1 00:00:05,966 --> 00:00:08,093 தூங்குகிறது என நினைக்கிறேன். 2 00:00:10,178 --> 00:00:11,555 மீண்டும் விழித்திருக்கிறது. 3 00:00:12,722 --> 00:00:16,101 இதுவும் விழித்துவிட்டது. ஹாய் குட்டி. 4 00:00:18,270 --> 00:00:19,896 -நாங்கள் தூக்கலாமா? -தயவுசெய்து? 5 00:00:19,980 --> 00:00:21,565 நிச்சயமாக. மென்மையாக பிடியுங்கள். 6 00:00:21,648 --> 00:00:23,108 ஹாய். 7 00:00:23,191 --> 00:00:25,402 ஹாய். 8 00:00:25,485 --> 00:00:27,404 இரண்டும் மிகவும் சிறியதாக இருக்கின்றன. 9 00:00:28,196 --> 00:00:29,906 மிகவும் சிறியதாக. 10 00:00:29,990 --> 00:00:33,326 பூங்கா துறையின் நண்பர் ஒருவர், வில்லோ ஏரிக்கு அருகில் இவற்றை கண்டார். 11 00:00:33,410 --> 00:00:36,580 இவற்றுக்கு ஆறு வார வயது இருக்கும். தத்தெடுக்க மிகவும் குறைந்த வயது. 12 00:00:37,539 --> 00:00:39,583 ஆறு வாரமா? அப்படியென்றால் இன்னும் முழுமையாக தாய்ப்பாலை மறக்கவில்லையா? 13 00:00:39,666 --> 00:00:43,295 மிகச்சரி, லிஸ்ஸி. இந்த இளம் குட்டிகளை வளர்க்கும்படி பொதுவாக சொல்லமாட்டேன். 14 00:00:43,378 --> 00:00:44,713 -நாங்கள் அதை செய்வோம். -பொறுங்கள். 15 00:00:44,796 --> 00:00:48,800 இவை தத்தெடுக்கத் தயாராகும் வரை ஓரிரு வாரங்களுக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். 16 00:00:48,884 --> 00:00:49,926 நாங்கள் செய்வோம்! 17 00:00:50,635 --> 00:00:53,430 இவை தங்கள் வலிமையை மீண்டும் பெற வேண்டும், அதாவது தானாக சாப்பிட 18 00:00:53,513 --> 00:00:55,473 ஆரம்பிக்கும் வரை புட்டிப்பால் கொடுக்க வேண்டும். 19 00:00:55,557 --> 00:00:57,017 மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை. 20 00:00:57,100 --> 00:01:00,395 இது கொஞ்சம்... குழந்தை வளர்ப்புக்கான சிறிய பயிற்சியாக இருக்கும். 21 00:01:00,478 --> 00:01:02,522 சிறிய பயிற்சி, பெரிய பயிற்சி. எல்லாமே செய்வோம். 22 00:01:02,606 --> 00:01:03,648 கற்றுக்கொள்வது எனக்குப் பிடிக்கும். 23 00:01:03,732 --> 00:01:05,065 அவளுக்கு நிஜமாகவே பிடிக்கும். 24 00:01:05,150 --> 00:01:06,610 அருமை. நீங்கள் வளர்க்கலாம். 25 00:01:06,693 --> 00:01:07,944 ஆம்! 26 00:01:08,653 --> 00:01:10,614 -கேட்டீர்களா, நண்பர்களே? -ஆம். 27 00:01:14,659 --> 00:01:18,121 "டீனியும், டைனியும்" 28 00:01:24,711 --> 00:01:26,129 சரியான வெப்பநிலை. 29 00:01:26,838 --> 00:01:28,173 இதோ. 30 00:01:38,433 --> 00:01:41,394 என்ன... உன் சொந்த பாட்டில் இருக்கிறது, டைனி. 31 00:01:41,478 --> 00:01:42,729 அது டீனீக்கானது. 32 00:01:45,357 --> 00:01:48,652 அதோடு... இரண்டும் ஒன்றுதான். சத்தியமாக. 33 00:01:54,908 --> 00:01:55,909 சரி. 34 00:02:00,914 --> 00:02:04,834 டீனீக்கும் கொஞ்சம் மிச்சம் வை, பேராசை பிடித்த நாய்க்குட்டி. 35 00:02:06,294 --> 00:02:08,045 உனக்கு கொஞ்சம் வேண்டுமா? இதோ. 36 00:02:12,467 --> 00:02:15,053 வா, டீனீ. உன் வேலையை செய்ய வேண்டிய நேரம். 37 00:02:15,136 --> 00:02:17,514 அதுதான் ஒரு நாயாக இல்லாமல் இருப்பதில் நல்ல விஷயம். 38 00:02:17,597 --> 00:02:20,517 நான் எப்போது கழிவறை செல்ல வேண்டும் என்று என்னிடம் சொல்வதை வெறுக்கிறேன். 39 00:02:20,600 --> 00:02:22,769 இரண்டுமே கேட்பது போல தெரியவில்லை. 40 00:02:23,478 --> 00:02:25,981 அட, டீனீ. அதை போகவிடு. 41 00:02:26,815 --> 00:02:27,899 இறுதியாக. 42 00:02:27,983 --> 00:02:30,318 நல்ல நாய், டீனீ. ரொம்ப நல்ல நாய். 43 00:02:30,944 --> 00:02:33,863 நினைவில் வைத்துகொள், அது தன் வேலையை செய்யும்போது, அதை பாராட்டு. 44 00:02:33,947 --> 00:02:36,366 அது நீ விரும்பும் பழக்கங்களை வலுப்படுத்த உதவும். 45 00:02:36,449 --> 00:02:38,868 ஹேய். இரவு உணவிற்கு பீட்சா வாங்க யோசித்துக் கொண்டிருந்தேன். 46 00:02:38,952 --> 00:02:40,620 அருமையான யோசனை அப்பா. 47 00:02:40,704 --> 00:02:42,914 ரொம்ப நல்ல அப்பா. 48 00:02:43,540 --> 00:02:46,042 அது பீட்சா. எனக்கும் நாய் உணவு கொடுக்காதே. 