1 00:00:24,691 --> 00:00:26,735 இது தேவாலயம் இல்லை, தெரியும் தானே? 2 00:00:28,654 --> 00:00:30,364 ஓட்கா மற்றும் ஜிஞ்சர் ஏல் கொடு. 3 00:00:31,615 --> 00:00:32,616 இதோ கொடுக்கிறேன். 4 00:00:37,246 --> 00:00:38,247 இந்தாருங்கள். 5 00:00:44,962 --> 00:00:46,755 -இந்தாருங்கள். -நன்றி. 6 00:00:50,926 --> 00:00:52,469 நீ “பிரேக்கிங் டான்” படிக்கிறாயா? 7 00:00:52,469 --> 00:00:53,971 யாரோ இங்கேயே விட்டுச் சென்றார்கள். 8 00:00:53,971 --> 00:00:56,640 உண்மையில், இது சற்று குழப்பமாக இருக்கிறது. 9 00:00:56,640 --> 00:00:58,559 திடீரென்று சில கதாபாத்திரங்கள் வருகிறார்கள். 10 00:00:59,685 --> 00:01:02,145 இதற்கு முன்னால், பல புத்தகங்கள் இருக்கின்றன, தெரியுமா? 11 00:01:03,146 --> 00:01:04,605 தெரியும். ஆமாம். 12 00:01:05,274 --> 00:01:08,026 உனக்கு புத்தகங்கள் பிடிக்கும் என்றால்... 13 00:01:08,026 --> 00:01:10,696 பிடிக்கும். சிறந்த கற்பனை புத்தகங்கள். 14 00:01:10,696 --> 00:01:13,073 திடீரென்று தோன்றும் கதாபாத்திரங்களும் பிடிக்கும். 15 00:01:39,099 --> 00:01:40,017 டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் 16 00:01:47,024 --> 00:01:48,025 ஹே. 17 00:01:48,692 --> 00:01:52,696 இங்கே பார். நீ சிறந்த மண்பாண்ட கலைஞராகப் போகிறாய். 18 00:01:52,696 --> 00:01:54,156 எனக்கு அப்படித் தோன்றவில்லை. 19 00:01:54,948 --> 00:01:58,535 நமக்கு பிடித்ததை செய்ய நினைப்பது பரவாயில்லை தானே? 20 00:01:58,535 --> 00:01:59,661 ஆமாம். 21 00:02:01,205 --> 00:02:05,918 நமக்கு எது திருப்தியை கொடுக்கும் என்று தெரிந்திருப்பது நல்லது. 22 00:02:07,628 --> 00:02:09,170 கடினமான காலங்களில் கூட. 23 00:02:09,963 --> 00:02:15,636 “துக்கப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறோம்.” அ 2 கொரிந்தியர் 6... 24 00:02:15,636 --> 00:02:16,720 ஆமாம், பைபிளில் இருக்கு. 25 00:02:17,429 --> 00:02:19,181 பைபிளில் எனக்கு என்ன பிடிக்கும் தெரியுமா? 26 00:02:19,181 --> 00:02:21,391 கன்னிகளாக இல்லாத மனைவிகள் கல்லால் அடிக்கப்படுவது கூட, 27 00:02:21,391 --> 00:02:24,186 தவறு இல்லை என்பது போல அதில் இருப்பது எனக்கு அது பிடிக்கும். 28 00:02:24,186 --> 00:02:26,313 வந்து, செப்ஃபின் முத்தம். 29 00:02:26,313 --> 00:02:28,732 நான் உன்னைப் பார்க்க வரவில்லை. நான்... 30 00:02:30,025 --> 00:02:31,902 இந்த கோடையில், கோல்டனின் இறப்பிற்குப் பிறகு 31 00:02:31,902 --> 00:02:33,904 நீ வருத்தமாக இருப்பதாக உன் அப்பா சொன்னார். 32 00:02:33,904 --> 00:02:36,907 -அவர் அப்படி சொன்னாரா? -நீ மன உளைச்சலில் இருக்கிறாய் என்று தெரியும். 33 00:02:37,574 --> 00:02:41,537 பள்ளிக்கு திரும்ப வருவதில், உனக்கு சற்று தயக்கம் இருப்பதும் தெரியும். 34 00:02:42,120 --> 00:02:44,414 வேறு ஒருவரும் இப்படி உணர்ந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. 35 00:02:44,414 --> 00:02:46,083 “இயேசு” என்று சொன்னால், கடுப்பாகிவிடுவேன்... 36 00:02:48,460 --> 00:02:49,962 நான் என்னைப் பற்றி சொன்னேன். 37 00:02:51,713 --> 00:02:55,425 டியர்ஃபீல்டிற்கு வந்த போது நான் மிக அந்நியமாக உணர்ந்தேன். 38 00:02:57,511 --> 00:02:58,804 அப்புறம் ஏன் இங்கேயே இருந்துவிட்டீர்கள்? 39 00:02:59,471 --> 00:03:01,306 முதலில் எதற்காக இங்கே வந்தீர்கள்? 40 00:03:01,306 --> 00:03:05,394 நான் கேட்கலாம் என்றால், ஏன் நீங்கள் பாதிரியார் ஆனீர்கள்? 41 00:03:05,894 --> 00:03:06,895 மார்ஃபோ உங்கள் திறனை அறிந்துகொள்ளுங்கள் 42 00:03:07,563 --> 00:03:11,733 உன்னைப் பற்றி தான் பேச வந்தேன், ட்ரீனா. என் வாழ்க்கை இப்போது முக்கியமில்லை. 43 00:03:11,733 --> 00:03:12,818 அப்படியா? 44 00:03:12,818 --> 00:03:14,528 அந்த இயந்திரத்திற்கு நீங்கள் தான் 45 00:03:14,528 --> 00:03:16,321 இப்போது நல்ல விளம்பரமாக இருக்கிறீர்கள். 46 00:03:17,948 --> 00:03:21,368 உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எந்த விளம்பரமும் நல்ல விளம்பரம் தான், இல்லையா? 47 00:03:21,368 --> 00:03:23,370 ஃபாதர் ரூபெனுக்கு “ஃபாதர்” என்ற மார்ஃபோ கார்டு கிடைத்தது 48 00:03:23,370 --> 00:03:25,038 ஒருவேளை பாதிரியார்களுக்கு இல்லாமல் இருக்கலாம். 49 00:03:32,045 --> 00:03:33,046 பெட்ஃபோர்ட் பார் 50 00:03:36,675 --> 00:03:37,968 சரி. 51 00:03:43,640 --> 00:03:47,019 அது மோசம் இல்லை. மோசமே இல்லை. 52 00:03:49,479 --> 00:03:50,731 என்ன தான் பிரச்சினை? 53 00:03:51,982 --> 00:03:53,108 அந்த... 54 00:03:56,737 --> 00:03:58,697 அடக் கடவுளே, அது காரம்! 55 00:04:01,450 --> 00:04:02,910 ஓ, நேரே மூக்கிற்குள் பாய்ந்தது. 56 00:04:05,746 --> 00:04:08,290 அதில் என்ன சேர்த்திருக்கிறார்கள்? சரி. 57 00:04:08,290 --> 00:04:12,127 ஐயோ, இது முட்டாள்தனம். இது... இது சரி இல்லை. 58 00:04:14,129 --> 00:04:15,547 ஓ. ஒய் ஒய். 59 00:04:20,886 --> 00:04:22,304 இங்கே என்ன நடக்கிறது? 60 00:04:22,304 --> 00:04:24,556 ஒன்றுமில்லை, நான் கொஞ்சம் காரமான உணவை சாப்பிட்டேன். 