1 00:00:13,347 --> 00:00:14,389 ம். 2 00:00:16,350 --> 00:00:19,019 - குட் மார்னிங். - ஹே, குட் மார்னிங். 3 00:00:19,603 --> 00:00:21,355 நான் விசில் அடித்து உன்னை எழுப்பிவிடவில்லையே? 4 00:00:22,606 --> 00:00:25,484 இல்லை. ஆமாம். 5 00:00:26,527 --> 00:00:27,611 ஆனால், பரவாயில்லை. 6 00:00:28,320 --> 00:00:30,364 - அது சந்தோஷமான விசில். - ஓ, ஆமாம். 7 00:00:31,031 --> 00:00:32,241 ரொம்ப சந்தோஷமான விசில். 8 00:00:32,908 --> 00:00:36,119 இந்தப் படுக்கையில் மறுபடியும் உன்னுடன் இருப்பது சந்தோஷமாக இருக்கு. 9 00:00:41,333 --> 00:00:42,501 தெரியுமா, 10 00:00:42,501 --> 00:00:44,753 நீங்கள் நேற்று படுக்கையில் இருந்ததையே நான் மறந்தேவிட்டேன். 11 00:00:44,753 --> 00:00:46,713 பிறகு நீங்கள் குறட்டை விடத் தொடங்கினீர்கள், 12 00:00:46,713 --> 00:00:48,757 -“ஓ, இங்கே இருக்கிறார்” என நினைத்தேன். - இங்கே தான் இருக்கிறேன். 13 00:00:50,300 --> 00:00:52,886 சகஜமாக இருக்க நமக்கு கொஞ்ச காலம் ஆகும் என்று நினைக்கிறேன். 14 00:00:57,099 --> 00:00:58,934 - யாரையும் எதிர்பார்த்து இருந்தாயா? - இல்லை. 15 00:00:59,601 --> 00:01:03,522 சரி, அதைக் கண்டுகொள்ளாமல், படுக்கையில் இருந்து, ஓய்வெடுக்கலாமா? 16 00:01:03,522 --> 00:01:04,772 நிச்சய்மாக. 17 00:01:07,651 --> 00:01:09,736 டஸ்டி, கஸ்ஸி, கீழே இறங்கி வாங்க! 18 00:01:09,736 --> 00:01:12,197 உங்கள் வீட்டில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது! 19 00:01:12,197 --> 00:01:13,532 என்னது? 20 00:01:13,532 --> 00:01:15,492 யாரென்று பாருங்களேன்! 21 00:01:15,492 --> 00:01:20,455 புதிதாய் முறுபடியும் இணைந்த, திரு மற்றும் திருமதி பிக் டி ஹப்பார்ட். 22 00:01:20,455 --> 00:01:22,666 அடக் கடவுளே. உங்கள் முகம் பிரகாசிக்கிறது. 23 00:01:23,542 --> 00:01:25,085 நேட், இங்கு என்ன செய்கிறாய்? 24 00:01:25,085 --> 00:01:26,420 நீங்களே உள்ளே நுழைந்துவிட்டீர்களா? 25 00:01:26,420 --> 00:01:29,590 மன்னிக்கவும், டி. நான் ரொம்ப நேரமாக கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். 26 00:01:29,590 --> 00:01:32,885 எங்களால் பொறுக்க முடியவில்லை. நாங்கள்தான் உங்களிடம் முதலில் சொல்ல விரும்பினோம்... 27 00:01:32,885 --> 00:01:34,928 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 28 00:01:34,928 --> 00:01:38,682 சந்தோஷம், சந்தோஷம், சுய-ஆய்வு முடிந்தது இது உங்களுக்கான விசேஷ தினம் 29 00:01:38,682 --> 00:01:42,019 இன்று நீங்கள் குடும்பமாக உள்ளது எங்களுக்கு மிக சந்தோஷம் 30 00:01:42,019 --> 00:01:45,022 ஜியோர்ஜியோவிடமிருந்தும் நட்டாலியிடமிருந்தும் 31 00:01:45,731 --> 00:01:48,650 உங்கள் நெருங்கிய தோழர்கள் 32 00:01:49,568 --> 00:01:54,948 உங்களுக்காகக் காபியும், உணவும் கொண்டு வந்திருக்கிறோம் 33 00:01:55,949 --> 00:01:58,702 மிகவும் இனிமையான ஆர்ப்பாட்டமான நாளின் தொடக்கம் இது. 34 00:01:58,702 --> 00:02:00,704 ஆமாம். ரொம்ப இனிமையாக உள்ளது. 35 00:02:00,704 --> 00:02:03,332 - ஒருவேளை இது கொஞ்சம் சீக்கிரமோ... - சில மணி நேரங்கள். 36 00:02:03,332 --> 00:02:04,249 ...வார இறுதிக்கு. 37 00:02:04,249 --> 00:02:07,085 கவலைப்படாதே, காஸி. இவர்களுக்கான ஊதியத்தோடு சேர்த்து, ஐம்பது சதவீத போனஸ் தருகிறேன். 38 00:02:07,085 --> 00:02:08,878 அந்தப் பாடலைத் திரும்பக் கேட்க விரும்புகிறாயா? 39 00:02:08,878 --> 00:02:10,797 அந்தப் பாடலைப் போதுமான அளவு கேட்டுவிட்டோம். 40 00:02:10,797 --> 00:02:12,341 - ஐந்து, ஆறு, ஏழு! - கம்! 41 00:02:12,341 --> 00:02:15,802 சந்தோஷம், சந்தோஷம், சுய-ஆய்வு முடிந்தது, இது உங்களுக்கான விசேஷ தினம் 42 00:02:40,327 --> 00:02:41,328 ஹே. 43 00:02:42,037 --> 00:02:44,957 - ஹே. - உனக்கு சில உள்ளாடைகள் கடனாக வேண்டுமா அல்லது... 44 00:02:45,457 --> 00:02:48,669 இல்லை. உன்னுடைய எல்லா பொருட்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 45 00:02:48,669 --> 00:02:50,212 நல்லது, நல்லது, நல்லது. 46 00:02:50,212 --> 00:02:53,549 ஆமாம், நான் தூங்கும் போது, நீ இதைத்தான் செய்வாய் என்று நினைத்தேன். 47 00:02:53,549 --> 00:02:55,175 ஏதும் நல்லதாகக் கண்டுபிடித்தாயா? 48 00:02:55,175 --> 00:02:59,471 யாரோ அழகாக எழுதி இருக்கும் டியர்ஃபெஸ்ட் டிக்கெட்டுகளைக் கண்டுபிடித்தேன், 49 00:02:59,471 --> 00:03:01,974 -“ட்ரினா உடனான முதல் டேட்டிங்.” - ஆமாம். 50 00:03:02,975 --> 00:03:06,061 - உன்னை இனி அழைக்கவே கூடாது என ஞாபகப்படுத்து. - நான் எப்பொழுதும் தூங்கிக்கொண்டு இருப்பேன். 51 00:03:06,061 --> 00:03:08,856 உன் பெற்றோர் சம்மதித்ததை என்னால் இப்பவும் நம்பவே முடியவில்லை. 52 00:03:08,856 --> 00:03:11,942 உண்மையில், ரீட்டாவின் வீட்டில் தூங்குவதாகத்தான் அவர்களிடம் சொன்னேன், எனவே... 53 00:03:11,942 --> 00:03:14,236 ஐயோ, அடிப்படையில் அது ஒரு பொய். 54 00:03:14,236 --> 00:03:15,696 “பொய் சொல்பவள்” திரும்புகிறாள். 55 00:03:17,906 --> 00:03:18,907 இது எப்படி கிடைத்தது? 56 00:03:18,907 --> 00:03:21,243 அது கோல்டனின் அட்டை. 57 00:03:23,245 --> 00:03:24,746 அவனது பர்ஸிலிருந்து எடுத்தேன். 58 00:03:25,330 --> 00:03:28,292 ஹேனா முன்பு வேலை செய்த பாருக்கு அவன் போனபோது, மார்ஃபோவைப் பயன்படுத்தினான் என்று நினைக்கிறேன். 59 00:03:28,292 --> 00:03:30,335 நீ இதை என்னிடம் சொல்லவிருந்தாயா, அல்லது... 60 00:03:30,335 --> 00:03:31,712 மன்னித்துவிடு, ஆமாம். 61 00:03:32,212 --> 00:03:35,549 இதை ரகசியமாக என்னிடமே வைத்துக்கொள்ள நினைத்தேன், தெரியுமா? 62 00:03:36,049 --> 00:03:38,051 இது மந்திரம் அல்ல. ஆனால்... 63 00:03:38,051 --> 00:03:39,386 நீ அதைப் பார்க்கவில்லை தானே? 64 00:03:39,386 --> 00:03:41,513 இல்லை, ஏன் கேட்கிறாய்? 65 00:03:41,513 --> 00:03:42,806 - பார்க்கட்டுமா? - கூடாது. 66 00:03:43,765 --> 00:03:45,726 வேண்டுமானால் நீ பாரு, ஆனால், நான் பார்க்க மாட்டேன். 67 00:03:45,726 --> 00:03:47,311 அவனால் முடியாத விஷயத்தைப் பற்றி 68 00:03:47,311 --> 00:03:50,522 தெரிந்துகொள்வதை விட, நான் அவனது ஆற்றலைக் கற்பனை செய்துகொள்வேன், சரியா? 69 00:03:51,106 --> 00:03:53,400 இவ்விதமாக எல்லாமே சாத்தியமாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. 70 00:03:55,027 --> 00:03:56,361 பைத்தியக்காரத்தனமாக இருக்கு அல்லவா? 71 00:03:56,361 --> 00:03:58,530 இல்லை, பைத்தியக்காரத்தனமாக இல்லை. 72 00:03:59,531 --> 00:04:02,993 “ட்ரினா உடனான முதல் டேட்டிங்” என்று டியர்ஃபெஸ்ட் டிக்கெட்டில் எழுதுவது தான் பைத்தியக்காரத்தனம். 73 00:04:02,993 --> 00:04:04,077 சரி. 74 00:04:06,079 --> 00:04:07,664 உன்னுடன் இங்கு இருப்பது எனக்குப் பிடிச்சிருக்கு. 75 00:04:10,334 --> 00:04:14,505 என் வீட்டில் ஒரே குழப்பமும், உன் வீட்டில் அமைதியும், சாந்தமும் இருக்கிறது. 76 00:04:15,255 --> 00:04:16,589 விளையாடுகிறாயா? 77 00:04:19,091 --> 00:04:21,053 என்ன ஆச்சு? விளையாடிக்கொண்டு அப்படியே சத்தம் போட்டீங்களா? 