1 00:00:58,934 --> 00:00:59,768 டிரான்சிஸ்டர் 2 00:00:59,768 --> 00:01:01,395 ஓ, இல்லை, இல்லை, நேயரே. 3 00:01:01,395 --> 00:01:03,897 ஹாட் நம்பர் டூவை பொறுத்த வரையில், நீங்கள் மிகவும் தவறாக சொல்கிறீர்கள். 4 00:01:04,647 --> 00:01:08,527 அந்த இளைஞருக்கு சிறந்த திறமை இருக்கிறது 5 00:01:08,527 --> 00:01:10,696 நல்ல மனமும் இருக்கிறது. 6 00:01:10,696 --> 00:01:13,824 நான், அந்த இளைஞர் இன்னிக்கு இரவு நல்லா ஆடுவார்னு ரொம்ப நம்புறேன் 7 00:01:13,824 --> 00:01:15,325 அவர் சிறப்பாகச் செய்வார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 8 00:01:15,325 --> 00:01:16,535 அது தான், விஸ்டாவில். 9 00:01:16,535 --> 00:01:20,247 நீங்க ஃபாஸ்ட்பால் ஃபிராங்கோடு வோல்ட்ஸின் ஜெட்பால் நிகழ்ச்சியில் பேசுகிறீர்கள் டபிள்யூஓய்பிஎஸில். 10 00:01:20,789 --> 00:01:23,250 உங்க இல்லத்தரசிக்கு உங்க ஆதிக்கத்தைக் காட்டுங்க 11 00:01:23,250 --> 00:01:26,211 விஸ்டாவில்லின் ஹோவர்கார் அரசன், மார்வினில்... 12 00:01:26,211 --> 00:01:29,882 ஜோ, இன்னிக்கு தூள் டக்கரா இருக்க. ஏதாவது முக்கியமான விஷயமா? 13 00:01:29,882 --> 00:01:33,760 நான் இன்னிக்கு ஒரு புது வேலை செய்து பார்க்கப் போறேன். அது ஒரு நல்ல வாய்ப்பு. 14 00:01:33,760 --> 00:01:35,679 என்னோட ஷிஃப்ட்டுகளுக்குத் தடங்கல் இருக்காது, உறுதி. 15 00:01:35,679 --> 00:01:38,056 அப்படியா. உன் வாழ்க்கை, நீதான் பார்த்துக்கணும். 16 00:01:38,056 --> 00:01:39,141 அது விற்பனை வேலை. 17 00:01:39,141 --> 00:01:42,144 பெரிய மாத்தம் தான், ஆனால் அம்மாவோட மருத்துவமனைச் செலவுகள் எல்லாத்துக்கும்... 18 00:01:42,144 --> 00:01:43,270 விற்பனை, இல்ல? 19 00:01:43,270 --> 00:01:45,939 நீ பேராசை பிடிச்சவன்னு நினைக்கவேயில்லை. 20 00:01:46,899 --> 00:01:49,151 ஆனால், கண்டிப்பா நீ போய் முயற்சி செய்யணும். 21 00:01:49,860 --> 00:01:52,696 இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலைன்னா, 22 00:01:53,405 --> 00:01:55,324 நீ இங்கே திரும்பி வந்தும், வேலை செய்யலாம். 23 00:01:57,242 --> 00:02:00,287 சரி. நல்லது, நன்றி, திரு. ஹார்டூனியன். நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு தெரியும். 24 00:02:02,206 --> 00:02:05,000 பதட்டப்படுவதுக்கு அவசியமே இல்லை. ஸ்டாப். 25 00:02:06,710 --> 00:02:10,881 இங்கே, இன்னிக்கு சராசரி நாள்தான், அனைவரோட உற்சாகமும் மேலோங்கி இருக்கு. ஸ்டாப். 26 00:02:10,881 --> 00:02:12,925 என்ன, சிறு தாமதம் எல்லாம் எந்த லூனார் ஆபரேஷனிலும் 27 00:02:12,925 --> 00:02:14,968 இயல்பா நடக்குறது தானே. ஸ்டாப். 28 00:02:14,968 --> 00:02:18,096 உங்க விற்பனை மேனேஜர்களோட ரீஃபண்டுகளை சரிகட்ட, பணப் பட்டுவாடா பண்ணியாச்சு, 29 00:02:18,096 --> 00:02:20,140 ஆனால் நீங்கள் நம்ம வாடிக்கையாளர்களுக்கு இன்றைய தாமதம் 30 00:02:20,140 --> 00:02:23,101 பெரிசாத் தெரியாம, நாளைய புன்னகையை மட்டும் பார்க்கும்படி செய்வீங்கன்னு நினைக்கிறேன். 31 00:02:27,022 --> 00:02:30,651 உண்மையாக, நியூ லைன், ஸ்டான்லி ஜென்கின்ஸ், கமா, பிரைட்சைட் லூனார் ஹெச்கியூ. 32 00:02:34,446 --> 00:02:38,742 காலை வணக்கம், பாஸ். ஷேவ் செய்ய மற்றும் கூலிங் லோஷனுக்குத் தயாரா? 33 00:02:39,451 --> 00:02:40,369 நாசமாப் போச்சு! 34 00:02:40,369 --> 00:02:41,662 இன்னிக்கு இல்ல! 35 00:02:56,844 --> 00:02:59,513 அனைத்து அக்கௌண்ட் மேனேஜர்களுக்கும், புது லைன். உடனடி செயல்பாட்டிற்கு. 36 00:03:03,642 --> 00:03:05,102 வழக்கமா, நான் தான் முதல்ல வருவேன். 37 00:03:06,228 --> 00:03:10,357 அப்படி ஒரு நேரம் தவறாமை. அவன் முட்டைகள சாப்பிடுறதைப் பாரு. 38 00:03:10,357 --> 00:03:12,568 தோற்கப்போறவன் மாதிரி தான் இருக்கான். 39 00:03:14,778 --> 00:03:17,239 ஹே. உனக்கு இன்னிக்கு முக்கியமான காலை... 40 00:03:18,490 --> 00:03:19,658 ஜெர்ரியா? 41 00:03:19,658 --> 00:03:21,827 ஜோயீ. உங்கள திரும்பவும் சந்திக்கிறதுல சந்தோஷம். 42 00:03:22,536 --> 00:03:25,289 என்னை திரு. நிக்கெல்ஸ்னு கூப்பிடலாம், அது திரு. போர்டர். 43 00:03:26,707 --> 00:03:29,543 எனவே, இதுக்கு முன்னாடி ஏதாவது வித்திருக்கியா, மகனே? 44 00:03:29,543 --> 00:03:32,212 இல்லயில்லை. பெரும்பாலும் பலசரக்குக் கடையில தான் வேலை. 45 00:03:32,212 --> 00:03:33,755 சில்லறை விற்பனையா? அடடே. 46 00:03:36,383 --> 00:03:38,927 தெரியுமா, நீ பேசுறபோது நிறைய கண்ணை இமைக்குற. 47 00:03:38,927 --> 00:03:40,470 நிஜமா, நீ அதை சரி செய்யணும். 48 00:03:40,470 --> 00:03:44,016 அப்படி செய்யறவங்களப் பத்தி ஒரு விதமான தப்பான அபிப்பிராயம் வரும்னு, சிலர் சொல்றாங்க. 49 00:03:44,016 --> 00:03:45,267 அது ஒரு இலவச யோசனை. 50 00:03:45,267 --> 00:03:46,768 நான் சொல்ல வந்த யோசனை என்னன்னா, 51 00:03:46,768 --> 00:03:49,479 வாடிக்கையாளர்கள் தான் நமக்கு ரொம்ப முக்கியமானவங்க, 52 00:03:49,479 --> 00:03:52,691 அவங்கள ரொம்ப வற்புறுத்தவும் கூடாது, ஆனால் வேண்டாம்னு சொன்னாலும் ஏற்கக் கூடாது. 53 00:03:52,691 --> 00:03:56,612 ஏன்னா, இறுதியில, நாம முக்கியமா பார்க்க வேண்டியது பிரைட்சைட் கம்பெனியை தானே. 54 00:03:58,322 --> 00:03:59,615 - ம்ம்-என்ன? - ம்ம்-ஆமாம். 55 00:04:01,575 --> 00:04:04,453 எப்படிப்பட்ட காலை. இல்லையா, ஷர்ல்? 56 00:04:04,453 --> 00:04:06,288 உனக்கு ஒரு தந்தி வந்திருக்கு. 57 00:04:06,288 --> 00:04:08,207 சந்திரனிலிருந்து வந்த இதைக் கேளு. 58 00:04:08,916 --> 00:04:11,293 அடுத்த காலாண்டு வரை புதிய லாஞ்சுகள் இல்லைன்னு ஜென்கின்ஸ் சொல்றார். 59 00:04:11,293 --> 00:04:13,837 யாருக்கெல்லாம் ரீஃபண்டு தேவையோ எடுத்துக்கட்டும். 60 00:04:13,837 --> 00:04:17,089 நாசமாப் போச்சு போ! அங்கே மக்கள்கிட்ட வாக்கு கொடுத்துட்டு இருக்கோம். 61 00:04:17,089 --> 00:04:19,468 நம்ம பாஸுகள், இங்கே நம்மள பொய் பேசுறவங்களா மாத்திட்டாங்களே. 62 00:04:19,468 --> 00:04:22,137 நான் இந்த விரும்பத்தகாத-விஷயத்தை எல்லோருக்கும் சொல்லணும். 