1 00:00:23,106 --> 00:00:24,358 ஏதாவது ஐஸ்கிரீம் இருக்கிறதா? 2 00:00:28,695 --> 00:00:30,072 உங்களுக்குக் கொஞ்சம் வேண்டுமா? 3 00:00:31,365 --> 00:00:32,658 பரவாயில்லை, நன்றி. 4 00:00:58,725 --> 00:01:00,018 என்கிரிப்ட் செய்யப்படுகிறது 5 00:01:00,018 --> 00:01:01,144 டேட்டாபேஸ் தேடல் 6 00:01:03,772 --> 00:01:08,360 டேட்டாபேஸில் தேடுகிறது 7 00:01:11,154 --> 00:01:12,614 டெலாஜ், கேப்ரியல் 8 00:01:19,371 --> 00:01:20,372 ஹேய். 9 00:01:22,332 --> 00:01:23,458 ஹேய். 10 00:01:24,126 --> 00:01:25,544 என்னை மன்னித்துவிடு. நான்... 11 00:01:28,130 --> 00:01:29,882 ரிச்சர்ட் உன்னைத் தேர்ந்தெடுத்தது மிகவும் நல்லது. 12 00:01:29,882 --> 00:01:31,300 நீ அதற்கு தகுதியானவன். 13 00:01:31,300 --> 00:01:33,635 நான்... -எனக்குத் தெரியும். 14 00:01:34,761 --> 00:01:37,723 பார், நான் உன் வழியில் இருந்து விலகி இருப்பேன். சரியா? 15 00:01:38,557 --> 00:01:40,309 நீ அப்படி செய்ய வேண்டியதில்லை. 16 00:03:54,067 --> 00:03:55,611 திரு. ஜனாதிபதி, அதிகரித்து வரும் ஆபத்தான சைபர் 17 00:03:55,611 --> 00:03:57,613 தாக்குதல்களால் இங்கிலாந்துகாரர்கள் அவதியடைகிறார்கள். 18 00:03:58,947 --> 00:04:00,908 லண்டனில் உள்ள சிரிய ஹேக்கர்களில் ஒருவனை தாக்கியதற்கு 19 00:04:00,908 --> 00:04:03,577 நம்முடைய ஏஜென்ட் ஒருவர்தான் பொறுப்பு என்று அவர்கள் நினைக்கிறார்கள். 20 00:04:05,370 --> 00:04:07,748 சரி, அது உண்மையா? -நிச்சயமாக இல்லை. 21 00:04:07,748 --> 00:04:09,791 டிஜிஎஸ்இ சம்பந்தப்படாமல் இருக்க ஒரு வெளி ஏஜென்டை நியமித்தோம். 22 00:04:09,791 --> 00:04:11,418 நீங்கள் டிஜிஎஸ்இ-ஐப் பாதுகாக்கிறீர்களா, டிடியர்? 23 00:04:12,002 --> 00:04:15,047 அதன் அழகே அவன் கைது செய்யப்பட்டால், எல்லா தொடர்புகளையும் நாம் மறுக்க முடிவதுதான். 24 00:04:15,047 --> 00:04:17,673 இதுவரை நல்ல விளைவுகளைப் பார்க்கவில்லை. 25 00:04:18,966 --> 00:04:21,136 இந்த "ஏஜென்ட்டை" எங்கே கண்டுபிடித்தீர்கள்? 26 00:04:22,554 --> 00:04:24,389 அலைன் டூமாஸின் நிறுவனம், டெல்கிஸ் மூலம். 27 00:04:25,015 --> 00:04:26,350 அவர் யார்? 28 00:04:27,309 --> 00:04:31,313 டூமாஸ் ஒரு டிஜிஎஸ்இ பிரபலம், ஓய்வுபெற்று தனது சொந்த பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 29 00:04:31,313 --> 00:04:34,316 நாம் இங்கிலாந்துக்காரர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் சார். 30 00:04:34,316 --> 00:04:37,194 முற்றிலும் இல்லை. சிரியர்கள் தான் முதலில் நம்மை தொடர்பு கொண்டனர். 31 00:04:37,194 --> 00:04:40,948 இந்த பலனை ஏன் ஃபிரான்ஸ் இழக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. 32 00:04:40,948 --> 00:04:43,534 ஏனென்றால் அவர்கள் திட்டமிடும் தாக்குதல்கள் முதலில் இங்கிலாந்தை குறிவைத்துத்தான். 33 00:04:43,534 --> 00:04:45,160 ஆனால் ஐரோப்பா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளாகவும் இருக்கலாம். 34 00:04:45,160 --> 00:04:46,995 அப்படியிருந்தால், நாம் "இங்கிலாந்துக்காரர்கள்" என்று அழைக்கும் அவர்கள், 35 00:04:46,995 --> 00:04:49,706 நமக்கு உதவமாட்டார்கள். அவர்கள் எப்போதும் போல தங்களைத் தாங்களே 36 00:04:49,706 --> 00:04:50,874 பார்த்துக் கொள்வார்கள். 37 00:04:52,084 --> 00:04:53,752 இணையப் பாதுகாப்பில் அவர்களது நிலை என்ன? 38 00:04:54,586 --> 00:04:56,880 அவர்கள் இன்னும் ஐரோப்பிய ஒன்றிய இணையப் பாதுகாப்புக் கவசத்தின் ஒரு பகுதி, இல்லையா? 39 00:04:56,880 --> 00:04:59,091 ஆம். ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். 40 00:05:00,384 --> 00:05:02,302 எனவே அந்தப் பிரச்சினை தீர்ந்தது. 41 00:05:04,847 --> 00:05:06,682 சரியா? நன்றி, செயின்ட் ராச் மேடம். 42 00:05:09,518 --> 00:05:11,728 நல்ல நாளாக அமையட்டும், திரு ஜனாதிபதி. 43 00:05:37,546 --> 00:05:42,801 தேம்ஸ் தடுப்புகள் தோல்வியடைந்து நூற்றாண்டு காணாத மிக மோசமான வெள்ளம் தலைநகரில் ஏற்பட்டதால் 44 00:05:42,801 --> 00:05:45,554 லண்டனில் மாபெரும் தூய்மைப் பணி நடந்து வருகிறது. 45 00:05:45,554 --> 00:05:48,140 சரி. -நூற்றுக்கணக்கான வரலாற்று கட்டிடங்கள்... 46 00:05:49,308 --> 00:05:50,934 செல்லம். 47 00:05:53,729 --> 00:05:55,105 வந்துவிட்டாய். 48 00:05:58,233 --> 00:06:00,444 கோக் ஏதாவது? -ஓ, இல்லை... 49 00:06:01,528 --> 00:06:04,615 "அப்பா, நீங்கள்தான் சிறந்தவர். என் மதிய உணவை செய்ததற்கு நன்றி" என்று சொல்வது எப்படி. ம்? 50 00:06:05,616 --> 00:06:07,075 என் மதிய உணவை செய்ததற்கு நன்றி, அப்பா. 51 00:06:10,579 --> 00:06:12,873 கிம், உன் பள்ளி பயணத்தில் மகிழ்ச்சியாக இரு. 52 00:06:14,541 --> 00:06:15,667 ஹேய், கிம். 53 00:06:15,667 --> 00:06:17,294 நன்றி, ஆலிசன். 54 00:06:18,962 --> 00:06:21,048 வருகிறேன். பிறகு பார்க்கலாம். 55 00:06:22,299 --> 00:06:23,342 சரி. 56 00:06:23,342 --> 00:06:24,968 நான் குழந்தை இல்லை. 57 00:06:26,678 --> 00:06:28,430 இங்கே வா. 58 00:06:28,430 --> 00:06:29,848 ஆம், வா. 59 00:06:32,768 --> 00:06:34,603 நீ எப்போதும் எனக்கு குழந்தைதான். 60 00:06:37,856 --> 00:06:39,399 உன் முகத்தைப் பார். 61 00:06:54,831 --> 00:06:56,083 மதுப்பழக்கம் உதவி தேவையா? உங்கள் சந்திப்பைக் கண்டறியுங்கள்! 62 00:06:56,083 --> 00:06:57,501 பிரிக் லேன் மெதடிஸ்ட் தேவாலயம் லண்டன் காலை 8 மணி 63 00:07:24,820 --> 00:07:26,780 ஹாய். வரவேற்கிறேன். 64 00:07:27,281 --> 00:07:29,867 தயவுசெய்து, சௌகரியமாக இருக்கையில் அமருங்கள். 65 00:07:29,867 --> 00:07:31,118 சரி. 66 00:07:36,999 --> 00:07:38,458 சரி. 67 00:07:39,126 --> 00:07:43,922 எனவே, என் பெயர் மார்ட்டின், நான் குடிக்கு அடிமையானவன். 68 00:07:43,922 --> 00:07:45,883 ஹாய், மார்ட்டின். -ஹாய், மார்ட்டின். 69 00:07:45,883 --> 00:07:47,134 காலை வணக்கம். 70 00:07:48,594 --> 00:07:50,721 எனவே, இந்த வாரத்தை எங்கிருந்து தொடங்கலாம்? 71 00:07:51,221 --> 00:07:52,931 யார் பகிர்ந்துகொள்ள நினைக்கிறீர்கள்? 72 00:07:54,683 --> 00:07:57,311 சைமன், உங்களிடமிருந்து தொடங்கலாமா? 73 00:07:58,228 --> 00:07:59,938 சரி. ஹாய். 74 00:08:01,231 --> 00:08:04,526 கடைசியாக நாம் சந்தித்தபோது, நீங்கள் சிரமப்படுவதாக சொன்னதாக நினைவு. 75 00:08:06,320 --> 00:08:07,946 ஆம். ஹாய். 76 00:08:23,629 --> 00:08:25,255 என்னை எப்படி கண்டுபிடித்தாய்? 77 00:08:26,173 --> 00:08:27,591 நீ எங்கே இருக்கிறாய் என்று எப்போதும் தெரியும். 