78 00:04:21,053 --> 00:04:23,931 - என்ன விளையாட்டு? - தெரியவில்லை, ஏதாவது ஸ்போர்ட்ஸ்? 79 00:04:27,309 --> 00:04:30,020 மறுபடியும், என்னை வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். 80 00:04:30,020 --> 00:04:31,980 - என்ன? ஏன்? - தெரியாது. 81 00:04:32,689 --> 00:04:35,859 நான் குழுவில் முக்கியமான பங்கு வகிக்கவில்லை என்று ட்ரெவர் சொன்னான். 82 00:04:36,735 --> 00:04:39,071 - ட்ரெவர் உங்களை பணிநீக்கம் செய்தானா? - நாசமாய் போன ட்ரெவர். அவனொரு வடிகட்டின முட்டாள். 83 00:04:39,071 --> 00:04:40,405 பரவாயில்லை. 84 00:04:41,323 --> 00:04:42,616 நான் வேறு ஏதாவது தேடிக்கொள்கிறேன். 85 00:04:42,616 --> 00:04:47,788 நான் என் கடைசி நாள் வேலையைச் செய்யப் போகிறேன், என் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, 86 00:04:48,455 --> 00:04:53,836 ஐஸ்சை கடைசி முறையாக நுகர்ந்துப் பார்ப்பேன். 87 00:05:00,634 --> 00:05:04,346 சரி, உங்கள் சுய-ஆய்வு பற்றி எங்களிடம் சொல்லுங்கள். 88 00:05:04,346 --> 00:05:08,016 வாழ்வைப் பற்றியும், காதலைப் பற்றியும் என்ன கற்றீர்கள்? என்றும் இல்லாதது போல மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? 89 00:05:08,016 --> 00:05:11,103 உண்மையில், மகிழ்ச்சியாய் இருப்பதென்றால் என்ன? 90 00:05:11,103 --> 00:05:13,689 ஆனால், உன் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றால், ஆமாம். 91 00:05:14,439 --> 00:05:16,233 ஆமாம், என்றும் இல்லாதது போல மகிழ்ச்சியாக உள்ளோம். 92 00:05:16,733 --> 00:05:19,278 - நீயும் ஒப்புக்கொள்வாயா, காஸ்? - நானும் ஒப்புக்கொள்வேன். 93 00:05:20,070 --> 00:05:23,574 சரி, நாங்கள் விலகி இருந்த சமயத்தில், நிறைய நடந்துவிட்டது போலத் தோன்றுகிறது. 94 00:05:23,574 --> 00:05:26,702 நான் தனியே ஒரு விடுதியில் இரவில் தங்கி 95 00:05:26,702 --> 00:05:28,453 என் வாசிப்பைத் தொடர்ந்தேன். 96 00:05:28,453 --> 00:05:29,580 அருமை. 97 00:05:29,580 --> 00:05:32,541 என் பழைய நண்பர்களுடன் மறுபடியும் பேசினேன். ஒரு புது நண்பர் கிடைத்தார். 98 00:05:32,541 --> 00:05:33,917 உனக்கு நல்லதுதான், காஸி. 99 00:05:34,501 --> 00:05:37,671 நீ டஸ்டியுடன் இருந்தபோது, இதை எல்லாம் செய்ய முடியவில்லையா? 100 00:05:41,383 --> 00:05:42,384 நான்... 101 00:05:42,384 --> 00:05:46,597 முன்னர், என்னால் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. இல்லை, நான்... 102 00:05:47,222 --> 00:05:49,600 அதாவது, என் விருப்பம் என்ன என்பதை எங்கள் சுய-ஆய்வு 103 00:05:49,600 --> 00:05:52,477 என்னை யோசிக்க வைத்தது, சரியா? 104 00:05:52,477 --> 00:05:56,106 நிச்சயமாக, அதனால்தான் நான் திரும்ப வேலையில் சேர்ந்தேன். 105 00:05:56,106 --> 00:05:57,482 மேலும், நானே பணம் சம்பாதிக்கலாம். 106 00:05:57,482 --> 00:06:00,194 நீ எங்கள் குடும்பத்தில் இணைந்திருப்பது எங்கள் அதிர்ஷ்டம். 107 00:06:00,194 --> 00:06:02,654 - நன்றி. - நீ ஒரு சர்வர் என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன். 108 00:06:02,654 --> 00:06:05,032 உண்மையில், அது உயர்நிலை நிர்வாகம். எனவே... 109 00:06:05,032 --> 00:06:06,491 அருமையான விஷயம். 110 00:06:06,491 --> 00:06:08,577 காஸும் ஜியோர்ஜியோவும் சேர்ந்து, 111 00:06:08,577 --> 00:06:10,454 டியர்கம்மிங் அணிவகுப்பிற்காக உருவாக்கும் அலங்கார வாகனத்தை 112 00:06:10,454 --> 00:06:12,039 பார்க்கும் வரை பொறுங்கள். அதாவது... 113 00:06:12,039 --> 00:06:14,750 அது சரி. காஸி என் ஆலோசகராக, 114 00:06:14,750 --> 00:06:16,251 என் தளபதியாக மாறிவருகிறாள். 115 00:06:16,251 --> 00:06:18,462 என் கண்களாக, காதுகளாக மேலும் வலது கரமாக. 116 00:06:18,462 --> 00:06:20,589 நீ ஜியோர்ஜியோவின் வலது கரமாக இருப்பாயானால், 117 00:06:20,589 --> 00:06:22,216 உன் வேலை மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. 118 00:06:25,052 --> 00:06:27,721 அது சுயஇன்பம் பற்றி அடிக்கடி சொல்லும் ஜோக். 119 00:06:30,891 --> 00:06:34,978 எப்படியும், நீங்களும் பல சாதனைகளைச் செய்துவிட்டீர்கள், டஸ்டி. 120 00:06:36,897 --> 00:06:39,525 - வானியல் பற்றிய ஆர்வத்தை திரும்பக் கண்டுபிடித்தேன். - நீங்கள் ஒருத்தியை டேட்டிங் கூட செய்தீர்கள். 121 00:06:41,735 --> 00:06:43,320 எப்போதும் ஒரு பெண்ணுடன்தான் காதலில் இருந்திருக்கிறேன். 122 00:06:43,820 --> 00:06:45,489 இப்போது, இருவருடன் உள்ளேன். 123 00:06:45,489 --> 00:06:48,283 உடலால் அல்ல. உன்னுடன் உறவு கொண்டுள்ளேன். ஆனால்... 124 00:06:49,284 --> 00:06:52,329 அப்புறம் பல நாய்க் குட்டிகள் பிறக்க பிரசவம் பார்த்தேன். 125 00:06:52,329 --> 00:06:53,372 அடடே. 126 00:06:53,372 --> 00:06:54,831 ஆம், அவர் உதவியது... இரண்டு குட்டிகள்... 127 00:06:54,831 --> 00:06:57,084 - இரண்டு குட்டிகள் பிறக்கத்தான். நிறைய அல்ல. - சரி. நிறைய அல்ல. 128 00:06:57,084 --> 00:06:58,794 ஆனால், ஒரே கலவரம் ஆகிவிட்டது. 129 00:06:59,628 --> 00:07:00,754 அருமை. 130 00:07:05,342 --> 00:07:07,761 ஐந்தரை வாரங்கள் என்பது ரொம்ப நீண்ட காலம் இல்லை, அல்லவா? 131 00:07:07,761 --> 00:07:09,054 இரண்டு மாதங்களுக்குக் குறைவே. 132 00:07:09,054 --> 00:07:10,931 ஆறு வாரங்கள் ஆகியிருக்க வேண்டுமே? 133 00:07:10,931 --> 00:07:12,599 ஆறு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்தான். 134 00:07:12,599 --> 00:07:15,853 ஆனால், எங்களால் மீண்டும் ஒன்றிணைய காத்திருக்க முடியவில்லை. 135 00:07:15,853 --> 00:07:17,354 எனவே... 136 00:07:17,354 --> 00:07:19,356 ஆலிஸின் கதி என்ன? 137 00:07:19,356 --> 00:07:22,192 டி, அவளிடம் நீ விஷயத்தைச் சொன்னதும் அவள் அழுதாளா, 138 00:07:22,192 --> 00:07:24,736 அல்லது, கடைசியாக ஒரு முறை உன்னைக் கவர முயன்றாளா? 139 00:07:24,736 --> 00:07:28,073 உண்மையில், அவளிடம், நான் விஷயத்தைச் சொல்லவில்லை 140 00:07:28,073 --> 00:07:31,034 ஏனென்றால் உண்மையில் சொல்ல எதுவும் இல்லை. 141 00:07:32,035 --> 00:07:35,163 எனக்குப் புரியவில்லை. நான் புரிந்துகொள்ளத்தான் முயல்கிறேன். 142 00:07:35,163 --> 00:07:36,999 நீ இன்னமும் ஆலிஸ்-ஐ டேட்டிங் செய்கிறாயா? 143 00:07:36,999 --> 00:07:41,003 இல்லை. கடவுளே, இல்லை. இல்லை. உண்மையில்... 144 00:07:41,003 --> 00:07:43,547 இல்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், நான் சொன்னது... 145 00:07:44,214 --> 00:07:45,924 நாங்கள் உண்மையில் காதல் உறவில் இல்லவே இல்லை. 146 00:07:45,924 --> 00:07:50,596 எனவே, உறவை முறித்துக்கொள்வது ரொம்ப அபத்தமாக இருக்கும். 147 00:07:52,055 --> 00:07:53,223 எனில், நீங்கள் அவளிடம் சொல்லவில்லையா, டஸ்டி? 148 00:07:53,223 --> 00:07:55,601 அவளிடம் எப்போது சொல்வது? முழு நேரமும் நான் உன்னுடன் இருக்கிறேனே. 149 00:07:55,601 --> 00:07:59,271 சரி, ஆனால் நீ அவளிடம் சொல்ல வேண்டும், டி. நானே அங்கு செல்லும்படி செய்துவிடாதே. 