1 00:00:18,478 --> 00:00:22,190 தன் கணவரை திருப்பிக் கொடுத்த பெண் 2 00:00:23,525 --> 00:00:26,319 நிச்சயம், இந்தத் தலைப்பு, அந்த இடத்தைப் பற்றிய ஒரு குறிப்பு தான். 3 00:00:26,403 --> 00:00:28,280 ஆனால் இன்னும் குறிப்பாக, 4 00:00:28,863 --> 00:00:32,033 இது புலம்பெயர்ந்த பெண்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்கிறது, 5 00:00:32,116 --> 00:00:35,328 அவர்கள் நாட்டின் துணிகளின் மூலமாகச் சொல்லப்படும் குறிப்பு. 6 00:00:35,412 --> 00:00:38,748 இங்கே இருக்கும் என் அம்மாவைப் போன்ற... பெண்கள். 7 00:00:42,460 --> 00:00:43,920 இந்தத் துணிக்கு ஆதாரமான பொருட்களைப் பற்றி 8 00:00:44,004 --> 00:00:46,464 இன்னும் கொஞ்சம் சொல்கிறீர்களா? 9 00:00:46,548 --> 00:00:48,717 ஆம். உலகம் முழுவதிலும் இருந்து அவற்றை இறக்குமதி செய்தோம். 10 00:00:48,800 --> 00:00:49,843 இது எல்லாம் சுற்றிலும்... 11 00:00:49,926 --> 00:00:51,428 சரீனா மிஸ்ரா சமீபத்திய வேலைப்பாடுகள் 2021 12 00:01:00,687 --> 00:01:03,023 நீங்கள் சரீனாவுடனும், அவளது நண்பர்களுடனும் பேசியதைக் காட்டிலும், 13 00:01:03,106 --> 00:01:04,773 அந்த பாதுகாவலனுடன்தான் அதிக நேரம் பேசினீர்கள். 14 00:01:04,858 --> 00:01:08,194 அவர் பெயர் மோரீஸ், செனெகல்லில் இருந்து வந்திருக்கிறார். நல்ல மனிதர். 15 00:01:08,278 --> 00:01:10,363 உங்கள் நடத்தையால் வெட்கப்படுகிறேன். 16 00:01:12,073 --> 00:01:15,035 -எவ்வளவு நேரம் வைக்க வேண்டும்? ஐம்பது நொடிகள்? -45 வை. 17 00:01:18,330 --> 00:01:20,749 ஏன் பிரச்சினை செய்கிறாய்? 18 00:01:21,333 --> 00:01:23,209 நானல்ல, நீங்கள் தான் செய்கிறீர்கள். 19 00:01:24,669 --> 00:01:28,006 கடைசியில், ஒரு வழியாக நான் இந்த வீட்டை விட்டு வெளியே போய், ஏதாவது புதிய நபர்களை சந்தித்து, 20 00:01:28,089 --> 00:01:30,508 பேச விரும்பினேன், ஆனால் முடியவில்லை. 21 00:01:30,592 --> 00:01:33,845 முடியவில்லை! மாறாக, நீங்கள் விரும்பிய நேரத்தில், நாம் வீட்டிற்கு வந்துவிட்டோம், 22 00:01:33,929 --> 00:01:37,974 அதே பழைய பஞ்சாங்கம் தான். 23 00:01:38,058 --> 00:01:40,644 நீ என்னுடம் வந்திருக்க வேண்டாமே. டாக்ஸியிலேயே வீட்டிற்கு வந்திருக்கலாம். 24 00:01:43,688 --> 00:01:44,940 இதோ. எடுத்துக்கொள்ளுங்கள். 25 00:01:47,192 --> 00:01:48,610 இது சூடாக இல்லையென்றால் சொல்லுங்கள். 26 00:01:50,028 --> 00:01:55,700 நன்றாக இருக்கிறது. கடவுளே. ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்? 27 00:01:55,784 --> 00:01:58,286 இது அபத்தம். 28 00:01:59,871 --> 00:02:01,706 எனக்கு ஒரு முள் கரண்டி வேண்டும், அன்பே. 29 00:02:06,294 --> 00:02:10,215 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 30 00:02:12,133 --> 00:02:14,344 நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள், அனு. 31 00:02:14,427 --> 00:02:16,388 உன்னையும், விகாஸையும், 32 00:02:16,471 --> 00:02:18,848 கடவுள் நீண்ட ஆயுளைக் கொடுத்து ஆசீர்வதிப்பார்... 33 00:02:20,183 --> 00:02:21,351 அட, அனு, அழுகிறாயா? 34 00:02:21,434 --> 00:02:22,435 இல்லை. 35 00:02:23,144 --> 00:02:26,231 வயதாகிறதே என்று கவலைப்படாதே. நம் எல்லோருக்கும் தான் வயதாகிறது. 36 00:02:26,314 --> 00:02:28,108 -ஆமாம், ஆமாம். -நளினியைப் பார். 37 00:02:28,191 --> 00:02:31,403 எப்பொழுதும் அழகாக இருப்பாள், இப்போது பார்த்தால் சோர்வாக இருக்கிறாள். 38 00:02:31,486 --> 00:02:33,238 எனக்கு ரத்த சோகை இருப்பதாக டாக்டர் சொல்கிறார். 39 00:02:33,321 --> 00:02:37,492 இல்லை, இது விக் பற்றி. அவரோடு எனக்கு வெறுத்துவிட்டது. 40 00:02:39,327 --> 00:02:40,579 -விடு. -அடடா. 41 00:02:40,662 --> 00:02:42,497 -மனுவிடம் இந்த செயலிகள் இருக்கு. -என்னவென்று தெரியவில்லை... 42 00:02:42,581 --> 00:02:43,999 இப்படி சத்தமிடுகிறார். 43 00:02:44,082 --> 00:02:46,877 இல்லை, இல்லை, இல்லை. இந்த முறை உண்மையாகத் தான் சொல்கிறேன். 44 00:02:49,880 --> 00:02:55,093 கலைஞர்களுக்கான நிகழ்ச்சியில் போன வாரம், என் மகள் சரீனா, சுதந்திரமாக இருப்பதைப் பார்த்தேன். 45 00:02:55,677 --> 00:02:58,305 அதன் பின்னர், விக், ஒரு காரணமும் இல்லாமல் எங்களை வீட்டுக்கு அழைத்து விட்டார். 46 00:02:58,388 --> 00:03:00,056 அவருக்கு இரவு உணவு பறிமாறுகிறேன், இது... 