1 00:00:06,299 --> 00:00:08,802 ஹலோ. நான் ஒரு இங்கிலீஷ் புல்டாக். 2 00:00:08,885 --> 00:00:10,720 உன்னிடம் இங்கிலீஷ் மஃபின் இருக்கிறதா? 3 00:00:10,804 --> 00:00:13,265 சார்ல்ஸ், அது ஒரு பிரெஞ்சு புல்டாக். 4 00:00:13,890 --> 00:00:14,891 புரிகிறது. 5 00:00:15,684 --> 00:00:17,686 இது பிரஞ்சு ஃபிரையா? 6 00:00:19,437 --> 00:00:20,689 நீ அபத்தமாக பேசுகிறாய். 7 00:00:25,068 --> 00:00:27,779 ஹாய். நான் ஒரு அழகான வெள்ளை நாய்க்குட்டி. 8 00:00:27,862 --> 00:00:30,448 உன் டென்னிஸ் பந்தில் நான் விளையாடலாமா? தயவுசெய்து? 9 00:00:31,199 --> 00:00:33,493 என்ன வகையான உச்சரிப்பு அது? 10 00:00:33,577 --> 00:00:35,537 ஒரு அழகான வெள்ளை நாய்க்குட்டியின் உச்சரிப்பு. 11 00:00:36,121 --> 00:00:38,623 அந்த நாய்க்குட்டி வெஸ்ட் ஹைலேண்ட் ஒயிட் டெரியர் வகையைச் சேர்ந்தது. 12 00:00:38,707 --> 00:00:40,417 ஸ்காட்லாந்தில் தோன்றிய இனம். 13 00:00:40,500 --> 00:00:42,711 ஸ்காட்லாந்தா? அவர்களின் உணவு எதுவும் எனக்குத் தெரியாதே. 14 00:00:45,755 --> 00:00:46,840 பார். 15 00:00:46,923 --> 00:00:50,552 அதனால் பந்தை எடுக்க முடியாததால் யாரோ ஒருவருடைய சட்டையை தூக்கிக்கொண்டு ஓடுகிறது. 16 00:00:50,635 --> 00:00:52,846 அது உன் சட்டை போல் தெரிகிறது. 17 00:00:53,513 --> 00:00:55,432 பொறு. என்ன? 18 00:00:55,515 --> 00:00:57,309 ஓ, கடவுளே. வா. 19 00:00:57,392 --> 00:00:59,352 -அது எங்கே போனது? -தெரியவில்லை. 20 00:00:59,436 --> 00:01:01,062 புதர்களில் பார்ப்போம். 21 00:01:01,146 --> 00:01:03,023 -எங்கே இருக்கிறாய்? -இங்கே வா. 22 00:01:03,106 --> 00:01:04,440 வெளியே வா. 23 00:01:05,650 --> 00:01:06,651 எங்கே இருக்கிறாய்? 24 00:01:10,363 --> 00:01:11,406 சார்ல்ஸ். 25 00:01:20,040 --> 00:01:21,207 நீ நலமா? 26 00:01:23,084 --> 00:01:24,753 இது இங்கே வசிப்பதாக நினைக்கிறாயா? 27 00:01:25,503 --> 00:01:27,797 அடையாள பட்டை இல்லை. ஒருவேளை தெரு நாயாக இருக்கலாம். 28 00:01:30,884 --> 00:01:32,844 ஒன்றுமில்லை. இங்கே வா. 29 00:01:34,930 --> 00:01:36,765 கவலைப்படாதே. நாங்கள் இருக்கிறோம். 30 00:01:37,724 --> 00:01:40,894 ஓ. ஹாய். 31 00:01:40,977 --> 00:01:42,270 வா. போகலாம். 32 00:01:44,689 --> 00:01:48,193 "ஸ்னோபால்" 33 00:01:52,572 --> 00:01:54,032 நன்றி. 34 00:01:55,075 --> 00:01:58,036 தாவோவின் கரோக்கி பார்ட்டியில் நம் டூயட் பாடலை எல்லோரும் விரும்பியதாக மேடிசன் சொன்னாள். 35 00:01:58,119 --> 00:01:59,204 நாம் சரியாக செய்திருக்கிறோம். 36 00:01:59,788 --> 00:02:01,248 ராகத்தோடு எல்லாம் சரியாக பொருந்தியது. 37 00:02:03,208 --> 00:02:06,836 இருவரும் நல்ல வேலை செய்தீர்கள். நீங்கள் செய்த ஆராய்ச்சியால் மிகவும் ஈர்க்கப்பட்டேன். 