்கிறது பார். என்னால் அப்படி செய்ய முடியுமா என்று வியக்கிறேன். 20 00:01:40,810 --> 00:01:42,229 பொறு, அது பறக்கிறது. 21 00:01:42,229 --> 00:01:43,939 அதை இடைமறிக்கும் பாதையை அமைக்கிறேன். 22 00:01:49,444 --> 00:01:51,404 அவற்றை எப்படி காப்பாற்றப் போகிறீர்கள்? 23 00:01:52,530 --> 00:01:53,698 கவனமாக. 24 00:01:54,824 --> 00:01:58,870 அரசன் பட்டாம்பூச்சிகள் மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கூட 25 00:01:58,870 --> 00:02:01,122 தங்கள் முட்டைகளை இட பயணிக்கின்றன. 26 00:02:01,122 --> 00:02:03,208 -குட்டி பச்சைப்புழுக்கள். -சரி. 27 00:02:03,208 --> 00:02:05,502 ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. 28 00:02:05,502 --> 00:02:07,212 நாம் ஒன்றை டேக் செய்து, அதன் மூலம் அதன் பயணத்தில் 29 00:02:07,212 --> 00:02:09,421 அவற்றுக்கு எங்கு உதவி தேவை என்பதைப் பார்க்க அதைப் பின்தொடரலாம். 30 00:02:09,421 --> 00:02:11,925 இவ்வளவு சிறிய பூச்சிக்கு அது நீண்ட தூரம். 31 00:02:11,925 --> 00:02:15,220 நான் சொன்னது போல, இது மிகவும் முக்கியமான வேலை. 32 00:02:19,099 --> 00:02:20,225 அதைக் காணவில்லை. 33 00:02:20,225 --> 00:02:21,601 உயரமாக போய் பார். 34 00:02:21,601 --> 00:02:22,519 நல்ல யோசனை. 35 00:02:23,103 --> 00:02:24,187 பொறு, கிரேபியர்ட். 36 00:02:27,274 --> 00:02:28,275 டேவிட்? 37 00:02:28,858 --> 00:02:29,901 என்ன வேண்டும், மில்லி? 38 00:02:30,402 --> 00:02:32,404 என்னுடைய சாவிக்கொத்தைப் பார்த்தாயா? 39 00:02:32,404 --> 00:02:33,363 இல்லை. 40 00:02:33,363 --> 00:02:36,074 -உன்னுடையது கடனாக கிடைக்குமா? -கிடைக்காது. 41 00:02:36,074 --> 00:02:37,492 -ஏன்? -ஏனென்றால் அது என்னுடையது. 42 00:02:37,492 --> 00:02:38,660 ஓ. 43 00:02:40,120 --> 00:02:42,956 தவிர, நீ தனியாக வெளியே போக உனக்கு அனுமதியில்லை. 44 00:02:43,540 --> 00:02:46,084 டேவிட், நீ இதைப் பார்க்க வேண்டும். 45 00:02:46,835 --> 00:02:48,587 அதைக் கண்டுபிடிக்க அப்பாக்களிடம் உதவி கேள். 46 00:02:52,549 --> 00:02:54,259 பொறு, என்ன அது? 47 00:02:54,759 --> 00:02:55,844 பெரிதாக்கு. 48 00:02:57,804 --> 00:02:59,055 ஆஹா. 49 00:02:59,055 --> 00:03:01,600 "ஆஹா" சரிதான். டேக் செய்ய தயாராகிறேன். 50 00:03:04,227 --> 00:03:05,520 தயாரா, கிரேபியர்ட்? 51 00:03:11,151 --> 00:03:12,152 டேவிட்? 52 00:03:14,404 --> 00:03:16,948 என்ன வேண்டும், மில்லி? நாங்கள் உலகத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறோம். 53 00:03:16,948 --> 00:03:19,326 என் சாவிக்கொத்தை தொலைத்துவிட்டேன். 54 00:03:19,326 --> 00:03:20,577 அப்பாக்களுக்குத் தெரியுமா? 55 00:03:21,161 --> 00:03:23,413 நான் மிகப்பெரிய சிக்கலில் சிக்கிவிடுவேன். 56 00:03:24,456 --> 00:03:27,375 டேக் செய்! 57 00:03:27,375 --> 00:03:29,044 நீ செய்துவிட்டாய், கிரேபியர்ட்! 58 00:03:29,628 --> 00:03:31,463 ஓ, இல்லை. அவை நம்மை நோக்கி வருகின்றன. 59 00:03:33,089 --> 00:03:34,591 இங்கே ஒரு பிரச்சினை! 60 00:03:34,591 --> 00:03:35,800 எனக்கும் தான். 61 00:03:35,800 --> 00:03:37,802 பிடித்துக்கொள், கிரேபியர்ட்! 62 00:03:38,386 --> 00:03:39,930 கிரேபியர்ட்! 63 00:03:42,474 --> 00:03:46,269 சிம்பன்சி விழுந்துவிட்டது. திரும்பவும் சொல்கிறேன், சிம்பன்சி விழுந்துவிட்டது. 64 00:03:49,648 --> 00:03:51,441 என்ன நடந்தது, அமலா? 65 00:03:51,441 --> 00:03:52,984 கிரேபியர்ட் விழுந்துவிட்டது. 66 00:03:52,984 --> 00:03:54,945 -நான் உங்களுக்கு உதவுகிறேன். -இல்லை! பரவாயில்லை. 67 00:03:54,945 --> 00:03:58,698 நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஜேன், குறிப்பாக மற்றவர்களின் தோட்டத்தில் இருக்கும்போது. 68 00:03:58,698 --> 00:04:00,659 கிரேபியர்ட் வருந்துகிறது, திரு. படேல். 69 00:04:00,659 --> 00:04:03,370 அரசன் பட்டாம்பூச்சிகளுக்கு எப்படி உதவுவது என்று கண்டுபிடிக்க முயற்சித்தபோது இது விழுந்தது. 70 00:04:03,370 --> 00:04:06,539 சரி, வேறு எங்காவது விழட்டும். இங்கே பட்டாம்பூச்சிகள் எதுவும் இல்லை. 71 00:04:08,083 --> 00:04:09,084 ஆனால் இருக்க முடியும். 72 00:04:10,377 --> 00:04:12,796 இப்போது அதைத் தேடித்தர முடியாது, மில்லி. 73 00:04:12,796 --> 00:04:14,506 ஜேனுக்கும் கிரேபியர்டுக்கும் என் உதவி தேவை. 74 00:04:14,506 --> 00:04:16,716 ஆனால் எனக்கும் உன் உதவி தேவை. 