49 00:02:59,973 --> 00:03:01,057 பால் கொடுக்கும் நேரம். 50 00:03:01,683 --> 00:03:03,810 ஆம். பால் கொடுக்கும் நேரம். 51 00:03:08,398 --> 00:03:09,399 உன்னுடைய முறை. 52 00:03:10,567 --> 00:03:12,277 இல்லை. இது உன் முறை. 53 00:03:18,533 --> 00:03:19,534 சரி. 54 00:03:22,495 --> 00:03:23,496 வா. 55 00:03:31,963 --> 00:03:33,632 லிஸ்ஸி, நீ சாப்பிடப் போவதில்லையா? 56 00:03:35,008 --> 00:03:37,302 சாப்பிடுவேன். ஆனால் இதை கீழே விட்டால், இதுவும் சாப்பிட விரும்பும். 57 00:03:37,385 --> 00:03:39,596 இதன் அடுத்த உணவுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. 58 00:03:39,679 --> 00:03:41,806 நீ 45 நிமிடங்களுக்கு முன்பே சாப்பிட்டிருக்க வேண்டும். 59 00:03:42,557 --> 00:03:45,143 -இதை சூடாக்கட்டுமா? -நன்றி, அம்மா. 60 00:03:46,186 --> 00:03:48,730 இது வழக்கத்தை விட மிகவும் கடினமாக இருக்கிறது. 61 00:03:48,813 --> 00:03:50,774 கடந்த வாரத்தை ஒரு வருடம் போல் உணர்ந்தேன். 62 00:03:51,900 --> 00:03:53,902 இரண்டு நாய்க்குட்டிகள் பொறுப்பை இரட்டிப்பாக்குகின்றன. 63 00:03:53,985 --> 00:03:55,445 நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. 64 00:03:55,528 --> 00:03:59,658 -ஒரு நாளைக்கு எட்டு முறை பால் கொடுப்பது. -தொடர்ந்து கவனித்துக்கொள்வது. 65 00:03:59,741 --> 00:04:02,744 குட்டிகளை வளர்ப்பது கடினமான வேலை. 66 00:04:02,827 --> 00:04:04,955 நாங்கள் அதை எளிதானதாக காட்டிக்கொண்டாலும். 67 00:04:06,289 --> 00:04:09,417 உங்கள் அம்மாவும் நானும் செய்த தியாகங்களை இப்போது நீங்கள் பாராட்டினாலும், 68 00:04:09,501 --> 00:04:10,961 ஒருவேளை நீங்கள் கேட்கலாம்... 69 00:04:15,924 --> 00:04:17,925 நீ ஏன் கொஞ்ச நேரம் வைத்திருக்கக்கூடாது? 70 00:04:19,886 --> 00:04:22,264 சரி. இங்கே வா, குட்டி. 71 00:04:36,653 --> 00:04:39,114 நாம் ஏன் இரண்டு கிண்ணங்களைக் வைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம்? 72 00:04:46,580 --> 00:04:49,374 இனி இவற்றுக்கு பால் தேவையில்லை. இப்போது திட உணவை சாப்பிடுகின்றன. 73 00:04:49,457 --> 00:04:50,458 எனக்குத் தெரியும். 74 00:04:50,542 --> 00:04:52,419 நான் சூடான சாக்லேட் செய்கிறேன். 75 00:05:03,680 --> 00:05:04,681 நம் இருவருக்கும். 76 00:05:24,826 --> 00:05:26,661 -இவை சீக்கிரம் தூங்கிவிடும். -ஆம். 77 00:05:33,877 --> 00:05:34,961 இவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 78 00:05:36,838 --> 00:05:39,925 -சரி... -எனக்குத் தெரியும். இதற்கு நீதான் காரணம். 79 00:05:40,008 --> 00:05:41,343 நீ அவர்களை நன்றாக வளர்த்திருக்கிறாய். 80 00:05:41,968 --> 00:05:43,511 உன் நகைச்சுவையை நீயே வைத்துக்கொள். 81 00:05:49,559 --> 00:05:52,646 டீனீயின் எடை கூடியது நான் எதிர்பார்த்ததுதான். 82 00:05:53,230 --> 00:05:56,483 டீனீயும் கொஞ்சம் எடை கூடியிருந்தாலும், டைனியும் கூட. 83 00:06:01,863 --> 00:06:04,115 இவற்றின் செயல் திறன்கள் நிச்சயமாக மேம்பட்டுள்ளன. 84 00:06:04,199 --> 00:06:05,992 இவை ஒன்றோடு ஒன்று விளையாடுவதை விரும்புகின்றன. 85 00:06:06,076 --> 00:06:08,745 அனைத்தையும் ஒன்றாகச் செய்ய விரும்புகின்றன. 86 00:06:08,828 --> 00:06:11,831 இவை ஒரு சிறந்த அணி. உங்கள் இருவரையும் போல. 87 00:06:11,915 --> 00:06:13,583 உண்மையில், உங்கள் எல்லோரையும் போல. 88 00:06:15,418 --> 00:06:17,170 இவை தத்தெடுக்கத் தயாரா? 89 00:06:17,254 --> 00:06:18,338 நிச்சயமாக. 90 00:06:19,339 --> 00:06:22,008 இந்த இரண்டிடமும் விடைபெறுவது கூடுதல் கடினமாக இருக்கும் என நம்புகிறேன். 91 00:06:22,092 --> 00:06:23,218 மிகவும் கடினமானது. 92 00:06:23,301 --> 00:06:26,096 இவற்றோடு எங்களுக்கு ஒரு சிறப்பு தொடர்பு இருப்பதாக உணர்கிறேன். 93 00:06:27,681 --> 00:06:28,682 எனக்கும்தான். 94 00:06:29,266 --> 00:06:31,059 -அதேதான். -குற்ற உணர்வு. 