1 00:00:37,247 --> 00:00:39,332 ”கருப்பு காண்டாமிருகம் (டைசரோஸ் பைகார்னிஸ்).” 2 00:00:45,171 --> 00:00:46,172 எனது முறை. 3 00:00:48,800 --> 00:00:50,719 நாம் கருப்பு காண்டாமிருகத்தைத் தேடுகிறோம் என நினைத்தேன். 4 00:00:50,719 --> 00:00:52,387 இது பெரும்பாலும் சாம்பல் நிறத்தில் உள்ளது. 5 00:00:52,387 --> 00:00:55,849 கருப்பு காண்டாமிருகம் சாம்பல் நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை காண்டாமிருகமும்தான். 6 00:00:55,849 --> 00:00:57,267 நிறங்கள் அப்படி இருப்பதில்லை. 7 00:00:57,767 --> 00:00:59,644 இவற்றுக்கு சரியான பெயர்களை வைக்க வேண்டும். 8 00:01:02,272 --> 00:01:03,982 இதன் பெரிய, கூரான உதடு மற்றும் வட்டக் காதுகளை வைத்து 9 00:01:03,982 --> 00:01:06,192 இது கருப்பு காண்டாமிருகம் என்று கண்டறியலாம். 10 00:01:06,192 --> 00:01:09,112 ”வட்டக் காது காண்டாமிருகம்” நல்ல பெயராகத் தெரிகிறது. 11 00:01:11,364 --> 00:01:13,074 அவற்றுக்கு நன்றாக காது கேட்கும். 12 00:01:13,074 --> 00:01:14,534 அல்லது “சூப்பர் காது காண்டாமிருகம்.” 13 00:01:14,534 --> 00:01:17,579 எனில் நாம் நெருங்கும்போது மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். 14 00:01:17,579 --> 00:01:20,206 நெருங்கும்போதா? நாம் முதலில் திட்டம் போட வேண்டாமா? 15 00:01:21,124 --> 00:01:23,168 எங்கே போகிறாய்? அதன் பெரிய கொம்புகளைப் பார்த்தாய் அல்லவா? 16 00:01:23,668 --> 00:01:25,921 ஆம்! அதனால்தான் அது ஆண் என்பது எனக்குத் தெரியும். 17 00:01:25,921 --> 00:01:28,340 ஆண்களுக்கு தடிமனான கொம்பு இருக்கும், அவை வழக்கமாக தனியாக இருக்கும். 18 00:01:28,340 --> 00:01:29,841 வா, டேவிட்! 19 00:01:37,432 --> 00:01:38,683 ஜேன், இரு! 20 00:01:40,018 --> 00:01:41,937 காண்டாமிருகங்கள் கோபமானவை என்று நீ என்னிடம் சொன்னாய் அல்லவா? 21 00:01:41,937 --> 00:01:43,688 ஆம், ஆனால் அது அவற்றின் தவறில்லை. 22 00:01:43,688 --> 00:01:46,233 முன்பு லட்சக்கணக்கான காண்டாமிருகங்கள் இருந்தன, 23 00:01:46,233 --> 00:01:47,317 ஆனால் சட்டவிரோதமான வேட்டையால் 24 00:01:47,317 --> 00:01:49,527 இப்போது உலகத்திலேயே 6,000க்கும் குறைவானவையே உள்ளன. 25 00:01:49,527 --> 00:01:50,654 அப்படி என்றால் என்ன? 26 00:01:50,654 --> 00:01:53,949 காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடுவது. 27 00:01:54,658 --> 00:01:57,285 நானும் அந்நியர்களிடம் நட்பாக இருக்க மாட்டேன் என நினைக்கிறேன். 28 00:01:57,786 --> 00:01:59,704 ஆனால் அதன் முதுகில் சிறிய பறவை தெரிகிறதா? 29 00:02:00,205 --> 00:02:02,040 அது சிவப்பு அலகுடைய ஆக்ஸ்பெக்கர். 30 00:02:02,040 --> 00:02:05,210 அதற்கு சிவப்பு அலகு இருப்பதாலா? அது சரியான பெயர். 31 00:02:05,210 --> 00:02:07,837 ஏதோ காரணத்திற்காக, காண்டாமிருகங்கள் அவற்றை எப்போதும் தன் முதுகில் அமர அனுமதிக்கின்றன. 32 00:02:07,837 --> 00:02:09,631 அதை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால் 33 00:02:09,631 --> 00:02:11,424 அவற்றுக்கு நாம் எப்படி உதவலாம் என்று கண்டுபிடிக்க முடியுமா? 34 00:02:11,424 --> 00:02:14,719 அதேதான். காண்டாமிருகங்களைப் புரிந்துகொள்வதுதான் அவற்றுக்கு உதவி செய்ய முதல் படி. 35 00:02:14,719 --> 00:02:17,889 ஆக்ஸ்பெக்கர் எதையோ கொத்துகிறது. அது எதையோ திண்கிறது. 36 00:02:18,473 --> 00:02:21,309 -நாம் நெருக்கத்தில் செல்ல வேண்டும். -நாம் ஒரு திட்டம் போட வேண்டும். 37 00:02:21,309 --> 00:02:22,852 நெருங்குவதுதான் திட்டம். 38 00:02:22,852 --> 00:02:24,020 அது எப்படித் திட்டமாகும்? 39 00:02:25,605 --> 00:02:26,606 என்ன, கிரேபியர்ட்? 40 00:02:31,194 --> 00:02:33,488 -அச்சச்சோ! -புதிய திட்டம், ஓடு! 41 00:02:38,702 --> 00:02:39,786 நன்றாக இருக்கிறாயா? 42 00:02:39,786 --> 00:02:41,955 நன்றாக இருக்கிறேன். நாம் மீண்டும் காண்டாமிருகத்திடம் செல்ல வேண்டும். 43 00:02:44,082 --> 00:02:45,834 அது வலிப்பது போலத் தெரிகிறது. 44 00:02:49,588 --> 00:02:52,632 இது வெறும் சிராய்ப்புதான். நாம் நேரத்தை வீணடிக்கிறோம். போகலாம். 45 00:02:52,632 --> 00:02:55,594 -நாம் அதற்கு பேண்டேஜ் போட வேண்டியிருக்கலாம். -பரவாயில்லை. 46 00:02:55,594 --> 00:02:57,762 சரி, ஆனால் நாம் இப்போதாவது ஒரு திட்டம் போடலாமா? 47 00:02:57,762 --> 00:02:58,889 இந்த முறை உண்மையான திட்டம். 48 00:02:58,889 --> 00:03:01,975 ”பெரிய கொம்புடைய காண்டாமிருகத்திடம் பதுங்கிச் சென்று, மிதிபடாமல் தப்பிப்பது” இல்லை. 49 00:03:01,975 --> 00:03:02,893 நம்மிடம் திட்டம் இருந்தது. 50 00:03:02,893 --> 00:03:05,186 அந்த ஆக்ஸ்பெக்கர் என்ன செய்கிறது என்பதைக் கிட்டத்தட்ட பார்த்திருப்பேன், 51 00:03:05,186 --> 00:03:08,023 -நீ அதற்குள் சத்தம் போட்டுவிட்டாய். -அது என் தவறு என்கிறாயா? 