1 00:00:28,111 --> 00:00:32,366 டேனி! அவனைச் சுடு! 2 00:00:33,075 --> 00:00:34,159 சார்? 3 00:00:35,244 --> 00:00:37,621 உங்கள் பானத்தைக் குடித்துவிட்டு, சீட் பெல்ட்டை அணிந்துகொள்கிறீர்களா? 4 00:00:37,621 --> 00:00:39,122 - நாம் தரையிறங்கத் தயாராகிறோம்... - மன்னிக்கவும். 5 00:00:39,122 --> 00:00:40,999 ...உங்கள் பானங்களை முடித்துவிட்டு, 6 00:00:40,999 --> 00:00:42,584 - சரியாக உட்கார்ந்துகொள்ளுங்கள்... - சரி. 7 00:00:42,584 --> 00:00:44,545 ...தரையிறங்குவதை முடிந்தளவு மென்மையாக்க 8 00:00:44,545 --> 00:00:46,046 எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். 9 00:02:13,217 --> 00:02:15,219 {\an8}டேனியல் கீஸ் எழுதிய தி மைண்ட்ஸ் ஆஃப் பில்லி மில்லிகன் 10 00:02:15,219 --> 00:02:16,303 {\an8}என்ற புத்தகத்தால் உந்தப்பட்டது 11 00:02:52,673 --> 00:02:54,925 வந்துசேரும் விமானங்கள் 12 00:03:17,030 --> 00:03:18,240 அடச்சை. 13 00:03:31,295 --> 00:03:33,005 பரிமாற்ற அலுவலகம் 14 00:03:43,307 --> 00:03:46,059 ராக்கஃபெல்லர் சென்டருக்குப் பிறகு ஏன் லண்டன் சென்றாய்? 15 00:03:47,769 --> 00:03:49,062 யிட்ஸாக்தான் போகும்படி சொன்னார். 16 00:03:50,522 --> 00:03:52,900 ஆனால் நீ... அதற்கு முன் நாட்டைவிட்டு வெளியேறியதில்லையே. 17 00:03:52,900 --> 00:03:55,819 - உனக்கு பாஸ்போர்ட் எப்படிக் கிடைத்தது? - யிட்ஸாக் வாங்கிக் கொடுத்தார். 18 00:03:55,819 --> 00:03:56,945 எப்படி? 19 00:03:56,945 --> 00:03:59,072 தெரியவில்லை. யிட்ஸாக் எதையுமே எப்படிச் செய்கிறார்? 20 00:03:59,072 --> 00:04:00,949 ஆம், எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் கேட்கிறேன். 21 00:04:00,949 --> 00:04:02,743 அவருக்கு நிறைய ஆட்களைத் தெரியும், சரியா? 22 00:04:02,743 --> 00:04:03,827 சரி. 23 00:04:08,123 --> 00:04:09,333 என் அப்பா அங்கே இருந்தார். 24 00:04:10,709 --> 00:04:12,961 ஆங்கிலம் 25 00:04:14,630 --> 00:04:17,048 நீங்கள் ராயல் லண்டன் டிராவல் ஏஜென்சியை அழைத்துள்ளீர்கள். 26 00:04:17,048 --> 00:04:19,635 மெசேஜைக் கூறுங்கள், முடிந்தளவு சீக்கிரமாகத் திரும்ப அழைக்கிறோம். 27 00:04:20,886 --> 00:04:22,638 ஹாய், நான் டேனி சல்லிவன். 28 00:04:22,638 --> 00:04:24,056 நான் பீட் சல்லிவனின் மகன். 29 00:04:25,098 --> 00:04:26,475 அவருக்காக இந்த எண் என்னிடம் உள்ளது. 30 00:04:28,936 --> 00:04:30,354 நான் நகரத்தில்தான் இருக்கிறேன், அதனால்... 31 00:04:30,354 --> 00:04:33,273 பீட் என்னைத் திரும்ப அழைக்க முடிந்தால்... 32 00:04:36,610 --> 00:04:38,654 ஒன்று சொல்லவா? விடுங்கள். நான் பிறகு அவரை அழைத்துக்கொள்கிறேன். 33 00:04:38,654 --> 00:04:39,738 நன்றி, பை. 34 00:04:42,032 --> 00:04:44,117 நீ உன்னைப் பெற்ற அப்பாவைப் பற்றி நிறைய கூறியதில்லை. 35 00:04:44,952 --> 00:04:47,120 கூற எதுவுமில்லை. அவர் என்னுடன் ரொம்ப காலம் இருந்ததில்லை, 36 00:04:47,120 --> 00:04:49,248 மேலும் பிறகு அவர் போய்விட்டார். 37 00:04:49,248 --> 00:04:50,457 எப்போது? எப்போது போனார்? 38 00:04:52,084 --> 00:04:54,044 ஆடமும் நானும் சிறுவயதாக இருந்தபோது. 39 00:04:54,044 --> 00:04:55,337 அனைத்தும் நடப்பதற்கு முன்பு. 40 00:04:55,337 --> 00:04:57,464 பள்ளியை விட்டு வெளியேறும் முன்பா? 41 00:04:57,464 --> 00:04:59,883 எனக்கு ஆறு வயதிருந்திருக்கலாம். 42 00:05:00,384 --> 00:05:02,427 யிட்ஸாக்கிற்கு உன் அப்பாவைத் தெரியும் என்று உனக்குத் தெரிந்திருந்ததா? 43 00:05:02,427 --> 00:05:04,012 இல்லை, அதற்கு முன்பு தெரியாது. 44 00:05:05,556 --> 00:05:06,765 நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். 45 00:05:08,725 --> 00:05:11,770 நான் சிக்கலில் இருந்தேன், உதவிக்காக யிட்ஸாக் என்னை என் அப்பாவிடம் அனுப்பினார், ஆனால்... 46 00:05:11,770 --> 00:05:13,146 அரியானா எங்கே இருந்தாள்? 47 00:05:13,146 --> 00:05:15,774 நான் ஏற்கனவே கூறிவிட்டேன். எனக்குத் தேவைப்படும்போது அவள் ஓடிவிட்டாள். 48 00:05:16,984 --> 00:05:18,193 கிட்டத்தட்ட சொல்லிவைத்தது போல. 49 00:05:18,193 --> 00:05:19,611 அதற்கு என்ன அர்த்தம்? 50 00:05:19,611 --> 00:05:21,321 அதாவது, நீ பலவீனமாக இருந்தபோது அவள் உன்னைவிட்டுச் சென்றாள், 51 00:05:21,321 --> 00:05:24,324 பிறகு உனக்குத் தேவையானதை வழங்க யிட்ஸாக் வந்தாள். 52 00:05:24,324 --> 00:05:25,993 ஓ, அப்படியா? அது என்ன? 53 00:05:25,993 --> 00:05:30,372 பாஸ்போர்ட். ரட்சிப்பு. 54 00:05:45,137 --> 00:05:47,764 ராயல் லண்டன் டிராவல் ஏஜென்சி 55 00:06:08,368 --> 00:06:09,661 மன்னிக்கவும். 56 00:06:09,661 --> 00:06:10,746 எங்கள் பணிநேரம் முடிந்தது. 57 00:06:11,288 --> 00:06:14,583 நான் பீட்டர் சல்லிவனைத் தேடி வந்துள்ளேன். பீட் சல்லிவன்? 58 00:06:15,459 --> 00:06:16,460 அவரைக் கேள்விப்பட்டதே இல்லை. 59 00:06:17,961 --> 00:06:20,589 என்னிடம் அவருக்காக இந்த முகவரி உள்ளது. 60 00:06:23,634 --> 00:06:25,761 பாஸ் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார். நீங்கள் அவரிடம் கேட்கலாம். 