1 00:00:16,225 --> 00:00:17,267 ஸ்டேடஸ் செக். 2 00:00:17,267 --> 00:00:20,896 லூனார் கார்கோ ரிடர்ன். பேக்கர் ஃஜூலு நைன் த்ரீ. 3 00:00:20,896 --> 00:00:22,981 22 நிமிடங்களில் தரையைத் தொடும். 4 00:00:22,981 --> 00:00:25,567 வளிமண்டலத்தினுள் மறுபடியும் நுழையப்போகிறது. 5 00:00:26,568 --> 00:00:28,028 அந்த கோலை பிடித்துக்கொள், நண்பா. 6 00:00:30,322 --> 00:00:31,949 {\an8}இதோ வருகிறது அதிரடி புறப்பாடு. 7 00:00:35,786 --> 00:00:36,912 அட, நீ வர்றயா. 8 00:00:36,912 --> 00:00:41,124 நீ இறப்பதை நான் காணப்போகிறேன், கார்கன் ராஸ்கல்! 9 00:00:45,754 --> 00:00:47,714 அதோ அந்த பக்கம் தான். அங்கே தான் அவன் போயிட்டு இருக்கான். 10 00:00:47,714 --> 00:00:49,550 - காரை ஆன் பண்ணு. - மாட்டேன். 11 00:00:51,927 --> 00:00:55,222 ஒரு நிமிடம் இங்கேயே இருந்து நாம பேசணும்னு நினைக்கிறேன். 12 00:01:03,021 --> 00:01:04,022 அடடே. 13 00:01:05,190 --> 00:01:08,861 அது எதிர் திசையில் பறக்கும்போது, குழந்தைகளே, நாம அதுல இருப்போம். 14 00:01:14,199 --> 00:01:15,409 என்னால சண்டையெல்லாம் போட முடியாது. 15 00:01:15,909 --> 00:01:17,244 அட ச்சே. 16 00:01:21,874 --> 00:01:23,208 எங்கே போச்சு அந்த பை எங்கே? 17 00:01:24,835 --> 00:01:26,670 எங்கே அந்த பை? சரி. 18 00:01:28,088 --> 00:01:29,214 ச்சே. ச்சே. 19 00:01:30,757 --> 00:01:32,759 சரிதான், அந்த பை எங்கே? 20 00:01:33,760 --> 00:01:35,220 அந்த பை எங்கே? 21 00:01:35,220 --> 00:01:37,389 ஹே, திரு. போர்டர். அதைப் பார்த்தீங்களா? 22 00:01:37,389 --> 00:01:42,102 உங்களுக்கு இது பழக்காமனது தான்னு தெரியும், ஆனால் என்ன அற்புதமான காட்சி, ஹம்? 23 00:01:46,356 --> 00:01:47,357 என்னது? 24 00:01:49,526 --> 00:01:50,903 அது நல்லது. 25 00:01:50,903 --> 00:01:53,155 அவங்களுடைய ராக்கெட்டையே அடையாளம் தெரியாதது போல இருக்கார். 26 00:01:53,155 --> 00:01:54,656 ஹெர்பி, அவர் சொன்னத கேட்ட, இல்ல. 27 00:01:55,282 --> 00:01:56,825 அது உங்க ராக்கெட். 28 00:01:59,286 --> 00:02:00,787 அப்படி தான் இருக்கும். 29 00:02:52,840 --> 00:02:54,800 இதை உன்னால முன்னேற்ற முடியும்னு எப்படிச் சொல்ற? 30 00:02:54,800 --> 00:02:56,718 ஏன்னா நீ முட்டாள் இல்லைன்னு எனக்குத் தெரியும். 31 00:02:57,761 --> 00:02:59,555 எதாவது சொல்லு, ஜாக். 32 00:03:04,977 --> 00:03:07,813 பாரு, இந்த உலகத்துல இந்த விஷயம் தெரியப்போறது உனக்கு மட்டும் தான். 33 00:03:08,856 --> 00:03:10,440 மத்தவங்களுக்குத் தெரிய அவசியமும் இல்லை. 34 00:03:13,235 --> 00:03:15,529 நாம ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் செய்ய முடிந்ததே அற்புதம் தான். 35 00:03:15,529 --> 00:03:16,905 நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தபோதும், 36 00:03:16,905 --> 00:03:19,283 நீ ரொம்ப ஆதரவா இருந்திருக்க, 37 00:03:19,283 --> 00:03:21,827 நாம இன்னும் என்ன செய்யணும் எதிர்காலத்துக்குன்னு... 38 00:03:21,827 --> 00:03:24,454 நீ என்னுடன் பார்டனராக இருப்பதற்கு நான் ரொம்ப நன்றிகடன்பட்டிருக்கேன். 39 00:03:24,454 --> 00:03:26,206 - நான் அப்படியே அதைத் தொடர விரும்புறேன்... - முடியாது. 40 00:03:26,790 --> 00:03:27,791 முடியாது, விட்டிடு. 41 00:03:29,084 --> 00:03:31,128 - என்ன? - சொல்லு. 42 00:03:31,712 --> 00:03:33,672 - நீ சொல்லித் தான் ஆகணும். - ஷர்ல்... 43 00:03:33,672 --> 00:03:35,507 - ஷர்ல். - சொல்லு. 44 00:03:42,472 --> 00:03:43,473 எல்லாத்துக்கும் நான் தான் காரணம். 45 00:03:48,478 --> 00:03:49,646 ஜென்கின்ஸுன்னு யாரும் கிடையாது. 46 00:03:51,273 --> 00:03:55,485 அப்படி யாரும் இருந்தால், அது நான் தான். 47 00:03:58,030 --> 00:04:03,243 அதனால தான் இந்த கனவைப் பின்தொடர்ந்து ஜெயிச்சோம்னா, அந்த பந்தயத்தின் லாபம் நமக்கு தான். 48 00:04:03,243 --> 00:04:04,578 மக்கள் என்னை நம்புறாங்க, நான்... 