63 00:04:22,137 --> 00:04:24,181 ஆமாம், ரூட் கெனால் சிகிச்சை கூட பரவாயில்லை என்கிற மாதிரி தான் பேசுற நீ. 64 00:04:24,181 --> 00:04:27,267 பின்ன வேற எப்படி பேசுறதாம்? இதெல்லாம் நடக்காத மாதிரி இருக்கு. 65 00:04:27,851 --> 00:04:31,563 நாம விஸ்டாவில்லை தாண்டிப் போகணும் இல்ல இன்னும் பெரிசா வலை விரிக்கப் பார்க்கணும். 66 00:04:31,563 --> 00:04:35,025 - நான் இப்போ யோசிச்சேன்... - பெரிசா வலை விரிச்சதெல்லாம் போதும். 67 00:04:35,025 --> 00:04:38,862 நாம இருக்குறதையே வச்சு சமாளிக்கிறோம். மேலும் தெரியுமில்ல, சிறந்த விற்பனையாளர்கள்... 68 00:04:38,862 --> 00:04:40,822 தங்களுக்குன்னு தனி ஆடுகளத்தை உருவாக்குவாங்க. 69 00:04:40,822 --> 00:04:42,699 நான் இப்போ உருவாக்குற களத்தைப் போல. ஆனால் நல்ல பழமொழி தான். 70 00:04:42,699 --> 00:04:46,286 இதைவிட மோசமானதெல்லாம் பார்த்தோம். இதோ. அந்த புதுப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடு. 71 00:04:46,286 --> 00:04:49,540 நீ என்ன ஒரு நல்ல லீட்டை அந்த பையன் கிட்ட கொடுத்து வீணாக்கப் போறயா? 72 00:04:50,415 --> 00:04:52,543 அவன் இன்னிக்கு ஒரு விற்பனையும் செய்ய போறதில்லைன்னு நல்லாத் தெரியும். 73 00:04:52,543 --> 00:04:55,045 அட, அட. நாங்க ரொம்ப முயற்சி பண்ணி, நீ நினைப்பது தப்புன்னு காட்டப் போறோம். 74 00:04:55,045 --> 00:04:56,922 சில சமயம் நீ காதுல வாங்கிக்காம பேசுற, ஜாக். 75 00:04:56,922 --> 00:04:59,383 உலகத்துல காதுல வாங்காம இருக்குறவங்க தான் அதிகம், ஷர்ல். 76 00:05:01,093 --> 00:05:02,469 ஹே, இதைப் பார்த்தாயா? 77 00:05:05,347 --> 00:05:08,183 ஜாக், இது சில்வர் கிரீக்கிலிருந்து, சால், 78 00:05:08,934 --> 00:05:10,686 என் பெரிய மகள் நினா, 79 00:05:10,686 --> 00:05:12,896 அப்புறம் இந்த குட்டி ராஸ்கல், வின்னி. 80 00:05:12,896 --> 00:05:17,651 அவன் சரியான விஷமம், தாத்தாவைப் போலவே. சந்திர மண்டலத்துக்குப் போக ஆவலா இருக்கேன். 81 00:05:17,651 --> 00:05:20,529 நாங்க மொத்த குடும்பமும் திரும்பி ஒண்ணா சேர்ந்துட்டோம், உனக்கு தான் நன்றி சொல்லணும். 82 00:05:20,529 --> 00:05:23,699 நான் எப்போதும் உனக்குக் கடன்பட்டிருப்பேன், ஜாக். ஆசிகள். 83 00:05:23,699 --> 00:05:24,783 அழகான குழந்தை. 84 00:05:25,951 --> 00:05:27,911 ரீஃபண்டு, அப்புறம் பெரிய வலையா வீசணும் என்கிற 85 00:05:27,911 --> 00:05:30,998 பேச்செல்லாம் முக்கியமில்லைனு தோணுது, இல்ல? 86 00:05:30,998 --> 00:05:35,878 அவருக்கு மீண்டும் அப்பாவாகக் கிடைத்த வாய்ப்பு. நாம செய்ததும் அவருக்காக தானே. 87 00:05:37,838 --> 00:05:39,131 அதைவிட இன்னும் சிறப்பா இருக்க முடியுமா? 88 00:05:45,888 --> 00:05:46,889 ஹேயா, பாஸ். 89 00:05:46,889 --> 00:05:49,308 - இன்னிக்கு ஆரம்பிக்க ஆவலா இருக்கு. - அது புது சூட், தானே? 90 00:05:49,308 --> 00:05:51,435 - நல்ல புத்திசாலியாத் தெரியற. - ஆம். காலை வணக்கம், மக்களே. 91 00:05:51,435 --> 00:05:53,562 கடவுளே, உங்க மூணு பேரையும் ஒண்ணா பார்க்குறது சந்தோஷம். 92 00:05:53,562 --> 00:05:55,272 இதோ பின்தொடர சில லீடுகள். 93 00:05:55,272 --> 00:05:58,275 நான் இன்னிக்கு ஜோவோட போறேன், சில விஷங்களைக் கத்துக்கலாம். 94 00:05:59,860 --> 00:06:01,069 நல்லது தான், திரு. பில்லிங்க்ஸ். 95 00:06:01,069 --> 00:06:01,987 மன்னிக்கணும். 96 00:06:01,987 --> 00:06:03,322 இவை இன்னிக்கு பார்க்க வேண்டிய லீடுகளா, 97 00:06:03,322 --> 00:06:06,325 அல்லது, இவங்க எல்லாம் தேற மாட்டாங்கன்னு கைவிட்ட நபர்களா? 98 00:06:06,325 --> 00:06:08,994 - இப்போ, உனக்கு என்ன பயமா இருக்கா. - நீ பயப்படாதே, ஜோயீ. 99 00:06:08,994 --> 00:06:11,580 ஞாபகம் வச்சுக்கோ, இன்னிக்கு தான் இந்த வேலையில உன்னுடைய மோசமான நாள். 100 00:06:12,206 --> 00:06:13,415 அவனுக்கு பயமெல்லாம் இல்லை. அவன்... 101 00:06:14,708 --> 00:06:15,709 அவன்... 102 00:06:17,544 --> 00:06:19,713 அடடா, இல்ல. அது வந்து... பரவாயில்லை. 103 00:06:19,713 --> 00:06:23,884 - நல்லா துடைக்க முடியுது, மறைஞ்சு போகுது. - இல்ல, வேண்டாம், ஹே, கஷ்டப்படாதே, மகனே. 104 00:06:23,884 --> 00:06:25,302 பல காலை வேளைகள்ல இன்னும் மோசமா இருப்பேன். 105 00:06:25,302 --> 00:06:28,055 அதோட, இன்னொரு டை வச்சிருக்கேன், இந்த சூட்டோட நல்லா பொருந்தும். 106 00:06:28,055 --> 00:06:30,390 நாம போகலாம், இவங்கள தனியாப் புலம்ப விடுவோம். 107 00:06:30,390 --> 00:06:32,893 - நன்றி. - எழுதிக்கலாம், நான் புலம்பலை! 108 00:06:32,893 --> 00:06:33,977 வாயை மூடு, ஹெர்ப். 109 00:06:33,977 --> 00:06:36,730 இந்தாங்க. உங்களுக்காக நான் நல்லதாத் தரேன். 110 00:06:36,730 --> 00:06:38,941 உன்னை நீயே காப்பாத்திக்கொள், எட். 111 00:06:38,941 --> 00:06:40,108 அட, கடவுள் உனக்கு நல்லது செய்யட்டும், ஷர்ல். 112 00:06:40,108 --> 00:06:43,445 நீ எப்போதும் ஆபத்துல இருக்குறவங்கள காப்பாத்த வந்தது போல, உதவி செய்யற. 113 00:06:43,445 --> 00:06:47,616 ஆம். இது ்குழந்தைகள் காப்பகம் இல்ல, பிசினஸ்னு, நீ ஜாக்குக்கு ஞாபகப்படுத்தணும். 114 00:06:47,616 --> 00:06:49,284 ஆம், நிச்சயமா. வா, வா, போகலாம். 115 00:06:49,284 --> 00:06:50,577 இனிய காலைப் பொழுதாக இருக்கட்டும். 116 00:06:50,577 --> 00:06:51,495 நீ அதைப் பார்த்தாயா... 117 00:06:52,621 --> 00:06:54,456 இதை எனக்கு இரவல் தந்ததுக்கு நன்றி, திரு. பில்லிங்க்ஸ். 118 00:06:54,456 --> 00:06:56,375 திரும்பவும் அப்படிக் கூப்பிட்டா, அஞ்சு டாலர்கள். 119 00:06:57,292 --> 00:06:58,293 சரி தான், டீல், ஜாக். 120 00:07:01,255 --> 00:07:03,590 அந்த டை என் அப்பாவுடையது. உனக்கு நல்லா பொருந்துது. 121 00:07:04,216 --> 00:07:06,176 ஹே, உன் முதல் கிராக்கியை பார்க்க தயாரா? 122 00:07:09,346 --> 00:07:11,306 நிச்சயமா. ஆனால் நீங்க விக்குறத முதல்ல பார்க்க வேண்டாமா? 123 00:07:11,306 --> 00:07:13,392 என்ன, பார்த்து இன்னும் அதிகமா பதட்டப்படறதுக்கா? 