1 00:00:08,844 --> 00:00:12,973 த சம்மர் ஐ டெர்ன்ட் ப்ரிட்டி 2 00:00:25,360 --> 00:00:26,487 கசின்ஸ் கடற்கரை கூடாரம் மற்றும் மேஜை 3 00:00:31,658 --> 00:00:33,202 புதுமுக நடனம் 4 00:00:41,460 --> 00:00:42,711 சூஸானா ஃபிஷர் 5 00:00:42,795 --> 00:00:44,713 இசபெல் கான்க்லின் 6 00:00:50,552 --> 00:00:52,095 காலை வணக்கம், பெல்லி. 7 00:00:52,179 --> 00:00:53,639 அடடே, தாமதமாக்கிட்டேனா? 8 00:00:53,722 --> 00:00:54,932 இல்ல, பரவாயில்ல. 9 00:00:57,392 --> 00:00:59,228 உன் முக்கிய தினத்துக்கு தயாரா? 10 00:00:59,812 --> 00:01:00,687 தயாரே இல்லை. 11 00:01:00,771 --> 00:01:01,980 இல்ல, நீ தயார். 12 00:01:03,398 --> 00:01:04,315 தடுக்கிடுச்சினா? 13 00:01:04,398 --> 00:01:05,317 மாட்டாய். 14 00:01:05,400 --> 00:01:08,862 ஜெரமையாவின் கையைப் பிடிச்சுக்கோ. விழாம பார்த்துக்குவான். 15 00:01:09,655 --> 00:01:10,572 அது உண்மை. 16 00:01:10,656 --> 00:01:13,033 அவனை நீ வர ஒத்துக்க வெச்சதை நம்ப முடியல. 17 00:01:13,116 --> 00:01:15,911 இதுக்கெல்லாம் போகவே மாட்டேன் என்ற சபதமிட்டவன். 18 00:01:16,578 --> 00:01:17,871 பரவாயில்லைனு சொன்னான். 19 00:01:17,955 --> 00:01:20,207 ஆம், அவன் உனக்காக எதையும் செய்வான். 20 00:01:20,957 --> 00:01:22,042 ரெண்டு பேரும்தான். 21 00:01:26,838 --> 00:01:28,006 பிரச்சினை இல்லையே? 22 00:01:28,757 --> 00:01:29,591 ஆம். 23 00:01:31,426 --> 00:01:33,262 இதுக்கு உன்னை வறுபுறுத்தறேனா? 24 00:01:33,344 --> 00:01:34,972 தைரியமா சொல்லலாம். 25 00:01:36,640 --> 00:01:40,018 முதல்ல அப்படி இருந்தது, இப்ப, உங்களை மகிழ்ச்சியாக்கணும். 26 00:01:40,102 --> 00:01:43,522 உண்மைல, இப்பகூட இன்றிரவு போக வேணான்னா போக வேணாம். 27 00:01:43,605 --> 00:01:46,817 இல்ல, போகணும். நான் ஆரம்பிச்சதை முடிச்சு வைக்கணும். 28 00:01:47,985 --> 00:01:50,320 பெருமையா எல்லோருக்கும் காட்டிக்கணும். 29 00:01:56,409 --> 00:01:58,495 என் செல்லம் நீ, அழகுப் பெண்ணே. 30 00:02:01,498 --> 00:02:02,416 சரி... 31 00:02:03,208 --> 00:02:06,336 உன்னை படம் எடுக்கும் போது, "ப்ரூன்"னு கவனமா சொல். 32 00:02:06,420 --> 00:02:08,504 அது உன் கன்னங்களை அழகாக்கும். 33 00:02:08,588 --> 00:02:09,756 -ப்ரூனா? -ப்ரூன். 34 00:02:09,840 --> 00:02:13,886 இது மடோன்னாவிடமிருந்து நான் கற்ற பழைய யுக்தி. இல்ல ஓல்ஸன் ட்வின்ஸா? 35 00:02:14,803 --> 00:02:15,721 யார் அவங்க? 36 00:02:17,347 --> 00:02:18,515 அவங்க ஜாம்பவான்கள். 37 00:02:18,599 --> 00:02:21,518 நவீனத்தின் இலச்சினைகள்! 2000த்தின் ஆரம்பத்தில். 38 00:02:21,602 --> 00:02:23,520 ஸ்கார்லெட் விச்சுக்கு சகோதரிகள் போல. 39 00:02:25,814 --> 00:02:28,150 சரி, நான் கிழே இருக்கேன், வா. 40 00:02:28,233 --> 00:02:29,443 உனக்கு ஒரு ஆச்சரியம். 41 00:02:42,414 --> 00:02:44,207 நான் கேட்ட உடையை வாங்கிட்டீங்களா? 42 00:02:47,461 --> 00:02:50,339 நன்றி! அருமை! 43 00:02:50,422 --> 00:02:52,424 உன் அம்மாவுக்கு சொல். அவ யோசனை. 44 00:02:54,051 --> 00:02:57,012 உன் ஷூக்களை பார்க்கிறேன். இளக, அதை ஃப்ரீஸர்ல வெச்சேன். 45 00:02:59,097 --> 00:03:01,433 நீங்க வாங்குவீங்கன்னு நினைக்கவேயில்ல. 46 00:03:01,516 --> 00:03:04,102 அந்த உடை உனக்கு சங்கடமா இருந்தது. 47 00:03:05,479 --> 00:03:07,481 நீங்க கவனிக்கலனு நினைச்சேன். 48 00:03:08,523 --> 00:03:09,691 நான் உன் அம்மா. 49 00:03:11,401 --> 00:03:12,486 உன்னை தெரியும். 50 00:03:18,450 --> 00:03:20,786 என் புதுமுக நடனம் உங்களுக்கு பிடிக்கல-- 51 00:03:20,869 --> 00:03:22,245 பிடிக்கல, ஆனா... 52 00:03:27,459 --> 00:03:29,211 உன்னை போக விடறது கடினம். 53 00:03:39,179 --> 00:03:40,806 ஸ்டீவன், இங்க என்ன பண்றே? 54 00:03:41,473 --> 00:03:42,848 பெரிசா சொதப்பிட்டேன். 55 00:03:48,230 --> 00:03:49,271 சரி... 56 00:03:49,481 --> 00:03:51,274 லீயமுடன் போக்கர் விளையாடினேன். 57 00:03:53,777 --> 00:03:54,987 எல்லா ஆட்டமும் தோற்றேன். 58 00:03:55,278 --> 00:03:57,781 கோடையில சேர்த்து வைத்த எல்லா பணமும் போச்சு. 59 00:03:57,864 --> 00:03:59,366 டக்ஸிடோக்கு கூட பணமில்ல. 60 00:04:00,617 --> 00:04:02,494 மன்னி. நடனத்துக்கு வர முடியாது. 61 00:04:04,538 --> 00:04:05,914 என்ன கிண்டல் பண்றியா? 62 00:04:05,998 --> 00:04:10,002 தோற்க ஆரம்பித்தேன், ஜெயிக்க முடியும்னு ஆட ஆட, இன்னும் மோசமானது... 63 00:04:10,085 --> 00:04:12,004 அதோட எழுந்துட வேண்டியதுதானே? 64 00:04:14,506 --> 00:04:15,674 இல்ல, முடியாதுதான். 65 00:04:15,757 --> 00:04:18,969 உன்னை லீயமும் சகாக்களும் பணம் அள்ளறவனா பார்க்கணுமே. 66 00:04:19,052 --> 00:04:22,889 -என்ன நினைப்பேன்னு நினைச்சுப் பார்க்கலியா? -ஷேலா, மன்னி. 