1 00:00:47,005 --> 00:00:49,049 அதையே பார்த்துக்கொண்டிருக்காதே. கடவுளே. 2 00:00:50,342 --> 00:00:52,970 -மன்னித்துவிடு. -பரவாயில்லை. 3 00:00:57,266 --> 00:00:59,893 டேனி, நீ இதைச் செய்ய வேண்டியதில்லை. அது உனக்குத் தெரியும்தானே? 4 00:01:03,856 --> 00:01:05,107 நாம் இதைச் செய்கிறோம். 5 00:01:11,905 --> 00:01:14,283 ராக்கஃபெல்லர் சென்டர், இது அப்டவுன் டி-ட்ரெயின், 6 00:01:14,283 --> 00:01:17,077 அடுத்த நிறுத்தம் ஏழாவது அவென்யூ. கதவுகள் மூடும்போது கவனமாக இருங்கள். 7 00:01:17,703 --> 00:01:19,913 அவன் இனி யாரையும் காயப்படுத்தப் போவதில்லை, சரியா? 8 00:01:24,668 --> 00:01:25,919 49 தெரு, 50 தெரு ராக்கஃபெல்லர் சென்டர் 9 00:01:49,568 --> 00:01:52,988 டேனி. வா. 10 00:01:52,988 --> 00:01:55,532 மியூசிக் ஹால் - ரேடியோ சிட்டி ஃபிரான்க் சினாட்ரா - மே 17-25 11 00:01:55,532 --> 00:01:59,661 மட்டி வாட்டர்ஸ் - ஜூன் 29 12 00:02:07,503 --> 00:02:08,503 ஓடிபி 13 00:02:11,507 --> 00:02:13,091 -அடச்சை. -என்ன? 14 00:02:14,259 --> 00:02:15,219 அவனைப் பார்த்துவிட்டேன். 15 00:02:15,219 --> 00:02:16,470 எங்கே? 16 00:02:16,470 --> 00:02:17,930 இப்போதுதான் வெளியே வந்தான். 17 00:02:18,764 --> 00:02:20,224 திரும்பாதே. 18 00:02:23,560 --> 00:02:26,939 அவன் போகும் வழி எனக்குத் தெரியும். வா. 19 00:02:39,243 --> 00:02:42,538 {\an8}ரெயின்போ ரூம் அப்சர்வேஷன் டெக் 20 00:02:42,538 --> 00:02:45,541 {\an8}NBC ஸ்டூடியோஸ் 21 00:03:19,950 --> 00:03:21,535 சரி, நாம் பிரிந்து செல்வோம், நான் சுற்றி வருகிறேன். 22 00:03:21,535 --> 00:03:24,329 நான் அவனை வழிமறிக்கிறேன், என்ன செய்ய வேண்டுமென உனக்குத் தெரியும். 23 00:03:25,455 --> 00:03:28,667 நன்றி, டேனி. நம்மால் இதைச் செய்ய முடியும். 24 00:03:57,905 --> 00:03:59,740 ஹேய்! நில்! 25 00:04:05,078 --> 00:04:09,082 டேனி. டேனி, சுடு. டேனி, சுடு! 26 00:04:09,583 --> 00:04:11,668 டேனி! டேனி, அவனைச் சுடு! 27 00:04:44,701 --> 00:04:46,036 ஹேய், உன்னைத்தான்! அசையாதே! 28 00:04:46,703 --> 00:04:47,788 நில்! 29 00:05:19,736 --> 00:05:20,737 அடச்சை. 30 00:05:28,453 --> 00:05:30,038 யிட்ஸாக், இருங்கள். 31 00:05:31,415 --> 00:05:32,708 அரியானா எங்கே? 32 00:05:34,418 --> 00:05:36,712 -ஒரு விஷயம் நடந்துவிட்டது. -நீ என்ன செய்தாய்? 33 00:05:36,712 --> 00:05:38,255 நான் வேண்டுமென்றே செய்யவில்லை. 34 00:05:38,255 --> 00:05:39,798 -நீ என்ன செய்தாய்? -நான் வேண்டுமென்றே செய்யவில்லை. 35 00:05:39,798 --> 00:05:42,134 அவள்தான் என்னைச் செய்ய வைத்தாள். மன்னித்துவிடுங்கள். 36 00:05:42,134 --> 00:05:43,218 மன்னித்துவிடுங்கள். நான்... 37 00:05:44,803 --> 00:05:49,516 கேள், பாஸ்போர்ட்டுகளை எடுத்துக்கொள். இதை வாங்கிக்கொள். உன் அப்பாவைப் போய்ப் பார். 38 00:05:50,017 --> 00:05:50,976 சரி. 39 00:06:37,981 --> 00:06:39,024 போலீஸ்! 40 00:06:39,024 --> 00:06:41,527 வீட்டில் யார் இருந்தாலும், கைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வரவும்! 41 00:06:47,366 --> 00:06:49,117 -வாசல் வழியே வருகிறான். -வெளியே வா! 42 00:06:50,118 --> 00:06:51,370 முன்னே வந்துகொண்டே இரு! 43 00:06:51,370 --> 00:06:54,581 இப்போதே வெளியே வா! வந்துகொண்டே இரு! 44 00:06:55,332 --> 00:06:58,293 கைகளைத் தூக்கு! இப்போதே மேலே தூக்கு! 45 00:06:58,293 --> 00:07:02,506 வா! மெதுவாக நட! வந்துகொண்டே இரு! 46 00:07:02,506 --> 00:07:04,383 முன்னே வா. மெதுவாக. 47 00:07:06,426 --> 00:07:08,303 நாங்கள் பார்க்கும்படி கைகளை மேலே தூக்கு! 48 00:07:08,303 --> 00:07:10,681 மேலேயே வைத்திரு! மெதுவாக வா! 49 00:07:10,681 --> 00:07:13,100 -வந்துகொண்டே இரு! -இப்போதே இங்கே வா! 50 00:07:13,100 --> 00:07:15,352 -வந்துகொண்டே இரு! -தரையில் படு! 51 00:07:15,352 --> 00:07:17,604 -தரையில் படு! -இப்போதே தரையில் படு! 52 00:07:17,604 --> 00:07:20,482 -தரையில் படு! -கைகளை வெளியே நீட்டி, படு! 53 00:07:30,117 --> 00:07:33,537 குண்டுகள் பறந்தன, முழுக்க கண்ணாடியாக இருந்தது, ஒருவருக்கு அடிபட்டுள்ளது. 54 00:07:33,537 --> 00:07:35,831 ஒரு பெண்ணுக்குக்கு காலில் குண்டு பட்டுள்ளது. 55 00:07:35,831 --> 00:07:38,417 அவன் கொலைக் குற்றத்தில் மாட்டாதது அவன் அதிர்ஷ்டம். 56 00:07:39,042 --> 00:07:42,379 அந்தப் பெண், அரியானா என்ன ஆனாள்? அது அழகான பெயர். 57 00:07:42,379 --> 00:07:43,547 அவள் எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை. 58 00:07:43,547 --> 00:07:46,717 இவன் அவளையும் அந்த வீட்டின் உரிமையாளரையும் கொன்றிருப்பான் என நினைக்கிறேன். 59 00:07:46,717 --> 00:07:50,053 தொடர் கொலைகாரர்கள் பற்றி ஒரே புத்தகத்தை உங்கள் பார்ட்னர் படித்தால் இதுதான் நடக்கும். 60 00:07:51,346 --> 00:07:52,347 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 61 00:07:52,347 --> 00:07:54,349 -இவன் தொடர் கொலைகாரனா? -இது அவ்வளவு சுலபமானது இல்லை. 62 00:07:54,349 --> 00:07:57,436 இதில் ஆதாரமற்ற நேர்மறைக் காரணிகள் பல உள்ளன. 63 00:07:57,436 --> 00:07:59,605 மேலும் குற்றத்தின் இயல்பானது அவனது... 64 00:07:59,605 --> 00:08:03,692 அல்லது “குற்றங்கள்”, சரியா? அந்தப் பெண் எங்கே? அந்த வீட்டு உரிமையாளர் எங்கே? 65 00:08:03,692 --> 00:08:06,028 நமக்கு ஆயுதம் கிடைக்கவில்லை. பிணங்களும் கிடைக்கவில்லை. 66 00:08:06,028 --> 00:08:08,947 இல்லை, அவனிடம் துப்பாக்கி உள்ளது எனத் தெரியும். வீட்டின் தரையில் ரத்தம் உள்ளது. 67 00:08:08,947 --> 00:08:11,366 சண்டை போட்டதற்கான அறிகுறிகள் உள்ளன, மேலும் கண்ணாடியில் குண்டு பட்ட துளை உள்ளது. 68 00:08:11,366 --> 00:08:13,785 -அது ஆதாரமற்றது. -ஆம், ஆனால் அவன் தொடர் கொலைகாரனாக இருந்தால்? 69 00:08:14,328 --> 00:08:15,495 நாம் ஒருவனைப் பிடித்திருந்தால்? 70 00:08:15,495 --> 00:08:19,124 அவன் ராக்கஃபெல்லர் சென்டரில் துப்பாக்கியால் சுட்டு என்ன செய்துகொண்டிருந்தான் என்று கூறினானா? 71 00:08:19,124 --> 00:08:22,753 ஆம். அவனும் அந்தப் பெண்ணும் யாரையோ பயமுறுத்த நினைத்ததாகக் கூறுகிறான். 72 00:08:22,753 --> 00:08:24,129 -யாரை? -அதைக் கூறவில்லை. 73 00:08:24,129 --> 00:08:25,839 அது அந்த நோக்கத்தை நிறைவேற்றாது என்கிறான். 74 00:08:28,842 --> 00:08:32,054 என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் வேலையே இதுதானே, ப்ரொஃபஸர். 75 00:08:34,014 --> 00:08:35,265 -நான் விசாரித்துப் பார்க்கிறேன். -அப்படியா? 76 00:08:36,058 --> 00:08:37,558 ஆம். 77 00:08:53,575 --> 00:08:54,743 தயாரா? 78 00:08:57,246 --> 00:08:58,455 ஆம். 79 00:08:59,331 --> 00:09:00,374 சரி. 80 00:10:28,253 --> 00:10:30,130 {\an8}டேனியல் கீஸ் எழுதிய தி மைண்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 81 00:10:30,130 --> 00:10:31,173 {\an8}என்னும் புத்தகத்தால் உந்தப்பட்டது 82 00:11:09,545 --> 00:11:10,879 ஒரு மணிநேரம் போதும். 