124 00:07:13,392 --> 00:07:17,813 இல்லயில்ல. நான் சொல்ல வந்தது, நீங்க கொடுத்ததை எல்லாம் படிச்சேன். 125 00:07:17,813 --> 00:07:19,898 நான் செய்ய விரும்பாதது, 126 00:07:20,440 --> 00:07:21,775 நீ சிறப்பா பேசப்போற, மகனே. 127 00:07:22,734 --> 00:07:25,904 சரியா? இது ஒரு பெண்ணுக்கு அழைப்பு விடுவதைவிட சுலபம் தான். 128 00:07:25,904 --> 00:07:29,658 - யாரு அதெல்லாம் செய்து பார்த்தா? - சரி தான், நியாயம் தான். 129 00:07:29,658 --> 00:07:31,869 சரி, நீ முதல்ல கார் ஓட்டியபோது எப்படி இருந்தது? 130 00:07:32,911 --> 00:07:34,413 அட, நிஜமாவே அது தெரிஞ்சா நல்லாயிருக்கும். 131 00:07:35,664 --> 00:07:39,084 சரி, அப்போ நீ என்ன தான் செய்திட்டு இருந்த, ஜோ? 132 00:07:40,335 --> 00:07:41,170 நாம... ஹே, இல்ல. 133 00:07:41,170 --> 00:07:44,131 நீ பால் விளையாடும் போது, முழு வாய்ப்பையும் எதிர்கொண்டு, 134 00:07:44,131 --> 00:07:46,133 எல்லையைப் பார்த்து அடிச்சு... 135 00:07:47,050 --> 00:07:49,261 நான் விளையாடியதை விட, நிறைய பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். 136 00:07:50,929 --> 00:07:53,473 இங்க ஒரு சின்ன லீக் அணி இருக்கு. தி வோல்ட்ஸ். 137 00:07:55,684 --> 00:07:58,645 பொறு. நீ சொல்லாதே. 138 00:07:58,645 --> 00:08:00,147 என்ன சொல்றீங்க? 139 00:08:00,147 --> 00:08:02,649 இப்போ, நான், ஏன் நீ ஒரு ரசிகனா இருப்பன்னு நினைக்கலை. 140 00:08:02,649 --> 00:08:05,068 இல்ல, இல்ல, உண்மையில எனக்கு ரொம்ப பிடிக்கும். 141 00:08:06,153 --> 00:08:09,489 சரி, இன்னிக்கு காலையில, நம்ம எல்லோருக்கும் டிக்கெட்டுகள் வாங்கிட்டேன். 142 00:08:10,532 --> 00:08:12,826 முன் வரிசை, ரொம்ப பக்கத்துல. 143 00:08:13,493 --> 00:08:14,786 இன்னிக்கு ராத்திரியா? 144 00:08:15,621 --> 00:08:16,997 அது ரெண்டு அரை-இறுதிச் சுற்றின் ஆட்டம். 145 00:08:18,707 --> 00:08:19,708 ஹிக்கின்ஸ் பிட்ச் செய்கிறார். 146 00:08:20,292 --> 00:08:21,710 சரி, ஆம், அது தான். 147 00:08:22,211 --> 00:08:25,797 உன் முதல் நாள் சிறப்பா போச்சுன்னு அப்புறமா வாழ்த்திட்டு சொல்லலாம்னு நினைச்சேன். 148 00:08:25,797 --> 00:08:27,466 - இப்போ குட்டு வெளியாயிடுச்சு. - ஆம். 149 00:08:27,466 --> 00:08:30,928 அடடா, ஜாக்! அதாவது, அதுக்கு தகுதி இருக்குமான்னு கூட இன்னும் தெரியலை, 150 00:08:30,928 --> 00:08:32,804 ஆனால், நான் கண்டிப்பா அதுக்காக உழைப்பேன். 151 00:08:33,639 --> 00:08:34,806 சரி. 152 00:08:34,806 --> 00:08:38,227 சரி, வா, இந்த நெருக்கடியை உடனே சமாளிச்சு, உன்னை நல்ல விற்பனையாளனா ஆக்கலாம். 153 00:08:40,102 --> 00:08:42,773 சரி. சரி. ஆமாம், இதோ போகலாம். 154 00:08:52,449 --> 00:08:53,283 உங்களுக்கு உதவலாமா? 155 00:08:53,867 --> 00:08:55,744 ஹை, ஆம். நான் ஜோயீ ஷார்டர். 156 00:08:57,454 --> 00:09:01,250 நான் பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் ஆளு. 157 00:09:02,000 --> 00:09:03,085 அதாவது, மேடம், 158 00:09:03,085 --> 00:09:04,962 இன்றைய பொழுதுல நிறைய பேருக்குத் தெரியலை 159 00:09:04,962 --> 00:09:07,840 அவங்களுக்கு என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்குன்னு 160 00:09:07,840 --> 00:09:12,094 அதாவது, அவங்களுக்கு, கட்டுப்படியாகுற புதிய வாழ்க்கையை, நடத்தலாம். 161 00:09:13,762 --> 00:09:15,389 சரி, உங்களுக்கு ரொம்ப வேலை பளு இருப்பது புரியுது 162 00:09:15,389 --> 00:09:17,266 இந்த குட்டி தேவதையோட வேலை. நாங்க திரும்பி அப்புறம் வரலாமா? 163 00:09:17,266 --> 00:09:19,309 - கண்டிப்பா. - நல்லது. நன்றி. 164 00:09:19,309 --> 00:09:20,644 ரெண்டு பேருக்கும் நல்ல நாளாக இருக்கட்டும். 165 00:09:20,644 --> 00:09:23,730 ஆம், உங்களுக்கும் தான், மேடம். நல்ல குடும்ப... அழகான... 166 00:09:27,276 --> 00:09:28,777 நான் நினைச்சதை விட கேவலமா இருந்தது. 167 00:09:28,777 --> 00:09:30,279 ஹே. 168 00:09:30,279 --> 00:09:33,198 உன்னை நீயே இப்படி கடிஞ்சுக்குறது நல்லது தான், ஆனால்... 169 00:09:35,868 --> 00:09:39,162 நான் பார்த்ததுல, அது தான் நல்ல முதல் முயற்சி. 170 00:09:43,041 --> 00:09:45,836 மார்வ், அன்பே! நீ இதைப் பார்க்கணும்! 171 00:09:45,836 --> 00:09:47,337 அனுபவம் முதிர்ந்த விற்பனையாளர்கள், நல்ல வாடிக்கையாளர் கிடைத்தால் 172 00:09:47,337 --> 00:09:49,423 எப்படி அதை கையாளுவாங்கன்னு ஜால்ரா போடுறவனுக்கு காட்டலாம், சரியா? 173 00:09:49,423 --> 00:09:52,217 அந்த மாதிரி பேச்சுக்கு அவசியமே இல்லை, எட். எதுவானாலும் நான் நல்லா முயற்சி செய்வேன். 174 00:09:52,217 --> 00:09:55,804 இது ரொம்ப சரியான நேரம், நிஜமா. எவ்வளவு சீக்கிரம் போகலாம்? 175 00:09:55,804 --> 00:10:00,100 தனக்கு என்ன வேணும்னு ஒரு பெண்ணுக்குத் தெரியும். பூமியின் மிக அற்புதமான, அரிய படைப்பு. 176 00:10:00,100 --> 00:10:01,643 அந்த ஜாக்கூசியைப் பாருங்க. 177 00:10:01,643 --> 00:10:04,396 இப்போ, உங்களை அதுல, நல்ல ஒரு நீச்சல் உடையில, கற்பனை செய்யுங்க... 178 00:10:04,396 --> 00:10:05,731 காத்திருக்க முடியாத அவசரம் என்ன? 179 00:10:07,941 --> 00:10:08,984 இந்த கேவலமானவங்கள யார் உள்ள விட்டா? 180 00:10:08,984 --> 00:10:10,611 அன்பே, நீ இதைப் பார்த்தா குதிப்ப. 181 00:10:10,611 --> 00:10:12,905 நாம இருவரும் சேர்ந்து எங்கேயாவது போறதைப் பத்தி கொடுத்த வாக்குறுதியெல்லாம், 182 00:10:12,905 --> 00:10:16,283 தனியா எங்கேயாவது போகலாம்னு சொன்னயே. 183 00:10:16,283 --> 00:10:18,202 நான் இந்த உத்தமமான இடத்தை கண்டுபிடிச்சுட்டேன். 184 00:10:20,704 --> 00:10:23,624 தெரியும், திரு. மேபர்ன். ஆனால் என் வாழ்க்கையில் மிக கஷ்டமான முடிவுகள்ல, 185 00:10:24,208 --> 00:10:26,251 என் மனைவிக்குத் தான் சரியான விடை தெரியும். 