49 00:04:07,289 --> 00:04:08,457 உனக்கு இது தெரிந்திருக்காது, 50 00:04:09,082 --> 00:04:12,211 ஆனால் நம்ம கிட்ட நிலம் இருக்கு, போக்குவரத்து இருக்கு, போதுமான பணம் இருக்கு, இதைச்... 51 00:04:15,172 --> 00:04:17,757 இது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு புரிஞ்சுக்கோ, ஷர்லி. 52 00:04:21,345 --> 00:04:22,846 என்னை மன்னிச்சிடு! 53 00:04:26,183 --> 00:04:28,977 நீ என்னிடம் விசுவாசமாக தான் இருந்திருக்க, ஆனால் நான் உங்கிட்ட பொய் சொல்லிட்டேன். 54 00:04:31,104 --> 00:04:32,356 என்னை மன்னிச்சிடு. 55 00:04:34,358 --> 00:04:35,359 நான் வருத்தப்படறேன். 56 00:04:38,695 --> 00:04:41,281 நீ இல்லாம என்னால இதைச் செய்ய முடியாது. 57 00:04:44,117 --> 00:04:46,078 ஆமாம், நீ இதைப் பத்தி முன்னாடியே யோசிச்சிருக்கணும். 58 00:04:48,997 --> 00:04:51,416 எனக்குப் பைத்தியம் பிடிக்க வச்ச. 59 00:04:51,416 --> 00:04:53,919 அதை ஈடுகட்ட நான் நீ எதைக் கேட்டாலும் செய்யறேன். 60 00:04:53,919 --> 00:04:57,339 - பார்ட்னராகலாம், சரிபாதி பங்கு. - உன்னால நிறுத்த முடியலை, இல்ல? 61 00:04:57,840 --> 00:04:58,882 அருவருப்பாக இருக்கு. 62 00:04:58,882 --> 00:05:02,010 எது நிஜம்னு பார்க்குற ஆற்றலை நீ இப்போ இழந்துட்ட. 63 00:05:03,178 --> 00:05:04,179 யாருக்கு இருக்கு அந்த ஆற்றல்? 64 00:05:05,889 --> 00:05:09,393 நாம மக்களோட வாழ்க்கையை மாத்தினோம். 65 00:05:09,935 --> 00:05:11,395 மாத்தினோமா இல்லையா? 66 00:05:14,022 --> 00:05:19,528 கஷ்டகாலத்தைத் தாங்கிக்க, கனவுகள் இல்லாத ஒரு வாழ்கை எப்படியிருக்கும்? 67 00:05:22,030 --> 00:05:24,283 என்ன வேணும்னாலும் சொல்லு, ஜாக். 68 00:05:28,579 --> 00:05:30,038 நீ இனிமேல தனியா தான் பார்த்துக்கணும். 69 00:05:31,331 --> 00:05:32,457 இல்லை. இல்லை. 70 00:05:32,958 --> 00:05:37,004 இல்ல, இல்லை. இல்லயில்ல! ஷர்லி. நாம ரொம்ப நெருங்கி வந்துட்டோம்! 71 00:05:43,260 --> 00:05:45,470 அங்கே மேலே பார்த்தாயா? அங்க தான். 72 00:05:45,470 --> 00:05:50,058 - அந்த அழகான ஒளி தெரியுதா? நம்ம ராக்கெட். - எவ்வளவு அழகு. ஒளிதான், நிஜமா. 73 00:05:51,310 --> 00:05:52,895 நிஜமாகவே எங்களுடைய ராக்கெட்டுகள்ல ஒண்ணு தான் அது. 74 00:05:52,895 --> 00:05:54,813 உங்கள்ல சிலருக்கு இப்போ ரொம்ப முட்டாள்தனமா நடந்துக்கிட்டீங்களோன்னு தோணும் 75 00:05:54,813 --> 00:05:57,733 அவ்வளவு சந்தேகப்பட்டு வேண்டாம்னு சொல்லிட்டோமேன்னு இருக்கும். 76 00:05:57,733 --> 00:06:01,778 - அது பிரைட்சைடிலிருந்து திரும்பும் பயணம். - பிரைட்சைடிலிருந்து வீடு திரும்புகிறது. 77 00:06:01,778 --> 00:06:05,115 - அதோட நாங்க அது இறங்குறதைப் பார்க்கப் போறோம். - நாங்க கை கழுவ தயாரா இருக்கோம். 78 00:06:06,325 --> 00:06:07,784 அது இறங்குவதைப் பார்க்கத் தயராக இருக்கோம். 79 00:06:09,494 --> 00:06:11,496 கை கழுவுறது ரொம்ப முக்கியம் தான். 80 00:06:11,496 --> 00:06:13,040 ஆனால் நாம அது தரை இறங்குவதையும் பார்ப்போம். 81 00:06:14,166 --> 00:06:15,626 நீங்க எல்லோரும் இவர் சொல்வதைக் கேட்கணும், உடனே. 82 00:06:16,460 --> 00:06:17,878 இவன் உண்மையைச் சொல்றான். 83 00:06:18,670 --> 00:06:21,173 நானே கண்ணால பார்த்தேன். 84 00:06:22,508 --> 00:06:23,634 நன்றி, திரு. மேசன். 85 00:06:24,551 --> 00:06:27,888 இப்போது ஒரு சிறப்பான அனுபவத்தை உங்களுக்குத் தரப்போறோம், பின் தொடருங்க. 86 00:06:34,686 --> 00:06:38,273 நாம போய் பாரக்கணும். அது ஒரு பெரிய விபத்தா தான் இருக்கும், இல்ல? 87 00:06:38,273 --> 00:06:40,776 அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்காது. 88 00:06:40,776 --> 00:06:43,487 விமானத்தில் இருக்க அதிகாரப்பூர்வ அனுமதி எதுவும் பயணிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 89 00:06:43,487 --> 00:06:44,571 அதே தான். 90 00:06:46,323 --> 00:06:49,701 ஆனால் அது கூட்டத்தை "இமைதிப் படுத்தி" உள்ளது போல தான் தெரிகிறது. 