47 00:03:00,557 --> 00:03:06,271 இது வழக்கமான தினசரி வேலை தான், மாட்டிக்கொண்ட மாதிரி இருக்கிறது. 48 00:03:06,354 --> 00:03:07,522 ஆமாம், ஆனால், இரண்டு பேர் ஒன்றாக மாட்டிக்கொள்வதற்கான 49 00:03:07,606 --> 00:03:10,609 ஒப்பந்தம் இல்லையென்றால், திருமணம் என்பதற்கு என்ன அர்த்தம்? 50 00:03:11,234 --> 00:03:12,694 ஆனால், எனக்கு அது தெரியுமா? 51 00:03:13,278 --> 00:03:16,239 எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாமல் நான் திருமணம் செய்து கொண்டேன். 52 00:03:16,323 --> 00:03:18,909 நான் அப்பொழுது மிகவும் சின்னப் பெண், அதிக முட்டாளாகவும் இருந்தேன். 53 00:03:18,992 --> 00:03:21,703 நாம் எல்லோரும் அப்படித்தானே இருந்தோம். 54 00:03:22,871 --> 00:03:24,247 சகித்துக்கொள்வதைத் தவிர, என்ன செய்ய முடியும்? 55 00:03:25,498 --> 00:03:26,958 சரி, ஆர்டர் செய்யலாமா? 56 00:03:27,042 --> 00:03:29,544 ஆனால், புஷ்பா, என்னால் முடியாது, நான் சகித்து வாழ விரும்பவில்லை. 57 00:03:29,628 --> 00:03:34,216 நான் சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன், விக்... என்னை விட மறுக்கிறார். 58 00:03:34,299 --> 00:03:35,675 அட, எதிலிருந்து? 59 00:03:36,301 --> 00:03:38,470 நீ என்ன முக்கியமான விஷயத்தை இழந்து விட்டாய்? 60 00:03:46,102 --> 00:03:51,066 எனக்கு 60 வயதாகிறது, இப்போது வரை, அவருடைய தேவைகளைக் கவனிப்பது தான் என் வேலை. 61 00:03:51,733 --> 00:03:53,568 அவர் என்னுடைய தேவைகள் எதையும் கவனிப்பதில்லை. 62 00:03:54,945 --> 00:03:56,905 எனக்குத் தெரியும், இது இப்படி இருக்க வேண்டியதில்லை. 63 00:03:58,490 --> 00:04:00,325 நீ அவரைத் திருப்பிக் கொடுத்து விட முடியும். 64 00:04:02,118 --> 00:04:03,328 -என்ன? -உதயா, 65 00:04:03,411 --> 00:04:05,163 ஏன் முட்டாள்தனமாக பேசுகிறாய்? 66 00:04:05,247 --> 00:04:07,582 அமெரிக்காவில், நமக்கு கணவரைப் பிடிக்காவிட்டால், 67 00:04:07,666 --> 00:04:10,877 சுலபமாக அவரை மாற்றி விட்டு, புது கணவரை திருமணம் செய்துக்கொள்ளலாம். 68 00:04:11,836 --> 00:04:13,588 இல்லை. அது ஒத்து வராது. 69 00:04:13,672 --> 00:04:19,636 அனு, நீ சந்தோஷமாக இல்லாவிட்டால், நீயே உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள். 70 00:04:19,719 --> 00:04:21,096 சந்தோஷம், சந்தோஷம், சந்தோஷமா? 71 00:04:21,596 --> 00:04:23,682 இப்பொழுதெல்லாம், மக்கள் இதற்காக அதிகம் அலட்டிக்கொள்கிறார்கள். 72 00:04:24,182 --> 00:04:26,476 வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லை. 73 00:04:26,560 --> 00:04:28,603 கடினமான விஷயங்களையும் பொறுத்துப் போவது தான் வாழ்க்கை. 74 00:04:29,854 --> 00:04:32,023 நான் பசியால் மயங்கி விழுந்து விடுவதற்கு முன் 75 00:04:32,107 --> 00:04:33,650 நாம் கொஞ்சம் உணவு ஆர்டர் செய்யலாமா? 76 00:04:34,150 --> 00:04:37,696 என் வயிறு குரா, குரா என்று கத்துகிறது. 77 00:04:37,779 --> 00:04:40,198 இங்கே வர முடியுமா? நாங்கள் தயார். 78 00:04:40,282 --> 00:04:42,826 எல்லோருக்கும் நானே ஆர்டர் செய்துவிடட்டுமா? சீக்கிரம் வந்துவிடும். 79 00:05:38,798 --> 00:05:40,383 கணவருக்கான உத்தரவாதம் 80 00:05:42,427 --> 00:05:44,512 இன்று திருப்பிக் கொடுப்பதற்கு என்ன காரணம்? 81 00:05:45,597 --> 00:05:46,598 காரணமா? 82 00:05:46,681 --> 00:05:48,934 சொல்லுங்கள், மேடம். உங்கள் கணவரைத் திருப்பிக் கொடுப்பதற்கு என்ன காரணம்? 83 00:05:51,937 --> 00:05:53,188 எங்கிருந்து ஆரம்பிப்பது? 84 00:05:55,607 --> 00:06:00,111 சரி, முக்கியமான காரணம், என் வாழ்க்கையின் அடுத்த 20 வருடங்களை 85 00:06:00,195 --> 00:06:03,031 நினைத்துப் பார்க்கிறேன், கடவுள் ஆணையாக, நான் வேறு ஒன்றை எதிர்பார்க்கிறேன். 86 00:06:04,115 --> 00:06:09,829 என்னிடம் இருந்து. சும்மா சொல். என்னிடமிருந்து நீ வித்தியாசமாக எதிர்பார்க்கிறாய். 87 00:06:09,913 --> 00:06:13,959 எங்களிடமுள்ள காரணங்கள், “சரியாகப் பொருந்தவில்லை” “உற்பத்திக் கோளாறு”, “தாமதமாக வந்து சேர்ந்தது.” 88 00:06:14,042 --> 00:06:15,460 “வரும்போதே சேதமடைந்திருந்தது,” “பொருத்தமாக இல்லை.” 89 00:06:15,544 --> 00:06:17,420 “பொருத்தமாக இல்லை” என்று சொல்லலாம். 90 00:06:19,297 --> 00:06:20,298 இனிமேலும். 