1 00:00:58,934 --> 00:01:01,562 ஹை, நான் பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ்லேர்ந்து ஜோயீ ஷார்டர் பேசுறேன். 2 00:01:02,646 --> 00:01:04,105 நான் எப்படி உங்களுக்கு உதவமுடியும்... 3 00:01:11,738 --> 00:01:14,157 கற்பனை செய்துப் பாருங்க, திருமதி. மெக்கென்னா, 4 00:01:14,157 --> 00:01:18,120 குறைந்த ஈர்ப்பால, அந்த ஃஜினியா பூக்கள் வானத்தை நோக்கி விரியுது. 5 00:01:18,120 --> 00:01:19,621 - என்ன ஒரு அற்புதமான காட்சி. - சரியா, ஒரு நிமிடம். 6 00:01:19,621 --> 00:01:21,498 ஹோலோகிராஃபிக் வால்பேப்பரா? கிடைக்குமே. 7 00:01:21,498 --> 00:01:22,958 கண்டிப்பா. நான் உங்களத் திரும்பிக் கூப்பிடுறேன். 8 00:01:22,958 --> 00:01:25,085 நீங்க குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தோணுது, ஹவர்டு. நிஜமா. 9 00:01:25,085 --> 00:01:28,589 அதனால தான், நான் என் அம்மாவுக்கு என்ன டீல் கொடுத்தேனோ, அதே போல உங்களுக்கும் தரேன். 10 00:01:28,589 --> 00:01:30,215 இல்ல. சார், ஒரு வினாடி பொறுங்க. 11 00:01:30,215 --> 00:01:33,385 ஷர்ல், என் கணக்குல ஒரு பி-பிளெக்ஸை சேர்த்துடு. பி5 காம்பிளக்ஸுல, கிரேட்டரைப் பார்த்தபடி. 12 00:01:33,385 --> 00:01:36,972 ஹெர்ப். ஹெர்ப், இங்கே விற்பனை ரொம்ப சூடா நடக்குது, 13 00:01:36,972 --> 00:01:39,558 ஏன்னா நான் அவ்வளவு நல்லா செய்யறேன், கண்ணா. 14 00:01:39,558 --> 00:01:41,727 எட், நிறுத்து. ரொம்ப சீன் போடாதே. 15 00:01:41,727 --> 00:01:45,314 கடவுளே, ஜாக், அந்த விளம்பரத்தால எதுவும் கெட்டது நடக்காம இருந்தா போதும். 16 00:01:45,314 --> 00:01:46,690 நாம எல்லோருமே பணக்காரங்களாக முடியும். 17 00:01:46,690 --> 00:01:51,153 ஆமாம், அப்போ நீ இந்த பையன் விஷயத்துல ரொம்ப தப்பு கணக்குப் போட்டன்னு ஒத்துக்கலாம். 18 00:01:51,153 --> 00:01:52,863 உங்களுக்கு ஸ்டிராங்கா காஃபி வேணுமா? 19 00:01:52,863 --> 00:01:54,948 ஹே, இந்த விற்பனையை யாரு எடுத்துக்குறீங்க? சம்பாதிக்க சுலபமான வழி. 20 00:01:54,948 --> 00:01:57,409 - ஜோயீ, நீ வேணும்னா எடுத்துக்கலாம். - ஆம், நான் எடுத்துக்கிட்டேன், ஜாக். 21 00:01:58,535 --> 00:02:01,496 ஹை, பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸ்லேர்ந்து ஜோயீ ஷார்டர். 22 00:02:02,122 --> 00:02:03,999 எங்க விளம்பரத்தை வானொலியில கேட்டது ரொம்ப சிறப்பு. 23 00:02:03,999 --> 00:02:07,419 ஆனா எங்க வோல்ட்ஸ் பத்தி மன்னிக்கவும், நாங்க அடுத்த முறை ஆச்சரியப்படுத்திடுவோம்? சரிதான். 24 00:02:07,419 --> 00:02:09,253 அந்த காலோட எனக்கு தொடர்பு கொடுங்க, ஷர்ல். 25 00:02:09,253 --> 00:02:12,216 ஜாக்கிரதை, ஹெர்ப். புதுப் பையன் உன்னோட லான்ச்சு சம்பாத்தியத்துக்கு போட்டியா வர்றான். 26 00:02:12,841 --> 00:02:14,384 இப்போ, நீங்க எனக்கு அதைக் கொடுத்தீங்கன்னா... 27 00:02:14,384 --> 00:02:15,469 ஜோயீ - ஹெர்ப் 28 00:02:17,095 --> 00:02:22,267 நீங்க 'சரி'ன்னு சொல்ற வரை நான் "இல்ல"ங்கிற வார்த்தையை பொறுத்துப்பேன். 29 00:02:22,267 --> 00:02:25,229 உங்க மகன் சந்திரனின் சுரங்கத்துல இருக்கார்னு நீங்க பெருமைப்படணும், திருமதி. ஷிட்லஸ்கீ. 30 00:02:25,229 --> 00:02:26,980 தாய், தன் கால் மில்லியன் மைல்கள் பக்கத்துலேயே வந்துட்டாங்கன்னா, 31 00:02:26,980 --> 00:02:32,236 அதைவிட சந்தோஷம் வேற என்ன இருக்கமுடியும், இல்லையா? 32 00:02:33,153 --> 00:02:34,947 ஹே, ஷர்ல், எனக்கு திரும்பி தொடர்பைக் கொடுங்க. 33 00:02:34,947 --> 00:02:37,407 நான் இன்னொரு விற்பனை செய்தேன். ஒரு சி-பிளெக்ஸ், சி12. 34 00:02:38,700 --> 00:02:40,911 ரெண்டாவது இடத்துக்கு வரவேற்கிறோம், மகனே. 35 00:02:42,871 --> 00:02:46,458 ஹெர்ப் எங்கே? இதைக் கேட்டுட்டு அவன் ஜன்னல் வழியா குதிச்சுட்டானா? 36 00:02:46,458 --> 00:02:48,293 என்ன தெரியுமா? ரொம்ப நேரமாகுது. 37 00:02:49,002 --> 00:02:51,922 நாம இதோடு இன்னிக்கு முடிச்சுப்போம், நாளை ஃபிரெஷா லீட்ஸை தொடருவோம். 38 00:02:51,922 --> 00:02:53,632 எனக்கு இன்னும் இருப்பதுல பிரச்சினை இல்லை, ஜாக். 39 00:02:53,632 --> 00:02:55,300 நீ அவ்வளவு தீவிரமா வேலை பார்க்குறயா, மகனே. 40 00:02:55,300 --> 00:02:58,136 எப்படியாவது சாதிக்கணும்னு நினைக்குறது தான் விற்பனையாளரின் பெரிய சொத்து. 41 00:02:58,136 --> 00:02:59,513 அதுக்கு நடமாடும் உதாரணமே நான்தான். 42 00:02:59,513 --> 00:03:01,390 அந்த பையனுக்கு விடாமுயற்சி இருக்கு. 43 00:03:01,390 --> 00:03:03,976 ரெண்டாவது இடத்துக்கு வந்துட்டான், இருந்தாலும் அவனுக்கு பத்தலை. 44 00:03:04,726 --> 00:03:07,646 நாம இதோட நிறுத்திட்டு, கொண்டாடுவோம். 45 00:03:12,401 --> 00:03:14,862 இதை எடுத்துக் கொள்ளுங்க. இருப்பதெல்லாம் தரேன். 46 00:03:14,862 --> 00:03:19,658 நல்லது. நீங்க இரண்டாவது இடத்தில இருக்கிற சிறப்பான விற்பனையாளரோட 47 00:03:19,658 --> 00:03:22,744 பேசுறீங்கன்னு சொல்றதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. 48 00:03:23,412 --> 00:03:24,788 வரப் போற முதல் லான்ச்சுல உங்கள அனுப்பறேன். 49 00:03:25,706 --> 00:03:27,875 கடவுளே, நான் இதையெல்லாம் படிக்கணுமா? 50 00:03:28,375 --> 00:03:29,376 உண்மையில, ஆம். 51 00:03:30,377 --> 00:03:32,880 ஆனால் நேரம் தான் உங்களோட மிகப் பெரிய சொத்து. 52 00:03:40,637 --> 00:03:41,638 அவ்வளவுதான். 53 00:03:43,599 --> 00:03:45,434 நீங்க வருத்தப்படமாட்டீங்க, மேடம். 54 00:03:45,434 --> 00:03:48,687 அடுத்த காலாண்டு லான்ச்சு, இன்னும் சில மாதங்களிலேயே சீக்கிரமா வந்துடும். 55 00:03:48,687 --> 00:03:53,192 மாதங்களா? மாதங்களா? இல்ல. முடியாது. அதெல்லாம் முடியாது. 56 00:03:53,192 --> 00:03:56,820 நாம இங்கிருந்து சன் சிட்டிக்குப் போற பஸ்ஸைப் பத்தி பேசுல, மேடம். 57 00:03:57,779 --> 00:04:00,824 ஒப்பந்தத்துல குறிப்பிட்டு இருக்கிறபடி, காலாண்டுக்கு ஒரு முறை போற, 58 00:04:01,325 --> 00:04:02,993 அதி நவீன ராக்கெட் லான்ச்சு. 