83 00:11:10,879 --> 00:11:12,256 புரிந்தது. 84 00:11:15,092 --> 00:11:16,301 உட்காருகிறாயா? 85 00:11:31,358 --> 00:11:32,734 டேனி. 86 00:11:35,821 --> 00:11:36,947 இவர்கள் உன்னை எப்படி நடத்துகின்றனர்? 87 00:11:36,947 --> 00:11:38,615 மற்ற அனைவரையும் போலத்தான் என நினைக்கிறேன். 88 00:11:39,700 --> 00:11:43,078 நான் பேசுவதற்காகத்தான் இங்கே வந்துள்ளேன். 89 00:11:43,745 --> 00:11:45,831 அரியானாவுடன் என்ன நடந்தது என்பதைப் பற்றி. எனக்குத் தெரியும். 90 00:11:45,831 --> 00:11:48,166 அவள் எங்கே இருக்கிறாள் எனத் தெரியுமா, டேனி? 91 00:11:49,918 --> 00:11:51,044 இல்லை. 92 00:11:51,587 --> 00:11:52,588 நான் போலீஸிடம் கூறியது போல, 93 00:11:52,588 --> 00:11:54,506 தெருவில் நடந்ததற்குப் பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. 94 00:11:54,506 --> 00:11:57,634 போலீஸாலும் அவளைக் கண்டறிய முடியவில்லை. 95 00:11:58,719 --> 00:12:01,346 யிட்ஸாக்குக்கு என்ன ஆனது, உன் வீட்டு உரிமையாளர்? 96 00:12:02,598 --> 00:12:03,599 எனக்குத் தெரியாது. 97 00:12:04,975 --> 00:12:07,436 அவர்கள் இப்போது எங்கே உள்ளனர் என்று என்னிடம் கூற முடியாது எனில், 98 00:12:08,353 --> 00:12:11,732 அவர்களுடன் அந்த வீட்டில் எப்படி வாழ வேண்டி வந்தது என்று கூற முடியுமா? 99 00:12:11,732 --> 00:12:14,276 அது அறைகள் வாடகைக்கு விடும் வீடு. நான் அங்கே ஓர் அறையில் தங்கியிருந்தேன். 100 00:12:16,153 --> 00:12:17,863 டேனி, நான் உனக்கு உதவ முயல்கிறேன். 101 00:12:24,745 --> 00:12:25,787 சரி. 102 00:12:30,501 --> 00:12:34,505 நீ முதலில் அரியானாவையும் யிட்ஸாக்கையும் எப்போது சந்தித்தாய்? 103 00:12:35,297 --> 00:12:37,257 ஜூனியர் ஆண்டு, ஹை ஸ்கூல். 104 00:12:39,885 --> 00:12:42,596 முடிந்தளவு துல்லியமாகக் கூற முடியுமா? 105 00:12:43,180 --> 00:12:48,519 1977 வசந்தகாலம். சூரியன் பிரகாசித்துக்கொண்டிருந்தது. 106 00:12:54,191 --> 00:12:56,360 நான் பள்ளியில் மிகவும் பிரபலமான சிறுவன் இல்லை. 107 00:12:57,236 --> 00:13:00,531 அந்த சோகமும் மனநிலையில் வீட்டிலும் எனக்குப் பிரச்சினையாக இருந்தது. 108 00:13:08,789 --> 00:13:09,915 டேன்! 109 00:13:09,915 --> 00:13:11,458 நீ ஏதாவது செய்கிறாயா? 110 00:13:13,836 --> 00:13:15,379 நான் சொல்கிறேன், அவன் கெட்டுப் போய்விட்டான். 111 00:13:26,014 --> 00:13:27,099 டேன்! 112 00:13:35,858 --> 00:13:38,443 நீ ஏதாவது செய்கிறாயா, ப்ளீஸ்? நான் குளிக்க வேண்டும். 113 00:13:40,279 --> 00:13:44,491 நான் ப்ளீஸ் என்றேன்? இவன் விஷயத்தில் ஏதாவது செய்கிறாயா? 114 00:13:46,410 --> 00:13:48,871 -நான் உன்னிடம் பேசுவது கேட்கிறதுதானே? -ஆம், கேட்டது. 115 00:13:48,871 --> 00:13:50,581 அவனைத் தனியாக விடுகிறீர்களா? 116 00:13:54,209 --> 00:13:58,422 அவன் சொகுசாக வாழ்கிறான். இதென்ன ஹோட்டலா? 117 00:14:01,425 --> 00:14:03,135 “அவனைத் தனியாக விடுகிறீர்களா?” 118 00:14:03,135 --> 00:14:04,970 சீக்கிரம். நமக்கு நேரமாகிவிடும். 119 00:14:04,970 --> 00:14:06,513 உன்னை பள்ளியில் இறக்கிவிடவா? 120 00:14:06,513 --> 00:14:07,848 சரி. 121 00:14:08,765 --> 00:14:10,726 நீ எடுத்துச் செல்ல பிஎல்டி சாண்ட்விச் செய்கிறேன். 122 00:14:10,726 --> 00:14:15,939 கடவுளே. இது ஹோட்டல் மற்றும் உணவகம். என்னால் முடியாது. 123 00:14:18,775 --> 00:14:20,068 டேனி, தயாராகு. 124 00:14:22,112 --> 00:14:23,155 நாம் ஐந்து நிமிடங்களில் புறப்படுகிறோம். 125 00:14:37,377 --> 00:14:41,298 “நான் எட்டு மணி வரை தூங்க விரும்புகிறேன்” என நினைத்தேன். 126 00:14:44,635 --> 00:14:46,637 அவன் கெட்டுப் போய்விட்டான், தெரிகிறதா? 127 00:15:07,908 --> 00:15:09,284 -நான் போக வேண்டும். -நான் போக வேண்டும். 128 00:15:11,245 --> 00:15:14,373 நானும் நீயும் இப்போதெல்லாம் ஏன் ஒன்றாக நேரம் செலவழிப்பதில்லை? 129 00:15:14,373 --> 00:15:15,457 ஹேய். 130 00:15:16,625 --> 00:15:18,377 உன்னிடம் பேசும்போது என்னைப் பார். சரியா? 131 00:15:24,132 --> 00:15:25,551 என்ன, என்னைப் பிடிக்கவில்லையா? 132 00:15:25,551 --> 00:15:27,261 டேனி, போகலாம். நான் தாமதமாகப் போக முடியாது. 133 00:15:27,261 --> 00:15:29,596 -சீக்கிரம் கிளம்பு. -நான் போக வேண்டும். 134 00:15:30,681 --> 00:15:32,808 இந்த வீட்டில் என்னை அவமதிக்காதே, மிஸ்டர். 135 00:15:32,808 --> 00:15:35,394 -சொல்வது புரிகிறதா? நீ... -மார்லின், இங்கே என்ன நடக்கிறது? 136 00:15:36,645 --> 00:15:38,605 அவன் மீதிருந்து கையை எடுங்கள். 137 00:15:38,605 --> 00:15:42,568 அப்படியா? கையை எடுக்க வைக்கிறாயா? என்ன... 138 00:15:43,235 --> 00:15:44,444 டேனி, போ. 139 00:15:44,444 --> 00:15:45,571 கடவுளே. 140 00:15:47,489 --> 00:15:49,616 ஆம், டேனி. போ. 141 00:15:58,166 --> 00:15:59,209 நீங்கள் பரிதாபகரமானவர். 142 00:15:59,751 --> 00:16:01,962 ஆம், உனக்கு நான் மட்டும்தான் இருக்கிறேன், கேண்டி. 143 00:16:01,962 --> 00:16:05,132 அப்படி என்றால் நீ யார்? 144 00:16:07,134 --> 00:16:08,343 இந்த நாள் இனிதாக இருக்கட்டும். 145 00:16:08,343 --> 00:16:09,428 மதிய உணவு. 146 00:16:20,439 --> 00:16:22,357 சரி, போகலாம். வா. 147 00:16:25,611 --> 00:16:28,572 நண்பா, நீ இதில் ஸ்டிக்கர் ஏதாவது வாங்கி ஒட்ட வேண்டும். 148 00:16:28,572 --> 00:16:30,949 உள்ளே காலியாக உள்ளது. மிகவும் சோகமாக உள்ளது. 149 00:16:30,949 --> 00:16:32,326 என்ன விஷயம், ஜானி? 150 00:16:33,368 --> 00:16:36,163 மீண்டும் உன் முகம் அப்படி உள்ளது. காலை மோசமாக இருந்ததா? 151 00:16:36,830 --> 00:16:38,707 உன் மோசமான வளர்ப்பு அப்பாவா? 152 00:16:39,541 --> 00:16:41,043 கடவுளே, அவரை நான் வெறுக்கிறேன். 153 00:16:41,043 --> 00:16:43,212 ஒரு வித்தை செய்யவா? 154 00:16:43,712 --> 00:16:46,882 -சரி. -சரி, ஏதாவதொரு கார்டைத் தேர்வுசெய். 155 00:16:47,716 --> 00:16:49,426 -அந்தக் கார்டு. ஆம். -இதுவா? சரி. 156 00:16:49,426 --> 00:16:50,719 மைக் எங்கே? 157 00:16:50,719 --> 00:16:52,846 ஃபிலியில் அந்தப் பல்கலைக்கழக விஷயம் உள்ளதல்லவா? 158 00:16:52,846 --> 00:16:54,640 -அது இன்றுடன் முடிந்தது என நினைத்தேன். -இல்லை. 159 00:16:54,640 --> 00:16:57,809 இருந்தாலும் அவன் இன்றிரவு வருகிறான். அவன் ஜோயி லதெமின் பார்ட்டிக்கு வருகிறான். 160 00:16:57,809 --> 00:16:59,269 நாம் போகிறோம் தானே? 161 00:17:00,062 --> 00:17:02,272 -அப்படித்தான் நினைக்கிறேன். நான்... -ஹேய், ஜந்து. 162 00:17:03,815 --> 00:17:05,108 பொறம்போக்கு. 163 00:17:06,777 --> 00:17:08,904 -நம்மை அந்தப் பார்ட்டிக்கு அழைத்துள்ளனரா? -அவள் அறிவிப்புகளை வைத்திருக்கிறாள். 