1 00:00:14,223 --> 00:00:15,224 அப்பா, இன்னும் எவ்வளவு நேரம்? 2 00:00:16,600 --> 00:00:18,519 இரவுக்குள்ளப் போய் சேர்ந்திடுவோம்னு நினைக்கிறேன். 3 00:00:19,269 --> 00:00:22,856 அதுக்கு அப்புறம் ஒரு புதிய உலகத்துக்குப் பறந்து போயிடலாம். 4 00:00:25,817 --> 00:00:27,736 நிஜமாவே எனக்கு அங்கே பிடிக்குமா? 5 00:00:29,363 --> 00:00:33,200 ஆம், இங்கே உனக்குப் பிடிச்சதெல்லாம் அங்கேயும் இருக்கும், இன்னும் நல்லாவே இருக்கும். 6 00:00:35,452 --> 00:00:36,578 அப்படித் தான் ஜாக் சொன்னார். 7 00:01:33,760 --> 00:01:36,221 ஒன்றரை குளியல் அறைகள். பெரிய பெட்ரூம்ல இரண்டு சிங்க்குகள். 8 00:01:36,305 --> 00:01:38,223 ஆண்களுக்கு, பெண்களுக்கும் பக்கத்துல பக்கத்துல. சூப்பர்ரா இருக்கும். 9 00:01:39,141 --> 00:01:42,186 நான் இன்னிக்கு ஜாக்கோட பேசுறேன். நாம அடுத்த லான்ச்சுல போகலாம். 10 00:01:42,269 --> 00:01:44,563 நீ திரும்பி "லான்ச்"சைப் பத்தி பேசுற, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. 11 00:01:46,398 --> 00:01:48,358 -லான்ச்சு. -ம்ம்-ஹம்ம், எனக்கு சந்தோஷமா இருக்கு. 12 00:01:54,489 --> 00:01:56,158 அந்த குழந்தை புத்தகத்தில சொல்லியிருக்கிறது போல, 13 00:01:56,241 --> 00:01:59,620 உன் தலைமுடியைப் பிடிச்சுக்கிட்டு அந்த தருணத்தை நான் உன்னோட பகிரலாம். 14 00:02:00,621 --> 00:02:03,248 இல்ல, ஹெர்பி, இது என் வேலை. 15 00:02:03,332 --> 00:02:05,959 முதன்மை விற்பனையாளர் ஆகுற வழியைப் பாரு, அது தான் நீ உன் வேலை. 16 00:02:13,800 --> 00:02:15,511 உனக்கு ஒரு விஷயம் தெரியணும், ஜோ. 17 00:02:17,471 --> 00:02:19,306 நல்லது, ஒருவேளை கொஞ்சம் தாமதமாகியிருக்கலாம். 18 00:02:23,560 --> 00:02:27,606 உன்னை என் மகனா கிடைக்கிறதுக்கு நான் ரொம்ப சந்தோஷப் படறேன். 19 00:02:30,984 --> 00:02:32,069 "கிடைக்கிறதுக்குன்னா"? 20 00:02:35,697 --> 00:02:36,782 இப்போ வந்துவிடுகிறேன், ஜாக். 21 00:02:40,994 --> 00:02:42,120 போலீஸ் 22 00:02:42,204 --> 00:02:43,872 நீதிமன்றத்தின் "அடியாள்" ஆக. 23 00:02:43,956 --> 00:02:45,958 ஜோசஃப் ஷார்டர் ஆகிய உன்னை, 24 00:02:46,041 --> 00:02:51,129 நீதி மன்ற உத்தரவு எஃப்6-பி தடையை மீறி விற்பனை செய்தாய் என உன் மீது குற்றம் சுமத்துகிறேன். 25 00:02:52,130 --> 00:02:54,341 இது என்னது? என்ன நடக்குது? 26 00:02:54,424 --> 00:02:56,051 கட்டாய விசாரணை பிராம்ப்ட் சி. 27 00:02:56,134 --> 00:02:57,928 உங்களை விசாரிக்க விரும்புகிறோம். 28 00:02:58,011 --> 00:03:00,889 தயவுசெய்து விசாரணை நடக்கும் இடத்துக்கு அமைதியாக எங்களோடு வரவும். 29 00:03:08,355 --> 00:03:10,065 அவ்வப்போது நடக்குற எங்க கிளப்போட மீட்டிங்குதான், 30 00:03:10,148 --> 00:03:13,277 ஆனால் பணம் செய்யும் வழிகளைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்களுக்குக் குறைச்சலே இல்லை, ஜாக். 31 00:03:13,360 --> 00:03:16,029 லூனார் ரெஸிடென்ஷியல் திட்டம் ஒரு பெரிய முதலீடு வாய்ப்புன்னு சிந்திக்க வச்சேன். 32 00:03:16,113 --> 00:03:18,198 "முடியாது" என்பதை பதிலா எடுத்துக்கப் போறதில்லை. 33 00:03:18,282 --> 00:03:21,493 -நம்மால விக்க முடியாமப் போயிடுச்சே. -இன்றிரவு உன்னையும் அவங்களையும் பார்க்கிறேன். 34 00:03:21,577 --> 00:03:23,495 சரி தான், சரி, எங்களால முடிஞ்சவரை ஆள் சேர்க்கிறோம். 35 00:03:23,579 --> 00:03:25,581 இந்த சட்டப் பிரச்சினைகள் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் அவங்ககிட்ட விற்கலாம். 36 00:03:25,664 --> 00:03:27,875 ஆம், நான் இன்னும் அந்த அக்கௌண்டுகளைத் தேடறேன். 37 00:03:29,209 --> 00:03:32,004 எனவே ஜோயீ விஷயத்தை எப்படி எடுத்துப்பான்? 38 00:03:34,506 --> 00:03:37,301 இன்றிரவு சொல்வேன். சரியான நேரம் வரணும், இல்ல? 39 00:03:38,594 --> 00:03:40,888 சரி, உன் கிட்டேயும் ஒண்ணு சொல்லணும். 40 00:03:43,056 --> 00:03:47,269 இப்போ, எட் பணம் சேர்த்து, அதுல ஒரு நல்ல பி-பிளெக்ஸை வாங்கியிருக்கான். 41 00:03:50,606 --> 00:03:51,857 நானும் அவனோட சேர்ந்து அங்கே போறேன். 42 00:03:54,151 --> 00:03:55,319 அடடா. 43 00:03:57,321 --> 00:03:58,655 ஃபிளை டூ தி மூன் பிரைட்சைட் 44 00:03:58,739 --> 00:03:59,865 அடடா. 45 00:03:59,948 --> 00:04:05,954 ஷர்லி, என்னால நம்பவே முடியலை! 46 00:04:06,038 --> 00:04:08,373 உங்க ரெண்டுப் பேரையும் பத்தி யூகிச்சேன். 47 00:04:08,457 --> 00:04:10,459 நாங்க அதை வெளிய தெரியாத மாதிரி மறைச்சோமே. 48 00:04:11,126 --> 00:04:13,378 அடுத்த லான்ச்சுல நாங்க போக விரும்புறோம். 49 00:04:15,756 --> 00:04:16,798 நிச்சயமா. 50 00:04:17,673 --> 00:04:20,928 கண்டிப்பா. ஆமாம், உங்க ரெண்டு பேருக்கும் அங்கே ரொம்ப பிடிச்சிடும். 51 00:04:21,470 --> 00:04:23,305 நீ என்னை நல்லாவே பார்த்துக்கிட்ட, ஜாக். 52 00:04:26,517 --> 00:04:28,936 சரி, உன்னை மாதிரி வேற ஆள் கிடைப்பாங்கன்னு நான் பொய் சொல்லமாட்டேன். 53 00:04:29,019 --> 00:04:30,646 இப்போவே அழ ஆரம்பிக்காதே. 54 00:04:32,022 --> 00:04:35,359 ஹே, நீ அங்கே மேலே போனதும், 55 00:04:35,442 --> 00:04:38,904 அந்த லூஸுத் தலைகளுக்கு அக்கௌண்டிங் சொல்லிக்கொடு, சரியா? 