61 00:04:25,098 --> 00:04:26,600 அது எனக்கு பிடிச்சிருக்கு தான். 62 00:04:27,100 --> 00:04:30,687 -நீங்கள் டாட்டூ போட்டிருக்கிறீர்காளா? -அது வந்து... ஆமாம். 63 00:04:30,687 --> 00:04:32,773 இங்கே பார்! இது உன் அம்மாவுக்காக தான். 64 00:04:32,773 --> 00:04:33,857 ஐ லவ் பியூ 65 00:04:34,441 --> 00:04:36,985 -அது ஏன், “ஐ லவ் பூ” என்று இருக்கிறது? -அப்படி இல்லையே. 66 00:04:36,985 --> 00:04:40,030 -அது “ஐ லவ் பூ” என்றுதான் இருக்கிறது. -இல்லை, “ஐ லவ் பஃப்” என்றிருந்திருக்க வேண்டியது. 67 00:04:40,030 --> 00:04:43,158 உன் அம்மாவை அப்படித் தான் கூப்பிடுவேன். ஆனால், மனித விலாவில் டாட்டூ வரைந்து கொள்வது 68 00:04:43,158 --> 00:04:47,120 மிகவும் கடினம் என்று புரிந்துகொண்டதால், பாதியில் நிறுத்திவிட்டேன். 69 00:04:47,120 --> 00:04:49,039 நீ அதை “ஐ லவ் புஸ்ஸி” என்று எப்போதும் மாற்றிக்கொள்ளலாம். 70 00:04:49,039 --> 00:04:50,165 ட்ரினா. 71 00:04:50,165 --> 00:04:52,125 -மாற்றாமலும் போகலாம். -ட்ரீனா, இப்படி பேசாதே. 72 00:04:53,460 --> 00:04:54,461 ஹே. 73 00:04:55,337 --> 00:04:57,756 என்ன நடக்கிறது? நீங்கள் ஏன் சட்டை போடவில்லை? 74 00:04:58,507 --> 00:05:00,968 நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் எல்லாம் கைமீறி போனது. 75 00:05:00,968 --> 00:05:02,761 உங்களுக்காக அப்பா பாதி டாட்டூ போட்டிருக்கிறார். 76 00:05:02,761 --> 00:05:05,222 நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க, நான் வெளியே போகிறேன். 77 00:05:10,227 --> 00:05:11,144 நான் பார்க்கலாமா? 78 00:05:11,144 --> 00:05:15,315 உனக்கு ஆச்சரியம் கொடுக்க விரும்பினேன், ஆனால், பரவாயில்லை. 79 00:05:16,441 --> 00:05:18,068 -நீ தயாரா? -சரி. 80 00:05:19,194 --> 00:05:21,488 “ஐ லவ்...” 81 00:05:21,488 --> 00:05:22,573 பஃப்! 82 00:05:22,573 --> 00:05:24,408 அது “ஐ லவ் பஃப்” என்று இருந்திருக்க வேண்டும். 83 00:05:24,408 --> 00:05:27,911 இங்க் தீர்ந்துவிட்டதால் நான் மறுபடியும் ஒருமுறை போக வேண்டும். 84 00:05:27,911 --> 00:05:31,707 இது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பது போல நான் ஏதாவது சொல்லிவிட்டேனா? 85 00:05:31,707 --> 00:05:33,917 இல்லை... வெளிப்படையாக இல்லை. 86 00:05:34,501 --> 00:05:37,296 நான்... காதலை வெளிப்படுத்தும், 87 00:05:37,296 --> 00:05:39,673 எதிர்பார்க்காத ஒன்றை செய்து உன்னை நேசிக்கிறேன் என்று காட்ட 88 00:05:39,673 --> 00:05:42,259 -விரும்பினேன். -நானும் உங்களை நேசிக்கிறேன். 89 00:05:42,926 --> 00:05:46,513 -உண்மையில் இது எதிர்பாராத விஷயம் தான். -ஆமாம். 90 00:05:47,097 --> 00:05:49,224 மற்றும் நிரந்தரமானது. 91 00:05:49,224 --> 00:05:50,559 அதனால் தான், தெரியவில்லை, 92 00:05:50,559 --> 00:05:54,771 ஒருவேளை இதுதான் நீங்கள் எனக்கு செய்யும், பஃபின் தொடர்புடைய கடைசி விஷயமாக 93 00:05:54,771 --> 00:05:56,023 இருக்க வேண்டும். 94 00:05:57,691 --> 00:05:58,859 என்ன சொல்கிறாய்? 95 00:05:59,526 --> 00:06:02,237 அது வந்து, பஃபின் பரிசுகள் பற்றி சொல்கிறேன். 96 00:06:02,237 --> 00:06:05,282 நாம் பேசாமல் இருக்கும் அந்த செல்லப் பெயர், “பஃப்” பற்றி சொல்கிறேன். 97 00:06:05,282 --> 00:06:06,909 ஆனால், 98 00:06:06,909 --> 00:06:10,370 ஒரு காலத்தில் அவை அழகாக இருந்தன என்று நான் சொன்னேன் தான். 99 00:06:10,370 --> 00:06:12,080 அடக் கடவுளே. 100 00:06:13,373 --> 00:06:15,667 சரி. இல்லை. 101 00:06:15,667 --> 00:06:17,544 அதாவது, பரவாயில்லை. 102 00:06:18,670 --> 00:06:20,214 -இப்போதாவது நீ சொன்னதில் சந்தோஷம். -அப்படியா? 103 00:06:20,214 --> 00:06:22,216 ஆமாம், ஏனென்றால் இந்த சிறியவனோடு சேர்த்து... 104 00:06:22,216 --> 00:06:27,971 20 வருடமாக காதலை வெளிப்படுத்தும் தேவையில்லாத விஷயங்களை 105 00:06:27,971 --> 00:06:29,348 நாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும். 106 00:06:29,348 --> 00:06:30,891 -சரி. -இதோ செய்யலாம். 107 00:06:30,891 --> 00:06:32,726 எல்லாவற்றையும் தூக்கிப்போட வேண்டிய அவசியமில்லை. 108 00:06:32,726 --> 00:06:35,312 இல்லை. நீ மிகச் சரியாக சொன்னாய், அன்பே. அதாவது... 109 00:06:36,021 --> 00:06:38,065 நம் முதல் சந்திப்பில் வாங்கியதால், இன்று வரை 110 00:06:38,065 --> 00:06:40,025 இதை வைத்திருப்பது முட்டாள்தனமான விஷயம். 111 00:06:40,025 --> 00:06:41,735 -ஆமாம், பஃபின் விஷயமே நாசமாகிவிட்டது. -டஸ்டி. 112 00:06:41,735 --> 00:06:44,196 கண்டிப்பாக இந்த பொம்மைகளை நாம் போட்டு விட வேண்டும். 113 00:06:44,196 --> 00:06:46,782 -நீங்கள் அப்படி செய்ய வேண்டாம்... -பஃப்பின் கேலண்டர், குப்பை. 114 00:06:47,449 --> 00:06:49,868 நம் திருமண நாளுக்காக நான் வாங்கித் தந்த பஃப்பின் நோட்டுப் புத்தகம், குப்பை. 115 00:06:50,452 --> 00:06:52,329 எல்லாவற்றின் மீதும் நான் காரமான சாஸ் ஊற்றப் போகிறேன். 116 00:06:52,329 --> 00:06:53,539 -டிஸ்டி. -பஃபின் கிராக்கர்ஸ். 117 00:06:53,539 --> 00:06:54,831 உறுதியாக இவற்றையும் தூக்கிப்போடணுமா? 