150 00:07:59,271 --> 00:08:01,690 ஜியோர்ஜியோ, வேண்டாம். அவள் உன்னைக் கவர முயல்வாள். 151 00:08:01,690 --> 00:08:03,692 அன்பே, அவளால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. 152 00:08:03,692 --> 00:08:06,111 இல்லை, நானே சென்று அவளிடம் சொல்கிறேன். 153 00:08:07,446 --> 00:08:11,116 இந்நேரம், அவளுக்கே இது முடிந்துவிட்டது என்று தோன்றியிருக்கும். 154 00:08:11,116 --> 00:08:13,994 ஆனா... நானே சொல்கிறேன். அவளிடம் நானே சொல்கிறேன். 155 00:08:15,204 --> 00:08:16,872 டியர்ஃபீல்ட் ஐஸ் அரீனா 156 00:08:18,165 --> 00:08:20,292 ஹே! இதை நிறுத்து, ட்ரெவர்! 157 00:08:21,585 --> 00:08:24,338 ஐயோ, இவ்வளவு முரட்டுத்தனம் வேண்டாம், நாம் வெளியில் பேசிய விஷயம் இல்லையே இது. 158 00:08:24,338 --> 00:08:25,464 ஹே, ட்ரெவர். 159 00:08:26,673 --> 00:08:27,799 எப்படி இருக்கிறாய்? 160 00:08:27,799 --> 00:08:29,009 நன்றாக இருக்கிறேன். 161 00:08:29,510 --> 00:08:31,762 என்ன, வாசிக்கும் போது தாக்கப்படுகிறேன். 162 00:08:31,762 --> 00:08:34,597 நீ வாசிக்கவில்லை. நீ ஃபோன்-ஐ பார்த்துக்கொண்டிருந்தாய், நீ ஒரு நடிகர் திலகம். 163 00:08:34,597 --> 00:08:36,225 சரி, நாம் இப்படிச் செய்ய வேண்டாமே. 164 00:08:36,225 --> 00:08:38,852 ட்ரெவர், நான் உன் மெசேஜுகளுக்கு பதில் அளிக்காததற்கு என்னை மன்னித்துவிடு, நண்பா. 165 00:08:38,852 --> 00:08:40,270 ஓ, அப்படியா? 166 00:08:40,270 --> 00:08:42,856 வந்து, அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. 167 00:08:42,856 --> 00:08:45,317 அட, “சிறுபிள்ளைத்தனம்” என்ற வார்த்தையை யார் கற்றது எனப் பாரேன். 168 00:08:45,317 --> 00:08:47,528 சரி, ஆனால், அதற்காக நீ என் அப்பாவை வேலையை விட்டு நிறுத்தியிருக்க வேண்டாம். 169 00:08:47,528 --> 00:08:48,612 - ஆமாம். - ஜேக்கப், 170 00:08:48,612 --> 00:08:50,822 உன் அப்பாவை வேலையைவிட்டு நிறுத்த நீ எந்த விதத்திலும் காரணமில்லை. 171 00:08:51,323 --> 00:08:53,200 அவர் வளையத்துக்குள் ஒவ்வொரு காலையிலும் அத்துமீறி நுழைந்துக்கொண்டே இருந்தார். 172 00:08:53,825 --> 00:08:56,411 என்ன? ஏன் அப்படிச் செய்யப் போகிறார்? 173 00:08:57,204 --> 00:08:58,789 பனிச்சறுக்குப் பழக. 174 00:08:59,790 --> 00:09:01,166 மன்னிக்கவும், அது என்ன? 175 00:09:01,166 --> 00:09:02,668 ஜேக்கப், நான் பொய் சொல்கிறேன் என்று நினைக்கிறாயா? 176 00:09:03,460 --> 00:09:06,046 இல்லை, வருத்தம் தருவது என்னவென்றால், அது பொய் அல்ல. 177 00:09:07,464 --> 00:09:09,883 என் அப்பா சிறுவயதில், பனிச்சறுக்கு பயில விரும்பினார், 178 00:09:10,926 --> 00:09:12,845 ஆனால் என் தாத்தாவிடம் அதைப் பற்றிச் சொல்ல அவர் பயந்தார். 179 00:09:14,012 --> 00:09:15,806 தலைமுறை ஆணாதிக்கம் ஆழமாகச் செல்கிறது. 180 00:09:15,806 --> 00:09:17,599 இப்போதாவது, நான் இவனை உதைக்கட்டுமா, சொல்? 181 00:09:17,599 --> 00:09:21,687 ட்ரெவ், தயவுசெய்து, நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். 182 00:09:25,148 --> 00:09:27,776 அப்பா, இங்கே வாருங்கள். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. 183 00:09:27,776 --> 00:09:28,944 என் வேலை மறுபடியும் கிடைத்துவிட்டதா? 184 00:09:29,528 --> 00:09:31,321 - இது தவறான போக்கு. - ஆமாம், இல்லை. 185 00:09:31,321 --> 00:09:33,532 டியர்ஃபீல்ட் பனிச்சறுக்கு சட்டப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு விதிக்கும் 186 00:09:33,532 --> 00:09:34,950 உங்கள் மேல் விதிமீறல் குற்றச்சாட்டு இருக்கிறதாம். 187 00:09:34,950 --> 00:09:38,787 அத்துமீறி நுழைதல், பனியையும் சாம்போனியையும் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்துதல், 188 00:09:38,787 --> 00:09:41,081 உங்கள் செயல்களால், ஒலி அமைப்பைத் தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்துதல் போன்ற 189 00:09:41,081 --> 00:09:42,583 புது விதிகளை அவர்கள் சேர்த்திருக்கிறார்கள். 190 00:09:42,583 --> 00:09:45,043 பயிற்சி செய்யும் போது, ஷானியா ட்வைன் பாடலைக் கேட்க எனக்குப் பிடிக்கும், 191 00:09:45,043 --> 00:09:47,379 இவற்றை பெரிய விஷயமாக ஒருவர் பொருட்படுத்துவார் என நினைத்ததே இல்லை. 192 00:09:47,379 --> 00:09:49,965 - அவள் உலகிற்கு வந்த ஒரு தேவதை. - அவள் கனடாவைச் சேர்ந்தவள், தெரியும் தானே? 193 00:09:49,965 --> 00:09:51,175 நன்றாகவே தெரியும். 194 00:09:51,175 --> 00:09:53,051 உங்கள் வேலையைத் திரும்பப் பெறுவது கடினம், 195 00:09:53,051 --> 00:09:56,930 ஆனால், நான் ட்ரெவரிடம் பேசி, உங்களுக்கு இலவசமாக பனிச்சறுக்கு செய்ய நேரம் தரச் சொல்லியிருக்கிறேன். 196 00:09:57,514 --> 00:09:59,057 உங்களிடம், ஸ்கேட்டிங் போர்ட் இருக்கிறதா? 197 00:09:59,057 --> 00:10:00,392 என்னிடம் ஸ்கேட்டிங் போர்ட் இருக்கிறதாவா? 198 00:10:01,435 --> 00:10:02,352 எனக்குத் தெரியாது, 199 00:10:02,352 --> 00:10:05,063 நககானோ ஒலிம்பிக்ஸில், எல்விஸ் ஸ்டோய்கோ வெள்ளிப் பதக்கம் வென்றாரா? 200 00:10:08,150 --> 00:10:10,027 ஆம்! ஆமாம், வென்றார். 201 00:10:12,905 --> 00:10:13,906 டியர் இஸி 202 00:10:13,906 --> 00:10:15,449 ஜான்சன்’ஸில் அணிவகுப்புத் தொடங்குகிறது, 203 00:10:15,449 --> 00:10:19,661 பிரதான சாலை வழியாகச் சென்று ஜியோர்ஜியோ’ஸில் முடியும். 204 00:10:19,661 --> 00:10:22,998 டியர்ஃபீல்ட் ஹை ஸ்கூல் அணிவகுப்புக் குழுவோடு இந்த விழாக்கள் தொடங்கும், 205 00:10:22,998 --> 00:10:26,001 மான் வரும் போது நிறைவு பெறும். 206 00:10:26,752 --> 00:10:27,836 ஏதும் கேள்விகள் இருக்கா? 207 00:10:27,836 --> 00:10:29,922 இருக்கு, “டியர்கம்மிங்” என்ற பெயர் எப்படி வந்தது? 208 00:10:29,922 --> 00:10:33,467 மேலும், ஏன் இந்த அணிவகுப்பு? அப்புறம், எதற்கு இது? 209 00:10:34,134 --> 00:10:36,637 ஹேனா. நீ ரொம்ப துணிச்சலானவள். 210 00:10:36,637 --> 00:10:38,722 இந்த ஊருக்குப் புதிதாக வந்தவர்கள் தெரிந்துகொள்ளுங்கள், 211 00:10:38,722 --> 00:10:41,308 டியர்கம்மிங் அணிவகுப்பு என்பது நாங்கள் போற்றும் ஒரு பாரம்பரியம். 212 00:10:41,808 --> 00:10:45,562 உள்ளூர் வணிகர்கள் “சிறந்த அலங்கார வாகனம்” பட்டத்திற்காக போட்டிப் போடுவார்கள். 213 00:10:45,562 --> 00:10:47,189 சிறந்த அலங்கார வாகனம், இதோ துவங்கலாம். 214 00:10:47,189 --> 00:10:50,275 வாக்கு செலுத்துங்கள், இந்த வருடம் உண்மையிலேயே பலர் கடினமாக உழைத்திருக்கிறார்கள், சரியா? 215 00:10:50,275 --> 00:10:51,610 எனவே வாக்குப் போடச் செல்வோம், மக்களே. 216 00:10:51,610 --> 00:10:54,738 இது கிறிஸ்துமஸ் தாத்தாவின் அணிவகுப்பு போன்றது, ஆனால், இறுதியில் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு பதில், 217 00:10:54,738 --> 00:10:59,159 உருளைக்கட்டையில் வேட்டைக்காரர்கள் இழுக்க, சறுக்கு வண்டியில் மான் வரும். 218 00:10:59,159 --> 00:11:00,410 அது சரிதான். 219 00:11:00,410 --> 00:11:03,247 மான், மிட்டாய்களைக் குழந்தைகள் மேல் தூக்கி வீசும், 220 00:11:03,247 --> 00:11:05,457 அதை நாங்கள் “மான் போடுவது” என்று சொல்வோம். 