1 00:00:36,245 --> 00:00:37,579 "கேனிஸ் லூபஸ்." 2 00:00:39,790 --> 00:00:41,750 அவை இங்கேதான் எங்கோ இருக்க வேண்டும். 3 00:00:41,750 --> 00:00:45,087 கால்தடங்கள் இல்லை. ரோமங்கள் இல்லை. வேட்டையாடிய அறிகுறி இல்லை. 4 00:00:45,712 --> 00:00:49,550 நாம் இதை கைவிட்டுவிட்டு, ஏதாவது வெதுவெதுப்பான, சாலைக்குத் தள்ளியிருக்கும் நிலத்திற்குப் போகலாம். 5 00:00:49,550 --> 00:00:51,677 நாம் பின்வாங்கக் கூடாது. நாம் தொடங்கக் கூட இல்லை. 6 00:00:51,677 --> 00:00:53,262 ஓநாய்கள் ஏன் ஊளையிடுகின்றன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 7 00:00:54,888 --> 00:00:57,724 ஆம், கிரேபியர்ட். அவை எதற்காக அப்படிச் செய்கின்றன? 8 00:00:57,724 --> 00:01:00,143 ஒருவேளை நாம் வெறும் கண்களால் தேடக் கூடாது. 9 00:01:00,811 --> 00:01:02,604 ஒருவேளை நாம் காதுகளைப் பயன்படுத்தலாம். 10 00:01:03,188 --> 00:01:04,355 நல்ல யோசனை. 11 00:01:09,069 --> 00:01:10,279 உனக்குக் கேட்டதா? 12 00:01:10,279 --> 00:01:12,239 நான் அதை கற்பனை செய்தேன் என்று நம்பினேன். 13 00:01:15,742 --> 00:01:18,328 நீ சொல்வது சரிதான், கிரேபியர்ட். ஓநாயின் ஊளை சத்தம் முன்னாலிருந்து கேட்டது. 14 00:01:18,328 --> 00:01:20,998 ஜேன், நம்மை ஓநாய்கள் சாப்பிடும் வாய்ப்புகள் இருக்கிறதா? 15 00:01:20,998 --> 00:01:24,459 ஓநாய்கள் அரிதாகவே மக்களைத் தாக்கும். நாம்தான் அவற்றைத் தாக்குகிறோம். 16 00:01:24,459 --> 00:01:26,086 ஓநாய்கள் அழியும் ஆபத்தில் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, 17 00:01:26,086 --> 00:01:29,173 அவற்றைப் புரிந்துகொள்ளாத நபர்களால் அவை வேட்டையாடப்படுவதுதான். 18 00:01:29,173 --> 00:01:31,842 எனவே, ஓநாய் என்னை சாப்பிடாதா? 19 00:01:32,885 --> 00:01:34,720 அதற்கு வாய்ப்பு அவ்வளவாக இல்லை. 20 00:01:34,720 --> 00:01:37,222 ஆனால் 0% வாய்ப்பு இல்லையா? 21 00:01:41,518 --> 00:01:44,229 ஓநாய்கள் கூட்டம்! நிறைய இருக்கின்றன. 22 00:01:44,229 --> 00:01:47,566 அவை ஆபத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரே நபர் நீதான். 23 00:01:49,818 --> 00:01:51,278 அவை சந்தோஷமாக இருக்கின்றன. 24 00:01:51,278 --> 00:01:53,572 அவை தங்கள் வால்களை ஆட்டுவதைப் பார். அவை நாய்கள் போல இருக்கின்றன. 25 00:01:53,572 --> 00:01:55,449 நாய்கள் ஓநாய்களின் இனம் என்பதுதான் அதற்குக் காரணம். 26 00:01:55,949 --> 00:01:57,326 நாய்கள் ஓநாய்களாக இருந்தனவா? 27 00:01:57,326 --> 00:02:01,288 ஆம், மிக, மிக நீண்ட காலத்துக்கு முன்பு அவை மக்களுடன் பழகத் தொடங்கும் வரை. 28 00:02:01,288 --> 00:02:02,414 பூடில் நாய்கள் கூடவா? 29 00:02:03,081 --> 00:02:04,124 பூடில் நாய்களும்தான். 30 00:02:06,418 --> 00:02:08,127 நான் ஓநாயாக இருந்திருக்கலாம். 31 00:02:08,127 --> 00:02:11,590 கடமான், மான், கரிபோவை வேட்டையாட நீ அதற்கு உதவ விரும்பினால் ஒழிய முடியாது. 32 00:02:11,590 --> 00:02:12,799 என்ன சொல்கிறாய்? 33 00:02:12,799 --> 00:02:15,552 ஓநாய்கள் கூட்டமாக வாழும், அப்படியென்றால் அவை எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்யும். 34 00:02:15,552 --> 00:02:17,804 வேட்டையாடுவது. தூங்குவது. விளையாடுவது. 35 00:02:17,804 --> 00:02:19,765 பெற்றோர்கள்தான் பொதுவாக அவற்றின் தலைவர்களாக இருக்கும். 36 00:02:19,765 --> 00:02:22,226 அவை பொறுப்பில் இருக்கும், மற்ற ஓநாய்கள் அவை சொல்வதைக் கேட்க வேண்டும். 37 00:02:22,226 --> 00:02:23,936 கேட்க என் வீட்டைப் போலவே இருக்கிறது. 38 00:02:24,770 --> 00:02:28,273 அவை ஏன் ஊளையிடுகின்றன என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்று இன்னும் தெரியவில்லை. 39 00:02:29,316 --> 00:02:30,317 ஜேன். 40 00:02:30,317 --> 00:02:32,236 அவை ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ள ஊளையிடுகின்றனவா? 41 00:02:32,236 --> 00:02:33,362 ஜேன். 42 00:02:33,362 --> 00:02:35,656 - அல்லது மற்ற ஓநாய் கூட்டத்தோடு பேச அல்லது... - ஜேன். 43 00:02:39,493 --> 00:02:43,121 அது அழகாக இருக்கிறது, ஆனால் அது ஏன் தனியாக இருக்கிறது? 44 00:02:43,121 --> 00:02:45,707 அதேதான். அது பெண் ஓநாய் என்று உனக்கு எப்படித் தெரியும்? 45 00:02:45,707 --> 00:02:47,668 பெண் ஓநாய்கள் ஆண் ஓநாய்களை விட சிறியவை. 46 00:02:53,632 --> 00:02:55,259 இது அங்கிருக்கும் கூட்டத்தைச் சேர்ந்ததா? 47 00:02:55,926 --> 00:02:58,220 அப்படி இருந்தால், ஏன் பிரிந்து வந்திருக்கிறது என்று தெரியவில்லை. 48 00:02:58,220 --> 00:02:59,388 நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். 