1 00:00:05,382 --> 00:00:07,384 ஆறு வருடங்களுக்கு முன்பு 2 00:00:07,467 --> 00:00:08,468 கோஸி நூக் புத்தகக்கடை 3 00:00:08,552 --> 00:00:11,721 "அது மிகவும் மோசமாக பயந்திருந்தது. வாயிலுக்கு போகும் பாதையை 4 00:00:11,805 --> 00:00:14,307 மறந்ததால், பீட்டர் தோட்டம் முழுவதும் சுற்றி வந்தது. 5 00:00:14,391 --> 00:00:17,143 முட்டைகோஸ்களுக்கு மத்தியில் ஒரு காலணியையும், 6 00:00:17,227 --> 00:00:19,563 உருளைக்கிழங்குகளுக்கு மத்தியில் மற்றொரு காலணியையும் அது தொலைத்தது." 7 00:00:20,981 --> 00:00:22,315 என்ன, லிஸ்ஸி? 8 00:00:23,233 --> 00:00:27,237 முயல்களுக்கு நான்கு கால்கள் உண்டு. பிறகு ஏன் பீட்டரிடம் இரண்டு காலணிகள் மட்டும் இருந்தன? 9 00:00:27,320 --> 00:00:31,491 இது ஒரு நல்ல கேள்வி, லிஸ்ஸி. வாசிப்பிற்கு பிறகு அது குறித்து பேசலாம். 10 00:00:31,575 --> 00:00:32,784 மரியா? 11 00:00:32,867 --> 00:00:36,204 விளக்கப்படங்கள் கதை சொல்லும் அனுபவத்தை மேம்படுத்தும். 12 00:00:36,746 --> 00:00:38,999 நான் ஆசிரியருக்கு ஒரு அருமையான கடிதத்தை எழுதப் போகிறேன். 13 00:00:39,082 --> 00:00:41,626 அவர்கள் அதை வரவேற்ப்பார்கள் என்று நம்புகிறேன். 14 00:00:41,710 --> 00:00:43,420 நீங்கள் இருவரும் தான் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். 15 00:00:43,503 --> 00:00:48,216 நீங்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்பீர்கள். அது குறித்து சொல்ல ஏதோவொன்று இருக்கும். 16 00:00:49,551 --> 00:00:52,137 -எனக்குப் பிடித்தது பீட்டர் ராபிட் தான். -எனக்கு கோல்டிலாக்ஸ். 17 00:00:52,220 --> 00:00:55,932 குழந்தைகளுக்கு படித்துக் காட்ட நாங்கள் விரும்புவது வேடிக்கையாக இருக்கிறது. 18 00:00:56,016 --> 00:00:57,851 -அதோடு ஃபீபிக்கும். -அதை சொல்லவே தேவையில்லை. 19 00:00:57,934 --> 00:00:59,519 ஆனால் நீ அதை சொன்னது மகிழ்ச்சி. 20 00:00:59,603 --> 00:01:01,813 நான் புத்தகப்புழு திட்டத்தை மிஸ் செய்கிறேன். 21 00:01:01,897 --> 00:01:03,857 பொறுங்கள். நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்றால்? 22 00:01:03,940 --> 00:01:06,902 சென்ற வருடம் படித்துக் காட்டுவதை நிறுத்த வேண்டியிருந்தது. 23 00:01:06,985 --> 00:01:08,778 போதுமான ஆர்வம் யாரிடமும் இல்லை. 24 00:01:08,862 --> 00:01:11,448 படிப்பதில் எப்படி ஆர்வம் இல்லாமல் போனது? இது படிப்பது. 25 00:01:11,531 --> 00:01:15,076 வயதான புத்தகக் கடைப் பெண்மணியுடன் இருப்பதை விட, மதிய நேரத்தைக் கழிக்க மிகவும் 26 00:01:15,160 --> 00:01:18,788 -உற்சாகமான வழிகள் இருப்பதாக நினைக்கிறேன். -நீங்கள் வயதான புத்தகக் கடைப் பெண்மணி அல்ல, 27 00:01:18,872 --> 00:01:20,916 -நீங்கள் ஃபீபி புத்தகக் கடைப் பெண்மணி. -அதேதான். 28 00:01:22,083 --> 00:01:25,045 மிகுந்த ஆர்வத்தோடு இருந்த குழந்தைகள் சுற்றி இருப்பதை மிஸ் செய்கிறேன். 29 00:01:25,128 --> 00:01:27,422 குறிப்பாக அவர்களுக்கு கூடுதல் ஊக்கம் தேவைப்படும்போது. 30 00:01:28,215 --> 00:01:30,467 நான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்தேன். 31 00:01:31,384 --> 00:01:34,846 திட்டத்தின் மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். 32 00:01:36,598 --> 00:01:37,766 அதை வரவேற்கிறேன். 33 00:01:38,642 --> 00:01:40,101 நீ என்ன சொல்கிறாய்? உதவுகிறாயா? 34 00:01:40,185 --> 00:01:42,145 நீ சொல்வதைப் போலவே செய்யலாம். 35 00:01:42,229 --> 00:01:44,147 இரண்டு சிறுமிகளால் செய்ய முடியாதது எதுவுமில்லை. 36 00:01:44,231 --> 00:01:47,067 படித்துக் காட்ட 'கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்' நாவல் என்னிடம் இருக்கிறது. 37 00:01:47,150 --> 00:01:48,902 மீண்டும் புத்தக பெயர்களை வைத்து நகைச்சுவை செய்கிறார்களா? 38 00:01:48,985 --> 00:01:50,987 அப்படித்தான் நினைக்கிறேன். 39 00:01:54,658 --> 00:01:55,951 பைத்தியமாக இருக்கிறான். 