61 00:06:28,305 --> 00:06:29,139 நான் இங்கே காத்திருக்கலாமா? 62 00:06:30,891 --> 00:06:32,726 டோரீன், டோரீன், டோரீன். 63 00:06:32,726 --> 00:06:35,229 என்னுடன் வேலை பார்த்த அமெரிக்கன் பீட் சல்லிவனை உனக்கு நினைவுள்ளதா? 64 00:06:35,812 --> 00:06:38,982 உன் முன்னால் இருக்கும் இந்த இளைஞன் டேனி சல்லிவன். 65 00:06:38,982 --> 00:06:42,486 பீட்டின் மகன். இது அற்புதமாக உள்ளது இல்லையா? 66 00:06:43,403 --> 00:06:44,404 அருமை. 67 00:06:46,532 --> 00:06:47,574 ஜாக். 68 00:06:48,784 --> 00:06:50,702 உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய். 69 00:06:50,702 --> 00:06:52,246 வா. ஏதாவது குடிப்போம் வா. 70 00:06:53,705 --> 00:06:55,374 இளையவர்கள்தான் முன்னே போக வேண்டும். 71 00:06:58,293 --> 00:06:59,294 நன்றி. 72 00:07:20,023 --> 00:07:22,985 இந்தா. குடி. 73 00:07:27,656 --> 00:07:30,367 நான் இங்கே இருப்பது என் அப்பாவுக்குத் தெரியுமா? அவர் இங்கே வரப் போகிறாரா? 74 00:07:30,367 --> 00:07:31,827 - உங்களுக்கு எப்படி... - பொறுமை, மகனே. 75 00:07:31,827 --> 00:07:33,954 உன் அப்பாவும் நானும் பிசினஸ் அசோஸியேட்கள். 76 00:07:34,872 --> 00:07:37,249 - டிராவல் ஏஜெண்டுகள். - இல்லை, அதேதான். 77 00:07:37,791 --> 00:07:40,502 - எனில் டிராவல் ஏஜென்சி... - நாங்கள் பின் அறையில் வேலை செய்வோம். 78 00:07:40,502 --> 00:07:42,337 நாங்கள் வேலை செய்தோம். 79 00:07:42,337 --> 00:07:43,422 இப்போது அங்கே நான் மட்டும்தான். 80 00:07:44,548 --> 00:07:45,549 உன் அப்பா இங்கே இல்லை. 81 00:07:46,550 --> 00:07:48,177 அவர் கொஞ்ச காலமாக லண்டனில் இல்லை. 82 00:07:48,760 --> 00:07:50,554 - சரி, அவர் எங்கே இருக்கிறார்? - எனக்குத் தெரியாது. 83 00:07:51,305 --> 00:07:53,098 நான் பல ஆண்டுகளாக அவரிடம் பேசவில்லை. 84 00:07:55,058 --> 00:07:57,728 நான் மிகவும் வருந்துகிறேன். 85 00:08:03,317 --> 00:08:05,360 அவருக்கு என்ன ஆனது? அவர் எங்கே போனார்? 86 00:08:05,360 --> 00:08:07,070 நாங்கள் வெளிநாட்டில் பிசினஸ் தொடங்கினோம். 87 00:08:07,070 --> 00:08:11,200 அது நாங்கள் நம்பியது போல போகாததால் தனித்தனியே பிரிந்துவிட்டோம். 88 00:08:16,455 --> 00:08:18,040 - அவர் இறந்துவிட்டாரா? - கடவுளே, இல்லை. 89 00:08:18,040 --> 00:08:19,333 இல்லை, அந்தளவுக்கு மோசமாக இல்லை. 90 00:08:19,333 --> 00:08:22,836 அவர் லண்டனில் இருந்து விலகியிருப்பது நல்லது என நினைத்தார். 91 00:08:23,587 --> 00:08:24,755 ஏன்? 92 00:08:25,506 --> 00:08:27,341 நீ ஆர்வமானவன், இல்லையா? 93 00:08:28,675 --> 00:08:30,511 உன் கதை என்ன, டேனி தம்பி? 94 00:08:31,261 --> 00:08:32,929 நீ ஏன் இங்கே வந்தாய்? 95 00:08:32,929 --> 00:08:34,222 எனக்கு உதவி தேவைப்பட்டது. 96 00:08:34,222 --> 00:08:37,726 நான் தங்கியிருந்த இடத்தின் உரிமையாளர், என் அப்பாவைக் கண்டறிய லண்டனுக்கு செல்லும்படி கூறினார். 97 00:08:39,311 --> 00:08:40,687 அந்த மர்மமான நபர் யார்? 98 00:08:42,397 --> 00:08:43,732 அவரது பெயர் யிட்ஸாக். 99 00:08:43,732 --> 00:08:46,693 சாஃப்டியா? யிட்ஸாக் சாஃப்டியா? 100 00:08:47,736 --> 00:08:48,737 இருங்கள், உங்களுக்கும் அவருக்குத் தெரியுமா? 101 00:08:51,657 --> 00:08:52,991 கடவுளே. 102 00:08:54,201 --> 00:08:55,410 நல்லது. 103 00:08:56,745 --> 00:08:57,829 அவன் தன் சத்தியத்தை நிறைவேற்றியுள்ளான். 104 00:08:59,748 --> 00:09:00,749 என்ன சத்தியம்? 105 00:09:01,291 --> 00:09:03,001 ஒரு நிமிஷம் உன்னை நிறுத்தலமா? 106 00:09:04,837 --> 00:09:06,880 என்னை நம்பும்படி கேட்பதை நீ பரிசீலீக்க விரும்புகிறேன், 107 00:09:06,880 --> 00:09:09,216 உன் அப்பாவின் பிசினஸ் அசோஸியேட்டுக்கும் உன் வீட்டின் அருகில் 108 00:09:09,216 --> 00:09:11,176 நீ வாடகைக்குத் தங்கியிருந்த உரிமையாளருக்கும் 109 00:09:11,176 --> 00:09:13,679 ஒருவரையொருவர் தெரிந்தது தற்செயலா? 110 00:09:13,679 --> 00:09:15,472 இல்லை. நீங்கள் சொல்வதை நான் கேட்கவில்லை. 111 00:09:15,472 --> 00:09:16,557 சரி. 112 00:09:17,474 --> 00:09:19,017 அவர்கள் ஒன்றாக வேலை செய்ததாகவும் 113 00:09:19,017 --> 00:09:22,271 என் அப்பா எப்போதும் ஓய்வுபெற்று நியூ யார்க் திரும்புவது பற்றிப் பேசியதாகவும் ஜாக் கூறினார். 114 00:09:22,271 --> 00:09:23,856 யிட்ஸாக் அதை நம்பினார். 115 00:09:23,856 --> 00:09:26,024 ஏதோ... அமெரிக்கக் கனவு என்ற முட்டாள்தனம். 116 00:09:26,024 --> 00:09:29,820 மேலும்... அவர் என் அப்பாவுக்கு முன் அமெரிக்கா வந்தால், அவர் என்னைப் 117 00:09:29,820 --> 00:09:31,405 பார்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். 118 00:09:33,574 --> 00:09:34,950 அவர் கூறியதைத்தான் நான் கூறுகிறேன். 119 00:09:34,950 --> 00:09:36,493 அவர் கூறிய அனைத்தும் உண்மை என்று கூறவில்லை. 120 00:09:36,493 --> 00:09:38,203 சரி, ஆனால் நீ அவரை நம்பியுள்ளாய். 121 00:09:38,203 --> 00:09:40,497 ஆம், நாங்கள் தொடர்ந்து குடித்தோம், நான் அவரை நம்பினேன். 