56 00:04:38,987 --> 00:04:41,740 அப்புறம், ஹெச்கியூ பார்க்க எப்படியிருக்குன்னு எனக்குச் சொல்லு. ஆவலா இருக்கு. 57 00:04:42,658 --> 00:04:43,659 என்ன? 58 00:04:46,411 --> 00:04:48,121 -என்ன? -நீ அங்கே மேலே போனதே இல்லையா? 59 00:04:52,042 --> 00:04:53,669 நான் அதை முன்னாடியே உனக்குச் சொல்லியிருக்கேனே, ஷர்லி. 60 00:04:54,753 --> 00:04:57,214 அங்கே இருக்கும் என் குடும்பம்... 61 00:04:57,297 --> 00:04:59,591 பழசெல்லாம் எனக்கு திரும்பி ஞாபகப்படுத்தாதே. 62 00:04:59,675 --> 00:05:00,676 சரி. 63 00:05:00,759 --> 00:05:04,012 எப்படியோ, விடாப்பிடியா ஹெச்கியூவோட பேசி, அந்த ஃபார்ம்களை வாங்கிட்டயே. 64 00:05:04,096 --> 00:05:06,431 நான் ஜென்கின்ஸை கூப்பிட்டேன், ஆனால் பதிலே இல்லை. 65 00:05:07,224 --> 00:05:09,309 ஆமாம், அந்த கௌண்டியில பிரச்சினை வந்ததிலிருந்து 66 00:05:09,393 --> 00:05:11,311 அவனை ஃபோனுல பிடிக்கவே முடியறது இல்லை. 67 00:05:12,771 --> 00:05:14,314 -கடவுளே. -எல்லாம் நேரம், ஹம்ம்? 68 00:05:16,024 --> 00:05:17,067 அவன் சாதாரணமா அப்படிச் செய்ய மாட்டான். 69 00:05:18,318 --> 00:05:20,821 இல்ல, இல்ல, அது... 70 00:05:20,904 --> 00:05:22,990 வெறும் வியாபாரம் தான். அவ்வளவு சுலபமா முடியுமா, என்ன? 71 00:05:26,034 --> 00:05:28,662 எனக்குப் புரியலை, நாங்க எதுவும் தப்பா செய்துட்டோமா? 72 00:05:29,329 --> 00:05:30,664 தெளிவாத் தெரியுதே. 73 00:05:30,747 --> 00:05:33,500 எவ்வளவு தூரம் தப்பு செய்திருக்கீங்கன்னு தான் கண்டுபிடிக்கிறோம். 74 00:05:37,254 --> 00:05:38,422 டிபோசிஷன் 1ஏ. 75 00:05:38,505 --> 00:05:41,258 டிஃபென்டென்ட் ஜோசஃப் ஷார்டர், ஜூனியர் விற்பனையாளர். 76 00:05:41,341 --> 00:05:44,428 அத்துமீறல் 546. எல்3, பிரைட்சைட் "கார்போரேஷன்." 77 00:05:45,012 --> 00:05:46,430 நான் இங்கே எவ்வளவு நேரம் இருக்கணும்? 78 00:05:47,014 --> 00:05:50,184 தீவிரத்தையும், முழுமையையும் கருதி, 79 00:05:50,267 --> 00:05:53,145 சட்டப்படியான வரம்பை மீறாம, 16 மணி நேரம் வச்சிருக்கலாம்னு நிர்ணயிச்சிருக்காங்க. 80 00:05:56,773 --> 00:05:58,483 இன்று இரவு கன்ட்ரி கிளப்புல ஒரு மீட்டிங் இருக்கு, 81 00:05:58,567 --> 00:06:00,444 அதுல புது வாடிக்கையாளர்களை சந்திக்க முடியும். 82 00:06:00,527 --> 00:06:03,655 ரொம்ப அற்புதமான வாய்ப்பா இருக்கே. எங்கிட்ட அதுக்கு சரியான உடையும் இருக்கு. 83 00:06:03,739 --> 00:06:06,408 அது வெறும் விற்பனையாளர்களுக்கு மட்டும் தான்னு நினைக்கிறேன், பன் பன். 84 00:06:06,491 --> 00:06:07,701 நான் உங்க மனைவி. 85 00:06:07,784 --> 00:06:11,121 உங்களுக்கு எதுவானாலும், நானும் அதுல உண்டு. சொல்லாமலேயே. அது தான் விதி. 86 00:06:11,205 --> 00:06:12,497 சரி தான். 87 00:06:12,581 --> 00:06:16,251 ஜோயீயும் சிறையில இருக்கறதனால, விற்பனையும் வழக்கத்தை விட நல்லாவே நடக்கணும். 88 00:06:16,335 --> 00:06:17,336 துரதிர்ஷ்டவசமா. 89 00:06:18,587 --> 00:06:20,881 தெரியும். நீ இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லோரிடத்திலும் இருக்குற நல்லதை பார்க்குற, 90 00:06:21,882 --> 00:06:26,178 ஆனால் எப்போதும் போலி வேஷம் போட்டுத் திரியற ஒருத்தரோட வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கும்? 91 00:06:27,179 --> 00:06:30,599 எனவே, ஜாக், அதைப் பத்தி என்ன சொன்னார்? 92 00:06:30,682 --> 00:06:32,559 இல்ல, ஜாக்குக்கு அது தெரியாம இருக்கறதே நல்லது. 93 00:06:32,643 --> 00:06:36,980 அப்படிச் செய்தா தான், ஜோயீ தன் கஷ்டங்களை தானே சமாளிச்சு, வளர வழி கிடைக்கும். 94 00:06:37,773 --> 00:06:39,107 இன்றிரவு அவன் இந்த பெரிய வாய்ப்பை 95 00:06:39,191 --> 00:06:41,777 இழந்தாலும், அது தான் அவனுக்கு நல்லது. 96 00:06:42,361 --> 00:06:43,695 எனக்குத் தெரியலை, ஹெர்பி. 97 00:06:44,905 --> 00:06:48,158 ஜாக் அவங்கிட்டக் கோபப்பட்டு, 98 00:06:48,825 --> 00:06:51,328 அவன் வேலையைவிட்டு எடுத்துட்டால், 99 00:06:51,411 --> 00:06:54,373 அந்த மாதிரி விளைவுகளையும் ஜோயீ சமாளிச்சு தான் ஆகணுமா? 100 00:06:55,290 --> 00:06:58,377 இந்த விஷயத்துல நீ சமயோசிதமா நடந்துக்கறது தான் நல்லது, ஹெர்பி. 101 00:06:59,378 --> 00:07:00,379 நீ சொல்றது சரிதான். 102 00:07:01,588 --> 00:07:02,798 நீ தான் என்னைத் தாங்குற தூண். 103 00:07:03,465 --> 00:07:06,343 நீ மூணு பேரும். என் தூண்கள். 104 00:07:09,847 --> 00:07:10,848 இங்கு அலுவலகத்திலிருந்து... 105 00:07:12,641 --> 00:07:13,475 அவசரம். 106 00:07:15,561 --> 00:07:18,230 லூனார் ஹெச்கியூ, ஸ்டான்லி ஜென்கின்ஸின் அலுவலகத்திலிருந்து. 107 00:07:18,313 --> 00:07:19,523 மிஸ். ஷர்லி ஸ்டெட்மனுக்கான தகவல். 108 00:07:25,028 --> 00:07:28,699 எட், நம்ம நினைப்பதைப் போல, சந்திரன் ஒண்ணும் அவ்வளவு சிறப்பில்லன்னு நீ நினைச்சதுண்டா? 109 00:07:28,782 --> 00:07:30,033 ஆம், பெரும்பாலான விஷயங்க எதிர்பார்த்தது போல இருப்பதில்லை. 110 00:07:30,993 --> 00:07:34,454 ஆனால், அது நானும் நீயும் சேர்ந்திருக்கப் போறோம்னா, அதுக்கு மேலே என்ன வேணும், சரிதானே? 111 00:07:35,706 --> 00:07:36,707 சரிதானே? 