186 00:10:26,251 --> 00:10:29,129 டைம்-ஷேர் தேர்வுகளும் இருக்குன்னு சொல்லிக்க விரும்புறேன் 187 00:10:29,129 --> 00:10:31,632 அவ்வப்போது தப்பிச்சு போறதுக்கு. பெரிய சந்தா எல்லாம் கட்டத் தேவையில்லை, 188 00:10:31,632 --> 00:10:34,176 - அப்படியே போய், கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம். - புரியுது. 189 00:10:34,176 --> 00:10:37,137 அங்கே போக, திரைப்படக் கலைஞர்களின் சம்பளம் இருந்தால் தான் முடியும்னு நினைச்சேன், இல்லயா? 190 00:10:37,137 --> 00:10:41,558 நான் தப்பிச்சு போறதெல்லாம் இல்லை, மார்வ். நாம ரெண்டு பேர் மட்டும்னு சொன்ன. 191 00:10:41,558 --> 00:10:45,812 அதேதான்! நீங்க இருவரும் நிரந்திரமா பகிரக்கூடிய வீடு. 192 00:10:45,812 --> 00:10:50,984 இல்ல, சில சமயத்துல உண்மையான ஆண்கள், தேர்வுகளை மறைவா, கட்டுப்படியாற மாதிரி வச்சுப்பாங்க. 193 00:10:50,984 --> 00:10:53,445 - உனக்கு ஆறு வருஷம் ஆகுதா? - நான் அதுக்கு பதில் சொல்ல மாட்டேன். 194 00:10:53,445 --> 00:10:57,032 அப்படின்னா இந்த விஷயத்துல பேசாம இருக்கியா, ஏன்னா உனக்கு எதுவும் தெரியாது, சரியா? 195 00:10:57,032 --> 00:10:58,617 உனக்கு எதுவும் பிரச்சினை இருக்கா, மிஸ்டர்? 196 00:10:59,451 --> 00:11:01,328 இல்ல, மேடம். இல்ல, மேடம். அது வந்து... 197 00:11:01,328 --> 00:11:05,457 எனக்கு எல்லாம் பரவாயில்லை. அதுவும் அழகுதான். அது இயல்பு தானே. 198 00:11:06,458 --> 00:11:10,170 - இல்ல, சார், காதல் பல-வகை அழகுள்ளது. - என் வீட்டை விட்டுப் போடா, மோசக்காரா. 199 00:11:10,170 --> 00:11:12,297 - நான்... - உடனே வெளியே போ! 200 00:11:12,297 --> 00:11:13,841 - சரி. - உடனே! 201 00:11:15,759 --> 00:11:17,803 எனவே, வழக்கமா மதிய உணவின்போது, 202 00:11:17,803 --> 00:11:20,681 நடந்த நல்ல விஷயங்களப் பத்தியெல்லாம் ஒரு அப்டேட் பண்ணுவோம். 203 00:11:21,598 --> 00:11:22,724 நான் முயற்சியாவது செய்வேன். 204 00:11:23,433 --> 00:11:24,893 என்னால ஒரு வீட்டுக்குள்ள கூட போக முடியலை. 205 00:11:25,561 --> 00:11:29,731 டாக்டர், வீட்டு வாசலைத் தாண்டி போக முடியல. அது தான் கடைசி கட்டம் போலும். 206 00:11:30,357 --> 00:11:34,236 ஜாக் ரொம்ப பொறுமையா இருந்தார். எதிர்பார்த்த அளவு செய்ய முடியலையேன்னு இருக்கு. 207 00:11:34,236 --> 00:11:35,320 இருக்கலாம். 208 00:11:35,320 --> 00:11:37,656 வீட்டுக்குள்ளயே போக முடியலைன்னா அது ரொம்ப வருத்தம் தான். 209 00:11:37,656 --> 00:11:41,368 நிச்சயமா பி-பிளெக்ஸ் விற்கக்கூடிய ஒரு லீடை கோட்டைவிட்டுட்டு, இப்படிச் சொல்றவரைப் பாரு. 210 00:11:41,368 --> 00:11:42,870 நான் அந்த லீடை விட்டுவிட மாட்டேன், எட். 211 00:11:43,745 --> 00:11:47,040 ஹே, நான் உனக்கு வித்த அந்த டி-பிளெக்ஸ், ஞாபகம் இருக்கா? 212 00:11:47,749 --> 00:11:51,628 அதைப் பத்தி சொன்ன சிறப்பான விஷயங்கள் எதுவும் உனக்கு இப்போ உதவுமா? 213 00:11:52,296 --> 00:11:53,839 ஆம், உண்மையிலேயே எல்லாம் தெரிஞ்சு வச்சிருந்த. 214 00:11:54,673 --> 00:11:55,549 அதோட... 215 00:11:58,010 --> 00:11:59,845 உண்மையைச் சொன்னா, அது ஜாக்கோட உரையால தான். 216 00:11:59,845 --> 00:12:02,181 அவர் பக் மேன்சலைக் கூப்பிட்டு பேசினது, எல்லாம் உதவியது. 217 00:12:02,806 --> 00:12:04,516 ஒவ்வொரு நிமிடமும் ஒண்ணு பிறக்குது. 218 00:12:05,225 --> 00:12:06,226 யாரு, நானா? 219 00:12:07,102 --> 00:12:10,939 வரலாறு படைத்த அமெரிக்கர் திரு. மேன்சல், வாரத்துல ரெண்டு நாள், தன்னுடைய ஏ-பிளெக்ஸ் வீட்டிலிருந்து 220 00:12:10,939 --> 00:12:14,234 ஃபோன் போட்டு, நமக்கு விற்பனை செய்ய உதவுவார்னு நினைக்கிறயா நீ? 221 00:12:15,235 --> 00:12:17,321 அதெல்லாம் முன்பதிவு செய்து வச்சிருப்பது. 222 00:12:17,321 --> 00:12:19,448 இதெல்லாம், அதாவது, மக்களின் நல்லெண்ணத்தைப் பெற 223 00:12:19,448 --> 00:12:20,741 ஜாக் செய்யும் தந்திரங்கள். 224 00:12:20,741 --> 00:12:21,909 அதுதான் விற்பனை, முதல் வகுப்புக்காரனே. 225 00:12:21,909 --> 00:12:24,912 இந்த நற்செய்தியை உனக்குச் சொல்ல ஈஸ்டர் பன்னி வரமுடியலேயேன்னு வருத்தம் தான். 226 00:12:24,912 --> 00:12:26,079 இல்ல, எனக்குத் தெரியும். 227 00:12:27,414 --> 00:12:29,374 என்ன தெரியும்? நீங்க ரெண்டு பேரும் பிங்கோ விளையாடுற 228 00:12:29,374 --> 00:12:30,584 கிழவிகள் மாதிரி அரட்டை அடிங்க. 229 00:12:30,584 --> 00:12:32,294 நான் போய் விற்பனையை பார்க்கணும். 230 00:12:33,921 --> 00:12:35,047 ரொம்ப கடுமையா உழைக்குறார், இல்ல? 231 00:12:35,047 --> 00:12:36,340 நாம எல்லோருமே தான். 232 00:12:37,257 --> 00:12:41,178 நான் சீக்கிரமா உணவை சாப்பிட்டுட்டு, வேலையை கவனிக்கப் போறேன். நீயும் போகணும். 233 00:12:52,523 --> 00:12:54,608 உன்னைப் பார்த்துக்கொள். 234 00:12:54,608 --> 00:12:55,817 ச்சே! 235 00:12:58,529 --> 00:13:00,489 ஹோம் சோனுக்கு பின்னாடி அஞ்சு டிக்கெட்டுகள். என்ன விலையானாலும் பரவாயில்லை. 236 00:13:00,489 --> 00:13:02,115 இப்போ நாம எதை கொண்டாடுறோம்? 237 00:13:02,115 --> 00:13:04,243 ஹே, இதெல்லாமே கொண்டாட்டம் தான், ஷர்ல். 238 00:13:04,243 --> 00:13:06,745 ஹாட்-டாகுகள், சந்தோஷமான குடும்பங்கள், பசும் புல்வெளிகள். 239 00:13:06,745 --> 00:13:08,747 உனக்கு அதெல்லாம் பிடிக்கலைன்னா, உங்கிட்ட ஏதோ கோளாறு இருக்கு. 240 00:13:08,747 --> 00:13:11,917 அதோட, பசங்களுக்கு அந்த சில்லறையை வச்சு கொஞ்சம் பாப்கார்ன் வாங்கிடு. உனக்கும். 241 00:13:11,917 --> 00:13:15,420 - நான் இதை செலவா காட்டவா? - நிச்சயமா இல்ல. இது என் செலவு. 242 00:13:15,420 --> 00:13:19,883 தாமதத்தைப் பத்தி வித்தவங்க எல்லோர்கிட்டயும் பேசினேன். 48 பேருல, ஆறு பேரை இழந்துட்டோம். 243 00:13:20,884 --> 00:13:22,636 மிட்செல் குடும்பத்துக்கு, குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி லான்ச்சு ஆகணும். 244 00:13:22,636 --> 00:13:23,971 இன்னும் சில மாதங்கள் கழிச்சு முயற்சி பண்ணுவோம். 245 00:13:23,971 --> 00:13:27,015 அதோட அந்த பர்ல்மன் குடும்பத்துக்கு, அங்கே கைரோபிராக்டர்கள் இல்லன்னு கவலையா இருக்கு. 