118 00:06:54,831 --> 00:06:57,417 -நான் அவற்றை சாப்பிட மாட்டேன். -சிறப்பு. போட்டாச்சு. வேறு ஏதாவது? 119 00:06:57,417 --> 00:06:58,919 இங்கே இன்னும் கொஞ்சம் இருக்கிறது. 120 00:06:58,919 --> 00:07:02,089 ஆமாம், நிறைய இருக்கின்றன. எங்கும் நிறைந்து இருக்கின்றன. 121 00:07:02,089 --> 00:07:05,217 ஆனால், அன்பே, நீங்கள் அவற்றை தூக்கிப் போட வேண்டியதில்லை. 122 00:07:05,217 --> 00:07:07,010 அன்பே, உங்களை வருந்தச் செய்ய விரும்பவில்லை. 123 00:07:07,010 --> 00:07:10,931 ஐயோ, அடச்சே! இல்லை. இந்தப் பக்கம். இது... இங்க் இன்னும் மங்கவில்லை.புதுசாவே இருக்கு. 124 00:07:10,931 --> 00:07:14,142 உங்களுக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை. 125 00:07:14,142 --> 00:07:15,644 எனக்கு ஒன்றும் ஆகவில்லை. 126 00:07:17,563 --> 00:07:21,191 நாம் ஒருவருக்கு ஒருவர் ஆச்சரியப்படுத்தி கொள்வது பற்றி நீ ஒரு விஷயம் சொன்னாய். 127 00:07:22,192 --> 00:07:24,444 நீ மட்டும் தான் ஆச்சரியம் கொடுக்கிறாய் என்பது போல தோன்றியது. 128 00:07:24,444 --> 00:07:27,030 அதாவது, முதலில் உனக்கு “ராயல்டி” கார்டு கிடைத்தது, 129 00:07:27,030 --> 00:07:28,407 அதை நீ ரகசியமாக வைத்திருந்தாய். 130 00:07:28,407 --> 00:07:30,659 -ஓ, டிஸ்டி. -பிறகு இந்த கார உணவு பற்றிய விஷயம். 131 00:07:30,659 --> 00:07:33,996 திடீரென்று கூடைப்பந்து விளையாட்டில் நீ சியர் லீடராக இருக்கிறாய். 132 00:07:33,996 --> 00:07:36,874 பிறகு, மிகவும் அழகாக இருக்கும்படி, தலைமுடியை வெட்டியிருக்கிறாய். 133 00:07:36,874 --> 00:07:38,292 நன்றி. 134 00:07:38,292 --> 00:07:41,962 இந்த இயந்திரத்தின் காரணமாக, மக்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்கிறார்கள். 135 00:07:41,962 --> 00:07:43,046 இந்த ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். 136 00:07:43,046 --> 00:07:45,174 நீண்டகால உறவுகளை முடிவுக்கு கொண்டு வந்து 137 00:07:45,174 --> 00:07:47,885 புதிய உறவுகளில் இணைகிறார்கள். 138 00:07:48,677 --> 00:07:50,304 -உங்களுக்கு தெரிந்துவிட்டது. -என்ன தெரிந்துவிட்டது? 139 00:07:50,304 --> 00:07:51,638 நாம் எல்லோரும் இங்கே 140 00:07:51,638 --> 00:07:54,641 ஜியோர்ஜியோ’ஸ் இத்தாலியன் உணவகம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சென்டரில் 141 00:07:54,641 --> 00:07:58,395 இறைவனின் அருளால் ஆசிர்வாதம் பெற்ற முதல்வர் பெட்ரிஷியா பர்கெஸ் 142 00:07:58,395 --> 00:08:00,439 மற்றும் திரு. ஃபரித் மாலிக் ஆகியோரின் 143 00:08:00,439 --> 00:08:04,526 அன்பு மிகுந்த திருமணத்தை கொண்டாட கூடி இருக்கிறோம். 144 00:08:06,820 --> 00:08:08,989 மற்றும் அந்த மார்ஃபோ இயந்திரம். 145 00:08:11,200 --> 00:08:14,328 ஓ, ஃபரித். என் அன்பே. 146 00:08:14,328 --> 00:08:16,246 எனக்கு முதலில் “வண்டி ஓட்டுபவர்” என்ற 147 00:08:16,246 --> 00:08:18,957 வாழ்க்கை திறம் கிடைத்த போது எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயமாக அதை கருதினேன். 148 00:08:18,957 --> 00:08:21,668 பிறகு எனக்கு விபத்து ஏற்பட்ட போது, எனக்கு நடந்த மோசமான விஷயமாக 149 00:08:21,668 --> 00:08:23,462 அதைக் கருதினேன். 150 00:08:23,462 --> 00:08:27,341 ஆனால், நான் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கா விட்டால், 151 00:08:27,341 --> 00:08:29,301 உன்னை சந்தித்திருக்க முடியாது. 152 00:08:29,301 --> 00:08:31,386 அவர்களுக்கு பல வருடங்களாக பழக்கம் இல்லையா? 153 00:08:31,386 --> 00:08:35,724 உன்னுடைய வாழ்க்கை திறமாக “காதலன்” என்று வராவிட்டால் என்ன நடந்திருக்கும்? 154 00:08:35,724 --> 00:08:38,101 இரவு முழுவதும் நீ என்னோடு கண்விழித்து இருக்க மாட்டாய். 155 00:08:38,101 --> 00:08:41,772 என் கையைப் பிடித்துக் கொண்டு இருந்தாய். நான் தூங்காமல் பார்த்துக் கொண்டாய். 156 00:08:43,065 --> 00:08:45,234 -நாம் எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம். -ஆமாம்! 157 00:08:45,234 --> 00:08:49,530 அப்போது, அங்கேயே, என்னுடைய வாழ்க்கை திறன் உன்னோடு தான் என்று தெரிந்து கொண்டேன். 158 00:08:49,530 --> 00:08:52,407 உனக்கு தலையில் அடிபடவில்லையா? 159 00:08:54,785 --> 00:08:58,205 இந்த இரண்டு காதல் பறவைகள் மிக அழகாக உணர்த்தியது போல, 160 00:08:58,747 --> 00:09:03,460 கடவுள் போலவே, அந்த மார்ஃபோ இயந்திரம் மர்மமான முறைகளில் வேலை செய்கிறது. 161 00:09:04,044 --> 00:09:07,548 இது எல்லாமே ஒரு திட்டமிட்டமுறையில் நடக்கிறதா அல்லது சாதாரணமாக நடக்கிறதா என்று 162 00:09:07,548 --> 00:09:11,468 எல்லோருமே யோசிக்கிறார்கள். 163 00:09:17,432 --> 00:09:22,521 மார்ஃபோ பட்டாம்பூச்சி போல, பேட் மற்றும் ஃபரித்தின் அன்பு பறக்கிறது, 164 00:09:22,521 --> 00:09:23,814 அவர்கள் 165 00:09:23,814 --> 00:09:27,025 என்றென்றும் ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் திடமாக நம்புவோம். 166 00:09:27,025 --> 00:09:29,027 ஆமாம். சரி. 167 00:09:34,324 --> 00:09:36,618 மோதிரங்கள் மாற்றி கொள்கிறீர்களா? 168 00:09:37,578 --> 00:09:39,872 உண்மையில் நாங்கள் இருவரும் சிறகுகளை மாற்றிக்கொள்ளப் போகிறோம். 