112 00:07:37,457 --> 00:07:39,585 இது உனக்கு வீட்டுல நடந்த கடந்தகாலத்தைப் பத்தி இல்லை, இல்ல? 113 00:07:39,668 --> 00:07:42,504 நீ தான் அது முடிஞ்சு போன கதைன்னு சொல்லுவயே. 114 00:07:42,588 --> 00:07:44,923 இல்லயில்ல. நான் அதையெல்லாம் கடந்துப் போயாச்சு. 115 00:07:45,591 --> 00:07:48,177 நான் அங்கே மேலே நடக்குறக் கதையைப் பேசினேன். 116 00:07:49,428 --> 00:07:50,929 சும்மா யோசிக்கிறேன். 117 00:07:51,013 --> 00:07:53,473 ஷர்லி, பேசுறதும் யோசிப்பதும், மோசமான சேர்க்கை 118 00:07:53,557 --> 00:07:55,058 அதுவும் நாம எதிர்காலத்தை எதிர்கொள்ள இருக்குற இந்த நேரத்துல. 119 00:07:55,142 --> 00:07:56,143 அறிவார்ந்த சமையலறை 120 00:07:56,226 --> 00:07:57,769 நாம அங்கே போனதுக்கப்புறம் அதைச் சமாளிக்கிறேன். 121 00:07:58,395 --> 00:08:00,564 மிஸ். ஷர்லி ஸ்டெட்மன், பிளீஸ். மிஸ். ஷர்லி ஸ்டெட்மன். 122 00:08:00,647 --> 00:08:01,648 தி விஸ்டா மோட்டர் லாட்ஜ் 123 00:08:06,570 --> 00:08:07,738 என்ன? என்னது இது? 124 00:08:07,821 --> 00:08:11,241 ஏன்னா, அதுக்கு இன்னும் யோசிக்கவும் பேச்சும் தேவைப்படுதுன்னா, நான் இப்போ தயாராயில்லை. 125 00:08:11,325 --> 00:08:12,326 கண்டிப்பா. 126 00:08:12,993 --> 00:08:14,161 ஷர்ல். ஷர்லி. 127 00:08:15,287 --> 00:08:17,039 இன்னிக்கு நமக்கு புதிய நாள். 128 00:08:17,623 --> 00:08:20,626 நாம எதையும் ஆரம்பிச்சுட்டு, பாதியிலேயே விட்டுட முடியாது, இல்லையா? 129 00:08:24,046 --> 00:08:27,090 அதோட, தேவையான இந்த "இன்கார்போரேஷன்" ஆவணங்கள், வரி கட்டுபவரின் அடையாள அட்டைகள், 130 00:08:27,174 --> 00:08:31,595 இல்ல மொத்த வரவு ரசீதுகள், இவற்றை யார் கொடுக்க முடியும்னு உங்களுக்குத் தெரியாது, இல்லையா. 131 00:08:32,471 --> 00:08:35,474 எனக்கு அவையெல்லாம் என்னன்னேத் தெரியாது. நான் விற்பனை மட்டும் தான் செய்யறேன். 132 00:08:36,892 --> 00:08:39,311 அவை எல்லாம் கணக்கு விவரங்கள், திரு. ஷார்டர், 133 00:08:39,394 --> 00:08:41,980 ஒருத்தரோட சட்ட அனுமதி விவரங்களைக் காட்டும். 134 00:08:42,688 --> 00:08:44,441 ஜாக்குக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்கும். 135 00:08:44,525 --> 00:08:46,318 அவர்தான் தினமும் ஹெச்கியூவோட பேசுவார். 136 00:08:47,319 --> 00:08:49,029 அவர்தான் உங்களோட மேலதிகாரியா? 137 00:08:49,112 --> 00:08:51,949 ஆமாம், ஆமாம். ஜாக் பில்லிங்க்ஸ். அவர் ரொம்ப நல்லவர். நிஜமா. 138 00:08:52,032 --> 00:08:54,868 நீங்க அவர்கிட்ட பேசுங்களேன். கண்டிப்பா, அவர் எல்லாத்தையும் தெளிவுபடுத்துவார். 139 00:08:59,498 --> 00:09:02,626 நான் அவர் பேரைச் சொன்னதால அவருக்கு பிரச்சினை எதுவும் வராதே, இல்ல? 140 00:09:03,877 --> 00:09:07,548 சீக்கிரம் வா, மகனே. அஞ்சு நிமிஷத்துல கிளம்புறோம். உனக்காக அவள் காத்திருப்பாள். 141 00:09:09,049 --> 00:09:10,050 இனிய மாலை, சார். 142 00:09:12,594 --> 00:09:14,638 ஜோயீ! ஜோ, நீ இங்கே தான் இருக்கயா? 143 00:09:22,688 --> 00:09:24,690 தி விஸ்டா 144 00:09:25,399 --> 00:09:28,277 -நாம பேசணும். -ஹே, நீ ஜோயீயைப் பார்த்தாயா? தாமதமாகுது. 145 00:09:28,360 --> 00:09:29,903 அப்பா, அவன் இப்போ பெரிய பையன். வருவான். 146 00:09:29,987 --> 00:09:31,446 ஜென்கின்ஸ கிட்டேர்ந்து எதுவும் தகவல் உண்டா? 147 00:09:31,530 --> 00:09:35,200 ஆம், நான் ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பினேன். அவசரம்னு சொன்னேன். எல்லாத்தையும் சரி பண்ணுவோம். 148 00:09:36,076 --> 00:09:37,077 எனக்கு இதை அனுப்பியிருக்கான். 149 00:09:40,914 --> 00:09:41,915 ஜாக். 150 00:09:41,999 --> 00:09:44,668 உண்மை, எவ்வளவு கசப்பா இருந்தாலும், அது தான் சிறந்தது, அதனால நீங்க இதை கேட்கணும். 151 00:09:44,751 --> 00:09:48,630 துரதிர்ஷ்டவசமா, ஜோயீயை அதிகாரிங்க கொண்டு போயிட்டாங்க. 152 00:09:51,717 --> 00:09:54,469 சரி, நான் பார்த்துக்குறேன். சரி. 153 00:09:55,053 --> 00:09:56,138 எதுவும் இருக்காது, இல்ல? 154 00:09:56,221 --> 00:09:57,222 ஆமாம், ஆமாம். 155 00:09:57,306 --> 00:09:59,266 நீங்க எல்லோரும் கிளப்புக்குப் போங்க. ஏற்பாடுகளை கவனியுங்க. 156 00:09:59,349 --> 00:10:00,475 இது என்னவாக இருந்தாலும், அதைக் கொஞ்சம் தள்ளிப்போடலாம். 157 00:10:00,559 --> 00:10:02,811 ஆமாம், நீ போய், ஜோயீயை கவனி. 158 00:10:04,438 --> 00:10:05,439 சரி. 159 00:10:14,156 --> 00:10:16,325 பிரைட்சைட் 160 00:10:25,459 --> 00:10:27,628 நான்தான் ஏற்கனவே அதைச் சொல்லிட்டேனே. 161 00:10:27,711 --> 00:10:31,548 சரி, சரி. நாம இதோட முடிச்சுக்குவோம், ஏஜென்ட் கஸாப்போலீஸ். 162 00:10:32,132 --> 00:10:33,467 வா, போகலாம், ஜோ. உன்னை வெளியே கூட்டிட்டுப் போறோம். 163 00:10:33,550 --> 00:10:35,052 ரொம்ப நல்ல வேலை செய்தீங்க, நண்பா. 164 00:10:35,552 --> 00:10:38,889 சில ஆவணங்களுக்காக, ஒரு நேர்மையான விற்பனையாளரை வறுத்து எடுக்குறீங்களே. 165 00:10:39,890 --> 00:10:40,891 எவ்வளவு பெரிய மனிதர் நீங்க. 166 00:10:45,896 --> 00:10:46,897 நன்றி, ஜாக். 167 00:10:46,980 --> 00:10:49,650 எதுக்கு? நீதான் இதையெல்லாம் அனுபவிக்கும்படி ஆகிடுச்சு. 168 00:10:49,733 --> 00:10:52,027 -எவ்வளவு நேரமா உன்னை இங்கே வச்சிருந்தான்? -நாளெல்லாம். 