75 00:04:16,716 --> 00:04:18,552 ஆனால் ஜேனின் பிரச்சினை தான் பெரியது. 76 00:04:18,552 --> 00:04:20,554 நாங்கள் பட்டாம்பூச்சிகளுக்கு உதவ எதுவும் செய்யவில்லை என்றால், 77 00:04:20,554 --> 00:04:22,639 இனி அவற்றை இங்கே பார்க்க முடியாது. 78 00:04:24,182 --> 00:04:26,977 ஆனால் நான் இனி அருகில் இருக்காவிட்டால்? 79 00:04:28,228 --> 00:04:29,563 இருக்க வேண்டும். 80 00:04:29,563 --> 00:04:32,983 பட்டாம்பூச்சிகள் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. அதிக பட்டாம்பூச்சிகள், அதிக பூக்கள். 81 00:04:32,983 --> 00:04:35,402 -அமலாவைப் போல. -இல்லை, தொடாதே. 82 00:04:35,986 --> 00:04:36,987 மன்னித்துவிடுங்கள். 83 00:04:36,987 --> 00:04:38,697 உன் பட்டாம்பூச்சிகளுக்கு ஒருவேளை பூக்களைப் பிடிக்கலாம், 84 00:04:38,697 --> 00:04:41,992 அவற்றின் குட்டிகளான... பச்சைப்புழுக்களுக்கு... எருக்கஞ்செடி மட்டுமே பிடிக்கும். 85 00:04:41,992 --> 00:04:43,618 நீங்கள் சில எருக்கஞ்செடிகளை நட வேண்டும். 86 00:04:44,619 --> 00:04:46,204 நான் களைச் செடிகளை நடமாட்டேன். 87 00:04:46,204 --> 00:04:49,332 அது உண்மையில் களைச் செடி கிடையாது. பெயரில் மட்டும்தான் களை இருக்கிறது. 88 00:04:49,332 --> 00:04:51,334 திமிங்கல சுறா உண்மையில் திமிங்கிலம் அல்ல என்பது போல. 89 00:04:51,334 --> 00:04:53,378 உரையாடல் பெட்டி உண்மையில் பெட்டி அல்ல என்பது போல. 90 00:04:53,378 --> 00:04:55,881 அது பறக்கும் சிம்பன்சியை கொண்ட ஒரு சிறுமி. 91 00:04:55,881 --> 00:04:58,967 உன் பட்டாம்பூச்சி மீட்பு பணியை வேறு எங்காவது செய். 92 00:05:08,226 --> 00:05:09,060 ஜேன். 93 00:05:10,896 --> 00:05:11,938 என்ன நடந்தது? 94 00:05:11,938 --> 00:05:14,816 திரு. படேல் தனது தோட்டத்தில் எருக்கஞ்செடியை வளர்க்க விரும்பவில்லை. 95 00:05:14,816 --> 00:05:16,693 அது மோசமானதா? 96 00:05:16,693 --> 00:05:19,321 அதை மட்டும்தான் பச்சைப்புழுக்கள் சாப்பிடும் என்றார். 97 00:05:21,531 --> 00:05:24,868 பச்சைப்புழுக்கள் இல்லையென்றால், பட்டாம்பூச்சிகள் இல்லை. அது சரிதான், கிரேபியர்ட். 98 00:05:24,868 --> 00:05:28,038 அதிக பூக்களை உருவாக்க பட்டாம்பூச்சிகள் உதவுகின்றன என்று திரு. பட்டேலிடம் சொன்னாயா? 99 00:05:28,038 --> 00:05:32,500 சொன்னேன். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. பெரியவர்கள் கேட்க விரும்ப மாட்டார்கள். 100 00:05:32,500 --> 00:05:35,837 பெரியவர்களும் தங்கைகளும். 101 00:05:38,173 --> 00:05:41,801 ஒருவேளை நம் பட்டாம்பூச்சி முட்டையிடுவதால் சாப்பிடாமால் இருக்கலாம். 102 00:05:41,801 --> 00:05:45,138 அதைக் கண்டுபிடிக்க ஒரே வழிதான் இருக்கிறது. நம் வேலைக்குத் திரும்புவோமா? 103 00:05:54,689 --> 00:05:58,318 கண்காணிப்பு கருவியை கண்டுபிடித்துவிட்டேன். இப்போது தகவலை அனுப்புகிறேன். 104 00:06:00,654 --> 00:06:02,656 அது ஏற்கனவே அவ்வளவு தூரம் சென்றுவிட்டதா? 105 00:06:04,324 --> 00:06:08,245 ஆம். பட்டாம்பூச்சிகள் காற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரம் பயணிக்கின்றன என்று இதில் இருக்கிறது. 106 00:06:08,828 --> 00:06:11,331 -காற்றையா? -மிதக்கலாம் எனும்போது எதற்காக சிறகடிக்கிறது? 107 00:06:20,048 --> 00:06:22,509 ஹேய், கிரேபியர்ட், அந்த மேகம் உன்னைப் போலவே இருக்கிறது. 108 00:06:26,096 --> 00:06:29,516 எவ்வளவு வேகமாக நகர்கிறது என்று பார். ஏன் என்று தெரியுமா? 109 00:06:31,601 --> 00:06:34,771 அதேதான். காற்றைப் போல பறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 110 00:06:34,771 --> 00:06:36,898 மிதவை பயன்முறை இயக்கப்படுகிறது. 111 00:06:38,817 --> 00:06:43,113 வேகம் கூடுகிறது. காற்றிலேயே சவாரி செய்யுங்கள், அது நம்மை பட்டாம்பூச்சியிடம் கொண்டு போகும். 112 00:06:47,200 --> 00:06:48,410 மில்லிக்கு என்னதான் வேண்டுமாம்? 113 00:06:48,410 --> 00:06:49,911 சாவிக்கொத்தை தொலைத்துவிட்டாள். 114 00:06:49,911 --> 00:06:50,912 சாவிக்கொத்தா? 115 00:06:50,912 --> 00:06:52,163 எங்களை தத்து எடுத்தபோது, 116 00:06:52,163 --> 00:06:54,666 எங்கள் அப்பாக்கள் எங்களுக்கு புதிய வீட்டின் சாவிக்கொத்தைக் கொடுத்தார்கள். 117 00:06:54,666 --> 00:06:56,084 அது அருமையான விஷயம். 118 00:06:56,084 --> 00:06:59,212 நான் ஒரு பொம்மை வண்டியை விரும்பினேன், ஆனால், ஆம். 119 00:06:59,796 --> 00:07:01,047 மில்லி வருத்தமாக இருக்கிறாளா? 