169 00:09:41,290 --> 00:09:42,708 இந்தாருங்கள். 170 00:09:45,252 --> 00:09:46,295 அற்புதம். 171 00:09:47,921 --> 00:09:49,381 -ஹே, ஃபாதர். -ஹே, ஃபாதர். 172 00:09:49,381 --> 00:09:51,592 -மன்னிக்கவும், ஃபாதர். -அந்த இயந்திரம் கடவுள் என்று சொன்னீர்களே, 173 00:09:51,592 --> 00:09:53,302 நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள், எனவே... 174 00:09:53,302 --> 00:09:55,512 எனக்கும் அந்த இயந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 175 00:09:55,512 --> 00:09:58,682 ஃபாதர், பிரபஞ்சத்தின் மர்மம் பற்றிய உங்கள் கருத்துக்களை, மிக விரைவாக... 176 00:09:58,682 --> 00:09:59,975 நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 177 00:10:00,559 --> 00:10:02,102 எனக்கு “பூக்கடைக்காரர்” என்று வந்தது. 178 00:10:02,102 --> 00:10:04,855 இப்போது, நான் பூக்கடைக்காரர், பூக்கள், பெட்டல்கள் என்று நினைக்கிறேன். 179 00:10:04,855 --> 00:10:08,609 வண்டிக்கும் பெடல் உண்டு. நான் வண்டி ஓட்டுபவர். நான் சரியானதைத் தானே செய்கிறேன்? 180 00:10:08,609 --> 00:10:10,444 -ஆமாம். மன்னிக்கவும், ஆனால்... -மன்னிக்கவும், ஃபாதர். 181 00:10:10,444 --> 00:10:11,737 ஃபாதர். 182 00:10:11,737 --> 00:10:12,905 சரி, மக்களே. 183 00:10:12,905 --> 00:10:15,782 ஃபாதர் ரூபென் பார்ட்டியை மகிழ்ச்சியாக அனுபவிக்க விடலாமா? 184 00:10:15,782 --> 00:10:17,326 பானங்கள். 185 00:10:17,326 --> 00:10:19,328 -நான் ஒன்று எடுத்துக்கொள்கிறேன். -சரி. 186 00:10:20,913 --> 00:10:22,664 உன்னை இங்கே சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. 187 00:10:22,664 --> 00:10:26,877 ஆமாம். திரு. மாலிக் என்னை ஒரு விருந்தினராக வரச் சொல்கிறார் என்று நினைத்தேன், ஆனால்... 188 00:10:27,711 --> 00:10:29,671 ஆக, என்னைப்போல் நீயும் இதை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறாயா? 189 00:10:29,671 --> 00:10:31,215 ஓ, ஆமாம். 190 00:10:31,215 --> 00:10:33,634 என் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். 191 00:10:35,761 --> 00:10:39,848 போன வாரம் தான் இருவரும் அறிமுகம் ஆனார்கள், இப்போது திருமணமா? இது வேடிக்கை தான். 192 00:10:39,848 --> 00:10:44,186 ஆமாம். எனக்குத் தெரியவில்லை. அவர்கள் காதல் வயப்பட்டு இருக்கிறார்கள். 193 00:10:44,853 --> 00:10:46,647 ஒருவரை ஒருவர் எப்படி பார்க்கிறார்களென பாருங்கள். 194 00:10:46,647 --> 00:10:48,607 அவளால் கழுத்தை திருப்ப முடியவில்லை, இல்லையா? 195 00:10:48,607 --> 00:10:50,234 அந்த கழுத்துப் பட்டையினால். 196 00:10:50,234 --> 00:10:53,779 அதை விடு. அவர்கள் அவசர அவசரமாக திருமணம் செய்வதாக உனக்குத் தோன்றவில்லையா? 197 00:10:54,363 --> 00:10:56,573 மக்கள் நம்மைப் பற்றியும் இதையே சொல்லலாம். 198 00:10:56,573 --> 00:10:58,450 என்ன? நாம் ஒன்றும் அவசரப்படவில்லையே. 199 00:10:59,159 --> 00:11:00,827 டஸ்டி, நமக்கு அப்போது 20 வயது தான். 200 00:11:01,828 --> 00:11:04,706 நம்மை பற்றியோ, உறவுகள் பற்றியோ நமக்கும் எதுவும் தெரியாது. 201 00:11:04,706 --> 00:11:07,376 ஆமாம், ஆனால் நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை ஒரு இயந்திரம் மூலம் அறியவில்லையே. 202 00:11:07,376 --> 00:11:10,254 -இது போட்டி இல்லை. -இப்போது நம்மைப் பாரேன். 203 00:11:10,254 --> 00:11:13,465 இருபது வருடங்கள் கழித்தும், ஒருவரை ஒருவர் ஆச்சரியப்படுத்துகிறோம். 204 00:11:13,465 --> 00:11:16,969 நீங்கள் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக இருப்பது தான், உண்மையான ஆச்சரியமாக இருக்கும். 205 00:11:16,969 --> 00:11:19,721 இன்னும் கொஞ்சம் திறந்த மனதாக, நம்பிக்கை கொண்டவராக இருந்தால். 206 00:11:20,305 --> 00:11:24,017 -ஹே. இது ரொம்ப சந்தோஷமான விஷயம், இல்லையா? -ரொம்ப சந்தோஷம். 207 00:11:24,017 --> 00:11:25,102 நண்பா. 208 00:11:25,644 --> 00:11:29,189 காஸ், இன்று நீ ரொம்பவே அழகாக இருக்கிறாய். 209 00:11:29,189 --> 00:11:30,148 நன்றி. 210 00:11:30,732 --> 00:11:33,694 டஸ்டி, நீயும் இங்கே தான் இருக்கிறாயா! 211 00:11:35,237 --> 00:11:37,322 -சும்மா விளையாடினேன், நண்பா. -ஓ, ஸரி. 212 00:11:38,240 --> 00:11:40,742 இந்த திருமணம் எப்படி இருந்தது? மிக உணர்ச்சிகரமாக இருந்தது. 213 00:11:40,742 --> 00:11:42,786 நான் அழாமல் இருக்க முயன்றேன். 214 00:11:42,786 --> 00:11:45,330 ஆனால் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை, நண்பா. 215 00:11:45,330 --> 00:11:46,915 உண்மையில், நானும் தான். 216 00:11:46,915 --> 00:11:48,792 போதும் நிறுத்து. நம்மைப் பாரேன். 217 00:11:49,376 --> 00:11:51,879 நம்மைப் பாரு. பெரிய மனதுடைய இனிமையான இரு நபர்கள். 218 00:11:51,879 --> 00:11:55,090 பிக் டஸ்ட்-பஸ்ட் போலல்லாமல், அந்த உணர்ச்சிகளை எல்லாம்... 219 00:11:55,090 --> 00:11:57,176 -வெளிக்காட்டாமல் இருக்கிறான். -இல்லை, இல்லை. 