1 00:00:18,478 --> 00:00:22,107 குதிரைகளை நேசிக்கும் பெண் 2 00:01:00,020 --> 00:01:01,229 நீ சீக்கிரம் எழுந்து விட்டாய். 3 00:01:01,313 --> 00:01:05,442 ஆம். லாட்டி பதற்றமாக உணர்ந்தாள், அதனால் வெளியே அழைத்துப் போனேன். 4 00:01:06,026 --> 00:01:07,027 லாட்டி அப்படி உணர்ந்தாளா? 5 00:01:08,570 --> 00:01:09,571 சாப்பாடு சமைத்துவிட்டேன். 6 00:01:10,447 --> 00:01:11,489 ஆமாம், தெரியும். 7 00:01:25,170 --> 00:01:27,839 -ஹே, நான் கேட்க வேண்டும் என்று... -நீங்கள் கதவைத் தட்ட வேண்டும். 8 00:01:27,923 --> 00:01:29,633 மன்னித்துவிடு. மறந்து விடுகிறேன். 9 00:01:29,716 --> 00:01:33,136 எனக்கு தனிமை வேண்டும். எல்லோரும் எப்போது வேண்டுமானாலும் இங்கே வருகிறார்கள். 10 00:01:33,220 --> 00:01:34,471 நாம் இருவர் தானே இருக்கிறோம். 11 00:01:34,554 --> 00:01:37,015 காரணமாகத் தான் திரைச்சீலை போட்டு இருக்கிறேன். எனக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. 12 00:01:37,098 --> 00:01:39,392 எப்போதும் நீங்கள் கூடவே இருக்கத் தேவை இல்லை. 13 00:01:39,976 --> 00:01:41,853 இப்போதெல்லாம் நீ என் மீது மிகவும் கோபப்படுகிறாய், சிறுமி. 14 00:01:41,937 --> 00:01:44,147 இல்லை. நான் சிறுமி இல்லை. 15 00:01:48,944 --> 00:01:52,864 அம்மா இங்கே இருந்தால், உனக்கு ஏற்படும் மாற்றங்களைப் பற்றி எப்படி பேச வேண்டும் என்று 16 00:01:52,948 --> 00:01:55,325 -தெரிந்து பேசுவாள். -அடக் கடவுளே. 17 00:01:55,408 --> 00:01:58,703 இல்லை... ஆமாம், அது பற்றியும் தான். 18 00:01:59,287 --> 00:02:01,081 ஆனால் நான் உணர்ச்சிகளைப் பற்றி சொல்கிறேன். 19 00:02:02,165 --> 00:02:04,542 உன் வயதில், ஒன்று எனக்கு பசிக்கும் அல்லது பசிக்காது. 20 00:02:04,626 --> 00:02:08,754 சரி. அம்மா இறந்து பல காலம் ஆகிவிட்டது, 21 00:02:08,837 --> 00:02:10,799 நீங்கள் அதனை மறந்து வாழ வேண்டும். 22 00:02:13,969 --> 00:02:14,970 நீ சொல்வது சரி தான். 23 00:02:18,348 --> 00:02:22,644 வேலை விஷயமாக நகரத்திற்கு போகிறேன். நீயும் வருகிறாயா? அன்றைய நாட்கள் போல. 24 00:02:22,727 --> 00:02:26,731 -இல்லை, நான் இங்கே இருக்கிறேன். -தனியாகவா? 25 00:02:26,815 --> 00:02:28,900 நான் தனியாக இல்லை. லாட்டி இருக்கிறாள். 26 00:02:29,901 --> 00:02:32,988 அங்கே தொலைவில் வசிக்கும், அந்தப் பெண்? 27 00:02:33,655 --> 00:02:35,323 அந்தப் பாதிரியாரின் மகளா? 28 00:02:35,407 --> 00:02:36,908 அவள் உன் தோழி தானே? 29 00:02:37,409 --> 00:02:39,661 நாங்கள் குழந்தைகளாக இருந்த போது வயலில் விளையாடினோம், 30 00:02:39,744 --> 00:02:41,204 அதனால் ஒன்றும் நாங்கள் நண்பர்கள் இல்லை. 31 00:02:41,288 --> 00:02:44,082 ஒருவேளை, அவளுக்கும் குதிரைகள் பிடிக்கலாம். இருவரும் ஒன்றாக குதிரையில் போகலாம். 32 00:02:44,165 --> 00:02:47,544 எப்படி ஒரு பக்கமாக உட்காருவது என்பது கூட மில்லிக்குத் தெரியாது. 33 00:02:47,627 --> 00:02:49,129 எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். 34 00:02:49,713 --> 00:02:51,631 அவள் எப்போதுமே தன் விருப்பப்படி நடந்துகொள்வாள், 35 00:02:51,715 --> 00:02:54,301 ஆனால் இங்கே பெரும்பாலான பெண்கள் அப்படி இல்லை. 36 00:02:59,014 --> 00:03:01,099 இரவு சந்திக்கலாம், செல்லமே. உன்னை நேசிக்கிறேன். 37 00:03:02,559 --> 00:03:03,560 பை. 38 00:03:15,071 --> 00:03:16,072 இதோ. 39 00:03:17,866 --> 00:03:18,867 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 40 00:04:19,594 --> 00:04:21,596 சலூன் 41 00:04:41,575 --> 00:04:43,243 உன் இழப்பிற்கு வருந்துகிறேன், மிஸ். 42 00:04:44,494 --> 00:04:47,664 எல்லா விவரங்களும் சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்த மாட்டேன், 43 00:04:47,747 --> 00:04:51,793 ஆனால் உன் அப்பா திரு. சைலஸ் மெக்கால் என்பவரிடம் நிறைய கடன் வாங்கி இருந்தார். 