1 00:00:37,539 --> 00:00:39,457 {\an8}"பாந்தெரா டைகிரிஸ்." 2 00:00:45,755 --> 00:00:49,217 புலியைக் கண்டுபிடிக்கிறோம் என்றால் மெதுவாகவும் அமைதியாகவும் போக வேண்டும் என்று நினைத்தேன். 3 00:00:49,801 --> 00:00:51,219 அதை நான்தான் சொன்னேன். 4 00:00:51,219 --> 00:00:52,554 எதையாவது பார்த்தாயா? 5 00:00:54,890 --> 00:00:57,851 இன்னும் எதுவும் இல்லை. 6 00:01:04,106 --> 00:01:05,775 பயந்த கிரேபியர்டைத் தவிர. 7 00:01:06,276 --> 00:01:07,944 நீ பதற்றமாக இருக்கிறாய், கிரேபியர்ட், 8 00:01:07,944 --> 00:01:10,947 ஆனால் புலிகளுக்கு ஏன் இரவில் வெளியே வரப் பிடிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். 9 00:01:10,947 --> 00:01:12,032 அதைச் செய்ய... 10 00:01:12,032 --> 00:01:14,451 இந்த இரவு நேர பணியை நாம் முடிக்க வேண்டும். 11 00:01:14,451 --> 00:01:16,995 இருட்டில் நாம் பார்க்க உதவும் தொலைநோக்கியைப் பயன்படுத்த வேண்டும். 12 00:01:16,995 --> 00:01:18,204 முயற்சிக்கிறாயா? 13 00:01:22,292 --> 00:01:24,085 பார்த்தாயா? பயப்பட ஒன்றுமில்லை. 14 00:01:28,006 --> 00:01:30,550 நீ என்ன பார்த்தாய், கிரேபியர்ட்? அது புலியா? 15 00:01:32,302 --> 00:01:34,888 அழகான வரிகள், பெரிய நகங்கள் மற்றும் பெரிய கண்களை கொண்ட 16 00:01:34,888 --> 00:01:36,765 பெரிய பூனையைப் போல இருந்ததா? 17 00:01:37,349 --> 00:01:39,184 இரக்கமற்ற முறையில் தங்கள் இரையை பிடிக்கும் 18 00:01:39,184 --> 00:01:41,811 ஒரு பெரிய, கொழுத்த வேட்டைக்காரன் போலவா? 19 00:01:42,395 --> 00:01:43,313 உனக்கு புலிகளைப் பிடிக்குமா? 20 00:01:43,313 --> 00:01:47,400 பாந்தெரா டைகிரிஸ்? அவற்றை வெறுமனே பிடிக்காது. அவற்றை நேசிக்கிறேன். 21 00:01:47,400 --> 00:01:48,985 அவற்றின் அறிவியல் பெயரைத் தேடினாயா? 22 00:01:49,653 --> 00:01:51,655 அவற்றை காட்டில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 23 00:01:53,823 --> 00:01:54,866 கவலைப்படாதே, கிரேபியர்ட். 24 00:01:54,866 --> 00:01:57,035 ஒரு புலி உன்னை வேட்டையாடினால், நீ அதைப் பார்க்க முடியாது. 25 00:01:57,035 --> 00:01:59,412 அது உனக்குப் பின்னால் பதுங்கி வந்து, உன் முதுகைக் கடிக்கும்... 26 00:02:00,789 --> 00:02:02,249 நாம் போய் ஆய்வு செய்வோம். 27 00:02:02,874 --> 00:02:03,959 ஆனால் நினைவிருக்கட்டும், 28 00:02:03,959 --> 00:02:05,377 புலிகளுக்கு நல்ல செவித்திறன் உண்டு, 29 00:02:05,377 --> 00:02:07,420 அதோடு இரவில் நாம் பார்ப்பதை விட ஆறு மடங்கு நன்றாக பார்க்க முடியும். 30 00:02:08,129 --> 00:02:10,507 நாம் இங்கிருப்பது ஏற்கனவே புலிக்குத் தெரிந்திருக்கலாம். 31 00:02:26,481 --> 00:02:28,316 பார்! மண்ணில் புலியின் கால்தடம். 32 00:02:28,316 --> 00:02:30,151 ஒன்று நிச்சயமாக அருகில் இருக்கிறது. 33 00:02:30,151 --> 00:02:32,821 அது மிகப்பெரிய பாதம். அது ஒரு ஆண் புலி என்று நினைக்கிறேன். 34 00:02:32,821 --> 00:02:35,115 ஆண் புலிகள் பொதுவாக பெண் புலிகளை விட பெரியவை. 35 00:02:37,576 --> 00:02:38,743 அங்கிருக்கிறது. 36 00:02:40,328 --> 00:02:41,621 புலிகளுக்குத் துரத்துவது பிடிக்கும். 37 00:02:41,621 --> 00:02:45,166 எனவே நீ என்ன செய்தாலும், ஓடாதே! 38 00:02:45,166 --> 00:02:46,251 கிரேபியர்ட்! 39 00:02:51,673 --> 00:02:53,717 கவலைப்படாதே. என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. 40 00:03:15,071 --> 00:03:16,531 கிரேபியர்ட்! 41 00:03:21,828 --> 00:03:22,746 ஹாய், ஜேனின் அம்மா. 42 00:03:23,872 --> 00:03:26,833 அம்மா, நாங்கள் எங்கள் பணியை முடிக்க வேண்டுமென்றால் இங்கே இருட்டாக இருக்க வேண்டும். 43 00:03:26,833 --> 00:03:28,960 நீங்கள் நாளைக்கு முடித்துக் கொள்ளுங்கள். தாமதமாகிறது. 44 00:03:31,421 --> 00:03:32,672 அது கச்சிதமாக இருக்கிறது. 45 00:03:32,672 --> 00:03:34,883 ஆம். நீ படுக்க தயாராவதற்கும் டேவிட் வீட்டிற்குப் போவதற்கும் 46 00:03:34,883 --> 00:03:36,218 இது சரியான நேரம். 47 00:03:36,218 --> 00:03:37,928 இல்லை, புலிகளைக் காப்பாற்ற. 48 00:03:37,928 --> 00:03:40,639 ஜேன், உன் கனவில் எத்தனை புலிகளை வேண்டுமானாலும் காப்பாற்றலாம். 49 00:03:40,639 --> 00:03:43,808 அம்மா, காடுகளில் 4,000க்கும் குறைவான புலிகளே மீதமிருக்கின்றன, 50 00:03:43,808 --> 00:03:45,352 அதற்கு காரணம் நாம்தான். 51 00:03:45,352 --> 00:03:47,354 மக்கள் அவற்றின் வசிப்பிடத்தை அபகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். 52 00:03:47,354 --> 00:03:49,564 அவை ஏன் இரவில் வெளியே வருகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 53 00:03:49,564 --> 00:03:51,191 ஏனென்றால் நாம் அவற்றைப் புரிந்துகொண்டால்... 54 00:03:51,191 --> 00:03:53,902 நீ அவற்றைக் காப்பாற்றலாம். ஆம், எனக்குத் தெரியும். 