59 00:04:07,456 --> 00:04:10,125 - அதனால, நான் இதை முதல்ல பிராசஸ் செய்யறேன். - இல்ல, இல்ல, இல்ல. 60 00:04:10,125 --> 00:04:11,376 உங்களுக்குப் புரியலை! 61 00:04:12,920 --> 00:04:14,338 நான் இப்பவே போகணும். 62 00:04:14,922 --> 00:04:18,966 எங்களோட மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதே நல்ல அட்டவணை தான் உங்களுக்கும். 63 00:04:21,928 --> 00:04:28,143 நடக்க முடியாததை நான் உங்களுக்கு சொல்ல விரும்பல, அதனால, அதுவரை எல்லா உதவியும் செய்யத் தயார். 64 00:04:28,143 --> 00:04:29,353 முதல் வேலையா, நாளைக்கு காலையில. 65 00:04:30,771 --> 00:04:35,150 ஆனால்... எனக்கு போக வேற இடம் கிடையாது. 66 00:04:40,781 --> 00:04:43,033 உங்கள் பொருட்களை எடுத்துச்செல்ல உதவலாமா? 67 00:04:44,159 --> 00:04:48,664 உன்னைப் போல அருமையா சாதிச்சவன் கையில டிரிங்குகள் வச்சிருக்கணும். 68 00:04:49,831 --> 00:04:53,502 வாழ்க்கையின் பாதையில் ஒரு நாள். 69 00:04:54,878 --> 00:04:56,088 நன்றி, ஜாக். 70 00:04:56,088 --> 00:04:57,548 அடடே, இது நிஜமாவே அருமை. 71 00:05:00,425 --> 00:05:04,304 என் முன்னாள் அல்ஜீப்ரா ஆசிரியர் திரு. கிளையனுக்கு நான் ஒன்றை வித்தேன். 72 00:05:05,931 --> 00:05:09,685 ஒரு நாள், அவர் அங்கேர்ந்து நாம் இங்கே கீழே இருப்பதைப் பார்ப்பார்னு யோசிச்சேன். 73 00:05:10,185 --> 00:05:13,313 எல்லாமே என்னால தான். ஒரு வகையில, இல்ல? 74 00:05:16,024 --> 00:05:17,943 அடடே, அடடே, அதைப் பாரேன். 75 00:05:17,943 --> 00:05:22,322 அதைப் பாரு. பாரு. 76 00:05:23,198 --> 00:05:26,952 - அட, அட. - ஆமாம், அட அது அந்த 568 ஆக தான் இருக்கணும். 77 00:05:26,952 --> 00:05:28,954 அவங்க அனைவரையும் நான் இங்கே வரவழைச்சு காட்டியிருக்கணும். 78 00:05:28,954 --> 00:05:31,373 - அது நம்முடையதுல ஒண்ணா? - ஆமாம், நினைக்கிறேன். அப்படி தான் இருக்கணும். 79 00:05:32,749 --> 00:05:35,794 அடேங்கப்பா, ஒரு நாள் பக்கத்துல போய் பார்த்தா நல்லாயிருக்கும். 80 00:05:35,794 --> 00:05:37,880 ஓ, மகனே, நீ கொஞ்சம் பொறு. 81 00:05:43,635 --> 00:05:46,388 சரி. ஆம், நான் இப்போ பஸ்ஸை பிடிக்கணும். 82 00:05:46,388 --> 00:05:48,599 அம்மாகிட்டப் போக ரொம்ப நேரமாகிக்கிட்டு இருக்கு. 83 00:05:50,767 --> 00:05:56,023 இல்ல, அதாவது, இந்த நேரத்துல, நாம ஒரு இரவுக்கு ஒரு அறையை எடுத்துக்கலாம் 84 00:05:57,441 --> 00:05:58,275 அப்படியா? 85 00:06:00,819 --> 00:06:02,070 என்னன்னா, எனக்கு அவசியமில்ல... 86 00:06:02,070 --> 00:06:05,616 உன் தேவைகளைப் பத்தி கவலைப்படும் கட்டம் தாண்டிடுச்சு, மகனே. 87 00:06:05,616 --> 00:06:07,951 உனக்கு தகுதி உள்ளதைப் பெறும் காலம் வந்திடுச்சு. 88 00:06:13,832 --> 00:06:15,834 எங்க இருந்தா இது பார்க்கறதுக்கு இன்னும் நல்லா இருக்கும்னு தெரியுமா உனக்கு? 89 00:06:15,834 --> 00:06:17,002 உன் மேலே தான், ஷர்லி. 90 00:06:17,002 --> 00:06:21,256 வலை வலையான அந்த ஆடை மட்டும், வேற எதுவும் கிடையாது, இல்ல... 91 00:06:21,256 --> 00:06:24,051 நான் கொஞ்சம் அதிகமா யோசிச்சுட்டேனோ? 92 00:06:27,012 --> 00:06:28,222 யார் இதையெல்லாம் எண்ணுறாங்க, இல்ல? 93 00:06:28,805 --> 00:06:31,058 ஏராளம் என்கிறது எராளம்தான், ஷர்லி. 94 00:06:31,058 --> 00:06:35,229 உனக்குக் கிடைக்கிற ஏராளம் தான் நாளைக்கு என் காரின் பிரச்சினைகளை சரிசெய்ய உதவப்போகுது. 95 00:06:35,229 --> 00:06:37,898 பிரச்சினைகள், கார், நாளை. டிங், டிங், டிங். 96 00:06:37,898 --> 00:06:41,944 சரி, மக்களே. நல்ல இரவாக இருக்கட்டும், அதோட எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி. 97 00:06:41,944 --> 00:06:43,570 இப்போ பெரியவன் ஆனானே, அவனா. 98 00:06:43,570 --> 00:06:45,239 எப்படி இருக்க? பஸ்ஸுக்கு காசு இருக்கா? 99 00:06:45,239 --> 00:06:48,200 அவனை விட்டுத்தள்ளு, ஜோ. அவனைவிட சின்னவங்களப் பார்த்தா பயந்துடுவான். 100 00:06:48,867 --> 00:06:50,577 இல்ல, ஜாக் எனக்காக அறை எடுக்குறார். 101 00:06:51,370 --> 00:06:54,206 சரி. அப்போ எங்களோட சேர்ந்து வெளியேப் போக நீயும் நாளைக்குத் தயாராகுறயா? 102 00:06:55,207 --> 00:06:58,001 வெளியேப் போகவா? இங்கே கிடைச்ச இந்த நல்ல லீடுகளை என்ன செய்ய? 103 00:06:58,001 --> 00:06:59,461 ஒரு நாள் வேலை, அப்புறம் போக வேண்டியது தான். 104 00:06:59,461 --> 00:07:01,421 இந்த ஊரிலிருந்து நிறைய வாடிக்கையாளர்கள் கிடைச்சது பாக்கியம். 105 00:07:01,421 --> 00:07:04,925 ஆம். அப்போதான் யாரும் இங்கேயே வேலை செய்துட்டு இருக்க மாட்டாங்க, இல்ல? 106 00:07:04,925 --> 00:07:06,927 ஆம், அது தான் ஊரு விட்டு ஊரு போகும் விற்பனையாளர்களின் கதி, மகனே. 107 00:07:06,927 --> 00:07:08,345 ஊரு ஊராப் போய்த் தானே ஆகணும். 108 00:07:08,971 --> 00:07:11,974 ஷர்லி, நான் சொன்ன அந்த ஃபார்மை நீ எடுத்துக்க விரும்புறயா? 109 00:07:12,766 --> 00:07:15,853 உனக்குப் பயணம் செய்யப் பிடிக்கலைன்னா பரவாயில்லை, ஜோ. நீ இன்னிக்கு நல்லா செய்த. 110 00:07:16,353 --> 00:07:17,604 ஆமாம், நிஜமா தான். 111 00:07:18,105 --> 00:07:20,023 உன் 12ம் பிறந்த நாளைக்கு உனக்கு பிறந்தநாள் வாழ்த்து கார்டு அனுப்பறோம். 112 00:07:21,108 --> 00:07:23,235 உங்களுக்கு நல்ல மாலையாக இருக்கட்டும். 113 00:07:23,235 --> 00:07:25,279 ஜோ. ஜாக் இங்கே இல்லையா? 114 00:07:25,279 --> 00:07:26,572 இப்போ தான் போனார். ஏன்? 115 00:07:27,865 --> 00:07:29,449 சில விஷயங்கள் இருந்தன. 116 00:07:29,449 --> 00:07:32,870 நியாயத்தைப் பொறுத்தவரை, அது எப்போதுமே உண்மையான வெற்றிக்கு தான். 117 00:07:33,704 --> 00:07:37,040 விருந்தினரே வணக்கம். நீங்க வசதியா இருக்க நாங்க இன்னும் என்ன செய்யலாம்? 