52 00:03:08,023 --> 00:03:09,107 நீ திட்டம் பற்றிச் சத்தமாக பேசும் வரை 53 00:03:09,107 --> 00:03:11,192 அந்தக் காண்டாமிருகம் நம்மைப் பார்க்கவில்லை. 54 00:03:11,192 --> 00:03:12,444 நம்மிடம் திட்டம் இருந்திருந்தால், 55 00:03:12,444 --> 00:03:14,487 நாம் கிட்டத்தட்ட “காண்டாமிருகத்திடம் மிதிபட்டிருக்க மாட்டோம்”. 56 00:03:14,487 --> 00:03:17,032 டேவிட் அப்படியெல்லாம் ஆகியிருக்காது. 57 00:03:17,032 --> 00:03:20,035 ஆகியிருக்கும். நாம் அந்த காண்டாமிருகத்தால் மிதிபட்டிருப்போம். 58 00:03:20,035 --> 00:03:21,953 "காண்டாமிருகத்திடம் மிதிபட்டிருப்போம்.” 59 00:03:22,704 --> 00:03:25,165 -நீ என்ன நினைக்கிறாய், கிரேபியர்ட்? -ஆம். ஒரு தரப்பைத் தேர்வுசெய். 60 00:03:32,339 --> 00:03:34,132 நீ விலங்குகளுக்கு தொடர்ந்து உதவப் போகிறாய் எனில், 61 00:03:34,132 --> 00:03:36,051 நீ எப்போதும் பயப்படுவதை நிறுத்த வேண்டும். 62 00:03:36,051 --> 00:03:37,844 நீ விலங்குகளுக்கு உதவ, நான் உதவ வேண்டுமெனில், 63 00:03:37,844 --> 00:03:39,554 நான் என்ன செய்ய வேண்டுமென எப்போதும் கூறுவதை நிறுத்து. 64 00:03:39,554 --> 00:03:42,224 என்ன செய்ய வேண்டுமென்று நான் கூறவில்லை எனில், நாம் எதுவுமே செய்ய மாட்டோம்! 65 00:03:54,653 --> 00:03:57,781 ஹாய். உன் சிறிய குரங்கு நண்பனை மறந்துவிட்டாய். 66 00:04:04,746 --> 00:04:06,373 இவன் ஒரு சிம்பன்ஸீ. 67 00:04:06,373 --> 00:04:07,916 நன்றி. 68 00:04:08,875 --> 00:04:10,335 எல்லாம் சரியாக இருக்கிறதா? 69 00:04:10,335 --> 00:04:12,587 எல்லாம் அற்புதமாக இருக்கின்றன, திருமதி. ஜே! 70 00:04:13,922 --> 00:04:14,965 எப்படி இருக்கிறீர்கள்? 71 00:04:15,632 --> 00:04:17,675 ஓ, குறை சொல்லுமளவுக்கு இல்லை. 72 00:04:17,675 --> 00:04:21,221 இன்று நீங்கள் எந்த காட்டு உயிரினத்தைத் துரத்துகிறீர்கள்? 73 00:04:21,221 --> 00:04:22,681 டைசரோஸ் பைகார்னிஸ். 74 00:04:24,307 --> 00:04:25,725 எனக்குப் புரியும்படி சொல். 75 00:04:25,725 --> 00:04:28,520 அது நவீன கால ட்ரைசெராடாப்ஸ் போல இருக்கும். 76 00:04:29,020 --> 00:04:30,730 டேவிட் அப்படித்தான் சொல்வான். 77 00:04:31,439 --> 00:04:33,817 நவீன கால ட்ரைசெராடாப்ஸ். 78 00:04:34,859 --> 00:04:35,860 காண்டாமிருகமா? 79 00:04:35,860 --> 00:04:39,531 சரி. டைசரோஸ் பைகார்னிஸ் என்பது அதன் அறிவியல் பெயர். 80 00:04:39,531 --> 00:04:43,159 அது சிவப்பு அலகுடைய ஆக்ஸ்பெக்கரை, என் எப்போதும் தன் முதுகில் அமர அனுமதிக்கிறது 81 00:04:43,159 --> 00:04:44,327 என்பதைக் கண்டறிய முயல்கிறோம். 82 00:04:45,537 --> 00:04:49,332 -என்னவொரு சுவாரஸ்யமான கேள்வி. -ஹாய். திருமதி ஜோசப். 83 00:04:49,332 --> 00:04:50,417 ஹாய்! 84 00:04:51,042 --> 00:04:54,254 -உங்களுக்காக சிறிய பரிசு. -எனக்கா? நன்றி. 85 00:04:54,254 --> 00:04:55,589 சாக்லேட் சிப். 86 00:04:55,589 --> 00:04:58,466 அலெக்ஸ், நீங்கள் அதிகமாக பேக் செய்கிறீர்கள். 87 00:04:58,466 --> 00:05:01,344 ஆம். அடுத்த வாரம் நாங்கள் பைகள் செய்யப் போகிறோம். 88 00:05:01,344 --> 00:05:03,138 பைகளா? நான் ஆர்வமாக இருக்கிறேன். 89 00:05:03,138 --> 00:05:04,222 -நன்றி. -பை. 90 00:05:06,099 --> 00:05:10,020 நான் இரண்டாவது தளத்தில் இருக்கும், சமையலை விரும்பும் ஒருவரை 91 00:05:10,020 --> 00:05:12,314 இவருக்கு அறிமுகப்படுத்தினேன். 92 00:05:13,231 --> 00:05:17,110 காண்டாமிருகம் அந்தப் பறவையை தன் முதுகில் ஏன் அமர அனுமதிக்கிறது எனத் தெரியுமா? 93 00:05:17,110 --> 00:05:20,697 இன்னும் இல்லை, ஆனால் அதைப் புரிந்துகொள்வதுதான் காண்டாமிருகத்துக்கு உதவுவதில் என் முதற்படி. 94 00:05:21,615 --> 00:05:23,950 இது போன்ற முக்கியமான மிஷன்களில் இன்னொருவர் உதவிக்கு 95 00:05:23,950 --> 00:05:25,452 இருப்பது நல்லதாக இருக்கலாம். 96 00:05:25,952 --> 00:05:28,413 அதேதான், அதற்காகத்தான் கிரேபியர்ட் உள்ளது. 97 00:05:29,039 --> 00:05:30,373 சரி. 98 00:05:31,041 --> 00:05:32,584 -பை, திருமதி ஜே. -பை. 99 00:05:35,253 --> 00:05:37,255 காண்டாமிருகங்கள் இலைக் காய்கறிகள், குச்சிகள், 100 00:05:37,255 --> 00:05:41,509 மற்றும் "சதைப் புற்றுள்ள செடிகளைச்" சாப்பிடுகின்றன? 101 00:05:41,509 --> 00:05:42,594 அவை என்னவோ? 102 00:05:43,094 --> 00:05:44,679 போய் ஜேனிடம் சொல். 103 00:05:44,679 --> 00:05:47,724 -இல்லை, இதை நானே செய்கிறேன். -உண்மையாகவா? 104 00:05:49,226 --> 00:05:51,686 ஏன்? உங்களுக்குள் எதுவும் சண்டையா? 105 00:05:52,354 --> 00:05:54,856 ஆம். சண்டைதான். 106 00:05:55,357 --> 00:05:57,859 ஆனால் நீ சிக்கலில் மாட்டிக்கொண்டால் யார் உன்னைக் காப்பாற்றுவது? 