221 00:11:05,457 --> 00:11:08,710 சரிதான், பொருத்தமாகத்தான் உள்ளது. 222 00:11:08,710 --> 00:11:10,546 ஆனால், மறுபடி கேட்கிறேன், ஏன்? 223 00:11:10,546 --> 00:11:12,047 ஏன்? ஏன்? 224 00:11:12,047 --> 00:11:14,591 உனக்குக் கேட்கத் தெரிந்த ஒரே கேள்வி, ஏன் என்பது தானா? 225 00:11:14,591 --> 00:11:17,344 யாராவது ஒருவர், நீ ஏன் இந்த ஊருக்கு வந்தாய் என்றுகூட கேட்கலாம், 226 00:11:17,344 --> 00:11:20,973 அல்லது மார்ஃபோ பற்றிய விஷயங்களை ஏன் ரகசியமாக வைத்திருந்தாய் என்றும் கேட்கலாம், 227 00:11:20,973 --> 00:11:25,102 அல்லது எங்கள் அன்பிற்கு உகந்த, அப்பாவிப் பாதிரியாரை ஏன் மயக்கினாய் என்றும் கேட்கலாம். 228 00:11:26,645 --> 00:11:28,272 குட்டு வெளிப்பட்டுவிட்டது. 229 00:11:28,272 --> 00:11:30,357 ஆமாம், ஊருக்கு முன்பு, மல்யுத்தப் போட்டியில் முத்தமிட்டால் 230 00:11:30,357 --> 00:11:32,192 குட்டு வெளிப்படும் என்று யாருக்குத் தெரியும்? 231 00:11:33,068 --> 00:11:34,528 அவங்களைப் பொருட்படுத்தாதே, ஹேனா. 232 00:11:34,528 --> 00:11:37,656 யாராவது காதலித்தால், அவங்களுக்குப் பொறாமையாக இருக்கும். 233 00:11:37,656 --> 00:11:40,117 அச்சச்சோ! 234 00:11:40,117 --> 00:11:42,494 டியர்ஃபீல்டில் அந்தக் காலத்தில், 235 00:11:42,494 --> 00:11:45,706 டியர்கம்மிங் என்பது மான் வேட்டையின் தொடக்கத்தைக் குறிக்கும். 236 00:11:45,706 --> 00:11:50,878 ஆனால், இப்போது மான்களே இல்லாததால், இது... அதைக் குறிப்பதில்லை. 237 00:11:51,712 --> 00:11:54,381 சரியாகச் சொன்னீர்கள். மறுபடியும், நான்தான் 238 00:11:54,381 --> 00:11:57,926 அணிவகுப்பின் இறுதியில், பெயரிடப்பட்ட மானாக வருவேன். 239 00:11:58,510 --> 00:11:59,803 போச்சு. 240 00:12:00,971 --> 00:12:03,891 ஒருவேளை, அடுத்த வருடம் நீங்கள் முயற்சிக்கலாம், ஷீலா. சரியா? 241 00:12:20,574 --> 00:12:22,242 - டஸ்டி? - ஹே. 242 00:12:22,242 --> 00:12:25,704 - ஹே, என்ன செய்றீங்க? - பழைய வைப்பர்களைச் சரி பார்க்கிறேன். 243 00:12:25,704 --> 00:12:26,914 குளிர்காலம் வருகிறது. 244 00:12:26,914 --> 00:12:28,832 தெரியவில்லை... இவை பனிக்கு சரியாக வருமா? 245 00:12:28,832 --> 00:12:30,542 - இங்கு அவ்வளவு பனிவிழாது. - அது என்னது? 246 00:12:30,542 --> 00:12:33,795 - அது தேவையற்ற கடிதம், அல்லது... - ஓ, சரி. என்னிடம் கொடுங்கள். 247 00:12:33,795 --> 00:12:35,964 - நீ இதைப் பார்க்கத் தேவையில்லை. - இல்லை, என்னிடம் கொடுங்கள். 248 00:12:40,552 --> 00:12:41,845 சரி. சரி. 249 00:12:47,184 --> 00:12:48,727 “நல்லவிதமாகப் பழகியதற்கு நன்றி.” 250 00:12:48,727 --> 00:12:50,145 இது நன்றி தெரிவிக்கும் அட்டையா? 251 00:12:50,145 --> 00:12:52,856 - வேண்டுமானால் உனக்குச் சுருக்கமாக சொல்கிறேன்... - இல்லை, இல்லை. நானே படிக்கிறேன். 252 00:12:53,524 --> 00:12:56,109 “அன்பே ஆலிஸ், என்னில் ஆர்வம் கொண்டதற்கு நன்றி. 253 00:12:56,109 --> 00:12:59,613 நாம் டேட்டிங் செய்தது, நாம் பேசிக்கொண்டு இருந்தது, சில நெருக்கமான தருணங்கள், 254 00:12:59,613 --> 00:13:00,906 இவை யாவும் மிகவும் நன்றாக இருந்தன.” 255 00:13:00,906 --> 00:13:03,784 {\an8}எனக்குப் புரியலை, நன்றி தெரிவிக்கும் அட்டையைக் கொடுத்து, என் உறவை முறிக்கப் போகிறீர்களா? 256 00:13:03,784 --> 00:13:05,702 என்னை மன்னித்துவிடு, சரியா? 257 00:13:05,702 --> 00:13:07,996 அனுதாபக் கடிதம் கொடுக்க நினைத்தேன், ஆனால் அது மிகவும் ஆணவமாகப்பட்டது. 258 00:13:08,705 --> 00:13:10,165 நான் “நன்றி” என்று சொல்ல விரும்பினேன். 259 00:13:10,165 --> 00:13:12,417 ஏனென்றால், நாம் ஒன்றாக இருந்த தருணங்களில் நான் சந்தோஷமாக இருந்தேன். 260 00:13:12,417 --> 00:13:13,502 எனக்கு வந்து... 261 00:13:16,296 --> 00:13:17,339 எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. 262 00:13:19,341 --> 00:13:20,717 ஆமாம், எனக்குத் தெரியும். 263 00:13:22,094 --> 00:13:24,513 நீங்களும், காஸும் மீண்டும் ஒன்று சேரத் திட்டமிடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். 264 00:13:24,513 --> 00:13:27,850 அது வந்து... எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. 265 00:13:27,850 --> 00:13:29,226 சரி. சரி, புரிகிறது. 266 00:13:29,226 --> 00:13:31,103 - எல்லாமே ரொம்ப குழப்பமாக இருக்கிறது. - இல்லை. 267 00:13:31,103 --> 00:13:35,941 இல்லை, இதில் எவ்வித அர்த்தமும் இல்லை ஏனென்றால் நீங்கள் என் பிம்பத்தில் வந்தீர்கள். 268 00:13:37,192 --> 00:13:39,611 - என்ன? - நீங்கள் என் பிம்பத்தில் வந்தீர்கள், டஸ்டி, சரியா? 269 00:13:40,195 --> 00:13:42,906 ஆமாம், உங்களுடைய குட்டி அனிமேஷன் உருவமும், என்னுடைய குட்டி அனிமேஷன் உருவமும்... 270 00:13:42,906 --> 00:13:45,659 - ஏன் என்னிடம் இதை முன்பே சொல்லவில்லை? - ஏனென்றால் நான் உன்னை பயமுறுத்த விரும்பவில்லை. 271 00:13:45,659 --> 00:13:48,704 முதல் சந்திப்பிலேயே சொன்னால் இது விசித்திரமாக இருக்கும். 272 00:13:48,704 --> 00:13:50,372 ஆமாம், இப்போது சொல்வது அதைவிட மேல்தான். 273 00:13:51,832 --> 00:13:55,419 கேளுங்கள், காஸை விட்டு நீங்கள் பிரிந்திருப்பது தற்காலிகமானது என்று சொல்லிக்கொண்டே இருந்தீர்கள். 274 00:13:55,419 --> 00:13:56,503 ஆனால் பிறகு... 275 00:13:57,671 --> 00:14:00,257 தெரியவில்லை. நமக்குள் உண்மையான தொடர்பு இருந்ததுபோல் உணர்ந்தேன், 276 00:14:00,257 --> 00:14:02,467 மேலும் எல்லாமே இயல்பாக நடந்தன. 277 00:14:02,467 --> 00:14:07,347 நிச்சயம், எனக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தனதான். 278 00:14:08,599 --> 00:14:09,766 எனக்குத் தெரியவில்லை. 279 00:14:09,766 --> 00:14:12,394 இப்போது நம் உறவை விரைவில்... முடிவிற்குக் கொண்டு வருகிறீர்கள், சொல்லப்போனால்... 280 00:14:12,394 --> 00:14:14,313 தெரியவில்லை, இதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைத்ததற்கு 281 00:14:14,313 --> 00:14:16,481 ஒரு முட்டாள் போல் உணர்கிறேன், தெரியுமா? 282 00:14:19,443 --> 00:14:20,694 பிம்பத்தில் என்ன நடந்தது? 283 00:14:21,486 --> 00:14:23,030 அட, அது இனி முக்கியமா என்ன? 284 00:14:24,615 --> 00:14:26,033 இப்போது, நீங்கள் காஸுடன் இருக்கிறீர்கள், அல்லவா? 285 00:14:28,827 --> 00:14:30,287 அதனால் என்ன மாறிவிடப் போகிறது? 286 00:14:32,789 --> 00:14:34,208 நான் போக வேண்டும். 287 00:14:35,334 --> 00:14:37,252 பொறு. ஆலிஸ், ஒரு நிமிடம் காத்திருக்க முடியுமா? 288 00:14:37,252 --> 00:14:39,046 இல்லை. இன்று மதியம் ஒரு அணிவகுப்பு இருக்கிறது, 289 00:14:39,046 --> 00:14:41,590 அந்த அணிவகுப்புக் குழு, தன்னைத்தானே தயார் செய்துகொள்ளாது. 290 00:14:41,590 --> 00:14:42,925 சரி, ஒருவேளை அது செய்துகொள்ளலாம், ஆனால்... 291 00:14:42,925 --> 00:14:46,220 - ஆலிஸ், நான் ஒன்று சொல்லட்டுமா? - அதைப்பற்றி அட்டை எழுதுங்க. சரியா? 292 00:14:59,858 --> 00:15:00,984 அடக் கடவுளே. 