78 00:08:28,634 --> 00:08:30,844 உன்னைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல, தெரியுமா? 79 00:08:32,304 --> 00:08:36,350 ஆனால் கவலைப்படாதே, நான் உனக்காக இங்கு இல்லை. இது ஒரு தற்செயல் நிகழ்வுதான். 80 00:08:37,601 --> 00:08:38,977 எனவே, உனக்கு என்ன வேண்டும்? 81 00:08:40,895 --> 00:08:41,938 வலீத் ஹம்சா. 82 00:08:44,566 --> 00:08:46,693 அவன் எங்கே என்று சொல், நான் போய்விடுவேன். -ஏன்? 83 00:08:47,819 --> 00:08:49,404 நீ எனக்கு கடன்பட்டிருக்கிறாய், அப்படி நினைக்கவில்லையா? 84 00:08:50,155 --> 00:08:53,075 அவனைக் கொல்ல வேண்டுமா? படங்களைப் பார்த்தேன். அவனை மோசமாக தாக்கியிருக்கிறாய். 85 00:08:53,075 --> 00:08:55,494 அவன் இறந்துவிட்டானா? இல்லையா? நல்லது. 86 00:08:55,494 --> 00:08:58,705 நான் உடனே போலீஸ்காரர்களை அழைக்க வேண்டும். -அழை. 87 00:09:03,252 --> 00:09:04,628 நாம் இங்கே இருக்க முடியாது. 88 00:09:05,128 --> 00:09:06,713 வண்டியில் ஏறு. -இது ஒரு அழைப்பா? 89 00:09:14,680 --> 00:09:16,974 ஹேய், அது பதில் இல்லை. வா. 90 00:09:17,933 --> 00:09:20,727 எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, அதுதான்... -ஆனால்? 91 00:09:23,063 --> 00:09:24,398 அவர் மிகவும் வித்தியாசமானவர். 92 00:09:26,024 --> 00:09:27,693 முதலில் என்னைப் புறக்கணித்தார். 93 00:09:38,287 --> 00:09:42,249 அவள் அவ்வளவு நட்பாக பழகுவதில்லை. அது நிஜம்தான். 94 00:09:42,249 --> 00:09:43,876 அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடு, ம்? 95 00:09:44,960 --> 00:09:47,212 அம்மா உங்களை மணந்துகொள்ள மாட்டேன் என்றார். -ஏய். 96 00:09:47,921 --> 00:09:50,883 ஆலிசனைப் பற்றி தெரிந்துகொள்ள உன் அம்மா முயற்சி செய்ததில்லை. 97 00:09:51,633 --> 00:09:55,012 சரி. அவர் நிஜ மனிதர் என்று நீங்கள் எனக்கு சத்தியம் செய்யலாம். 98 00:09:56,305 --> 00:09:57,681 உன்னைப் பெற்றது யார், ம்? 99 00:10:23,081 --> 00:10:25,959 வலீதும் சமீர் ஹம்சாவும் உறவினர்கள். 100 00:10:27,085 --> 00:10:30,380 அவர்கள் சிரிய போலீஸ் டேட்டா சர்வர்களை ஹேக் செய்து அவற்றை அழித்துவிட்டார்கள். 101 00:10:31,298 --> 00:10:35,052 இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் அவர்கள் கண்டுபிடித்தார்கள். 102 00:10:36,303 --> 00:10:37,763 என்ன தாக்குதல்? யார் நடத்தியது? 103 00:10:38,472 --> 00:10:39,598 எங்களுக்குத் தெரியாது. 104 00:10:41,058 --> 00:10:43,936 அந்த உண்மை தகவலுக்காக அவர்களை சிரியாவில் இருந்து காப்பாற்ற 105 00:10:44,561 --> 00:10:46,647 எங்களை தொடர்பு கொண்டார்கள். -"எங்களை" என்பது? 106 00:10:47,439 --> 00:10:49,733 நாங்கள். ஃபிரான்ஸ். பிரெஞ்சுக்காரர்கள். டிஜிஎஸ்இ. 107 00:10:52,861 --> 00:10:56,448 பொறு. நீ அவனை ஃபிரான்ஸுக்கு அழைத்து வர வேண்டும் என்றால் வலீத் உன்னை ஏன் குத்தினான்? 108 00:10:56,448 --> 00:10:58,450 நாங்கள் அவர்களுக்கு துரோகம் செய்ததாக நினைத்திருக்க வேண்டும். 109 00:10:58,450 --> 00:11:00,536 அவர்கள் இனி எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. 110 00:11:01,036 --> 00:11:04,623 அவர்கள் வேறு யாருடனோ ஒப்பந்தம் செய்ய வந்திருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். 111 00:11:16,593 --> 00:11:19,012 அவர்களை படிக்கட்டுகளில் சந்திப்பேன் என்று சொன்னேன். 112 00:11:19,012 --> 00:11:20,305 அங்கே இருக்கிறார்கள். 113 00:11:20,806 --> 00:11:22,140 ஃபோனில் தேடிப் பார்க்க முயற்சி செய் 114 00:11:22,140 --> 00:11:24,768 அதனால் நீ நிஜமாகவே கொஞ்சம் யார்க் மினிஸ்டரைப் பார்க்கலாம். 115 00:11:25,727 --> 00:11:28,063 மீண்டும் கிங்ஸ் கிராஸுக்கு வரும்போது எனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பு, சரியா? 116 00:11:28,063 --> 00:11:29,773 சரி. செய்கிறேன். 117 00:11:31,191 --> 00:11:32,526 சரி. 118 00:11:33,902 --> 00:11:35,112 சரி. வருகிறேன், அப்பா. -சரி. 119 00:11:35,696 --> 00:11:36,905 மகிழ்ச்சியாக இரு. 120 00:11:37,906 --> 00:11:40,033 ஏய். நன்றாக நடந்துகொள். 121 00:11:41,326 --> 00:11:43,453 ஹேய். எப்படி இருக்கிறீர்கள்? -ஹேய். ஆம், நன்றாக இருக்கிறேன். 122 00:11:43,453 --> 00:11:45,998 ரயிலைத் தவறவிடப் போகிறோமா? மணி என்ன? 123 00:11:47,416 --> 00:11:50,335 என் அப்பா எப்பொழுதும் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். 124 00:11:50,836 --> 00:11:53,714 ஏனென்றால் எனக்குத் தெரியாது... அவருடைய காதலி அல்லது யாரோ... 125 00:11:54,840 --> 00:11:55,924 அவள் எரிச்சலூட்டுகிறாள். 126 00:11:56,425 --> 00:11:57,593 எரிச்சலூட்டுபவள். 127 00:11:57,593 --> 00:11:59,094 பரிட்சைக்கு யாராவது படித்தீர்களா? 128 00:12:03,140 --> 00:12:05,058 தாக்குதலுக்கான திட்டங்கள் எங்கே என்று எனக்குத் தெரியும். 129 00:12:08,395 --> 00:12:11,315 அவற்றை தெரிந்துகொள்ள எனக்கு வலீத் தேவை. அதனால் நான் அவனைக் கொல்ல முடியாது. 130 00:12:13,150 --> 00:12:15,485 USB கீயை திறப்பதற்கான ஒரே வழி அவனுடைய கைரேகைகள் மட்டும்தான். 131 00:12:16,486 --> 00:12:18,739 நீ என்னை நம்பவில்லை என்றால், நீ என்னுடன் வரலாம். 132 00:12:29,124 --> 00:12:30,709 முதலில், நீ சரணடைய வேண்டும். 133 00:12:31,752 --> 00:12:32,878 மீண்டுமா? 134 00:12:34,963 --> 00:12:36,632 அதை என்னிடம் சொல்ல உனக்கு தைரியம்தான். 135 00:12:36,632 --> 00:12:38,509 ஒரு டிஜிஎஸ்இ ஏஜென்ட்டாக, நீ பயப்பட ஒன்றுமில்லை. 136 00:12:39,134 --> 00:12:40,219 ஆம், சரிதான். 137 00:12:44,264 --> 00:12:46,600 உனக்கு? எப்படிப் போகிறது? 138 00:12:47,100 --> 00:12:49,728 குடும்பம் எல்லாம். உன் கணவன், உன் குழந்தைகள்? 139 00:12:52,189 --> 00:12:53,732 எனக்குக் குழந்தைகள் இல்லை. 140 00:12:53,732 --> 00:12:55,317 எனக்குத் திருமணமும் ஆகவில்லை. 141 00:12:59,821 --> 00:13:00,822 ச்சே. 142 00:13:09,915 --> 00:13:11,875 காவல் 143 00:13:21,468 --> 00:13:23,136 ஹாய், ஆலிசன். -ஷஹீனா. ஹேய். 144 00:13:23,720 --> 00:13:25,764 கேள், ஹம்சாவைப் பற்றி விசாரிக்கலாம் என்று நினைத்தேன். 145 00:13:25,764 --> 00:13:27,599 அவனை எங்கே கொண்டு போனார்கள்? 146 00:13:28,725 --> 00:13:30,018 ஒரு நிமிடம் பொறுங்கள். 147 00:13:32,062 --> 00:13:34,439 அவன்... செயின்ட் காலம்ஸ் ஐசியூவில் இருக்கிறான். 148 00:13:37,651 --> 00:13:39,236 இப்போது அங்கு செல்கிறீர்களா? 149 00:13:42,322 --> 00:13:43,448 ஆலிசன்? 150 00:13:46,994 --> 00:13:48,453 ஆலிசன், இருக்கிறீர்களா? 