1 00:00:23,857 --> 00:00:29,404 அனைவரையும் தன் குடும்பத்தை போல கவனித்துக்கொள்ளும் ஜியோர்ஜியோ’ஸுக்கு உங்களை வரவேற்கிறோம். 2 00:00:30,489 --> 00:00:31,657 அது உண்மை தான். 3 00:00:31,657 --> 00:00:35,536 இத்தாலிய மொழியில் சொன்னாலும், என் உணவகம் குடும்பத்தைப் போன்றது தான். 4 00:00:35,536 --> 00:00:38,497 என்றாவது ஒருநாள் எனக்கென்று ஒரு குடும்பம் கிடைக்கும், சரியா? 5 00:00:38,497 --> 00:00:42,459 இன்றிரவு, முதல்வர் பேட் ரொம்ப சந்தோஷமாக இருப்பதைப் பார்த்தது, என் எதிர்காலத்தைப் பற்றி 6 00:00:42,459 --> 00:00:44,127 யோசிக்க வைத்தது. 7 00:00:44,711 --> 00:00:46,797 ஹேனா-பனானா, நீ எப்போவாவது எதிர்காலத்தைப் பற்றி யோசித்திருக்கிறாயா? 8 00:00:48,215 --> 00:00:49,967 யோசிக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். 9 00:00:50,592 --> 00:00:53,095 ஆமாம். இப்படியிருப்பதே நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 10 00:00:54,054 --> 00:00:55,639 ஹே, இதை சொல்லியே ஆகணும், 11 00:00:55,639 --> 00:00:58,559 நான் கொஞ்சம் தாமதமாகத் தான் காதலிக்க வந்திருக்கிறேன். 12 00:00:59,059 --> 00:01:01,395 நமக்குள் என்ன உறவு என்பது தான் ஒரே கேள்வி. 13 00:01:01,395 --> 00:01:06,567 காதலன்-காதலி, அல்லது ஆதாயத்துக்காக நண்பர்களாக இருப்பது, அல்லது வெறும் ஆதாயம் மட்டும், அல்லது... 14 00:01:06,567 --> 00:01:08,402 - நான் கிளம்பப் போகிறேன். - சரி, நிச்சயமாக. 15 00:01:08,402 --> 00:01:10,153 நானும் அதையே தான் சொல்ல வந்தேன். 16 00:01:20,038 --> 00:01:22,541 அம்மாடி. 17 00:01:44,104 --> 00:01:48,358 நேற்றிரவு நடந்த டின்னர் உபசரிப்பு தர்மசங்கடமாகிவிட்டது. 18 00:01:48,358 --> 00:01:50,777 மேஜையில் பிரெட் கிண்ணங்கள் கூட வைக்கவில்லை, 19 00:01:50,777 --> 00:01:53,405 கிளாஸில் விலை உயர்ந்த ஒயின் வழியவழிய ஊற்றப்பட்டன. 20 00:01:53,405 --> 00:01:57,326 கார்ல், சாஸ் ஊற்றப்பட்ட இறால் மோசமாக இருந்தது, 21 00:01:57,326 --> 00:02:00,579 10கி.மீ. தூரம் ஓடிய பின்னர், என் ப்ரோபுரொடெக்ட் லெகின்ஸ் எப்படி இருக்குமோ அந்த அளவு மோசமாக. 22 00:02:00,579 --> 00:02:03,373 காலாவதியான இறாலை நீ ஆர்டர் செய்ததற்கு நான் என்ன செய்ய முடியும்? 23 00:02:03,373 --> 00:02:04,875 சப்பக்கட்டு! 24 00:02:04,875 --> 00:02:08,252 யார் தான் சப்பக்கட்டு கட்டாமல் இருக்கிறார்கள்? பிரபலங்கள். 25 00:02:08,836 --> 00:02:12,799 இந்த உணவகத்தின் எல்லா பக்கத்திலும் 26 00:02:12,799 --> 00:02:16,011 விளையாட்டுப் பிரபலங்களின் புகைப்படங்களையும், நினைவுச் சின்னங்களையும் பார்க்கலாம், 27 00:02:16,011 --> 00:02:19,056 எல்லோரிடமும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது. 28 00:02:19,056 --> 00:02:23,310 அது தான், இங்கே ஜியோர்ஜியோ’ஸின் முக்கியமான விதியாக அமைந்திருக்கிறது. 29 00:02:23,310 --> 00:02:25,979 அந்த விதி என்னவென்று யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? 30 00:02:25,979 --> 00:02:28,357 - சூப்போடு எதையும் கலக்கக் கூடாது. - குணம். 31 00:02:28,357 --> 00:02:32,778 இன்றிரவு நடக்கவிருக்கும் நன்கொடை வசூல் பார்ட்டியில் அதை அதிக அளவில் வெளிகாட்ட வேண்டும். 32 00:02:32,778 --> 00:02:38,283 இந்த நிகழ்ச்சிக்கு நம்மை நம்பி, இங்கு அதை ஏற்பாடு செய்த, காஸ் ஹப்பார்ட், 33 00:02:38,283 --> 00:02:41,119 மிகவும் முக்கியமான பெண்மணி, 34 00:02:41,119 --> 00:02:45,123 அதி புத்திசாலி, அதீத சிற்றின்பப் பிரியை. 35 00:02:45,707 --> 00:02:48,919 நாம் பேசியது போல, நீங்கள் எல்லோரும், 36 00:02:48,919 --> 00:02:51,505 “என் திறனைப் பற்றி என்னிடம் கேளுங்கள்” என்ற வாசகம் கொண்ட சட்டைகளை அணிய வேண்டும். 37 00:02:51,505 --> 00:02:53,382 உங்களில் யாருக்காவது மோசமான திறமை இருக்குமானால், 38 00:02:53,382 --> 00:02:55,634 நான் ஆச்சரியப்பட மாட்டேன், 39 00:02:55,634 --> 00:02:57,261 உங்கள் அனைவரையும் மார்ஃபோ அட்டைகளை காட்டச் சொல்லிக் கேட்டேன். 40 00:02:57,261 --> 00:02:58,345 கொடுங்கோலன். 41 00:02:58,345 --> 00:03:00,389 வேடிக்கை தான், ரேமண்ட்! நான் கொடுங்கோலன் இல்லை. 42 00:03:00,389 --> 00:03:03,976 இப்போது, எல்லோரும் வரிசையில் நில்லுங்கள், உங்களுடைய அட்டைகளைப் பார்க்க வேண்டும். 43 00:03:03,976 --> 00:03:05,519 சரி. 44 00:03:08,355 --> 00:03:09,898 “வக்கீல்”. சரி. 45 00:03:11,859 --> 00:03:14,111 “நில விற்பனை ஏஜென்ட்.” சலிப்பானது, ஆனால் பரவாயில்லை. 46 00:03:15,904 --> 00:03:19,116 {\an8}“வரைபட வல்லுநர்” விளையாட்டுக்குக் கொஞ்சம் அவசியமில்லை தான், ஆனால் பரவாயில்லை. 47 00:03:26,039 --> 00:03:28,542 “கம்” உனக்கு “கம்” என வந்திருக்கா? அப்படி என்றால் என்னதான் அர்த்தம்? 48 00:03:28,542 --> 00:03:29,751 எனக்குத் தெரியாது. 49 00:03:29,751 --> 00:03:31,712 சரி, சரி. அதனால் எனக்கு ஒரு உபயோகமும் இல்லை. 50 00:03:31,712 --> 00:03:33,255 இன்றிரவு, நீ உணவகத்தின் பின் பக்கத்தில் இரு, கம். 51 00:03:39,178 --> 00:03:43,849 “காண்டோலோ ஓட்டுபவரா”? இது என்னை எரிச்சல்படுத்துது, ட்ரினா! 52 00:03:43,849 --> 00:03:46,852 உனக்கு “காண்டோலோ ஓட்டுபவர்” வந்திருக்கிறது. ஆனால் நீ என்னிடம் சொல்லவில்லையே? 53 00:03:49,646 --> 00:03:53,567 இன்றிரவு நீ கால்வாய்ப் பக்கம் தான் இருக்க வேண்டும். உனக்கு அது தேவை தான். 54 00:03:58,322 --> 00:04:01,742 கசான்ட்ரா ஹப்பார்ட், உன்னைப் பாரேன்! 55 00:04:01,742 --> 00:04:04,411 - அசத்துகிறாள், இல்லையா? - ஆமாம். 56 00:04:04,411 --> 00:04:07,080 வந்து, நிச்சயமாக இது உனக்கு வசதியாக இருக்குமா? 57 00:04:07,748 --> 00:04:09,374 இது வசதியாக இருக்கா இல்லையா என்பது முக்கியமில்லை. 58 00:04:09,374 --> 00:04:12,711 நாம் எப்படி மற்றவர்களின் ஆற்றலுக்கு உதவுகிறோம் என்பது தான் முக்கியம். 59 00:04:12,711 --> 00:04:16,380 இந்த அழகான வேலையை வடிவமைத்தை எலெனிடமிருந்து தொடங்கலாம். அதாவது... 60 00:04:16,380 --> 00:04:18,966 இது பிரமிக்க வைக்கிறது. அதாவது, ஜியோர்ஜியோ’ஸுக்கு போக, 61 00:04:18,966 --> 00:04:20,844 நான் உன்னைக் காரின் மேல் கட்டி தான் அழைத்துப் போவேன். 62 00:04:20,844 --> 00:04:22,596 சரி. பொறுங்கள், இதைத்தான் அணியப் போகிறீர்களா? 