40 00:01:56,451 --> 00:01:57,953 பிறகு படிக்க கொஞ்சம் வை, சார்ல்ஸ். 41 00:01:58,036 --> 00:02:01,706 பொறு. க்ரோச்சிங்பா மோஷி மோஷாவை கடினமான சாக்லேட் சிப்பில் அடைந்துவிட்டார். 42 00:02:01,790 --> 00:02:02,791 பார்த்தாயா? 43 00:02:04,417 --> 00:02:05,418 உனக்கு கேட்டதா? 44 00:02:06,294 --> 00:02:07,712 அங்கிருந்துதான் சத்தம் வருகிறது. 45 00:02:13,843 --> 00:02:15,762 ஒரு அம்மா மற்றும் இரண்டு குட்டி நாய்களா? 46 00:02:17,430 --> 00:02:19,307 பார்! இன்னும் ஒன்று இருக்கிறது. 47 00:02:21,351 --> 00:02:25,272 எனக்குப் புரியவில்லை. வாகன நிறுத்துமிடத்தில் பெட்டியில் யார் நாய்களை விட்டுச்செல்வார்கள்? 48 00:02:26,022 --> 00:02:28,316 தெரியவில்லை. 49 00:02:28,400 --> 00:02:30,277 நாம் என்ன செய்யப் போகிறோம்? 50 00:02:33,363 --> 00:02:35,574 நாம் அப்படியே உள்ளே போக முடியாது. அவர்கள் முடியாது என்றால்? 51 00:02:35,657 --> 00:02:38,493 -நான்கு நாய்கள் ரொம்ப அதிகம். -நீ சொல்வது சரிதான். 52 00:02:39,661 --> 00:02:41,496 முதலில் ஒரு நாய்க்குட்டியை காண்பித்தால் என்ன? 53 00:02:41,580 --> 00:02:44,666 அது அவர்களுக்கு பிடித்த பிறகு, மற்றவைகளைக் காட்டுவோம். 54 00:02:44,749 --> 00:02:47,878 தெரியவில்லை. உண்மையைச் சொல்லாமல் இருப்பது எனக்கு சங்கடமாக இருக்கும். 55 00:02:47,961 --> 00:02:49,963 நாம் பொய் சொல்லவில்லை, நாம்... 56 00:02:50,046 --> 00:02:52,966 -பாதி உண்மையை தான் சொல்லப்போகிறோம். -சரி. 57 00:02:54,301 --> 00:02:56,136 இவற்றுக்கு நம் உதவி தேவை. 58 00:02:59,973 --> 00:03:01,433 சரி. செய்யலாம். 59 00:03:04,311 --> 00:03:05,312 என்னை வாழ்த்து. 60 00:03:09,816 --> 00:03:12,360 -ஹாய். -ஹேய், செல்லம். புத்தக்கடை எப்படி இருந்தது? 61 00:03:12,444 --> 00:03:14,905 நீ விரும்பிய புதிய கிட் ஸ்மிதர்ஸ் புத்தகம் கிடைத்ததா? 62 00:03:14,988 --> 00:03:18,950 இல்லை, அது... இன்னும் வரவில்லை. ஆனால் எனக்கு இது கிடைத்தது. 63 00:03:23,914 --> 00:03:28,043 "பட்டி" 64 00:03:29,169 --> 00:03:33,590 உங்களால் மட்டுமே ஒரு புத்தகக்கடைக்குள் ஒரு தெரு நாய்க்குட்டியைக் கண்டுபிடிக்க முடியும். 65 00:03:33,673 --> 00:03:37,052 -உண்மையில், இதை வெளியே ஒரு பெட்டியில் கண்டோம். -அது ரொம்ப மோசம். 66 00:03:37,135 --> 00:03:40,597 தெரியும், ஆனால் இதுபோன்ற அழகான ஒன்றைப் பார்த்திருக்கிறீர்களா? 67 00:03:42,682 --> 00:03:45,602 நுழைவு பகுதியில் இது எவ்வளவு அழகாக இருக்கிறதென்று பார்ப்போம். 68 00:03:48,730 --> 00:03:49,731 வாருங்கள். 69 00:03:56,696 --> 00:03:59,115 இது வெளியே ஓடாமல் இருக்க கதவை மூட முடியுமா? 70 00:04:04,788 --> 00:04:05,705 வா. 71 00:04:17,841 --> 00:04:21,054 சரி. புத்தகப்புழு திட்டத்தில் சேர குழந்தைகளை உற்சாகப்படுத்த விரும்பினால், 72 00:04:21,137 --> 00:04:23,390 அவர்களின் ஆர்வத்தை தூண்ட நமக்கு ஏதாவது தேவை. 73 00:04:23,473 --> 00:04:24,558 பார்க்கும்படி ஏதோவொன்று. 74 00:04:24,641 --> 00:04:26,893 நாம் அதைப்பற்றி அதிகமாக சிந்திக்கவில்லைதானே? 75 00:04:26,977 --> 00:04:29,229 நாம் அவர்களின் வயதில் இருந்தபோது, வாசிப்புத் திட்டம் நமக்கு எந்தளவுக்கு 76 00:04:29,312 --> 00:04:31,064 முக்கியமானதாக இருந்தது என்பதை நம் நற்சான்றிதழ் உடன் 77 00:04:31,147 --> 00:04:34,901 -அறிவிப்பு பலகைகளாக வைத்தால் என்ன? -குழந்தைகளை படிக்கக் கற்றுக்கொள்ள ஊக்குவிக்க, 78 00:04:34,985 --> 00:04:37,737 அவர்களுக்கு இன்னும் படிக்கத் தெரியாத அறிவிப்பு பலகைகளை வைப்பதா? 79 00:04:39,322 --> 00:04:41,658 ஒருவேளை நான் இது பற்றி குறைவாக யோசித்திருக்கலாம். 80 00:04:42,826 --> 00:04:46,496 ஏன் எப்போதும் அதுவும் அதுவும் விளையாடுகிறது, இது விளையாடவில்லை என்று வியக்கிறேன். 81 00:04:46,580 --> 00:04:50,625 "அந்த ஒன்று" என்று கூப்பிடுவதற்கு பதிலாக இவற்றுக்கு பெயர்களை வைக்கலாம். 