55 00:03:55,779 --> 00:03:58,448 அவை இரவில் சுற்றித் திரியக் கூடியவை. புலிகள் காப்பாற்றப்பட்டன. 56 00:03:58,448 --> 00:03:59,866 குட் நைட், டேவிட். 57 00:03:59,866 --> 00:04:03,620 அவர் நல்லவர். நமது பல பணிகளில் அவரிடம் உதவி கேட்க வேண்டும். 58 00:04:06,957 --> 00:04:07,958 நல்ல முயற்சி, அம்மா. 59 00:04:07,958 --> 00:04:09,876 நாக்டர்னல் என்றால் இரவில் சுறுசுறுப்பாக இருக்கும், 60 00:04:09,876 --> 00:04:11,878 ஆனால் புலிகள் எப்போதும் பகலில் தூங்காது. 61 00:04:11,878 --> 00:04:13,046 சில சமயங்களில் அவை சுற்றித் திரியும். 62 00:04:13,046 --> 00:04:16,257 பிறகு அவற்றுக்கு இரவு நேரத்தைப் பிடிக்கும், ஏனென்றால் அது வேட்டையாடுவதற்கு ஏற்றது. 63 00:04:16,257 --> 00:04:17,759 -பை, டேவிட். -இரு, டேவிட். 64 00:04:17,759 --> 00:04:20,220 அம்மா, ஒருவேளை அது வேட்டையாடுவதற்கு ஏற்றதாக இருக்கலாம், ஆனால் ஏன்? 65 00:04:20,220 --> 00:04:22,096 இருட்டில் இரையை பிடிப்பது எளிதானதா? 66 00:04:22,096 --> 00:04:24,683 அல்லது மற்ற வேட்டை விலங்குகளை எதிர்கொள்ள வேண்டாம் என்பதாலா? 67 00:04:24,683 --> 00:04:27,310 அல்லது அவற்றுக்கு இரவில் பார்வை நன்றாக தெரியும் என்பதாலா? 68 00:04:27,310 --> 00:04:29,521 -அல்லது ஏனென்றால்... -உனக்கு பத்து நிமிடம் தருகிறேன். 69 00:04:29,521 --> 00:04:30,855 சரி! 70 00:04:31,898 --> 00:04:32,732 நன்றி, அம்மா. 71 00:04:35,944 --> 00:04:38,947 புலி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், எனவே அமைதியாக இரு. 72 00:04:42,867 --> 00:04:46,454 என்ன? என் தவறில்லை. 73 00:04:48,790 --> 00:04:49,791 பார்த்தாயா? 74 00:04:55,130 --> 00:04:57,424 புலி. அது கிரேபியர்டைத் தேடுகிறது. 75 00:05:02,387 --> 00:05:04,139 ஓடுவதைப் பற்றி நான் என்ன சொன்னேன்? 76 00:05:15,275 --> 00:05:16,276 பூ! 77 00:05:17,903 --> 00:05:20,447 அட, உங்கள் இருவரையும் பயமுறுத்துவது மிகவும் எளிது. 78 00:05:20,447 --> 00:05:23,617 உங்கள் இருவர் முகத்தையும் பார்க்க வேண்டும். மிகவும் பயந்துவிட்டீர்கள். 79 00:05:23,617 --> 00:05:25,619 நீங்கள் ஒரு புலி என்று நாங்கள் நினைத்துவிட்டோம். 80 00:05:26,244 --> 00:05:28,997 -உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். -நாங்கள் ஒன்றைக் கண்காணிக்கிறோம். 81 00:05:29,706 --> 00:05:31,082 அல்லது அது நம்மை கண்காணிக்கிறதா? 82 00:05:31,625 --> 00:05:32,792 அதிகமாக கிரேபியர்டை தான். 83 00:05:32,792 --> 00:05:36,087 ஓ, ஆம். அது முற்றிலும் புலியின் உணவு போலத்தான் தெரிகிறது. 84 00:05:36,087 --> 00:05:38,465 புலி உங்கள் குரங்கு நண்பனைக் கண்டுபிடிக்கும் முன்பு நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன். 85 00:05:38,465 --> 00:05:40,467 -சிம்பன்சி. -ஆம். 86 00:05:40,467 --> 00:05:42,135 புலியைக் கண்டுபிடிக்க உதவுகிறீர்களா, அனிசா? 87 00:05:42,636 --> 00:05:44,512 எனக்கு ஆசைதான், ஆனால் நான் கூட்டுறவு வேலையில் இருக்கிறேன், 88 00:05:44,512 --> 00:05:46,556 சரிசெய்ய வேண்டிய பிரச்சினையோடு என்னிடமே ஒரு விலங்கு இருக்கிறது. 89 00:05:46,556 --> 00:05:47,891 நிஜமாகவா? என்ன மாதிரியான விலங்கு? 90 00:05:47,891 --> 00:05:50,977 இன்னும் சரியாக தெரியவில்லை, ஆனால் தோட்டக் கொட்டகைக்குள் ஏதோவொன்று புகுந்து 91 00:05:50,977 --> 00:05:52,812 சுத்தம் செய்யும் அளவுக்கு நாசப்படுத்திவிட்டது. 92 00:05:52,812 --> 00:05:53,939 அது புலியாகத்தான் இருக்க வேண்டும். 93 00:05:54,564 --> 00:05:56,816 அது ஸ்கங்க்-ஆகவோ அல்லது அணில்கரடியாகவோ இருக்கும் என்று நினைக்கிறேன். 94 00:05:56,816 --> 00:06:00,737 ஆனால், ஆம், ஒருவேளை அது பெரிய பூனையாகவும் இருக்கலாம். 95 00:06:00,737 --> 00:06:02,822 இந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். 96 00:06:07,577 --> 00:06:08,578 இப்போது என்ன நடக்கும்? 97 00:06:08,578 --> 00:06:09,746 காத்திருப்போம். 98 00:06:12,874 --> 00:06:15,001 எவ்வளவு நேரத்திற்கு? 99 00:06:15,001 --> 00:06:16,211 வேலை முடியும் வரை. 100 00:06:16,211 --> 00:06:19,673 புலியின் இயல்பான நடத்தையை கவனிக்கப் போகிறோம் என்றால், நாம் இங்கிருப்பது அதற்குத் தெரியக்கூடாது. 101 00:06:19,673 --> 00:06:23,885 எனவே நாம் மணிக்கணக்கில் அமைதியாக பதுங்கி இருக்க வேண்டும். 102 00:06:23,885 --> 00:06:25,929 அல்லது குறைந்தபட்சம் தூங்கும் வரை. 103 00:06:26,888 --> 00:06:28,473 எது சீக்கிரம் நடக்கிறதோ அதுவரை, சரியா? 104 00:06:30,392 --> 00:06:32,352 பொறுங்கள், அதைப் பார்த்தீர்களா? 105 00:06:32,352 --> 00:06:33,270 அது புலிதானா? 106 00:06:39,067 --> 00:06:40,068 பாருங்கள். 107 00:06:41,653 --> 00:06:43,822 பூனையா? நாம் அதை வைத்துக்கொள்ளலாமா? 