1 00:00:07,007 --> 00:00:10,636 பொய்கள் 2 00:00:19,186 --> 00:00:20,854 ஹேய், உன் பெயர் என்ன? 3 00:00:22,564 --> 00:00:23,774 ஜூலியட். 4 00:00:26,818 --> 00:00:30,113 ஜூலியட்டா? நாடகத்தில் வரும் பெயர் போன்றதா? 5 00:00:31,198 --> 00:00:32,198 ஆமாம். 6 00:00:34,076 --> 00:00:36,870 - இங்கேயும் அது வழக்கமா? - ஆமாம். 7 00:00:37,412 --> 00:00:38,664 நீ எங்கிருந்து வருகிறாய்? 8 00:00:40,165 --> 00:00:44,293 நான் வெளியில் இருந்து வந்தேன், இன்னொரு சைலோவில் இருந்து. 9 00:00:44,294 --> 00:00:45,378 எந்த சைலோ? 10 00:00:45,379 --> 00:00:47,005 50 இருக்கின்றன. 11 00:00:49,383 --> 00:00:50,884 ஐம்பதா? 12 00:00:51,927 --> 00:00:54,011 ஆமாம், இது 17. 13 00:00:54,012 --> 00:00:58,391 எனவே, 15, 16 மற்றும் 18 தான் அருகில் உள்ளவை. 14 00:00:58,392 --> 00:00:59,935 சரி, நீ எவ்வளவு தூரம் நடந்து வந்தாய்? 15 00:01:02,604 --> 00:01:04,230 - தெரியவில்லை, வந்து... - சூரியன் எங்கே இருந்தது? 16 00:01:08,944 --> 00:01:10,195 தெரியவில்லை... யார்... 17 00:01:12,948 --> 00:01:14,283 இங்கே பாருங்கள், நீங்கள் யார்? 18 00:01:15,367 --> 00:01:17,119 ஹேய். வேண்டாம், நில்லுங்கள்! 19 00:01:21,248 --> 00:01:23,458 பாருங்கள், நான் பேச விரும்புகிறேன், 20 00:01:24,126 --> 00:01:29,131 ஆனால், நீங்கள்... எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும். 21 00:01:33,177 --> 00:01:34,636 என் பெயர் சோலோ. 22 00:01:36,805 --> 00:01:37,806 சோலோவா? 23 00:01:38,557 --> 00:01:39,558 ஆமாம். 24 00:01:42,853 --> 00:01:44,313 என்ன சோலோ? 25 00:01:44,980 --> 00:01:46,481 வெறும் சோலோ. 26 00:01:47,149 --> 00:01:49,442 ஏனென்றால், நான் இங்கே தனியாக இருக்கிறேன். 27 00:01:49,443 --> 00:01:50,569 எனவே நான் சோலோ. 28 00:01:55,782 --> 00:01:57,618 எவரும் மக்களை வற்புறுத்தி வெளியேற்ற மாட்டார்கள். 29 00:01:59,244 --> 00:02:00,579 அவர்கள் தாங்களாகவே வெளியேற முடிவெடுப்பார்கள். 30 00:02:05,125 --> 00:02:08,211 அவர்கள் அப்படி செய்தபோது, அந்த நாள் நன்றாக இருந்தது. 31 00:02:08,794 --> 00:02:14,926 எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள், பிறகு மறுபடியும் அந்த தூசி பறக்க ஆரம்பித்தது, 32 00:02:14,927 --> 00:02:20,640 அதோடு அந்த விஷம் கொஞ்ச நேரத்திற்கு குறைந்தது, ஆனால் அது திரும்பி வந்தது, 33 00:02:20,641 --> 00:02:23,644 அதிகமாக வந்தது, அப்போதுதான் எல்லோரும் இறந்தார்கள். 34 00:02:24,436 --> 00:02:26,729 ஆனால் சுத்தம் செய்ய வெளியே போகும் மக்கள், மூன்று நிமிடங்களில் இறந்துவிடுகிறார்கள். 35 00:02:26,730 --> 00:02:30,692 எனவே, அதைவிட நீண்ட நேரத்திற்கு எப்படி உயிரோடு இருந்தார்கள்? 36 00:02:31,652 --> 00:02:33,028 தெரியாது. நீ எப்படி உயிரோடு இருக்கிறாய்? 37 00:02:35,239 --> 00:02:37,199 நான் ஒரு சூட் போட்டிருந்தேன் மற்றும்... 38 00:02:38,867 --> 00:02:42,787 ஹேய், நீ ரான்னைப் போல வெளியே அனுப்பப்பட்டாயா? 39 00:02:42,788 --> 00:02:45,123 - ரான்னா? யார் அந்த ரான்? - ரான் டக்கர். 40 00:02:45,624 --> 00:02:47,333 சுத்தம் செய்யாத கிளீனர். 41 00:02:47,334 --> 00:02:50,170 அவன் வெளியே பாதுகாப்பானது என நினைத்தான். வெளியே போக விரும்பினான். 42 00:02:51,046 --> 00:02:52,798 ஆனால் அப்படி போனபோது, அவன் சுத்தம் செய்யவில்லை. 43 00:02:53,382 --> 00:02:59,513 அவன்... லென்ஸில் இருந்த தூசியில் “பொய்கள்” என்று எழுதினான். 44 00:03:03,183 --> 00:03:06,353 பிறகு பார்க்க முடியாத அளவு தூரத்திற்குச் சென்றான். 45 00:03:06,937 --> 00:03:12,525 இரண்டு நாட்களுக்குப் பிறகு, “பொய்கள்” என்று ஸ்க்ரீனில் அவன் எழுதியதின் மீது 46 00:03:12,526 --> 00:03:17,197 பெயிண்ட் அடித்தார்கள், அப்போதுதான் சண்டை ஆரம்பித்தது. 47 00:03:17,698 --> 00:03:20,033 எனவே ரஸ்ஸல் என்னை இங்கே விட்டுவிட்டான். 48 00:03:21,034 --> 00:03:24,830 ரஸ்ஸல்தான் ஐ.டி-யின் தலைவன். நான் அவன் நிழலாக இருந்தேன். 49 00:03:25,831 --> 00:03:26,831 ரஸ்ஸல் என்னிடம், 50 00:03:26,832 --> 00:03:29,626 “என்னவாக இருந்தாலும், யாரையும் 51 00:03:30,252 --> 00:03:35,632 எப்போதும்... வால்ட்டிற்குள் விடாதே” என்று சொன்னான். 52 00:03:42,055 --> 00:03:43,974 ஆனால் ஏன் எல்லோரும் வெளியே போனார்கள்? 53 00:03:45,517 --> 00:03:47,352 ஏனென்றால் அது பாதுகாப்பானது என்று அவர்கள் நினைத்தார்கள். 54 00:03:48,520 --> 00:03:50,689 அது பாதுகாப்பானது என்று இவர் சொன்னதால், அவர்கள் அப்படியே... 55 00:03:51,356 --> 00:03:53,107 இல்லை, அவன் இறக்கவில்லை என்பதால். 56 00:03:53,108 --> 00:03:54,358 அவன் இறந்ததை அவர்கள் பார்க்கவில்லை. 57 00:03:54,359 --> 00:03:58,655 எனவே, ஒருவேளை அவன் உயிரோடு இருக்கலாம் என நினைத்தார்கள். 58 00:04:05,954 --> 00:04:07,206 பிறகு எல்லோரும் வெளியே போனார்களா? 59 00:04:08,248 --> 00:04:09,249 ஆமாம். 60 00:04:11,460 --> 00:04:12,503 என்ன? 61 00:04:17,132 --> 00:04:18,341 நான் சுத்தம் செய்யவில்லை. 62 00:04:21,720 --> 00:04:25,181 ஒரு சூட்... நான் திரும்பிப் போகணும். 63 00:04:25,182 --> 00:04:26,475 இரு! என்ன? 64 00:05:44,469 --> 00:05:46,930 {\an8}ஹக் ஹோவே எழுதிய சைலோ என்ற புத்தகத்தைத் தழுவியது 65 00:06:04,031 --> 00:06:06,033 - அவன் மீதிருந்து கையை எடு! - அம்மா... 66 00:06:07,284 --> 00:06:08,869 அம்மா! வீட்டிற்குப் போங்க! 67 00:06:12,039 --> 00:06:14,333 எல்லாம் சரியாகிவிடும்! எனக்கு ஒன்றும் ஆகாது! 68 00:06:16,335 --> 00:06:17,753 டெடி! 69 00:06:18,545 --> 00:06:21,506 அவனை சிக்க வைத்திருக்கிறார்காள். அவர்களே கிராஃபிட்டியை வரைந்தார்கள். 70 00:06:21,507 --> 00:06:22,925 அவனைச் சிக்க வைக்கவில்லை. 71 00:06:23,800 --> 00:06:26,136 அவன்தான் அதைச் செய்தான். நான் பெருமைப்படுவதாக அவனிடம் சொன்னேன். 72 00:06:27,054 --> 00:06:29,056 கீழே உள்ள தளம்தான் நம்முடைய வீடு. 73 00:06:29,723 --> 00:06:34,978 இவை நம்முடைய சுவர்கள், நாம் விரும்பினால் அவற்றின் மீது வரையலாம். 74 00:06:37,773 --> 00:06:39,066 ஆனால் இப்போது அவனைப் பிடித்துவிட்டார்களே. 75 00:06:39,775 --> 00:06:42,109 நீ எதற்காக பயப்படுகிறாய் என எங்கள் எல்லோருக்கும் தெரியும், எவெலின். 76 00:06:42,110 --> 00:06:43,737 அவர்களால் என்ன செய்ய முடியுமென நம் எல்லோருக்கும் தெரியும். 77 00:06:44,404 --> 00:06:48,325 இயந்திரவியல் துறையைச் சார்ந்த ஒருவரை அவர்கள் எடுத்துக்காட்டாக்க விரும்புவார்கள். 78 00:06:51,245 --> 00:06:52,454 அப்படிச் செய்ய நாம் அவர்களை விடப் போவதில்லை. 79 00:06:53,121 --> 00:06:54,706 - அப்படித்தானே? - மாட்டோம். 80 00:06:55,290 --> 00:06:57,251 - அப்படித்தானே? - மாட்டோம். 81 00:07:00,337 --> 00:07:01,922 உங்கள் மகன் அப்படி ஆக நாங்கள் விட மாட்டோம். 