1 00:00:41,459 --> 00:00:43,503 ”துருவ மான் (ரங்கிஃபர் டரண்டஸ்).” 2 00:00:50,010 --> 00:00:52,804 ஜேன், நாம் எவ்வளவு நேரம் இப்படி மறைந்திருக்க வேண்டும்? 3 00:00:52,804 --> 00:00:54,014 மிகவும் குளிராக உள்ளது. 4 00:00:54,014 --> 00:00:56,141 நம் மிஷனை முடிக்கும் வரை. 5 00:00:56,141 --> 00:00:58,059 நம் மிஷனை கொஞ்சம் வெதுவெதுப்பான இடத்தில் செய்ய முடியாதா? 6 00:00:58,059 --> 00:00:59,936 துருவ மான் வடக்குப் பகுதிகளில் தான் வசிக்கும். 7 00:01:00,437 --> 00:01:01,563 ஏதோ கேட்கிறது. 8 00:01:01,563 --> 00:01:03,231 நீ எங்கே ஒளிந்திருக்கிறாய்? 9 00:01:04,565 --> 00:01:05,567 ஹேய்! 10 00:01:06,484 --> 00:01:07,986 வேடிக்கையாக இல்லை, கிரேபியர்ட். 11 00:01:07,986 --> 00:01:09,738 நாம் மறைந்திருக்க வேண்டும். 12 00:01:12,657 --> 00:01:14,159 இருவரும் அமைதியாக இருங்கள். 13 00:01:14,159 --> 00:01:16,161 நீ மட்டும் ஏன் அருமையான மறைந்திருக்கும் உடையை அணிந்திருக்கிறாய்? 14 00:01:16,161 --> 00:01:17,329 ஏனெனில் இதை நான் செய்தேன். 15 00:01:17,329 --> 00:01:18,663 நீ அடுத்த முறை இதை அணியலாம். 16 00:01:18,663 --> 00:01:21,750 இப்போது நீ உன் இடத்தில் மறைந்துகொள், அப்போதுதான் துருவ மான் ஏன் ஒரே 17 00:01:21,750 --> 00:01:25,086 இடத்தில் நீண்ட நேரம் இல்லாமல் நகர்ந்துகொண்டே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். 18 00:01:25,712 --> 00:01:27,881 அவை வெப்பமாக இருப்பதற்காக நகர்ந்துகொண்டே இருக்கலாம். 19 00:01:27,881 --> 00:01:28,924 அது ஒரு கருத்து. 20 00:01:31,927 --> 00:01:33,428 சரி, கிரேபியர்ட். 21 00:01:33,428 --> 00:01:34,763 சவாலை ஏற்கிறேன். 22 00:01:39,976 --> 00:01:41,436 அது சிறிய கலைமானா? 23 00:01:41,436 --> 00:01:43,104 அது சிறிய துருவ மான். 24 00:01:43,104 --> 00:01:45,815 -கலைமானும் துருவ மானும் ஒரே உயிரினம்தான். -என்ன? 25 00:01:48,777 --> 00:01:50,779 -அதோ அதன் அப்பா. -அம்மா. 26 00:01:50,779 --> 00:01:53,865 -உனக்கு எப்படித் தெரியும்? -ஆண்கள் இலையுதிர்க்காலத்தில் கொம்புகளை உதிர்க்கும். 27 00:01:53,865 --> 00:01:55,659 பெண்களுக்குத்தான் குளிர்காலத்தில் கொம்புகள் இருக்கும். 28 00:01:57,953 --> 00:01:59,120 அவை அழகாக உள்ளன. 29 00:01:59,120 --> 00:02:02,332 ஒவ்வோர் ஆண்டும் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவது வருத்தமான விஷயம். 30 00:02:02,332 --> 00:02:03,583 நாம் அவற்றுக்கு உதவ வேண்டும். 31 00:02:03,583 --> 00:02:06,253 அதனால்தான் அவை ஏன் ஒரே இடத்தில் இருப்பதில்லை என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும், 32 00:02:06,253 --> 00:02:08,087 அப்போதுதான் துருவ மான்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். 33 00:02:08,712 --> 00:02:09,713 பார். 34 00:02:09,713 --> 00:02:12,217 அதன் அம்மா அதைப் போகச் சொல்லுகிறது. ஆனால் ஏன்? 35 00:02:15,637 --> 00:02:17,681 ஓ, இல்லை. நான் அதை பயமுறுத்திவிட்டேன். அது தொலைந்துபோகலாம். 36 00:02:17,681 --> 00:02:19,683 நாம் அதை அதன் அம்மாவுடன் சேர்க்க வேண்டும். 37 00:02:19,683 --> 00:02:21,142 இதிலிருந்து வெளியேற உதவு. 38 00:02:26,940 --> 00:02:28,525 வா, அது ஓடுகிறது. 39 00:02:28,525 --> 00:02:31,361 ஆம் ஓடுகிறது. அதற்கு நம்மைவிட கூடுதலாக இரண்டு கால்கள் உள்ளன. 40 00:02:31,361 --> 00:02:33,196 இரு, குட்டி! 41 00:02:38,034 --> 00:02:39,411 அது நம்மைவிட வேகமாக இருக்கிறது. 42 00:02:42,664 --> 00:02:46,126 ஆனால் அதன் அம்மா அளவுக்கு வேகமில்லை, அது உதவியுடன் வருகிறது. 43 00:02:46,126 --> 00:02:47,419 துருவ மான் கூட்டம். 44 00:02:49,337 --> 00:02:51,172 அவை ஒரே இடத்தில் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். 45 00:02:51,172 --> 00:02:53,758 -இப்போது என்ன செய்வது, ஜேன்? -அவற்றிடம் மிதிபடாமல் இருக்க வேண்டும். 46 00:03:04,561 --> 00:03:05,687 அற்புதம். 47 00:03:07,063 --> 00:03:08,690 துருவ மான்கள் உண்மையாகவே நகர்ந்துகொண்டே இருக்கின்றன. 48 00:03:08,690 --> 00:03:11,610 அதை ஏன் என்று கண்டுபிடிக்க, அவற்றை எப்படித் திரும்பி வர வைப்பது? 