38 00:02:07,462 --> 00:02:08,462 நன்றி. 39 00:02:10,507 --> 00:02:13,468 சக மதிப்பாய்வு செய்த ஆதாரங்களை பயன்படுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலையை அடைய முடியும். 40 00:02:13,552 --> 00:02:14,553 இது ஒன்றை ஞாபகப்படுத்துகிறது... 41 00:02:16,054 --> 00:02:17,973 புதிய விவாதக் குழு டி-சர்ட்டுகள் வந்துவிட்டன, 42 00:02:18,056 --> 00:02:20,016 நம் வடிவத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 43 00:02:20,100 --> 00:02:21,268 அருமை. 44 00:02:21,351 --> 00:02:23,853 பொறு. ஏன் மஞ்சளாக இருக்கிறது? நாம் இறுதி செய்தது சிகப்பு தானே? 45 00:02:23,937 --> 00:02:25,689 ஆம், செய்தோம், ஆனால் நான் அதை மாற்ற முடிவு செய்தேன், 46 00:02:25,772 --> 00:02:28,900 ஏனென்றால் மஞ்சள் மிகவும் தெளிவானது மற்றும் கவனத்தை ஈர்க்கும். 47 00:02:28,984 --> 00:02:30,527 சிகப்பும் தான். 48 00:02:30,610 --> 00:02:33,446 எல்லோரும் கவனியுங்கள், தயவுசெய்து? 49 00:02:33,530 --> 00:02:37,951 எட்டியை சந்தியுங்கள், நம் வகுப்பின் புதிய செல்லப்பிராணி. 50 00:02:38,034 --> 00:02:39,911 -வகுப்பு செல்லப்பிராணியா? -வகுப்பு செல்லப்பிராணியா? 51 00:02:39,995 --> 00:02:42,706 நீங்கள் ஒவ்வொருவரும் இரண்டு வாரங்களுக்கு எட்டிக்கு பொறுப்பாவீர்கள். 52 00:02:42,789 --> 00:02:45,208 அதாவது இதற்கு உணவளிப்பது, வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பது, 53 00:02:45,292 --> 00:02:47,168 அதோடு இதன் மேல் அதிக கவனம் செலுத்துவது போன்றவை. 54 00:02:47,252 --> 00:02:50,171 சரியா? எனவே, இதை யார் முதலில் கவனித்துக்கொள்ள போகிறீர்கள்? 55 00:02:50,255 --> 00:02:51,298 நான். 56 00:02:52,299 --> 00:02:53,633 சரி, மரியா. 57 00:02:53,717 --> 00:02:56,052 உன் உற்சாகத்தை எட்டி பாராட்டும் என்று எனக்குத் தெரியும். 58 00:02:57,095 --> 00:03:00,599 என் அப்பாவின் முடி ஒவ்வாமையை மோசமாக்காத ஒரு செல்லப்பிராணி முடிவில் கிடைத்துவிட்டது. 59 00:03:00,682 --> 00:03:01,933 இது அருமையான விஷயம்தானே? 60 00:03:03,143 --> 00:03:04,394 ஆம், கண்டிப்பாக. 61 00:03:10,692 --> 00:03:12,360 மரியா அதை முதலில் கவனித்துக்கொள்கிறாள், 62 00:03:12,444 --> 00:03:15,155 ஆனால் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு புதிய நபரிடம் அது அனுப்பப்படும். 63 00:03:15,238 --> 00:03:17,574 ஒரு சிறிய பல்லிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல தெரிகிறது. 64 00:03:17,657 --> 00:03:19,075 -அதேதான். -தெரியவில்லை. 65 00:03:19,159 --> 00:03:22,037 -இது வேடிக்கையான கற்றல் அனுபவம் போல தெரிகிறது. -எட்டிக்கு அல்ல. 66 00:03:22,537 --> 00:03:24,706 நான் "கிராண்ட் பட்டிக்கு" பதிலாக பல்லியையே வைத்துக்கொள்வேன். 