107 00:05:58,652 --> 00:06:02,280 -என்னை யாரும் காப்பாற்ற வேண்டியதில்லை. -உன்னை எப்போதும் காப்பாற்ற வேண்டும். 108 00:06:02,280 --> 00:06:03,281 இல்லை. 109 00:06:03,281 --> 00:06:05,533 மேலும், என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. 110 00:06:06,493 --> 00:06:08,328 அதுதான் உன் திட்டமா? 111 00:06:08,828 --> 00:06:12,290 இல்லை. இதில்தான் என் கண்டுபிடிப்புகளை நான் ரெக்கார்டு செய்வேன். 112 00:06:16,586 --> 00:06:18,129 அதை நீ ஜேனிடம் வாக்கியில் சொல்ல வேண்டும். 113 00:06:18,129 --> 00:06:19,798 அவள்தான் உன் நெருங்கிய தோழி. 114 00:06:22,259 --> 00:06:23,510 இப்போது நீதான் என் நெருங்கிய தோழி. 115 00:06:23,510 --> 00:06:26,012 என் நெருங்கிய தோழி கமாயா. 116 00:06:28,807 --> 00:06:31,351 நீ எனது இரண்டாவது நெருங்கிய தோழனாக இருக்கலாம். 117 00:06:47,826 --> 00:06:51,496 என்னிடம் வாக்கி இல்லையெனில் ஜேனிடம் வாக்கியில் பேச முடியாது இல்லையா? 118 00:06:55,792 --> 00:06:56,793 எதுவும் தெரிகிறதா? 119 00:06:58,336 --> 00:07:00,338 நாம் குப்பைத் தொட்டி அருகில் பார்க்க வேண்டுமா? 120 00:07:03,300 --> 00:07:04,301 ஒளிந்துகொள்! 121 00:07:11,308 --> 00:07:13,643 டேவிட், ஹாய்! நீ ஜேனைத் தேடுகிறாயா? 122 00:07:13,643 --> 00:07:16,897 இல்லை. நான் காண்டாமிருகத்தைத் தேடுகிறேன். நீங்கள் அதைப் பார்த்தீர்களா? 123 00:07:16,897 --> 00:07:20,233 சமீபத்தில் பார்க்கவில்லை. அது வருகிறதா எனப் பார்க்கிறேன். 124 00:07:21,943 --> 00:07:24,529 திருமதி ஜோசப், சதைப் புற்றுள்ள செடிகள் என்றால் என்னவென்று தெரியுமா? 125 00:07:25,113 --> 00:07:26,364 சதைப் பற்றுள்ள செடிகளா? 126 00:07:26,364 --> 00:07:27,616 அது ஒரு செடி. 127 00:07:27,616 --> 00:07:30,911 நீ குறிப்பிட்ட வகையான சதைப் பற்றுள்ள செடியைத் தேடுகிறாயா? 128 00:07:30,911 --> 00:07:32,287 எனக்குத் தெரியவில்லை. 129 00:07:32,287 --> 00:07:34,331 கருப்பு காண்டாமிருகங்கள் என்ன சாப்பிடும் எனத் தேடினேன், 130 00:07:34,331 --> 00:07:36,458 அது சதைப் பற்றுள்ள செடிகள் மற்றும் இலைக் காய்கறிகள் என்று கூறியது. 131 00:07:37,375 --> 00:07:39,169 நீ தோட்டத்தின் ஷெட்டில் பார்த்தால் 132 00:07:39,169 --> 00:07:41,421 அங்கே சில இலைக் காய்கறிகள் இருக்கும் என நினைக்கிறேன். 133 00:07:41,421 --> 00:07:42,923 நான் இப்போதே பார்க்கிறேன். 134 00:07:42,923 --> 00:07:44,799 -உதவிக்கு நன்றி, திருமதி ஜே! -நிச்சயமாக. 135 00:07:48,678 --> 00:07:53,391 நான் அங்கே காண்டாமிருகத்தின் காலடிகளைப் பார்த்ததாக நினைத்தேன். 136 00:07:53,391 --> 00:07:54,517 புதருக்குப் பின்னாலா? 137 00:07:55,018 --> 00:07:58,104 ஆனால் அவை இல்லை. தவறாக நினைத்துவிட்டேன். 138 00:07:58,813 --> 00:08:01,024 தோட்டத்தின் ஷெட் அருகில் இருக்கலாமா? 139 00:08:02,317 --> 00:08:03,526 அங்கே பிறகு பார்க்கிறேன். 140 00:08:03,526 --> 00:08:04,903 சரி. 141 00:08:04,903 --> 00:08:06,238 நன்றி, திருமதி ஜே! 142 00:08:06,738 --> 00:08:08,740 -லாரென், ஹாய். -ஹாய். 143 00:08:08,740 --> 00:08:13,453 -அடுத்த வாரம் பைகள் செய்வதாகக் கேள்விப்பட்டேன். -நான் ஆர்டர்கள் எடுக்கிறேன். 144 00:08:13,453 --> 00:08:15,997 உங்களுக்குப் பிடித்தது இனிப்பா காரமா? 145 00:08:15,997 --> 00:08:17,666 -என்னை ஆச்சரியப்படுத்து! -சரி. 146 00:08:18,250 --> 00:08:19,709 ஆனால் எனக்கு இனிப்பு பிடிக்கும். 147 00:08:25,298 --> 00:08:27,175 அது வெளியே கிடைக்காததில் ஆச்சரியம் இல்லை. 148 00:08:27,759 --> 00:08:30,345 201 இல் இருக்கும் பெண் இதை விரும்பப் போவதில்லை. 149 00:08:37,894 --> 00:08:39,104 அதைப் பார்த்தாயா? 150 00:08:40,188 --> 00:08:42,606 அந்த ஆக்ஸ்பெக்கர் நம்மைப் பார்த்ததும் சத்தம் எழுப்பியது. 151 00:08:42,606 --> 00:08:44,192 அது காண்டாமிருகத்தை எச்சரித்ததா? 152 00:08:46,319 --> 00:08:48,947 ஒருவேளை அது எச்சரிக்கை செய்வதற்காக தன் மீது அமர அனுமதித்திருக்கலாம். 153 00:08:51,408 --> 00:08:53,159 அது வேலை செய்வது தெரிகிறது. 154 00:09:15,891 --> 00:09:17,434 வா. 155 00:09:19,769 --> 00:09:22,230 டேவிட்டின் பதிவு. கிட்டத்தட்ட மதிய உணவுக்கான நேரம் வந்துவிட்டது. 156 00:09:22,230 --> 00:09:23,732 நான் தோட்டத்தின் ஷெட்டுக்கு வந்துவிட்டேன். 157 00:09:23,732 --> 00:09:25,942 நான் சதைப் பற்றுள்ள செடிகளையோ இலைக் காய்கறிகளையோ பறித்தபிறகு, 158 00:09:25,942 --> 00:09:27,527 அதன் மூலம் காண்டாமிருகத்தை ஈர்ப்பேன், அப்போதுதான் 159 00:09:27,527 --> 00:09:29,613 அதன் முதுகில் அந்தப் பறவை என்ன செய்கிறது எனப் பார்க்க முடியும். 160 00:09:31,072 --> 00:09:32,449 ஜேனுக்கு முன்னால் அதைக் கண்டறிவேன். 161 00:09:38,163 --> 00:09:39,164 அருமை. 162 00:09:39,164 --> 00:09:40,248 கிடைத்தது. 