49 00:03:11,610 --> 00:03:13,236 மீண்டும் மறைந்திருப்பதன் மூலம்! 50 00:03:17,657 --> 00:03:19,826 நான் இனி விளையாடப் போவதில்லை. 51 00:03:22,662 --> 00:03:24,664 ஜேன், எங்கே இருக்கிறாய்? 52 00:03:27,667 --> 00:03:28,793 தாத்தா! 53 00:03:29,711 --> 00:03:30,921 ஜேம்ஸ் தாத்தா? 54 00:03:30,921 --> 00:03:32,923 தாத்தா, உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 55 00:03:33,757 --> 00:03:36,301 அடடா. ஹலோ, டேவிட். 56 00:03:36,927 --> 00:03:37,802 ஹலோ,ஜேன். 57 00:03:37,802 --> 00:03:39,888 இதிலிருந்து வெளிவர கொஞ்சம் நேரம் எடுக்கும். 58 00:03:43,350 --> 00:03:44,601 இன்று நீங்கள் வேலை செய்யவில்லையா? 59 00:03:44,601 --> 00:03:48,230 இல்லை, நான் பிறகு சமூக கிச்சனில் தன்னார்வலத் தொண்டு செய்கிறேன். 60 00:03:48,230 --> 00:03:49,314 ஆனால்... 61 00:03:50,106 --> 00:03:52,108 இது சுவையானதாகத் தெரிகிறது. 62 00:03:52,776 --> 00:03:55,528 -எனக்கா? -அனைவருக்கும் செய்துள்ளேன். 63 00:03:55,528 --> 00:03:57,948 உனக்கும்தான் ஜேன், உனக்குப் பிடித்தால். 64 00:03:58,573 --> 00:04:00,200 நன்றி, ஆனால் நாங்கள் ஓய்வெடுக்க முடியாது. 65 00:04:00,200 --> 00:04:02,244 நாங்கள் ரங்கிஃபர் டரண்டஸ்ஸை டிராக் செய்துகொண்டிருக்கிறோம். 66 00:04:02,994 --> 00:04:07,082 அதுதான் துருவ மானின் அறிவியல் பெயர், அது முக்கியமான மிஷன். 67 00:04:07,082 --> 00:04:10,710 -ஆனால் நான் சாப்பிடுவேன். -நீதான் எப்போதும் சாப்பிடுவாயே. 68 00:04:11,211 --> 00:04:15,131 இந்த, துருவ மான் மிஷன் பற்றி இன்னும் கேட்க விரும்புகிறேன். 69 00:04:17,591 --> 00:04:19,928 நாம் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என நினைக்கிறேன். 70 00:04:19,928 --> 00:04:21,263 உங்களால் முடியும் எனத் தெரியும். 71 00:04:23,473 --> 00:04:24,808 அது கிரேபியர்டா? 72 00:04:25,433 --> 00:04:28,019 ஆம், நாங்கள் அனைவரும் காட்டில் ஒளிந்திருந்தோம். 73 00:04:29,854 --> 00:04:31,898 சிலர் மறைந்திருந்தோம். 74 00:04:32,399 --> 00:04:34,901 சிலர் ஸ்னோபால்களை எறிந்தோம். 75 00:04:35,402 --> 00:04:37,279 வெட்கப்படுகிறேன், கிரேபியர்ட். 76 00:04:38,697 --> 00:04:39,698 வாருங்கள், உள்ளே போகலாம். 77 00:04:43,326 --> 00:04:45,579 பிறகு துருவ மான் கூட்டத்துடன் நாங்கள் ஓடினோம். 78 00:04:45,579 --> 00:04:47,956 துருவ மான் கூட்டத்திடமிருந்து ஓடினோம். 79 00:04:48,999 --> 00:04:51,126 அவற்றால் கார் வேகத்தில் ஓட முடியும் என்று தெரியுமா? 80 00:04:51,126 --> 00:04:54,254 தெரியும். ஆனால், கொஞ்ச நேரத்திற்குத்தான். 81 00:04:54,254 --> 00:04:56,464 இதை கற்பனை செய்யுங்கள்: துருவ மான் எங்களுக்குப் பின் வருகின்றன. 82 00:04:56,464 --> 00:04:58,133 எங்கள் முன்னால் உறைந்த ஓடை உள்ளது. 83 00:04:58,133 --> 00:05:00,093 நான் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்திருந்தது. 84 00:05:00,093 --> 00:05:02,012 என்ன செய்தாய்? 85 00:05:02,012 --> 00:05:04,014 ஒன்றுமில்லை. அந்தக் கூட்டம் எங்களை நோக்கி வந்தன. 86 00:05:04,014 --> 00:05:05,849 அவை பறந்தது போல இருந்தது. 87 00:05:05,849 --> 00:05:08,894 ஆனால் அவை ஏன் எப்போதும் நகர்ந்துகொண்டிருக்கின்றன என்பதை இன்னும் கண்டுபிடிக்க வேண்டும். 88 00:05:08,894 --> 00:05:11,688 ஆம், அவை நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் இருக்காது. 89 00:05:11,688 --> 00:05:13,315 அது ஒரு மர்மமாக உள்ளது. 90 00:05:14,608 --> 00:05:16,401 அவை உணவு தேடலாம். 91 00:05:16,985 --> 00:05:19,070 ஒருவேளை, அந்தக் குட்டியை அதன் அம்மா போகச் சொன்ன போது 92 00:05:19,070 --> 00:05:21,114 அதில் உணவு மீதம் இருந்தது. 93 00:05:22,198 --> 00:05:24,284 நம் மிஷனுக்குத் திரும்பலாம், டேவிட். 94 00:05:24,284 --> 00:05:28,705 அவை உணவு தேடினால், நம்மிடம் நிறைய மீதமுள்ளன. 95 00:05:29,289 --> 00:05:31,166 சரி. இதை சுத்தம் செய்வோம், குழந்தைகளே. 96 00:05:31,166 --> 00:05:34,044 -மதிய உணவுக்கு மீண்டும் நன்றி, அப்பா. -பரவாயில்லை. 