67 00:03:24,789 --> 00:03:26,958 நிஜமாகவா? நீ உற்சாகமாக இருப்பாய் என்று நினைத்தேன். 68 00:03:27,042 --> 00:03:29,628 முதியோர் இல்லத்திற்கு செல்வது பற்றியா? 69 00:03:29,711 --> 00:03:31,796 எனக்கு கிராண்ட் பட்டி திட்டம் பிடிக்கும். 70 00:03:31,880 --> 00:03:35,634 தவிர, நிறைய ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரிடமிருந்து நீ நிறைய கற்றுக்கொள்ளலாம். 71 00:03:35,717 --> 00:03:38,386 அதோடு இதற்கு கிடைக்கும் மரியாதை ஷஃபிள்போர்டுக்கு கிடைக்காது. 72 00:03:39,095 --> 00:03:40,722 அதற்கு ஸ்னோபாலுடன் இங்கேயே இருந்துவிடுவேன். 73 00:03:45,310 --> 00:03:47,479 அதன் பெயரை அது தெரிந்துகொண்டது. அருமை. 74 00:03:48,104 --> 00:03:50,232 இரண்டு நற்செய்திகள் இருக்கின்றன. 75 00:03:50,315 --> 00:03:53,693 ஸ்னோபாலின் சோதனை முடிவுகள் வந்ததாகவும், அது ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர் ஆபி கூறினார். 76 00:03:53,777 --> 00:03:56,738 அதோடு, ஒரு சிறிய நாயை தத்தெடுக்க விரும்பும் இரண்டு குடும்பங்களைப் பற்றி அவருக்குத் தெரியும். 77 00:04:00,116 --> 00:04:01,326 மீண்டும் என் சட்டையா? 78 00:04:01,409 --> 00:04:03,870 நாய் படுக்கை அங்கே இருக்கிறது, ஸ்னோபால். 79 00:04:04,746 --> 00:04:06,164 அதற்கு உன் வாசனை பிடித்திருக்கிறது. 80 00:04:06,248 --> 00:04:07,707 அதற்கு உன்னை பிடித்திருக்கிறது. 81 00:04:08,792 --> 00:04:11,378 எனக்கு அது தெரியவில்லையே. அருமையான விஷயம். 82 00:04:12,295 --> 00:04:13,672 எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது, ஸ்னோபால். 83 00:04:16,925 --> 00:04:19,803 பைன்குரோவ் முதியோர் இல்லம் 84 00:04:20,470 --> 00:04:22,973 உங்கள் வயது குழந்தைகள் இன்னும் கிராண்ட் பட்டீஸ் திட்டத்தில் சேர ஆர்வமாக 85 00:04:23,056 --> 00:04:24,766 இருப்பதை அறிவது மகிழ்ச்சி அளிக்கிறது. 86 00:04:24,849 --> 00:04:29,437 -அது என் விருப்பம் அல்ல. நான்... -இது இங்கே வாழ்பவர்களுக்கு மிகவும் பலனளிக்கிறது. 87 00:04:29,980 --> 00:04:32,232 ஸ்டெல்லா, நீங்கள் இன்று வெளியே போனீர்களா? 88 00:04:32,315 --> 00:04:33,441 உனக்கு என்ன பிரச்சினை? 89 00:04:33,984 --> 00:04:37,404 நான் வெளிப்புறத்தை உள்ளே கொண்டு வருகிறேன், என் நாற்காலியை விட்டு எழ வேண்டியதில்லை. 90 00:04:44,995 --> 00:04:47,539 நீங்கள் இப்போது என்ன செய்தீர்கள் என்று எனக்குத் தெரியும், ஜெர்ரி. 91 00:04:47,622 --> 00:04:50,208 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று தெரியவில்லை, லாயிட். 92 00:04:56,298 --> 00:04:57,299 வா போகலாம். 93 00:05:00,510 --> 00:05:02,220 வாக்கு கண்டன போராட்டம் - பெண்ணே எதிர்காலம் 94 00:05:02,304 --> 00:05:04,431 விலங்கு உரிமைகள் சங்கம் 95 00:05:06,850 --> 00:05:07,851 ஹேய், ரோஸ். 