108 00:06:44,906 --> 00:06:47,784 பூனைகளும் புலிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. 109 00:06:47,784 --> 00:06:50,245 சிறிய பூனையைப் பற்றி படிப்பது, நாம் புலியை எப்படி நெருங்குவது 110 00:06:50,245 --> 00:06:51,871 என்பதற்கான விடையை அறிந்துகொள்ள உதவும். 111 00:06:51,871 --> 00:06:54,666 எனவே, அதற்கு ஆம் என்று அர்த்தமா? 112 00:06:55,250 --> 00:06:57,252 இந்த பூனையைப் பற்றி நமக்கு இன்னும் எதுவும் தெரியாது, 113 00:06:57,252 --> 00:06:58,962 எனவே பாசம் வைக்காதே, சரியா? 114 00:06:58,962 --> 00:07:02,340 தாமதமாகிவிட்டது. ஏற்கனவே கேடசரஸ் ரெக்ஸை நேசிக்கிறேன். 115 00:07:05,594 --> 00:07:07,262 அப்படித்தான் அதற்கு பெயர் வைக்கப் போகிறேன். 116 00:07:07,262 --> 00:07:08,847 அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் இருக்கட்டும், 117 00:07:08,847 --> 00:07:12,017 அந்த பூனை ஒருவருடைய தொலைந்த செல்லப்பிராணியாகவோ காட்டு விலங்காகவோ இருக்கலாம். 118 00:07:12,017 --> 00:07:13,393 காட்டு விலங்கு என்றால்? 119 00:07:13,393 --> 00:07:16,229 செல்லப்பிராணியைப் போல பழக்கப்படுத்த வேண்டிய மிருகத்தை அப்படி அழைப்பார்கள், 120 00:07:16,229 --> 00:07:17,606 இருந்தாலும் அது காட்டு விலங்கு தான். 121 00:07:17,606 --> 00:07:18,690 அதேதான். 122 00:07:18,690 --> 00:07:19,858 இருவரும் சற்று விலகியே இருங்கள். 123 00:07:19,858 --> 00:07:23,403 அந்த குட்டிப் பூனையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். 124 00:07:25,071 --> 00:07:27,324 எனவே, வளர்க்கக் கூடாதா? 125 00:07:27,324 --> 00:07:28,825 வளர்க்கக் கூடாது. 126 00:07:30,118 --> 00:07:31,119 இதோ வருகிறேன். 127 00:07:33,705 --> 00:07:35,123 புலி தன் உறவினரைப் பார்க்க வருமா என்று 128 00:07:35,123 --> 00:07:37,792 நான் காத்திருக்கும் போது நீங்கள் இருவரும் ஏன் கண்காணிக்கக் கூடாது? 129 00:07:37,792 --> 00:07:39,586 அது சரியாக இருக்காது. 130 00:07:40,879 --> 00:07:43,048 கேடசரஸ் ரெக்ஸுக்கு அருகில் இருக்க விரும்புகிறாயா? 131 00:07:45,717 --> 00:07:46,885 எதையாவது பார்த்தால் எனக்குத் தெரியப்படுத்து. 132 00:07:48,303 --> 00:07:49,304 தெரியப்படுத்துகிறேன். 133 00:07:51,473 --> 00:07:52,891 போகலாம். கிரேபியர்ட். 134 00:07:58,772 --> 00:08:00,941 நான் புலியாக இருந்தால், எங்கே போவேன்? 135 00:08:08,490 --> 00:08:10,825 எனக்கு அது தெரியவில்லை. அது நிச்சயமாக உள்ளேதான் இருக்கிறதா? 136 00:08:14,663 --> 00:08:17,457 சலவை அறை நான் நினைத்தது போல இல்லை. 137 00:08:17,457 --> 00:08:20,418 ஆம், அப்பா, கேடசரஸ் ரெக்ஸை நான் கவனித்துக் கொள்வதாக சத்தியம் செய்கிறேன். 138 00:08:20,418 --> 00:08:24,881 அதற்கு உணவளித்து பராமரிக்கிறேன். மில்லி அதன் கழிவு பெட்டியை சுத்தம் செய்வாள். 139 00:08:27,008 --> 00:08:28,718 ஜேன்? கிரேபியர்ட்? 140 00:08:28,718 --> 00:08:31,471 எனக்குப் பின்னால் புலி பதுங்கி வரவில்லையா? 141 00:08:50,198 --> 00:08:52,617 வேட்டையாடப்பட்டவர் வேட்டையாடும் நேரம். 142 00:09:19,436 --> 00:09:20,896 நாம் அதைப் பார்ப்பது அதற்கு தெரியக் கூடாது. 143 00:09:22,939 --> 00:09:23,940 ஜேன்? 144 00:09:24,649 --> 00:09:26,985 உன் பத்து நிமிடம் முடிந்தது. தூங்கும் நேரம். 145 00:09:30,030 --> 00:09:31,156 கிரேபியர்ட்! 146 00:09:31,156 --> 00:09:32,991 புலிகளுக்குத் துரத்துவது பிடிக்கும் என்றேனே! 147 00:09:38,788 --> 00:09:40,832 -ஜேன். -இப்போது பேச முடியாது, அம்மா. 148 00:09:40,832 --> 00:09:43,418 புலி கிரேபியர்டை சாப்பிடப் பார்க்கிறது. மீண்டும். 149 00:09:43,960 --> 00:09:45,420 நாம் சென்று அவர்களுக்கு உதவ வேண்டும். 150 00:09:46,129 --> 00:09:47,672 முடிந்தால் அவர்களை பூட்டி வைக்க வேண்டும். 151 00:10:02,604 --> 00:10:04,314 சீக்கிரம், கிரேபியர்ட், இந்தப் பக்கம்! 152 00:10:22,582 --> 00:10:23,833 அது போய்விட்டதா? 153 00:10:26,545 --> 00:10:28,380 ஜேன்! அலறுவதை நிறுத்து. 154 00:10:28,380 --> 00:10:29,339 மன்னித்துவிடுங்கள். 155 00:10:31,758 --> 00:10:33,301 நீங்கள் புலி என்று நினைத்தோம். 156 00:10:33,301 --> 00:10:34,803 பத்து நிமிடத்துக்கு ஒப்புக்கொண்டோம். 157 00:10:34,803 --> 00:10:36,137 விலங்குகளை காப்பாற்ற நேரமெடுக்கும். 158 00:10:36,137 --> 00:10:39,224 ஆனால் அவற்றுக்கு இரவில் வேட்டையாடுவது பிடிக்கும் என்ற உங்கள் கணிப்பு சரியானது என்று நினைக்கிறேன். 159 00:10:39,224 --> 00:10:40,976 ஆனால் ஏன் என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும். 160 00:10:40,976 --> 00:10:42,435 அது மீண்டும் கிரேபியர்டைப் பின்தொடர்ந்ததா? 