122 00:09:42,040 --> 00:09:44,001 அவர் விமானத்தின் அருகில் ஓடிக்கொண்டு, தன் கைகளை ஆட்டினார். 123 00:09:44,001 --> 00:09:48,130 ”இந்த விமானத்தை நிறுத்துங்கள்! இது என் ஐந்து வயது மகனின் பிறந்தநாள் பார்ட்டி!” 124 00:09:48,839 --> 00:09:49,840 பிறகு அவர்கள் நிறுத்தினார்கள். 125 00:09:49,840 --> 00:09:52,926 - யார் இவன்? - அவர் கயிற்று ஏணியில் ஏறினார் என நினைக்கிறேன். 126 00:09:52,926 --> 00:09:54,678 அவர்கள் அவரை உள்ளே விட்டனர், பிறகு அவர் உன்னைப் பார்க்க வந்தார். 127 00:09:56,221 --> 00:09:59,558 ஆம், அவர் உன்னை மிகவும் மிஸ் செய்தார், டேனி. 128 00:10:01,810 --> 00:10:02,936 ஆம், நானும் அவரை மிஸ் செய்கிறேன். 129 00:10:09,526 --> 00:10:14,740 டேனி, நீ ஏன் தப்பித்து ஓடுகிறாய் என என்னிடம் கூறப் போகிறாயா? 130 00:10:16,241 --> 00:10:19,036 அல்லது வெறும் சட்டையுடன் உலகத்தையே சுற்றிக்கொண்டிருக்கப் போகிறாயா? 131 00:10:21,038 --> 00:10:22,873 இல்லை, கவலைப்படாதே. 132 00:10:23,498 --> 00:10:27,920 பரவாயில்லை. நான் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டேன், நீயும் என்னிடம் பொய் சொல்ல வேண்டாம். 133 00:10:29,129 --> 00:10:34,384 ஆனால் நீ கூறியதுபோல உனக்கு உதவி தேவைப்பட்டால், என்னால் அதை வழங்க முடியும். சரியா? 134 00:10:34,885 --> 00:10:39,223 பழைய மற்றும் புதிய நண்பர்களுக்காக. 135 00:10:45,020 --> 00:10:46,522 சரி. நீ தங்க எதுவும் இடமுள்ளதா? 136 00:10:47,272 --> 00:10:49,816 இந்த இடம் உன் பட்ஜெட்டைவிட அதிகம் என நினைக்கிறேன். 137 00:10:50,526 --> 00:10:52,069 சரியாக நினைத்துள்ளீர்கள். 138 00:10:53,487 --> 00:10:55,572 - அடச்சை. மன்னிக்கவும். - கொஞ்சம் நாப்கின் கொடுங்கள். 139 00:10:55,572 --> 00:10:57,491 இங்கே பீர் கொஞ்சம் ஸ்ட்ராங்காக உள்ளது. 140 00:10:57,491 --> 00:10:58,867 இல்லை, நீதான் அமெரிக்கனாக இருக்கிறாய். 141 00:10:58,867 --> 00:11:01,453 அங்கே, நீ பீர் ஆர்டர் செய்தால், கார்பனேட்டட் சிறுநீரைக் கொடுப்பார்கள். 142 00:11:01,453 --> 00:11:03,372 இது நீ தங்குமிடத்தை அடையும் நேரம். 143 00:11:03,372 --> 00:11:04,456 நாயே. 144 00:11:07,668 --> 00:11:11,046 அருவருப்பானவனே. கடவுளே. 145 00:11:17,469 --> 00:11:18,554 என்ன கூறினாய்? 146 00:11:21,139 --> 00:11:23,016 நீ கூறியதைக் கேட்கவில்லை. என்ன கூறினாய்? 147 00:11:23,767 --> 00:11:25,894 ஏனெனில் அங்கிருக்கும் என் நண்பன் கடல் கடந்து வந்துள்ளான், 148 00:11:25,894 --> 00:11:29,481 நீ மரியாதையற்ற முறையில் பேசுவதை விரும்ப மாட்டாய், இல்லையா? 149 00:11:29,481 --> 00:11:30,732 எதுவும் பிரச்சினையா, ஜெண்டில்மென்? 150 00:11:30,732 --> 00:11:35,404 இல்லை, இந்த மனநலம் குன்றியவன் மன்னிப்பு கேட்டதும் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 151 00:11:36,905 --> 00:11:37,906 மன்னித்துவிடங்கள். 152 00:11:38,532 --> 00:11:39,700 இல்லை, மன்னிக்கவும். 153 00:11:39,700 --> 00:11:41,368 சரியாகக் கேட்கவில்லை. 154 00:11:41,994 --> 00:11:45,873 இன்னொரு முறை? அனைவரும் கேட்கும்படி சத்தமாகக் கூறுங்கள். 155 00:11:47,666 --> 00:11:48,667 மன்னித்துவிடுங்கள். 156 00:11:49,668 --> 00:11:51,503 அவனுக்குக் கேட்கவில்லை என நினைக்கிறேன். இன்னொரு முறை. 157 00:11:56,008 --> 00:11:57,092 எனக்குக் கேட்கவில்லை. 158 00:11:58,844 --> 00:11:59,887 மன்னித்துவிடுங்கள். 159 00:11:59,887 --> 00:12:01,722 அவ்வளவுதான். அது கடினமாக இல்லைதானே? 160 00:12:03,182 --> 00:12:05,017 என்னால் அவமரியாதையைப் பொறுத்துக்கொள்ள முடியாது. 161 00:12:06,143 --> 00:12:07,728 நீங்கள் புறப்படலாம் என நினைக்கிறேன். 162 00:12:09,521 --> 00:12:10,981 வா, டேனி. 163 00:12:15,068 --> 00:12:18,155 எனக்குப் புரியவில்லை. எது உண்மை? 164 00:12:18,155 --> 00:12:20,616 ஜாக், என் அப்பா மற்றும் யிட்ஸாக் ஒன்றாக வேலை செய்ததும் 165 00:12:20,616 --> 00:12:22,951 அவர்கள் திட்டம் வைத்திருந்தனர் என்பதும்தான் உண்மை. 166 00:12:22,951 --> 00:12:25,370 அந்தத் திட்டம் என்னைப் பாதுகாப்பதற்கானது இல்லை. 167 00:12:26,663 --> 00:12:30,083 அதாவது, உங்களை யாராவது வந்து காப்பாற்றுவார்கள் என எத்தனை முறை நினைக்க முடியும், 168 00:12:30,083 --> 00:12:32,294 யாரும் வர மாட்டார்கள் என்று உணரும் வரை? 169 00:12:45,057 --> 00:12:47,267 உண்மையான லண்டனைப் பார்க்க வேண்டுமா? இதுதான். வா. 170 00:12:49,853 --> 00:12:51,104 பைத்தியக்காரன். 171 00:12:51,772 --> 00:12:55,567 - ஹலோ, ரெட். என்னை மிஸ் செய்தாயா? - இல்லை. 172 00:12:56,610 --> 00:13:00,030 இந்த வாரம் நான் வரவா? உன் மீது பாசத்தைப் பொழிகிறேன். 173 00:13:00,531 --> 00:13:01,532 போய்த் தொலை. 174 00:13:03,075 --> 00:13:04,451 இன்னும் அவள் சகோதரி விஷயத்தில் கோபமாக இருக்கிறாள். 175 00:13:24,179 --> 00:13:25,055 யார் அது? 176 00:13:25,055 --> 00:13:26,890 நீ கவலைப்படாதே, டேனி தம்பி. 177 00:13:28,433 --> 00:13:29,518 நீ கவலைப்படாதே. 