63 00:04:23,430 --> 00:04:24,556 - இதுவா? 64 00:04:24,556 --> 00:04:26,642 - ஆமாம். - தலையிலிருந்து கால் வரை பர்கண்டி நிறமா? 65 00:04:26,642 --> 00:04:28,060 ஆமாம், இது நன்றாக இருக்கிறது தானே? 66 00:04:28,060 --> 00:04:31,480 நான் கொடுக்கும் பணத்துக்கேற்ற மதிப்பில் எனக்கு ஒயின் கிடைக்க வேண்டும், 67 00:04:31,480 --> 00:04:33,941 தவிர்க்க முடியாமல் அது கொஞ்சம் கசிந்துவிடும், 68 00:04:33,941 --> 00:04:35,692 அப்போது நான் அணிந்திருக்கும் இந்த உடை 69 00:04:35,692 --> 00:04:37,945 கறை தெரியாமல் மறைக்கும். 70 00:04:39,112 --> 00:04:41,031 - டஸ்டி, நான் பார்த்துக்கொள்கிறேன், காஸ். - நன்றி. 71 00:04:41,031 --> 00:04:43,617 இன்றிரவு “உங்கள் பணத்துக்கேற்றதைப் பெறுவது” என்பதெல்லாம் கிடையாது. 72 00:04:43,617 --> 00:04:47,204 இன்றிரவு, ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் நன்கொடை திரட்ட வேண்டும் என்பதைப் பற்றியது. 73 00:04:47,204 --> 00:04:49,831 100 டாலர் டிக்கெட் விலையை விட மக்கள் அதிகமாக கொடுப்பார்கள் என்று 74 00:04:49,831 --> 00:04:51,333 நாங்கள் நம்புகிறோம். 75 00:04:52,167 --> 00:04:54,711 அப்படியா? இந்த ஆடை தான் என் நன்கொடை என நினைத்தேன். 76 00:04:55,337 --> 00:04:56,588 எலென், நீ ரொம்ப தமாஷானவள். 77 00:04:56,588 --> 00:04:59,174 அதைப் பற்றி பேசுகையில், அந்தப் பணம் எங்கே போகிறது என நினைவுறுத்த முடியுமா? 78 00:04:59,842 --> 00:05:01,176 ஆற்றல் நிதி. 79 00:05:01,176 --> 00:05:03,220 ஹலோ, பேசுவது கேட்கிறதா? 80 00:05:03,220 --> 00:05:04,888 அதில் தான் குழப்பமே. 81 00:05:04,888 --> 00:05:08,058 அதற்கு ஏன் ஆற்றல் நிதி என்று பெயர்? அது ஏன் உண்மையான நிதியாக இருக்கக்கூடாது? 82 00:05:08,058 --> 00:05:09,560 அது உண்மையான நிதி தான். 83 00:05:09,560 --> 00:05:11,395 அதை நாங்கள் “ஆற்றல் நிதி” என்று சொல்கிறோம். 84 00:05:11,395 --> 00:05:12,980 ஏனென்றால் நாங்கள் மக்களின் ஆற்றலை ஆதரிக்கிறோம். 85 00:05:12,980 --> 00:05:13,939 இது புரியவில்லையா? 86 00:05:13,939 --> 00:05:15,816 - இது தெளிவாக புரியும். - தெரியவில்லை. 87 00:05:15,816 --> 00:05:18,485 கேளுங்கள். இது எனக்கு ரொம்பவே முக்கியம், சரியா? 88 00:05:18,485 --> 00:05:21,321 மார்ஃபோ விஷயத்தில் உங்களுக்குச் சில பிரச்சினைகள் இருக்கின்றன என எனக்குத் தெரியும். 89 00:05:21,321 --> 00:05:25,409 - ஆனால், எனக்கு ஆதரவளிக்க இதைச் செய்வீர்களா? - சரி, இல்லை, கண்டிப்பாக. 90 00:05:25,409 --> 00:05:26,535 - சரிதானே? - நிச்சயமாக. 91 00:05:26,535 --> 00:05:28,662 அதாவது, நீங்கள் போவின் கராஜில், விஸ்கி குடித்துவிட்டு, 92 00:05:28,662 --> 00:05:30,497 அந்த பஞ்சிங் பையில் குத்திக்கொண்டும் இருக்காமல் இருந்தால். 93 00:05:30,497 --> 00:05:34,293 இல்லை, நான்... 100% உனக்கு ஆதரவாக இங்கே இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். 94 00:05:34,293 --> 00:05:36,044 100%. எனக்கு இது பிடித்திருக்கிறது. 95 00:05:36,044 --> 00:05:37,254 குறைந்தபட்சம். 96 00:05:38,088 --> 00:05:40,090 ஆமாம், நீ சொல்வது சரி. நான் மாற்றிக்கொள்ள வேண்டும். 97 00:05:40,090 --> 00:05:42,843 புதிதாக... சலவை செய்யப்பட்ட ஆடை எனக்கு கிடைக்குமா? 98 00:05:44,094 --> 00:05:46,722 இல்லை. பரவாயில்லை. இன்றிரவு பிரமாதமாக இருக்கப் போகிறது. 99 00:05:48,932 --> 00:05:50,934 {\an8}ஜியோர்ஜியோ’ஸ் 100 00:05:50,934 --> 00:05:55,355 எங்கள் அலமாரிகள் இருந்தபோதிலும் 101 00:05:56,857 --> 00:05:59,359 ஹே. 102 00:06:02,029 --> 00:06:04,489 ஹே. அட்றா சக்கை! 103 00:06:04,990 --> 00:06:08,243 நீல நிறத்தில் இருக்கும் இந்த அழகான பெண்ணைப் பாருங்கள். 104 00:06:08,243 --> 00:06:10,746 ஓ, போதும். நன்றி. 105 00:06:12,247 --> 00:06:16,126 மன்னித்துவிடு, டஸ்டி, உன் இடத்தை நான் பிடித்து, இளவரசிக்காகக் கதவைத் திறக்கிறேன். 106 00:06:16,126 --> 00:06:18,462 அப்படியே உறைந்து நகர முடியாமல் நின்றுவிட்டாய் போல் இருக்கிறது. 107 00:06:18,462 --> 00:06:21,006 அந்த நேரத்தில் நான் கார் ஒட்டிக்கொண்டிருந்ததை நீ பார்க்காமல் இருந்திருக்கலாம். 108 00:06:21,006 --> 00:06:23,926 நான் கவனித்தேன் தான். நீ காரை இங்கே நிறுத்தக் கூடாது, நண்பா. 109 00:06:23,926 --> 00:06:25,928 இன்றிரவு இங்கே வாலட்-பார்க்கிங் மட்டும் தான். 110 00:06:25,928 --> 00:06:29,306 ஹே, என்னுடைய நண்பனின் காரை முக்கிய விருந்தினர்களுக்கான கார் நிறுத்தத்தில், 111 00:06:29,306 --> 00:06:30,849 கடைசி வரிசையில் நிறுத்த முடியுமா? நன்றி. 112 00:06:30,849 --> 00:06:33,393 நிறுத்தத்தின் கடைசி வரிசையா? அங்கே நிறைய காலி இடங்கள் இருக்கே, நண்பா. 113 00:06:33,393 --> 00:06:35,521 - ஹே, டஸ்ட், கவனி, சீக்கிரம் இங்கே வா. - சரி. 114 00:06:35,521 --> 00:06:36,813 - சீக்கிரம் வா. - இதோ வருகிறேன். 115 00:06:36,813 --> 00:06:40,817 - ஹே, கவனி, எனக்கு உதவ வேண்டுமானால்... - ஆம்! 116 00:06:40,817 --> 00:06:43,946 - என்னால் முடியாது. - ...யாராவது சென்று கொஞ்சம் ஐஸ் கொண்டு வரவேண்டும். 117 00:06:45,739 --> 00:06:48,075 முடியும், ஆனால் என் காரை இப்போது தானே கடைசி வரிசைக்கு அனுப்பினாய். 118 00:06:48,075 --> 00:06:50,327 தயவுசெய், டஸ்டி. நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும் தானே? 119 00:06:50,327 --> 00:06:52,371 இன்றைய இரவு காஸுக்கு வெற்றிகரமாக அமைய வேண்டும், 120 00:06:52,371 --> 00:06:54,831 அதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 121 00:06:54,831 --> 00:06:58,627 எனவே, என்ன சொல்கிறாய்? என்னுடைய ஐஸ்காரனாக உன்னால் இருக்க முடியுமா? 122 00:07:03,382 --> 00:07:04,716 ஐஸ்பாயாக இருக்க என்னால் முடியும். 123 00:07:06,510 --> 00:07:08,637 சும்மா வார்த்தையால் விளையாடினேன். 124 00:07:08,637 --> 00:07:11,139 - ஆனால், அதற்கு அர்த்தமுள்ளதா என்று தெரியவில்லை. - ஹே, கம். கம்! 125 00:07:11,139 --> 00:07:13,350 ஹே, டியுடன் போய்க் கொஞ்சம் ஐஸ் கொண்டு வா. 126 00:07:13,350 --> 00:07:14,977 கம்மின் வேனை எடுத்துச் செல். அது இங்கே தான் இருக்கிறது. 127 00:07:15,561 --> 00:07:16,854 இங்குள்ள காலி இடத்தில். 