96 00:05:07,934 --> 00:05:10,645 உங்கள் கிராண்ட் பட்டியை சந்தியுங்கள், சார்ல்ஸ் பீட்டர்சன். 97 00:05:17,402 --> 00:05:19,404 நான் உங்கள் இருவரையும் தனியாக விடுகிறேன். 98 00:05:19,487 --> 00:05:22,157 ஞாபகப்படுத்துகிறேன், 4:30 மணிக்கு உடல் சிகிச்சை இருக்கிறது. 99 00:05:22,240 --> 00:05:26,286 கொஞ்சம் பொறு. நான் வாஷிங்டன் மலையில் ஏறியிருக்கிறேன். 100 00:05:26,369 --> 00:05:29,497 எனக்கு உடல் சிகிச்சை தேவையில்லை. 101 00:05:30,123 --> 00:05:33,209 -நான் முதிர்ச்சி... -திடகாத்திரமாக. 102 00:05:33,293 --> 00:05:34,669 -ம். -நன்றி. 103 00:05:34,753 --> 00:05:36,838 -இருந்தாலும் அது உங்களுக்கு நல்லது. -ஆம். 104 00:05:44,512 --> 00:05:45,931 ஹாய், நான் சார்ல்ஸ். 105 00:05:46,014 --> 00:05:48,391 தலையை உரசும் மேகங்கள் உலகின் கடினமான மலை ஏற்றங்கள் 106 00:05:50,268 --> 00:05:51,811 எனவே, நடக்க விரும்புகிறீர்களா? 107 00:05:51,895 --> 00:05:53,271 இல்லை. 108 00:05:53,897 --> 00:05:55,815 சரி, போர்டு விளையாட்டு விளையாடலாமா? 109 00:05:55,899 --> 00:05:57,859 விளையாடும் மனநிலையில் இல்லை. 110 00:05:58,985 --> 00:06:00,737 ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? 111 00:06:02,405 --> 00:06:03,531 பார், சார்லி... 112 00:06:04,991 --> 00:06:09,246 நான் பட்டி விஷயத்திற்கு பதிவு செய்யவில்லை. வாழ்க்கை முழுக்க தனியாகவே இருக்கிறேன். 113 00:06:09,329 --> 00:06:12,499 பரவாயில்லை. நானும் தான் மனதார பதிவு செய்யவில்லை. 114 00:06:12,582 --> 00:06:14,668 பள்ளிக்காக செய்கிறேன். 115 00:06:14,751 --> 00:06:17,796 நீ என்ன செய்ய வேண்டும் என மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கக்கூடாது. 116 00:06:18,588 --> 00:06:19,798 நான் மூன்றாம் வகுப்புதான் படிக்கிறேன். 117 00:06:20,382 --> 00:06:21,424 புரிகிறது. 118 00:06:23,718 --> 00:06:28,014 நான் ஒரு மணிநேரம் இங்கே இருக்க வேண்டும். எனவே நான் ஏதாவது படிக்கிறேன். 119 00:06:28,098 --> 00:06:31,351 பிறகு வீட்டிற்குச் சென்று, என் புதிய வளர்ப்பு நாய்க்குட்டியுடன் விளையாடுவேன். 120 00:06:33,311 --> 00:06:35,105 நாய்க்குட்டியை வளர்க்கிறாயா? 121 00:06:35,188 --> 00:06:37,524 அது உன்னதமான பணி. 122 00:06:38,191 --> 00:06:40,694 ஆம். எனக்கும் என் அக்காவிற்கும் மிகவும் பிடிக்கும். 123 00:06:41,194 --> 00:06:42,737 இதைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 124 00:06:43,863 --> 00:06:50,453 ஒருமுறை 400 ஆண்டுகள் பழமையான கருவேல மரத்தை வெட்டாமல் இருக்க 125 00:06:50,537 --> 00:06:52,956 அதை மூன்று நாட்களுக்கு சங்கிலியால் கட்டி கொண்டேன். 