120 00:07:01,047 --> 00:07:02,966 அவள் எப்போதும் எதையாவது தொலைப்பாள். 121 00:07:02,966 --> 00:07:04,718 அது கிடைக்கும். 122 00:07:07,429 --> 00:07:09,890 -ஆனால் நாம் எதை தவறவிடவில்லை தெரியுமா? -நம் பட்டாம்பூச்சியையா? 123 00:07:11,516 --> 00:07:12,642 பொறு, கிரேபியர்ட். 124 00:07:18,398 --> 00:07:22,027 அது பறப்பதை நிறுத்திவிட்டது. அது ஓய்வெடுக்கவோ தூங்கவோ செய்கிறதா? 125 00:07:22,027 --> 00:07:24,988 பட்டாம்பூச்சிகள் பகலில் பறக்கும், இரவில் ஓய்வெடுக்கும். 126 00:07:24,988 --> 00:07:27,365 இது பகல் நேரம், எனவே அது தூங்கக்கூடாது. 127 00:07:27,365 --> 00:07:28,867 ஒருவேளை அது சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். 128 00:07:28,867 --> 00:07:32,078 இங்கே எந்த செடிகளையும் காணவில்லையே. அவை எப்படி சாப்பிடும்? 129 00:07:32,078 --> 00:07:33,580 முடியாது. 130 00:07:34,789 --> 00:07:35,624 என்ன அது? 131 00:07:36,416 --> 00:07:37,626 அது இறந்துவிட்டது. 132 00:07:43,089 --> 00:07:44,090 ஹலோ. 133 00:07:55,810 --> 00:07:57,229 இங்கே எல்லாம் நலமா? 134 00:07:59,606 --> 00:08:00,565 கட்டிப்பிடிக்க வேண்டுமா? 135 00:08:01,149 --> 00:08:02,067 ஆம் 136 00:08:07,781 --> 00:08:09,908 சரி. இருவரையும். 137 00:08:11,534 --> 00:08:12,786 என்ன நடந்தது? 138 00:08:12,786 --> 00:08:16,706 மெக்சிகோவிலிருந்து கனடாவுக்கு அதன் பயணத்தைக் கண்காணிக்க பட்டாம்பூச்சியை டேக் செய்தோம். 139 00:08:16,706 --> 00:08:18,583 ஆனால் அதனால் தன் பயணத்தை முடிக்க முடியவில்லை. 140 00:08:18,583 --> 00:08:20,961 -கேட்க வருத்தமாக இருக்கிறது. -ஆம். 141 00:08:21,545 --> 00:08:23,171 எங்களை நன்றாக உணர வைக்கும் 142 00:08:23,171 --> 00:08:24,965 -சிற்றுண்டிகள் ஏதாவது இருக்கிறதா? -சரி. 143 00:08:24,965 --> 00:08:27,050 போதுமான உணவு இல்லாத காரணத்தால் அது இறந்திருக்கலாம். 144 00:08:27,050 --> 00:08:29,302 நகரத்தில் அரிதாகவே பூக்கள் இருக்கின்றன. 145 00:08:29,302 --> 00:08:30,971 எந்த எருக்கஞ்செடியையும் பார்த்ததில்லை. 146 00:08:30,971 --> 00:08:33,472 குட்டி பச்சைப்புழுக்கள் சாப்பிடக் கூடிய ஒரே செடி அதுதான், 147 00:08:33,472 --> 00:08:36,308 எனவே அந்த இடத்தில் தான் அரசன் பட்டாம்பூச்சிகள் முட்டையிடும். 148 00:08:36,308 --> 00:08:38,311 உணவிலும் பூக்களிலும் மகரந்த சேர்க்கைக்காக அவை நமக்கு உதவுவது போல 149 00:08:38,311 --> 00:08:40,313 நாம் பட்டாம்பூச்சிகளுக்கு உதவுகிறோம் என்றால், 150 00:08:40,313 --> 00:08:42,440 அதை தங்கள் தோட்டங்களில் வளர்க்கும் அதிகமானோர் நமக்குத் தேவை. 151 00:08:42,440 --> 00:08:44,025 திரு. படேல் போன்றவர்கள். 152 00:08:44,025 --> 00:08:47,279 அவரோடு இணக்கமாக வாழ்த்துக்கள். அவர் தனது தோட்டத்தின் மீது கவனமாக இருக்கிறார். 153 00:08:48,947 --> 00:08:51,908 டேவிட்? 154 00:08:53,868 --> 00:08:56,288 மில்லி, என் பொருட்களை பயன்படுத்துவதைப் பற்றி என்ன சொன்னேன்? 155 00:08:56,288 --> 00:08:57,497 வேண்டாம். 156 00:08:57,497 --> 00:08:58,873 நீ என்ன செய்கிறாய்? 157 00:08:58,873 --> 00:09:02,002 பயன்படுத்துகிறேன். ஆனால் எனக்கு உன் உதவி தேவை. 158 00:09:02,002 --> 00:09:06,464 நான் கீழே வந்து என் வாக்கியை வாங்கிக் கொள்கிறேன், அவ்வளவுதான். 159 00:09:07,215 --> 00:09:08,925 எனக்கு அந்த சிற்றுண்டி கிடைக்குமா? 160 00:09:08,925 --> 00:09:10,135 இதோ. 161 00:09:10,135 --> 00:09:11,219 நன்றி. 162 00:09:11,219 --> 00:09:12,596 இதோ வருகிறேன், ஜேன். 163 00:09:16,308 --> 00:09:18,310 ஜேன் குட்டாலின் மேற்கோள் உதவலாம். 164 00:09:20,061 --> 00:09:20,896 இதோ ஒன்று. 165 00:09:22,022 --> 00:09:25,609 "உங்கள் நோக்கங்கள் மாறாத வரை சமரசம் சரியானது தான்." 166 00:09:28,361 --> 00:09:30,572 சரி. இது எப்படி இருக்கிறதென்று பார்க்கிறாயா? 167 00:09:31,740 --> 00:09:35,869 "மக்கள் நீ சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் சொல்வதைக் கேட்பதுதான் முக்கியமான விஷயம்." 168 00:09:35,869 --> 00:09:37,954 நான் சொல்வதை அவர்கள் கேட்பதைப் பற்றி என்ன இருக்கிறது? 169 00:09:39,748 --> 00:09:40,999 தொடருங்கள். 170 00:09:40,999 --> 00:09:45,086 "அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்டு, நீ சொல்வது சரிதான் என்று நினைத்தால், 171 00:09:45,086 --> 00:09:47,672 உன் கருத்தில் நீ உறுதியாக இருக்க வேண்டும்." 