1 00:00:19,228 --> 00:00:23,357 திரு. டொமினே, உங்கள் முடிந்தளவு சிறப்பாக இந்த ஒயினை அடையாளம் காண விரும்புகிறோம். 2 00:00:32,115 --> 00:00:33,283 ஒயின். 3 00:00:35,786 --> 00:00:37,996 அதுதான் என் வாழ்க்கையே. 4 00:00:40,415 --> 00:00:42,543 என் வேலையில் நான் தான் சிறந்தவன். 5 00:00:44,461 --> 00:00:46,171 நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். 6 00:00:47,923 --> 00:00:49,508 பிறகு நான் அவளைச் சந்தித்தேன். 7 00:00:52,135 --> 00:00:53,720 நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. 8 00:01:14,783 --> 00:01:15,993 இரு. 9 00:02:05,083 --> 00:02:06,168 முலாம்பழம்? 10 00:02:24,937 --> 00:02:26,146 பேரிக்காய்? 11 00:02:30,776 --> 00:02:31,902 செலரி? 12 00:02:34,655 --> 00:02:35,864 லிண்டன். 13 00:02:36,615 --> 00:02:37,491 லிச்சி. 14 00:02:38,158 --> 00:02:39,159 பீச். 15 00:02:39,910 --> 00:02:41,328 ஆப்பிள். 16 00:02:53,507 --> 00:02:54,591 எனக்குத் தெரியவில்லை. 17 00:02:55,425 --> 00:02:56,635 யோசி. 18 00:02:57,678 --> 00:02:59,096 - இன்னும் கொஞ்சம் கிடைக்குமா? - இல்லை. 19 00:03:00,389 --> 00:03:01,557 ப்ளீஸ். 20 00:03:05,102 --> 00:03:06,311 இல்லை என்று கூறினேன். 21 00:03:09,565 --> 00:03:12,317 யோசி. 22 00:03:46,518 --> 00:03:47,603 கமில். 23 00:03:50,272 --> 00:03:51,481 கவனம் செலுத்து. 24 00:03:58,322 --> 00:03:59,990 சுவையை கற்பனை செய்ய முயற்சி செய். 25 00:04:10,125 --> 00:04:11,627 அது உன் மனதில் உள்ளது. 26 00:04:15,881 --> 00:04:17,173 உனக்குத் தெரியும். 27 00:04:23,055 --> 00:04:27,851 யோசி. 28 00:04:43,450 --> 00:04:44,660 பாசி? 29 00:04:49,665 --> 00:04:50,874 கேட்கவில்லை. 30 00:04:52,292 --> 00:04:56,129 அதாவது, மரத்தில் உள்ள பாசி. 31 00:05:06,014 --> 00:05:07,266 அருமை, கமில். 32 00:05:08,976 --> 00:05:10,269 அருமை. 33 00:05:11,854 --> 00:05:13,480 இன்று அவ்வளவுதான். 34 00:05:58,442 --> 00:06:00,444 - சிகரெட்? - இல்லை, வேண்டாம். 35 00:06:15,834 --> 00:06:17,336 பாரிஸ் 36 00:06:17,336 --> 00:06:20,172 20 ஆண்டுகளுக்குப் பிறகு 37 00:06:29,723 --> 00:06:32,142 நீ வந்ததில் மகிழ்ச்சி, கமில். 38 00:06:32,142 --> 00:06:34,186 பிறந்தநாள் வாழ்த்துகள், அழகியே. 39 00:06:34,728 --> 00:06:36,813 ஹேய்! வாட்ஸப்? 40 00:06:48,534 --> 00:06:50,202 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 41 00:06:50,202 --> 00:06:52,746 - என்ன வேண்டும்? - ஒரு கிளாஸ் தண்ணீர். 42 00:06:52,746 --> 00:06:55,332 - அவ்வளவுதானா? - அவ்வளவுதான். 43 00:06:55,332 --> 00:06:56,667 - ஐஸ்? - ஐஸுடன். 44 00:06:56,667 --> 00:06:57,960 சரி. 45 00:07:05,342 --> 00:07:07,177 இந்தாருங்கள். கவனமாகக் குடியுங்கள். 46 00:07:17,896 --> 00:07:21,608 கமில்? கமில் லெஜர்? 47 00:07:21,608 --> 00:07:23,360 ஆம்... மன்னிக்கவும், ஆனால்... 48 00:07:23,360 --> 00:07:25,654 உங்களுக்கு என்னை அடையாளம் தெரியாது. 49 00:07:25,654 --> 00:07:28,240 நாம் ஏழாண்டுகளுக்கு முன் ஒரு புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். 50 00:07:28,991 --> 00:07:30,617 உங்கள் புத்தகத்தில் எனக்குக் கையொப்பமிட்டுக் கொடுத்தீர்கள். 51 00:07:30,617 --> 00:07:32,411 - அப்போது எனக்கு 15 வயது. - 15 வயதா? 52 00:07:32,411 --> 00:07:33,495 - ஆம். - சரி. 53 00:07:33,495 --> 00:07:36,248 என் படுக்கையறை மேசையில் ஒரே புத்தகம்தான் இருந்தது, அது உங்களுடையதுதான். 54 00:07:36,248 --> 00:07:40,586 என் ஹை ஸ்கூல் காலம் முழுக்க அதை நான் வைத்திருந்தேன். 55 00:07:41,170 --> 00:07:42,462 உங்கள் புத்தகத்துடன் தான் நான் வளர்ந்தேன். 56 00:07:42,462 --> 00:07:45,382 என் புத்தகத்துடன் வளர்ந்தாய். அற்புதம். 57 00:07:45,966 --> 00:07:48,427 ஆம். நீங்கள் இன்னொரு புத்தகம் எழுதினீர்களா? 58 00:07:50,012 --> 00:07:54,016 இல்லை. ஆம், ஆனால் இப்போது என் வெளியீட்டாளராக இல்லாத என் வெளியீட்டாளர், 59 00:07:54,016 --> 00:07:56,226 நான் அனுப்பிய அனைத்தையும் நிராகரித்துவிட்டார். 60 00:07:56,226 --> 00:07:58,145 ஆனால் பரவாயில்லை, புரிகிறது. 61 00:07:58,645 --> 00:07:59,813 நான் எதுவும் சாதிக்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். 62 00:07:59,813 --> 00:08:02,441 நான் ஒரே விஷயங்களை எப்போதும் எழுதிக்கொண்டிருந்தேன், ஆனால் நன்றாக இல்லை... 63 00:08:02,441 --> 00:08:05,444 சரி. இப்போது என்ன செய்கிறீர்கள்? 64 00:08:05,944 --> 00:08:08,155 நான் என்னைக் கண்டறிய முயல்கிறேன். 65 00:08:08,155 --> 00:08:11,158 - இன்னும் தேடுகிறேன். - ஆம், எனக்குப் புரிகிறது. 66 00:08:11,158 --> 00:08:12,242 நீ? 67 00:08:12,242 --> 00:08:16,622 நான் ஒரு இசைக் கலைஞர், என் சொந்த லேபிளை இப்போதுதான் தொடங்கினேன். 68 00:08:16,622 --> 00:08:18,290 - நல்லது. - ஆம். 69 00:08:20,959 --> 00:08:22,336 மன்னிக்கவும், ஆனால் நீங்கள்... 70 00:08:22,920 --> 00:08:24,838 என் நினைவில் இருப்பதைவிட மிகவும் அழகாக இருக்கிறீர்கள். 71 00:08:25,464 --> 00:08:28,050 உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. 72 00:08:29,259 --> 00:08:30,677 எனக்கும்தான். 