44 00:04:51,877 --> 00:04:54,296 திரு. மெக்கால் அந்த பணத்தை திரும்ப கேட்ட போது, 45 00:04:54,379 --> 00:04:56,047 உன் அப்பா துப்பாக்கியால் மிரட்டினார். 46 00:04:57,299 --> 00:05:01,595 எனவே திரு. மெக்கால் அவரை சுட்டார். தற்காப்பு என்பதால் அது நியாயம் தான். 47 00:05:06,016 --> 00:05:07,851 அவரது குதிரை எங்கே? 48 00:05:08,643 --> 00:05:09,895 அவர் குதிரையில் தானே இங்கே வந்தார்? 49 00:05:09,978 --> 00:05:14,232 குதிரைகள் எப்போதுமே ஓடி விடும். மிஸ். நான் அதைப் பற்றி மக்களிடம் சொல்கிறேன். 50 00:05:15,442 --> 00:05:17,903 இறந்தவரின் உடலை வீட்டிற்கு கொண்டு போக உனக்கு உதவி தேவை என்றால் சொல். 51 00:06:46,324 --> 00:06:49,536 துக்கப்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏனென்றால்... அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 52 00:06:49,619 --> 00:06:51,246 இப்போது வேண்டாம், மில்லி. 53 00:06:52,706 --> 00:06:54,291 உன் அப்பா பற்றி வருந்துகிறேன். 54 00:06:54,374 --> 00:06:55,875 நானும் தான். 55 00:06:55,959 --> 00:07:00,672 என்றாவது ஒருநாள் அவரை சொர்க்கத்தில் சந்திக்க ஆசைப்படுகிறேன். 56 00:07:00,755 --> 00:07:01,590 உண்மையாகவா? 57 00:07:02,591 --> 00:07:05,135 சொர்க்கத்தில் என் அப்பாவை சந்திக்க நீ விரும்புகிறாயா? 58 00:07:05,218 --> 00:07:06,219 ஆமாம். 59 00:07:06,595 --> 00:07:08,722 பூமியில் அவரோடு நீ நேரம் செலவழிக்கவில்லை என்றாலும் கூடவா? 60 00:07:09,222 --> 00:07:10,599 அவர், சற்று வயதானவர். 61 00:07:12,350 --> 00:07:14,269 -அவரது உடையை நீ அணிந்திருக்கிறாய். -ஆமாம். 62 00:07:15,061 --> 00:07:17,188 துக்கம் அனுஷ்டிக்கும் ஒரு வழியா இது? 63 00:07:17,272 --> 00:07:19,774 இல்லை. நான் வேலை விஷயமாக நகரத்திற்குப் போகிறேன். 64 00:07:21,860 --> 00:07:23,904 ஆக, இது மாறுவேடமா? 65 00:07:25,322 --> 00:07:26,323 அப்படித்தான். 66 00:07:27,449 --> 00:07:30,035 எனக்கு வருத்தமாக இருக்கும் போது, வெர்ஜில்‘ஸ் மருந்தகத்திற்கு செல்வேன். 67 00:07:30,118 --> 00:07:31,870 அதனால் மகிழ்ச்சி திரும்பி விடும். 68 00:07:31,953 --> 00:07:33,622 நான் வெர்ஜில்‘ஸுக்கு போகவில்லை. 69 00:07:33,705 --> 00:07:36,583 நான் சலூனுக்கு சென்று அந்தக் கோழை சைலஸ் மெக்காலை சுடப் போகிறேன். 70 00:07:39,044 --> 00:07:41,922 -இரு, என்ன... இப்போதேவா? -ஆமாம். 71 00:07:42,005 --> 00:07:43,965 எந்த சைலஸ் என்று உனக்குத் தெரியுமா? 72 00:07:44,049 --> 00:07:46,760 ஏனென்றால்... மேரியின் அப்பா பெயர், சைலஸ் எம், 73 00:07:46,843 --> 00:07:50,722 -பேர்லின் அப்பா பெயர், சைலஸ் எஃப்... -மில்லி. வாயை மூடு. 74 00:07:52,307 --> 00:07:54,768 வா, லாட்டி. போகலாம். வா. 75 00:07:56,561 --> 00:07:57,562 -நல்ல பெண். -ஜேன். 76 00:07:58,688 --> 00:07:59,689 ஜேன், நில்லு. 77 00:08:01,608 --> 00:08:02,692 கொஞ்சம் நில்லு, ஜேன்! 78 00:08:10,659 --> 00:08:13,620 -என்மீது பிஸ்கட் போட்டாயா? -நான் உன்னோடு வருகிறேன். 79 00:08:13,703 --> 00:08:15,455 எதற்காக என்னோடு வருகிறாய்? 80 00:08:15,538 --> 00:08:18,333 ஏனென்றால் இப்போது உனக்கு ஒரு தோழியின் உதவி தேவை. 81 00:08:18,416 --> 00:08:19,876 நாம் தோழிகள் கிடையாது. 82 00:08:19,960 --> 00:08:21,086 ஒரு காலத்தில் இருந்தோம். 83 00:08:21,795 --> 00:08:25,757 நீ தலைமுடி மற்றும் மேலாடையை சரியாக அணிந்து கொள்ளவில்லை. 84 00:08:25,840 --> 00:08:28,635 ஒரு ஆண் போல பழிவாங்க நினைத்தால், அதற்கேற்றவாறு உடை அணிய வேண்டும். 85 00:08:28,718 --> 00:08:31,555 இன்னொரு தேர்வும் இருக்கிறது, பழி வாங்காமல் இருப்பது. 86 00:08:32,264 --> 00:08:35,058 மில்லி, என்னோடு தொடர்ந்து வந்து, என்னைப் போக விடாமல் தடுத்து, 87 00:08:35,140 --> 00:08:36,893 பைபிள் வசனங்கள் சொல்வதை நிறுத்து. 