126 00:06:55,333 --> 00:06:57,586 இளம்பெண் 400 ஆண்டுகள் பழமையான கருவேல மரத்தை காப்ற்றியுள்ளார் 127 00:06:57,669 --> 00:07:00,547 -இது அருமையான விஷயம். -அப்படித்தான் நினைக்கிறேன். 128 00:07:09,264 --> 00:07:11,766 சரி, ஸ்னோபால். தயாரா? கயிறை கொண்டு வா. 129 00:07:16,897 --> 00:07:18,982 புரிகிறது. உன் பொம்மையைத்தான் எடுக்க விரும்புகிறாய். 130 00:07:22,152 --> 00:07:25,447 ஹேய். உன் கிராண்ட் பட்டி திட்டம் எப்படி போனது? 131 00:07:26,114 --> 00:07:29,910 அவர் பரவாயில்லை. அடுத்த முறை கண்டிப்பாக மாங்கா காமிக்குகளை கொண்டு வருவேன். 132 00:07:30,952 --> 00:07:32,871 முதல் குடும்பத்திற்கு ஸ்னோபாலை பிடித்திருந்ததா? 133 00:07:33,622 --> 00:07:37,125 முதலில் அவர்களுக்கு பிடித்திருந்தது, ஆனால் இதற்கு அவர்களை பிடிக்கவில்லை. 134 00:07:37,208 --> 00:07:39,377 குறிப்பாக அவர்கள் இதை தூக்கும் போது. 135 00:07:41,755 --> 00:07:43,965 சரி, ஸ்னோபால், இதோ உன் இரண்டாவது வாய்ப்பு. 136 00:07:44,049 --> 00:07:46,301 உன் நன்னடத்தையை கடைபிடிக்க வேண்டிய நேரம் இது. 137 00:07:47,844 --> 00:07:49,221 ஹேய், ஸ்னோபால், நிறுத்து. 138 00:07:56,102 --> 00:07:59,940 சரி. வா, ஸ்னோபால். உனக்கு விளையாட வேண்டுமா? 139 00:08:01,274 --> 00:08:03,693 இது நட்பாக பழக கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்ளும். 140 00:08:04,194 --> 00:08:06,529 பரவாயில்லை. அவசரமில்லை. 141 00:08:08,823 --> 00:08:10,867 இது சோர்வாக இருக்கிறது. 142 00:08:12,577 --> 00:08:13,787 இங்கே வா. 143 00:08:18,750 --> 00:08:21,294 அது இப்போது தூக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். 144 00:08:22,295 --> 00:08:23,964 கவலை வேண்டாம். 145 00:08:24,047 --> 00:08:27,384 உன்னை வளர்க்கப் போகிறோம், ஸ்னோபால். பரவாயில்லையா? 146 00:08:31,972 --> 00:08:33,472 அதையும் விரும்பவில்லை. 147 00:08:47,320 --> 00:08:48,905 நீங்கள் ஏன் ஒரு வகுப்பு செல்லப்பிராணியைக் வைத்துக்கொள்ளக்கூடாது 148 00:08:50,699 --> 00:08:53,952 -ஹேய், மரியா, நீ அழைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. -லிஸ்ஸி, இதைப் பார். 149 00:08:56,288 --> 00:08:58,748 நான் எட்டிக்கு ஒரு கதகதப்பான பாறை, மறைந்துகொள்ள மரக்கட்டை, 150 00:08:58,832 --> 00:09:00,792 சாப்பிட ஏராளமான புதிய தாவரங்களை வைத்திருக்கிறேன். 151 00:09:00,875 --> 00:09:02,544 சரி. நல்லது. 152 00:09:02,627 --> 00:09:05,088 நான் ஆய்வு செய்து வருகிறேன், அதுபற்றி நேர்மையாகவே சொல்கிறேன். 153 00:09:05,171 --> 00:09:07,841 வகுப்பு செல்லப்பிராணி திட்டம் அப்படியொன்றும் நல்ல யோசனையாக படவில்லை. 