161 00:10:43,061 --> 00:10:44,980 ஆம், ஆனால் என்னை அல்ல. 162 00:10:45,689 --> 00:10:49,109 -ஏன் கிரேபியர்டை மட்டும் வேட்டையாடுகிறது? -நீ ஏன் அதைப் பற்றி யோசிக்கக் கூடாது? 163 00:10:50,193 --> 00:10:52,070 வா, டேவிட். உன்னை வீட்டில் விடுவதாக உன் அப்பாவிடம் சொல்லிவிட்டேன். 164 00:10:57,659 --> 00:10:58,952 வேண்டாம். 165 00:11:02,247 --> 00:11:03,206 நீயும் தான். 166 00:11:09,212 --> 00:11:10,964 ஹேய், புலி கண்காணிப்பாளர்களே. 167 00:11:10,964 --> 00:11:12,424 அனிசா, தகவல் தெரிந்ததா? 168 00:11:12,424 --> 00:11:14,050 கேடசரஸ் ரெக்ஸுக்கு குடும்பம் இருக்கிறதா? 169 00:11:14,050 --> 00:11:15,594 யார் கேடசரஸ் ரெக்ஸ்? 170 00:11:15,594 --> 00:11:19,306 தெரியுமா? பொருட்படுத்த வேண்டாம். அதைப் பற்றி நாளை பேசலாம். 171 00:11:19,306 --> 00:11:21,516 குட் நைட், அனிசா. இவர்கள் இருவரும் தூங்கப் போகிறார்கள். 172 00:11:21,516 --> 00:11:22,767 ஆனால் வெளியே குளிரடிக்கிறது. 173 00:11:22,767 --> 00:11:24,644 -பூனைக்கு ஜலதோஷம் பிடித்தால்? -அல்லது புலிக்கு? 174 00:11:25,270 --> 00:11:27,689 எனவே, இவர்கள் காப்பாற்ற இன்னொரு பூனை இருக்கிறதா? 175 00:11:27,689 --> 00:11:28,982 கேடசரஸ் ரெக்ஸ். 176 00:11:30,150 --> 00:11:32,611 -நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? -இன்னுமும் என்ன செய்வதென்று பார்க்க முயற்சிக்கிறேன். 177 00:11:32,611 --> 00:11:35,947 இணையத்தில் படித்தேன், கைவிடப்பட்ட பூனைக்கு உணவளித்தால், அது காட்டு விலங்கா என்பது தெரியும். 178 00:11:35,947 --> 00:11:37,449 நாம் ரெக்ஸிக்கு உணவளிக்க வேண்டுமா? 179 00:11:37,449 --> 00:11:38,742 கண்டிப்பாக. 180 00:11:38,742 --> 00:11:41,161 நீங்கள் இருக்கும்போது அது சாப்பிட்டால், அது பழக்கப்படுத்தப்பட்டது என்று அர்த்தம். 181 00:11:41,161 --> 00:11:42,996 மக்கள் அருகில் இருக்கும்போது காட்டுப் பூனைகள் சாப்பிடாது. 182 00:11:42,996 --> 00:11:44,789 எனவே, அது பழக்கப்படுத்தியதாக இருந்தால் என்ன செய்வது? 183 00:11:45,582 --> 00:11:48,418 அனிசா அதன் குடும்பத்தை நிச்சயமாக கண்டுபிடிக்க முயற்சிப்பார். 184 00:11:49,252 --> 00:11:51,254 நல்ல திட்டம். அது காட்டு விலங்காக இருந்தால் என்ன செய்வது? 185 00:11:51,254 --> 00:11:53,048 அதைப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிடுவேன். 186 00:11:53,048 --> 00:11:54,257 அதைப் பிடிப்பீர்களா? 187 00:11:54,257 --> 00:11:55,884 காட்டுப் பூனைகள் ஆபத்தானதாக இருக்கலாம். 188 00:11:55,884 --> 00:11:58,929 அது ஆபத்தானது என்பதற்காக நாம் அதைப் பற்றி கவலைப்படக்கூடாது என்று அர்த்தமல்ல. 189 00:12:00,138 --> 00:12:02,807 புலிகள் ஆபத்தானதாக இருக்கலாம். கிரேபியர்டிடம் கேளுங்கள். 190 00:12:03,391 --> 00:12:05,060 ஆனால் அவற்றுக்கு இன்னமும் ஒரு வீடு வேண்டும். 191 00:12:05,060 --> 00:12:06,102 ஆம். 192 00:12:09,773 --> 00:12:13,360 இன்று இரவு சில போர்வைகளை வெளியே போட்டுவிட்டு பூனைக்கு கொஞ்சம் உணவு வைக்கிறேன். 193 00:12:13,360 --> 00:12:16,655 நாளை, நீங்கள் பள்ளி முடிந்ததும் பூனைக்கு உணவளிக்கலாம். 194 00:12:16,655 --> 00:12:17,572 ஒத்துக்கொள்கிறீர்களா? 195 00:12:20,533 --> 00:12:22,661 -ஒத்துக்கொள்கிறோம். -ஒரு தலையணையையும் வைக்க முடியுமா? 196 00:12:23,411 --> 00:12:24,412 கண்டிப்பாக. 197 00:12:39,636 --> 00:12:40,637 டேவிட்? 198 00:12:43,723 --> 00:12:45,475 -ஹாய், ஜேன். -நீ நலமா? 199 00:12:46,518 --> 00:12:47,686 நான் ரெக்ஸியைப் பற்றி கவலைப்படுகிறேன். 200 00:12:48,270 --> 00:12:49,187 நீ நலமா? 201 00:12:49,187 --> 00:12:52,566 நான் புலியைப் பற்றி கவலைப்படுகிறேன். எல்லா புலிகளைப் பற்றியும். 202 00:12:52,566 --> 00:12:53,858 ஏதாவது யோசனைகள்? 203 00:12:55,193 --> 00:12:58,863 "இயற்கையுடன் இணக்கமாக வாழக்கூடிய உலகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்." 204 00:12:58,863 --> 00:12:59,906 ஜேன் குட்டால்? 205 00:12:59,906 --> 00:13:00,907 ஆம். 206 00:13:00,907 --> 00:13:02,200 அதற்கு என்ன அர்த்தம்? 207 00:13:02,200 --> 00:13:04,536 இணக்கமாக வாழ்வது என்றால் கனிவோடு இருப்பது, 208 00:13:04,536 --> 00:13:07,998 யாரையும் அல்லது எதையும் புண்படுத்தாமல், ஒருவருக்கொருவர் மரியாதையுடன் இருப்பது. 209 00:13:09,874 --> 00:13:12,002 மிகவும் மோசம். வாக்கி-டாக்கி. 210 00:13:13,545 --> 00:13:14,796 இப்போதே. 211 00:13:14,796 --> 00:13:18,258 ஆனால், அம்மா, அனிசா பூனையை துரத்திவிடுவார் என்று டேவிட் கவலைப்படுகிறான். 212 00:13:18,258 --> 00:13:21,636 -அந்தப் பூனை கொட்டகையில் வாழ முடியாது. -நாம் அதற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். 213 00:13:21,636 --> 00:13:23,972 ஆம், என்னுடன் இருக்கலாம். 