178 00:13:30,519 --> 00:13:33,230 உனக்குப் பொருத்தமான தங்குமிடத்தைக் கண்டறிவோம், சரியா? 179 00:13:42,239 --> 00:13:44,157 - என்ன? - நான் அவனைத் தூங்க வைத்துள்ளேன். 180 00:13:44,157 --> 00:13:46,535 நன்றாக உறங்குகிறான். கொஞ்சம் போதை. 181 00:13:47,119 --> 00:13:48,829 வேலைக்கு முன் குடிப்பது தவறான யோசனை. 182 00:13:48,829 --> 00:13:51,665 இதுதான் வேலை, யிட்ஸாக். நான் அவனது நம்பிக்கையைப் பெறுகிறேன். 183 00:13:51,665 --> 00:13:53,208 இது வேலையில்லை. 184 00:13:53,208 --> 00:13:55,502 ஒருநாள் ஆகியிருக்கிறது. எதிர்பார்த்த முடிவுகளைக் கொடுக்கிறேன். 185 00:13:55,502 --> 00:13:57,296 அது நீ இல்லை. அவன் கொடுக்க வேண்டும். 186 00:13:59,047 --> 00:14:01,175 இரு, நீ ஜன்னல் வழியே அவர் ஃபோன் பேசுவதைப் பார்த்தாயா? 187 00:14:03,177 --> 00:14:04,428 இல்லை, அந்த பூத்தைப் பார்த்தேன். 188 00:14:04,928 --> 00:14:08,724 பிறகு எப்படி அவர் யாருக்கு கால் செய்தார், என்ன கூறினார் என்று உனக்குத் தெரியும்? 189 00:14:08,724 --> 00:14:10,434 தெரியவில்லை. அவர் பிறகு என்னிடம் கூறியிருக்கலாம். 190 00:14:10,434 --> 00:14:12,352 அன்றிரவு நான் நிறைய குடித்திருந்தேன், 191 00:14:12,352 --> 00:14:15,731 மேலும் நான் அனைத்தையும் மாற்றி மாற்றிக் கூற அதிக வாய்ப்புள்ளது. 192 00:14:15,731 --> 00:14:17,608 அது எல்லாமே கொஞ்சம் மங்கலாக உள்ளது. 193 00:14:21,945 --> 00:14:23,238 அதற்கு அடுத்த நாள் என்ன நடந்தது? 194 00:14:42,299 --> 00:14:43,133 அடச்சை. 195 00:14:43,133 --> 00:14:46,220 {\an8}டேனி தம்பி - ஃபிஷ் அண்ட் சிப்ஸ் காம்டென் ஹை ஸ்ட்ரீட் மதியம்! ஜாக் 196 00:15:15,457 --> 00:15:19,086 டேனி. சரியான நேரத்திற்கு வந்துள்ளாய். பசிக்கிறதா? 197 00:15:19,086 --> 00:15:21,088 ஆம். 198 00:15:21,088 --> 00:15:23,340 ஹேங்கோவரைப் போக்க ஃபிஷ் அண்ட் சிப்ஸ் போன்று சிறந்தது எதுவுமில்லை. 199 00:15:24,675 --> 00:15:26,552 உப்பு மற்றும் வினிகருடன் பெரிய காட் மற்றும் சிப்ஸ். 200 00:15:26,552 --> 00:15:28,053 அதனுடன் பிக்கிள்டு முட்டை வேண்டுமா? 201 00:15:30,097 --> 00:15:31,390 வேண்டாம், பரவாயில்லை. நன்றி. 202 00:15:32,057 --> 00:15:33,851 நன்றி, டார்லிங். மீதியை வைத்துக்கொள். 203 00:15:35,018 --> 00:15:35,853 நிச்சயமாகவா? 204 00:15:35,853 --> 00:15:36,937 கண்டிப்பாக. 205 00:15:47,281 --> 00:15:49,449 டேனி, உனக்கு என் உதவி தேவை. 206 00:15:49,950 --> 00:15:51,451 எனில் நான் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். 207 00:15:51,451 --> 00:15:54,288 உன் நெஞ்சை அம்பால் தாக்கினால், உனக்கு வலிக்குமா? 208 00:15:55,163 --> 00:15:57,624 - என்ன? - உன் நெஞ்சில் அம்பு தாக்குகிறது. 209 00:15:57,624 --> 00:15:59,710 எளிதான கேள்வி. அது வலிக்குமா? ஆமாவா இல்லையா? 210 00:15:59,710 --> 00:16:01,336 ஆம். வலிக்கும். 211 00:16:02,004 --> 00:16:04,298 சரி. இரண்டாவது அம்பு அதே இடத்தில் உன்னைத் தாக்குகிறது. 212 00:16:04,298 --> 00:16:06,550 - அதிகமாக வலிக்குமா குறைவாக வலிக்குமா? - அதிகமாக. 213 00:16:07,509 --> 00:16:10,554 முதல் அம்பை உன்னால் தவிர்க்க முடியாது என்று புத்தர் கூறுகிறார். 214 00:16:10,554 --> 00:16:12,764 அது வலி. அதை வாழ்க்கை உன் மீது வீசுவது. 215 00:16:12,764 --> 00:16:15,559 ஆனால் இரண்டாவது, அது பயம், பதட்டம். 216 00:16:15,559 --> 00:16:18,437 அது முதல் அம்பைப் பற்றி நாம் நம்மிடம் கூறிக்கொள்ளும் கதை. 217 00:16:18,437 --> 00:16:21,523 அது நீ அனுமதிக்கும் அளவுக்கு வலிக்கும், அல்லது இருக்கவே இருக்காது. 218 00:16:22,566 --> 00:16:23,609 புரிகிறதா? 219 00:16:23,609 --> 00:16:24,985 ஏன் இரண்டு அம்புகள் உள்ளன? 220 00:16:25,611 --> 00:16:26,862 எனக்குத் தெரியவில்லை. 221 00:16:28,071 --> 00:16:31,325 தவறாக எடுத்துக்கொள்ளாதே, உனக்கு தன்னம்பிக்கை இல்லை. 222 00:16:31,909 --> 00:16:33,911 நீ நிமிர்ந்து நிற்க வேண்டும். அப்படித்தான். 223 00:16:33,911 --> 00:16:37,164 உன் தோள்களை பின்னால் கொண்டு செல், தலையை நிமிர்ந்து, உலகைப் பார். 224 00:16:38,123 --> 00:16:39,666 அப்படித்தான். நன்றாக உணர்கிறாய், அல்லவா? 225 00:16:41,126 --> 00:16:42,211 இல்லை. 226 00:16:42,211 --> 00:16:43,629 பார்க்க நன்றாக இருக்கிறது. 227 00:16:43,629 --> 00:16:45,506 ஒருவன் எப்போதும் தன்னைப் பற்றிப் பெருமையாக இருக்க வேண்டும். 228 00:16:48,675 --> 00:16:49,885 ...அது பாதியாகக் குறையும். 229 00:16:49,885 --> 00:16:51,178 சரி. 230 00:16:51,929 --> 00:16:54,264 உன் பிரச்சினை எவ்வளவு மோசமானது? இங்கே. 231 00:16:56,642 --> 00:16:59,019 அவ்வளவு மோசமா? நான் உனக்கு உதவ விரும்புகிறேன், டேனி. 232 00:16:59,019 --> 00:17:02,397 இந்தச் சூழ்நிலை திரும்பி நீ என் மகனாக இருந்திருந்தால்... 233 00:17:03,106 --> 00:17:04,398 உன் அப்பாவும் இதையேதான் செய்திருப்பார். 234 00:17:04,398 --> 00:17:07,027 ஆனால் நீயே உனக்கு உதவிக்கொள்ள இருந்தாய், இல்லையா? 