169 00:10:52,110 --> 00:10:53,695 உண்மையா அவர் கேட்டதெல்லாம் 170 00:10:53,779 --> 00:10:56,281 -பெரும்பாலும் எனக்குத் தெரியாது. -அதெல்லாம் எதுவுமே இல்லை. 171 00:10:56,365 --> 00:10:59,159 ஹெச்கியூவில இருக்குற புத்திசாலிகள் அனுப்ப மறந்த சில ஆவணங்கள். 172 00:10:59,243 --> 00:11:01,328 நல்லா திட்டிட்டேன். அவங்க உடனே அனுப்பிட்டாங்க. 173 00:11:03,121 --> 00:11:05,123 -உன்னை பயமுறுத்தினானா? -கிட்டதட்ட அப்படிதான். 174 00:11:05,207 --> 00:11:07,668 வம்புல மாட்டிக்கிட்டேன்னா, அம்மா என்ன செய்வாங்கன்னு தான் நினைக்கத் தோணுச்சு. 175 00:11:07,751 --> 00:11:11,296 -ரொம்ப பயங்கரமா இருந்தது, ஜாக். -ஹே, ஆனால் நீதான் தைரியமா சமாளிச்சிட்டயே. 176 00:11:12,089 --> 00:11:14,758 அது தான் முக்கியம். ஹெர்ப் இந்நேரத்துக்கு பயந்து போயிருப்பான். 177 00:11:15,843 --> 00:11:19,471 ஆமாம், கவலை வேண்டாம். நீங்க இப்படி வந்து என்னை காப்பத்துற மாதிரி இனி நடக்காம பார்த்துக்குறேன். 178 00:11:20,055 --> 00:11:21,056 உன் மேல தப்பேயில்லை. 179 00:11:22,432 --> 00:11:24,101 நம்ம யார் மேலேயும் தப்பில்லை. ஒரு துளியும் இல்லை. 180 00:11:26,436 --> 00:11:28,981 அப்படிப் போடு. ஹே, நாம அங்கேப் போகலாம். 181 00:11:29,064 --> 00:11:32,109 உன் சூட் காருல இருக்கு, உன் ஆளு உன்னோட ஆடுறதுக்கு காத்திருக்கா. 182 00:11:32,609 --> 00:11:35,237 அதுவும் நிறைய பணக்காரங்க இருக்குற இடத்துல, இல்ல? 183 00:11:44,454 --> 00:11:47,124 இந்த மாலை இனிமையாக உள்ளதா, நண்பர்களே? எனக்கு இனிமையா இருக்கு. 184 00:11:47,207 --> 00:11:48,208 மன்னிக்கணும். 185 00:11:48,792 --> 00:11:50,169 -இனிய மாலை. -ஹே. 186 00:11:51,503 --> 00:11:53,463 ஹே. நீங்க வந்தது சந்தோஷம். 187 00:11:54,548 --> 00:11:56,884 நன்றி. ஜாக்கும் ஜோயீயும் சீக்கிரமே இங்கே வந்துடுவாங்க. 188 00:11:56,967 --> 00:11:58,886 சில டெவெலப்பர்களோட ரொம்ப நேரம் பேச்சு வார்த்தை நடந்தது. 189 00:11:59,553 --> 00:12:00,846 ஏதோ முக்கியமானது போலும். சியர்ஸ். 190 00:12:00,929 --> 00:12:02,097 சியர்ஸ். 191 00:12:02,181 --> 00:12:06,059 இன்றிரவு சுலபமா விற்கலாம். எல்லோரும் பணக்காரங்க, குடிச்சிருக்காங்க. 192 00:12:09,605 --> 00:12:10,898 ஃபில் மோன்டே. 193 00:12:12,482 --> 00:12:15,068 இன்னிக்கு டான்ஸ் இருக்கும்னு ஜாக் நிச்சயமா சொல்லியிருப்பாரே. 194 00:12:15,152 --> 00:12:17,571 வேலையையும், மகிழ்ச்சியையும் கலக்கக்கூடாதுன்னு யார் சொன்னாங்க? 195 00:12:25,621 --> 00:12:28,290 விருந்தினர்களே வருக. இந்த ஆட்டமல் மிக்சர் மாலையை என்ஜாய் பண்ணுங்க. 196 00:12:28,373 --> 00:12:29,958 நான் ஹெர்பர்ட்டின் அழைப்புல வந்திருக்கேன். 197 00:12:30,042 --> 00:12:33,629 அவருக்கு ஒன்று உண்டுன்னு சொன்னாங்க. நாங்க திருமணமானவங்க, குழந்தை வரப்போகுது. 198 00:12:34,588 --> 00:12:36,381 -வரவேற்கிறோம். -விருந்தினர்களே வருக. 199 00:12:36,465 --> 00:12:38,008 -இந்த ஆட்டமல் மிக்சர் மாலையை என்ஜாய் பண்ணுங்க. -எப்படி இருக்கீங்க? 200 00:12:38,091 --> 00:12:39,092 மன்னிக்கணும். 201 00:12:39,176 --> 00:12:42,888 எங்க கிளப்போட ஆடை விதிகள், இது போன்ற அலங்கார சூட்டுகளை உடுக்க அனுமதிப்பதில்லை. 202 00:12:42,971 --> 00:12:47,184 கூடாதுன்னு விதி இல்லைன்னாலும், நாங்க அகல மடிப்புள்ள சூட்டுகளை விரும்புவதில்லை. 203 00:12:48,143 --> 00:12:50,854 ஆனால் அது நல்ல ரசனையைக் குத்தப்படுத்துறது போல இருக்கு, இல்லையா? 204 00:12:50,938 --> 00:12:51,939 அது தான் எங்க பாரம்பரியம். 205 00:12:53,023 --> 00:12:55,734 பாருங்க, என் காதலி அங்கே உள்ள அந்த முட்டாள்களோட இருக்கா, சரியா? 206 00:12:55,817 --> 00:12:59,446 அவளுக்கு நான் தேவை. சரிதான், ஆமாம். ஆமாம்! சரிதான். 207 00:13:03,200 --> 00:13:06,703 விருந்தினர்களே வருக. இந்த ஆட்டமல் மிக்சர் மாலையை என்ஜாய் பண்ணுங்க. 208 00:13:07,538 --> 00:13:08,914 அதனால நீங்க அவனை சும்மா விட்டுட்டீங்களா? 209 00:13:08,997 --> 00:13:12,835 நிர்வாகம் "சம்மந்தப்பட்ட" ஆவணங்களைக் கொடுத்திடுச்சு, 210 00:13:12,918 --> 00:13:15,212 அதனால "ஆதார அடிப்படை" வழக்கு மூடப்பட்டு விட்டது. 211 00:13:15,295 --> 00:13:20,509 -காட்டுங்க. அது நமக்கு பயனுள்ளதா இருக்கலாம். -ஆனால் அது அரசு உடைமை, திருமதி. மேபர்ன். 212 00:13:20,592 --> 00:13:24,263 சட்டவிதிப்படி, நான் அதை உடனே அழித்துவிட "கடமைப்பட்டிருக்கேன்." 213 00:13:24,346 --> 00:13:27,015 யாருக்குமே உதவாத சட்ட விதிமுறை இருந்து என்ன பயன்? 214 00:13:27,099 --> 00:13:32,646 ஆயிரக்கணக்கான மனித வரலாற்றின் "விளைவாகத்" தான் இந்த செயல்முறை வந்திருக்கு. 215 00:13:33,438 --> 00:13:37,901 பல தலைமுறைகளா, பொதுப் பணி அரசு ஊழியர்கள், தங்கள் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்திருக்காங்க. 216 00:13:37,985 --> 00:13:41,530 அது நம்ம இருவரையும் விட பெரியது, திருமதி. மேபர்ன். 217 00:13:43,156 --> 00:13:45,200 அப்படி இருப்பது தான் நல்லதும். 218 00:13:47,619 --> 00:13:48,620 பிளீஸ். 219 00:13:49,663 --> 00:13:52,749 உங்களுக்கு உதவ ஆசைன்னு தெரியும். உங்களால முடியும். 