164 00:17:08,904 --> 00:17:11,114 ஒட்டுமொத்த வகுப்பையும் அழைத்திருக்கிறாள். நான் ஏழு மணிக்கு உன்னை அழைக்க வருகிறேன். 165 00:17:11,114 --> 00:17:13,282 இல்லை. என் வீட்டுக்கு வராதே. நான் கோர்ட்யார்டில் உன்னைச் சந்திக்கிறேன். 166 00:17:13,867 --> 00:17:15,702 சரி. வராமல் இருந்துவிடாதே. 167 00:17:15,702 --> 00:17:18,247 -வந்துவிடுவேன். -மேலும் உன் பாக்கெட்டைப் பார். 168 00:17:21,290 --> 00:17:22,751 அதுதான் உன் கார்டா? 169 00:17:24,086 --> 00:17:25,838 இல்லை. பிறகு சந்திக்கலாம், நண்பா. 170 00:17:25,838 --> 00:17:26,922 பார்க்கலாம். 171 00:17:36,640 --> 00:17:38,433 -நன்றாக உள்ளது. -நன்றி. 172 00:17:39,268 --> 00:17:40,811 இது ஆடமா? 173 00:17:44,940 --> 00:17:46,567 நீ அவனை மிகவும் மிஸ் செய்கிறாயா? 174 00:17:49,278 --> 00:17:51,363 ஆம், எப்போதாவது. எப்போதும் இல்லை. 175 00:17:52,781 --> 00:17:55,826 ஏனெனில் அது எப்போது தோன்றும் என்று சொல்ல முடியாது, புரிகிறதா? 176 00:17:56,451 --> 00:17:57,286 ஆம். 177 00:17:57,286 --> 00:17:59,413 அது திடீரென நான் மூழ்குவது போல் இருக்கும், புரிகிறதா? 178 00:18:00,497 --> 00:18:02,958 அது எனக்கும் என் அப்பாவுக்கும் இருப்பது போன்றது என நினைக்கிறேன். 179 00:18:02,958 --> 00:18:06,003 நான் அதை அப்படி நினைத்தது இல்லை என்றாலும். 180 00:18:09,381 --> 00:18:10,966 வா. போகலாம். 181 00:18:11,550 --> 00:18:15,929 இருந்தாலும் அவனைப் பற்றி நினைக்கும்போது சோகமாகிறேன். அவனை மிஸ் செய்கிறேன். 182 00:18:18,724 --> 00:18:20,934 ஆடமும் நானும் எப்படி இருந்தோம் என உங்களுக்குத் தெரியாது. 183 00:18:20,934 --> 00:18:26,231 நாங்கள் பார்க்க மட்டும் ஒரே மாதிரி இருக்கவில்லை. நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தோம். 184 00:18:27,316 --> 00:18:28,859 அவனைப் பற்றிக் கூற முடியுமா? 185 00:18:36,033 --> 00:18:38,410 ஆடமுக்கு என்ன நடந்தது என்று பேச விரும்புகிறாயா? 186 00:18:40,954 --> 00:18:42,039 இல்லை. 187 00:18:43,290 --> 00:18:46,793 சூழ்நிலை எதுவாக இருந்தாலும், நான் மிகவும் வருந்துகிறேன். 188 00:18:46,793 --> 00:18:48,128 இழப்பு என்பது மிகவும் மோசமானது. 189 00:18:49,880 --> 00:18:51,089 அதுதான் உங்கள் ப்ரொஃபஷனல் கருத்தா? 190 00:18:52,090 --> 00:18:53,258 அப்படித்தான். 191 00:18:58,639 --> 00:19:00,390 -இல்லை. -நண்பா, இசை கேட்கிறது. 192 00:19:00,390 --> 00:19:02,476 நாம் வீட்டுக்குப் போக வேண்டும், ஜானி. எனக்கு... 193 00:19:02,476 --> 00:19:04,728 -எனக்கு... எனக்கு... -நாம் பின்னால் சென்று பார்ப்போம். 194 00:19:04,728 --> 00:19:05,771 அடச்சை. 195 00:19:07,856 --> 00:19:09,066 இது பெரிய வீடு. 196 00:19:09,566 --> 00:19:14,029 -நாம் உறுதியாக அழைக்கப்பட்டோமா? -ஆம். பிரச்சினை இல்லை. 197 00:19:19,326 --> 00:19:20,494 மைக் தெரிகிறானா? 198 00:19:21,578 --> 00:19:23,038 இல்லை, ஆனால் அவன் இங்கே இருப்பான் என்று கூறினான். 199 00:19:26,583 --> 00:19:31,380 ஹேய். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. 200 00:19:31,380 --> 00:19:33,382 -டேனி சல்லிவன். -ஹேய், மைக். 201 00:19:33,882 --> 00:19:35,843 -நீ இங்கே வந்ததில் மகிழ்ச்சி, நண்பா. -உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி, நண்பா. 202 00:19:35,843 --> 00:19:38,262 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. இவனை எப்படி இங்கே கூட்டி வந்தாய்? 203 00:19:38,262 --> 00:19:43,225 பயங்கரமானவன் தான். வாருங்கள். நிறைய சரக்கு உள்ளது, நண்பா. 204 00:19:43,225 --> 00:19:45,018 ஹேய், பேஸ்கெட்பால் எப்படி இருந்தது? 205 00:19:45,769 --> 00:19:48,146 நான் நன்றாக இருக்கிறேன், அதனால் அது நன்றாக இருந்தது. 206 00:19:48,146 --> 00:19:49,606 -உனக்கு பீர் வேண்டுமா? -தன்னடக்கம்தான். 207 00:19:49,606 --> 00:19:51,984 -இல்லை, வேண்டாம். -அது உன்னை ரிலாக்ஸாக்கும். 208 00:19:51,984 --> 00:19:53,443 -ஜானி தம்பி? -நிச்சயமாக. 209 00:19:53,443 --> 00:19:55,153 நீ எப்படி ஆடினாய்? அது எப்படி இருந்தது? 210 00:19:55,153 --> 00:19:56,864 -நாங்கள் செயிண்ட் ஆன்ஸில் ஆடினோம், சரியா? -சரி. 211 00:19:56,864 --> 00:20:00,534 நான் 18 பாயிண்ட்கள் எடுத்தேன். இரண்டு டபுள்கள் எடுக்க நெருங்கினேன். 212 00:20:00,534 --> 00:20:02,369 இதை நீ பார்த்திருக்க வேண்டும், டேனி... 213 00:20:04,246 --> 00:20:05,664 அடடா. 214 00:20:05,664 --> 00:20:07,165 யார் அது? 215 00:20:07,165 --> 00:20:11,753 நண்பா, அது ஆனபெல் ஸ்டோன், மிகவும் ஹாட்டான பெண். 216 00:20:11,753 --> 00:20:14,423 அவள் டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கிறாள். உற்றுப் பார்க்காதே, நண்பா. 217 00:20:14,423 --> 00:20:16,425 -நான் உற்றுப் பார்க்கவில்லை. -நீ அவளிடம் பேச விரும்புகிறாயா? 218 00:20:16,425 --> 00:20:17,968 -நான் அவளிடம் பேச விரும்பவில்லை. -நீ பேச வேண்டும். 219 00:20:17,968 --> 00:20:19,386 நான் அவளிடம் பேசப் போவதில்லை. 220 00:20:19,386 --> 00:20:21,763 -அங்கே பாட்டில் வைத்துள்ளனர். -ஆம், வா போய் பாட்டிலை எடுப்போம். 221 00:20:21,763 --> 00:20:24,183 நான் அழகான பெண்ணிடம் பேசுவதைவிட அதைச் செய்ய விரும்புகிறேன். 222 00:21:31,458 --> 00:21:33,794 ஹாய், நான் ஆனபெல். 223 00:21:35,712 --> 00:21:36,880 டேனி. ஹாய். 224 00:21:36,880 --> 00:21:38,173 எப்படி இருக்கிறாய், டேனி? 225 00:21:38,799 --> 00:21:40,759 நான் நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? 226 00:21:41,301 --> 00:21:43,512 நன்றாக இருக்கிறேன். உனக்கு எதுவும் பிரச்சினையா? 227 00:21:45,931 --> 00:21:49,017 இல்லை. ஏன்? 228 00:21:49,017 --> 00:21:51,895 ஏனெனில் இங்கே நீ மட்டும் தனியாக இருக்கிறாயே. 229 00:21:54,356 --> 00:21:55,774 எனக்கு தனிமைதான் பிடிக்கும். 230 00:21:57,234 --> 00:21:58,235 நீ புகைப்பிடிப்பாயா? 231 00:21:59,820 --> 00:22:02,030 எப்போதாவது. சில முறை. 232 00:22:09,162 --> 00:22:11,039 நீ போதையாக விரும்புகிறாயா? 233 00:22:15,377 --> 00:22:16,670 ஆம், கண்டிப்பாக. 234 00:22:17,546 --> 00:22:18,839 நல்லது. 235 00:22:24,928 --> 00:22:26,722 உன்னிடம் ஜாயின்ட் எதுவும் உள்ளதா? 236 00:22:28,724 --> 00:22:31,059 ஓ, இல்லை. உன்னிடம் உள்ளது என நினைத்தேன். 237 00:22:31,059 --> 00:22:33,061 என்னை மன்னித்துவிடு. அது... முட்டாள்தனம். நான்... 238 00:22:33,061 --> 00:22:34,813 -பரவாயில்லை. -ஆனபெல்! 239 00:22:36,773 --> 00:22:37,900 -சரி. -வா. 240 00:22:40,527 --> 00:22:42,821 வா. போகலாம். 241 00:22:42,821 --> 00:22:44,239 பிறகு செய்யலாமா? 242 00:22:45,240 --> 00:22:46,992 அடக் கடவுளே. 243 00:23:49,555 --> 00:23:50,556 சரியான நேரம். 244 00:23:53,559 --> 00:23:54,560 உட்காரு. 245 00:24:00,065 --> 00:24:01,108 வா, என்னுடன் உட்காரு. 