118 00:07:37,040 --> 00:07:39,960 {\an8}விஸ்டா மோட்டர் லாட்ஜ் இடம் காலி இல்லை 119 00:07:39,960 --> 00:07:46,008 {\an8}எல்லோரும் அரசன் தான், ஹெர்ப்-ஓ நானே எல்லோருமாக இருக்கும் வரை, ஹெர்ப்-ஓ 120 00:07:46,008 --> 00:07:50,429 ஓ, அவள் என்னை நேசிக்கிறார், நேசிக்கிறாள் ஓ, ஓ, ஓ 121 00:07:50,429 --> 00:07:52,264 அடக் கடவுளே! யார் நீ? 122 00:07:53,015 --> 00:07:55,100 - நீ ஹெர்ப் இல்லயே. - நான் இங்கே படுத்துக்கலாம்னு சொன்னார். 123 00:07:55,100 --> 00:07:58,812 அட, இதுபோல கேவலமான ஆளுக்கு... 124 00:07:58,812 --> 00:07:59,897 வெளிய போ! போ! 125 00:07:59,897 --> 00:08:01,356 சரி, சரி, என்னை மன்னிச்சிடுங்க, 126 00:08:01,356 --> 00:08:04,401 ஹெர்போட குணத்துக்கு சம்மந்தமே இல்லாத முன்கோபம் இருக்கிற மனுஷி வந்திருக்கா. 127 00:08:04,401 --> 00:08:07,946 உண்மையில, இந்த அறைக்கு வர எனக்கும் உரிமை இருக்கு, ஆனால் நான் சந்தோஷமா காலி பண்ணுறேன். 128 00:08:07,946 --> 00:08:11,617 பொறு, ஹே... அவர் என்னை முன்னாடியே போகுற லான்ச்சுல சேர்க்கறேன்னார். நடந்ததா? 129 00:08:11,617 --> 00:08:15,621 அடக் கடவுளே, ஹெர்ப். நல்வாழ்த்துகள், பெண்ணே. 130 00:08:19,416 --> 00:08:23,086 மகனே ஜாக்கி, நீ என் பேரனை மறைச்சு வச்சிருக்க. 131 00:08:23,670 --> 00:08:27,382 நிச்சயமா, என்னைக் காட்ட வெக்கமா தான் இருக்கும், ஆனால் எனக்குப் பொறுமை போகுது. 132 00:08:28,258 --> 00:08:29,259 டெலீட். 133 00:08:29,927 --> 00:08:34,765 என் சொந்தப் பேரனை, நீ எனக்கு காட்டாத ஒவ்வொரு நாளும், 134 00:08:34,765 --> 00:08:36,600 நான் வேகமா சாகறேன். 135 00:08:36,600 --> 00:08:37,683 டெலீட். 136 00:08:38,644 --> 00:08:40,062 ஒரு நொடியில கீழே இருப்பேன். 137 00:08:40,062 --> 00:08:41,772 எனக்கு ஒரு நிமிடம் தேவை, ஜாக். 138 00:08:43,273 --> 00:08:44,274 ச்சே. 139 00:08:44,274 --> 00:08:47,069 சரி, உனக்குன்னா எப்பவும், எதுவானாலும், ஷர்ல். 140 00:08:55,953 --> 00:08:59,289 - ஹே. - மூணே மணியில, பதினைஞ்சு. 141 00:08:59,289 --> 00:09:04,294 நாம போன மாசத்துல செய்ததைப் பார்க்குறபோது இது ரொம்ப நல்ல நேரம்னு சொல்லலாம். 142 00:09:04,294 --> 00:09:07,589 அட... எனக்கு, ஒரு டையை தேர்ந்து எடுக்க, உதவ முடியுமா? 143 00:09:09,925 --> 00:09:14,471 ஆம், நாம ரொம்ப, ரொம்ப வெற்றிகரமா செய்யறோம். பெரிய, பெரிய வெற்றியை சாதிச்சிட்டு இருக்கோம். 144 00:09:14,471 --> 00:09:17,224 நான், அதாவது, நான், இப்படி யோசிக்கக்கூடாது தான், 145 00:09:17,224 --> 00:09:19,768 ஆனால் இப்போ ஜென்கின்ஸ் மட்டும் இன்னும் தாமதப்படுத்தினார்னா, 146 00:09:19,768 --> 00:09:22,271 அந்த ஊரே திரண்டு நம்மள அடிக்க வரும். 147 00:09:22,271 --> 00:09:24,565 சரி, ஆனால் அது ஹெச்கியூவோடப் பிரச்சினை, ஏன்னா நாம இந்த இடத்தை விட்டு போயிருப்போமே. 148 00:09:24,565 --> 00:09:27,442 அப்படிச் செய்ததுதான் சரி, ஷர்ல். 149 00:09:27,943 --> 00:09:30,279 ஓக் கிரோவுல நாளைக்கு ஒரு திருவிழா நடக்குது. 150 00:09:30,279 --> 00:09:31,780 அதோட விளம்பர ரேட்டுகளைக் கொண்டு வந்திருக்கேன். 151 00:09:31,780 --> 00:09:34,741 அதோட, மாநிலம் தழுவிய எதிர்கால லாபத் திட்டத்தையும் தாயார் செய்திருக்கேன். 152 00:09:35,492 --> 00:09:37,619 நிறைய லாபம் தரக்கூடிய வாய்ப்புகளை நாம தொடவேயில்லை. 153 00:09:37,619 --> 00:09:42,875 இது இந்த, இதைப் பத்திக் கவலைப் பட நமக்கு சம்பளம் இல்லை. 154 00:09:42,875 --> 00:09:45,210 அது யாரோட வேலையா இருந்தாலும் சரி, நான் அந்த வேலையை நல்லாச் செய்யறேன். 155 00:09:48,005 --> 00:09:51,175 உனக்கு இவ்வளவு தீவிரம் இருக்குறது நல்லாயில்லாமல் இல்ல. நல்லாதான் இருக்கு. 156 00:09:51,175 --> 00:09:52,634 ஆனால், நாம... 157 00:09:55,220 --> 00:09:56,346 நாம இப்போ கிளம்பலாம். 158 00:09:57,055 --> 00:10:01,226 வீடு வீடா போறதையும் செய்யலாம், கொஞ்சம் கொஞ்சமா மார்கெட்டைப் பிடிப்போம். 159 00:10:01,226 --> 00:10:03,312 நிச்சயமா, பணவரவைக் குறைச்சுக்க யாருக்குப் பிடிக்கும்? 160 00:10:03,312 --> 00:10:05,647 எனக்கு, ஷர்ல். 161 00:10:05,647 --> 00:10:09,193 எனக்கு பாஸ் இருக்கார், அதோட பாஸ்களுக்கு எல்லாம் வன்மம் உண்டு, விவஸ்தை இல்லை, 162 00:10:09,193 --> 00:10:13,155 அதுவும் அவங்க போட்டு வச்சிருக்கிற பட்ஜெட்டிலிருந்து நம்ம தேவைக்கு எடுத்தா. 163 00:10:15,866 --> 00:10:20,954 ஒருநாள், பிரைட்சைட் ரொம்ப வெற்றிகரமா நடந்ததுன்னா நானும் நீயும் இதன் நிர்வாகிகளானால் 164 00:10:20,954 --> 00:10:23,957 நாமும் பணக்காரர்களாகி, நமக்கு வேண்னும்ங்கிற மாதிரி விதிகளை மாத்தலாம். 165 00:10:25,792 --> 00:10:27,211 நீ ரெடின்னா போகலாம். 166 00:10:27,211 --> 00:10:28,670 ஹே, ஜாக், நான் தான். 167 00:10:29,505 --> 00:10:30,797 ஜோயீக்குப் பயணம் செய்ய விருப்பமில்லை. 168 00:10:30,797 --> 00:10:33,634 - நீ முன்னாடி சொன்னதை நானும் ஒத்துக்குறேன். - பயணம் செய்ய விருப்பமில்லையா? 169 00:10:35,677 --> 00:10:37,054 ஜாக், ஒரு நிமிடம் பேசலாமா? 170 00:10:38,222 --> 00:10:39,348 - ஹே, காலை வணக்கம். - ஹே. 171 00:10:39,348 --> 00:10:40,432 ஹே, ஷர்ல். 172 00:10:40,432 --> 00:10:43,310 நான் எல்லாத்துக்கும் நன்றி சொல்லறதுக்காக வந்துட்டிருந்தேன். 173 00:10:43,310 --> 00:10:44,770 நான் வீட்டுக்குப் போகணும். 174 00:10:44,770 --> 00:10:47,397 சரி, ஹே... நான் உன்னை அழைச்சுட்டுப் போறேன். சரியா? 175 00:10:47,397 --> 00:10:48,732 நான் உனக்கு ஒண்ணு காட்டணும். 176 00:10:48,732 --> 00:10:49,816 போகலாம். 177 00:10:50,901 --> 00:10:52,444 நான்தான் முதல் இடத்துல இருந்தேன், 178 00:10:52,444 --> 00:10:55,572 அப்போ தான் ஜாக், ஜோயீக்கு சாதகமா சிலதை செய்தார், 179 00:10:55,572 --> 00:10:58,283 அவனக்கு அனுபவமே இல்லாததால அவனுக்கும் அது தேவையா இருந்தது. 180 00:10:58,283 --> 00:11:03,080 ஹெர்பி, நீ திரும்பவும் பயணம் செய்யறது உனக்கு சங்கடமாயில்லையே, இருக்கா? 181 00:11:03,080 --> 00:11:06,124 - ஞாபகம் வச்சுக்கோ, நாம அதோட கெட்டி. - ரொம்ப ரொம்ப கெட்டி. 