73 00:08:34,932 --> 00:08:35,933 நான் ஜூலியன். 74 00:08:38,018 --> 00:08:39,227 ஹாய், ஜூலியன். 75 00:08:42,022 --> 00:08:44,024 - இரு. - என்ன? 76 00:08:44,566 --> 00:08:47,277 பொறுமை! நீ நேரத்தை வீணடிக்க மாட்டாயா? 77 00:08:47,277 --> 00:08:50,322 ”இழந்த தருணம் என்பது நிரந்தரமாக இழந்த தருணம்” என்று சொல்வார்கள். 78 00:08:50,989 --> 00:08:54,660 - இரு. அது நான் கூறியதா? - ஆம். 79 00:08:54,660 --> 00:08:56,245 நீ புத்திசாலி, இல்லையா? 80 00:08:58,580 --> 00:08:59,748 இருக்கலாம். 81 00:09:10,968 --> 00:09:14,012 - எனக்காகக் காத்திரு, வந்துவிடுகிறேன். கண்டிப்பாக. - சரி. 82 00:09:24,898 --> 00:09:25,899 ஹலோ? 83 00:09:28,110 --> 00:09:29,111 ஹலோ? 84 00:09:29,111 --> 00:09:31,238 கமில், நான் தான். 85 00:09:32,990 --> 00:09:33,991 உன் அப்பா. 86 00:09:34,491 --> 00:09:37,119 - கேட்கிறதா, கமில்? - கேட்கிறது. 87 00:09:38,579 --> 00:09:41,957 நான் உன்னைப் பார்க்க விரும்புகிறேன். 88 00:09:43,625 --> 00:09:45,002 சீக்கிரம் வந்தால் நல்லது. 89 00:09:45,544 --> 00:09:46,837 மன்னிக்கவும், 90 00:09:47,337 --> 00:09:49,882 நீங்கள் மீண்டும் என் வாழ்க்கைக்குள் வந்துவிட்டு... 91 00:09:49,882 --> 00:09:52,926 கேள், எனக்கு உடல்நிலை சரியில்லை. 92 00:09:53,927 --> 00:09:59,183 உண்மையில், சுத்தமாக சரியில்லை. எனக்கு நேரம் குறைவாக உள்ளதென டாக்டர்கள் கூறுகின்றனர். 93 00:09:59,183 --> 00:10:01,268 ”நேரம் குறைவாக உள்ளது” என்றால் என்ன அர்த்தம்? 94 00:10:02,853 --> 00:10:04,354 நான் இறக்கப் போகிறேன், கமில். 95 00:10:06,106 --> 00:10:09,693 டோக்கியோவுக்கு வா. நான் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன். 96 00:10:10,235 --> 00:10:11,445 இருங்கள். 97 00:10:13,864 --> 00:10:15,616 என்னால் அடுத்த வாரம் வர முடியலாம். 98 00:10:15,616 --> 00:10:17,826 இல்லை. இன்றிரவே. 99 00:10:17,826 --> 00:10:20,537 என்ன? இல்லை, என்னால்... 100 00:10:20,537 --> 00:10:23,707 உனக்கு நான் விமான டிக்கெட் புக் செய்துள்ளேன். உன் இன்பாக்ஸைப் பார். 101 00:10:23,707 --> 00:10:25,375 அது அப்படி வேலை செய்யாது. 102 00:10:25,375 --> 00:10:27,586 நீ பிறகு என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். 103 00:10:28,504 --> 00:10:30,506 நீ சொல்லும் அனைத்தையும் கேட்கிறேன். 104 00:10:36,261 --> 00:10:37,888 நான் யோசிக்க வேண்டும். 105 00:10:37,888 --> 00:10:39,264 யோசி. 106 00:10:41,058 --> 00:10:42,142 ஆனால் வேகமாக யோசி. 107 00:11:10,254 --> 00:11:11,255 நன்றாக இருக்கிறீர்களா? 108 00:11:12,840 --> 00:11:14,174 ஆம், நன்றாக இருக்கிறேன். 109 00:11:16,510 --> 00:11:19,471 - என்ன அது? - கொஞ்சம் ஆற்றல் கொடுக்க. 110 00:11:19,471 --> 00:11:23,267 எனது ஸ்பெஷல் ட்ரிங்க்: டெக்கீலா, ஜின், வோட்கா மற்றும் கொஞ்சம் ரம். 111 00:11:23,892 --> 00:11:25,477 - ஆம். விளையாட்டு இல்லை. - ஆம். 112 00:11:26,019 --> 00:11:29,481 இது அருமை, ஆனால் நான் ஆல்கஹால் குடிக்க மாட்டேன். அது சிக்கலானது. 113 00:11:31,775 --> 00:11:33,819 நான் குடிக்கலாமா? 114 00:11:36,113 --> 00:11:37,114 தாராளமாக. 115 00:11:49,918 --> 00:11:51,211 நீ என்ன பைத்தியமா? 116 00:11:53,630 --> 00:11:54,923 நான் தான்... 117 00:12:18,363 --> 00:12:20,407 சிவப்பு... என்ன... 118 00:12:24,661 --> 00:12:26,121 - நன்றாக இருக்கிறாயா? - ஆம். 119 00:12:28,582 --> 00:12:29,875 என்ன நடந்தது? 120 00:12:31,835 --> 00:12:34,087 நான் கொஞ்சம் ஸ்ட்ராங்காக ஒன்றைக் குடித்தேன் என்று சொல்லலாம். 121 00:12:34,087 --> 00:12:35,506 என்ன? 122 00:12:35,506 --> 00:12:38,342 கவலைப்படாதீர்கள், அவன் ஒரு இளைஞன். 123 00:12:38,342 --> 00:12:41,720 அவன் வாயில் ஆல்கஹாலுடன் எனக்கு திடீரென முத்தம் கொடுத்துவிட்டான், பொடியன். 124 00:12:43,222 --> 00:12:46,517 மிகவும் பொடியனா? என்ன சொல்கிறாய்? 125 00:12:48,477 --> 00:12:50,521 - 22 வயது. - 22 வயதா? 126 00:12:50,521 --> 00:12:51,813 அற்புதம். 127 00:12:52,397 --> 00:12:56,985 போன ஆள் போல இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் 40 வயது ஆளைவிட இது பரவாயில்லை. 128 00:12:58,445 --> 00:13:03,116 நீ உன் வயது ஆட்களுடன் பழகினால் உனக்கு நல்லதாக இருக்கும். 129 00:13:03,116 --> 00:13:04,785 வாழ்க்கையில் எதையாவது சாதிக்க விரும்புபவர்கள். 130 00:13:04,785 --> 00:13:06,078 ஆம், தெரியும், அம்மா. 131 00:13:13,126 --> 00:13:14,336 அவர் கால் செய்தார். 132 00:13:15,295 --> 00:13:16,505 அலெக்ஸாண்ட்ரே. 133 00:13:18,382 --> 00:13:20,175 அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவர் முடிந்தளவு சீக்கிரமாக என்னைப் பார்க்க விரும்புகிறார். 134 00:13:23,554 --> 00:13:24,763 உடல்நிலை சரியில்லையா? 135 00:13:25,597 --> 00:13:27,099 நிச்சயமாகத் தெரியுமா? 136 00:13:27,850 --> 00:13:29,017 என்ன சொல்கிறீர்கள்? 137 00:13:31,770 --> 00:13:33,564 நீ அவரைப் பார்க்க வருவதற்கான ஏமாற்று வேலையாக இருக்கலாம். 138 00:13:33,564 --> 00:13:35,274 அம்மா, நிறுத்துங்கள். 139 00:13:50,330 --> 00:13:51,164 பாரிஸ்-டோக்கியோ 140 00:13:51,164 --> 00:13:53,458 பான்டோய்ஸ்-கோர்மைல்ஸ் ஏர்போர்ட்டுக்கு 22:45 மணிக்கு பிக்கப். 