235 00:17:08,403 --> 00:17:09,404 என்னால் முடியவில்லையெனில்? 236 00:17:10,656 --> 00:17:13,492 உன் துணிச்சலை இழக்காமல் இருந்தால் நாம் தோற்க மாட்டோம். 237 00:17:14,742 --> 00:17:16,036 நீங்கள் எப்போதும் புதிராகத்தான் பேசுவீர்களா? 238 00:17:16,578 --> 00:17:19,665 இது செய்யுள் நடை. ஷேக்ஸ்பியர். 239 00:17:19,665 --> 00:17:21,791 நீ ஏன் அவனை நம்பினாய் எனத் தெரிகிறது, டேனி. 240 00:17:21,791 --> 00:17:23,252 எனக்குத் தெரிகிறது. 241 00:17:23,252 --> 00:17:26,755 அந்தத் தருணத்தில் அவர்தான் உனக்குத் தேவையான அனைத்துமாக இருந்துள்ளார். 242 00:17:26,755 --> 00:17:30,968 கனிவு. வழிகாட்டுதல். நியூ யார்க்கில் நடந்ததில் இருந்து வெளியேறுவதற்கான வழி. 243 00:17:30,968 --> 00:17:34,555 ஆனால் யிட்ஸாக் உன் வாழ்வில் வந்ததற்கும் அதையே கூற முடியும். 244 00:17:35,514 --> 00:17:36,765 அரியானாவும். 245 00:17:36,765 --> 00:17:37,850 ஆனால் அதுதான் என் கருத்து. 246 00:17:38,559 --> 00:17:40,435 அவர்கள் அனைவரும் இதில் ஒன்றாக ஈடுபட்டுள்ளனர். 247 00:17:40,435 --> 00:17:46,358 இஸ்ரேலில் இருந்து வந்தவர், பிரிட்டிஷ் பிசினஸ்மேன், அமெரிக்கப் பெண். உன் அப்பா. 248 00:17:46,358 --> 00:17:48,735 அரியானா பின்னால் இதில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம். 249 00:17:48,735 --> 00:17:52,322 என்னைப் பிடிக்க அவளைப் பயன்படுத்தியுள்ளனர். 250 00:17:58,704 --> 00:17:59,788 உங்களிடம் வேறு தியரி உள்ளதா? 251 00:18:02,207 --> 00:18:04,376 இருங்கள், நான் தான் இதையெல்லாம் செய்கிறேன் என நினைக்கிறீர்களா? 252 00:18:07,462 --> 00:18:08,672 ஆம் என்று கூறினால் என்ன செய்வாய்? 253 00:18:09,381 --> 00:18:10,215 நான் செய்யவில்லை. 254 00:18:10,215 --> 00:18:11,800 ஆனால் நீ செய்கிறாய் எனில்? ஆனால் நீ நினைக்கும்... 255 00:18:11,800 --> 00:18:12,885 இல்லை! 256 00:18:23,478 --> 00:18:24,688 டேனி. 257 00:18:26,273 --> 00:18:27,441 எனக்கு உதவி தேவைப்பட்டது. 258 00:18:31,278 --> 00:18:32,738 யாராவது எனக்கு உதவி செய்ய வேண்டியிருந்தது. 259 00:18:34,948 --> 00:18:38,243 ஆனால் உதவி தேவைப்படும் ஒருவரைப் பார்க்கும்போது, அதை வாய்ப்பாகப் பார்ப்பவர்கள் 260 00:18:38,243 --> 00:18:41,246 இந்த உலகத்தில் இருக்கின்றனர். 261 00:18:44,833 --> 00:18:46,418 - யிட்ஸாக்? - வேலை முடிந்ததா, ஜாக்? 262 00:18:46,418 --> 00:18:48,545 - இன்னும் ஒரு நாள். - அதைச் செய்து முடி. 263 00:18:53,300 --> 00:18:56,220 உன் அப்பாவால் உனக்கு உதவ முடிந்திருந்தால் என்ன செய்வாய் டேனி? 264 00:18:56,220 --> 00:18:58,305 அவர் எங்கே இருக்கிறார் எனத் தெரியாது என்றீர்களே. 265 00:18:58,305 --> 00:18:59,264 எனக்குத் தெரியாது. 266 00:18:59,264 --> 00:19:01,683 நாம் கடினமான சூழலில் இருக்கும்போது எது நமக்கு முக்கியமாகத் தேவைப்படும்? 267 00:19:02,476 --> 00:19:03,894 பணம், சரியா? 268 00:19:04,686 --> 00:19:05,729 ஆம். 269 00:19:05,729 --> 00:19:09,066 வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால், உனக்கு 3,000 பவுண்டுகள் கிடைக்கும். 270 00:19:09,775 --> 00:19:12,069 அது சுலபமாக இருக்காது. 271 00:19:13,403 --> 00:19:15,072 சரி. அது என்ன? 272 00:19:15,072 --> 00:19:18,158 நேற்றிரவு ரோல்ஸ் ராய்ஸிஸ் சென்றாரே, அவர் பெயர் ரெஜ்ஜி சில்வர். 273 00:19:18,158 --> 00:19:21,828 அவர் உன் அப்பாவுக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும். 274 00:19:22,454 --> 00:19:24,206 வெளிநாட்டில் உன் அப்பா ஈடுபட்டிருந்த பிசினஸ், 275 00:19:24,206 --> 00:19:26,124 அது ரெஜ்ஜிக்கான சட்டவிரோதமான இறக்குமதியாகும். 276 00:19:26,708 --> 00:19:29,711 உன் அப்பா, யிட்ஸாக், நான் ஆகியோர் சந்தித்து லாபத்தைப் பகிர்ந்துகொள்வதாக இருந்தது. 277 00:19:29,711 --> 00:19:33,006 உனக்கு ஆர்வமில்லாத, எதிர்பாராத நிகழ்வுகளால்... 278 00:19:34,258 --> 00:19:36,677 உன் அப்பாவை அதிகாரிகள் கவனிக்கத் தொடங்கினர். 279 00:19:36,677 --> 00:19:39,388 அதனால்தான் அவர் இங்கிலாந்து வந்தால் கைதுசெய்யப்படுவார். 280 00:19:39,388 --> 00:19:41,765 அதனால் அவர் தனக்கான பங்கைக் கேட்கவில்லை. 281 00:19:43,183 --> 00:19:44,226 ரெஜ்ஜியிடம் அது இன்னும் உள்ளது. 282 00:19:47,229 --> 00:19:48,063 சரி, நீங்கள்... 283 00:19:48,063 --> 00:19:52,568 ரெஜ்ஜி மோசமானவன், ஆனால் அவன் ஒரு குடும்பஸ்தன். 284 00:19:52,568 --> 00:19:54,069 பிசினஸைவிட குடும்பம்தான் முக்கியம். 285 00:19:54,069 --> 00:19:58,073 பீட் போலவே இருக்கும் நீ அவனிடம் சென்று, அவனது பங்கைக் கேட்டால், 286 00:19:58,073 --> 00:20:00,784 அவன் கொடுப்பதற்கான கட்டாயத்தை உணரக்கூடும். 287 00:20:01,827 --> 00:20:03,579 நீங்கள் ஏன் அவரிடம் கேட்க முடியாது. 288 00:20:03,579 --> 00:20:05,163 அது என்னுடையது இல்லை, சரியா? 289 00:20:06,039 --> 00:20:08,458 மேலும், ரெஜ்ஜிக்கும் எனக்கும் இப்போது ஒத்துப் போவதில்லை. 290 00:20:08,458 --> 00:20:12,171 ஆனால் உன் அப்பாவின் பணத்தைக் கேட்கக்கூடிய ஒரே ஆள் நீதான், டேனி. 