82 00:04:51,668 --> 00:04:54,129 அம்மா நாய்க்கு ரூபி மற்றும் அதன்... 83 00:04:54,212 --> 00:04:57,549 ...குட்டிகளுக்கு டைமண்ட், எமரால்ட், மற்றும் டோபஸ் எப்படி இருக்கும். 84 00:04:57,632 --> 00:05:01,469 யோசனை நன்றாக இருக்கிறது, ஆனால் இது... ஏற்றதா? 85 00:05:01,553 --> 00:05:03,805 எது நவீனாமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் தெரியுமா? 86 00:05:03,889 --> 00:05:06,349 தனிம அட்டவணையில் உள்ள தனிமங்களின் பெயரை அவற்றுக்கு வைப்பது. 87 00:05:06,433 --> 00:05:11,396 ஆர்கான், போரான், செனான் மற்றும்... ஜெர்மானியம். 88 00:05:11,479 --> 00:05:13,982 அல்லது ஸ்கிப்பர், கோகோ, சின்னமன், மற்றும் பட்டி. 89 00:05:15,275 --> 00:05:16,526 இதில் எந்த ஒன்றுமையும் தெரியவில்லை. 90 00:05:16,610 --> 00:05:19,821 எனக்கும் தான். ஆனால் இது அந்த பெட்டியில் இருந்தது. 91 00:05:20,906 --> 00:05:24,326 "ஸ்கிப்பர், கோகோ, சின்னமன், மற்றும் பட்டியை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்." 92 00:05:24,409 --> 00:05:25,619 சரி. 93 00:05:27,996 --> 00:05:29,497 அம்மா நாய்தான் ஸ்கிப்பர் என்று நினைக்கிறேன்... 94 00:05:29,581 --> 00:05:31,791 ஏனென்றால் இதுதான் எல்லாவற்றையும் வழிநடந்தும். 95 00:05:32,876 --> 00:05:34,669 நீ கோகோவாக இருக்க வேண்டும். 96 00:05:34,753 --> 00:05:38,298 நிச்சயமாக. ஆனால் இதில் எது சின்னமன், எது பட்டி? 97 00:05:38,381 --> 00:05:39,841 பட்டி? 98 00:05:39,925 --> 00:05:40,759 நீதான் பட்டியா? 99 00:05:43,178 --> 00:05:44,721 பதில் கிடைத்துவிட்டது. 100 00:05:47,140 --> 00:05:48,808 சின்னமன் வெளியே போக விரும்புகிறது. 101 00:05:48,892 --> 00:05:51,603 அம்மாவும் அப்பாவும் உன்னைப் பார்த்தால் என்ன செய்வது? அவர்கள் ஏற்கனவே பட்டியைப் பார்த்துவிட்டனர். 102 00:05:51,686 --> 00:05:55,857 சின்னமனும் பட்டியும் இரட்டையர்கள் போன்றவை. அவர்களால் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. 103 00:06:04,032 --> 00:06:05,492 வா, சின்னமன். 104 00:06:05,575 --> 00:06:07,661 சின்னமன்? இது ஒரு நல்ல பெயர். 105 00:06:07,744 --> 00:06:09,287 பெயர் இந்த பெண் குட்டிக்கு பொருத்தமாக இருப்பதாக நினைத்தோம். 106 00:06:09,371 --> 00:06:12,624 -பெண்ணா? உன் அக்கா இது ஆண் என்றாள். -அப்படியா? 107 00:06:13,541 --> 00:06:17,504 ம்... நீங்கள் தவறாக கேட்டிருக்கலாம். லிஸ்ஸி, மிகவும் வேகமாக பேசுவாள். 108 00:06:18,296 --> 00:06:21,091 மூக்கின் கீழுள்ள வெள்ளை கோடு என் நினைவில் இருப்பதை விட தடிமனாக இருக்கிறது. 109 00:06:21,174 --> 00:06:22,968 நாய்க்குட்டிகள். எப்போதும் வளரும் மற்றும் மாறும். 110 00:06:23,051 --> 00:06:25,804 தலையில் உள்ள அந்த பெரிய பழுப்பு நிற புள்ளியும் எனக்கு நினைவில் இல்லை. 111 00:06:25,887 --> 00:06:28,640 -அது அழுக்கு. நாங்கள் வெளியே இருந்தோம். -அதன் மிச்ச வால் எங்கே? 112 00:06:31,685 --> 00:06:37,065 எனவே இது உண்மையில் பொய்யல்ல, மிகைபடுத்தல் போன்றது. 113 00:06:37,148 --> 00:06:39,901 இரண்டாவது நாய்க்குட்டியைப் பற்றி நாங்கள் சொல்லாததற்கு வருந்துகிறோம். 114 00:06:39,985 --> 00:06:42,946 நீங்கள் எங்களை வளர்க்க அனுமதிக்க மாட்டீர்கள் என்று கவலைப்பட்டோம்... 115 00:06:48,577 --> 00:06:50,912 என்ன செய்வதென்று தெரியவில்லை. எங்களால் இவற்றை பிரிக்க முடியவில்லை. 116 00:06:52,247 --> 00:06:56,877 அவ்வளவுதானா? முடிந்ததா? வேறு நாய்க்குட்டிகள் இல்லையே? 117 00:06:56,960 --> 00:06:59,129 இல்லை. சத்தியமாக. 118 00:07:04,259 --> 00:07:05,844 அடிப்படையில், அது நாய்க்குட்டி இல்லை. 119 00:07:06,970 --> 00:07:11,016 மன்னிக்கவும், திரு. பீட்டர்சன். நானும் ஏமாற்றுவதில் ஒரு அங்கமாக இருந்திருக்கக்கூடாது. 120 00:07:11,099 --> 00:07:12,309 உதவவில்லை. 121 00:07:12,392 --> 00:07:14,895 மன்னித்துவிடு. பிறகு அழைக்கிறேன். 