246 00:13:27,015 --> 00:13:28,892 குறைந்த ஈர்ப்பு, முதுகெலும்புக்கு நல்லது. 247 00:13:28,892 --> 00:13:30,853 நான் இந்த மக்களை சந்தோஷப் படுத்த முயற்சி பண்ணுறேன், ஜாக். 248 00:13:30,853 --> 00:13:31,937 ஆனால் கெட்ட செய்தி சொன்னா, 249 00:13:31,937 --> 00:13:33,897 அவங்க நூறாயிரம் புது பிரச்சினைகள கற்பனை செய்ய ஆரம்பிக்கிறாங்க. 250 00:13:33,897 --> 00:13:36,066 ஆனால் அது நல்ல அறிகுறி, ஷர்ல். 251 00:13:36,066 --> 00:13:39,945 நாம அவங்க பிரச்சினைகளை தீர்ப்போம்னு தானே நம்மகிட்ட அதையெல்லாம் சொல்றாங்க. 252 00:13:39,945 --> 00:13:41,738 ஒரு வீட்டுக்குள்ளயாவது அவன் போக முடிஞ்சுதா? 253 00:13:43,031 --> 00:13:45,659 போவான். நாம விளையாட்டைப் பார்க்குறபோது, அதையெல்லாம் உங்கிட்ட சொல்றேன். 254 00:13:45,659 --> 00:13:47,160 - அவன் போகலைன்னா? - நான் அப்படி யோசிக்கவே இல்லை. 255 00:13:47,160 --> 00:13:48,662 அதனால தான் நான் யோசிக்கணும். 256 00:13:49,955 --> 00:13:53,250 அவன் போக முடியலைன்னா, நீ அவனை வெளியே அனுப்பிடுவியா? 257 00:13:54,126 --> 00:13:56,086 உன் கவனத்தை திரும்பவும் விற்பனையில செலுத்து. 258 00:13:58,964 --> 00:14:00,465 ரொம்ப கடுமையா பேசுற, ஷர்ல். 259 00:14:02,259 --> 00:14:03,093 ஆனால் அது தான். 260 00:14:04,553 --> 00:14:07,472 - என்னிக்கானாலும் அவனை நம்புவேன். - உறுதியாத்தான் சொல்றயா? 261 00:14:07,472 --> 00:14:10,767 வீட்டுக் கூரையிலிருந்து கத்தணும்னா கூட கத்துவேன். 262 00:14:10,767 --> 00:14:13,020 நீ எல்லோரையும் காப்பாத்திட்டு இருக்க முடியாது, ஜாக். 263 00:14:19,067 --> 00:14:20,736 நாங்க செல்லப் பிராணிகளை வரவேற்கிறோம். 264 00:14:20,736 --> 00:14:24,448 நான் இங்க 20 வருஷமா வேலையில்லாம, கஷ்டப்பட்டுட்டு இருக்கேன், 265 00:14:24,448 --> 00:14:28,493 இந்த முலாம் பூசின பொய்யைச் சொல்லி, இருக்குறதையும் எங்கிட்டேர்ந்து எடுத்துட்டுப் போக பார்க்குறயா? 266 00:14:28,493 --> 00:14:30,746 உங்களப் போல ஒருத்தர் இவ்வளவு உழைச்சு, 267 00:14:30,746 --> 00:14:33,415 - நிச்சயமா உங்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும். - உங்ககிட்டேர்ந்து இல்ல. நன்றி. 268 00:14:33,415 --> 00:14:35,667 நான் சொல்றதை நம்ப வேண்டாம். இந்த எண்ணிக்கையை எல்லாம் பாருங்க. 269 00:14:35,667 --> 00:14:37,044 சொல்லு, நீ உன் வீட்டுக்கு சொந்தக்காரனா? 270 00:14:37,044 --> 00:14:41,006 நல்லவங்களை சாகடிக்க, எவ்வளவு பேர் இது போல சூட்டு போட்டுட்டு 271 00:14:41,006 --> 00:14:43,592 கிளம்பியிருக்கீங்கன்னு சொல்ல முடியுமா உன்னால? 272 00:14:43,592 --> 00:14:46,053 நீங்க எங்கள தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க, மிஸ்டர். நான் நிஜமா விஸ்டாவிலேர்ந்து... 273 00:14:46,053 --> 00:14:48,180 நீங்க எல்லாம் திருட்டுப் பசங்க! இரத்தக் காட்டேறிங்க, நீங்க எல்லோருமே! 274 00:14:48,180 --> 00:14:50,057 - மன்னிக்கணும், நீங்க இப்படி... - எனவே இவன் தான் ஆசையோட இருக்குற திருடனா? 275 00:14:50,057 --> 00:14:51,141 அவனுடைய பிரகாசமான எதிர்காலம்? 276 00:14:51,141 --> 00:14:54,603 ஒரு சொங்கி-மூஞ்சி மாங்கா-மடையன்கிட்டேர்ந்து வர்ற அறிவுறையை கேட்க... 277 00:15:05,697 --> 00:15:07,074 நீங்க தான் திருமதி. மேபர்ன்னு நினைக்கிறேன். 278 00:15:07,074 --> 00:15:10,827 நான் தான், ஆனால் நீங்க எது விக்குறதானாலும், என் கணவர் தான் அதை முடிவு செய்வார். 279 00:15:10,827 --> 00:15:11,912 மார்வின். 280 00:15:12,579 --> 00:15:14,623 சரிதான். இனிய நாளாக இருக்கட்டும். 281 00:15:14,623 --> 00:15:17,084 மன்னிச்சிடுங்க, மேடம், ஆனால்... 282 00:15:19,086 --> 00:15:22,130 உங்களுக்கு உறுதியா தெரியுமா 283 00:15:23,340 --> 00:15:27,344 நீங்க நினைக்குறது மாதிரியே இது சந்தோஷமா இருக்கிற இல்லம் தான்னு? 284 00:15:28,178 --> 00:15:29,346 என்னது? 285 00:15:29,346 --> 00:15:31,265 சொந்த அனுபவத்துல எனக்கே தெரியும்... 286 00:15:32,432 --> 00:15:35,978 ஒரு அன்புள்ள திருமணம், நம்பிக்கையின் அடிப்படையில தான் வளருதுன்னு. 287 00:15:37,604 --> 00:15:40,274 எனவே, நீங்க ஒரு வெளியூர்ப் பயணத்தை திட்டமிட்டாலோ 288 00:15:40,274 --> 00:15:43,777 அல்லது இங்கேர்ந்து வெகு தூரத்துல ஒரு புதிய ஆரம்பத்தை விரும்பினாலோ, 289 00:15:44,653 --> 00:15:48,323 உங்களுக்கு ரொம்ப நல்ல டீலா தர, என்னால முடிஞ்சதைச் செய்யறேன். 290 00:15:51,577 --> 00:15:53,036 போதும் போதும். நன்றி. 291 00:15:53,036 --> 00:15:54,621 உங்களுக்கு சின்டியைத் தெரியுமா? 292 00:15:57,249 --> 00:15:59,084 நான் அவங்கள சந்திச்சேன். இங்கே. 293 00:16:01,128 --> 00:16:01,962 இதுக்கு முன்னாடி. 294 00:16:03,338 --> 00:16:07,968 நான் சொல்றது ஒண்ணுதான், உங்களப் போல ஒரு நல்ல தரமுள்ள பெண்மணியை, 295 00:16:08,594 --> 00:16:09,928 இதோட நல்லா நடத்தணும். 296 00:16:16,185 --> 00:16:17,603 நீ சுலபமா சொல்ற. 297 00:16:18,687 --> 00:16:22,191 ஆனால், ஒரு விஷயம் என்னன்னா, அவர் உங்களுக்கும் அதே மாதிரி தரத் தயாரா இருந்தார். 298 00:16:25,819 --> 00:16:27,362 {\an8}பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் 299 00:16:27,362 --> 00:16:29,489 {\an8}பூமியில எங்கே இதுபோன்ற வாழ்க்கையைப் பெற முடியும்? 300 00:16:35,495 --> 00:16:37,706 இது நீங்க தப்பிச்சுப் போக, ரொம்ப நாளா கண்ட கனவு இடமா இருக்கலாம். 301 00:16:52,471 --> 00:16:54,515 சரி, என்ன தெரியுமா? நான் இன்னிக்கு நிறையா கத்துக்கிட்டேன். 302 00:16:56,391 --> 00:16:58,852 நாளைக்கு இன்னும் நிறையா லீடுகள் கிடைக்கப் போகுது, சரியா? 303 00:17:02,564 --> 00:17:04,650 உனக்கு முன்னாடி இருந்த அந்த பாட்டியை நினைத்துக்கொள், 304 00:17:04,650 --> 00:17:07,944 உன்னை உள்ளே வந்து தன் குக்கீகளை சுவைக்க கெஞ்சினாங்களே? அவங்களுக்கு உன்னை பிடிச்சுது. 305 00:17:07,944 --> 00:17:09,070 இருக்கலாம். 306 00:17:09,070 --> 00:17:12,491 எனவே, நான் தான் அவங்கன்னு வச்சுக்கோ, சரியா? இப்போ நல்லா முயற்சி செய்தயே. 