163 00:09:50,425 --> 00:09:51,593 மயிரிழையில் பிழைத்துள்ளோம். 164 00:09:53,637 --> 00:09:54,930 டேவிட் எங்கே? 165 00:09:54,930 --> 00:09:57,140 அவன் அறையில் மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். 166 00:09:57,140 --> 00:09:59,309 சரி. என்ன நடந்தது? 167 00:10:14,115 --> 00:10:15,492 நான் கருப்பு காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். 168 00:10:15,492 --> 00:10:17,285 அல்லது அது என்னைக் கண்டுபிடித்துவிட்டது. 169 00:10:17,285 --> 00:10:20,622 அதற்கு அரிப்பது போலத் தெரிகிறதா? ஏன்? 170 00:10:20,622 --> 00:10:22,332 நான் அதன் நெருக்கத்தில் செல்ல வேண்டும். 171 00:10:22,332 --> 00:10:24,000 என் உணவை வைத்து ஈர்க்க வேண்டிய நேரம். 172 00:10:36,012 --> 00:10:38,014 ஆக்ஸ்பெக்கர் மட்டும் காண்டாமிருகத்துடன் இருக்கவில்லை, 173 00:10:38,014 --> 00:10:40,725 அதைச் சுற்றி பூச்சிகளாக உள்ளன! அவற்றால் இப்போது எனக்கும் அரிக்கிறது. 174 00:10:43,270 --> 00:10:45,230 கருமம், அதைத்தான் அந்த ஆக்ஸ்பெக்கர் முன்பு சாப்பிட்டதா? 175 00:10:45,230 --> 00:10:46,856 அது காண்டாமிருகத்தின் முதுகிலிருந்து பூச்சியைச் சாப்பிட்டது! 176 00:10:46,856 --> 00:10:50,318 அந்தப் பூச்சிகள் சுலபமாகக் கிடைப்பதால் அது அங்கே உட்கார விரும்புகிறதா என யோசிக்கிறேன். 177 00:10:50,318 --> 00:10:53,238 ஆனால் காண்டாமிருகம் தன் முதுகில் ஏன் அதை அமர விட்டது என்பது விளங்கவில்லையே. 178 00:10:53,780 --> 00:10:57,617 ஒருவேளை அந்தப் பூச்சிகளால்தான் அதற்கு அரிக்கலாம்! 179 00:11:07,794 --> 00:11:09,254 அது மீண்டும் ஓடத் தொடங்குகிறது. 180 00:11:11,965 --> 00:11:14,175 அதை ஈர்க்க இன்னும் கொஞ்சம் உணவு தேவை. 181 00:11:16,845 --> 00:11:18,430 எனக்கு ஒரு ஆக்ஸ்பெக்கர் தோழன் இருந்திருக்கலாம். 182 00:11:19,681 --> 00:11:21,892 அல்லது ஏதாவது ஒரு தோழர். 183 00:11:22,517 --> 00:11:26,187 அந்த ஆக்ஸ்பெக்கர் என்று கத்தியவுடன் காண்டாமிருகம் திரும்பியது. 184 00:11:26,187 --> 00:11:29,608 கிரேபியர்ட் என்னை எச்சரிப்பது போல, அது எச்சரிக்கிறது என நினைக்கிறேன்! 185 00:11:29,608 --> 00:11:32,569 சுவாரஸ்யமாக உள்ளது. ஆனால் நான் டேவிட் பற்றிக் கேட்டேன். 186 00:11:35,155 --> 00:11:36,615 கமான். சொல். 187 00:11:38,074 --> 00:11:39,242 நாங்கள் சண்டை போட்டோம். 188 00:11:39,242 --> 00:11:40,535 நீ என்ன செய்தாய்? 189 00:11:40,535 --> 00:11:42,579 நான் அவன் செய்ய வேண்டும் என்று எப்போதும் சொல்வதாகக் கூறினான். 190 00:11:42,579 --> 00:11:44,456 நீ என்ன செய்தாய்? 191 00:11:46,333 --> 00:11:47,709 அவன் எப்போதும் பயப்படுகிறான் என்றேன். 192 00:11:48,585 --> 00:11:49,586 நீ... 193 00:11:51,296 --> 00:11:53,215 அவன் எப்போதும் பயப்படுகிறான் என்றேன். 194 00:11:53,798 --> 00:11:56,801 சரி. நீங்கள் இருவருமே வருத்தப்படும் விஷயத்தைக் கூறியுள்ளீர்கள். 195 00:11:56,801 --> 00:11:59,054 அது முக்கியமில்லை, ஏனெனில் எனக்கு அவன் தேவையில்லை. 196 00:11:59,054 --> 00:12:01,973 நான் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஆக்ஸ்பெக்கர் அதை எச்சரிப்பதைப் பார்த்தேன். 197 00:12:01,973 --> 00:12:03,642 அதை நானே செய்தேன். 198 00:12:03,642 --> 00:12:05,268 நீ கிட்டத்தட்ட அதனிடம் மாட்டியிருப்பாய். 199 00:12:05,769 --> 00:12:08,521 இயற்கை ஆபத்தானதாக இருக்கலாம். அதுதான் எனக்குப் பிடித்த விஷயமே. 200 00:12:08,521 --> 00:12:10,273 நீ தைரியமானவள் என்று எப்போதும் எனக்குத் தெரியும். 201 00:12:10,273 --> 00:12:11,942 குழந்தையாக இருக்கும்போதும். 202 00:12:11,942 --> 00:12:14,319 ஆனால் நீ வருத்தப்படுவதை ஒப்புக்கொள்ளும் அளவுக்கு தைரியமானவளா? 203 00:12:17,280 --> 00:12:19,908 எனில் டேவிட் அனுப்பிய மெசேஜை நீ பார்க்க விரும்பமாட்டாய், அந்த... 204 00:12:20,533 --> 00:12:22,160 பிஎம்எஸ்ஸிலா? 205 00:12:22,160 --> 00:12:23,912 பால்கனி மெசேஜ் சிஸ்டம். 206 00:12:24,621 --> 00:12:26,581 -முன்பு அதில் சத்தம் கேட்டது. -அப்படியா? 207 00:12:37,801 --> 00:12:39,052 டேவிட்டின் வாக்கியா? 208 00:12:45,016 --> 00:12:47,435 அவன் இனி என்னுடன் உண்மையாகவே நண்பனாக இருக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். 209 00:12:52,357 --> 00:12:55,151 ஹேய், அவசரமாக எங்கே செல்கிறாய்? 210 00:12:55,151 --> 00:12:57,612 காண்டாமிருகத்திற்கான உணவுக்காக, முற்றத்தில் தேடப் போகிறேன். 211 00:12:57,612 --> 00:13:02,158 சரி, நீ முற்றத்தில் தேடலாம், ஆனால் வேறெங்கு நீ தேடலாம் தெரியுமா? 212 00:13:02,158 --> 00:13:03,410 ஜேனின் அபார்ட்மெண்ட். 213 00:13:03,410 --> 00:13:06,538 அன்றொரு நாள் அவளது அம்மா சில சதைப் பற்றுள்ள செடிகளை வாங்கி வந்தார். 