214 00:13:23,972 --> 00:13:26,057 நான் என் அப்பாக்களை ஒப்புக்கொள்ள வைத்த பிறகு. 215 00:13:27,225 --> 00:13:31,062 சில சமயங்களில் நிம்மதியாக ஒன்றாக வாழ்வது என்பது தனியாக விட்டுவிடுவது, 216 00:13:31,062 --> 00:13:32,355 குறிப்பாக வனவிலங்குகளைப் பொறுத்தவரை. 217 00:13:34,900 --> 00:13:36,693 இப்போதைக்கு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும், 218 00:13:36,693 --> 00:13:38,820 எனவே நாளை உங்கள் பணியை புத்துணர்ச்சியோடு தொடங்கலாம். 219 00:13:40,030 --> 00:13:40,989 சரியா? 220 00:13:42,908 --> 00:13:43,742 சரி. 221 00:13:44,534 --> 00:13:46,620 -சரியா? -சரி. 222 00:13:53,168 --> 00:13:56,504 நன்றாக தூங்கு. நாளை நீ உதவ ஒரு விலங்கு இருக்கிறது. 223 00:14:08,266 --> 00:14:09,893 மில்லி தயாராகிக் கொண்டிருக்கிறாள். 224 00:14:11,645 --> 00:14:12,687 என்ன ஆனது? 225 00:14:12,687 --> 00:14:14,773 அனிசா தோட்டக் கொட்டகையில் வசிக்கும் ஒரு பூனையைக் கண்டுபிடித்தார். 226 00:14:15,482 --> 00:14:16,483 நிஜமாகவா? 227 00:14:16,483 --> 00:14:17,609 நான் அதற்கு பெயரிட்டேன். 228 00:14:18,360 --> 00:14:20,320 நான் யூகிக்கிறேன். டைனோசர் பெயரா? 229 00:14:20,320 --> 00:14:23,949 -கேடசரஸ் ரெக்ஸ். சுருக்கமாக ரெக்ஸி. -புத்திசாலி. 230 00:14:27,661 --> 00:14:28,954 வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 231 00:14:30,372 --> 00:14:33,625 ரெக்ஸி யாருக்கோ சொந்தமானதாக இருக்கலாம் அல்லது பழக்கப்படாததாக இருக்கலாம் என்று அனிசா சொன்னார், 232 00:14:34,668 --> 00:14:36,962 ஆனால் அது பழக்கமானதாகவும் தனியாகவும் இருந்தால்? 233 00:14:36,962 --> 00:14:38,296 நான் எப்போதும் பூனை வளர்க்க ஆசைப்பட்டேன். 234 00:14:39,548 --> 00:14:41,424 நான் மில்லியுடன் பகிர்ந்து கொள்ளலாமா? 235 00:14:41,424 --> 00:14:43,718 நீ அதை ஏன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரிகிறது, டேவி, 236 00:14:43,718 --> 00:14:46,137 ஆனால் ஒரு செல்லப்பிராணி என்பது பெரிய பொறுப்பு. 237 00:14:46,721 --> 00:14:48,306 ஆனால் நான் ரெக்ஸுக்கு வீடு கொடுக்க விரும்புகிறேன். 238 00:14:48,306 --> 00:14:51,851 நீங்களும் அப்பாவும் எனக்குக் கொடுத்ததைப் போன்ற நிரந்தரமான ஒன்று. 239 00:14:52,727 --> 00:14:54,229 நீ உணர்வுப்பூர்வமாக பேசுகிறாய். 240 00:14:54,229 --> 00:14:55,605 எனவே, அது ஆம்தானா? 241 00:14:56,231 --> 00:14:57,232 நன்றி, அப்பா. 242 00:14:57,232 --> 00:15:00,068 செல்லப்பிராணியை வளர்ப்பது குழந்தைகளை தத்தெடுப்பதை விட வித்தியாசமானது, 243 00:15:00,068 --> 00:15:02,654 ஆனால் அது இன்னும் ஒரு குடும்பமாக நாம் எடுக்க வேண்டிய முடிவு. 244 00:15:02,654 --> 00:15:06,283 -அதோடு மில்லி ஒரு நாய்க்காக ஏங்குகிறாள். -நாம் இரண்டையும் வளர்க்கலாம். 245 00:15:07,075 --> 00:15:11,329 கேடசரஸ் ரெக்ஸுக்கு வீடு தேவையா என்று கண்டுபிடிக்க நாம் ஏன் காத்திருக்கக்கூடாது? 246 00:15:11,329 --> 00:15:12,414 நல்லது. 247 00:15:12,998 --> 00:15:15,959 -பள்ளி முடிந்ததும் மேலே பேசுவோம், சரியா? -நன்றி, அப்பா. 248 00:15:15,959 --> 00:15:17,502 -உங்களை நேசிக்கிறேன். -நானும்தான். 249 00:15:19,087 --> 00:15:22,090 இப்போது, உனக்கு பேகல் வேண்டுமா அல்லது முட்டை வறுவல் வேண்டுமா? 250 00:15:22,090 --> 00:15:23,008 இரண்டும். 251 00:15:26,845 --> 00:15:28,430 நாம் அனிசாவைக் கண்டுபிடிக்க வேண்டும். 252 00:15:28,930 --> 00:15:30,056 டேவிட்? 253 00:15:30,056 --> 00:15:32,726 சீக்கிரம், மில்லி. உன்னை வீட்டில் இறக்கி விடுவோம். 254 00:15:40,025 --> 00:15:41,860 இறுதியாக! உணவளிக்கலாம். 255 00:15:44,696 --> 00:15:46,323 சீக்கிரம்! போகலாம். 256 00:15:48,950 --> 00:15:50,785 உற்சாகமான காத்திருப்பு தொடங்கட்டும். 257 00:15:52,162 --> 00:15:53,538 அது பரவசமாக இருப்பது போலவே, 258 00:15:53,538 --> 00:15:56,207 கட்டிடத்தைச் சுற்றியுள்ள மற்ற விஷயங்களை நான் கவனித்துக் கொள்ள வேண்டும். 259 00:15:57,292 --> 00:15:59,002 அது பழக்கப்படாதது அல்ல என்று நம்புகிறேன். 260 00:15:59,961 --> 00:16:03,715 பழக்கப்படாத பூனைகள் என்றால் அவை மக்களுடன் இருக்க விரும்பாதவை என்று அர்த்தம். 261 00:16:04,216 --> 00:16:09,471 புலி, பூனை இரண்டுமே காட்டு விலங்குகள் என்பதால், புலிகளுக்கும் அப்படித்தான் என்று யோசிக்கிறேன். 262 00:16:09,471 --> 00:16:10,764 சரி, எனக்கு எதுவும் தெரியாது. 263 00:16:11,514 --> 00:16:13,558 சிறிது நேரம் கழித்து திரும்ப வருகிறேன். 264 00:16:13,558 --> 00:16:15,227 புலியால் சாப்பிடப்படாமல் இரு. 265 00:16:15,227 --> 00:16:16,978 உனக்குத்தான் சொன்னேன், கிரேபியர்ட். 266 00:16:16,978 --> 00:16:18,355 நன்றி, அனிசா. 267 00:16:23,318 --> 00:16:24,778 ரெக்ஸி, உணவு சாப்பிட வா. 