151 00:13:53,041 --> 00:13:55,252 சரி. நன்றி, ஷஹீனா. -சரி. 152 00:13:58,630 --> 00:14:00,591 இது வண்டி நிறுத்துமிடம் இல்லை என்றுத் தெரியுமா, மேடம்? 153 00:14:02,050 --> 00:14:03,719 நான் சொன்னேனே. மன்னியுங்கள். 154 00:14:03,719 --> 00:14:06,013 நான்... மன்னியுங்கள். உடனே கிளம்பிவிடுகிறேன். 155 00:14:20,986 --> 00:14:22,029 என்ன பிரச்சினை? 156 00:14:27,910 --> 00:14:29,703 வலீதைப் பார்க்கப் போகிறோமா? 157 00:14:32,247 --> 00:14:33,624 கண்டிப்பாக உன்னுடன் இல்லை. 158 00:14:43,008 --> 00:14:44,176 கேப்ரியல்! 159 00:14:49,306 --> 00:14:50,849 பெட்டிட், ஜீன் 160 00:14:57,481 --> 00:14:58,690 ச்சே. 161 00:15:02,653 --> 00:15:03,946 பயங்கரவாத எதிர்ப்பு செயலகம், லண்டன் 162 00:15:03,946 --> 00:15:05,906 அப்படியென்றால் அவன் நிஜமாகவே தூதுக்குழுவின் உறுப்பினரா? 163 00:15:06,406 --> 00:15:08,825 ஆம், அவனுடைய பாஸ்போர்ட் உண்மையானதுதான், 164 00:15:08,825 --> 00:15:10,661 அதனால்தான் அவனுடைய அரசியல் பாதுகாப்பை விலக்கவில்லை. 165 00:15:11,245 --> 00:15:12,162 அடுத்து என்ன? 166 00:15:12,162 --> 00:15:14,540 என்னிடம் இன்னும் சில திட்டங்கள் இருக்கின்றன. 167 00:15:15,290 --> 00:15:16,333 மன்னிக்கவும். 168 00:15:17,334 --> 00:15:18,627 ஆம். 169 00:15:20,379 --> 00:15:21,880 அவர்களுக்கு வண்டி எண் கிடைத்ததா? 170 00:15:25,050 --> 00:15:26,093 சரி, கேளுங்கள், 171 00:15:26,802 --> 00:15:28,929 அந்தப் பகுதியில் தேட இரண்டு குழுக்களை அனுப்புங்கள், 172 00:15:28,929 --> 00:15:31,974 ஆனால் அவனைக் கண்டால் கைது செய்யக் கூடாது. சரியா? 173 00:15:33,058 --> 00:15:34,226 நன்றி. 174 00:15:35,185 --> 00:15:36,645 அவனை பிரிக் லேனில் பார்த்திருக்கிறார்கள். 175 00:15:37,604 --> 00:15:39,439 புலனாய்வாளரே, இது உண்மையில் எதைப் பற்றியது? 176 00:15:40,482 --> 00:15:42,693 ஒரு லிஃப்டில் ஏற்பட்ட சண்டைக்காக நீங்கள் நிறைய தொல்லைகளை 177 00:15:42,693 --> 00:15:44,486 அனுபவிப்பது போல தெரிகிறது. 178 00:15:49,408 --> 00:15:51,368 இது பயங்கரவாத சதித் திட்டத்துடன் தொடர்புடையதாக கருதுகிறோம். 179 00:15:51,994 --> 00:15:53,328 இவன் வலீத் ஹம்சா, 180 00:15:54,955 --> 00:15:56,123 பாரிஸில் படித்துக் கொண்டிருந்தபோது, 181 00:15:56,123 --> 00:15:59,126 அவனுடைய அப்பா சிரிய ஏஜென்ட்களால் டமாஸ்கஸில் கொல்லப்பட்டார். 182 00:15:59,710 --> 00:16:00,878 அவன் நாடு திரும்பினான். 183 00:16:00,878 --> 00:16:03,505 அவன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருக்கலாம் என நினைக்கிறோம். 184 00:16:03,505 --> 00:16:04,923 ஐஎஸ்ஐஎஸ்-ஆ? 185 00:16:06,717 --> 00:16:07,926 அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. 186 00:16:07,926 --> 00:16:08,844 ஏன்? 187 00:16:09,511 --> 00:16:10,804 அவன் ட்ரூஸ். 188 00:16:10,804 --> 00:16:13,223 பாருங்கள், ட்ரூஸ் நட்சத்திரத்தை அணிந்திருக்கிறான். 189 00:16:13,974 --> 00:16:16,018 ட்ரூஸ் தீவிர இஸ்லாத்திற்கு எதிரானவர்கள். 190 00:16:18,937 --> 00:16:21,064 தாக்குதலுக்குப் பிறகு அது அவனிடம் இல்லை. 191 00:16:30,574 --> 00:16:31,783 ஆம். 192 00:16:36,079 --> 00:16:39,625 ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு மையம், லண்டன் 193 00:16:46,590 --> 00:16:48,008 எச்சரிக்கை: ரீசெட் சிக்னல்களை பச்சை நிறத்திற்கு மாற்றும் 194 00:16:48,008 --> 00:16:49,718 நிர்வாகி கடவுச்சொல் தேவை 195 00:16:49,718 --> 00:16:52,054 பயனர்பெயர்: நிர்வாகி கடவுச்சொல்: 196 00:16:55,849 --> 00:16:58,227 என்ன நடக்கிறது? -கணினியில் நுழைந்துவிட்டார்கள். 197 00:16:59,019 --> 00:17:00,229 அது நான் இல்லை. 198 00:17:02,356 --> 00:17:04,358 நல்லது. 199 00:17:14,742 --> 00:17:16,662 அடுத்த நிறுத்தம் கிங்ஸ் கிராஸ். 200 00:17:16,662 --> 00:17:19,122 வெளியேறும்போது உங்கள் தனிப்பட்ட உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துச்செல்வதை 201 00:17:19,122 --> 00:17:20,374 உறுதிசெய்யுங்கள்... -ஆம். 202 00:17:20,374 --> 00:17:22,209 ஆம், அதை முயற்சிக்கிறேன். 203 00:17:22,209 --> 00:17:23,836 அது என்னை உள்ளே விடவில்லை. 204 00:17:26,839 --> 00:17:27,839 ஆஹா. 205 00:17:27,839 --> 00:17:30,300 சிக்னல்களின் கட்டுப்பாடுகளை இழந்துவிட்டோம். 206 00:17:30,300 --> 00:17:31,677 எல்லாம் பச்சையாக மாறிவிட்டன. 207 00:17:31,677 --> 00:17:34,221 நான் நெட்வொர்க்கை அணைக்க வேண்டும். இது ஹேக் என்று நினைக்கிறேன். 208 00:18:06,670 --> 00:18:08,046 ரிச்சர்ட். மன்னிக்கவும். 209 00:18:08,046 --> 00:18:10,591 யோர்கிலிருந்து லண்டன் செல்லும் ரயில் பாதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 210 00:18:10,591 --> 00:18:11,675 எவ்வளவு தீவிரமானது? 211 00:18:11,675 --> 00:18:14,136 அவற்றில் ஒன்று பள்ளி மாணவர்களால் நிரம்பியது. -எங்கு நடந்தது? 212 00:18:14,136 --> 00:18:15,846 கிங்ஸ் கிராஸுக்கு வெளியே. 213 00:18:16,889 --> 00:18:19,141 லண்டன் ரயில்வேயில் உள்ள எவன்ஸை அழை. 214 00:18:20,893 --> 00:18:22,352 லண்டனில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயின. 215 00:18:38,202 --> 00:18:39,912 இந்த வழியாகப் போகக் கூடாது. சரி. 216 00:18:41,955 --> 00:18:44,458 இந்தப் பக்கம். எடுக்க முடியுமா? -ஆம், நிச்சயமாக. 217 00:18:47,836 --> 00:18:48,837 வழிவிடுங்கள். 218 00:18:48,837 --> 00:18:50,923 அதற்கு அழுத்தம் கொடுங்கள். 219 00:18:54,885 --> 00:18:57,012 யாராவது உதவுங்கள்! -என்ன நடந்தது? 220 00:18:58,555 --> 00:19:01,308 வேறு ஒருவர் இருக்கிறார். -மூன்று, இரண்டு, ஒன்று, தூக்கு. 221 00:19:01,308 --> 00:19:03,310 நலமா? -இங்கே இருக்கிறேன்! 222 00:19:05,062 --> 00:19:06,522 தயவுசெய்து உதவுங்கள்! 223 00:19:17,824 --> 00:19:20,577 மேலே வாருங்கள். கைகளை இங்கே பாதுகாப்பாக வையுங்கள். அவ்வளவுதான். 224 00:19:20,577 --> 00:19:21,578 கிம். 225 00:19:22,329 --> 00:19:24,706 கிம்! -ஆலிசன்! 226 00:19:24,706 --> 00:19:28,669 ஆலிசன்! ஆலிசன். 227 00:19:28,669 --> 00:19:30,087 நீ நலமா? 228 00:19:30,087 --> 00:19:31,630 சரியாகி விடும். 229 00:19:31,630 --> 00:19:33,382 ஆலிசன், எல்லா இடங்களிலும் வலிக்கிறது. 230 00:19:34,132 --> 00:19:35,676 சரியாகிவிடும். உஷ். 231 00:19:45,644 --> 00:19:49,940 ஆம். ஆம், நலமாக இருக்கிறாள். நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். 232 00:19:51,817 --> 00:19:52,901 சரி. 233 00:19:59,825 --> 00:20:00,909 ஆலிசன். 