291 00:20:15,674 --> 00:20:17,593 அதனால்தான் நேற்றிரவு நாம் அந்த வழியாக வந்தோமா? 292 00:20:19,511 --> 00:20:22,306 அது நிறைய பணம். 6,000 பவுண்டு. 293 00:20:22,306 --> 00:20:24,057 3,000 பவுண்டு என்றீர்கள். என்ன... 294 00:20:24,558 --> 00:20:25,809 அது என் கமிஷன். 295 00:20:26,810 --> 00:20:29,563 அப்படிப் பார்க்காதே. அது பிசினஸ் செய்வதற்கான விலை. 296 00:20:29,563 --> 00:20:30,856 நான் உனக்கு உதவ விரும்புகிறேன். 297 00:20:32,274 --> 00:20:35,819 3,000 மூலம் நீ கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கலாம் 298 00:20:35,819 --> 00:20:38,197 அல்லது உன் அப்பாவைத் தேடலாம், டேனி. 299 00:20:39,198 --> 00:20:40,449 நீ பாரிஸில் இருந்து தொடங்கலாம். 300 00:20:41,909 --> 00:20:45,162 3,000 பவுண்டு மூலம் நீ நிறைய செய்யலாம், டேனி தம்பி. 301 00:20:45,162 --> 00:20:47,247 உனக்கு இப்போது நிறைய தேவை. 302 00:20:52,419 --> 00:20:53,420 புரிகிறது. 303 00:20:53,420 --> 00:20:59,092 ரெஜ்ஜி ஆபத்தானவன், அதற்கு நிறைய துணிச்சல் தேவை. 304 00:20:59,092 --> 00:21:00,469 நன்றாகப் புரிகிறது. 305 00:21:00,469 --> 00:21:02,095 - உன்னால் முடியவில்லை எனில்... - நான் செய்வேன். 306 00:21:03,597 --> 00:21:04,723 அப்படித்தான். 307 00:21:06,225 --> 00:21:08,435 நல்ல பையன். உன் அப்பா உன்னை நினைத்துப் பெருமைப்படுவார். 308 00:21:10,771 --> 00:21:14,441 சரி, அந்த வளைந்த தோள்களை உடையவர்கள் யாரும் பாவப்பட்டவர்கள் இல்லை, சரியா? 309 00:21:15,567 --> 00:21:17,528 ரெஜ்ஜி போன்றவர்கள் அதற்குச் சரியாகப் பதிலளிக்க மாட்டார்கள். 310 00:21:17,528 --> 00:21:19,404 நீ அங்கே நிமிர்ந்த முதுகுடனும் 311 00:21:19,404 --> 00:21:20,906 தெளிவான குரலுடனும் போ. 312 00:21:20,906 --> 00:21:22,699 உன்னுடையதை அவனிடம் கேள். 313 00:21:24,451 --> 00:21:25,452 சரியா? 314 00:21:26,119 --> 00:21:27,120 சரி. 315 00:21:27,829 --> 00:21:29,122 நீ யார் என்று அவர்களுக்குக் காட்டு. 316 00:21:30,332 --> 00:21:31,333 போ. 317 00:21:33,460 --> 00:21:34,461 நான் இங்கே இருக்கிறேன். 318 00:22:42,112 --> 00:22:43,113 மன்னிக்கவும். 319 00:22:43,822 --> 00:22:45,490 மாப்பும் வாளியும் பாரின் அடியில் உள்ளது, தம்பி. 320 00:22:52,539 --> 00:22:53,832 மன்னிக்கவும். 321 00:22:55,542 --> 00:23:00,172 நான் டேனி சல்லிவன். பீட் சல்லிவனின் மகன். அவர் உங்களது நண்பர். 322 00:23:01,215 --> 00:23:03,175 கேள்விப்பட்டதே இல்லை. ஓடிவிடு. 323 00:23:05,135 --> 00:23:06,220 அவர் உங்களுக்காக ஒரு வேலை செய்தார். 324 00:23:09,598 --> 00:23:12,100 அவர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கான பங்கை வாங்க வந்துள்ளேன். 325 00:23:14,144 --> 00:23:15,270 என்ன வேலை? 326 00:23:16,897 --> 00:23:18,023 யார் உன்னை அனுப்பியது? 327 00:23:22,486 --> 00:23:25,239 ஜாக். 328 00:23:25,239 --> 00:23:28,283 இதைக் கேளுங்கள், பசங்களா. ஜாக் அனுப்பியுள்ளார். 329 00:23:30,327 --> 00:23:31,411 மேலே சொல். 330 00:23:32,246 --> 00:23:33,580 எந்த ஜாக்? 331 00:23:35,499 --> 00:23:37,084 அவரது கடைசிப் பெயர் தெரியாது. 332 00:23:40,838 --> 00:23:43,257 என் அப்பாவுக்குத் தர வேண்டியதை என்னிடம் கொடுக்கும்படிதான் கேட்கிறேன். 333 00:23:43,257 --> 00:23:45,092 - என்னைத் தொடாதீர்கள்! - வேண்டாம். 334 00:23:45,884 --> 00:23:47,219 அவன் கூற வந்ததைக் கூறட்டும். 335 00:23:47,219 --> 00:23:48,554 இது கோட்பாடு சம்மந்தப்பட்டது. 336 00:23:49,346 --> 00:23:50,889 நான் மட்டும்தான் அவருக்கு இருக்கும் 337 00:23:50,889 --> 00:23:53,100 ஒரே சொந்தம், உங்களால்தான் அவரை இனி என்னால் பார்க்க முடியாது. 338 00:23:53,100 --> 00:23:54,560 அவர் உங்களுக்காகச் செய்ததால்தான். 339 00:23:58,313 --> 00:23:59,523 அதனால் எனக்கு பணத்தைக் கொடுங்கள், 340 00:24:01,316 --> 00:24:02,484 உங்களை விட்டுவிடுகிறேன். 341 00:24:07,781 --> 00:24:08,824 இவனை வெளியே துரத்துங்கள். 342 00:24:08,824 --> 00:24:11,368 இல்லை... என்னை விடுங்கள். ஹேய்! 343 00:24:11,368 --> 00:24:12,870 என் அப்பாவை உங்களுக்குத் தெரியும் என எனக்குத் தெரியும்! 344 00:24:12,870 --> 00:24:14,496 நிறுத்துங்கள். என்னை விடுங்கள்! 345 00:24:16,206 --> 00:24:17,583 என் அப்பாவை உங்களுக்குத் தெரியும் என எனக்குத் தெரியும்! 346 00:24:23,422 --> 00:24:24,548 ஒழிந்துபோ. 347 00:24:35,809 --> 00:24:36,810 ஜாக்? 348 00:24:40,480 --> 00:24:41,481 ஜாக்? 349 00:24:43,442 --> 00:24:44,735 ஜாக்? 350 00:24:47,571 --> 00:24:51,533 ஹாய், ராயல் லண்டன் டிராவல் ஏஜென்சியுடன் என்னை இணைக்க முடியுமா? 351 00:24:51,533 --> 00:24:54,286 டோரீன், ஹாய். நான் டேனி சல்லிவன். ஜாக் இருக்கிறாரா? 352 00:25:17,768 --> 00:25:19,394 ஹாய், மன்னிக்கவும், நான் என் நண்பர் ஜாக்கைத் தேடுகிறேன். 353 00:25:19,394 --> 00:25:20,729 அவர் இங்கே வாடிக்கையாளர் என நினைக்கிறேன். 