128 00:07:17,479 --> 00:07:21,275 - கம், இது ஒரு விழா, நண்பா. திருவிழா. - சரி, மன்னிக்கவும். 129 00:07:22,067 --> 00:07:24,736 என்ன விஷயம், சாண்டர்? அவன் ஏன் உன்னை “கம்” என கூப்பிடுகிறான்? 130 00:07:24,736 --> 00:07:26,989 - என் மார்ஃபோ அட்டையில் அப்படி வந்தது. - உண்மையாகவா? 131 00:07:28,240 --> 00:07:30,534 இந்த அமைப்பில் ஏதோ ஒரு கோளாறு இருக்க வேண்டும். 132 00:07:30,534 --> 00:07:32,786 “கம்” என்பதை விடச் சிறந்த விஷயங்களை உன்னால் நிச்சயம் செய்ய முடியும். 133 00:07:33,537 --> 00:07:35,706 எனக்கு 23 வயதாகிறது, ஜியோர்ஜியோ’ஸில் வேலை செய்கிறேன். 134 00:07:35,706 --> 00:07:38,208 “கம்” என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஆனால், அதன் அர்த்தம் அதிக தூரத்தில் இல்லை. 135 00:07:42,588 --> 00:07:44,131 என் பெயர் சாண்டர். 136 00:07:44,131 --> 00:07:45,757 எனக்குத் தெரியுமே. 137 00:07:46,717 --> 00:07:50,095 நீ என் ஐரோப்பிய வரலாற்று வகுப்பில் படித்தாய். நான் உன்னை சாண்டர் என அழைப்பேன். 138 00:07:50,846 --> 00:07:52,890 ஆஹா. நீங்கள் என்னை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என நினைக்கவில்லை. 139 00:07:53,473 --> 00:07:55,184 ஆம், கண்டிப்பாக ஞாபகமிருக்கிறது. 140 00:07:55,184 --> 00:07:58,020 நீ என்னைச் சிறந்த ஆசிரியர் எனச் சொல்வாய். 141 00:07:58,020 --> 00:08:01,356 ஆம். “பிடித்த” ஆசிரியர் எனச் சொன்னதாக ஞாபகம். 142 00:08:02,274 --> 00:08:05,110 - அப்படியென்றால் சிறந்த ஆசிரியர் தான். இல்லையா? - ஆமாம். 143 00:08:06,361 --> 00:08:08,906 நான் நிறைய கற்றுக்கொண்டதாக ஞாபகமில்லை, ஆனால் நீங்கள் கோபப்படமாட்டீர்கள். 144 00:08:09,448 --> 00:08:12,951 ஆம், நாம் நிறைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறோம், உங்கள் தேர்வுகளெல்லாம் கொள்குறி வகையாக இருக்கும். 145 00:08:12,951 --> 00:08:16,538 தெரியுமா? முடிவுகள் தான் முக்கியமே தவிர முறைகள் அல்ல. 146 00:08:16,538 --> 00:08:17,664 உன்னைப் பார். 147 00:08:18,165 --> 00:08:21,543 ஜியோர்ஜியோ’ஸில் கடினமாக உழைக்கிறாய். சேமிக்கிறாய். இது பகுதி நேர வேலையா? 148 00:08:22,044 --> 00:08:24,463 ஆமாம். இசைதான் என் முழு நேர வேலை. 149 00:08:25,422 --> 00:08:27,007 அருமை. நன்றாக வாசிப்பாயா? 150 00:08:28,800 --> 00:08:29,801 நீங்களே சொல்லுங்கள். 151 00:08:36,933 --> 00:08:38,434 ஆம், இது எல்லாவற்றையும் நான் தான் இசையமைத்தேன். 152 00:08:38,434 --> 00:08:40,562 - அது மனிதரா? - ஆம்! 153 00:08:45,359 --> 00:08:48,779 ஜியோர்ஜியோ. அடக் கடவுளே. 154 00:08:48,779 --> 00:08:50,864 என்ன ஒரு மாற்றம். 155 00:08:50,864 --> 00:08:54,743 நான் ஏதோ பியாசாவில் இருப்பது போல இருக்கிறது. 156 00:08:54,743 --> 00:08:57,246 இல்லையா? என் பாட்டி இருந்த இத்தாலி போல. 157 00:08:57,246 --> 00:08:59,414 நான் உனக்காக இந்தப் பெரிய கட்டிடத்தை மூடிவிட்டேன். 158 00:09:01,375 --> 00:09:02,543 இல்லை. அது... 159 00:09:03,752 --> 00:09:06,839 நேரலையில் வயலின் வாசிக்கிறார்கள்! 160 00:09:06,839 --> 00:09:08,465 ஹாய், அன்பே. 161 00:09:10,425 --> 00:09:11,885 நான் இத்தாலியிலிருந்த போது, 162 00:09:11,885 --> 00:09:14,137 சில வயலின் சத்தங்கள் கேட்கும்... 163 00:09:14,137 --> 00:09:16,932 ஸ்கொயரில் வாசிப்பார்கள். எனக்கு ஞாபகமிருக்கிறது. 164 00:09:17,516 --> 00:09:23,063 சரி, இப்போது, நாம் மிகச் சிறந்த உணவை சாப்பிடப் போகிறோம், காஸி. 165 00:09:23,063 --> 00:09:26,525 நீ இத்தாலியிலிருந்த போது தினமும் கெலட்டோ சாப்பிட்டதாகச் சொன்னாய், இல்லையா? 166 00:09:26,525 --> 00:09:30,195 அது... ஸ்ட்ராசியாடெல்லா உனக்கு ரொம்ப பிடிக்கும், சரிதானே? 167 00:09:30,195 --> 00:09:31,238 ஆம். 168 00:09:32,906 --> 00:09:34,700 ஜியோர்ஜியோ. ஜியோர்ஜியோ! 169 00:09:35,576 --> 00:09:37,744 நீ நான் சொல்வதையெல்லாம் கவனித்திருக்கிறாய், இல்லையா? 170 00:09:37,744 --> 00:09:40,747 எப்படி கவனிக்காமல் இருப்பேன், காஸ்? 171 00:09:40,747 --> 00:09:43,959 இது குடும்ப உணவா, அல்லது... 172 00:09:43,959 --> 00:09:46,587 இல்லை, நாங்கள் யாரும் இங்கு வளரவில்லை. 173 00:09:46,587 --> 00:09:50,215 எங்களின் பூர்வீகம் ப்யோட்டோ ரிக்கா தான், ஆனால் என் வளர்ப்பு தந்தை, ராக்கோ ஜியோர்ஜியோவுக்கு, 174 00:09:50,215 --> 00:09:51,758 இது ரொம்ப பிடிக்கும். 175 00:09:51,758 --> 00:09:54,469 பொறு, நீ உன் வளர்ப்பு தந்தையின் பெயரை வைத்திருக்கிறாயா? 176 00:09:54,469 --> 00:09:58,557 ஆம், அவரின் இறுதி பெயரை மட்டும். என் உண்மையான அப்பா யாரெனத் தெரியாது, அதனால்... 177 00:09:58,557 --> 00:10:00,017 எனக்கும் தெரியாது. 178 00:10:00,017 --> 00:10:01,643 என் உண்மையான அப்பாவையா? 179 00:10:01,643 --> 00:10:04,229 - இல்லை, என் அப்பாவை. - உன் அப்பாவா! 180 00:10:04,229 --> 00:10:06,398 ஆம், அர்த்தம் புரிகிறது. 181 00:10:06,398 --> 00:10:10,194 என்னை... என்னை மன்னித்துவிடு, அது ரொம்ப மோசம், இல்லையா? 182 00:10:10,194 --> 00:10:11,445 அதாவது... 183 00:10:11,445 --> 00:10:13,655 யாராவது குழந்தையை கைவிடுவார்களா? 184 00:10:14,573 --> 00:10:16,950 அதனால்தான் என் வளர்ப்பு தந்தை ராக்கோவுக்கு, நன்றியுள்ளவனாக இருக்கிறேன், 185 00:10:16,950 --> 00:10:19,411 அவர்தான் என்னை வளர்த்தார். 186 00:10:19,995 --> 00:10:22,122 இதனால் தான் அவர்களை “வளர்ப்பு தந்தை” என அழைக்கிறார்கள் போலும். 187 00:10:22,122 --> 00:10:24,208 நம்மை வளர்க்க முன் வருவதால். 188 00:10:25,250 --> 00:10:28,587 நான் நன்றாக விளையாடுவதைப் பார்த்து ராக்கோ ரொம்பவே பெருமைப்படுவார்... 189 00:10:29,463 --> 00:10:31,882 கிண்ணம் நிறைய பாஸ்தா சாப்பிட்டாலும் கூட சந்தோஷப்படுவார். 190 00:10:31,882 --> 00:10:33,091 அவர் இப்படித்தான் இருப்பார்... 191 00:10:34,384 --> 00:10:35,385 அது... 192 00:10:38,931 --> 00:10:41,808 அது இருக்கட்டும். சரி. இதோடு டாக்டர் ஃபில் நிகழ்ச்சி முடிவடைகிறது. 193 00:10:42,684 --> 00:10:43,936 விருந்தினர் வந்து கொண்டிருக்கின்றனர். 194 00:10:43,936 --> 00:10:48,148 ஹே, நாம் இந்த இரவை மறக்க முடியாதபடி செய்வோமா? 