307 00:17:12,491 --> 00:17:15,410 கிச்சன்லேர்ந்து குக்கீஸோட வாசம் அப்படியே காத்துல மணக்குது. 308 00:17:15,410 --> 00:17:18,454 கருகிப் போறதுக்கு முன்னாடி, இப்போவே நான் அதை அவனுலேர்ந்து வெளியே எடுக்கணும். ஆரம்பிக்கலாம். 309 00:17:20,207 --> 00:17:21,750 சரி, வந்து மேடம், 310 00:17:21,750 --> 00:17:23,836 நீங்க ஒரு நிமிடம் எனக்கு ஒதுக்க முடியும்னா... 311 00:17:23,836 --> 00:17:26,088 இல்லயில்ல. அதெல்லாம் இப்போ கருகிட்டு இருக்கு. இப்போதானே சொன்னேன். 312 00:17:26,088 --> 00:17:28,382 சரி, நீங்க திரும்பி வர வரைக்கும் நான் காத்திட்டு இருக்கேன்... 313 00:17:28,382 --> 00:17:31,093 மூக்கை நுழைக்குறயா? ஓ, வேண்டாம், நன்றி. 314 00:17:31,635 --> 00:17:33,512 மேடம், என்னை நம்புங்க, சந்திரனுக்குப் போற வாய்ப்புகள இழக்கறீங்கன்னு 315 00:17:33,512 --> 00:17:35,722 - உங்களுக்குத் தெரியலை. - எனவே, நான் இப்போ முட்டாளா? 316 00:17:35,722 --> 00:17:37,099 - நான்... - குக்கீஸை முகர்ந்து பாரு, ஜோ! 317 00:17:37,099 --> 00:17:39,351 உங்க பேரக் குழந்தைகளுக்கு விட்டுட்டுப் போக 318 00:17:39,351 --> 00:17:41,395 - அது நல்ல சொத்து... - கடவுளே! 319 00:17:47,776 --> 00:17:50,988 வாசனையை முகர்ந்து பாரு. அப்போ என்ன சொல்லுவ? 320 00:17:53,740 --> 00:17:55,158 நல்ல வாசனை வருதே. 321 00:17:58,036 --> 00:18:00,622 என்ன சொன்ன, மகனே? காது சரியா கேட்கலை. 322 00:18:00,622 --> 00:18:02,291 அந்த குக்கீஸ் ரொம்ப நல்ல வாசனை வருது, மேடம். 323 00:18:04,334 --> 00:18:06,545 என்ன... என்ன சுவை, சாக்லேட் சிப்பா? 324 00:18:06,545 --> 00:18:11,967 அட, ஆமாம். இப்போவாது கேட்டயே, சந்தோஷம். 325 00:18:11,967 --> 00:18:14,136 இப்போ, உள்ளே வந்து என்னோட அதை சுவைச்சுப் பாரு, 326 00:18:14,136 --> 00:18:17,681 அப்புறம் நான் ஏங்குற புது வாழ்வை எனக்கு வித்து கொடுக்குறயா? 327 00:18:17,681 --> 00:18:21,185 ஏன்னா, என் கணவரும் காலாமாயிட்டார், என் பசங்க பேசுறதே இல்லை, 328 00:18:21,185 --> 00:18:24,188 அதனால, பெரும்பாலும் நான் குக்கீஸை பேக் செய்து, தனியாக தான் சாப்பிடுவேன். 329 00:18:25,147 --> 00:18:26,690 நிஜமாவே அவங்க அவ்வளவு சோகத்துல இருக்காங்களா? 330 00:18:29,526 --> 00:18:32,446 நாம அவங்களுக்கு உதவலைன்னா, யார் செய்வாங்க? 331 00:18:39,244 --> 00:18:40,287 என்ன ஆகும்... 332 00:18:41,538 --> 00:18:43,749 எனக்கு குக்கீஸ் வாசனையே வரலைன்னா என்ன செய்ய? 333 00:18:45,375 --> 00:18:47,920 வாசனையை வரவழைக்க எதாவது ஒரு வழியைக் கண்டுபிடி. 334 00:18:49,922 --> 00:18:52,090 இன்னொரு வீட்டுல முயற்சி செய்து பார்ப்போமா? 335 00:18:52,591 --> 00:18:56,345 ஒரு வீட்டுக்குள்ள போக முடியுதான்னு பாரு. 336 00:18:58,472 --> 00:19:00,057 சரி. சரி. 337 00:19:00,057 --> 00:19:01,141 சரிதான். 338 00:19:09,107 --> 00:19:10,400 செய்து பாரு, குழந்தை. 339 00:19:11,443 --> 00:19:13,028 அப்படி தான், ஜோ. 340 00:19:16,949 --> 00:19:17,950 வழியைக் கண்டுபிடி. 341 00:19:23,372 --> 00:19:24,873 முயற்சி செய், ஜோ. 342 00:19:29,920 --> 00:19:31,922 ஆமாம்! செய்துட்டான், பாரு! 343 00:19:31,922 --> 00:19:33,966 என் மகன் தான். 344 00:19:46,019 --> 00:19:47,521 என்ன கண்ராவி, எட்டி? 345 00:19:48,105 --> 00:19:49,982 யார் கிட்டேர்ந்து ஒளியற? 346 00:19:49,982 --> 00:19:52,526 இப்போ, குட்டித் தூக்கம் போடறது ஒரு தப்பா, என்ன? 347 00:19:52,526 --> 00:19:55,904 எனவே, நேத்து இரவு நீ செய்த அந்த கேவலமான வாக்குறுதி, 348 00:19:55,904 --> 00:19:58,699 நான் மட்டும் தான் தேவைன்னு, அதெல்லாம் பொய்யா? 349 00:19:58,699 --> 00:20:01,201 உண்மை. அப்புறம் பொய் ஆகிடுச்சு. 350 00:20:01,702 --> 00:20:02,703 என்ன... 351 00:20:03,412 --> 00:20:05,080 ஷர்லி, இது என்னது? 352 00:20:05,873 --> 00:20:09,710 உனக்குத் தெரியாம இருக்கலாம். அது வீணாகாதப் பணம். 353 00:20:11,086 --> 00:20:14,298 நீ அவ்வளவு பெரிய தொகையெல்லாம் கையாளுற, ஆனால் நீ எங்கிட்ட சொல்லவேயில்ல? 354 00:20:14,298 --> 00:20:19,178 ஆமாம், ரொம்ப உற்சாகமாயிடாதே. அதெல்லாம் ரீஃபன்டுங்க. அவங்க லாஞ்சை தள்ளிப்போடறாங்க. 355 00:20:19,178 --> 00:20:21,430 அடக் கடவுளே. நீ விளையாடுறயா? 356 00:20:21,430 --> 00:20:23,307 பாவப்பட்ட விற்பனையாளர்கள் ஏற்கனவே மூழ்கிட்டு இருக்கோம். 357 00:20:23,307 --> 00:20:25,184 நிலைமையை இன்னும் மோசமாக்கப் போறாங்களா? 358 00:20:25,184 --> 00:20:28,520 ஜாக் ஒரு புது முகத்தை வச்சு விளையாடுறான். நாம வேற வழியில்லாம போறோம். 359 00:20:28,520 --> 00:20:29,605 அப்படி தானே? 360 00:20:30,939 --> 00:20:32,357 ஷர்... பொறு, ஷர்லி? 361 00:20:32,941 --> 00:20:38,238 ஆட்டத்துல, நான் பந்தயம் கட்டுற ஜன்னல் பக்கதுல அந்த பணப்பையோட நிக்குறதுபோல எனக்குத் தெரியுது, 362 00:20:38,238 --> 00:20:39,406 அதோட, பெரும்பாலான 363 00:20:39,406 --> 00:20:42,409 பணப்பிரச்சினைகளும் அப்படியே மறைஞ்சுப் போகுது. 364 00:20:43,243 --> 00:20:45,579 உன் கையில இல்லாத பணத்தையும் தொலைச்சுட்டு நிக்கிறதை விட, வேற நல்ல திட்டமா 365 00:20:45,579 --> 00:20:47,206 போடலாம்னு எனக்குத் தோணுது. 366 00:20:51,043 --> 00:20:53,045 சீமான்களே, சீமாட்டிகளே, 367 00:20:53,921 --> 00:20:59,843 {\an8}இதோ இங்கே விஸ்டாவில் வோல்ட் பார்க்கில் நடைபெறும் அரையிறுதியின் இரண்டாம் ஆட்டத்தில் 368 00:20:59,843 --> 00:21:04,014 {\an8}டென்வர் டைனமோக்களுக்கும், விஸ்டாவில் வோல்ட்ஸ் அணிகளுக்கும் இடையே நடக்கும் 369 00:21:04,014 --> 00:21:06,266 {\an8}இன்றிரவு போட்டிகளுக்கு வரவேற்கிறோம். 370 00:21:06,266 --> 00:21:08,227 {\an8}- இந்த சீட்டுகளைப் பாரு, சரியா? - ஆம். 371 00:21:09,061 --> 00:21:11,897 - இவ்வளவு பக்கத்துல இருந்ததே கிடையாது. - இன்னிக்கு உழைச்சு சம்பாதிச்சிட்ட. 372 00:21:11,897 --> 00:21:14,107 முதல் கட்டத்தைத் தாண்டிட்ட. 373 00:21:15,025 --> 00:21:17,444 ஏதாவது வித்திருந்தா நல்லாயிருந்திருக்கும். 