182 00:11:06,124 --> 00:11:07,709 எவ்வளவு கெட்... 183 00:11:08,836 --> 00:11:11,797 பொறு, ஹெர்பி, அது என்னது ஸ்கார்ஃப்? 184 00:11:12,756 --> 00:11:14,633 உன் படுக்கையில ஒரு பெண்ணோட ஸ்கார்ஃப் இருக்கு. 185 00:11:19,388 --> 00:11:25,185 பாரு, கண்ணே, அந்த ஸ்கார்ஃப் என்னன்னோ, இல்ல அது யாரோடதுன்னோ சொல்ல முடியாது, 186 00:11:25,185 --> 00:11:28,188 ஏன்னா அதை விட்டுட்டுப் போனபோது நான் இங்கே இல்ல. 187 00:11:28,188 --> 00:11:30,774 நான் தினமும் தனியா தான் இருக்கேன். 188 00:11:30,774 --> 00:11:36,363 நான் இங்கே உனக்காக, உன் இரட்டைக் குழந்தைகளோட காலம் முழுவதும் காத்துக்கிட்டு இருக்குறபோது, 189 00:11:36,363 --> 00:11:41,451 நீ ஒரு ஸ்கார்ஃபைப் போய் வச்சிருக்க. ஒரு ஸ்கார்ஃப வச்சிருக்க! 190 00:11:45,122 --> 00:11:47,541 இதுபோல ஒரு கார்தான் தேவை. ஒரு விற்பனையாளனுக்கு இதுவே வீடு தான். 191 00:11:48,125 --> 00:11:51,003 - அடேங்கப்பா. - ஹே, தயங்காத, மகனே, இன்னும் நல்லா அழுத்து. 192 00:11:51,545 --> 00:11:53,338 - உறுதியா தானா? - ஆமாம், எவ்வளவு போகுதுன்னுப் பாரு. 193 00:11:54,047 --> 00:11:55,048 இப்போ பார்க்கலாம். 194 00:12:04,641 --> 00:12:06,685 சரிதான், மகனே. நீ சரியாதான் ஸ்டீயரிங்கைப் பிடிச்சிருக்க. 195 00:12:06,685 --> 00:12:08,270 இது பயங்கர பவர்ஃபுல்லா இருக்கு. 196 00:12:08,270 --> 00:12:09,646 ஆமாம், அது தான். 197 00:12:10,814 --> 00:12:16,236 எனவே, ஜோ, நாம இன்னிக்கு பயணம் செய்யப் போறோம், எங்களோட இளம் விற்பனையாளர் 198 00:12:16,737 --> 00:12:22,409 குழுவுல சேர்ந்துக்கிட்டா நல்லாயிருக்கும். 199 00:12:22,409 --> 00:12:24,912 இந்த புது காரையும் நீ ஓட்டலாம். 200 00:12:25,412 --> 00:12:26,830 நீங்க என்ன சொல்றீங்க? 201 00:12:27,414 --> 00:12:30,834 ஏன், உனக்குப் பிடிக்கலையா? நாம மாத்திக்கலாம், ஆனால், இது உனக்குப் பொருந்துதுன்னு நினைக்கிறேன். 202 00:12:31,793 --> 00:12:33,170 எனக்காகவா இதை வாங்கினீங்க. 203 00:12:33,170 --> 00:12:38,383 இது எதுவுமே நல்லா நடக்கும்னு நீ எதிர்பார்க்கலை, ஆனால்... இதோ இது தான். 204 00:12:51,522 --> 00:12:53,065 அதாவது, அது வந்து... 205 00:12:55,400 --> 00:12:58,237 - இது ரொம்ப அதிகம். ஜாக், இது... வேண்டாம். - இல்லயில்ல. இல்ல. இல்ல. 206 00:12:58,237 --> 00:13:00,697 ரொம்ப கவலைப் படாதே, மகனே. இதை கம்பெனி கார்னு சொல்லுவோம். 207 00:13:00,697 --> 00:13:03,075 நீ எங்கக்கிட்ட வேலை செய்யற, அதனால ஓட்ட முடியுது. அவ்வளவு தான். 208 00:13:03,075 --> 00:13:04,868 ஆம், நீங்க அதுக்கு என்னை வற்புறுத்தத் தேவையில்லை, ஜாக். 209 00:13:04,868 --> 00:13:06,828 நான் போகலை. 210 00:13:06,828 --> 00:13:09,623 என்னால என் அம்மாவை விட முடியாது. 211 00:13:14,211 --> 00:13:15,212 என்னால முடியாது. 212 00:13:38,485 --> 00:13:40,696 நீ ஜாக்கைப் பார்த்தயா, இல்லையே? 213 00:13:40,696 --> 00:13:44,283 ஹெர்ப், நல்வாழ்த்துகள். நான் நேற்று இரவு உன் பலான பார்ட்னரைப் பார்த்தேன். 214 00:13:44,283 --> 00:13:46,577 ஆமாம், நான் உன்னைப் பத்தி தப்பா நினைச்சிருந்தேன். 215 00:13:46,577 --> 00:13:50,205 நீ என்னைத் தப்பா நினைச்சது தப்பு. 216 00:13:50,205 --> 00:13:53,542 நான் அவங்களுக்கு வாடிக்கையாளர் சேவைகளின் ஹாட்லைன் நம்பரைக் கொடுத்தேன், உபயோகமாயிருக்கும். 217 00:13:53,542 --> 00:13:57,254 இப்போ என்னன்னா, நீ ஒரு டான் ஜூவானைப் போல அவள ஒதுக்குற, அது அதிர்ச்சியா... இருக்கு. 218 00:13:57,254 --> 00:14:00,257 யாரும் எதையும் ஒதுக்கலை, அப்படியெல்லாம் இல்லை. 219 00:14:00,257 --> 00:14:02,342 நான் எப்போதும் உறவு கொள்ள ஆசைப்படுறவன்னு ஏன் நினைக்கிறீங்க? 220 00:14:02,342 --> 00:14:04,553 நியாயமான கேள்வி. நான் உன்னை ஒண்ணு கேட்குறேன். 221 00:14:04,553 --> 00:14:07,890 இப்போ, நீ இதை கடையில பார்த்தன்னா, ம்ம்? உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. 222 00:14:07,890 --> 00:14:11,310 வேறு சில முக்கியமான விஷயங்களை நீ கொஞ்சம் தள்ளிப் போடமாட்டயா? 223 00:14:11,310 --> 00:14:15,606 இப்படிப் பார்த்து. அப்படிப் பார்த்து. ஆட்டோகலரா, ம்ம்? எல்லாத்துக்கும் பொருந்தும். 224 00:14:15,606 --> 00:14:16,815 ரொம்ப நல்லாயிருக்கு. 225 00:14:17,816 --> 00:14:20,110 சரி, மெதுவா நடந்து போயிடு, சரியா? 226 00:14:20,694 --> 00:14:22,654 எனக்குக் தெரியும், உன்னிடம் முட்டாள்தனமான பல லட்சம் கேள்விங்க இருக்குன்னு. 227 00:14:22,654 --> 00:14:25,240 பிளீஸ், ஒரு முறை, அதையெல்லாம் பொத்திக்கிட்டு, இங்கேர்ந்து வெளியே போயிடு. 228 00:14:25,240 --> 00:14:26,366 அந்த பணப் பையை எடுத்துட்டுப் போ. 229 00:14:26,366 --> 00:14:28,327 ஒருவேளை நான் எல்லாத்தையும் ஷர்ல்கிட்ட கொடுக்குறேன். 230 00:14:28,952 --> 00:14:30,287 ஹே, உங்களதான், நண்பரே. 231 00:14:31,121 --> 00:14:34,666 நீ இங்கே இருக்கியா நான் உனக்காக எல்லா இடத்திலும் தேடினேன், ஃபிரெட். 232 00:14:35,792 --> 00:14:39,338 மூணு தடவையா பில்லைக் கட்டலை, எட். மூணாவது தடவை வலிக்கும். 233 00:14:39,338 --> 00:14:41,423 நல்ல செய்தி. நாளைக்குத் தான் சம்பளம். 234 00:14:41,423 --> 00:14:44,009 இங்கேயே தான் இருப்பேன், ஃபிரெட். நீ வா, கடைசி காசு வரை கிடைச்சுடும். 235 00:14:44,009 --> 00:14:46,637 வலி வேணுமா, பணம் கொடுக்கறயா. அது உன் இஷ்டம். 236 00:14:48,805 --> 00:14:52,142 எடு, உங்கிட்ட எதுவும் பணம் வச்சிருப்பயே. எதாவது. 237 00:14:56,063 --> 00:14:57,356 ஃபிரெட், எங்கிட்ட எதுவுமில்ல. 238 00:14:59,066 --> 00:15:00,108 அடப்பாவமே, மனுஷா. 239 00:15:00,108 --> 00:15:03,278 சரி, சரி, விடு. சரியா, ஹே, ஹே. பாரு, பாரு, பிளீஸ்? 240 00:15:03,779 --> 00:15:05,948 நானே நடப்பேன், சரியா? இப்போ பெரியவனாகிட்டேன். 241 00:15:07,074 --> 00:15:09,451 இனிய மதிய பொழுதாகட்டும். 