220 00:11:57,176 --> 00:11:59,511 எட்டு நாட்களுக்கும் குறைவாக 221 00:11:59,511 --> 00:12:04,391 நட்பாக இருந்த இருவர்களின் மனம் நெகிழும் சேர்க்கையாக, 222 00:12:04,391 --> 00:12:07,769 அதுவும் ஒரு இயந்திரத்தினால் உண்டாக்கப்பட்ட உறவாக நான் அதைப் பார்க்கிறேன். 223 00:12:07,769 --> 00:12:10,314 ஆப்பீஸ் சாப்பிட்டீர்களா? ஆப்பீஸ் சாப்பிட்டு பார்க்க வேண்டும். 224 00:12:10,314 --> 00:12:12,900 ஜியோர்ஜியோ’ஸ் இன் சமீபத்திய... மெனுவைப் பாருங்கள். 225 00:12:13,483 --> 00:12:16,153 காஸ் விங்ஸ், அதாவது காரமான விங்ஸ். 226 00:12:17,321 --> 00:12:18,322 அது மறைமுகமாககூட இல்லை. 227 00:12:25,787 --> 00:12:27,873 -நீ... -யார் வந்தது என பாரு. 228 00:12:27,873 --> 00:12:28,957 ஹலோ, மார்த்தா. 229 00:12:28,957 --> 00:12:31,460 உன் புது கூட்டாளியிடம் நீ என்னை அறிமுகப்படுத்த வேண்டும். 230 00:12:31,460 --> 00:12:34,588 இவள் என் மனைவி. ஆனால், உனக்கு ரோஸைத் தெரியுமே. 231 00:12:35,714 --> 00:12:38,634 கடந்த ஐந்து வருடங்களாக அவள் டியர்ஃபெஸ்ட் கமிட்டியில் இருக்கிறாள். 232 00:12:38,634 --> 00:12:41,720 மன்னித்துவிடு. இந்த வெளிச்சத்தில் ஒன்றும் தெரியவில்லை. 233 00:12:41,720 --> 00:12:43,805 எல்லோரையும் வயதானவர்களாக காட்டுகிறது. 234 00:12:44,640 --> 00:12:48,227 சரி, இஸி, நீ இங்கே மணமகன் அல்லது மணமகள், யார் சார்பாக வந்திருக்கிறாய்? 235 00:12:48,227 --> 00:12:50,062 நான் மேயராக வந்திருக்கிறேன். 236 00:12:50,062 --> 00:12:52,564 இந்த நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்ள வேண்டும். 237 00:12:52,564 --> 00:12:53,815 ஆக, நீ அழைக்கப்படவில்லை. 238 00:12:53,815 --> 00:12:57,986 அரசியல் கடமைகள் பற்றி பேசும் போது, அந்த விடுதி பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் 239 00:12:57,986 --> 00:13:02,449 நாங்கள் கோரிய பெர்மிட்டில் நீ கையெழுத்து போட முடியுமா? 240 00:13:02,449 --> 00:13:05,369 மார்த்தா, என்னிடம் பேச வேண்டும் என்றால், சாதாரணமாகவே பேசு. 241 00:13:05,369 --> 00:13:07,329 பெர்மிட் பற்றியெல்லாம் பேச வேண்டாம். 242 00:13:07,329 --> 00:13:09,373 இல்லை, எனக்கு அந்த பெர்மிட் கண்டிப்பாக தேவை. 243 00:13:09,373 --> 00:13:10,541 பல ஆண்டுகள் ஆகிவிட்டன, 244 00:13:10,541 --> 00:13:13,877 ஆனாலும், என்னோடு பேசி, ஒரு இணைப்பு ஏற்படுத்திக்கொள்ள நீ தயங்குகிறாய். 245 00:13:13,877 --> 00:13:16,713 -இணைப்பு பாதை. -எங்களுக்கு அந்த பெர்மிட்டைக் கொடு. 246 00:13:16,713 --> 00:13:18,715 -சரி. வந்து... -உன் கைகளை வைக்காதே. 247 00:13:18,715 --> 00:13:20,759 விடு, ரோஸ். இதில் பயனில்லை. 248 00:13:20,759 --> 00:13:21,844 ஐயோ. 249 00:13:21,844 --> 00:13:24,221 அவள் உன்னைத் தொடுவாளா? இது முட்டாள்தனம். 250 00:13:40,445 --> 00:13:42,239 மன்னிக்கவும். ஹலோ. 251 00:13:42,239 --> 00:13:44,199 தயவு செய்து, எல்லோரும் கவனிக்கிறீர்களா? 252 00:13:46,660 --> 00:13:49,621 இப்போது மணமகன் மற்றும் மணமகளுக்கு நான் பரிசு கொடுக்க வேண்டிய நேரம். 253 00:13:50,622 --> 00:13:53,876 ஆனால், எனக்கு கொஞ்சம் இடம் வேண்டும், தயவு செய்து, எல்லோரும் நகரங்கள். 254 00:13:54,793 --> 00:13:55,794 தயவு செய்து நகருங்கள். 255 00:13:57,129 --> 00:14:00,382 மேயராக இருப்பதோடு கூட, உங்கள் எல்லோருக்குமே தெரியும்... 256 00:14:00,382 --> 00:14:01,466 டிஜே மேஜை 257 00:14:02,509 --> 00:14:03,760 நான் ஒரு நடன கலைஞரும் கூட. 258 00:14:04,428 --> 00:14:06,722 -அவங்க செய்யக்கூடாது. -நிச்சயம் செய்வாங்க. 259 00:14:06,722 --> 00:14:07,931 பேட் மற்றும் ஃபரித், 260 00:14:09,349 --> 00:14:12,352 நடனம் என்ற இந்த பரிசைத் தவிர உங்கள் புது உறவை கொண்டாட 261 00:14:12,352 --> 00:14:17,649 -மிகச்சிறந்த வழி... எனக்குத் தெரியவில்லை. -நடனம் ஆடுவது. 262 00:14:18,483 --> 00:14:19,443 இசையைப் போடு, ஜேக்கப். 263 00:14:27,242 --> 00:14:29,411 உங்களுக்கு இது பிடிக்கவில்லை என்று தெரியும், 264 00:14:29,411 --> 00:14:31,663 ஆனாலும், பல வருடங்களுக்கு நாம் இதைப் பற்றி தான் பேசப் போகிறோம், 265 00:14:31,663 --> 00:14:34,333 எனவே முடிந்த வரை நன்றாக பாருங்கள். 266 00:15:25,259 --> 00:15:26,969 எனக்கு உடனே மதுபானம் வேண்டும். 267 00:15:28,262 --> 00:15:29,805 -கொண்டு வரேன். சரி. -உடனடியாக. 268 00:15:30,430 --> 00:15:32,015 என் அம்மாவின் அந்தரங்க பகுதி தெரிகிறது. 269 00:15:32,015 --> 00:15:33,475 தெரியும். தெரியும். 270 00:15:36,061 --> 00:15:39,606 பார் ஊழியரே, ஒயிட் ஒயின் கொடுங்கள். ஃபாதர். 271 00:15:39,606 --> 00:15:42,568 -ஹே. -“ஃபாதர் என்றால் ஃபாதர் தான்.” 272 00:15:44,194 --> 00:15:45,279 இந்தாருங்கள். 273 00:15:45,279 --> 00:15:46,196 கேவலமான பெண் 274 00:15:46,196 --> 00:15:48,031 சுவாரஸ்யமான கிளாஸ் தேர்வு. 275 00:15:48,031 --> 00:15:51,535 திருமணத்திற்கு ஏற்றது என்று நினைத்து, பாரில் இருந்து, இதைக் கொண்டு வந்தேன். 276 00:15:51,535 --> 00:15:54,830 -டியர் இஸியில் இருந்து வாங்கினேன். -இரு, ஃபரித் உன்னை பொருட்கள் வாங்கச் சொன்னாரா? 277 00:15:54,830 --> 00:15:57,624 ஆமாம், அவரது திறத்தை அறிந்த பிறகு என்னை நிறைய வேலை வாங்குகிறார். 