246 00:24:10,909 --> 00:24:12,870 அந்தப் பேய் வீட்டுக்கு யாராவது குடியேறியுள்ளனரா? 247 00:24:14,079 --> 00:24:15,497 ஒரு பேய். 248 00:24:18,000 --> 00:24:19,751 யாரைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? 249 00:24:22,880 --> 00:24:23,964 வா, என்னுடன் உட்காரு. 250 00:24:29,845 --> 00:24:31,847 எனக்கு வீட்டுப்பாடம் உள்ளது. 251 00:24:33,432 --> 00:24:34,474 எனில் உள்ளே போ. 252 00:24:36,602 --> 00:24:37,769 போ. 253 00:24:40,397 --> 00:24:42,357 அதுதான் யிட்ஸாக்கை முதன்முறையாகப் பார்த்ததா? 254 00:24:44,193 --> 00:24:45,194 ஆம். 255 00:24:46,111 --> 00:24:47,613 அரியானாவை? 256 00:24:49,573 --> 00:24:52,117 அவளைப் பார்க்கவில்லை. அந்த இரவில் பார்க்கவில்லை. 257 00:24:52,117 --> 00:24:54,578 -ஆனால் அவள் அவருடன் இருந்தாளா? -தெரியாது. 258 00:24:55,287 --> 00:24:57,664 அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. நினைவில்லை. 259 00:24:57,664 --> 00:25:00,250 இப்போது அரியானா அவருடன் தான் இருக்கிறாளா? 260 00:25:00,250 --> 00:25:02,628 நான் தொடர்ந்து சொல்கிறேனே. அவள் எங்கே இருக்கிறாள் எனத் தெரியாது. 261 00:25:06,131 --> 00:25:09,009 யிட்ஸாக். அந்தப் பெயரே வித்தியாசமாக உள்ளது. 262 00:25:09,593 --> 00:25:11,803 அவர் அங்கே இருப்பது உனக்கு விசித்திரமாகத் தெரிந்ததா? 263 00:25:12,304 --> 00:25:13,347 என்ன சொல்கிறீர்கள்? 264 00:25:13,347 --> 00:25:16,642 உங்கள் பகுதியில் அவர் விசித்திரமானவராகத் தெரிந்தாரா? 265 00:25:21,772 --> 00:25:23,232 டேனி? 266 00:25:23,232 --> 00:25:26,902 யிட்ஸாக் எந்தப் பகுதியில் இருந்தாலும் விசித்திரமாகத்தான் தெரிவார் என நினைக்கிறேன். 267 00:25:30,364 --> 00:25:33,575 அவரை மீண்டும் எப்போது பார்த்தாய்? எந்தச் சூழ்நிலையில் பார்த்தாய்? 268 00:25:35,160 --> 00:25:38,497 வீட்டில் என் வளர்ப்புத் தந்தைக்கும் எனக்கும் பிரச்சினை அதிகமாகத் தொடங்கியது. 269 00:25:40,290 --> 00:25:43,126 நான் வீட்டிற்கு வெளியே அதிகமாக நேரம் செலவிடத் தொடங்கினேன். 270 00:25:58,892 --> 00:25:59,810 ஓ, அடச்சை. 271 00:26:02,646 --> 00:26:04,481 உன் சைக்கிளை நொறுக்கிவிட்டாய் என நம்ப முடியவில்லை. 272 00:26:04,481 --> 00:26:06,567 அமைதி. நான் சாகா வரம் பெற்றவன். 273 00:26:06,567 --> 00:26:08,569 ஆம், அதை அந்தப் பாதையில் ஏற்பட்ட பள்ளத்திடம் சொல். 274 00:26:09,403 --> 00:26:12,406 மென்மையானது, நண்பா. சோகமானது இல்லை. 275 00:26:12,990 --> 00:26:13,866 வேடிக்கைதான். 276 00:26:14,408 --> 00:26:15,450 அதைப் பார். 277 00:26:16,076 --> 00:26:19,037 பேய் வீட்டில் பேய் வந்துவிட்டது. அவர் என்ன செய்கிறார்? 278 00:26:20,581 --> 00:26:21,415 தோட்ட வேலையா? 279 00:26:21,415 --> 00:26:23,041 ஓ, அடச்சை. ஹேய். 280 00:26:23,041 --> 00:26:25,002 எப்படி இருக்கிறீர்கள், தோத்தாங்கோலிகளே? என்ன விஷயம்? 281 00:26:25,919 --> 00:26:28,881 -ஓ, அடச்சை. பேய் வீட்டில் பேய் வந்துவிட்டது. -ஆம். 282 00:26:29,381 --> 00:26:30,465 அதைத்தான் நான் கூறினேன். 283 00:26:30,465 --> 00:26:33,010 அது மிகப் பெரிய பேய். யார் அவர்? 284 00:26:33,010 --> 00:26:34,303 எங்களுக்கு எப்படித் தெரியும்? 285 00:26:34,303 --> 00:26:36,305 இங்கேயே நின்றால் எதுவும் தெரியாது. 286 00:26:36,305 --> 00:26:39,057 மைக். 287 00:26:49,276 --> 00:26:53,572 ஹேய். ஹேய், எப்படி இருக்கிறீர்கள்? 288 00:26:53,572 --> 00:26:56,074 நான் மைக். இது ஜானி. மேலும் டேனி உங்கள் அண்டைவீட்டுக்காரன். 289 00:26:56,074 --> 00:26:57,492 இவன் தெருவுக்கு அந்தப் பக்கம் வசிக்கிறான். 290 00:26:57,492 --> 00:26:58,577 ஹாய். 291 00:27:00,412 --> 00:27:02,456 ஹலோ. நான் யிட்ஸாக். 292 00:27:05,042 --> 00:27:06,585 நீங்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை. 293 00:27:08,420 --> 00:27:09,713 எப்படித் தெரிந்தது? 294 00:27:13,342 --> 00:27:14,551 நான் இஸ்ரேலைச் சேர்ந்தவன். 295 00:27:15,594 --> 00:27:16,637 அருமை. 296 00:27:19,515 --> 00:27:20,891 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, தம்பிகளே. 297 00:27:21,475 --> 00:27:23,435 அவர் என்ன கூறினார்? நினைவுள்ளதா? 298 00:27:23,435 --> 00:27:26,855 முடிந்தளவு துல்லியமாகக் கூறினால், மிகவும் உதவிகரமாக இருக்கும். 299 00:27:28,815 --> 00:27:31,193 அவர் போர்டிங்ஹவுஸை மீண்டும் திறப்பதாகக் கூறினார், 300 00:27:31,860 --> 00:27:33,779 அந்தப் பகுதியில் ஏதோ வேலை இருப்பதாகக் கூறியிருக்கலாம். 301 00:27:33,779 --> 00:27:36,240 வேலையா? எந்த மாதிரியான வேலை? அவர் கூறினாரா? 302 00:27:37,074 --> 00:27:37,991 அரியானா? 303 00:27:38,867 --> 00:27:40,953 அவள் வீட்டில் இருந்தாள் என நினைக்கிறேன், அவளை அப்போதும் சந்திக்கவில்லை. 304 00:27:42,913 --> 00:27:45,916 அந்த ஆண்டில் எல்ம் ரிட்ஜில் சில தாக்குதல்கள் நடந்தன. 305 00:27:51,922 --> 00:27:55,592 புள்ளிவிவரப்படி அந்தப் பகுதிக்கு அசாதாரணமானது. இன்னும் தீர்க்கப்படவில்லை. 306 00:27:59,680 --> 00:28:02,474 என்ன சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள், அவள் பிறரைத் தாக்கினாள் என்றா? 307 00:28:04,685 --> 00:28:05,686 எனில் என்ன நடந்தது? 308 00:28:07,771 --> 00:28:08,814 ஜானிக்கு ஒரு யோசனை வந்தது. 309 00:28:09,815 --> 00:28:12,025 ஆனபெல்லுடன் என்னை வெளியே போக வைப்பதற்கான திட்டம் அது. 310 00:28:12,526 --> 00:28:13,527 சாவியுடனான கைவிலங்கு 311 00:28:14,653 --> 00:28:17,197 உன் கேர்ள்ஃபிரண்ட் ஆனபெல் ரெனால்டோவில் பீட்ஸா வாங்குவதைப் பார்த்தேன். 312 00:28:18,532 --> 00:28:19,825 அவள் என்னைப் பற்றிக் கேட்டாளா? 313 00:28:19,825 --> 00:28:22,911 நீ இருப்பது தெரிந்தால், அவள் ஒரு கேர்ள்ஃபிரண்டாக இன்னும் பயனுள்ளவளாக இருப்பாள். 314 00:28:23,954 --> 00:28:25,539 விவரங்கள் முக்கியம். 315 00:28:25,539 --> 00:28:28,000 இல்லை, உண்மைதான், நண்பா. நீ அவளை வெளியே கூப்பிட வேண்டும். 316 00:28:28,500 --> 00:28:30,043 அவள் என்னுடன் வெளியே வர விரும்ப மாட்டாள். 317 00:28:30,043 --> 00:28:31,920 -ஏன் மாட்டாள்? -”ஏன்” என்பதில் இருந்து தொடங்குவோமா? 318 00:28:32,838 --> 00:28:34,965 -வரலாம். -உனக்கு அதிக தன்னம்பிக்கை வேண்டும், நண்பா. 319 00:28:35,966 --> 00:28:38,760 அதாவது, அவள்தானே உன்னிடம் ஒன்றாக போதையாகலாம் என்று கேட்டாள்? 320 00:28:39,344 --> 00:28:41,013 -அவளை நீ திருப்பிக் கூப்பிடு. -ஒன்று சொல்லவா, மைக்? 321 00:28:41,013 --> 00:28:42,806 -அது நல்ல யோசனை. -நன்றி. 322 00:28:42,806 --> 00:28:44,892 என்னிடம் கஞ்சா இல்லை என்பதுதான் ஒரே பிரச்சினை. 323 00:28:44,892 --> 00:28:46,018 விவரங்கள் முக்கியம். 324 00:28:46,018 --> 00:28:47,352 நாம் அதைச் சரிசெய்ய வேண்டும். 325 00:28:48,770 --> 00:28:51,148 -என்ன சொல்கிறாய்? -யோசித்துப் பார். பெண்களுக்கு கஞ்சா பிடிக்கும். 