82 00:07:09,847 --> 00:07:12,850 சர்வர் ரூம் 83 00:07:50,095 --> 00:07:51,345 சரி, நான் ஏன் இங்கு இருக்கிறேன்? 84 00:07:51,346 --> 00:07:54,683 “த ஆர்டர்”-ல் இருந்து நாம் தொடங்கலாம் என நினைத்தேன். 85 00:07:55,309 --> 00:07:57,728 நான் எல்லாவற்றையும் மறக்க முயன்றேன். 86 00:08:01,231 --> 00:08:02,232 குறிப்பாக அதை. 87 00:08:02,983 --> 00:08:05,651 த ஆர்டர் 88 00:08:05,652 --> 00:08:06,945 ஆனால் சில விஷயங்கள் நீடித்திருக்கும். 89 00:08:08,071 --> 00:08:11,617 “சுத்தம் செய்யத் தவறினால் போருக்குத் தயாராகுங்கள்.” 90 00:08:13,785 --> 00:08:14,786 மற்றும் கிராஃபிட்டி. 91 00:08:17,080 --> 00:08:19,081 நீ கடுமையாக முயற்சித்து கிராஃபிட்டியை தடுத்திருக்கணும். 92 00:08:19,082 --> 00:08:21,919 குறிப்பாக, கிளர்ச்சியை ஆதரிக்கும் எதையும். 93 00:08:23,837 --> 00:08:27,173 அல்லது “சுத்தம் செய்யத் தவறியவரை 94 00:08:27,174 --> 00:08:29,760 - புகழும் எதையும்.” - ”...சுத்தம் செய்யத் தவறியவர்.” 95 00:08:35,015 --> 00:08:38,308 கிராஃபிட்டி விஷயத்தில் யாரையாவது கைது செய்தாயா? 96 00:08:38,309 --> 00:08:40,270 இயந்திரவியல் துறையில் ஒருவன் கைதாகியுள்ளான். 97 00:08:40,979 --> 00:08:41,980 அவன் என்ன எழுதினான்? 98 00:08:42,731 --> 00:08:44,566 நான் நேற்று பார்த்த அதையேதான். 99 00:08:47,361 --> 00:08:49,530 ஜூலியட் வாழ்கிறாள். 100 00:08:50,030 --> 00:08:51,405 அவன் எழுதியதை நீ கேமராவில் பார்த்தாயா? 101 00:08:51,406 --> 00:08:53,950 இல்லை, எங்களுக்குத் துப்புக் கிடைத்தது. 102 00:08:53,951 --> 00:08:57,370 120வது தளத்தின் கீழுள்ள பெரும்பாலான கேமராக்கள் இயங்கவில்லை. 103 00:08:57,371 --> 00:08:59,288 நிக்கல்ஸ் அவர்களிடம் சொல்லி இருக்கணும். 104 00:08:59,289 --> 00:09:00,998 அவளுக்குக் கேமராக்கள் பற்றி எப்படி தெரியும்? 105 00:09:00,999 --> 00:09:04,044 எனக்குத் தெரிந்தவரை, அவள் அதைக் கண்டுபிடித்திருப்பாள். 106 00:09:05,879 --> 00:09:07,756 அவள் ரொம்பவே திறமைசாலி, இல்லையா? 107 00:09:08,715 --> 00:09:12,052 என் எண்ணத்திற்கு அப்பாற்பட்டு. 108 00:09:14,137 --> 00:09:16,515 நான் அவளை இருமுறைதான் சந்தித்தேன். 109 00:09:18,559 --> 00:09:21,144 வெளியே போக விரும்பும் நபராக அவள் எனக்குத் தோன்றவில்லை. 110 00:09:23,564 --> 00:09:25,523 அவள் மிகவும் ஆபத்தான பழங்கால நினைவுச் சின்னத்துடன் பிடிபட்டாள். 111 00:09:25,524 --> 00:09:28,569 புரட்சிக்கு முந்தைய காலத்தின் ஒரு ஹார்ட் டிரைவ். 112 00:09:30,863 --> 00:09:31,946 அதில் என்ன இருந்தது? 113 00:09:31,947 --> 00:09:37,369 நிக்கல்ஸ் ஸ்க்ரீனில் காட்டிய 200 வருட பழைய சுத்தம் செய்யும் வீடியோவைத் தவிர நிறைய இருந்தது, 114 00:09:38,328 --> 00:09:40,455 எனக்குத் தெரியவில்லை. நான் அதை அழித்துவிட்டேன். 115 00:09:43,041 --> 00:09:45,209 வெளியே போக விரும்புவதாக அவள் சொன்னாளா? 116 00:09:45,210 --> 00:09:47,963 - எப்படி இருந்தாலும் அவள் வெளியே போக வேண்டியவள். - ஆனால் அவள் அதைச் சொன்னாளா? 117 00:09:48,463 --> 00:09:50,257 ஆமாம். அவள் அதைச் சொன்னாள். 118 00:09:56,013 --> 00:09:58,807 அடுத்த முறை நீ கிராஃபிட்டிக்காக கைது செய்யும்போது, 119 00:09:59,474 --> 00:10:02,352 அவர்கள் மேல் தளம் அல்லது நடு தளத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதை உறுதி செய். 120 00:10:04,229 --> 00:10:05,104 ஆர்டரில்... 121 00:10:05,105 --> 00:10:09,775 மெக்கானிக்கலை பழித்து சைலோவின் மீதி பேரை அவர்களுக்கு எதிராக திருப்பவே “ஆர்டர்” சொல்கிறது. 122 00:10:09,776 --> 00:10:10,902 அது எனக்குத் தெரியும். 123 00:10:10,903 --> 00:10:12,487 ஆனால் ஜூலியட்... 124 00:10:14,698 --> 00:10:16,283 அவள் தனியாக இருந்தாள். 125 00:10:17,075 --> 00:10:19,620 அதைப் போன்ற ஒரு விஷயத்தை இதுவரை யாரும் செய்ததே இல்லை. 126 00:10:20,871 --> 00:10:22,998 எனவே “த ஆர்டர்”-ஐ தாண்டி நீ யோசிக்கணும். 127 00:10:24,625 --> 00:10:26,168 அது சுலபமாக இருக்குமென நான் சொல்லவில்லை. 128 00:10:27,836 --> 00:10:28,837 நீ இதுவரைக்கும் பார்த்திராத 129 00:10:30,422 --> 00:10:32,633 ஒரு வண்ணத்தை, நினைக்க முயற்சிப்பது போன்றது அது. 130 00:10:33,550 --> 00:10:34,760 ஆனால் முயற்சி செய். 131 00:10:38,847 --> 00:10:42,351 மெக்கானிக்கலில் இருந்து நீ கைது செய்த நபரை விடுதலை செய். 132 00:10:42,935 --> 00:10:44,144 கொஞ்சம் கருணைக் காட்டு. 133 00:10:45,354 --> 00:10:48,065 இப்போது, உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால், நான் இங்கிருந்து கிளம்புகிறேன். 134 00:10:54,112 --> 00:10:56,072 சைலோ எண் 17க்கு ஜூலியட் போனாளா? 135 00:10:56,073 --> 00:10:57,157 ஆமாம். 136 00:11:00,118 --> 00:11:01,410 அவளால் எங்கே உயிர் பிழைக்க முடியுமா? 137 00:11:01,411 --> 00:11:02,495 சாத்தியமில்லை. 138 00:11:02,496 --> 00:11:04,831 அந்த சைலோ நெடுங்காலமாக உயிரற்று இருக்கிறது. 139 00:11:06,834 --> 00:11:10,003 உன்னை என் நிழலாக நான் ஆக்குவதற்கு முன்பிலிருந்தே. 140 00:11:23,976 --> 00:11:24,977 அடச்சே. 141 00:11:45,998 --> 00:11:48,000 ரான் டக்கர் வாழ்கிறார் 142 00:12:13,775 --> 00:12:17,613 நாங்கள் வெளியே போக விரும்புகிறோம் 143 00:12:24,203 --> 00:12:26,038 நீ கைது செய்த மக்கள் எப்படி இருக்கிறார்கள்? 144 00:12:26,663 --> 00:12:29,624 நிக்கல்ஸ் அவர்களின் கம்ப்யூட்டர்களில் போட்டதைப் பார்த்தவர்கள். 145 00:12:29,625 --> 00:12:31,334 அவர்கள் எல்லோருக்கும் மருந்து கொடுக்கப்படுகிறது. 146 00:12:31,335 --> 00:12:33,295 மனஉளைச்சலுக்காக என்று சொல்லி. 147 00:12:33,879 --> 00:12:36,298 நிக்கல்ஸுக்கு உதவிய அந்த இருவர்? 148 00:12:36,798 --> 00:12:38,674 பேட்ரிக் கென்னடி மற்றும் டேனி ப்ளை. 149 00:12:38,675 --> 00:12:40,636 அவர்கள் நீதித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். 150 00:12:41,637 --> 00:12:43,639 - அவர்களுக்கு மருந்து கொடுக்கப்படுகிறதா? - இல்லை. 151 00:12:46,350 --> 00:12:47,351 ஏன்? 152 00:13:00,906 --> 00:13:04,159 இவற்றை ஏன் இவ்வளவு இறுக்கமாக கட்டினார்கள் எனத் தெரியவில்லை. 153 00:13:19,716 --> 00:13:21,176 இதோ. 154 00:13:24,388 --> 00:13:25,389 பரவாயில்லையா? 155 00:13:29,268 --> 00:13:30,394 நான் யார் என்று உனக்குத் தெரியுமா? 156 00:13:32,855 --> 00:13:34,731 நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும், சிம்ஸ். 157 00:13:36,066 --> 00:13:39,319 ப்ரோக்கோலியை சாப்பிடாத குழந்தைகளிடம், பெற்றோர் உன்னைக் காட்டிதான் பயமுறுத்துவார்கள். 158 00:13:40,112 --> 00:13:41,989 குழந்தைகள் தங்கள் ப்ரோக்கோலியை சாப்பிடணும். 159 00:13:43,198 --> 00:13:44,199 நான் என்னுடையதை சாப்பிடுவேன். 160 00:13:45,075 --> 00:13:46,076 என்னை விடுவிக்கப் போகிறாயா? 161 00:13:48,453 --> 00:13:50,788 அதைவிட எனக்கு இன்னும் அதிகமாகத் தேவை. 