1 00:00:18,478 --> 00:00:22,107 வாத்தினால் திருப்தியடைந்த பெண் 2 00:00:27,028 --> 00:00:28,613 -காலை வணக்கம். -காலை வணக்கம். 3 00:00:29,531 --> 00:00:30,532 கிரீம் சீஸ் டொமேடோ. 4 00:00:31,366 --> 00:00:34,035 திருமணமாகி, நான்கு குழந்தைகளோடு சந்தோஷமாக இருக்கிறாய் அது நல்லது, மாரியோ. 5 00:00:36,454 --> 00:00:37,455 சரி. 6 00:00:37,998 --> 00:00:39,082 நன்றி. 7 00:00:39,165 --> 00:00:40,250 நாளை சந்திக்கலாம். 8 00:00:40,333 --> 00:00:41,334 பை. 9 00:00:46,381 --> 00:00:49,801 எம்கேட் 10 00:00:49,885 --> 00:00:50,886 இன்னும் கர்ப்பமாகத் தான் இருக்கிறாயா? 11 00:00:51,595 --> 00:00:52,721 நீ என்ன செய்கிறாய்? 12 00:00:52,804 --> 00:00:54,097 எப்போதும் போல தான். 13 00:00:54,180 --> 00:00:57,017 பூங்காவில் அமர்ந்து சந்தோஷமாகப் படிக்கிறேன். 14 00:00:57,100 --> 00:00:58,727 நீ எப்போதும் தனிமையில் இருந்தால், என் பிள்ளைகளுக்கு 15 00:00:58,810 --> 00:01:00,145 கசின்கள் எப்படி கிடைப்பார்கள்? 16 00:01:00,228 --> 00:01:01,897 நான் தனியாக இல்லை. 17 00:01:02,480 --> 00:01:06,151 இந்த அழகான தோற்றத்தைப் பார். 18 00:01:07,193 --> 00:01:10,405 பச்சை தலை உடைய அந்த வாத்தைப் பார். 19 00:01:11,406 --> 00:01:15,452 அவனது ஆணுறுப்பு பெரியதாக, நீளமாக, வளைந்தும் இருக்கிறது. 20 00:01:15,535 --> 00:01:16,536 அது அருவெறுப்பாக உள்ளது. 21 00:01:17,621 --> 00:01:18,622 செயலிகளில் துணையைத் தேடுகிறாயா? 22 00:01:18,705 --> 00:01:20,874 ஆமாம். 23 00:01:22,000 --> 00:01:23,001 பிறகு? 24 00:01:23,793 --> 00:01:25,295 நிறைய வாய்ப்புகள் இல்லை. 25 00:01:27,255 --> 00:01:34,012 போன முறை சந்தித்தவன், தன் ஸ்டாண்ட்-அப் காமெடியைப் பார்க்க, என்னை கிளப்பிற்கு அழைத்துச் சென்றான். 26 00:01:34,095 --> 00:01:35,096 அது தான் டேட்டிங்காம். 27 00:01:35,180 --> 00:01:38,016 வீட்டிற்கு திரும்பி வா. இங்கே டேட்டிங் அருமையாக இருக்கும். 28 00:01:38,725 --> 00:01:42,437 இது, 30 வயதில் டேட்டிங் செய்யும் வருத்தமான ஆனால் உண்மை நிலவரம். 29 00:01:42,520 --> 00:01:44,231 ஒரு ஆண் இன்னும் ஒற்றையாக இருந்தால், 30 00:01:44,314 --> 00:01:48,193 ஒன்று அவனிடம் ஏதோ தவறு இருக்கும் அல்லது பிரச்சினை இருக்கும். எனக்குத் தெரியவில்லை... 31 00:01:48,276 --> 00:01:49,444 நாம் ஏன் டேட்டிங் பற்றி பேசுகிறோம்? 32 00:01:49,527 --> 00:01:51,196 யாருக்கு கவலை? உன்னையும், உன் குழந்தைகளையும் பற்றி சொல். 33 00:01:52,447 --> 00:01:53,573 குழந்தைகள் நலம். அவர்கள்... 34 00:01:55,575 --> 00:01:56,993 இதோ உனக்கான பதில். 35 00:01:57,077 --> 00:01:58,745 பிரச்சினை இருக்கிறது. போக வேண்டும். பை. 36 00:02:08,546 --> 00:02:09,548 என்ன பார்க்கிறாய்? 37 00:02:24,145 --> 00:02:25,313 என்ன வேண்டும்? ஃபிலெட் மிக்னோன்? 38 00:02:25,397 --> 00:02:26,523 சரி. இருக்கிறதா? 39 00:02:27,649 --> 00:02:29,818 -என்ன? -நன்றாக வெந்திருந்தால் சாப்பிடுகிறேன். 40 00:02:32,362 --> 00:02:34,030 என்ன தான் நடக்கிறது? 41 00:02:34,114 --> 00:02:35,615 இது நகைச்சுவை. வாத்துகள் மாமிசம் சாப்பிடாது. 42 00:02:35,699 --> 00:02:39,077 சும்மா தெரிந்துகொள், எங்களுக்கு கரகரப்பான பேகெல் பிடிக்காது. 43 00:02:41,454 --> 00:02:42,914 என்ன படிக்கிறாய்? 44 00:02:44,165 --> 00:02:46,710 ஒரு எம்கேட் புத்தகம். 45 00:02:48,044 --> 00:02:49,045 அது... 46 00:02:52,048 --> 00:02:55,010 ஒரு நுழைவு தேர்வுக்கு தயார் ஆவதற்காக படிக்க வேண்டிய... 47 00:02:55,093 --> 00:02:58,889 எம்கேட் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். நான் ஒரு வாத்து, முட்டாள் இல்லை. 48 00:02:59,723 --> 00:03:01,349 நீ எந்த துறை மருத்துவராக விரும்புகிறாய்? 49 00:03:02,142 --> 00:03:06,396 இருதய நிபுணர். என் அப்பா இதய நோயினால் இறந்தார். 50 00:03:06,479 --> 00:03:08,315 உன்னிடம் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன்? 51 00:03:08,398 --> 00:03:11,401 உன் இழப்பிற்கு வருந்துகிறேன். அது கடினமாக இருந்திருக்கும். 52 00:03:12,652 --> 00:03:14,446 எனக்கு மிகப் பெரிய ஆணுறுப்பு இருக்கிறது. 53 00:03:15,739 --> 00:03:16,990 கூர்மையானது, கூட. 54 00:03:18,491 --> 00:03:19,743 என்ன? 55 00:03:19,826 --> 00:03:20,911 உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். 56 00:03:22,537 --> 00:03:23,955 நான் பேசியதைக் கேட்டாயா? 57 00:03:24,039 --> 00:03:26,499 ஒவ்வொரு நாளும் இங்கே வந்து உன் சகோதரியோடு ஃபேஸ் டைம் செய்கிறாய். 58 00:03:26,583 --> 00:03:28,376 கவனிக்காமல் இருக்க முடியவில்லை. 59 00:03:30,086 --> 00:03:31,546 என் பெயர் லேரி. 60 00:03:32,339 --> 00:03:33,340 எலிசா. 61 00:03:33,423 --> 00:03:35,884 உன் டேட்டிங் வாழ்க்கையைப் பற்றி உன் சகோதரி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாள்? 62 00:03:39,554 --> 00:03:41,223 அவள் தனிமையாக உணர்கிறாள் என்பதால் இருக்கலாம். 63 00:03:42,098 --> 00:03:44,768 எங்கள் அனுபவங்களை பகிர விரும்புகிறாள். 64 00:03:44,851 --> 00:03:47,646 அல்லது ஆணாதிக்கத்தை ரொம்பவும் ஏற்றுக் கொள்வதால் 65 00:03:47,729 --> 00:03:51,233 ஆண்களை வைத்துத்தான் ஒருவரின் மதிப்பு என்று அவள் நினைக்கலாம். 66 00:03:54,569 --> 00:03:56,738 நீ ஒரு பெண்ணியவாதி வாத்தா? 67 00:03:56,821 --> 00:03:59,699 பெண் வாத்துகள் நிறைந்த குளத்தில் இருக்கும், ஒரே ஆண் வாத்து. 68 00:03:59,783 --> 00:04:01,368 எனக்கு வேறு வழி இருக்கிறதா என்ன? 69 00:04:01,451 --> 00:04:02,827 அடக் கடவுளே! 