91 00:06:21,883 --> 00:06:23,718 சரி, என்னிடம் இதுவும் இருக்கிறது. 92 00:06:24,636 --> 00:06:28,014 உங்களுக்கு தேவையா என தெரியவில்லை... என்னவென்று சொல்வீர்கள், கணவருக்கான உத்திரவாதம் தானே? 93 00:06:28,098 --> 00:06:29,808 ஓ, ஆமாம். நன்றி. 94 00:06:30,976 --> 00:06:34,271 ஆஹா. முப்பத்தேழு வருடத் திருமண பந்தம். 95 00:06:34,771 --> 00:06:37,107 அது முடிந்துவிட்டது என்று தெரியும், ஆனாலும் அது ஒரு சாதனை தான், 96 00:06:37,190 --> 00:06:38,191 அதற்காக வாழ்த்துக்கள். 97 00:06:39,442 --> 00:06:40,485 நன்றி. 98 00:06:44,155 --> 00:06:46,866 சரி, என்னை இங்கே என்ன செய்வீர்கள்? 99 00:06:47,450 --> 00:06:51,246 சரி, திரு. விகாஸ், உங்களை, நாங்கள் திரும்ப எடுத்துக்கொள்வோம், 100 00:06:51,329 --> 00:06:56,167 வயது, குணம், வெற்றி பெற உதவும் குணங்கள், இவற்றின் அடிப்படையில் விலை மதிப்பிடுவோம்... 101 00:06:56,251 --> 00:06:57,294 சரி. 102 00:06:57,377 --> 00:07:01,339 என் திறன்களைப் பற்றி, என் மனைவி சொல்வதைக் கேட்காதீர்கள், எனக்கு நிறைய திறமைகள் உள்ளன, 103 00:07:01,423 --> 00:07:03,800 எனக்கு புவியியல் பற்றி நிறைய தெரியும், எனக்கு... 104 00:07:03,884 --> 00:07:06,803 அப்படியானால், மறு விற்பனைக்காக மீண்டும் உங்களை தயார் நிலையில் கொண்டு வருவதற்கு முன் 105 00:07:06,887 --> 00:07:09,890 நாங்கள் உங்களுடைய தோற்றத்தை மெருகூட்டி, தேவையான சீரமைப்பைச் செய்வோம். 106 00:07:10,599 --> 00:07:11,892 மீண்டும் தயார் நிலையிலா? 107 00:07:11,975 --> 00:07:14,436 இந்த இடத்தில், கணவர்கள் பகுதியில். 108 00:07:14,519 --> 00:07:17,022 கணவர்கள் 109 00:07:18,023 --> 00:07:21,693 சரி, அனு. வந்து, இது தான் எனக்கேற்ற இடம். 110 00:07:23,361 --> 00:07:26,489 சரி. நன்றி, விக். 111 00:07:26,573 --> 00:07:27,699 சரி, வந்து... 112 00:07:31,077 --> 00:07:33,288 திருப்பிக் கொடுக்கப்பட்டவர் 113 00:07:33,371 --> 00:07:34,372 சரி. 114 00:07:38,209 --> 00:07:39,628 என் பெயர் இப்ராஹிம். வரவேற்கிறேன். 115 00:07:39,711 --> 00:07:41,087 ஹே, என் பெயர் சால். 116 00:07:41,171 --> 00:07:42,547 என் பெயர் விகாஸ். 117 00:07:46,760 --> 00:07:49,554 நீங்கள் மாற்றிக்கொள்வதற்கு, கடைசியாக ஒரு எண்ணை எடுத்துக்கொள்ளலாம், 118 00:07:49,638 --> 00:07:51,556 பின்னர் அதிகாரபூர்வமாக இணைந்ததாக முடிவு செய்யப்படுவீர்கள். 119 00:07:51,640 --> 00:07:55,685 மாற்றிக்கொள்வதா? வேண்டாம், வேண்டாம். எனக்கு இன்னொரு கணவர் வேண்டாம். 120 00:07:56,436 --> 00:07:59,522 இதே மதிப்புள்ள அல்லது கொஞ்சம் குறைந்த மதிப்பில் உள்ள கணவரையோ, மனைவியையோ தான் 121 00:07:59,606 --> 00:08:01,441 இங்கே மாற்றிக்கொள்ள முடியும். 122 00:08:01,524 --> 00:08:03,401 ஆனால், நான் தேடிப் பார்த்ததில், ஒப்பந்த விதிமுறைகள் சொல்கின்றன... 123 00:08:03,485 --> 00:08:04,861 துரதிஷ்டவசமாக, 124 00:08:04,945 --> 00:08:08,406 1986க்கு முன் வாங்கப்பட்ட வெளிநாட்டு பொருட்களுக்கு இது பொருந்தாது. 125 00:08:21,753 --> 00:08:22,879 டிஷ்யூ வேண்டுமா? 126 00:08:23,922 --> 00:08:24,923 நன்றி. 127 00:08:31,137 --> 00:08:32,931 டிவி பார்க்க விரும்புகிறீர்களா? 128 00:08:33,431 --> 00:08:35,140 கண்டிப்பாக. உங்களுக்குப் பிடித்ததையே செய்யலாம். 129 00:08:36,433 --> 00:08:39,520 சரி. செய்திப் பார்க்கலாமா? 130 00:08:40,272 --> 00:08:41,565 செய்தி பார்ப்பது, சரியான முடிவு தான். 131 00:08:44,067 --> 00:08:46,236 அடுத்த வார ஆரம்பத்திற்குள், 132 00:08:46,319 --> 00:08:48,280 தங்களுக்கான காலக் கெடுவிற்கு முன்னதாகவே 133 00:08:48,363 --> 00:08:50,448 இரு தரப்பினரும், பேரம் பேசும் மேஜைக்கு வரவில்லை என்றால் 134 00:08:50,532 --> 00:08:52,784 ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் சரியாக இருக்காது. 135 00:08:52,867 --> 00:08:55,537 வேலை நிறுத்தம் செய்யும் ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் இன்று வருவார். 136 00:08:56,037 --> 00:09:00,166 ஒரு புது ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள, இந்தத் தரவரிசை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது... 137 00:09:15,390 --> 00:09:19,644 நான் விக்கைச் சந்திப்பதற்கு முன், ஒரு ஓவியராக ஆசைப்பட்டேன். 