49 00:02:59,388 --> 00:03:01,682 ஓநாய்கள் ஏன் ஊளையிடுகின்றன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். 50 00:03:01,682 --> 00:03:02,766 இரண்டையும் தெரிந்துகொள்ள வேண்டும். 51 00:03:03,267 --> 00:03:04,726 ஓநாய்களை நாம் எவ்வளவு புரிந்துகொள்ள முடிகிறதா, 52 00:03:04,726 --> 00:03:07,563 அந்த அளவுக்கு மக்கள் அவற்றைப் பார்த்து பயப்படுவதை நிறுத்துவதற்கு உதவ முடியும். 53 00:03:07,563 --> 00:03:09,439 - வா. - எங்கே போகிறாய்? 54 00:03:11,233 --> 00:03:13,026 ஸ்னோகேட் வண்டி மரங்கள் வழியாக போகாது. 55 00:03:13,026 --> 00:03:14,236 நாம் நடந்துதான் பின்தொடர வேண்டும். 56 00:03:15,821 --> 00:03:17,281 பனிக் காலணிக்கான நேரம். 57 00:03:19,283 --> 00:03:21,451 என்னால் இங்கேயே இருக்க முடியும். 58 00:03:27,833 --> 00:03:30,919 இன்னொரு பாதச்சுவடு இருக்கிறது. இன்னொன்று. 59 00:03:30,919 --> 00:03:35,716 பனிக்காலணிகளோடு நடப்பது கடினமாக இருக்கிறது. இதைப் பனியில் தடுமாறுவது என்று சொல்லலாம். 60 00:03:37,718 --> 00:03:39,720 நீ ஒரே இடத்தில் சுற்றுகிறாய். 61 00:03:39,720 --> 00:03:40,804 இல்லை. 62 00:03:42,514 --> 00:03:43,682 அது நம்மைச் சுற்றி வருகிறது. 63 00:03:43,682 --> 00:03:46,768 ஓநாய்கள் மக்களை சாப்பிடாது என்று நீ சொன்னதாக நினைத்தேன், சரிதானே? 64 00:03:47,352 --> 00:03:48,729 சரிதானே? 65 00:03:54,568 --> 00:03:55,694 பக்ஸ்லி. 66 00:03:56,904 --> 00:03:58,238 திரும்பி வா. 67 00:03:59,364 --> 00:04:00,574 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 68 00:04:00,574 --> 00:04:02,451 - ஹாய். - இதற்காக வருந்துகிறேன். 69 00:04:02,451 --> 00:04:05,412 சரி, நாம் ஹாலுக்குள் பொருட்களை நகர்த்தும்போது அது தொடர்ந்து வெளியே போகிறது. 70 00:04:05,412 --> 00:04:08,290 இல்லையா? அழகான கட்டுக்கடங்காதவனே. சரி. 71 00:04:08,874 --> 00:04:10,584 அழகாக இருக்கிறது. நான் அதைக் கொஞ்சலாமா? 72 00:04:10,584 --> 00:04:12,211 ஓ, ஆம். 73 00:04:13,295 --> 00:04:15,214 திரு. அப்பாஸி, நீங்கள் காலி செய்கிறீர்களா? 74 00:04:15,214 --> 00:04:16,798 அவரில்லை, நான்தான். 75 00:04:16,798 --> 00:04:19,384 நான் ஒரு அழகான சிறிய நகரத்தில் கல்லூரி படிப்பைத் தொடங்குகிறேன். 76 00:04:19,384 --> 00:04:22,262 அது கடலுக்கு மிக அருகிலும், என் பெற்றோரிடமிருந்து தூரமாகவும் இருக்கிறது. 77 00:04:22,846 --> 00:04:24,431 கவனம், சாடியா, 78 00:04:24,431 --> 00:04:27,267 இல்லையென்றால் பக்கத்து வீட்டில் குடியேறி உன் கல்லூரியில் சேர்ந்துவிடுவோம். 79 00:04:27,267 --> 00:04:29,228 இல்லையா, பேராசிரியர் பக்ஸ்லி? 80 00:04:29,228 --> 00:04:31,355 அது சிறந்த அனுபவமாக இருக்கும் என்று அம்மா சொல்கிறார். 81 00:04:34,024 --> 00:04:36,235 என் ரன்னிங் ஷூக்களைப் பார்த்தீர்களா? நான் அவற்றைப் பார்க்கவில்லை. 82 00:04:36,235 --> 00:04:37,903 பாவப்பட்ட பக்ஸ்லி ஏற்கவில்லை. 83 00:04:37,903 --> 00:04:40,155 இது உன் கல்லூரிக்கு உன்னைப் பின்தொடர முயற்சிக்கிறது. 84 00:04:40,781 --> 00:04:43,408 அப்பா, நான் அடிக்கடி வருவேன். 85 00:04:43,408 --> 00:04:45,118 வேறு எங்கே துணி துவைப்பேன் என்று நினைத்தீர்கள்? 86 00:04:45,702 --> 00:04:48,205 என்னிடம் சொல்லாதே. இதனிடம் சொல். 87 00:04:48,205 --> 00:04:49,957 இதைப் பார். இதற்கு ஆறுதல் சொல்ல முடியாது. 88 00:04:50,457 --> 00:04:52,793 நான் அடிக்கடி வந்து போவேன். 89 00:04:53,585 --> 00:04:54,586 சத்தியமாக. 90 00:04:55,379 --> 00:04:56,839 இப்போது வாருங்கள். பேக் செய்யலாம். 91 00:04:59,132 --> 00:05:00,551 எனக்கு ஒரு யோசனை. வா. 92 00:05:02,344 --> 00:05:05,764 நாங்கள் பக்ஸ்லியின் முன்னோர்களான, கேனிஸ் லூபஸ் பற்றி ஆய்வு செய்கிறோம். 93 00:05:06,723 --> 00:05:09,393 அது ஓநாய்களின் அறிவியல் பெயர். 94 00:05:09,393 --> 00:05:11,061 அவை ஏன் ஊளையிடுகின்றன, ஏன் கூட்டத்தை விட்டுப் பிரிகின்றன என்று 95 00:05:11,061 --> 00:05:12,312 கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 96 00:05:12,896 --> 00:05:15,482 நாங்கள் பக்ஸ்லியை நடக்க அழைத்துப் போனால், அது எங்கள் பணிக்கு உதவியாக இருக்கும். 97 00:05:15,482 --> 00:05:16,984 அது எப்படி உங்கள் பணிக்கு உதவும்? 98 00:05:16,984 --> 00:05:18,777 நாய்கள் ஓநாய்களுடன் தொடர்புடையவை என்பதால், 99 00:05:18,777 --> 00:05:21,196 பக்ஸ்லியை கண்காணிப்பது அவர்களுக்கு ஓநாய்களைப் பற்றி நிறைய தெரிவிக்கும். 100 00:05:21,196 --> 00:05:23,156 - அதேதான், சாடியா. - எனக்கு அந்த யோசனையை பிடித்திருக்கிறது. 101 00:05:24,324 --> 00:05:26,368 என் அம்மா சீக்கிரம் வேனுடன் வந்து விடுவார். 