278 00:15:57,624 --> 00:16:00,210 -எனக்கு அது பிடிக்கவில்லை. -உன் திறன் என்னவென்று வந்தது, ஹேனா? 279 00:16:00,210 --> 00:16:03,088 நான் அதைப் பயன்படுத்தவில்லை, அப்படி செய்யப் போவதுமில்லை. 280 00:16:03,088 --> 00:16:05,716 எல்லோரையும் போலவே இரு என்று உனக்குள் சத்தம் கேட்கவில்லையா? 281 00:16:05,716 --> 00:16:08,510 -எனக்கு அப்படி எதுவும் கேட்கவில்லை. -நல்லது. 282 00:16:08,510 --> 00:16:09,928 எனக்கும் தான். 283 00:16:13,307 --> 00:16:16,226 நீங்கள் நகரத்திற்கு புதிது என்பதால், 284 00:16:16,226 --> 00:16:18,312 திருமணத்திற்கு அழைக்கப்படாத ஒரு பெண் 285 00:16:18,312 --> 00:16:20,814 மணமகன் மற்றும் மணமகளிடமிருந்து கவனத்தை திசைத்திருப்பி, மிகவும் ஆபாசமான 286 00:16:20,814 --> 00:16:24,359 சோலோ நடனம் ஆடுவது உங்களுக்கு வினோதமாக இருக்கலாம். 287 00:16:24,359 --> 00:16:27,362 ஆனால், இது இன்னும் மோசமானது என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 288 00:16:27,362 --> 00:16:28,947 அனைத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 289 00:16:28,947 --> 00:16:31,825 பழங்கள் பக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பெண்ணின் மீது 290 00:16:31,825 --> 00:16:34,870 ஏன் இப்படி காலை உயரமாக தூக்கி நடனமாடுகிறார் தெரியுமா? 291 00:16:34,870 --> 00:16:38,207 அவள் தான் மார்த்தா. மார்த்தா தான் இஸியின் முன்னாள் காதலி. 292 00:16:38,207 --> 00:16:41,877 காஸிற்கு ஒன்பது வயது இருக்கும் போது, மார்த்தாவும், இஸியும் டியர்ஃபீல்டிற்கு வந்தார்கள், 293 00:16:41,877 --> 00:16:45,297 அதிலிருந்து நகரத்தில் தான் நடனமாடிதை நிறுத்தியது பற்றி தான் பேசுவாங்க. 294 00:16:45,297 --> 00:16:48,050 ஆஹா. சரி. அவள் நன்றாக நடனமாடுகிறாளே. 295 00:16:48,050 --> 00:16:49,801 ஆமாம், ஆனால் அது 90களின் நடனம். 296 00:16:49,801 --> 00:16:51,929 90களில் யார் தான் மிக நேர்த்தியாக நடனமாடவில்லை? 297 00:16:51,929 --> 00:16:53,639 நீங்கள் 90களில் நேர்த்தியாக நடனம் ஆடினீர்களா? 298 00:16:54,806 --> 00:16:56,016 நீ ரிவர்டான்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? 299 00:16:56,016 --> 00:16:57,351 -நீ ரிவர்டான்சில் இருந்தாயா? -இல்லை. 300 00:16:57,351 --> 00:17:00,187 ஆண்கள் மட்டும் இருக்கும், கலந்த திறம் கொண்ட, 301 00:17:00,187 --> 00:17:03,148 கலந்த வகையான ரிவர்-பிரான்ஸ் என்ற டான்ஸ் குழுவை நான் ஆரம்பித்தேன். 302 00:17:03,148 --> 00:17:04,273 -அடக் கடவுளே. -பல வகைகளில், 303 00:17:04,273 --> 00:17:07,611 மிகவும் கட்டுப்படுத்தக்கூடிய ஐரிஷ் நடன கலாச்சாரத்தின் கற்பனை மிக்க 304 00:17:07,611 --> 00:17:10,446 பதிலடியாக எங்களை நினைத்துக் கொண்டோம். எல்லா வித கட்டுப்பாடுகளும் இருந்தன. 305 00:17:10,446 --> 00:17:12,699 நாங்கள் இளைஞர்களாக இருந்தோம். அது மோசமானதாக இருந்தது. 306 00:17:12,699 --> 00:17:13,992 ரொம்ப நன்றாக இருந்தது. 307 00:17:13,992 --> 00:17:18,497 ஒரு விதத்தில், ஆமாம். ஆமாம். நாங்கள் பல வகைகளிலும் ஆடினோம். 308 00:17:18,497 --> 00:17:19,705 எல்லா சிறப்பு அம்சங்களையும் வைத்தோம். 309 00:17:20,415 --> 00:17:24,169 சக்கா கான், பனானாராமா, ஜார்ஜ் மைக்கேல், ரன்-டிஎம்சி. 310 00:17:24,169 --> 00:17:26,046 சரி, காஸ் ஏன் உங்களை காதலித்தாள் என இப்போது புரிகிறது. 311 00:17:26,046 --> 00:17:27,923 இல்லை, இது காஸ் வருவதற்கு முன்பு நடந்தது. 312 00:17:27,923 --> 00:17:29,174 அவள் வந்து... 313 00:17:30,259 --> 00:17:33,387 காஸ் ஒரு அருமையான விஷயம் செய்கிறாள். இது சிறப்பாக முடியப் போவதில்லை. 314 00:17:33,387 --> 00:17:36,181 அட, ஆமாம், அவள் சிறுமியுடன் நடனமாடுகிறாள், 315 00:17:36,181 --> 00:17:38,308 அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது. 316 00:17:38,308 --> 00:17:41,353 இப்போது மற்றவர்களும் அதை மிக அழகாக உணர ஆரம்பிக்கிறார்கள். 317 00:17:41,353 --> 00:17:44,231 ஐயோ, இப்போது இஸிக்கு எல்லோரின் கவனமும் கிடைக்காமல் போகும். 318 00:17:44,231 --> 00:17:45,858 அவளும் அதைப் பார்க்கிறாள். 319 00:17:45,858 --> 00:17:47,901 இப்போது மார்த்தா அதை கவனிக்கிறாளா என்று பார்க்கிறாள். 320 00:17:47,901 --> 00:17:50,070 மார்த்தாவும் பார்க்கிறாள். அது தான் முக்கியம்! 321 00:17:52,239 --> 00:17:53,240 வாழ்த்துக்கள். 322 00:17:54,283 --> 00:17:57,828 உனக்கு மற்றவர்களின் கவனத்தை பெற நன்றாக தெரிகிறது, இல்லையா? 323 00:17:57,828 --> 00:17:59,204 என்ன சொல்கிறீர்கள்? 324 00:17:59,204 --> 00:18:00,831 ஐந்து நிமிடங்கள் பொறுத்திருக்க முடியாதா? 325 00:18:00,831 --> 00:18:02,749 நான் கவனத்தை திருப்பினேனா? 326 00:18:02,749 --> 00:18:05,002 அந்தப் பெண்ணோடு அவள் இருப்பது வருத்தமாக இருக்கு. 327 00:18:05,669 --> 00:18:07,337 அவர்கள் இன்னும் ஒன்றாக இருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. 328 00:18:07,337 --> 00:18:10,090 ஆனால், ரோஸிற்கு குழந்தைகள் கிடையாது. 329 00:18:11,133 --> 00:18:14,845 எனக்கு நிறைய பிரச்சினைகள் இருப்பதாக மார்த்தா எப்போதுமே சொல்வாள். 