162 00:13:50,789 --> 00:13:51,999 ஓ, ஆமாம். 163 00:13:54,376 --> 00:13:55,919 என்னால் உனக்கு இன்னும் எதைக் கொடுக்க முடியும்? 164 00:13:57,963 --> 00:13:59,590 நீ ஏற்கனவே டோரிஸை எடுத்துக்கொண்டாய். 165 00:14:00,507 --> 00:14:01,884 உன் மனைவியா? 166 00:14:03,177 --> 00:14:07,931 ஆமாம், என் மனைவிதான், முட்டாள். 167 00:14:08,724 --> 00:14:12,394 நீ என்னிடம் இருந்து பறிக்க வேறு எதுவுமே இல்லை. 168 00:14:13,937 --> 00:14:15,105 நான் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். 169 00:14:15,606 --> 00:14:16,899 எனக்கு சில விஷயங்கள் தெரியும். 170 00:14:20,277 --> 00:14:24,156 அதெல்லாம் சுத்தப் பொய் என்று எனக்குத் தெரியும். 171 00:14:26,366 --> 00:14:29,411 எனவே, சுற்றிவளைக்காமல் நேரடியாக நீ என்னைத் தாக்கு ஆரம்பிக்கலாமே? 172 00:14:32,789 --> 00:14:35,417 விஷயம் தெரிந்த எல்லோருமே சாக வேண்டியதில்லை. 173 00:14:37,336 --> 00:14:40,296 ப்ளீஸ், ஒரு நொடியாவது இந்த மர்மமான விஷயங்களைப் பேசுவதை நிறுத்திவிட்டு, 174 00:14:40,297 --> 00:14:44,426 என்னை எதற்காக இங்கே அடைத்து வைத்திருக்கிறாய் எனச் சொல்கிறாயா? 175 00:14:48,055 --> 00:14:49,139 ஒரு மருந்து இருக்கு. 176 00:14:50,307 --> 00:14:51,600 அது உன்னை மறக்கச் செய்யும். 177 00:14:55,062 --> 00:14:56,104 எதை மறக்கச் செய்யும்? 178 00:14:58,065 --> 00:15:00,234 நீ மறக்க வேண்டும் என்று நாங்கள் நினைப்பவற்றில் இருந்து தொடங்குவோம். 179 00:15:00,817 --> 00:15:03,612 கடந்த சில வாரங்களை மறக்க, கொஞ்ச டோஸ் போதும். 180 00:15:06,865 --> 00:15:08,282 அதிக டோஸ் கொடுத்தால் என்னவாகும்? 181 00:15:08,283 --> 00:15:10,869 டோரிஸ் இறப்பதற்கு முந்தைய காலத்திற்கு உன்னை அழைத்துச் செல்ல முடியும். 182 00:15:13,163 --> 00:15:14,622 அது எப்படி வேலை செய்யும்? 183 00:15:14,623 --> 00:15:18,418 நான் என்ன... அவள் எங்கே சென்றாள் என்று தேடி, சுற்றறித் திரியணுமா? 184 00:15:22,923 --> 00:15:29,012 இல்லை. உண்மையாகவே இப்படி ஒரு மருந்து இருந்தால், நான் பல காலம் பின்னோக்கி போகணும். 185 00:15:30,055 --> 00:15:31,765 22 வருடங்களுக்கு முன்பு போக விரும்புகிறேன். 186 00:15:32,933 --> 00:15:33,976 அவளைச் சந்தித்த காலத்திற்கு முன்பு. 187 00:15:35,853 --> 00:15:38,605 நீ அதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அது சுலபமானது. 188 00:15:41,525 --> 00:15:42,860 உனக்காக நாங்கள் அதைச் செய்யலாம். 189 00:15:43,569 --> 00:15:46,446 ஆனால் முதலில் நீ எங்களுக்கு ஒன்று செய்ய வேண்டும். 190 00:15:55,497 --> 00:15:56,582 இது ரொம்ப அழகாக இருக்குதானே? 191 00:16:03,964 --> 00:16:05,090 அது என்னது? 192 00:16:08,886 --> 00:16:09,887 எனக்குத் தெரியாது. 193 00:16:11,972 --> 00:16:14,515 உன்னை வரச் சொன்னதன் காரணம்... 194 00:16:14,516 --> 00:16:18,060 ஷெரிஃப் நிக்கல்ஸ் சுத்தம் செய்தது பற்றிய அறிக்கையை முடித்துவிட்டாயா? 195 00:16:18,061 --> 00:16:19,270 கிட்டத்தட்ட. 196 00:16:19,271 --> 00:16:20,855 இன்னும் ஒரு சாட்சியின் வாக்குமூலம் தேவை. 197 00:16:20,856 --> 00:16:23,775 மிஸ் நிக்கல்ஸ் வெளியே போக விரும்புவதாகச் சொன்னாளா? 198 00:16:24,276 --> 00:16:26,069 மேயர், திரு. சிம்ஸ் மற்றும் 199 00:16:26,820 --> 00:16:29,865 அங்கே இருந்த ஐந்தில் நான்கு ரெய்டர்கள் சொன்ன வாக்குமூலத்தின் படி, அவள் சொன்னாள். 200 00:16:30,490 --> 00:16:32,326 ஐந்தாவது நபரிடம் விரைவில் பேசப் போகிறேன். 201 00:16:32,993 --> 00:16:34,995 சரி, நீ போய் அதைச் செய். 202 00:16:41,210 --> 00:16:42,127 யுவர் ஆனர்... 203 00:16:44,963 --> 00:16:46,298 எனக்கு நோய்க்கான அறிகுறி இருக்கு. 204 00:16:48,926 --> 00:16:50,677 சலுகை செய்திருப்பதாக சிம்ஸ் சொன்னார். 205 00:16:52,721 --> 00:16:54,097 அவர் முடிவை நான் ஆதரிக்கிறேன். 206 00:16:55,474 --> 00:17:00,270 உடன்படிக்கையில் இருக்கும் சில பாரபட்சமான சொற்றொடர்களால் உருவான களங்கத்தை... 207 00:17:01,563 --> 00:17:04,066 நாம் நீக்க வேண்டிய நேரம் இது. 208 00:17:08,654 --> 00:17:12,824 நோய்க்கான அறிகுறியை எது உருவாக்குகிறது என்பது பற்றிய ஒரு கோட்பாடு இருக்கு. 209 00:17:13,825 --> 00:17:17,246 அது இரத்தக் கோளாறோ அல்லது சத்து குறைபாடோ இல்லை, 210 00:17:17,871 --> 00:17:23,544 இயற்கைக்கு மாறான சூழ்நிலைக்கான இயற்கையான மனித எதிர்வினை அது. 211 00:17:24,502 --> 00:17:28,757 மனிதர்கள் பாதாளத்தில் வாழ வேண்டியவர்கள் அல்ல. 212 00:17:29,550 --> 00:17:32,845 200 அடிகளுக்கு மேல் நாம் யாரும் நேர்க்கோட்டில் நடந்ததே இல்லை. 213 00:17:37,474 --> 00:17:38,851 ஜூலியட் நிக்கல்ஸைத் தவிர. 214 00:17:43,105 --> 00:17:44,731 அவளது சுத்தம் செய்தல் பற்றிய அறிக்கையை நீ முடித்த பிறகு... 215 00:17:46,859 --> 00:17:47,860 முதலில் எனக்குக் காட்டு. 216 00:17:55,450 --> 00:17:56,451 ஹே! 217 00:17:57,995 --> 00:17:59,245 அது என்னது? 218 00:17:59,246 --> 00:18:00,330 அதைத் திற. 219 00:18:04,543 --> 00:18:05,711 இது என்னது? 220 00:18:19,766 --> 00:18:21,059 இது சிக்கன் ஸ்ட்யூ. 221 00:18:21,685 --> 00:18:22,686 மோசமாக இருக்காது. 222 00:18:23,520 --> 00:18:25,479 வந்து, தெரியவில்லை 223 00:18:25,480 --> 00:18:28,775 வேறு எதுவும் சொல்ல முடியாது, ஆனால் ஆரம்பத்தில் அது பிடிக்குமென நினைவிருக்கு 224 00:18:32,863 --> 00:18:34,323 அடச்சே. 225 00:18:35,657 --> 00:18:37,576 - என்ன? - ஒன்றுமில்லை. 226 00:18:38,994 --> 00:18:42,706 வந்து, ஐயோ, நீ பயங்கரப் பசியாக இருந்திருக்கிறாய். 227 00:18:48,337 --> 00:18:49,379 சூட் இல்லையா? 228 00:18:51,256 --> 00:18:55,134 நான், சில பெல்ட்டுகளையும், பொருட்களையும் பார்த்தேன், 229 00:18:55,135 --> 00:18:58,597 ஆனால், பத்து அடி நீள ஃபேப்ரிக் சேதமாகாமல் இருக்கு. 230 00:18:59,598 --> 00:19:04,102 அவை ஒரு சூட் செய்ய போதுமானவை இல்லை, அப்புறம் என்னுடைய சூட். 231 00:19:04,686 --> 00:19:07,105 அதை சுக்குநூறாக கிழித்துட்டேன், எனவே, இல்லை. 232 00:19:08,398 --> 00:19:12,569 வந்து, அந்த சூட்டுகள் ரூம் எஸ்ஸில் மட்டுமே ஒன்று சேர்க்கப்பட்டன. 233 00:19:13,278 --> 00:19:17,449 சூட்டுகளை உருவாக்கத் தேவையான பொருட்கள் கிரிட்டிக்கல் சப்ளையில் இருக்கின்றன. 234 00:19:18,700 --> 00:19:20,536 ஆனால் அது... 235 00:19:21,495 --> 00:19:22,496 நீருக்கு அடியில் இருக்கா? 236 00:19:23,914 --> 00:19:25,707 அவை ஈரமாகியிருக்காது என நினைக்கிறேன். 237 00:19:26,667 --> 00:19:27,917 மன்னிக்கவும், என்னது? 238 00:19:27,918 --> 00:19:29,878 அவை இருக்கும் என நினைக்கிறேன்... 239 00:19:30,546 --> 00:19:31,838 ம்? 240 00:19:31,839 --> 00:19:33,130 - நான்... - தெரியும், 241 00:19:33,131 --> 00:19:35,174 வந்து... நான் நகைச்சுவை செய்ய முயன்றேன். 