91 00:06:50,202 --> 00:06:52,079 ஜோயீ இதையெல்லாம் விட்டுட்டு போய்ட்டான். 92 00:06:52,079 --> 00:06:54,039 மேலும் இது கம்பெனியின் கார் ஆனதால்... 93 00:06:54,039 --> 00:06:55,749 நெருக்கடி சமயத்தை சிறப்பா சமாளிக்குற, பன் பன். 94 00:06:55,749 --> 00:06:56,834 ஹெர்ப். 95 00:06:56,834 --> 00:06:58,585 ஹெர்ப், நீ ஒரு பணப் பையைப் பார்த்தாயா? 96 00:06:58,585 --> 00:07:00,629 இல்ல, திருடர்கள் யாரும் என்னைப் பத்தி ஜோக் அடிக்குறதைக் கேட்டாயா? 97 00:07:00,629 --> 00:07:02,756 நான் ரொம்ப சிக்கல்ல இருக்கேன். 98 00:07:03,382 --> 00:07:04,383 எங்க கூட வா, எட். 99 00:07:04,383 --> 00:07:05,968 இது கம்பெனிக்கு ரொம்ப உற்சாகமூட்டும் நேரம், 100 00:07:05,968 --> 00:07:08,762 அதோட, அந்த பணத்தைப் பத்தி ஒரு சிறப்பான விளக்கமும் உனக்குக் கிடைக்கும். 101 00:07:10,639 --> 00:07:12,516 நீ எதுக்கு அதைப் பத்தி விளக்கணும்? ஹெர்ப்! 102 00:07:22,276 --> 00:07:25,112 {\an8}தி விஸ்டா மோட்டர் லாட்ஜ் 103 00:07:58,645 --> 00:08:00,731 தரையைத் தொட இன்னும் பத்து நிமிடங்கள். 104 00:08:01,356 --> 00:08:03,859 லான்ச்பேட் ஓரியன்டேஷனை ஆரம்பிக்கலாம். 105 00:08:05,152 --> 00:08:06,361 நாசம். 106 00:08:08,238 --> 00:08:10,073 இது இப்போதும் சுலபமாகலை, இல்லையா? 107 00:08:11,742 --> 00:08:14,244 உறுதியாச் சொல்றேன், நான் உன்னைப் பாதுகாப்பா இறக்குவேன். 108 00:08:17,497 --> 00:08:19,666 அடுத்த முறை அமெரிக்காவில் செய்ததை முயற்சி செய்! 109 00:08:20,542 --> 00:08:22,252 இந்தக் கேவலமான கம்பெனியின் நன்மைக்காகவா? 110 00:08:22,252 --> 00:08:25,422 இந்த கம்பெனி உனக்கு, எப்போது, எந்த நண்மையைச் செய்திருக்கு, ஹெர்ப்? சொல்லு? 111 00:08:25,422 --> 00:08:29,218 எந்த மாங்காய் மடையனாவது தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை திரும்பவும் 112 00:08:29,218 --> 00:08:33,388 அவன் அதை கஷ்டப்பட்டு வாங்கியவங்களிடமே கொடுத்துட்டு, அதை "நல்லது" அப்படின்னு சொல்வானா? 113 00:08:33,388 --> 00:08:34,472 வந்து, எட்டி, நான்... 114 00:08:34,472 --> 00:08:38,477 "சரி, எட்டி, நான் சொல்றேன். ஏன்னா இதுபோல வளர்ச்சியில்லாத, எல்லா கண்ராவியையும் செய்துக் 115 00:08:38,477 --> 00:08:40,354 கொடுக்கும் மோசமான வாழ்க்கையை நான் வாழ்ந்தா, 116 00:08:40,354 --> 00:08:43,106 பெட்டி வேணும்னா என் தலையை வருடி, எனக்கு ஒரு மிட்டாய் தரலாம்." 117 00:08:43,440 --> 00:08:45,817 நான் தான் உன் பணத்தை எடுத்தேன், ராஸ்கல்! 118 00:08:45,817 --> 00:08:47,277 அவனை அடிப்பதை நிறுத்து! 119 00:08:47,277 --> 00:08:49,613 நீயா? சரி, நான் முன்னடியே யோசிச்சிருக்கணும், இல்ல? 120 00:08:49,613 --> 00:08:54,618 ஆமாம், இரட்டைக் குழந்தைன்னு பொய் சொல்லி ஏமாத்திய பெரும் ஒழிக்கச் செல்வியாச்சே நீங்க தான்? 121 00:09:05,212 --> 00:09:06,421 அது ஏமாத்து வேலையில்ல. 122 00:09:07,548 --> 00:09:08,841 அது நேர்மறை சிந்தனைகள். 123 00:09:09,925 --> 00:09:12,719 இப்போ, பெட்டி காரை நிறுத்துவா... 124 00:09:13,804 --> 00:09:15,764 நீ கீழே இறங்கணும்னு நான் நினைக்கிறேன் 125 00:09:16,265 --> 00:09:19,393 ஏன்னா எந்த வித திசைத்திருப்பலும் இல்லாம என்னுடைய தொழில்முறையான பொறுப்புகளை 126 00:09:20,143 --> 00:09:22,521 நான் பூர்த்தி செய்யணும்னு நினைக்கிறேன். 127 00:09:27,526 --> 00:09:29,862 சரி, நான் உன் மேலே சுமத்தப் போற குற்றங்கள் பட்டியல்ல இதையும் சேர்த்துக்கிட்டேன், ஹெர்ப். 128 00:09:30,362 --> 00:09:32,239 நீ சௌரியமா வீடு திரும்புவன்னு நினைக்கிறேன். 129 00:09:32,823 --> 00:09:35,576 பெரும் திருட்டுக் குற்றம், மற்றும் தாக்குதல் பொருட்களால் தாக்குதல், சரிதானே? 130 00:09:37,619 --> 00:09:38,745 சீக்கிரம் போ, பன் பன். 131 00:09:39,246 --> 00:09:41,248 "சீக்கிரம் போ, பன் பன். சீக்கிரம் போ, பன் பன்." 132 00:09:42,040 --> 00:09:45,627 அதோட, என் கோட் பட்டனையும் தொலைச்சிட்டேன், ஹெர்ப்! 