214 00:13:07,038 --> 00:13:08,873 அவர் உனக்கு கண்டிப்பாக அவற்றைத் தருவார். 215 00:13:09,457 --> 00:13:11,001 நான் அவற்றை வேறு இடத்தில் தேடிக்கொள்வேன். 216 00:13:11,001 --> 00:13:16,715 ஒருவர் மீது கோபமாக இருந்துகொண்டு, அவரை மிஸ் செய்வதில் தவறில்லை. 217 00:13:17,382 --> 00:13:20,677 -அப்படியா? -நிச்சயமாக. அது எப்போதும் நடக்கும். 218 00:13:21,177 --> 00:13:23,930 என் சகோதரியுடன், என் முன்னாள் காதலனுடன், என் குழந்தைகளுடன். 219 00:13:25,515 --> 00:13:28,018 பல முறை, நாம் அதிகமாக அக்கறைகொள்ளும் நபரால்தான் 220 00:13:28,018 --> 00:13:30,103 நாம் அதிகமாகக் கோபப்படுவோம். 221 00:13:30,103 --> 00:13:31,980 கண்டிப்பாக உனக்கும் ஜேனுக்கும் அப்படித்தான் இருக்கும். 222 00:13:35,066 --> 00:13:38,111 நன்றி. பிறகு பார்க்கலாம், திருமதி ஜே. 223 00:13:39,404 --> 00:13:40,405 கண்டிப்பாக. 224 00:13:43,325 --> 00:13:44,326 திருமதி ஜே! 225 00:13:45,243 --> 00:13:47,954 நான் காண்டாமிருகத்தால் நசுக்கப்படுவதற்கு எவ்வளவு நெருக்கத்தில் இருந்தேன் என்பதை நம்ப மாட்டீர்கள். 226 00:13:48,580 --> 00:13:50,498 மிகவும் உற்சாகமாக உள்ளது. 227 00:13:50,498 --> 00:13:53,835 நான் டேவிட்டை இப்போதுதான் பார்த்தேன், அவன் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. 228 00:13:55,462 --> 00:13:58,882 ஏனெனில் டேவிட்டும் நானும் இனி ஒன்றாக மிஷன் செல்வதில்லை. 229 00:14:00,258 --> 00:14:03,303 அப்படியா? ஏன்? 230 00:14:05,013 --> 00:14:06,014 நாங்கள் சண்டை போட்டோம். 231 00:14:07,724 --> 00:14:09,684 கோபப்படுவது பரவாயில்லை... 232 00:14:09,684 --> 00:14:12,729 தெரியும். குறிப்பாக நம் கோபத்தை, நல்லது செய்யப் பயன்படுத்தும்போது. 233 00:14:13,230 --> 00:14:16,441 கொம்புகளுக்காக காண்டாமிருகங்களை வேட்டையாடுவதால் நான் கோபப்படுகிறேன், 234 00:14:16,441 --> 00:14:17,859 அதனால் நான் அவற்றைக் காப்பாற்றப் போகிறேன். 235 00:14:17,859 --> 00:14:18,944 அற்புதம்! 236 00:14:18,944 --> 00:14:22,906 திருமதி ஜே, டேவிட்டின் வாக்கியை வைத்துகொண்டு, காண்டாமிருகத்தைப் பார்த்தால் சொல்ல முடியுமா? 237 00:14:24,282 --> 00:14:27,744 ”நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கைக்குப் பொறுப்பெற்க வேண்டும் 238 00:14:27,744 --> 00:14:32,082 அனைத்திற்கும் மேலாக நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களுக்கு மதிப்பையும் அன்பையும் கொடுங்கள், 239 00:14:32,082 --> 00:14:33,500 குறிப்பாக ஒருவருக்கொருவர்.” 240 00:14:34,584 --> 00:14:37,295 நான் அவனுக்காக அந்த பொன்மொழி ஸ்டிக்கரைச் செய்தேன். அது ஜேன் குட்டால் கூறியது. 241 00:14:38,004 --> 00:14:40,131 அவர் புத்திசாலியாகத் தெரிகிறார். 242 00:14:42,384 --> 00:14:47,305 ஒருவேளை நீயும் டேவிட்டும் உங்கள் சண்டைக்குப் பொறுப்பேற்க வேண்டுமா? 243 00:14:50,225 --> 00:14:52,102 அவன் இனி நண்பர்களாக இருக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். 244 00:14:52,936 --> 00:14:53,979 அதை நான் சந்தேகிக்கிறேன். 245 00:14:54,604 --> 00:14:56,523 காண்டாமிருகத்தைப் பற்றிப் பேசும்போது, 246 00:14:56,523 --> 00:15:00,026 நான் மூன்றாவது தளத்தின் ஹால்வேயில் உறுமல் சத்தங்களைக் கேட்டேன். 247 00:15:01,194 --> 00:15:02,529 நான் போய் அதைப் பார்க்க வேண்டும். 248 00:15:03,530 --> 00:15:04,531 இரு, ஜேன். 249 00:15:05,073 --> 00:15:07,325 இன்னும் இது உனக்குத் தேவைப்படும் எனத் தோன்றுகிறது. 250 00:15:08,535 --> 00:15:10,829 சீக்கிரம், அந்த காண்டாமிருகம் தப்பித்துவிடப் போகிறது. 251 00:15:34,060 --> 00:15:35,020 டேவிட்? 252 00:15:36,354 --> 00:15:37,522 சொல்லுங்கள், ஜேன் அம்மா? 253 00:15:37,522 --> 00:15:39,274 வெளியே எல்லாம் சரியாக உள்ளனவா? 254 00:15:40,692 --> 00:15:43,028 ஆம். கிட்டத்தட்ட. 255 00:15:46,823 --> 00:15:47,824 ஜேன் இங்கே இல்லை. 256 00:15:48,533 --> 00:15:50,493 பரவாயில்லை. நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். 257 00:15:50,994 --> 00:15:53,079 உங்களிடம் சதைப் பற்றுள்ள செடிகளோ இலைக் காய்கறிகளோ கடனாகக் கிடைக்கும்? 258 00:15:53,079 --> 00:15:55,540 கடன் என்றால் வைத்துக்கொள்ள வேண்டும். 259 00:15:56,041 --> 00:15:58,793 அவற்றை காண்டாமிருகம் சாப்பிட்டபிறகு நீங்கள் விரும்ப மாட்டீர்கள். 260 00:16:05,008 --> 00:16:06,509 அது அந்த மூலையிலிருந்து வந்தது. 261 00:16:06,509 --> 00:16:09,512 அந்த ஆக்ஸ்பெக்கர் நம்மைப் பார்த்துக் கத்தினால், நாம் கூறியது சரி எனத் தெரியும். 262 00:16:15,060 --> 00:16:16,478 -டேவிட்? -ஜேன்? 263 00:16:16,478 --> 00:16:18,813 -நீதான் காண்டாமிருகம் என நினைத்தேன்! -நீதான் அது என நினைத்தேன்! 