154 00:09:08,675 --> 00:09:11,052 நிஜமாகவா? அதுவொரு நல்ல திட்டம் என்று நினைக்கிறேன் 155 00:09:11,136 --> 00:09:14,806 நீ எட்டி அல்லது ஏதேனும் விலங்கின் நலனைக் கருத்தில் கொண்டால், 156 00:09:14,890 --> 00:09:16,474 அது ஒரு நல்ல திட்டம் கிடையாது. 157 00:09:16,558 --> 00:09:20,729 நான் எட்டியின் நலனை கருத்தில் கொள்கிறேன், அதோடு அதை மிகவும் கவனமாக பராமரிக்கிறேன். 158 00:09:21,605 --> 00:09:23,440 நான் சொல்வது அதுவல்ல. 159 00:09:23,523 --> 00:09:25,275 பிறகு நீ என்ன சொல்கிறாய்? 160 00:09:26,401 --> 00:09:30,614 எட்டிக்கு நிலையான கவனிப்பு தேவை, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அதை மாற்றக்கூடாது. 161 00:09:30,697 --> 00:09:34,242 வகுப்பு செல்லப்பிராணி திட்டத்தை நிறுத்தும்படி திரு. கிரிஃபினிடம் கேட்கப் போகிறேன். 162 00:09:34,326 --> 00:09:37,662 நீ முதலில் என்னிடம் பேசாமல் திரு. கிரிஃபினிடம் போகிறாய் என்பதை நம்பமுடியவில்லை. 163 00:09:37,746 --> 00:09:39,080 அதைத்தானே இப்போது செய்கிறோம். 164 00:09:39,164 --> 00:09:43,460 இல்லை, நாம் விவாதிக்கவில்லை. நீ ஏற்கனவே எடுத்த முடிவை என்னிடம் சொல்கிறாய் அவ்வளவுதான். 165 00:09:43,543 --> 00:09:45,295 நீ விவாத டி-ஷர்ட்களில் செய்ததைப் போல. 166 00:09:46,129 --> 00:09:47,964 நீ இன்னும் அதற்காக கோபமாக இருக்கிறாயா? 167 00:09:48,048 --> 00:09:51,301 இல்லை. உன் மீது கோபமாக இருக்கிறேன், ஏனென்றால் நாம் நல்ல நண்பர்களாக இருந்திருக்க வேண்டும், 168 00:09:51,384 --> 00:09:53,220 ஆனால் நான் நினைப்பதைப் பற்றி நீ கவலைப்படுவதே இல்லை. 169 00:09:53,303 --> 00:09:55,096 அது உண்மையில்லை, மரியா. 170 00:09:55,180 --> 00:09:57,307 எட்டிக்கு எது சரியோ அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். 171 00:09:57,390 --> 00:09:58,725 நான் செய்யவில்லையா? 172 00:10:00,310 --> 00:10:01,770 நான் அதற்கு உணவளிக்க வேண்டும். 173 00:10:16,952 --> 00:10:18,328 வெளியே போகத் தயாரா? 174 00:10:20,538 --> 00:10:21,623 போக வேண்டும் என்றால். 175 00:10:22,874 --> 00:10:25,085 உன் கிராண்ட் பட்டியைப் பார்க்க ஆவலாக இருக்கிறாயா? 176 00:10:25,168 --> 00:10:28,838 அவர் உட்கார்ந்து கொண்டு படிக்கிறார் அவ்வளவுதான். ஆனால் அது பரவாயில்லை. 177 00:10:28,922 --> 00:10:30,257 பரவாயில்லையா? 178 00:10:30,340 --> 00:10:33,552 அது பெரிய விஷயமில்லை. நான் அங்கிருப்பதை அவர் விரும்பவில்லை. 179 00:10:34,886 --> 00:10:36,888 சார்ல்ஸ், நீ வருவதை அவர் விரும்பவில்லை என்றால், 180 00:10:36,972 --> 00:10:38,557 நமக்கு கண்டிப்பாக தகவல் வந்திருக்கும். 181 00:10:38,640 --> 00:10:41,560 தெரியவில்லை. எங்களுக்குள் பொதுவானவை எதுவும் இல்லை. 182 00:10:41,643 --> 00:10:43,436 எல்லோருக்கும் ஏதாவது பொதுவானது இருக்கும், 183 00:10:43,520 --> 00:10:47,107 வயது அதிகமோ குறைவோ, எப்படி இருக்கிறாய் அல்லது எங்கிருந்து வருகிறாய் என்பது முக்கியமில்லை. 