268 00:16:26,821 --> 00:16:30,116 அல்லது சாப்பிடவில்லை என்றாலும் மகிழ்ச்சிதான். உன் விருப்பம். 269 00:16:31,201 --> 00:16:32,744 எப்படி இருந்தாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும். 270 00:16:49,553 --> 00:16:52,514 கேடசரஸ் ரெக்ஸ் சாப்பிட வெளியே வரும் என்று நான் நினைக்கவில்லை. 271 00:16:57,435 --> 00:16:59,980 அது வராமல் போகலாம், ஆனால் புலி வரும். 272 00:17:01,523 --> 00:17:03,066 பூனை சாப்பிடுவதற்காக காத்திருக்கும்போது, 273 00:17:03,066 --> 00:17:06,611 புலிகளுக்கு இரவில் வேட்டையாடுவது ஏன் மிகவும் பிடிக்கும் என எப்படி கண்டுபிடிப்பது என தெரியும். 274 00:17:06,611 --> 00:17:09,322 இந்த முறை அது உன்னைத் துரத்த வேண்டும். 275 00:17:10,073 --> 00:17:11,157 திட்டம் இதுதான். 276 00:17:20,458 --> 00:17:21,626 கிட்டத்தட்ட. 277 00:17:25,255 --> 00:17:26,631 கிட்டத்தட்ட. 278 00:17:30,719 --> 00:17:31,845 இப்போது! 279 00:17:43,982 --> 00:17:46,151 அது அப்படித்தான் நடக்க திட்டமிட்டிருந்தாயா? 280 00:17:46,151 --> 00:17:49,070 சரியாக இப்படி இல்லை. உண்மையில், இப்படி இல்லை. 281 00:17:49,070 --> 00:17:52,073 புலிகள் சில சமயங்களில் இரையைப் பிடிக்க ஏறும் என்பதை மறந்துவிட்டேன். 282 00:17:55,327 --> 00:17:56,953 அவை கூரைக்குச் செல்கின்றன. வா. 283 00:18:19,017 --> 00:18:20,310 நாங்கள் மனிதர்கள்! 284 00:18:20,310 --> 00:18:22,854 எங்களைச் சுற்றி இருப்பது உனக்குப் பிடிக்காது! 285 00:18:32,822 --> 00:18:35,659 புலி என்னையும் டேவிட்டையும் துரத்தாமல் உன்னைத் துரத்துவதற்கான அதே காரணம்தான், 286 00:18:35,659 --> 00:18:37,994 அவை பகலை விட இரவை விரும்புவதற்கும். 287 00:18:37,994 --> 00:18:40,330 அவை சத்தம் மற்றும் ஆபத்தான நபர்களிடமிருந்து விலகி இருக்க விரும்புகின்றன. 288 00:18:40,330 --> 00:18:41,748 காட்டுப் பூனைகள் போல. 289 00:18:43,083 --> 00:18:45,418 பூனை! கேடசரஸ் ரெக்ஸுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 290 00:18:51,341 --> 00:18:52,592 எனவே, இது பழகாத பூனை இல்லை? 291 00:18:53,426 --> 00:18:56,096 என்னைப் பார்த்து மியாவ் என கத்திவிட்டு, சாப்பிட தொடங்கியது, 292 00:18:56,096 --> 00:18:57,931 எனவே அது பழக்கப்பட்டது போல தெரிகிறது. 293 00:18:57,931 --> 00:19:01,309 -அதாவது ரெக்ஸுக்கு வீடு தேவையா? -நான் அப்படி நினைக்கவில்லை, டேவிட். 294 00:19:02,686 --> 00:19:05,188 இந்தப் பதிவை இணையத்தில் பார்த்தேன். 295 00:19:06,481 --> 00:19:07,482 {\an8}தொலைந்துபோன பூனை! 296 00:19:07,482 --> 00:19:09,484 {\an8}அதன் நிஜப் பெயர் "பாவ்ஜாமாஸ்"? 297 00:19:10,986 --> 00:19:12,362 இது உண்மையில் நன்றாக இருக்கிறது. 298 00:19:15,156 --> 00:19:16,950 நீ நிஜமாகவே மிகவும் அழகான பூனைக்குட்டி. 299 00:19:18,451 --> 00:19:20,829 -உனக்கு ஒரு வீடு இருப்பதில் மகிழ்ச்சி. -ஆம், எனக்கும்தான். 300 00:19:21,371 --> 00:19:24,541 ஆனால் புலிகள் இன்னும் தன வாழ்விடங்களை இழந்துகொண்டே இருக்கின்றன. 301 00:19:24,541 --> 00:19:26,293 அதனால்தான் அவை குறைந்துகொண்டே வருகின்றன. 302 00:19:26,293 --> 00:19:28,044 ஆனால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? 303 00:19:28,837 --> 00:19:31,631 பழக்கப்படாத பூனைகள் போல புலிகளும் தனித்து விடப்பட விரும்புவதால், 304 00:19:31,631 --> 00:19:34,968 அவற்றுக்கென சொந்தமாக ஒரு இடம் இருப்பதை உறுதிசெய்ய ஒரு வழி இருக்கலாம். 305 00:19:35,552 --> 00:19:39,306 நான் இன்னும் ஒரு பூனையை வளர்க்க விரும்புகிறேன், ஆனால் நாம் ஒரு புலியை வளர்ப்போமா? 306 00:19:39,306 --> 00:19:40,932 அது நல்ல யோசனை. 307 00:19:40,932 --> 00:19:44,811 ஆனால் வீட்டில் புலி இருந்தால் நம் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்களா என்று தெரியவில்லை. 308 00:19:44,811 --> 00:19:47,022 இவ்வளவு பெரிய பெட்டி எங்கே கிடைக்கும்? 309 00:19:47,022 --> 00:19:49,149 கரண்டியை பயன்படுத்துவதா அல்லது மண்வெட்டியையா? 310 00:19:50,692 --> 00:19:52,485 நீங்கள் நிஜ புலி ஒன்றை வளர்க்க முடியாது, 311 00:19:52,485 --> 00:19:54,738 ஆனால் நீங்கள் புலிகள் சரணாலயத்தின் மூலம் ஒன்றை கவனித்துக்கொண்டால், 312 00:19:54,738 --> 00:19:56,573 நீங்கள் அவற்றுக்கு உதவலாம், அவை வசிக்கும் இடத்தைப் பாதுகாக்கலாம். 313 00:19:57,407 --> 00:19:58,700 நம் பாக்கெட் மணியை பயன்படுத்தலாம். 314 00:19:59,868 --> 00:20:02,203 அல்லது பாக்கெட் மணியில் கொஞ்சம்? 315 00:20:03,204 --> 00:20:06,458 நல்ல யோசனையாக தெரிகிறது. டைகராசரஸ் ரெக்ஸ், இதோ வருகிறோம். 316 00:20:06,958 --> 00:20:08,293 இணையத்தில் ஒன்றைக் கண்டுபிடிப்போம். 317 00:20:12,088 --> 00:20:14,674 அல்லது அதை நாளைய இரவு வேலையாக செய்யலாம். 