102 00:05:26,368 --> 00:05:28,245 எனவே உங்களால் பக்ஸ்லியை பார்த்துக்கொள்ள முடிந்தால், 103 00:05:28,245 --> 00:05:30,622 எங்களுடைய பேக்கிங் சீக்கிரமாக முடிந்துவிடும். 104 00:05:31,540 --> 00:05:32,541 இதோ. 105 00:05:34,668 --> 00:05:36,461 - நன்றி. - நாங்கள் இதை நன்றாக பார்த்துக்கொள்வோம். 106 00:05:39,339 --> 00:05:40,966 ஏன் எல்லோரும் என்னைவிட்டு போகிறீர்கள்? 107 00:05:44,219 --> 00:05:45,429 முதல் கவனிப்பு, 108 00:05:47,055 --> 00:05:49,266 இது எல்லாவற்றையும் மோப்பம் பிடிக்கிறது. 109 00:05:53,562 --> 00:05:55,230 எல்லாவற்றையும் பார்த்து குரைக்கிறது. 110 00:05:56,356 --> 00:05:57,816 எல்லாவற்றின் மீதும் சிறுநீர் கழிக்கிறது. 111 00:05:58,358 --> 00:06:00,319 ஓநாய்களும் அப்படி செய்யுமா என்று வியக்கிறேன். 112 00:06:04,781 --> 00:06:06,700 நாய்கள் ஊளையிடுவது ஓநாய்களிடம் இருந்து வந்தது போல தெரிகிறது. 113 00:06:07,784 --> 00:06:10,287 பொறு, பக்ஸ்லி ஆம்புலன்ஸுடன் பேச முயற்சிக்கிறதா? 114 00:06:13,248 --> 00:06:15,417 அதோடு ஓநாயும் பக்ஸ்லியோடு பேச முயற்சிக்கிறதா? 115 00:06:15,417 --> 00:06:18,962 அது நம்முடைய ஓநாயாக இருக்க வேண்டும், ஆனால் அது என்ன சொல்கிறது? 116 00:06:18,962 --> 00:06:20,464 "ஹௌலோ"? 117 00:06:20,464 --> 00:06:21,673 என்ன சொன்னேன் என்று புரிந்ததா? 118 00:06:22,174 --> 00:06:25,844 "ஹௌலோ"? ஹலோ போல, ஆனால் ஊளையிட்டுக்கொண்டே. 119 00:06:28,263 --> 00:06:30,766 ஓநாயின் ஊளை பின்னாலிருந்து வருகிறது. வா. 120 00:06:34,269 --> 00:06:37,147 ஜேன், ஊளையிடும் சத்தம் வரும் திசையை நோக்கி போக வேண்டுமா? 121 00:06:37,147 --> 00:06:39,149 ஓநாய் நம்மை நோக்கி தாவிவந்தது நினைவிருக்கிறதா? 122 00:06:39,650 --> 00:06:44,071 ஒருவேளை அது விளையாட நினைத்திருக்கலாம். அதை தூரத்தில் இருந்தே கண்காணிப்போம். 123 00:06:45,155 --> 00:06:47,032 நீ தூரத்தில் இருந்து கண்காணி. 124 00:06:47,032 --> 00:06:48,534 கிரேபியர்ட், நீ என்னோடு வா. 125 00:06:49,910 --> 00:06:51,745 நீ என்னைப் பாதுகாப்பாய்தானே? 126 00:06:55,582 --> 00:06:56,834 அதோ நம் ஓநாய். 127 00:06:59,795 --> 00:07:01,004 அது எதற்காக காத்திருக்கிறது என்று நினைக்கிறாய்? 128 00:07:03,507 --> 00:07:05,050 பக்ஸ்லியும் அதைப் போல ஒரு ஓநாய் என்று நினைக்கிறதா? 129 00:07:05,592 --> 00:07:06,969 அதை அழைக்க முயற்சிக்கிறதா? 130 00:07:07,719 --> 00:07:09,096 அது என்ன சத்தம்? 131 00:07:12,349 --> 00:07:13,559 இதை எப்படி நிறுத்துவது? 132 00:07:16,395 --> 00:07:19,648 ஓ, இல்லை. ஓநாய்கள் பொதுவாக மனிதர்களைத் தாக்காது, ஆனால் அவை நாய்களைத் தாக்கும். 133 00:07:19,648 --> 00:07:22,192 - ஆனால் அது ஓநாய் என்று அது நினைக்கவில்லைதானே? - இனி இல்லை. 134 00:07:23,569 --> 00:07:25,070 பக்ஸ்லி, திரும்பி வா! 135 00:07:29,783 --> 00:07:31,410 அப்பா, என் ஹேர் பிரஷைப் பார்த்தீர்களா? 136 00:07:32,202 --> 00:07:33,287 இங்கே என்ன செய்கிறீர்கள்? 137 00:07:33,287 --> 00:07:35,455 எல்லாவற்றையும் பேக் செய்தோமா என்று உறுதி செய்கிறேன். 138 00:07:36,540 --> 00:07:38,083 லில் சோம்பர். 139 00:07:39,334 --> 00:07:40,919 நீங்கள் அதை எனக்காக வாங்கியது நினைவிருக்கிறதா? 140 00:07:40,919 --> 00:07:42,713 உனக்காக அதை வென்றேன். 141 00:07:42,713 --> 00:07:45,299 அந்த பேஸ்பால் தானாக சென்று பீப்பாயில் விழவில்லை. 142 00:07:45,883 --> 00:07:48,218 அந்த விளையாட்டிற்காக நூறு டாலர்களுக்கு மேல் செலவழித்திருப்பேன். 143 00:07:53,640 --> 00:07:54,641 அது பக்ஸ்லியா? 144 00:08:03,901 --> 00:08:05,319 ஆஹா, பக்ஸ்லி அதை பயமுறுத்திவிட்டது. 145 00:08:05,319 --> 00:08:07,196 நாம் நினைத்ததை விட இதனிடம் அதிகமாக ஓநாயின் பண்புகள் இருக்கலாம். 146 00:08:07,779 --> 00:08:12,075 பயமுறுத்தும் சிறியவன் யார்? நீதான். ஆம், நீதான். 147 00:08:12,075 --> 00:08:15,954 அது நினைத்தது போல பக்ஸ்லி மற்றொரு ஓநாய் அல்ல என்று அது ஆச்சரியப்பட்டிருக்கலாம். 148 00:08:15,954 --> 00:08:18,957 ஒருவேளை நாம் பக்ஸ்லியை திரு. அப்பாஸிடமும் சாடியாவிடமும் திரும்ப கூட்டிச் செல்வோமா? 149 00:08:18,957 --> 00:08:21,502 ஆனால் ஓநாய்கள் ஒன்றுடன் ஒன்று பேச ஊளையிடுகின்றன என்பதை தெரிந்துகொள்ள அது உதவியது. 150 00:08:21,502 --> 00:08:23,837 உண்மைதான், ஆனால் அது நம் ஓநாயை பயமுறுத்தி துரத்திவிட்டது. 151 00:08:23,837 --> 00:08:26,632 இது மீண்டும் அப்படிச் செய்தால், ஓநாய் ஏன் கூட்டத்தை பிரிந்தது என்பது நமக்குத் தெரியாது. 152 00:08:29,510 --> 00:08:31,553 நீ சொல்வது சரிதான். நான் இதை கூட்டிச் செல்கிறேன். 