67 00:04:22,973 --> 00:04:24,975 ஸ்டீவன், நடனம் இன்றிரவு! 68 00:04:25,058 --> 00:04:25,976 தெரியுது. 69 00:04:27,894 --> 00:04:29,312 நான் பணம் தர்றேன். 70 00:04:30,188 --> 00:04:32,858 இல்ல. உன்கிட்ட பணம் வாங்கறதா இல்ல. 71 00:04:33,734 --> 00:04:34,943 உன் அம்மா கிட்ட? 72 00:04:35,694 --> 00:04:37,154 அம்மாவா, கொன்னுடுவாங்க. 73 00:04:37,237 --> 00:04:39,031 நான் உன்னை கொல்ல நினைப்பது போலா? 74 00:04:43,160 --> 00:04:45,746 என்னிடம் மறைக்காதே. 75 00:04:45,829 --> 00:04:47,914 நடனத்துக்கு நாம் ஒண்ணா போக ஆசையாவது இருக்கா? 76 00:04:47,998 --> 00:04:50,542 இருக்கு. எல்லாத்துக்கும் மேல். 77 00:04:52,377 --> 00:04:54,963 அப்பாவோட பழைய டக்ஸிடோ இருக்கு. அத போட்டுக்க. 78 00:04:56,715 --> 00:04:57,883 சரியா இருக்குமா? 79 00:04:58,425 --> 00:04:59,718 உனக்கே தெரியும், ஏன்னா... 80 00:05:00,177 --> 00:05:03,638 இல்ல. சரி. சரி. நீ சரிதான். மன்னி. 81 00:05:03,722 --> 00:05:07,017 அது அருமையா இருக்கும். நீ பிரமாதம். 82 00:05:09,811 --> 00:05:12,147 ஷேலா, இந்த வாய்ப்பை விட தயாரில்லை. 83 00:05:13,732 --> 00:05:15,150 சரியான மண்டு. 84 00:05:16,109 --> 00:05:17,611 ஆம். 85 00:05:23,617 --> 00:05:24,826 ஹேய், காலை வணக்கம். 86 00:05:24,910 --> 00:05:27,913 கொஞ்சம் நல்ல மஃப்பின்ஸ் வாங்கினேன். 87 00:05:31,792 --> 00:05:34,086 வேணாம். நன்றி. 88 00:05:34,711 --> 00:05:36,797 -சரி. -பெல்லி, கிளம்ப தயாராகணும். 89 00:05:36,880 --> 00:05:39,424 அதோட, யாரும் புழங்கும் அறைக்கு போகாதீங்க. 90 00:05:39,508 --> 00:05:40,801 உன் படங்களை முடித்தேன், 91 00:05:40,884 --> 00:05:43,345 இன்றிரவு நடனத்தின் பின் திறந்து வைப்பாங்க. 92 00:05:43,428 --> 00:05:45,680 -அதை லாரலின் காரில் வைக்கிறாயா? -சரி. 93 00:05:45,764 --> 00:05:46,640 சீக்கிரம். 94 00:05:46,723 --> 00:05:48,100 நான் வர நீங்க ஓட்டலையா? 95 00:05:48,183 --> 00:05:52,521 நான் சூஸானாவோட போறேன். நீயே தனியா ஓட்டி வருவேன்னு நினைச்சேன். 96 00:05:52,938 --> 00:05:54,731 -உண்மையாவா? -பக்கத்திலதானே. 97 00:05:54,815 --> 00:05:57,275 -வேணாம்னா பரவாயில்ல. -ஓட்டுவேன்! 98 00:05:57,359 --> 00:05:59,069 மெதுவா ஒட்டு, சமிக்கைகளை பார், 99 00:05:59,152 --> 00:06:01,154 -நில் சமிக்ஞைல நாலு நொடி. -தெரியும்! 100 00:06:01,238 --> 00:06:02,864 கிளப்பில் சந்திப்போம். 101 00:06:02,948 --> 00:06:04,032 -ஹேய். -என்ன? 102 00:06:04,825 --> 00:06:05,867 தூளாக்கு. 103 00:06:06,535 --> 00:06:08,495 என்ன இப்படி சொல்ற. நடனமாட போறேன். 104 00:06:09,162 --> 00:06:12,165 அதிர்ஷடம் உண்டாகும்னு அரத்தம். எல்லோரும் சொல்வது. 105 00:06:14,835 --> 00:06:17,796 எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ, ஜெர் நல்ல தேர்வு. 106 00:06:19,631 --> 00:06:20,674 ஆம், தெரியும். 107 00:06:37,440 --> 00:06:40,485 கவலை வேணாம். நாமே சிறந்த வால்ட்ஸ் நடன ஜோடியாவோம். 108 00:06:40,569 --> 00:06:42,279 இல்ல. அது பத்தி இல்ல. 109 00:06:42,904 --> 00:06:45,115 என்ன? பெண்களை பார்ப்பதா? 110 00:06:45,198 --> 00:06:47,617 நடந்தது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். 111 00:06:47,701 --> 00:06:49,327 எல்லாம் என்னை வெறுப்பாங்க. 112 00:06:49,411 --> 00:06:52,956 என்னோட வருவியா? நான் உன் சிகை அலங்கார நிபுணன், பாதுகாவலன். 113 00:06:53,039 --> 00:06:55,584 அலங்கார அறைல வர முடியாது! பெண்கள் மட்டுமே. 114 00:06:57,294 --> 00:06:58,420 கவனி, பெல்லி, 115 00:06:59,713 --> 00:07:01,631 உன்னால முடியும். சரியா? 116 00:07:02,340 --> 00:07:04,384 இரவு முழுதும் உன் பக்கமிருப்பேன். 117 00:07:05,051 --> 00:07:06,845 யாராவது உன்னை ஏதாவது சொன்னா, 118 00:07:06,928 --> 00:07:08,430 -நான்-- -நீ என்ன செய்வே? 119 00:07:10,307 --> 00:07:12,809 "இது சரியில்லடா"ன்னு சொல்வேன். 120 00:07:13,435 --> 00:07:16,855 உன் கையைப் பற்றிக் கொண்டு, எல்லோரையும் விலக்கி ஆடுவேன். 121 00:07:24,279 --> 00:07:26,489 கிளப்ல பார்ப்போம். ஜாக்கிரதையா ஓட்டு. 122 00:07:34,331 --> 00:07:37,083 என்ன அல்பம் இது! கிண்டலா? நீயும் ஜெரமையாவுமா? 123 00:07:37,167 --> 00:07:39,920 -அப்படி நடந்துவிட்டது. -எப்போ? இப்பதானா? 124 00:07:40,795 --> 00:07:42,088 ஒரு வாரம் முன். 125 00:07:43,340 --> 00:07:45,175 அய்யய்யே! கிண்டலா? 126 00:07:46,635 --> 00:07:49,054 -இது மோசம், வாந்தி வருது. -ஸ்டீவன். 127 00:07:49,137 --> 00:07:52,557 அய்யய்யே! நீங்க என்ன, ஒளிஞ்சு போனீங்களா? 128 00:07:52,641 --> 00:07:54,309 எனக்கு சொல்லாம? 129 00:07:54,392 --> 00:07:56,269 உனக்கும் இதுக்கும் தொடர்பில்ல. 130 00:07:56,353 --> 00:07:58,813 -நீங்க ஜோடியா? -இல்ல! எனக்குத் தெரியாது. 