318 00:20:17,886 --> 00:20:20,388 பை, பாவ்ஜாமாஸ். உன்னை நேசிக்கிறேன். 319 00:20:24,893 --> 00:20:28,230 -ஹேய். கேடசரஸ் ரெக்ஸுடன் எப்படி போனது? -அதற்கு ஒரு குடும்பம் இருக்கிறது. 320 00:20:28,813 --> 00:20:31,191 அதன் நிஜப் பெயர் பாவ்ஜாமாஸ். 321 00:20:32,359 --> 00:20:34,069 -மிகவும் நல்ல பெயர். -அதைத்தான் நானும் சொன்னேன். 322 00:20:36,988 --> 00:20:37,864 நீ நலமா, செல்லம்? 323 00:20:38,949 --> 00:20:40,700 அதற்கு ஒரு வீடு இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. 324 00:20:40,700 --> 00:20:44,704 -பிற செல்லப்பிராணிகளைப் பற்றி கனவு காணலாம். -பிற செல்லப் பெயர்களையும். 325 00:20:45,622 --> 00:20:46,665 ஆம். 326 00:20:47,540 --> 00:20:48,541 இவற்றைப் போல... 327 00:20:50,043 --> 00:20:51,127 பேர்டாடாக்டைலஸ். 328 00:20:52,379 --> 00:20:53,755 ஃபிஷோசர். 329 00:20:54,381 --> 00:20:55,757 புபிசெராடாப்ஸ். 330 00:20:55,757 --> 00:20:57,592 எனக்கு புபிசெராடாப்ஸ் பிடித்திருக்கிறது! 331 00:20:57,592 --> 00:20:59,469 சரி, உங்கள் இருவருக்கும். உறங்குவதற்கான நேரம். 332 00:21:00,512 --> 00:21:04,683 உண்மையில், ஜேன், கிரேபியர்ட் மற்றும் நான் இன்னும் ஒரு விஷயத்தை முதலில் முடிக்க வேண்டும். 333 00:21:06,268 --> 00:21:07,310 தயவு செய்து? 334 00:21:13,858 --> 00:21:16,236 இப்போது, புலியைப் பார்க்க இது ஒரு அருமையான வழி. 335 00:21:16,236 --> 00:21:19,656 புலிகளுக்கு இரவைப் பிடிப்பதில் ஆச்சரியமில்லை. அவை தனியாக இருக்க இதுவே சிறந்த நேரம். 336 00:21:19,656 --> 00:21:21,408 அவை நிஜமாகவே அழகானவை. 337 00:21:30,792 --> 00:21:33,628 இயற்கையோடு இசைந்து வாழ்வது எளிதல்ல, இல்லையா? 338 00:21:34,254 --> 00:21:36,256 இல்லை. ஆனால் அது மதிப்புக்குரியது. 339 00:21:50,896 --> 00:21:52,564 புலிகளைக் காப்பாற்ற உதவுங்கள். 340 00:21:54,316 --> 00:21:57,235 ஜேன், டேவிட், குட் நைட் சொல்ல வேண்டிய நேரம் இது. 341 00:21:57,819 --> 00:21:59,321 இது ஒரு நல்ல புலிகள் சரணாலயம் போல தெரிகிறது. 342 00:21:59,321 --> 00:22:00,906 ஆம், அவற்றில் நிறைய நிலம் இருக்கிறது. 343 00:22:00,906 --> 00:22:02,365 -ஜேன்? -வருகிறேன், அம்மா. 344 00:22:02,365 --> 00:22:04,534 இன்னும் ஆய்வு செய்கிறோம். அதோடு, ஒரு அழைப்பு இருக்கிறது. 345 00:22:04,534 --> 00:22:07,203 -ஒரு அழைப்பு இருக்கிறதா? யாரோடு? -நைலா ஆஸ்மி. 346 00:22:07,203 --> 00:22:09,623 அது யார்? நீ ஏன் அவரிடம் காலையில் பேச முடியாது? 347 00:22:09,623 --> 00:22:13,126 கடைசி சுமத்ரா புலிகள் வாழும் காடுகளை நைலா பாதுகாக்கிறார். 348 00:22:13,126 --> 00:22:15,629 அது இந்தோனேசியாவில் இருக்கிறது. அவர் எப்போது வேண்டுமானாலும் அழைப்பார்... 349 00:22:16,296 --> 00:22:17,547 ஒரு நிமிடம். 350 00:22:18,256 --> 00:22:22,928 -தயவுசெய்து? -தயவுசெய்து? 351 00:22:22,928 --> 00:22:24,763 சரி. ஐந்து நிமிடங்கள். 352 00:22:25,513 --> 00:22:26,806 -மீண்டும். -நன்றி, அம்மா. 353 00:22:26,806 --> 00:22:28,225 நன்றி, ஜேனின் அம்மா. 354 00:22:29,559 --> 00:22:33,104 -ஹாய், நைலா! -ஹலோ! நீங்கள் ஜேன், டேவிட்டாக இருக்க வேண்டும். 355 00:22:33,104 --> 00:22:36,066 எங்களுடன் பேசியதற்கு நன்றி. புலிகளைப் பற்றி எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. 356 00:22:36,066 --> 00:22:39,486 ஆஹா. இப்போது எங்கே இருக்கிறீர்கள், நைலா? அது மிகவும் அழகாக இருக்கிறது. 357 00:22:39,486 --> 00:22:41,613 நான் டிம்பாங் லவன் என்னும் கிராமத்தில் இருக்கிறேன், 358 00:22:41,613 --> 00:22:44,658 லியூசர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அடுத்ததாக அமைந்திருக்கிறது, 359 00:22:44,658 --> 00:22:50,872 உலகில் ஒராங்குட்டான், புலி, காண்டாமிருகம், யானை எல்லாம் 360 00:22:50,872 --> 00:22:52,999 காடுகளில் ஒன்றாக வாழ்கின்ற ஒரே இடம். 361 00:22:52,999 --> 00:22:56,044 அந்தப் புலியைப் பார். கிரேபியர்டை சாப்பிட முயன்ற புலி போல இருக்கிறது. 362 00:22:56,044 --> 00:22:59,297 இருந்தாலும் அதைக் காப்பாற்றிவிட்டோம். நைலா, நீங்கள் புலியை நேரில் பார்த்திருக்கிறீர்களா? 363 00:22:59,297 --> 00:23:00,382 உண்மையில், ஆம். 364 00:23:00,382 --> 00:23:01,967 எனக்கு நான்கு வயதாக இருந்தபோது, 365 00:23:01,967 --> 00:23:06,388 நான் என் தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தேன், ஆரஞ்சு பூனைக் குட்டிகளைக் கண்டேன், 366 00:23:06,388 --> 00:23:09,307 என் தாத்தா பாட்டி பயந்து, "நைலா, அது ஒரு குட்டிப் புலி!" என்று 367 00:23:09,307 --> 00:23:11,518 சொன்னார்கள். 368 00:23:11,518 --> 00:23:15,397 உண்மையில் புலிக்கு மனிதர்களை பிடிக்காது, எனவே நாம் தள்ளியே இருக்க வேண்டும். 