264 00:16:18,813 --> 00:16:21,942 -நீ என்னை பயமுறுத்திவிட்டாய். -நான் பயப்படவில்லை. 265 00:16:23,443 --> 00:16:25,528 நாம் காண்டாமிருகத்திடம் செல்லும்போது, ஆக்ஸ்பெக்கர் கத்துகிறதா 266 00:16:25,528 --> 00:16:26,988 என்பதைச் சோதித்துக்கொண்டிருந்தோம். 267 00:16:26,988 --> 00:16:28,406 முன்பு ஹால்வேயில் அதுதான் நடந்தது. 268 00:16:28,406 --> 00:16:31,243 ஆக்ஸ்பெக்கர் காண்டாமிருகத்திற்கு எச்சரிக்கைப் பறவையாக உள்ளதா? 269 00:16:31,243 --> 00:16:33,203 அப்படித்தான் நானும் கிரேபியர்டும் நினைக்கிறோம். 270 00:16:33,787 --> 00:16:35,789 அந்த காண்டாமிருகம் தன் தலையைச் சொறிவதையும் 271 00:16:35,789 --> 00:16:37,916 ஆக்ஸ்பெக்கர் அதன் மீதிருந்து பூச்சிகளைச் சாப்பிட்டதையும் பார்த்தேன். 272 00:16:37,916 --> 00:16:40,460 அந்தப் பூச்சிகளைச் சாப்பிடத்தான் காண்டாமிருகம் அதை அமரவிடுகிறதா? 273 00:16:40,460 --> 00:16:42,712 அதைத்தான் நான் கண்டுபிடிக்கப் போகிறேன். 274 00:16:44,798 --> 00:16:46,299 குட் லக். 275 00:16:47,384 --> 00:16:49,302 -ஆம், உனக்கும்தான். -சரி. 276 00:16:51,096 --> 00:16:52,097 பை. 277 00:16:52,889 --> 00:16:53,890 சரி. 278 00:16:55,976 --> 00:16:57,894 சரி, குட்பை. 279 00:17:05,068 --> 00:17:08,196 -நீ எப்போதும் பயப்படுவாய் என நினைக்கவில்லை. -அப்படியா? 280 00:17:08,196 --> 00:17:09,906 நாம் ஆபத்தான மிஷன்களுக்குச் செல்கிறோம். 281 00:17:09,906 --> 00:17:11,491 கொஞ்சம் பயப்படுவது சகஜம்தான். 282 00:17:12,617 --> 00:17:15,536 நடக்க வாய்ப்புள்ள பயங்கரமான அல்லது மோசமான விஷயத்தைப் பற்றி நினைப்பது 283 00:17:16,036 --> 00:17:18,081 நீ சிறப்பான திட்டங்கள் வகுக்க உனக்கு உதவலாம். 284 00:17:18,998 --> 00:17:22,585 -அதனால் என்னை மன்னித்துவிடு. -நன்றி. 285 00:17:23,085 --> 00:17:25,546 நீ என்னிடம் எதுவும் சொல்ல விரும்புகிறாயா? 286 00:17:28,967 --> 00:17:31,428 என்ன? நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்கிறாய். 287 00:17:32,596 --> 00:17:34,431 ஆனால் ஏன் என்று எனக்குப் புரிகிறது. 288 00:17:35,098 --> 00:17:37,601 நீதான் நம் முக்கியமான மிஷன்களின் தலைவர். 289 00:17:37,601 --> 00:17:39,769 அதனால் என்னை மன்னித்துவிடு. 290 00:17:42,814 --> 00:17:44,065 உன் அளவுக்கு இல்லை. 291 00:17:47,152 --> 00:17:49,529 சரி, சமமான அளவு. 292 00:17:50,572 --> 00:17:52,407 ஒரு தலைவராக, அதை ஏற்கிறேன். 293 00:17:52,991 --> 00:17:53,992 இன்னொரு விஷயம். 294 00:17:57,412 --> 00:17:58,246 இந்தா. 295 00:17:59,873 --> 00:18:00,874 நன்றி. 296 00:18:03,293 --> 00:18:05,962 நம் இருவரது யோசனைகளையும் சோதிக்க புதிய திட்டம் போடலாமா? 297 00:18:05,962 --> 00:18:07,255 அதை நாம் ஒன்றாகச் செய்தால் மட்டும்தான். 298 00:18:20,518 --> 00:18:21,770 டேவிட்டின் பதிவு. 299 00:18:21,770 --> 00:18:25,065 நான் காண்டாமிருகத்தின் உணவைச் சாப்பிட்டுப் பார்த்தேன், நன்றாக இல்லை. 300 00:18:25,941 --> 00:18:30,403 அதாவது, நான் காண்டாமிருகத்தைப் பார்த்துவிட்டேன். நம் திட்டத்தைச் செயல்படுத்தத் தயாரா? ஓவர். 301 00:18:30,403 --> 00:18:31,696 நீ தயார் எனில் நான் தயார். 302 00:18:33,406 --> 00:18:34,908 ஹேய், ஆக்ஸ்பெக்கர்! 303 00:18:36,618 --> 00:18:38,411 இங்கே! 304 00:18:44,125 --> 00:18:47,212 நீ கூறியது சரிதான், ஆக்ஸ்பெக்கர் என்னைப் பற்றி காண்டாமிருகத்திடம் எச்சரித்தது. உனது முறை! 305 00:18:52,133 --> 00:18:54,636 நான் பெஞ்சில் இருக்கிறேன்! நான் பெஞ்சிற்கு அடியில் இருக்கிறேன். 306 00:18:54,636 --> 00:18:56,471 நான் சதைப் பற்றுள்ள செடி இல்லை! 307 00:18:57,514 --> 00:18:59,558 கமான், பெரியண்ணா. யாருக்குப் பசிக்கிறது? 308 00:19:15,865 --> 00:19:16,825 ஹாய். 309 00:19:18,410 --> 00:19:21,121 டேவிட். நீ ஜேனிடம் சமாதானமாகிவிட்டாயா? 310 00:19:21,121 --> 00:19:23,582 ஆம். நாங்கள் ஒன்றாக ஒரு திட்டம் போட்டுள்ளோம். 311 00:19:23,582 --> 00:19:25,709 அது அற்புதமான விஷயம். 312 00:19:26,459 --> 00:19:30,046 நான் உங்கள் இருவரையும் கொண்டாட ஸ்நாக்ஸ் எடுத்து வருகிறேன். 313 00:19:30,046 --> 00:19:32,507 இதற்காக, என் பேக் செய்த ஸ்நாக்ஸை நான் பகிர்ந்துகொள்கிறேன். 314 00:19:40,223 --> 00:19:41,600 சீக்கிரம்! அது நெருங்குகிறது! 315 00:19:51,693 --> 00:19:54,070 அது அற்புதமாக இருந்தது. 316 00:19:55,030 --> 00:19:56,281 நம் திட்டம் வேலை செய்கிறது. 317 00:19:56,281 --> 00:19:57,824 நம்மால் சிறப்பாகப் பார்க்க முடிகிறது. 318 00:19:58,325 --> 00:20:03,413 ஆக்ஸ்பெக்கர் பூச்சிகளைச் சாப்பிடுகிறது, ஆனால் அதன் முதுகில் மட்டுமல்ல. 319 00:20:03,413 --> 00:20:05,081 அதன் காதுகளில் இருந்து சாப்பிடுகிறதா? 