195 00:10:48,732 --> 00:10:49,733 சரியா? 196 00:10:53,737 --> 00:10:55,739 - ஹே. - ஹலோ, திரு. ஹப்பார்ட். 197 00:10:55,739 --> 00:10:57,491 - மற்றும் சாண்டர். - எப்படி இருக்க, நண்பா? 198 00:10:57,491 --> 00:10:59,076 எங்களுக்குக் கொஞ்சம் ஐஸ் வேண்டும். 199 00:10:59,826 --> 00:11:01,954 மன்னித்துவிடுங்கள், சற்று முன்பு ட்ரினா எல்லாவற்றையும் வாங்கிவிட்டாள். 200 00:11:01,954 --> 00:11:04,248 ஜியோர்ஜியோ’ஸின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு இன்னும் தேவைப்படுகிறது போலும். 201 00:11:04,248 --> 00:11:05,582 இல்லை, அப்படியிருக்க வாய்ப்பில்லை, 202 00:11:05,582 --> 00:11:08,126 ஏனென்றால் ஜியோர்ஜியோ எங்களை இங்கே ஐஸ் வாங்கத்தான் அனுப்பினான். 203 00:11:08,877 --> 00:11:11,046 இது ஏதோ சதித் திட்டம் மாதிரி இருக்கிறதே, 204 00:11:11,046 --> 00:11:14,800 ஜியோர்ஜியோ உங்கள் மனைவிடம் வழிவதற்காக நம்மை இங்கே அனுப்பியிருப்பான் என தோன்றவில்லையா? 205 00:11:14,800 --> 00:11:15,968 இல்லை! 206 00:11:17,803 --> 00:11:21,723 ஜியோர்ஜியோ நாள் முழுவதும் காஸிடம் வழியலாம். 207 00:11:21,723 --> 00:11:24,142 ஆனால் காஸ் அவனிடம் வழியமாட்டாள். 208 00:11:24,142 --> 00:11:27,145 வீட்டில் ஒரு ஆசிரியர்/விசில் அடிப்பவர் இருக்கையில் அவ்வாறு நடக்காது, இல்லையா? 209 00:11:27,145 --> 00:11:28,438 எனக்கு அப்படி தோன்றவில்லை. 210 00:11:28,438 --> 00:11:30,023 இருவரும் ஜோடியாக அழகாக இருக்கின்றனர் தானே? 211 00:11:30,023 --> 00:11:33,068 அவன் எப்போதுமே அவள் மீது அன்பாக இருக்கிறான். அவளுக்கும் அது பிடிக்கிறது. 212 00:11:33,068 --> 00:11:35,612 சமீபத்திய ஆதாரத்தை வைத்து, என்னால் ஒரு நல்ல ஆசிரியராக கூட 213 00:11:35,612 --> 00:11:38,323 இருக்கமுடியாது எனத் தெரிகிறது. அதனால்... 214 00:11:42,119 --> 00:11:43,871 ஒரு கேள்வி கேட்கிறேன், பசங்களா. 215 00:11:45,080 --> 00:11:46,623 உங்களுக்கு எப்போதாவது, கனமான காலைத் தூக்கி 216 00:11:46,623 --> 00:11:49,084 நெஞ்சில் வைப்பது போல பாரமாக இருந்திருக்கிறதா? 217 00:11:49,084 --> 00:11:53,046 அது வெறும் மனஅழுத்தம் தான், திரு. ஹப்பார்ட். எனக்கு அது அடிக்கடி வரும். 218 00:11:53,046 --> 00:11:54,590 நான் மருத்துவரை அணுக வேண்டுமா? 219 00:11:54,590 --> 00:11:58,552 நான்... அதை பரிந்துரைக்க மாட்டேன். நான் நிறைய கஞ்சா பயன்படுத்துவேன். 220 00:12:00,512 --> 00:12:01,805 என் டீலரை அழைக்கவா? 221 00:12:04,933 --> 00:12:06,351 சரி, சரி. என் டீலரை அழைக்கிறேன். 222 00:12:13,525 --> 00:12:14,651 ஹாய். உன் டீலர் தான் பேசுகிறேன். 223 00:12:17,988 --> 00:12:19,531 வந்ததற்கு ரொம்ப நன்றி. 224 00:12:20,032 --> 00:12:22,910 ஆற்றலுக்கான நிதி திரட்டும் நிகழ்விற்கு ஆதரவளிக்க வந்ததற்கு நன்றி. 225 00:12:22,910 --> 00:12:24,369 ஹாய், திரு. ஜான்சன். 226 00:12:24,912 --> 00:12:26,788 ஓ, ஃபாதர் ரூபென், நன்றி. 227 00:12:26,788 --> 00:12:30,709 எல்லோரும் அழகாக இருக்கிறார்கள்... கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். 228 00:12:30,709 --> 00:12:31,793 ஹலோ! 229 00:12:34,004 --> 00:12:36,465 காஸ். உன்னிடம் பேச முடிந்ததில் சந்தோஷம். 230 00:12:36,465 --> 00:12:38,008 நீ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாய். 231 00:12:38,800 --> 00:12:40,928 பணம் திரட்டுவதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து 232 00:12:40,928 --> 00:12:43,263 சிலருக்கு குழப்பம் இருக்கிறது... 233 00:12:43,263 --> 00:12:46,433 அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 234 00:12:47,142 --> 00:12:49,061 அது எல்லா இடத்திலுமே தெளிவாக ஒட்டப்பட்டிருக்கிறதே. 235 00:12:49,645 --> 00:12:52,022 டியர்ஃபீல்டின் திறமைமிக்க இளைஞர், மார்ஃபோ சொன்ன தனது திறனை அடைவதற்காக 236 00:12:52,022 --> 00:12:55,400 10,000 டாலர் நிதி திரட்டுகிறோம். 237 00:12:56,318 --> 00:12:59,655 கண்டிப்பாக. அந்த பட்டாம்பூச்சியைப் பார்க்கிறேன். 238 00:13:00,697 --> 00:13:04,243 பணம் சேர்வதற்காகக் காத்திருக்கிறோம். ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா? 239 00:13:04,243 --> 00:13:05,786 ஏனென்றால் மக்கள் என்னைக் கேட்பார்கள். 240 00:13:06,703 --> 00:13:07,746 யார் அந்தத் திறமைமிக்க இளைஞர்? 241 00:13:07,746 --> 00:13:10,374 - நாங்கள் இன்னும் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை... - சரி. 242 00:13:10,374 --> 00:13:12,751 ...ஏனென்றால் முதலில் பணத்தைத் தயார் செய்ய வேண்டும். 243 00:13:12,751 --> 00:13:16,171 அப்புறம் வெற்றியாளரை நீ தேர்ந்தெடுப்பாயா? 244 00:13:17,840 --> 00:13:20,092 காஸை விட யாரால் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்? 245 00:13:21,134 --> 00:13:23,095 அங்கே பாருங்கள், அந்தத் திறமை ததும்பும், 246 00:13:23,095 --> 00:13:25,472 புத்திசாலி இளைஞரைப் பாருங்கள். 247 00:13:25,472 --> 00:13:28,475 நான்தான், அந்தத் திறமை ததும்பும் புத்திசாலி இளைஞர். 248 00:13:29,601 --> 00:13:31,979 காஸ், நீ உன் மகளையே தேர்ந்தெடுக்கக்கூடாது. 249 00:13:31,979 --> 00:13:35,023 குடும்ப சிபாரிசைத் தவிர்க்க, நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என உனக்கே தெரியும். 250 00:13:35,023 --> 00:13:38,735 தெரியும், ஆனால் நான் ட்ரினாவைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை, சரியா? 251 00:13:38,735 --> 00:13:43,407 ஆனால், அவளது தோழி சவானா போன்றோரைத் தேர்ந்தெடுக்கலாம். இல்லையா? 252 00:13:43,407 --> 00:13:45,701 சவானாவின் அட்டையில் “ஃபிரெஞ்ச்” என வந்தது. 253 00:13:46,285 --> 00:13:48,996 வந்து, சவானா ஃபிரான்ஸ் போவதற்கு 254 00:13:48,996 --> 00:13:50,998 நாம் உதவினால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா? 255 00:13:50,998 --> 00:13:52,457 எனக்கு ஃப்ரான்ஸ் போக விருப்பமில்லை. 256 00:13:56,753 --> 00:13:58,881 சரி. அப்படியென்றால் வேறு யாராவது ஒருவர். 257 00:13:58,881 --> 00:14:02,301 இன்று டியர்ஃபீல்டின் இளைஞர்களுக்கான தினம். சரியா? 