293 00:15:05,906 --> 00:15:08,909 - அவர் இவற்றை லாக்கரில் வைத்திருந்தாரா? - நூல்நூலாக நிறைய தொங்குகிறது. 294 00:15:12,329 --> 00:15:14,248 அவரைப் பற்றிப் படப்படப்பாக உணர்வது விசித்திரமாக உள்ளதா? 295 00:15:14,248 --> 00:15:15,874 இல்லவே இல்லை. நான் வாந்தி எடுக்கக்கூடும். 296 00:15:15,874 --> 00:15:18,001 சரிதான். அப்பா எப்படியோ, மகனும் அப்படியே. 297 00:15:55,080 --> 00:15:56,206 ஆமாம். 298 00:15:56,206 --> 00:15:58,083 அப்படித்தான், திரு. கோவாக்! 299 00:16:01,795 --> 00:16:02,880 அவரால் செய்ய முடியும். 300 00:16:09,970 --> 00:16:11,680 - இல்லை, ஐயோ, அவர் குதிக்கப் போகிறாரா? - ஆஹா. 301 00:16:22,399 --> 00:16:23,650 அருமையாக இருந்தது. 302 00:16:24,776 --> 00:16:28,155 அருமையாக உள்ளது. ஷானியா பாடல் அட்டகாசம்தான். 303 00:16:28,155 --> 00:16:29,907 இந்தப் பழைய பாடல்கள்... 304 00:16:33,702 --> 00:16:34,703 என்ன? உனக்கு ஒன்றும் இல்லையே? 305 00:16:35,829 --> 00:16:36,955 அவர் சிறப்பாகச் செய்தார், அல்லவா? 306 00:16:36,955 --> 00:16:38,207 இல்லை, எனக்குத் தெரியும். 307 00:16:38,207 --> 00:16:40,083 அவரைப் பாரேன். ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார். 308 00:16:40,083 --> 00:16:44,004 அந்த இயந்திரத்தின் மீது பித்துக்கொள்வதற்கு முன், என் அப்பா ஸ்கூட்டர் ஓட்டும் போது இப்படித்தான் இருப்பார். 309 00:16:44,796 --> 00:16:46,089 என் அப்பா சந்தோஷமான அப்பாவாகத்தான் இருந்தார். 310 00:16:46,965 --> 00:16:48,634 இப்போது என்னிடம் இருப்பது... 311 00:16:48,634 --> 00:16:51,845 - சோகமான அப்பாவா? - ஆமாம், சோகமான அப்பாதான் இருக்கிறார். 312 00:16:52,471 --> 00:16:55,390 என் பெற்றோர்கள் இருவரும் அவர்களின் பிம்பத்தில் சிக்கியுள்ளனர். 313 00:16:55,390 --> 00:16:58,477 இப்போது சந்தோஷமாக இருப்பதாக நடிக்க முயல்கிறார்கள், ஆனால் அவர்களால் முடியவில்லை. 314 00:16:59,144 --> 00:17:02,231 சமீப காலமாக, என் வீடு நிலையில்லாமல் இருக்கிறது. 315 00:17:03,732 --> 00:17:05,483 நீ நல்ல முன்பக்கக் கட்டுரைகளைக் கொண்டு வந்தால், 316 00:17:05,483 --> 00:17:07,611 சிலசமயம், நீ என்னுடனேயே தங்கலாம். 317 00:17:09,988 --> 00:17:14,367 அதுதான் விஷயமே. எனக்கு எப்போதும் உன்னுடன் இருக்க வேண்டும் போல இருக்கு. 318 00:17:16,787 --> 00:17:18,539 ஐயோ. சரி. 319 00:17:19,830 --> 00:17:21,834 இது அதிகபட்சமானது. ரொம்பவே அதிகம். 320 00:17:21,834 --> 00:17:23,752 - மன்னித்துவிடு. - இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 321 00:17:23,752 --> 00:17:25,127 எனக்குப் புரிகிறது. 322 00:17:26,046 --> 00:17:30,133 இப்போது என் அப்பாவுடன் நான் நெருக்கமாக உள்ளேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே ஆனால்... 323 00:17:32,594 --> 00:17:35,639 நாங்கள் இருவர் மட்டுமே இருந்தால், அது வீடு போலவே இருக்கிறது. 324 00:17:38,642 --> 00:17:40,310 அப்படியென்றால், நான் இங்கேயே வரவா? 325 00:17:41,895 --> 00:17:42,896 வரலாம். 326 00:17:48,735 --> 00:17:51,071 - இந்தா. - எனக்கு சாவி தருகிறீர்களா, சார்? 327 00:17:51,738 --> 00:17:54,700 அது... ஆமாம். அது கடிதப்பெட்டியின் சாவி. 328 00:17:54,700 --> 00:17:56,410 அது ஒரு குறியீட்டுச் செயல். 329 00:17:56,410 --> 00:17:58,537 உண்மையில், நாங்கள் எங்கள் வீட்டுக் கதவைப் பூட்டுவதே இல்லை. 330 00:17:58,537 --> 00:17:59,955 இதை உறுதியாகத்தான் சொல்கிறாயா? 331 00:17:59,955 --> 00:18:01,331 இல்லை. இல்லவேயில்லை. 332 00:18:01,331 --> 00:18:04,001 இது சட்டவிரோதமானதாக இருக்கக்கூடும், ஏனென்றால், சட்டப்படி நாம் மேஜர் இல்லை. 333 00:18:04,001 --> 00:18:05,085 ஆனால்... 334 00:18:05,586 --> 00:18:08,338 தெரியவில்லை, உன் பெற்றோர் ஒன்றும் சொல்லவில்லை என்றால், நாம் கொஞ்ச நாள் முயற்சிக்கலாம். 335 00:18:08,922 --> 00:18:12,176 அவர்களால் எனக்கு நடந்தவைகளை நினைத்தால், அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும் என தோன்றுகிறது. 336 00:18:12,176 --> 00:18:13,969 ஆனால் டியர்கம்மிங்கின் போது, அவர்களிடம் கேட்கிறேன். 337 00:18:14,636 --> 00:18:15,721 சரி. 338 00:18:17,639 --> 00:18:19,474 ஹே, அதைப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களா? 339 00:18:19,474 --> 00:18:21,560 ஐயோ, அப்பா, உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே? 340 00:18:42,289 --> 00:18:44,458 - அட! சரியான நேரத்திற்கு வந்துவிட்டாய், பிக் டி! - அடக் கட... 341 00:18:44,458 --> 00:18:48,003 நீ ஜியோர்ஜியோ’ஸ் உணவகத்தின் அலங்கார வாகனம் கிளம்புவதற்கு முன்பு நீ அதைப் பார்க்க வேண்டும். 342 00:18:48,003 --> 00:18:49,087 அதைப் பாரு. 343 00:18:50,506 --> 00:18:51,757 ஐயோ, கடவுளே. 344 00:18:55,344 --> 00:18:56,386 ஹேய், என்ன நினைக்கிறீர்கள்? 345 00:18:56,887 --> 00:18:58,430 கண்களைக் கவர்கிறது, இல்லையா? 346 00:18:58,430 --> 00:19:01,433 நான் இதுவரை பார்த்ததிலேயே இதுதான் மிகவும் பயங்கரமான காட்சி என்று உறுதியாகச் சொல்லுவேன். 347 00:19:01,975 --> 00:19:02,976 இது நான்தான். 348 00:19:02,976 --> 00:19:04,061 எனக்கு புரிந்துவிட்டது. 349 00:19:04,061 --> 00:19:05,938 நாம் அலங்காரப் பொம்மைகளில் ஈடுபாடு காட்டுகிறோமா? 350 00:19:05,938 --> 00:19:07,606 அலங்காரப் பொம்மைகளைப் பற்றிய யோசனை என்னுடையது. 351 00:19:07,606 --> 00:19:11,360 விற்பனை இல்லாததால் இழுத்து மூடவிருந்த, “டாடி லாங்லெக்ஸ்” என்ற கடையில்தான் இவற்றை வாங்கினேன், 352 00:19:11,360 --> 00:19:16,114 சிறிய உடற்கட்டும், பெரிய கால்களும் கொண்ட ஆண்களுக்கான ஆடைகளுக்கு பெயர் போன கடை அது. 353 00:19:16,114 --> 00:19:18,951 ஆமாம், இவற்றை என் ஜன்னலுக்கு அருகில் வைத்தால், அத்துமீறி நுழைபவர்கள் 354 00:19:18,951 --> 00:19:20,369 பயந்துவிடுவார்கள் என்று நினைத்தேன், 355 00:19:20,369 --> 00:19:23,163 அதன் பிறகு அவற்றை எங்கு வைத்தேன் என்பதை அடிக்கடி மறந்துவிட்டதால் 356 00:19:23,163 --> 00:19:25,415 அவற்றைப் பார்த்து நானே பயந்துவிடுவேன். 357 00:19:25,415 --> 00:19:27,960 அதனால்தான் அவற்றை அணிவகுப்பில் சேர்க்கும் அற்புதமான யோசனை வந்திருக்கும். 358 00:19:27,960 --> 00:19:30,045 - நாம் அவற்றை நீக்கணும் என நினைக்கிறாயா, பிக் டி? - ஆமாம். 359 00:19:30,045 --> 00:19:32,297 நீங்கள் அவற்றை தூக்கி வீச வேண்டும் என்று நினைக்கிறேன். 360 00:19:32,297 --> 00:19:33,465 வந்து, அவை மிகவும் மோசமாக இருக்கு. 361 00:19:33,465 --> 00:19:35,717 ஒன்று சொல்லவா? ஒருவேளை டஸ்டி சொல்வது சரியாக இருக்கலாம். 362 00:19:35,717 --> 00:19:39,555 ஏற்கனவே நாம் அலங்கார வாகனத்தின்மீது, நம் அபிமான லாட்ச்கீ லாட்ஸ் பாடலைப் பாடுகிறோம். 363 00:19:40,430 --> 00:19:42,099 ஒருவேளை அங்கு நிறைய விஷயங்கள் நடக்கிறது போல. 364 00:19:42,099 --> 00:19:43,225 அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். 365 00:19:43,225 --> 00:19:45,060 ஸ்பகெட்டி பைலின் ராணியாக மாதிரி இருப்பாய். 