234 00:20:01,410 --> 00:20:03,996 ஆலிசன்! 235 00:20:23,515 --> 00:20:25,767 சீக்கிரம். -பின்னால் போ. 236 00:20:27,853 --> 00:20:29,521 அதைப் பிடித்து தூக்கு. 237 00:20:29,521 --> 00:20:31,273 டாக்டர் மார்ட்டின் வெல்ஸ் எங்கிருந்தாலும் வரவும். 238 00:20:31,273 --> 00:20:34,151 டாக்டர் மார்ட்டின் வெல்ஸ். தயவுசெய்து A மற்றும் E க்கு வர முடியுமா? 239 00:20:36,904 --> 00:20:40,199 டாக்டர் மார்ட்டின் வெல்ஸ். A, Eக்கு வாருங்கள். -அவர்களுக்கு நீங்கள் தேவை! 240 00:21:02,429 --> 00:21:04,223 பதிவு செயின்ட் காலம்ஸ் உள்ளூர் MRN டேட்டாபேஸ் 241 00:21:08,018 --> 00:21:10,270 வலீத் ஹம்சா I.C.U / அறை 314 242 00:21:23,742 --> 00:21:26,495 வழிவிடுங்கள். ஸ்ட்ரெச்சர் வருகிறது. 243 00:21:54,231 --> 00:21:55,232 என் அப்பா இங்கே இருக்கிறாரா? 244 00:21:55,232 --> 00:21:57,192 வந்துகொண்டிருக்கிறார், செல்லம்... 245 00:21:59,194 --> 00:22:00,779 நீ எங்கே இருக்கிறாய்? -அவரா? 246 00:22:01,697 --> 00:22:02,781 உன்னைப் பார்க்க முடியவில்லை. 247 00:22:05,075 --> 00:22:06,118 இங்கே. 248 00:22:08,036 --> 00:22:09,121 அப்பா? 249 00:22:10,289 --> 00:22:12,207 தயவுசெய்து என்னை வந்து கூட்டிச் செல்ல முடியுமா? 250 00:22:14,459 --> 00:22:15,836 ஆம். 251 00:22:39,735 --> 00:22:40,903 ஆலிசன்! 252 00:22:42,237 --> 00:22:46,783 அப்பா? -ஓ, செல்லம். நீ நலமா? 253 00:22:46,783 --> 00:22:48,327 பரவாயில்லை. 254 00:22:48,327 --> 00:22:49,870 டாக்டர், இவளுக்கு வலிக்கு ஏதாவது கொடுங்கள். 255 00:22:49,870 --> 00:22:51,538 சரி. யாரையாவது கண்டுபிடிக்கிறேன். 256 00:22:53,081 --> 00:22:56,126 பரவாயில்லை. எங்கே வலிக்கிறது? 257 00:22:57,085 --> 00:23:00,130 என் செல்லம், பரவாயில்லை. 258 00:23:01,757 --> 00:23:02,758 ரிச்சர்ட்? 259 00:23:02,758 --> 00:23:05,886 உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் கணினியை ஹேக் செய்திருக்கிறார்கள். 260 00:23:08,514 --> 00:23:09,848 நான் பேச வேண்டும். -சரி. 261 00:23:10,474 --> 00:23:12,392 சரி, கேள். என்னைப் பார். நீ நன்றாக இருப்பாய். 262 00:23:12,392 --> 00:23:14,311 நேராக. அங்கு. 263 00:24:45,903 --> 00:24:55,120 மருத்துவர்கள் 314 அறைக்கு வர முடியுமா? 264 00:25:13,639 --> 00:25:14,932 கிரேட் பிரிட்டன்: லண்டனில் ரயில் விபத்து 265 00:25:14,932 --> 00:25:17,559 இங்கிலாந்தில், லண்டன் அருகே 266 00:25:17,559 --> 00:25:20,771 இரண்டு ரயில்களுக்கு இடையே பலமான மோதல் ஏற்பட்டது. கிடைத்த தகவலின்படி, 267 00:25:20,771 --> 00:25:23,398 இரண்டு ரயில்களும் யார்க்-லண்டன் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தன. 268 00:25:23,398 --> 00:25:26,944 பலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது, ஆனால் இன்னும் பல அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. 269 00:25:26,944 --> 00:25:32,366 கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்திற்கு வடக்கே சில கிலோமீட்டர் தொலைவில் பயணிகள் ரயில் மற்றும் 270 00:25:32,366 --> 00:25:34,201 சரக்கு ரயிலுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 271 00:25:34,201 --> 00:25:36,161 உள்ளூர் அதிகாரிகளின் கருத்துப்படி, 272 00:25:36,161 --> 00:25:38,914 சிக்னல் அமைப்பின் தோல்வியால் விபத்து ஏற்பட்டுள்ளது. 273 00:25:38,914 --> 00:25:42,042 இது சைபர் தாக்குதல், திரு. ஜனாதிபதி. எங்கிருந்து வருகிறது என்று இன்னும் தெரியவில்லை. 274 00:25:42,042 --> 00:25:43,669 இங்கு தாக்குதல் நடக்குமா? 275 00:25:44,294 --> 00:25:45,379 கோட்பாட்டின்படி, நடக்கும். 276 00:25:45,379 --> 00:25:47,923 ஐரோப்பிய ஒன்றிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் பற்றி தெரிந்ததா? 277 00:25:47,923 --> 00:25:50,467 நாம் கொடுக்கும் பணத்தை வைத்து அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லையா? 278 00:25:50,467 --> 00:25:53,679 பிரெக்ஸிட்டிற்குப் பிறகு, இங்கிலாந்துக்காரர்கள் இனி ஏஜென்சியின் ஒரு பகுதி இல்லை. 279 00:25:55,472 --> 00:25:57,850 புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக நீங்கள் சொல்லவில்லையா? 280 00:25:57,850 --> 00:25:59,810 நான் அப்படித்தான் நினைத்தேன், ஆனால் அது அவர்களுக்கு சிக்கலானது. 281 00:25:59,810 --> 00:26:01,812 சரிபார்த்திருக்க வேண்டிய முதல் விஷயம் அதுதான்! 282 00:26:01,812 --> 00:26:05,232 இங்கிலாந்துகாரர்கள் பாதுகாக்கப்படாவிட்டால், நாம்... மோசமானவர்கள்! 283 00:26:05,732 --> 00:26:07,818 மன்னிக்கவும், ஆனால் அவர்களுக்குச் சொந்தமாக சைபர் பாதுகாப்பு மையம் உள்ளது. 284 00:26:07,818 --> 00:26:09,069 அதை அவர்கள் நம்மிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். 285 00:26:10,445 --> 00:26:11,530 இது மிகவும் தீவிரமானது. 286 00:26:11,530 --> 00:26:14,616 சிரிய ஹேக்கர்களைப் பற்றி நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்ல வேண்டும். 287 00:26:14,616 --> 00:26:17,536 சோஃபி என்னைப் பேச அனுமதித்தால், பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல செய்தி உள்ளது. 288 00:26:19,538 --> 00:26:21,999 ஹேக்கர்களைக் கண்டுபிடித்துவிட்டோம், பாரிஸுக்குக் கொண்டுவரப் போகிறோம். 289 00:26:21,999 --> 00:26:23,709 இங்கு வருவதற்கு முன்பே எனக்கு ஒரு செய்தி வந்தது. 290 00:26:23,709 --> 00:26:25,127 அவர்கள் உடனடியாக விசாரிக்கப்படுவார்கள். 291 00:26:25,127 --> 00:26:26,545 யாரால்? உங்களாலா? 292 00:26:27,504 --> 00:26:29,423 ஆம். இதை நானே பார்த்துக் கொள்கிறேன். 293 00:26:31,758 --> 00:26:33,093 திரு. ஜனாதிபதி. 294 00:26:34,052 --> 00:26:37,347 ஹேக்கர்கள் வந்தவுடன் டிஜிஎஸ்இ-ஆல் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 295 00:26:45,230 --> 00:26:47,941 மன்னிக்கவும், டிடியர், ஆனால் இந்த முறை, நான் சோஃபியுடன் உடன்படுகிறேன். 296 00:26:49,610 --> 00:26:51,570 டிஜிஎஸ்இ தான் இப்போது இந்த வழக்குக்குப் பொறுப்பு. 297 00:27:15,052 --> 00:27:17,471 எனவே டிடியர், இங்கிலாந்துகாரர்களிடம் நாம் என்ன சொல்லப் போகிறோம்? 298 00:27:18,138 --> 00:27:21,058 ஒரு பேரழிவு நடக்கப் போவது எங்களுக்குத் தெரியும், ஆனால் அதைப் பற்றி எச்சரிக்க மறந்துவிட்டோம் என்றா? 299 00:27:22,351 --> 00:27:23,810 அதை உங்களிடமே விட்டு விடுகிறேன். 300 00:27:27,231 --> 00:27:28,440 அது எப்படி போகிறது என்பதை தெரியப்படுத்துங்கள். 301 00:27:47,709 --> 00:27:48,752 அவர்கள் வலீதை பிடித்தார்கள். 