258 00:14:02,301 --> 00:14:04,761 அவர்கள் என்னவாக ஆசைப்பட்டாலும் 259 00:14:04,761 --> 00:14:06,346 எங்கு போக நினைத்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி, 260 00:14:06,346 --> 00:14:09,057 பணத்தைப் பற்றிய கவலையை அவர்களிடமிருந்து போக்க வேண்டும். 261 00:14:09,057 --> 00:14:11,977 ஆம், அவர்கள் காண்டோலோவில் போக விரும்பாமல் இருந்தால் ஒழிய, 262 00:14:11,977 --> 00:14:14,104 ஏனென்றால் அதற்கு 20 டாலர் தான் ஆகும். 263 00:14:14,855 --> 00:14:16,690 கவலைப்படாதீர்கள், யாருக்கும் அதில் விருப்பமில்லை, அதனால்... 264 00:14:16,690 --> 00:14:18,233 நல்லது. ரொம்ப நல்லது. 265 00:14:22,738 --> 00:14:24,948 உன்னிடமிருக்கும் புனித இரத்தத்தைப் பாரேன். 266 00:14:25,449 --> 00:14:27,534 - ஹே. - இதை மதுபானம் என்றும் சொல்வார்கள். 267 00:14:29,369 --> 00:14:33,665 சரி, மன்னித்துவிடு, இது மோசமான நகைச்சுவை தான், ஆனால் பாதிரியார் கல்லூரியில் இது ரொம்ப பிரபலம். 268 00:14:33,665 --> 00:14:35,250 - அப்படியா? - இல்லை. 269 00:14:35,250 --> 00:14:36,251 இல்லை. 270 00:14:37,377 --> 00:14:39,796 நான் உங்களை பாரில் பார்க்கவில்லையே. 271 00:14:40,964 --> 00:14:43,634 வேறு எங்காவது அதிகமாகத் தருகிறார்களா என்ன? 272 00:14:44,259 --> 00:14:47,304 இல்லை, நான் விலகி இருக்கலாம் என்று நினைத்தேன். 273 00:14:47,304 --> 00:14:50,682 அந்த திருமணத்திற்குப் பிறகு என் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன். 274 00:14:51,266 --> 00:14:54,436 அதனால் கொஞ்ச நாட்களுக்குக் குடிக்காமல் இருக்கலாம் என நினைக்கிறேன். 275 00:14:54,436 --> 00:14:58,190 புரிகிறது. ஆம், ஆரோக்கியமான விஷயம் தான். 276 00:14:59,816 --> 00:15:03,320 தெரியுமா, உங்களுடன் சேர்ந்து குடிப்பது நன்றாக இருந்தது, 277 00:15:03,320 --> 00:15:07,157 எனவே மறுபடியும் எப்போதாவது ஜூஸ் போன்ற எதையாவது குடிக்க வேண்டும் என்றால்... 278 00:15:07,157 --> 00:15:09,159 நான் இங்கு வருகிறேன். 279 00:15:09,910 --> 00:15:13,830 மன்னிக்கவும்! குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 280 00:15:13,830 --> 00:15:18,043 ஆற்றலுக்கான இந்த நிதி திரட்டும் யோசனையின் காரணகர்த்தாவை 281 00:15:18,043 --> 00:15:21,171 உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். 282 00:15:22,005 --> 00:15:28,220 கசான்ட்ரா ஹப்பார்ட்! 283 00:15:44,945 --> 00:15:46,405 - நன்றி, ஜியோர்ஜியோ. - பரவாயில்லை. 284 00:15:49,408 --> 00:15:51,243 “மார்ஃபோ.” 285 00:15:51,743 --> 00:15:57,291 கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை நாம் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். 286 00:15:57,875 --> 00:16:01,628 ஆனால், இந்த வார்த்தை இல்லாமல், இன்றைய இரவு சாத்தியமில்லை. 287 00:16:02,254 --> 00:16:05,799 டியர்டர் சீஃபோர்ட் இசையைக் கேட்டிருக்க மாட்டோம், கால் யாங்கின் அழகான 288 00:16:05,799 --> 00:16:08,468 மெழுகுவர்த்திகளைப் பார்த்திருக்க மாட்டோம், 289 00:16:08,468 --> 00:16:13,473 பைக்கர் பேரியின் அலங்கார பொருட்களை பார்த்திருக்க மாட்டோம், கார்லின் உணவைச் சுவைத்திருக்க மாட்டோம்... 290 00:16:13,473 --> 00:16:15,851 எலெனின் இந்த அழகான உடை கிடைத்திருக்காது! 291 00:16:17,728 --> 00:16:20,772 நீங்கள் இன்றிரவு பார்க்கும் விஷயங்கள் எல்லாம் 292 00:16:20,772 --> 00:16:25,444 மக்கள் தங்கள் திறமைகளை விடாமுயற்சியுடன் பின்பற்றியதால் ஏற்பட்டது. 293 00:16:25,444 --> 00:16:29,740 ஆனால் நம் அடுத்த தலைமுறை என்ன செய்யும்? 294 00:16:37,664 --> 00:16:40,626 ஓ, ஆம், இதோ வருகிறது. கிளாப்! 295 00:16:40,626 --> 00:16:41,710 கிளாப். 296 00:16:43,212 --> 00:16:46,507 ஆம். ஒருமுறை யாரோவொருவர் எனக்குத் திறமையில்லை எனச் சொன்னார். 297 00:16:47,132 --> 00:16:52,095 தெரிந்த விஷயம் தான். அவர்கள் தங்களைத் தாங்களே சொல்லிக்கொண்டனர். 298 00:16:52,804 --> 00:16:53,805 அடக் கடவுளே. 299 00:16:53,805 --> 00:16:58,560 என் திறன் “சூப்பர் ஸ்டார்” என மார்ஃபோ இயந்திரம் சொல்லலாம், 300 00:16:58,560 --> 00:17:03,315 ஆனால் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். 301 00:17:03,315 --> 00:17:06,318 நேற்றைய இரவு எப்போதும் போல சிறப்பாக இருந்தது. 302 00:17:07,069 --> 00:17:10,239 - குறிப்பாக நீங்கள், செஃப் கார்ல். - நன்றி, மகனே. 303 00:17:10,239 --> 00:17:13,450 ஹே, செஃப் கார்ல், இன்றிரவு என்ன சிறப்பாக சமைத்திருக்கிறீர்கள்? 304 00:17:13,450 --> 00:17:16,453 மாட்டுக்கறி என நினைக்கிறேன். 305 00:17:16,453 --> 00:17:18,204 அது டஸ்டியின் அப்பா தானே. 306 00:17:18,747 --> 00:17:20,082 கட்டுமஸ்தாக இருக்கிறார். 307 00:17:20,082 --> 00:17:22,751 நான் அவரது மாடலிங் நிறுவனத்திற்கு நல்ல மதிப்பாய்வை வழங்கினேன். 308 00:17:22,751 --> 00:17:24,586 அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. 309 00:17:24,586 --> 00:17:28,464 இத்தாலியில், “ஓக்னி மூரோ உன போர்டா” எனச் சொல்வார்கள். 310 00:17:28,966 --> 00:17:30,425 “ஒவ்வொரு சுவறும் ஒரு கதவு.” 311 00:17:30,425 --> 00:17:35,931 “கதவுகள் உடைக்கப்பட வேண்டும்” என ஜியோர்ஜியோ தனக்குத்தானே சொல்லிக்கொள்வான். 312 00:17:36,515 --> 00:17:40,143 ம். பைபிளில் சொல்வது போல, “அழிவுக்கு முன்னானது அகந்தை.” 313 00:17:40,143 --> 00:17:42,062 ஹே, அகந்தையைப் பற்றி பேச வேண்டுமா? 314 00:17:42,062 --> 00:17:45,357 அவன் குளியலறையில் அவனது மார்பளவு சிலையை வைத்திருக்கிறான். 315 00:17:46,650 --> 00:17:49,403 - பொறு, நீ அவன் குளியலறையில் இருந்திருக்கிறாயா? - ஆம். 316 00:17:49,403 --> 00:17:51,822 - சில முறை உறவு கொண்டோம். - நிஜமாகவா? 317 00:17:52,364 --> 00:17:54,741 போன தடவை ரொம்ப தர்மசங்கடமாகிவிட்டது. 318 00:17:54,741 --> 00:17:57,828 பேட் மற்றும் ஃபரித்தின் திருமணத்திற்குப் பிறகு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டான். 319 00:18:00,163 --> 00:18:01,331 திருமணத்திற்குப் பிறகா? 320 00:18:01,957 --> 00:18:04,001 - சரி, உங்களுக்கு கோபம் ஒன்றும் இல்லையே? - இல்லை. 321 00:18:04,585 --> 00:18:05,586 கண்டிப்பாக இல்லை. 322 00:18:05,586 --> 00:18:08,172 ஏனென்றால், அது... ஜார்ஜியாவுடன் உணர்வுபூர்வமில்லாத உறவு மட்டும் தான். 