242 00:19:35,175 --> 00:19:37,010 ஆனால், கொஞ்ச நாளாகிவிட்டது, மன்னித்துவிடு. 243 00:19:41,849 --> 00:19:43,559 - ஜூலியட்? - என்ன? 244 00:19:44,184 --> 00:19:45,602 நீ ஏன் சுத்தம் செய்யவில்லை? 245 00:19:49,815 --> 00:19:52,734 - ஏன்னா நான் செய்ய மாட்டேன் என்று சொன்னேன். - ஆமாம், எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். 246 00:19:55,863 --> 00:19:57,906 மக்கள் ஏன் சுத்தம் செய்கிறார்கள் என்று நான் கண்டுபிடித்தேன். 247 00:20:00,033 --> 00:20:01,034 அது வந்து... 248 00:20:04,621 --> 00:20:10,252 இறுதியில்... மக்கள் சுத்தம் செய்கிறார்கள், ஏன்னா, வெளியே போகும்போது, அவர்கள்... 249 00:20:11,086 --> 00:20:15,339 அழகான வானத்தையும், அழகான மரங்களையும், 250 00:20:15,340 --> 00:20:18,467 புற்களையும், பூக்களைப் பார்க்கிறார்கள். 251 00:20:18,468 --> 00:20:20,094 எனவே சுத்தம் செய்தாகணும் என நினைக்கிறார்கள். 252 00:20:20,095 --> 00:20:22,680 அது எப்படி இருக்கிறது என்று உள்ளே இருப்பவர்களிடம் காட்ட விரும்புகிறார்கள். 253 00:20:22,681 --> 00:20:24,349 அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று. 254 00:20:25,058 --> 00:20:27,019 - ஆமாம், ஆனால் நீ செய்யவில்லையே. - இல்லை. 255 00:20:27,686 --> 00:20:29,687 இல்லை, நான் செய்யவில்லை, ஏன்னா அது சுத்த பொய். 256 00:20:29,688 --> 00:20:32,648 அது சுத்த பொய், ஏன்னா யாரோ ஒருவர் சுத்தம் செய்யும் பதிவைப் பார்த்தேன், 257 00:20:32,649 --> 00:20:36,569 அதில் வானத்தில் குறுக்கே பறக்கும் 258 00:20:36,570 --> 00:20:38,446 சில உயிரினங்களைப் பார்த்தேன்... 259 00:20:38,447 --> 00:20:40,449 பறவைகள். அவற்றுக்குப் பறவைகள் என்று பெயர். 260 00:20:42,034 --> 00:20:45,787 சரி. எனவே, நான் வெளியே வந்தபோது, இந்தப் பறவைகளைப் பார்த்தேன், சரியா? 261 00:20:46,371 --> 00:20:47,496 ஆனால் நான் சுத்தப்படுத்தும் பதிவில் 262 00:20:47,497 --> 00:20:51,334 பார்த்தது போலவே அவை நகர்ந்தன. 263 00:20:51,335 --> 00:20:53,044 அச்சசல் அதே மாதிரி. 264 00:20:53,045 --> 00:20:57,256 எனவே, கேஃபடீரியாவில் ஸ்கிரீனில் நான் பார்த்தது பொய் இல்லை என்று புரிந்தது, 265 00:20:57,257 --> 00:20:58,967 நான் பார்ப்பதுதான் பொய். 266 00:20:59,843 --> 00:21:00,844 ஹெல்மெட்டின் வழியாக. 267 00:21:01,803 --> 00:21:05,306 - அதை எப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. - மிகவும் மேம்பட்ட கம்ப்யூட்டர்கள். 268 00:21:05,307 --> 00:21:07,266 நிச்சயமாக. ஆனால் அது சுத்த பொய், சரியா? 269 00:21:07,267 --> 00:21:08,352 எனவே நான் ஏன் சுத்தம் செய்யணும்? 270 00:21:09,102 --> 00:21:10,436 இல்லை, நான் சுத்தம் செய்யவில்லை. 271 00:21:10,437 --> 00:21:11,562 நான் நடந்தேன். 272 00:21:11,563 --> 00:21:13,397 நான் தொடர்ந்து நடந்தேன், 273 00:21:13,398 --> 00:21:18,320 நான் செய்த விஷயம்தான் இங்கே நடந்ததற்கு காரணமாக அமையும் என்று நான் நினைக்கவே இல்லை. 274 00:21:18,862 --> 00:21:20,822 - அது எனக்குத் தெரியாது. - உனக்குத் தெரிந்திருக்காது. 275 00:21:34,378 --> 00:21:35,462 நீ எப்படி உயிரோடு இருக்கிறாய்? 276 00:21:39,216 --> 00:21:43,095 மற்ற அனைவரும் இறந்துவிட்டார்கள், ஆனால் நீ உயிரோடிருக்கிறாய். எப்படி? 277 00:21:44,638 --> 00:21:48,516 வந்து... நான் இல்லை என்றால், யார் வால்ட்டைப் பாதுகாப்பது? 278 00:21:48,517 --> 00:21:51,311 இல்லை, ஆனால், எவ்வளவு காலமாக நீ அங்கே இருக்கிறாய்? எப்படி... 279 00:21:52,521 --> 00:21:56,567 தனியாக இருக்கிறாய், உனக்கு உணவு இருக்கிறது, எனவே... 280 00:21:57,609 --> 00:22:00,863 நான் என் வேலையைச் செய்கிறேன். கதவை மூடி வைக்கிறேன். 281 00:22:01,738 --> 00:22:02,906 நான் திறக்க மாட்டேன். 282 00:22:04,825 --> 00:22:06,368 - எப்போதுமேவா? - மாட்டேன். 283 00:22:09,329 --> 00:22:11,456 ஏன்னா யாரோ உள்ளே வர முயற்சித்தது தெளிவாகத் தெரிகிறது, எனவே... 284 00:22:14,501 --> 00:22:18,296 எனக்கு படிக்க பிடிக்கும், இசை பிடிக்கும்... 285 00:22:18,297 --> 00:22:22,134 சோலோ? நான் கேட்கலாமா... வந்து... 286 00:22:24,761 --> 00:22:27,555 அங்கே வெளியே ஹாலில் இருக்கும்... சடலங்கள், 287 00:22:27,556 --> 00:22:29,640 அவை மற்றவைப் போல பழசாக இல்லை. 288 00:22:29,641 --> 00:22:30,726 எனவே... 289 00:22:32,519 --> 00:22:33,520 என்ன நடந்தது? 290 00:23:06,512 --> 00:23:08,679 எங்கு தேடியும் எனக்கு உணவு கிடைக்கவில்லை, எனவே நன்றி. 291 00:23:08,680 --> 00:23:12,476 அது நன்றாக இருந்தது. 292 00:23:13,393 --> 00:23:14,645 நன்றி. 293 00:23:22,069 --> 00:23:25,197 நான் இனிமையாக நடந்துகொள்ளவில்லை, நீ உணவை சாப்பிட விரும்பினேன். 294 00:23:28,534 --> 00:23:29,535 ஏன்? 295 00:23:30,619 --> 00:23:33,871 ஏனெனில் நீ உணவைச் சாப்பிட்டால், பிறகு நீ உண்மையானவள் என்றும், 296 00:23:33,872 --> 00:23:35,457 நீ என் கற்பனை இல்லை என்றும் எனக்குத் தெரிந்துவிடும். 297 00:23:38,502 --> 00:23:39,503 நீ நபர்களைக் கற்பனைச் செய்கிறாயா? 298 00:23:41,129 --> 00:23:43,130 என்ன... ஹேய்... போகாதே, சோலோ. 299 00:23:43,131 --> 00:23:44,341 நான்... 300 00:24:18,041 --> 00:24:21,085 அந்தப் பைத்தியக்காரனிடமிருந்து நீங்கள் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றினபோது எடுத்தது. 301 00:24:21,086 --> 00:24:22,588 அவன் பெயர் என்ன? 302 00:24:23,547 --> 00:24:24,965 நான் அதைப் பற்றி பேசுவதில்லை. 303 00:24:27,050 --> 00:24:28,677 அவன் இல்லவே இல்லாதது போல. 304 00:24:29,303 --> 00:24:30,304 அது நல்லது. 305 00:24:31,138 --> 00:24:32,222 அப்புறம் இது. 306 00:24:33,432 --> 00:24:35,725 பிஸ்டல் சுடுவதில் எந்த ரெய்டராலும் உங்களோடு போட்டிப் போட முடியாது. 307 00:24:35,726 --> 00:24:37,059 சிறு ஆயுதங்கள் நிபுணர் மார்க்ஸ்மேன்ஷிப் விருது 308 00:24:37,060 --> 00:24:38,145 இப்பவும் முடியாது. 309 00:24:40,772 --> 00:24:42,024 நீங்கள் சொல்வது சரிதான், ரெஜ்ஜி. 310 00:24:42,941 --> 00:24:44,234 நீங்கள் சொல்வது சரிதான். 311 00:24:45,485 --> 00:24:48,070 திரு. சிம்ஸ், உங்கள் வருகையை நான் பாராட்டுகிறேன்... 312 00:24:48,071 --> 00:24:49,198 நீங்கள் என்னை ராப் என்றே கூப்பிடலாம். 313 00:24:50,199 --> 00:24:51,699 இல்லை, சார், என்னால் முடியாது... 314 00:24:51,700 --> 00:24:56,204 இந்த அவரச நிலைமையினால், ஓய்வு பெற்ற எல்லா ரெய்டர்களையும் திரும்ப அழைப்பது 315 00:24:56,205 --> 00:24:57,997 உங்களுக்கு ஆச்சரியமாக இருக்காது. 316 00:24:57,998 --> 00:24:59,290 அவர்கள் வர வேண்டும். 317 00:24:59,291 --> 00:25:00,374 நாம் எல்லோரும் வர வேண்டும். 318 00:25:00,375 --> 00:25:05,714 நீங்கள் இயந்திரவியல் துறைக்கு அனுப்பப்படுவது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 319 00:25:10,761 --> 00:25:12,261 அதுவும் என் வயதிலா? 