302 00:27:49,545 --> 00:27:50,629 அவன் இறந்துவிட்டான். 303 00:27:51,588 --> 00:27:52,631 "அவர்கள்" யார்? 304 00:27:52,631 --> 00:27:55,342 தெரியாது, ஆனால் ரயில்களை தடம் புரளவைக்க முடிந்தால், அவர்கள் நிபுணர்களாக இருக்க வேண்டும். 305 00:27:55,342 --> 00:27:57,052 இன்னும் உன்னிடம் USB கீ இருக்கிறதா? 306 00:27:57,052 --> 00:27:58,554 ஆம். ஆனால் என்னால் திறக்க முடியவில்லை. 307 00:27:58,554 --> 00:28:01,515 இரட்டை பாதுகாப்பு இருக்கிறது. கைரேகைகளும் கடவுச்சொல்லும் தேவை. 308 00:28:01,515 --> 00:28:03,100 எனக்கு வேறு வழியில்லை. நான் சமீரைக் கண்டுபிடிக்க வேண்டும் 309 00:28:03,100 --> 00:28:05,018 கவலைப்படாதே, உனக்கு அரசியல் பாதுகாப்பு இருக்கும் வரை, 310 00:28:05,018 --> 00:28:06,854 நீ இங்கிலாந்தில் தங்கலாம். 311 00:28:06,854 --> 00:28:10,774 லண்டனில் நமக்கு உதவக்கூடிய ஒருவரை தெரியும், ஆனால் நாம் சில தகவல்களைப் பகிர வேண்டும். 312 00:28:10,774 --> 00:28:13,402 இல்லை, நம்மால் எதையும் பகிர முடியாது. ஆனால் அவர்களுக்குப் பணம் கொடுக்கலாம். 313 00:28:15,153 --> 00:28:16,572 இல்லை, அது வேலை செய்யாது. 314 00:28:17,155 --> 00:28:18,532 பணத்துக்காக அவள் செய்ய மாட்டாள். 315 00:28:19,408 --> 00:28:20,576 அவளா? யார் அவள்? 316 00:28:21,493 --> 00:28:22,494 அவள். 317 00:28:23,954 --> 00:28:25,998 திரும்ப அழைக்கிறேன். -சரி. 318 00:28:26,582 --> 00:28:28,667 திரு. தாருட் உங்களை இப்போதே பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். 319 00:28:30,544 --> 00:28:31,712 திரு. தாருட். 320 00:28:32,212 --> 00:28:34,214 என்னை ஏமாற்றிவிட்டார்கள் தெரியுமா? 321 00:28:34,214 --> 00:28:35,883 அந்த சோஃபி செயின்ட் ராச் வேசி 322 00:28:35,883 --> 00:28:38,135 வழக்கை மீண்டும் டிஜிஎஸ்இ-யிடம் ஒப்படைக்க வைத்துவிட்டாள். 323 00:28:39,386 --> 00:28:43,640 இல்லை. கவலை வேண்டாம். இந்த வழக்கில் டிஜிஎஸ்இ மிகவும் பின்தங்கியுள்ளது. 324 00:28:43,640 --> 00:28:46,310 அவர்களுக்கு நடந்தது தெரியவரும்போது, அது மிகவும் தாமதமாக இருக்கும். 325 00:28:47,811 --> 00:28:50,230 ஹம்சாவை எப்போது பாரிஸுக்கு கூட்டி வர திட்டமிட்டிருக்கிறீர்கள்? 326 00:28:51,690 --> 00:28:53,358 அவன் தரையிறங்கியதும், அவன் உங்களுடையவன். 327 00:29:19,676 --> 00:29:23,305 டன்கிர்க் - ஃபிரான்ஸ் 328 00:29:45,202 --> 00:29:46,787 பிரச்சினை இல்லை. 329 00:30:36,712 --> 00:30:38,088 கொடு... 330 00:30:39,173 --> 00:30:41,091 ஃபோனை விட்டுவிடு! 331 00:30:41,091 --> 00:30:43,427 அங்கேயே நில்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! 332 00:30:44,845 --> 00:30:46,555 அவர்களைப் பின்தொடருங்கள்! -அவனிடமிருந்து விலகு! 333 00:30:46,555 --> 00:30:48,348 அவர்களைப் பின்தொடருங்கள்! 334 00:30:48,348 --> 00:30:50,058 அவர்களைப் பிடியுங்கள்! 335 00:30:51,268 --> 00:30:53,312 நீ நலமா? -இல்லை. 336 00:30:54,438 --> 00:30:56,481 அவர்கள் யார்? -எனக்குத் தெரியாது. ச்சே! 337 00:30:57,149 --> 00:30:58,400 எழுந்திரு. 338 00:30:59,818 --> 00:31:00,694 யார் நீ? 339 00:31:00,694 --> 00:31:03,447 நீ எங்கிருந்து வருகிறாய்? 340 00:31:05,824 --> 00:31:07,075 உன்னிடம்தான் பேசுகிறேன்! 341 00:31:07,075 --> 00:31:10,120 எங்கிருந்து வருகிறாய், நண்பா? அவர்கள் யார்? -எனக்குத் தெரியாது. 342 00:31:10,120 --> 00:31:13,665 பரவாயில்லை நண்பா. பரவாயில்லை. நீ சிரியாவிலிருந்து வருகிறாயா? 343 00:31:13,665 --> 00:31:15,375 நீ சிரியாவிலிருந்து வருகிறாயா? -நான் சிரியாவிலிருந்து வருகிறேன். 344 00:31:15,375 --> 00:31:17,336 என்னுடன் வா. போகலாம். 345 00:31:18,670 --> 00:31:19,838 இவன் சிரியாவிலிருந்து வருகிறான்! 346 00:31:19,838 --> 00:31:21,757 கவலைப்படாதே. என்னுடன் வா. 347 00:31:21,757 --> 00:31:25,302 இங்கே வா. கவலைப்படாதே. 348 00:31:25,302 --> 00:31:27,888 அவர்கள் இவனை அடித்தனர். 349 00:31:27,888 --> 00:31:30,641 கவலைப்படாதே. அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். போகலாம். 350 00:31:33,810 --> 00:31:35,354 இதோ. 351 00:31:36,146 --> 00:31:38,398 கொஞ்சம் டீ கொண்டு வருகிறேன், சரியா? -சரி. 352 00:31:44,738 --> 00:31:45,822 நீ நலமா? 353 00:31:52,371 --> 00:31:53,580 மயிரிழையில் தப்பியிருக்கிறாள். 354 00:31:56,625 --> 00:31:57,668 ஹேய். 355 00:32:02,130 --> 00:32:03,173 நாம் இருக்கிறோம். 356 00:32:04,758 --> 00:32:05,801 நாம் நன்றாக இருக்கிறோம். 357 00:32:12,182 --> 00:32:14,560 சரி. சரி. 358 00:32:22,025 --> 00:32:23,026 ஆம். 359 00:32:23,026 --> 00:32:24,152 புலனாய்வு ஆய்வாளர் ஹோப்ஸ். 360 00:32:25,362 --> 00:32:26,572 உள்ளே வா. 361 00:32:31,159 --> 00:32:32,244 நீங்கள் இருப்பது மிகவும் நல்லது. 362 00:32:37,708 --> 00:32:38,834 அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். 363 00:32:39,585 --> 00:32:40,711 சரி. 364 00:32:42,212 --> 00:32:46,341 எங்கள் ஆதாரங்களின்படி, பெட்டிட் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியோ டிஜிஎஸ்இ-யோ அல்ல. 365 00:32:46,341 --> 00:32:49,219 பொறு. இன்று காலைதான் சொன்னார்கள்... -அவனுடைய வேஷம் பிரமாதமானது. 366 00:32:49,219 --> 00:32:53,974 அவன் கூலிப்படையாக மாறிய முன்னாள் பிரெஞ்சு இராணுவ வீரன். நிஜப்பெயர், கேப்ரியல் டெலாஜ். 367 00:32:55,225 --> 00:32:57,060 நவம்பர் 23 - பாரிஸ், ஃபிரான்ஸ் இரகசிய நடவடிக்கை 368 00:32:58,687 --> 00:33:01,148 அவன் எப்படி ரயில் விபத்தில் ஈடுபட்டிருப்பான் என்று நினைக்கிறீர்கள்? 369 00:33:02,065 --> 00:33:04,234 அவன் டெல்கிஸுக்கு வேலை செய்தது எங்களுக்குத் தெரியும். 370 00:33:04,234 --> 00:33:08,071 உலகம் முழுவதும் அவனைப் போன்றவர்களை மோசமான வேலைகளைச் செய்ய ஈடுபடுத்தும் நிறுவனம். 371 00:33:08,071 --> 00:33:11,742 வலீத் மற்றும் சமீரை கொல்ல லண்டனுக்கு வந்திருப்பானோ என்று எனக்கொரு சந்தேகம். 372 00:33:11,742 --> 00:33:13,327 எனவே அவன் எங்கே என்று தெரியுமா? 373 00:33:13,327 --> 00:33:15,537 சிசிடிவி உதவியோடு தேடிக்கொண்டிருக்கிறோம். 374 00:33:16,038 --> 00:33:19,208 இப்போது அவனுடைய கைதுக்கு ஃபிரான்ஸ் தூதரகம் ஒப்புதல் அளிக்க காத்திருக்கிறோம். 375 00:33:19,208 --> 00:33:21,835 நீங்கள் ஏன் காத்திருக்கிறீர்கள்? நான் அழைக்கிறேன். 376 00:33:21,835 --> 00:33:23,378 ஆல்பர்ட். -இல்லை. 