369 00:23:15,397 --> 00:23:18,817 நாங்கள் கண்காணித்துக்கொண்டிருந்த புலி எங்களை சுற்றி இருக்க விரும்பவில்லை, அது நிச்சயம். 370 00:23:18,817 --> 00:23:22,320 அவற்றை மதிப்பதும், பாதுகாப்பதும் மிக முக்கியம், 371 00:23:22,320 --> 00:23:26,908 ஏனென்றால் அவை பூர்வீக சுமத்ரா படாக் மக்களான எங்களில் ஒரு பகுதி. 372 00:23:26,908 --> 00:23:29,202 நீங்கள் புலிகளுடன் இணைந்திருப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. 373 00:23:29,202 --> 00:23:30,912 நீங்கள் அவற்றுக்கு எப்படி உதவ ஆரம்பித்தீர்கள்? 374 00:23:30,912 --> 00:23:34,916 காடுகளுக்குள் நான் முதன்முதலாக அடியெடுத்து வைத்தபோது, அது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. 375 00:23:34,916 --> 00:23:37,961 அது ஒரு மாயாஜால இடம் போல தோன்றியது. 376 00:23:37,961 --> 00:23:41,965 அப்போதுதான் தெரிந்தது காடுகளை பாதுகாக்க நான் வன ரோந்துப் பணியாளராக 377 00:23:41,965 --> 00:23:43,383 ஆக வேண்டும் என்று. 378 00:23:43,383 --> 00:23:44,885 வன ரோந்து பணியாளர் என்ன செய்வார்? 379 00:23:44,885 --> 00:23:46,970 அவர்கள் காட்டுக்குள் வந்து 380 00:23:46,970 --> 00:23:51,266 அந்தப் பகுதியைச் சுற்றி வாழும் தாவர இனங்கள் 381 00:23:51,266 --> 00:23:56,187 அல்லது விலங்குகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் பாதுகாப்பார்கள். 382 00:23:56,187 --> 00:24:01,192 பத்து வருடங்கள் களத்தில் பணியாற்றிய பிறகு, அதிக சுமத்ரா பழங்குடிப் பெண்கள் 383 00:24:01,192 --> 00:24:04,362 காடுகளை பாதுகாப்பதில் ஈடுபட ஊக்குவிப்பதற்காக எனது 384 00:24:04,362 --> 00:24:06,364 சொந்த நிறுவனங்களை உருவாக்க முடிவு செய்தேன். 385 00:24:06,364 --> 00:24:09,492 ஆனால் அந்த காட்டில் உள்ள புலிகளையும் மற்ற விலங்குகளையும் எது காயப்படுத்துகிறது? 386 00:24:09,492 --> 00:24:12,913 அவற்றின் வாழ்விடங்கள் வளர்ச்சிக்காகவும் மற்ற மனிதச் செயல்பாடு 387 00:24:12,913 --> 00:24:15,457 தொடர்பான பிற விஷயங்களுக்காகவும் பறிக்கப்படுகிறது. 388 00:24:15,457 --> 00:24:17,626 நிறைய பேருக்கு கற்பிக்க வேண்டும், 389 00:24:17,626 --> 00:24:20,212 ஏனென்றால் அதற்கு நாம் ஏதாவது செய்யவில்லை என்றால், 390 00:24:20,212 --> 00:24:22,255 நாம் அவற்றை நிரந்தரமாக இழந்துவிடுவோம். 391 00:24:22,255 --> 00:24:24,758 நாங்கள் புலிகள் சரணாலயத்திற்கு உதவப்போகிறோம். நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்? 392 00:24:24,758 --> 00:24:27,802 உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள காட்டிற்குச் சென்று, 393 00:24:27,802 --> 00:24:32,390 காடுகளை உணர கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். 394 00:24:32,390 --> 00:24:35,602 நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் இணைப்பது... 395 00:24:35,602 --> 00:24:37,646 உங்கள் ஆன்மாவை மீண்டும் காட்டுடன் இணைப்பது. 396 00:24:37,646 --> 00:24:38,730 அது உங்கள் வீடு. 397 00:24:38,730 --> 00:24:39,856 எனக்கு அந்த யோசனை பிடித்திருக்கிறது. 398 00:24:39,856 --> 00:24:42,567 -ஜேன், காட்டுக்குப் போவோம். -நல்ல முயற்சி. 399 00:24:43,235 --> 00:24:45,779 இன்றிரவு அல்ல. உன் ஐந்து நிமிடங்கள் முடிந்துவிட்டது. 400 00:24:46,363 --> 00:24:48,990 நாங்கள் போக வேண்டும், நைலா. எங்களுடன் பேசியதற்கு மிக்க நன்றி. 401 00:24:48,990 --> 00:24:51,785 நாங்கள் காட்டுடன் இணைத்து, அதை எல்லோரிடமும் செய்யச் சொல்வோம். 402 00:24:51,785 --> 00:24:55,121 -அதைக் கேட்டதில் மகிழ்ச்சி. பை! -பை, நைலா! 403 00:24:55,121 --> 00:24:57,958 சரி, இப்போது நிச்சயமாக இதை முடிக்க வேண்டிய நேரம் இது. 404 00:24:57,958 --> 00:24:59,084 குட் நைட், டேவிட். 405 00:24:59,084 --> 00:25:00,252 அவ்வளவு வேகமாக இல்லை, டேவிட். 406 00:25:00,252 --> 00:25:03,255 அம்மா, நாங்கள் இன்னும் ஆதரவு தெரிவிக்க ஒரு புலிகள் சரணாலயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 407 00:25:03,255 --> 00:25:04,506 இன்னும் ஐந்து நிமிடங்கள். 408 00:25:04,506 --> 00:25:07,801 -தயவுசெய்து? -தயவுசெய்து? 409 00:25:07,801 --> 00:25:09,469 மூன்று நிமிடங்கள், அதிகபட்சம். 410 00:25:09,469 --> 00:25:11,388 -நன்றி, அம்மா. -நல்லதாக ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். 411 00:25:13,431 --> 00:25:14,516 பாந்தெரா டைகிரிஸ் புலி 412 00:25:14,516 --> 00:25:15,642 நாம் எப்படி உதவலாம்? 413 00:25:15,642 --> 00:25:18,270 அவற்றின் வீடுகளைப் பாதுகாத்திடுங்கள் புலிகளுக்கு இடம் கொடுங்கள் 414 00:25:26,570 --> 00:25:29,823 ஓ, ஜேன். இன்னொரு அருமையான புலிகள் சரணாலயத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். 415 00:26:11,239 --> 00:26:13,241 வசனத் தமிழாக்கம் அருண்குமார்