141 00:13:53,458 --> 00:13:54,918 டிரைவர் பெயர் ஜான். அலெக்ஸாண்ட்ரே லெஜர் 142 00:14:03,177 --> 00:14:04,595 என்ன பிரச்சினை? 143 00:14:09,391 --> 00:14:10,893 நாம் ஏற்கனவே அதைப் பற்றிப் பேசிவிட்டோம், 144 00:14:12,019 --> 00:14:14,146 - ஆனால் உன் அப்பா ஒரு... - ஆம், தெரியும். 145 00:14:15,480 --> 00:14:17,941 நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். இதைச் சிக்கலாதீர்கள், சரியா? 146 00:14:17,941 --> 00:14:19,568 அவர் நபர்களைக் கையாளக்கூடியவர், கமில். 147 00:14:21,361 --> 00:14:22,654 நான் குளிக்கப் போகிறேன். 148 00:14:35,918 --> 00:14:38,378 அவர் எனக்கு விமான டிக்கெட் எடுத்துள்ளார். நள்ளிரவில் விமானம் கிளம்புகிறது. 149 00:14:39,838 --> 00:14:41,298 அவர் பல ஆண்டுகளாக காணாமல் போனார், 150 00:14:41,298 --> 00:14:43,300 ஒரே ஃபோன் காலில் நீ அவருடன் மீண்டும் சேர்கிறாயா? 151 00:14:43,300 --> 00:14:45,552 நீ அவர் மீது எவ்வளவு கோபத்தில் இருந்தாய் என்பதை மறந்துவிட்டாயா? 152 00:14:46,053 --> 00:14:48,514 எப்படி மறக்க முடியும், அம்மா? நீங்கள் அதை எப்போதும் நினைவூட்டுகிறீர்களே. 153 00:14:48,514 --> 00:14:51,433 இதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்கள், ஆனால் நான் போக வேண்டும். 154 00:14:51,433 --> 00:14:53,769 அவரிடம் பதில்களைப் பெற இதுதான் என் கடைசி வாய்ப்பு. 155 00:14:59,149 --> 00:15:00,150 கமில். 156 00:15:00,150 --> 00:15:03,487 இல்லை, என் மனதை மாற்றிக்கொள்ள மாட்டேன், ஆம், உங்களை நேசிக்கிறேன். 157 00:15:28,220 --> 00:15:29,429 திருமதி லெஜர். 158 00:15:33,475 --> 00:15:35,310 - உங்கள் பையை எடுத்துக்கொள்ளவா? - பரவாயில்லை, வேண்டாம். 159 00:16:13,765 --> 00:16:16,351 அமருங்கள், மேடம். 160 00:16:16,935 --> 00:16:18,145 நாம் புறப்படப் போகிறோம். 161 00:17:15,285 --> 00:17:19,080 டோக்கியோ 162 00:17:32,386 --> 00:17:34,388 நீங்கள்தான் திரு. இஸ்ஸே டொமினேவா? 163 00:17:36,682 --> 00:17:39,810 நீங்கள்தான், பிரபலமான கோனோ குடும்பத்தின் மிஸ் சாயாகா. 164 00:17:41,562 --> 00:17:44,231 - ஏதேனும் குடிக்கிறீர்களா? - அது மிகவும் கனிவான விஷயம். 165 00:17:44,231 --> 00:17:45,983 ஆனால் அது நேரத்தை வீணடிப்பது என நினைக்கிறேன், 166 00:17:45,983 --> 00:17:47,484 நாகரிகமான புன்னகையுடன் கூட. 167 00:17:48,694 --> 00:17:51,697 என் பெற்றோர் என்னை தொல்லை செய்வதை நிறுத்தத்தான் இங்கே வந்தேன். 168 00:17:52,364 --> 00:17:55,742 என் நண்பர்கள் எனக்காகக் காத்திருக்கின்றனர், அதனால் இதை முடித்துக்கொள்வோம். 169 00:17:58,245 --> 00:17:59,705 என் அம்மா உங்களைப் பற்றிக் கூறியுள்ளார். 170 00:18:00,247 --> 00:18:02,958 நீங்கள்தான் ஒயினை ருசித்துப் பார்த்து, அவற்றைக் கணித்துச் சொல்பவர். 171 00:18:03,542 --> 00:18:05,043 அது மட்டுமல்ல, ஆனால் அப்படியே இருக்கட்டும். 172 00:18:05,544 --> 00:18:08,297 அதில் என்ன அர்த்தமுள்ளது? 173 00:18:08,297 --> 00:18:10,632 பாட்டிலிலேயே அதன் பெயர் இருக்கும். 174 00:18:10,632 --> 00:18:14,052 நீங்கள் நாய் போல முகர்ந்துகொண்டிருக்கிறீர்கள். 175 00:18:17,389 --> 00:18:18,599 சாயாகா. 176 00:18:19,349 --> 00:18:21,018 நீங்கள் அழகாக இருப்பது உண்மைதான். 177 00:18:21,935 --> 00:18:24,479 ஆனால் நீங்கள் மேலோட்டமாகவும் உள்ளே காலியாகவும் உள்ளீர்கள். 178 00:18:25,355 --> 00:18:28,984 ஒருவரைப் பற்றித் தெரியாமல் முடிவுசெய்யும் நபர் மீது எனக்கு ஆர்வமில்லை. 179 00:18:28,984 --> 00:18:31,612 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஆனால் நமக்குள் கெமிஸ்ட்ரி இல்லை என்று 180 00:18:31,612 --> 00:18:33,280 உங்கள் அம்மாவிடம் கூறிவிடுகிறேன். 181 00:18:33,989 --> 00:18:35,199 இப்போது, நான் கிளம்புகிறேன். 182 00:18:45,751 --> 00:18:46,752 ஹலோ. 183 00:18:46,752 --> 00:18:49,880 திரு. டொமினே, ஒரு கெட்ட செய்தி. 184 00:19:11,318 --> 00:19:13,028 நன்றாகச் சாப்பிடுங்கள். 185 00:19:14,154 --> 00:19:15,405 நன்றாகச் சாப்பிடுங்கள். 186 00:19:33,799 --> 00:19:38,804 நீ சாயாகாவைச் சந்தித்ததகாக திருமதி கோனோ கூறினார். 187 00:19:38,804 --> 00:19:40,097 ஆம். 188 00:19:41,348 --> 00:19:43,433 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, ஆனால் உங்களுக்குள் கெமிஸ்ட்ரி இல்லை 189 00:19:44,601 --> 00:19:46,311 என்று அவள் கூறியிருக்கிறாள். 190 00:19:50,607 --> 00:19:52,025 மோசம். 191 00:19:59,157 --> 00:20:00,158 அது இருக்கட்டும், 192 00:20:01,577 --> 00:20:03,412 என் எனாலஜி ஆசிரியர் இன்று இறந்துவிட்டார். 193 00:20:03,912 --> 00:20:07,583 அந்த ஃபிரெஞ்சுக்காரர், திரு. லெஜர். 194 00:20:08,667 --> 00:20:09,877 ஓ. 195 00:20:11,336 --> 00:20:12,546 நீ எங்களிடம் கூறியிருக்க வேண்டும். 196 00:20:13,213 --> 00:20:15,257 இந்த டின்னரை நாங்கள் வேறு நாளில் ஏற்பாடு செய்திருப்போம். 197 00:20:17,134 --> 00:20:19,094 எப்படி இருக்கிறாய், இஸ்ஸே? 198 00:20:21,096 --> 00:20:24,766 அவர் வயதானவராக, உடல்நிலை சரியில்லாதவராக இருந்தார். 199 00:20:27,269 --> 00:20:29,062 ஆனால் இது விசித்திரமாக உள்ளது... 200 00:20:29,062 --> 00:20:32,399 நீ ஏன் ஒயினில் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய் எனப் புரியவில்லை. 