122 00:07:14,978 --> 00:07:16,146 பை. 123 00:07:19,024 --> 00:07:21,651 பார்த்தீர்களா? அதனால் தான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. 124 00:07:21,735 --> 00:07:24,654 நீங்கள் கோபமடைந்து அவற்றை வளர்க்க அனுமதிக்க மாட்டீர்கள் என்று தெரியும். 125 00:07:24,738 --> 00:07:27,532 லிஸ்ஸி. நாங்கள் வருத்தப்படும் ஒரே விஷயம் என்ன தெரியுமா? 126 00:07:28,658 --> 00:07:30,285 நாங்கள் உங்களிடம் நேர்மையாக இல்லாதது. 127 00:07:36,166 --> 00:07:38,919 ஒரு அம்மா நாயையும் அதன் மூன்று நாய்க்குட்டிகளையும் 128 00:07:39,002 --> 00:07:41,379 நாங்கள் துரத்திவிடுவோம் என்று எப்படி நினைத்தாய்? 129 00:07:42,088 --> 00:07:43,506 நாங்கள் என்ன இதயமற்றவர்களா? 130 00:07:49,596 --> 00:07:51,890 "இல்லை" என்பதுதான் சரியான பதில். 131 00:07:54,517 --> 00:07:55,810 நாங்கள் பயந்துவிட்டோம். 132 00:07:56,436 --> 00:07:58,104 எங்களை மன்னித்துவிடுங்கள். 133 00:07:59,648 --> 00:08:01,107 ஹேய். 134 00:08:01,191 --> 00:08:03,777 நாம் எல்லோரும் ஒரே அணிதான். நினைவில் கொள்ளுங்கள். 135 00:08:03,860 --> 00:08:08,198 -அவை எல்லாவற்றையும் நாம் வளர்க்கலாமா? -ரகசியங்கள் எதுவும் இல்லாத வரை. 136 00:08:08,281 --> 00:08:10,367 -எதுவும் இருக்காது. -நிச்சயமாக. 137 00:08:10,951 --> 00:08:11,952 நல்லது. 138 00:08:12,744 --> 00:08:14,579 இது கூடுதல் அழகோடு இருக்கிறது, இல்லையா? 139 00:08:14,663 --> 00:08:15,956 அது பட்டி. 140 00:08:16,873 --> 00:08:19,125 நீங்கள் எங்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கிறீர்களா? 141 00:08:19,209 --> 00:08:20,794 -அவன்தான் நினைத்தான். நானில்லை. -ஹேய்! 142 00:08:20,877 --> 00:08:23,547 அட. இங்கு நாய்கள் முயல்களைப் போல் பெருகுகின்றன. 143 00:08:25,674 --> 00:08:27,634 முயல்கள். அதேதான். 144 00:08:28,635 --> 00:08:29,719 இதோ. 145 00:08:31,012 --> 00:08:33,222 நாம் முயல்களை வளர்க்கவில்லை, இல்லையா? 146 00:08:33,306 --> 00:08:35,683 இப்போது, எதுவும் என்னை ஆச்சரியப்படுத்தாது. 147 00:08:38,812 --> 00:08:41,690 கோஸி நூக் புத்தகக்கடை - புத்தகப்புழு திட்டம் வாரந்திர வாசிப்பு சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு 148 00:08:44,234 --> 00:08:46,319 படிக்கக் கற்றுக்கொள்ளும் போதுதான் குழந்தைகள் வெற்றி பெறுகிறார்கள்! 149 00:08:46,403 --> 00:08:49,114 பீட்டர் ராபிட்டை போல தைரியமாக இருங்கள். இங்கே வந்து பதிவு செய்யுங்கள்! 150 00:08:50,657 --> 00:08:54,035 என்னவொரு சிறந்த யோசனை. நீங்கள் இங்கே வாசிக்கிறீர்களா? 151 00:08:54,119 --> 00:08:57,622 ஆம். கோஸி நூக் புத்தகக்கடைக்கு உள்ளே. பீட்டர் ராபிட்டை வாசிப்போம். 152 00:08:57,706 --> 00:08:59,249 எனக்கு பீட்டர் ராபிட்டை பிடிக்கும். 153 00:08:59,332 --> 00:09:02,460 அதோடு ஐசக் மிகவும் ஆர்வத்துடன் பார்க்கிறான். 154 00:09:03,753 --> 00:09:05,797 -முயல்களை பிடித்திருக்கிறதா? -இவை நாய்க்குட்டிகள். 155 00:09:07,007 --> 00:09:08,717 வா. நாம் போக வேண்டும். 156 00:09:10,677 --> 00:09:12,512 அவை தத்தெடுக்கக் கிடைக்கின்றன. 157 00:09:15,515 --> 00:09:16,766 நாங்கள் அது பற்றி யோசிக்கிறோம். 158 00:09:19,019 --> 00:09:20,437 நாங்கள் இன்று பல்வேறு சேவைகளை வழங்குகிறோம். 159 00:09:20,520 --> 00:09:22,397 சிறுமிகளே, உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். 160 00:09:22,480 --> 00:09:24,816 சனிக்கிழமைக்கான பதிவுத் தாள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. 161 00:09:24,900 --> 00:09:25,901 மிகவும் அருமை! 162 00:09:25,984 --> 00:09:28,320 இலக்கியத்தின் ஆற்றலை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். 163 00:09:28,403 --> 00:09:29,905 அதோடு நாய்க்குட்டி முயல்களையும். 