133 00:09:47,004 --> 00:09:48,338 நாசமாப் போக. 134 00:09:49,131 --> 00:09:52,259 பொறு! நீ அங்கே உள்ள இருக்கயா? 135 00:09:52,259 --> 00:09:53,719 நான் சொல்றது கேட்குதா? 136 00:09:53,719 --> 00:09:56,471 அங்கே உள்ள அனுமதியில்லாம யாரோ திரியற மாதிரி தெரியுது. 137 00:09:56,471 --> 00:09:59,391 நான் உள்ளே வந்து அவங்கள அகற்ற உனக்கு உதவி செய்யறேன். 138 00:09:59,975 --> 00:10:01,435 நீ இங்கே உள்ளே வந்திருக்கவே கூடாது, ஜாக். 139 00:10:01,435 --> 00:10:03,896 அவன் இருக்குற இடத்துலயே இருந்தால், எரிஞ்சு போயிடுவான். 140 00:10:04,479 --> 00:10:06,064 பிளீஸ், வால்ட்! 141 00:10:10,736 --> 00:10:11,737 அபாயமான இடம் உள்ளே அனுமதிக் கிடையாது 142 00:10:11,737 --> 00:10:13,530 அந்த வேலியைத் தொட்டால் உனக்கு ஆபத்தாக முடியும். 143 00:10:14,489 --> 00:10:16,241 உன்னால செய்யமுடிஞ்சதைச் செய்! 144 00:10:19,286 --> 00:10:20,287 எல்லாம் சரியாக உள்ளது... 145 00:10:24,333 --> 00:10:27,044 தகவல், 7:05 மாலை. 146 00:10:27,044 --> 00:10:28,337 ஹே, மகனே. 147 00:10:28,837 --> 00:10:30,839 நீ ரொம்ப கோபமா இருக்கன்னு தெரியும். உன் கோபம் ரொம்ப நியாயமானது தான். 148 00:10:30,839 --> 00:10:33,008 நான் உன்னைக் கூப்பிட்டு சொல்லணும்னு நினைச்சது, 149 00:10:33,008 --> 00:10:36,553 நான் உங்கிட்ட சொல்லிட்டு இருந்தேனே அந்த டீல், அது வெற்றிகரமா முடிஞ்சுது, 150 00:10:36,553 --> 00:10:39,640 அதனால எல்லாமே மாறப் போகுது. 151 00:10:39,640 --> 00:10:42,142 நாம எந்த இடத்துல இருக்கணுமோ, சரியான சமயத்துல அந்த இடத்துல இருக்கோம். 152 00:10:42,142 --> 00:10:44,895 அப்புறம் உன் வேலை உன் வேலை உனக்காக காத்திட்டு இருக்கு 153 00:10:44,895 --> 00:10:47,773 உன்னால எப்போ இந்த பக்கம் வர முடியுமோ வா. 154 00:10:48,482 --> 00:10:50,817 இன்னொரு விஷயம், அந்த மருத்துவமனை கட்டணத்தைப் பத்தி கவலை வேண்டாம். 155 00:10:50,817 --> 00:10:52,861 உன் வேலையை நீ விட்டதுக்குக் காரணம் நான் தான், 156 00:10:52,861 --> 00:10:55,447 அதனால, அது உன் அம்மாவையோ, உன்னையோ பாதிக்காமல் நான் பார்த்துக்குறேன். 157 00:10:55,447 --> 00:10:56,532 அது... 158 00:10:58,033 --> 00:10:59,743 அவ்வளவாவது என்னை செய்ய அனுமதி. 159 00:11:01,703 --> 00:11:03,121 கூடிய சீக்கிரம் சந்திப்போம்னு நினைக்கிறேன். 160 00:11:03,121 --> 00:11:04,665 அப்போ சரி, பார்த்துக்கொள், மகனே. 161 00:11:16,927 --> 00:11:19,429 பக்! ஹே, நான் தான் ஜாக்கி பாய்! 162 00:11:19,429 --> 00:11:21,014 கீழே இறங்கி வாங்க! 163 00:11:22,140 --> 00:11:24,059 அவனுக்கு என்ன பைத்தியமா? 164 00:11:24,726 --> 00:11:25,894 அவனுக்கு புத்தி சுவாதீனமில்லை. 165 00:11:25,894 --> 00:11:28,021 அவன் அங்கேயே இருந்தால், உயிரும் போயிடும்! 166 00:11:31,775 --> 00:11:35,445 அது நல்லதில்லை, ஜாக்! அது இப்போ இங்கே தரையிறங்கப் போகுது! 167 00:11:36,029 --> 00:11:37,030 பக்! 168 00:11:50,669 --> 00:11:52,045 நாம உள்ளே போறோமா, இல்லையா? 169 00:11:52,045 --> 00:11:54,590 ஆம், சரிதான். நாங்க உள்ளே போய் பார்க்க முடியாதா? 170 00:11:54,590 --> 00:11:57,509 பொறுங்க, சார். உங்க பாதுகாப்புக்காக, அங்கேயே இருங்க. 171 00:11:57,509 --> 00:11:58,802 அப்பா, மேலே பாருங்க. 172 00:12:01,096 --> 00:12:03,557 இப்போ, நீங்க எல்லோரும் பாதுகாப்பு வளையத்தைப் பத்தி கேள்விபட்டிருப்பீீங்கன்னு நினைக்கிறேன். 173 00:12:03,557 --> 00:12:05,517 நிச்சயமா நாம யாரும் அதை மீற விரும்பமாட்டோம், 174 00:12:05,517 --> 00:12:07,686 அதை மீறினால், உங்க பாதுகாப்பை விட்டு நீங்களே மீறி வருவதாகிவிடும். 175 00:12:07,686 --> 00:12:09,021 மன்னிக்கணும், சார். 176 00:12:10,105 --> 00:12:13,150 பாதுகாப்பு வட்டத்தை மதிக்கணும். 177 00:12:16,778 --> 00:12:17,779 பக்! 