95 00:06:34,688 --> 00:06:37,399 அது எவ்வளவு கடினமாக இருந்தாலும், அது வளர்ப்பின் ஒரு பகுதி. 96 00:06:38,024 --> 00:06:41,361 சரி, கேரிங் பாவ்ஸ் நாளை மறுநாள் தத்தெடுப்பு கண்காட்சியை நடத்துகிறது, 97 00:06:41,444 --> 00:06:43,321 எனவே இது சரியான நேரம், உண்மையில். 98 00:06:46,074 --> 00:06:47,450 அருமையான வேலை, பெருமைக்குரியவர்களே. 99 00:06:47,534 --> 00:06:49,828 -நாங்கள் உங்களை வழியனுப்புகிறோம். -சரி, நன்றி. 100 00:06:50,453 --> 00:06:52,080 பை, டாக்டர் ஆபி. 101 00:06:55,083 --> 00:06:57,502 டீனீயும் டைனியும் உண்மையில் ஒன்றை ஒன்று மிஸ் செய்யும். 102 00:06:58,420 --> 00:07:01,715 -நீ என்ன சொல்கிறாய்? -இவற்றை தத்தெடுக்கும் போது. 103 00:07:01,798 --> 00:07:04,634 ஆனால் இவை ஒரே வீட்டிற்குச் செல்வதை உறுதிசெய்தால் என்ன? 104 00:07:04,718 --> 00:07:07,888 சார்ல்ஸ், இரண்டையும் தத்தெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். 105 00:07:07,971 --> 00:07:09,139 எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். 106 00:07:09,723 --> 00:07:10,849 இவற்றைப் பார். 107 00:07:12,559 --> 00:07:13,894 இவற்றை நாம் பிரிக்க முடியாது. 108 00:07:13,977 --> 00:07:16,605 இவை ஒரு அணி. நம்மைப் போல. 109 00:07:18,064 --> 00:07:19,608 இவை ஒன்றை ஒன்று மிகவும் நேசிக்கின்றன. 110 00:07:19,691 --> 00:07:24,112 அதனால்தான் நம் அணி இந்த அணி ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 111 00:07:24,654 --> 00:07:27,824 சரி, ஒரு நாய்க்குட்டியை விட உலகில் ஒன்று மட்டுமே சிறந்தது. 112 00:07:28,450 --> 00:07:29,576 இரண்டு நாய்க்குட்டிகள். 113 00:07:33,079 --> 00:07:34,915 தத்தெடுப்பு நாள்! அன்பான துணையை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! 114 00:07:45,467 --> 00:07:49,387 -என்ன நடக்கிறது என்று இவற்றுக்கு தெரியுமா? -அவை கவலைப்படவில்லை என நினைக்கிறேன். 115 00:07:49,471 --> 00:07:51,306 அவை ஒன்றாக இருக்கும் வரை. 116 00:07:51,389 --> 00:07:52,849 யாருக்காவது இரண்டும் தேவைப்படும். 117 00:07:52,933 --> 00:07:54,851 இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள், லிஸ்ஸி. 118 00:07:55,727 --> 00:07:57,395 எனக்கு கவலையே இல்லை. 119 00:07:58,188 --> 00:08:02,067 -இந்தக் குட்டியைப் பார். மிகவும் அழகு! -நீ ஒன்றின் உணர்வுகளை புண்படுத்துகிறாய். 120 00:08:02,984 --> 00:08:03,985 இரண்டுமே அழகு. 121 00:08:04,069 --> 00:08:07,822 -எப்படி தேர்வு செய்வது என தெரியவில்லை. -அதிர்ஷ்டவசமாக, அது வேண்டியதில்லை. 122 00:08:07,906 --> 00:08:10,492 ஏனென்றால் இன்று, இரட்டை சிறப்பு. 123 00:08:10,575 --> 00:08:12,035 இரண்டு நாய்க்குட்டிகளா? 124 00:08:12,118 --> 00:08:15,705 ஒரு நாய்க்குட்டியை வளர்ப்பதே பெரிய வேலை, குறிப்பாக உன் அம்மா இருக்கும்போது. 125 00:08:16,581 --> 00:08:18,124 பார்பராவை கவனித்துக்கொள்ள வேண்டும். 126 00:08:20,460 --> 00:08:23,296 மன்னிக்கவும். இரண்டும் அல்லது ஒன்றும் இல்லை. 127 00:08:24,506 --> 00:08:26,007 இவை ஒன்றாகத்தான் வரும். 128 00:08:26,091 --> 00:08:27,300 -சார்ல்ஸ். -என்ன? 129 00:08:28,927 --> 00:08:30,303 எங்களுக்கு வேலைக்காகாது. 130 00:08:31,596 --> 00:08:33,222 -அதிர்ஷ்டம் உண்டாகட்டும். -பொறுங்கள். 131 00:08:33,807 --> 00:08:36,976 உங்கள் தொலைபேசி என்னை கொடுங்கள். ஒருவேளை தேவைப்படலாம். 132 00:08:38,436 --> 00:08:40,981 தயவுசெய்து. நீங்கள் அவற்றை பிரிக்க முடிவு செய்தால்... 133 00:08:41,063 --> 00:08:42,440 நடக்காது. 134 00:10:05,357 --> 00:10:06,608 ஹேய். நான் நினைத்தேன்... 135 00:10:06,691 --> 00:10:09,319 நீ என்ன சொல்லப் போகிறாய் என்று தெரியும், பதில் முடியாது. 136 00:10:10,237 --> 00:10:13,531 இல்லை என்று நீ மட்டும் சொல்ல முடியாது. நாம் ஒரு அணி, நினைவிருக்கிறதா? 137 00:10:13,615 --> 00:10:14,616 நல்லது. 138 00:10:14,699 --> 00:10:16,576 -நாம் நமது வியூகத்தை மாற்ற வேண்டும். -இல்லை. 