201 00:20:32,399 --> 00:20:33,650 ஹொனோகா. 202 00:20:35,527 --> 00:20:37,196 உனக்கு 29 வயதாகிறது, 203 00:20:37,863 --> 00:20:39,364 ஆனாலும் உன் பெற்றோரைச் சார்ந்திருக்கிறாய். 204 00:20:39,865 --> 00:20:42,576 உன் அபார்ட்மென்ட்டும் காரும் எங்களுடையவை. 205 00:20:43,452 --> 00:20:44,536 பணிவுடன் கூறுகிறேன், 206 00:20:45,287 --> 00:20:48,790 அந்த கார், பட்டம் பெற்றதற்காக என் தாத்தா பரிசாகக் கொடுத்தது. 207 00:20:49,291 --> 00:20:51,668 அந்த அபார்ட்மென்ட் நம் குடும்பத்திற்குச் சொந்தம் என்றாலும் 208 00:20:51,668 --> 00:20:53,629 ஒவ்வொரு மாதமும் நான் வாடகை தருகிறேன். 209 00:20:53,629 --> 00:20:57,674 நீ அற்புதமான மாணவனாக இருந்தாய், உனக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. 210 00:20:58,175 --> 00:21:00,886 இருந்தாலும், நீ ஏன் லாபமில்லாத ஒயின் துறையில் வேலை செய்ய விரும்புகிறாய்? 211 00:21:00,886 --> 00:21:03,722 - நீ என்ன நினைத்துக்கொண்டிருந்தாய்? - நீங்கள் கவலைப்பட வேண்டாம். 212 00:21:03,722 --> 00:21:05,641 நான் என்ன செய்கிறேன் என எனக்குத் தெரியும். 213 00:21:07,059 --> 00:21:09,686 திருமதி கினுவின் சமையல் நன்றாக இருக்கும்போது, நீ ஏன் எங்களுக்கு வியாழக்கிழமைகளில் 214 00:21:09,686 --> 00:21:11,480 சமைத்துக் கொடுப்பதை வலியுறுத்துகிறாய் எனத் தெரியவில்லை. 215 00:21:12,231 --> 00:21:13,941 ஏனெனில் அது அப்பாவை மகிழ்ச்சிப்படுத்தும். 216 00:21:24,826 --> 00:21:26,203 இது மிகவும் உப்பாக உள்ளது. 217 00:21:28,830 --> 00:21:30,832 இதை என்னால் சாப்பிட்டு முடிக்க முடியாது. 218 00:21:50,811 --> 00:21:52,563 - கமில். - ஹலோ. 219 00:21:52,563 --> 00:21:54,815 நான் லூகா இங்லேஸே, உன் அப்பாவின் நண்பர். 220 00:21:56,233 --> 00:21:58,443 ஒரு மோசமான செய்தி. 221 00:21:59,736 --> 00:22:02,406 இன்று காலை நீ பயணத்தில் இருக்கும்போது உன் அப்பா இறந்துவிட்டார். 222 00:22:03,907 --> 00:22:05,117 நான் மிகவும் வருந்துகிறேன். 223 00:22:11,081 --> 00:22:12,291 வா. 224 00:22:47,451 --> 00:22:49,870 உன் அப்பாவின் இடத்திற்கு உன்னைக் கூட்டிச் செல்கிறேன், 225 00:22:49,870 --> 00:22:52,331 ஆனால் அதற்கு முன் நாம் எதுவும் சாப்பிடலாமா? 226 00:22:52,331 --> 00:22:55,167 நீ பசியில் இருக்க வேண்டும். பரவாயில்லையா? 227 00:22:57,085 --> 00:22:58,295 சரி. 228 00:23:51,515 --> 00:23:54,142 - அவர் என்ன கூறினார்? - ”வரவேற்கிறேன்” என்றார். 229 00:23:54,643 --> 00:23:58,856 இல்லை, அது “இராஷாய் மஸே” ஆனால் மற்றது புரியவில்லை. 230 00:23:58,856 --> 00:24:00,649 நீ இங்கே வளர்ந்ததை மறந்துவிட்டேன். 231 00:24:01,191 --> 00:24:04,486 - நீ இந்த மொழி பேசுவாய். - பேசுவதைவிட அதிகம் புரிந்துகொள்வேன். 232 00:24:05,779 --> 00:24:07,489 ஷிஹைனின் என்றால் “முதலாளி” என்று அர்த்தம். 233 00:24:07,489 --> 00:24:10,033 அவர், “இதோ, முதலாளி” என்றார். 234 00:24:11,034 --> 00:24:12,953 ஆம், இது என் உணவகம். 235 00:24:12,953 --> 00:24:14,872 என் உணவகங்களில் ஒன்று. 236 00:24:16,331 --> 00:24:17,457 உணவகங்களா? 237 00:24:18,458 --> 00:24:19,877 நீங்கள் புதிய கார் வைத்திருக்கலாமே. 238 00:24:20,460 --> 00:24:24,590 அது உணர்வுரீதியாக நெருக்கமானது. நான் தொடங்கிய போது அதில்தான் டெலிவரிகளைச் செய்வேன். 239 00:24:25,174 --> 00:24:27,467 நான் யார் என்று உனக்குத் தெரியாதா? 240 00:24:27,467 --> 00:24:29,469 உன் அப்பா என்னைப் பற்றிக் கூறியது இல்லையா? 241 00:24:29,469 --> 00:24:32,514 நான் கடைசியாக அவரிடம் பேசியது 11 ஆண்டுகளுக்கு முன்பு. 242 00:24:33,348 --> 00:24:38,854 அவர் நான் ஹை ஸ்கூல் முடித்ததற்கு கால் செய்து “அருமை” என்றுவிட்டு, வைத்துவிட்டார். 243 00:24:38,854 --> 00:24:40,147 யாரும் கச்சிதமானவர்கள் இல்லை. 244 00:24:41,148 --> 00:24:43,150 நீ அவரைப் பற்றிப் பேச விரும்புகிறாயா? 245 00:24:43,150 --> 00:24:44,318 இல்லை. 246 00:24:44,860 --> 00:24:47,196 மியாபி, இது கமில். அலெக்ஸாண்ட்ரேவின் மகள். 247 00:24:47,821 --> 00:24:49,990 மிகவும் வருந்துகிறேன். அவர் எனக்கு மிகவும் உத்வேகமாக இருந்தார். 248 00:24:49,990 --> 00:24:51,283 நன்றி. 249 00:24:51,283 --> 00:24:54,828 மியாபி என் தலைமை சோமிலியே. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது. 250 00:24:55,329 --> 00:24:56,830 எல்.ஏ. வில் இருந்து வந்துள்ளார். 251 00:24:56,830 --> 00:24:58,665 ஆனால் அவரை யாரும் குறை சொல்லவில்லை. 252 00:25:00,083 --> 00:25:03,712 மியாபி வைத்திருக்கும் ஒயின் மிகவும் ஸ்பெஷலானது. 253 00:25:04,213 --> 00:25:08,091 உன் அப்பா அதை ஸ்பெயினில் கண்டறிந்தார். அதை யாரும் கேள்விப்பட்டதில்லை. 254 00:25:08,091 --> 00:25:10,511 அங்கே இருக்கும் அந்த நபரிடம் மூன்று ஏக்கர் உள்ளது. 255 00:25:10,511 --> 00:25:14,056 அவர் தன் தயாரிப்பை விற்க விரும்பவில்லை, ஆனால் அவரது ஒயின், 256 00:25:14,556 --> 00:25:15,974 மிகவும் அற்புதமானது. 257 00:25:17,643 --> 00:25:19,561 அலெக்ஸாண்ட்ரே எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துள்ளார். 258 00:25:19,561 --> 00:25:21,063 அவர் ஒரு மேதாவி. 259 00:25:21,688 --> 00:25:23,524 நான் அவருக்கு அனைத்தையும் கடன்பட்டுள்ளேன். 