153 00:08:31,553 --> 00:08:34,431 நீ இன்னும் கொஞ்சம் நடப்பதற்குத் தயாரா, பக்ஸ்லி? 154 00:08:34,431 --> 00:08:35,933 எதையாவது பார்த்தால் வாக்கி டாக்கியில் சொல். 155 00:08:35,933 --> 00:08:36,933 சொல்கிறேன். 156 00:08:45,192 --> 00:08:48,111 அநேகமாக அவர்கள் சாடியாவின் பொருட்களை வேனுக்கு கொண்டு செல்லத் தொடங்கியிருக்கலாம். 157 00:08:48,695 --> 00:08:52,032 ஒரு யோசனை. அப்பாவுக்கும் பாப்சுக்கும் எவ்வளவு நன்றாக உன்னை கவனித்துக்கொள்கிறேன் என காட்டுகிறேன். 158 00:08:52,032 --> 00:08:54,326 அப்படிச் செய்தால், அவர்கள் என்னை நாய் வளர்க்க அனுமதிக்கலாம். 159 00:08:54,326 --> 00:08:55,410 வா, குட்டி. 160 00:09:05,546 --> 00:09:07,422 - ஹாய், திருமதி. அப்பாஸி. - ஹாய், ஜேன். 161 00:09:07,422 --> 00:09:09,216 நீ சாடியாவையோ என் கணவரையோ பார்த்தால், 162 00:09:09,216 --> 00:09:11,343 பெட்டிகளை உடனே கொண்டு வரும்படி சொல்கிறாயா? 163 00:09:11,343 --> 00:09:12,636 - சொல்கிறேன். - அருமை. 164 00:09:17,599 --> 00:09:19,017 ஓநாயின் அறிகுறி ஏதாவது? 165 00:09:21,937 --> 00:09:23,605 அந்த ஊளை சத்தம் நம் கட்டிடத்திற்குள் இருந்து வருகிறதா? 166 00:09:26,316 --> 00:09:27,317 பொறு, கிரேபியர்ட். 167 00:09:28,902 --> 00:09:31,530 ஹாய், திரு. அப்பாஸி. திருமதி. அப்பாஸி உங்களைத் தேடுகிறார். 168 00:09:35,200 --> 00:09:36,660 - வந்துவிட்டீர்கள். - ஹேய், அன்பே. 169 00:09:36,660 --> 00:09:38,662 இந்த வேனை ஒரு மணிநேரம்தான் வாடகைக்கு எடுத்திருக்கிறோம். 170 00:09:38,662 --> 00:09:40,330 போகலாம். போகலாம். 171 00:09:45,627 --> 00:09:46,712 நீ அதைப் பார்த்தாயா? 172 00:09:47,713 --> 00:09:50,215 நானும்தான். அது எங்கே போனது? 173 00:10:15,949 --> 00:10:17,784 அது நாம் கண்காணிக்கும் ஓநாய் இல்லை. 174 00:10:18,535 --> 00:10:21,038 இது பெரியது. அதாவது ஆண் ஓநாய். 175 00:10:21,038 --> 00:10:22,956 அதுவும் தன் கூட்டத்தை விட்டு வந்திருக்க வேண்டும். 176 00:10:23,749 --> 00:10:26,084 அதனுடைய அழைப்புக்கு அந்த பெண் ஓநாய் பதிலளித்திருக்க வேண்டும். 177 00:10:26,084 --> 00:10:27,711 அது பக்கத்தில் வருகிறது. 178 00:10:30,714 --> 00:10:33,425 கடைசியாக இங்கே சில பதில்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன், கிரேபியர்ட். 179 00:10:35,594 --> 00:10:38,263 நினைவில் வைத்துக்கொள், நீ எந்த அளவுக்கு அழகாகவும் நன்றாகவும் நடந்துகொள்கிறாயோ, 180 00:10:38,263 --> 00:10:40,390 அந்த அளவுக்கு எனக்கு ஒரு நாய் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. 181 00:10:44,561 --> 00:10:47,231 என் குடும்பத்தைச் சந்திக்க இது நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். 182 00:10:55,447 --> 00:10:56,448 பெண் ஓநாய்! 183 00:10:57,991 --> 00:11:00,118 ஓநாய்கள் ஒன்றுடன் ஒன்று பேசுவது மட்டுமில்லை. 184 00:11:00,118 --> 00:11:02,663 அவை இருக்கும் இடத்தையும் ஒன்றுக்கொன்று தெரிவிக்கின்றன. 185 00:11:02,663 --> 00:11:04,748 பேஸ்மென்ட்டுக்கு வர பெண் ஓநாய்க்கு வேறு எப்படி தெரிந்தது? 186 00:11:14,216 --> 00:11:15,801 அவை ஒன்றையொன்று கண்டுபிடித்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. 187 00:11:18,637 --> 00:11:22,182 ஒன்றையொன்று கண்டுபிடிக்கத்தான் அவை கூட்டத்தை விட்டு வந்திருக்குமோ என்று வியப்பாக இருக்கிறது. 188 00:11:29,982 --> 00:11:32,192 - வேண்டாம், பக்ஸ்லி, வேண்டாம்! - பக்ஸ்லி! 189 00:11:50,377 --> 00:11:52,087 ஜேன், நாம் என்ன செய்வது? 190 00:11:52,087 --> 00:11:53,922 அதைக் கண்டுபிடித்து அந்த மற்ற ஓநாய்களிடம் இருந்து விலக்கிவை. 191 00:11:53,922 --> 00:11:56,258 - அதைப் பின்தொடர்கிறேன். - இந்த வழியில் போனால் அவற்றை முந்திவிடலாம். 192 00:11:56,258 --> 00:11:57,384 சரி. 193 00:12:02,472 --> 00:12:03,849 ஹேய், சாடியா. 194 00:12:03,849 --> 00:12:05,017 ஹேய், ஜேன். 195 00:12:06,310 --> 00:12:07,811 நீ நலமா? 196 00:12:08,520 --> 00:12:09,938 இல்லை, உண்மையில் இல்லை. 197 00:12:09,938 --> 00:12:12,274 பக்ஸ்லி காலரை கழற்றிவிட்டு, என்னையும் டேவிட்டையும் விட்டு ஓடிவிட்டது. 198 00:12:12,274 --> 00:12:14,067 - என்ன? - அது கூட மோசமான விஷயம் இல்லை. 199 00:12:14,067 --> 00:12:17,404 அதைச் சாப்பிட விரும்பும் இரண்டு ஓநாய்கள் அதைத் துரத்துகின்றன. 200 00:12:17,404 --> 00:12:21,783 அது நல்லது இல்லை. ஆனால் இது நடப்பது முதல் முறை இல்லை. 201 00:12:22,367 --> 00:12:24,411 தப்பிப்பது. ஓநாய் துரத்துவது இல்லை. 202 00:12:24,995 --> 00:12:27,164 - அதை ஒன்றாகத் தேடுவோம். வா. - சரி. 