242 00:15:09,451 --> 00:15:13,997 ஹலோ, நீங்க பிரைட்சைட் லூனார் ரெசிடென்ஸெஸை அழைத்ததற்கு நன்றி, 243 00:15:13,997 --> 00:15:16,750 அங்கே நீங்கள் உங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை இன்றே வாழலாம். 244 00:15:16,750 --> 00:15:18,961 விற்பனைக்கு, ஒன்றை அழுத்தவும். 245 00:15:18,961 --> 00:15:21,755 பிரைட்சைடைப் பற்றி அதிகமாக அறிய, இரண்டை அழுத்தவும். 246 00:15:24,258 --> 00:15:26,009 விற்பனைக்கு, ஒன்றை அழுத்தவும். 247 00:15:26,593 --> 00:15:29,221 பிரைட்சைடைப் பற்றி அதிகமாக அறிய, இரண்டை அழுத்தவும். 248 00:15:29,221 --> 00:15:31,181 தவறான பதிவு. 249 00:15:33,016 --> 00:15:39,815 தவறான பதிவு. 250 00:15:42,693 --> 00:15:46,321 மன்னிக்கவும், எங்கள் விற்பனையாளர்கள் யாரும் தற்சமயம் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை. 251 00:16:03,130 --> 00:16:04,131 தொடர்ந்து வா. 252 00:16:21,481 --> 00:16:23,942 பிரைட்சைட் வாடிக்கையாளர்களுக்கு உதவும் சேவை மையம் 253 00:16:25,194 --> 00:16:29,031 நீங்க என்னை துண்டிச்சுட்டீங்க, அவர் பெயர் "ஹெர்ப் போர்டர்," 254 00:16:29,031 --> 00:16:31,200 அவரை நீங்க உடனே வேலை நீக்கம் செய்யணும் 255 00:16:31,200 --> 00:16:33,619 ஏன்னா அவர் சொன்னதால் தான் நான் இதில் இறங்கினேன்... 256 00:16:34,912 --> 00:16:37,497 இப்போது நான் இந்த அசிங்கமான மோட்டலில் மாட்டிக்கிட்டு இருக்கேன் 257 00:16:37,497 --> 00:16:41,293 அதோட சந்திரனுக்குப் போக ஒரே ஒரு உடைதான் என் சூட்கேஸுல இருக்கு. 258 00:16:42,836 --> 00:16:46,340 மூணு மாசமா திரும்பிப் போக வீடு இல்லாமலா? 259 00:16:46,340 --> 00:16:48,592 நான் உடனே கிளம்புறேன்னு நினைச்சேன். 260 00:16:48,592 --> 00:16:51,929 நான் இங்கே வர எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா? 261 00:16:52,930 --> 00:16:56,266 இவையெல்லாம் பிரைட்சைட் லூனார் அலுவலகங்களின் "ரெசிடென்சிஸா?" 262 00:16:56,266 --> 00:16:58,227 ஆம், நான் உங்களுக்கு எப்படி உதவமுடியும்? 263 00:16:59,895 --> 00:17:04,148 நான் அங்குள்ள மேனேஜரோட பேசணும், இல்லை அவர் இடத்தில் இருக்கும் "சம்பார்டினேட்ட" பேசணும். 264 00:17:04,775 --> 00:17:06,026 ஆம், நீங்க என்னோட பேசலாம். 265 00:17:07,236 --> 00:17:09,738 - உங்க கார்போரெட் அலுவலகம் எங்கே இருக்கு? - என்னது? 266 00:17:09,738 --> 00:17:11,656 உங்க கார்போரெட் அலுவலகம் எங்கே இருக்கு? 267 00:17:12,281 --> 00:17:13,282 நீங்க தலைமை அலுவலகத்தக் கேட்குறீங்களா? 268 00:17:14,076 --> 00:17:14,992 சந்திரன்ல. 269 00:17:16,787 --> 00:17:19,665 - ஃபார்ம் 703சி, பிளீஸ். - ஆம், இப்போ நீங்க என்னை குழப்பிட்டீங்க. 270 00:17:20,290 --> 00:17:21,541 703சியைக் கொடுங்க. 271 00:17:22,876 --> 00:17:26,588 இந்த வட்டாரத்தில் இல்லாத நிறுவனத்தின், டபிள்யூஓய்பிஎஸில் அனுமதிக்கப் படாத விளம்பர 272 00:17:26,588 --> 00:17:28,089 ஒலிபரப்புக்களைத் தொடர்ந்து, 273 00:17:28,089 --> 00:17:33,804 நீங்க ஒரு 703சி ஸ்டேட்மெண்ட் ஆஃப் டிஸ்குளோசரை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. 274 00:17:33,804 --> 00:17:34,763 கீழே. 275 00:17:35,347 --> 00:17:39,393 ஒவ்வொரு நிறுவனத்திற்கும், ஒவ்வொறு டிரான்ஸ்சாக்ஷனுக்கும் "மூன்று காப்பிகள்." 276 00:17:40,811 --> 00:17:42,646 மன்னிக்கணும், எனக்குத் தெரியாம போச்சு. 277 00:17:42,646 --> 00:17:45,691 அதன் விளைவு என்னன்னா, விதிகளை மீறியிருக்கீங்க. 278 00:17:46,275 --> 00:17:47,943 இவை எல்லாம் பொதுவான வானொலிகள், மேடம். 279 00:17:47,943 --> 00:17:51,488 யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் அதுல சொல்ல அனுமதிக்க முடியாது. 280 00:17:51,488 --> 00:17:54,074 சரி, நாங்க எங்க பிசினஸை வேற இடத்துக்கு மாத்துறதும் நல்லதுக்கு தான், 281 00:17:54,074 --> 00:17:56,285 அதனால நீங்க உங்க 73எஸ்களைப் பத்திக் கவலைப்பட வேண்டாம். சரி... 282 00:17:56,285 --> 00:18:02,040 703சிக்கள். எனக்கு இருக்கும் அனுமதி, விஸ்டாவில் கௌன்டி மட்டும் தான், ஆனால்... 283 00:18:02,040 --> 00:18:04,042 அதை எழுதிக் கொடுங்க "மூன்று காப்பிகள்." 284 00:18:04,710 --> 00:18:07,421 நான் 14 மணி நேரங்கள் உழைச்சு இந்த ஆவணங்களை தயாரிக்கிறேன், என் கையெல்லாம் வலிக்குது, 285 00:18:07,421 --> 00:18:09,965 என் பின்புறம் எல்லாம் நொந்து போயிடுச்சு, அதோட எனக்கு முன்னாடி யாராவது 286 00:18:09,965 --> 00:18:13,051 வந்தாங்கன்னா, அவங்க கண்ணை இந்த பென்சிலால நோண்டி எடுக்கணும் போல இருக்கு. 287 00:18:13,051 --> 00:18:16,972 இப்போ நீங்க, இந்த 12 டாலர் சூட்டுல, 288 00:18:16,972 --> 00:18:20,392 எற்கனவே எக்கச்சக்கமா ஃபார்ம்கள் நிரப்ப தேவைப்படுற இடத்துல 289 00:18:20,392 --> 00:18:22,102 இன்னும் தேவையில்லாத ஃபார்ம்களை கேட்டு வந்திருக்கீங்க. 290 00:18:22,102 --> 00:18:25,522 இப்போ, பிளீஸ், இங்கேர்ந்து இடத்தைக் காலி செய்து, என் வேலையை கவனிக்க அனுமதிக்கறீங்களா. 291 00:18:26,106 --> 00:18:29,234 இதுபோல மரியாதையில்லாத பேச்சுக்களையும் எகத்தாளங்களையும் நான் நிறைய பார்த்திருக்கேன். 292 00:18:29,234 --> 00:18:35,115 அப்படி செய்யக்கூடாதுன்னு விதி எதுவும் இல்லைன்னாலும், கசப்பை உண்டாக்கிடும். 293 00:18:36,575 --> 00:18:41,580 உங்களுக்கான 16-மணி நேர கீழ்பணியும் கெடுவுக்கான முதல் "அறிவிப்பு" 294 00:18:42,748 --> 00:18:43,749 மூன்று நிமிடத்திற்கு முன் ஆரம்பித்துவிட்டது. 295 00:18:44,333 --> 00:18:45,626 பின் தொடர்ந்து வா. 296 00:18:47,586 --> 00:18:50,255 எனவே, நான் வேறன்ன சொல்லணும்? 297 00:18:50,255 --> 00:18:53,634 நான் 17 வயதில் திருமணம் செய்து கொண்டேன். அதுவே என்னோட முதல் தப்பு. 298 00:18:53,634 --> 00:18:57,554 எவனாவது, "அடுத்த கர்ப்பத்தை கலைக்கவேண்டாம்," அப்படின்னு சொன்னா, அவன் பொய் சொல்றான். 