70 00:04:02,911 --> 00:04:05,664 உன் நாயை கட்டி வை, முட்டாளே. விதிகளைப் பின்பற்று. 71 00:04:06,790 --> 00:04:07,791 நாளை இதே நேரம் சந்திக்கலாமா? 72 00:04:26,893 --> 00:04:28,353 கூகுள் 73 00:04:28,436 --> 00:04:31,106 பேசும் வாத்துகள் 74 00:04:37,988 --> 00:04:42,242 வாத்துகளுக்கு பேகெல்கள் பிடிக்காதா? 75 00:05:04,264 --> 00:05:08,894 வாத்துகளுக்கு சாப்பிட எது பிடிக்கும்? 76 00:05:12,898 --> 00:05:15,859 கேரி! கேரி! 77 00:05:16,902 --> 00:05:19,279 ஒரு நிமிடம். ஹாய். தொந்தரவுக்கு மன்னிக்கவும். 78 00:05:19,362 --> 00:05:20,780 விலங்கு கட்டுப்பாட்டு துறையில் இருந்து வருகிறேன். 79 00:05:20,864 --> 00:05:24,576 சங்கிலியில் கட்டப்படாத ஒரு நாயைப் பார்த்தீர்களா? 80 00:05:24,659 --> 00:05:26,202 கேரி என்று கூப்பிட்டால் வரும். 81 00:05:26,286 --> 00:05:30,749 அட, ஆமாம், நேற்று பார்த்தேன். இன்று பார்க்கவில்லை. 82 00:05:30,832 --> 00:05:32,584 அடக் கடவுளே. 83 00:05:33,335 --> 00:05:34,336 இது மோசம். 84 00:05:35,545 --> 00:05:37,422 இருந்தாலும், நன்றி. 85 00:05:39,382 --> 00:05:43,511 வந்து... பெரிய புயல் வருகிறது, தெரியுமா, 86 00:05:43,595 --> 00:05:47,057 அதனால் அவனை பத்திரமாக உள்ளே வைக்க விரும்புகிறேன். 87 00:05:47,766 --> 00:05:49,059 நானும் தான். 88 00:05:49,142 --> 00:05:51,144 நீங்கள் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள். 89 00:05:51,228 --> 00:05:52,562 நிச்சயம். 90 00:05:53,355 --> 00:05:54,689 நான் வீட்டிற்குள் இருந்தால். 91 00:05:55,607 --> 00:05:56,733 கவனமாக இருங்கள். 92 00:05:57,984 --> 00:05:59,027 சிறப்பு. 93 00:05:59,110 --> 00:06:01,154 நாயை ஒரு தலைப்பாக வைத்து, பெண்களோடு பேசுவது. 94 00:06:02,656 --> 00:06:03,657 மறுபடியும், ஹாய். 95 00:06:03,740 --> 00:06:04,991 திரும்பி வந்துவிட்டாயே. 96 00:06:05,075 --> 00:06:06,159 ஆமாம். 97 00:06:06,243 --> 00:06:08,203 நான் தினமும் இங்கே வருவேன், 98 00:06:08,286 --> 00:06:12,916 அதனால்... இதோ இங்கிருக்கிறேன். 99 00:06:14,793 --> 00:06:16,002 உனக்கு ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 100 00:06:19,214 --> 00:06:22,133 சோளம் மற்றும் திராட்சைகள். 101 00:06:22,217 --> 00:06:23,593 என்னைப் பற்றி கூகுளில் தேடினாயா? 102 00:06:24,678 --> 00:06:27,472 இல்லை. அது விசித்திரமாக இருக்கும். 103 00:06:33,395 --> 00:06:34,563 உன் சகோதரி எப்படி இருக்கிறாள்? 104 00:06:35,063 --> 00:06:37,607 நன்றாக இருக்கிறாள். சொல்லத் தெரியவில்லை. 105 00:06:38,191 --> 00:06:40,026 நேற்று இரவு அவளோடு பேசினேன், 106 00:06:40,110 --> 00:06:42,279 அப்போது மழலையர் பள்ளி பற்றி 30-நிமிடம் பொரிந்து தள்ளினாள். 107 00:06:43,446 --> 00:06:46,658 சில சமயங்களில் தாய்மை என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்பெருமை, 108 00:06:46,741 --> 00:06:48,451 ஆனால் அதை சத்தமாக, வெளியே சொல்லக்கூடாது. 109 00:06:48,535 --> 00:06:49,619 நீதான் இப்போது சொல்லிவிட்டாயே. 110 00:06:50,912 --> 00:06:54,082 ஆமாம். ஏன் என்று தெரியவில்லை. என் சகோதரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். 111 00:06:54,165 --> 00:06:55,208 அவள் சிறப்பானவள். 112 00:06:55,709 --> 00:06:58,044 எனக்கு சாப்பாடு கொடுப்பதால், இதை யோசி. 113 00:06:58,128 --> 00:06:59,129 சரி. 114 00:06:59,212 --> 00:07:01,840 கண்ணியமாக இருக்க நீ ரொம்பவும் முயற்சிக்கிறாய். 115 00:07:01,923 --> 00:07:03,967 -அப்படி இல்லை. -உன் உள்ளுணர்வு சொல்வதைக் கேள். 116 00:07:04,050 --> 00:07:05,969 உன் சகோதரி தற்பெருமை மிக்கவள். 117 00:07:06,052 --> 00:07:09,639 தன்னைப் பற்றியும், தன் குழந்தைகளைப் பற்றியும் பேசுகிறாள். உன்னைப் பற்றி எதுவும் கேட்பதில்லை. 118 00:07:09,723 --> 00:07:13,059 ஓ, அது உண்மை இல்லை. அவள் என்னைப் பற்றி நிறைய கேள்வி கேட்பாள். 119 00:07:13,143 --> 00:07:14,603 உன் டேட்டிங் வாழ்க்கையை பற்றி கேட்டு, 120 00:07:14,686 --> 00:07:17,898 தன் வாழ்க்கையோடு ஒப்பிட்டு, மகிழ்வதற்காக. 121 00:07:17,981 --> 00:07:19,608 வேறு ஏதாவது கேட்பாளா? 122 00:07:21,109 --> 00:07:22,110 அவள் பிஸியாக இருப்பாள். 123 00:07:22,193 --> 00:07:25,614 தன் மகிழ்ச்சிக்காக உன் வாழ்க்கையைப் பற்றி பேசுவதை நிறுத்தச் சொல். 124 00:07:28,241 --> 00:07:29,618 வேறு எதையாவது கவனித்திருக்கிறாயா? 125 00:07:29,701 --> 00:07:33,622 ஆமாம். அந்த எம்கேட் புத்தகத்தில், ஒரே பாடத்தை, 20 முறை படித்திருக்கிறாய், 126 00:07:33,705 --> 00:07:36,917 எனவே நீ கவனம் சிதறுகிறாய், 127 00:07:37,000 --> 00:07:39,878 அல்லது இப்போதெல்லாம் உனக்கு படிக்க விருப்பமில்லாமல் இருக்கலாம். 128 00:07:44,966 --> 00:07:46,509 வரப்போகும் புயல் பற்றித் தெரியுமா? 129 00:07:47,552 --> 00:07:49,346 அவன் உன்னிடம் பேச முயற்சித்தது போலவே நீயும் முயற்சிக்கிறாயா? 130 00:07:52,098 --> 00:07:53,183 அது மோசம். 131 00:07:53,266 --> 00:07:55,143 -மன்னிக்கவும். -இல்லை, இல்லை. அருமை. 132 00:07:59,189 --> 00:08:01,149 உன்னிடம் ஒரு அந்தரங்க கேள்வி கேட்கலாமா? 133 00:08:01,650 --> 00:08:04,903 மழையில் வாத்துகள் என்ன செய்யும்? 134 00:08:04,986 --> 00:08:07,614 அங்கே இருக்கும் முட்டாள்களுக்கு, அது ரொம்ப பிடிக்கும். 135 00:08:07,697 --> 00:08:10,992 நான் அந்த பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து, குளிரினால் இறக்காமல் இருக்க முயல்வேன். 136 00:08:11,076 --> 00:08:12,077 நான் ஒன்றும் குற்றம் சொல்லவில்லை. 