354 00:25:21,230 --> 00:25:22,231 நீ, வெளியே போய்விடு. 355 00:25:23,065 --> 00:25:25,651 - ஆனால் நான் என்... - வெளியே போ. இப்போதே போகவில்லை எனில் 356 00:25:25,651 --> 00:25:26,902 போலீஸைக் கூப்பிடுவேன். 357 00:25:33,158 --> 00:25:35,827 ஹாய், கொஞ்ச நேரம் முன்பு என்னுடன் வந்த நபர். உங்களுக்கு டிப்ஸ் கொடுத்தாரே, அவரை... 358 00:25:35,827 --> 00:25:38,205 - அதை நான் திருப்பிக் கொடுக்க மாட்டேன். - அது ஒன்றும் எனக்கு வேண்டாம். 359 00:25:38,205 --> 00:25:40,207 - எனக்கு... - ஓய், அவளிடம் அப்படிப் பேசாதே. 360 00:25:52,511 --> 00:25:53,428 மன்னிக்கவும். 361 00:25:53,428 --> 00:25:56,473 நேற்றிரவு என்னுடன் வந்தவரது ஃபோன் எண் கிடைக்குமா? 362 00:25:56,974 --> 00:25:59,059 மக்கள் இந்த இடத்திற்கு ரகசியமாக இருக்க வருகின்றனர். 363 00:26:00,727 --> 00:26:03,522 சரி, நான் உங்களுக்கு பணம் தருகிறேன். என்னிடம்... 364 00:26:04,022 --> 00:26:05,148 போய்விடு. 365 00:26:19,162 --> 00:26:21,290 என்னிடம் பொய் கூறியுள்ளாய்... 366 00:26:22,666 --> 00:26:24,668 நீ என்னைத் தேடினாய் எனப் புரிகிறது. 367 00:26:26,044 --> 00:26:27,921 எங்கே சென்றீர்கள்? 368 00:26:27,921 --> 00:26:30,799 நீ உன்னைப் புரிந்துகொள்ள கொஞ்சம் நேரம் கொடுக்க நினைத்தேன். 369 00:26:31,425 --> 00:26:33,427 இது முழுக்க பணம் பற்றியதாக இருக்கும்போது, 370 00:26:33,427 --> 00:26:35,762 என்னைப் பற்றிக் கவலைப்படுவது போல நடிப்பதை நிறுத்துங்கள். 371 00:26:35,762 --> 00:26:38,599 நீ நடந்துகொள்வது ஏமாற்றமாக உள்ளது, டேனி. 372 00:26:41,351 --> 00:26:43,645 நான் சொதப்பியதைப் பார்த்ததும், என்னை விட்டு ஓடிவிட்டீர்கள். 373 00:26:43,645 --> 00:26:46,148 அப்படித்தான் நினைக்கிறாயா? நீ தோற்றுவிட்டாய் என்றா? 374 00:26:46,815 --> 00:26:48,317 - இல்லை. - ஆனால் நான் எங்கே போவது? 375 00:26:48,317 --> 00:26:49,693 - என்னிடம் பணம் இல்லை. - சரி, அமைதி. 376 00:26:49,693 --> 00:26:50,986 - நான் அமைதியாக விரும்பவில்லை! - அமைதி. ஹேய்! 377 00:26:50,986 --> 00:26:52,571 பார். 378 00:26:52,571 --> 00:26:56,200 வாழ்க்கை உனக்கு சுலபமாக இல்லை எனத் தெரியும். அது துரதிர்ஷ்டம்தான். 379 00:26:57,784 --> 00:26:59,745 ஆனால் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். முடிந்தது முடிந்ததுதான். 380 00:26:59,745 --> 00:27:03,582 நீ உன்னைப் பற்றி வருந்துவதை நிறுத்துவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். 381 00:27:05,792 --> 00:27:07,878 நீயாக நினைத்துக்கொள்ளும் இரண்டாவது அம்பு, நினைவுள்ளதா? 382 00:27:10,005 --> 00:27:11,131 வா. உட்காரு. 383 00:27:15,677 --> 00:27:18,514 இது துணிச்சலுக்கான பாடமாகத்தான் இருந்துள்ளது. 384 00:27:18,514 --> 00:27:20,599 உனக்குத் தேவையான பாடம். 385 00:27:20,599 --> 00:27:22,559 நீ ஏன் இன்னும் இங்கே இருக்கிறாய்? 386 00:27:24,102 --> 00:27:25,521 என்ன சொல்கிறீர்கள்? 387 00:27:25,521 --> 00:27:26,730 நீ ஏன் வீட்டுக்குப் போகக் கூடாது? 388 00:27:29,274 --> 00:27:30,692 ஏனெனில் அவர்கள் என்னை கைது செய்வார்கள். 389 00:27:30,692 --> 00:27:31,777 ஆம், பிறகு? 390 00:27:32,277 --> 00:27:34,279 மோசமாக என்ன நடக்கலாம்? 391 00:27:35,239 --> 00:27:37,991 நீ ரெஜ்ஜியை எதிர்கொள்ள பயந்தாய், இல்லையா? இருந்தாலும் அதைச் செய்தாய். 392 00:27:37,991 --> 00:27:40,619 - என்னை அடித்துத் துரத்தினார்கள். - நீ பிழைத்துக்கொண்டாயே. 393 00:27:41,161 --> 00:27:44,081 நிமிர்ந்த தோள்களுடன் அங்கே நின்றாய். உனக்கானதை நீ கேட்டாய். 394 00:27:45,123 --> 00:27:47,334 சரி, நீ விரும்பிய முடிவுகள் கிடைக்கவில்லை. 395 00:27:48,252 --> 00:27:52,548 ஆனாலும் அது வெற்றிதான். நீ பயந்தாய். அதைச் செய்தாய். விளைவுகளை எதிர்கொண்டாய். 396 00:27:54,633 --> 00:27:55,634 ஓடிக்கொண்டே இருக்காதே. 397 00:27:57,845 --> 00:27:58,846 உன் அப்பா ஓடினார். 398 00:28:00,264 --> 00:28:01,265 இல்லையா? 399 00:28:02,516 --> 00:28:04,601 உன்னிடம் இருந்தும் உன் சகோதரனிடம் இருந்தும் ஓடினார். 400 00:28:04,601 --> 00:28:05,853 உங்களுக்கு என்ன அக்கறை? 401 00:28:14,653 --> 00:28:15,654 டேனி. 402 00:28:20,325 --> 00:28:22,077 உன் அப்பா ஒருபோதும் இருந்திராத நபராய் இரு. 403 00:28:24,121 --> 00:28:26,123 வாழ்க்கையை நிமிர்ந்து எதிர்கொள். 404 00:28:27,875 --> 00:28:29,084 உன்னால் முடியும் எனத் தெரியும். 405 00:28:29,835 --> 00:28:33,380 டேனி, உன் பாஸ்போர்ட்டை அப்புறப்படுத்து. எனக்கான எந்தத் தொடர்பையும் அப்புறப்படுத்து. 406 00:28:35,966 --> 00:28:36,967 வீட்டுக்குப் போ. 407 00:29:25,140 --> 00:29:27,059 அதுதான் நீ கடைசியாக ஜாக்கைப் பார்த்ததா? 408 00:29:28,810 --> 00:29:31,396 நீ திரும்பி வந்ததும் அரியானா இல்லையா? 409 00:29:32,356 --> 00:29:33,398 இல்லை. 410 00:29:38,904 --> 00:29:39,905 யிட்ஸாக்? 411 00:29:41,782 --> 00:29:42,783 இல்லை. 412 00:29:44,159 --> 00:29:46,245 நான் திரும்பி வந்தபோது அவர்கள் இருவருமே போய்விட்டனர். 