366 00:19:47,312 --> 00:19:48,522 ஆமாம். 367 00:19:48,522 --> 00:19:51,984 வந்து, ஜியோர்ஜியோ’ஸைப் பிரபலப்படுத்துவதும் என் வேலைகளில் ஒன்று தான். 368 00:19:51,984 --> 00:19:52,943 ஆமாம். 369 00:19:54,862 --> 00:19:56,530 ஆமாம், இது மக்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைக்கிறேன். 370 00:19:56,530 --> 00:19:59,157 ஆம். எப்படியும் இது மறக்க முடியாததாக இருக்கப் போகிறது. 371 00:20:00,200 --> 00:20:02,661 சரி. நாங்கள் அலங்காரப் பொம்மைகளை தூக்கி வீசுகிறோம், நண்பா. 372 00:20:02,661 --> 00:20:04,580 - நல்ல யோசனை. - எனக்கு உன் உதவி தேவை. 373 00:20:04,580 --> 00:20:06,665 இவை கனமாக இருக்கும். இவற்றை நகர்த்த எனக்கு உதவு. 374 00:20:06,665 --> 00:20:08,876 ஹேய். நாம் நடனமாடவிருக்கும் பாட்டிற்கு ஆடிப் பார்ப்போம். 375 00:20:08,876 --> 00:20:11,378 இந்த இடுப்பை ஆட்டும் அசைவை, நாம் நேர்த்தியாக செய்யத் தொடங்கிவிட்டோம். 376 00:20:11,378 --> 00:20:14,590 - ஆமாம். அதைச் செய்யலாம். - சரியா? சரி. 377 00:20:15,966 --> 00:20:17,718 உங்களுக்கு ரொம்ப வலிக்கிறதா? 378 00:20:17,718 --> 00:20:19,761 இல்லை. சொல்லப் போனால், எனக்கு எந்த வலியும் தெரியவில்லை. 379 00:20:19,761 --> 00:20:22,306 நான் தொடாமல், நகர்த்தாமல் இருக்கும் வரை. 380 00:20:22,806 --> 00:20:24,391 அப்பா, உங்களுக்கு டாக்டர் வுட்ஸை நினைவிருக்கா? 381 00:20:24,391 --> 00:20:26,518 இவங்க ஒரு மருத்துவர், நீங்க இவங்களை டேட்டிங்கிற்கு அழைத்திருந்தீர்கள், 382 00:20:26,518 --> 00:20:28,020 அவசர வேலையிருந்ததால், அவங்களால் வர முடியவில்லை, 383 00:20:28,020 --> 00:20:30,480 ஆனால், அவங்களிடம் நீங்கள் மீண்டும் எதுவும் கேட்கவில்லையே? ஞாபகமிருக்கா? 384 00:20:31,148 --> 00:20:33,150 நான் கிளம்ப நீ டாக்ஸியை அழைக்கப் போகிறாய் என்று நினைத்தேன், ஜேக்கப். 385 00:20:33,650 --> 00:20:37,404 டாக்டர் வுட்ஸ் தனக்கு இருக்கும் ஏகப்பட்ட வேலையில் இதற்காக எல்லாம் நேரம் செலவிடத் தேவையே இல்லையே. 386 00:20:37,404 --> 00:20:39,948 இதில் எந்தப் பிரச்சினையுமே இல்லை. நான் ஒரு அறுவை சிகிச்சையில் இருந்தேன். 387 00:20:39,948 --> 00:20:41,033 ஓ, நிச்சயமாகவா? 388 00:20:41,033 --> 00:20:43,410 நீங்கள் அந்த நபரை அப்படியே விட்டுவிட்டு வரவில்லை என்று நம்புகிறேன். 389 00:20:43,410 --> 00:20:45,787 ஐயோ, இல்லை. கடவுளே இல்லை. 390 00:20:45,787 --> 00:20:47,414 எனக்குதான் அறுவை சிகிச்சை நடந்தது. 391 00:20:47,414 --> 00:20:49,333 அது வெறும் கால்விரல் நகம் பாதிப்பு தான். எப்போது வேண்டுமானாலும் போகலாம். 392 00:20:49,333 --> 00:20:52,628 அதெல்லாம் இருக்கட்டும். இப்போது கையைப் பார்க்கலாம். 393 00:20:53,962 --> 00:20:57,299 இது வேடிக்கையாக இருக்கிறது. நான் பனிச்சறுக்களில் கீழே விழாமல், 394 00:20:57,299 --> 00:20:58,967 எல்லா சிக்கலான வடிவங்களையும் முடித்துவிட்டேன். 395 00:20:59,676 --> 00:21:02,846 ஆனால், கடைசியில் ஒரு மோசமான பனிக்கட்டியால், கீழே விழுந்துவிட்டேன். 396 00:21:03,514 --> 00:21:05,224 சாம்போனி ஓட்டுனரை அவர்கள் வேலையிலிருந்து நீக்கணும். 397 00:21:08,894 --> 00:21:09,978 அருமை. 398 00:21:09,978 --> 00:21:11,897 வேடிக்கையாகவும், நன்றாகவும் பனிச்சறுக்கு செய்வீர்களா? 399 00:21:11,897 --> 00:21:13,815 இது ஒரு அரிதான சேர்க்கை. 400 00:21:13,815 --> 00:21:16,693 - அப்படியா? - சரி, கை உடைந்திருப்பதாகத் தோன்றவில்லை. 401 00:21:17,194 --> 00:21:19,696 அப்படியே இது உடைந்திருந்தாலும், சீக்கிரம் சரியாகிவிடும் 402 00:21:19,696 --> 00:21:24,284 ஏனென்றால், நான் பார்த்த வரையில் நீங்கள் ரொம்ப திடமாகத்தான் இருக்கிறீர்கள். 403 00:21:25,118 --> 00:21:28,455 இதைத் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி, ஏனெனில் எனக்கு நடிகர்கள் தேவையென்றால், 404 00:21:28,455 --> 00:21:30,499 உடற்கட்டால் கவனத்தைச் சற்று சிதறடிக்கும்... 405 00:21:32,417 --> 00:21:35,295 - டாக்டரை நான் கண்டுபிடிக்கவேண்டும்... - சரி, நாம் இப்போது செல்லலாம், இல்லையா? 406 00:21:35,295 --> 00:21:36,839 அப்பா, உங்களை டியர்கம்மிங்கில் சந்திக்கிறோம், சரியா? 407 00:21:36,839 --> 00:21:38,131 சரி, மகனே. 408 00:21:38,882 --> 00:21:39,925 சரி. 409 00:21:39,925 --> 00:21:41,593 இங்குத் தொட்டால் உங்களுக்கு வலிக்கிறதா? 410 00:21:42,761 --> 00:21:45,889 அது என்னுடைய மார்பு. எனக்கு அங்கு அடிப்படவில்லை. 411 00:21:45,889 --> 00:21:49,643 அதனால்... அது நன்றாக இருக்கிறது. 412 00:21:51,353 --> 00:21:55,899 பிக் டி, இங்கு பெரும்பாலான பளு தூக்கும் வேலைகளை நான்தான் செய்கிறேன் என்று தோன்றுகிறது, ப்ரோ. 413 00:21:55,899 --> 00:21:58,235 அவை உனக்கு மிகவும் கனமாக இருந்தால், அதில் ஒன்றும் தவறில்லை. 414 00:21:58,235 --> 00:22:00,279 இல்லை, இவை கனமாக இல்லை. கொஞ்சம் ஒருமாதிரி இருக்கு. 415 00:22:00,279 --> 00:22:02,906 நீ புவிஈர்ப்பு மையத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், நண்பா. 416 00:22:02,906 --> 00:22:04,700 அதை கவட்டை வழியாகப் பிடிக்க முயற்சி செய். 417 00:22:04,700 --> 00:22:07,703 சரி. ஒன்று சொல்லவா? இது ரொம்பவும் கனமாக இருக்கிறதுதான். 418 00:22:08,287 --> 00:22:10,622 இப்போதுதான் ஞாபகம் வந்தது, எனக்கு ஒரு அவசர வேலை இருக்கிறது. 419 00:22:10,622 --> 00:22:13,876 அதனால், இந்த நீளமான அசிங்கத்தில் இருந்து கொஞ்ச நேரம் நான் விலகுகிறேன். 420 00:22:13,876 --> 00:22:16,795 பொறு, என்ன? இதைவிட வேறு எது முக்கியமானதாக இருக்க முடியும்? 421 00:22:16,795 --> 00:22:19,131 அது பள்ளி சம்பந்தப்பட்ட விஷயம், அதைக் கொஞ்சம் கவனித்தாக வேண்டும். 422 00:22:19,715 --> 00:22:21,508 {\an8}பொறு, இது ஆலிஸ் பற்றியதா? 423 00:22:21,508 --> 00:22:23,844 - இது முடிந்துவிட்டது என அவளிடம் சொல்லிவிட்டாயா? - சொல்லிவிட்டேன். 424 00:22:23,844 --> 00:22:25,637 ஆமாம், ஆனால், அவளிடம் இன்னொரு விஷயத்தை பற்றி கேட்கணும். 425 00:22:25,637 --> 00:22:27,890 வேண்டாம், ப்ரோ. இப்போது நீ காஸியுடன் திரும்ப சேர்ந்திருக்கிறாய். 426 00:22:27,890 --> 00:22:29,433 நாங்கள் ஏற்கனவே உங்களுக்கான பாடலைப் பாடிவிட்டோம். 427 00:22:29,433 --> 00:22:31,560 ஆம், நான் அவளிடம் சென்று கொஞ்ச நேரம் பேசப் போகிறேன். 428 00:22:31,560 --> 00:22:33,353 கண்டிப்பாக அதற்கு நான் விடமாட்டேன், ப்ரோ. 429 00:22:33,353 --> 00:22:34,688 என்னைப் போக விடு, ஜியோர்ஜியோ. 430 00:22:34,688 --> 00:22:36,190 நான் உன்னைப் போக விடமாட்டேன், டி. 431 00:22:36,190 --> 00:22:37,983 இல்லை, நில்லு, டி. நில்லு. 432 00:22:37,983 --> 00:22:40,944 - ஜியோர்ஜியோ, தடுக்காதே. - முடியாது. 433 00:22:40,944 --> 00:22:42,654 அலங்காரப் பொம்மைகளை வன்மையான முறையில் அடிக்காதே, டி. 434 00:22:42,654 --> 00:22:44,573 - என்ன, டா! வேண்டாம்... - இதற்கு மேல் நிலைமையை மோசமாக்காதே! 435 00:22:44,573 --> 00:22:45,532 நிறுத்து. இல்லை. 436 00:22:45,532 --> 00:22:48,410 நேட்-ஐ பயமுறுத்திய, இந்தக் கருமம் பிடித்த காம பொம்மையை, என் முன் கொண்டு வராதே. 