137 00:08:30,011 --> 00:08:31,096 என்னை உள்ளே அழைக்க மாட்டாயா? 138 00:08:32,847 --> 00:08:34,849 ஏன்னி 139 00:08:37,936 --> 00:08:40,020 -ஆஹா. -மன்னித்துவிடு. 140 00:08:40,105 --> 00:08:41,273 உங்கள் வாக்கு முக்கியம் 141 00:08:41,356 --> 00:08:44,776 என் வீட்டிற்கு நிறைய, விருந்தாளிகள் வரமாட்டார்கள். 142 00:08:44,859 --> 00:08:46,653 இல்லை, எனக்கு இந்த இடம் பிடிக்கிறது. 143 00:08:46,736 --> 00:08:49,489 சில கடிதங்கள், சில ஆடைகள், 144 00:08:49,573 --> 00:08:52,659 சில காலணிகள், சில கயிறுகள். 145 00:08:52,742 --> 00:08:59,291 என் அறை, விடுதி அறை போல இருப்பது தான் இதன் அழகே. 146 00:08:59,374 --> 00:09:00,667 ஆமாம். அழகாக இருக்கிறது. 147 00:09:00,750 --> 00:09:03,587 என்னை யாரும் அவ்வளவாக வீட்டிற்குள் அழைக்க மாட்டார்கள். 148 00:09:03,670 --> 00:09:06,464 இதை அழகாக்க நான் எதையும் செய்ததில்லை. 149 00:09:06,548 --> 00:09:08,967 சுவற்றில் ஏதாவது வரையலாமா என்று ஒரு மாதம் யோசித்தேன், 150 00:09:09,050 --> 00:09:11,344 பிறகு பெஞ்சமின் மூர் இணையதளத்தில் சென்று பார்த்தபோது, 151 00:09:12,429 --> 00:09:14,347 ரொம்பவும் ஆச்சரியப்பட்டேன். 152 00:09:14,431 --> 00:09:18,435 என்ன இது. செயலில் இறங்கு. வண்ணமயமான வாழ்க்கை வாழ்வு, செல்லமே. 153 00:09:19,936 --> 00:09:23,523 ஒருவேளை நீ தான், என்றோ தொலைந்து போன மூன்றாவது ப்ராபர்டி பிரதரா? 154 00:09:23,607 --> 00:09:25,317 ப்ராபர்டி பிரதர்ஸ் யார்? 155 00:09:25,901 --> 00:09:27,861 எனக்கு அவர்களின் நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும். 156 00:09:27,944 --> 00:09:28,945 தெரியும்! 157 00:09:29,529 --> 00:09:32,908 அவர்கள் அந்த மோசமான சமையலறையை சரி செய்தார்கள். அது நன்றாக இருந்தது. 158 00:09:33,491 --> 00:09:36,995 பத்து ரூபாய் பந்தயம், அந்தக் கணவர் அழுவார். 159 00:09:37,078 --> 00:09:39,331 என்னிடம் பணம் எதுவுமில்லை, ஆனால் பந்தயத்தை ஏற்கிறேன். 160 00:09:41,833 --> 00:09:43,418 அடக் கடவுளே. 161 00:09:43,501 --> 00:09:45,337 இல்லை, இது ஒரு சூத்திரம். 162 00:09:45,420 --> 00:09:48,965 அந்த... ஆண்மையான, கம்பீரமான கணவர் தன்னுடைய 163 00:09:49,049 --> 00:09:50,592 தோல் நாற்காலி போன பிறகு அங்கே 164 00:09:50,675 --> 00:09:54,763 பழைய குடும்ப புகைப்படங்களை வைக்கும் போது ரொம்பவும் உணர்ச்சிவசப்படுவார். 165 00:09:54,846 --> 00:09:57,641 ஆஹா. உனக்கு எல்லாம் தெரிகிறதே. 166 00:09:58,850 --> 00:10:01,144 எனக்கு பிரத்தியேகமான அறிவு உண்டு. 167 00:10:04,522 --> 00:10:05,857 உனக்கு இனிப்பு வேண்டுமா? 168 00:10:05,941 --> 00:10:10,487 வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். இது மிகவும் சிறப்பு. 169 00:10:12,072 --> 00:10:14,866 அதாவது, நீ ரொம்பவும் சிறப்பானவள். 170 00:10:18,328 --> 00:10:22,457 உன்னை தங்கள் சைக்கிள் கூடையில் கடத்தி செல்லும் எல்லா பெண்களிடம் இதை சொல்வாய் போல. 171 00:10:27,212 --> 00:10:29,839 நீ குளியலறையில் தூங்க விரும்புகிறாயா? 172 00:10:29,923 --> 00:10:32,384 ஏன்? உன்னோடு தூங்க என்னை அழைக்கிறாயா? 173 00:10:33,176 --> 00:10:35,595 நான் மோசமானவன், பைத்தியக்காரன் இல்லை. 174 00:10:38,723 --> 00:10:39,891 உனக்கு எவ்வளவு வெப்பம் வேண்டும்? 175 00:10:40,850 --> 00:10:41,851 அறையின் வெப்பநிலை போதும். 176 00:10:42,519 --> 00:10:44,646 குவித்து வைக்கப் பிடிக்கும், 177 00:10:44,729 --> 00:10:47,691 ஆனால், எதற்காக இந்த போஸ்டர்களை எல்லா இடத்திலும் வைத்திருக்கிறாய்? 178 00:10:49,526 --> 00:10:53,029 நான் ஒரு அரசியல் பிரச்சாரத்தில் வேலை செய்தேன். 179 00:10:53,113 --> 00:10:56,366 இங்கே வந்தேன், பிறகு... 180 00:10:57,867 --> 00:10:59,661 உனக்கு அரசியல் பற்றி தெரியுமா என தெரியவில்லை. 181 00:10:59,744 --> 00:11:02,956 வாக்களிக்க முடியாத போது, அரசியல் பற்றி தெரிந்துகொள்வது கடினம். 182 00:11:03,039 --> 00:11:06,668 அதைப் பற்றித்தான் நாங்கள் வேலை செய்கிறோம். வாக்காளர் பங்கேற்பு. 183 00:11:08,086 --> 00:11:12,257 சரி. என் வேட்பாளர் தோற்றுவிட்டார், 184 00:11:12,340 --> 00:11:17,137 இப்போது நான் இங்கே டென்வரில் ஒரு வாழ்க்கை அமைக்க போராடுகிறேன். 185 00:11:18,096 --> 00:11:19,723 -அது வேலை செய்தது? -என்ன? 186 00:11:19,806 --> 00:11:21,266 வெற்றிடத்தை நிரப்புவது. 187 00:11:23,393 --> 00:11:27,147 இல்லை. என் கவனத்தை சற்று திசைத்திருப்பியது. 188 00:11:28,440 --> 00:11:29,858 ஒரு சமூகத்தில் சேர்வது போல. 189 00:11:29,941 --> 00:11:33,445 ஓ, அப்போது நீ, “நாசமாய் போ, அரசியலே! நான் மருத்துவராக வேண்டும்” என நினைத்திருப்பாய். 190 00:11:34,195 --> 00:11:36,948 ஓ, அது பைத்தியக்காரத்தனமா? 191 00:11:37,032 --> 00:11:39,534 இல்லை, இல்லை. நீ ஒரு பயணம் போவது போல தோன்றுகிறது. 192 00:11:39,618 --> 00:11:41,828 அரசியல்வாதியாக இருப்பதை விட, மருத்துவராக இருந்து 193 00:11:41,912 --> 00:11:44,748 பலருக்கும் உதவி செய்ய முடியும். 194 00:11:44,831 --> 00:11:47,417 அது, உன்னுடைய மாறுபட்ட விருப்பம். 195 00:11:48,585 --> 00:11:49,586 அது என்ன? 196 00:11:49,669 --> 00:11:52,255 உன்னுடைய மகிழ்ச்சியை பற்றிக் கூட யோசிக்காமல், 197 00:11:52,339 --> 00:11:54,633 நீ பிறரைப் பற்றி நிறைய யோசிக்கிறாய் என்று 198 00:11:54,716 --> 00:11:56,134 நான் நினைக்கிறேன். 199 00:11:58,762 --> 00:12:00,222 நீ எப்போதும் இந்த கண்ணோட்டத்தில் தான் பார்ப்பாயா? 200 00:12:00,305 --> 00:12:02,849 உண்மையில், இது ஒரு வரம் மற்றும் சாபம் போன்றது. 