97 00:05:35,754 --> 00:05:38,173 நாம் வெளியே சென்றதும், நாம் ஒரு திட்டம் போட வேண்டும். 98 00:05:40,592 --> 00:05:42,719 அவை அனைத்தையும் ஏன் குப்பையில் போடுகிறீர்கள்? 99 00:05:42,719 --> 00:05:44,012 அதையும்தான்? 100 00:05:44,012 --> 00:05:46,014 ஏனெனில் எனக்கு வயிறு நிரம்பிவிட்டது. 101 00:05:46,014 --> 00:05:48,475 நான் இனிப்பு சாப்பிடுவதற்காக வயிற்றில் இடம் வைத்திருக்கிறேன். 102 00:05:49,059 --> 00:05:51,853 இனிப்பு இருக்கிறதுதானே? 103 00:05:52,812 --> 00:05:55,899 அதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான டன் உணவு வீணாகிறது. 104 00:05:55,899 --> 00:05:57,108 என்ன சொல்கிறாய்? 105 00:05:57,859 --> 00:06:00,445 அதாவது மதிய உணவுக்கு நிறைய உணவு எடுத்துக்கொண்டிருந்தால், 106 00:06:00,445 --> 00:06:02,739 மீதத்தை பிறகு சாப்பிட பேக் செய்யலாம். 107 00:06:02,739 --> 00:06:03,823 அதேதான். 108 00:06:04,532 --> 00:06:06,243 ஆனால் நம்மிடம் நிறைய உள்ளன. 109 00:06:07,077 --> 00:06:10,080 கெவின், இவர்களிடம் அந்தக் கதைகளைக் கூறினாயா? 110 00:06:11,373 --> 00:06:12,374 அது... 111 00:06:12,374 --> 00:06:14,417 நீ மறக்கவில்லைதானே? 112 00:06:14,417 --> 00:06:16,628 கதைகளா? என்ன கதைகள், அன்பே? 113 00:06:17,629 --> 00:06:20,090 தூங்கும்போது நீங்கள் வாசித்துக்காட்டும் கதைகள் போலவா? 114 00:06:20,090 --> 00:06:23,677 அப்பா, இதைப் பற்றி பிறகு பேசலாமா? 115 00:06:23,677 --> 00:06:26,596 ஆம், அதாவது இதைப் பற்றி நாம் பேசப் போவதில்லை. 116 00:06:28,139 --> 00:06:30,559 நாம் துருவ மான்களைத் தேடப் போக வேண்டும். 117 00:06:30,559 --> 00:06:32,811 ஆனால் இனிப்பு பற்றிக் கேட்டதற்கு இன்னும் பதில் வரவில்லை. 118 00:06:32,811 --> 00:06:34,354 துருவ மான், டேவிட். 119 00:06:34,896 --> 00:06:36,565 மதிய உணவுக்கு நன்றி, ஜேம்ஸ் தாத்தா. 120 00:06:37,065 --> 00:06:39,693 அது நன்றாக இருந்தது. சாலட் கூட. 121 00:06:39,693 --> 00:06:41,069 பரவாயில்லை. 122 00:06:52,080 --> 00:06:55,584 கவனமாக இருங்கள். அவை நம்மைப் பார்க்கக் கூடாது, இல்லையெனில் ஓடிவிடும். 123 00:07:00,046 --> 00:07:01,047 ஒன்றுமில்லை. 124 00:07:03,216 --> 00:07:04,467 தொடர்ந்து தேடுவோம். 125 00:07:12,517 --> 00:07:13,894 இங்கேயும் துருவ மான் இல்லை. 126 00:07:14,644 --> 00:07:17,230 என் தாத்தா கதைகள் பற்றிக் கூறியதற்கு என்ன நினைக்கிறாய்? 127 00:07:17,772 --> 00:07:19,691 தெரியவில்லை. அவரிடம் ஏன் கேட்கவில்லை? 128 00:07:19,691 --> 00:07:22,152 ஏனெனில் அப்பா அதைப் பற்றி கொஞ்சம் விசித்திரமாக இருந்தார். 129 00:07:24,446 --> 00:07:25,655 துருவ மான். 130 00:07:27,949 --> 00:07:29,117 ஐயோ மீண்டுமா. 131 00:07:29,117 --> 00:07:30,911 நாம் அவற்றைப் பின்தொடர வேண்டும். வா. 132 00:07:39,753 --> 00:07:41,546 என் அறையில் சென்று விளையாடலாமா? 133 00:07:46,885 --> 00:07:48,845 யாருக்காவது காஃபி வேண்டுமா? 134 00:07:52,349 --> 00:07:53,350 தண்ணீர்? 135 00:07:55,727 --> 00:07:57,479 நான் மில்லியுடன் விளையாடப் போகிறேன். 136 00:08:05,320 --> 00:08:06,446 நான் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். 137 00:08:21,920 --> 00:08:23,380 அவை ஓடுகின்றன. 138 00:08:35,933 --> 00:08:37,435 எங்கே போகிறீர்கள், தாத்தா? 139 00:08:37,435 --> 00:08:41,356 நான் கொஞ்சம் சீக்கிரமாக சமூக கிச்சனுக்குச் செல்லலாம் என நினைத்தேன். 140 00:08:41,898 --> 00:08:43,483 உங்கள் துருவ மானைக் கண்டுபிடித்தீர்களா? 141 00:08:44,734 --> 00:08:45,860 மீண்டும் தொலைத்துவிட்டோம். 142 00:08:46,695 --> 00:08:48,989 நாங்கள் தொடர்ந்து ஒளிந்துதான் பார்க்கிறோம், ஆனால் அவை பார்த்துவிட்டு ஓடுகின்றன. 143 00:08:49,864 --> 00:08:51,241 எங்களுக்கு புதிய திட்டம் தேவை. 144 00:08:51,241 --> 00:08:52,867 எதுவும் யோசனைகள் உள்ளதா, தாத்தா? 145 00:08:52,867 --> 00:08:54,327 சில யோசனைகள் உள்ளன. 146 00:08:54,327 --> 00:08:58,373 நம் முன்னோர்களுடனும் குடும்பத்துடனும் துருவ மான்களுக்கு நெருங்கிய 147 00:08:58,373 --> 00:08:59,916 தொடர்பு இருப்பது உங்களுக்குத் தெரியுமா? 