323 00:18:08,172 --> 00:18:12,801 ஏனென்றால், நம்மால் முடியாது... நீங்கள் ஒரு பாதிரியார். 324 00:18:12,801 --> 00:18:15,470 நான் ஒரு பாதிரியார் என்று எனக்கு நன்றாகத் தெரியும், 325 00:18:15,470 --> 00:18:19,391 அது... ஒரு பெரிய விஷயமில்லை. வியப்பாக இருக்கிறது, அவ்வளவு தான். 326 00:18:19,391 --> 00:18:21,643 நாள் முழுவதும் கனவுகண்டு சோர்வாக இருக்கிறது. 327 00:18:21,643 --> 00:18:24,271 நிறைய மக்கள் நாம் ஏன் ஆற்றலுக்காக நன்கொடை 328 00:18:24,271 --> 00:18:27,107 தர வேண்டும் என நினைக்கிறார்கள். 329 00:18:27,107 --> 00:18:29,610 அதாவது, “ஹே, எனக்கே நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன, நண்பா. 330 00:18:29,610 --> 00:18:31,028 இதில் வானிலை ஆய்வாளராக விரும்பும் 331 00:18:31,028 --> 00:18:33,447 குழந்தைக்குப் பண உதவி செய்யச் சொல்கிறாயா?” என நினைக்கலாம். 332 00:18:33,447 --> 00:18:34,865 ஒன்றை மட்டும் சொல்கிறேன். 333 00:18:34,865 --> 00:18:39,203 ஒருநாள், அந்தக் குழந்தை வளர்ந்து வந்து பூமியைத் தாக்க வரும் எரிகல்லைத் தடுத்து நிறுத்தி 334 00:18:39,203 --> 00:18:42,206 மனிதர்களைக் காப்பாற்றும். 335 00:18:42,206 --> 00:18:46,835 அப்போது நீங்கள் நன்கொடையாக கொடுத்த 10,000 டாலர் கண்டிப்பாக வீணாய்ப் போகாது. 336 00:18:48,128 --> 00:18:52,883 முடிவாக, எல்லா குழந்தைகளும் என்னைப் போல்... 337 00:18:56,136 --> 00:18:57,554 சாதிக்க வேண்டுமென நினைக்கிறேன். 338 00:19:00,432 --> 00:19:03,477 குழந்தைகள் பற்றியும், நிதி திரட்டுவதைப் பற்றியும் பேசுவாய் என நினைத்தேன். 339 00:19:03,477 --> 00:19:07,314 இல்லை, அப்படித்தானே பேசியிருக்கிறேன். கொஞ்சம் பொறு. 340 00:19:07,314 --> 00:19:09,942 நமக்கு நன்கொடை கிடைக்கும் வரை பொறு. 341 00:19:09,942 --> 00:19:12,486 முழுமையாக நிரம்பியிருக்கும், எனக்குத் தெரியும். 342 00:19:12,486 --> 00:19:14,571 ஆம், எனக்கு சந்தேகமாக இருக்கிறது. 343 00:19:16,198 --> 00:19:18,742 டஸ்டி எங்கே? ஐஸ் வாங்கி வர இவ்வளவு நேரமா? 344 00:19:32,339 --> 00:19:35,592 நான் பள்ளியின் விதிகள் எல்லாவற்றையும் மீறுகிறேன், 345 00:19:35,592 --> 00:19:39,429 ஆனால் இது உயர் ரக கஞ்சா. 346 00:19:40,389 --> 00:19:43,267 இன்னமும் “உயர் ரக கஞ்சா” என்று தான் இதைச் சொல்கிறீர்களா என தெரியவில்லை. 347 00:19:43,267 --> 00:19:44,560 என்னவோ. 348 00:19:44,560 --> 00:19:47,396 ஜேக்கப், இந்தப் பச்சை நிறப் பொருள், உன் பிரச்சினைக்கு உதவியாக இருக்கிறது என்றால், 349 00:19:47,396 --> 00:19:51,567 இதைப் பயன்படுத்தி உயர பற, முட்டாளே. 350 00:19:54,236 --> 00:19:56,238 எனக்கு இன்னமும் பதற்றம் இருக்கிறது. 351 00:19:56,238 --> 00:19:59,283 அதைத் தடுக்க இது உதவுகிறது, சரியா? 352 00:20:00,659 --> 00:20:01,994 எதற்காக உனக்குப் பதற்றம் வருகிறது? 353 00:20:01,994 --> 00:20:05,122 நீ விரும்பினால், நாம் மனம்விட்டுப் பேசலாம். 354 00:20:07,249 --> 00:20:08,417 எனக்குத் தெரியாது. 355 00:20:10,961 --> 00:20:12,838 வந்து, நான் ஒருத்தியுடன் பழகினேன். 356 00:20:13,422 --> 00:20:14,798 பூம் ஷக்-அ-லாக்! 357 00:20:19,136 --> 00:20:22,222 எங்கள் உறவு ரகசியமாக இருந்தது, 358 00:20:22,222 --> 00:20:25,309 ஆனால் இப்போது அதை முடித்துக்கொள்ள நினைக்கிறோம் ஏனென்றால் விஷயம் சிக்கலாகிவிட்டது. 359 00:20:25,309 --> 00:20:27,519 எல்லாமே சிக்கலானது தான், இல்லையா? 360 00:20:28,103 --> 00:20:29,646 இந்த உலகமே சிக்கலானது தான். 361 00:20:31,106 --> 00:20:34,818 ஆனால், உனக்குப் பிடித்த ஒருவரை வாழ்வில் சந்தித்தால், அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும். 362 00:20:36,820 --> 00:20:39,656 இப்போதெல்லாம் காஸுக்கு என்னுடன் இருக்கப் பிடிக்கவில்லை என்பது போலத் தோன்றுகிறது. 363 00:20:39,656 --> 00:20:43,243 அவள் என்னை விட வளர்ந்துவிட்டாள். 364 00:20:43,243 --> 00:20:44,745 கண்டிப்பாக இது உண்மையாக இருக்காது. 365 00:20:44,745 --> 00:20:47,539 அதாவது, இப்போதுதான் அவளுடைய 366 00:20:47,539 --> 00:20:48,999 புதிய பரிமாணங்கள் எல்லாம் வெளிவருகின்றன, 367 00:20:48,999 --> 00:20:51,168 எனக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை, ஜேக்கப். 368 00:20:54,463 --> 00:20:55,464 ஒருவேளை இருக்கலாம். 369 00:20:56,673 --> 00:20:58,258 அதை வெளிப்படுத்தினால், 370 00:20:58,258 --> 00:21:02,012 ஏதாவது பிரச்சினையாகிவிடுமோ என பயமாக இருக்கிறது. 371 00:21:02,012 --> 00:21:05,891 ஆனால் வெளிப்படுத்தவில்லை என்றால், நான் காஸை இழந்துவிடுவேன். 372 00:21:06,975 --> 00:21:10,062 என் பிறந்தநாளுக்கு தெரமின் இசைக்கருவியைப் பரிசாகக் கொடுத்தாள். 373 00:21:10,062 --> 00:21:12,814 வந்து, ஒரு வினோதமான இசைக்கருவி. 374 00:21:14,900 --> 00:21:18,153 அவள் எனக்கு ஏதோ செய்தி சொல்ல நினைப்பது போல இருந்தது. 375 00:21:18,153 --> 00:21:20,155 - ஏன் அதை உங்களுக்குக் கொடுத்தார் எனக் கேட்டீர்களா? - கேட்டேன். 376 00:21:20,155 --> 00:21:22,950 நான் ஏதாவது புதிதாக முயற்சித்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னாள். 377 00:21:23,909 --> 00:21:26,328 எனில், உண்மையிலேயே நீங்கள் ஏதாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். 378 00:21:29,122 --> 00:21:30,415 கற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறதா என்ன? 379 00:21:31,625 --> 00:21:33,460 தெரியவில்லை. நான் முயற்சிக்கவே இல்லை. 380 00:21:33,460 --> 00:21:35,003 திருமணம் ரொம்பவே கடினமாக இருக்கும் போலவே, நண்பா, 381 00:21:35,003 --> 00:21:36,922 குறிப்பாக, எல்லாவற்றையும் செய்யச் சொல்லி மனைவி வற்புறுத்தும் போது. 382 00:21:36,922 --> 00:21:38,715 ஆம். ஒன்று சொல்லவா? அவள் என்னை செய்ய சொன்ன 383 00:21:38,715 --> 00:21:40,425 முதல் விஷயமே இதுதான், 384 00:21:40,425 --> 00:21:42,427 அது கூட அவளுக்காக இல்லை. 385 00:21:42,427 --> 00:21:44,096 எனக்குப் பிடிக்குமென நினைத்து, 386 00:21:44,096 --> 00:21:47,266 என் பிறந்தநாளுக்காக அவள் வாங்கிய 39 அன்பளிப்புகளில் அதுவும் ஒன்று. 