131 00:07:58,897 --> 00:08:00,941 சில முத்தங்கள் இட்டுக் கொண்டோம். 132 00:08:01,024 --> 00:08:04,527 கொஞ்சமா... இரு. அப்ப கான்ராட் என்ன ஆனான்? 133 00:08:05,487 --> 00:08:06,488 அவனுக்கு என்ன? 134 00:08:06,571 --> 00:08:10,158 உன் 10 வயதிலிருந்து அவனுக்காக அப்படி உருகுவியே. 135 00:08:10,242 --> 00:08:12,160 -இப்ப 10 வயதில்ல. -என்ன அதிகமாச்சு. 136 00:08:12,244 --> 00:08:15,413 அப்படியா? ஷேலா என் வயதுதான்றதால, 137 00:08:15,497 --> 00:08:18,291 அவளும் குழந்தை, அப்ப நீயும் அசிங்கமானவன்தானே. 138 00:08:18,375 --> 00:08:21,086 வேற யார் என் வயசு சொல்லு? டேய்லர். பூடகமானாவனே. 139 00:08:21,169 --> 00:08:23,004 சரி, புரியுது. 140 00:08:25,257 --> 00:08:28,009 எல்லாம் சொதப்பலாக விரும்பல. 141 00:08:28,677 --> 00:08:30,553 அவங்க நம் குடும்பம் போல, பெல்லி. 142 00:08:30,929 --> 00:08:32,764 இதுல பாதிக்க போவது நீ மட்டுமில்ல. 143 00:08:32,847 --> 00:08:33,847 தெரியுது. 144 00:08:35,267 --> 00:08:37,644 யாரோட டேட் செய்வேன்றது உன் கையில் இல்லை. 145 00:08:39,520 --> 00:08:42,231 தேர்ந்தெடுப்பவ நான், ஜெரமையாவை தேர்ந்தெடுத்தேன். 146 00:08:44,734 --> 00:08:46,820 நீ என் மேல நம்பிக்கை வைக்கணும். 147 00:09:00,625 --> 00:09:01,459 ஆஹா, குட்டி! 148 00:09:07,215 --> 00:09:08,133 இதோ கிளம்பறோம். 149 00:09:26,276 --> 00:09:28,069 -ஹேய். -டேய், என்ன அது? 150 00:09:28,153 --> 00:09:31,072 என் தங்கையோட பழகறத என்கிட்ட சொல்லத் தோணாதா? 151 00:09:31,156 --> 00:09:32,991 -சொன்னாளா? -நீ முத்தமிடறத பார்த்தேன். 152 00:09:33,074 --> 00:09:35,327 அப்ப என்னை அடிக்கப் போறதில்லையே? 153 00:09:36,119 --> 00:09:38,747 -யோசிக்கிறேன். -ஸ்டீவன், அவள விரும்பறேன். 154 00:09:38,830 --> 00:09:40,081 எல்லோரையும் விரும்பறே. 155 00:09:40,165 --> 00:09:42,125 என்ன வேற யாரு கூடவும் பார்த்தாயா? 156 00:09:42,208 --> 00:09:44,961 நிகோல் பார்ட்டில ஒருத்தன் கூட. 157 00:09:45,545 --> 00:09:47,380 சரி. அது ஒரு மாதம் முன். 158 00:09:47,464 --> 00:09:50,884 பார், ஸ்டீவன், அவ மனசு புண்பட நடக்க மாட்டேன். 159 00:09:50,967 --> 00:09:52,761 சத்தியமா. பெல்லியே முக்கியம். 160 00:09:57,432 --> 00:09:58,975 என்னிடம் சொல்லியிருக்கலாம். 161 00:10:00,060 --> 00:10:01,186 நான் சொல்லியிருக்கணும். 162 00:10:02,062 --> 00:10:03,396 என்னை மன்னிச்சிடு. 163 00:10:09,611 --> 00:10:12,739 அய்யோ. என் முன் சரசம் வேணாம். 164 00:10:35,387 --> 00:10:37,138 மை தப்பா பூசினேன்! 165 00:10:37,514 --> 00:10:40,308 -யாராவது ரேஸர் தாங்களேன்? -தாங்க. 166 00:10:40,392 --> 00:10:41,393 நன்றி, தேவதையே. 167 00:10:41,768 --> 00:10:43,228 நன்றி. 168 00:10:45,146 --> 00:10:46,481 பெல்லி, இங்கயா இருக்க! 169 00:10:47,982 --> 00:10:49,275 -உன் இடம் இதோ. -ஹை. 170 00:10:55,907 --> 00:10:58,201 நீங்க ரெண்டு பேரும் பேசிக்கணும். 171 00:11:03,206 --> 00:11:05,458 நிகோல், உண்மைல வருந்தறேன். 172 00:11:05,542 --> 00:11:07,710 எதைப் பத்தி? கான்ராடா? 173 00:11:08,670 --> 00:11:11,089 போனது போச்சு. இப்ப இங்கே வேறொருத்தனுடன். 174 00:11:11,631 --> 00:11:13,299 என்ன நடந்தது சொல்லட்டுமா? 175 00:11:19,055 --> 00:11:21,683 என் வாழ்விலே கான்ராடை பத்தி மோகமா இருந்தேன். 176 00:11:22,350 --> 00:11:25,728 அவன் என்னை தங்கை போலத்தான் பார்த்தான். 177 00:11:27,230 --> 00:11:30,942 பின், இந்த கோடையில் மாறி, விரும்புவானோன்னு நினைத்தேன். 178 00:11:32,193 --> 00:11:35,280 இதில, அவனை நான் விரும்பியதுதான், அவனுக்கு பிடித்தது. 179 00:11:36,072 --> 00:11:38,283 அவனா என்னை எப்பவும் விரும்பல. 180 00:11:40,827 --> 00:11:44,456 அப்படி விரும்புவான்னு முட்டாள்தனமா நெனச்சதுக்கு வருந்தறேன். 181 00:11:46,541 --> 00:11:48,668 கான்ராட் அலைபவனாயிருப்பது உன் தப்பா. 182 00:11:50,336 --> 00:11:52,338 நீயுமே அலைபவள்தானே. 183 00:11:54,174 --> 00:11:56,134 கேம், கான்ராட், இப்ப ஜெரமையா. 184 00:11:56,926 --> 00:11:59,012 நீ பல மனங்களோட விளையாடறே, பெல்லி. 185 00:11:59,804 --> 00:12:04,058 சரி, நான் ஏதோ கொஞ்சம் அலைபவளாதான் இருக்கட்டும். 186 00:12:04,142 --> 00:12:07,520 ஆனா, நிகோல், சத்தியமா சொல்றேன், கான்ராடை மறந்துட்டேன். 187 00:12:07,604 --> 00:12:09,522 அவன் மறக்கப் பட்டவனே. 188 00:12:10,815 --> 00:12:13,526 உண்மைல முதல் காதலை யாரும் மறப்பதில்லை. 189 00:12:24,204 --> 00:12:25,205 நன்றி, ஸ்டீவன். 190 00:12:27,749 --> 00:12:29,083 என் அழகு டேட். 191 00:12:29,167 --> 00:12:30,084 அம்மா! 192 00:12:31,419 --> 00:12:33,630 வணக்கம். இதோ, சர். நன்றி. 193 00:12:37,300 --> 00:12:38,384 எங்களை பார்! 