413 00:29:49,414 --> 00:29:53,043 அவர்களுக்குச் சொந்தமான அனைத்தையும் விட்டுவிட்டு அவர்கள் ஏன் மறைந்துபோக வேண்டும் என நினைக்கிறாய்? 414 00:29:54,127 --> 00:29:55,212 எனக்குத் தெரியவில்லை. 415 00:30:08,225 --> 00:30:10,060 ஏ + ஜே 416 00:30:37,045 --> 00:30:39,298 பாஸ்போர்ட் 417 00:31:12,831 --> 00:31:16,293 போலீஸ்! வீட்டில் யார் இருந்தாலும், கைகளை உயர்த்திக்கொண்டு வெளியே வரவும்! 418 00:31:25,219 --> 00:31:27,304 - முன்னே வா. - வெளியே வா! 419 00:31:27,304 --> 00:31:28,514 வந்துகொண்டே இரு! 420 00:31:31,892 --> 00:31:33,852 கைகளை மேலே தூக்கு! 421 00:31:33,852 --> 00:31:36,063 - வந்துகொண்டே இரு! - மெதுவாக நட! 422 00:31:36,063 --> 00:31:39,149 - முன்னே வா. மெதுவாக. - வந்துகொண்டே இரு! 423 00:31:39,149 --> 00:31:41,568 - தரையில் படு! - தரையில் படு! 424 00:31:41,568 --> 00:31:42,736 இப்போதே தரையில் படு! 425 00:32:06,552 --> 00:32:09,596 உன்னிடம் மீண்டும் கேட்கிறேன். அவர்கள் அதைச் செய்வார்கள் என ஏன் நினைக்கிறாய்? 426 00:32:09,596 --> 00:32:13,475 திடீரென தங்கள் பொருட்களை விட்டுவிட்டு மறைந்துபோவது. 427 00:32:38,709 --> 00:32:42,671 நான் அவளைக் கொன்றுவிட்டேன் என நிஜமாக நினைக்கிறீர்களா? இருவரையும் கொன்றுவிட்டேன் என்று? 428 00:32:48,177 --> 00:32:50,554 நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? நான் அவளை நேசித்தேன். 429 00:32:53,140 --> 00:32:54,725 - கடந்த காலம். - நேசிக்கிறேன். நேசித்தேன். 430 00:32:54,725 --> 00:32:57,394 அதில் என்ன வித்தியாசம் உள்ளது? அவள் போய்விட்டாள், இல்லையா? 431 00:33:00,898 --> 00:33:02,149 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரியும். 432 00:33:02,774 --> 00:33:03,901 நீ ஏன் அதைக் கூறக் கூடாது? 433 00:33:07,029 --> 00:33:08,906 நான் அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டேன் என்று. 434 00:33:08,906 --> 00:33:13,243 வீட்டுக்கு வந்து யிட்ஸாக்கையும் அரியானாவையும் கொன்றுவிட்டேன்... 435 00:33:16,246 --> 00:33:18,832 என்னை ஏமாற்றியதற்குப் பழிவாங்குவதற்காக. 436 00:33:20,000 --> 00:33:21,460 அல்லது ஜாக்கிடம் என்னை அனுப்பியதற்காக. 437 00:33:24,296 --> 00:33:26,131 ஆனால் நான் அது எதையும் செய்யவில்லை. 438 00:33:28,342 --> 00:33:30,219 யாரேனும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 439 00:33:31,553 --> 00:33:34,973 அவ்வளவு காலம் செலவிட்டு, நான் வசிக்கும் பகுதிக்கு வந்தது. 440 00:33:37,100 --> 00:33:40,479 என்னைப் பார்த்துக்கொண்டு, பாதுகாப்பது போல நடித்து, என் மீது அக்கறை கொண்டது. 441 00:33:41,438 --> 00:33:45,567 எதற்காக, 3,000 பவுண்டுக்காகவா? துணிச்சலுக்கான பாடத்திற்காகவா? 442 00:33:45,567 --> 00:33:46,735 அது அர்த்தமுள்ளதாகத் தெரியவில்லை. 443 00:33:46,735 --> 00:33:47,861 இல்லை, தெரியவில்லை. 444 00:33:51,073 --> 00:33:53,784 3,000 பவுண்டுகளுக்கானது இல்லையெனில் அப்படி இருக்கும். 445 00:33:55,160 --> 00:33:57,162 அதிகமான ஆபத்தில் இருந்திருந்தால் இருக்கும். 446 00:34:04,461 --> 00:34:05,921 டேனி, ஆடமுக்கு என்ன ஆனது? 447 00:34:14,638 --> 00:34:15,722 நாம் ஆடம் பற்றிப் பேசிவிட்டோம். 448 00:34:17,641 --> 00:34:18,891 இல்லை. பேசவில்லை. 449 00:34:25,482 --> 00:34:26,525 அவன் இறந்துவிட்டான். 450 00:34:27,609 --> 00:34:28,610 எப்படி இறந்தான்? 451 00:34:32,114 --> 00:34:33,114 நான் முடித்துவிட்டேன். 452 00:34:38,120 --> 00:34:39,121 நான் முடித்துவிட்டேன். 453 00:36:11,255 --> 00:36:13,465 மன்னிக்கவும், இன்று காலை கொஞ்சம் தாமதமாகிவிட்டது. 454 00:36:13,465 --> 00:36:16,552 இங்கே இப்படி வருவதை நான் பாராட்ட மாட்டேன். 455 00:36:19,388 --> 00:36:21,056 உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி, ஜாக். 456 00:36:21,056 --> 00:36:22,140 அப்படியா? 457 00:36:23,851 --> 00:36:26,228 இருந்தாலும் நீங்கள் இங்கே தயக்கத்துடன் இருக்கிறீர்கள், 458 00:36:26,228 --> 00:36:29,857 டேனி நிறைய பிரச்சினைகளில் இருக்கிறான். உங்களால் எனக்கு உதவ முடியும் என நம்புகிறேன். 459 00:36:29,857 --> 00:36:31,817 நான் அவனை மீண்டும் வர வைத்தேன், இல்லையா? 460 00:36:32,651 --> 00:36:34,236 அவன் பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினேன். 461 00:36:35,654 --> 00:36:37,281 அவனுக்கு உண்மை தெரிய வேண்டிய நேரம் இது. 462 00:36:41,451 --> 00:36:43,787 அது ஒரு மோசமான யோசனை என நினைக்கிறேன். 463 00:36:44,621 --> 00:36:45,789 அப்படியா? 464 00:36:45,789 --> 00:36:48,041 அதுதான் அவன் தப்பிக்க ஒரே வழி என்றால்? பிறகு என்ன? 465 00:36:55,007 --> 00:36:57,301 உங்களுக்கோ உங்களுக்குத் தெரிந்தவருக்கோ உதவி தேவைப்பட்டால் 466 00:36:57,301 --> 00:36:59,887 APPLE.COM/HERETOHELP என்ற தளத்திற்குச் செல்லவும் 467 00:37:49,686 --> 00:37:51,688 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்