178 00:12:19,823 --> 00:12:21,366 ஒரே ஷாட், ஷெரீஃப், 179 00:12:21,366 --> 00:12:26,288 நம் குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் சுதந்திரமாக இருப்பதற்காக. 180 00:12:26,288 --> 00:12:27,623 பக்! 181 00:12:27,623 --> 00:12:30,417 ஓ, கடவுளே, ஜாக். கண்ராவி பாரு. 182 00:12:31,376 --> 00:12:33,378 கார்கன் தீயவனே. 183 00:12:34,296 --> 00:12:37,966 இப்போ, அனைவரும், இந்த அற்புதமான காட்சியை அனுபவிக்கலாம், 184 00:12:37,966 --> 00:12:40,761 அப்படியே ஒரு உங்க தேர்வுகளை அப்கிரேட் செய்வதைப் பத்தியும் சிந்திக்கலாம். 185 00:12:40,761 --> 00:12:42,721 ஊஊ. நீங்க எதை விற்பதாக இருந்தாலும், என்னை சேர்த்துக் கொள்ளுங்கள். 186 00:12:42,721 --> 00:12:44,264 அதுல ஒண்ணை எடுத்துக்குறேன். 187 00:12:45,015 --> 00:12:47,309 - உங்களுக்காக, பாதுகாப்பா இருங்க. - நன்றி. 188 00:12:47,309 --> 00:12:48,727 சரி, உங்களுக்கு ஒன்று. 189 00:12:49,394 --> 00:12:52,064 நாசமாப் போச்சு, பக்! அந்த ராக்கெட் இங்கே தான் இருக்கு. நம்மள வறுத்து எடுக்கப் போகுது. 190 00:12:54,024 --> 00:12:56,485 நான் இங்கே மனித இனத்தை காப்பாத்திட்டு இருக்கேன். 191 00:12:56,485 --> 00:12:59,196 இது உங்க இறுதிச் சடங்கா மாத்திடாதீங்க, ஷெரீஃப். 192 00:12:59,196 --> 00:13:02,741 நீ சொல்றது ரொம்ப சரிதான்! உனக்கு நான் "ஷெரீஃப்"! 193 00:13:03,450 --> 00:13:04,576 நீ யாரா இருந்தாலும். 194 00:13:06,245 --> 00:13:07,955 இப்போ, பிடி இதை! 195 00:13:11,375 --> 00:13:13,585 ஜாக், என்ன எழவை இப்போ அங்கே செய்யற? 196 00:13:13,585 --> 00:13:15,379 இறங்கும் நடவடிக்கை ஆரம்பம். 197 00:13:17,130 --> 00:13:19,216 அதை இங்கே இறக்க விட முடியாது, இல்ல? 198 00:13:20,133 --> 00:13:21,552 அதைப் பார்த்தா நிஜமான ராக்கெட்டைப் போல தான் இருக்கு. 199 00:13:22,427 --> 00:13:24,930 உண்மையா அப்படி தான் இருக்கு. 200 00:13:29,852 --> 00:13:32,521 ஷெரீஃப், நான் பேசுறது உங்களுக்குக் கேட்குதா? 201 00:13:32,521 --> 00:13:36,608 இல்ல, இல்ல! தள்ளிப் போ! நான் குவார்க்ஸ்டார்ம் ஆயுதத்தை இறக்கப் போறேன்! 202 00:13:37,276 --> 00:13:39,695 ஆஹா, ஷெரீஃப், நான் உங்க பக்கம் தான். 203 00:13:41,488 --> 00:13:44,241 ஷெரீஃப். நீங்க கார்கன் அணியைப் பொடிப் பொடியாக்கிட்டீங்க. 204 00:13:45,242 --> 00:13:46,285 நீங்க ஜெய்ச்சுட்டீங்க! 205 00:13:46,785 --> 00:13:49,496 அந்த வாயு தாக்குதல், அது உங்க ஞாபக சக்தியை கெடுத்துச்சு. 206 00:13:50,080 --> 00:13:52,875 என் டிரின்னிய உடை என்னைக் காப்பாத்திடுச்சு, உங்களுக்குத் தான் நன்றி சொல்லணும். 207 00:13:52,875 --> 00:13:57,337 ஆனால் இப்போது அந்த நாசப் பகுதியிலிருந்து நாம வெளியேறணும், ஷெரீஃப். 208 00:13:57,337 --> 00:13:59,423 நான் தனி ஏஜென்ட்டுகளை எல்லாம் நம்புறதில்லை. 209 00:14:04,887 --> 00:14:07,890 இது போல இவ்வளவுப் பக்கத்துல நின்னு ஒன்றை பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை. 210 00:14:08,473 --> 00:14:12,603 டிவியில சரி, ஆனால், அட, இது எவ்வளவு நல்லாயிருக்கு. 211 00:14:14,021 --> 00:14:17,566 ஷெரீஃப், நீங்க எங்களைக் காப்பாத்திட்டீங்க. 212 00:14:19,359 --> 00:14:23,280 இருக்கலாம். இப்போ எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது. 213 00:14:25,115 --> 00:14:28,493 நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதெல்லாம் நீங்க ஒரு ஹீரோங்குறதைத் தான். 214 00:14:29,494 --> 00:14:31,747 இந்த சராசரமே பெருமைப் படுகிற ஒருவர். 215 00:14:36,502 --> 00:14:39,880 நான், நியாயத்துடன் வாக்குவாதம் செய்யமுடியாது. 216 00:14:40,714 --> 00:14:42,382 அதே தான். 217 00:14:42,966 --> 00:14:44,801 இப்போ, நான் உங்களை மீண்டும் கூடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன். 218 00:14:45,886 --> 00:14:47,054 - ஓடுங்க! - போ! 219 00:14:47,054 --> 00:14:51,099 இறங்கும் செயல்முறை ஆரம்பம். எல்லா சிஸ்டம்களும் இயங்கட்டும். 