194 00:12:40,970 --> 00:12:41,888 கச்சிதம். 195 00:12:43,139 --> 00:12:46,392 -அம்மா, அழப்போறீங்கதானே? -மேக் அப் கலையுமே? நடக்காது. 196 00:12:47,268 --> 00:12:50,897 ஆனா, அடுத்த வருடம் எல்லாமே மாறும். 197 00:12:51,898 --> 00:12:53,691 கான்ராட் கல்லூரி போகிறான். 198 00:12:55,735 --> 00:12:57,904 நாம் ஒண்ணா இருக்கும் கடைசி கோடை இதுவோ. 199 00:13:00,156 --> 00:13:03,034 இன்றிரவு உங்களோட ஆடணும், மறக்க வேணாம். 200 00:13:10,416 --> 00:13:12,752 -அம்மா, ஒண்ணுமாகலயே? -இல்ல, கொஞ்சம்... 201 00:13:12,835 --> 00:13:16,798 ஆடி ரொம்ப நாளாச்சே. மறந்துடுச்சு போல. 202 00:13:16,881 --> 00:13:19,592 -வாங்க. உள்ளே போகணும். -சரி. 203 00:13:24,889 --> 00:13:26,391 -வாங்க, அம்மா. -நன்றி. 204 00:13:45,493 --> 00:13:47,203 -இது உங்க மேஜையா? -ஆம். 205 00:14:04,512 --> 00:14:06,014 பாரை கண்டுபிடிச்சீங்களா. 206 00:14:06,431 --> 00:14:10,101 ஆம். இதுதான் பத்தாம் பசலி பழக்க விழாவை ஜீரணிக்கும் ஒரே வழி. 207 00:14:11,269 --> 00:14:12,312 விக்டோரியா எங்கே? 208 00:14:12,395 --> 00:14:15,315 அவளுக்கு கடைசி நேரத்தில தனிமை வாசம் நேர்ந்தது. 209 00:14:15,898 --> 00:14:17,734 நம்ம திருமணத்தைவிட மேலானது. 210 00:14:18,526 --> 00:14:20,778 திருமணம், எங்க பெற்றோர் தேவாலய நிலவறைல. 211 00:14:20,862 --> 00:14:22,947 எங்க திருமணத்தை விட மத்த எல்லாமே மேல். 212 00:14:23,281 --> 00:14:24,949 அதோட அப்ப நாலு மாத கர்ப்பம். 213 00:14:25,575 --> 00:14:26,576 அவதூறு அது. 214 00:14:26,659 --> 00:14:28,119 கொரிய தேவாலயத்திலா? 215 00:14:28,745 --> 00:14:31,372 ஸ்டீவன் குறைப்பிரசவம்னு சொல்ல வேண்டியதாச்சு. 216 00:14:31,456 --> 00:14:34,292 என் அம்மா கண்ணீருடன் அவன் எவ்ளோ திடமா வளமா 217 00:14:34,375 --> 00:14:37,086 இருக்கான்னு கண்ணீரோடு வியந்தாங்க. 218 00:14:37,879 --> 00:14:39,964 எங்க அற்புத பையைன் இதோ வர்றான். 219 00:14:40,548 --> 00:14:41,507 ஹேய், அப்பா! 220 00:14:42,133 --> 00:14:43,760 வா. பார்க்க மகிழ்ச்சி. 221 00:14:44,177 --> 00:14:45,720 -கஃப்ளிங்க்ஸ் இருக்கா? -ஆம். 222 00:14:45,803 --> 00:14:46,804 நன்றி. 223 00:14:46,888 --> 00:14:50,642 ஹை, ஸ்டீவன். நாம் நேரா சந்திக்கலதானே. நான் க்ளீவ்லண்ட். 224 00:14:51,976 --> 00:14:52,894 ஹை. 225 00:14:54,604 --> 00:14:58,316 ஆக, உன் அம்மா நீ பிர்ன்ஸ்டன்மேல ஒரு கண் வெச்சிருக்கேன்றாங்களே? 226 00:14:59,692 --> 00:15:01,611 நான் அந்தஸ்தோட இருக்க அவங்க ஆசை. 227 00:15:02,570 --> 00:15:06,115 அவன் பிரின்ஸ்டனுக்குப் போனா, அதுக்கு உதவ வழி காணுவோம். 228 00:15:08,618 --> 00:15:09,535 அப்படியா? 229 00:15:11,496 --> 00:15:12,413 நன்றி அம்மா. 230 00:15:12,497 --> 00:15:13,748 ரொம்ப நல்லா இருக்கே. 231 00:15:15,041 --> 00:15:18,711 எல்லாரும் ஷேலாவைதான் பார்ப்பாங்க. நான் வெறும் கவர்ச்சிப் பாவை. 232 00:15:20,088 --> 00:15:22,799 அந்த பேச்சு வந்தது, நான் போகணும். 233 00:15:22,882 --> 00:15:24,342 உங்களை பார்த்தது அருமை. 234 00:15:35,228 --> 00:15:38,314 பெண்கள் தாம் அழகா இல்லயா தெரிஞ்சுக்கக் கூடாது. 235 00:15:45,822 --> 00:15:48,282 வேற யாராவது அதை சொல்றாங்களா 236 00:15:48,366 --> 00:15:50,785 காத்திருந்தபின், நாமே சொல்லிக்கலாம். 237 00:15:58,376 --> 00:15:59,919 அது மட்டமானதில்லையா? 238 00:16:00,461 --> 00:16:02,964 நாம் எல்லோருமே அழகுதானே? 239 00:16:03,965 --> 00:16:05,133 நமக்கேயான விதத்தில. 240 00:16:14,392 --> 00:16:16,269 ஜோடி நடனத்துக்கு நீங்க தயாரா? 241 00:16:16,352 --> 00:16:19,147 நீ இதுக்கு இழுத்து விட்டதை என்னால் நம்ப முடியல. 242 00:16:19,230 --> 00:16:20,732 பெண்களுக்கு பிடிக்கும். 243 00:16:20,815 --> 00:16:22,608 எல்லோரும் ஒண்ணா சேர்ந்து செய்வோம். 244 00:16:23,234 --> 00:16:25,278 நாம் நடனத்தை ஆட ஆசையா? 245 00:16:25,361 --> 00:16:26,863 வேணாம். 246 00:16:29,073 --> 00:16:32,994 அதே அர்த்தத்தில சொல்லல. நாம் இந்த கோடைல ஒண்ணா பழகல. 247 00:16:34,537 --> 00:16:36,247 ஆமாம், நீ ஆளே காணோம். 248 00:16:37,165 --> 00:16:40,251 ஆம். அது என் தப்பு. 249 00:16:40,333 --> 00:16:43,796 அதை நினைச்சு பார்த்தேன். கோடை இன்னும் ஒரு வாரம் இருக்கு. 250 00:16:43,880 --> 00:16:46,048 ஒரு இரவு மீன்பிடிப்பு பயணம் போவோமா? 251 00:16:46,716 --> 00:16:47,717 ஆமாண்டா, வர்றேன். 252 00:16:47,800 --> 00:16:48,760 -வர்றியா? -சரி. 253 00:16:48,843 --> 00:16:49,677 நானும் வர்றேன். 254 00:16:49,761 --> 00:16:50,678 நல்லது. 255 00:16:53,014 --> 00:16:55,433 ஆம். நீங்க கலக்கப் போறீங்க. 256 00:16:55,892 --> 00:16:56,976 நன்றிடா. 257 00:17:00,688 --> 00:17:01,606 நன்றி, கானி. 