88 00:08:37,686 --> 00:08:41,022 பைபிள். அது என்ன, ஒரு புத்தகமா? 89 00:09:00,625 --> 00:09:02,627 இப்படி சவாரி செய்ய எப்படி கற்றுக் கொண்டாய்? 90 00:09:04,254 --> 00:09:06,006 நாம் ஷெரிஃப்பிற்கு தகவல் சொல்ல வேண்டும். 91 00:09:06,089 --> 00:09:07,757 அவருக்கு தெரியும் ஆனால் அவர் அக்கறைக் காட்டவில்லை. 92 00:09:08,258 --> 00:09:10,969 சரி, முழு கதையையும் யாராவது அவருக்கு விவரிக்க வேண்டும். 93 00:09:11,052 --> 00:09:13,597 மேரியின் அப்பா மனநலம் சரியில்லாததால் தன் பாவங்களை 94 00:09:13,680 --> 00:09:15,348 போக்க சிறையில் அடைக்கப்பட வேண்டும். 95 00:09:15,432 --> 00:09:18,977 அதன் பிறகு, நீ பழிவாங்க நினைத்ததற்காக, 96 00:09:19,060 --> 00:09:21,855 நீயும் நானும் தேவாலயத்திற்குச் சென்று மன்னிப்பு கேட்கலாம். 97 00:09:21,938 --> 00:09:23,273 அதை நீ இன்னும் நினைப்பதானால். 98 00:09:23,356 --> 00:09:25,025 நீ எப்போதும் இவ்வளவு அதிகமாக பேசுவாயா? 99 00:09:25,108 --> 00:09:28,945 ஆமாம், நீ எப்போதும் வலிமையான, மௌனமான ரகம். 100 00:09:29,029 --> 00:09:31,656 பள்ளியில் மற்றவர்கள் உன்னை ஊமை என்று நினைத்தார்கள், தெரியுமா? 101 00:09:33,909 --> 00:09:35,327 -ஹாய் சொல். -சரி. 102 00:09:36,953 --> 00:09:38,163 காலை வணக்கம், மில்லி. 103 00:09:38,246 --> 00:09:39,581 உன் கண்ணாடி நன்றாக இருக்கிறது. 104 00:09:40,332 --> 00:09:41,541 நன்றி, எலெனார். 105 00:09:41,625 --> 00:09:44,085 -அது புதுமையான தொழில்நுட்பம்... -அவர்கள் உன்னை கேலி செய்கிறார்கள். 106 00:09:45,879 --> 00:09:48,423 இரு, ஜேன், வேண்டாம். இதைச் செய்யாதே. 107 00:09:49,007 --> 00:09:50,800 பின் உன் வாழ்க்கை முழுவதும் இதற்காக வருந்துவாய். 108 00:09:50,884 --> 00:09:53,470 உன் ஆன்மாவின் மீது கறை படிந்துவிடும். 109 00:09:53,553 --> 00:09:56,181 இது முட்டாள்தனமான கெட்ட விஷயம், என்னோடும், நமக்குத் தெரிந்த மற்றவர்களோடும் 110 00:09:56,264 --> 00:09:57,974 நீ சொர்க்கத்துக்கு வர முடியாது. 111 00:09:58,808 --> 00:10:00,268 மேலும், அவர்கள் உன்னைத் தூக்கிலிடக் கூடும். 112 00:10:03,355 --> 00:10:05,440 இங்கே இரு. என் குதிரையை பார்த்துக்கொள். 113 00:10:10,946 --> 00:10:14,074 நான் சைலஸ் மெக்காலைத் தேடுகிறேன். அவர் இதன் சொந்தக்காரர், இல்லையா? 114 00:10:17,118 --> 00:10:20,038 -ஆமாம், ஆனால் அவர் இங்கு இல்லை. -சரி, எங்கே போயிருக்கிறார்? 115 00:10:20,121 --> 00:10:22,582 எனக்குத் தெரியாது. அவர் விவரங்கள் எனக்குத் தெரியாது. 116 00:10:28,046 --> 00:10:31,049 அவர் வேண்டுமென்றே செய்யவில்லை, கடவுளே. அவரையும், எங்கள் எல்லோரையும் மன்னியுங்கள்! 117 00:10:34,678 --> 00:10:37,138 -என்ன நடந்தது? -உன்னை வெளியே தானே இருக்கச் சொன்னேன். 118 00:10:38,014 --> 00:10:39,933 நீ அந்த பாதிரியாரின் மகள் தானே? 119 00:10:41,184 --> 00:10:42,269 ஆமாம். 120 00:10:44,354 --> 00:10:47,649 நான் தேவாலயத்திற்கு வராமல் இருப்பதற்கு உன் அப்பாவிடம் வருத்தம் தெரிவிக்கிறேன். 121 00:10:47,732 --> 00:10:49,693 நான் சற்று வேலையாக இருக்கிறேன், மற்றும்... 122 00:10:49,776 --> 00:10:51,945 நான் போகும் போது, உங்களது தகவலைச் சொல்கிறேன். 123 00:10:52,028 --> 00:10:53,530 இப்போது கிளம்புகிறோம். 124 00:10:53,613 --> 00:10:54,990 அதற்கு முன், சைலஸ் எங்கே என சொல்லுங்கள். 125 00:10:56,032 --> 00:10:57,158 அந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். 126 00:10:57,242 --> 00:10:58,451 சொல்லுங்கள். 127 00:10:58,535 --> 00:11:02,372 இங்கிருந்து வடக்கு நோக்கி 20 மைல் தொலைவில் அவர் வேட்டையாட போயிருக்கிறார். 128 00:11:02,956 --> 00:11:04,374 தொந்தரவு நதி ஓரமாக. 129 00:11:05,083 --> 00:11:06,960 ஆனால் அவரைத் தேடி நான் தனியாக போக மாட்டேன். 