330 00:18:21,101 --> 00:18:22,102 {\an8}என்ன விஷயம், மோசமான பெண்ணே? 331 00:18:23,437 --> 00:18:25,189 இந்த கிளாசில் அப்படி இருக்கு. 332 00:18:26,440 --> 00:18:28,442 {\an8}மன்னித்துவிடு, அதை நான் சொல்லியிருக்கக் கூடாது. 333 00:18:28,442 --> 00:18:29,651 உன்னிடம் என்ன சொன்னாங்க? 334 00:18:31,236 --> 00:18:33,405 இதுவரை கேட்காதது ஒன்றுமில்லை, எனவே... 335 00:18:36,366 --> 00:18:37,910 உன்னை உற்சாகப்படுத்த ஏதாவது செய்யவா? 336 00:18:38,952 --> 00:18:42,873 வேண்டாம். வேண்டாம். நாம் கிளம்பலாம். 337 00:18:44,750 --> 00:18:46,585 நான் போய் பேட்டிற்கு பை சொல்கிறேன். 338 00:18:53,091 --> 00:18:54,301 {\an8}நான் ஜியோர்ஜியோவிடம் பேசி 339 00:18:54,301 --> 00:18:56,345 {\an8}-உன்னை விடுதி டிஜேவாக்க சொல்கிறேன். -சரி. 340 00:18:56,345 --> 00:18:59,640 {\an8}வாயில் மீன் கேக்கை அடைத்து கொள்ளாமல் உன்னோடு பேசுவது மகிழ்ச்சியாக இருக்கு. 341 00:18:59,640 --> 00:19:03,060 உண்மையில் இவை மாவில் பிரட்டப்பட்ட மீன்கள். மாவில் சுற்றி இருக்கும் பன்றி துண்டுகள் போல. 342 00:19:08,524 --> 00:19:09,858 நான் உண்மையாகத்தான் சொன்னேன். 343 00:19:10,442 --> 00:19:12,486 பொது இடத்தில் உன்னோடு இருப்பது கடினம், மற்றும், 344 00:19:12,486 --> 00:19:14,988 யாரும் கண்டுபிடித்து விடுவார்களோ என்று தொடர்ந்து கவலைப்பட வேண்டி இருக்கிறது. 345 00:19:16,448 --> 00:19:18,700 -சரி, அதற்கு மாற்று வழி என்ன? -ஒருவேளை, நாம், 346 00:19:18,700 --> 00:19:20,619 -வந்து... -என்ன விஷயம், செல்லமே? 347 00:19:21,328 --> 00:19:23,163 ஹாய், அப்பா. நான் சும்மா சுற்றி வருகிறேன். 348 00:19:23,163 --> 00:19:25,958 நன்றாக செய்கிறாய். அது என்ன மாவில் செய்த மீனா? 349 00:19:28,961 --> 00:19:30,128 ஏன் எல்லாமே காரமாக இருக்கு? 350 00:19:30,128 --> 00:19:31,839 அதில் காரமே இல்லை. 351 00:19:34,341 --> 00:19:36,260 -என்ன விஷயம், டிஜே? -ஹே. 352 00:19:36,802 --> 00:19:37,803 நாங்கள் கேட்கும் பாடலை நீ போடுவாயா? 353 00:19:39,054 --> 00:19:42,099 என் ஃபோனை ஸ்பீக்கரில் இணைத்து இருக்கிறேன், எனவே, போடுவேன். 354 00:19:42,099 --> 00:19:43,392 நல்லது. 355 00:19:47,896 --> 00:19:49,857 -சரி. -சரி. 356 00:19:53,902 --> 00:19:55,028 எல்லோருக்கும் வணக்கம். 357 00:19:56,071 --> 00:19:58,490 ஹலோ, என் பெயர் டஸ்டி. 358 00:19:58,490 --> 00:20:02,995 அன்பான தம்பதியோடு, நானும் ஒரு ஆச்சரியமான பரிசை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 359 00:20:04,037 --> 00:20:05,414 நல்ல பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன். 360 00:20:06,498 --> 00:20:08,500 முதல்வர் பேட் மற்றும் ஃபரித் 361 00:20:09,168 --> 00:20:11,962 இது சற்று விரைவாக நடந்தது என்றும், நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சரியானவரா என்று 362 00:20:11,962 --> 00:20:14,214 தெரிந்துகொள்ள வழி இல்லை என்றும் சிலர் நினைக்கலாம், 363 00:20:14,214 --> 00:20:17,509 ஆனால், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 364 00:21:42,302 --> 00:21:43,971 எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். 365 00:21:48,684 --> 00:21:51,270 ஜியோர்ஜியோ’ஸ் 366 00:21:55,899 --> 00:21:59,611 ஹே. நான் கிளம்பவா? என் பெற்றோரோடே போய்விடுவேன். 367 00:22:02,406 --> 00:22:06,869 இல்லை. நீ இங்கே தங்கி சுத்தம் செய்து கதவை பூட்ட உதவ வேண்டும். 368 00:22:06,869 --> 00:22:09,413 நீ எனக்கு மறுபடியும் சம்பளம் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். 369 00:22:09,413 --> 00:22:11,415 ஆமாம். எல்லோரும் சொல்வது போல, 370 00:22:11,415 --> 00:22:15,169 வாழ்க்கையில் நாம் விரும்புபவை எப்போதும் நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை. 371 00:22:20,007 --> 00:22:21,592 ஹே, ஏதாவது உதவி தேவையா? 372 00:22:21,592 --> 00:22:24,803 ஏன்? என்னையே பார்த்துக்கொள்ள முடியாத மென்மையான பெண் நான் என்பதாலா? 373 00:22:25,554 --> 00:22:27,723 -இல்லை, அது வந்து... -கண்டிப்பாக, உங்கள் உதவி தேவை. 374 00:22:27,723 --> 00:22:29,016 உங்களுக்கு என்ன ஆச்சு? 375 00:22:33,937 --> 00:22:34,771 பெட்ஃபோர்ட் பார் 376 00:22:34,771 --> 00:22:36,899 இரவு முழுவதும் மக்கள் என்னிடம் வந்து, 377 00:22:36,899 --> 00:22:39,401 இந்த இயந்திரம் பற்றி லட்சக் கணக்கான கேள்விகளைக் கேட்டார்கள், 378 00:22:39,401 --> 00:22:41,528 ஆனால் நீ அதை பயன்படுத்த விரும்பவில்லை என்று சொல்கிறாய். 379 00:22:41,528 --> 00:22:44,114 ஹே, அது மக்களுக்கு வேலை செய்தால், பிரமாதம் தான். 380 00:22:45,157 --> 00:22:47,117 ஆனால், இன்னும் ஒரு மாதத்தில் 381 00:22:47,117 --> 00:22:49,620 இதைப் பற்றி யாரும் பேசாமல் இருப்பதற்கு, 382 00:22:50,537 --> 00:22:52,706 நிறைய வாய்ப்புகள் உண்டு என நினைக்கிறேன். 383 00:22:52,706 --> 00:22:55,125 இதை, நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். 