260 00:25:28,820 --> 00:25:29,863 மன்னிக்கவும், 261 00:25:30,822 --> 00:25:32,991 நான் விரும்பும், நீ வெறுக்கும் நபரைப் பற்றிப் பேசுகிறேன்... 262 00:25:34,868 --> 00:25:36,995 யாரும் அனைவரிடமும் மோசமாக இருக்க முடியாது. 263 00:25:42,000 --> 00:25:45,128 நீ அலெக்ஸாண்ட்ரே பற்றிக் கேட்க விரும்பவில்லை எனப் புரிகிறது. 264 00:25:45,629 --> 00:25:48,465 ஆனால் உன் சொத்து பற்றி நாம் பேச வேண்டும். 265 00:25:48,465 --> 00:25:50,926 உன் எதிர்காலத்தில் என்ன உள்ளது என உனக்குப் புரியவில்லை. 266 00:25:53,470 --> 00:25:56,557 பரவாயில்லை. நான் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்த்ததில்லை, 267 00:25:56,557 --> 00:25:58,851 அது இப்போது மாறப் போவதில்லை. 268 00:25:59,434 --> 00:26:00,769 கண்டிப்பாக. 269 00:26:01,728 --> 00:26:04,064 நாளை காலை உயில் படிக்கிறோம். 270 00:26:04,648 --> 00:26:06,316 அவருக்கு நேரத்தை வீணடிப்பது பிடிக்காது. 271 00:26:06,942 --> 00:26:09,903 அனைத்தும் அவருக்கு திட்டப்படிதான் இருந்துள்ளது. 272 00:26:09,903 --> 00:26:14,783 இறுதிச் சடங்கு, தகனம் நாளை மதியம் நடக்கிறது. 273 00:26:20,706 --> 00:26:24,001 சரி. முதலில் ஒயினுடன் தொடங்குவோம், சரியா? 274 00:26:26,378 --> 00:26:28,088 இதைக் குடித்துவிட்டு, என்ன நினைக்கிறாய் என்று சொல். 275 00:26:29,173 --> 00:26:31,675 இல்லை, வேண்டாம். நான் குடிப்பதில்லை. 276 00:26:32,676 --> 00:26:33,886 பயணக் களைப்பா? 277 00:26:34,761 --> 00:26:35,804 இல்லை. 278 00:26:36,305 --> 00:26:38,223 நான் குடிப்பதே இல்லை. 279 00:26:39,850 --> 00:26:40,851 குடிப்பதே இல்லையா? 280 00:26:43,562 --> 00:26:46,273 நான் ஒருபோதும் ஆல்கஹால் குடிப்பதில்லை. 281 00:26:47,441 --> 00:26:50,110 விளையாடாதே. ஒரு துளி கூடவா? 282 00:27:21,308 --> 00:27:23,852 கமில், மன்னிக்கவும் ஆனால் என்னால் தங்க முடியாது. 283 00:27:23,852 --> 00:27:27,898 உனக்காக ஒருவர் காத்திருப்பார். அவர் பெயர் யூசுகே. 284 00:27:28,524 --> 00:27:30,901 - நன்றி, லூகா. - நாளை சந்திக்கலாம். 285 00:27:30,901 --> 00:27:32,027 சரி. 286 00:28:04,601 --> 00:28:06,395 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 287 00:29:12,836 --> 00:29:15,714 லெஜர் ஒயின் கைடு 2009 288 00:30:11,812 --> 00:30:14,022 உங்கள் அறை தயார். 289 00:30:42,509 --> 00:30:45,429 - ஹலோ? - பாதுகாப்பாக போய்ச் சேர்ந்தாயா? 290 00:30:45,429 --> 00:30:46,513 ஆம். 291 00:30:46,513 --> 00:30:49,099 நீ கால் செய்திருக்கலாம். பயணம் எப்படி இருந்தது? 292 00:30:50,350 --> 00:30:51,685 நான் பிரைவேட் ஜெட்டில் வந்தேன். 293 00:30:55,147 --> 00:30:56,356 நிச்சயமாக அதில்தான் சென்றிருப்பாய். 294 00:30:57,191 --> 00:30:59,610 அவரால் உன்னை வாங்க முடியாது, இருந்தாலும் முயல்கிறார். 295 00:30:59,610 --> 00:31:00,903 அது பரிதாபமானது. 296 00:31:02,070 --> 00:31:03,197 அம்மா, அவர் இறந்துவிட்டார். 297 00:31:09,912 --> 00:31:11,955 என்னால் அவரைப் பார்க்க முடியவில்லை. நேரத்திற்குள் வர முடியவில்லை. 298 00:31:13,999 --> 00:31:15,459 வருந்துகிறேன், கண்ணே. 299 00:31:16,460 --> 00:31:17,503 உண்மையாக. 300 00:31:19,171 --> 00:31:22,007 நீ போயிருக்க வேண்டியதில்லை. நான் வேண்டாம் என்றேன், ஆனால் வற்புறுத்தியிருக்க வேண்டும். 301 00:31:23,050 --> 00:31:25,093 நீ எவ்வளவு பலவீனமானவள் என்று அவர் புரிந்துகொண்டதே இல்லை. 302 00:31:25,093 --> 00:31:27,387 அவர் வாக்குறுதிகள் கொடுத்தார், இப்போது விளைவைப் பார். 303 00:31:28,514 --> 00:31:30,641 அவர் இறந்துவிட்டாலும் உன்னைக் காயப்படுத்துகிறார். 304 00:31:30,641 --> 00:31:33,685 என்னுடன் விவாதிக்காதீர்கள்! எப்போதும் இதையே செய்கிறீர்கள். 305 00:31:33,685 --> 00:31:37,147 கண்ணே, ஏனெனில் உனக்கு எது நல்லது என எனக்குத் தெரியும். உனக்குச் சிறந்தது எதுவெனத் தெரியும். 306 00:31:37,147 --> 00:31:39,733 இல்லை, உங்களுக்குத் தெரியாது. 307 00:31:39,733 --> 00:31:41,443 அதனால் இந்த முறை என்னைச் சமாளிக்க விடுங்கள். 308 00:31:42,361 --> 00:31:43,570 நான் வர விரும்புகிறாயா? 309 00:31:43,570 --> 00:31:46,448 இல்லை, வர வேண்டாம். நான் போக வேண்டும். உங்களை நேசிக்கிறேன். 310 00:31:46,448 --> 00:31:47,783 சரி, முடியும்போது எனக்கு கால் செய். 311 00:31:47,783 --> 00:31:49,535 சரி, குட்பை. 312 00:31:58,210 --> 00:32:00,337 உயில் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 313 00:32:01,672 --> 00:32:02,881 பெரிதாகத் தெரியாது. 314 00:32:04,216 --> 00:32:07,511 அதைப் பற்றி எதுவும் கூறக் கூடாது என்றுதான் தெரியும். 315 00:32:08,804 --> 00:32:11,598 மிஸ் லெஜர், இந்தப் பக்கம் வாருங்கள். 316 00:32:13,934 --> 00:32:15,435 நீங்கள் வரவில்லையா? 317 00:32:15,435 --> 00:32:16,562 இல்லை. 318 00:32:21,066 --> 00:32:22,276 குட் லக். 319 00:32:34,746 --> 00:32:35,831 வாருங்கள். 320 00:32:38,792 --> 00:32:39,918 குட் மார்னிங். 321 00:32:40,919 --> 00:32:44,006 நான் ஃபிரான்ஸுவா டாலியன், உங்கள் அப்பாவின் வக்கீல். நான் தான் அவரது உயிலின் பொறுப்பு. 322 00:32:45,174 --> 00:32:47,384 - ஹலோ. - இவர் இஸ்ஸேய் டொமினே. 323 00:32:47,384 --> 00:32:48,677 அமருங்கள். 