374 00:21:19,029 --> 00:21:22,950 இப்போ, நான் உன் பாஸா இருந்து சொல்றேன், அதையெல்லாம் மறந்துட்டு 375 00:21:22,950 --> 00:21:24,493 இப்போ ஆட்டத்தை என்ஜாய் பண்ணு. சரியா? 376 00:21:24,493 --> 00:21:25,619 சரி. 377 00:21:28,914 --> 00:21:31,291 ஹே, பசங்களா? அருமையான இடம் இல்லையா. 378 00:21:31,291 --> 00:21:36,672 நான் ஜூனியர் ஹையில இருக்குறபோது, ரைட் சோனுக்கு விளாடினேன், தெரியுமா? நாச்சோ வேணுமா? 379 00:21:36,672 --> 00:21:39,508 பாரு ஹை... ஷர்லி, ஷர்ல், ஹிக்கின்ஸோட லேட்ரேலப் பாரு. 380 00:21:39,508 --> 00:21:44,555 160க்கு பெட்டு கட்டியிருக்குறபோது, இப்படி தொடையில அடிப்பட்டு ஆட்டத்தை கெடுக்காம 381 00:21:44,555 --> 00:21:47,391 இருக்கணுமே, அவ்வளவு தொகையை முதலீடா போட்டிருக்கேன். 382 00:21:47,391 --> 00:21:49,685 நீ பகற்கனவு காணுற. அவன் வெறுமனே கைகால நீட்டுறான். 383 00:21:49,685 --> 00:21:51,436 என்ன? அவனைப் பாரு. 384 00:21:51,436 --> 00:21:53,730 உங்க இல்லத்தரசிக்கு உங்க ஆதிக்கத்தைக் காட்டுங்க, 385 00:21:53,730 --> 00:21:55,566 செல்வாக்குள்ள, உயர் தர வாகனத்தில். 386 00:21:55,566 --> 00:21:59,695 இவன் சரியான கிறுக்கன். நிஜ வாழ்க்கையில இந்த ஆளு ரொம்ப நெட்டை, 387 00:21:59,695 --> 00:22:01,113 அவன் மனைவியைவிட இரட்டை மடங்கு உயரம், 388 00:22:01,113 --> 00:22:03,490 அதோட அவனுக்கு மார்புல முடியே கிடையாது. 389 00:22:03,490 --> 00:22:05,367 ஆனால் அவனுக்குத் தான் பணம் வந்து கொட்டுது. 390 00:22:05,367 --> 00:22:09,413 விஸ்டாவில்லின் ஹோவர்கார் அரசன், மார்வினில். 391 00:22:09,413 --> 00:22:12,082 "சிறந்த விற்பனையாளர்கள் தங்களுக்குன்னு தனி ஆடுகளத்தை உருவாக்குவாங்க." 392 00:22:12,791 --> 00:22:14,001 என்ன? 393 00:22:17,129 --> 00:22:18,672 ஷர்ல்... நீ எங்கேப் போற? 394 00:22:22,551 --> 00:22:24,803 அவனைப் பாரு, ஹெர்ப், அவனுக்கு நல்லா அடிப்பட்டிருக்கு. 395 00:22:25,721 --> 00:22:28,932 அட, அப்பாடி... நான்... நான் ஷர்லியின் காருல ஒண்ணை மறந்துட்டேன். 396 00:22:30,851 --> 00:22:32,519 ...உருகும் நாச்சோப்போல் இங்கே. 397 00:22:33,103 --> 00:22:35,230 என்ன குறையுது தெரியுமா? சில்லுன்னு இரண்டு பியர்கள் வாங்கிட்டு வர்றேன். 398 00:22:35,230 --> 00:22:37,482 நீ என்னோட வந்து பார்போட்டை தேடிப்பிடிக்கிறயா? 399 00:22:37,482 --> 00:22:39,443 - இல்ல, நான் இங்கே இருக்கேன். - எனக்கு வேண்டாம், நன்றி. 400 00:22:44,823 --> 00:22:48,535 வா, வா. அந்த எழவுபிடிச்ச கார் எங்கே? 401 00:22:51,705 --> 00:22:54,082 உனக்கான அடுத்த முன்னேற்றம், ஒரு விற்பனைய செய்து முடிக்கிறது தான். 402 00:22:54,082 --> 00:22:55,918 இப்போதைக்கு, நீ பெருமைப்படலாம். 403 00:22:55,918 --> 00:23:00,797 நீ இருந்த நிலையை பார்க்கும்போது, வீட்டுக்குள்ள போனதே பெரிய முன்னேற்றம் தான். 404 00:23:00,797 --> 00:23:04,718 ஹே, நான் ஒண்ணு சொல்லட்டுமா? நமக்குள்ள மட்டும், சரியா? 405 00:23:04,718 --> 00:23:06,678 நிச்சயமா. நீ என்னை நம்பலாம். 406 00:23:07,971 --> 00:23:10,724 நீ நினைப்பதுப்போல நான் இன்னிக்கு விற்பனைக்காக வீட்டுக்குள்ள போகலை. 407 00:23:13,393 --> 00:23:16,146 அந்த ஆளுக்கிட்ட நான் பத்து டாலர்கள் கொடுத்து அங்கே நிற்க அனுமதி வாங்கினேன். 408 00:23:16,813 --> 00:23:17,981 எதுக்கு? 409 00:23:17,981 --> 00:23:20,859 தெரியலை. ஜாக்குக்காக, புரியுதா? 410 00:23:21,735 --> 00:23:25,239 அதாவது, நீ கடைசியில அவரை ஏமாத்தியிருக்க, அது இன்னும் மோசம் தானே. 411 00:23:27,449 --> 00:23:29,034 சரிதான், ஆமாம். அப்படி தான் தோணுது. 412 00:23:29,660 --> 00:23:30,786 ஹே, ஜோயீ? 413 00:23:30,786 --> 00:23:32,287 நான் இதை ரகசியமா வச்சுக்குறேன். 414 00:23:33,705 --> 00:23:37,292 உன் தொழில் வளர்ச்சியில இது ஒரு கருப்புப்புள்ளியா இருந்துடப் போகுதேன்னு கவலை, அவ்வளவுதான். 415 00:23:46,718 --> 00:23:48,011 ஹே, நீ இதை... 416 00:23:48,595 --> 00:23:53,684 நீ இதைக் கொஞ்சம் ஜாக்கிடம் கொடுத்து விடறயா, அவர் திரும்பி வரும்போது, சொல்லிடு... 417 00:23:55,352 --> 00:23:57,229 - மன்னிப்பு கேட்டேன்னு, என்ன? - நிச்சயமா. 418 00:23:57,229 --> 00:24:00,023 சீமான்களே, சீமாட்டிகளே, தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கவும். 419 00:24:33,307 --> 00:24:35,184 ச்சே. ச்சே. 420 00:24:36,768 --> 00:24:38,103 நீ நாசமாப்போக, ஷர்ல். 421 00:24:40,939 --> 00:24:41,940 வா. 422 00:24:42,691 --> 00:24:43,775 ஆட்டப் பந்து. 423 00:24:44,985 --> 00:24:46,195 இல்ல! 424 00:24:47,196 --> 00:24:52,701 ஐந்தாவது இன்னிங்க்ஸின் முடிவில், நம்பர் 15, ஜானி சாப். 425 00:24:52,701 --> 00:24:57,080 அவன் ஒரு வீட்டுக்குள்ள போயிட்டான், ஷர்ல். கடவுளே, சாதிச்சுட்டான். 426 00:24:57,789 --> 00:25:01,543 நீ அவனுக்கு நல்லது தான் செய்த, ஜாக். அவன் அதுக்கு தயாரா இல்லைன்னா, உன் தப்பில்ல. 427 00:25:03,337 --> 00:25:06,632 மூன்றாவது ஸ்ட்ரைக்கர். நீங்க அவுட். 428 00:25:07,799 --> 00:25:11,887 மூணு, ரெண்டு, ஒண்ணு, பிளாஸ்ட் செய்யுங்க. 429 00:25:11,887 --> 00:25:13,388 ஹே, அது நம்ம விளம்பரம் தான். 430 00:25:13,388 --> 00:25:15,724 ...நட்சத்திரங்களுக்கு அப்பால், ஒரு புதிய ஆரம்பம். 431 00:25:15,724 --> 00:25:18,852 கடவுளே, ஷர்ல். அப்படித்தான் அந்த பணத்தை செலவு செய்தயா? தைரியம் தான் உனக்கு. 432 00:25:18,852 --> 00:25:21,271 பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ் தருவது புதிய... 433 00:25:21,271 --> 00:25:24,441 கூட்டத்தைப் பாரு. நாம அதை எல்லாத்தையும் வித்துட்டாலோ. 434 00:25:24,441 --> 00:25:26,485 எல்லா உபகரணங்களோடும், முழுமையாக... 435 00:25:26,485 --> 00:25:30,113 நீ என்ன சொல்ற, ஜாக்? நாமே நம்ம ஆடுகளத்தை உருவாக்குறோம். 