138 00:09:20,979 --> 00:09:22,564 அதனால் தான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். 139 00:09:24,065 --> 00:09:28,612 ரொம்ப சந்தோஷம். நீங்கள் அலட்டக் கொள்ளாத பெண் என்பது தெரியும் தானே? 140 00:09:34,534 --> 00:09:37,996 நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆசையா? 141 00:09:38,079 --> 00:09:40,081 இல்லை. இல்லவே இல்லை. 142 00:09:40,165 --> 00:09:41,750 சொல்கிறேன். 143 00:09:41,833 --> 00:09:45,295 பகல் நேர முகாமில் ஆலோசகராகவும், ஐஸ் கிரீம் ஸ்கூப்பராகவும் இருந்திருக்கிறேன். 144 00:09:45,795 --> 00:09:48,590 ஸியர்ஸில் உள்ள சாமான்கள் அறையில் வேலை பார்த்தேன். 145 00:09:49,466 --> 00:09:50,967 எனக்கு ஸியர்ஸ் ரொம்பப் பிடிக்கும். 146 00:09:52,344 --> 00:09:54,221 கல்லூரியில், பல்லாயிரம் விஷயங்கள் செய்தேன். 147 00:09:54,304 --> 00:09:58,475 வளாகச் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தேன். கோஸ்டா ரீக்காவில் ஜிப் லைனில் வேலை செய்தேன். 148 00:09:58,558 --> 00:09:59,726 பெரிய கதை. 149 00:10:01,895 --> 00:10:05,523 அலுவலக நாற்காலிகளைச் சரிசெய்வதில் கோடைக் காலத்தைக் கழித்தேன். இன்னும் பெரிய கதை. 150 00:10:05,607 --> 00:10:07,234 மாடலிங் செய்தேன். 151 00:10:07,734 --> 00:10:08,944 நீங்கள் மாடலா? 152 00:10:09,611 --> 00:10:10,612 சுருக்கமாகச் சொன்னால், ஆமாம். 153 00:10:11,529 --> 00:10:14,074 ஃபேஷன் மாடல் மாதிரியா? 154 00:10:29,923 --> 00:10:31,424 முயற்சி செய்யுங்கள், அனு. உங்களால் முடியும். 155 00:10:31,508 --> 00:10:33,969 இல்லை, என்னால் முடியவில்லை. இது சுத்த மோசமாக இருக்கிறது. 156 00:10:34,052 --> 00:10:35,637 அது முழுவதும் மோசமாக இருக்காது. 157 00:10:36,555 --> 00:10:38,890 இதோ, நான் வந்து பார்க்கிறேன். 158 00:10:45,605 --> 00:10:50,443 அருமை. அருமை. உண்மையிலேயே அருமையாக இருக்கு. 159 00:10:50,527 --> 00:10:52,821 ஆமாம். நீங்கள் “உண்மையிலேயே அருமை” என்று சொல்வது, 160 00:10:52,904 --> 00:10:54,322 பொய் என்று எனக்குத் தெரியும். 161 00:10:54,406 --> 00:10:58,535 உண்மை தான். இது ஒரு அற்புதமான முதல் முயற்சி. உற்சாகம் தருகிறது. 162 00:10:59,578 --> 00:11:02,372 ஆமாம், நீங்கள் பார்க்கும் கோணம் எல்லாம் விளையாடு தான், இல்லையா? 163 00:11:02,455 --> 00:11:04,916 உங்களுடைய பரிமாணங்கள் மிகச் சரியானவை. 164 00:11:06,418 --> 00:11:09,004 -பரவாயில்லை, நிதானமாக இருங்கள். -நிதானமாகத் தான் இருக்கிறேன். 165 00:11:09,087 --> 00:11:11,506 உண்மையாகவா? நீங்கள் எப்பொழுதும் பிஸியாகவே இருந்தீர்கள். 166 00:11:13,592 --> 00:11:15,844 இது வேடிக்கை தான், என் அம்மா கூட இப்படித்தான் இருப்பார்கள். 167 00:11:21,141 --> 00:11:22,809 என்னைப் பார்த்தால் உங்கள் அம்மா ஞாபகம் வருகிறதா? 168 00:11:23,810 --> 00:11:26,354 கொஞ்சம், ஆனால், சஞ்சலப்படுத்தும் விதத்தில் இல்லை. 169 00:11:31,735 --> 00:11:36,281 “எனக்கு, உடற்பயிற்சி என்பது உடல் சம்பந்தப்பட்டது என்பதை விட, அது ஒரு சிகிச்சை.” 170 00:11:37,157 --> 00:11:38,825 மிஷல் ஒபாமா சொன்னது. 171 00:11:40,035 --> 00:11:42,579 வந்து, நல்ல வடிவம் பெறத் தான் நான் எப்போதும் விரும்புவேன். 172 00:11:44,247 --> 00:11:48,752 “நாம் உடற்பயிற்சி செய்யாவிட்டால், ஒரு கட்டத்தில், மனதளவில் உடைந்து விடுவோம்.” 173 00:11:50,587 --> 00:11:53,590 பராக் ஒபாமா தான் சொன்னார். நாம் போகலாம்! 174 00:11:55,550 --> 00:11:56,968 வாருங்கள், உங்களால் செய்ய முடியும்! 175 00:11:59,262 --> 00:12:01,389 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 176 00:12:01,473 --> 00:12:05,060 குத்துங்கள், முழங்காலால் குத்துங்கள். 177 00:12:05,143 --> 00:12:07,938 முடிவெடு, உறுதிகொள், வெற்றி பெறு. 178 00:12:08,605 --> 00:12:11,399 முடிவெடு, உறுதிகொள், வெற்றி பெறு. 179 00:12:12,484 --> 00:12:16,863 ஞாபகமிருக்கட்டும், யார் காத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நல்ல விஷயங்கள் வந்து சேரும். 180 00:12:20,784 --> 00:12:22,744 -உங்களால் முடியும்! நகருங்கள்! -தெரியும். 181 00:12:22,827 --> 00:12:24,287 குத்துங்கள், குத்துங்கள்! 182 00:12:24,371 --> 00:12:25,914 ...அருமையாக இருந்தது, 183 00:12:26,414 --> 00:12:30,335 விக் சமையலறையில் இருந்து நகர்ந்த ஒரே இடம் லே-ஸி-பாய் தான். 