320 00:20:05,081 --> 00:20:07,500 அதன் மூக்கிலுமா? கருமம். 321 00:20:10,420 --> 00:20:13,590 அதை நாம் சிவப்பு அலகுடைய மூக்கு நோண்டி என்றழைக்க வேண்டும். 322 00:20:15,467 --> 00:20:18,345 ஆனால் அரிப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை மட்டும் ஆக்ஸ்பெக்கர் சாப்பிடவில்லை, 323 00:20:18,345 --> 00:20:19,971 அது காண்டாமிருகம் சுத்தமாக இருக்கவும் உதவுகிறது. 324 00:20:19,971 --> 00:20:22,682 மிகவும் அருவருப்பான முறையில். 325 00:20:23,934 --> 00:20:26,436 அது காண்டாமிருகத்தை எச்சரிக்கிறது என்று நீ கூறியதும் சரிதான். 326 00:20:27,771 --> 00:20:31,733 அந்த ஆக்ஸ்பெக்கர் வேட்டைக்காரர்களிடமிருந்து காண்டாமிருகத்தைக் காப்பாற்றும் கண்களாக இருக்கிறது. 327 00:20:32,317 --> 00:20:33,735 அவை நல்ல அணியாக உள்ளன. 328 00:20:38,823 --> 00:20:40,867 சரிதான், கிரேபியர்ட். நாமும்தான். 329 00:20:42,327 --> 00:20:43,578 ஹேய், பசங்களா. 330 00:20:43,578 --> 00:20:44,788 ஹாய், திருமதி ஜே. 331 00:20:48,041 --> 00:20:51,670 -உங்கள் மிஷன் முடிந்ததா? -முடிந்தது. 332 00:20:52,837 --> 00:20:55,090 இப்போது நாங்கள் காண்டாமிருகத்தைப் புரிந்துகொண்டதால் அவற்றுக்கு உதவ முடியும். 333 00:20:55,090 --> 00:20:56,007 எப்படி? 334 00:20:56,007 --> 00:20:58,927 ஆக்ஸ்பெக்கர் போல, நாங்கள் காண்டாமிருகத்தைப் பாதுகாக்கப் போகிறோம். 335 00:20:58,927 --> 00:21:02,264 அது நாம் அனைவரும் செய்ய வேண்டியதுதானே? ஒருவரையொருவர் பாதுகாப்பது? 336 00:21:02,847 --> 00:21:06,309 நம்மையும் விலங்குகளையும்தான். 337 00:21:07,978 --> 00:21:08,853 லெமனேட்? 338 00:21:10,605 --> 00:21:12,190 -இந்தாருங்கள். -நன்றி. 339 00:21:12,190 --> 00:21:15,193 யாருக்கு சாக்லேட் சிப் மஃபின் பிடிக்கும்? 340 00:21:16,319 --> 00:21:17,320 நன்றி. 341 00:21:23,827 --> 00:21:25,579 இந்தக் கேமரா என்ன செய்யும்? 342 00:21:25,579 --> 00:21:27,497 இது காண்டாமிருகத்தின் பகுதியில் வேட்டைக்காரர்கள் யாரும் இல்லை 343 00:21:27,497 --> 00:21:29,291 என்பதை உறுதிசெய்ய, அந்தப் பகுதியைக் கண்காணிக்கும். 344 00:21:29,291 --> 00:21:31,167 நல்ல திட்டம். இந்த கேமராவின் வீடியோவை ஆன்லைனில் இடுகையிடுவோம், 345 00:21:31,167 --> 00:21:33,169 அப்போதுதான் அனைவரும் நம்முடன் சேர்ந்து காண்டாமிருகத்தைக் கண்காணிப்பார்கள். 346 00:21:33,169 --> 00:21:34,754 இன்னும் நல்ல திட்டம். 347 00:21:36,089 --> 00:21:38,717 காண்டாமிருகமும் ஆக்ஸ்பெக்கரும் நல்ல நண்பர்கள் போலத் தெரிகிறது. 348 00:21:39,342 --> 00:21:40,760 அவை ஒன்றாக இருக்கும்போது கண்டிப்பாக வலிமையானவை. 349 00:21:42,429 --> 00:21:44,306 சரி, கிரேபியர்ட். நாமும்தான். 350 00:21:55,108 --> 00:21:56,610 காண்டாமிருகங்களைக் காப்பாற்ற உதவுங்கள். 351 00:21:59,779 --> 00:22:01,698 டேவிட், உன் வீடியோ ஏன் ஆஃப் செய்யப்பட்டுள்ளது? 352 00:22:01,698 --> 00:22:05,118 காண்டாமிருக நிபுணரான டாக்டர் மேத்யூ மடிண்டாவுடன் நம் கால் தொடங்கப் போகிறது. 353 00:22:05,118 --> 00:22:10,832 நான் இருக்கிறேன், ஆனால் மில்லி என் டேப்லெட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள், பார். 354 00:22:11,499 --> 00:22:12,918 நீ அதை அப்படியே விட்டுவிடலாம். 355 00:22:12,918 --> 00:22:15,754 வாய்ப்பே இல்லை. அவர் வருவதற்கு முன்... 356 00:22:16,463 --> 00:22:17,464 இதை அகற்ற வேண்டும். 357 00:22:17,464 --> 00:22:19,049 நேரமில்லை. 358 00:22:19,049 --> 00:22:21,259 -ஹாய், மேத்யூ! -ஹாய், ஜேன். 359 00:22:22,177 --> 00:22:24,179 ஹாய், யூனிகார்ன்? 360 00:22:24,179 --> 00:22:26,723 அது டேவிட். அவனுக்கு ஃபில்டரை எப்படி ஆஃப் செய்வது எனத் தெரியவில்லை. 361 00:22:26,723 --> 00:22:29,684 நீ உன் வீடியோ அமைப்புகளில் செய்யலாம். 362 00:22:31,603 --> 00:22:33,396 நன்றி, இது நன்றாக உள்ளது. 363 00:22:33,396 --> 00:22:34,731 இன்று கடினமான நாளாக இருந்தது. 364 00:22:34,731 --> 00:22:38,318 முதலில் எங்களை கருப்பு காண்டாமிருகம் துரத்தியது, பிறகு நான் யூனிகார்னாக மாறினேன். 365 00:22:38,318 --> 00:22:40,487 கருப்பு காண்டாமிருகங்கள் துரத்தியதா? 366 00:22:40,487 --> 00:22:43,782 காண்டாமிருகங்கள் ஏன் ஆக்ஸ்பெக்கர்களை முதுகில் அமர விடுகிறது எனக் கண்டுபிடிக்க முயன்றோம். 367 00:22:43,782 --> 00:22:45,033 என்ன கண்டுபிடித்தீர்கள்? 368 00:22:45,033 --> 00:22:46,243 அவை நண்பர்கள் என்று. 369 00:22:46,243 --> 00:22:48,036 அப்படி இல்லை. 370 00:22:48,536 --> 00:22:51,498 கருப்பு காண்டாமிருகங்களும் சிவப்பு அலகுடைய ஆக்ஸ்பெக்கர்களும் 371 00:22:51,498 --> 00:22:53,750 சகவாழ்வு உறவில் உள்ளன. 372 00:22:53,750 --> 00:22:55,085 சகவாழ்வு என்றால் என்ன? 373 00:22:55,085 --> 00:22:56,878 இதோ, உங்களுக்குக் காட்டுகிறேன். 