148 00:08:59,916 --> 00:09:03,879 தத்தெடுத்தாலும் அவர்கள் என் குடும்பமா? 149 00:09:05,714 --> 00:09:09,009 குடும்பம் குடும்பம்தான், அது எப்படி இருந்தாலும். 150 00:09:09,718 --> 00:09:13,054 நீ பிறந்த குடும்பத்துடனும் முன்னோர்களுடனும் உனக்கு தொடர்பு உள்ளது, மேலும் 151 00:09:13,054 --> 00:09:17,225 எங்கள் குடும்பத்துடனும் முன்னோர்களுடனும் உனக்கு தொடர்பு உள்ளது. சரியா? 152 00:09:18,393 --> 00:09:19,477 சரி. 153 00:09:19,477 --> 00:09:21,688 நம் குடும்பம் டெனெ. 154 00:09:21,688 --> 00:09:23,440 டெனெ என்றால் என்ன? 155 00:09:23,440 --> 00:09:27,360 டெனெ என்பது துருவ மான்கள் வசித்த பகுதியின் பூர்வக்குடிகளில் ஒன்று. 156 00:09:27,360 --> 00:09:29,404 இன்னொரு கேள்வி. 157 00:09:29,404 --> 00:09:31,281 பூர்வக்குடி என்றால் என்ன? 158 00:09:31,281 --> 00:09:34,159 ஓரிடத்தில் முதலில் வசிக்கும் நபர், அங்கே பிறர் வசிக்கும் முன்பே 159 00:09:34,159 --> 00:09:38,330 வசிப்பவர்கள், தங்களுக்கென ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பவர்கள். 160 00:09:38,914 --> 00:09:40,332 இப்போது என்னுடன் வாருங்கள். 161 00:09:51,176 --> 00:09:54,638 உன் அப்பா சிறுவனாக இருந்தபோது இந்தக் கதையைக் கூறுவேன். 162 00:09:54,638 --> 00:09:57,891 அது நீண்ட காலத்திற்கு முன் தொடங்கியது, 163 00:09:57,891 --> 00:09:59,434 உலகம் புதிதாக இருந்தபோது. 164 00:09:59,434 --> 00:10:01,519 அப்போது, மக்களிடம் மின்சாரம், 165 00:10:01,519 --> 00:10:07,192 குழாய்த் தண்ணீர் மற்றும் அபார்ட்மெண்டுகள் போன்றவை இல்லை. 166 00:10:08,526 --> 00:10:11,321 காட்டில் இருக்கும் எல்லா விலங்குகளையும் போல, 167 00:10:11,321 --> 00:10:13,907 அவர்களை உயிருடனும் நன்றாகவும் வைத்திருக்க, அவர்கள் நிலத்துடனான 168 00:10:13,907 --> 00:10:16,159 உறவைச் சார்ந்திருந்தனர். 169 00:10:17,285 --> 00:10:20,413 ஆனால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. 170 00:10:23,959 --> 00:10:28,296 டெனெ நம் மக்களுக்கு நீண்ட எதிர்காலம் இருப்பதை உறுதிசெய்ய விரும்பியது. 171 00:10:30,215 --> 00:10:34,135 அதனால் அவர்களுக்கும், அந்த நிலத்தையும் காட்டையும் பகிர்ந்துகொள்ளும் 172 00:10:34,135 --> 00:10:37,472 விலங்குகளுக்கும் இடையே சந்திப்பை ஏற்பாடு செய்தனர். 173 00:10:38,056 --> 00:10:39,641 நம் மக்கள், “வரப் போகும் காலங்களில் 174 00:10:39,641 --> 00:10:42,811 எங்கள் குடும்பம் உங்களுடன் சேர்ந்து 175 00:10:42,811 --> 00:10:46,856 வசிப்பதை உறுதிசெய்வது?” என்று கேட்டனர். 176 00:10:47,399 --> 00:10:50,443 துருவ மான்கள், “மனிதர்களும் விலங்குகளும் 177 00:10:51,152 --> 00:10:53,655 ஆரோக்கியமாக இருக்க, நிலத்தைப் பராமரிக்க 178 00:10:53,655 --> 00:10:56,908 நாம் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும்” என்று பதிலளித்தன. 179 00:10:59,578 --> 00:11:03,039 நீங்கள் கதகதப்பாக இருக்க எங்கள் ரோமங்களையும் 180 00:11:03,039 --> 00:11:06,251 தேவையான கருவிகளைச் செய்ய கொம்புகளையும் பயன்படுத்தலாம், 181 00:11:07,085 --> 00:11:12,382 ஆனால் உங்களுக்குத் தேவையானதற்கு அதிகமாக எடுக்காமல் இருப்பதன் மூலம் 182 00:11:12,382 --> 00:11:14,009 மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும். 183 00:11:14,009 --> 00:11:16,011 எதுவும் வீணாகக் கூடாது. 184 00:11:17,178 --> 00:11:20,390 உங்களுடன் நாங்கள் நிலத்தைப் பகிர்ந்துகொள்வது போல, 185 00:11:20,390 --> 00:11:23,852 உங்களைச் சுற்றியுள்ளவர்களுடனும் பகிர்ந்துகொள்வதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். 186 00:11:24,519 --> 00:11:29,441 உங்களிடம் அதிகமாக இருப்பதை, குறைவாக இருப்பவர்களிடம் கொடுக்க வேண்டும். 187 00:11:29,941 --> 00:11:34,321 நிலத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதையும் 188 00:11:34,321 --> 00:11:36,573 உங்கள் குழந்தைகளுடன் பகிர வேண்டும், 189 00:11:36,573 --> 00:11:40,368 அப்போதுதான் அவர்கள் அடுத்து வருபவர்களுடன் பகிர முடியும்.” 190 00:11:46,416 --> 00:11:48,793 அறிவை அடுத்த தலைமுறையினருடன் 191 00:11:48,793 --> 00:11:52,839 பகிர்வது என்பது அனைவருக்குமான பொறுப்பாகும். 