320 00:25:12,262 --> 00:25:16,433 ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும், நெடுங்கால நட்பு நம்முடையது. 321 00:25:18,227 --> 00:25:19,936 உன் கைமாறைக் கேட்கிறாய். 322 00:25:19,937 --> 00:25:22,855 ஆர்ச்சி ப்ரென்ட்டுடன் தனியாக ஐந்து நிமிடங்கள் கேட்டீர்கள். 323 00:25:22,856 --> 00:25:24,316 நான் பத்து நிமிடங்கள் கொடுத்தேன். 324 00:25:28,278 --> 00:25:30,821 இயந்திரவியல் துறையில் நான் ரொம்ப காலம் இருக்க வேண்டாம் என்று சொல்லு. 325 00:25:30,822 --> 00:25:33,074 அங்கே இருக்கும் காற்றில் ஏதோ இருக்கு. 326 00:25:33,075 --> 00:25:34,535 ரொம்ப காலம் இருக்க வேண்டியதில்லை. 327 00:25:35,619 --> 00:25:38,120 ஹேய். பாஸ்... ஹேய். நாம் பேச முடியவில்லை... 328 00:25:38,121 --> 00:25:39,915 - எனக்கு நேரம் இல்லை. - இது... முக்கியம். 329 00:25:40,582 --> 00:25:44,627 ஷெர்லி என்ன செய்கிறாள் என்று உன்னைக் கண்காணிக்கச் சொன்னேன். 330 00:25:44,628 --> 00:25:46,171 அதற்கு பதில், நீ அவளோடு சேர்ந்துவிட்டாய். 331 00:25:48,215 --> 00:25:49,842 எனக்கு அது தெரிந்தது உனக்கு ஆச்சரியமா இருக்கா? 332 00:25:51,635 --> 00:25:53,512 உன்னை மட்டும்தான் அவளைக் கண்காணிக்க சொன்னேன் என நினைக்கிறாயா? 333 00:25:55,430 --> 00:25:56,889 சரி, சரி, நான்... 334 00:25:56,890 --> 00:26:00,102 நான் அங்கே இருந்தேன், ஆனால்... அதனால்தான் நாம் பேச வேண்டும். 335 00:26:01,603 --> 00:26:03,897 நீ இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றி, ஜீன். 336 00:26:04,398 --> 00:26:05,982 இது நீண்டதூர நடைபயணம்தான். 337 00:26:05,983 --> 00:26:08,610 நான் என்ன பார்த்தேன் என்று எனக்குத் தெரியும்! நான் பொய் சொல்லவில்லை! 338 00:26:10,529 --> 00:26:14,824 இப்போது, உடன்படிக்கையில் ஷெரிஃபின் பொறுப்புகளைப் பற்றிய பகுதியில், 339 00:26:14,825 --> 00:26:18,828 ஒவ்வொருமுறை சுத்தம் செய்யும் போதும், அவர்களில் ஒருவர் நீதித்துறைக்கு 340 00:26:18,829 --> 00:26:20,246 அறிக்கையை சமர்ப்பிக்கணும் என்று உள்ளது. 341 00:26:20,247 --> 00:26:22,165 அதனால்தான் உங்களை மேலே அழைத்து வரச் சொன்னேன். 342 00:26:23,250 --> 00:26:26,628 கைது செய்யப்படும் வரை, நான் ஷெரிஃப் நிக்கல்ஸைப் பார்க்கவில்லை. 343 00:26:28,672 --> 00:26:30,591 ஆனால் அவள் கைது செய்யப்படும்போது, நீங்கள் அங்கு இருந்தீர்கள்தானே? 344 00:26:31,466 --> 00:26:32,551 ஆமாம். 345 00:26:34,303 --> 00:26:35,804 சோளக்காட்டிலா? 346 00:26:36,430 --> 00:26:37,806 ஆமாம். 347 00:26:38,390 --> 00:26:42,519 அவள் ஓடிப்போகும் முன் என்ன சொன்னாள்? 348 00:27:00,245 --> 00:27:01,246 தூக்கம் வரவில்லையா? 349 00:27:03,373 --> 00:27:06,710 ஆமாம். காஃபியை நிறுத்த வேண்டிய நேரத்தைத் தவறாக கணித்துவிட்டேன். 350 00:27:07,211 --> 00:27:08,212 உனக்கு? 351 00:27:10,422 --> 00:27:11,715 பதற்றம். 352 00:27:14,009 --> 00:27:17,303 திரும்பக் குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. 353 00:27:17,304 --> 00:27:21,557 ஆனால் ஷெரிஃப் வெளியே சென்றதால், நாளைக்கென கூடுதலாக ஒருவரை வைத்திருக்கிறார்கள், 354 00:27:21,558 --> 00:27:23,936 கடந்த முறை செய்தது போலவே. 355 00:27:24,728 --> 00:27:27,231 நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று என் கணவர் எப்போதும் சொல்வார். 356 00:27:28,232 --> 00:27:29,483 உங்களுக்கு என் வாழ்த்துகள். 357 00:27:30,859 --> 00:27:33,736 ரிக்கும் நானும் குழந்தைக்காக தவம் கிடக்கிறோம், 358 00:27:33,737 --> 00:27:35,738 ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால், 359 00:27:35,739 --> 00:27:37,157 குழந்தை வேண்டுமா என்று தோன்றுகிறது. 360 00:27:44,831 --> 00:27:47,709 குழந்தை பெறுவது நம்பிக்கையின் ஒளிக்கீற்று. 361 00:27:52,047 --> 00:27:55,717 இந்த மரத்தை நட்டவர்கள் அதன் அடியில் இளைப்பாறும் வரை வாழ்வதில்லை. 362 00:28:00,472 --> 00:28:01,640 உங்களுக்குக் குழந்தைகள் உள்ளனரா? 363 00:28:04,893 --> 00:28:05,978 ம்-ம். 364 00:28:06,603 --> 00:28:07,771 அது எப்படி இருக்கும்? 365 00:28:16,989 --> 00:28:18,365 முதல் குழந்தை உருவாகியிருந்தபோது... 366 00:28:19,074 --> 00:28:21,284 அவளைப் பார்க்கும் முன்பே, அவள் குரலைக் கேட்டேன். 367 00:28:21,285 --> 00:28:23,328 என் மனைவியின் வயிற்றில் என் காதை வைப்பேன். 368 00:28:24,872 --> 00:28:26,707 அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று பல மாதங்களாக யோசிப்போம். 369 00:28:28,333 --> 00:28:33,964 பார்க்க எப்படி இருப்பார்கள், எப்படி நடப்பார்கள், சிரிப்பார்கள், அழுவார்கள் என்று. 370 00:28:35,841 --> 00:28:38,218 பிறகு ஒருநாள், அவர்களை சந்திப்போம். 371 00:28:40,053 --> 00:28:41,430 அவர்கள் அழகாக இருப்பார்கள். 372 00:28:46,351 --> 00:28:48,854 நான் சற்று தூங்க முயற்சிக்கிறேன். 373 00:28:50,772 --> 00:28:52,191 ஃபீபி வெல்ஸ். 374 00:28:54,193 --> 00:28:55,402 பீட் நிக்கல்ஸ். 375 00:28:58,113 --> 00:28:59,947 - ஓ, என்னை மன்னியுங்கள். - பரவாயில்லை. 376 00:28:59,948 --> 00:29:01,407 - நான் முன்பு சொன்னது... - இல்லை. 377 00:29:01,408 --> 00:29:03,368 சில நல்ல விஷயமாவது வந்ததே. 378 00:29:06,830 --> 00:29:07,998 நீ வெற்றிகரமாக கருத்தரிப்பாய் என நம்புகிறேன். 379 00:29:10,459 --> 00:29:11,460 நன்றி. 380 00:29:13,003 --> 00:29:14,087 நான் வென்றால் நல்லது... 381 00:29:16,340 --> 00:29:17,591 நல்லிரவாக அமையட்டும். 382 00:29:49,122 --> 00:29:50,040 ஹேய். 383 00:29:53,710 --> 00:29:56,296 - என்ன? - ஓ, ஹேய். பொறு. 384 00:30:03,512 --> 00:30:05,264 எனக்கு ஒரு யோசனை. 385 00:30:05,931 --> 00:30:07,223 தீயணைப்பு வீரர்கள். 386 00:30:07,224 --> 00:30:08,641 அப்படியா? என்ன? 387 00:30:08,642 --> 00:30:10,351 அவர்களிடம் தலைக்கவசமும், சூட்டுகளும் இருக்கும். அவர்களிடம்... 388 00:30:10,352 --> 00:30:13,187 அவர்களிடம் ஏர் டேங்க் இருக்கும். அவர்கள் புகைக்குள் செல்வார்கள். 389 00:30:13,188 --> 00:30:14,565 இல்லை. 390 00:30:15,858 --> 00:30:19,610 அதைக் கொண்டு நம்மால் வெளியே உயிருடன் இருக்க முடியாது. புரிந்துகொள். 391 00:30:19,611 --> 00:30:21,697 ஆமாம், சுத்தம் செய்ய தரப்படும் சூட்டுகளாலும் கூடத்தான். 392 00:30:29,329 --> 00:30:31,582 தீயணைப்பு வீரரின் சூட்டை நான் பயன்படுத்தலாம். 393 00:30:33,125 --> 00:30:34,417 நல்ல யோசனைதான். 394 00:30:34,418 --> 00:30:35,835 ஆமாம், அப்படித்தானே நினைக்கிறாய்? 395 00:30:35,836 --> 00:30:38,588 - ஏனென்றால்... எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. - அது எங்கே இருக்கும்? 396 00:30:38,589 --> 00:30:41,966 தீயணைப்புப் பாதுகாப்பு உபகரணம் மூன்று இடங்களில் உள்ளது. 397 00:30:41,967 --> 00:30:44,635 பொறியியல், 70, 23-ல். 