258 00:17:06,986 --> 00:17:08,112 நல்லா இருக்கீங்க. 259 00:17:09,322 --> 00:17:10,156 கலக்கு. 260 00:17:23,335 --> 00:17:25,713 ப்ரூன்... 261 00:17:27,381 --> 00:17:28,424 ப்ரூன். 262 00:17:28,507 --> 00:17:30,551 ... உலகின் மிகப் பெரிய கொல்லாமை, 263 00:17:30,635 --> 00:17:34,472 தத்து எடுக்கும் காப்பக அமைப்பான, நார்த் ஷோர் அனிமல் லீக் உடன். 264 00:17:38,476 --> 00:17:42,688 ஜிஜி பூஷரான், ரிச்சர்ட், செசிலி பூஷரானின் மகள். 265 00:17:43,314 --> 00:17:46,108 ஜிஜி, நார்த்ஃபீல்ட் ப்ரெப் ஸ்கூல் மாணவி. 266 00:17:46,192 --> 00:17:49,320 ஒற்றையர் டென்னிஸ்ல மாநில அளவில் முதலில் வந்தவர், 267 00:17:49,403 --> 00:17:50,988 திறமையான பாடகியும் கூட. 268 00:17:51,614 --> 00:17:55,493 நார்த் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடலுக்கு 4000 டாலர் திரட்டினார். 269 00:17:58,371 --> 00:18:02,625 இசபெல் கான்க்லின், ஜான் கான்க்லின், லாரல் பார்க்கின் மகள். 270 00:18:03,459 --> 00:18:05,503 செஸ்டர்ப்ரூக் ஹைஸ்கூல் மாணவி, 271 00:18:05,586 --> 00:18:08,631 அங்கே, பல்கலைக்கழக வாலிபால் அணியின் தலைவி. 272 00:18:09,549 --> 00:18:10,550 நீ ஒரு தேவதை. 273 00:18:11,092 --> 00:18:14,262 இன்னொரு முறை சொன்னே, உன் மேல முழுக்க வாந்தி எடுப்பேன். 274 00:18:27,775 --> 00:18:30,194 இசபெல், நீச்சல் ஆர்வலரும் கூட. 275 00:18:30,278 --> 00:18:34,365 இந்த கோடையில், 5000 டாலர், வட்டார பெண்கள் காப்பகத்துக்கு திரட்டினார். 276 00:18:35,616 --> 00:18:37,368 ஏன் பெல்லி முகம் ஒரு மாதிரி போகுது? 277 00:18:38,953 --> 00:18:40,288 தெரியலயே. 278 00:18:41,247 --> 00:18:42,415 ப்ரூன். 279 00:18:48,421 --> 00:18:52,300 டாரா ஜோன்ஸ், ஃபிலிப், ஜிஞ்சர் ஜோன்ஸின் மகள். 280 00:18:52,758 --> 00:18:55,094 பென்கோம்ப் அகாடெமி மாணவி, 281 00:18:55,177 --> 00:18:58,097 அங்கே பேச்சு, விவாத அணியின் தலைவி, 282 00:18:58,180 --> 00:19:00,933 பல்கலைக் கழக தரை ஹாக்கி அணி வீராங்கனையும் கூட. 283 00:19:01,475 --> 00:19:05,146 ஆல் யூத் கேன் கோட் திட்டத்துக்கு, 6000 டாலர் திரட்டினார். 284 00:19:05,229 --> 00:19:08,816 வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கோட் கற்றுத்தரும் லாபமில்லா அமைப்பு. 285 00:19:14,280 --> 00:19:15,489 குனிந்த வணக்கம் எப்படி? 286 00:19:16,032 --> 00:19:17,533 ராணி பெருமைப்படுவார். 287 00:19:17,909 --> 00:19:21,621 ஷேலா வேங், ராபர்ட், மெலிஸ்ஸா வேங் மகள். 288 00:19:23,164 --> 00:19:25,207 நைட்டிங்கேல் பாம்ஃபர்ட் மாணவி, 289 00:19:25,291 --> 00:19:28,628 குதிரையேற்ற ஆர்வலர், வளரும் நவீன ஊக்கதாரி. 290 00:19:31,422 --> 00:19:34,592 ஹார்ட் ஆஃப் டின்னருக்கு ஷேலா 8000 டாலர் திரட்டினார், 291 00:19:34,675 --> 00:19:39,013 நியூ யார்க்ல அது வயோதிக கிழக்காசிய முதியவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பு. 292 00:19:44,685 --> 00:19:49,065 மரிஸா பெல்ஸ்னர், ஹேரல்ட், சில்வியா பெல்ஸ்னர் மகள். 293 00:19:52,485 --> 00:19:54,987 மரிஸா செர்ரி ஒரு ஹில்ஸ் அகாடெமி மாணவி. 294 00:19:55,696 --> 00:19:58,866 தன் பள்ளி சாக்கர் அணியில சென்டர் ஃபார்வர்ட் வீராங்கனை. 295 00:19:58,950 --> 00:20:02,620 பள்ளியில், மாற்றுப் பாலினத்தவர் சங்கத்தை தோற்றுவித்தவர். 296 00:20:02,703 --> 00:20:03,996 -நன்றி. -பரவாயில்லை. 297 00:20:19,095 --> 00:20:20,221 இதோ வந்துடறேன். 298 00:20:20,304 --> 00:20:25,685 பள்ளி வளாகத்தில், மூன்றாம் பாலின கழிவறை நிறுவ 4000 டாலர் திரட்டினார். 299 00:20:27,228 --> 00:20:28,437 எங்கே போறாங்க? 300 00:20:28,521 --> 00:20:29,355 எனக்கு தெரியல. 301 00:20:40,950 --> 00:20:43,911 இவ்வருட கசின்ஸ் கடற்கரை கவுன்டி கிளப் புதுமுகங்களை 302 00:20:43,995 --> 00:20:46,580 அறிமுகப் படுத்த வாய்த்தது, எனக்குப் பெருமை. 303 00:21:13,024 --> 00:21:13,899 லாரல்? 304 00:21:16,277 --> 00:21:18,529 இலையுதிர்காலத்தில உன் உதவி தேவையாகும். 305 00:21:18,988 --> 00:21:21,198 -பாஸ்டன்ல அதிகம் இருப்பேன். -தெரியுமே. 306 00:21:21,282 --> 00:21:24,035 விக்டோரியாவுக்கு பதின்ம பசங்களோடு ஒத்துப் போகுமோ? 307 00:21:24,493 --> 00:21:27,038 விக்டோரியா... இனி அவ எவளோ. 308 00:21:30,416 --> 00:21:31,333 மன்னிச்சுடு. 309 00:21:32,084 --> 00:21:34,378 நீ ஒரு டேட்டோட வருவேன்னு நினைக்கல. 310 00:21:34,462 --> 00:21:37,214 -அதுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை. -இல்லைதான். 311 00:21:38,132 --> 00:21:39,842 அப்படீன்னா? 312 00:21:40,342 --> 00:21:44,430 நீ உண்மைல நேசித்தது சூஸானா மட்டும்தான்னு சில சமயம் நினைப்பேன். 