437 00:22:48,410 --> 00:22:51,663 - இதை அந்த மாதிரி சொல்லாதே, டி! - நான் அதனுடைய சிறிய தலையை உடைத்துவிடுவேன்! 438 00:22:51,663 --> 00:22:53,540 இல்லை, நான் உன்னை அவளோடு பேச விடமாட்டேன், டா. 439 00:22:56,335 --> 00:22:57,336 நான் அவளது பிம்பத்தில் இருந்திருக்கிறேன். 440 00:22:58,212 --> 00:22:59,880 - என்ன, உண்மையாகவா? - ஆமாம். 441 00:22:59,880 --> 00:23:01,673 - நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? - தெரியவில்லை. அவள் என்னிடம் சொல்லவில்லை. 442 00:23:01,673 --> 00:23:03,342 அதைப் பற்றித்தான் அவளிடம் பேசப் போகிறேன். 443 00:23:04,259 --> 00:23:07,137 {\an8}இங்கே பார், நான் காஸுடன் இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சிக்கிறேன், ஆனால் ஏதோ ஒன்று உறுத்துகிறது. 444 00:23:07,137 --> 00:23:10,140 அங்கு ஏதோ ஒன்று இருக்கிறது. அல்லது அங்கு ஏதோ ஒன்று வளர்கிறது. 445 00:23:10,807 --> 00:23:14,144 காஸுடன் இருந்த நேரத்தில், நான் பல விஷயங்களை மிஸ் பண்ணியிருக்கலாம், 446 00:23:14,144 --> 00:23:16,104 ஆனால், அவற்றை மிஸ் பண்ணுவதை நான் உணராமல் இருந்திருக்கலாம். 447 00:23:16,104 --> 00:23:18,023 எது மாதிரி? தெளிவாகச் சொல். 448 00:23:19,608 --> 00:23:21,109 தெரியவில்லை. 449 00:23:22,736 --> 00:23:23,820 ஆலிஸுடன், எல்லாம் எளிமையாக இருக்கு. 450 00:23:25,280 --> 00:23:27,491 நாங்கள் ஒன்றாக இருக்கும் போது, எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்போம், 451 00:23:27,491 --> 00:23:28,867 {\an8}அவள் இயல்பாக நடந்துகொள்வாள். 452 00:23:29,826 --> 00:23:32,496 {\an8}அவளுடன் இருக்கும்போது, நான் இருக்கும் விதம் எனக்கே பிடிச்சிருக்கு. 453 00:23:33,330 --> 00:23:34,915 ஆனால், அது மறைந்துவிடும். எனக்கு அது புரிகிறது. 454 00:23:34,915 --> 00:23:38,961 நான்... இது ஒரு நல்ல ஒப்பீடு இல்லை, ஏனெனில் இது புதியது. 455 00:23:38,961 --> 00:23:42,005 எனக்கு அது புரிகிறாது, அதோடு நான் விலக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். 456 00:23:43,173 --> 00:23:44,883 - ஒன்றைத் தவிர... - நீ அவளுடைய பிம்பத்தில் இருந்தது. 457 00:23:45,843 --> 00:23:49,012 இது விசித்திரமானது, ஏனென்றால் பெரும்பாலான பிம்பங்கள், அவை, 458 00:23:49,012 --> 00:23:51,390 மக்களில் கடந்த அல்லது நிகழ்கால விஷயங்கள்தான். 459 00:23:51,390 --> 00:23:54,643 ஆனால் நீ, ஆலிஸின் பிம்பத்தில் வந்தபோது உங்கள் இருவருக்கும் பரிச்சயம் கூட இல்லை, 460 00:23:54,643 --> 00:23:58,355 அதனால், இது ஒரு வகையில் எதிர்காலத்திற்கான பிம்பமாக இருக்கலாம். 461 00:23:59,398 --> 00:24:01,191 இது ஒரு வியக்கத்தக்க தெளிவான சிந்தனை. 462 00:24:02,401 --> 00:24:03,527 ஆனால் இதற்கு என்ன அர்த்தம்? 463 00:24:03,527 --> 00:24:05,487 எனக்குத் தெரியவில்லை, ப்ரோ. 464 00:24:06,738 --> 00:24:09,950 {\an8}ஆனால் நான் உன்னிடத்தில் இருந்தால், அது என்னவென்று தெரிந்துகொள்ள விரும்புவேன். 465 00:24:20,002 --> 00:24:22,004 நான்... நான்... 466 00:24:22,004 --> 00:24:23,172 - சரி. - சரி, நாம் ஆரம்பிக்கலாம். 467 00:24:23,172 --> 00:24:24,965 - ஐந்து, ஆறு, ஏழு... - ஐந்து, ஆறு, ஏழு, எட்டு... 468 00:24:24,965 --> 00:24:29,636 அந்த வரிசையில் நிற்கின்றேன், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை 469 00:24:29,636 --> 00:24:33,682 உன்னுடைய காதல் இல்லாமல் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை 470 00:24:33,682 --> 00:24:35,726 - சரி. - அருமையாக இருந்தது! 471 00:24:35,726 --> 00:24:37,186 சரி, அதன் பிறகு, நாம் இப்படிச் சொல்லுவோம், 472 00:24:37,186 --> 00:24:39,771 “ஜியோர்ஜியோ’ஸில், நீங்கள் ஒரு போதும் வரிசையில் நிற்க வேண்டியதில்லை ஏனென்றால் 473 00:24:39,771 --> 00:24:43,066 - உங்களுக்கு உடனுக்குடன் பரிமாறிவிடுவோம்!” - உங்களுக்கு பரிமாறிவிடுவோம்... 474 00:24:43,066 --> 00:24:45,819 ஆமாம். அது ரொம்ப நேர்த்தியாகவும், உண்மையாகவும் இருக்கிறது. 475 00:24:46,486 --> 00:24:48,238 - எனக்குத் தெரியவில்லை. - என்ன? 476 00:24:48,238 --> 00:24:50,574 ஐயோ, என் அம்மா அங்கே இருப்பாங்களே. இதை நார் நாராக கிழிக்கப் போறாங்க. 477 00:24:50,574 --> 00:24:52,451 யாரும் அக்கறை காட்ட மாட்டாங்க. 478 00:24:52,451 --> 00:24:54,536 நீ உன்னுடைய அம்மாவுடன் கடைசியாக எப்போது பேசினாய்? 479 00:24:54,536 --> 00:24:56,747 - கொஞ்ச நாளாகிவிட்டது. - ஆம், அதேதான். 480 00:24:56,747 --> 00:25:00,292 நீ அவங்களுடன் பேசுவதை நிறுத்தியது, பல வகையில் நல்லது தான். 481 00:25:00,292 --> 00:25:02,336 இன்னும் ஏன் நீ உன்மீதே சந்தேகப்படுகிறாய்? 482 00:25:02,836 --> 00:25:03,837 எனக்குத் தெரியவில்லை. 483 00:25:04,963 --> 00:25:07,508 அதாவது, டஸ்டி தான் இதைச் சொன்னார், 484 00:25:07,508 --> 00:25:09,510 “அருமை, நீ ஸ்பகெட்டிகளின் ராணியாக போகிறாய்.” 485 00:25:10,219 --> 00:25:11,220 இது என்ன? 486 00:25:11,220 --> 00:25:13,722 -“ராயல்டி” என்றால் இதுதானா? - அவனைக் கண்டுகொள்ளாதே. 487 00:25:13,722 --> 00:25:14,890 ஆனால் என்னால் முடியாது. 488 00:25:15,516 --> 00:25:16,517 நான் செய்யவும் மாட்டேன். 489 00:25:20,229 --> 00:25:24,858 இது ஒரு நகைச்சுவைதான், ஆனால், அங்கு இது போல பல நகைச்சுவை இருக்கும். 490 00:25:24,858 --> 00:25:26,109 ஆமாம். 491 00:25:26,693 --> 00:25:29,571 சின்னதோ, பெரியதோ, நான் எதையாவது பற்றி உற்சாகமாக இருக்கும் போதெல்லாம்... 492 00:25:29,571 --> 00:25:31,073 அது ஒரு விஷயமாகவே இருக்காது... 493 00:25:31,573 --> 00:25:34,868 அதைப் பற்றி அவர் கிண்டலாக, விமர்சனம் செய்வார். 494 00:25:35,369 --> 00:25:38,664 பாடலாக இருந்தாலும் சரி, அல்லது... ஜியோர்ஜியோ’ஸில் எனக்கு வேலை கிடைத்தாக இருந்தாலும் சரி, 495 00:25:38,664 --> 00:25:41,792 - அல்லது ஆற்றல் நிதியோ, அல்லது... - அல்லது கதை சொல்பவர்கள். 496 00:25:41,792 --> 00:25:43,752 அல்லது கதை சொல்பவர்களாக இருந்தாலும். சரியாகச் சொன்னாய். 497 00:25:44,628 --> 00:25:45,838 மேலும் இன்னும் நிறைய இருக்கின்றன. 498 00:25:47,047 --> 00:25:50,425 ஒருவருடன் ஆண்டாண்டு காலங்கள் இருந்த பிறகும் கூட, 499 00:25:51,093 --> 00:25:53,679 அவையெல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. 500 00:25:56,974 --> 00:26:00,102 ஆமாம், நான் என்னுடைய அம்மாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டேன், 501 00:26:00,102 --> 00:26:03,480 ஆனால், என்னுடைய பிம்பத்திற்கு இரண்டாம் பகுதியும் இருக்கிறது. 502 00:26:04,815 --> 00:26:08,277 அதைத் தவிர்க்க நான் எவ்வளவு முயற்சித்தாலும், என் மூலையில் இன்னொரு குரல் கேட்டு கொண்டேயிருக்கு. 503 00:26:08,277 --> 00:26:12,447 சில சமயம், அது என்னை மிகவும் கீழ்த்தனமாக உணர வைக்கிறது. 504 00:26:13,615 --> 00:26:15,367 அந்தக் குரல் ஐரிஷ் உச்சரிப்பில் இருக்குமா? 505 00:26:27,504 --> 00:26:29,339 ஆலிஸ், நாம் கொஞ்சம் பேச வேண்டும். 