398 00:30:44,636 --> 00:30:47,680 - 23-ல் எங்கே? - மறுசுழற்சி பகுதிக்கு அடுத்து. 399 00:30:47,681 --> 00:30:51,768 - சரி. - இல்லை, ஹேய், ஒரு பிரச்சினை இருக்கலாம். 400 00:31:17,920 --> 00:31:19,712 மன்னிக்கவும். நேரம் கடந்து வந்திருக்கிறேன். 401 00:31:19,713 --> 00:31:20,796 ஏதாவது நடந்ததா? 402 00:31:20,797 --> 00:31:23,925 வந்து, ஷெரிஃப் நிக்கல்ஸ் சுத்தம் செய்தது பற்றிய அறிக்கையை நான் சமர்ப்பிக்கும் முன் 403 00:31:23,926 --> 00:31:25,176 பார்க்கணும் என்றீர்கள். 404 00:31:25,177 --> 00:31:26,302 அது அவ்வளவு அவசரமா? 405 00:31:26,303 --> 00:31:30,056 நிக்கல்ஸைப் பிடிக்க உதவிய ஐந்து ரெய்டர்களிடமும் நான் பேசிவிட்டேன். 406 00:31:30,057 --> 00:31:33,017 வெளியே போக விரும்புவதாக அவள் சொன்னதாக அந்த நான்கு பேர் சொன்னார்கள். 407 00:31:33,018 --> 00:31:34,185 ஆனால் மீதமுள்ள ஒருவர் சொல்லவில்லையா? 408 00:31:34,186 --> 00:31:37,980 ஐந்தாவது ஆள்... தங்கள் வேலையில் கவனம் செலுத்தியதாக சொல்கிறார்கள். 409 00:31:37,981 --> 00:31:42,152 அவள் வெளியே போகணுமென சொன்னதை மற்றவர்கள் கேட்டு இருந்தால், அப்படித்தான் சொல்லியிருப்பாள் என்றனர். 410 00:31:42,861 --> 00:31:43,986 ஆனால், உனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 411 00:31:43,987 --> 00:31:45,655 நான் அவளை படியில் மேலே அழைத்து வந்தபோது, 412 00:31:45,656 --> 00:31:48,074 தான் அப்படிச் சொல்லவில்லை என்று ஷெரிஃப் நிக்கல்ஸே என்னிடம் சொன்னாள். 413 00:31:48,075 --> 00:31:49,910 பொறு. அதை நீ இப்போதுதான் சொல்கிறாயா? 414 00:31:52,704 --> 00:31:55,581 அவளை நம்பலாமா என்று எனக்குத் தெரியவில்லை. 415 00:31:55,582 --> 00:31:59,418 நான் மற்றவர்களிடம் பேச விரும்பினேன், ஆனால் சாட்சியாளர்களுக்குச் சந்தேகம் இருந்தால், 416 00:31:59,419 --> 00:32:01,921 நிக்கல்ஸ் வெளியே அனுப்பப்படும் முன் விசாரித்திருக்க வேண்டும். 417 00:32:01,922 --> 00:32:03,423 - அது... - அது உடன்படிக்கையில் இருக்கு. ஆம். 418 00:32:04,883 --> 00:32:06,260 எனக்குத் தெரியும். 419 00:32:08,345 --> 00:32:09,888 - வேறு எதுவும்... - இல்லை. 420 00:32:10,973 --> 00:32:12,057 இனி நான் பார்த்துக்கொள்கிறேன். 421 00:32:14,184 --> 00:32:16,144 இதை என் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி, ஷெரிஃப். 422 00:32:17,062 --> 00:32:18,355 குட் நைட். 423 00:33:40,479 --> 00:33:41,480 நாக்ஸ். 424 00:33:44,816 --> 00:33:47,193 ஷெர்லி, திரும்பி வீட்டுக்குப் போ. 425 00:33:47,194 --> 00:33:50,280 - டெடியை எங்களோடு அனுப்பு, நாங்கள் போகிறோம். - நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை. 426 00:33:54,701 --> 00:33:56,118 உனக்கு அடியாட்கள் எங்கே கிடைத்தார்கள்? 427 00:33:56,119 --> 00:33:59,789 - அடியாட்களா? என்ன, ஷெரில். துணைக்காக வந்தவர்கள். - தலைக்கவசம் அணிந்தவர்கள் அப்படி கிடையாது. 428 00:33:59,790 --> 00:34:02,542 காவலில் இருக்கும் ஒருவரை நீ அழைத்துச் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது! 429 00:34:02,543 --> 00:34:04,211 - எனில், அவனை விடுவி! - டெடியை விடுவி! 430 00:34:06,380 --> 00:34:08,422 போலீஸ். வெளியே செல்லுங்கள்! 431 00:34:10,092 --> 00:34:11,676 நாம் இப்படிப்பட்டவர்கள் அல்ல! 432 00:34:11,677 --> 00:34:14,136 இப்போதிலிருந்து நாங்கள் இப்படித்தான்! 433 00:34:14,137 --> 00:34:17,891 டெடியை விடுவி! 434 00:34:36,159 --> 00:34:38,535 கேள், நாம் எல்லோரும் ஒரே விஷயத்தைத்தான் விரும்புகிறோம். 435 00:34:38,536 --> 00:34:39,704 நம் எல்லோருக்கும் டெடி திரும்ப வேண்டும். 436 00:34:39,705 --> 00:34:41,956 - டெட்டியை விடுவி! டெட்டியை விடுவி! - பாரு... 437 00:35:01,518 --> 00:35:03,937 - அவனை வெளியே விடு! - இல்லை! 438 00:35:17,910 --> 00:35:19,494 நீ என்ன செய்கிறாய்? 439 00:35:24,208 --> 00:35:26,460 அவனை பின்னால் அழைத்து போ! 440 00:35:29,880 --> 00:35:31,215 - கூப்? - கூப்பர்! 441 00:35:33,800 --> 00:35:34,800 பரவாயில்லை. 442 00:35:34,801 --> 00:35:37,053 - உனக்கு ஒன்றுமில்லை, கூப். - கூப். 443 00:35:37,054 --> 00:35:39,639 - ஹே, நண்பா. உனக்கு ஒன்றுமில்லை. - கூப், நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். 444 00:35:39,640 --> 00:35:40,891 உனக்கு ஒன்றுமில்லை. 445 00:35:41,683 --> 00:35:42,683 கூப். 446 00:35:42,684 --> 00:35:44,685 - கூப். - ஒன்றுமில்லை. 447 00:35:44,686 --> 00:35:46,104 எல்லாம் சரியாகிவிடும். 448 00:35:50,859 --> 00:35:51,860 நண்பா? 449 00:35:58,200 --> 00:36:00,452 யாராவது உதவுங்கள்! ப்ளீஸ்! 450 00:36:06,500 --> 00:36:09,545 ஒன்று 451 00:36:43,996 --> 00:36:45,371 ஃபீபி வெல்ஸ் - பெண் ரகசியமானது 452 00:36:45,372 --> 00:36:47,206 சைலோ ஆரஞ்சு குறியீடாக இந்தச் செயல்முறை அறியப்படும் 453 00:36:47,207 --> 00:36:48,791 நோயாளி கர்பக்கட்டுப்பாட்டை அகற்றக்கூடாது. 454 00:36:48,792 --> 00:36:50,502 நோயாளி கர்பக்கட்டுப்பாடு அகற்றப்பட்டதாக நம்பணும். 455 00:36:56,466 --> 00:36:59,343 எந்த முட்டாள் இதைத் தொடங்கியது என்று யாருக்கும் தெரியாது. 456 00:36:59,344 --> 00:37:01,096 இயந்திரவியல் துறையை சேர்ந்தவர்கள் இல்லை. 457 00:37:01,680 --> 00:37:02,931 மற்றொருவர்? 458 00:37:05,434 --> 00:37:06,435 ஆம். 459 00:37:07,352 --> 00:37:09,187 இயந்திரவியல் துறையில் பிறந்து, வளர்ந்தவர். 460 00:37:09,188 --> 00:37:10,354 டெர்ரி கூப்பர். 461 00:37:10,355 --> 00:37:11,856 நீங்கள் பார்த்திலேயே இனிமையான குழந்தை. 462 00:37:11,857 --> 00:37:13,066 அவன்... 463 00:37:14,693 --> 00:37:18,280 ஆம், வெடிகுண்டு வைத்திருந்த பைத்தியக்காரனைத் தடுக்கத்தான் முயன்றான். 464 00:37:20,490 --> 00:37:21,742 உங்களுக்கு என்ன வேண்டும்? 465 00:37:22,868 --> 00:37:23,994 வந்து, பாஸ், 466 00:37:25,454 --> 00:37:27,246 எங்களுக்கு அனைத்தும் வேண்டும். 467 00:37:27,247 --> 00:37:28,373 ஆனால் முதலில்... 468 00:37:30,584 --> 00:37:31,627 நீங்கள் வேண்டும். 469 00:37:53,232 --> 00:37:54,483 வந்ததற்கு நன்றி. 470 00:37:55,734 --> 00:37:57,818 இங்கு பாதுகாப்பாக உள்ளோம், கேமராக்களோ, ஒட்டுக்கேட்பவர்களோ இல்லை. 471 00:37:57,819 --> 00:38:00,656 நாங்கள் செய்ய வந்ததை எங்களைச் செய்யவிடலாமே? 472 00:38:01,281 --> 00:38:04,242 நாங்கள் டெடியை அழைத்து வந்திருப்போம், எல்லாம் சரியாகி இருக்கும். 473 00:38:04,243 --> 00:38:05,576 உண்மையாகவா? 474 00:38:05,577 --> 00:38:07,204 அவனைக் காலத்திற்கும் ஒளித்தே வைத்திருக்கப் போகிறாயா? 475 00:38:27,432 --> 00:38:28,725 நாம் கூப்பரை இழந்துவிட்டோம். 476 00:38:35,023 --> 00:38:36,441 என்னால் இதை நம்பவே முடியவில்லை. 477 00:38:39,778 --> 00:38:40,779 என்னாலும்தான். 