326 00:28:51,148 --> 00:28:52,983 நமக்கு பெண்கள் பிடிக்கும். இருவருக்கும் பொதுவானது... 327 00:28:52,983 --> 00:28:54,067 கஞ்சாவுக்கு பெண்கள் பிடிக்குமா? 328 00:28:54,776 --> 00:28:56,111 ஹேய், போன வாரத்திற்கு நான் உனக்கு பணம் கொடுக்க வேண்டும். 329 00:28:57,654 --> 00:28:59,948 எலன்வில்லின் பழைய பூங்காவில் ஒருவன் கஞ்சா விற்கிறான். 330 00:29:01,033 --> 00:29:03,202 இரு, நாம் கஞ்சா வாங்க வேண்டும் என்கிறாயா? 331 00:29:03,202 --> 00:29:06,121 இல்லை, நாம் நிறைய கஞ்சா வாங்க வேண்டும் என்கிறேன். 332 00:29:07,915 --> 00:29:09,541 சரி. எவ்வளவு வாங்குகிறோம்? 333 00:29:10,042 --> 00:29:13,086 ஒரு அவுன்ஸ், அது 100 டாலர். அதை விற்றால், நமக்கு 150 கிடைக்கும். 334 00:29:13,086 --> 00:29:16,423 என் சைக்கிள் சரியாகிவிடும், உனக்கு புதிய கண்ணாடி வாங்கலாம், 335 00:29:16,423 --> 00:29:19,051 டேனிக்கும் அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்ளப் போதுமான கஞ்சா கிடைக்கும். 336 00:29:20,677 --> 00:29:22,846 -அது மோசமான திட்டம் இல்லை. -இல்லை, இது சிறப்பான திட்டம். 337 00:29:22,846 --> 00:29:25,557 ஆனால், நமக்கு 100 டாலர் எங்கிருந்து கிடைக்கும்? 338 00:29:25,557 --> 00:29:27,809 அந்தப் புதிய பண மிஷின்களில். 339 00:29:27,809 --> 00:29:29,853 உன் மோசமான வளர்ப்புத் தந்தை அவற்றைப் பயன்படுத்துவதாகக் கூறினாய் அல்லவா? 340 00:29:30,646 --> 00:29:34,191 அவரது உள்ளாடை டிராயரில் அந்தக் கோடை வைத்திருப்பதாகவும் கூறினாய். 341 00:29:34,191 --> 00:29:36,109 அவர் மிகவும் பயங்கரமானவர், முட்டாள். 342 00:29:36,109 --> 00:29:39,780 நீ அவரது கோடையும் கார்டையும் எடுத்தால் போதும், வேலை முடிந்தது. 343 00:29:40,781 --> 00:29:42,366 பிறகு என்ன? நாம் அவரது பணத்தைத் திருடப் போகிறோமா? 344 00:29:42,366 --> 00:29:44,826 -ஜானி, வேண்டாம். -இல்லை. கடன் வாங்குகிறோம். 345 00:29:44,826 --> 00:29:47,287 அவர் எப்போதெல்லாம் அதைப் பயன்படுத்துவார்? அடிக்கடியா? 346 00:29:47,287 --> 00:29:49,706 ஆம், சனிக்கிழமைகளில் குதிரைப் பந்தயங்களில் பணம் கட்ட எடுப்பார், 347 00:29:49,706 --> 00:29:52,000 பிறகு தன் செக்குகளை டெபாசிட் செய்வார்? அந்தச் சாவி வேண்டாமா? 348 00:29:52,000 --> 00:29:53,877 இல்லை, நண்பா. குறைவாக மதிப்பிடாதே... 349 00:29:53,877 --> 00:29:55,796 டேனி! கடவுளே. 350 00:29:56,463 --> 00:29:59,550 அவருக்குத் தெரியும் முன் பணத்தை வைக்க நமக்கு ஒரு வாரம் நேரம் இருக்கும். 351 00:30:00,050 --> 00:30:02,177 எனக்குத் தெரியவில்லை, ஜானி, அது மோசமான யோசனையாக உள்ளது. 352 00:30:02,177 --> 00:30:06,557 மாற்றாக, எப்போதாவது பணத்துடன் இருப்பது எப்படி இருக்கும்? 353 00:30:06,557 --> 00:30:08,642 நீ விரும்பும் அளவுக்கு ஆனபெல்லுடன் போதையாகலாம். 354 00:30:08,642 --> 00:30:11,103 பார், அதற்கு சில ஜாயின்டுகள் வாங்குவது எளிதாக இருக்காதா? 355 00:30:11,103 --> 00:30:12,896 -அதேதான். -உன்னிடம் பணமில்லாதது அவளுக்குத் தெரிய வேண்டுமா? 356 00:30:12,896 --> 00:30:15,899 நீ, “ஹேய் ஆனி, கண்ணே, நாம் கஞ்சா அடிக்கலாம், 357 00:30:15,899 --> 00:30:17,693 ஆனால் இந்த வாரத்திற்கு ஒன்றுதான், ஏனெனில் ஏழையான என்னால் 358 00:30:17,693 --> 00:30:19,194 -அதுதான் முடியும்” என்றிருக்க விரும்புகிறாய். -ஆம். 359 00:30:19,194 --> 00:30:21,113 ஜானி, அவள் அதை விரும்புகிறாளா என்று கூடத் தெரியவில்லை. 360 00:30:21,113 --> 00:30:23,866 ஆனால் நீ தெரிந்துகொள்ள விரும்பவில்லையா? அதாவது, யோசித்துப் பார். 361 00:30:23,866 --> 00:30:26,410 -ஆனபெல் ஆடையின்றி இருக்கிறாள். -ஜானி. 362 00:30:26,410 --> 00:30:29,663 ஃபாரா ஃபா... இல்லை, ஆனபெல் கிடக்கிறாள். 363 00:30:29,663 --> 00:30:32,958 நண்பா, மார்லினுக்குத் தெரிந்தால் இவனைக் கொன்றுவிடுவார். 364 00:30:33,458 --> 00:30:36,378 மேலும் அதற்கான பதில் மிகவும் சுலபம். 365 00:30:36,879 --> 00:30:39,256 நாம் மாட்ட மாட்டோம். 366 00:30:43,010 --> 00:30:44,720 -அப்படித்தான், டேனி. -கமான். 367 00:30:44,720 --> 00:30:47,181 -அப்படித்தான். -ஹாய், எனக்கு... உங்களுக்கு என்ன வேண்டும்? 368 00:30:47,181 --> 00:30:49,433 -வெனிலா-செர்ரி டிப், கிடைக்குமா? -அது சுலபமாக இருக்க வேண்டியது. 369 00:30:49,975 --> 00:30:52,227 அன்றிரவு அவர் பாரிலிருந்து வரும் வரை நாங்கள் காத்திருந்தோம். 370 00:30:54,396 --> 00:30:56,523 அவர் எப்போதும் சனிக்கிழமை அதிக போதையில் வருவார். 371 00:30:58,275 --> 00:31:00,319 என் அம்மா மருத்துவமனையில் இரண்டு ஷிஃப்ட்டில் வேலை செய்தார். 372 00:31:00,319 --> 00:31:03,572 எனவே நீ தெரியாமல் சென்று வரலாம் என நினைத்தாயா? 373 00:31:04,281 --> 00:31:07,618 அந்தத் திட்டம் எந்தச் சிக்கலும் இன்றி நடப்பதாக இருந்தது. 374 00:31:55,624 --> 00:31:57,209 நான்கு, ஏழு, இரண்டு, ஒன்பது. 375 00:31:59,336 --> 00:32:01,922 நான்கு, ஏழு, இரண்டு, ஒன்பது. 376 00:33:21,210 --> 00:33:22,294 சரி. 377 00:33:23,670 --> 00:33:25,339 கடவுளே. 378 00:33:25,339 --> 00:33:26,882 ஆனால் அவன் கோடை எடுத்துவிட்டான் தானே? 379 00:33:28,050 --> 00:33:29,218 தி சேஸ் மான்ஹாட்டன் வங்கி 380 00:33:46,527 --> 00:33:49,571 -என்ன இது? -அருமை, டேனி. 381 00:33:51,156 --> 00:33:52,199 -நண்பா! -போகலாம்! 382 00:33:52,199 --> 00:33:54,493 -அசத்திவிட்டாய், நண்பா! -ஆம், அது வேலை செய்துவிட்டது. 383 00:33:54,493 --> 00:33:55,827 கடவுளே, அதைப் பார்ப்போம். 384 00:33:57,079 --> 00:33:58,705 -அருமை, நண்பா! -அதைப் பார். 385 00:33:58,705 --> 00:34:00,332 அது சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்தது. 386 00:34:00,332 --> 00:34:02,918 -அப்படித்தான், டேனி. -சரி. என்ன? 387 00:34:02,918 --> 00:34:04,837 இந்த ஐம்பதுகளைப் பார், நண்பா. 388 00:34:04,837 --> 00:34:07,339 ஐம்பதுகளா? இவன் ஐம்பதுகளுக்கே உருகுகிறான். 389 00:34:07,339 --> 00:34:09,257 -நீ 100 டாலரை இதற்கு முன் பார்த்ததில்லையா? -நீ பார்த்தது போல் பேசுகிறாய். 390 00:34:09,257 --> 00:34:11,342 -நண்பர்களே, நிறுத்துங்கள்! -என்ன? 391 00:34:11,342 --> 00:34:13,804 -நாம் என்ன செய்யப் போகிறோம்? -பூங்காவுக்குச் செல். 392 00:34:13,804 --> 00:34:16,556 நாம் பூங்காவுக்குச் செல்வது தெரியும், ஆனால் அங்கே போய் என்ன செய்வது? 393 00:34:16,556 --> 00:34:18,891 ”ஆஞ்சலோ என்ற சிறுவனைக் கேள்” என்று டேவிட் கூறினான். 394 00:34:18,891 --> 00:34:20,893 -அவன் தான் நமக்கான ஆள். -டேவிட் யார்? 395 00:34:20,893 --> 00:34:23,981 டேவிட் தெரியாதா? அறிவியல் டேவிட். டேவிட் W. உனக்குத் தெரியும், நண்பா. 396 00:34:23,981 --> 00:34:25,899 சரி, நாம் பூங்காவுக்குச் சென்று, மளிகை கடை போல 397 00:34:25,899 --> 00:34:28,443 ஆஞ்சலோவைக் கேட்க வேண்டுமா? 