220 00:13:57,379 --> 00:13:59,423 உங்க ஒப்பந்தத்தில் பணத்தைத் திருப்பிப் பெற வழி இருக்கு. 221 00:13:59,965 --> 00:14:02,050 கடவுளே, நான் தான் எல்லாத்தையும் புறக்கணிச்சுட்டேனே. 222 00:14:03,552 --> 00:14:05,179 வீட்டைப் பாதி எரிச்சு... 223 00:14:08,682 --> 00:14:10,642 அதுக்கு ஒழுங்கான முறையில காப்புறுதி செய்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். 224 00:14:17,274 --> 00:14:18,358 நான் ரொம்ப... 225 00:14:25,574 --> 00:14:26,575 பணத்தை ரீஃபன்டு வாங்கிடுங்க. 226 00:14:33,916 --> 00:14:34,917 அடடே. 227 00:14:38,670 --> 00:14:40,047 எல்லோரும் ரொம்ப உற்சாகமா இருக்காங்களே. 228 00:14:40,964 --> 00:14:42,299 மூணு பேராவது சிக்குவாங்க. 229 00:14:42,799 --> 00:14:43,967 அதுக்கும் மேலே உன்னால செய்ய முடியுமா? 230 00:14:44,968 --> 00:14:46,678 சரி, இப்போ தான் திருப்பி போருக்கு வந்தாச்சே 231 00:14:46,762 --> 00:14:48,805 நான் சவாலிலிருந்து பின்வாங்கியதே இல்லை. 232 00:14:48,889 --> 00:14:49,890 ஓ, ஹே. 233 00:14:53,185 --> 00:14:55,145 சரி, அவளோட டான்ஸ் ஆடு, போ. 234 00:14:55,229 --> 00:14:56,939 நீ ஒரு விரும்பத் தகுந்த இளைஞன்னு உலக்குத்து காட்டு. 235 00:14:59,900 --> 00:15:00,901 மீண்டும் நன்றி, ஜாக். 236 00:15:02,152 --> 00:15:03,612 என்னை நம்பலாம். 237 00:15:05,155 --> 00:15:08,534 என்ன இனிய மாலை. எல்லோருக்கும் சந்தோஷமா? 238 00:15:09,076 --> 00:15:10,118 ஹை. 239 00:15:32,808 --> 00:15:34,935 அடக் கடவுளே. அது பயங்கர வேகம் தான், ஷர்லி. 240 00:15:36,603 --> 00:15:37,896 நாசமாப் போச்சு. 241 00:15:41,525 --> 00:15:43,735 ஆமாம், உங்க புதிய ஏ-பிளெக்கஸை நேசிப்பீங்க. 242 00:15:43,819 --> 00:15:45,237 நிச்சயமா நேசிப்பேன். 243 00:15:48,031 --> 00:15:49,366 -ஹே, அன்பே. -என்ன? 244 00:15:50,826 --> 00:15:52,160 அங்கே இருப்பது யார்? 245 00:15:52,828 --> 00:15:56,999 அந்த சிறுக்கி நாரம் செல்வினோட சொத்துக்காக அவனோட சல்லாபிச்சா. 246 00:15:57,082 --> 00:15:59,251 அவன் ஆன்மா சாந்தி அடையட்டும். 247 00:15:59,334 --> 00:16:02,212 இப்போ இது அவளோட கிளப்பு தான், 248 00:16:02,296 --> 00:16:04,464 முக்காலும் அவளோட ஊர் தான். 249 00:16:05,132 --> 00:16:08,719 ஆனால், கடவுளே, அவளோட உடல் வாகு அற்புதம். 250 00:16:09,428 --> 00:16:12,222 ஹெர்பி, நாம இப்படி தான் இருக்கணும். 251 00:16:13,765 --> 00:16:15,100 அதோ ஜோயீ வந்துட்டான். 252 00:16:15,184 --> 00:16:16,810 இவ்வளவு சீக்கிரம் வெளியே வந்து சரியாகிட்டானே. 253 00:16:16,894 --> 00:16:19,897 ஆம், ஒவ்வொரு துன்பமும் ஒரு சந்தர்ப்பம் தான். 254 00:16:22,191 --> 00:16:23,400 நான் முன்னடத்துறேன். 255 00:16:25,068 --> 00:16:26,361 கூச்சப் படவேண்டாம், மக்களே. 256 00:16:26,445 --> 00:16:27,988 நாம மாத்திக்கலாமா? 257 00:16:30,741 --> 00:16:32,242 பால்ரூம் டான்ஸை என் அம்மாவிடமிருந்து கத்துக்கிட்டேன், 258 00:16:32,868 --> 00:16:35,579 அதனால நான் கையைப் பிடிப்பதெல்லாம் அவங்க சொல்லிக் கொடுத்ததுப் போலவே இருக்கும். 259 00:16:38,373 --> 00:16:39,708 சியர்ஸ், மக்களே. 260 00:16:42,002 --> 00:16:44,213 ஹே, ஊழல் செய்யற நாளைய அமெரிக்க அரசியல்வாதிங்களே. 261 00:16:45,005 --> 00:16:47,049 50 டாலர்களுக்கு யாரும் உங்க ஜாக்கெட்டையும் டையையும் இரவல் தருவீங்களா, ம்ம்? 262 00:16:48,050 --> 00:16:50,886 பாருங்க, என் ஆளை அங்கே யாரோ ஒரு கிழவனுக்கு பறிகொடுத்துக்கிட்டிருக்கேன். 263 00:16:50,969 --> 00:16:53,388 எழுபத்து-அஞ்சு. எழுபத்து-அஞ்சு டாலர்கள், ம்ம்? 264 00:16:54,556 --> 00:16:56,850 இது என்னுடைய கன்ஃபர்மேஷன் சூட், தெரியுமா. 265 00:16:58,352 --> 00:17:01,021 சரி, அந்த பாட்டிலிலிருந்து ஒரு வாய் குடிக்கிறேன், அஞ்சு டாலர்களுக்கு. பிளீஸ்? 266 00:17:01,522 --> 00:17:03,273 போனாப்போகுது, குடிங்க. உங்களப் பார்த்தாப் பாவமா இருக்கு. 267 00:17:03,357 --> 00:17:04,358 நன்றி. 268 00:17:05,358 --> 00:17:06,944 அட, நீங்க நல்லா ஆடறீங்க, ஜோயீ. 269 00:17:07,027 --> 00:17:08,612 ரொம்ப இனிமையானவரும் கூட. 270 00:17:08,694 --> 00:17:10,030 நன்றி. 271 00:17:10,113 --> 00:17:11,114 ஏன்? 272 00:17:11,198 --> 00:17:12,782 பெரும்பாலும் எல்லோரும் ஜாக்கைக் குறைச் சொல்லுவாங்க. 273 00:17:13,617 --> 00:17:16,369 ஆனால் நீங்க அப்படிச் செய்யவே இல்லை. 274 00:17:16,453 --> 00:17:17,871 ஜாக்கை எதுக்காகக் குறை சொல்லணும்? 275 00:17:17,954 --> 00:17:19,164 மன்னிக்கணும், நண்பா. 276 00:17:19,248 --> 00:17:21,583 -நான் இவரைத் தேடினேன். -கண்டிப்பாக. 277 00:17:23,877 --> 00:17:25,671 ஹே, நாம இப்போ பயமில்லாம விற்கலாம். ஜோயீக்கும் எதுவும் ஆகலை. 278 00:17:25,753 --> 00:17:28,464 -மறுபடி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. -எதுவுமே சரியாப் போகலை, ஜாக். 279 00:17:28,549 --> 00:17:29,967 நாம இங்கே இருக்கவே கூடாது. 280 00:17:30,926 --> 00:17:32,302 இந்த ஜென்கின்ஸ் விஷயம்... 281 00:17:32,386 --> 00:17:35,138 அதனால உலகமே அழிஞ்சிடலை, ஷர்ல். 282 00:17:35,222 --> 00:17:36,682 நான் அவரை நாளைக்கு கூப்பிடுறேன். நாம எல்லாத்தையும் சரி பண்ணலாம். 