172 00:09:47,672 --> 00:09:50,717 நீங்கள் சொல்வது சரிதான், அம்மா. திரு. படேல் தான் கேட்க வேண்டும். 173 00:09:50,717 --> 00:09:54,638 என்ன? ம்? நீ மேற்கோளை சரியாக புரிந்து கொண்டதாக நினைக்கவில்லை. 174 00:09:59,684 --> 00:10:00,852 நன்றி. 175 00:10:06,608 --> 00:10:07,984 நீ நலமா? 176 00:10:08,944 --> 00:10:09,945 இல்லை. 177 00:10:13,448 --> 00:10:15,408 அது வெறும் சாவிக்கொத்துதான், மில்லி. 178 00:10:15,408 --> 00:10:17,994 நாம் ஒன்றாகும்போதுதான், நாம் ஒரு குடும்பமாகிறோம் என்று... 179 00:10:20,455 --> 00:10:22,207 அதில் பொறிக்கப்பட்டிருந்தது. 180 00:10:24,125 --> 00:10:25,502 நான் எங்கேயும் போகப்போவதில்லை. 181 00:10:26,002 --> 00:10:30,840 ஆனால் அப்பாக்கள் கோபப்பட்டு என்னை வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்வது? 182 00:10:31,675 --> 00:10:34,469 அப்பாக்கள் வெளியேறிவிடுவார்களோ என்று சில சமயங்களில் நானும் கவலைப்படுவேன், 183 00:10:34,469 --> 00:10:36,471 ஆனால் அது நடக்காது. 184 00:10:36,471 --> 00:10:37,764 சத்தியமாக? 185 00:10:37,764 --> 00:10:41,142 ஆயிரம் முறை சத்தியம் செய்கிறேன். 186 00:10:41,142 --> 00:10:44,896 நான் ஜேன் உடன் வேலையை முடித்துவிட்டு, பிறகு உன் சாவிக்கொத்தை கண்டுபிடிக்க உதவுகிறேன். 187 00:10:44,896 --> 00:10:46,064 சரி. 188 00:10:56,074 --> 00:10:59,494 உனக்கு நன்றாக இருக்கும் என்றால் என் வாக்கியை கொஞ்ச நேரம் வைத்துக்கொள். 189 00:10:59,995 --> 00:11:01,496 நன்றி, டேவிட். 190 00:11:02,539 --> 00:11:07,210 நினைவிருக்கட்டும், நீ கடனாக வாங்குகிறாய். நீயே வைத்துக்கொள்ள அல்ல. 191 00:11:17,470 --> 00:11:19,264 திரு. படேல்! காத்திருங்கள். 192 00:11:20,891 --> 00:11:23,560 நான் அதைக் கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் கேட்க வேண்டும். 193 00:11:23,560 --> 00:11:25,937 என்ன சொன்னாய். நான் கேட்க வேண்டுமா? 194 00:11:27,397 --> 00:11:29,774 நீங்கள், நான். நாம் எல்லோருமே. 195 00:11:29,774 --> 00:11:33,028 நாம் விலங்குகளுக்கு, பூச்சிகளுக்கு, தாவரங்களுக்கு கொடுக்க போகிறோம் என்றால்... 196 00:11:33,028 --> 00:11:34,487 தொடாதே. 197 00:11:35,071 --> 00:11:38,074 மன்னித்துவிடுங்கள். அவை உயிர்வாழ ஒரு வாய்ப்பு கொடுக்கப் போகிறோம் என்றால், 198 00:11:38,074 --> 00:11:39,784 நாம் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்க வேண்டும். 199 00:11:40,535 --> 00:11:42,996 தங்கள் பச்சைப்புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக மாறும் 200 00:11:42,996 --> 00:11:46,666 ஒரு வாய்ப்புக்காக பட்டாம்பூச்சிகள் மூன்று நாடுகளைக் கடந்து பறக்கின்றன. 201 00:11:46,666 --> 00:11:51,546 அவற்றால் அதையெல்லாம் செய்ய முடிந்தால், நாம் கேட்கக் கற்றுக்கொள்ள முடியாதா? கொஞ்சமாவது? 202 00:11:54,257 --> 00:11:56,801 எனக்கு ஏன் இந்த செடிகள் பிடிக்கும் தெரியுமா? 203 00:11:57,385 --> 00:11:58,678 -அவற்றின் வாசனைக்காக? -இல்லை. 204 00:11:58,678 --> 00:11:59,763 -அவற்றில் தோற்றத்துக்காக? -இல்லை. 205 00:11:59,763 --> 00:12:01,848 -அவற்றின் நிறத்துக்காக? -இல்லை. யூகிப்பதை நிறுத்து. 206 00:12:01,848 --> 00:12:04,809 அவை என் குடும்பத்தை நினைவூட்டுவதால் எனக்கு அவற்றைப் பிடிக்கிறது. 207 00:12:05,393 --> 00:12:06,895 குறிப்பாக இறந்தவர்களை. 208 00:12:07,479 --> 00:12:09,147 அமலா யார்? 209 00:12:10,315 --> 00:12:14,611 அமலாவுக்கு என் பாட்டியின் பெயர் வைக்கப்பட்டது. என் பாட்டி. 210 00:12:16,279 --> 00:12:18,490 அவர் தாமரை மலர் போன்றவர், 211 00:12:19,241 --> 00:12:22,202 ஆறுகள் அவரைச் சுற்றி சுழன்றாலும் வலுவாக நிற்கக் கூடியவர். 212 00:12:23,119 --> 00:12:25,038 உன் பாட்டி அற்புதமானவர் போல தோன்றுகிறது. 213 00:12:27,207 --> 00:12:29,542 உன் குடும்பம் எப்போதாவது நீண்ட பயணங்களை மேற்கொண்டதுண்டா? 214 00:12:29,542 --> 00:12:33,630 என் தாத்தா மெக்சிகோவில் இருந்தும், என் பாட்டி பிலிப்பைன்ஸிலிருந்தும் இங்கு வந்தார்கள். 215 00:12:33,630 --> 00:12:37,300 உன் தாத்தா உன் பட்டாம்பூச்சிகள் பயணிக்கும் தூரம் பயணித்திருக்கிறார். 216 00:12:38,677 --> 00:12:40,512 ஆம், நீ சொல்வது சரிதான். 217 00:12:41,513 --> 00:12:45,684 தவிர, நான் டேக் செய்த பட்டாம்பூச்சி இறந்துவிட்டது. 