374 00:22:56,878 --> 00:23:01,383 சகவாழ்வு உறவு என்பது இரண்டு உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்துகொள்வது. 375 00:23:01,383 --> 00:23:06,012 சிவப்பு அலகுடைய ஆக்ஸ்பெக்கர் காண்டாமிருகத்தின் முதுகில் உணவைப் பெற்றுப் பலனடைகிறது, 376 00:23:06,012 --> 00:23:09,432 ஆக்ஸ்பெக்கர் அதைச் சுத்தம் செய்வதன் மூலமும் எச்சரிக்கை செய்வதன் மூலமும் 377 00:23:09,432 --> 00:23:11,768 காண்டாமிருகம் பலனடைகிறது. 378 00:23:11,768 --> 00:23:14,771 அதை நாங்கள் பார்த்தோம். நீங்கள் எத்தனை கருப்பு காண்டாமிருகங்களைப் பார்த்துக்கொண்டுள்ளீர்கள்? 379 00:23:14,771 --> 00:23:17,148 நிறைய. நான் உங்களுக்கு கிடுயின் கதையைக் கூறுகிறேன், 380 00:23:17,148 --> 00:23:19,526 பிறந்து ஒரு வாரத்தில் தாயால் கைவிடப்பட்டு, 381 00:23:19,526 --> 00:23:23,530 நாங்கள் காப்பாற்றிய கருப்பு காண்டாமிருகக் குட்டி. 382 00:23:23,530 --> 00:23:26,658 அவை வளரும்போது அவை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாறுகின்றன. 383 00:23:26,658 --> 00:23:30,120 அதன் நான்கு வயதில், அதை குறைவான மனிதத் தொடர்பு இருக்கும் இடத்திற்கு 384 00:23:30,120 --> 00:23:33,039 அதைக் கூட்டிச் செல்ல வேண்டும், 385 00:23:33,039 --> 00:23:37,878 அங்கே அது உண்மையான காட்டில் இருக்கும் கருப்பு காண்டாமிருகமாக மாறும். 386 00:23:37,878 --> 00:23:39,337 இப்போது கிடுய் எப்படி உள்ளது? 387 00:23:39,337 --> 00:23:41,339 அது பெரிதாக வளர்ந்துகொண்டே உள்ளது. 388 00:23:41,339 --> 00:23:43,592 அதற்கான இடத்திற்கு அதை மாற்றிவிட்டோம். 389 00:23:43,592 --> 00:23:49,848 அங்கே அது சாப்பிடலாம், வளரலாம், தன் குடும்பத்தை நிறுவி, குட்டிகளையும் பெறலாம். 390 00:23:49,848 --> 00:23:51,600 கருப்பு காண்டாமிருகங்களை எது பாதிக்கிறது? 391 00:23:51,600 --> 00:23:54,311 கருப்பு காண்டாமிருகங்களுக்கு மூன்று பெரிய அச்சுறுத்தல்கள் உள்ளன. 392 00:23:54,311 --> 00:23:57,647 அவற்றின் கொம்புகளுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடுதல். 393 00:23:57,647 --> 00:24:02,402 இரண்டாவது, அதன் வசிப்பிடத்தை அழித்து மக்கள் பண்ணைகள் உருவாக்குவது. 394 00:24:02,402 --> 00:24:03,945 கடைசியாக, பருவநிலை மாற்றம், 395 00:24:04,529 --> 00:24:08,909 குறைவான மழைப் பொழிவால் கருப்பு காண்டாமிருகத்திற்கான உணவுப் பற்றாக்குறை ஏற்படும். 396 00:24:08,909 --> 00:24:10,827 நீங்கள் விலங்குகளுக்கு உதவ விரும்பியது எப்போது உங்களுக்குத் தெரியும்? 397 00:24:10,827 --> 00:24:14,664 இளம் வயதிலிருந்தே. நான் கால்நடைக் கல்லூரியில் பட்டம் பெற்றபிறகு, 398 00:24:14,664 --> 00:24:18,043 நான் இங்கே லெவா வனவிலங்கு பாதுகாப்பகத்தில் வேலை செய்யத் தொடங்கினேன், 399 00:24:18,043 --> 00:24:21,796 அங்கே பல்வேறு விலங்குகள் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழ்கின்றன. 400 00:24:21,796 --> 00:24:25,008 -இங்கிருந்து நாங்கள் என்ன செய்யலாம்? -நீங்கள் பாதுகாப்பு கிளப்பில் சேரலாம் 401 00:24:25,008 --> 00:24:27,427 அல்லது உங்கள் பள்ளியில் ஒரு கிளப்பைத் தொடங்கலாம். 402 00:24:27,427 --> 00:24:30,347 உலகளாவியச் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்குவது 403 00:24:30,347 --> 00:24:33,183 வனவிலங்குகளின் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்கும், 404 00:24:33,183 --> 00:24:36,645 அப்போதுதான் நாம் ரசித்து மகிழ்ந்த விஷயங்களை அவர்களும் ரசிக்க முடியும். 405 00:24:36,645 --> 00:24:38,813 -நல்ல யோசனைகள். -பிற சிறுவர்களையும் சேர வைக்க முடியும். 406 00:24:38,813 --> 00:24:41,149 நன்றி, மேத்யூ. நாளை பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். 407 00:24:41,149 --> 00:24:42,317 அற்புதம். 408 00:24:42,317 --> 00:24:47,614 உலகைக் காப்பாற்றப் போகும் எதிர்காலப் பாதுகாப்பாளர் சந்ததியினருடன் 409 00:24:47,614 --> 00:24:49,074 பகிர்ந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. 410 00:24:49,074 --> 00:24:51,826 பை, மற்றும் உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி. 411 00:24:51,826 --> 00:24:52,994 பை, மேத்யூ. 412 00:24:53,620 --> 00:24:56,873 -நம் கிளப்புக்கு என்ன பெயர் வைக்கலாம்? -கிடுய் கிளப் எப்படி உள்ளது? 413 00:24:56,873 --> 00:25:00,001 அற்புதம். ஜேன், இந்த காண்டாமிருக ஃபில்டர் எப்படி உள்ளதெனப் பார். 414 00:25:02,128 --> 00:25:04,631 -அருமை, ஆக்ஸ்பெக்கர் உள்ளதா? -பார்க்கிறேன். 415 00:25:18,562 --> 00:25:20,146 ஹேய், ஜேன். இதைப் பார். 416 00:25:20,730 --> 00:25:21,815 கண்டுபிடித்துவிட்டாய்! 417 00:26:02,731 --> 00:26:04,733 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்