201 00:12:04,768 --> 00:12:06,228 இல்லை, இது புத்துணர்ச்சி தருகிறது. 202 00:12:07,854 --> 00:12:10,023 நான் நிறைய டேட்டிங் போவேன். 203 00:12:10,106 --> 00:12:16,905 பொய் சொல்லவில்லை, இந்த ஆண்கள் சுவாரசியமில்லாத, சாதாரண கேள்விகள் கேட்பார்கள் 204 00:12:16,988 --> 00:12:18,823 அல்லது தங்களைப் பற்றி மட்டும் பேசுவார்கள். 205 00:12:18,907 --> 00:12:20,909 தொடர்ந்து கேள்விகள் இருக்கும். 206 00:12:20,992 --> 00:12:22,410 நான் ஒன்றும் பொறாமைப்படவில்லை. 207 00:12:24,996 --> 00:12:28,416 நான் தான் பிரச்சினைக்குக் காரணம் என்று நீ எப்போதாவது... 208 00:12:30,710 --> 00:12:31,962 நினைத்திருக்கிறாயா? 209 00:12:33,129 --> 00:12:35,507 ஏனென்றால் நான் சந்திக்கும் இந்த ஆண்கள் எல்லாருமே, 210 00:12:35,590 --> 00:12:39,344 பாழாகிப்போன அழுகின சூப்பர் மார்க்கெட் 211 00:12:39,427 --> 00:12:40,971 பழங்கள் போல தோன்றுகிறது. 212 00:12:43,515 --> 00:12:44,891 ஆனால் பிறகு நான்... 213 00:12:47,310 --> 00:12:52,816 “பொறு, குறை என்னிடம் இருப்பதால்தான் இதை என்னால் பார்க்க முடியவில்லையோ?” என்று நினைப்பேன். 214 00:12:53,400 --> 00:12:56,361 எனக்கு தெரிந்த வரை, உன்னிடம் எந்த குறையும் இல்லை. 215 00:12:58,530 --> 00:12:59,573 உனக்கு என்னைப் பற்றி தெரியாது. 216 00:13:00,365 --> 00:13:04,244 நீ நினைப்பதை விடவும், அதிக சந்தோஷமாக இருக்க வேண்டிய ஒரு இனிமையான பெண் நீ. 217 00:13:10,959 --> 00:13:12,794 இது தயார் என நினைக்கிறேன். 218 00:13:16,923 --> 00:13:19,175 நல்லது, இந்த கழிவறையில் நான் நடுங்குகிறேன். 219 00:13:25,181 --> 00:13:27,350 எனக்கு உதவி செய்வாயா? 220 00:13:56,087 --> 00:13:58,215 ஓ, நீ மோசமானவன்! 221 00:13:59,382 --> 00:14:00,842 முடித்து விட்டேன். 222 00:14:02,844 --> 00:14:03,845 ஹே, உள்ளே வருகிறாயா? 223 00:14:05,305 --> 00:14:06,431 கொஞ்சம் கதகதப்பாக இருக்க. 224 00:14:09,059 --> 00:14:12,812 -நான் ஆடை இல்லாமல் இருப்பேன். -நானும் தான். அது இரட்டை வேடம். 225 00:15:36,438 --> 00:15:37,647 நிச்சயம் நான் உதவ வேண்டாமா? 226 00:15:38,356 --> 00:15:40,984 வேண்டாம், இது ஒரு ஆச்சரியம் என்று சொன்னேனே! 227 00:15:56,207 --> 00:15:57,375 டேட் செய்கிறோம் என்று தெரியாமலேயே 228 00:15:57,459 --> 00:16:01,338 நாம் சந்தித்த முதல் நாளில் சாப்பிட்டவைம் இவை. 229 00:16:02,172 --> 00:16:03,423 ஆனால் கொஞ்சம் சுவையானவை. 230 00:16:03,506 --> 00:16:05,091 அதாவது, ஒரு பேகெலுக்கு பதிலாக... 231 00:16:07,093 --> 00:16:09,221 ...இந்த சவர்டோ செய்தேன். 232 00:16:09,304 --> 00:16:10,388 நான் ஏன் அதை சாப்பிடணும்? 233 00:16:13,683 --> 00:16:14,684 இது நகைச்சுவை இல்லை. 234 00:16:16,686 --> 00:16:17,771 இரு, என்ன? 235 00:16:17,854 --> 00:16:20,774 எனக்கு பிரட் பிடிக்காது என்று எத்தனை முறை உனக்கு சொல்லியிருக்கிறேன்? 236 00:16:20,857 --> 00:16:23,109 பேகெல் மட்டும் பிடிக்காது என்று நினைத்தேன். 237 00:16:23,193 --> 00:16:25,779 இல்லை, எல்லா பிரட்டும் தான். வாத்துக்களுக்கு பிரட் பிடிக்காது. 238 00:16:25,862 --> 00:16:28,323 வாத்திற்கு பிரட் கொடுக்கக் கூடாது. 239 00:16:28,406 --> 00:16:31,493 அது, எங்கள் வயிற்றில் நன்கு ஊறி எங்களை கொன்று விடக் கூடும். 240 00:16:31,576 --> 00:16:34,788 அது உன்னுடைய கூகுள் தேடலில் வரவில்லை தானே. 241 00:16:35,580 --> 00:16:36,581 -லேரி. -என்ன? 242 00:16:38,708 --> 00:16:40,043 -என்ன பிரச்சினை? -எதுவும் இல்லை. 243 00:16:40,126 --> 00:16:41,127 உண்மையைப் பேசுகிறேன். 244 00:16:42,796 --> 00:16:47,050 நீயும் இந்த உணவை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சும்மா சொல்கிறேன். 245 00:17:00,647 --> 00:17:01,648 ஹே. 246 00:17:02,649 --> 00:17:03,650 ஹே. 247 00:17:05,944 --> 00:17:06,945 நான் மோசமானவன். 248 00:17:08,112 --> 00:17:09,113 இல்லை. 249 00:17:10,323 --> 00:17:11,324 நான்... 250 00:17:16,997 --> 00:17:19,748 எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் நீ தான். 251 00:17:20,958 --> 00:17:23,460 உன்னை இழப்பது பற்றி நான் மிகவும் பயப்படுகிறேன். 252 00:17:24,337 --> 00:17:28,925 நானே அதை கெடுத்துக் கொள்கிறேன். அதற்காக என்னையே வெறுக்கிறேன். 253 00:17:32,637 --> 00:17:33,805 ஆனால் உன்னை நேசிக்கிறேன். 254 00:17:37,392 --> 00:17:38,768 -அப்படியா? -கண்டிப்பாக. 255 00:17:38,852 --> 00:17:40,729 அதனால்தான் இப்படி பைத்தியக்காரத்தனம் செய்கிறேன். 256 00:17:45,233 --> 00:17:46,484 உனக்கு கோபம் வருகிறது. 257 00:17:46,568 --> 00:17:48,153 நீ என் அப்பாவைப் பார்க்கணுமே. 258 00:17:49,696 --> 00:17:50,697 எனக்கு அது பிடிக்கவில்லை. 259 00:17:50,780 --> 00:17:51,781 நான் சிறப்பானவன் இல்லை. 260 00:17:52,782 --> 00:17:56,620 என்னால் கட்டுப்படுத்த முடியாத... இந்த உடலளவிலான, 261 00:17:56,703 --> 00:17:59,372 சில உணர்ச்சிகள் இருக்கின்றன, 262 00:17:59,456 --> 00:18:02,709 ஆனால் நான்... அதை சரி செய்துவிடுவேன், சரியா? உனக்காக. 263 00:18:05,629 --> 00:18:10,050 நான் உன்னோடு உட்காரலாமா? உனக்கு... அருகே இருக்க விரும்புகிறேன். 264 00:18:19,226 --> 00:18:20,227 நன்றாக உள்ளது. 265 00:18:24,648 --> 00:18:27,275 -மன்னித்துவிடு. லில்லி அழைக்கிறாள். -நீ பேசலாம். 266 00:18:33,281 --> 00:18:34,282 நமக்கு பிரச்சினையில்லையே? 267 00:18:35,408 --> 00:18:37,494 ஏனென்றால் இந்த இடம் ஒரு அரண்மனை. 268 00:18:37,577 --> 00:18:38,662 நீ என்னுடைய ராணி. 