218 00:12:47,727 --> 00:12:48,770 அதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. 219 00:12:49,896 --> 00:12:55,318 ஆனால் அது மேற்கொண்ட அந்த பயணம் அதன் பச்சைப்புழுக்களை வாழ அனுமதித்தது, இல்லையா? 220 00:12:56,695 --> 00:12:57,696 நீங்கள் சொன்னது சரிதான். 221 00:12:58,196 --> 00:13:00,907 நீங்கள் கொஞ்சம் எருக்கஞ்செடிகளை நட்டால், நீங்கள் ஒரு பச்சைப்புழுவுக்கு 222 00:13:00,907 --> 00:13:02,367 வாழ ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள். 223 00:13:05,203 --> 00:13:06,454 டேவிட்? 224 00:13:06,454 --> 00:13:08,790 -அவன் இங்கே இல்லை. -மில்லி, டேவிட் எங்கே? 225 00:13:08,790 --> 00:13:10,750 அவன் உன்னோடு இருப்பான் என்று நினைத்தேன். 226 00:13:15,130 --> 00:13:17,090 இதோ வந்துவிடுகிறேன், திரு. படேல். 227 00:13:17,090 --> 00:13:18,675 நிச்சயமாக வருவாய். 228 00:13:30,770 --> 00:13:32,856 நம் பட்டாம்பூச்சி ஒரு பெரிய விஷயத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன். 229 00:13:32,856 --> 00:13:34,649 -அப்படியா? -நான் உனக்குக் காட்டுகிறேன். 230 00:13:34,649 --> 00:13:38,153 இந்த முறை நான் உன்னுடன் பறக்கலாமா? 231 00:13:38,737 --> 00:13:40,655 நீ கிரேபியர்டிடம் தான் கேட்க வேண்டும். 232 00:13:43,158 --> 00:13:44,409 போகலாம். 233 00:13:46,036 --> 00:13:48,038 இது பாதுகாப்பானது தானே? 234 00:13:48,038 --> 00:13:51,499 பெரும்பாலும். இறுக்கமாக பிடித்துக்கொள். நாம் தேட பட்டாம்பூச்சி குட்டிகள் இருக்கின்றன. 235 00:13:55,712 --> 00:13:57,339 பச்சைப்புழுக்களுக்காக ஸ்கேன் செய், டேவிட். 236 00:13:57,339 --> 00:13:59,758 ஸ்கேன் செய்கிறேன். பச்சைப்புழுக்கள் இல்லை. 237 00:13:59,758 --> 00:14:01,509 அது புரியவில்லையே. 238 00:14:01,509 --> 00:14:05,263 அதற்கு குட்டிகள் இல்லை என்றால், இப்படியெல்லாம் பறந்து என்ன பயன்? 239 00:14:06,306 --> 00:14:07,557 அது சும்மா பறந்திருக்கிறது. 240 00:14:07,557 --> 00:14:11,311 பச்சைப்புழுக்கள் இல்லை, ஆனால் ஸ்கேனர் சில வகையான உயிர்களைக் கண்டறிகிறது. 241 00:14:11,311 --> 00:14:12,646 அதை நோக்கி திருப்புகிறேன். 242 00:14:13,521 --> 00:14:17,984 -ஜேன், அங்கே பார். அது ஒரு... -பொற்புழு. 243 00:14:17,984 --> 00:14:19,778 பட்டாம்பூச்சிகள் பச்சைப்புழுக்களாக தொடங்கி, 244 00:14:19,778 --> 00:14:22,155 பட்டாம்பூச்சியாக மாற இறுதியில் தங்களைச் சுற்றி 245 00:14:22,155 --> 00:14:25,617 ஒரு கூட்டை உருவாக்கிக் கொள்கின்றன. 246 00:14:29,329 --> 00:14:30,538 வியக்கத்தக்கது. 247 00:14:30,538 --> 00:14:31,623 அதோடு விநோதமானது. 248 00:14:31,623 --> 00:14:33,041 வியக்கத்தக்க வினோதம். 249 00:14:33,041 --> 00:14:34,584 பார், இன்னும் நிறைய இருக்கிறது. 250 00:14:36,169 --> 00:14:37,796 நாம் இன்னொன்றை டேக் செய்ய வேண்டும். 251 00:14:48,223 --> 00:14:51,518 நான் வெளியே போகப் போவதில்லை. சென்ற முறை கிரேபியர்ட் விழவில்லையா? 252 00:14:53,853 --> 00:14:55,146 என்னிடம் ஒரு டேக் செய்யும் கருவியைக் கொடு. 253 00:15:01,403 --> 00:15:05,407 அவை சுற்றிக்கொண்டே இருக்கின்றன. 254 00:15:05,407 --> 00:15:09,578 அந்த சிற்றுண்டியை சாப்பிட்டிருக்கக் கூடாது. 255 00:15:12,080 --> 00:15:13,331 முன்னால் ஒன்று இருக்கிறது. 256 00:15:14,708 --> 00:15:16,751 இது வேடிக்கையாக இருக்கும். 257 00:15:16,751 --> 00:15:18,378 என்ன? என்ன வேடிக்கையாக இருக்கும்? 258 00:15:22,883 --> 00:15:25,051 வேடிக்கையாக இல்லை! 259 00:15:28,346 --> 00:15:29,514 ஆம்! 260 00:15:31,224 --> 00:15:32,225 நாம் அதை செய்துவிட்டோம். 261 00:15:38,189 --> 00:15:39,316 திரு. படேல்! 262 00:15:41,318 --> 00:15:43,278 மன்னித்துவிடுங்கள், நீங்கள் சொன்னது சரிதான். 263 00:15:43,278 --> 00:15:45,447 -எதைப் பற்றி? -பட்டாம்பூச்சிகள் பற்றி. 264 00:15:45,447 --> 00:15:47,616 முழுப் பயணத்தையும் அவை மட்டுமே செய்வதில்லை. 265 00:15:48,241 --> 00:15:51,620 -அவைத் தொடங்குகின்றன, குட்டிகள் முடிக்கின்றன. -ஆஹா, அது சுவாரஸ்யமாக இருக்கிறது. 266 00:15:52,495 --> 00:15:55,415 என் தாத்தா பாட்டி உலகத்தின் மறுபக்கத்துக்கு பயணம் செய்தார்கள், 267 00:15:55,415 --> 00:15:58,710 அதனால் என் பெற்றோர்கள், பிறகு நான், என் சகோதரன், என் சகோதரிகளுக்கு 268 00:15:58,710 --> 00:16:01,087 இங்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று. 