506 00:26:29,840 --> 00:26:32,384 - இப்போது ஒத்திகை பார்த்துகொண்டிருக்கிறேன், அதனால்... - இது உன்னுடைய தொப்பியா? 507 00:26:33,385 --> 00:26:35,262 நான் போட்டிருக்கும் தொப்பி என்னுடைய தொப்பியா? ஆமாம். 508 00:26:35,262 --> 00:26:37,139 இதைப் பற்றி தான் பேச வந்தீர்களா? 509 00:26:37,139 --> 00:26:39,433 இல்லை, இல்லை. உன்னுடைய பிம்பத்தில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியணும். 510 00:26:40,017 --> 00:26:42,102 - டஸ்டி... - சத்தியமாக, அதன்பின் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன். 511 00:26:44,188 --> 00:26:45,272 சரி, வாங்க. 512 00:26:47,733 --> 00:26:48,901 உங்களிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேனே. 513 00:26:48,901 --> 00:26:52,821 நான் காற்றில் அப்படியே, அதன் போக்கில் மிதந்தேன். 514 00:26:53,322 --> 00:26:54,615 ஆமாம், ஆனால், அதில் நான் எப்படி வந்தேன்? 515 00:26:56,533 --> 00:27:01,788 சரி. ஆரம்பத்தில், நான் விமானத்தில் நின்றுக்கொண்டு, கீழே குதிக்க ரொம்பவும் பயத்தோடு இருந்தேன். 516 00:27:01,788 --> 00:27:03,832 நீங்களும் என்னுடன் விமானத்தில் இருந்தீர்கள். 517 00:27:05,000 --> 00:27:06,251 அது நான்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்? 518 00:27:07,211 --> 00:27:08,629 ஏனென்றால் அந்த அனிமேஷன் உங்களைப் போலவே இருந்தது. 519 00:27:10,422 --> 00:27:14,676 அதோடு, நீங்கள் உங்களுடைய கமோ ஸ்கூட்டர் தலைகவசத்தை என்னிடம் கொடுத்தீர்கள். 520 00:27:15,761 --> 00:27:21,433 இதை எனக்குப் போட்டுவிட்டு, என்னை ரொம்பவும் இலகுவாக விமானத்தில் இருந்து கீழே தள்ளினீர்கள். 521 00:27:24,394 --> 00:27:26,647 நான் குதிக்க வேண்டிய அளவுக்கு என்னைத் தள்ளிவிட்டது நீங்கள்தான். 522 00:27:30,442 --> 00:27:33,403 ஆம், எனக்குத் தெரியவில்லை, அதனால் நான் எப்படி உணர்ந்தேன் என்றால்... 523 00:27:33,403 --> 00:27:37,074 உண்மையாகவே, நீங்கள் ஏதோவொரு வகையில் எனக்கு உதவப் போவதாக நினைத்தேன். 524 00:27:37,074 --> 00:27:39,201 அதனால்தான், உங்களை அவ்வளவு தீவிரமாக பின்தொடர்ந்தேன். 525 00:27:39,201 --> 00:27:43,372 அதனால்தான் உங்களுடைய சுய-ஆய்வு பற்றி கேள்விப்பட்ட பிறகு உங்களை மண்டபத்தில் துரத்தினேன். 526 00:27:45,290 --> 00:27:49,586 சரி. ஆனால் இப்போது, தொடர்ந்து இரண்டு முறை, அந்த மார்ஃபோ இயந்திரம் என்னைக் கடுப்பேற்றிவிட்டது. 527 00:27:49,586 --> 00:27:53,173 என் திறன் “செல்லோ” இசைக் கருவியை வாசிப்பதுதான் என்று அது சொன்னது. 528 00:27:53,173 --> 00:27:54,591 நான் கைவிட்ட ஒரு கனவு. 529 00:27:55,801 --> 00:27:57,344 நீங்கள் என் பிம்பமாக இருந்தீர்கள். 530 00:27:58,554 --> 00:27:59,972 இப்போது அதுவும் என் கைவிட்டுப் போகிறது. 531 00:28:01,557 --> 00:28:03,517 நீங்க ஏன் என் பிம்பத்தில் இருந்தீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது, 532 00:28:03,517 --> 00:28:05,310 ஏனெனில், தெளிவாக நான் உங்களுடைய பிம்பத்தில் இல்லையே. 533 00:28:09,857 --> 00:28:10,899 என்ன? 534 00:28:14,111 --> 00:28:16,363 என்னுடைய பிம்பத்தில் வேறு ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கிறேன். 535 00:28:16,363 --> 00:28:18,282 அதாவது, அந்த நேரத்தில், எல்லாம் வேகமாக நடந்துவிட்டது, 536 00:28:18,282 --> 00:28:21,869 ஆனால், ஸ்கீ ஜம்ப் செய்யும்போது யாரோ ஒருவர் எனக்கு பக்கத்தில் இருந்தார் என்று நினைக்கிறேன். 537 00:28:25,247 --> 00:28:27,666 எனக்குத் தெரியவில்லை. உண்மையாகவே அது நீதானா அல்லது இப்போது உன்னைப்பற்றிய 538 00:28:27,666 --> 00:28:32,087 என்னுடைய உணர்வுகளை நியாயப்படுத்த நீதான் அங்கு இருந்ததாகச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. 539 00:28:36,216 --> 00:28:38,969 நிச்சயமாக, நான் படிப்பதற்காக கண்ணாடியை அணிவதற்கு முன்பே, இது நடந்தது. 540 00:28:39,803 --> 00:28:42,556 அது நீயாக இருந்தால் என்ன செய்வது? அதற்கு உண்மையில் என்னதான் அர்த்தம்? 541 00:28:43,432 --> 00:28:45,517 அந்த இயந்திரம் இன்னும் தெளிவான விளக்கங்களுடன் இருந்திருக்கக் கூடாதா? 542 00:28:45,517 --> 00:28:47,978 நம்முடைய பிம்பங்ககளை, ஏன் நம்மால் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியவில்லை? 543 00:28:50,480 --> 00:28:52,608 எனக்குத் தெரிந்த அனைத்தையும் உங்களிடம் சொல்லிவிட்டேன், டஸ்டி. 544 00:28:54,735 --> 00:28:55,777 வாழ்த்துக்கள். 545 00:29:07,873 --> 00:29:09,499 திரு. ஜான்சன், நான் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். 546 00:29:09,499 --> 00:29:12,461 மார்ஃபோவையா? உன்னிடம் இன்னொரு கார்டு இருக்கிறதா? 547 00:29:12,461 --> 00:29:13,921 எனக்கு இன்னொரு கார்டு தேவை என்று யார் சொன்னது? 548 00:29:13,921 --> 00:29:16,590 அந்த இயந்திரம். அதுதான் சொன்னது. 549 00:29:16,590 --> 00:29:19,551 ஆம், போன முறை நம்முடைய சோஷியல் செக்யூரிட்டி நம்பர்களும், கைரேகையும் 550 00:29:19,551 --> 00:29:21,803 தேவைப்படுவதாக அது சொன்னது. அது உண்மையில்லை, இல்லையா? 551 00:29:21,803 --> 00:29:24,014 இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதற்காக நீ அதை... 552 00:29:24,014 --> 00:29:26,099 அது “தொடரவா” என்று கேட்டது, சரியா? 553 00:29:26,099 --> 00:29:29,144 என் பிம்பத்திற்குப் பிறகும், மற்ற அனைவருடைய பிம்பத்திற்குப் பிறகும் “தொடரவா” என்று கேட்டது. 554 00:29:29,144 --> 00:29:32,314 எனவே, இதைத் தொடர கண்டிப்பாக ஒருவழி இருக்கும். இதற்கு அடுத்தடுத்த நிலைகள் கண்டிப்பாக இருக்கும். 555 00:29:33,607 --> 00:29:34,608 {\an8}தொடங்க, கார்டை புகுத்தவும் 556 00:29:34,608 --> 00:29:36,985 {\an8}சரி, மார்ஃபோ, இதைத் தொடர விரும்புகிறோம், தயவுசெய்து தொடரு. 557 00:29:36,985 --> 00:29:40,030 உன்னுடைய தெளிவற்ற கார்ட்டூன்களை பார்த்து நாங்கள் ரசித்திருக்கிறோம், 558 00:29:40,030 --> 00:29:41,657 ஆனால் இப்போது எங்களுடைய வாழ்க்கையை நோக்கிச் செல்ல விரும்புகிறோம். 559 00:29:41,657 --> 00:29:45,202 அதனால், இங்கு எங்களுக்கு நீ ஏதாவது பதிலை கொடுத்துத் தொலைத்தால் நன்றாக இருக்கும்... 560 00:29:45,202 --> 00:29:46,954 - வேண்டாம், டஸ்டி. - நான் பேசுவது கேட்கிறதா? 561 00:29:47,704 --> 00:29:49,373 நான் பேசுவது கேட்கிறதா, மார்ஃபோ? 562 00:29:49,373 --> 00:29:52,793 {\an8}நாங்கள் அடுத்தகட்டத்திற்குப் போக விரும்புகிறோம், தயவுசெய்து வழிகாட்டு, முட்டாள் இயந்திரமே. 563 00:29:53,377 --> 00:29:57,256 எதிர்காலத்தைக் கணிக்கும், கம்ப்யூட்டர் ஜோசியமே! 564 00:30:00,425 --> 00:30:01,552 தயவுசெய்து கையேட்டைப் பார்க்கவும் 565 00:30:01,552 --> 00:30:02,678 என்ன? 566 00:30:04,596 --> 00:30:05,806 என்ன கையேடு? 567 00:30:09,309 --> 00:30:11,687 ஓ, டஸ்டி, நீ என்ன செய்துவிட்டாய்? 568 00:30:19,778 --> 00:30:21,697 எம். ஓ. வால்ஷ் எழுதிய புத்தகத்தைத் தழுவியது 569 00:31:35,771 --> 00:31:37,773 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்