130 00:11:07,043 --> 00:11:09,629 சீக்கிரமே கோபப்பட்டு, சீக்கிரமாக துப்பாக்கியை எடுப்பார். 131 00:11:10,422 --> 00:11:13,300 -80 கெஜத்தில் ஒரு ஈயை சுட்டு விடுவார். -ஏன்? 132 00:11:13,800 --> 00:11:14,801 “ஏன்,” என்றால் என்ன? 133 00:11:14,885 --> 00:11:17,554 அவர் ஏன் அப்படி செய்வார்? ஒரு ஈயை சுடுகிறார். 134 00:11:18,179 --> 00:11:19,180 நாங்கள் இதை எடுத்துக்கொள்கிறோம். 135 00:11:19,264 --> 00:11:21,725 அந்தத் தகவலை... சொன்னதற்கு பரிகாரமாக. 136 00:11:41,995 --> 00:11:43,663 நாம் என்ன செய்யப் போகிறோம்? 137 00:11:44,664 --> 00:11:47,250 வீட்டிற்கு திரும்ப முடியாது. நாம் இப்போது குற்றவாளிகள். 138 00:11:48,126 --> 00:11:51,213 நீ திரும்பிப் போகலாம். உன் பெற்றோர் புரிந்துகொள்வார்கள். 139 00:11:51,880 --> 00:11:53,006 விளையாடுகிறாயா? 140 00:11:53,632 --> 00:11:57,344 துப்பாக்கி முனையில் ஒரு சலூனிலிருந்து திருடினேன் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள்? 141 00:11:57,844 --> 00:12:01,598 நான் தான் துப்பாக்கி முனையில் திருடினேன். நீ எதுவும் தெரியாத என் தோழி. 142 00:12:05,143 --> 00:12:07,896 சரி, நான் வீட்டிற்கு சென்றாலும், 143 00:12:07,979 --> 00:12:11,399 என்... ஏழு தம்பி, தங்கைகளை நான் பார்த்துக்கொள்ள வேண்டும். 144 00:12:11,483 --> 00:12:14,569 சமையல், சுத்தம் செய்வது மற்றும் 145 00:12:14,653 --> 00:12:16,321 தேவாலய வேலைகளில் உதவ வேண்டும். 146 00:12:18,031 --> 00:12:19,699 நான் ஒரு கணவரை கண்டுபிடிக்க வேண்டும். 147 00:12:19,783 --> 00:12:21,409 நீ இயேசுவை திருமணம் செய்தாய் என நினைத்தேன். 148 00:12:23,286 --> 00:12:25,372 சரி. பரவாயில்லை, பரவாயில்லை, சரி. 149 00:12:26,623 --> 00:12:28,917 இன்றிரவு, இங்கு தங்கலாம். தங்கி, நன்கு யோசிக்கலாம். 150 00:12:29,000 --> 00:12:30,544 பிறகு காலையில், 151 00:12:30,627 --> 00:12:33,296 நாம் கடத்தப்பட்டோம் அல்லது தற்காலிகமாக பேய் பிடித்தது என்று சொல்லலாம். 152 00:12:34,172 --> 00:12:35,799 நீ என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். 153 00:12:36,299 --> 00:12:38,802 நான் தொந்தரவு நதிக்கு சென்று, அந்த தீயவனை கொல்லப் போகிறேன். 154 00:12:38,885 --> 00:12:41,221 அந்த பார் ஊழியர் சைலஸ் எப்படி ஈக்களை சுடுவான் என்று சொன்னாரே? 155 00:12:41,304 --> 00:12:43,056 சரி, நான் ஒன்றும் ஈ இல்லை. 156 00:12:49,020 --> 00:12:51,189 ஜேன். அது சாராயம். 157 00:12:53,233 --> 00:12:54,609 அடச்சே, உண்மையாகவா? 158 00:12:55,902 --> 00:12:57,195 இது பஞ்ச் என்று நினைத்தேன். 159 00:12:57,821 --> 00:12:59,281 ஏற்கனவே குடித்திருக்கிறாயா? 160 00:12:59,990 --> 00:13:00,991 இல்லை. 161 00:13:02,200 --> 00:13:03,201 -நீ? -கண்டிப்பாக இல்லை. 162 00:13:04,494 --> 00:13:08,415 சாராயம் நம்மை கெட்டவளாக அல்லது சூனியக்காரி ஆக்கிவிடும். சில சமயம் இரண்டுமாக. 163 00:13:08,999 --> 00:13:10,584 -உனக்கு ஆர்வமாக இல்லையா? -இல்லை. 164 00:13:35,442 --> 00:13:39,529 தங்கள் சிறுவயதில், பெண்கள் 165 00:13:39,613 --> 00:13:42,657 குதிரைகளை விரும்புவது ஆச்சரியம் இல்லையா? 166 00:13:45,368 --> 00:13:47,621 அவர்கள் வளர்ந்த பிறகு, அவர்கள் சமையலறையில் 167 00:13:47,704 --> 00:13:49,789 குழந்தைகளோடு இருக்க வேண்டும். 168 00:13:50,999 --> 00:13:53,543 ஆமாம், இது விசித்திரம். 169 00:13:57,339 --> 00:14:00,050 நீ அப்படி இல்லை. உனக்கு இன்னமும் குதிரைகள் பிடிக்கிறது. 170 00:14:01,092 --> 00:14:02,427 ஆமாம். 171 00:14:05,388 --> 00:14:09,017 என்னைப் பொறுத்தவரை, அவை அச்சுறுத்தலானவை. 172 00:14:10,018 --> 00:14:12,270 அவற்றோடு உறவாட நீ கற்றுக்கொள்ள வேண்டும். 173 00:14:16,358 --> 00:14:17,359 நடனமாட விரும்புகிறாயா? 