283 00:17:36,765 --> 00:17:39,393 -எல்லாம் முழுவதும் சரியாகிடும். -உனக்குப் புரியலை. 284 00:17:39,476 --> 00:17:40,477 பாரு. 285 00:17:45,524 --> 00:17:47,150 ஏதோ, வினோதமா இருக்குன்னு நினைச்சேன். 286 00:17:47,234 --> 00:17:49,987 நேத்து விடுமுறை. மூடவேண்டாம்னு சொன்னது. 287 00:17:50,070 --> 00:17:52,948 சட்டப்படி உங்க நிலைமை? 288 00:17:53,740 --> 00:17:55,534 அதனால, நான் சில பேரோட ஃபோனுல பேசினேன். 289 00:17:55,617 --> 00:17:58,996 கொஞ்சம் முயற்சி செய்தால், எவ்வளவு தெரிஞ்சுக்கலாம்னு ஆச்சரியமா இருக்கும். 290 00:18:00,163 --> 00:18:02,207 அவன் என்ன சொல்ல வர்றான்னு நினைக்கிற? 291 00:18:02,291 --> 00:18:04,042 எனக்கு சில கஷ்டங்கள் ஏற்படலாம், 292 00:18:04,126 --> 00:18:08,755 மேலும் நான் என் கையில வச்சிருக்கிற எல்லா ஆவணங்களையும் அவனுக்கு அனுப்பணும், அப்படிதானே? 293 00:18:08,839 --> 00:18:09,923 கடவுளே. 294 00:18:11,049 --> 00:18:13,177 -அவன் என்னைக் குறி வக்கிறான், ஆனால்... -எதுக்காக? 295 00:18:13,760 --> 00:18:16,597 அதுவுமில்லாம, அவன் ஏன் எதையோ மறைக்கிறா மாதிரி இருக்கு? 296 00:18:16,680 --> 00:18:19,808 நீதி மன்றம் விற்பனை எல்லாத்தையும் நிறுத்தும்படி உத்தரவு போட்டதை ஜாக் சொல்லியிருப்பாரே. 297 00:18:19,892 --> 00:18:22,060 அதாவது, அவர்தானே உங்க மேலதிகாரி? 298 00:18:23,812 --> 00:18:24,855 இல்லை, சொல்லலையே. 299 00:18:27,191 --> 00:18:31,069 சரி, நிச்சயமா சொல்ல நினைச்சிருப்பார், மறந்திருப்பார். 300 00:18:32,446 --> 00:18:34,323 பாவம், நீங்க துன்பப்பட வேண்டியிருந்தது. 301 00:18:34,406 --> 00:18:36,325 அவர் ஏன் அப்படி ஆனதுன்னும் சொல்லலையே. 302 00:18:39,494 --> 00:18:42,748 நான் அவனிடம் சொன்னது எல்லாம் வெறும் அந்த வரி வசூலிப்பவரைப் பத்தி தான், நான்... 303 00:18:42,831 --> 00:18:44,041 நான் அவனோட பேசுறேன். 304 00:18:44,124 --> 00:18:47,002 நீ என்னை மீறி அவனோட பேசினா, என்னைப் பார்த்து வாரக்கணக்கா சிரிப்பாங்க. 305 00:18:47,085 --> 00:18:51,381 நாம இப்போ இதை சரிகட்டலைன்னா, நீ வாரக்கணக்கா இங்கே வேலையிலேயே இருக்க மாட்ட. 306 00:18:52,424 --> 00:18:56,386 மேலும் உன்னுடைய அழைப்புகளுக்கு பதில் சொல்லாம, எனக்கு இது மாதிரியான கடிதங்கள எழுதறதால, 307 00:18:56,470 --> 00:18:59,014 நான் இதை பார்த்துக்குறேன்னு சொல்றேன். 308 00:19:01,850 --> 00:19:03,560 சரி. நீ சொல்றது சரிதான். 309 00:19:04,144 --> 00:19:05,354 நீ அவனைக் கூப்பிடு. 310 00:19:08,065 --> 00:19:11,401 இதோ, இது தான் அவனுடைய லூனார்-லிங்க். நன்றி. 311 00:19:21,787 --> 00:19:23,163 திரு. பில்லிங்க்ஸ். 312 00:19:24,540 --> 00:19:26,375 -ஜாக். -ஜாக். 313 00:19:27,292 --> 00:19:28,919 சாதாரண, நேர்மையான பேர். 314 00:19:29,962 --> 00:19:30,963 நம்பகரமானது. 315 00:19:31,672 --> 00:19:33,549 உங்க தொழில்ல அது ரொம்ப உதவணும். 316 00:19:34,049 --> 00:19:36,802 சரி, சில விஷயங்கள் இன்னும் முக்கியமானவை. 317 00:19:37,469 --> 00:19:39,096 உங்களுக்கும் அப்படி சிலது இருக்குமே. 318 00:19:42,099 --> 00:19:43,100 நீங்க டான்ஸ் ஆடுவீங்களா? 319 00:19:43,684 --> 00:19:44,685 சில சமயங்கள்ல. 320 00:19:47,104 --> 00:19:49,273 நீங்க அங்கே மேலே போறதைப் பத்தி யோசிச்சது உண்டா? 321 00:19:50,607 --> 00:19:52,526 நான் நீண்ட விமானப் பயணங்கள்லப் போறதில்ல. 322 00:19:53,527 --> 00:19:56,154 குறிப்பா, அந்த முனையில என்ன காத்துட்டு இருக்குன்னு தெரியாதபோது. 323 00:19:59,575 --> 00:20:01,034 ஆனால், அவை தான் ரொம்ப சிறப்பா அமையும். 324 00:20:04,788 --> 00:20:06,623 இவங்கள, இந்த பணக்காரங்க எல்லோரையும் பார்க்குறபோது, 325 00:20:07,541 --> 00:20:09,793 நீங்க வச்சிருக்குறதை அவங்க விரும்புறதை, 326 00:20:10,794 --> 00:20:11,795 பார்த்தா, எனக்கு... 327 00:20:12,880 --> 00:20:13,881 அந்த எண்ணம் வருது. 328 00:20:18,093 --> 00:20:19,636 ஒர் ஏ-பிளெக்ஸ் வாங்கி அதை செயல்படுத்துங்க. 329 00:20:20,596 --> 00:20:21,847 ரொம்ப சிறப்பானது. 330 00:20:22,973 --> 00:20:24,558 நான் எதையுமே ஒண்ணா வாங்கவே மாட்டேன். 331 00:20:27,686 --> 00:20:29,813 அதுக்கு மேல எனக்கு எண்ண வருதான்னு பார்க்குறேன். 332 00:20:31,398 --> 00:20:32,399 ஹே, ஜாக்? 333 00:20:36,111 --> 00:20:37,863 இதோ ஒரு வினாடி, என்னை மன்னிக்கணுமே? 334 00:20:38,488 --> 00:20:42,784 சரி, இது நல்லா இருந்தது, ஜாக். 335 00:20:48,207 --> 00:20:51,126 -என்ன ஆச்சு, ஜோ? -என் கிட்ட ஏன் உண்மையைச் சொல்லலை? 336 00:20:52,336 --> 00:20:53,545 எதைப் பத்தி பேசுற? 337 00:20:54,546 --> 00:20:57,299 நாம விற்க அனுமதி இருக்கலை, இல்ல? 338 00:20:58,217 --> 00:21:01,428 ஆம், அப்புறம் அப்படியே உள்ள வந்து என்னைக் காப்பாத்திட்ட மாதிரி நடிச்சீங்களே, ஜாக்! 339 00:21:01,512 --> 00:21:03,514 நான் உன்னை அங்கிருந்த வெளியே கூட்டிட்டு வந்தேன், இல்ல? ஹே. பாரு, சரி தான், 340 00:21:03,597 --> 00:21:06,099 இது பெரிய விஷயம்னா, இன்னும் பெரிய விஷயமா இருக்கும், சரியா? 341 00:21:06,600 --> 00:21:07,851 எனக்கு அது பெரிய விஷயம் தான். 342 00:21:18,153 --> 00:21:20,739 அன்பே, அது சரியான எண்தான்னு உனக்கு உறுதியாத் தெரியுமா? 