220 00:14:55,395 --> 00:14:56,438 அப்படிப் போடு. 221 00:14:57,689 --> 00:14:59,483 நான் உன்னைப் பத்தி தான் கனவு கண்டுட்டு இருந்தேன். 222 00:15:00,567 --> 00:15:03,487 - அது ரொம்ப அழகா இருக்கு, அப்பா. - ஓ, ஆமாம். 223 00:15:05,072 --> 00:15:07,658 ஆனால் இதைவிட, அது நம்மை அழைச்சுட்டு போற இடம் இன்னும் நல்லா இருக்கும். 224 00:15:21,964 --> 00:15:24,967 அதோ அங்கே இருக்கு, லெஸ். அங்கே தான். 225 00:15:26,927 --> 00:15:28,387 நான் இது நடக்கும்னு நினைக்கலை... 226 00:15:30,222 --> 00:15:32,057 இது "இதர்பார்த்திருக்கவே" முடியாத ஒன்று. 227 00:15:36,395 --> 00:15:38,397 உண்மையா, அது இங்கே இருக்கக்கூடாதுன்னு தான் விரும்பினேன். 228 00:15:40,983 --> 00:15:42,526 அது பொய்யா இருக்கணும்னு நினைச்சேன். 229 00:15:43,944 --> 00:15:47,322 என் வாழ்க்கையை நான் சொதப்பிய பழியை சுமத்த ஏதோ ஒண்ணு கிடைச்சதுன்னு நினைச்சேன். 230 00:15:49,074 --> 00:15:50,409 திருமதி. மேபர்ன்? 231 00:15:54,997 --> 00:15:57,291 நமக்கு கொஞ்சம் கிறுக்குப் பிடிச்சிருச்சோ. 232 00:15:59,501 --> 00:16:05,090 நாம ரெண்டு பேருமே தனிமையை உணர்ந்தோம், எதையோ தேடிட்டு இருந்தோம், நமக்குக் கிடைச்சது... 233 00:16:07,509 --> 00:16:08,760 நமக்குக் கிடைச்சது... 234 00:16:16,727 --> 00:16:17,936 எனக்குத் தெரியலை. 235 00:16:19,813 --> 00:16:22,065 சமீப காலமா நான் ரொம்ப என்னையே ஏமாத்திக்கிட்டு இருந்தேன். 236 00:16:35,412 --> 00:16:37,831 இது உனக்கு கதகதப்பா இருக்கும். 237 00:16:46,131 --> 00:16:48,133 உங்களை இவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தியதுக்கு என்னை மன்னிச்சிடுங்க, 238 00:16:48,133 --> 00:16:51,428 ஆனால், என்ன சொன்னாலும், நீங்க இன்னும் அதை பறக்க வைக்கறீங்க என்பது அருமை. 239 00:16:51,428 --> 00:16:54,640 எனக்கு இதெல்லாம் தேவையில்லை. 240 00:16:55,599 --> 00:16:57,809 எனக்குப் புரியுது. எனக்குப் புரியுது. 241 00:17:05,526 --> 00:17:06,944 இருக்கட்டும், நீங்க யாருக்கு வேலைப் பார்க்குறீங்க? 242 00:17:07,653 --> 00:17:11,156 கார்கோ டெலிவெரிகள் தான். பெரும்பாலும் மதுவும் வேண்டாத குப்பையும் தான். 243 00:17:16,453 --> 00:17:17,871 எனவே, இனி முடிவு உங்களுடையது தான் 244 00:17:18,497 --> 00:17:21,834 நீங்க பாதி வாழ்க்கையை உலகை ஒதுக்கிவிட்டு, அமைதியா இருக்குன்னு ஏமாத்திக்க விரும்புறீங்களா, 245 00:17:21,834 --> 00:17:23,752 ஆனாலும் நீங்க பார்த்தா சந்தோஷமாத் தெரியலை. 246 00:17:25,878 --> 00:17:28,089 இங்கே இருந்து உங்களை பாழாக்கிக் கொள்ளாதீங்க, நீங்க நல்ல அறிவு படைத்தவர். 247 00:17:31,093 --> 00:17:32,469 நான் உங்களுக்கு நல்ல வேலைத் தருகிறேன். 248 00:17:34,263 --> 00:17:36,598 நீங்க தயாரானா சொல்லுங்க, இது பெரிய விஷயம். யோசிச்சுப் பாருங்க. 249 00:17:38,392 --> 00:17:41,270 உங்க அப்பா இதே மாதிரி பேசி நான் கேட்டிருக்கேன். 250 00:17:45,774 --> 00:17:48,569 இந்த முறை நீங்க அது மெய்ப்படுவதை பார்க்க தான் போறீங்க. 251 00:18:03,500 --> 00:18:04,501 ஹே, ஷர்ல். 252 00:18:06,170 --> 00:18:08,338 ஹே, ஜோ. நீ இந்த வேலையை விட்டு போயிட்டன்னு நினைச்சேன். 253 00:18:09,590 --> 00:18:10,591 ஆமாம். 254 00:18:10,591 --> 00:18:12,384 ஹே, ஜாக் எங்கேன்னு உனக்குத் தெரியுமா? 255 00:18:13,385 --> 00:18:14,553 எதுக்கு? 256 00:18:15,220 --> 00:18:18,473 ஏன்னா எனக்குத் தோணுச்சு, அவர் சொல்றதையாவது நான் கேட்கணும்னு, இல்ல. 257 00:18:18,473 --> 00:18:20,225 உன்னை திரும்பி இங்கே வேலைக்கு அமர்த்தவா, ம்ம்? 258 00:18:20,225 --> 00:18:23,604 - இல்ல. அது அப்படியில்லை. - அது எப்படின்னு எனக்கு நல்லா தெரியும். 259 00:18:24,313 --> 00:18:25,981 நீயும் அவனை நம்ப தான் விரும்புற. 260 00:18:25,981 --> 00:18:28,609 சரி, என்னன்னா அதுல வெறும் பொய்யும், புளுகும் தான் இருக்கும். 261 00:18:28,609 --> 00:18:31,695 சரி, வந்து, அதைப் பார்த்து, நானே தெரிஞ்சுக்கிட்டா தான் நல்லது, இல்லையா? 