164 00:09:33,491 --> 00:09:35,035 "பிளாப்ஸி, மாப்சி மற்றும் காட்டன் டெயில், 165 00:09:35,118 --> 00:09:36,912 அவை நல்ல முயல்கள்"... 166 00:09:36,995 --> 00:09:40,790 பட்டி. கெஞ்சுவதை நிறுத்து. நீ பீட்டர் ராபிட்டை போல மோசமானவன். 167 00:09:42,292 --> 00:09:44,419 ..."கருப்பை சேகரிக்க பாதையில் சென்றன"... 168 00:09:44,502 --> 00:09:48,590 பட்டி. நீ மிக அழகாகவும் இருக்கிறாய், வற்புறுத்தவும் செய்கிறாய். 169 00:09:48,673 --> 00:09:51,927 ஆனால் உங்களுக்கு ஒரு உபசரிப்பு இருந்தது. 170 00:09:52,010 --> 00:09:53,762 …"பாதையில் சென்றார்கள்"... 171 00:09:53,845 --> 00:09:55,722 -பட்டி, தயவுசெய்து. -என்ன விஷயம்? 172 00:09:55,805 --> 00:09:58,308 புத்தகப் புழுக்கள் வாசிப்புக்கு தயாராகி வருகிறேன், 173 00:09:58,391 --> 00:10:00,435 ஆனால் பட்டி உணவுக்காக கெஞ்சுகிறது. 174 00:10:00,518 --> 00:10:02,187 -உன்னிடமுமா? -நீ என்ன சொல்கிறாய்? 175 00:10:02,270 --> 00:10:04,356 பட்டி போல் கெஞ்சும் நாயை நான் பார்த்ததில்லை. 176 00:10:04,439 --> 00:10:06,900 பட்டினி கிடப்பது போல் நடிக்கிறது, ஆனால் அது சாப்பிடுவது எனக்குத் தெரியும் 177 00:10:06,983 --> 00:10:08,818 ஏனென்றால் அதன் உணவு கிண்ணம் எப்போதும் காலியாக இருக்கும். 178 00:10:12,489 --> 00:10:14,532 உடல் எடை குறைந்தது போல் தெரிகிறது. 179 00:10:14,616 --> 00:10:15,617 அது விசித்திரமானது. 180 00:10:17,202 --> 00:10:20,205 இது விசித்திரம் இல்லை. பட்டி தான் அந்த கூட்டத்தில் கடைக்குட்டி, 181 00:10:20,288 --> 00:10:22,999 அதாவது தனது குடும்பத்தில் மிகக் குறைந்த தரவரிசையில் உள்ள உறுப்பினர். 182 00:10:23,083 --> 00:10:24,668 அப்படியென்றால், அது பலகீனமானதா? 183 00:10:24,751 --> 00:10:26,670 பலகீனமானது என்பது சரியான சொல் இல்லை. 184 00:10:26,753 --> 00:10:30,131 பெரும்பாலானவர்கள் கூற்றுப்படி கூட்டத்தில் சிறியது, பலவீனமானது என்று பொருள். 185 00:10:30,215 --> 00:10:33,510 ஆனால் பட்டி, கோகோ மற்றும் சின்னமனை விட சிறியது அல்ல. 186 00:10:33,593 --> 00:10:36,596 மிகச்சரி. அதனால்தான் நான் "கடைக்குட்டி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். 187 00:10:36,680 --> 00:10:40,433 இது அளவு அல்லது வலிமையைப் பற்றியது அல்ல, அதற்கு குழுவை வழிநடத்த விருப்பம் இல்லை, 188 00:10:40,517 --> 00:10:42,310 அதோடு மோதலை தவிர்க்க விரும்புகிறது. 189 00:10:42,394 --> 00:10:44,563 ஆனால் ஏன் எப்போதும் பசியோடு இருக்கிறது? 190 00:10:44,646 --> 00:10:46,273 நீங்கள் அவற்றின் உணவை கண்காணிக்கும் வரை, 191 00:10:46,356 --> 00:10:49,526 சின்னமனும் கோகோவும் அதை துரத்திவிட்டு அதன் உணவையும் சாப்பிட்டுவிடும்'. 192 00:10:49,609 --> 00:10:53,655 கோகோவும் சின்னமனும் மிகவும் நட்பானவை. கொடுமைபடுத்துபவை போல தெரியவில்லை. 193 00:10:53,738 --> 00:10:56,074 அவை மக்களைப் போலவே கொடுமைப்படுத்துபவை அல்ல. 194 00:10:56,157 --> 00:10:59,369 நாய்களுக்கு உணவு மற்றும் அரவணைப்புக்கு போட்டியிடும் உள்ளுணர்வு உள்ளது. 195 00:11:00,495 --> 00:11:02,497 -பாவப்பட்ட பட்டி. -நான் கவலைப்பட மாட்டேன். 196 00:11:02,581 --> 00:11:04,624 கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால், இது நன்றாக இருக்கும். 197 00:11:04,708 --> 00:11:06,960 நான் இதற்கு தனித்தனியாக உணவளிப்பேன். 198 00:11:07,043 --> 00:11:08,879 இது உண்மையிலேயே இனிமையானது, இல்லையா? 199 00:11:08,962 --> 00:11:11,047 மிகவும் இனிமையானது. 200 00:11:14,718 --> 00:11:16,928 "பீட்டர் மிகவும் பயந்தது. 201 00:11:17,012 --> 00:11:18,930 அது தோட்டம் முழுவதும் ஓடியது, 202 00:11:19,014 --> 00:11:21,850 ஏனென்றால், வாயிலுக்குச் செல்லும் வழியை மறந்துவிட்டது." 203 00:11:21,933 --> 00:11:24,144 "தனது காலணிகளில் ஒன்றை முட்டைக்கோசுகளுக்கு இடையில் தொலைத்தது, 204 00:11:24,227 --> 00:11:26,104 மற்றொன்றை உருளைக்கிழங்கில்." 