192 00:11:53,715 --> 00:11:56,176 ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 193 00:11:56,843 --> 00:11:59,095 டெனெ மட்டுமின்றி நிறைய பேர் 194 00:11:59,679 --> 00:12:02,390 அந்த நிலத்தில் வசிக்கத் தொடங்கினர். 195 00:12:03,975 --> 00:12:08,480 காடுகள் தொந்தரவு செய்யப்படும்போது, அங்கு வசிக்கும் விலங்குகளுக்கும் அது நிகழும். 196 00:12:09,439 --> 00:12:14,277 இன்று வரை, டெனெ சமூகத்தினர் துருவ மான்களைப் பாதுகாக்க, கடினமாக உழைக்கின்றனர். 197 00:12:14,945 --> 00:12:17,906 துருவ மான்கள் நமக்காக உழைத்தது போல. 198 00:12:18,782 --> 00:12:21,243 இந்தக் கதையை ஏன் என்னிடம் கூறவில்லை, அப்பா? 199 00:12:22,285 --> 00:12:25,413 நான் அதை மறந்துவிட்டேன் என நினைக்கிறேன். 200 00:12:26,414 --> 00:12:28,792 நான் உன் வயதில் இருந்தபோது, இந்தத் துருவ மான் கதை போல, பல முக்கியமான 201 00:12:28,792 --> 00:12:30,794 கதைகளை உன் தாத்தா கூறியுள்ளார். 202 00:12:30,794 --> 00:12:32,796 மற்ற கதைகள் நினைவுள்ளனவா? 203 00:12:33,797 --> 00:12:37,384 நினைவுள்ளது என நினைக்கிறேன். தாத்தாவுடைய உதவி இருந்தால் நினைவுக்கு வரலாம்? 204 00:12:38,385 --> 00:12:39,678 நான் அதை விரும்புவேன். 205 00:12:40,262 --> 00:12:41,388 நானும் அவற்றைக் கேட்கலாமா? 206 00:12:41,388 --> 00:12:43,390 கண்டிப்பாக. 207 00:12:43,390 --> 00:12:45,600 அந்தக் கதையில் வருவது போல, அவை வசிக்கும் காடுகளை அழிப்பதால்தான் 208 00:12:45,600 --> 00:12:49,354 அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றனவா? 209 00:12:49,354 --> 00:12:52,566 அவற்றின் வீடுகளை இழப்பது, துருவ மான்கள் அழிவதற்கான காரணங்களில் ஒன்று, 210 00:12:53,149 --> 00:12:56,403 ஆனால் அதனால்தான் அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை என்று எப்படி நிரூபிப்பது? 211 00:12:56,903 --> 00:13:00,031 அவை பாதுகாப்பாக உணரும் இடத்திற்கு அவற்றை வர வைத்தால் என்ன? 212 00:13:00,031 --> 00:13:04,035 உணவு, மரங்கள் மற்றும் அவை வீட்டை உருவாக்கத் தேவையான அனைத்தும் இருக்கும் இடம். 213 00:13:04,035 --> 00:13:06,997 உங்கள் மூவரிடமும் நல்ல திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. 214 00:13:07,914 --> 00:13:08,999 அதைத் தொடங்குங்கள். 215 00:13:08,999 --> 00:13:11,042 முதல் படி, துருவ மானைக் கண்டுபிடிப்பது. 216 00:13:11,042 --> 00:13:12,252 சரி. 217 00:13:12,961 --> 00:13:15,422 -பை, ஜேம்ஸ் தாத்தா. -மதிய உணவுக்கு நன்றி. 218 00:13:21,636 --> 00:13:22,554 அதோ. 219 00:13:23,138 --> 00:13:25,056 இப்போது பாதுகாப்பான இடம் தேவை. 220 00:13:26,308 --> 00:13:27,851 எனக்கு அந்த இடம் தெரியும். 221 00:13:28,768 --> 00:13:31,271 துருவ மானை அங்கே வர வைக்கும் வழியும் நமக்குத் தேவை. 222 00:13:32,063 --> 00:13:34,232 அங்கேதான் நீ மீதம் வைத்த உணவு உதவப் போகிறது. 223 00:13:41,573 --> 00:13:45,285 டேவிட், பொறி கிடைத்துவிட்டது. துருவ மானைப் பார்க்க முடிகிறதா? 224 00:13:45,285 --> 00:13:46,661 ஆம். 225 00:13:51,124 --> 00:13:52,417 ஆனால் அவை போகின்றன, ஜேன். 226 00:13:55,837 --> 00:13:58,173 சீக்கிரம்! அவை போகின்றன. 227 00:13:59,382 --> 00:14:00,383 டேவிட்? 228 00:14:01,218 --> 00:14:02,427 இந்தப் பக்கம். 229 00:14:05,639 --> 00:14:08,225 நான் சிக்கிக்கொண்டேன். என்னால் அவற்றைப் பின்தொடர முடியாது. 230 00:14:10,018 --> 00:14:13,563 உன்னால் அவற்றை நெருங்கி இந்த மீதமுள்ள உணவின் மூலம் துருவ மான்களை இங்கே வர வைக்க முடியுமா? 231 00:14:18,902 --> 00:14:21,488 அவற்றை இங்கே வரவை, கிரேபியர்ட். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். 232 00:14:22,781 --> 00:14:27,911 என்னால் வெளியே வர முடியவில்லை. துருவ மான்கள் போகின்றன! 233 00:14:39,339 --> 00:14:42,551 அப்படித்தான்! கிரேபியர்ட், நீ வெற்றிகரமாகச் செய்கிறாய்! 234 00:14:47,681 --> 00:14:48,765 அவை இந்தப் பக்கம் வருகின்றன. 235 00:14:51,226 --> 00:14:52,644 அவை என்னை நோக்கி வருகின்றன. 236 00:15:02,153 --> 00:15:04,948 உன்னை துருவ மான் தாக்கிவிட்டது போலத் தெரிகிறது. 