262 00:18:32,821 --> 00:18:33,947 அதாவது, யாருக்குத் தெரியும்? 263 00:18:36,116 --> 00:18:38,035 சரி, ஒருவேளை உங்கிட்ட வித்தியாசமா நடந்துக்கலாம். 264 00:18:40,329 --> 00:18:41,580 ஏன்னா நீ அவன் குடும்பம். 265 00:18:45,292 --> 00:18:49,505 அவன் இதை உங்கிட்ட ஒத்துக்காமப் போகலாம், ஆனால் உனக்குத் தெரிஞ்சிருப்பது நல்லது. 266 00:18:55,177 --> 00:18:56,553 அவர் தான் உன் தந்தை, ஜோ. 267 00:19:03,977 --> 00:19:07,523 அவன் எல்லாத்தையும் சரியாச் செய்வான்னு நீ நம்பிட்டு உட்கார்ந்து இருக்காதே. 268 00:19:09,816 --> 00:19:11,151 உனக்கு அதைவிட திறமை அதிகம். 269 00:19:13,987 --> 00:19:15,113 இப்போ, வா. 270 00:19:18,116 --> 00:19:19,660 எல்லாம் சரியாப் போகும். 271 00:19:29,211 --> 00:19:30,212 கொஞ்சம் பொறுங்க. 272 00:19:35,175 --> 00:19:37,970 சற்று முன்னாடி நடந்த குழப்பத்துக்கு நான் வருந்தறேன். 273 00:19:40,931 --> 00:19:42,975 என் சீட் இன்னும் பதிவு செய்து தானே இருக்கு? 274 00:19:44,101 --> 00:19:45,435 சிறப்பான முடிவு, சார். 275 00:19:45,936 --> 00:19:47,771 உங்களுடைய பிரகாசமான நாளை, இன்றே ஆரம்பிக்கிறது. 276 00:19:49,314 --> 00:19:50,357 திரும்பவும். 277 00:20:03,245 --> 00:20:04,329 அப்பா, அது யார்? 278 00:20:04,329 --> 00:20:07,666 அது தான் திரு. பில்லிங்க்ஸ் அவரோட இருப்பவர் தான், ஸ்பேஸ் ஷெரீஃப், செல்லம். 279 00:20:08,458 --> 00:20:09,543 இரண்டு ஹீரோக்கள். 280 00:20:10,252 --> 00:20:13,922 மீண்டும் வருக, ஷெரீஃப். இந்த சராசரமே உங்க கையில தான். 281 00:20:16,341 --> 00:20:18,302 - ஹே, ஜாக். - இங்கே என்ன நடக்குது? 282 00:20:18,302 --> 00:20:20,679 வந்து, சில அப்கிரேடுகள் எல்லாம் செய்யணும், அதோட... 283 00:20:22,431 --> 00:20:23,807 என் இடத்தையும் நான் வென்றுட்டேன்னு நினைக்கிறேன். 284 00:20:26,059 --> 00:20:27,644 நீங்க பேசுறதைக் கேட்க விரும்புவாங்க, சார். 285 00:20:31,481 --> 00:20:32,608 ஆமாம், அவங்களப் பாருங்க! 286 00:20:34,860 --> 00:20:35,861 ஓ, ஆமாம்! 287 00:20:35,861 --> 00:20:37,196 நீ சிறப்பா செய்திருக்க, ஹெர்ப். 288 00:20:37,196 --> 00:20:39,364 - மீண்டும் வருக, ஹெர்ப்! - நீங்க சிறப்பா செய்தீங்க! 289 00:20:39,364 --> 00:20:42,618 ஹே! உங்கள பார்ப்பதுல சந்தோஷம் தான். 290 00:20:43,202 --> 00:20:45,078 ஷெரீஃப் இங்கே ஒரு அவசர வேலையா திரும்பி வந்திருக்கார். 291 00:20:45,078 --> 00:20:48,081 பிரைட்சைட்டிலிருந்து, ஆடம்பரமா, ஸ்டைலா வந்து இறங்கியிருக்கார், 292 00:20:48,081 --> 00:20:49,791 எனவே நாம அவருக்கு அன்பான வரவேற்பைத் தருவோம். 293 00:20:49,791 --> 00:20:51,835 - அவர் தான் ஸ்பேஸ் ஷெரீஃப்! - ஆமாம்! 294 00:20:53,504 --> 00:20:58,550 சரி, விரைவில் நடக்கயிருக்கும் பயணத்தின் போது நாம் மீண்டும் சந்திப்போம். 295 00:20:58,550 --> 00:21:00,427 அதோ, உங்க வாகனம், பாருங்க. 296 00:21:00,427 --> 00:21:02,763 அதைப் பாருங்க. அழகா இல்லை, ம்ம்? 297 00:21:02,763 --> 00:21:05,474 அடக் கடவுளே, நீங்க உள்ளே பார்க்குற வரை காத்திருங்க. 298 00:21:06,058 --> 00:21:08,185 அங்கே நட்சத்திர மண்டலத்துல நான் தான் விதிவகுப்பவன். 299 00:21:08,185 --> 00:21:12,147 நான் அங்கேப் போய் அவங்க என்ன பேசுறாங்கன்னு பார்க்கப் போறேன். 300 00:21:13,190 --> 00:21:14,191 என்னன்னா... 301 00:21:14,191 --> 00:21:16,610 மிக்க நன்றி. 302 00:21:16,610 --> 00:21:20,405 ...நான் "வலவகை" அத்துமீறல்களை குறிச்சு வச்சிருக்கேன். 303 00:21:41,176 --> 00:21:45,180 - நான் எல்லோரையும் தீர்த்துட்டேன். இல்ல? - எல்லோரையும் போட்டாச்சு. 304 00:21:47,641 --> 00:21:50,269 எனக்கு சவக்குழிகளின் வாடை வந்தது. 305 00:21:53,272 --> 00:21:55,649 அது எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியாது, மகனே. 306 00:21:58,902 --> 00:21:59,903 தினமும்... 