203 00:12:29,208 --> 00:12:30,834 - பக்ஸ்லி? - பக்ஸ்லி? 204 00:12:30,834 --> 00:12:32,753 - பக்ஸ்லி? - இங்கே வா, குட்டி. 205 00:12:32,753 --> 00:12:33,837 பக்ஸ்லி? 206 00:12:34,963 --> 00:12:36,048 நல்ல முயல். 207 00:12:36,048 --> 00:12:38,342 நன்றி. இதன் பெயர் லில் சோம்பர். 208 00:12:38,342 --> 00:12:40,802 என் சிறு வயதிலிருந்தே இதை வைத்திருக்கிறேன். என் அப்பா வாங்கிக்கொடுத்தார். 209 00:12:40,802 --> 00:12:42,930 என் சிறுவயதில்தான் என் அம்மா எனக்கு கிரேபியர்டை வாங்கித்தந்தார். 210 00:12:44,181 --> 00:12:45,140 பக்ஸ்லி? 211 00:12:45,724 --> 00:12:47,476 ஏன் அதோடு படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாய்? 212 00:12:48,393 --> 00:12:50,771 நான் வெளியேறுகிறேன் என்பதை கடைசியாக உணர்ந்தேன். 213 00:12:50,771 --> 00:12:52,105 நீ உற்சாகமாக இல்லையா? 214 00:12:52,648 --> 00:12:55,108 இருக்கிறேன். ஆனாலும் நான்... 215 00:12:56,026 --> 00:12:58,111 எனக்குத் தெரியவில்லை... ஒருவித பயம். 216 00:12:58,111 --> 00:12:59,112 எதற்கு? 217 00:12:59,112 --> 00:13:02,699 யாரையும் தெரியாத புதிய இடத்தில் என்னை மட்டுமே நம்பி நான் இருப்பது. 218 00:13:03,742 --> 00:13:05,619 நான் கண்காணிக்கும் ஓநாயும் தன்னைத்தானே நம்பியிருக்க 219 00:13:05,619 --> 00:13:07,120 பயப்படுகிறதோ என்று வியப்பாக இருக்கிறது. 220 00:13:07,621 --> 00:13:08,747 ஓநாய்கள் பயப்படுமா? 221 00:13:08,747 --> 00:13:11,208 - பக்ஸ்லி பயப்படுமா? - ஆம். 222 00:13:11,208 --> 00:13:13,919 பட்டாசு, இடி, குப்பை லாரிகள், 223 00:13:13,919 --> 00:13:16,088 ஒவ்வொரு முறை அது தன்னை கண்ணாடியில் பார்க்கும்போதும். 224 00:13:16,088 --> 00:13:17,589 "விலங்குகளுக்கு குணநலன்கள், மனம், 225 00:13:17,589 --> 00:13:21,552 உணர்வுகள் உண்டா என்று சரியாகத் தெரியாமல் உங்கள் வாழ்க்கையை நாயுடன் பகிர்ந்துகொள்ள முடியாது." 226 00:13:22,094 --> 00:13:23,262 இப்படி ஜேன் குட்டால் சொல்லியிருக்கிறார். 227 00:13:23,846 --> 00:13:26,598 எனவே, பக்ஸ்லிக்கு உணர்வுகள் இருந்தால், எல்லா விலங்குகளுக்கும் இருக்கும். 228 00:13:27,391 --> 00:13:29,560 ஆனால் ஓநாய் எதற்கு பயப்பட வேண்டும்? 229 00:13:29,560 --> 00:13:33,647 நிறைய விஷயங்களுக்கு. மனித வேட்டைக்காரர்களுக்கு. மற்ற ஓநாய் கூட்டங்களுக்குக் கூட. 230 00:13:33,647 --> 00:13:35,023 ஓநாய்கள் ஒன்றையொன்று தாக்குமா? 231 00:13:35,023 --> 00:13:38,151 ஓ, ஆம். அவை தங்கள் எல்லைக்கு மிக அருகில் வந்தால் ஒன்றையொன்று தாக்கும். 232 00:13:38,986 --> 00:13:40,362 ஓநாயாக இருப்பது எளிதில்லையா? 233 00:13:40,946 --> 00:13:42,114 இல்லை. 234 00:13:42,114 --> 00:13:44,241 சில நேரங்களில் ஒரு நபராக இருப்பது எளிதானது இல்லை. 235 00:13:44,783 --> 00:13:47,244 ஆனால் ஓநாய்கள் அதையெல்லாம் கடந்து செல்ல முடிந்தால், நான் பந்தயம் கட்டுகிறேன்... 236 00:13:47,244 --> 00:13:48,996 நான் வெளியேறுவதையும் என்னால் சமாளிக்க முடியுமா? 237 00:13:50,622 --> 00:13:52,541 நான் ஓநாய் போல தைரியமாக இருக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். 238 00:13:53,041 --> 00:13:54,793 என்னால் நிரந்தரமாக என் பெற்றோருடன் வாழ முடியாது. 239 00:13:54,793 --> 00:13:58,505 பெற்றோருடன் நிரந்தரமாக வாழ முடியாது. அது ஓநாய் போலத்தான். 240 00:13:58,505 --> 00:14:00,507 நான் வெளியே பக்ஸ்லியைத் தேடப் போகிறேன். 241 00:14:00,507 --> 00:14:03,468 நீ அதை இங்கே தேடு. உன் உதவிக்கு நன்றி, சாடியா. 242 00:14:03,468 --> 00:14:04,761 நாம் ஒருவருக்கொருவர் உதவினோம். 243 00:14:06,388 --> 00:14:07,389 பக்ஸ்லி? 244 00:14:07,973 --> 00:14:10,767 பக்ஸ்லி? 245 00:14:12,019 --> 00:14:12,978 டேவிட்! 246 00:14:13,687 --> 00:14:14,605 அதைக் கண்டுபிடித்தாயா? 247 00:14:14,605 --> 00:14:17,691 இல்லை, ஆனால் ஓநாய்கள் ஏன் கூட்டங்களை விட்டுவிட்டு வருகின்றன என்பதைக் கண்டுபிடிக்க சாடியா உதவினாள். 248 00:14:17,691 --> 00:14:20,235 சாடியாவைப் போல, அவை நிரந்தரமாக பெற்றோருடன் வாழ முடியாது. 249 00:14:20,235 --> 00:14:21,528 எனக்குப் புரியவில்லை. 250 00:14:21,528 --> 00:14:24,573 விளக்குகிறேன், ஏனென்றால் பக்ஸ்லியை கண்டுபிடிக்க வழியையும் கண்டுபிடித்துவிட்டேன். 251 00:14:24,573 --> 00:14:25,824 எப்படி? 252 00:14:29,161 --> 00:14:30,746 எனக்கு இன்னும் புரியவில்லை. 253 00:14:30,746 --> 00:14:32,539 கவலைப்படாதே, உனக்குப் புரியும். 254 00:14:54,394 --> 00:14:56,438 அங்கே இருக்கின்றன. பக்ஸ்லி அங்கே இருக்கிறது. 255 00:14:56,438 --> 00:14:58,482 இப்போது நாம் அவற்றை அதனிடமிருந்து விலக்க வேண்டும். 