387 00:21:50,894 --> 00:21:52,896 அதை நான் முயற்சித்தது கூட இல்லை. 388 00:22:06,577 --> 00:22:08,996 - சரி, அம்மா, வருத்தப்படாதீர்கள்... - என்ன? 389 00:22:08,996 --> 00:22:12,541 - ...யாருமே நன்கொடை அளிக்கவில்லை. - தெரிகிறது, ட்ரினா. 390 00:22:13,876 --> 00:22:15,210 இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சினை? 391 00:22:15,210 --> 00:22:19,131 எல்லோரும் பணத்தைத் தங்களுக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும், 392 00:22:19,131 --> 00:22:22,217 டிக்கெட் வாங்குவதே நன்கொடை தான் என்றும் நினைக்கின்றனர் போலும். 393 00:22:24,219 --> 00:22:25,679 இது எல்லாமே என் தவறுதான். 394 00:22:25,679 --> 00:22:27,681 நான் என்ன நினைப்பில் இருந்தேன்? 395 00:22:28,307 --> 00:22:29,808 இதையெல்லாம் இவ்வளவு சீக்கிரம் செய்துவிட முடியுமா? 396 00:22:30,517 --> 00:22:33,103 - இது... - என்ன? 397 00:22:37,524 --> 00:22:39,526 நீங்கள் சிரிக்காதீர்கள், சரியா? 398 00:22:39,526 --> 00:22:42,905 என்ன? நான் இதை ரசிக்க முயற்சிக்கிறேன். 399 00:22:42,905 --> 00:22:46,158 நீங்கள் எல்லாவற்றிலுமே சரியானவள் மாதிரியும், எதிலுமே தோற்காதவள் மாதிரியும் நடந்துகொள்கிறீர்கள். 400 00:22:46,158 --> 00:22:49,494 நான் எதுவுமே சொல்லவில்லையே, காஸ். 401 00:22:50,746 --> 00:22:52,539 நீங்கள் வீணாய்ப்போன ப்ராட்வே மியூசிக்கில் 402 00:22:52,539 --> 00:22:55,792 சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த, ஒரு பின்னணி நடனக் கலைஞர், 403 00:22:55,792 --> 00:22:57,920 எனவே நீங்கள் என்னை விமர்சிக்காதீர்கள். 404 00:22:57,920 --> 00:22:59,254 ஹே, என்ன நடக்கிறது? 405 00:22:59,254 --> 00:23:00,964 இந்தப் பட்டாம்பூச்சியை நிரப்பப் போகிறோமா? 406 00:23:00,964 --> 00:23:03,759 நம் இலக்கை நெருங்க கூட முடியவில்லை. இது ஒரு பெரிய தோல்வி. 407 00:23:03,759 --> 00:23:05,719 என்ன? ஆனால் காஸி... இன்றிரவு நிகழ்ச்சி... 408 00:23:05,719 --> 00:23:07,387 அது முடிந்துவிட்டது, ஜியோர்ஜியோ. 409 00:23:08,972 --> 00:23:11,600 இல்லை. சுற்றிலும் பார். யாரும்...பார்... 410 00:23:18,815 --> 00:23:20,526 ஹலோ? ஹே, என்ன ஆச்சு... 411 00:23:20,526 --> 00:23:21,985 மக்களே, என்ன நடக்கிறது? 412 00:23:22,694 --> 00:23:25,864 சரி, கேளுங்கள், எங்களால் இன்றைய இலக்கை அடைய முடியவில்லை. 413 00:23:25,864 --> 00:23:29,493 ஆனால் எனக்கு காஸ் மீதும், இந்த நோக்கத்தின் மீதும் நம்பிக்கை இருக்கிறது, 414 00:23:29,493 --> 00:23:34,414 அதனால், இந்த ஆற்றல் நிதிக்காக, என் பங்காக, 500 டாலரை நன்கொடையாகத் தருகிறேன் என 415 00:23:34,414 --> 00:23:35,958 - உறுதியளிக்கிறேன். - நல்லது. 416 00:23:35,958 --> 00:23:38,502 என்னுடன் சேர்ந்து யாராவது உறுதியெடுக்கிறீர்களா? 417 00:23:39,711 --> 00:23:42,923 சொல்லுங்கள். யாருக்கு விருப்பமிருக்கிறது? 418 00:23:43,924 --> 00:23:46,593 - சொல்லுங்கள். - நான் 100 டாலர் தருகிறேன். 419 00:23:46,593 --> 00:23:48,178 சரி, போ! 420 00:23:48,178 --> 00:23:49,930 அந்தக் கையெழுத்திடப்பட்ட சட்டைக்கு. 421 00:23:51,473 --> 00:23:53,058 வந்து, அது விற்பனைக்கு இல்லை. 422 00:23:53,058 --> 00:23:55,602 விடு, நண்பா. அதன் ஃபிரேமே நீ சொன்ன விலையை விட இரண்டு மடங்கு அதிகம். 423 00:23:55,602 --> 00:23:56,979 நூற்றைம்பது. 424 00:24:03,569 --> 00:24:05,737 அந்தச் சொட்டையனுக்கு விற்றுவிட்டோம். 425 00:24:05,737 --> 00:24:11,201 விளையாட்டில் பயன்படுத்தப்படும் சட்டை 150 டாலருக்கு விற்கப்பட்டுவிட்டது. 426 00:24:11,201 --> 00:24:13,287 உன் புகைப்படங்கள் எல்லாவற்றிற்கும் ஐம்பது டாலர்கள் தருகிறேன். 427 00:24:14,246 --> 00:24:17,833 சரி. எல்லாவற்றையுமே தர முடியாது, கொஞ்சம் குறைத்துவிடலாம். 428 00:24:17,833 --> 00:24:18,917 சரி. 429 00:24:19,918 --> 00:24:22,296 உன் சமையலறையில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டிக்கு இருநூறு டாலர்கள். 430 00:24:22,296 --> 00:24:25,757 என் வீட்டில் இருப்பதா? இல்லை, 300 டாலருக்கு கம்மியாக தர முடியாது. 431 00:24:25,757 --> 00:24:27,968 - 200 டாலருக்கு விற்கப்பட்டுவிட்டது. - என்ன? 432 00:24:27,968 --> 00:24:29,595 சரி. சரி. 433 00:24:29,595 --> 00:24:31,847 ஆம், இது ரொம்ப நன்றாக நடக்கிறது. 434 00:24:31,847 --> 00:24:35,100 யாருக்கெல்லாம் வேறென்னவெல்லாம் வேண்டும்... இங்கு நிறைய பேஸ்பால் பொருட்கள் உள்ளன. 435 00:24:35,100 --> 00:24:37,936 அடுத்தது யார்? வேற யாருக்கு என்ன வேண்டும்? 436 00:24:37,936 --> 00:24:40,689 அங்கிருக்கும் நாற்காலியை வாங்கிகொள். நான் அதில் உட்கார்ந்திருந்தேன். 437 00:24:41,690 --> 00:24:44,693 கடவுளே! சரி. வந்ததற்கு ரொம்ப நன்றி. 438 00:24:47,362 --> 00:24:48,530 நல்ல தேர்வு, இஸி. 439 00:24:49,072 --> 00:24:50,532 இது தேர்வு இல்லை, வால்டர். 440 00:24:51,491 --> 00:24:53,243 ஒரு மேயராக, இன்றிரவு எந்த விஷயத்திற்கு 441 00:24:53,243 --> 00:24:55,579 பணம் திரட்டினாலும் அதற்கு உதவுவது என் கடமை. 442 00:24:56,455 --> 00:24:59,291 காஸைப் பார். அவள் ஒரு தலைவி. 443 00:24:59,291 --> 00:25:02,002 உன் வழியைப் பின்பற்றி அவளும் அலுவலகத்திற்கு வரலாம். 444 00:25:02,002 --> 00:25:05,255 அது என் பிணத்தின் மீது தான் நடக்கும். என் வழியைப் பின்பற்றுகிறாளா? 445 00:25:05,255 --> 00:25:08,050 நான்தான் இன்னமும் மேயர். ரொம்ப நன்றி. 446 00:25:09,176 --> 00:25:10,177 குட் நைட். 447 00:25:12,346 --> 00:25:16,475 என்ன விஷயம், க்ரிஸ்ஸி? ஒரே ஒரு முறை நான் உங்களை அழைத்துப் போகவா? 448 00:25:17,267 --> 00:25:20,312 இல்லை, வேண்டாம், அன்பே. நீ ஏன் காண்டோலோ ஓட்டுகிறாய்? 449 00:25:22,231 --> 00:25:25,234 என் திறமையை வெளிப்படுத்த தான். 450 00:25:26,568 --> 00:25:29,112 - உனக்கு “மண்பாண்ட கலைஞர்” வந்ததாக நினைத்தேன். - ஆமாம். 451 00:25:29,112 --> 00:25:31,823 ஜியோர்ஜியோவுடன் பிரச்சினை செய்ய நினைத்தேன், இது ரொம்பவே சுலபமாக இருந்தது. 452 00:25:32,866 --> 00:25:34,326 - இதை நீயாகவே உருவாக்கினாயா? - ஆம். 453 00:25:35,035 --> 00:25:37,746 ஜேக்கபிடம் வெற்று அட்டை இருந்தது, என் அம்மாவின் வினைல் கட்டரைப் பயன்படுத்தினேன். 