139 00:10:16,660 --> 00:10:17,827 சார்ல்ஸ்! யோசித்துப் பார். 140 00:10:17,911 --> 00:10:20,538 நிறைய பேர் டீனீ அல்லது டைனியை விரும்பினர். இரண்டையும் யாரும் விரும்பவில்லை. 141 00:10:20,622 --> 00:10:24,542 இன்னும் பல செல்லப்பிராணி தத்தெடுப்புகள் வருகின்றன. 2 வாரங்களில் ஒன்று இருக்கிறது. 142 00:10:24,626 --> 00:10:26,753 நாய்க்குட்டிகள் குட்டியாக இருக்கும்போது விரைவாக தத்தெடுக்கப்படும். 143 00:10:26,836 --> 00:10:29,297 -இன்னும் காத்திருந்தால்... -வாய்ப்பில்லை! நாம் ஒப்புக்கொண்டோம்! 144 00:10:29,381 --> 00:10:31,633 ஹேய். என்ன நடந்து கொண்டிருக்கிறது? 145 00:10:31,716 --> 00:10:33,843 அப்பா, சார்ல்ஸ் யதார்தத்தை கேட்கவில்லை. 146 00:10:33,927 --> 00:10:35,595 லிஸ்ஸி நியாயமாக இல்லை! 147 00:10:35,679 --> 00:10:37,639 சரி. ஹேய். போதும். 148 00:10:38,306 --> 00:10:41,434 குடும்பக் கூட்டத்தை மிகவும் மோசமாக்க விரும்பினால், நீங்கள் கேட்டிருக்கலாம். 149 00:10:41,518 --> 00:10:42,519 போகலாம். 150 00:10:52,737 --> 00:10:55,740 உங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பது பற்றி பேசுவோம். 151 00:10:55,824 --> 00:10:57,033 என்ன பயன்? 152 00:10:57,117 --> 00:11:00,203 முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த குடும்பத்தில் நாம் பேசிக்கொள்வோம். 153 00:11:00,287 --> 00:11:03,832 என்ன செய்வதென்று தெரியும். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு வெகுமதி கிடைக்கும். 154 00:11:05,834 --> 00:11:08,044 -யார் தொடங்குகிறீர்கள்? -லிஸ்ஸி விலகி ஓடுபவள். 155 00:11:08,128 --> 00:11:09,921 அது உண்மையல்ல என நம் எல்லோருக்கும் தெரியும். 156 00:11:10,005 --> 00:11:12,799 டீனீயையும் டைனியையும் ஒன்றாக கொடுக்கும் வாக்குறுதியிலிருந்து அவள் பின்வாங்குகிறாள். 157 00:11:12,883 --> 00:11:16,177 அவற்றுக்கு சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன், சார்ல்ஸ் விடாப்பிடியாக இருக்கிறான். 158 00:11:16,261 --> 00:11:18,388 என்னைக் குழப்புவதற்கு எப்போதும் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாள். 159 00:11:18,471 --> 00:11:20,765 -அதற்கு பிடிவாதம் என்று பொருள். -அப்படியானால் பிடிவாதம் என்று சொல். 160 00:11:20,849 --> 00:11:22,517 நாம் பாதை மாறி போகிறோம் என நினைக்கிறேன். 161 00:11:23,143 --> 00:11:25,228 மோதலைத் தீர்ப்பதற்கான முக்கிய விஷயம் என்ன? 162 00:11:25,812 --> 00:11:27,606 -கேட்பது. -சரி. 163 00:11:27,689 --> 00:11:31,776 தாக்குவதற்குப் பதிலாக "எனக்குத் தோன்றுகிறது" போன்ற வாக்கியங்களை பயன்படுத்தலாமா? 164 00:11:31,860 --> 00:11:32,944 நல்லது. 165 00:11:33,028 --> 00:11:37,240 டீனீ மற்றும் டைனி இரண்டுக்கும் அன்பான வீட்டைக் கண்டுபிடிப்பதே மிக முக்கியமானது. 166 00:11:37,741 --> 00:11:41,578 அவை தனித்தனியாக தத்தெடுக்கப்பட்டால் அது மிகவும் எளிதாக இருக்கும் என தோன்றுகிறது. 167 00:11:41,661 --> 00:11:42,871 இறுதியாக, சில சமயங்களில் 168 00:11:42,954 --> 00:11:45,999 ஒரே குழுவிலிருந்து வரும் நாய்க்குட்டிகள் ஒன்றுடன் ஒன்று அதிகமாகப் பிணைந்து, 169 00:11:46,082 --> 00:11:50,128 உரிமையாளருடன் போதுமான அளவு இணையாது, இது கடுமையான நடத்தை சிக்கல்களை ஏற்படுத்தும். 170 00:11:50,212 --> 00:11:52,964 அந்த கடைசி விஷயம் பற்றி படித்ததால் அப்படி உணர்கிறேன். 171 00:11:54,007 --> 00:11:56,801 -லிஸ்ஸி சொன்னதைக் கேட்டாயா? -ஆனால் அவை சகோதர சகோதரிகள். 172 00:11:56,885 --> 00:11:59,930 அவை ஒரு காரணத்திற்காக நம்மிடம் வந்ததாக உணர்கிறேன். 173 00:12:00,805 --> 00:12:02,849 அவை ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டாது என்பதற்காக. 174 00:12:03,516 --> 00:12:06,728 நானும் லிஸ்ஸியும் பிரிக்கப்படுவதை நான் விரும்பாதது போல. 175 00:12:11,858 --> 00:12:13,944 சார்ல்ஸ், என்னை மன்னித்துவிடு. 176 00:12:14,736 --> 00:12:15,820 பரவாயில்லை. 