299 00:18:57,554 --> 00:19:01,141 எங்க அம்மா இன்னும் மோசம், ஆனால் அவங்களப் பத்தி தான் பேசிட்டோம். 300 00:19:03,435 --> 00:19:04,895 என்னை இங்கிருந்து கொண்டு போயிடுங்க, பிளீஸ். 301 00:19:06,897 --> 00:19:08,899 என்னை வெளியே கொண்டு போயிடுங்க. 302 00:19:08,899 --> 00:19:10,692 உங்க தகவலை எங்களால் சேவ் செய்ய முடியவில்லை. 303 00:19:10,692 --> 00:19:12,694 தகவல் டெலீட் செய்யப்பட்டது 304 00:19:13,737 --> 00:19:15,405 விற்பனைக்கு, ஒன்றை அழுத்தவும். 305 00:19:19,201 --> 00:19:20,619 - திரு. பில்லிங்க்ஸ்? - ஹே. 306 00:19:20,619 --> 00:19:22,454 அந்த குப்பைத் தொட்டி சரியாயில்லைன்னு பார்த்தேன். 307 00:19:22,454 --> 00:19:24,540 சுத்தியலும், ரெண்டு ஆட்களும் இருந்தா போதும், சரி செய்திடலாம். 308 00:19:26,875 --> 00:19:27,876 நீங்க ஏன் இதைச் செய்யறீங்க? 309 00:19:27,876 --> 00:19:29,628 சரி, ஏன்னா நீ இதுல சிக்கிட்டு இருக்க, மகனே. 310 00:19:29,628 --> 00:19:32,214 நீ ஒவ்வொரு தடவை அதைப் பார்க்கும்போதும், அது உன்னை சோகமாக்குது. 311 00:19:32,214 --> 00:19:35,759 நீ எங்களோட பயணத்தில வர முடியாதுன்னு புரியுது, ஆனால் நீ இங்கேயே இருக்கவும் முடியாது. 312 00:19:35,759 --> 00:19:37,135 உங்கிட்ட எதுவும் கருவிகள் இருக்கா? 313 00:19:38,887 --> 00:19:39,888 நான் தேடிப் பார்க்கிறேன். 314 00:19:52,651 --> 00:19:55,028 எங்க அம்மா லேசுல பொருட்களைத் தூக்கிப் போட மாட்டாங்க. 315 00:19:56,196 --> 00:19:58,031 இதோ, நீங்க இதுல இருக்கான்னு பாருங்க. 316 00:20:01,034 --> 00:20:02,077 எனக்கு ஒரு தடவை இதுபோல நடந்திருக்கு. 317 00:20:02,661 --> 00:20:04,371 நீ சிறு வயசுல இதையெல்லாம் நிறைய உபயோகிச்சிருக்கயா? 318 00:20:05,372 --> 00:20:07,124 இல்ல. பெரும்பாலும் அதுக்கு ஆளைக் கூப்பிடுவாங்க. 319 00:20:08,250 --> 00:20:09,251 இது போதும். 320 00:20:10,460 --> 00:20:12,713 நான்... நீ அந்த புதுசு மேலே கொஞ்சம் வர்ணம் பூசு. 321 00:20:14,631 --> 00:20:15,716 சரி. 322 00:20:21,847 --> 00:20:25,017 பி-பிளேக்ஸ். ஜாக்கிடம் நான் அதை காரணத்தோட தான் விட்டிருக்கேன்னு சொல்லிடு. 323 00:20:25,017 --> 00:20:27,811 நல்லா செய்திருக்க, ஹெர்ப். ரெண்டாம் இடத்துக்கு டை. 324 00:20:27,811 --> 00:20:29,646 ஹே, நீயே உன் இடத்தை அங்கே குறிக்கிறயா? 325 00:20:33,150 --> 00:20:34,484 யாருக்கு இந்த குறிப்பெல்லாம் தேவை, இல்ல? 326 00:20:34,484 --> 00:20:39,656 ஜாக்குக்கோ, இல்ல ஜோயீக்கோத் தெரியலைனாலும், நான் எவ்வளவு செய்தேன்னு எனக்குத் தெரியும். 327 00:20:39,656 --> 00:20:41,950 உன்னை நீயே போட்டு வருத்திக்காதே. 328 00:20:41,950 --> 00:20:44,828 அந்த பையனுக்கும் ஜாக்குக்கும் இடையிலே நடக்குறதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லை. 329 00:20:45,621 --> 00:20:46,705 நன்றி, ஷர்லி. 330 00:20:47,206 --> 00:20:50,292 சில சமயம், நான் முதல் இடத்துல இல்லைன்னா, பெட்டி... 331 00:20:51,919 --> 00:20:54,171 அதாவது, 332 00:20:54,171 --> 00:20:57,799 அப்படின்னா ஏதோ குறையிருக்குன்னு நினைக்கிறா. 333 00:20:59,593 --> 00:21:02,679 சரி, நீங்க ரெண்டு பேருமே கொஞ்சம் இளைப்பாறணும்னு நான் நினைக்கிறேன். 334 00:21:03,180 --> 00:21:07,684 ஆனால், அவளுக்கு அந்த வார்த்தையே பிடிக்காது, ஷர்லி. 335 00:21:12,147 --> 00:21:15,025 ஜாக் - ஜோயீ - ஹெர்ப் - எட்டி 336 00:21:17,486 --> 00:21:20,864 மகனே, பாரு, நீ உன் அம்மாக்காக இங்கேயே இருக்கணும்னு நினைக்கிறது ரொம்ப உத்தமம்தான், 337 00:21:20,864 --> 00:21:23,575 ஆனால் உன் வாழ்க்கையை தியாகம் செய்யறது ரொம்ப கஷ்டம். 338 00:21:23,575 --> 00:21:25,953 ஆனால், அவங்க அப்படி தான் என்னை வளர்த்தாங்க. 339 00:21:25,953 --> 00:21:27,287 குடும்பம் தான் முதல்ல வரணும். 340 00:21:27,287 --> 00:21:29,498 ரொம்ப சரி, ஆனால் நீயும் அந்த குடும்பத்துல ஒருவன் தானே? 341 00:21:30,290 --> 00:21:31,458 நிச்சயமா. 342 00:21:31,458 --> 00:21:35,587 என்னை நம்பு, நீ அவங்க மேலேயும் அன்பு செலுத்திட்டு, உன் வேலையையும் சில சமயம் 343 00:21:35,587 --> 00:21:37,381 பார்த்துக்குற அளவுக்கு உலகம் ரொம்பப் பெரிசு தான். 344 00:21:37,381 --> 00:21:38,966 நல்லாயிருக்கு, அழகா, சமம்மா இருக்கு. 345 00:21:40,050 --> 00:21:41,051 நன்றி. 346 00:21:43,554 --> 00:21:45,430 என்னன்னா, நான் ஒரே ஒரு முறைதான் இங்கே இல்லாம இருந்திருக்கேன். 347 00:21:46,473 --> 00:21:48,725 இல்ல, அது இறுதி ஆட்டம், வோல்ட்ஸ், டைனமோஸோட. 348 00:21:50,185 --> 00:21:52,020 எனவே, இங்கிருந்து லோக்கல் பஸ்ஸுல போய்வர 10 மணி நேரம் ஆச்சு. 349 00:21:52,604 --> 00:21:55,065 உனக்கு மனசுல சாகஸம் செய்யணும்னு இருந்தாலும், பாட்டி மாதிரி வாழற. 350 00:22:01,071 --> 00:22:02,531 உங்களுக்கு மனிதர்கள எப்படி இவ்வளவு புரிஞ்சுக்க முடியுது? 351 00:22:03,115 --> 00:22:04,449 அவங்க கதவுகளை தட்டிக்கிட்டே இருக்கேனே. 352 00:22:05,534 --> 00:22:06,535 அது ஒரு பெரிய படிப்பறைதான். 353 00:22:08,203 --> 00:22:10,080 நிச்சயமா எனக்கு உங்க எல்லாரோடும் போக ஆசை தான். 354 00:22:10,831 --> 00:22:13,667 நான் எதையும் சாதிக்காம இருக்க விரும்பலை. நான்... 355 00:22:19,673 --> 00:22:22,009 எங்க அப்பா விட்டுட்டு போயிட்டார், அவருக்கு அது தான் விதி. 356 00:22:23,927 --> 00:22:25,679 அம்மாவை விட்டுட்டு, திரும்பியும் பார்க்கலை. 357 00:22:30,225 --> 00:22:32,936 - நீ அவரோட தொடர்பே வச்சுக்கலையா? - எனக்கு அவரோட பேரு கூட தெரிய வேண்டாம். 358 00:22:32,936 --> 00:22:35,022 - உறுதியாவா? - அவர் இறந்தாலும் எனக்கு அக்கறையில்லை. 359 00:22:38,025 --> 00:22:39,985 அப்போ சரி, நீ நிச்சயமா அவரோட பல படி மேலே போயிடுவன்னு தெரியுது. 360 00:22:43,155 --> 00:22:46,700 எப்படியிருந்தாலும், உங்க அம்மாவும் அதைத்தான் விரும்புவாங்க. 361 00:22:46,700 --> 00:22:48,702 அதாவது, எனக்கு அவங்களத் தெரியாது, ஆனால்... 