377 00:33:23,378 --> 00:33:26,173 புலனாய்வாளரே, என்னைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 378 00:33:28,217 --> 00:33:30,511 அவனுக்கும் அந்த விபத்திற்கும் ஏதாவது தொடர்பு இருந்தால்... 379 00:33:36,475 --> 00:33:38,393 சந்தேகத்துக்குரியவனை கண்டுபிடித்துவிட்டீர்களா? 380 00:33:40,103 --> 00:33:41,313 சரி. நல்லது. 381 00:33:42,189 --> 00:33:43,315 அவனை கைது செய்யுங்கள். 382 00:35:05,856 --> 00:35:07,232 ஆம், அவன் தப்பிவிட்டான். 383 00:35:07,232 --> 00:35:08,483 நான் அவனைத் துரத்தினேன். -ஹலோ. 384 00:35:08,483 --> 00:35:09,776 சமீர் பற்றி தெரிந்ததா? 385 00:35:10,277 --> 00:35:12,196 அவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? 386 00:35:13,739 --> 00:35:14,948 இதுவரை இல்லை. 387 00:35:16,909 --> 00:35:21,330 ஆனால் நாங்கள் டெலாஜைக் கைது செய்தால், அவன் யாருக்காக வேலை செய்கிறான் என்று சொல்லலாம். 388 00:35:25,709 --> 00:35:27,419 மன்னிக்கவும். நன்றி. 389 00:35:35,344 --> 00:35:37,429 என்னை போலீஸ்காரர்கள் பின்தொடர்கிறார்கள். உன்னைப் பார்க்க வேண்டும். 390 00:35:37,429 --> 00:35:38,722 எங்கே? -நகரில். 391 00:35:51,735 --> 00:35:52,986 ரிச்சர்ட் என்ன சொன்னார்? 392 00:35:53,737 --> 00:35:54,780 சிவில் தற்செயல் நிகழ்வுகள் குழு கூட்டம் இருக்கிறது. 393 00:35:55,364 --> 00:35:56,532 நான் போவது நல்லது. -சரி. 394 00:35:56,532 --> 00:35:58,492 நானும் அங்குதான் போகிறேன். கொண்டுபோய் விடட்டுமா? 395 00:35:59,034 --> 00:36:00,035 பரவாயில்லை, நன்றி. 396 00:36:00,577 --> 00:36:01,662 செல்லம். 397 00:36:01,662 --> 00:36:02,913 என்னால் தூங்க முடியவில்லை. 398 00:36:06,542 --> 00:36:07,668 ஆலிசன். 399 00:36:09,795 --> 00:36:11,171 இன்று நீங்கள் செய்ததற்கு நன்றி. 400 00:36:15,259 --> 00:36:16,510 பரவாயில்லை, செல்லம். 401 00:36:19,596 --> 00:36:21,640 நான் தொடர்பில் இருப்பேன். -சரி, புலனாய்வாளரே. 402 00:36:23,100 --> 00:36:24,142 இங்கே வா. 403 00:36:46,623 --> 00:36:50,210 டெல்கிஸ்? நீ கூலிப்படை. உன்னை நினைத்து நீ வெட்கப்பட வேண்டும். 404 00:36:51,211 --> 00:36:52,254 வெட்கப்படவா? 405 00:36:53,172 --> 00:36:55,007 நீயெல்லாம் வெட்கப்படுவதைப் பற்றி பேசக் கூடாது. 406 00:36:56,175 --> 00:36:57,593 நீ கொலைக் குற்றத்துக்காக தேடப்படுகிறாய். 407 00:36:57,593 --> 00:36:59,803 உனக்கு இனி அரசியல் பாதுகாப்பு கிடையாது. நீ வெளியேற வேண்டும். 408 00:36:59,803 --> 00:37:02,181 ஃபிரான்ஸுக்கோ எங்கேயோ போ. எனக்குக் கவலை இல்லை, நீ உடனே போக வேண்டும். 409 00:37:02,181 --> 00:37:04,308 இங்கிருந்து போய்விடு. -நீ அதை விரும்புகிறாய், இல்லையா? 410 00:37:06,185 --> 00:37:07,603 சரி, ஒன்று மாறவில்லை. 411 00:37:07,603 --> 00:37:09,771 இன்னும் நீ சுயநலவாதியாகத்தான் இருக்கிறாய். 412 00:37:13,025 --> 00:37:15,861 நான் என்னை காப்பாற்றிக் கொள்ளவில்லை. உன்னைக் காப்பாற்றுகிறேன், முட்டாள். 413 00:37:18,572 --> 00:37:19,781 ஆலிசன். 414 00:37:22,868 --> 00:37:24,077 ஆலிசன், பார். 415 00:37:26,496 --> 00:37:27,664 இதில் தாக்குதல் திட்டங்கள் உள்ளன, 416 00:37:27,664 --> 00:37:31,210 ஆனால் பூட்டப்பட்டுள்ளது, உள்ளே உள்ள கோப்புகளும் உறுதியாக என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். 417 00:37:32,044 --> 00:37:35,214 அதை என்னிடம் கொடு. அதைத் திறக்கக்கூடிய பலரை எனக்குத் தெரியும். 418 00:37:35,214 --> 00:37:39,134 வாய்ப்பே இல்லை. இவர்கள் மிகவும் பாதுகாப்பான படிமுறைகளை வைத்திருப்பார்கள். 419 00:37:39,760 --> 00:37:41,929 அதனால்தான் நான் சமீரைக் கண்டுபிடித்தாக வேண்டும். 420 00:37:42,888 --> 00:37:44,723 தாக்குதல் ஏற்கனவே நடந்துவிட்டது. -இல்லை. 421 00:37:45,390 --> 00:37:47,684 அது தாக்குதல் அல்ல. அது ஒரு எச்சரிக்கை. 422 00:37:47,684 --> 00:37:50,270 யாராவது பொறுப்பேற்கும் வரை, வேலை முடிந்துவிடாது. 423 00:37:51,813 --> 00:37:54,733 கேப்ரியல், இன்று குழந்தைகள் இறந்தார்கள். 424 00:37:55,234 --> 00:37:57,152 தாக்குதலுக்கு யார் பொறுப்பு? நீ சொல்ல வேண்டும். 425 00:37:57,152 --> 00:37:58,487 எனக்குத் தெரியாது. 426 00:37:59,738 --> 00:38:02,324 சமீரும் வலீதும் வெறுமனே லண்டனில் இல்லை என்பது எனக்குத் தெரியும். 427 00:38:02,324 --> 00:38:03,992 அவர்களுக்கு இங்கே தொடர்பு இருக்க வேண்டும். 428 00:38:09,831 --> 00:38:10,874 சரி. 429 00:38:15,587 --> 00:38:16,922 என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன். 430 00:38:27,057 --> 00:38:29,101 ஹலோ? -சமீர் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. 431 00:38:29,101 --> 00:38:32,354 அவனுடைய மனைவியும் மகனும் சிரியாவை விட்டு வெளியேறி இப்போது ஐரோப்பாவில் இருக்கிறார்கள். 432 00:38:32,896 --> 00:38:33,897 சரி. 433 00:38:34,773 --> 00:38:35,941 நான் திரும்பி வருகிறேன். 434 00:38:46,410 --> 00:38:51,039 சரி. எனவே சமீர் ஹம்சாவின் நகர்வுகளை விக்டோரியா பேருந்து நிலையத்தில் 435 00:38:51,039 --> 00:38:57,921 டன்கிர்க்கிற்குச் செல்லும் இந்த மெகாலைன்ஸ் பேருந்தில் ஏறுவதையும் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். 436 00:39:02,593 --> 00:39:04,261 அதனால்? அவன் ஃபிரான்ஸில் இருக்கிறானா? 437 00:39:05,345 --> 00:39:07,055 அதோடு டெலாஜை தப்பவிட்டீர்களா? 438 00:39:08,473 --> 00:39:09,683 அப்படிதான் நினைக்கிறேன். 439 00:39:11,685 --> 00:39:13,437 யார் நம்மைத் தாக்குகிறார்கள்? 440 00:39:13,437 --> 00:39:15,856 சீனர்களா? ரஷ்யர்களா? போப்பா? 441 00:39:15,856 --> 00:39:19,860 இப்போதைக்கு, எந்த வெளிநாட்டு அரசாங்கமும் தலையிட்டதற்கான ஆதாரம் இல்லை. 442 00:39:23,488 --> 00:39:25,199 சரி. முக்கியமான தகவல்களைப் பற்றி விவாதிப்போம். 443 00:39:25,199 --> 00:39:26,325 ஆலிசன். 444 00:39:31,580 --> 00:39:33,123 இந்த அளவுக்கான நிலைமையை சமாளிக்க 445 00:39:33,123 --> 00:39:35,792 நம் சைபர் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. 446 00:39:35,792 --> 00:39:37,127 முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். 447 00:39:37,753 --> 00:39:40,380 எனவே தாக்குதல்கள் தீவிரமடையுமா? 448 00:39:41,256 --> 00:39:44,801 எனது பரிந்துரை ஐரோப்பாவுடன் உடனடியாக ஒரு ஒப்பந்தத்துக்கு வருவது. 449 00:39:44,801 --> 00:39:46,094 அபத்தம். 450 00:39:46,094 --> 00:39:47,888 ஒரு ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க பல ஆண்டுகள் ஆகும். 451 00:39:47,888 --> 00:39:49,848 அவசியமில்லை, இல்லை. 