343 00:21:20,822 --> 00:21:25,285 ஆமாம். இதோ இதுல இருக்கே. மீண்டும் முயற்சி செய்யுங்களேன், அவசரம். 344 00:21:25,369 --> 00:21:28,163 பொறு, நான் ஒண்ணைச் சரி பார்த்துச் சொல்றேன். 345 00:21:30,457 --> 00:21:33,794 மன்னிக்கணும், அன்பே. அந்த லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது. 346 00:21:33,877 --> 00:21:36,380 என்ன? எப்போ? 347 00:21:36,463 --> 00:21:38,465 இன்னிக்குக் காலையிலன்னு நினைக்கிறேன். 348 00:21:38,549 --> 00:21:41,844 அதோட, அது லூனார் எக்ஸ்சேன்ஜ் கூட இல்லயே, கண்ணே. 349 00:21:41,927 --> 00:21:43,428 நீங்க சொல்றது எல்லாம் உண்மைதானா? 350 00:21:44,012 --> 00:21:48,267 அடடா, பாவம் நீ. அவன் சந்திரன்ல இருக்கேன்னு உனக்குச் சொல்ல முயற்சி செய்தானா? 351 00:21:54,690 --> 00:21:58,443 வெளியே குளிருது, அதனால நாம எல்லோரும் சா-ச்சா-ச்சா ஆடுவோம். 352 00:22:05,742 --> 00:22:07,077 சா-ச்சா-ச்சா! 353 00:22:07,160 --> 00:22:10,539 -இல்லை, நான் ஜாக்கை தேடிட்டு இருக்கேன். -இதோ, நான் கிடைச்சிருக்கேன். 354 00:22:12,666 --> 00:22:16,086 அடக் கடவுளே, ஷர்லி. நீ என்ன செய்யற? 355 00:22:16,712 --> 00:22:17,713 ஹே! 356 00:22:17,796 --> 00:22:19,006 -அடக் கடவுளே. -வா, வா, வா. 357 00:22:19,089 --> 00:22:21,008 ஹே, உங்கள திரும்பவும் பார்த்ததுல சந்தோஷம். 358 00:22:21,633 --> 00:22:23,385 ஜாக்கும் ஜோயீயும் வாக்கு வாதம் செய்யறாங்க. 359 00:22:23,468 --> 00:22:26,471 அவனுடைய சரிவுக்கு அதுக் காரணமாகலாம். ஒரு முறிவு மாதிரி. 360 00:22:26,555 --> 00:22:27,556 அது விற்பனையாளர்களுக்கு நடக்குறது தான். 361 00:22:27,639 --> 00:22:29,641 குறிப்பா, ஆதரவு தரவும், ஊக்குவிக்கவும் குடும்பம் இல்லாத போது நடக்கும். 362 00:22:33,270 --> 00:22:34,938 ஊக்குவிக்கறதைப் பத்தி பேசுறோமே. 363 00:22:35,022 --> 00:22:37,649 அடடே. மன்னிச்சிடு. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக்கிறேன். 364 00:22:42,738 --> 00:22:45,407 நாம ஒரு மூழ்கும் கப்பலில் இருக்கோம், ஜாக். 365 00:22:46,074 --> 00:22:47,868 ஜென்கின்ஸ் சந்திரனிலே இருக்கவே இல்லை. 366 00:22:49,328 --> 00:22:50,329 என்ன? 367 00:22:50,412 --> 00:22:52,664 நீ என் கிட்ட கொடுத்த அந்த நம்பரை, ரீரூட் செய்தாங்க. 368 00:22:54,625 --> 00:22:57,711 -எங்கிருந்து? -இங்கே பூமிக்கே தான், ஜாக். 369 00:22:57,794 --> 00:23:00,756 இப்போ, துண்டிச்சு, அறுத்து, எல்லாம் செய்துட்டு, அவனும் போயாச்சு. இப்படி யாராவது செய்வாங்களா? 370 00:23:00,839 --> 00:23:02,758 -எனக்குத் தெரியாது, ஆனால்... -நீ அவனை எங்கே சந்திச்ச? 371 00:23:03,550 --> 00:23:05,636 பாரு, ஷர்ல், வாழ்க்கை ரொம்ப குறுகியது. 372 00:23:05,719 --> 00:23:08,514 -நீ அவனை எங்கே சந்திச்ச? -ஸ்பிரிங்குவில்லுல, ஏதோ ஒரு உணவகத்துல, 373 00:23:08,597 --> 00:23:10,682 இந்த வாய்ப்பைக் கொடுத்து, கிட்டதட்ட என் உயிரையே காப்பாத்தினான். 374 00:23:10,766 --> 00:23:13,352 நீ என்ன நினைக்கிற? நம்முடைய விற்பனையிலிருந்து பணம் சுருட்டறான்னா? 375 00:23:13,435 --> 00:23:15,979 இல்லை. அவனுக்கு நீ பெரிய லாபத்தை ஈட்டித்தர 376 00:23:16,063 --> 00:23:19,066 உன்னை தேர்ந்தெடுத்து, அவன் பணத்தை எடுத்துட்டு, உன்னை மாட்டிவிட பார்க்குறான்னு நினைக்கிறேன். 377 00:23:21,193 --> 00:23:24,905 அதாவது, நான் பார்த்ததெல்லாம், இங்கே ஒரு லோக்கல் அலுவலகமும் அதுல ஒரு பெண்ணும் தான்... 378 00:23:24,988 --> 00:23:27,783 அங்கே மேலே எதுவும் இல்ல, ஜாக். 379 00:23:28,784 --> 00:23:31,119 அதனால தான் லான்ச்சுகள் தாமதமாகுது. 380 00:23:33,789 --> 00:23:37,292 -இல்ல, அப்படி இருக்காது... -உன்னை நல்லா ஏமாத்திட்டான். 381 00:23:37,376 --> 00:23:40,087 உனக்குத் தெரியலை, ஆனால் நீ என்னை ஏமாத்திட்ட. 382 00:23:40,170 --> 00:23:43,549 அதோட, நாம வித்த எல்லோரையும் நாமும் ஏமாத்திட்டோம். 383 00:23:46,051 --> 00:23:47,386 கடவுளே. 384 00:23:48,220 --> 00:23:50,389 உனக்கு மூளை பயங்கரமா வேலை செய்யுது, ஷர்ல். 385 00:24:00,607 --> 00:24:02,150 ஷர்... 386 00:24:02,901 --> 00:24:05,445 மன்னிக்கணும், ஷர்லி லூய்சி ஸ்டெட்மன். 387 00:24:06,238 --> 00:24:08,949 நான் உன்னை காதலிக்கிறேன். யாருக்குத் தெரிஞ்சாலும் கவலையில்லை. நான் உன்னை காதலிக்கிறேன். 388 00:24:09,449 --> 00:24:13,704 நீ தான் என் அர்த்தமில்லாத வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குற. 389 00:24:14,204 --> 00:24:16,999 அதுக்காக நான் உனக்குத்... நான் அவளுக்குச் சந்திரனைத் தரப் போறேன்! 390 00:24:17,916 --> 00:24:22,212 நான்... ஷர்லி, நான் உனக்குச் சொந்தம். நிரந்திரமா சொந்தம், அப்புறம்... ச்சே. 391 00:24:22,296 --> 00:24:23,255 -வா, போகலாம், மகனே. -வா, போகலாம். 392 00:24:23,338 --> 00:24:24,840 -மேடையைவிட்டு இறங்கு. -நீ என்னை விடு. 393 00:24:24,923 --> 00:24:26,967 -இங்கே வா. வா, இங்கே. -வா, அப்பா! 394 00:24:27,050 --> 00:24:28,427 ஹே! 395 00:24:28,510 --> 00:24:29,595 ஹெர்பி! 396 00:24:36,643 --> 00:24:37,644 காஸ்மாஸ்டர் 397 00:24:42,357 --> 00:24:44,985 உங்க உணவு தயார். நல்லா சாப்பிடுங்க. 398 00:24:47,779 --> 00:24:49,072 சாப்பாடு கரி ஆகிடுச்சு. 