307 00:22:01,780 --> 00:22:04,157 கொஞ்சம் தவறினாலும் போதும்... 308 00:22:07,119 --> 00:22:08,996 இந்த மொத்த சராசரமும்... 309 00:22:11,707 --> 00:22:12,708 அழிஞ்சு போயிடும். 310 00:22:17,379 --> 00:22:19,006 நீங்க எப்படி தாக்குப் பிடிக்கிறாங்க, ஷெரீஃப்? 311 00:22:23,468 --> 00:22:24,469 எப்படி உங்களால... 312 00:22:26,513 --> 00:22:27,723 எப்படி உங்களால முடியுது? 313 00:22:30,434 --> 00:22:32,144 எனக்கு நானே சொல்லிப்பேன்... 314 00:22:35,105 --> 00:22:39,151 "ஒரு நாள், நான் இறந்துவிடுவேன்" அப்படின்னு. 315 00:22:40,777 --> 00:22:41,945 அதன் பிறகு? 316 00:23:00,589 --> 00:23:01,673 மாலை வணக்கம், சார். 317 00:23:04,593 --> 00:23:06,720 இருந்தாலும் அந்த சந்திரனால என்ன பயன், ம்ம்? 318 00:23:07,721 --> 00:23:09,473 உனக்கு என்ன ஆச்சு? 319 00:23:12,267 --> 00:23:14,269 எனக்கு நிறைய பணம் இருந்த போது, என்னை உனக்குப் பிடிக்கலைன்னு தெரியும், 320 00:23:14,686 --> 00:23:17,689 எனவே, அதை சரி செய்துட்டேன். 321 00:23:19,107 --> 00:23:20,359 சரி. 322 00:23:21,652 --> 00:23:23,654 சரி, நானும் கொஞ்சம் மாற்றங்களைச் செய்திருக்கேன். 323 00:23:24,404 --> 00:23:26,448 அப்படியா. ம்ம்-ஹம்ம். 324 00:23:32,788 --> 00:23:34,122 இங்கே என் வேலையை விட்டது போலதான். 325 00:23:38,168 --> 00:23:40,295 சரி, நான் கொஞ்சம் குளிர் காயத்தான் வந்தேன், 326 00:23:40,295 --> 00:23:42,297 யாராவது நண்பர்களைப் பார்க்கலாமேன்னு, 327 00:23:42,297 --> 00:23:48,095 ஆனால் யோசிச்சா, அதை உன்னுடன் உன் காருல இருந்துட்டே செய்யலாம்னு தோணுச்சு. 328 00:23:50,722 --> 00:23:52,641 என்னுடன் பயணமே செய்ய வேண்டி வரலாம். 329 00:23:55,185 --> 00:23:58,230 ஷர்லி, நீண்ட தூரம்னா, இன்னும் நல்லது. 330 00:24:08,907 --> 00:24:09,908 வாயை மூடு. 331 00:24:10,576 --> 00:24:11,660 வா, போகலாம். 332 00:24:19,126 --> 00:24:20,544 காலை வணக்கம் விருந்தினரே. 333 00:24:20,544 --> 00:24:23,088 உங்களுக்கு வாகன உதவி தேவையா? 334 00:24:28,051 --> 00:24:30,137 சரி, நம்ம ஷெரீஃபை நான் பாதுகாப்பா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். 335 00:24:30,762 --> 00:24:32,931 மீண்டும் இப்படி நடக்காது. நீ அதைப் பத்தி கவலைப் படலையே, இல்ல? 336 00:24:32,931 --> 00:24:35,809 மக்களை குறைவா எடைப்போட்டே எனக்கு பழக்கமாகிடுச்சு. 337 00:24:35,809 --> 00:24:37,811 சரி, அதுவும் வேடிக்கையா தான் இருக்கும். 338 00:24:39,104 --> 00:24:40,981 நான் உன்னுடைய அந்த துண்டு காகிதத்துல கையெழுத்துப் போட்டுட்டேன். 339 00:24:42,274 --> 00:24:44,401 அது பொய் சொல்றதைப் போல சுலபமானது தான். 340 00:24:47,571 --> 00:24:49,823 சரி, அந்த சராசரம் உன் கையில இருக்குன்னு தோணுது. 341 00:25:20,521 --> 00:25:21,522 ஜோ! 342 00:25:22,022 --> 00:25:24,900 நாம ஜெய்ச்சிட்டோம்! வெற்றி அடைஞ்சிட்டோம்! நாம டீல் போட்டாச்சு. 343 00:25:25,692 --> 00:25:30,072 அதோட இப்போ நாம அதை வளர்க்கலாம். நீயும் நானும். பார்ட்னர்களாக. 344 00:25:30,781 --> 00:25:31,782 ஏன், ஜாக்? 345 00:25:33,325 --> 00:25:34,326 நான் எதுக்கு? 346 00:25:34,326 --> 00:25:38,580 ஏன்... ஏன்னா நாம ஒண்ணு சேர்ந்தா சிறப்பா இருக்கும். 347 00:25:38,580 --> 00:25:40,832 - எனக்கு உன் மேல அக்கறை இருக்கு, மகனே. - இல்லை, அக்கறை கிடையாது. 348 00:25:40,832 --> 00:25:42,543 உங்களுக்கு என்னைப் பத்தி எல்லாம் கவலையில்லை. 349 00:25:43,168 --> 00:25:47,256 எங்கள விட்டுட்டுப் போனபோதும் இல்லை. திரும்பி வந்தபோதும் இல்லை. 350 00:25:48,006 --> 00:25:51,468 தினம் தினம் என் முகத்தைப் பார்த்து பொய் சொன்ன போதும் அக்கறையில்லை. 351 00:25:54,263 --> 00:25:56,390 நீங்க உங்கள யாருன்னு நினைச்சிட்டு இருக்கீங்கன்னு எனக்குக் கவலையில்லை, ஜாக். 352 00:25:59,226 --> 00:26:00,727 நீங்க என் தந்தை இல்லை. 353 00:27:26,230 --> 00:27:28,232 தமிழாக்கம் அகிலா குமார்