174 00:14:18,318 --> 00:14:20,070 இல்லை. வேண்டாம். 175 00:14:23,740 --> 00:14:26,993 ஆமாம், நீ இன்னும் சோகமாக இருக்கிறாய். 176 00:14:27,994 --> 00:14:29,871 நடனமாட முடியாமல் வருத்தமாக இருக்கிறாயா? 177 00:14:30,789 --> 00:14:33,917 எனக்கு நடனமாட பிடிக்காது. குதிரை சவாரி பிடிக்கும். 178 00:14:35,418 --> 00:14:36,419 அவ்வளவு தான். 179 00:14:42,092 --> 00:14:45,470 நான் நடனமாடக் கூடாது. 180 00:14:46,346 --> 00:14:47,847 ஏனென்றால்... 181 00:14:53,186 --> 00:14:54,688 அது ஏதோ பிசாசு மாதிரி. 182 00:14:54,771 --> 00:14:56,314 எனக்கு ஞாபகம் இல்லை. 183 00:14:58,483 --> 00:15:01,278 ஆனால், சில நேரங்களில், 184 00:15:01,945 --> 00:15:04,698 என்னுடைய அம்மாவின் ஹூப்ஸ்கர்ட்டை அணிந்து கொள்வேன். 185 00:15:04,781 --> 00:15:08,910 கால்களை நன்றாக உயர்த்தி, டான்ஸ்-ஹால் கேர்ள் மாதிரி நடனமாடுவேன். 186 00:15:10,579 --> 00:15:14,291 நடனம் மட்டுமே ஆடும் உண்மையான நடனக்காரியைப் போல். 187 00:15:14,374 --> 00:15:16,293 அட, வா. நீ முயற்சி செய். 188 00:15:16,376 --> 00:15:17,711 அட, வா. 189 00:15:20,672 --> 00:15:21,882 உயரக் காலைத்தூக்கி ஆடு. 190 00:15:25,260 --> 00:15:29,431 அல்லது... குதித்துக் குதித்து ஆடும் நடனம் கூட இருக்கு. 191 00:15:30,098 --> 00:15:31,683 அது உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 192 00:16:19,439 --> 00:16:21,316 நாசமாய் போச்சு. 193 00:16:50,345 --> 00:16:51,596 வா, லாட்டி. 194 00:17:22,585 --> 00:17:24,170 நீங்கள் உள்ளே இருப்பது தெரியும், மெக்கால்! 195 00:18:09,216 --> 00:18:10,759 என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. 196 00:18:10,842 --> 00:18:12,385 சுடாதே. நாங்கள் ஒன்றும் பண்ண மாட்டோம். 197 00:18:14,012 --> 00:18:15,013 அவள் தான். 198 00:18:17,224 --> 00:18:20,227 மில்லி? நீ இங்கு என்ன செய்கிறாய்? 199 00:18:20,310 --> 00:18:21,811 நான் இங்கு என்ன செய்கிறேன்? 200 00:18:22,604 --> 00:18:24,147 நான் சாகட்டும் என்று நீதான் என்னை அப்படியே விட்டுப் போய்விட்டாய். 201 00:18:24,231 --> 00:18:26,524 நல்லவேளை, நான் வயதான டாக்டர் ஹென்றியைச் சந்தித்தேன். 202 00:18:26,608 --> 00:18:29,361 பழங்குடி அமெரிக்கர்களுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தேன். 203 00:18:29,444 --> 00:18:31,905 சில சமயங்களில், கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப, நானும், என் அப்பாவும், 204 00:18:31,988 --> 00:18:34,824 -அவருடன் சேர்ந்து அவர்களைச் சந்திப்போம். -இவளை வான்கோழி என நினைத்தேன். 205 00:18:34,908 --> 00:18:35,909 ஒரு நிமிடம். 206 00:18:37,577 --> 00:18:39,621 -நான் சாகட்டும் என்று என்னை விட்டு விட்டாய். -உனக்காகத் திரும்பி வந்திருப்பேன். 207 00:18:39,704 --> 00:18:40,830 உண்மையாகவா? 208 00:18:40,914 --> 00:18:42,916 நான் லைல் தாமஸுடன் புகை பிடிப்பதைப் பார்த்து 209 00:18:42,999 --> 00:18:44,334 என்னை பள்ளியிலே விட்டுச் சென்றது மாதிரி. 210 00:18:44,417 --> 00:18:45,460 இது உன்னைப் பற்றிய விஷயம் அல்ல. 211 00:18:45,544 --> 00:18:48,463 அதுதான் பிரச்சினையே. நான் என் வாழ்வையே பணயம் வைத்து இங்கே வந்திருக்கிறேன், 212 00:18:48,547 --> 00:18:50,840 ஆனால் நீ உன்னைப் பற்றி மட்டுமே நினைக்கிறாய். 213 00:18:51,925 --> 00:18:53,927 -என்னோடு வருவது உன் முடிவு. -ஏனெனில், நீ பைத்தியம் போல நடந்துகொண்டாய். 214 00:18:54,010 --> 00:18:55,428 -நான் கோபமாக இருந்தேன். -அதனால் என்ன? 215 00:18:56,388 --> 00:18:58,682 கோபம் வந்தால் எல்லோரும் அப்படியே போய், சுட்டுத் தள்ளி விடுவார்களா? 216 00:18:59,599 --> 00:19:02,060 -இருக்கலாம். -நீ நன்றி கூடச் சொல்லவில்லை. 