313 00:21:45,598 --> 00:21:46,766 அது உண்மையல்ல. 314 00:21:47,308 --> 00:21:49,560 நம் மணவாழ்வில மூணு பேர்தான் எப்போதும், 315 00:21:51,270 --> 00:21:53,856 அவளை நேசித்ததால, நானும் அத ஏத்துக்கிட்டேன். 316 00:21:56,442 --> 00:22:00,529 ஆனா, சூஸானா ரொம்ப நாள் இருக்கப் போவதில்லைன்றத நீ எதிர்கொள்ளணும். 317 00:22:00,613 --> 00:22:02,531 -அப்படி சொல்லாதே. -அதுதான் உண்மை. 318 00:22:05,326 --> 00:22:06,285 லாரல்? 319 00:22:08,788 --> 00:22:09,955 ஜெரமையா. 320 00:22:10,956 --> 00:22:11,874 என்ன விஷயம்? 321 00:22:12,374 --> 00:22:16,587 ஜோடி நடனம் இதோ ஆரம்பமாகுது. நீங்க பாக்காம விட்டுடக் கூடாதுன்றா பெல்லி. 322 00:22:17,588 --> 00:22:19,298 நன்றி. இதோ வந்துவிடுவோம். 323 00:22:20,132 --> 00:22:21,008 சரி. 324 00:22:22,927 --> 00:22:27,389 ஆக இப்போ, இந்த ஆண்டின் புதுமுக துணை இளைஞர் அறிமுகம். 325 00:22:35,481 --> 00:22:38,317 -என் அம்மா நல்லாருப்பதா தோணுதா? -கண்டிப்பா, ஏன்? 326 00:22:38,400 --> 00:22:40,820 நிறைய தூங்கறாங்க, அதிக போதை எடுக்கறாங்க. 327 00:22:40,903 --> 00:22:42,196 நல்லாதான் தோணறாங்க. 328 00:22:42,279 --> 00:22:46,075 உன் பெற்றோர் அத பத்தி பேசினதை கேட்டேன். உன் அம்மா கவலையில இருக்காங்க. 329 00:22:46,158 --> 00:22:47,159 நான் அதை... 330 00:23:24,238 --> 00:23:25,614 அதே! 331 00:23:52,349 --> 00:23:53,392 அடேங்கப்பா. 332 00:24:55,579 --> 00:24:56,622 அற்புதமா இருந்தது. 333 00:24:57,122 --> 00:25:00,251 உன்னைதான், இங்கே வா. 334 00:25:04,421 --> 00:25:05,339 இரு. 335 00:25:13,305 --> 00:25:15,140 நம்பவே முடியல. 336 00:25:15,224 --> 00:25:16,809 நீ நம்பற்கரியவன். 337 00:25:19,728 --> 00:25:21,438 கொன்னுட்டீங்கப்பா! 338 00:25:21,522 --> 00:25:22,564 கொன்னுட்டீங்க. 339 00:25:22,648 --> 00:25:24,483 ஹேய், நன்றி. 340 00:25:24,858 --> 00:25:27,403 வெள்ளை உடை அருமை. ப்ராம் நாள் நினைவு வருது. 341 00:25:30,155 --> 00:25:33,325 பொருந்துது. உனக்கு பொருத்தமா டக்சிடோவை அவ தரலையே. 342 00:25:34,660 --> 00:25:36,745 உண்மைல அதுதான் திட்டம். ஆனா... 343 00:25:38,539 --> 00:25:40,416 போக்கர் ஆடிய பின் காசு இல்லை. 344 00:25:41,417 --> 00:25:43,752 மன்னி. உன்னை போண்டியாக்க நினைக்கல. 345 00:25:43,836 --> 00:25:46,672 அதானே, உனக்கு எப்படி தெரியும்? 346 00:25:48,215 --> 00:25:50,301 உன் பணத்தை வாங்கிக்க. கவலை வேணாம். 347 00:25:50,384 --> 00:25:52,094 -ஜாலிக்கு ஆடினோம். -பரவாயில்ல. 348 00:25:53,554 --> 00:25:55,014 ஜெயித்தது, வெச்சுக்குங்க. 349 00:26:10,779 --> 00:26:14,325 அக்டோபர்ல சான்டா பார்பரால நடக்கும் புத்தக விழாவில் 350 00:26:14,408 --> 00:26:16,493 மைய உரை ஆற்ற போகிறேன். 351 00:26:16,577 --> 00:26:18,829 நான் நினைத்தது... 352 00:26:20,789 --> 00:26:22,249 நீயும் என்னோடு வரலாமேனு. 353 00:26:23,500 --> 00:26:26,086 இலையுதிர் காலத்தை இன்னும் சரியா திட்டமிடலை. 354 00:26:28,130 --> 00:26:29,048 லாரல், 355 00:26:31,258 --> 00:26:32,968 அதைப் பத்தி நாம பேசணும். 356 00:26:34,011 --> 00:26:35,471 உன்னிடம் ஒண்ணு சொல்லணும்... 357 00:26:38,432 --> 00:26:39,683 -ஆரம்பமாகுது. -சரி. 358 00:26:41,602 --> 00:26:42,603 இதோ தொடங்குது. 359 00:26:43,187 --> 00:26:44,897 ஜெரமையா எங்கேன்னு தெரியலயே. 360 00:26:44,980 --> 00:26:47,483 இதோ வந்துடுவான், நிச்சயமா. போ. தயாராகு. 361 00:27:00,120 --> 00:27:02,790 உனக்கு லீயமுடன் உள்ளதை ஏன் சொல்லல? 362 00:27:02,873 --> 00:27:03,832 உடனில்லாததால். 363 00:27:03,916 --> 00:27:06,960 ப்ராம்க்கு கூட்டிப் போய், ஒட்டிக்கிறான், அது சரிவரல. 364 00:27:07,044 --> 00:27:09,213 -ஏன் இப்படி இருக்க? -எப்படி இருக்கேன்? 365 00:27:09,296 --> 00:27:13,092 வினோதமா, தவிப்பா இருக்கியே. டேய்லர் பத்தி நான் அப்படி இல்லயே. 366 00:27:13,175 --> 00:27:14,968 எனக்குத் தெரியல, சும்மா... 367 00:27:16,678 --> 00:27:20,307 நீ சரியா கவனிச்சியா தெரியல, நான் இங்கே சரிவர மாட்டேன். 368 00:27:20,391 --> 00:27:24,019 -ஸ்டீவன். -இல்ல, நான் ஃபிலடெல்ஃபியா புறநகர் ஆள். 369 00:27:24,103 --> 00:27:27,147 நல்ல புறநகர் கூட இல்ல. நான் ஓட்டுவது ஹோண்டா சிவிக். 370 00:27:27,231 --> 00:27:30,317 நான் நிதி திரட்டல் விழா, நடனவிழா எல்லாம் போனதில்லை. 371 00:27:34,488 --> 00:27:36,031 நான் அவன் அளவுலாம் இல்ல. 372 00:27:38,033 --> 00:27:39,910 அது நல்லதுதான். 373 00:27:41,328 --> 00:27:43,455 நீ என்னோடதான் இருக்கே. அவனோட இல்லயே. 374 00:27:45,666 --> 00:27:46,792 உன்னை தேர்ந்தேன். 375 00:27:50,087 --> 00:27:52,798 ஆம், தேர்ந்தெடுத்தே, இல்லையா? 376 00:27:57,094 --> 00:27:58,303 உன்னை காதலிக்கிறேனோ. 377 00:27:59,805 --> 00:28:00,973 ஆம். அது சரி. 