237 00:15:04,948 --> 00:15:07,909 புரிகிறதா? தாக்கிவிட்டதா? 238 00:15:09,077 --> 00:15:10,495 நன்றாக இருக்கிறாயா, கிரேபியர்ட்? 239 00:15:17,627 --> 00:15:19,212 ஜேன், அவை உன் பக்கமாக வருகின்றன. 240 00:15:20,297 --> 00:15:24,134 வந்துவிட்டன. துருவ மான்கள் தின்றுகொண்டே பாதுகாப்பான இடத்திற்கு வந்துள்ளன. 241 00:15:24,759 --> 00:15:27,721 உண்மையில், கொறித்துக்கொண்டே வந்துள்ளன. 242 00:15:27,721 --> 00:15:30,223 அவை ஒவ்வொரு பகுதியிலும் கொஞ்சம்தான் கடித்துள்ளன. 243 00:15:30,223 --> 00:15:32,642 அவை ஏன் முழுதாகச் சாப்பிடவில்லை என யோசிக்கிறேன். 244 00:15:32,642 --> 00:15:35,145 எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவை இப்போது போகாது என நம்புகிறேன். 245 00:15:37,063 --> 00:15:38,398 அவை அழகாக உள்ளன. 246 00:15:39,900 --> 00:15:41,026 இரு! வேண்டாம்... 247 00:15:43,361 --> 00:15:44,487 போகாதே. 248 00:15:48,533 --> 00:15:50,201 ஜேன். இங்கே. 249 00:15:50,201 --> 00:15:52,954 -துருவ மான்கள் எங்கே? -போய்விட்டன. 250 00:15:55,790 --> 00:15:57,876 அவை ஏன் நகர்ந்துகொண்டே இருக்கின்றன என்று இன்னும் நமக்குத் தெரியவில்லை. 251 00:15:58,585 --> 00:16:00,128 நாம் அதைக் கண்டுபிடிப்போம். 252 00:16:00,128 --> 00:16:03,590 அவை மீதம் வைக்குமளவுக்குக் கனிவாக இருந்துள்ளன. 253 00:16:03,590 --> 00:16:06,843 உன் தாத்தாவின் கதை போல. பகிர்ந்துகொள்வது. 254 00:16:06,843 --> 00:16:08,011 அதை நான் பார்க்கலாமா? 255 00:16:12,390 --> 00:16:16,811 ”நாம் இன்று எடுக்கும் இந்த முடிவு எப்படி எதிர்கால மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?” 256 00:16:17,479 --> 00:16:19,064 -ஜேன் குட்டாலா? -ஆம். 257 00:16:19,064 --> 00:16:21,066 இது துருவ மான்கள் டெனெவிடம் கூறியது போல, 258 00:16:21,066 --> 00:16:23,818 நிலத்திலிருந்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்வது. அதிகமாக இல்லை. 259 00:16:23,818 --> 00:16:25,695 அப்போது அனைவருமே உயிர் பிழைத்திருக்கலாம். 260 00:16:25,695 --> 00:16:27,614 சரி. 261 00:16:27,614 --> 00:16:28,990 பார்! 262 00:16:30,867 --> 00:16:32,661 -மீதமிருக்கும் துருவ மான் கூட்டம். -ஒளிந்துகொள்! 263 00:16:37,791 --> 00:16:39,542 மற்ற துருவ மான்கள் மீதம் வைத்ததை அவை உண்கின்றன. 264 00:16:39,542 --> 00:16:42,546 அவற்றுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்வதால் அவை நகர்ந்துகொண்டே இருக்கின்றன. 265 00:16:43,171 --> 00:16:44,673 அனைவருக்கும் போதுமானதை விட்டுச் செல்கின்றன. 266 00:16:45,215 --> 00:16:47,092 மக்களும் இதைச் செய்ய வேண்டும். 267 00:16:47,092 --> 00:16:48,593 நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். 268 00:16:52,556 --> 00:16:53,682 எனக்கு ஒரு யோசனை. 269 00:16:57,269 --> 00:16:59,396 சமூகக் கிச்சனுக்காக கூடுதல் உணவு, தாத்தா. 270 00:16:59,396 --> 00:17:03,483 இந்த உணவு அனைத்தும் இது தேவையான நிறைய பேருக்கு உணவளிக்கும். 271 00:17:03,483 --> 00:17:04,901 மஸி சோ, 272 00:17:04,901 --> 00:17:08,196 -அதாவது, “நன்றி.” -பரவாயில்லை, தாத்தா. 273 00:17:08,196 --> 00:17:11,074 எங்களிடம் குக்கீகளும் உள்ளன. ஆனால் ஏனென்று மறந்துவிட்டோம். 274 00:17:11,741 --> 00:17:15,745 மரியாதை, பகிர்தல் மற்றும்... 275 00:17:15,745 --> 00:17:17,162 பொறுப்பு. 276 00:17:17,872 --> 00:17:19,583 தூங்கும்போது அந்தக் கதையை உங்களுக்குக் கூறுகிறேன். 277 00:17:20,292 --> 00:17:23,295 அதன்பிறகு, உங்கள் இருவரிடமும் கூற் என்னிடம் நிறைய கதைகள் உள்ளன. 278 00:17:24,963 --> 00:17:26,131 உன்னிடமும்தான். 279 00:17:26,965 --> 00:17:29,384 எனக்கு? அதில் நிறைய விலங்குக் கதைகள் இருக்கும் என நம்புகிறேன். 280 00:17:29,384 --> 00:17:30,510 சில கதைகள் உள்ளன. 281 00:17:30,510 --> 00:17:32,637 நரிகள் பற்றிய கதையைக் கேட்கும் வரை காத்திரு. 282 00:17:34,431 --> 00:17:38,059 டெனெ கதையை நிறைய பேர் கேட்டால், அது துருவ மான்களுக்கு உதவுமா? 