398 00:34:28,443 --> 00:34:30,445 ஆம். இரு, மெதுவாக, ப்ரோ. போலீஸ் இருக்கின்றனர். 399 00:34:30,445 --> 00:34:32,531 -எனக்குத் தெரிகிறது. -வலது பக்கமாகச் செல். 400 00:34:32,531 --> 00:34:36,076 -இடது பக்கமாகச் செல். -ஜானி, நீ வாயை மூட வேண்டும். 401 00:34:36,076 --> 00:34:37,452 நான் கூலாக இருக்கிறேன். 402 00:34:37,452 --> 00:34:39,913 -நான் பணத்தை எடுத்துக்கொள்கிறேன். -நிறுத்து. 403 00:34:41,123 --> 00:34:43,000 -சரி, இப்போது என்ன? -பணம் எங்கே? 404 00:34:43,000 --> 00:34:44,543 -என் பாக்கெட்டில் உள்ளது. -சரி, நண்பா. 405 00:34:44,543 --> 00:34:46,460 சரி, சகஜமாக இருங்கள். 406 00:34:46,460 --> 00:34:48,005 சகஜமாகவா? அதற்கு என்ன அர்த்தம்? 407 00:34:48,005 --> 00:34:50,465 சகஜமாக இருங்கள். நன்றாக நடக்கும். போகலாம். நன்றி, நண்பா. 408 00:34:51,592 --> 00:34:53,010 ”சகஜம்” என்றால் என்ன? 409 00:34:54,428 --> 00:34:55,429 சரி. 410 00:34:57,139 --> 00:34:58,307 சரியாக நடக்கும். 411 00:34:58,849 --> 00:35:01,518 -போகலாம், பசங்களா. வாருங்கள். -இது நன்றாக இருக்கப் போகிறது. 412 00:35:03,645 --> 00:35:05,105 சரி, நான் பேசுகிறேன், சரியா? 413 00:35:05,105 --> 00:35:06,440 -சரி. -சரி. 414 00:35:08,358 --> 00:35:09,359 ஹேய். 415 00:35:12,863 --> 00:35:14,198 என்ன வேண்டும், வெள்ளையினச் சிறுவனே? 416 00:35:14,198 --> 00:35:15,490 நான் ஆஞ்சலோவைப் பார்க்க வேண்டும். 417 00:35:18,869 --> 00:35:21,705 நான் ஆஞ்சலோவைப் பார்க்க வேண்டும். 418 00:35:32,466 --> 00:35:34,426 -இந்தா, ப்ரோ. -நன்றி, நண்பா. 419 00:35:34,426 --> 00:35:36,470 இல்லை. 420 00:35:37,638 --> 00:35:39,139 இதைப் பார், நண்பா. 421 00:35:45,270 --> 00:35:46,271 யோ, ஆஞ்சலோ. 422 00:35:54,613 --> 00:35:56,823 -எனக்கு உங்களைத் தெரியுமா? -ஆம், நான் டேவிட்டின் நண்பன். 423 00:35:58,742 --> 00:35:59,952 எனக்கு எந்த டேவிட்டையும் தெரியாது. 424 00:36:00,744 --> 00:36:04,414 யாரோ உன்னிடம் விளையாடியுள்ளனர், நண்பா. இங்கே வர உனக்கு தைரியமோ முட்டாள்தனமோ உள்ளது. 425 00:36:06,250 --> 00:36:07,626 முட்டாள்தனமாக இருக்கலாம். 426 00:36:09,169 --> 00:36:11,421 நாங்கள் ஒரு அவுன்ஸ் கஞ்சா வாங்க விரும்புகிறோம். 427 00:36:12,965 --> 00:36:14,800 ”நாங்கள் ஒரு அவுன்ஸ் கஞ்சா வாங்க விரும்புகிறோம்”. 428 00:36:19,847 --> 00:36:22,683 சரி, என் அலுவலகத்திற்குள் வாருங்கள். 429 00:36:25,060 --> 00:36:26,061 முன்னே போ. 430 00:36:28,105 --> 00:36:30,607 ஒரு அவுன்ஸா? அது நிறைய கஞ்சா, நண்பா. 431 00:36:31,859 --> 00:36:34,319 -அதற்கு எவ்வளவு ஆகும் எனத் தெரியுமா? -நூறு டாலர். 432 00:36:34,319 --> 00:36:36,446 நூறு டாலர். உங்களிடம் 100 டாலர் உள்ளதா? 433 00:36:41,285 --> 00:36:42,286 என்னிடம் காட்டு. 434 00:36:47,958 --> 00:36:49,877 அது கள்ள நோட்டு இல்லை என்பதை உறுதிசெய்யத்தான். 435 00:36:53,755 --> 00:36:55,549 சரி. 436 00:36:59,261 --> 00:37:03,807 கொலம்பியன், பனாமா ரெட், அரேபியன் பிளாக். 437 00:37:05,058 --> 00:37:06,059 என்ன வேண்டும்? 438 00:37:07,019 --> 00:37:08,020 பனாமா ரெட். 439 00:37:09,062 --> 00:37:11,940 -பனாமா ரெட். -பனாமா ரெட். நீங்கள் நிபுணரா? 440 00:37:12,524 --> 00:37:15,569 -இல்லை, நான்... -பணத்தைக் காட்டு. “இப்போதே” என்றேன். 441 00:37:18,488 --> 00:37:20,574 இங்கே என்ன செய்கிறாய், வெள்ளையினச் சிறுவனே? 442 00:37:21,366 --> 00:37:22,534 -நீ யார் என நினைக்கிறாய்? -சரி... 443 00:37:22,534 --> 00:37:25,871 உன்னைப் பாதியாக வெட்டிப் போட வேண்டும். 444 00:37:25,871 --> 00:37:27,456 வேண்டாம். 445 00:37:27,456 --> 00:37:30,000 -ஏன் வேண்டாம்? -தெரியவில்லை. 446 00:37:30,000 --> 00:37:34,046 அதாவது, நாம் ஒன்றாக இருந்தால், உங்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். 447 00:37:34,046 --> 00:37:38,091 சரியா? சில பணக்கார வெள்ளையினத்தவர்கள் கஞ்சா வாங்க விரும்புவார்கள், வேறு எதுவும் கூட, சரியா? 448 00:37:38,091 --> 00:37:40,677 நாங்கள் ரிஸ்க் எடுக்கிறோம். நீங்கள் கவலையின்றி இங்கே இருக்கலாம். 449 00:37:40,677 --> 00:37:43,138 நீங்கள் பணம் சம்பாதிக்க இரவு முழுவதும் இங்கே நிற்க வேண்டியதில்லை. 450 00:37:43,138 --> 00:37:44,640 நான் விளக்குகிறேன். 451 00:37:46,266 --> 00:37:48,268 -இங்கிருந்து ஓடிவிடுங்கள். -போ, டேனி. 452 00:37:50,062 --> 00:37:51,730 எங்களுக்கு கஞ்சா வேண்டும். 453 00:38:00,197 --> 00:38:02,491 ஓடு, நாயே. 454 00:38:08,705 --> 00:38:10,999 போ! அடக் கடவுளே. 455 00:38:16,797 --> 00:38:18,465 -அவன் விட்டுவிட்டான். ஓடு. -ஓடு! 456 00:38:27,516 --> 00:38:29,560 -ஹேய், மைக், பிரச்சினை இல்லையே? -ஆம். பிரச்சினை இல்லை. 457 00:38:30,727 --> 00:38:34,064 சரி, அது... 458 00:38:35,482 --> 00:38:39,736 -அடச்சை. - ...நமக்கான மூன்று பைகள். 459 00:38:41,446 --> 00:38:42,614 உண்மையாக இதைச் செய்கிறோமா, நண்பா? 460 00:38:43,115 --> 00:38:44,741 -ஆம். -ஜானி எங்கே? 461 00:38:44,741 --> 00:38:46,326 நீங்கள் சகஜமாக இருக்க வேண்டும். 462 00:38:47,119 --> 00:38:49,371 நான் கஞ்சாவை எடுத்துக்கொள்கிறேன். அதை மதிய உணவு வேளையில் விற்கிறேன். 463 00:38:50,539 --> 00:38:52,541 உன்னிடம் இருக்கும் என மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்? 464 00:38:52,541 --> 00:38:55,544 ஏனெனில் நான் கஞ்சா விற்பதாக சாலி ஜெப்சமிடம் கூறினேன். 465 00:38:56,587 --> 00:38:58,213 -சாலியிடம் எப்போது கூறினாய்? -இன்று காலை. 466 00:38:58,213 --> 00:38:59,840 இரு, இன்று காலை ஒருவனிடம் நீ கூறினாயா? 467 00:38:59,840 --> 00:39:01,884 அப்படித்தான் ஒரு அவுன்ஸ் கஞ்சாவை நீ விற்கப் போகிறாயா? நீ என்ன பைத்தியமா? 468 00:39:01,884 --> 00:39:04,511 என்னை நம்பு, குழந்தாய். 469 00:39:06,805 --> 00:39:07,806 ஜானி. 470 00:39:21,695 --> 00:39:23,280 -நீங்கள்... சரி. -கமான், நண்பா. 471 00:39:26,200 --> 00:39:27,534 உங்களுக்கு என்ன வேண்டும்? 472 00:39:28,285 --> 00:39:29,286 மகிழ்ச்சி. 473 00:39:29,870 --> 00:39:31,079 சரி, இனிய நாளாக இருக்கட்டும். 474 00:39:31,622 --> 00:39:34,041 சரி. உங்களுக்கு என்ன வேண்டும்? 475 00:39:35,375 --> 00:39:37,127 உங்களுடன் பிசினஸ் செய்ததில் மகிழ்ச்சி. 476 00:39:37,836 --> 00:39:40,088 சரி. மிக்க நன்றி. இனிய நாளாக இருக்கட்டும். 477 00:39:42,090 --> 00:39:43,509 அவன் கூறியது சரிதான். 478 00:39:44,092 --> 00:39:45,511 தெரியும். அவன் அனைத்தையும் விற்றதை நம்ப முடியவில்லை. 479 00:39:46,553 --> 00:39:48,430 -மதியத்தில். -மதியத்தில். இல்லையா? 480 00:39:49,765 --> 00:39:51,183 நம்ப முடியவில்லை. 481 00:39:51,183 --> 00:39:53,810 ஓ, கடவுளே. டேனி. டேனி, எதுவும் ஆகவில்லையே? 482 00:39:55,187 --> 00:39:56,438 ஓ. ஒன்றுமில்லை. 