177 00:12:16,446 --> 00:12:19,658 அதாவது, டீனீ மற்றும் டைனி பற்றி நீ சொல்வது சரிதான். எப்போதும் போல. 178 00:12:21,451 --> 00:12:23,954 ஒருவேளை நாம் வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்கலாம். 179 00:12:24,037 --> 00:12:26,039 நாம் இதுவரை யோசிக்காத ஒன்றை. 180 00:12:26,957 --> 00:12:28,333 நான் மில்க் ஷேக்குகளை கொண்டு வருகிறேன். 181 00:12:30,669 --> 00:12:33,296 டீனீயையும் டைனியையும் தனித்தனி வீடுகளுக்கு கொடுத்துவிட்டு... 182 00:12:33,380 --> 00:12:35,924 -என்ன... -...ஆனால் உரிமையாளர்களை அவை வழக்கமான 183 00:12:36,007 --> 00:12:38,093 ஒரு நாளில் ஒன்றாக விளையாட அனுமதிக்க ஒப்புக்கொள்ள வைத்தால்? 184 00:12:40,929 --> 00:12:41,930 சார்ல்ஸ்? 185 00:12:42,556 --> 00:12:46,768 லிஸ்ஸி ஒரு மேதாவி என்று நினைக்கிறேன். 186 00:12:48,311 --> 00:12:50,397 நீங்கள் இதைப் பெற தகுதியானவர்கள். 187 00:12:51,398 --> 00:12:53,358 -பரவாயில்லை. நான் எடுத்துக்கொள்கிறேன். -அம்மா! 188 00:12:53,441 --> 00:12:55,860 என்ன? நான் கொஞ்சம் குடிக்க தகுதியானவள் என நினைக்கிறேன். 189 00:12:58,780 --> 00:12:59,781 சுவையாக இருக்கிறது. 190 00:12:59,864 --> 00:13:01,700 -இல்லை. -அம்மா! 191 00:13:02,784 --> 00:13:06,121 சரி. தத்தெடுக்க சம்மதித்த எல்லா நபர்களின் பட்டியலையும் பார்த்துவிட்டேன். 192 00:13:06,204 --> 00:13:10,917 ஓய்வுபெற்ற பல் மருத்துவர் சுசானே மற்றும் கர்ப்பிணிப் பெண் ஏவா ஆகியோர் உள்ளனர். 193 00:13:11,001 --> 00:13:13,503 அவர்கள் 3.6 மைல் இடைவெளியில் வசிக்கிறார்கள், அது நெருக்கமாக இல்லை, 194 00:13:13,587 --> 00:13:16,047 ஆனால் இடையில் எங்கோ ஒரு நாய் பூங்கா இருக்கிறது. 195 00:13:16,131 --> 00:13:18,300 -அதோடு யோகா ஆசிரியர் ஜெனி இருக்கிறார். -லிஸ்ஸி? 196 00:13:18,383 --> 00:13:21,011 -அவர் மிடில்டனில் வசிக்கவில்லை... -லிஸ்ஸி! 197 00:13:21,094 --> 00:13:24,055 …அவர் வீடுகளுக்கே சென்று கற்பிக்கிறார், வாகனம் ஓட்டுவதில் பிரச்சினை இருக்காது. 198 00:13:24,139 --> 00:13:25,140 லிஸ்ஸி! 199 00:13:25,682 --> 00:13:27,642 -என்ன? -டுவேன் மற்றும் கிரெக். 200 00:13:28,310 --> 00:13:29,728 அவர்கள் இருவரும் குழந்தைகள். 201 00:13:30,812 --> 00:13:34,065 அதோடு அவர்கள் ஒரே தெருவில் வசிக்கின்றனர். 202 00:13:38,028 --> 00:13:42,616 ஒரே தெருவில் வசிப்பவர்கள் மட்டுமல்ல, பக்கத்து பக்கத்து வீட்டில் வசிக்கிறார்கள். 203 00:13:46,703 --> 00:13:50,123 நீ கேட்டாயா, டீனீ? உனக்கான சரியான வீட்டைக் கண்டுபிடித்துவிட்டோம். 204 00:13:50,206 --> 00:13:51,416 நீங்களும் எங்களைப் போல இருப்பீர்கள். 205 00:13:51,499 --> 00:13:54,419 தனி படுக்கையறைகள், ஆனால் தினமும் ஒருவரை ஒருவர் பார்ப்பீர்கள். 206 00:13:56,129 --> 00:13:59,382 நான் பிடிவாதம் பிடித்ததற்கு வருந்துகிறேன். 207 00:13:59,966 --> 00:14:00,967 வருந்தாதே. 208 00:14:01,051 --> 00:14:02,344 நீ பிடிவாதம் பிடிக்கவில்லை என்றால், 209 00:14:02,427 --> 00:14:04,930 இந்த சமரசத்திற்கு நாம் ஒருபோதும் வந்திருக்கமாட்டோம். 210 00:14:05,013 --> 00:14:07,057 நீ சொல்வது சரி என்று நினைக்கிறேன். 211 00:14:07,140 --> 00:14:09,643 டீனீயும் டைனியும் ஒரு காரணத்திற்காக நம்மிடம் வந்திருக்கின்றன. 212 00:14:18,860 --> 00:14:20,862 டீனீ உன்னை நினைவு வைத்திருப்பதாக நினைக்கிறேன். 213 00:14:20,946 --> 00:14:22,030 நானும் அப்படித்தான் நினைக்கின்றேன். 214 00:14:26,284 --> 00:14:27,702 எனக்கு கிச்சுகிச்சு மூட்டுகிறது. 215 00:14:28,495 --> 00:14:29,746 அதற்கு வெகுமதி அளிக்க முயற்சி செய். 216 00:14:30,247 --> 00:14:31,248 சரி. 217 00:14:31,957 --> 00:14:34,334 வா, டீனீ. வா. 218 00:14:35,544 --> 00:14:37,420 நல்லது. இதை பாராட்டுவதை உறுதிப்படுத்து. 219 00:14:37,504 --> 00:14:39,798 நல்ல குட்டி, டீனீ. நல்ல குட்டி! 220 00:14:39,881 --> 00:14:41,424 நல்ல குட்டி. 