452 00:39:50,516 --> 00:39:53,310 அது கைவிடப்படுவதற்கு முன்பு எங்கள் துறை ஒன்றில் வேலை செய்தது. 453 00:39:53,310 --> 00:39:54,811 அவர்கள் நம்மை சங்கடமான நிலைக்கு தள்ளுவார்கள். 454 00:39:55,312 --> 00:39:58,398 உண்மையில், மிகவும் நியாயமான விதிமுறைகளோடு பேச்சுவார்த்தை நடத்தினோம் என நினைத்தேன். 455 00:39:58,398 --> 00:40:00,317 மறந்துவிடுங்கள். நாம் மீண்டும் பிரஸ்ஸல்ஸ் போகப் போவதில்லை. 456 00:40:00,317 --> 00:40:02,986 டோபி. -மறந்துவிடுங்கள் என்றேன். 457 00:40:04,488 --> 00:40:05,531 டோபி. 458 00:40:07,908 --> 00:40:09,952 நீங்கள் பிரதமருக்கு ஆலோசனை வழங்கலாம், 459 00:40:11,370 --> 00:40:14,623 ஆனால் இந்த நாட்டின் பாதுகாப்பு விஷயங்கள் என்று வரும்போது, 460 00:40:15,582 --> 00:40:16,667 நான்தான் முடிவு செய்வேன். 461 00:40:17,209 --> 00:40:18,252 சரியா? 462 00:40:20,712 --> 00:40:24,049 ரிச்சர்ட், நம் எதிரிகள் மீதான உங்கள் மரியாதை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. 463 00:40:24,633 --> 00:40:26,260 ஐரோப்பா நமக்கு எதிரி அல்ல. 464 00:40:26,260 --> 00:40:28,136 நீங்கள் அப்படி நம்பினால், 465 00:40:28,136 --> 00:40:31,056 நான் நினைத்ததை விட நீங்கள் உங்கள் வேலைக்கு மிகவும் பொருத்தமற்றவர். 466 00:40:42,776 --> 00:40:44,862 இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் தருவாயில் இருந்தது, 467 00:40:44,862 --> 00:40:48,448 பிரதமர் மூக்கை நுழைத்து, மீண்டும் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளும் வரை. 468 00:40:48,448 --> 00:40:50,242 நீங்கள் டோபிக்கு பயப்படவில்லை, இல்லையா? 469 00:40:50,242 --> 00:40:51,743 டோபியா? 470 00:40:51,743 --> 00:40:53,412 டோபி க்ளீசன் ஒரு கோமாளி. 471 00:40:55,289 --> 00:40:58,041 உண்மையில், நீ நாளை பிரஸ்ஸல்ஸுக்குச் சென்று அதைத் தீர்க்கப் போகிறாய், சரியா? 472 00:40:59,001 --> 00:41:00,544 அதில் கையெழுத்திட எனக்கு அதிகாரம் இல்லை. 473 00:41:00,544 --> 00:41:02,045 போல்டனை உன்னுடன் அழைத்துச் செல். 474 00:41:03,088 --> 00:41:04,590 ஒருவேளை அவன் ஏதாவது உபயோகமாக இருக்கலாம். 475 00:41:05,132 --> 00:41:06,466 இறுதியாக. 476 00:41:06,466 --> 00:41:07,801 ஆணையத்தை நான் அழைக்கிறேன். 477 00:41:08,594 --> 00:41:10,053 அவர்கள் நன்றாக ஒத்துழைப்பதை உறுதிசெய். 478 00:41:15,851 --> 00:41:19,730 அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் வரை போல்டனை உன் பார்வையிலேயே வைத்துக்கொள், சரியா? 479 00:41:20,689 --> 00:41:22,357 இறுதியில் க்ளீசன் கண்டுபிடிக்கப் போகிறார். 480 00:41:22,357 --> 00:41:23,483 எனக்குக் கவலை இல்லை. 481 00:41:24,651 --> 00:41:27,404 அந்த மனிதர் இந்த நாட்டின் பாதுகாப்பை 482 00:41:27,404 --> 00:41:32,284 கார்ப்பரேட் கைக்கூலிகளுக்கு விற்பதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன். 483 00:41:44,963 --> 00:41:46,965 அன்பே! தாமதமாக வந்திருக்கிறீர்கள். -ஆம், 484 00:41:46,965 --> 00:41:49,510 முடிந்தவரை வேகமாக வந்தேன். -அவர் அரை மணிநேரமாக காத்திருக்கிறார். 485 00:41:54,598 --> 00:41:57,935 மன்னிக்கவும், பாப். எதிர்பார்த்ததை விட அதிக நேரம் ஜனாதிபதி என்னை இருக்க வைத்துவிட்டார். 486 00:41:57,935 --> 00:42:00,020 கவலை இல்லை. எனக்கும் வேலை இருந்தது. 487 00:42:01,396 --> 00:42:03,023 எது உங்களை பாரிஸுக்கு அழைத்து வந்தது? 488 00:42:03,023 --> 00:42:05,275 நீதான், டிடியர். என்ன செய்கிறாய்? 489 00:42:05,776 --> 00:42:08,362 நீ சிரியர்களை கவனித்துக்கொள்வதாக எங்களுக்கு உறுதியளித்தாய். 490 00:42:09,029 --> 00:42:10,781 பொறுங்கள். நான் எதற்கும் உறுதியளிக்கவில்லை. 491 00:42:11,281 --> 00:42:13,617 இது இன்னும் முடியவில்லை. இரண்டாவது ஹேக்கர் ஒளிந்திருக்கும் இடம் எங்களுக்குத் தெரியும். 492 00:42:13,617 --> 00:42:16,495 இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். 493 00:42:17,829 --> 00:42:19,206 என்ன? அதை எங்கே கேள்விப்பட்டாய்? 494 00:42:19,206 --> 00:42:21,500 இப்போதுதான் செய்தி கிடைத்தது. அவர்கள் நாளை பிரஸ்ஸல்ஸில் இருப்பார்கள். 495 00:42:25,963 --> 00:42:28,423 ஐரோப்பிய ஆணையத்தில் உள்ள உன் தொடர்பு. 496 00:42:31,218 --> 00:42:33,554 அவள் ஏதாவது ஒரு வழியில் உதவ முடியுமா? 497 00:42:39,017 --> 00:42:40,185 பை, அப்பா. 498 00:42:41,103 --> 00:42:42,145 பை! 499 00:42:48,861 --> 00:42:51,613 ஐரோப்பிய ஆணையத்துடன் இங்கிலாந்து ஒப்பந்தத்துக்கு வராது என்பதை நான் உறுதியளிக்கிறேன். 500 00:42:51,613 --> 00:42:52,865 நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். 501 00:43:02,291 --> 00:43:05,669 நீயும் போல்டனும் நாளை இவரைத்தான் பார்க்கப் போகிறீர்கள். 502 00:43:06,712 --> 00:43:08,213 சபீன் லூஸோவ். 503 00:43:08,213 --> 00:43:09,673 வேன்டிமீரின் தலைமைப் பணியாளர். 504 00:43:10,174 --> 00:43:13,635 அவள் திறமையானவள்... அவளுக்குக் கோப்பைத் தெரியும். 505 00:43:14,219 --> 00:43:15,846 நீ அவளுடன் பணிபுரியும் போது, 506 00:43:16,346 --> 00:43:18,473 நான் பிரதமரோடு பேசுகிறேன். அவருடைய அனுமதியை பெற முடியுமா என்று பார்க்கிறேன். 507 00:43:19,641 --> 00:43:20,684 சரியா? 508 00:43:23,145 --> 00:43:25,480 என் செல்ஃபோன். அதை எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை. 509 00:43:26,899 --> 00:43:28,275 ஒருவேளை அதை அழைத்துப் பார். 510 00:43:40,120 --> 00:43:43,165 பிரஸ்ஸல்ஸ் பதிவு 511 00:43:43,165 --> 00:43:45,876 சபீன் லூஸோவ் பிரஸ்ஸல்ஸ் பெல்ஜியம் 512 00:44:00,265 --> 00:44:04,937 பார்க் ஆண்ட்ரே சிட்ரோன், பாரிஸ் 513 00:44:20,661 --> 00:44:21,995 ஹாய். 514 00:44:36,677 --> 00:44:37,761 உன்னை மிஸ் செய்தேன். 515 00:44:41,765 --> 00:44:44,226 பிறகு ஏன் என்னை அடிக்கடி பிரஸ்ஸல்ஸில் பார்க்க வருவதில்லை? 516 00:44:44,726 --> 00:44:45,894 எனக்கு நேரமில்லை. 517 00:44:49,773 --> 00:44:51,483 ஒரு கிளாஸ் ஒயின் குடிக்க நேரம் இருக்கிறதா? 518 00:44:52,484 --> 00:44:53,735 அல்லது இல்லையா? 519 00:44:53,735 --> 00:44:55,445 உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன். 520 00:44:57,406 --> 00:44:59,867 நான் உன்னிடம் ஒன்று பேச விரும்பினேன், ஆனால் தொலைபேசியில் அல்ல. 521 00:45:09,001 --> 00:45:10,169 வா. 522 00:45:19,761 --> 00:45:22,264 என் அழகான கண்களுக்காக நீ என்னைப் பார்க்க வந்ததாக நான் எப்படி நினைத்தேன்? 