205 00:11:26,187 --> 00:11:27,439 அம்மா, நான் வீட்டுக்குப் போக வேண்டும். 206 00:11:27,522 --> 00:11:31,735 செல்லம். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கவலைப்படாதே, நான் இங்கே இருக்கிறேன். 207 00:11:31,818 --> 00:11:34,070 "அது முற்றிலும் தப்பித்திருக்கலாம் 208 00:11:34,154 --> 00:11:36,907 துரதிர்ஷ்டவசமாக அது ஒரு வாத்து மீது மோதவில்லை என்றால்... 209 00:11:36,990 --> 00:11:40,911 -என்ன, ஜூலியா? -பீட்டரிடம் ஏன் 2 காலணிகள் மட்டுமே உள்ளன? 210 00:11:42,162 --> 00:11:46,416 எழுத்தாளர்கள் மனிதர் அல்லாத பாத்திரங்களை மனிதர்கள் போல இருக்க தேர்வு செய்கிறார்கள், 211 00:11:46,499 --> 00:11:49,044 அதனால் அவற்றை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். 212 00:11:50,962 --> 00:11:54,257 சிற்றுண்டி இடைவேளைக்கான நேரம் இது. இன்று நாம் சாப்பிடப்போவது… 213 00:11:54,341 --> 00:11:55,342 கேரட்கள். 214 00:12:00,096 --> 00:12:02,098 ஹாய், ஐசக். மகிழ்ச்சியாக இருக்கிறாயா? 215 00:12:03,767 --> 00:12:04,768 அப்பா. 216 00:12:05,435 --> 00:12:08,230 எனவே, ஐசக்கும் நானும் இடைவிடாது பேசிக்கொண்டிருக்கிறோம் 217 00:12:08,313 --> 00:12:11,441 உங்கள் நாய்க்குட்டிகளில் ஒன்றை தத்தெடுப்பது பற்றி, இன்னும் இருக்கின்றனவா? 218 00:12:11,524 --> 00:12:13,526 -ஆம், இருக்கின்றன. -ஓ, அருமை. 219 00:12:13,610 --> 00:12:16,321 நாங்கள் எப்போது வரலாம் என்று தெரியப்படுத்துங்கள். 220 00:12:16,404 --> 00:12:20,075 இவனிடம் சொல்லாதீர்கள், ஆனால் நான் இவனை விட ஆர்வமாக இருக்கிறேன். 221 00:12:20,158 --> 00:12:21,493 இது நமது ரகசியம். 222 00:12:22,118 --> 00:12:23,119 ஐசக், வா போகலாம். 223 00:12:25,997 --> 00:12:27,540 பார்க்கரைப் பற்றி வருந்துகிறேன். 224 00:12:27,624 --> 00:12:32,170 அவளுக்கு கதைகளை பிடிக்கும், ஆனால் மற்ற குழந்தைகளுடன் இருப்பதால் பதட்டமாகிறாள். 225 00:12:32,254 --> 00:12:34,381 இதுவே அவளுக்கு கொஞ்சம் அதிகம் என்று நினைக்கிறேன், 226 00:12:34,464 --> 00:12:36,716 -அதோடு குழுவையும் சீர்குலைக்க விரும்பவில்லை. -ஓ, இல்லை. 227 00:12:36,800 --> 00:12:39,844 பார்க்கர் ஒரு இடையூறு அல்ல. அடுத்த வாரம் அவளை அழைத்து வாருங்கள். 228 00:12:39,928 --> 00:12:42,264 அவள் வசதியாக இருக்க ஒரு வழியை நாம் கண்டுபிடிப்போம். 229 00:12:42,347 --> 00:12:46,142 புரிதலுக்கு நன்றி. மீண்டும் முயற்சிப்போம், அது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம். 230 00:12:46,226 --> 00:12:47,227 சரி. 231 00:12:50,146 --> 00:12:53,567 -எனவே, பார்க்கருக்கான நம் திட்டம் என்ன? -எந்த திட்டமும் இல்லை. 232 00:12:55,443 --> 00:12:58,405 -உன்னை பிரிந்து வருந்த போகிறேன். -உன் சகோதரியை கவனித்துக் கொள். 233 00:12:58,488 --> 00:13:00,657 இரண்டையும் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. 234 00:13:00,740 --> 00:13:02,826 அது நோக்கம் இல்லை, ஆனால் எப்படி எடுத்துக்கொள்ளாமல் இருப்பது? 235 00:13:02,909 --> 00:13:06,162 ஒன்றை ஒன்று மிகவும் நேசிப்பதாகத் தெரிவதை எப்படி பிரிப்பது. 236 00:13:06,246 --> 00:13:08,707 ஐசக், நீ ஒன்றை மட்டும் விரும்பினால் தவிர. 237 00:13:08,790 --> 00:13:10,250 இல்லை, இரண்டு நல்லது, அப்பா. 238 00:13:11,042 --> 00:13:11,918 நான் ஒப்புக்கொள்கிறேன். 239 00:13:12,502 --> 00:13:13,587 மிக்க நன்றி. 240 00:13:13,670 --> 00:13:16,381 -படங்களை அனுப்ப மறக்காதீர்கள். -மிக நிச்சயமாக. 241 00:13:16,464 --> 00:13:18,425 வாருங்கள். வா, ஐசக். 242 00:13:23,013 --> 00:13:25,098 சரி, அது பெரிய வெற்றிதான். 243 00:13:25,181 --> 00:13:26,975 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 244 00:13:27,475 --> 00:13:30,228 -நீ பட்டிக்காக வருத்தப்படுகிறாயா? -அவர்கள் அதை பார்க்கவே இல்லை. 