269 00:18:40,580 --> 00:18:42,040 நீ என்ன நினைக்கிறாய்? நீ... அடச்சே. 270 00:18:42,123 --> 00:18:43,792 என்னை மறுபடியும் பூங்காவில் விட்டுவிட நினைக்கிறாய். 271 00:18:44,376 --> 00:18:46,086 நமக்கு ஒரு தண்ணீர் தொட்டி வேண்டும். 272 00:18:47,003 --> 00:18:51,591 ஒரு நீரூற்று போல. ஒரு பப்புலர் போல. மனதுக்கு இதமான ஒன்று. 273 00:18:52,467 --> 00:18:53,593 ஓ, ஆமாம். 274 00:19:12,362 --> 00:19:13,655 நீ எங்கே போயிருந்தாய்? 275 00:19:13,738 --> 00:19:15,282 உனக்கும் ஹாய். 276 00:19:15,991 --> 00:19:19,035 போன வாரம் முழுவதும், நீ, என் அழைப்பை ஏற்கவில்லை. எனக்கு பிரசவமாகியிருந்தால் என்ன செய்வது? 277 00:19:19,703 --> 00:19:22,706 -அடக் கடவுளே. நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. -நீ நலமா? 278 00:19:22,789 --> 00:19:24,332 நான் நலம் தான். நான்... 279 00:19:27,752 --> 00:19:28,753 ஒருவரை சந்தித்தேன். 280 00:19:28,837 --> 00:19:31,298 அடக் கடவுளே. அது சிறப்பான விஷயம். 281 00:19:32,132 --> 00:19:33,133 அது சிறப்பாக இருந்தது? 282 00:19:33,216 --> 00:19:35,719 அப்படித்தான், அவனும் சிறப்பு தான். 283 00:19:35,802 --> 00:19:37,220 அது வந்து... 284 00:19:38,722 --> 00:19:40,140 இது தான் ஆரம்பம், 285 00:19:40,223 --> 00:19:41,224 மேலும்... 286 00:19:43,310 --> 00:19:44,311 ...அவன் சற்று சிக்கலானவன். 287 00:19:44,394 --> 00:19:46,563 -திருமணமானவனா? -இல்லை. 288 00:19:46,646 --> 00:19:47,647 கடவுளே. 289 00:19:49,983 --> 00:19:51,443 இந்த நட்பை தொடர வேண்டுமா என தெரியவில்லை... 290 00:19:51,526 --> 00:19:54,487 இல்லை. பரவாயில்லை, பரவாயில்லை. இது ஆரம்பம். புதுசு. புரிகிறது. 291 00:19:54,571 --> 00:19:56,323 உனக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். 292 00:19:56,406 --> 00:19:58,783 அவன் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என தெரிந்துகொள்ளவில்லை என்றால் அவனை அடிப்பேன். 293 00:19:58,867 --> 00:19:59,868 நன்றி, லில். 294 00:19:59,951 --> 00:20:02,621 உன் கர்ப்பப்பையின் வாயை சோதனை செய்கிறேன். 295 00:20:02,704 --> 00:20:04,539 -யாரது? நீ எங்கே இருக்கிறாய்? -மகப்பேறு மருத்துவரிடம், 296 00:20:04,623 --> 00:20:07,083 இந்த எடை அதிகமான குழந்தை இயற்கையாக பிறக்குமா என்று கேட்க வந்தேன். 297 00:20:07,167 --> 00:20:08,835 போ. நான் பிறகு பேசலாம். 298 00:20:18,637 --> 00:20:19,930 லேரி? 299 00:20:28,855 --> 00:20:30,023 ஓ, ஹாய். 300 00:20:30,106 --> 00:20:31,233 என்ன இதெல்லாம்? 301 00:20:31,316 --> 00:20:32,692 நீ சீக்கிரம் வந்துவிடுவதாக சொன்னாயே. 302 00:20:32,776 --> 00:20:34,527 சில மணி நேரம் தான் வெளியே போயிருந்தேன். 303 00:20:34,611 --> 00:20:36,738 “சீக்கிரம்” என்பதற்கு வெவ்வேறு அர்த்தம் இருக்கிறது. 304 00:20:36,821 --> 00:20:41,243 நீ வீடு முழுவதும் அசிங்கம் செய்திருக்கிறாய். 305 00:20:41,326 --> 00:20:43,411 நீ பின்புற கதவை பூட்டி விட்டாய், என்னால் வெளியே போக முடியவில்லை. 306 00:20:43,495 --> 00:20:44,496 நான் என்ன செய்வது? 307 00:20:44,579 --> 00:20:47,582 என்ன? இல்லை, பொறு. இதற்கு என்னை பழி சொல்லாதே. 308 00:20:47,666 --> 00:20:49,251 அப்படி சொல்லவில்லை. சும்மா சொல்கிறேன். 309 00:20:50,752 --> 00:20:52,420 நீ மோசமானவன். 310 00:20:53,004 --> 00:20:54,464 உனக்கு என்னிடம் அதுதானே பிடிக்கும். 311 00:20:55,048 --> 00:20:57,968 என் எம்கேட் புத்தகத்தின் மீதும் அசிங்கம் செய்துவிட்டாய். 312 00:20:58,051 --> 00:21:01,137 நான் எல்லாவற்றின் மீதும் அசிங்கம் செய்தேன். அதாவது, எந்த காரணமும் இல்லை. 313 00:21:01,221 --> 00:21:04,724 ஓ, நான்... காரணம் தேடுகிறேனா? நான் முட்டாளா? 314 00:21:05,559 --> 00:21:07,060 இதற்கு எந்த அர்த்தமும் இல்லையா? 315 00:21:07,143 --> 00:21:09,479 ஹே, நீ தான் சொன்னாய், நான் அல்ல. 316 00:21:13,525 --> 00:21:14,568 ஹே. 317 00:21:17,362 --> 00:21:18,572 நாம் என்ன செய்கிறோம்? 318 00:21:18,655 --> 00:21:19,656 நீ என்ன சொல்கிறாய்? 319 00:21:19,739 --> 00:21:21,366 இது ஆரோக்கியமற்றது. 320 00:21:21,449 --> 00:21:24,536 ஆரோக்கியம் பற்றி யாருக்குக் கவலை? ஆரோக்கியம் சுவாரசியமற்றது. 321 00:21:24,619 --> 00:21:26,288 ஆரோக்கியம் சோர்வடையச் செய்யாது. 322 00:21:27,789 --> 00:21:28,790 இது தான் சோர்வடையச் செய்கிறது. 323 00:21:29,749 --> 00:21:30,750 என்னை நம்புகிறாயா? 324 00:21:32,878 --> 00:21:37,048 -உண்மையிலேயே, இப்போது உன்னை நம்பவில்லை. -அது நியாயம் தான். 325 00:21:39,467 --> 00:21:40,510 ஏன்? 326 00:21:41,011 --> 00:21:42,846 சரி, ஒன்றை முயற்சிக்கப் போகிறேன், அது வேலை செய்யவில்லை என்றால், 327 00:21:42,929 --> 00:21:44,180 இனி நீ என்னோடு பேசவே வேண்டாம். 328 00:21:44,264 --> 00:21:45,265 சரியா? 329 00:21:45,348 --> 00:21:48,560 ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நீ என்னை நம்ப வேண்டும். 330 00:21:51,688 --> 00:21:52,981 -சரி. -நல்லது. 331 00:21:53,064 --> 00:21:54,858 உன் பேண்டை கழட்டி, கீழே படுத்துக்கொள். 332 00:21:57,277 --> 00:21:58,278 இப்போது? 333 00:21:59,654 --> 00:22:01,489 -தரையின் மீது? -சுத்தமாக இருக்கிறது. 334 00:22:02,365 --> 00:22:03,491 சரி தானே? 335 00:22:04,117 --> 00:22:05,827 நீ பிறருக்காக நிறைய செய்திருக்கிறாய். 336 00:22:05,911 --> 00:22:07,203 எனக்காகவும் நிறைய செய்திருக்கிறாய். 337 00:22:07,287 --> 00:22:10,206 எனவே, உனக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். 