523 00:45:22,264 --> 00:45:24,433 இப்போது ஒரு பெரிய வழக்கில் வேலை செய்கிறேன், தெரியுமா? 524 00:45:25,309 --> 00:45:27,561 எனக்கும் உனக்கும் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வழக்கு. 525 00:45:28,395 --> 00:45:29,396 அடக் கடவுளே. 526 00:45:29,396 --> 00:45:31,940 கடைசியாக நீ அதை என்னிடம் சொன்னபோது, என்னை பிரஸ்ஸல்ஸுக்கு குடிபெயர செய்தாய். 527 00:45:31,940 --> 00:45:34,776 ஆம், இரட்டிப்பு ஊதியம் தரும் கௌரவமான வேலைக்கு, குறைவானது இல்லை. 528 00:45:34,776 --> 00:45:36,403 சரி, கோபப்படாதே. 529 00:45:37,863 --> 00:45:38,906 என்ன அது? 530 00:45:40,490 --> 00:45:42,993 இங்கிலாந்து மீண்டும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தில் நுழைய விரும்புகிறது. 531 00:45:43,660 --> 00:45:45,913 அது புதிதல்ல. இரண்டு வருடங்களாக கையெழுத்திடுவதற்கு ஆவணங்கள் தயாராக உள்ளன. 532 00:45:45,913 --> 00:45:47,122 அவர்கள் அதில் கையெழுத்திடக் கூடாது. 533 00:45:47,706 --> 00:45:49,041 லண்டனில் ரயில் விபத்தைப் பார்த்தாயா? 534 00:45:49,541 --> 00:45:51,001 அது சைபர் தாக்குதல் என்று எல்லோரும் சொல்கிறார்கள். 535 00:45:51,919 --> 00:45:53,754 அவர்கள் உதவிக்காக ஐரோப்பாவிடம் வருவது எனக்கு ஆச்சரியமில்லை. 536 00:45:54,254 --> 00:45:56,548 நாங்கள் அவர்களுக்கு உதவுவோம், நிச்சயமாக. ஆனால் காலகட்டம்தான் பிரச்சினை. 537 00:45:56,548 --> 00:45:58,842 எங்களுக்காக, ஃபிரான்ஸுக்காக, அவர்கள் கையெழுத்திடக்கூடாது. 538 00:45:58,842 --> 00:46:00,552 ஃபிரான்ஸின் நலன்களுக்கு அது இன்றியமையாதது. 539 00:46:01,720 --> 00:46:03,263 ஃபிரான்ஸின் நலனுக்கா உன்னுடைய நலனுக்கா? 540 00:46:04,181 --> 00:46:06,308 உன் நேரத்திற்கு மதிப்புள்ளதாக இருக்கும். -இல்லை, நன்றி. 541 00:46:07,267 --> 00:46:09,353 நீ சொன்னது போல, பெருந்தன்மையாக இருந்தது போதும். 542 00:46:09,353 --> 00:46:10,812 எனக்கு மேலும் எதுவும் வேண்டாம். 543 00:46:16,276 --> 00:46:17,319 பியர்? 544 00:46:22,241 --> 00:46:23,283 பார். 545 00:46:37,047 --> 00:46:38,298 உன் மகன் அழகாக இல்லையா? 546 00:46:44,680 --> 00:46:45,889 இதைப் பார். 547 00:46:52,187 --> 00:46:54,439 உன் சம்பளம் பற்றி நானே பேசுகிறேன். 548 00:46:55,023 --> 00:46:56,066 வேண்டாம். 549 00:46:57,734 --> 00:46:58,819 வேண்டாம் என்று சொல்லாதே. 550 00:46:59,528 --> 00:47:01,154 இது உனக்காக அல்ல. அவனுக்காக. 551 00:47:04,032 --> 00:47:05,367 அவனை அடிக்கடி வந்து பார். 552 00:47:05,868 --> 00:47:07,202 அவன் எவ்வளவு வளர்ந்துவிட்டான் என்பதை நீ பார்ப்பாய். 553 00:47:15,335 --> 00:47:17,129 பிரிட்டிஷாரைப் பற்றி. நான் உன்னை நம்பலாமா? 554 00:47:21,008 --> 00:47:22,009 சரி. 555 00:47:22,593 --> 00:47:25,262 ஆனால் இதுதான் கடைசி முறை, சரியா? 556 00:47:53,540 --> 00:47:54,875 நன்றி. 557 00:47:58,462 --> 00:48:00,172 சமீர்? -மிரியம். 558 00:48:02,674 --> 00:48:05,886 உனக்கு பத்து மெஸ்ஸேஜ்களை அனுப்பினேன். உன் ஃபோனை மாற்றிவிட்டாயா? 559 00:48:06,470 --> 00:48:10,140 ஆம். கவலைப்படாதே. நீ வந்துவிட்டாயா? ஹிச்சாம் எப்படி இருக்கிறான்? 560 00:48:12,226 --> 00:48:13,519 கடவுளுக்கு நன்றி. 561 00:48:13,519 --> 00:48:18,190 எல்லாம் நன்றாக இருக்கிறது, அன்பே. இப்போதுதான் பெல்ஜியம் வந்திருக்கிறோம். நீ? 562 00:48:18,190 --> 00:48:20,776 நான் உன்னிடம் வருகிறேன். வந்து அழைத்து வருகிறேன். சரியா? 563 00:48:22,069 --> 00:48:23,320 வலீத் எங்கே? 564 00:48:25,322 --> 00:48:26,615 வலீத் லண்டனில் தங்கிவிட்டான். 565 00:48:28,742 --> 00:48:30,661 ஏன்? நீ இப்போது எங்கே இருக்கிறாய்? 566 00:48:31,703 --> 00:48:34,414 நான் நன்றாக இருக்கிறேன், மிரியம். என்னைப் பற்றி கவலைப்படாதே. 567 00:48:35,249 --> 00:48:36,333 நான் நண்பர்களுடன் இருக்கிறேன். 568 00:48:37,417 --> 00:48:41,129 என்னுடன் பேச வேண்டும் என்றால் இந்த எண்ணிற்கு மெஸ்ஸேஜ் அனுப்பு. நான் அழைக்கிறேன். சரியா? 569 00:48:42,381 --> 00:48:43,632 நிஜமாகவே உன்னை மிஸ் செய்கிறேன். 570 00:48:44,508 --> 00:48:45,717 பை. 571 00:49:00,107 --> 00:49:01,149 அது வேலை செய்ததா? 572 00:49:01,149 --> 00:49:03,277 நான் இந்த ஃபோனை வைத்திருக்கட்டுமா? 573 00:49:03,277 --> 00:49:04,486 ஆம், நிச்சயமாக. 574 00:49:05,904 --> 00:49:08,657 ஆனால் இவை தாக்கத்தை ஏற்படுத்தும். 575 00:49:08,657 --> 00:49:10,951 அம்மா, எனக்கு சிகிச்சையாளர் தேவையில்லை. 576 00:49:10,951 --> 00:49:12,870 ஆனால் இந்த நபர் சிறந்தவர். 577 00:49:12,870 --> 00:49:15,080 உனக்கு யாரோ ஒருவரை பரிந்துரைக்க மாட்டேன். வெறும்... 578 00:49:15,080 --> 00:49:16,331 ஆம், எனக்குத் தெரியும். ஆனால்... 579 00:49:16,331 --> 00:49:17,833 இந்த ஒரு காரியத்தை செய். 580 00:49:17,833 --> 00:49:19,543 விபத்தில் சிக்கியது நான் மட்டும் அல்ல, ஒவ்வொரு... 581 00:49:19,543 --> 00:49:23,589 கிம், தயவுசெய்து. இது உனக்காக இருக்கலாம். உனக்காக மட்டுமே. 582 00:49:24,548 --> 00:49:26,049 நலமா? -தயவுசெய்து, கிம்? 583 00:49:26,049 --> 00:49:26,967 ஆம். -கிம். 584 00:49:26,967 --> 00:49:28,719 நான் மணிக்கணக்காக உன்னை அழைக்கிறேன். 585 00:49:29,928 --> 00:49:30,971 மன்னித்துவிடு. 586 00:49:31,638 --> 00:49:32,681 என் ஃபோனை தொலைத்துவிட்டேன். 587 00:49:34,892 --> 00:49:37,019 நீங்கள் சொல்வது எனக்கு இன்னும் கவலையளிக்கிறது. 588 00:49:37,019 --> 00:49:38,437 அதை கடைசியாக எங்கே பார்த்தாய்? 589 00:49:39,229 --> 00:49:40,272 எனக்குத் தெரியவில்லை. 590 00:49:43,400 --> 00:49:45,360 ஓ, மன்னித்துவிடு. -பரவாயில்லை, அன்பே. 591 00:49:47,821 --> 00:49:48,906 சியர்ஸ். 592 00:49:50,282 --> 00:49:51,658 அப்பா. 593 00:49:52,492 --> 00:49:53,744 வந்து எனக்கு உதவ முடியுமா? 594 00:49:56,538 --> 00:49:59,625 அப்பாவிடம் கேளுங்கள். அவரும் அதையே சொல்வார். அது அவசியமில்லை என்று. 595 00:50:01,752 --> 00:50:03,837 இது உண்மையில் உனக்கு உதவலாம். -லிண்டா. 596 00:50:03,837 --> 00:50:06,048 உனக்கு சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். 597 00:50:06,048 --> 00:50:09,510 நான் உன் அம்மா. நான் கவலைப்படுவேன். அதுதான் என் வேலை. 598 00:50:24,566 --> 00:50:28,445 ஆனால் என்னால் முடிந்த விதத்தில் நான் உதவ முயற்சிக்கிறேன். 599 00:50:29,029 --> 00:50:33,534 கேள், காலையில் முதல் விஷயம். அது எப்படி தோன்றுகிறது என்று பார். சரியா? 600 00:52:19,932 --> 00:52:21,934 வசனத் தமிழாக்கம் அருண்குமார்