184 00:12:33,129 --> 00:12:34,673 ராவுல், நான் சொல்வது கேட்கிறதா? 185 00:12:35,715 --> 00:12:39,135 அனு, உங்களுடைய சப்பாத்தியில் வெண்ணெய் அதிகம் இருக்கிறது என்று தோன்றவில்லையா? 186 00:12:48,395 --> 00:12:50,272 நீ என்னிடம் கேட்டிருக்க வேண்டும். 187 00:12:50,355 --> 00:12:54,025 யாரெல்லாம் உருப்படாதவர்கள் என்று உன்னிடம் சொல்லியிருப்பேன். 188 00:12:54,109 --> 00:12:57,153 இங்கிருக்கும் அந்த பாவப்பட்ட ஆளை பார்க்கிறாயா, அனு? 189 00:12:57,779 --> 00:12:58,989 பேஸ் பால் தொப்பி போட்டுக்கொண்டிருக்கும் அவனை? 190 00:12:59,072 --> 00:13:03,952 ஆமாம். நன்றாக இல்லை. விலையை நான்கு மடங்கு குறைத்திருக்கிறான். 191 00:13:04,035 --> 00:13:05,328 இல்லை. 192 00:13:06,955 --> 00:13:08,623 இதுவரை யாரும் உங்களை வாங்கவில்லையா? 193 00:13:08,707 --> 00:13:11,960 இது வரைக்கும் யாரும் வாங்கவில்லை, சும்மா பார்த்துச் சென்றனர். 194 00:13:13,253 --> 00:13:15,755 ஆனால் அதைப் பார்க்க எனக்கு நேரம் கிடைத்திருக்கிறது, நான்... 195 00:13:16,256 --> 00:13:19,426 இங்கும் அங்கும் நான் சில மாற்றங்களை செய்ய வேண்டும். 196 00:13:21,219 --> 00:13:22,304 ஓ, அப்படியா? 197 00:13:23,513 --> 00:13:27,976 ஆமாம். நான் சாலுடனும், இப்ராஹிமுடனும் நிறைய பேசுகிறேன். 198 00:13:28,560 --> 00:13:31,438 தொழில் முறையில், இப்ராஹிம் ஒரு குடும்ப மனநல மருத்துவர். 199 00:13:31,938 --> 00:13:34,608 நான் எங்கு தவறு செய்தேன் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன்... 200 00:13:35,400 --> 00:13:38,570 என்னை திருப்பித் தரும் போது நீ சொன்னது சரியாக இருக்கலாம். 201 00:13:38,653 --> 00:13:41,907 நாம் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமில்லை போலும். 202 00:13:42,407 --> 00:13:45,535 நான் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது, 203 00:13:46,620 --> 00:13:48,955 ஆனால், செய்யவில்லை. 204 00:13:49,039 --> 00:13:51,958 நான் என்னைப் பற்றியே நிறைய கற்றுக்கொள்கிறேன். 205 00:13:52,042 --> 00:13:56,087 சந்தோஷத்தை தவறான இடத்தில் தேடி இருக்கிறேன் என்பது புரிகிறது. 206 00:13:58,340 --> 00:14:00,926 -அப்படியா? -ஆமாம். நான் உள்முகமாக பார்க்க வேண்டும். 207 00:14:01,009 --> 00:14:02,969 நான் எப்படிப்பட்டவள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். 208 00:14:03,053 --> 00:14:06,056 தனியாக இருப்பது தான், எனக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது. 209 00:14:07,891 --> 00:14:14,356 சரி, சரி. ஒருவேளை இது நல்லதுக்காக இருக்கலாம். 210 00:14:16,233 --> 00:14:17,817 அதற்கு வாழ்த்துக்கள். 211 00:14:19,110 --> 00:14:20,403 நன்றி, விக். 212 00:14:22,489 --> 00:14:26,618 நான் கிளம்புகிறேன். நான்... 213 00:14:27,786 --> 00:14:30,205 -அடுத்த வாரம் வந்து உங்களைப் பார்க்கிறேன். -சரி. 214 00:14:30,789 --> 00:14:32,249 -சரி. -நல்லது. 215 00:14:32,332 --> 00:14:34,125 -பை. -சரி, பை. 216 00:14:51,643 --> 00:14:53,645 தனிமையான பயணம் இத்தாலியில் 217 00:14:56,273 --> 00:14:58,358 வெர்னாஸா. 218 00:15:01,611 --> 00:15:05,407 பொக்கா டெல்லா வெரித்தா. 219 00:15:06,491 --> 00:15:07,701 சாவ் பெல்லா. 220 00:15:09,411 --> 00:15:12,038 ஸ்பகெட்டி கார்போனாரா. 221 00:15:25,886 --> 00:15:29,514 என்னுடைய இனிமையான, நீல நிற வீட்டிற்கு வரவேற்கிறேன். 222 00:15:29,598 --> 00:15:33,685 இந்த முன் தோட்டத்தைப் பற்றி தான் சொல்கிறேன் 223 00:15:33,768 --> 00:15:36,438 இதை பல லட்சம் தடவை நீங்கள் பார்த்திருக்கலாம். 224 00:15:36,521 --> 00:15:38,315 அதாவது, சும்மா பார்த்தீர்கள். 225 00:15:38,398 --> 00:15:39,608 ஹாய், அனு! 226 00:15:39,691 --> 00:15:41,484 இதோ, இதை கொஞ்சம் பிடிக்கிறீர்களா? 227 00:15:41,568 --> 00:15:42,777 எங்கே போய்விட்டாய், அனு? 228 00:15:42,861 --> 00:15:45,572 -ஹாய். -நீ நலமா? 229 00:15:45,655 --> 00:15:48,241 நீ கீழே விழுந்தது போல தெரிந்தது. 230 00:15:48,325 --> 00:15:53,288 ஹே, நான் இப்போது... ஆஹா! கடையில் பேரம் பேசி வாங்கினேன். 231 00:15:53,914 --> 00:15:56,458 உண்மையில், அவர் மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. 