436 00:25:30,113 --> 00:25:31,365 நீ ஆழம் தெரியாம காலை விடுற. 437 00:25:31,365 --> 00:25:35,035 ஷர்ல், நாம இவ்வளவு பெரும் டிமாண்டை எப்படி சமாளிக்கப் போறோம்? 438 00:25:35,035 --> 00:25:37,412 இது எந்தப் பக்கம் போகப்போகுதுன்னு யாருக்கும் தெரியாது. 439 00:25:37,412 --> 00:25:41,291 சந்தோஷத்தின் இருப்பிடம் தான் வீடு, பிரச்சினைகளின் இருப்பிடம் இல்லை. நீங்கள் உங்கள் சிறந்த வடிவில்... 440 00:25:41,291 --> 00:25:43,627 ...இனிமையாகவும், கவலையில்லாமலும் இருக்குமிடம். 441 00:25:43,627 --> 00:25:47,506 அன்பைப் பரிமாறவும், சிரிக்கவும், வாழவும், அழுத்தங்களையும், ஏமாற்றங்களையும் விட்டுவிடவும். 442 00:25:48,674 --> 00:25:51,760 அடக் கடவுளே. அடக் கடவுளே. 443 00:25:51,760 --> 00:25:54,930 சரி, நான் அதையெல்லாம் அங்கே வச்சிருக்க மாட்டேன். 444 00:25:56,098 --> 00:25:59,351 ஆனால் என்ன, அதுக்கு தான் கடவுள் துடைக்கும் மாப்புகளைப் படைச்சிருக்கான். 445 00:26:10,237 --> 00:26:13,323 திரு. விற்பனையாளரே, அங்கே ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டு வேலை செய்யாதே. 446 00:26:16,159 --> 00:26:18,161 இன்னிக்கு எதாவது லாட்டரி அடிச்சுதா, என்ன? 447 00:26:18,954 --> 00:26:21,331 அதனால தான் நீ இன்னும் பாதி தூக்கத்திலேயே வேலை செய்யற போல. 448 00:26:21,331 --> 00:26:25,460 - நானே இதை சுத்தம் செய்யறேனே. - அங்கே ரொம்ப மோசமா இருந்துதா, ஹம்? 449 00:26:25,460 --> 00:26:28,338 நல்லது, நீ யதார்த்த வாழ்க்கைக்கு திரும்பி வந்ததுப் பத்தி ரொம்ப சந்தோஷம். 450 00:26:29,423 --> 00:26:31,133 இன்னும் கொஞ்சம் நாள் இருப்பன்னு நினைக்கிறேன். 451 00:26:36,346 --> 00:26:41,393 என்னன்னா, ரொம்ப நல்லா போச்சு, இன்னிக்கு. நான், மூணு மணிக்கு முன்னாடியே முடிச்சிட்டேன். 452 00:26:41,393 --> 00:26:43,604 "ஆரம்ப நிலையில இருக்குறதுக்கு, நல்லா செய்த," அப்படின்னு என் பாஸ் சொன்னார். 453 00:26:43,604 --> 00:26:46,398 அப்படியா? சும்மா விளையாடுறயா? 454 00:26:47,441 --> 00:26:48,650 என்னை நம்புறதுக்கு நன்றி. 455 00:26:48,650 --> 00:26:50,736 ஓ, அப்படியில்ல. ஹே, ஹே, பாரு. 456 00:26:50,736 --> 00:26:52,237 அந்த கம்பெனி நல்லா முன்னேறுது. 457 00:26:52,237 --> 00:26:54,656 என்னன்னா, தொழில் வளர்ச்சி அடைய நல்ல வாய்ப்பு இருக்குன்னு ஜாக் சொல்றார். 458 00:26:54,656 --> 00:26:56,158 சொல்லவே வேண்டாம். 459 00:26:56,158 --> 00:26:59,494 இங்கே இருந்து வாழ்க்கை சலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன், இல்ல? 460 00:27:00,704 --> 00:27:03,290 நிச்சயமா. ஆமாம், ஏன்... அவங்கள ஏன் குறை சொல்லணும்? 461 00:27:04,333 --> 00:27:05,626 நான் ஒண்ணு சொல்றேன். 462 00:27:06,502 --> 00:27:09,505 நான் மட்டும் அந்த ராக்கெட்டுல எல்லாம் ஏறவே மாட்டேன். 463 00:27:11,965 --> 00:27:13,300 நிச்சயமா, மாட்டீங்க. ஏற மாட்டீங்க. 464 00:27:15,177 --> 00:27:17,387 எதுக்கு, அதாவது, உங்க கடையே இங்க தானே இருக்கு. 465 00:27:17,387 --> 00:27:19,306 மேலும், இது தான் உங்க உலகமே. 466 00:27:22,100 --> 00:27:23,310 உங்களுக்கு ஒண்ணு சொல்றேன், 467 00:27:23,310 --> 00:27:25,479 இப்போ இருக்குற ராக்கெட்டுகள பார்க்கணும். 468 00:27:26,438 --> 00:27:28,899 சொகுசு இருக்கைகள், காக்டெயில் பணிப்பெண்கள். 469 00:27:30,400 --> 00:27:32,778 ஹே, அதெல்லாம் உங்களுக்கு இல்ல, விடுங்க. 470 00:28:05,269 --> 00:28:06,270 மர்டில்? 471 00:28:09,606 --> 00:28:11,608 ஹே! மர்டில்? 472 00:28:14,027 --> 00:28:15,696 மர்டில்! 473 00:28:42,181 --> 00:28:44,349 ஹே, ஜாக்! பாருங்க. 474 00:28:44,349 --> 00:28:45,350 ஜோயீ, ஹே. 475 00:28:45,350 --> 00:28:47,936 நேத்து ஆட்டத்திலிருந்து சீக்கிரம் போனதுக்கு மன்னிக்கணும், ஆனால், 476 00:28:48,812 --> 00:28:51,273 எனக்கு ஞாபகம் வந்தது ஒரு நல்ல லீட் கிடைச்சிருக்குன்னு. 477 00:28:53,400 --> 00:28:55,319 நான், அவரிடம் ஒரு சி-பிளெக்ஸை வித்தேன். 478 00:29:01,783 --> 00:29:04,369 உன்னால இதை சாதிக்க முடியும்னு தெரியும், மகனே. 479 00:29:04,369 --> 00:29:07,122 இதுக்குத் தேவையான எல்லாத் திறமையும் உங்கிட்ட இருக்குன்னு தெரியும். 480 00:29:07,122 --> 00:29:09,917 ஆம், நீங்க சொன்னதயே செய்தேன். அடிப்படையில, "குக்கீஸை முகர்ந்து பாரு" தான். 481 00:29:09,917 --> 00:29:11,585 உனக்கு எப்படி இருந்தது? 482 00:29:12,836 --> 00:29:14,004 ரொம்ப நல்லாயிருந்தது. 483 00:29:15,214 --> 00:29:16,757 அதுக்கு மேலே இன்னும் எதுவும் இல்லை. 484 00:29:20,260 --> 00:29:21,803 ஹே, அங்கே உள்ள என்ன நடக்குது? 485 00:29:21,803 --> 00:29:23,597 சரி, நமக்கு இன்னிக்கு ராத்திரி முக்கியமான இரவு. 486 00:29:23,597 --> 00:29:25,807 ஆம், நேத்து அந்த வானொலி விளம்பரத்தைக் கேட்டேன். 487 00:29:25,807 --> 00:29:27,059 நல்லா இருந்தது. 488 00:29:29,603 --> 00:29:30,938 அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா? 489 00:29:35,400 --> 00:29:36,944 கொஞ்சம் உதவி கிடைக்குமான்னு பார்த்தேன். 490 00:30:02,469 --> 00:30:03,595 ஹை, நான் ஜோயீ ஷார்டர் 491 00:30:03,595 --> 00:30:05,806 - பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸிலேர்ந்து பேசுறேன். - ஓ. ஹலோ. 492 00:30:05,806 --> 00:30:07,808 நான் உங்களுக்கு எப்படி உதவி செய்யலாம், மேடம்? 493 00:30:08,475 --> 00:30:09,726 கண்டிப்பா, நிச்சயமா. 494 00:30:09,726 --> 00:30:12,938 உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது போல, பல திட்டங்கள இப்போ நாங்க வச்சிருக்கோம். 495 00:30:12,938 --> 00:30:16,275 எங்ககிட்ட, ஏ-பிளெக்ஸ், பி-பிளெக்ஸ் அல்லது சி-பிளெக்ஸ் வேணும்னாலும் இருக்கு. 496 00:30:16,275 --> 00:30:19,528 நிச்சயமா, டி-பிளெக்ஸும் இருக்கு, நான் முதல்ல அதைத் தான் சொல்வேன், ஆனால், 497 00:30:19,528 --> 00:30:21,238 உண்மையா, நான் அங்கே மேலே போனதும், எனக்குத் தெரிஞ்சிடுச்சு... 498 00:31:18,545 --> 00:31:20,547 தமிழாக்கம் அகிலா குமார்