283 00:17:38,059 --> 00:17:41,021 கதைகள் கூறுவது அந்த அறிவை உயிருடன் வைத்திருக்கும். 284 00:17:41,021 --> 00:17:43,690 மக்கள் துருவ மான்கள் பற்றித் தெரிந்துகொண்டால், 285 00:17:43,690 --> 00:17:49,029 அவர்கள் நிலத்திலிருந்து எடுத்துக்கொள்வது பற்றி கவனமாக இருப்பார்கள். 286 00:17:51,197 --> 00:17:52,240 புரிந்தது, தாத்தா. 287 00:17:52,240 --> 00:17:53,408 எனக்கும்தான். 288 00:17:53,992 --> 00:17:55,285 அது கண்டிப்பாக உதவும். 289 00:17:56,661 --> 00:17:58,830 -தயாரா, அப்பா? நான் உங்களைக் கூட்டிச் செல்கிறேன். -நன்றி. 290 00:18:07,631 --> 00:18:09,591 நம்மால் விலங்குகளிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். 291 00:18:09,591 --> 00:18:11,259 நாம் கற்றுக்கொள்ளும் அனைத்தையும் நாம் பகிர வேண்டும், 292 00:18:11,259 --> 00:18:14,638 அப்போதுதான், ஒரே தவறை நாம் மீண்டும் மீண்டும் செய்ய மாட்டோம். 293 00:18:15,805 --> 00:18:17,307 கிரேபியர்ட்! 294 00:18:26,483 --> 00:18:27,943 துருவ மான்களைக் காப்பாற்ற உதவுங்கள். 295 00:18:30,946 --> 00:18:34,407 -டேவிட்! டேவிட், எங்கே இருக்கிறாய்? -இதோ வந்துவிடுகிறேன். 296 00:18:36,826 --> 00:18:38,161 என்ன சாப்பிடுகிறாய்? 297 00:18:38,161 --> 00:18:40,372 மீதமிருக்கும் உணவு. அவை இப்போது சாப்பிட இன்னும் சுவையாக உள்ளன. 298 00:18:40,372 --> 00:18:43,959 எனக்கும் கொஞ்சம் வை. நான் துருவ மான் காப்பாளரான ஸ்டார் கூச்சியேவுடன் பேசிவிட்டு வருகிறேன். 299 00:18:45,210 --> 00:18:46,211 இதோ வந்துவிட்டார். 300 00:18:46,711 --> 00:18:47,921 ஹாய், ஸ்டார். 301 00:18:47,921 --> 00:18:49,297 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 302 00:18:49,297 --> 00:18:51,216 உன் வாய் பிசியாக உள்ளது போலத் தெரிகிறது. 303 00:18:56,304 --> 00:18:57,764 அவையா? 304 00:18:57,764 --> 00:18:59,266 அவை ஆண் துருவ மானின் கொம்புகள். 305 00:18:59,266 --> 00:19:02,310 ஆண் துருவ மான்கள் கொம்புகளை உதிர்க்கும்போது ஏன் பெண் துருவ மான்களும் உதிர்ப்பதில்லை? 306 00:19:02,310 --> 00:19:05,981 பெண் துருவ மான்கள் பனிக் காலத்தில் கொம்புகளை வைத்திருக்கும், ஏனெனில் அவை கர்ப்பமாக 307 00:19:05,981 --> 00:19:10,110 இருக்கும்போது தங்கள் உணவுகளைப் பாதுகாக்க, பிற துருவ மான்களிடம் தன் வலிமையை காட்ட வேண்டும். 308 00:19:10,110 --> 00:19:14,406 அருமை. மன்னிக்கவும், நாங்கள் துருவ மான் கூட்டத்தைத் துரத்தியதில் எனக்குப் பசித்தது. 309 00:19:14,406 --> 00:19:16,116 அவை நிறைய நகர்ந்துகொண்டே இருக்கின்றன. 310 00:19:16,116 --> 00:19:18,243 அவை ஏன் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன என்று தெரிந்துகொள்ள முயன்றோம். 311 00:19:18,243 --> 00:19:19,619 என்ன கண்டுபிடித்தீர்கள்? 312 00:19:19,619 --> 00:19:21,997 அவை ஓரிடத்திலிருந்து தங்களுக்குத் தேவையனாதை மட்டும் எடுத்துக்கொண்டு, 313 00:19:21,997 --> 00:19:24,249 மீதத்தை பிறகு சாப்பிடவோ மற்ற துருவ மான்களுக்கோ விட்டுச் செல்கின்றன. 314 00:19:24,249 --> 00:19:25,208 சரியாகக் கூறினாய். 315 00:19:25,208 --> 00:19:28,211 சில துருவ மான் கூட்டங்கள் வெப்பநிலைகளுக்கேற்ப நகரும், சில கூட்டங்கள் 316 00:19:28,211 --> 00:19:31,006 வெவ்வேறு உணவுகளைத் தேடி நகரும். 317 00:19:31,006 --> 00:19:32,465 நீங்கள் துருவ மான்களுடன் எங்கே பணியாற்றினீர்கள்? 318 00:19:32,465 --> 00:19:37,053 கிளின்சி-ஸா துருவ மான் மகப்பேறு நிலையம் இருக்கும் இந்தப் பகுதியில். 319 00:19:37,053 --> 00:19:38,597 மகப்பேறு நிலையம் என்றால் என்ன? 320 00:19:38,597 --> 00:19:41,474 அது அது மிகப்பெரிய, வேலியால் அடைக்கப்பட்ட பகுதி. 321 00:19:41,474 --> 00:19:44,269 நாங்கள் காட்டிலிருந்து கர்ப்பமாக இருக்கும் துருவ மான்களைக் கொண்டு வருவோம். 322 00:19:44,269 --> 00:19:47,063 அந்த விதத்தில், அவை பாதுகாப்பாக குட்டிகளை ஈன்றெடுக்கும். 323 00:19:47,063 --> 00:19:49,316 பிறகு அவற்றை மீண்டும் காட்டில் விடுவோம். 324 00:19:49,316 --> 00:19:52,736 -அவற்றை ஏன் பாதுகாக்க வேண்டும்? -அவை மலைகளில் இருக்கும்போது 325 00:19:52,736 --> 00:19:55,906 மிகவும் சிறிதாக இருப்பதால், வேட்டை மிருகங்கள் அவற்றை எளிதாகத் தாக்கும். 