483 00:39:57,856 --> 00:39:59,024 பின்னால் பார். 484 00:40:03,362 --> 00:40:05,280 டேனி, இன்னும் ஏன் என்னுடம் நிற்கிறாய்? 485 00:40:08,325 --> 00:40:09,326 போய் ஆனபெல்லிடம் பேசு. 486 00:40:09,826 --> 00:40:10,827 இல்லை. 487 00:40:10,827 --> 00:40:13,872 ”இல்லை” என்றால் என்ன அர்த்தம்? நண்பா, இதுதான் உன் வாய்ப்பு. 488 00:40:13,872 --> 00:40:14,957 தைரியமாக இரு, டேனி. 489 00:40:18,418 --> 00:40:20,671 -என்னால் தைரியமாக இருக்க முடியும். -ஆம். உன்னால் முடியும். 490 00:40:31,473 --> 00:40:32,474 ஹாய், ஆனபெல். 491 00:40:33,016 --> 00:40:34,017 ஹாய். 492 00:40:34,977 --> 00:40:36,186 -டேனி தானே? -ஆம். 493 00:40:36,770 --> 00:40:38,897 -இது என் தோழி, ஈடன். -ஹாய், ஈடன். 494 00:40:39,523 --> 00:40:40,399 ஈடன். 495 00:40:41,483 --> 00:40:43,819 -வாவ். -தெரியும். இவள் இப்படித்தான். 496 00:40:43,819 --> 00:40:46,780 -எப்படி? -புறக்கணிப்பது. 497 00:40:47,614 --> 00:40:49,700 ஓ, ஆம், உண்மைதான். 498 00:40:55,080 --> 00:40:57,291 இந்த வாரயிறுதியில் நீ என்ன திட்டம் வைத்துள்ளாய் என யோசித்தேன். 499 00:40:57,291 --> 00:40:59,626 நான் சார்லோட்டின் பார்ட்டிக்குப் போகிறேன். நீ வருகிறாயா? 500 00:41:00,878 --> 00:41:01,879 என்னை அழைக்கவில்லை. 501 00:41:05,090 --> 00:41:06,216 அது சனிக்கிழமைதான். 502 00:41:09,511 --> 00:41:13,307 இன்றிரவு எதுவும் திட்டமில்லை எனில், என்னிடம் கொஞ்சம் கஞ்சா உள்ளது, 503 00:41:13,307 --> 00:41:15,893 நாம் கொஞ்சம் பீர் வாங்கிக்கொண்டு, நேரம் செலவழிக்கலாம் என நினைத்தேன். 504 00:41:15,893 --> 00:41:17,019 பொய். 505 00:41:17,019 --> 00:41:20,230 உன்னிடம் கஞ்சா இல்லை. நீ இவளுடன் ஜாலியாக இருக்க விரும்புகிறாய். 506 00:41:20,230 --> 00:41:22,482 என்னிடம் கஞ்சா உள்ளது. நிறையவே உள்ளது. 507 00:41:22,482 --> 00:41:25,068 நிறையவா? இப்போது அப்படித்தான் விற்கின்றனரா? 508 00:41:25,068 --> 00:41:27,738 ஒரு பேச்சுக்கு எங்களிடம் ஒரு அவுன்ஸ் உள்ளது. அதை விற்கிறோம். 509 00:41:27,738 --> 00:41:30,073 என் லாக்கரில் மூன்று பைகள் உள்ளன. 510 00:41:30,073 --> 00:41:32,117 -பொய். -ஈடன், நிறுத்து. 511 00:41:33,285 --> 00:41:34,119 நீ என்ன கூறினாய்? 512 00:41:35,537 --> 00:41:39,082 நாம் பாலத்திற்கு அடியில் நேரம் செலவழிக்கலாமா என்று கேட்டேன். 513 00:41:40,417 --> 00:41:41,418 ஆம், நிச்சயமாக. 514 00:41:42,878 --> 00:41:45,088 -அப்படியா? -ஆம், இன்றிரவு 7 மணிக்கு? 515 00:41:47,424 --> 00:41:48,258 சரி. 516 00:41:48,842 --> 00:41:50,135 -ஹேய். -ஹேய். 517 00:41:50,135 --> 00:41:51,637 -எப்படி இருக்கிறாய்? -நன்றாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்? 518 00:41:51,637 --> 00:41:53,013 -என்ன சிரிப்பு? -ஒன்றுமில்லை. 519 00:41:55,766 --> 00:41:57,726 -உன்னிடம்தான் பேசுகிறேன், ஜந்துவே. -ஹேய், பில். 520 00:41:57,726 --> 00:41:59,102 -பில்? ஹேய்! -ஓடிப் போ. 521 00:41:59,686 --> 00:42:01,230 -அவனுக்கு என்ன வேண்டுமாம்? -ஒன்றுமில்லை. 522 00:42:01,230 --> 00:42:02,731 ஒன்றுமில்லை. போகலாம். 523 00:42:05,067 --> 00:42:06,652 -மன்னித்துவிடு, பில். -நாசமாய்ப் போ. 524 00:42:07,819 --> 00:42:08,779 மன்னித்துவிடு. 525 00:42:08,779 --> 00:42:09,696 அடச்சை. 526 00:42:19,206 --> 00:42:20,207 திரு. சல்லிவன். 527 00:42:28,715 --> 00:42:30,300 உங்கள் லாக்கரைத் திறந்து காட்டுங்கள். 528 00:42:33,178 --> 00:42:34,179 என்ன? 529 00:42:34,972 --> 00:42:37,850 திரு. சல்லிவன், உங்கள் லாக்கரை இப்போதே திறந்து காட்டுங்கள். 530 00:42:39,852 --> 00:42:40,853 ஏன்? 531 00:42:41,436 --> 00:42:44,189 நீங்கள் பள்ளி வளாகத்தில் கஞ்சா வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 532 00:42:48,610 --> 00:42:49,862 என்னிடம் கஞ்சா இல்லை. 533 00:42:49,862 --> 00:42:53,282 சரிதான். இப்போதே அதைத் திறங்கள். 534 00:43:00,372 --> 00:43:01,540 அவன் கதை முடிந்தது. 535 00:43:05,377 --> 00:43:06,670 பொறுமையாகத் திறங்கள். 536 00:43:09,548 --> 00:43:10,841 பின்னால் செல்லுங்கள். 537 00:43:27,107 --> 00:43:28,108 உங்கள் பாக்கெட்டுகளைக் காட்டுங்கள். 538 00:43:38,368 --> 00:43:41,830 நீங்கள் அதைப் பூட்டிக்கொள்ளலாம். எனக்கு தவறான தகவல் கிடைத்துள்ளது. 539 00:43:42,581 --> 00:43:43,415 கமான். 540 00:43:46,210 --> 00:43:47,753 மன்னிக்கவும், திரு. கார்ட்டர். 541 00:43:49,546 --> 00:43:52,299 திரு. கார்ட்டர், உங்களுக்கு என்ன பிரச்சினை? 542 00:43:52,299 --> 00:43:55,385 -மன்னிக்கவும். -வாயை மூடு! என்னுடன் வெளியே வா. 543 00:43:55,385 --> 00:43:58,222 -வெளியே வா. -என் அப்பாவிடம் மட்டும் சொல்லாதீர்கள். 544 00:43:59,681 --> 00:44:01,934 அவர்கள் விரும்பினால் உன்னை அடிப்பது சட்டப்படி குற்றமில்லை. 545 00:44:01,934 --> 00:44:04,686 ரிலாக்ஸ், நான் சமாளித்துவிட்டேன். கமான். 546 00:44:05,896 --> 00:44:08,232 சமாளித்துவிட்டாயா? இரு, என்ன நடந்தது? 547 00:44:08,232 --> 00:44:09,483 நான் ஏன் சிறைக்குச் செல்லவில்லை? 548 00:44:09,483 --> 00:44:12,402 பில்லும் ஈடனும் மதிய உணவுக்குப் பிறகு பேசுவதைப் பார்த்தேன். எனக்குப் பிடிக்கவில்லை. 549 00:44:12,402 --> 00:44:14,738 -ஏதோ தவறாகப் பட்டது. -தவறாகப் பட்டதா? 550 00:44:14,738 --> 00:44:16,073 அதனால்? 551 00:44:16,073 --> 00:44:19,493 நான் உன்னைக் கூப்பிட நேரமில்லை, அதனால் ஜானியைக் கூப்பிட்டேன். 552 00:44:19,493 --> 00:44:20,994 அதை ஒளித்து வைத்துவிட்டேன். 553 00:44:22,204 --> 00:44:25,958 இதோ உன் அப்பாவின் முதலீடு. 554 00:44:26,500 --> 00:44:28,836 இது நம் லாபம். 555 00:44:28,836 --> 00:44:31,964 அந்த மோதலில் நமக்கு லாபம். 556 00:44:33,841 --> 00:44:36,677 இருங்கள், நண்பர்களே. 557 00:44:37,261 --> 00:44:38,679 நீங்கள் எப்படி என் லாக்கரைத் திறந்தீர்கள்? 558 00:44:38,679 --> 00:44:41,181 உன்னிடம் எத்தனை முறை கூறுவது? நான் தான் மேஜிக். 559 00:44:42,349 --> 00:44:44,059 சரி, நீ மேஜிக், எனில் கஞ்சா எங்கே? 560 00:44:44,059 --> 00:44:45,644 உன் பாக்கெட்டுகளைப் பார். 561 00:44:47,521 --> 00:44:48,522 உன் பாக்கெட்டுகளைப் பார். 562 00:44:54,486 --> 00:44:56,071 சில ரோலிங் பேப்பர் கிடைக்குமா? 563 00:45:52,961 --> 00:45:54,546 -ஹேய். -ஹேய். 564 00:45:57,257 --> 00:45:58,926 நீ வருவாய் என உறுதியாகத் தெரியாமல் இருந்தேன். 565 00:46:00,177 --> 00:46:01,178 ஆம், நானும்தான். 566 00:46:03,055 --> 00:46:05,724 நீ கஞ்சா வாங்கியிருக்க வேண்டியதில்லை, தெரியுமா? எப்படி இருந்தாலும் உன்னுடன் வெளியே வந்திருப்பேன். 567 00:46:08,477 --> 00:46:09,478 என்ன? 568 00:46:11,355 --> 00:46:13,148 அது எனக்குத் தோன்றவே இல்லை. 569 00:46:15,150 --> 00:46:20,197 அதாவது, நீ கஷ்டப்பட்டு வாங்கியிருப்பதால், உன்னை நோகடிக்க விரும்பவில்லை. 