232 00:15:56,541 --> 00:16:00,837 விலை மிகவும் மலிவாக இருந்ததால், என்னால் வாங்காமல் இருக்க முடியவில்லை. 233 00:16:00,921 --> 00:16:02,005 இது சங்கடமாக இருக்குமா? 234 00:16:02,088 --> 00:16:04,925 இல்லை, இல்லை. எந்த சங்கடமும் இருக்காது. 235 00:16:05,008 --> 00:16:07,385 சரி, சரி. 236 00:16:07,886 --> 00:16:10,847 ஆம், நான் அப்படி நினைக்கவில்லை, ஏனென்றால், நீ தானே அவரை திருப்பிக் கொடுத்தாய். 237 00:16:11,348 --> 00:16:12,349 ஆமாம், ஆமாம். வந்து... 238 00:16:12,432 --> 00:16:14,476 -ஆமாம். -சரி. 239 00:16:14,559 --> 00:16:15,977 நீ அவரை திருப்பிக் கொடுத்தாய். 240 00:16:17,103 --> 00:16:18,730 நான் அவரை வாங்கிவிட்டேன். 241 00:16:22,692 --> 00:16:25,278 ஆக, இந்த முன்புற தோற்றம் சிறப்பாக இல்லை. 242 00:16:25,362 --> 00:16:27,155 நாம் பின்புறம் பார்க்க வேண்டும் 243 00:16:27,239 --> 00:16:29,991 ஏனென்றால் அங்கே நல்ல விஷயங்கள் நடக்கின்றன. 244 00:16:30,492 --> 00:16:31,618 உள்ளே வாருங்கள். 245 00:16:41,795 --> 00:16:45,090 -சரி, சரி. -நல்லது. 246 00:16:48,009 --> 00:16:49,928 ஹாய், அனு. 247 00:16:50,428 --> 00:16:52,430 நீ இங்கே என்ன செய்கிறாய்? 248 00:16:52,514 --> 00:16:53,515 ஹாய், பார்பரா. 249 00:16:53,598 --> 00:16:56,268 நான் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தேன் 250 00:16:56,351 --> 00:17:02,190 அங்கிருந்த விக்கின் பழைய உடைகளை கொடுத்து விட்டுப் போக வந்தேன். 251 00:17:02,274 --> 00:17:04,776 அது மிகவும் இனிமையான விஷயம். 252 00:17:04,859 --> 00:17:07,195 இது சற்று கனமாக இருக்கிறது. 253 00:17:07,279 --> 00:17:08,862 நான் உள்ளே வந்து வைக்கலாமா. 254 00:17:08,947 --> 00:17:11,408 சரி. வேண்டாம். அவருக்கு இது தேவைப்படாது. 255 00:17:12,158 --> 00:17:13,827 -வேண்டாமா? -வேண்டாம். தேவையில்லை. 256 00:17:13,910 --> 00:17:16,121 விகாஸிற்காக புது உடைகள் வாங்கிவிட்டேன். 257 00:17:16,705 --> 00:17:17,706 விகாஸ்? 258 00:17:17,789 --> 00:17:18,915 -பார்பி? -என்ன? 259 00:17:18,998 --> 00:17:21,543 -எல்லாம் நன்றாக இருக்கிறதா? -வூ! அழகாக இருக்கிறீர்கள். 260 00:17:24,087 --> 00:17:25,088 ஹலோ, அனு. 261 00:17:25,671 --> 00:17:27,549 அவர் அழகு இல்லையா? 262 00:17:30,051 --> 00:17:31,720 ஆமாம், என்ன தெரியுமா? 263 00:17:32,345 --> 00:17:37,142 அறிவிக்கப்படாத விருந்தினர்களுக்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை. 264 00:17:37,225 --> 00:17:38,226 என்ன சொல்கிறாய்? 265 00:17:38,310 --> 00:17:40,270 இந்த புது வாழ்க்கைக்குத் தயாராக 266 00:17:40,353 --> 00:17:43,732 எங்களுக்கு இன்னும் சற்று காலம் தேவைப்படுகிறது. 267 00:17:45,358 --> 00:17:47,569 நீ ஒப்புக்கொள்வாய் என்று தெரியும். பை-பை. 268 00:18:01,750 --> 00:18:04,878 அம்மா, எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? 269 00:18:04,961 --> 00:18:09,132 நிறைய விஷயங்கள் செய்கிறேன், சாரு செல்லமே. 270 00:18:09,799 --> 00:18:11,718 சொல்கிறேன். சொல்கிறேன். 271 00:18:11,801 --> 00:18:15,096 நான் தோட்ட வேலை செய்கிறேன்... 272 00:18:15,180 --> 00:18:16,514 சரி, அடுத்த வார்த்தைகள், 273 00:18:16,598 --> 00:18:19,226 “எனக்கு இருவர் தங்கும் அறை வேண்டும்.” 274 00:18:19,309 --> 00:18:20,310 சரி. 275 00:18:20,393 --> 00:18:22,437 ஜெ வொட்ரைஸ் உனே சாம்பரே போர் டியெஸ். 276 00:18:22,520 --> 00:18:23,521 புரிந்ததா? 277 00:18:23,605 --> 00:18:29,861 ஜெ வொட்ரைஸ் உனே சாம்பரே போர் டியெஸ். 278 00:18:29,945 --> 00:18:32,948 அருமை. நாம் அருமையாக முயற்சித்தோம். 279 00:18:36,660 --> 00:18:39,204 ...புத்தகம் படிக்கிறேன்... 280 00:18:48,421 --> 00:18:50,590 பறவைகளை ரசிக்கிறேன்... 281 00:18:59,099 --> 00:19:01,059 உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 282 00:19:01,142 --> 00:19:03,311 எப்பொழுதாவது நாம் இரண்டு ஜோடிகளாக டேட்டிங் போகலாம். 283 00:19:03,395 --> 00:19:05,772 நான் முயற்சிக்கிறேன். மெல்ல மெல்லமாக. 284 00:19:06,439 --> 00:19:07,732 நீங்கள் தயாரானதும் போகலாம். 285 00:19:08,233 --> 00:19:10,610 அங்கே இருக்கும் ஒரு சுஷி உணவகம் உங்களுக்கு பிடிக்கலாம். 