399 00:24:50,365 --> 00:24:52,743 ஹே, பெண்மணியே. கோபப்படாதீங்க. நான் உங்களுக்கு பணத்தை ரீஃபன்டு செய்யறேன். 400 00:24:52,826 --> 00:24:53,827 வீல் பார்மேசன் விற்பனைக்கு 40 சென்டுகள் 401 00:24:53,911 --> 00:24:55,913 விற்பனை வாழைப்பழ கிரீம் பை 10 சென்டுகள் 402 00:24:55,996 --> 00:24:57,748 விற்பனை கேன்டுபீஃப் ஸ்ட்யூ 30 சென்டுகள் 403 00:24:57,831 --> 00:24:58,832 திருப்பிப் தருவீங்களா? 404 00:24:59,416 --> 00:25:00,417 ஆமாம். 405 00:25:05,506 --> 00:25:08,592 எனக்கு திருப்பிக் கிடைக்கும் பணம் வேண்டாம், 406 00:25:08,675 --> 00:25:12,054 நான் பணம் கொடுத்து வாங்கின கேஸரோல் வேணும்! 407 00:25:13,055 --> 00:25:14,056 கடவுளே. 408 00:25:14,139 --> 00:25:15,557 வாழ்க்கை முழுவதும் நான் இதையெல்லாம் நம்பினேன். 409 00:25:16,141 --> 00:25:18,602 இந்த பொய் எல்லாத்தையும், எனக்குத் தேவையில்லாத எல்லாத்தையும். 410 00:25:18,685 --> 00:25:21,980 என் வீட்டுக்கு, என் தலைமுடிக்கு, என் வீணான திருமணத்துக்கு. 411 00:25:22,064 --> 00:25:23,065 அதோட என்ன தெரியுமா? 412 00:25:25,067 --> 00:25:26,193 உண்மையில்... 413 00:25:30,697 --> 00:25:32,157 எல்லமே பொய் தான். 414 00:25:32,824 --> 00:25:34,910 நாம ஒரு பட்டனை அழுத்தினா, அதிலேர்ந்து என்ன வெளிய வருது? 415 00:25:37,496 --> 00:25:41,542 ஒரு தட்டுல வெறுமனே கறுத்துப் போனக் குப்பை. 416 00:25:44,002 --> 00:25:44,962 சலவை சோப் 417 00:25:45,045 --> 00:25:46,505 "வெள்ளைத் துணிகளை இன்னும் வெளுப்பாக்கும்." 418 00:25:46,588 --> 00:25:47,589 பொய்கள்! 419 00:25:47,673 --> 00:25:48,841 சாக்லேட் சிப் 420 00:25:48,924 --> 00:25:50,801 "நீங்க சந்தோஷத்தைப் பெற." 421 00:25:51,510 --> 00:25:52,511 பொய்கள்! 422 00:25:53,053 --> 00:25:55,264 நல்ல ஒழுங்கான மனைவியா இருந்தால், 423 00:25:55,347 --> 00:25:58,183 உன் கேவலமான புருஷன் ஏதோ ஒரு டைப்பிஸ்ட் சிறுக்கியோட சேர்ந்து 424 00:25:58,267 --> 00:26:01,019 உனக்குத் துரோகம் செய்யமாட்டான்னு நினைப்பது! 425 00:26:01,103 --> 00:26:04,898 பொய், பொய், சுத்தப் பொய்! 426 00:26:04,982 --> 00:26:07,609 பெண்ணே, போதும் நிறுத்து! பிளீஸ்! 427 00:26:10,195 --> 00:26:12,948 எனக்கு உன் கேவலமான ரீஃபன்டு தேவையில்லை. 428 00:26:13,824 --> 00:26:15,409 எனக்கு உண்மை தெரியணும். 429 00:26:17,077 --> 00:26:19,454 இல்லைன்னா இந்த இடத்தையே எரிச்சு சாம்பலாக்கிடுவேன். 430 00:26:22,708 --> 00:26:23,709 கிழிச்சுப் போடு. 431 00:26:29,715 --> 00:26:30,924 அது தான் விதி, கிறிஸ்டல். 432 00:26:32,593 --> 00:26:34,011 நாம அதை பின்பற்றணும். 433 00:26:37,431 --> 00:26:39,016 அப்படிச் செய்யலைன்னா என்ன ஆகும்னு நமக்கேத் தெரியும். 434 00:26:41,268 --> 00:26:42,269 என்னை மன்னிச்சிடுங்க. 435 00:26:46,481 --> 00:26:48,317 நான் இன்னும் சிறப்பாச் செய்யறேன்னு வாக்குத் தரேன். 436 00:26:51,778 --> 00:26:54,448 பிரைட்சைட் 437 00:26:58,160 --> 00:26:59,411 ஆனால் அவளுக்கு உதவித் தேவை. 438 00:27:15,093 --> 00:27:17,179 என் நோட்டீஸைக் கொடுக்க, இது மோசமான வாரம். 439 00:27:20,349 --> 00:27:24,478 ஆம், ஆனால் நல்லவேளேயா, நீயும் எட்டும் அதுல கண்டுபிடிச்சிட்டோமே. 440 00:27:24,561 --> 00:27:27,272 ஆம். எட் திரும்பவும் சாதாரண நிலைக்கு வந்தப் பிறகு நான் அதை கவனிக்கிறேன். 441 00:27:29,233 --> 00:27:30,234 ஹே. 442 00:27:32,236 --> 00:27:33,278 எனக்குப் புரியுது. 443 00:27:33,820 --> 00:27:36,698 உனக்கு இப்பவே வெளியேறணும்னு நினைச்சாலும், ஏதாவது வழியைக் கண்டுபிடிக்கிறேன். 444 00:27:38,367 --> 00:27:41,578 வேண்டாம். நாம சேர்ந்தே இதை தீர்ப்போம். 445 00:27:42,621 --> 00:27:43,622 நாம செய்தாகணும். 446 00:27:44,790 --> 00:27:47,376 இல்லன்னா நாம ரொம்ப மோசமானவங்களாவோம். 447 00:27:47,459 --> 00:27:48,460 ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். 448 00:27:49,753 --> 00:27:51,213 நானும் நீயும். 449 00:28:12,985 --> 00:28:13,819 நாம வந்தாச்சு. 450 00:28:18,198 --> 00:28:19,366 இது அந்த இடமில்லை. 451 00:28:20,576 --> 00:28:21,577 இருக்க முடியாது. 452 00:28:25,706 --> 00:28:27,958 நாம ஒருவேளை தேதியைத் தப்பா பார்த்திருப்போமோ. 453 00:28:38,677 --> 00:28:39,845 ஃபோர்டு 454 00:28:44,641 --> 00:28:45,684 ச்சே. 455 00:28:47,019 --> 00:28:48,020 அபாயம் 456 00:28:51,982 --> 00:28:53,150 உள்ளே போக அனுமதியில்லை அனுமதி கிடையாது 457 00:28:53,233 --> 00:28:57,029 ஓடிப்போங்க இல்ல சுட்டுவிடுவேன். 458 00:28:57,112 --> 00:28:59,531 நாங்க இங்கே லான்ச்சுக்காக வந்திருக்கோம், மிஸ்டர். 459 00:29:01,992 --> 00:29:02,993 என்ன லான்ச்சு? 460 00:29:03,702 --> 00:29:05,412 லான்ச்சு இருக்குன்னு உனக்கு யாரு சொன்னா? 461 00:29:06,038 --> 00:29:08,332 ஜாக். ஜாக் பில்லிங்க்ஸ்? 462 00:29:10,042 --> 00:29:12,503 நாங்க சந்திரனுக்குப் போறோம். 463 00:29:15,130 --> 00:29:16,423 கேடுகெட்டவனே... 464 00:30:06,515 --> 00:30:08,517 தமிழாக்கம் அகிலா குமார்