570 00:46:27,204 --> 00:46:28,205 நன்றாக உள்ளது. 571 00:46:32,918 --> 00:46:33,919 என்னைத் தள்ளிவிடுகிறாயா? 572 00:46:35,963 --> 00:46:36,964 சரி. 573 00:46:39,216 --> 00:46:40,217 தயாரா? 574 00:46:45,806 --> 00:46:47,057 தள்ளிவிடு. 575 00:46:52,104 --> 00:46:53,564 நீ அழகாக உள்ளாய், டேனி சல்லிவன். 576 00:46:54,815 --> 00:46:55,816 நீயும் அழகாக உள்ளாய். 577 00:46:56,817 --> 00:46:57,818 தள்ளிவிடு. 578 00:47:05,033 --> 00:47:06,034 நீ முத்தமிட விரும்புகிறாயா? 579 00:47:07,786 --> 00:47:08,787 உண்மையாகவா? 580 00:47:09,329 --> 00:47:13,166 ஆம். உனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம். 581 00:47:22,050 --> 00:47:25,470 மீண்டும் முயல்வோம். கொஞ்சம் மெதுவாக. 582 00:47:27,848 --> 00:47:28,849 இதுபோல. 583 00:48:52,057 --> 00:48:53,600 அவனிடம் பேசு. எனக்காக. 584 00:48:53,600 --> 00:48:57,354 -சரி, என்ன கூறுவது? -தெரியவில்லை. அவனிடம்... அடச்சை. 585 00:48:57,855 --> 00:49:01,191 அதோ இருக்கிறான். எனக்குத் தெரியாது, அவனிடம் பேசு. 586 00:49:01,191 --> 00:49:03,569 -எனக்காகப் பேசு. நன்றி. -ஆம், சரி. 587 00:49:05,028 --> 00:49:06,238 -ஹேய். -ஹாய். 588 00:49:07,614 --> 00:49:09,283 உன் லாக்கரில் இருந்தது பற்றி பொய் கூறிவிட்டாய். 589 00:49:10,158 --> 00:49:13,036 இல்லை. இதை நான் ஆனபெல்லுக்காக வரைந்தேன். 590 00:49:13,537 --> 00:49:17,040 ஓ, சரி. அவள் நேற்று இரவு வேடிக்கையாக இருந்தது, ஆனால் உங்களுக்குள் 591 00:49:17,040 --> 00:49:20,544 சரிப்பட்டு வராது என்று கூறச் சொன்னாள். மன்னிப்பு கேட்டாள். 592 00:49:33,891 --> 00:49:35,559 இதை அவளிடம் எனக்காகக் கொடுக்க முடியுமா? 593 00:49:37,477 --> 00:49:38,604 முட்டாள். 594 00:49:42,941 --> 00:49:44,401 அவன் உனக்காக படம் வரைந்துள்ளான். 595 00:49:47,863 --> 00:49:51,200 டேனி, இது உன்னுடையதா? 596 00:49:53,285 --> 00:49:54,286 டேனி? 597 00:49:57,873 --> 00:49:59,082 என்னுடன் வா. 598 00:50:31,949 --> 00:50:33,617 ஹாய், பீப் சத்தத்தில் மெசேஜைக் கூறுங்கள். 599 00:50:34,618 --> 00:50:37,704 கேண்டி, ஃபோனை எடு. இதைக் கேட்டவுடன் எனக்கு கால் செய், 600 00:50:37,704 --> 00:50:41,250 என் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தாயா என்று சொல். 601 00:50:41,250 --> 00:50:43,627 அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். உண்மையாகச் சொல்கிறேன். 602 00:50:50,050 --> 00:50:51,051 அடச்சை. 603 00:50:53,095 --> 00:50:54,137 ஓ, அடச்சை. 604 00:51:03,313 --> 00:51:07,401 ஹேய், முட்டாள். உன்னால் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். 605 00:51:07,901 --> 00:51:09,736 இப்போது உன்னை உதைக்கப் போகிறேன். 606 00:51:23,208 --> 00:51:25,544 பில், மன்னித்துவிடு. நான் வேண்டுமென்றே... 607 00:51:30,007 --> 00:51:31,967 -சரி, பில், போதும், நண்பா. -போ! 608 00:51:34,428 --> 00:51:36,305 பில். ப்ளீஸ், பில். 609 00:51:37,431 --> 00:51:38,432 என்ன இது? 610 00:51:40,434 --> 00:51:43,312 முட்டாள். நீ உன் நண்பர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். 611 00:51:48,317 --> 00:51:49,568 மோசமான ஜந்துவே! 612 00:51:49,568 --> 00:51:50,861 ஓடுங்கள். 613 00:51:50,861 --> 00:51:53,530 -உன்னைக் கொல்லப் போகிறேன். -போகலாம். 614 00:51:57,034 --> 00:52:00,621 அழுத்திப் பிடி. தழும்பு ஏற்படும், ஆனால் உயிருடன் தான் இருப்பாய். 615 00:52:09,463 --> 00:52:10,964 உள்ளே வந்து சுத்தம் செய்துகொள்கிறாயா? 616 00:52:24,520 --> 00:52:25,812 என்ன செய்வதென எனக்குத் தெரிந்திருக்கவில்லை. 617 00:52:34,571 --> 00:52:38,492 மீண்டும் பள்ளிக்குச் செல்ல பயந்தேன். வீட்டுக்குச் செல்ல பயந்தேன். 618 00:52:39,493 --> 00:52:44,122 அந்த ஆள் உன்னைக் காப்பாற்ற திடீரென வந்தது விசித்திரமாகத் தோன்றவில்லையா? 619 00:52:48,460 --> 00:52:49,545 இல்லை. 620 00:52:53,215 --> 00:52:54,299 அப்போது இல்லை. 621 00:53:27,541 --> 00:53:28,584 நீ மோசமாக உள்ளாய். 622 00:53:32,671 --> 00:53:34,089 உன்னைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி. 623 00:53:36,800 --> 00:53:39,636 அரியானா அங்கே தங்கியிருந்தாளா? 624 00:53:40,554 --> 00:53:41,638 அவள் அங்கே வாடகைக்கு இருந்தாள். 625 00:53:43,473 --> 00:53:46,226 அவளை முதலில் பார்த்தது எப்படி இருந்தது? அது நினைவுள்ளதா? 626 00:53:49,897 --> 00:53:51,231 அது நீண்ட காலத்திற்கு முன்பு. 627 00:53:53,525 --> 00:53:54,860 நான் அவளை எப்போதும் மிஸ் செய்வேன் என்பது போல இருந்தது. 628 00:53:58,780 --> 00:54:00,532 அவளைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை. 629 00:54:04,995 --> 00:54:06,121 பார்னி மற்றும் கிளைடு. 630 00:54:07,331 --> 00:54:08,332 பார்னியா? 631 00:54:08,332 --> 00:54:09,833 யிட்ஸாக் எங்களை அப்படித்தான் கூப்பிடுவார். 632 00:54:09,833 --> 00:54:11,627 அவரது வேடிக்கையான உச்சரிப்பில். அவரால் சரியாகச் சொல்ல முடியாது. 633 00:54:12,794 --> 00:54:15,631 ஹேய், நன்றாக அழுத்த வேண்டும். 634 00:54:15,631 --> 00:54:17,216 சரி. கவலை வேண்டாம். 635 00:54:20,344 --> 00:54:21,512 நீ வீட்டுக்கே செல்லவில்லையா? 636 00:54:24,097 --> 00:54:25,849 கொஞ்ச காலத்திற்கு நான்... 637 00:54:28,852 --> 00:54:29,895 வீட்டில் இருப்பதாகத்தான் நினைத்தேன். 638 00:54:34,233 --> 00:54:35,984 அரியானா இப்போது அவருடன் இருப்பதாக நினைக்கிறாயா? 639 00:54:35,984 --> 00:54:39,112 நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன், அவள் எங்கே இருக்கிறாள் என எனக்குத் தெரியாது. 640 00:54:39,112 --> 00:54:42,282 டேனி, இதற்காக நீ குற்றத்தை ஏற்கத் தயாராக இருக்கிறாயா? 641 00:54:44,117 --> 00:54:47,704 அரியானா வரவில்லை எனில், நீ சிறைக்குச் செல்ல வாய்ப்பு அதிகம். 642 00:54:48,872 --> 00:54:51,708 அதனால் மீண்டும் கேட்கிறேன். அரியானா எங்கே? 643 00:54:56,713 --> 00:54:57,840 நான் போலீஸிடம் கூறியது போல, எனக்கு... 644 00:54:57,840 --> 00:54:58,882 யிட்ஸாக்கிற்கு என்னவானது? 645 00:55:01,176 --> 00:55:05,514 உனக்கு நெருக்கமானவர்களில் காணாமல் போனவர்கள் அவர்கள் மட்டுமில்லைதானே? 646 00:55:08,559 --> 00:55:09,560 ஆடமிற்கு என்னவானது? 647 00:55:15,023 --> 00:55:18,485 டேனி, அவர்கள் அனைவரும் எங்கே சென்றனர்? 648 00:55:21,196 --> 00:55:23,073 என் மீது என்ன குற்றம் சுமத்துகிறீர்கள்? 649 00:55:27,035 --> 00:55:30,038 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால், 650 00:55:30,038 --> 00:55:31,915 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 651 00:56:21,715 --> 00:56:23,717 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்