362 00:22:50,537 --> 00:22:52,831 அம்மாக்கள் சாதாரணமா அவங்க பசங்களை அப்படியே விட்டுட மாட்டாங்க. 363 00:22:52,831 --> 00:22:56,793 ஆமாம். ஆம், விட்டால், என் வாழ்க்கை முழுவதும் இங்கேயே, இந்த வீட்டிலேயே 364 00:22:56,793 --> 00:22:58,712 நான் அவங்களோட இருக்கணும்னு தான் விரும்புவாங்க. 365 00:22:58,712 --> 00:23:00,464 நீ தனியாப் போகலைன்னா, அவங்கள வெறுப்ப. 366 00:23:02,841 --> 00:23:04,134 அது எனக்குத் தெரியும். 367 00:23:04,885 --> 00:23:07,804 அது மட்டுமில்லாம, உனக்கு இந்த கார், ஒரு நல்ல வேலை, புது நண்பர்கள், 368 00:23:07,804 --> 00:23:10,641 எல்லாமே உனக்கு வெறுமனே "நன்றி, ஜாக்" அப்படின்னு சொன்னா கிடைக்கப் போகுது. 369 00:23:18,815 --> 00:23:19,816 நன்றி, ஜாக். 370 00:23:33,413 --> 00:23:34,873 மாலைப் பொழுது அறைச் சேவைகள். 371 00:23:37,251 --> 00:23:39,461 - நாசமாப் போறவனே. - மேடம்... மிஸ். 372 00:23:40,045 --> 00:23:42,756 நான் உன்னை நம்பினேன். இதுக்காக என் வாழ்க்கையையே உதறிட்டேன்! 373 00:23:42,756 --> 00:23:44,299 நீங்க இங்கே என்ன செய்யறீங்க? 374 00:23:46,760 --> 00:23:48,971 - உண்மையிலே, அதெல்லாம் என் தோழனுடையது. - அவனும் நாசமாப் போக! 375 00:23:48,971 --> 00:23:50,681 இது நடக்கும்னு நீ எனக்கு வாக்குக் கொடுத்த! 376 00:23:51,265 --> 00:23:54,309 எனக்குக் காத்திருக்க நேரமில்லை! என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு! 377 00:23:54,309 --> 00:23:57,062 பன்னிரண்டு வருஷ திருமண வாழ்க்கை, எல்லாம் சொதப்பிட்டயே! 378 00:23:57,062 --> 00:23:59,857 மன்னிக்கணும், மிஸ். சிறுக்கியே, 379 00:23:59,857 --> 00:24:03,360 நீங்க அந்த மலிவுவிலை, உதவாக்கரை, ஸ்கார்ஃபை தேடுறீங்கன்னா, அது இங்கே தான் இருக்கு. 380 00:24:04,069 --> 00:24:05,153 எனக்குத் தெரியும். 381 00:24:13,078 --> 00:24:14,079 சரி. 382 00:24:14,580 --> 00:24:17,040 மதிய வணக்கம், விருந்தினரே. உங்க பொருட்களை எடுத்துக்கலாமா? 383 00:24:17,040 --> 00:24:19,126 - உனக்கு இப்போ புரியப் போகுது. - ஒரு மாதிரி. 384 00:24:19,126 --> 00:24:20,919 எனவே, கடைசியா வந்துட்ட. 385 00:24:21,503 --> 00:24:24,423 அம்மா. அம்மா, ஹே. நான் உங்கள எதிர்பார்க்கலை. 386 00:24:25,007 --> 00:24:28,594 இது, இவர்... எங்களோட புதுசா சேர்ந்தவர். அருமையானவர். 387 00:24:28,594 --> 00:24:30,429 ஜோயீ ஷார்டர், எங்க அம்மா. 388 00:24:30,429 --> 00:24:32,139 உங்கள சந்திக்கறதுல ரொம்ப சந்தோஷம், திருமதி. பில்லிங்க்ஸ். 389 00:24:33,223 --> 00:24:36,101 கடவுளே, எவ்வளவு அழகா இருக்க. மன்னிச்சிடு. 390 00:24:37,728 --> 00:24:40,272 சரி, போதும், அம்மா, மூச்சு விட அனுமதியுங்க. அம்மா, முதல்... இது தான் அவர் முதல் வாரம். 391 00:24:41,982 --> 00:24:47,779 ஜாக்குக்கிட்ட, ரொம்ப வருஷமா, உன்னைப் போல ஒருத்தரைப் போடச் சொன்னேன். 392 00:24:47,779 --> 00:24:49,948 சொல்லு, உன்னை நல்லா நடத்துறானா? 393 00:24:49,948 --> 00:24:53,035 அவனால கொடுமைக்காரனாவும் இருக்கமுடியும். 394 00:24:53,035 --> 00:24:55,162 கவனமில்லாம, வேற-மாதிரி பேசிட்டு, அப்படியும் இருப்பான். 395 00:24:55,162 --> 00:24:56,705 ஓ, இல்ல. 396 00:24:56,705 --> 00:24:58,874 அவர் ரொம்ப அருமையானவர். எனக்கு நிறைய கத்துக்கொடுத்திருக்கார். 397 00:24:58,874 --> 00:25:00,751 நாங்க இன்னிக்கு இரவு பயணம் செய்யப் போறோம். 398 00:25:00,751 --> 00:25:01,835 அப்படியா? 399 00:25:02,920 --> 00:25:04,254 நீயும் போறயா? 400 00:25:04,254 --> 00:25:06,757 நிறைய பேக்கிங், அப்புறம் திட்டமிடுறது எல்லாம் இருக்கு, அம்மா. 401 00:25:06,757 --> 00:25:10,010 - ஆனால் சந்திக்க முடிஞ்சதுல சந்தோஷம். - மீண்டும் சந்திப்போம், திருமதி. பில்லிங்க்ஸ். 402 00:25:10,010 --> 00:25:11,512 கண்டிப்பா, ஜோயீ. 403 00:25:11,512 --> 00:25:16,266 இவன் என்ன சொன்னாலும், செய்தாலும், நீ ரொம்ப ஸ்பெஷலான இளைஞன் தான். 404 00:25:16,266 --> 00:25:18,936 - சரி. - சரி தான். 405 00:25:18,936 --> 00:25:20,521 சரி. 406 00:25:22,397 --> 00:25:24,441 மதிய வணக்கம், மதிப்பிற்குறிய விருந்தினரே. 407 00:25:24,441 --> 00:25:25,901 நான் உங்க பொருட்களை எடுத்துக்கலாமா? 408 00:25:25,901 --> 00:25:28,612 - நான், ஷர்லோடு வர்றேன். - நல்லது. 409 00:25:29,655 --> 00:25:30,739 அட, அது என்னது? 410 00:25:31,740 --> 00:25:33,325 அது கம்பெனியோட கார். 411 00:25:33,325 --> 00:25:36,662 ஆனால், நான் கொஞ்ச நாட்கள் அதை ஓட்டலாம்னு ஜாக் சொல்றார். 412 00:25:40,457 --> 00:25:44,127 நீ அந்த பையனை என்னதுக்கு இப்படி துன்பப்படுத்துற? 413 00:25:44,127 --> 00:25:46,672 அவன் நல்லாதான் இருக்கான். அம்மா? காருக்குள்ள ஏறு. 414 00:25:46,672 --> 00:25:49,049 நீ அவனைப் பார்க்கணும். எல்லாம் சரியாகிடும். 415 00:25:49,049 --> 00:25:54,137 நீ அவன் கிட்ட இல்லாத பொய்யெல்லாம் சொல்லியிருக்க. அவன் ஏற்கனவே பாதி மாறிட்டான். 416 00:25:54,137 --> 00:25:59,768 சாகக்கிடக்குற அவங்க அம்மாவை விட்டுட்டு "பயணம்" செய்ய கூட்டிட்டுப் போறயே, 417 00:25:59,768 --> 00:26:02,479 நீ அவனோட அப்பான்னு கூட உன்னால ஒத்துக்க முடியலை. 418 00:26:02,479 --> 00:26:04,773 நான் அவங்கிட்ட சீக்கிரமே சொல்லத் தான் போறேன். என்னை என்னன்னு நீ எடைப் போட்டிருக்க? 419 00:26:04,773 --> 00:26:06,316 நீ யாருன்னு எனக்குத் தெரியும், ஜாக். 420 00:26:06,316 --> 00:26:09,903 ஒரு நல்ல தரமான இளைஞனா வளர்வதுலேர்ந்து அவனை பிரிச்சு கொண்டுப் போயிடுவ. 421 00:26:09,903 --> 00:26:14,283 - உங்க அப்பாவோட அதே குணம். - அப்பா விட்டுட்டுப் போகலை. அவர் இறந்துட்டார். 422 00:26:14,283 --> 00:26:16,910 அது அவருடைய தப்பில்லன்னு நினைக்கிறயா? 423 00:26:17,786 --> 00:26:20,414 ஒரு பைத்தியக்காரரோட வாழறதுன்னா என்னன்னு எனக்குத் தெரியும், ஜாக். 