217 00:19:02,143 --> 00:19:04,771 நான் இல்லை என்றால், மெக்கால் எங்கே இருக்கிறார் என்றுகூட உனக்குத் தெரிந்திருக்காது. 218 00:19:04,854 --> 00:19:08,233 ஆக, நான் உனக்கு நன்றி சொல்லத் தான் இப்படி நடந்துகொள்கிறாயா? 219 00:19:08,817 --> 00:19:10,151 -அதுவே போதும். -நல்லது. 220 00:19:11,361 --> 00:19:12,571 நன்றி, மில்லி. 221 00:19:12,654 --> 00:19:15,532 என்னுடைய வாழ்க்கையைப் பிடுங்கிக்கொண்டு, 222 00:19:15,615 --> 00:19:17,117 உன்னுடைய வாழக்கையை நீ தனிமையில் கழிப்பதற்கு நன்றி. 223 00:19:17,826 --> 00:19:20,829 -இது நன்றாக இல்லை. -பணிவாக இருப்பதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. 224 00:19:20,912 --> 00:19:24,040 என்னுடைய அப்பாவின் குதிரை அங்கே இருக்கிறது. பார்த்தாயா? 225 00:19:24,124 --> 00:19:26,710 அதன் மேல் இருக்கும் சேணத்தை அவர் எனக்கு கொடுக்கவிருந்தார். 226 00:19:27,210 --> 00:19:28,587 நான் அவருடைய குதிரையையும், சேணத்தையும், 227 00:19:28,670 --> 00:19:31,256 திரும்ப எடுத்துக் கொள்ளப் போகிறேன், அதனால், நான் சைலஸ் மெக்கால் திரும்பி வரும்வரை 228 00:19:31,339 --> 00:19:32,382 இங்கேயே காத்திருந்து, 229 00:19:32,465 --> 00:19:34,426 அவருக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவரைச் சுட்டு விடுவேன். 230 00:19:34,926 --> 00:19:36,094 இங்கிருந்து நீயே பார்க்கலாம்... 231 00:19:37,429 --> 00:19:39,389 அல்லது அந்தக் கிழவனை எழுப்பி அவரோடு போய்விடு. 232 00:19:39,973 --> 00:19:40,974 அவரை எழுப்பவா? 233 00:19:47,939 --> 00:19:52,068 சரி, டாக்டர். அவள் வரவில்லை. நாம் போகலாம். 234 00:19:57,282 --> 00:19:59,117 -என்ன நடக்கிறது? -தெரியவில்லை. 235 00:20:06,249 --> 00:20:07,417 அவர் இறந்துவிட்டார். 236 00:20:08,668 --> 00:20:10,003 நாம் என்ன செய்வது? 237 00:20:11,046 --> 00:20:14,049 ஒன்றுமில்லை. அந்தக் கிழவர் இயற்கையாக இறந்துவிட்டார். 238 00:20:14,132 --> 00:20:16,593 அவர் ஒரு உண்மையான கிறிஸ்துவர். அவரை நல்ல விதமாக அடக்கம் செய்ய வேண்டும். 239 00:20:17,093 --> 00:20:18,929 -அவரைத் தூக்க உதவு. -எனக்கு நேரமில்லை. 240 00:20:19,012 --> 00:20:20,472 அவரைத் தூக்க உதவு, இல்லாவிட்டால் நான் கத்துவேன்! 241 00:20:27,771 --> 00:20:30,440 இந்தப் பெண் அடுப்பில் இருக்கும் பாப்கார்னை விடக் குதிக்கிறாள். 242 00:20:31,650 --> 00:20:33,193 -போய் ஒளிந்துகொள். -இந்த உடலை என்ன செய்வது? 243 00:20:33,276 --> 00:20:35,487 ஆம், இப்பவும் அவளோடு உறவுகொள்கிறேன். 244 00:20:37,280 --> 00:20:38,323 யார் நீ? 245 00:20:43,578 --> 00:20:44,663 உனக்கு இங்கு என்ன வேலை? 246 00:20:50,669 --> 00:20:55,298 ஓ, நன்றி, கடவுளே, நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். கடவுளே, ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். 247 00:20:55,382 --> 00:20:58,218 தைரியசாலியான நீங்கள் வரும் வரையில், நாங்கள் ரொம்பவே பயந்து போய் இருந்தோம். 248 00:20:59,344 --> 00:21:00,595 உங்கள் இருவரையும் எனக்குத் தெரியுமா? 249 00:21:01,680 --> 00:21:05,350 இல்லை. என் பெயர் சேடி. இது என் சகோதரன், கிளேடன். 250 00:21:06,142 --> 00:21:09,813 நாங்கள் சர்ச்சில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில், பேம்! கொள்ளையர்கள் கடத்திவிட்டனர். 251 00:21:12,232 --> 00:21:13,316 இது உண்மையா தானா? 252 00:21:17,612 --> 00:21:18,613 ஆமாம். 253 00:21:19,698 --> 00:21:20,699 இது யாருடைய சடலம்? 254 00:21:21,700 --> 00:21:22,993 கொள்ளையர்களில் ஒருவன். 255 00:21:23,994 --> 00:21:25,203 வயதான மாதிரி இருக்கு. 256 00:21:27,330 --> 00:21:29,124 உங்களுடைய வருகை அவரைப் பயமுறுத்தியிருக்கலாம். 257 00:21:29,207 --> 00:21:31,084 உங்கள் குரலைக் கேட்டவுடனேயே இறந்துவிட்டார். 