269 00:16:01,588 --> 00:16:04,090 வழியில் பெரும் தியாகம் செய்தனர். 270 00:16:04,966 --> 00:16:08,220 உன் பட்டாம்பூச்சிகள் அதே காரியத்தைச் செய்வது போல தெரிகிறது. 271 00:16:08,929 --> 00:16:11,473 அதைக் கண்டுபிடிக்க நாம் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்க வேண்டியிருந்தது. 272 00:16:14,142 --> 00:16:15,268 பார். 273 00:16:15,268 --> 00:16:16,978 என்னவொரு அழகான தொட்டி? 274 00:16:16,978 --> 00:16:20,774 இல்லை. இது தொட்டி பற்றியது அல்ல. அதன் உள்ளே இருப்பதைப் பற்றியது. 275 00:16:20,774 --> 00:16:23,068 அவை வசந்த காலத்தில் பூக்கும் என்று எதிர்பார்க்கிறேன். 276 00:16:24,778 --> 00:16:26,780 -நீங்கள் எருக்கஞ்செடி விதையை விதைத்தீர்களா? -சிலவற்றை. 277 00:16:26,780 --> 00:16:31,117 சில சர்வதேச பயணிகள் மற்றும் அவற்றின் குழந்தைகளை மகிழ்விக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 278 00:16:31,117 --> 00:16:32,202 நன்றி. 279 00:16:32,202 --> 00:16:33,995 அதற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்? 280 00:16:33,995 --> 00:16:38,500 அமிஷ், மிகவும் குறும்பு செய்யும் என் தம்பியின் பெயர், 281 00:16:39,084 --> 00:16:42,546 எருக்கஞ்செடி போல, நான் விரும்பாத ஒன்று, 282 00:16:42,546 --> 00:16:44,297 ஆனால் இப்போது அது இல்லாமல் வாழ முடியாது என்று தெரிகிறது. 283 00:16:44,297 --> 00:16:46,591 அது மிகவும் அருமை, திரு. படேல். நன்றி. 284 00:16:48,009 --> 00:16:49,135 வா, டேவிட். 285 00:16:49,135 --> 00:16:52,138 நமது பட்டாம்பூச்சி அதன் பயணத்தில் இறுதி வரை சென்றதா என்று பார்க்க வேண்டும். 286 00:16:52,138 --> 00:16:53,515 கொஞ்ச நேரத்தில் உன்னை சந்திக்கிறேன். 287 00:17:00,605 --> 00:17:01,439 நெருங்கிவிட்டோமா? 288 00:17:03,066 --> 00:17:05,235 சரி. நம்மை தயார்படுத்திக் கொள்வோம். 289 00:17:06,611 --> 00:17:07,529 அது உயிர்... 290 00:17:10,364 --> 00:17:11,408 பிழைத்திருக்காது. 291 00:17:12,909 --> 00:17:15,453 வருத்தமாக இருக்கிறது, அது சும்மா பயணம் செய்ததாக நான் நினைக்கவில்லை. 292 00:17:16,662 --> 00:17:18,747 பொறு, நான் பெரிதாக்கினால்? 293 00:17:18,747 --> 00:17:20,458 அது நான் நினைப்பது அதுதானா? 294 00:17:21,208 --> 00:17:23,335 பட்டாம்பூச்சி முட்டைகள். பார்... 295 00:17:26,171 --> 00:17:28,174 நூற்றுக்கணக்கான பச்சைப்புழுக்கள். 296 00:17:29,342 --> 00:17:30,677 அவை அழகாக இருக்கின்றன. 297 00:17:31,261 --> 00:17:34,389 பட்டாம்பூச்சிகளுக்கு தேவையானது அவற்றின் பயணத்தில் உதவ ஒரு சின்ன எருக்கஞ்செடி மட்டுமே. 298 00:17:36,975 --> 00:17:38,810 டேவிட் இவற்றைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை. 299 00:17:42,564 --> 00:17:43,607 ஏதாவது அதிர்ஷ்டம் ஏற்பட்டதா? 300 00:17:44,691 --> 00:17:45,692 இதுவரை இல்லை. 301 00:17:45,692 --> 00:17:48,486 உன்னுடையதை நாம் கண்டுபிடிக்கும் வரை நீ ஏன் என் சாவிக்கொத்தை வைத்திருக்கக்கூடாது? 302 00:17:48,486 --> 00:17:50,405 -நிஜமாகவா? -நிஜமாகத்தான். 303 00:17:50,405 --> 00:17:52,532 நன்றி, டேவிட். 304 00:17:53,783 --> 00:17:54,951 எந்த பிரச்சினையும் இல்லை. 305 00:17:55,619 --> 00:17:57,120 -இதோ. -நன்றி. 306 00:17:59,080 --> 00:18:00,999 நீ எங்கே போவதாக நினைக்கிறாய்? 307 00:18:06,129 --> 00:18:11,259 ஆஹா. இது மிகவும் அருமையாக இருக்கிறது. 308 00:18:11,843 --> 00:18:13,053 கொஞ்சம் பொறு. 309 00:18:18,225 --> 00:18:19,309 இப்போது நீ முயற்சி செய். 310 00:18:27,651 --> 00:18:28,777 மில்லி? 311 00:18:29,361 --> 00:18:30,320 ஹாய், ஜேன். 312 00:18:30,320 --> 00:18:32,572 நம் பணியின் முடிவை பார்க்க நான் அவளை அழைத்து வர நினைத்தேன். 313 00:18:32,572 --> 00:18:35,283 நல்ல யோசனை. இதைப் பார், மில்லி. 314 00:18:37,869 --> 00:18:40,872 -விநோதமானது. -வியக்கத்தக்கது, இல்லையா? 315 00:18:41,581 --> 00:18:43,041 வியக்கத்தக்க வினோதம். 316 00:18:53,051 --> 00:18:55,136 அரசன் பட்டாம்பூச்சிகளை காப்பாற்ற உதவுங்கள். 317 00:18:59,683 --> 00:19:01,893 டேவிட், நான் பட்டாம்பூச்சி நபரிடமும் பேசலாமா? 318 00:19:01,893 --> 00:19:05,480 -டாக்டர் பேட்ரிக் குவேராவை சொல்கிறாயா? -ஆம், பட்டாம்பூச்சிகளை பற்றி கேட்க விரும்புகிறேன். 319 00:19:05,480 --> 00:19:07,399 நீ ஜேனிடம் கேட்க வேண்டும். 320 00:19:09,442 --> 00:19:11,945 -ஜேனிடம் என்ன கேட்பது? -நான் பேட்ரிக் உடன் பேசலாமா? 