245 00:13:31,271 --> 00:13:33,398 பட்டி பார்க்கப்பட வேண்டும் என்று நினைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 246 00:13:33,481 --> 00:13:35,483 குறைந்தபட்சம் அது எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். 247 00:13:35,567 --> 00:13:36,568 அது உண்மைதான். 248 00:13:40,447 --> 00:13:41,907 இதோ, பட்டி. 249 00:13:46,119 --> 00:13:47,120 அது எங்கே போகிறது? 250 00:13:48,163 --> 00:13:49,998 அது அதை மறைத்து வைக்கலாம். 251 00:13:50,081 --> 00:13:52,208 அது தனது உணவுக்காக அதிகம் போட்டியிட்டே பழகிவிட்டது, 252 00:13:52,292 --> 00:13:53,919 யாராவது எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறது. 253 00:13:54,794 --> 00:13:56,213 அன்பே. 254 00:14:04,095 --> 00:14:05,263 பட்டியோடு இருக்கிறாயா? 255 00:14:05,347 --> 00:14:07,724 இது உணவை மறைத்து வைப்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது. 256 00:14:07,807 --> 00:14:11,478 ஹாலோவீனுக்குப் பிறகு நீயும் நானும் அதை செய்வோம் என்பதை உணர்கிறாயா, இல்லையா? 257 00:14:13,688 --> 00:14:16,858 உணவை மறைப்பது ஒரு உள்ளுணர்வு, சார்ல்ஸ். நிறைய நாய்கள் அப்படி செய்யும். 258 00:14:16,942 --> 00:14:19,819 அதோடு டாக்டர் ஆபி சொன்னதை நான் நம்புகிறேன். பட்டி நன்றாக இருக்கப்போகிறது. 259 00:14:19,903 --> 00:14:23,073 நான்... நம்புகிறேன். இது வேடிக்கையானது, நான் இதை உற்சாகப்படுத்த இங்கே வந்தேன், 260 00:14:23,156 --> 00:14:26,743 ஆனால் நான் சோகமாக இருப்பதை உணர்ந்து, இது என்னை நன்றாக உணரச்செய்தது. 261 00:14:26,826 --> 00:14:29,746 உனக்குத் தெரியுமா, இப்படித்தான் ஷேடோ என்னிடம் செய்தது. 262 00:14:29,829 --> 00:14:32,624 சில நாய்கள் இயல்பிலேயே பராமரிப்பாளர்கள். 263 00:14:35,919 --> 00:14:36,753 ஹாய். 264 00:14:36,836 --> 00:14:38,421 நீ சொன்னது அதுக்கு கேட்டுவிட்டது. 265 00:14:38,505 --> 00:14:39,506 ஆம். 266 00:14:40,173 --> 00:14:41,174 ஹேய். 267 00:14:41,716 --> 00:14:43,051 கோஸி நூக் புத்தகக்கடை 268 00:14:43,134 --> 00:14:47,013 "கோல்டிலாக்ஸ் அவள் அம்மா சொன்னதைச் செய்யக்கூடாது என்பதை மறந்ததில்லை." 269 00:14:48,181 --> 00:14:50,267 "எப்போதும், எப்போதும், எப்போதும், எப்போதுமே." 270 00:14:51,017 --> 00:14:52,102 முடிந்தது. 271 00:14:53,228 --> 00:14:54,229 ஏதாவது கேள்விகள் உள்ளதா? 272 00:14:55,981 --> 00:14:57,232 என்ன, பார்க்கர்? 273 00:14:58,149 --> 00:14:59,693 அடுத்த வாரமும் பட்டி வருமா? 274 00:14:59,776 --> 00:15:03,154 வரலாம். அதற்கு உன்னை பிடித்திருக்கிறது போல. 275 00:15:04,531 --> 00:15:06,491 நன்றி, பெண்களே. 276 00:15:06,575 --> 00:15:09,494 நன்றி, நண்பர்களே. அடுத்த வாரம் சந்திப்போம், சரியா? 277 00:15:16,459 --> 00:15:18,044 நன்றி. 278 00:15:18,712 --> 00:15:20,881 பட்டியைக் கூட்டிவருவது அற்புதமான யோசனை. 279 00:15:22,299 --> 00:15:25,802 மற்ற குழந்தைகள் மத்தியில் நிம்மதியாக உணர பார்க்கருக்கு அதுதான் தேவைப்பட்டது. 280 00:15:25,886 --> 00:15:28,471 இது வேடிக்கையானது, நாங்கள் அவளுக்கு ஒரு நாயைப் பெறுவது பற்றி யோசித்தோம், 281 00:15:28,555 --> 00:15:30,181 ஆனால் இன்று அது பற்றி முடிவெடுத்துவிட்டேன். 282 00:15:30,265 --> 00:15:33,351 உங்களுக்குத் தெரியுமா, பட்டியும் ஒரு நிரந்தர வீட்டைத் தேடுகிறது. 283 00:15:34,019 --> 00:15:36,479 நிஜமாகவா? நான் பார்க்கரிடம் சென்று பேசுகிறேன். 284 00:15:39,149 --> 00:15:40,150 ஹாய். 285 00:15:40,233 --> 00:15:41,568 ஹலோ. 286 00:15:41,651 --> 00:15:45,030 நான் என்ன சொல்ல, நீங்கள் இருவரும்தான் இன்னும் என் நட்சத்திரங்கள். 287 00:15:45,655 --> 00:15:46,907 உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம். 288 00:15:46,990 --> 00:15:49,701 நான் அனேகமாக 'கோல்டிலாக்ஸை' நூறு முறை படித்திருக்கிறேன், 289 00:15:49,784 --> 00:15:51,953 இன்னும் நூறு முறை படிக்க முடியும். 