256 00:14:58,982 --> 00:15:03,111 நாம் பேசியது பற்றி நினைவிருக்கிறதா? மூன்று எண்ணும்போது. ஒன்று, இரண்டு, மூன்று. 257 00:15:18,544 --> 00:15:19,545 அவை போகின்றன. 258 00:15:22,840 --> 00:15:23,966 பக்ஸ்லி! 259 00:15:25,467 --> 00:15:26,510 பக்ஸ்லி, நான் இருக்கிறேன். 260 00:15:27,845 --> 00:15:29,555 உன்னை தொலைத்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 261 00:15:29,555 --> 00:15:31,598 கிட்டத்தட்ட ஓநாய்கள் உன்னை சாப்பிட்டிருக்கும். 262 00:15:31,598 --> 00:15:34,810 ஆனால் நான் ஒருபோதும் மீண்டும் அப்படி நடக்க விடமாட்டேன். 263 00:15:34,810 --> 00:15:38,897 எனவே, ஓநாய்கள் ஒன்றையொன்று கண்டுபிடிக்கவும், ஒன்றையொன்று பயமுறுத்தவும் ஊளையிடுகின்றனவா? 264 00:15:38,897 --> 00:15:42,150 மற்ற ஓநாய்கள் தங்கள் பிரதேசத்தில் இருப்பது ஓநாய் கூட்டத்துக்கு பிடிக்காது என்பது நினைவிருக்கிறது. 265 00:15:42,150 --> 00:15:44,820 எனவே, மற்ற ஓநாய்களை விரட்ட அவை ஒன்றாக ஊளையிடலாம் என்று நினைத்தேன். 266 00:15:45,487 --> 00:15:47,197 அது வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்திருப்பாய்? 267 00:15:47,197 --> 00:15:49,533 நல்ல கேள்வி. அது வேலை செய்ததில் மகிழ்ச்சி. 268 00:15:50,534 --> 00:15:52,411 பக்ஸ்லி, உன் குடும்பத்தோடு உன்னைத் திரும்பச் சேர்க்கும் நேரம். 269 00:15:55,998 --> 00:16:00,419 - பக்ஸ்லி! ஹேய்! உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. - ஹேய். அடக் கடவுளே! 270 00:16:02,546 --> 00:16:04,256 நீ ஓடுவதை நிறுத்த வேண்டும், பக்கி-பேபி. 271 00:16:04,256 --> 00:16:06,425 நான் அதை ஓடவிட்டதற்கு மிகவும் வருந்துகிறேன். 272 00:16:06,425 --> 00:16:09,469 பரவாயில்லை. குறைந்தபட்சம் இதை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றினாய். 273 00:16:09,970 --> 00:16:11,138 பிறகு விளக்குகிறேன். 274 00:16:11,138 --> 00:16:12,639 என்னால் இப்போதே விளக்க முடியும். 275 00:16:12,639 --> 00:16:15,851 ஓநாய்கள் பேச ஊளையிடுவதைக் கண்டுபிடித்தோம். சாடியாவைப் போலவே, 276 00:16:15,851 --> 00:16:18,645 அவை தங்கள் பெற்றோருடன் நிரந்தரமாக வாழ முடியாது என்பதால் தனியாக வாழ வந்துவிட்டன. 277 00:16:18,645 --> 00:16:20,105 அவற்றால் முடியாதா? 278 00:16:20,105 --> 00:16:22,608 இல்லை, அவர்கள் அவர்களாக மாற அவர்களுக்கு வாய்ப்புகள் தேவை. 279 00:16:23,108 --> 00:16:23,984 அல்லது ஓநாயாக. 280 00:16:24,568 --> 00:16:26,528 மிகச்சரி. அப்படித்தான் புதிய ஓநாய் கூட்டங்கள் உருவாகின்றன. 281 00:16:26,528 --> 00:16:28,906 ஆனால் ஓநாய் செய்யும் எல்லாவற்றையும் நீ செய்ய வேண்டியதில்லை, இல்லையா? 282 00:16:29,907 --> 00:16:32,117 குறிப்பாக ஓநாய்கள் வீட்டை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால். 283 00:16:32,117 --> 00:16:34,328 - ஏன்? - ஏனென்றால் அவற்றை புரிந்துகொள்ளாத மக்களால் அவை 284 00:16:34,328 --> 00:16:35,996 விளையாட்டுக்காக வேட்டையாடப்படுகின்றன. 285 00:16:36,538 --> 00:16:37,915 எனக்குப் புரியாதது போல. 286 00:16:38,415 --> 00:16:42,377 நாய்களை நேசித்தால் ஓநாய்களையும் நேசிக்க வேண்டும் என்பது இப்போது எனக்குப் புரிகிறது. 287 00:16:42,377 --> 00:16:44,213 ஏனென்றால் அவை இரண்டுக்குமே உணர்ச்சிகள் இருக்கின்றன. 288 00:16:46,006 --> 00:16:46,882 இப்போது நீ என்னை குழப்பிவிட்டாய். 289 00:16:46,882 --> 00:16:48,509 போகும்போது விளக்குகிறேன். 290 00:16:48,509 --> 00:16:49,593 சரி. 291 00:16:51,470 --> 00:16:53,096 ஆழமாக சுவாசியுங்கள். சரியா? 292 00:16:53,722 --> 00:16:54,556 பை, நண்பர்களே. 293 00:16:54,556 --> 00:16:55,724 - பை. - பை. 294 00:16:55,724 --> 00:16:57,684 - பாதுகாப்பான பயணமாக அமையட்டும். - நன்றி. 295 00:16:58,894 --> 00:17:01,146 ஜேன், நாம் டாக்-வாக்கிங் தொழிலைத் தொடங்கலாமா? 296 00:17:01,146 --> 00:17:03,315 நான் நிஜமாகவே நாய்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன். 297 00:17:03,315 --> 00:17:04,358 நல்ல யோசனை. 298 00:17:04,358 --> 00:17:06,734 ஆனால் நாம் அதைச் செய்வதற்கு முன், நான் இன்னும் கொஞ்சம் நேரம் செலவிட விரும்பும் 299 00:17:06,734 --> 00:17:08,694 இரண்டு நாய்களின் மூதாதையர்கள் இருக்கின்றன. 300 00:17:13,282 --> 00:17:16,203 தூரத்திலிருந்து பார்க்க ஓநாய்கள் அழகானவை. 301 00:17:16,994 --> 00:17:18,829 அவை பக்ஸ்லியை சாப்பிட முயற்சிக்காதபோதும். 302 00:17:21,415 --> 00:17:23,335 வளர்ந்த ஓநாய்களை விட அழகானது எது தெரியுமா? 