221 00:14:43,760 --> 00:14:45,136 உணவை சாப்பிடு. 222 00:14:45,220 --> 00:14:46,763 எனவே, உன் பெற்றோருக்கு சம்மதமா? 223 00:14:46,846 --> 00:14:48,473 அதோடு வீடும் பாதுகாப்பானதாக தெரிகிறது. 224 00:14:48,557 --> 00:14:50,892 ஒரு பெரிய கொல்லைப்புறமும் இருக்கிறது. 225 00:14:50,976 --> 00:14:54,062 சுற்றி ஓடுவதற்கு நிறைய இடம் இருக்கிறது. ஒரே ஒரு நிபந்தனைதான். 226 00:14:54,145 --> 00:14:55,355 ஒன்று மட்டுமே. 227 00:14:56,106 --> 00:14:58,358 -எது வேண்டுமானாலும். -எது வேண்டுமானாலும். 228 00:14:59,359 --> 00:15:01,903 டைனிக்கு டீனீ என்ற சகோதரி இருப்பது நினைவிருக்கும் என நம்புகிறேன். 229 00:15:01,987 --> 00:15:03,905 நீ செய்ய வேண்டியது எல்லாம் டீனீயை டைனியோடு வழக்கமான ஒரு நாளில்… 230 00:15:03,989 --> 00:15:05,699 …விளையாட அனுமதிப்பதாக உறுதியளிக்க வேண்டும். 231 00:15:05,782 --> 00:15:07,075 வேடிக்கையாகத் தெரிகிறது. 232 00:15:07,158 --> 00:15:08,785 விளையாடுவது யாருக்குத்தான் பிடிக்காது? 233 00:15:09,286 --> 00:15:10,704 இதோ சிறப்பான விஷயம். 234 00:15:11,204 --> 00:15:13,790 -உன் பக்கத்து வீட்டுக்காரருடன்... -...விளையாட அனுமதிக்க வேண்டும். 235 00:15:13,873 --> 00:15:17,252 -கிரெக்? -டுவேன்? வழியே இல்லை. 236 00:15:17,335 --> 00:15:18,795 நான் கிரெக்கிடம் பேசமாட்டேன். 237 00:15:18,879 --> 00:15:19,880 ஏன்? 238 00:15:19,963 --> 00:15:21,047 அவனையே கேள். 239 00:15:21,131 --> 00:15:22,591 ஏன் என்று அவனுக்குத் தெரியும். 240 00:15:23,675 --> 00:15:25,302 நான் மிகவும் வருந்துகிறேன். 241 00:15:27,262 --> 00:15:29,514 டீனீக்கான விளையாட்டுத் தேதிகள் தத்தெடுப்புக்கு மிக முக்கியம். 242 00:15:30,724 --> 00:15:32,434 டைனியை தத்தெடுக்க அனுமதிக்க முடியாது. 243 00:15:34,644 --> 00:15:35,979 என்னை மன்னிக்கவும். 244 00:15:46,281 --> 00:15:48,241 இதில் மோசமான பகுதி என்ன தெரியுமா? 245 00:15:48,325 --> 00:15:51,745 எல்லாமே? நம் மொத்த திட்டமும் கேட்டுவிட்டது. 246 00:15:52,454 --> 00:15:56,416 உண்மைதான், ஆனால் டீனீக்கு டுவேனை மிகவும் பிடித்தது என்று சொல்ல வந்தேன். 247 00:15:56,499 --> 00:16:00,837 டைனிக்கும் கிரெக்குக்கும் அதேதான். என் உற்சாகத்தை நினைத்து கோபம் வருகிறது. 248 00:16:00,921 --> 00:16:02,672 நாம் இருவரும் எதிர்பார்த்தோம். 249 00:16:02,756 --> 00:16:05,425 ஆனால் அது பரவாயில்லை. நாம் வேறு ஏதாவது கண்டுபிடிப்போம் என உறுதியாக நம்புகிறேன். 250 00:16:06,092 --> 00:16:08,929 சரி. மீண்டும் பட்டியலுக்கு வருவோம். 251 00:16:09,012 --> 00:16:10,639 யோகா பெண்ணுக்கு ஒரு நண்பர் இருக்கலாம். 252 00:16:13,350 --> 00:16:15,101 உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார். 253 00:16:23,276 --> 00:16:25,237 ஹேய், டுவேன். நீ இங்கே என்ன செய்கிறாய்? 254 00:16:25,320 --> 00:16:27,822 என் அம்மா என்னை அழைத்து வந்தார். காரில் காத்திருக்கிறார். 255 00:16:27,906 --> 00:16:31,076 எனக்கு டீனீயை உண்மையில் எவ்வளவு தேவை என்பதை மீண்டும் சொல்ல விரும்பினேன். 256 00:16:31,159 --> 00:16:33,286 நான் அதை நன்றாக கவனித்துக்கொள்வேன். சத்தியமாக. 257 00:16:33,370 --> 00:16:35,747 டுவேன், அது இல்லை. அது டீனீ... 258 00:16:35,830 --> 00:16:39,793 பார். நாய்க்கு பயிற்சி அளிப்பது பற்றி இந்த முழு புத்தகத்தையும் நேற்று இரவு படித்தேன். 259 00:16:39,876 --> 00:16:42,504 நாய்கள் செய்ய வேண்டிய பணிகளை விரும்புகின்றன என்பது தெரியுமா? 260 00:16:43,171 --> 00:16:44,923 நிஜமாகவே. 261 00:16:45,006 --> 00:16:51,137 இந்த பயிற்சி கிளிக்கரையும் உணவுக்கான இந்த பையையும் வாங்கினேன். 262 00:16:51,221 --> 00:16:53,723 நீ நிஜமாகவே தீவிரமாக இருக்கிறாய். 263 00:16:53,807 --> 00:16:55,559 எனக்கு நிஜமாகவே அது தேவை. 264 00:16:56,476 --> 00:16:58,353 விளையாட்டு நாட்கள் பற்றி என்ன? 265 00:16:58,436 --> 00:17:00,605 ஆம். உனக்கும் கிரெக்கும் என்ன ஆனது? 