454 00:25:38,539 --> 00:25:40,666 “மண்பாண்ட கலைஞர்” வந்ததை அம்மாவும் மறந்துவிட்டார். 455 00:25:40,666 --> 00:25:43,669 ஆம், அவள் தனக்கான தருணத்தை அனுபவிக்கிறாள், இல்லையா? 456 00:25:43,669 --> 00:25:46,463 அவள் இளவரசியைப் போல் நன்றாக உடை அணிந்துகொண்டு, 457 00:25:46,463 --> 00:25:51,093 இளைஞர்களுடன் நேரத்தை செலவழித்தால் நன்றாக இருக்கும். 458 00:25:57,641 --> 00:26:00,686 உன் பொருட்களையெல்லாம் விற்றுவிட்டாயென இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. 459 00:26:02,521 --> 00:26:06,275 நீ இல்லாமல் எங்களால் இந்த இலக்கை அடைந்திருக்க முடியாது. 460 00:26:06,275 --> 00:26:07,317 சியர்ஸ். 461 00:26:08,277 --> 00:26:09,611 இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இரவு. 462 00:26:10,696 --> 00:26:13,323 ஜியோர்ஜியோவில் முதன்முதலாக ஒரு பெண் 463 00:26:13,323 --> 00:26:14,950 காண்டோலோ ஓட்டுநர் இருப்பதால் மட்டுமல்ல. 464 00:26:15,450 --> 00:26:17,995 வெனிஸில் நடக்காமல் நாம் இதை இங்கு செய்ய மாட்டோம் எனச் சொல்லியிருக்கிறேன். 465 00:26:18,662 --> 00:26:23,083 இதை முன்பே வெனிஸில் செய்துவிட்டனர் என நினைக்கிறேன். 466 00:26:23,083 --> 00:26:25,878 - தெரியாது. நான் அங்கு போனதில்லை. - நானும் தான். 467 00:26:26,753 --> 00:26:28,755 ஆனால், போகவேண்டுமென ஆசைப்பட்டேன். 468 00:26:29,590 --> 00:26:33,969 நான் இத்தாலியில் படித்தபோது, நிஜமாக, அங்கேயே தங்கிவிடலாம் எனத் தோன்றியது. 469 00:26:33,969 --> 00:26:35,596 ஏன் தங்கவில்லை? 470 00:26:37,764 --> 00:26:40,893 ஏனென்றால் டஸ்டிக்காக இங்கு வந்துவிடவேண்டும் என நினைத்தேன், தெரியுமா? 471 00:26:42,561 --> 00:26:45,063 அவரின் அம்மா உடல்நலம் சரியில்லாமல் இருந்தார், 472 00:26:45,063 --> 00:26:48,233 அவருக்கு ஏதாவது ஆவதற்குள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென நினைத்தோம். 473 00:26:48,233 --> 00:26:50,027 அவரும் நல்லபடியாக எங்கள் திருமணத்தைப் பார்த்தார். 474 00:26:51,028 --> 00:26:54,031 அதன் பிறகு ட்ரினா பிறந்துவிட்டாள். பிறகு... 475 00:26:54,031 --> 00:26:56,241 க்வினித் பால்ட்ரோ நடித்த, “ஸ்லைடிங் டோர்ஸ்” என்ற 476 00:26:56,241 --> 00:26:58,035 திரைப்படத்தைப் பார்த்திருக்கிறாயா? 477 00:26:58,035 --> 00:27:01,538 இல்லை. ஆனால் நீ சொல்ல வருவது புரிகிறது. 478 00:27:03,707 --> 00:27:05,209 நான் ஹாக்கி வீரனாக ஆகாமல் 479 00:27:05,209 --> 00:27:07,878 வேறெதாவது ஆகிருந்தால் என்ன நடந்திருக்கும் என சில சமயங்களில் யோசிப்பேன். 480 00:27:10,255 --> 00:27:11,965 நான் இதை உன்னிடம் சொன்னதில்லை, ஆனால்... 481 00:27:13,634 --> 00:27:16,678 என் கையில் நரம்பு சிதைவு ஏற்பட்டபோது... 482 00:27:16,678 --> 00:27:19,306 - ஜியோர்ஜியோ, இதை சொல்லிவிட்டாய். - இல்லை. 483 00:27:19,306 --> 00:27:22,935 நான் அன்றிரவு உடற்பயிற்சி கூடத்தில், 484 00:27:22,935 --> 00:27:25,312 ஏன் கடினமாக உடற்பயிற்சி செய்தேன் என சொன்னதில்லை, அது ஏனென்றால் 485 00:27:25,312 --> 00:27:29,066 நீயும், டஸ்டியும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கேள்விப்பட்டேன். 486 00:27:30,442 --> 00:27:33,278 எனக்குத் தெரியவில்லை. நான் சோகத்தைப் போக்க நினைத்தேன், 487 00:27:33,278 --> 00:27:35,405 ஆனால் அந்த வலி ரொம்ப அதிகரித்தது. 488 00:27:40,953 --> 00:27:43,455 எனக்கு “சூப்பர் ஸ்டார்” என்ற அட்டை கிடைத்ததும்... 489 00:27:45,582 --> 00:27:49,586 “ஆமாம், அது நான்தான், நான் அப்படிப்பட்டவன் தான்” என நினைத்து அப்படியே நடந்துக்கொண்டேன். 490 00:27:49,586 --> 00:27:54,216 உண்மை என்னவென்றால், நான் ரொம்ப காலமாகவே சூப்பர் ஸ்டாராக இருக்கவில்லை. 491 00:27:56,844 --> 00:27:58,387 என் வாழ்வின் உச்ச நிலையை அடைந்துவிட்டேன். 492 00:28:00,889 --> 00:28:02,140 நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விட்டேன். 493 00:28:02,140 --> 00:28:06,270 தொழில்ரீதியாக விளையாடுவதற்கு, என் குழந்தை பருவத்தை விட்டுக்கொடுத்தேன்... 494 00:28:09,106 --> 00:28:10,732 பிறகு எல்லாமே போய்விட்டது. 495 00:28:11,900 --> 00:28:14,069 எல்லாமே திடீரென முடிந்துவிட்டது. 496 00:28:14,778 --> 00:28:16,280 நான் விட்டுக்கொடுத்துவிடுவேன், 497 00:28:17,322 --> 00:28:19,783 என் கையுறைகள், என் சட்டைகள், என் பந்துகள், 498 00:28:19,783 --> 00:28:20,868 நான் கையெழுத்திட்ட பந்துகள்... 499 00:28:20,868 --> 00:28:24,121 உன்னுடன் இருக்கும் அந்த ஒரு வாய்ப்பிற்காக எல்லாவற்றையுமே விட்டுக்கொடுத்து விடுவேன், காஸ். 500 00:28:34,339 --> 00:28:35,215 ஹே. 501 00:28:37,384 --> 00:28:38,760 வீட்டுக்குப் போகலாமா? 502 00:28:40,804 --> 00:28:41,930 சரி, போகலாம். 503 00:28:44,057 --> 00:28:45,100 வருகிறேன், அன்பே. 504 00:28:45,100 --> 00:28:47,394 - பொறு. நதியைக் கடக்க நான் உதவுகிறேன். - வேண்டாம், ஜியோர்ஜியோ. 505 00:28:49,188 --> 00:28:50,230 நன்றி. 506 00:29:13,712 --> 00:29:17,049 ஹே. எல்லாம் எப்படி நடந்தது? 507 00:29:17,925 --> 00:29:19,092 நீங்கள் திரும்பி வரவேயில்லை. 508 00:29:20,469 --> 00:29:23,430 ஐஸ் வாங்கி வருவதாகச் சொல்லிவிட்டு, என்னை அப்படியே விட்டுவிட்டு போய்விட்டீர்கள். 509 00:29:29,102 --> 00:29:30,729 மன்னித்துவிடு. 510 00:29:32,564 --> 00:29:35,943 பரவாயில்லை. நான் கோபமாகக்கூட இல்லை. 511 00:29:36,777 --> 00:29:38,820 நீங்கள்... அங்கு இருக்க வேண்டுமென நினைத்தேன். 512 00:29:58,674 --> 00:30:01,218 ஹே, காஸ். நாம் இன்னும் நமது உரையாடலை முடிக்கவில்லை... 513 00:30:01,218 --> 00:30:03,887 - ஜியோர்ஜியோ, போதும் நிறுத்து. - ...இதைச் சொல்லியாக வேண்டும்... 514 00:30:03,887 --> 00:30:08,976 - ஆனால், நீ இதைத் தெரிந்துகொள்ள வேண்டும், காஸ்... - ஜியோர்ஜியோ. நிறுத்து. 515 00:30:08,976 --> 00:30:10,143 முடியாது. 516 00:30:49,850 --> 00:30:51,393 மார்கெட் 517 00:31:03,405 --> 00:31:09,453 மார்ஃபோ 518 00:31:18,754 --> 00:31:20,672 எம். ஓ. வால்ஷ் உருவாக்கிய புத்தகத்தைத் தழுவியது 519 00:32:34,746 --> 00:32:36,748 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்