303 00:17:23,335 --> 00:17:26,380 சீக்கிரமாக தங்கள் ஓநாய் குட்டிகள் பிறப்பதற்கு வசதியாக அவை பள்ளம் தோண்டும். 304 00:17:26,380 --> 00:17:28,131 நிஜமாகவே புதிய கூட்டம் வளர தொடங்கும். 305 00:17:28,131 --> 00:17:30,801 ஓநாய் குட்டிகளா? நான் அவற்றைப் பார்க்க வேண்டும். 306 00:17:31,301 --> 00:17:34,847 நினைவில் வைத்துகொள், அம்மா, அப்பா ஓநாய்கள் தங்கள் குட்டிகளை நன்றாகப் பாதுகாக்கும். 307 00:17:34,847 --> 00:17:37,850 நான் சொன்னது போல, "தூரத்திலிருந்து பார்க்க அழகானவை." 308 00:17:53,407 --> 00:17:55,033 ஓநாய்களைக் காப்பாற்ற உதவுங்கள்! 309 00:17:57,953 --> 00:17:58,871 கண்டுபிடித்துவிட்டேன். 310 00:17:58,871 --> 00:18:02,082 நம் புதிய டாக்-வாக்கிங் தொழிலுக்கு பெயர் பலகையாக இதைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். 311 00:18:02,583 --> 00:18:03,709 அருமை. 312 00:18:03,709 --> 00:18:05,169 நீ என்ன செய்கிறாய்? 313 00:18:05,169 --> 00:18:07,379 வைஃபைக்கான சரியான இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 314 00:18:07,379 --> 00:18:10,174 டாக்டர் ஜான் லினாலுடனான நம் அழைப்பு எந்த நொடியும் தொடங்கிவிடும். 315 00:18:10,174 --> 00:18:11,216 ஓநாய் விஞ்ஞானியா? 316 00:18:11,216 --> 00:18:13,135 நம் புதிய தொழிலுக்கு அவர் உதவிக்குறிப்புகளைக் கொடுக்கலாம். 317 00:18:13,135 --> 00:18:14,052 கிடைத்துவிட்டது. 318 00:18:17,014 --> 00:18:18,015 சரியான நேரம். 319 00:18:18,807 --> 00:18:20,434 ஹாய், ஜேன். ஹாய், டேவிட். 320 00:18:20,434 --> 00:18:21,768 ஹாய், டாக்டர் ஜான். 321 00:18:22,352 --> 00:18:23,812 என்னை ஜான் என்று மட்டும் அழையுங்கள். 322 00:18:23,812 --> 00:18:26,940 ஹாய், ஜான். இன்று ஓநாய்களைப் பற்றி எங்களுடன் பேசுவதற்கு மிக்க நன்றி. 323 00:18:26,940 --> 00:18:29,651 அதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஓநாய்களைப் பற்றி பேசுவது எப்போதுமே நன்றாக இருக்கும். 324 00:18:29,651 --> 00:18:30,694 அதோடு நாய்கள் பற்றியும். 325 00:18:30,694 --> 00:18:32,487 நாங்கள் புதிதாக டாக்-வாக்கிங் தொழிலைத் தொடங்குகிறோம். 326 00:18:32,487 --> 00:18:34,531 ஏனென்றால் ஜேனுக்கு நடைப்பயிற்சி பிடிக்கும், எனக்கு நாய்களைப் பிடிக்கும். 327 00:18:34,531 --> 00:18:37,534 அது மிகவும் அருமையானது, ஏனென்றால் நாய்களுக்கு நிறைய உடற்பயிற்சி தேவை. 328 00:18:37,534 --> 00:18:39,203 அவற்றின் காட்டு உறவினர்களான ஓநாய்களைப் போலவே. 329 00:18:39,203 --> 00:18:40,871 எப்படி நாய்கள் ஓநாய்களுடன் தொடர்புடையவை? 330 00:18:40,871 --> 00:18:42,039 நாய்கள்தான் ஓநாய்கள். 331 00:18:42,039 --> 00:18:43,457 எப்போதும் வளராத ஓநாய்கள். 332 00:18:43,457 --> 00:18:44,499 என்ன சொல்கிறீர்கள்? 333 00:18:44,499 --> 00:18:46,877 ஒரு நாய் தன் வாழ்நாள் முழுவதும் ஓநாய் குட்டியைப் போல நடந்துகொள்கிறது. 334 00:18:46,877 --> 00:18:49,171 காட்டில், ஒரு இளம் ஓநாய் வளரும். 335 00:18:49,171 --> 00:18:51,924 அது கூட்டத்தில் இருக்கும் வயதான விலங்குகளுக்கு சவால் விட ஆரம்பிக்கும். 336 00:18:51,924 --> 00:18:53,592 ஒரு நாய் அதைச் செய்ய வேண்டியதில்லை. 337 00:18:53,592 --> 00:18:55,552 நாம் அதற்கு உணவளிக்கிறோம், அது நமக்கு ஒருபோதும் சவால் விடாது. 338 00:18:55,552 --> 00:18:58,597 அது வாழ்நாள் முழுவதும் அந்த அழகான நாய்க்குட்டி நிலையிலேயே இருந்துவிடும். 339 00:18:58,597 --> 00:18:59,848 வேறு ஏதாவது ஒரே மாதிரி இருக்குமா? 340 00:18:59,848 --> 00:19:02,059 ஆம். அவை ஒரே மாதிரி தொடர்புகொள்கின்றன. 341 00:19:02,059 --> 00:19:04,144 சரி, அவை மகிழ்ச்சியாக இருக்கும்போது வாலை ஆட்டும். 342 00:19:04,144 --> 00:19:07,189 அவை மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் இருக்கும்போது தங்கள் காதுகளை மேலும் கீழும் ஆட்டும். 343 00:19:07,189 --> 00:19:09,983 அவை கொஞ்சம் கோபப்படும்போதோ அல்லது பயப்படும்போதோ பற்களைக் காட்டும். 344 00:19:09,983 --> 00:19:11,443 அவை ஒரே மாதிரி ஊளையிடுகின்றன. 345 00:19:11,443 --> 00:19:12,903 அப்படித்தான் பக்ஸ்லியை ஓநாய்களிடமிருந்து காப்பாற்றினோம். 346 00:19:13,904 --> 00:19:15,697 இன்று ஓநாய் பணியில் ஊளையிடுவது எங்களுக்கு உதவியது. 347 00:19:16,365 --> 00:19:18,367 ஊளையிடுவது. இப்படி எதையாவது பற்றி சொல்கிறீர்களா? 348 00:19:23,247 --> 00:19:24,873 அதைத்தான் அடிப்படையில் நாங்கள் செய்தோம். 349 00:19:24,873 --> 00:19:26,583 ஓநாய்கள் காடுகளில்தான் வாழ வேண்டுமா? 350 00:19:27,084 --> 00:19:28,502 இது ஒரு அருமையான கேள்வி, ஜேன். 351 00:19:28,502 --> 00:19:31,797 ஐரோப்பாவில் உள்ள ஓநாய்கள் காட்டில் வாழத் தேவையில்லை. 