326 00:19:55,906 --> 00:19:58,617 -அந்த இடத்தில் அவை பாதுகாப்பாக இருக்கும். -நீங்கள் அவற்றுக்கு உணவூட்டுவீர்களா? 327 00:19:58,617 --> 00:20:00,702 -ஆம். -நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. 328 00:20:00,702 --> 00:20:02,245 நீங்கள் ஏன் துருவ மான்களுக்கு உதவ முடிவெடுத்தீர்கள்? 329 00:20:02,245 --> 00:20:04,289 பல ஆண்டுகளுக்கு முன், எங்கள் சமூகங்களில் இருக்கும் மூத்தோர்கள் 330 00:20:04,289 --> 00:20:07,334 துருவ மான்களின் எண்ணிக்கை குறைவதால், அவற்றை வேட்டையாடுவதை நிறுத்தும்படி கூறினார்கள். 331 00:20:07,334 --> 00:20:12,088 நாங்கள் கடமான் இறைச்சி சாப்பிட்டோம், இறைச்சியைக் கழுவவும் வெட்டவும் அம்மாவுக்கு உதவுவேன். 332 00:20:12,088 --> 00:20:14,341 அதற்கான கடினமான வேலைகள் அனைத்தும் எனக்குத் தெரியும். 333 00:20:14,341 --> 00:20:16,051 அதைப் பற்றி நான் நினைத்ததே இல்லை. 334 00:20:16,051 --> 00:20:19,596 நிறைய பேர் நினைப்பதில்லை, ஏனெனில் நாம் அவற்றை கடையில் வாங்குவோம், சரியா? 335 00:20:20,263 --> 00:20:22,557 ஆனால் அது உங்கள் சமையலறையை அடைவதற்கு முன் அதற்குத் தேவையான கடினமான வேலைகள் 336 00:20:22,557 --> 00:20:26,478 பற்றித் தெரியும்போது, அந்த விலங்குக்கு நீங்கள் நன்றி கூறுவீர்கள். 337 00:20:26,478 --> 00:20:28,772 அதை வீணடிக்காமல், தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்வீர்கள். 338 00:20:28,772 --> 00:20:30,398 சரியாகக் கூறினாய், டேவிட். 339 00:20:30,398 --> 00:20:31,816 துருவ மான்கள் ஏன் குறைவாக உள்ளன? 340 00:20:31,816 --> 00:20:36,029 இங்கே பாருங்கள்? துருவ மான்களுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல், காடுகளை அழிப்பதுதான். 341 00:20:36,029 --> 00:20:38,323 நாம் இயற்கையின் சமநிலைகளை அழிக்கிறோம். 342 00:20:38,323 --> 00:20:40,867 நம்மால் சமநிலைகளை மீண்டும் கொண்டுவரவும் உதவ முடியும். 343 00:20:40,867 --> 00:20:44,996 துருவ மான்கள் போலவே, நாமும் ஓர் உயிரினம் என்று நினைவில்கொள்வது முக்கியமானது. 344 00:20:44,996 --> 00:20:47,624 நாம் மனித இனம், நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். 345 00:20:47,624 --> 00:20:49,209 உதவுவதற்கு நாங்கள் என்ன செய்யலாம்? 346 00:20:49,209 --> 00:20:51,503 இன்று நீங்கள் கற்றுக்கொண்டதைப் பகிர்வதே சிறந்த தொடக்கம்தான். 347 00:20:51,503 --> 00:20:52,963 கழிவுகளைக் குறையுங்கள். 348 00:20:52,963 --> 00:20:55,423 உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் பேசுங்கள், 349 00:20:55,423 --> 00:20:59,052 உங்கள் குப்பைகள் கொட்டும் உள்ளூர்ப் பகுதிக்குச் செல்லுங்கள். 350 00:20:59,052 --> 00:21:01,888 இந்தக் கழிவுகளால் நம் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன. 351 00:21:01,888 --> 00:21:06,601 அது துருவ மான்கள் மற்றும் நாம் உட்பட பிற உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதிக்கின்றன. 352 00:21:07,894 --> 00:21:11,064 அவ்வளவு குப்பையைப் பார்க்கும்போது, அதில் இன்னும் சேர்க்கக் கூடாது எனத் தோன்றுகிறது. 353 00:21:11,064 --> 00:21:15,318 நான் இதுவரை குப்பை கொட்டுமிடத்தைப் பார்த்ததில்லை. அது நாற்றமடிக்கும் என நினைக்கிறேன். 354 00:21:15,318 --> 00:21:17,487 சரியாகத்தான் சொல்கிறாய். நானும் பார்த்ததில்லை. 355 00:21:17,487 --> 00:21:20,699 இன்று எங்களிடம் துருவ மான்கள் பற்றிப் பேசியதற்கு நன்றி, ஸ்டார். 356 00:21:20,699 --> 00:21:24,119 நன்றி. உங்கள் இருவரையும் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. 357 00:21:24,119 --> 00:21:26,621 -பை, ஸ்டார். -பிறகு பார்க்கலாம். 358 00:21:27,372 --> 00:21:31,084 நீ சீக்கிரம் வர வேண்டும், ஜேன். விரைவிலேயே உணவு காலியாகிவிடும். 359 00:21:46,141 --> 00:21:47,976 கிட்டத்தட்ட இது காலியாகிவிட்டது. 360 00:21:50,896 --> 00:21:53,189 ஜார்ஜ் பிளாண்டினால் ஈர்க்கப்பட்டது (1923-2008), டெனே தேசம் 361 00:22:29,726 --> 00:22:31,728 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்