338 00:22:38,276 --> 00:22:39,277 என்ன? 339 00:22:47,535 --> 00:22:48,620 அடக் கடவுளே. 340 00:23:03,051 --> 00:23:04,636 ஓ, கடவுளே! 341 00:23:04,719 --> 00:23:05,971 ஓ, கடவுளே! 342 00:23:24,114 --> 00:23:25,949 அடச்சே! 343 00:23:35,041 --> 00:23:36,042 ஐயோ. 344 00:23:38,044 --> 00:23:39,045 அடச்சே! 345 00:23:41,339 --> 00:23:43,592 ஐயோ. ஐயோ. 346 00:23:51,725 --> 00:23:53,226 -தாமதமாக வந்துவிட்டேனா? -உண்மையாகவே கேட்கிறாயா? 347 00:23:53,310 --> 00:23:55,979 தயவு செய்யுங்கள்! நான் ஒரு முட்டாள்தனமான தவறு செய்தேன். 348 00:23:56,062 --> 00:23:58,565 ஆமாம். என்னை மன்னித்துவிடு. நீ மறுபடியும் நவம்பரில் மறு-பதிவு செய்ய வேண்டும். 349 00:23:58,648 --> 00:24:00,609 பொறுங்கள். அதற்கு... இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது. 350 00:24:01,234 --> 00:24:02,819 நான் அப்போது... 351 00:24:05,655 --> 00:24:06,698 நீ நலம் தானே? 352 00:24:14,998 --> 00:24:17,417 ஹே. இன்று சிறப்பான நாள் தானே? 353 00:24:18,627 --> 00:24:19,628 எப்படி இருந்தது? 354 00:24:21,796 --> 00:24:23,381 -நன்றாக இல்லை. -என்ன நடந்தது? 355 00:24:28,178 --> 00:24:29,429 நான் மறந்துவிட்டேன். 356 00:24:32,098 --> 00:24:33,350 எம்கேட் பற்றி மறந்துவிட்டேன். 357 00:24:33,433 --> 00:24:34,434 நீ... என்ன சொன்னாய்? 358 00:24:36,144 --> 00:24:37,896 பல மாதங்கள் படித்த பிறகு... 359 00:24:40,148 --> 00:24:41,983 அதை மறந்துவிட்டேன். 360 00:24:42,067 --> 00:24:44,110 எனக்கு வருத்தமாக உள்ளது, அன்பே. 361 00:24:44,194 --> 00:24:45,195 ஓ, இல்லை. 362 00:24:45,820 --> 00:24:47,113 இது கெட்டதிலும் ஒரு நல்லதாக இருக்கலாம். 363 00:24:47,197 --> 00:24:48,240 எப்படி? 364 00:24:48,323 --> 00:24:51,201 இப்போது, நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதை 365 00:24:51,284 --> 00:24:53,954 யோசிக்க நேரம் கிடைத்து இருக்கிறது. 366 00:24:55,497 --> 00:24:56,706 எனக்கு மருத்துவராக ஆசை. 367 00:24:56,790 --> 00:24:59,501 சரி, உனக்கு அரசியலிலும்ஆர்வம் இருந்தது. 368 00:24:59,584 --> 00:25:02,879 நீ அடிக்கடி மனதை மாற்றுகிறாய். அதில் எந்த தவறும் இல்லை. 369 00:25:03,547 --> 00:25:05,382 நான் ஒரு பள்ளத்திற்குள் போவது போல இருக்கிறது. 370 00:25:05,465 --> 00:25:09,177 சரி, உன்னோடு சேர்ந்து அங்கே வர நானும் விரும்புகிறேன், சரியா? 371 00:25:12,222 --> 00:25:13,974 நீ உணவு ஆர்டர் கொடுத்தாயா? 372 00:25:19,771 --> 00:25:20,814 ஹலோ? 373 00:25:21,982 --> 00:25:25,193 கடவுளே. நீ ஒரு மாதமாக எனக்கு மெசேஜோ, ஃபோனோ செய்யவில்லை! 374 00:25:25,277 --> 00:25:26,278 நீ இறந்து விட்டாய் என்று நினைத்தேன்! 375 00:25:26,361 --> 00:25:27,571 இங்கே என்ன செய்கிறாய்? 376 00:25:27,654 --> 00:25:29,447 நான் கர்ப்பமாய் இருக்கிறேன், 377 00:25:29,531 --> 00:25:32,325 இந்த வெப்ப நேரத்தில், அங்கிருந்து கிளம்பி, 378 00:25:32,409 --> 00:25:34,411 உனக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்க வந்திருக்கிறேன். 379 00:25:34,911 --> 00:25:36,580 என்னை உள்ளே அனுமதித்து... 380 00:25:36,663 --> 00:25:38,039 ஒரு கிளாஸ் தண்ணீர் கொடு. 381 00:25:38,123 --> 00:25:40,542 கொஞ்சம்... பொறு. இதோ வருகிறேன். 382 00:25:40,625 --> 00:25:41,960 -ஒரு நொடி பொறு. -அவன் உள்ளே இருக்கிறானா? 383 00:25:42,043 --> 00:25:43,712 இல்லை. நான் கீழே வருகிறேன். ஒரு நொடி பொறு. 384 00:25:48,383 --> 00:25:49,759 நான் கொஞ்ச நேரம் வெளியே போய் விட்டு வருகிறேன். 385 00:25:49,843 --> 00:25:52,929 நீ ரொம்ப நேரம் வெளியில் இருந்தால் எனக்குக் கவலையாகிவிடும். 386 00:25:53,847 --> 00:25:55,557 என் சகோதரி கீழே இருக்கிறாள், 387 00:25:56,850 --> 00:25:58,268 அவளை உள்ளே அனுமதிக்க முடியாது, அதனால்... 388 00:25:58,351 --> 00:25:59,352 ஏன் முடியாது? 389 00:26:00,979 --> 00:26:03,440 ஹே, ஏன் முடியாது? 390 00:26:11,865 --> 00:26:13,909 உனக்கு தான் உன்னுடைய சகோதரியைப் பிடிக்காதே. 391 00:26:14,534 --> 00:26:15,535 அது உண்மையில்லை. 392 00:26:15,619 --> 00:26:17,954 பொய் சொல்லாதே. அதனால் தான் நீ இங்கு குடி வந்திருக்கிறாய். 393 00:26:18,038 --> 00:26:20,624 அவளிடமிருந்தும் அவளுடைய வேறுபாடு காணும் குணத்தில் இருந்தும். 394 00:26:30,550 --> 00:26:32,469 வீட்டை விட்டு வெளியே போக முயற்சிக்கிறேன். 395 00:26:34,971 --> 00:26:37,265 சரி, இப்போது என்னை அலட்சியம் செய்கிறாய். 396 00:26:37,349 --> 00:26:39,142 உனக்கு உணவை சூடு பண்ணித் தருகிறேன். 397 00:26:39,226 --> 00:26:41,102 -ஒன்றும் புரியாத மாதிரி நடிக்காதே. -நான் நடிக்கவில்லை. 398 00:26:41,186 --> 00:26:42,604 முட்டாள். 399 00:26:46,149 --> 00:26:47,901 -இது சிரிப்பு இல்லை. -நான் ஜோக் அடிக்கவில்லை. 400 00:26:48,485 --> 00:26:50,737 -என்னை அப்படி கூப்பிடாதே. -அந்த மாதிரி நீ நடந்து கொள்ளாதே. 401 00:26:53,281 --> 00:26:54,866 நான் கொஞ்ச நேரம் தான் வெளியே போகப் போகிறேன். 402 00:26:56,201 --> 00:26:58,328 நான் போனதும் எல்லாவற்றின் மீதும் அசிங்கம் செய்யாதே. 403 00:26:58,411 --> 00:26:59,746 என்ன இது? 404 00:27:04,918 --> 00:27:05,919 எனக்கு ரத்தம் வருகிறது. 405 00:27:06,002 --> 00:27:07,379 மன்னித்துவிடு, நீயே தான் உன்னை காயப்படுத்திக்கொண்டாய். 406 00:27:07,963 --> 00:27:08,964 நீ தான் என்னை காயப்படுத்தினாய். 407 00:27:09,047 --> 00:27:10,674 நீ அப்படி நினைத்ததற்காக, நான் வருந்துகிறேன். 