321 00:19:11,945 --> 00:19:14,656 நிச்சயமாக, அவருக்கு அரசன் பட்டாம்பூச்சிகள் பற்றி எல்லாம் தெரியும். 322 00:19:14,656 --> 00:19:16,324 ஆனால் முதலில், இதைப் பாருங்கள். 323 00:19:16,324 --> 00:19:17,409 மண்? 324 00:19:17,409 --> 00:19:19,744 நான் யூகிக்கறேன். அதில் எருக்கஞ்செடி விதைகள் இருகின்றனவா? 325 00:19:19,744 --> 00:19:22,038 ஆம். திரு. படேல் மீதி இருந்த சில விதைகளைக் கொடுத்தார். 326 00:19:22,038 --> 00:19:23,164 எனக்குத் தெரியும். 327 00:19:23,164 --> 00:19:25,166 இது வளர ஆரம்பித்தவுடன் வெளியே கொண்டு வருகிறேன். 328 00:19:25,166 --> 00:19:28,503 பட்டாம்பூச்சிகள் வரலாம், எனவே பேட்ரிக்கைப் போலவே நாமும் இன்னும் கற்றுக்கொள்ளலாம். 329 00:19:28,503 --> 00:19:29,838 என்னால் காத்திருக்க முடியாது. 330 00:19:29,838 --> 00:19:31,047 அவர் வந்துவிட்டார். 331 00:19:31,047 --> 00:19:32,924 ஹாய், பேட்ரிக்! 332 00:19:35,218 --> 00:19:36,428 மியூடில் இருக்கிறீர்கள். 333 00:19:37,596 --> 00:19:40,098 -மன்னியுங்கள், அது எப்போதும் நடக்கும். -அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 334 00:19:40,098 --> 00:19:42,767 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். ஹாய்... 335 00:19:42,767 --> 00:19:44,853 -நான் மில்லி. -இவள் என் தங்கச்சி. 336 00:19:44,853 --> 00:19:47,981 அரசன் பட்டாம்பூச்சிகளைப் பற்றி உங்களுடன் பேச நாங்கள் மிகவும் ஆவலாக இருக்கிறோம். 337 00:19:47,981 --> 00:19:49,274 முதல் கேள்வி, 338 00:19:49,274 --> 00:19:52,861 பச்சைப்புழுக்கள் பட்டாம்பூச்சிகளாக மாறும் போது, எங்கே போவது என்று அவற்றுக்கு எப்படித் தெரியும்? 339 00:19:52,861 --> 00:19:56,740 அரசன்கள், அவை பிறக்கும்போது, அவற்றின் மூளையில் எல்லா தகவல்களும் இருக்கும். 340 00:19:56,740 --> 00:19:59,701 உண்மையில் அருமையானது என்னவென்றால் அவற்றின் மூளை மிகவும் சிறியது, 341 00:19:59,701 --> 00:20:01,578 ஒரு ஊசி முனை அளவுள்ளது. 342 00:20:01,578 --> 00:20:03,997 அது எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். 343 00:20:03,997 --> 00:20:06,207 உங்களுடன் பகிர்ந்து கொள்ள புகைப்படம் இருக்கிறதா என்று பார்க்கிறேன். 344 00:20:06,207 --> 00:20:08,001 அந்த படத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 345 00:20:08,001 --> 00:20:10,420 கட்டப்பட்ட அரசன் பட்டாம்பூச்சியை சோதனை செய்கிறோம். 346 00:20:10,420 --> 00:20:13,632 அது எந்த திசையில் பறக்க முயல்கிறது என்ற தகவலை அது கொடுக்கும். 347 00:20:13,632 --> 00:20:16,509 உதாரணமாக, அது வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு நோக்கி செல்கிறதா? 348 00:20:16,509 --> 00:20:18,094 நிஜமாகவே அருமை. 349 00:20:18,094 --> 00:20:20,305 நீங்கள் பட்டாம்பூச்சிகளுடன் வேலை செய்ய விரும்புவது உங்களுக்கு எப்போதும் தெரியுமா? 350 00:20:20,305 --> 00:20:21,389 உண்மையில் இல்லை. 351 00:20:21,389 --> 00:20:23,516 நான் வளரும்போது, துப்பறிவாளராக ஆக விரும்பினேன். 352 00:20:23,516 --> 00:20:25,560 நீங்கள் பார்க்கிறபடி, நான் இப்போதும் அதைத்தான் செய்கிறேன். 353 00:20:25,560 --> 00:20:27,604 பிரச்சினைகளை தீர்க்கிறேன், பட்டாம்பூச்சிகளுக்கு எப்படி உதவுவது, 354 00:20:27,604 --> 00:20:30,607 அவை என்ன செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க துப்பறியும் வேலை செய்கிறேன், 355 00:20:30,607 --> 00:20:34,152 அவற்றின் புலம்பெயரும் பயணமும் என் குடும்பத்தின் பயணத்தை நினைவூட்டுகிறது. 356 00:20:34,152 --> 00:20:36,404 என் அம்மாவும் அப்பாவும் பிலிப்பைன்ஸிலிருந்து குடிபெயர்ந்து, 357 00:20:36,404 --> 00:20:38,865 கனடா வரை சென்றார்கள் 358 00:20:38,865 --> 00:20:40,283 அப்போது நான் பெரியவனாக இருந்தேன், 359 00:20:40,283 --> 00:20:43,245 கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றேன், 360 00:20:43,245 --> 00:20:44,204 இப்போது அங்குதான் வசிக்கிறேன். 361 00:20:44,204 --> 00:20:46,706 அது கடினமானதாகத் தெரிகிறது. அது அரசன்களுக்கு கடினமானதா? 362 00:20:46,706 --> 00:20:50,210 இப்போதெல்லாம் அரசன்களுக்கு அது நிஜமாகவே கொஞ்சம் கடினமாகி வருகிறது. 