424 00:26:21,456 --> 00:26:23,417 அதனால நான் அந்த பையனுக்கு ஆதரவா இருக்கப் போறேன். 425 00:26:24,001 --> 00:26:28,422 சரி, அப்போ அவனை எச்சரிக்கிறேன், ஏன்னா, நீங்க பார்த்துக்குறவங்க, தற்கொலை செய்ய முயலறாங்க. 426 00:26:29,006 --> 00:26:30,716 - நீயே பார்த்துக்கோ. - வர்றேன், அம்மா. 427 00:26:30,716 --> 00:26:34,636 ஓடிப் போ, ஜாக். ஆகட்டும், ஓடிப் போ. 428 00:26:45,522 --> 00:26:46,607 ஷர்லி. 429 00:26:46,607 --> 00:26:48,442 ஹே. எல்லாம் பேக் செய்தாச்சா? 430 00:26:49,943 --> 00:26:53,071 இங்கிருந்து போனதுக்கு அப்புறம், திரும்பி இங்கே வரவே வேண்டாம்னா, நல்லது தானே, இல்லையா? 431 00:26:53,906 --> 00:26:57,910 நீ மறந்துட்டயா... 432 00:26:57,910 --> 00:26:59,912 சரி, நீ இதை பேக் செய்ய மறந்துட்ட, இல்ல. 433 00:27:03,957 --> 00:27:05,167 எங்கே பார்க்கட்டும். 434 00:27:09,421 --> 00:27:11,423 உன்னுடைய மத்த பிரச்சினைகள் எல்லாம் என்ன ஆச்சு? 435 00:27:11,423 --> 00:27:15,761 கடவுளே. அவ்வளவு அழகா ஒரு நகை, இப்போ என்னோட மத்தப் பிரச்சினைகளப் பத்தியா பேசணும்? 436 00:27:22,017 --> 00:27:25,312 ஆம், ஆம். ஆமாம். ரொம்ப அழகா தான் இருக்கு, எட். 437 00:27:27,856 --> 00:27:29,233 ரொம்பப் பெரிசு. 438 00:27:31,151 --> 00:27:32,152 அசத்துது. 439 00:27:35,280 --> 00:27:37,199 - உன் காலுக்கு என்ன ஆச்சு? - எதுவும் இல்ல. 440 00:27:37,199 --> 00:27:40,702 - இங்கே நடந்து வா பார்க்கலாம். - இல்ல. நான் என்ன பட்டாளக்காரனா. 441 00:27:40,702 --> 00:27:42,621 எனக்கு இங்க இருக்கப் பிடிக்குது. 442 00:27:44,331 --> 00:27:46,083 என்ன, ராத்திரியெல்லாம் அங்கேயே நிற்கப்போறயா? 443 00:27:46,083 --> 00:27:47,793 இங்கே வந்து எனக்கு ஒரு முத்தம் கொடு. 444 00:27:52,172 --> 00:27:53,674 அட, மடையனே. 445 00:27:53,674 --> 00:27:57,594 ஆமாம், இருக்கலாம், இருந்தாலும் அதிர்ஷ்டக்காரன் தான், இல்ல? 446 00:28:03,308 --> 00:28:04,309 இந்தா. 447 00:28:05,394 --> 00:28:07,521 - என்ன? - மத்தவங்க எல்லாம் பொறுப்பில்லாம இருக்காங்க. 448 00:28:07,521 --> 00:28:09,064 - நாமும் ஏன் செய்யக்கூடாது? - என்ன? 449 00:28:10,607 --> 00:28:13,443 நீ எதுக்கு இதைக் கொடுக்கணுமோ கொடுத்துட்டு, சீக்கிரமா திருப்பித் தந்திடு. 450 00:28:13,443 --> 00:28:18,282 ஷர்ல், இதெல்லாமே ஒரு அற்புதம் தான், இதனால நான் தப்பிக்கப் போறேன். நிச்சயமா. 451 00:28:18,782 --> 00:28:20,284 - ரொம்ப அழாதே. - சரி, இல்ல. 452 00:28:21,201 --> 00:28:24,371 பால்... மீண்டும் மீண்டும் வந்துக்கிட்டே இருக்கே. 453 00:28:24,371 --> 00:28:28,000 - இல்ல, நான் உண்மையைச் சொல்றேன். - இல்லயில்ல. இந்த சகுணப் பேச்செல்லாம் போதும். 454 00:28:28,000 --> 00:28:29,585 - நான்... - முத்தமிடலாம். 455 00:28:39,511 --> 00:28:42,598 உனக்கு இது கேட்கப் பிடிக்காம இருக்கலாம், ஆனால்... 456 00:28:44,391 --> 00:28:46,768 நிச்சயமா, அவன் இங்கேயே இருந்து 457 00:28:47,269 --> 00:28:50,814 அவன் வாழ்க்கை முழுவதையும் கவலையோட, எதுவும் செய்ய முடியுமான்னு யோசிட்டே இருக்கலாம், 458 00:28:50,814 --> 00:28:55,694 இல்ல, அவனுக்கும் இந்த உலகத்துல பிழைக்க வழி இருக்குன்னு உணத்துற எதாவது ஒண்ணச் செய்யலாம். 459 00:28:56,528 --> 00:28:58,614 அந்த வாய்ப்பு அவனுக்கு கடைக்காமப் போறதை, நீ நிச்சயமா விரும்பமாட்ட. 460 00:29:01,450 --> 00:29:04,369 அவன் நூறு விஷயத்துல தப்பு செய்தாத்தான் என்ன? 461 00:29:04,369 --> 00:29:06,663 அவன் நேர்மையானவனாவாவது திரும்பி வருவான். 462 00:29:18,634 --> 00:29:20,385 அவன் அற்புதமான பையன். உனக்கே அது தெரியும். 463 00:29:24,056 --> 00:29:25,265 நீ தான் அவனை வளர்த்த. 464 00:29:31,104 --> 00:29:32,689 அப்பாடி, அவன் உன்னை எப்படி நேசிக்கிறான். 465 00:29:33,732 --> 00:29:36,652 உன் பக்கத்துல இருக்க, தன் கனவுகளையும் விட்டுக்கொடுக்கத் தயாரா இருக்கான். 466 00:29:37,986 --> 00:29:39,571 நான் குறுக்கிடுற வரைக்குமாவது, இருந்தான். 467 00:29:44,034 --> 00:29:46,620 கடவுளே, நான் படிக்கவே முடியாதுங்குறதை இப்போவே தெரிஞ்சு வச்சிருக்கான். 468 00:30:08,684 --> 00:30:09,768 எனவே, நல்லது. 469 00:30:13,522 --> 00:30:15,816 எனக்குப் புரியுது. நாங்க இருக்கோம். 470 00:30:17,067 --> 00:30:18,443 என்ன தலைப் போற அவசரம், இல்ல? 471 00:30:24,283 --> 00:30:26,535 விசிட்ங் நேரம், குடும்பத்தினருக்கு மட்டும் தான். 472 00:30:29,162 --> 00:30:30,414 நான் அவருடைய கணவர். 473 00:30:34,001 --> 00:30:35,669 இன்னொரு சுத்து வேண்டுமா? 474 00:30:38,297 --> 00:30:39,298 கடவுளே. 475 00:30:40,591 --> 00:30:43,510 யார் இந்த விடுதியை நடத்துறாங்களோ, அவங்கள தண்டிக்கணும். 476 00:30:44,928 --> 00:30:45,929 ஆமாம், மேடம்... 477 00:30:47,848 --> 00:30:52,060 பெரும்பாலும் யூஎஸ்டிஏ பிரைம்னு இந்த மெனுவிலக் கொடுத்திருப்பது எல்லாம் 478 00:30:52,686 --> 00:30:55,189 "ஸ்டாட்நார்ட்டு தான்..." சாதாரணம் தான். 479 00:30:55,689 --> 00:30:56,773 அது சுத்த மோசம். 480 00:30:59,234 --> 00:31:01,028 யோசிச்சுப் பார்த்தா, நீங்க சொல்றது சரிதான். 481 00:31:06,867 --> 00:31:07,868 நன்றி. 482 00:31:08,452 --> 00:31:11,747 நான் இன்னிக்கு நாலு மணி நேரம் ஃபோன்ல பேசிட்டு இருந்தேன், 483 00:31:11,747 --> 00:31:14,875 யாருமே நான் சொல்றதக் கேட்கலை. ஒருத்தரும். நான் இந்த மிதியடியாகக் கூட இருந்திருக்கலாம். 484 00:31:16,585 --> 00:31:18,128 எஃப்27ஈஇஃஜடைக் கொண்டு வா. 485 00:31:22,049 --> 00:31:24,510 நீங்க மிதியடி இல்லை, மேடம். நீங்க ஒரு வாடிக்கையாளர். 486 00:31:31,475 --> 00:31:33,936 வாடிக்கையாளருக்கு உரிமைகள் இருக்கு. 487 00:31:35,521 --> 00:31:37,648 என்னோட வேலை அவங்கள காப்பாத்தறது தான். 488 00:31:39,399 --> 00:31:42,110 வாடிக்கையாளர்களின் புகார் பதிவு 489 00:32:39,626 --> 00:32:41,628 தமிழாக்கம் அகிலா குமார்