324 00:32:49,428 --> 00:32:51,013 திரு. டொமினேவுக்கு ஃபிரெஞ்சு தெரியாது, 325 00:32:51,013 --> 00:32:53,473 அதனால் ஆங்கிலத்தில் தொடரலாம், உங்களுக்குப் பிரச்சினை இல்லையே? 326 00:32:55,475 --> 00:32:58,770 நான் உங்கள் அப்பாவைச் சந்தித்தேன். திரு. லெஜர், உங்கள் பேராசிரியரை 327 00:32:58,770 --> 00:33:02,024 தூதரகத்தில் ஒரு டின்னர் பார்ட்டியில் பல மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். 328 00:33:02,024 --> 00:33:04,443 அவரது உயிலை எழுத என்னை உதவும்படி கேட்டார், 329 00:33:04,443 --> 00:33:08,071 அது வழக்கத்திற்கு மாறானது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 330 00:33:08,739 --> 00:33:13,493 உங்கள் அப்பா, திரு. லெஜரின் சொத்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 331 00:33:13,493 --> 00:33:17,289 முதல் பகுதி, டோக்கியோ, செய்ஹோ நான்காவது தெருவில் இருக்கும் அவரது வீடு... 332 00:33:17,956 --> 00:33:19,416 அதன் மதிப்பு 750 மில்லியன் யென் என்று 333 00:33:19,917 --> 00:33:22,753 மதிப்பிடப்பட்டுள்ளது என உங்களுக்குத் தெரியும். 334 00:33:23,253 --> 00:33:25,881 தோராயமாக ஏழு மில்லியன் டாலர்கள். 335 00:33:26,465 --> 00:33:28,842 அதை நான் யூரோவில் மாற்ற வேண்டுமா? 336 00:33:30,135 --> 00:33:34,723 இரண்டாவது பகுதி, குறைந்தது நிதி ரீதியாக, அவரது சொத்தின் முக்கியமானது. 337 00:33:34,723 --> 00:33:39,394 அவரது ஒயின் செல்லர், அவற்றில் இருப்பவை. 338 00:33:39,394 --> 00:33:44,233 அதில் 87,000 பாட்டில்கள் உள்ளன, அதன் உலகளாவிய மதிப்பு... 339 00:33:44,233 --> 00:33:47,903 மன்னிக்கவும், நாம் பேசுவது உலகின் மிகப்பெரிய 340 00:33:47,903 --> 00:33:50,822 தனியார் ஒயின் சேகரிப்பைப் பற்றி என்பதைக் குறிப்பிட வேண்டும். 341 00:33:51,448 --> 00:33:54,785 நான் பாட்டில்களின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லவில்லை. 342 00:33:54,785 --> 00:33:58,455 ஆனால் தரம், அதன் அருமை. அது அற்புதமான சேகரிப்பு. 343 00:33:58,455 --> 00:33:59,748 மிகவும் அற்புதமானது. 344 00:34:01,291 --> 00:34:03,377 எங்கே விட்டேன்... ஆம். உலகளாவிய மதிப்பு. 345 00:34:03,377 --> 00:34:08,465 148 மில்லியன் டாலர்கள், கிட்டத்தட்ட 16 பில்லியன் யென். 346 00:34:09,299 --> 00:34:13,011 இப்போது திரு. லெஜரின் உயிலின் தனித்துவமான தரம். 347 00:34:13,512 --> 00:34:15,304 திரு. லெஜர் அவர்கள் கூறியது, 348 00:34:15,304 --> 00:34:19,685 அவரது ஒயின் சேகரிப்பு என்பது “வாழ்நாள் உழைப்பின் பலன்.” 349 00:34:19,685 --> 00:34:22,771 அவரது சொத்து அதன் மதிப்பை முழுதாக உணர்ந்தவரிடம் 350 00:34:22,771 --> 00:34:26,190 செல்ல வேண்டும் என்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. 351 00:34:26,190 --> 00:34:28,610 அதனால் தான் அவர்... 352 00:34:29,444 --> 00:34:34,283 அதை சோதனை என்போம், அந்தச் சொத்து யாருக்கு என்பதைத் தீர்மானிக்க. 353 00:34:35,158 --> 00:34:36,243 சோதனையா? 354 00:34:36,243 --> 00:34:37,411 என்ன சோதனை? 355 00:34:37,411 --> 00:34:39,161 நீங்கள் அலெக்ஸாண்ட்ரே லெஜரின் மகள். 356 00:34:39,996 --> 00:34:43,625 திரு. டொமினே, உங்கள் அப்பாவின் மாணவர்களில் ஒருவர், 357 00:34:43,625 --> 00:34:46,378 திரு.லெஜர் அவரை தன் “ஆன்மீக வாரிசாகப்” பார்த்துள்ளார். 358 00:34:46,378 --> 00:34:49,630 அதனால்தான் நீங்கள் இருவரும் போட்டியிட விரும்பியுள்ளார். 359 00:34:50,799 --> 00:34:55,679 மூன்று சுற்றுச் சோதனையில் வெல்பவருக்கு ஒட்டுமொத்தச் சொத்தும் சேரும். 360 00:34:56,388 --> 00:34:58,682 வீடும் ஒயின் சேகரிப்பும். 361 00:34:59,641 --> 00:35:02,519 மன்னிக்கவும். என்ன சுற்றுகள்? 362 00:35:10,027 --> 00:35:11,570 அவரை உள்ளே அனுப்புங்கள். 363 00:36:24,643 --> 00:36:29,398 நல்லது. இப்போது நீங்கள் இந்த ஒயினை எந்த விவரமும் இன்றிச் சுவைக்க வேண்டும். 364 00:36:29,398 --> 00:36:32,693 இது என்ன என்று ஒரு மாதத்தில் கூற வேண்டும். 365 00:36:32,693 --> 00:36:35,988 திராட்சை வகை, இடம், ஆண்டு. 366 00:36:36,697 --> 00:36:38,699 இதைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. 367 00:36:41,076 --> 00:36:42,452 நீங்கள் விளையாடுகிறீர்கள். 368 00:36:43,036 --> 00:36:44,997 அவ்வப்போது விளையாடுவேன், ஆனால் இப்போது இல்லை. 369 00:36:44,997 --> 00:36:46,081 இன்று இல்லை. 370 00:36:46,081 --> 00:36:50,002 நல்ல விஷயம் என்னவெனில், ஒரு மாதம் கழித்து நீங்கள் இதை மீண்டும் சுவைப்பீர்கள். 371 00:36:52,796 --> 00:36:54,006 நாம் தொடங்கலாமா? 372 00:37:22,451 --> 00:37:23,452 மிஸ் லெஜர்? 373 00:37:24,494 --> 00:37:25,787 ப்ளீஸ். 374 00:37:27,664 --> 00:37:30,125 இது முட்டாள்தனாம். இதை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். 375 00:37:31,001 --> 00:37:34,213 நீங்கள் இந்தச் சொத்தை வேண்டாம் என்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா? 376 00:37:34,213 --> 00:37:36,131 என்ன? நான் அப்படிக் கூறவில்லை. 377 00:37:38,884 --> 00:37:40,469 அதைச் செய்ய அனுமதி உள்ளதா? உண்மையாகவா? 378 00:37:40,469 --> 00:37:42,137 ஃபிரெஞ்சு சட்டங்கள் இங்கே பொருந்தாது. 379 00:37:42,721 --> 00:37:45,098 அதனால் நீங்கள் ஒயினைக் குடித்தாக வேண்டும். இப்போதே. 