408 00:27:14,678 --> 00:27:16,429 ஸ்காலியன் பான்கேக்குகள் நன்றாக இருக்கும். 409 00:27:18,265 --> 00:27:19,266 உன் முகத்தில் என்ன காயம்? 410 00:27:21,226 --> 00:27:22,227 என்ன? 411 00:27:25,188 --> 00:27:26,690 நானே என்னை காயப்படுத்திக்கொண்டேன். 412 00:27:27,524 --> 00:27:29,901 ஹனி, ஒரு நொடியில் என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்க்கலாமா? 413 00:27:30,569 --> 00:27:31,861 உன்னை நினைத்துத் தான் எனக்குக் கவலை. 414 00:27:31,945 --> 00:27:34,447 நான் நன்றாகத் தான் இருக்கிறேன். நீ என்னைப் பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. 415 00:27:35,073 --> 00:27:36,908 பார், நீ யாரையோ தேர்ந்தெடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. 416 00:27:36,992 --> 00:27:38,952 ஆனால் ஒரு நல்ல காதலன், உன் விருப்பத்தை தடுக்கக்கூடாது. 417 00:27:39,035 --> 00:27:40,787 அவன் என் விருப்பத்தை தடுப்பதில்லை, லில்லி. 418 00:27:42,872 --> 00:27:46,793 உன்னிடமிருந்து தான் என்னைத் தடுக்கிறான், அது எனக்கு நல்லதாக இருக்கிறது. 419 00:27:47,919 --> 00:27:50,547 நீ டேட் செய்யச் சொல்லி என்னை வற்புறுத்துகிறாய். 420 00:27:51,715 --> 00:27:53,258 எதிர்காலத்தைப் பற்றியும் கேள்வி கேட்கிறாய். 421 00:27:53,341 --> 00:27:55,719 உனக்கு எது சந்தோஷம் என்பதை கண்டுபிடி என்று தான் சொன்னேன். 422 00:27:55,802 --> 00:27:57,846 ஆனால், பார், நீ சொன்ன விதம் கூட அப்படித்தான் உள்ளது. 423 00:27:58,346 --> 00:27:59,764 நான் சந்தோஷமாகக் கூட இருக்கலாம். 424 00:27:59,848 --> 00:28:02,017 நல்லது. யாராவது அப்படி இருக்க வேண்டுமே. 425 00:28:02,934 --> 00:28:04,144 நீ சந்தோஷமாக இல்லையா? 426 00:28:04,227 --> 00:28:06,146 நிச்சயமாக இல்லை. 427 00:28:06,730 --> 00:28:09,274 இந்தக் குழந்தை தற்செயலாக உருவானது. 428 00:28:09,357 --> 00:28:11,985 அதாவது, ஆண்ட்ரூவும், நானும் எப்பவாவது தான் உறவு கொள்வோம், அதனால் நான் அதிர்ச்சியில் இருந்தேன். 429 00:28:12,068 --> 00:28:15,113 எதுவாக இருந்தாலும், அவள் உலகிற்கு வருவாள், நான் அவளை நேசிப்பேன். 430 00:28:15,196 --> 00:28:17,407 என் உடல் பழையபடி ஆகி விடும் என்று நம்புகிறேன். 431 00:28:17,490 --> 00:28:18,617 என் வாழ்க்கை திரும்பி விடும் என்றும். 432 00:28:22,579 --> 00:28:23,788 நான் எம்கேட் தேர்வை தவற விட்டுவிட்டேன். 433 00:28:23,872 --> 00:28:24,956 என்ன? ஏன்? 434 00:28:25,540 --> 00:28:27,792 என்னால் டாக்டராக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. 435 00:28:27,876 --> 00:28:29,127 நீ என்ன பேசுகிறாய்? 436 00:28:29,211 --> 00:28:31,922 நான் எப்பொழுதும் மனதை மாற்றிக்கொண்டே இருக்கிறேன். 437 00:28:32,964 --> 00:28:35,508 என்னுடைய தேர்வுகளைப் பற்றி எப்போதும் சந்தேகப்படுகிறேன். 438 00:28:36,259 --> 00:28:37,594 என்னை நானே பார்த்துக்கொள்வதே எனக்கு முடியாது. 439 00:28:37,677 --> 00:28:40,096 மற்றவர்களைப் பார்த்துக்கொள்ள எனக்கு என்ன தகுதி இருக்கிறது? 440 00:28:40,180 --> 00:28:41,806 என்ன? இல்லை, இது பைத்தியக்காரத்தனம். 441 00:28:42,307 --> 00:28:44,392 எனக்குத் தெரிந்த அக்கறையுள்ள, புத்திசாலிகளில் நீயும் ஒருத்தி. 442 00:28:44,476 --> 00:28:47,270 அப்பாவிற்கு உடல் நலமில்லாமல் போன போது நீ தான் எல்லா நேரத்திலும் அவருடன் இருந்தாய், 443 00:28:47,354 --> 00:28:49,814 என்னை விட அவரிடம் சரியான கேள்விகள் கேட்டாய். 444 00:28:49,898 --> 00:28:52,317 நான் தனிமையில் இருந்ததால், அவரை அதிகம் சார்ந்திருந்தேன். 445 00:28:52,400 --> 00:28:55,028 இல்லை. நீ நல்ல மாதிரி நடந்துக்கொண்டாய். 446 00:28:56,154 --> 00:28:58,073 நீ அருமையானவள். 447 00:28:58,698 --> 00:28:59,950 இந்த யோசனையை அவன் தான் உன் மண்டைக்குள் திணித்தானா? 448 00:29:04,746 --> 00:29:06,539 பார், இவன் உன்னை அவமானப்படுத்தினால், 449 00:29:06,623 --> 00:29:09,542 சத்தியமாக, அங்கே வந்து அவனைக் கொன்றுவிடுவேன், அப்புறம் கர்ப்பமான என்னை 450 00:29:09,626 --> 00:29:12,295 அவர்கள் ஜெயிலில் அடைத்து விடுவார்கள். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. 451 00:29:20,387 --> 00:29:21,805 இல்லை. நாம் ஆர்டர் செய்யலாம். 452 00:29:29,813 --> 00:29:32,482 வீட்டுக்கு போகும் போது, பிரசவ வலி வந்துவிடப் போகுது, ஜாக்கிரதை. 453 00:29:32,566 --> 00:29:34,484 அப்படி வந்தால், அதற்கு நீ தான் காரணம். 454 00:29:36,528 --> 00:29:37,529 உன்னை நேசிக்கிறேன். 455 00:29:38,655 --> 00:29:39,739 ஃபோனை எடு. 456 00:29:43,326 --> 00:29:45,328 த கிரேட் வால் உணவகம் 457 00:30:06,766 --> 00:30:07,934 வந்ததற்கு மிக்க நன்றி... 458 00:30:08,018 --> 00:30:10,061 -எலிசா? -...யாரைக்கூப்பிடுவது என்றே தெரியவில்லை. 459 00:30:16,651 --> 00:30:18,737 ஹே, குட்டி நண்பா. 460 00:30:19,279 --> 00:30:22,490 இந்த தாடி வைத்த ட்ராகன் யார்? யார் உன்னை உள்ளே விட்டது? 461 00:30:23,825 --> 00:30:25,994 அட, யாரோ இங்கே கொஞ்சம் கோபாமாக இருக்கிறார்களே. 462 00:30:26,077 --> 00:30:28,163 கவலைப்படாதே. நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன். 463 00:30:28,246 --> 00:30:32,125 மற்றவர்களை மட்டமாக நினைக்கும் இந்த முட்டாள் என்னை மிஞ்சி விடுவான் என நினைத்தால்... 464 00:30:32,208 --> 00:30:35,879 எலிசா? அன்பே? எலிசா. அசிங்கமான முட்டாள் நாயே. 465 00:30:35,962 --> 00:30:38,381 இது... உன்னுடைய யோசனையா? துரோகியே! 466 00:30:38,465 --> 00:30:40,008 அவன் சரியான அரட்டைப் பேர்வழியா? 