378 00:28:09,398 --> 00:28:12,276 -ஹேய், ஜெரமையாவை பார்த்தீங்களா? -வெளியே இருந்தானே. 379 00:28:13,318 --> 00:28:16,613 ஜெரமையா எங்கே? கானி, நீ உன் தம்பியை பார்த்தாயா? 380 00:28:17,072 --> 00:28:18,866 இப்பதானே இங்க இருந்தான். 381 00:28:26,665 --> 00:28:28,792 சிபி புற்றுநோய் சிகிச்சை மையம் சூஸானா ஃபிஷருக்கு 382 00:28:28,876 --> 00:28:30,502 மறு: எதிர்வரும் புற்றுநோய் சோதனைகள் 383 00:29:00,699 --> 00:29:04,578 வகுப்பறையில நாம நிர்வாணமா நின்னு, எல்லோரும் வேடிக்கை 384 00:29:04,661 --> 00:29:06,747 பார்க்கும் கனவு கண்டதுண்டா? 385 00:29:07,664 --> 00:29:09,625 அந்த கனவு இப்ப எனக்கு. 386 00:29:09,708 --> 00:29:11,960 -ஹை. -ஹேய், ஜெரமையாவை பார்த்தீங்களா? 387 00:29:12,044 --> 00:29:13,170 -இல்ல. -இல்ல. 388 00:29:57,548 --> 00:29:59,758 அனேகமா எல்லா ஜதிகளும் கவனமிருக்கு. 389 00:30:42,259 --> 00:30:43,468 அவங்களை பார். 390 00:30:44,511 --> 00:30:45,846 மின்னறா. 391 00:30:46,763 --> 00:30:50,225 பெல்லிக்கு, கான்ராட்தான் சூரியன், அந்த சூரியன் வர்றப்போ... 392 00:30:51,018 --> 00:30:52,352 நட்சத்திரங்கள் மங்கிடும். 393 00:31:36,188 --> 00:31:38,106 ஜெரமையா செல்லம், எங்க போயிட்டே? 394 00:31:38,190 --> 00:31:40,901 ஏதோ சாப்பிட்டது ஒத்துக்கல. இறால் மட்டம் போல. 395 00:31:41,318 --> 00:31:42,903 அடப் பாவமே, செல்லம். 396 00:31:42,986 --> 00:31:45,822 -உணவுக்கடையை தட்டிக் கேட்கிறேன். -சரி, எஜமானி. 397 00:31:45,906 --> 00:31:48,200 கொஞ்ச ஜிஞ்சர் ஏல் கொண்டு வரேன். பொறு! 398 00:32:24,444 --> 00:32:25,362 நன்றி. 399 00:32:26,071 --> 00:32:27,781 சில ஜதிகளை சொதப்பினேனோ. 400 00:32:28,365 --> 00:32:29,408 அருமையா ஆடினே. 401 00:32:31,493 --> 00:32:32,536 மகிழ்ச்சி எனக்கு. 402 00:32:34,454 --> 00:32:36,289 இது நானாக இருந்ததில் மகிழ்ச்சி. 403 00:32:43,880 --> 00:32:45,298 இதோ வர்றேன். 404 00:32:45,382 --> 00:32:48,677 கண்ணு, உனக்கு மறுபடி சுகமில்லயா? இதோ, ஜிஞ்சர் ஏல் எங்கே? 405 00:32:48,760 --> 00:32:50,846 ஒண்ணு பார்லருந்து கொண்டு வர்றேன். 406 00:32:52,681 --> 00:32:54,182 என்ன சொல்ல வந்தே? 407 00:32:57,269 --> 00:32:59,104 சூஸானா புற்றுநோய் பத்தி தெரியும். 408 00:33:00,605 --> 00:33:01,857 கான்ராட் சொன்னான். 409 00:33:03,066 --> 00:33:05,193 -ஹேய். -ஹேய், ஜெரமையா, எங்கே போனே? 410 00:33:05,277 --> 00:33:08,280 கான்ராட், நாம் பேசணும். முக்கியம் இது. அம்மா பத்தி. 411 00:33:08,363 --> 00:33:09,948 ஒண்ணு தெரிய வந்தது. 412 00:33:12,159 --> 00:33:13,869 அதைப் பத்தி அப்புறம் பேசலாமே? 413 00:33:13,952 --> 00:33:15,787 -இல்ல, முக்கியம். -பரவாயில்ல. 414 00:33:21,001 --> 00:33:23,128 -முன்பே தெரியுமா? -கான்ராடுக்கு தெரியுமா? 415 00:33:24,713 --> 00:33:25,922 அடக் கடவுளே. 416 00:33:26,882 --> 00:33:28,300 எப்படி தெரியும் அவனுக்கு? 417 00:33:28,383 --> 00:33:31,136 இத்தனை நாளா தெரிஞ்சிருந்தும், சொல்லலயே நீ? 418 00:33:31,219 --> 00:33:32,137 ஜெர்... 419 00:33:45,442 --> 00:33:48,320 நிறுத்துங்க! ரெண்டு பேரும் நிறுத்துங்க! 420 00:33:56,995 --> 00:33:59,372 என்ன நடக்குது? 421 00:34:04,002 --> 00:34:04,836 அம்மா... 422 00:34:09,340 --> 00:34:10,258 தெரியும்மா. 423 00:34:12,385 --> 00:34:13,678 இருவருக்கும் தெரியும். 424 00:34:18,849 --> 00:34:19,851 என்ன தெரியும்? 425 00:34:32,155 --> 00:34:33,698 ரொம்ப முட்டாள் தனமா உணரறேன். 426 00:34:35,659 --> 00:34:38,327 கண்ணு, ஏன் முட்டாள்தனம்ன்றே? 427 00:34:39,496 --> 00:34:43,541 கோடை முழுதும், என்னைப் பத்தியே நினைச்சுட்டுருந்ததால். 428 00:34:43,624 --> 00:34:46,044 சூஸானாக்கு உடல்நிலை சரியில்ல. தெரியவேயில்ல. 429 00:34:46,126 --> 00:34:47,086 இருக்கட்டும். 430 00:34:47,546 --> 00:34:49,172 இப்படிதான் இருக்கணும்னா அவ. 431 00:34:49,923 --> 00:34:53,050 இப்படியேதான் அவ விருப்பம். 432 00:34:55,010 --> 00:34:56,471 எவ்ளோ நாளா தெரியும்? 433 00:34:58,139 --> 00:34:59,224 வசந்த காலம் முதல். 434 00:35:00,642 --> 00:35:03,687 சின்ன பசங்க உங்களுக்கு கவலை தரவேணாம்னு இருந்தா. 435 00:35:04,145 --> 00:35:07,023 உங்க கூட கடைசி கோடையை கழிக்க விரும்பினா. 436 00:35:10,193 --> 00:35:11,319 ஆனா, நீங்க? 437 00:35:12,696 --> 00:35:13,822 எனக்கு என்ன? 438 00:35:15,448 --> 00:35:17,576 உங்களுக்குள்ளயே போட்டு உழப்பினீங்க. 439 00:35:38,805 --> 00:35:40,891 அவங்களுக்கு குணமாகாது இல்லயா? 440 00:35:42,267 --> 00:35:43,184 ஆகாது. 441 00:36:26,019 --> 00:36:28,563 இந்த இரவு இப்படி மாறினது ரொம்ப வருத்தமானது. 442 00:36:30,690 --> 00:36:32,984 இப்படி உங்களுக்கு தெரியணும்னு நினைக்கல. 443 00:36:34,110 --> 00:36:36,363 அம்மா, சோதனைக்குப் போறீங்க இல்லையா? 