384 00:22:55,125 --> 00:22:59,213 தங்களுக்கு ஒரு வழிகாட்டுதல் கிடைக்கும் போது மக்கள் என்ன செய்வார்கள் என்றே தெரியாது. 385 00:22:59,755 --> 00:23:03,926 அது சிலருக்கு வேலை செய்யலாம், ஆனால் எனக்கு அப்படி இல்லை, ஃபாதர். 386 00:23:04,760 --> 00:23:06,762 சரி. அது உண்மை என்றால், அப்போது... 387 00:23:08,722 --> 00:23:10,641 இந்த நகரத்தில் என்னிடம் இருந்து 388 00:23:10,641 --> 00:23:12,601 எதுவும் தேவைப்படாத ஒரே நபர் நீ மட்டும் தான். 389 00:23:15,187 --> 00:23:18,148 ஓ, இல்லை. யார் இந்த பாடலைப் போட்டது? 390 00:23:18,148 --> 00:23:19,399 தெரியவில்லை, ஆனால்... 391 00:23:20,359 --> 00:23:24,488 இதைப் பற்றி யாராவது ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் அதை எடுக்காதீர்கள்... 392 00:23:24,488 --> 00:23:26,114 -இது உன்னுடையதா? -சரி. கேலுங்கள், 393 00:23:26,114 --> 00:23:27,491 அது பழைய பாடல்பட்டியல், சரியா? 394 00:23:27,491 --> 00:23:29,451 -ஓ, இது பாடல் பட்டியலா? -சரி, அதை விடுங்கள். 395 00:23:29,451 --> 00:23:31,328 இவ்வளவு கோல்டுபிளேவா? 396 00:23:31,328 --> 00:23:33,789 ஆமாம், உங்களுக்கு பைபிள் பிடிக்கும், எனவே... 397 00:23:37,793 --> 00:23:39,127 கடவுளே. 398 00:23:40,212 --> 00:23:41,213 என்ன? 399 00:23:41,213 --> 00:23:45,551 “ஸ்டில் த ஒன்” ஷானியா ட்வைன். ஏன் என்னை இப்படி சோதிக்கிறீர்கள், கடவுளே? 400 00:23:45,551 --> 00:23:47,427 சரி. அது அவ்வளவு மோசமானதில்லை. 401 00:23:47,427 --> 00:23:48,512 இல்லை. 402 00:23:50,514 --> 00:23:52,057 அதுதான் என்னுடைய திருமண பாடல். 403 00:23:55,227 --> 00:23:58,063 அது உங்களுடைய திருமண பாடலா? 404 00:23:58,063 --> 00:23:59,147 ஆமாம். 405 00:24:05,612 --> 00:24:11,869 நான் ஒரு அருமையான பெண்ணை திருமணம் செய்தேன். என் வாழ்க்கை மோசமாக இருந்த போது, என்னை சந்தித்தாள். 406 00:24:14,162 --> 00:24:17,958 அவள் புது சுவாசம் போல இருந்தாள். எனக்கு உயிர் கொடுத்தாள். 407 00:24:19,459 --> 00:24:24,506 எல்லாம் திட்டப்படி நடந்தால், நாங்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்றிருந்தோம். 408 00:24:25,632 --> 00:24:26,925 அப்போது தான் அவளுக்கு நோய் வந்தது. 409 00:24:26,925 --> 00:24:30,554 ஏதோ அரிதான, அறிகுறிகள் கூட தெரியாத நோய் 410 00:24:30,554 --> 00:24:33,390 பிறகு அவள் இறந்துவிட்டாள். அப்படியே... 411 00:24:37,477 --> 00:24:38,979 மிக விரைவாக. 412 00:24:40,939 --> 00:24:43,901 நான் அப்படியே நொறுங்கி போய்விட்டேன். 413 00:24:52,826 --> 00:24:55,204 குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். 414 00:24:55,704 --> 00:24:58,790 தெரியாதவர்களை கூட அடிக்க ஆரம்பித்தேன், கேவலமாக நடந்து கொண்டேன். 415 00:24:58,790 --> 00:25:03,504 “இதிலிருந்து மீள முடியாது” என்று நினைக்க ஆரம்பித்தேன். 416 00:25:04,338 --> 00:25:06,965 தெரியுமா? “மக்கள் இதிலிருந்து மீள மாட்டார்கள்.” 417 00:25:10,302 --> 00:25:15,349 பிறகு ஏதோ ஒரு பாரின் வாசலில் நின்று, 418 00:25:15,349 --> 00:25:18,435 கேவலமான ஒரு மனிதனாக சாக்கடையை உற்று பார்த்துக்கொண்டு, 419 00:25:18,435 --> 00:25:21,772 ஏதாவது வழி கிடைக்குமா என்று தவித்து கொண்டு நின்றேன். 420 00:25:22,898 --> 00:25:27,611 அப்போது தான் அதைப் பார்த்தேன். “உங்கள் வாழ்வின் திறன்.” 421 00:25:36,912 --> 00:25:38,413 பாதிரியார் 422 00:25:38,413 --> 00:25:40,374 அது ஒரு பதிலாக இருந்தது, தெரியுமா? 423 00:25:40,374 --> 00:25:42,417 அதனால், முழு பயிற்சி பெற்று, 424 00:25:42,417 --> 00:25:45,087 இங்கே டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூலில் வேலை செய்ய வந்தேன். 425 00:25:45,963 --> 00:25:47,172 மறுபடியும் தொடங்கினேன். 426 00:25:48,549 --> 00:25:52,135 எனக்காக ஒரு புது, சிறிய வாழ்க்கையை தொடங்கினேன்... 427 00:25:53,428 --> 00:25:54,805 அப்போது தான் இந்த இயந்திரம் வந்தது, 428 00:25:54,805 --> 00:25:58,642 பிறகு இந்த கார்டு எனக்கானது இல்லை என்று புரிய வந்தது. 429 00:26:00,519 --> 00:26:04,940 எல்லோருமே “ஃபாதர்” என்றால் ஒரே அர்த்தம் தான் என்று நினைக்கிறார்கள். 430 00:26:07,442 --> 00:26:09,736 அது “பாதிரியார்” என்று குறிக்க வேண்டும் என்றால், 431 00:26:09,736 --> 00:26:11,989 “பாதிரியார்” என்று வந்திருக்கும் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். 432 00:26:14,366 --> 00:26:15,826 இத்தனை காலமும், நான்... 433 00:26:18,453 --> 00:26:19,997 தவறான பாதையில் இருந்து இருக்கிறேன். 434 00:26:23,000 --> 00:26:28,255 அதற்கும் மேலாக, உன் பயங்கரமான இசையை கேட்க வேண்டியிருந்தது. 435 00:26:36,054 --> 00:26:39,099 அடடா. ஆமாம், இது மிகவும் நன்றாக இருக்கிறது. 436 00:26:40,642 --> 00:26:42,352 இதுவும் ஒரு திருமண பாடல் தான். 437 00:26:53,614 --> 00:26:55,032 உண்மையாக கேட்கிறீர்காளா? 438 00:26:56,241 --> 00:26:57,534 அட, வா. 439 00:28:07,813 --> 00:28:09,940 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 440 00:29:23,388 --> 00:29:25,390 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்