478 00:38:50,163 --> 00:38:51,831 விடு. உன் காலை காயப்படுத்திக் கொள்ளாதே. 479 00:38:51,832 --> 00:38:53,958 குத்த வேண்டும் என்றால், என்னைக் குத்து. 480 00:38:53,959 --> 00:38:55,502 அடச்சே. 481 00:38:56,962 --> 00:38:58,547 ஐயோ. 482 00:39:00,424 --> 00:39:02,217 உண்மையிலேயே அடிப்பாய் என்று நினைக்கவில்லை. 483 00:39:03,510 --> 00:39:05,095 நானும்தான். 484 00:39:14,605 --> 00:39:15,606 ஷெர்ல்... 485 00:39:17,608 --> 00:39:19,443 நீ மட்டுமே கோபமாக இல்லை. 486 00:39:22,237 --> 00:39:24,740 ஜூல்ஸை இழந்தது நீ மட்டும் இல்லை. 487 00:39:30,245 --> 00:39:32,539 ஆம், அவளை நாம் இழந்ததாக எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. 488 00:39:36,752 --> 00:39:38,337 இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. 489 00:39:39,838 --> 00:39:41,840 அந்த மலை மேல் அவள் என்ன பார்த்தாள் என்று நமக்குத் தெரியாது. 490 00:39:42,549 --> 00:39:48,347 அவள் அங்கு எங்கோ, இன்னமும் உயிருடன் இருக்கக் கூடும். 491 00:39:52,059 --> 00:39:53,434 பாரு, நான்... 492 00:39:53,435 --> 00:39:55,062 சரி. சரி. 493 00:39:55,646 --> 00:39:58,232 உன்னைப் போலவே, நானும்தான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன், 494 00:39:58,899 --> 00:40:00,859 ஆனால் நீ செய்வது போல நாம் செய்யக் கூடாது. 495 00:40:04,279 --> 00:40:05,489 பிறகு எப்படி செய்யணும்? 496 00:40:07,950 --> 00:40:10,911 நாம் குழந்தையாக இருந்தபோது, அங்கு சென்று பார்ப்போம், நினைவிருக்கா? 497 00:40:12,829 --> 00:40:15,082 பேர்கள் பொதித்த சுவரை நாம் கண்டுபிடித்தோமே, அது நினைவிருக்கா? 498 00:40:16,375 --> 00:40:17,501 அதுக்கு என்ன? 499 00:40:19,628 --> 00:40:21,338 அப்போது அதன் அர்த்தம் நமக்குத் தெரியவில்லை. 500 00:40:24,341 --> 00:40:25,758 இப்போது எனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். 501 00:40:25,759 --> 00:40:27,426 ஒருநாள் காலை, விடியலின்போது, 502 00:40:27,427 --> 00:40:31,056 வழக்கமான பராமரிப்பிற்காக, கஃபேயின் ஸ்கிரீன்களையும் 503 00:40:31,765 --> 00:40:33,015 ஷெரிஃபின் அலுவலகத்தில் உள்ள 504 00:40:33,016 --> 00:40:37,187 கேமராக்களையும் நான் ஷட்டவுன் செய்கிறேன். 505 00:40:38,313 --> 00:40:41,108 ஏர் லாக்கை நான் இயக்குகிறேன், 506 00:40:42,734 --> 00:40:45,112 அந்த மலையில் ஏறி மறைந்து போக, உனக்கு ஐந்து நிமிட அவகாசம் இருக்கும், 507 00:40:46,530 --> 00:40:51,076 அதன் பிறகு நான் ஸ்கிரீன்களை ரீஆக்டிவேட் செய்வேன். 508 00:40:54,997 --> 00:40:56,665 இதைச் செய்துதான் ஆகணுமா? 509 00:40:59,168 --> 00:41:00,961 என் சூட் எப்போது கிடைக்கும்? 510 00:41:03,714 --> 00:41:07,801 வந்து, ஐ.டி-இன் தலைவர் என்ற முறையில், எனக்கென்று ஒரு சூட் இருக்கு. 511 00:41:10,387 --> 00:41:14,182 ஒருவேளை நாம் அதைக் கொஞ்சம் மாற்றியமைக்கலாம் என்று நினைக்கிறேன். 512 00:41:14,183 --> 00:41:15,892 நீ ஒன்பது அடி உயரமானவன். 513 00:41:15,893 --> 00:41:20,439 அதனால்தான் உனக்கென ஒன்றைச் செய்துகொள்வது நல்லது. 514 00:41:21,023 --> 00:41:23,734 எதிர்காலத்தில் நிழலாக வருபவருக்காக என்று நான் சொல்லிவிடுகிறேன். 515 00:41:24,318 --> 00:41:27,028 பொதுவாக, உன் அளவை எடுக்க ஒரு குழுவை அனுப்புவார்கள், 516 00:41:27,029 --> 00:41:32,200 ஆனால் இது உனக்கும் எனக்குமான ரகசியம் என்பதால், 517 00:41:32,201 --> 00:41:35,494 நானே அதைச் செய்கிறேன். 518 00:41:35,495 --> 00:41:37,831 உனக்கு நானே அளவு எடுக்கிறேன். 519 00:42:07,569 --> 00:42:09,571 கைகளிலிருந்து தொடங்குவார்கள். 520 00:42:10,239 --> 00:42:11,573 இப்படி... 521 00:42:26,380 --> 00:42:28,464 அவற்றை நீ குறித்துக்கொள்ள வேண்டாமா? 522 00:42:28,465 --> 00:42:29,883 வேண்டாம். 523 00:42:34,638 --> 00:42:35,847 பெர்னார்ட். 524 00:42:35,848 --> 00:42:36,932 என்ன? 525 00:42:38,517 --> 00:42:40,018 உன்னிடம் ஒரு கேள்வி கேட்கட்டுமா? 526 00:42:43,063 --> 00:42:44,439 நான் உதவியாக இருந்திருக்கிறேனா? 527 00:42:45,524 --> 00:42:47,484 நான் மனம்விட்டு பேசக் கூடிய ஒரே ஆள் நீ மட்டும்தான். 528 00:42:50,988 --> 00:42:52,781 ஆனால் நீ பேச வேண்டும். 529 00:42:53,574 --> 00:42:57,577 என் கருத்து தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. 530 00:42:57,578 --> 00:43:01,582 அவற்றிற்குத் தேவையும் உள்ளது, அவசியமும் உள்ளது. 531 00:43:02,165 --> 00:43:03,333 இருந்தும் புறக்கணிக்கப்படுகிறது. 532 00:43:04,251 --> 00:43:07,628 இயந்திரவியல் துறையில் கிராஃபிட்டி வரைந்தவனை நீ விடுவிக்கணும் என்று சொன்னேன். 533 00:43:07,629 --> 00:43:09,172 அவன் விடுவிக்கப்பட்டான். 534 00:43:09,173 --> 00:43:13,593 ஆமாம், ஆனால் குண்டு வெடித்து, துப்பாக்கிச் சூட்டில் இரண்டு உயிர்கள் போன பிறகுதான். 535 00:43:13,594 --> 00:43:15,219 - அதற்கு காரணம் நீயா? - இல்லை. 536 00:43:15,220 --> 00:43:17,764 உண்மையாகவா? ஏன்னா அது “த ஆர்டர்”-க்கு எதிராக இருப்பது போலத் தெரிகிறது. 537 00:43:18,724 --> 00:43:20,017 அவர்களைத் திரும்பத் தாக்க வைத்து, 538 00:43:20,893 --> 00:43:24,313 அதன் காரணமாக, இயந்திரவியல் துறைக்கு எதிரான மனநிலை சைலோவில் உருவாகும், 539 00:43:25,230 --> 00:43:28,192 அதன் மூலம், நீ கிளர்ச்சியை அடக்கலாம். 540 00:43:31,028 --> 00:43:32,320 நான் காரணம் இல்லை. 541 00:43:32,321 --> 00:43:33,488 நிச்சயமாகவா? 542 00:43:34,907 --> 00:43:36,366 உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன். 543 00:43:37,618 --> 00:43:39,786 - இருந்தும், நீ ஏற்கனவே சொல்லியிருக்கிறாய். - எப்படி சொல்கிறாய்? 544 00:43:40,621 --> 00:43:44,082 ஜூலியட் நிக்கல்ஸ் வெளியே போகணுமென சொல்லவே இல்லைதானே? 545 00:43:50,672 --> 00:43:51,673 இல்லை. 546 00:43:52,299 --> 00:43:54,050 உனக்குத் தேவையான எல்லா அளவுகளும் எடுத்துவிட்டாயா? 547 00:43:54,051 --> 00:43:55,426 ஆம். 548 00:43:55,427 --> 00:43:57,345 எனில், நீ இப்போது கிளம்பலாம். 549 00:43:57,346 --> 00:43:59,264 என் சூட் இல்லாமல் திரும்பி வராதே. 550 00:44:09,358 --> 00:44:10,733 சோலோ? 551 00:44:10,734 --> 00:44:11,901 சோலோ, நீ சரியாகச் சொன்னாய். 552 00:44:11,902 --> 00:44:15,072 அது நீருக்கு அடியில்தான் இருக்கு, ஆனால் என்னால் அதை எடுக்க முடியும். 553 00:44:15,614 --> 00:44:17,782 நான் தண்ணீரில் மூழ்கினால், 554 00:44:17,783 --> 00:44:19,825 இன்னொரு நிலை கீழே சென்று, 555 00:44:19,826 --> 00:44:22,161 வீடுகளின் வழியாக, நடைப்பாதைக்கு 556 00:44:22,162 --> 00:44:23,913 என்னால் வர முடியும், 557 00:44:23,914 --> 00:44:27,500 ஆனால், நீருக்கு அடியில் எனக்கு காற்றை தருவதற்கு ஏற்ப நான் ஏதாவது ஒன்றை உருவாக்கணும். 558 00:44:27,501 --> 00:44:31,588 அதாவது, நான் கீழே இருக்கும்போது, நீ அதை இயக்க வேண்டும். 