380 00:37:56,443 --> 00:37:58,028 இது முட்டாள்தனம். 381 00:38:13,919 --> 00:38:15,170 எதுவும் பிரச்சினையா, மிஸ் லெஜர்? 382 00:38:22,135 --> 00:38:23,428 மிஸ் லெஜர்? 383 00:38:32,229 --> 00:38:35,899 - எதுவும் பிரச்சினையா? - நான் குடிக்கிறேன். 384 00:39:21,820 --> 00:39:24,072 கமில். அடக் கடவுளே. நன்றாக இருக்கிறீர்களா? 385 00:39:24,573 --> 00:39:26,992 உங்களுக்கு இது தெரிந்திருந்தது! 386 00:39:28,285 --> 00:39:29,703 அவருக்கு நான் சத்தியம் செய்திருந்தேன்! 387 00:39:30,537 --> 00:39:31,830 கமில், இருங்கள். 388 00:39:32,998 --> 00:39:34,166 கமில், நில்லுங்கள். 389 00:39:34,750 --> 00:39:35,876 மெதுவாகச் செல்லுங்கள். 390 00:39:36,418 --> 00:39:37,628 என்னை மன்னித்துவிடுங்கள். 391 00:39:38,587 --> 00:39:40,339 என் அம்மா அவர் ஒரு சாடிஸ்ட் என்று எச்சரித்தார். 392 00:39:40,339 --> 00:39:42,591 அவர் என்னை இப்படி அவமானப்படுத்த வேண்டுமா? 393 00:39:43,091 --> 00:39:46,678 எனக்கு அவரைப் பற்றியோ அவரது பணத்தைப் பற்றியோ ஒயின் பற்றியோ கவலை இல்லை! 394 00:39:46,678 --> 00:39:50,474 அந்த ஆன்மீக வாரிசே அனைத்தையும் வைத்துக்கொள்ளட்டும், எனக்குக் கவலையில்லை. 395 00:39:55,479 --> 00:39:58,982 மிஸ் லெஜர், உங்கள் தந்தையின் மரணம் பற்றி என்ன கூற முடியும்? 396 00:39:58,982 --> 00:40:00,442 இந்தப் பக்கம். 397 00:40:01,235 --> 00:40:04,905 மிஸ் லெஜர், நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா? 398 00:40:21,713 --> 00:40:24,675 திரு. டொமினே! திரு. இஸ்ஸேய் டொமினே! 399 00:40:29,513 --> 00:40:31,932 திரு. லெஜரின் உயிலில் என்ன உள்ளது என்றும் நீங்கள் ஏன் இங்கே 400 00:40:31,932 --> 00:40:33,433 வந்தீர்கள் என்றும் கூற முடியுமா? 401 00:40:33,433 --> 00:40:36,144 நான் விரைவில் அதைப் பொதுவில் அறிவிப்பேன். 402 00:40:36,144 --> 00:40:38,188 ஏதாவது கூறுங்கள். 403 00:40:43,193 --> 00:40:46,864 நீ குடிக்க மாட்டாய் என்பது அலெக்ஸாண்ட்ரேவுக்குத் தெரியாது. 404 00:40:46,864 --> 00:40:49,241 அவருக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது. 405 00:40:51,034 --> 00:40:55,247 எனவே, நான் இறுதிச் சடங்கிற்கு வந்துவிட்டு, நேராக ஃபிரான்ஸ் செல்கிறேன். 406 00:40:56,665 --> 00:40:58,792 உனக்காக அவர் கூறிய மெசேஜ் என்னிடம் உள்ளது. 407 00:40:59,376 --> 00:41:02,171 - ஆர்வமில்லை. - இது முக்கியமானது, கமில். 408 00:41:02,171 --> 00:41:04,840 இல்லை, லூகா, முக்கியமில்லை. 409 00:41:05,424 --> 00:41:08,385 இப்போது நீ கோபமாக இருக்கிறாய், ஆனால் நீ அமைதியானவுடன், 410 00:41:08,385 --> 00:41:12,055 உன் அப்பாவின் மெசேஜைக் கேள். சரியா? 411 00:41:13,974 --> 00:41:16,393 இதற்கு ஏதாவது வாங்க எங்காவது நிறுத்த முடியுமா? 412 00:41:16,393 --> 00:41:18,478 ஓ, அட, நமக்கு நேரமாகிவிட்டது. 413 00:41:24,401 --> 00:41:25,485 சரி. 414 00:41:25,485 --> 00:41:26,612 நன்றி. 415 00:41:36,496 --> 00:41:39,458 கமில், உன் அப்பா இந்தக் கடைசி ஆண்டுகளில் 416 00:41:39,458 --> 00:41:40,751 மிகவும் ஆன்மீகவாதியாகிவிட்டார். 417 00:41:41,502 --> 00:41:44,963 பௌத்த தகனச் சடங்கைப் பின்பற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். 418 00:42:13,200 --> 00:42:15,285 முதல் வரிசை குடும்பத்திற்கானது. 419 00:43:11,300 --> 00:43:13,051 குட்பை, நண்பா. 420 00:44:38,887 --> 00:44:40,097 போகலாம். 421 00:44:41,890 --> 00:44:43,141 இப்போது என்ன செய்கிறோம்? 422 00:44:43,725 --> 00:44:45,602 சாம்பலை ஏரியில் தூவப் போகிறோமா? 423 00:44:45,602 --> 00:44:47,771 இப்போது “ஒகோட்சு-அகேவுக்கான” நேரம். 424 00:44:48,355 --> 00:44:50,023 - என்ன? - எலும்புகளைச் சேகரிப்பது. 425 00:44:50,524 --> 00:44:52,192 - அது தெரியாதா? - இல்லை. 426 00:44:53,193 --> 00:44:55,654 உன் அப்பாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள். 427 00:44:55,654 --> 00:44:57,030 எனில் நான் வீட்டுக்குப் போகலாம் என நினைக்கிறேன். 428 00:44:57,030 --> 00:44:58,282 இல்லை. 429 00:44:58,282 --> 00:44:59,575 அடச்சை. 430 00:45:01,326 --> 00:45:04,079 முதலில் காலில் தொடங்கி, மேலே வரை செல்ல வேண்டும், அப்போதுதான் 431 00:45:04,079 --> 00:45:07,249 இறந்தவர்கள் அந்த ஜாடியில் தலைகீழாக இருக்க மாட்டார்கள். 432 00:45:07,749 --> 00:45:08,917 சொல்வது புரிகிறதா? 433 00:45:09,459 --> 00:45:11,879 இதனால்தான் மேசையில் சூஷியை சாப்ஸ்டிக்ஸில் இருந்து 434 00:45:11,879 --> 00:45:13,672 இன்னொரு சாப்ஸ்டிக்ஸுக்கு மாற்றக் கூடாது. 435 00:45:14,173 --> 00:45:16,091 அது பிணத்தைத் திண்பது போல. 436 00:45:16,091 --> 00:45:17,509 உண்மையாகவா? 437 00:45:17,509 --> 00:45:19,636 - நான் இதைச் செய்தாக வேண்டுமா? - ஆம். 438 00:45:19,636 --> 00:45:22,181 நீ குடும்பத்தினர் என்பதால், நீதான் முதலில் எடுக்க வேண்டும். 439 00:45:31,231 --> 00:45:33,150 எலும்புகளைக் கீழே போட்டுவிடாதே. 440 00:47:50,996 --> 00:47:53,081 நீ நாளை காலை விமானத்தில் செல்கிறாய். 441 00:47:54,958 --> 00:47:56,168 நான் உன்னைக் கூட்டிச் செல்கிறேன். 442 00:47:58,712 --> 00:48:01,256 ஆனால் நீ போவதற்கு முன், நீ ஒன்றைப் பார்க்க வேண்டும். 443 00:48:32,788 --> 00:48:34,081 நன்றாக இருக்கிறீர்களா? 