444 00:36:41,242 --> 00:36:42,452 இல்ல, கண்ணு. 445 00:36:43,328 --> 00:36:44,412 நான் போகலை. 446 00:36:45,497 --> 00:36:46,539 போக முடியாது. 447 00:36:48,959 --> 00:36:50,627 பிழைக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. 448 00:36:51,836 --> 00:36:53,129 வழியே இல்லை. உண்மைல. 449 00:36:55,048 --> 00:36:57,133 மறுபடி அந்த அவதியை தாங்க முடியாது. 450 00:36:58,426 --> 00:37:00,303 முதல் முறை ரொம்ப கஷ்டமா இருந்தது. 451 00:37:00,387 --> 00:37:01,888 அம்மா, முயற்சி செய்யலாமே. 452 00:37:02,764 --> 00:37:03,807 முயற்சி செய்யணும். 453 00:37:05,350 --> 00:37:07,102 போகும் போது நான் நானா இருக்கணும். 454 00:37:09,604 --> 00:37:11,106 -புரியுதா? -இல்ல. 455 00:37:11,189 --> 00:37:14,109 -இதில எதுவுமே புரியல. -தெரியுது. 456 00:37:15,735 --> 00:37:17,737 எனக்கு திறமை இல்ல. சரியா? 457 00:37:18,780 --> 00:37:20,365 அம்மாக்கு இதில திறமை இல்ல. 458 00:37:26,871 --> 00:37:28,915 தெரிந்துட்டது எனக்கு தெரிஞ்சிருக்கணும். 459 00:37:31,418 --> 00:37:33,253 அதை நம்பாமலிருக்க நினைத்தேன். 460 00:37:35,422 --> 00:37:38,758 அம்மா, ஏதேனும் வாய்ப்பிருந்தா, விடக் கூடாது. 461 00:37:39,092 --> 00:37:40,760 பாரு, சொல், கான்ராட். 462 00:37:42,721 --> 00:37:44,556 ஏன் எதுவும் சொல்லமாட்டேங்கறே? 463 00:37:44,931 --> 00:37:47,851 அம்மா, அபத்தம். முயற்சிக்கணும். கைவிடக் கூடாது. 464 00:37:47,934 --> 00:37:51,187 அம்மா. நீங்க கொஞ்சம்... 465 00:37:53,565 --> 00:37:54,858 முயற்சி பண்ணக் கூடாதா? 466 00:37:57,068 --> 00:37:58,194 எங்களுக்காக, அம்மா? 467 00:38:01,448 --> 00:38:02,490 பார்த்துக்கணும். 468 00:38:04,451 --> 00:38:05,368 இங்கே வாங்க. 469 00:38:28,141 --> 00:38:31,311 -நீ சமைத்தா, முடிவு நெருங்கியதா பொருள். -வாயை மூடு! 470 00:38:34,064 --> 00:38:35,607 பசங்களோட எப்படி போனது? 471 00:38:36,691 --> 00:38:38,651 நான் சோதனைக்குப் போறேன்னேன். 472 00:38:41,071 --> 00:38:42,280 வேணாம்னு சொல்ல முடியல. 473 00:38:45,241 --> 00:38:49,287 -கஷ்டமாக போகுதுன்னு தெரியும்-- -டாக்டர்ங்க எது வேணும்னாலும் சொல்லட்டும். 474 00:38:49,370 --> 00:38:50,705 இது நலமாகும். 475 00:38:53,124 --> 00:38:54,417 நீ அற்புதமானவ. 476 00:38:56,127 --> 00:38:57,962 அற்புதத்தில எப்ப நம்பிக்கை வந்தது? 477 00:38:59,172 --> 00:39:00,340 உன் மேல் நம்பிக்கை. 478 00:39:07,430 --> 00:39:10,517 சரி, எல்லாம் கீழே வாங்க! நாம் சாப்பிடணும். 479 00:39:17,148 --> 00:39:21,236 இந்த கோடையில் என் இதயத்தையே எனக்கு புரியாததா தோணிய தருணங்கள் வந்தன. 480 00:39:21,319 --> 00:39:23,780 ஆனா, ஒண்ணு மட்டும் எனக்குத் தெரியும், 481 00:39:23,863 --> 00:39:26,116 அது, அடுத்து என்ன நடந்தாலும் சரி, 482 00:39:26,199 --> 00:39:28,743 நான் இதே எப்பவும் இடத்தில், இதே மக்களிடத்தில் 483 00:39:29,327 --> 00:39:30,870 மறுபடி வருவேன். 484 00:39:43,216 --> 00:39:44,801 சரின்னு சொன்னது வியப்பு. 485 00:39:46,136 --> 00:39:47,804 நீ சாதித்தே. அவங்க மனசை மாத்தினே. 486 00:39:47,887 --> 00:39:50,807 இல்ல. நான் இல்ல. அது ஜெர். அவன் சாதனை. 487 00:39:58,314 --> 00:40:01,109 கோடை முழுதும் மட்டமா நடந்துகிட்டதுக்கு வருந்தறேன். 488 00:40:04,863 --> 00:40:07,407 நீ தனியா இதை உன்னோடு வைத்து குமைந்தாய். 489 00:40:07,490 --> 00:40:09,742 என்கிட்ட சொல்லியிருந்தா, அப்படி வேணாமே. 490 00:40:09,826 --> 00:40:11,077 சொல்ல விரும்பினேன். 491 00:40:12,328 --> 00:40:14,205 ஒரிருமுறை, சொல்லியிருப்பேன். 492 00:40:20,837 --> 00:40:22,130 நாம் மனசுவிட்டு பேசணும். 493 00:40:22,213 --> 00:40:24,299 நான் உன்கிட்ட சொல்ல எவ்வளவோ இருக்கு. 494 00:40:24,382 --> 00:40:26,509 -வேணாம். இப்ப வேணாம். -ஏன்? 495 00:40:29,971 --> 00:40:32,473 உனக்கு இப்ப யாருடைய ஆதரவாவது வேணும். 496 00:40:33,433 --> 00:40:35,643 அதை நான் சாதகமாக்கிக்க வேணாம். 497 00:40:35,727 --> 00:40:37,478 யாரோல்லாம் வேணாம். 498 00:40:40,607 --> 00:40:41,691 எனக்கு நீ வேணும். 499 00:40:43,985 --> 00:40:45,695 நான் ஒரு தேவையா இருக்க வேணாம். 500 00:40:46,404 --> 00:40:47,739 என்னை இயல்பா நாடணும். 501 00:40:51,492 --> 00:40:52,619 உன்ன நாடுகிறேன்தான். 502 00:41:34,118 --> 00:41:36,913 இந்த தருணத்தில் உணர்ந்தேன், 503 00:41:36,996 --> 00:41:38,831 இது நடக்கும்னா, 504 00:41:38,915 --> 00:41:40,500 எதுவும் நடக்கும். 505 00:43:29,150 --> 00:43:31,152 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 506 00:43:31,235 --> 00:43:33,237 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்