266 00:17:01,106 --> 00:17:04,066 நாங்கள் எல்லா நேரத்திலும் ஒன்றாகவே இருப்போம். 267 00:17:04,609 --> 00:17:08,988 பிறகு என்னை சலிப்பானவன் என்று சொல்லிவிட்டு என்னுடன் நட்புகொள்ள விரும்பவில்லை என்றான். 268 00:17:09,072 --> 00:17:10,073 அவ்வளவுதான். 269 00:17:10,864 --> 00:17:13,660 என்ன சொல்கிறாய்? நீங்கள் அதைப் பற்றி பேசவே இல்லையே? 270 00:17:13,743 --> 00:17:15,160 என்ன பயன்? 271 00:17:17,247 --> 00:17:18,247 புரிந்துவிட்டது. 272 00:17:21,793 --> 00:17:23,670 அப்படியென்றால், அந்தப் புத்தகத்தை காட்டுகிறாயா? 273 00:17:23,753 --> 00:17:27,173 நீங்கள் அழைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. டைனியை நினைத்துக் கொண்டே இருக்கிறேன். 274 00:17:27,257 --> 00:17:29,843 அது என் படுக்கையிலேயே தூங்கலாம் என என் பெற்றோர் கூட சொன்னார்கள். 275 00:17:29,926 --> 00:17:31,970 -உங்கள் மனதை மாற்றிக்கொண்டீர்களா? -இதுவரை இல்லை. 276 00:17:32,053 --> 00:17:33,513 உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும். 277 00:17:33,597 --> 00:17:35,682 டுவேன் மீது உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? 278 00:17:35,765 --> 00:17:37,142 அது விசித்திரமானது. 279 00:17:38,018 --> 00:17:40,312 நாங்கள் எப்போதும் பேருந்தில் ஒன்றாக அமர்ந்திருப்போம். 280 00:17:40,395 --> 00:17:44,107 பிறகு ஒரு நாள் நான் ஏறினேன், அவன் சாக் உடன் அமர்ந்திருந்தான். 281 00:17:45,233 --> 00:17:48,194 நான் முடி வெட்டியிருந்தேன், அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தார்கள். 282 00:17:48,278 --> 00:17:49,279 அவர்கள் நிறுத்தவில்லை. 283 00:17:49,362 --> 00:17:53,116 ஆனால் அதற்கு முன் நீங்கள் நல்ல நண்பர்கள். நீங்கள் அதைப் பற்றி பேசவே இல்லையா? 284 00:17:53,700 --> 00:17:54,784 எனக்குத் தெரியவில்லை. 285 00:17:54,868 --> 00:17:57,662 சரி. நீ இப்போது என்ன செய்கிறாய்? 286 00:17:59,039 --> 00:18:02,459 நாங்கள் ஒருமுறை பக்ஸ்லி என்ற பக் நாயை வளர்த்தோம், அது இது போலவே இருக்கும். 287 00:18:02,542 --> 00:18:06,463 -நீங்கள் அதை வளர்க்க அதிர்ஷ்டசாலி... -டைனி எங்கே? ஆர்வமாக இருக்கிறேன்... 288 00:18:07,547 --> 00:18:10,592 -இவன் இங்கே என்ன செய்கிறான்? -நீ வந்த அதே விஷயத்துக்காகத்தான். 289 00:18:10,675 --> 00:18:13,011 இவன் வருவான் என்று நீ என்னிடம் சொல்லவில்லை. 290 00:18:13,094 --> 00:18:15,180 நீ கேட்கவில்லை. 291 00:18:15,263 --> 00:18:18,642 -அதோடு, நீங்கள் இதை பேச வேண்டும். -பேசுவதற்கு ஒன்றுமில்லை. 292 00:18:18,725 --> 00:18:20,268 நாங்கள் இனி நண்பர்கள் இல்லை. 293 00:18:20,352 --> 00:18:22,145 எங்களுக்குள் பொதுவான எதுவும் இல்லை. 294 00:18:22,896 --> 00:18:24,564 உங்கள் இருவருக்கும் நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். 295 00:18:29,444 --> 00:18:31,529 மில்க் ஷேக்குகள் எப்படி? 296 00:18:35,116 --> 00:18:37,285 இதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? அப்பா காத்திருக்கிறார். 297 00:18:37,869 --> 00:18:39,162 அது நீங்கள் பேசுவதை பொருத்தது. 298 00:18:40,121 --> 00:18:41,122 இவைதான் விதிகள். 299 00:18:41,206 --> 00:18:43,541 இது ஒரு கலந்துரையாடல், விவாதம் அல்ல. 300 00:18:43,625 --> 00:18:44,626 கேட்பதில் கவனம் செலுத்துங்கள். 301 00:18:44,709 --> 00:18:47,921 -தன்மையான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். -நிஜமாகவா? 302 00:18:48,004 --> 00:18:49,881 உனக்கும் எங்கள் வயதுதான் தெரியுமா? 303 00:18:49,965 --> 00:18:51,258 சரி. இது முட்டாள்தனம். 304 00:18:51,341 --> 00:18:53,426 இது முட்டாள்தனம் அல்ல. 305 00:18:54,970 --> 00:18:58,515 உங்களுக்கு டீனீயும் டைனியும் வேண்டுமா இல்லையா? உங்கள் விருப்பம். 306 00:19:04,688 --> 00:19:05,855 யார் தொடங்குகிறீர்கள்? 307 00:19:07,983 --> 00:19:09,568 என் மனதை புண்படுத்தினான். 