258 00:21:31,167 --> 00:21:33,753 மற்ற கொள்ளையர்கள் எல்லோரும் இங்கே இருக்கும் காட்டுக்குள் ஓடி விட்டார்கள். 259 00:21:43,555 --> 00:21:44,931 நீங்கள் உள்ளே வந்தால் நல்லது. 260 00:22:23,220 --> 00:22:26,723 மன்னிக்கவும். எவ்வளவு பசியாய் இருந்தேன் என்பதைக் கூட நான் உணரவில்லை. 261 00:22:28,892 --> 00:22:30,560 இவன் ஏன் அமைதியாக இருக்கிறான்? 262 00:22:30,644 --> 00:22:33,897 பையன்கள் எப்படி என உங்களுக்கே தெரியும். அவர்கள் உணர்சிகளைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். 263 00:22:33,980 --> 00:22:38,526 இவனிடம் எப்போதும், “உன் மனதில் என்ன இருக்கிறதோ, அது எவ்வளவு மோசமாக இருந்தாலும் 264 00:22:38,610 --> 00:22:41,947 அதை வெளியே விட்டு விடு. இல்லையென்றால் வெடித்து விடுவாய்” என சொல்வேன். 265 00:22:42,656 --> 00:22:46,493 சிலர் தங்களது உறுதியையும், தீர்மானத்தையும், மௌனத்தின் மூலமே தெரிவிக்கின்றனர். 266 00:22:47,077 --> 00:22:49,913 நான் அப்படி இல்லை. நன்றாக கத்துவேன். 267 00:22:54,626 --> 00:22:57,379 வெளியில் இருக்கிறதே அது உன் குதிரையா? அந்த பிரவுன் நிறக் குதிரை? 268 00:22:57,879 --> 00:23:00,340 ஆமாம். ஏன்? 269 00:23:01,258 --> 00:23:02,926 வயதானது மாதிரி இருக்கு. 270 00:23:03,009 --> 00:23:04,553 இது பாடாவதிக் குதிரை. 271 00:23:05,053 --> 00:23:09,266 இதை என் காதலிக்குக் கொடுத்தாலும் கொடுப்பேன். அவளுக்குக் குதிரைகள் பிடிக்கும். 272 00:23:15,188 --> 00:23:17,399 -மேரிக்கா? -விடு, மில்லி. நகரு. 273 00:23:18,942 --> 00:23:19,943 உனக்கு அவளைத் தெரியுமா? 274 00:23:21,111 --> 00:23:24,364 நாங்கள் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். அதனால் தான் இங்கே இருக்கிறோம். 275 00:23:25,115 --> 00:23:26,157 அவளா உன்னை அனுப்பினாள்? 276 00:23:26,908 --> 00:23:29,494 அவள் தான் அனுப்பினாள். உங்களுக்கு ஒரு தகவலைச் சொல்லச் சொன்னாள். 277 00:23:30,620 --> 00:23:33,123 நாங்கள் வெகு நாட்களாகத் தொடர்பில் இல்லை. 278 00:23:36,585 --> 00:23:38,962 எங்களுக்குத் தெரியும். அது அவளுக்கு வேதனையாக இருக்கிறது. 279 00:23:56,104 --> 00:23:58,189 பிரிந்ததற்காக அவள் என்னைக் குறை சொல்கிறாளா? 280 00:23:59,649 --> 00:24:00,984 ஆமாம். 281 00:24:01,610 --> 00:24:03,570 நீங்கள் சீர் குலைத்ததைக் கூட அவள் மன்னித்து விடுவாள், 282 00:24:03,653 --> 00:24:07,949 ஆனால் ஒரு பொறுப்பில்லாத அப்பாவாக நீங்கள் இருப்பதை அவள் மன்னிக்க மாட்டாளாம். 283 00:24:10,744 --> 00:24:13,455 இதனால் தான் அவள் டிட்லின் டோராவில் இன்னும் வேலை செய்வதாக நினைக்கிறாயா? 284 00:24:13,538 --> 00:24:16,249 இருக்கலாம். மேலும் அவள்... 285 00:24:17,751 --> 00:24:19,794 அவளுக்கு உங்களால் ஏமாற்றம் அடைந்துள்ளாள். 286 00:24:20,921 --> 00:24:22,881 மக்களைக் கொன்று கொண்டு இருப்பதால். 287 00:24:22,964 --> 00:24:26,301 ஒரு நல்ல அப்பாவாக இருப்பதை விட உங்களைப் பார்த்து பயப்படும் மக்களைப் பற்றித் தான் உங்களுக்கு அக்கறை. 288 00:24:27,886 --> 00:24:30,889 வந்து, அது வெறும்... அது ஆணாக இருப்பது. 289 00:24:33,183 --> 00:24:34,559 அது தான் ஆண்கள் செய்வது. 290 00:24:37,103 --> 00:24:39,981 எல்லா ஆண்களும் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு உறவு கொள்கிறார்கள்? 291 00:24:43,526 --> 00:24:44,736 உனக்கு எப்படி அது தெரியும்? 292 00:24:47,030 --> 00:24:50,075 என்னைக் குறை சொல்லாதீர்கள். நான் ஒரு தூதுவன் தான். 293 00:24:51,243 --> 00:24:53,954 மேரி... எனக்கு அவளை ஞாபகம் இருக்கு. 294 00:24:55,956 --> 00:24:57,916 பள்ளி முடிந்த பின்னர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 295 00:24:57,999 --> 00:25:01,127 -அவள் தானே அந்த நீதிபதியின் மகனோடு இருந்தவள்? -அப்படித்தான் நினைக்கிறேன். 