286 00:19:13,363 --> 00:19:16,116 -அடக் கடவுளே. அம்மா, நீங்கள் நலம் தானே? -நான்... திரும்ப அழைக்கிறேன். 287 00:19:16,199 --> 00:19:20,453 ஹே. ஐய்யையோ. ஓ. பார்பரா, நீ நலமா? 288 00:19:20,537 --> 00:19:23,373 மன்னிக்கவும். உன்னை நான் கவனிக்கவில்லை. 289 00:19:23,456 --> 00:19:26,960 எப்படி என்னை கவனிக்காமல் இருந்தாய், அனு? ரியர் வியூ கண்ணாடி இல்லையா? 290 00:19:27,043 --> 00:19:28,420 நான் கவனம் சிதறிவிட்டேன். 291 00:19:28,503 --> 00:19:31,214 நான் இப்போது தான் ஓட்டிப் பழகுகிறேன், 292 00:19:31,298 --> 00:19:34,301 ஏனென்றால் நாங்கள் ஒன்றாக இருந்த போது விக் தான் வண்டி ஓட்டுவார். 293 00:19:34,384 --> 00:19:37,178 சரி. சரி. சரி. 294 00:19:37,262 --> 00:19:39,139 பார், உன்னை வீட்டிற்குள்ளே அழைத்துப் போகிறேன். 295 00:19:39,222 --> 00:19:42,767 உனக்கது பிடிக்கும், இல்லையா? பரவாயில்லை, வேண்டாம். எனக்கு ஒன்றுமில்லை. 296 00:19:43,476 --> 00:19:45,562 வேண்டாம்! எனக்கு ஒன்றுமில்லை. நன்றி. 297 00:19:46,521 --> 00:19:49,566 அடச்சே! கடவுளே, சே. 298 00:19:50,150 --> 00:19:52,861 விகாஸ்! கொஞ்சம் உதவி செய்யுங்கள், அன்பே. 299 00:20:45,622 --> 00:20:48,291 -அனு தான் இப்படி செய்தாள். -சரி, வா. 300 00:20:49,709 --> 00:20:50,710 சரி. 301 00:20:50,794 --> 00:20:53,421 -கை போடவா? நன்றி. சரி. -சரி. சரி, வா. 302 00:20:54,464 --> 00:20:55,674 பிடித்துக் கொண்டாயா? 303 00:20:55,757 --> 00:20:58,426 -சரி, என் மீது சாய்ந்துகொள். -என்ன வேடிக்கை இது? 304 00:21:06,309 --> 00:21:07,435 நாசமாய் போ. 305 00:21:41,511 --> 00:21:43,763 எங்கள் அற்புதமான விருந்தினர்களுக்கு நன்றி, 306 00:21:43,847 --> 00:21:45,640 மற்றும் வீட்டில் பார்ப்பவர்களுக்கும் நன்றி. 307 00:21:55,275 --> 00:21:57,444 -ஹே, கிளார்க். -அனு. 308 00:21:57,944 --> 00:21:59,654 சரியாக, காதலர் தினத்தில் வந்திருக்கிறாய். 309 00:21:59,738 --> 00:22:01,990 கணவர்கள் விற்பனையில் பெரிய சலுகைகள். 310 00:22:02,073 --> 00:22:03,491 இல்லை, வேண்டாம். 311 00:22:07,495 --> 00:22:08,496 விக்? 312 00:22:10,707 --> 00:22:12,000 என்ன நடந்தது? 313 00:22:12,083 --> 00:22:16,838 பார்பரா என்னை திருப்பி கொடுத்து விட்டாள். மண வாழ்க்கை அவளுக்கு ஒத்து வராதாம். 314 00:22:19,049 --> 00:22:22,260 இன்னும் அவள் கொடுத்த ஜாக்கெட்டை கதாநாயகன் போல அணிந்திருக்கிறாய். 315 00:22:22,344 --> 00:22:25,847 எனக்கு நிறைய உதவி தேவை, எனவே... 316 00:22:27,015 --> 00:22:29,517 இல்லை, வேண்டாம். என் விலையைப் பார்க்காதே. 317 00:22:29,601 --> 00:22:31,978 இல்லை, விக். இது மிகவும் மலிவு! 318 00:22:32,479 --> 00:22:37,150 நான் இரண்டு முறை திரும்ப கொடுக்கப்பட்டதால், இப்போது “பேர விலையில்” இருக்கிறேன். 319 00:22:39,986 --> 00:22:41,821 வந்து, உட்கார். இங்கே. 320 00:22:45,075 --> 00:22:46,952 ஹே, சில்லென்று ஏதாவது குடிக்கிறாயா? 321 00:22:56,753 --> 00:22:58,672 அவளுக்காக ஏன் மாறினீர்கள்? 322 00:23:00,590 --> 00:23:01,675 என்ன? 323 00:23:01,758 --> 00:23:04,928 முப்பத்தியேழு வருடங்களாக உங்களுக்காக எல்லாம் செய்தேன், ஆனால் நீங்கள் எதுவும்... 324 00:23:05,679 --> 00:23:06,680 செய்யவில்லை. 325 00:23:07,764 --> 00:23:11,893 பார்பராவோடு வாழ போய், திடீரென்று ரொம்பவும் உதவும் ஜானி போல ஆகிவிட்டீர்கள். 326 00:23:11,977 --> 00:23:15,897 “இங்கே பார், பார்பராவுக்காக சமைக்கிறேன், சுத்தம் செய்கிறேன், 327 00:23:15,981 --> 00:23:19,401 பார்பராவின் ஒல்லியான, நரைக்கும்... தலைமுடியை வாரி விடுகிறேன்.” 328 00:23:19,484 --> 00:23:23,154 -ஆக, நீ... எங்களை கண்காணித்தாயா? -சும்மா இருங்கள். 329 00:23:23,238 --> 00:23:26,199 நான் ஒன்றும் ஜேம்ஸ் பாண்ட் இல்லை, பைப் பிடித்து ஏறி வருவதற்கு. 330 00:23:26,825 --> 00:23:29,286 -ஜேம்ஸ் பாண்ட் அப்படி செய்ய மாட்டார். -நான் சொல்வது உங்களுக்குப் புரியும். 331 00:23:34,833 --> 00:23:38,044 நமக்கு கல்யாணமான புதுசில், நான் ஒன்றை சரி செய்வேன், 332 00:23:38,128 --> 00:23:41,298 அதைப் பார்த்து நீ, “ஏன்... அப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்பாய். 333 00:23:41,923 --> 00:23:43,758 உனக்கு வேண்டிய வகையில் 334 00:23:43,842 --> 00:23:46,428 நான் எதையும் செய்யாததால், அது தவறாகவே இருந்தது. 