290 00:15:52,037 --> 00:15:54,331 பழையவைப் பற்றி ஏதோ இருக்கிறது. 291 00:15:54,414 --> 00:15:55,874 நான் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? 292 00:15:57,000 --> 00:15:57,918 இல்லை... நான்... 293 00:15:58,960 --> 00:16:01,504 நான் படிக்க ஏதாவது தேடப் போகிறேன். 294 00:16:02,964 --> 00:16:04,216 லிஸ்ஸி, பார். 295 00:16:04,841 --> 00:16:06,009 ஆம். 296 00:16:09,221 --> 00:16:11,264 பட்டி தனது புதிய நிரந்தர மடியைக் கண்டுபிடித்தது போல தெரிகிறது. 297 00:16:12,724 --> 00:16:14,684 நான் நிஜமாகவே அதை பிரிந்து வருந்துவேன். 298 00:16:18,897 --> 00:16:21,107 பட்டி விடைபெற வந்திருக்கிறது. 299 00:16:23,777 --> 00:16:25,654 நாங்கள் உன்னை நேசிக்கிறோம், பட்டி. 300 00:16:28,448 --> 00:16:30,283 இதுதான் உண்மையிலேயே சிறந்த நாய்க்குட்டி. 301 00:16:30,367 --> 00:16:31,743 நாங்களும் அப்படித்தான் நினைக்கிறோம். 302 00:16:34,287 --> 00:16:35,747 பட்டியை நடக்க அழைத்துச் செல்லலாமா? 303 00:16:40,961 --> 00:16:41,836 ஹாய். 304 00:16:44,631 --> 00:16:46,132 அது மிகவும் இனிமையாக இருந்தது. 305 00:16:47,175 --> 00:16:50,095 நாய்களும் புத்தகக்கடைகளும் நிஜமாகவே ஒரு சிறந்த ஜோடி. 306 00:16:50,178 --> 00:16:52,389 குழந்தைகளுக்கு நிச்சயமாக பட்டியை பிடித்துப்போனது. 307 00:16:54,307 --> 00:16:58,061 கோஸி நூக் புத்தகக்கடைக்கு ஒரு அதிர்ஷ்ட நாயை பெறுவது பற்றி சிந்திக்கவில்லையா? 308 00:16:59,479 --> 00:17:03,525 எனக்கும் விருப்பம்தான், ஆனால் நாய்க்குட்டியை வளர்ப்பதும் கடையை நிர்வகிப்பதும் 309 00:17:03,608 --> 00:17:05,776 நான் கையாளுவதற்கு கொஞ்சம் அதிகமானதாக இருக்கலாம். 310 00:17:05,860 --> 00:17:08,237 ஆம், நாங்கள் அதை முழுமையாக புரிந்துகொள்கிறோம். 311 00:17:08,321 --> 00:17:10,198 நாய்க்குட்டிகள் நிறைய வேலை வைப்பவை. 312 00:17:10,282 --> 00:17:13,743 ஆனால் உங்களுக்குத் தெரிந்தபடி, பழையவைப் பற்றி ஏதோ இருக்கிறது. 313 00:17:19,040 --> 00:17:20,041 அதற்கு உங்களைப் பிடித்திருக்கிறது. 314 00:17:20,625 --> 00:17:22,710 என்னைப் பிடிக்காதது எது? 315 00:17:23,670 --> 00:17:26,131 அதோடு, எங்களுக்குள் நிறைய பொதுவானவை இருக்கின்றன. 316 00:17:26,214 --> 00:17:29,384 ஒரு நாள் இது தன் குட்டிகளை கவனித்துக் கொண்டிருந்த விதம் எனக்கு நினைவிருக்கிறது. 317 00:17:29,467 --> 00:17:30,677 இது ஒரு அருமையான அம்மா. 318 00:17:31,636 --> 00:17:33,763 லிஸ்ஸி, உனக்காக என்னிடம் பிரத்தியேகமான ஒன்று இருக்கிறது. 319 00:17:37,350 --> 00:17:39,019 புதிய கிட் ஸ்மிதர்ஸ்! 320 00:17:39,102 --> 00:17:40,312 பதிப்பகத்தில் இருந்து நேரடியாக. 321 00:17:41,021 --> 00:17:42,022 சார்ல்ஸ். 322 00:17:42,105 --> 00:17:46,026 'மெஜெஸ்டிக் டாக் வாரியர்', முதல் பதிப்பு? 323 00:17:46,109 --> 00:17:49,070 இது எனக்கு மிகவும் பிடித்தமானது. லார்ட் கோவின் தோற்றக் கதை. 324 00:17:49,988 --> 00:17:54,117 இப்போது, நீங்கள் அனுமதித்தால், ஸ்கிப்பரும் நானும் இந்தத் பகுதியை சுற்றி 325 00:17:54,200 --> 00:17:56,870 உலாவிக்கொண்டே சில பழங்கதைகளைப் பகிர்ந்துகொள்ளப்போகிறோம். 326 00:17:58,538 --> 00:18:00,916 இந்தக் கதை மகிழ்ச்சியாக முடிந்தது, இல்லையா? 327 00:18:00,999 --> 00:18:02,876 நான்கு நாய்களுக்கும் வீடு கிடைத்துவிட்டது. 328 00:18:02,959 --> 00:18:04,502 -ஆம். -உங்கள் அம்மாவும் நானும் 329 00:18:04,586 --> 00:18:06,796 -இந்த வளர்ப்பு விஷயத்தை நன்றாக செய்கிறோம். -நாங்கள். 330 00:18:06,880 --> 00:18:08,715 -சில புத்தகங்களைப் பார்க்க போகலாமா? -போகலாம். 331 00:18:12,344 --> 00:18:13,887 சரி. 332 00:18:24,022 --> 00:18:25,982 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 333 00:19:42,017 --> 00:19:44,019 வசனத் தமிழாக்கம் அருண்குமார்