296 00:25:01,628 --> 00:25:06,132 அவள் சந்தோஷத்தில் கத்துவாள். வகுப்பு முழுவதுக்கும் கேட்கும். 297 00:25:06,716 --> 00:25:10,345 அவள் கணிதம் நன்றாகப் போடுவாள். அவளுடைய வியாபாரத்தை அவளால் நன்றாக நடத்த முடியும். 298 00:25:10,428 --> 00:25:12,681 -நல்லது, அவள் நன்றாகச் செய்கிறாள். -நிறுத்து! 299 00:25:13,890 --> 00:25:16,810 தயவுசெய்து... நிறுத்து. 300 00:25:21,940 --> 00:25:23,233 நான் மன்னிப்பு கேட்டதாக மேரியிடம் சொல். 301 00:25:25,277 --> 00:25:27,028 நான் தகுதியே இல்லாதவன் தான். 302 00:25:29,364 --> 00:25:31,741 தயவுசெய்து, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன், அவளை வீட்டுக்கு வரச் சொல். 303 00:25:34,911 --> 00:25:35,912 கெஞ்சிக் கேட்கிறேன். 304 00:25:38,039 --> 00:25:39,416 இந்த வேதனை... 305 00:25:41,793 --> 00:25:42,919 கடவுளே. 306 00:25:43,003 --> 00:25:45,839 யாராவது என் மண்டையில் சுட்டு விட்டால் தேவலை. 307 00:25:51,845 --> 00:25:52,888 என்னை மன்னித்துவிடுங்கள். 308 00:25:53,805 --> 00:25:54,973 எங்களால் அப்படி செய்ய முடியாது. 309 00:25:55,056 --> 00:25:56,099 ஓ, தயவுசெய்து. 310 00:25:58,184 --> 00:25:59,227 தயவுசெய், நீ கட்டாயம் செய்ய வேண்டும். 311 00:26:03,565 --> 00:26:08,361 மேரிக்கு மன்னிப்பு கேட்பதில் எல்லாம் ஆர்வமில்லை. அவை அர்த்தமற்றவை. 312 00:26:10,530 --> 00:26:13,283 உங்களுடைய முடிவுறாத கஷ்டங்களே மன்னிப்புக்குச் சமம். 313 00:26:16,953 --> 00:26:20,790 ஆனால் அவளுடைய குதிரையை நாங்கள் வெளியே எடுத்துக் கொண்டு போக முடியும். அந்த பிரவுன் நிறக் குதிரை. 314 00:26:22,959 --> 00:26:27,005 அவள் சம்மதிப்பாளா என்று தெரியவில்லை, ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். 315 00:26:31,635 --> 00:26:34,346 அவர் தன்னுடைய சகோதரனின் மனைவியுடன் உறவு கொண்டது உனக்கு எப்படித் தெரியும்? 316 00:26:35,096 --> 00:26:36,514 என் அப்பா ஒரு போதகர். 317 00:26:36,598 --> 00:26:38,683 மனிதர்கள் தங்களுடைய எல்லா தகவல்களையும் அவரிடம் பகிர்ந்துகொள்வார்கள். 318 00:26:39,851 --> 00:26:41,478 உன்னுடைய உதவிக்கு நன்றி, மில்லி. 319 00:26:42,729 --> 00:26:44,314 -அவர் மண்டி போட விரும்பினாய் தானே? -ஆமாம். 320 00:26:44,397 --> 00:26:46,399 நான் நிச்சயமாகச் சொல்கிறேன், அவர் உன்னைக் கொன்றிருப்பார். 321 00:26:46,900 --> 00:26:48,568 நீ என் நெருங்கிய தோழி. 322 00:26:54,908 --> 00:26:56,076 நான் லாட்டியில் சவாரி செய்கிறேன். 323 00:26:58,370 --> 00:26:59,537 நீ என் அப்பாவின் குதிரையில் சவாரி செய்யலாம். 324 00:27:02,499 --> 00:27:05,168 என்னால் முடியாது.ஜேன், எனக்கு... ஓட்டத் தெரியாது. 325 00:27:05,252 --> 00:27:07,337 இது சுலபம். நான் செய்து காட்டுகிறேன். 326 00:27:14,719 --> 00:27:15,720 தயாரா? 327 00:27:27,816 --> 00:27:29,526 இந்தச் சேணம் இருப்பதால், சுலபமாக இருக்கு. 328 00:27:29,609 --> 00:27:30,610 நீ பேசுகிறாயே. 329 00:27:30,694 --> 00:27:32,445 என்னால் பேசிக்கொண்டே குதிரையில் சவாரி செய்ய முடியும். 330 00:27:32,529 --> 00:27:34,573 ஆமாம், குதிரையைப் பார்த்து பயந்த பெண் தானே இதைச் சொல்வது. 331 00:27:34,656 --> 00:27:37,367 -வா, போகலாம். -எனக்கு இன்னமும் பயமாகத் தான் இருக்கிறது. 332 00:27:37,909 --> 00:27:39,953 நாம் தீவிர மன வேதனை உண்டாக்க அதிகமான ஆண்களைக் கண்டுபிடிக்க வேண்டும். 333 00:27:40,036 --> 00:27:41,580 அப்படித்தான், மில்லி. தொடர்ந்து முயற்சி செய். 334 00:27:41,663 --> 00:27:45,208 முயற்சிக்கிறேன். நான் விழுந்து விட்டால்? நீ குதிரை மேலே இருந்து விழ முடியுமா? 335 00:27:51,464 --> 00:27:53,383 செசிலியா ஏஹெர்ன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 336 00:28:57,489 --> 00:28:59,491 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்