559 00:44:34,716 --> 00:44:35,759 சோலோ? 560 00:44:40,055 --> 00:44:42,265 எனக்கு உன் உதவி வேண்டும். 561 00:44:42,266 --> 00:44:44,433 என்னால் வெளியே வர முடியாது! 562 00:44:44,434 --> 00:44:46,645 ஆனால், முன்பே நீ வெளியே வந்திருக்கிறாய். 563 00:44:47,646 --> 00:44:48,897 எனக்குத் தெரியும்... பாரு... 564 00:44:50,148 --> 00:44:51,190 முற்றத்தில் உள்ள இரண்டு உடல்களும்... 565 00:44:51,191 --> 00:44:53,193 நான் கதவைத் திறக்கக் கூடாது. 566 00:44:54,903 --> 00:44:58,197 நீ எனக்கு உணவு கொடுத்தாய். எனக்கு உணவு கொடுக்க நீ கதவைத் திறந்தாயே. 567 00:44:58,198 --> 00:45:00,074 - சரி. - சரியா? 568 00:45:00,075 --> 00:45:02,244 நீ இங்கிருக்கும்போது நான் கதவைத் திறக்க மாட்டேன். 569 00:45:09,084 --> 00:45:10,918 இங்கே பாரு, நான் உனக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. 570 00:45:10,919 --> 00:45:13,380 இங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டியதில்லை, சரியா? 571 00:45:14,173 --> 00:45:15,174 எனக்குப் புரிகிறது. 572 00:45:16,216 --> 00:45:17,926 உனக்கு அதைப் பற்றிப் பேச இஷ்டமில்லை என்று புரிகிறது, 573 00:45:18,510 --> 00:45:21,805 மேலும் உன் வாழ்வில் நீ அனைவரையும் இழந்துவிட்டாய். 574 00:45:24,683 --> 00:45:25,808 ஆனால் நான் திரும்பப் போக வேண்டும். 575 00:45:25,809 --> 00:45:28,520 நான் திரும்பப் போக வேண்டும், சரியா? 576 00:45:29,396 --> 00:45:31,647 நீ கதவைத் திறக்கக் கூடாது என்று எனக்குப் புரிகிறது... 577 00:45:31,648 --> 00:45:34,693 - அது என் வேலை. - ஆனால், நீ எனக்கு உதவ வேண்டும். 578 00:45:35,986 --> 00:45:37,236 சரியா? 579 00:45:37,237 --> 00:45:40,032 காப்பாற்ற நீ எனக்கு உதவ வேண்டும்... 580 00:45:40,908 --> 00:45:43,869 10,000 பேரைக் காப்பாற்றணும், சோலோ. 581 00:45:45,370 --> 00:45:46,872 10,000 பேர். 582 00:45:49,583 --> 00:45:52,502 பார், இங்கு நடந்ததற்கு அது ஈடாகாது, 583 00:45:52,503 --> 00:45:53,878 ஆனால் நான் வீட்டிற்குச் சென்றால்... 584 00:45:53,879 --> 00:45:56,798 நான் வீட்டிற்குச் செல்ல நீ எனக்கு உதவினால், 585 00:45:58,342 --> 00:46:02,846 இங்கு என்ன நடந்ததோ, அது அங்கு நடக்காமல் நம்மால் தடுக்க முடியும். 586 00:46:04,932 --> 00:46:06,225 ஆனால் நான்... 587 00:46:08,936 --> 00:46:10,562 எனக்கு உன் உதவி நிச்சயம் வேண்டும். 588 00:46:16,276 --> 00:46:17,444 ப்ளீஸ். 589 00:46:24,826 --> 00:46:26,119 என்னால் முடியாது. 590 00:47:08,120 --> 00:47:10,580 “எப்படியும் உள்ளே வந்துவிடுவோம்.” 591 00:47:10,581 --> 00:47:13,667 எப்படியும் உள்ளே வந்துவிடுவோம் 592 00:47:27,973 --> 00:47:29,099 சரி. 593 00:47:31,935 --> 00:47:32,936 எனக்குப் புரிகிறது. 594 00:47:40,694 --> 00:47:42,154 பரவாயில்லை. எனக்குப் புரிகிறது. 595 00:47:44,573 --> 00:47:46,074 உணவுக்கு நன்றி. நான்... 596 00:47:48,243 --> 00:47:49,369 நாம் பிறகு சந்திப்போம். 597 00:47:50,704 --> 00:47:53,039 நில்லு! 598 00:47:53,040 --> 00:47:54,541 நீ என்ன செய்யப் போகிறாய்? 599 00:47:55,667 --> 00:47:57,169 எனக்குத் தெரியாது. நான்... 600 00:47:57,753 --> 00:47:59,087 நான் பார்த்துக்கொள்கிறேன். 601 00:48:16,313 --> 00:48:17,522 எப்படி உணர்கிறாய்? 602 00:48:17,523 --> 00:48:19,482 ஆர்வமாக இருக்கு. 603 00:48:19,483 --> 00:48:21,026 பதட்டமாக இருக்கு. 604 00:48:21,735 --> 00:48:24,404 இல்லை, வந்து, மரத்துப் போய்விட்டதா? இதை உணர முடிகிறதா? 605 00:48:26,198 --> 00:48:27,407 மன்னியுங்கள். 606 00:48:28,200 --> 00:48:29,451 மரத்துப் போய்விட்டது. 607 00:48:30,285 --> 00:48:31,245 நல்லது. 608 00:48:32,037 --> 00:48:33,830 பதட்டப்பட ஏதுமில்லை. 609 00:48:35,207 --> 00:48:37,459 உனக்குத் தெரியும் முன்பே, எல்லாம் முடிந்துவிடும். 610 00:48:41,672 --> 00:48:42,506 டாக்டர் நிக்கல்ஸ். 611 00:48:44,216 --> 00:48:47,845 நாங்கள் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டுள்ளோம் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறோம். 612 00:48:50,389 --> 00:48:55,852 இந்த வாய்ப்பு கிடைக்க காரணம் 613 00:48:55,853 --> 00:48:58,646 உங்கள் மகள்... 614 00:48:58,647 --> 00:48:59,815 நன்றி. 615 00:49:02,276 --> 00:49:03,819 உங்களுக்கும் பெண் குழந்தை பிறக்குமென நம்புகிறேன். 616 00:50:17,351 --> 00:50:19,394 இப்போது நீங்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். 617 00:50:22,231 --> 00:50:24,191 இல்லை. அசையாதே. 618 00:50:28,487 --> 00:50:31,031 இரண்டு தையல்கள்தான், பிறகு நீங்கள் போகலாம். 619 00:50:40,332 --> 00:50:41,583 போகாதே! 620 00:51:01,436 --> 00:51:02,812 நான் பார்க்க மோசமாக இருக்கிறேனா? 621 00:51:02,813 --> 00:51:04,522 இல்லை. நான்... 622 00:51:04,523 --> 00:51:08,944 நீ வேறுமாதிரி இருப்பாய் என்று நினைத்தேன், அது... 623 00:51:12,322 --> 00:51:14,658 நான் இதுவரை இவ்வளவு தூரம் வந்ததே இல்லை. 624 00:51:18,745 --> 00:51:20,122 இது ரொம்ப பெரிதாக இருக்கு. அங்கு... 625 00:51:23,166 --> 00:51:25,794 இங்கு நிறைய இடம் இருப்பது போலத் தோன்றுகிறது. 626 00:51:30,132 --> 00:51:31,216 இன்னும் பார்க்க விரும்புகிறாயா? 627 00:51:36,930 --> 00:51:37,930 ஆமாம். 628 00:51:37,931 --> 00:51:39,850 சரி. உனக்கு எங்கே போக வேண்டும்? 629 00:51:46,607 --> 00:51:47,733 மேலே போக விரும்புகிறாயா? 630 00:51:56,783 --> 00:51:58,159 மேலேயா? 631 00:51:58,160 --> 00:51:59,244 சரி. 632 00:52:00,787 --> 00:52:01,830 வா. 633 00:52:17,179 --> 00:52:18,722 சரி. ஜாக்கிரதை. 634 00:52:26,188 --> 00:52:27,773 ஹேய். 635 00:52:28,565 --> 00:52:31,609 - ஒன்றுமில்லை. ஹேய். - நில்லு. 636 00:52:31,610 --> 00:52:33,444 - வேண்டாம்! - ஹேய். 637 00:52:33,445 --> 00:52:35,279 இல்லை. பொறு, உன்னைக் காயப்படுத்திவிட்டேனா? உனக்கு ஒன்றுமில்லையே? 638 00:52:35,280 --> 00:52:37,866 - இல்லை! ஆம்! கிட்டத்தட்ட. - அட... இல்லை, இல்லை. 639 00:52:38,450 --> 00:52:39,867 இது உன் தவறுயில்லை. 640 00:52:39,868 --> 00:52:41,328 - மன்னிச்சிடு. - பரவாயில்லை. 641 00:52:41,995 --> 00:52:42,995 சற்று உட்கார். 642 00:52:42,996 --> 00:52:44,164 நாம் சற்று உட்காரலாம். 643 00:52:44,706 --> 00:52:45,791 நான் இங்கேயே இருக்கிறேன். 644 00:52:46,792 --> 00:52:48,544 ரொம்ப காலம் ஆகிவிட்டது. 645 00:52:51,672 --> 00:52:52,881 தெரியும். 646 00:52:57,135 --> 00:52:59,179 உண்மையிலேயே இங்கிருப்பது நீதானா? 647 00:53:03,308 --> 00:53:04,351 ஆமாம். 648 00:53:06,520 --> 00:53:07,563 ஆமாம், நான்தான். 649 00:54:14,588 --> 00:54:16,590 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்