467 00:30:40,091 --> 00:30:41,551 சரி, முட்டாளே, என்னை விட்டுப் போ. 468 00:30:41,635 --> 00:30:42,636 -சரி. -எலிசா. 469 00:30:42,719 --> 00:30:44,888 இதோ இங்கே. யே! 470 00:30:45,388 --> 00:30:46,598 சரி. 471 00:30:47,974 --> 00:30:51,811 எல்லாம் தயார். கிளம்பும் நேரமாகிவிட்டது. 472 00:30:51,895 --> 00:30:54,231 நான் கிளம்ப மாட்டேன். இது தான்... என்னுடைய வீடு. 473 00:30:54,314 --> 00:30:56,733 நான் உன்னைக் கொல்லப் போகிறேன், எலிசா! 474 00:31:02,113 --> 00:31:04,658 விலங்குக் கட்டுப்பாடு 475 00:31:04,741 --> 00:31:06,743 -ஹே. -ஹே. 476 00:31:07,702 --> 00:31:09,162 நன்றி. 477 00:31:09,246 --> 00:31:11,498 ஓ, இது என்னுடைய வேலை. 478 00:31:13,208 --> 00:31:16,545 அடக் கடவுளே. மன்னித்துவிடுங்கள். நான் உங்களுக்குப் பணம் தரவேண்டுமா? 479 00:31:16,628 --> 00:31:19,339 இல்லை. நகராட்சியின் திட்டத்தில் வேலை செய்கிறேன். அரசாங்கம் பணம் கொடுத்துவிடும். 480 00:31:20,507 --> 00:31:23,969 நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள நினைத்தேன். 481 00:31:24,052 --> 00:31:26,471 அங்கே நீங்கள் ஏதோ பயந்த மாதிரி இருந்தீர்கள். 482 00:31:28,181 --> 00:31:29,182 ஆமாம். 483 00:31:33,937 --> 00:31:36,189 வாத்துடன் இருப்பது கடினம். 484 00:31:36,273 --> 00:31:38,567 அட, ஆமாம். 485 00:31:38,650 --> 00:31:42,862 அவை விசித்திரமான முரட்டு விலங்குகள். 486 00:31:42,946 --> 00:31:45,240 அவை ரொம்ப அழகானவை, சிநேகமாக இருப்பவை என்று நினைப்பீர்கள், 487 00:31:45,323 --> 00:31:48,243 ஆனால் அவை உண்மையில் மோசமானவை. 488 00:31:48,326 --> 00:31:50,370 குறிப்பாக ஆண் வாத்துகள். 489 00:31:50,912 --> 00:31:52,998 இவ்வளவு காலம் ஒரு வாத்தை வைத்திருக்கிறீர்களே, அதுவே ஆச்சரியம் தான். 490 00:31:53,915 --> 00:31:55,917 நம்மால் எந்தளவு தாங்க முடியும் என்பது ஆச்சரியம் தான். 491 00:31:57,210 --> 00:32:00,422 “த நியூ யார்க்கர்” பத்திரிக்கையில் வந்த கட்டுரையைப் படித்தாயா? 492 00:32:00,505 --> 00:32:04,259 அது வாத்துக்களின் உறவு மற்றும் ஆணாதிக்கம் பற்றியது. 493 00:32:04,342 --> 00:32:07,762 அதில் மனத்தைக் கவரும் பல விஷயங்கள் இருந்தன. 494 00:32:09,598 --> 00:32:12,017 மன்னிக்கவும். சத்தியமாக, நான் வெறுக்கத் தக்க ஆள் இல்லை. 495 00:32:12,100 --> 00:32:15,645 நான் ஒரு அறிவியல் மேதாவி. 496 00:32:17,147 --> 00:32:18,231 -நீங்களுமா? -ஆமாம். 497 00:32:18,315 --> 00:32:19,316 என்ன? 498 00:32:19,399 --> 00:32:20,859 -ஆம், ஆமாம். -சரி! பாருங்கள். 499 00:32:20,942 --> 00:32:22,110 எம்கேட் தேர்வை எப்பொழுது எழுதப் போகிறீர்கள்? 500 00:32:22,193 --> 00:32:24,404 வந்து, இன்னும் சில மாதங்களில். 501 00:32:24,487 --> 00:32:27,657 நான் திரும்பவும், கவனம் செலுத்திப் படிக்க முயற்சிக்கப் போகிறேன். 502 00:32:28,950 --> 00:32:30,869 பூங்காவில் உங்களை இறக்கிவிடவா? 503 00:32:30,952 --> 00:32:32,162 எப்படியும் நான் அவனை மீண்டும் குளத்தருகே 504 00:32:32,245 --> 00:32:33,622 -இறக்கி விட வேண்டும், அதனால்... -வேண்டாம். 505 00:32:35,123 --> 00:32:37,083 அந்தக் குட்டிப் பையனைப் பாருங்களேன். 506 00:32:37,167 --> 00:32:40,921 வந்து, மனிதர்கள் என்னைச் சுற்றி இருப்பது தான்... எனக்கு வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 507 00:32:41,838 --> 00:32:43,381 அதனால், கஃபே இருக்கிறதா என பார்க்கப் போகிறேன். 508 00:32:43,465 --> 00:32:46,551 வந்து, இப்பவும் உங்களுக்குச் செல்லப் பிராணி வேண்டுமானால், ஒரு நாயை வைத்துக்கொள்ளுங்கள். 509 00:32:46,635 --> 00:32:48,011 என்னிடம் மீட்கப்பட்ட இரண்டு நாய்கள் உள்ளன. 510 00:32:48,094 --> 00:32:51,264 கவர்னர்... அதை, “கவ்னர்” என்று உச்சரிக்க வேண்டும்... 511 00:32:51,348 --> 00:32:53,850 மற்றும் வீட்டில் ஆக்சல் ஃபோலி என இரண்டு உள்ளன, அவை மிகச் சிறந்தவை. 512 00:32:56,728 --> 00:32:57,771 இன்னொரு உயிரையும் இப்போது 513 00:32:58,438 --> 00:33:01,233 நான் பார்த்துக் கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. 514 00:33:03,652 --> 00:33:05,070 அதாவது, என்னைத் தவிர. 515 00:33:06,780 --> 00:33:11,743 நீங்கள் ஏதாவது கணிக்க முடியாத சூழலில் சிக்கிக்கொண்டால், 516 00:33:11,826 --> 00:33:13,662 என்னை எங்கே பார்க்கலாம் என உங்களுக்கே தெரியும். 517 00:33:16,039 --> 00:33:19,834 அல்லது, நீங்கள் ஏதாவது குடிக்க வேண்டும் என்று விரும்பினால் கூட. 518 00:33:23,588 --> 00:33:25,674 இப்போது தான் ஒரு உறவை முறித்துவிட்டேன், 519 00:33:27,092 --> 00:33:28,760 அதாவது, ஐந்து நொடிகளுக்கு முன்னர் தான். 520 00:33:28,843 --> 00:33:30,554 இல்லை. புரிந்துவிட்டது. இது ரொம்ப சீக்கிரம் தான். 521 00:33:31,471 --> 00:33:33,807 கவலைப்படாதீர்கள். சரி, வந்து... 522 00:33:38,520 --> 00:33:40,605 ஹே, இருந்தாலும், 523 00:33:40,689 --> 00:33:43,817 இன்னும் சில மாதங்கள் கழித்து நான் உங்களை அழைக்கலாமா? 524 00:33:44,484 --> 00:33:46,778 அதாவது, எம்கேட் தேர்வு முடிந்த பிறகு? 525 00:33:47,320 --> 00:33:50,240 எனக்குத் தெரியவில்லை, அதற்குள் நீங்கள் ஒரு நல்ல டாக்டரைச் சந்தித்திருக்கலாம். 526 00:33:52,576 --> 00:33:54,995 நான் ஒரு நல்ல டாக்டரை சந்திக்க வேண்டியதில்லை. 527 00:33:55,996 --> 00:33:58,582 ஏனென்றால் அந்த நல்ல டாக்டரே நானாகத் தான் இருப்பேன். 528 00:34:25,358 --> 00:34:27,277 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 529 00:35:31,341 --> 00:35:33,343 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்