352 00:19:31,797 --> 00:19:36,635 அவை விவசாய நிலங்களிலும் கிராமப்புறங்களிலும் வாழலாம், பெரும்பாலும் மக்களுக்கு மிக நெருக்கமாக. 353 00:19:36,635 --> 00:19:38,929 எனவே மக்கள் கொல்லைப்புறங்களில் ஓநாய்கள் வைத்திருப்பார்களா? 354 00:19:38,929 --> 00:19:42,182 ஆம், ஆனால் எல்லோரும் தங்கள் கொல்லைப்புறத்தில் ஓநாய்களை வைத்திருப்பதை விரும்புவதில்லை. 355 00:19:42,182 --> 00:19:44,518 விவசாயிகளுக்கும், ஆடு மேய்ப்பவர்களுக்கும், கிராமப்புறங்களில் வாழும் 356 00:19:44,518 --> 00:19:48,605 மற்ற மக்களுக்கும் ஓநாய்களுடன் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ள நாம் உதவ வேண்டும். 357 00:19:48,605 --> 00:19:51,275 தங்கள் விலங்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க காவல் நாய்களையும் மின்சார வேலிகளையும் 358 00:19:51,275 --> 00:19:53,652 எப்படி பயன்படுத்துவது என்பதை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். 359 00:19:53,652 --> 00:19:57,197 பண்ணை விலங்குகளைப் பாதுகாப்பதுதான் ஓநாய்களைப் பாதுகாப்பதற்கான முதல் படி. 360 00:19:57,197 --> 00:19:58,657 ஓநாய்கள் ஏன் முக்கியம்? 361 00:19:59,157 --> 00:20:00,909 நம் கிரகத்திற்கு விலங்குகள் தேவை. 362 00:20:00,909 --> 00:20:05,330 ஓநாய்களும் அழகானவை, அதோடு நம் வாழ்வில் இன்னும் அழகு தேவை. 363 00:20:05,330 --> 00:20:07,875 ஆனால் மிக முக்கியமாக, அவற்றுக்கும் இங்கே இருக்க உரிமை உண்டு. 364 00:20:07,875 --> 00:20:10,252 அவை இங்கே இருக்கக் கூடாது என்று சொல்ல நாம் யார்? 365 00:20:10,252 --> 00:20:11,837 அவை நிச்சயமாக அழகானவை. 366 00:20:11,837 --> 00:20:13,005 உதவ நாங்கள் என்ன செய்யலாம்? 367 00:20:13,005 --> 00:20:15,299 பெரிய, கெட்ட ஓநாய் பற்றிய கட்டுக்கதையை நாம் உடைக்க வேண்டும். 368 00:20:15,299 --> 00:20:18,760 ஓநாய் குடும்பங்களுக்கும் மனித குடும்பங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பகிருங்கள். 369 00:20:18,760 --> 00:20:22,389 அவை குட்டிகளை வளர்க்கின்றன, அவைகளுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றன, அவை தனித்தனியானவை. 370 00:20:22,389 --> 00:20:24,766 ஓநாய்களின் கண்ணோட்டத்தில் மக்கள் பார்க்க உதவி செய்வது, 371 00:20:24,766 --> 00:20:28,145 மற்றவர்களின் கண்ணோட்டத்தின் வழியாகவும் மக்கள் பார்க்கவும் உதவும். 372 00:20:28,145 --> 00:20:30,397 அதன் மூலம் ஓநாய்களுக்கு உதவ நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட முடியுமா? 373 00:20:30,397 --> 00:20:33,901 மிகச்சரி. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வளர்ந்தவர்களாக இருக்க வேண்டியதில்லை. 374 00:20:33,901 --> 00:20:37,487 எனவே, உங்கள் உள்ளூர் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுத உதவும்படி பெரியவர்களிடம் கேளுங்கள். 375 00:20:37,487 --> 00:20:40,657 வன விலங்குகள் எப்படி நடத்தப்படுகின்றன என்பது பற்றிய உங்கள் கவலைகளை தெரிவியுங்கள். 376 00:20:40,657 --> 00:20:42,075 அது ஒரு அற்புதமான யோசனை. 377 00:20:42,075 --> 00:20:44,620 நாயை நடக்க கூட்டிச் செல்லும்போது நாங்கள் சந்திக்கும் நபர்களுடன் இன்று தொடங்கலாம். 378 00:20:44,620 --> 00:20:46,914 எனக்கு கடிதம் எழுத உதவும்படி என் அப்பாக்களிடம் கேட்பேன். 379 00:20:47,497 --> 00:20:49,625 - நன்றி, ஜான்! - பரவாயில்லை. 380 00:20:49,625 --> 00:20:51,418 ஓநாய்கள் மற்றும் எல்லா வனவிலங்குகளின் எதிர்காலமும் 381 00:20:51,418 --> 00:20:53,962 உங்களைப் போன்ற அவற்றின் மீது அக்கறை காட்டும் இளைஞர்களை நம்பியிருக்கிறது. 382 00:20:53,962 --> 00:20:55,964 எனவே உங்களுடைய மற்ற சாகசங்களுக்கு வாழ்த்துக்கள். 383 00:20:55,964 --> 00:20:57,674 பை. 384 00:20:58,425 --> 00:21:01,345 வா. சுத்தம் செய்வோம், அப்போதுதான் ஜானின் படத்தை என் ஹீரோக்களின் சுவரில் வைக்க முடியும். 385 00:21:03,180 --> 00:21:05,140 டாக்டர் ஜான் லினால் - மனித/ஓநாய் முரண்பாடுகளின் ஆராய்ச்சியாளர் 386 00:21:07,518 --> 00:21:11,355 தொழிலுக்கு "டேவிட் மற்றும் ஜேனுடன் காட்டு நடைப்பயிற்சி" என்று பெயர்வைக்க வேண்டும். 387 00:21:11,355 --> 00:21:13,357 - உன் பெயர் ஏன் முதலில் வருகிறது? - அகரவரிசைபடி. 388 00:21:13,357 --> 00:21:16,818 சரி, ஓநாய் பணி இல்லாமல் உனக்கு இந்த யோசனை வந்திருக்காது. 389 00:21:16,818 --> 00:21:17,861 அதைச் சொன்னது நான்தான். 390 00:21:17,861 --> 00:21:22,574 உண்மை. "இரண்டு உற்ற நண்பர்களுடன் காட்டு நடைப்பயிற்சி" எப்படி? 391 00:21:22,574 --> 00:21:23,659 ஒப்புக்கொள்கிறேன். 392 00:22:05,075 --> 00:22:07,077 வசனத் தமிழாக்கம் அருண்குமார்