363 00:20:50,210 --> 00:20:52,963 நீண்ட காலத்திற்கு முன்பு, அரசன்கள் இடம்பெயரத் தொடங்கியபோது, 364 00:20:52,963 --> 00:20:55,090 அவை திறந்தவெளி நிலங்கள் வழியாக இடம்பெயர்ந்தன. 365 00:20:55,090 --> 00:20:58,635 ஆனால் இப்போதெல்லாம், நகரங்களுடன், திடீரென்று வாழ்விடங்கள் மாறிவிட்டன. 366 00:20:58,635 --> 00:21:01,763 இப்போது முன்பு இல்லாத பெரிய கட்டிடங்கள் இருக்கின்றன. 367 00:21:01,763 --> 00:21:04,140 அரசன்கள் இடம்பெயர்வதைக் குறுக்கிடாதவாறு இந்த நகரங்களை 368 00:21:04,140 --> 00:21:06,851 எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். 369 00:21:06,851 --> 00:21:08,270 அவற்றுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்? 370 00:21:08,270 --> 00:21:10,730 சிறப்பான விஷயம் என்னவென்றால், ஒவ்வொருவரும் அவரவர் பங்கைச் செய்யலாம். 371 00:21:10,730 --> 00:21:12,524 என் திரையைப் பகிர்கிறேன். 372 00:21:12,524 --> 00:21:13,900 என் பெயர் ஜெனிவிவ் லெரோக்ஸ், 373 00:21:13,900 --> 00:21:16,695 நான் கனடாவின் கியூபெக்கில் உள்ள கேட்டினோவை சேர்ந்த 16 வயது 374 00:21:16,695 --> 00:21:18,280 அரசன் பட்டாம்பூச்சி பாதுகாவலர். 375 00:21:18,280 --> 00:21:22,200 நான் ஏழு ஆண்டுகளாக அரசன் பட்டாம்பூச்சியை பாதுகாக்கும் பணியை செய்து வருகிறேன். 376 00:21:22,200 --> 00:21:24,119 அவற்றின் சிறிய பேக்பேக் கணினிகளுக்கு தரவுகளை சேகரிக்க 377 00:21:24,119 --> 00:21:25,662 அவர் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறார், 378 00:21:25,662 --> 00:21:28,081 இது அரசன்கள் பறக்கும் போது நிகழ்நேரத்தில், கண்காணிக்க 379 00:21:28,081 --> 00:21:29,708 ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கிறது. 380 00:21:29,708 --> 00:21:31,084 ஆச்சரியமாக இருக்கிறது. 381 00:21:31,084 --> 00:21:32,669 சரி, எய்டன் வாங்-கும் இருக்கிறார். 382 00:21:32,669 --> 00:21:36,256 அவருக்கு 14 வயது, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறார். 383 00:21:36,256 --> 00:21:38,550 எட்டு ஆண்டுகளாக எருக்கஞ்செடிகளை பயிரிட்டு வருகிறேன், 384 00:21:38,550 --> 00:21:40,802 என்னுடைய ஆறு வயதில் தொடங்கினேன். 385 00:21:40,802 --> 00:21:42,095 அரசன்களின் பயணத்தின் போது 386 00:21:42,095 --> 00:21:44,431 அதிக வாழ்விடங்களை உருவாக்கி, அத்துடன் அவற்றுக்கு உணவை 387 00:21:44,431 --> 00:21:46,600 -வழங்க உதவுகிறார். -அது உதவுவதற்கான அருமையான வழி. 388 00:21:46,600 --> 00:21:49,102 மெக்சிகோவில் உதவி செய்யும் ஒருவரின் காணொளியை உங்களுக்குக் காட்டுகிறேன். 389 00:21:49,102 --> 00:21:51,021 ஹாய், என் பெயர் ஹோயல் மொரேனோ. 390 00:21:51,605 --> 00:21:53,899 நாங்கள் அரசன் பட்டாம்பூச்சி சரணாலயத்தில் இருக்கிறோம். 391 00:21:53,899 --> 00:21:57,569 காட்டைப் பாதுகாக்க உதவ முயற்சிக்க "பட்டர்ஃபிளைஸ் அண்ட் தேய்ர் பீபில்" என்ற பெயரில் 392 00:21:57,569 --> 00:21:59,779 ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைத் தொடங்கினோம். 393 00:21:59,779 --> 00:22:01,781 நான் ஒரு பட்டாம்பூச்சி காப்பகத்தில் வேலை செய்ய விரும்புகிறேன். 394 00:22:01,781 --> 00:22:02,866 நானும்தான். 395 00:22:02,866 --> 00:22:04,367 அரசன்கள் இந்த மாபெரும் 396 00:22:04,367 --> 00:22:06,995 தொடர் ஓட்டப்பந்தயத்தை முடிக்க உதவ எல்லோரும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். 397 00:22:06,995 --> 00:22:09,164 என்ன தெரியுமா? இது உலகளாவிய சமூகமாக நம் எல்லொரையும் இணைக்கிறது. 398 00:22:09,164 --> 00:22:11,708 அண்டை வீட்டாருடன் சேர்ந்து எருக்கஞ்செடிகளை வளர்ப்பதிலிருந்து தொடங்குகிறோம். 399 00:22:11,708 --> 00:22:13,668 -அது அருமை. -நன்றி, பேட்ரிக். 400 00:22:13,668 --> 00:22:15,003 உங்களிடம் பேசுவது நன்றாக இருந்தது. 401 00:22:15,003 --> 00:22:19,132 நினைவிருக்கட்டும், நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அது சிறியதா அல்லது பெரியதா என்பது முக்கியமல்ல, 402 00:22:19,132 --> 00:22:20,091 அது எல்லாம் மாற்றத்தை ஏற்படுத்தும். 403 00:22:20,091 --> 00:22:21,885 -நன்றி. பை. -பிறகு சிந்திப்போம். பை. 404 00:22:21,885 --> 00:22:23,762 -பை, பேட்ரிக். -பை. 405 00:22:24,930 --> 00:22:27,474 திரு. படேலிடம் விதைகள் மீதமிருக்கிறதா என்று பார்ப்போமா? 406 00:22:27,474 --> 00:22:30,810 ஆம், அவர் நம்முடைய இன்னொரு வருகையை நிச்சயம் விரும்புவார். போகலாம். 407 00:22:33,813 --> 00:22:35,315 நாங்கள் எப்படி உதவ முடியும்? 408 00:23:23,863 --> 00:23:26,116 வசனத் தமிழாக்கம் அருண்குமார்