335 00:23:46,511 --> 00:23:49,598 நான் செய்வது எதுவும் உனக்கு சரியாக இல்லாததால், நான் முயற்சி செய்வதையே 336 00:23:50,807 --> 00:23:51,933 நிறுத்திவிட்டேன். 337 00:23:58,398 --> 00:24:03,361 இவ்வளவு வருடங்களும், நீங்கள் தான் பிரச்சனை என்று நினைத்து... 338 00:24:05,155 --> 00:24:07,157 நான் தனிமையாக இருந்து விட்டேன். 339 00:24:09,075 --> 00:24:12,871 நானும் நல்லவளில்லை என்று புரிந்துக் கொண்டேன். 340 00:24:14,956 --> 00:24:17,667 இல்லை. நீ அப்படி இல்லை. 341 00:24:22,756 --> 00:24:25,217 ஆக பல வழிகளில் நாம் ஒருவரை ஒருவர் மதிக்கவில்லை. 342 00:24:30,764 --> 00:24:31,932 மன்னித்துவிடுங்கள். 343 00:24:46,529 --> 00:24:48,406 சரி, அடுத்தது என்ன? நீ... 344 00:24:49,157 --> 00:24:51,159 நீ இப்ரஹிம்மை வாங்க வந்தாயா? 345 00:24:51,785 --> 00:24:53,495 இல்லை, இனி நான் வாங்கப் போவதில்லை. 346 00:24:54,371 --> 00:24:56,331 நீ தனிமையில் இருக்கப் போகிறாயா? 347 00:24:57,249 --> 00:24:58,333 தெரியவில்லை. 348 00:25:08,218 --> 00:25:09,511 நமக்கு என்ன நடந்தது? 349 00:25:12,180 --> 00:25:15,225 சுபிட்சமான ஊருக்கு வர, நாம் கடுமையாக உழைத்தோம். 350 00:25:15,308 --> 00:25:19,646 இப்போது நிறைய பொருட்கள் இருக்கும் கடையில் இருக்கிறோம் 351 00:25:19,729 --> 00:25:22,315 இருந்தாலும் நம்மிடம் ஒன்றும் இல்லை. 352 00:25:22,399 --> 00:25:24,651 இல்லை, அப்படி இல்லை. 353 00:25:25,402 --> 00:25:27,904 ஒவ்வொரு வருடமும் சில மணி நேரங்களாவது நம்மை வந்து பார்த்து விட்டுப் போகும் 354 00:25:27,988 --> 00:25:30,198 கல்யாணமாகாத மகள், சரீனா இருக்கிறாள். 355 00:25:41,293 --> 00:25:43,628 உங்களை நான் திரும்ப வாங்கினால், அது மாறுபாடாக இருக்க வேண்டும். 356 00:25:43,712 --> 00:25:46,047 பழையபடி இருக்கக் கூடாது. 357 00:25:49,259 --> 00:25:50,260 நிச்சயமாக. 358 00:25:50,927 --> 00:25:52,637 எனக்கு பரபரப்பான வாழ்க்கை வேண்டும். 359 00:25:53,680 --> 00:25:55,140 அதன் அர்த்தம் என்னவென்று தெரியாது, 360 00:25:55,223 --> 00:25:58,727 அதை எப்படி பெறுவது என்றும் தெரியாது, ஆனால் எனக்கு அது வேண்டும். 361 00:25:59,227 --> 00:26:01,354 நீங்கள் என்னை அதிலிருந்து தடுக்கக் கூடாது. 362 00:26:01,438 --> 00:26:05,191 எனக்கும் தான். எஞ்சியிருக்கும் வாழ்க்கையில்... ஒரு நாற்காலியில் அமர எனக்கும் ஆசை இல்லை. 363 00:26:05,275 --> 00:26:09,112 இல்லை, உண்மையாகச் சொல்கிறேன், விக். ஒரு உல்லாச கப்பல் பயணம் போவது பற்றி மட்டும் சொல்லவில்லை. 364 00:26:09,195 --> 00:26:11,197 எந்த உல்லாச கப்பல் பயணமும் தேவையில்லை. அவை மோசம். 365 00:26:13,283 --> 00:26:15,952 என்ன, திடீரென்று கெட்ட வார்த்தை பேசுகிறீர்கள்? 366 00:26:18,413 --> 00:26:19,789 நான் ஒரு புது மனிதன். 367 00:26:29,507 --> 00:26:30,508 இல்லை. 368 00:26:34,387 --> 00:26:35,597 நீ என்னை வாங்க வேண்டாம். 369 00:26:37,682 --> 00:26:40,352 நான் “பேர விலை.” உனக்கு வேறு சிறப்பானவர் வேண்டும். 370 00:26:56,284 --> 00:26:58,286 -வண்டியில் ஏறுங்கள். -ஏன்? 371 00:26:58,370 --> 00:27:01,623 -ஏறுங்கள். -நான் சொன்னேனே. நீ என்னை வாங்க வேண்டாம். 372 00:27:01,706 --> 00:27:04,334 ஆமாம், நான் உங்களை வாங்கப் போவதில்லை, திருடப் போகிறேன். 373 00:27:04,876 --> 00:27:07,504 இந்த மதிப்பு, அந்த மதிப்பு. எல்லாம் அபத்தம். 374 00:27:07,587 --> 00:27:09,631 வாருங்கள். யாரும் பார்ப்பதற்கு முன், இதில் ஏறுங்கள். 375 00:27:10,674 --> 00:27:14,427 சரி, நீ என்ன செய்கிறாய்? உன் வாழ்நாளில் நீ எதுவுமே திருடியதே கிடையாதே. 376 00:27:14,511 --> 00:27:16,263 ஆமாம், சரி தான். 377 00:27:16,346 --> 00:27:19,599 சரி, நீ என்னைத் திரும்ப கொடுக்க விரும்பினால் என்ன செய்வது? உன்னிடம் ரசீது இருக்காதே. 378 00:27:20,976 --> 00:27:22,394 நான் உங்களை திரும்ப கொடுக்கவே மாட்டேன். 379 00:27:26,064 --> 00:27:27,774 சரி, போ. போ. 380 00:27:29,067 --> 00:27:30,068 போ. 381 00:27:44,624 --> 00:27:47,419 பிக்$சேவ் 382 00:27:48,128 --> 00:27:49,421 போ, போ. 383 00:28:02,309 --> 00:28:04,269 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 384 00:29:08,291 --> 00:29:10,293 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்