444 00:48:37,793 --> 00:48:39,753 மிகவும் பலமாக வாசம் வீசுகிறது. 445 00:48:41,213 --> 00:48:42,381 நன்றாக இருக்கிறேன். 446 00:49:20,836 --> 00:49:23,338 நாம் அவரது கோவிலில் இருக்கிறோம். 447 00:49:41,023 --> 00:49:43,567 நான் உன் அப்பாவுடன் இங்கே பல இரவுகள் கழித்துள்ளேன். 448 00:49:46,361 --> 00:49:49,948 அவர் ஒயின்களை விவரிக்கவோ முக்கியமான தேதிகளைக் குறிக்கவோ 449 00:49:50,449 --> 00:49:52,117 இந்தச் சிறிய குறிப்புகளை எழுதுவார். 450 00:49:53,785 --> 00:49:56,246 சில நேரம் அவை அவருக்கு மட்டும்தான் புரியும். 451 00:49:56,830 --> 00:49:58,415 லெட் ஸெப்பெலின் லைவ் 79 452 00:49:58,999 --> 00:50:02,628 அவர் ஒவ்வொரு ஒயினைப் பற்றியும் என்னிடம் பல மணிநேரம் பேசுவார். 453 00:50:03,504 --> 00:50:05,380 பிறகு, கொஞ்ச நேரம் கழித்து நான், 454 00:50:06,757 --> 00:50:09,968 ”சரி, என் நண்பா, அதைத் திறக்கலாமா?” என்றேன். 455 00:50:28,237 --> 00:50:29,446 நான் உன்னைத் தனியாக விடுகிறேன். 456 00:50:31,031 --> 00:50:32,241 பொறுமையாக வா. 457 00:50:57,099 --> 00:51:01,854 புதினாவில் கோழி 458 00:51:07,192 --> 00:51:11,947 ”தி குட், தி பேட் அண்ட் தி அக்லி” 459 00:51:23,417 --> 00:51:25,919 கமிலுக்கு 18 வயதாகும்போது அவளுடன் குடிப்பதற்கு 460 00:52:35,489 --> 00:52:37,157 அம்மா 461 00:52:56,093 --> 00:52:58,887 சரி. நான் அந்த மெசேஜைப் பார்க்கிறேன். 462 00:53:04,142 --> 00:53:05,811 ஹலோ, கமில். 463 00:53:12,234 --> 00:53:14,486 நீ என் உயிலைப் படித்திருப்பாய், 464 00:53:14,486 --> 00:53:16,864 நீ கண்டிப்பாக என் மீது கோபத்தில் இருப்பாய் என நினைக்கிறேன். 465 00:53:18,448 --> 00:53:24,037 நான் கொஞ்சம் குரூரமான, மோசமானவன் என நீ நினைக்கலாம்... 466 00:53:24,872 --> 00:53:26,248 என்னைப் பற்றி இன்னும் நிறைய நினைக்கலாம். 467 00:53:28,292 --> 00:53:30,294 நான் மோசமான அப்பாவாக இருந்தேன் எனத் தெரியும். 468 00:53:31,086 --> 00:53:34,673 நான் பல விஷயங்களில் தவறானவனாக இருந்தேன்... 469 00:53:36,925 --> 00:53:38,552 ஒரே ஒரு விஷயம் தவிர. 470 00:53:40,929 --> 00:53:42,222 ஒயின். 471 00:53:46,059 --> 00:53:47,311 நான் அதில் சிறப்பானவனாக இருந்தேன். 472 00:53:49,229 --> 00:53:50,772 நான் அதில் சிறந்தவனாக இருந்தேன். 473 00:53:51,940 --> 00:53:53,984 நீ எந்த மாதிரியான பெண்ணாகியிருக்கிறாய் எனத் தெரியவில்லை, 474 00:53:53,984 --> 00:53:55,402 ஆனால் இப்போதும் நீ என் மகள்தான். 475 00:53:57,529 --> 00:53:59,198 கமில், அது உன் ரத்தத்திலேயே உள்ளது. 476 00:54:00,991 --> 00:54:02,826 உனக்கு பயிற்சி இல்லாமல் இருக்கலாம், 477 00:54:03,535 --> 00:54:05,162 ஆனால் உன் சுவை உணர்வு உள்ளது. 478 00:54:05,829 --> 00:54:07,664 உன் வாசனை உணர்வு உள்ளது. 479 00:54:10,375 --> 00:54:11,919 என் நண்பன், ஃபிலிப்பேவை அழைத்தேன். 480 00:54:14,171 --> 00:54:15,380 அவர் தான் சிறந்தவர். 481 00:54:16,423 --> 00:54:18,842 நீ எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அவர் இடத்தில் தங்கிக்கொள்ளலாம். 482 00:54:18,842 --> 00:54:20,886 உனக்குத் தேவையான அனைத்தையும் அவர் கற்றுக்கொடுப்பார். 483 00:54:22,596 --> 00:54:24,014 அவருக்குச் சொந்தமாக டொமெயின் உள்ளது. 484 00:54:28,810 --> 00:54:32,481 உன் சிறுவயதில் விடுமுறை நாட்களில் நாம் கழிக்கும் டொமெயின் நினைவுள்ளதா? 485 00:54:41,281 --> 00:54:44,451 நாம் ஒன்றாக பயிற்சி செய்வோம், நாம் இருவர் மட்டும் 486 00:54:46,036 --> 00:54:47,663 நமது ரகசிய இடமான செல்லரில். 487 00:54:58,298 --> 00:54:59,508 எனக்காகக் காத்திரு. 488 00:55:02,886 --> 00:55:05,597 உன் அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை, ஆனால் நீ கவலைப்படவில்லை. 489 00:55:20,779 --> 00:55:22,573 காலையில் சீக்கிரமே, நீ போக விரும்பினாய். 490 00:55:26,118 --> 00:55:28,829 அவைதான் நாம் ஒன்றாகச் செலவிட்ட கடைசி தருணங்கள். 491 00:55:43,510 --> 00:55:44,761 கண்களை மூடவில்லையா? 492 00:55:59,776 --> 00:56:00,986 கமில்! 493 00:56:02,821 --> 00:56:04,656 கவனம் செலுத்துவோம், சரியா? 494 00:56:08,660 --> 00:56:09,828 சரி, அப்பா. 495 00:56:10,704 --> 00:56:11,747 மன்னிக்கவும். 496 00:56:12,497 --> 00:56:13,790 ஒழுங்காக உட்காரு. 497 00:56:14,875 --> 00:56:16,168 இது வேடிக்கையானது எனத் தெரியும்... 498 00:56:18,962 --> 00:56:21,423 ஆனால் இதை நீ பார்க்கிறாய் எனில் நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். 499 00:56:25,552 --> 00:56:27,596 ஆனால் இந்தச் சோதனைகளின் மூலம், 500 00:56:29,264 --> 00:56:31,600 நாம் ஒருவருக்கொருவர் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் என நம்புகிறேன். 501 00:56:33,936 --> 00:56:38,649 ஒருவேளை ஒருநாள், யாருக்குத் தெரியும்... 502 00:56:43,028 --> 00:56:44,696 உன்னால் என்னை மன்னிக்க முடியலாம். 503 00:56:50,369 --> 00:56:52,079 தயவுசெய்து இங்கேயே தங்கு. 504 00:56:55,499 --> 00:56:56,708 நமக்காக இதைச் செய். 505 00:57:25,904 --> 00:57:27,322 டடாஷி ஆகி/ஷூ ஓகிமோடோ எழுதிய காமி நோ ஷிஸுக்கு மாங்காவை அடிப்படையாகக் கொண்டது 506 00:57:44,840 --> 00:57:46,842 தமிழாக்கம் நரேஷ் குமார் ராமலிங்கம்