308 00:19:10,777 --> 00:19:11,987 அது நல்லது. 309 00:19:12,070 --> 00:19:14,781 ஆனால் தன்மையான வார்த்தைகளை முயற்சிப்போம். 310 00:19:17,158 --> 00:19:18,910 அதாவது, தொடருங்கள். 311 00:19:19,661 --> 00:19:22,581 என்னை சலிப்பானவன் என்றும், இனி என்னுடன் விளையாட விரும்பவில்லை என கிரெக் கூறினான். 312 00:19:22,664 --> 00:19:25,375 என்ன? நீ சலிப்பானவன் என்று ஒருபோதும் நான் சொல்லவில்லை. 313 00:19:25,458 --> 00:19:27,502 ஸ்டாப்-மோஷன் டேக் சலிப்பானது என்றேன். 314 00:19:27,586 --> 00:19:29,254 ஸ்டாப்-மோஷன் டேக் என்றால் என்ன? 315 00:19:29,337 --> 00:19:31,715 நாங்கள் ஒன்றாம் வகுப்பில் கண்டுபிடித்த விளையாட்டு. 316 00:19:31,798 --> 00:19:35,010 அது வேடிக்கையானது, ஆனால் நான் விதிகளை மாற்ற விரும்பினேன், அவன் விரும்பவில்லை. 317 00:19:35,093 --> 00:19:38,805 திரும்ப திரும்ப ஒரே ஆட்டம், அதைத்தான் சலிப்பு என்றேன். 318 00:19:38,889 --> 00:19:40,140 நீ அல்ல. 319 00:19:42,559 --> 00:19:43,643 மன்னித்துவிடு. 320 00:19:43,727 --> 00:19:46,938 என்னைப் பார்த்து சிரித்து எல்லோர் முன்பும் சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்கிறாயா? 321 00:19:47,022 --> 00:19:48,023 என்ன? 322 00:19:48,106 --> 00:19:52,193 பேருந்தில், நீ சாக் உடன் அமர்ந்து என் முடியைப் பார்த்து சிரித்தது. 323 00:19:52,694 --> 00:19:54,237 நாங்கள் உன்னைப் பார்த்து சிரிக்கவில்லை. 324 00:19:54,321 --> 00:19:55,947 நான் ஏறியதும், அவன் சட்டை ஜிப்பில் 325 00:19:56,031 --> 00:19:58,867 சிக்கிக்கொண்டு அவனால் எழுந்திருக்க முடியாததால் சாக் என்னை அழைத்தான். 326 00:19:58,950 --> 00:20:00,493 அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. 327 00:20:02,162 --> 00:20:03,997 அது நிஜமாகவே உண்மையா? 328 00:20:04,080 --> 00:20:06,166 நான் ஏன் உன் தலைமுடியை கேலி செய்ய வேண்டும்? 329 00:20:06,249 --> 00:20:07,250 அது வெறும் முடிதான். 330 00:20:07,834 --> 00:20:09,878 இது ஒரு திருப்புமுனை போல தெரிகிறது, இல்லையா? 331 00:20:10,879 --> 00:20:11,880 எனக்கு அப்படித்தான். 332 00:20:12,631 --> 00:20:13,632 எனக்கும்தான். 333 00:20:16,343 --> 00:20:18,470 நீங்கள் இதற்கு தகுதியானவர்கள். 334 00:20:22,349 --> 00:20:23,350 நீ அவுட்! 335 00:20:24,059 --> 00:20:26,811 நீங்கள் இந்த விளையாட்டு நாளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள். 336 00:20:27,604 --> 00:20:29,481 டேக் விளையாட ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தோம். 337 00:20:29,564 --> 00:20:30,649 நாய்க்குட்டிகளைப் பயன்படுத்துவது. 338 00:20:32,234 --> 00:20:33,276 முற்றிலும் சலிப்பாக இல்லை. 339 00:20:34,361 --> 00:20:35,695 நீ அவுட்! 340 00:20:37,822 --> 00:20:39,866 கிரெக்கின் அம்மா என்ன செய்தார் என்று பாருங்கள். 341 00:20:39,950 --> 00:20:42,494 இப்போது டீனீயும் டைனியும் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். 342 00:20:44,955 --> 00:20:47,082 அதை பிடி, டைனி. போய் பிடி. 343 00:20:47,749 --> 00:20:49,125 ஒருவேளை நாம் வளர்ந்த பிறகு, 344 00:20:49,209 --> 00:20:51,962 நாம் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிக்கலாம், இடையில் ஒரு கதவுடன். 345 00:20:52,045 --> 00:20:54,965 ஆம். என் பக்க கதவில் ஒரு பூட்டு இருக்கும் வரை. 346 00:20:55,048 --> 00:20:56,341 என்னவோ. 347 00:20:57,384 --> 00:20:58,426 டேக், நீ அவுட்! 348 00:20:58,510 --> 00:21:00,845 சார்ல்ஸ், உன்னுடன் டேக் விளையாடும் வயதை கடந்துவிட்டேன். 349 00:21:00,929 --> 00:21:02,514 உன்னால் துரத்த முடியாது என்கிறாயா? 350 00:21:02,597 --> 00:21:04,683 அதை நீயே தெரிந்து கொள்ளப் போகிறாய். 351 00:21:23,868 --> 00:21:25,870 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 352 00:22:41,863 --> 00:22:43,865 வசனத் தமிழாக்கம் அருண்குமார்