184 00:10:47,190 --> 00:10:50,193 சில நேரங்களில் அதைக் கண்டுபிடிக்க சில நிமிடங்கள் தான் ஆகும். 185 00:10:50,819 --> 00:10:52,279 உன்னைப் பற்றி தெரியும், சார்ல்ஸ். 186 00:10:52,362 --> 00:10:54,990 நீ அந்த தொடர்பை தேட விரும்பினால், உன்னால் முடியும். 187 00:10:55,073 --> 00:10:57,492 உனக்கு விருப்பமில்லை என்றால், விட்டுவிடு. 188 00:10:58,451 --> 00:10:59,828 உன்னை காரில் பார்க்கிறேன். 189 00:11:08,336 --> 00:11:09,880 ஹாய், ரோஸ். 190 00:11:09,963 --> 00:11:11,423 சார்லி. 191 00:11:13,884 --> 00:11:15,886 நல்லது. மதிய உணவு கொண்டு வந்திருக்கிறாய். 192 00:11:15,969 --> 00:11:17,387 கபாப்களைத் தவிர எதுவும். 193 00:11:17,470 --> 00:11:20,265 ஒவ்வொரு நாளும் இங்கே ஏதாவதொரு கபாப்கள் இருக்கும். 194 00:11:20,849 --> 00:11:23,393 இது உணவல்ல. இது ஸ்னோபால். 195 00:11:23,935 --> 00:11:25,812 நீங்கள் சந்திக்க வேண்டும் என நான் விரும்பிய வளர்ப்பு நாய் இதுதான். 196 00:11:26,396 --> 00:11:30,525 சார்ல்ஸ், இன்னொரு விருந்தாளிக்கு நான் அனுமதி கொடுக்கவில்லை. 197 00:11:30,609 --> 00:11:32,986 நீ இங்கு இருப்பதையே நான் ஏற்கவில்லை. 198 00:11:33,069 --> 00:11:35,196 நீங்கள் இதை சந்திக்க விரும்பலாம் என்று நினைத்தேன். 199 00:11:35,280 --> 00:11:36,615 மன்னித்துவிடு. 200 00:11:37,324 --> 00:11:39,284 எனக்கு நாய்களைப் பிடிக்காது. 201 00:11:41,453 --> 00:11:44,497 கவலை வேண்டாம். இது இங்கிருப்பதை நீங்கள் கவனிக்கக் கூட மாட்டீர்கள். 202 00:11:47,000 --> 00:11:49,044 பார்த்தீர்களா? அது தன் வேலையைப் பார்க்கிறது. 203 00:11:49,127 --> 00:11:50,295 சரியாக. 204 00:11:54,341 --> 00:11:56,760 நாங்கள் இதை பூங்காவில் பார்த்தோம். 205 00:11:56,843 --> 00:11:59,804 இது புதரில் தனக்குத்தானே ஒரு இருப்பிடத்தை அமைத்திருந்தது. 206 00:12:00,388 --> 00:12:01,932 அது பெரிய விஷயம் என்று நினைக்கிறாய், இல்லையா? 207 00:12:02,515 --> 00:12:07,270 அலாஸ்காவின் டெனாலியில் 13 மாதங்கள் குளிரில் கழித்தேன், 208 00:12:07,354 --> 00:12:11,608 அதாபாஸ்கன் பழங்குடியினரின் நில உரிமைகளைப் பாதுகாக்க அவர்களுடன் அணிவகுத்துச் சென்றேன். 209 00:12:12,359 --> 00:12:13,526 அற்புதம். 210 00:12:14,444 --> 00:12:16,821 "அற்புதம்" தான். உனக்குத் தெரியுமா? 211 00:12:20,492 --> 00:12:24,204 நன்றி கூறும் விதமாக அவர்கள் எனக்காக இதை செய்து கொண்டுத்தார்கள். 212 00:12:30,877 --> 00:12:32,212 நீ என்ன நினைக்கிறாய்? 213 00:12:33,922 --> 00:12:37,467 இது அருமை இல்லையா? அதை கவனமாக கையாளவேண்டும், சரியா? 214 00:12:44,641 --> 00:12:47,310 அது அந்த பந்தை ஜெர்ரியின் வாக்கரில் இருந்து எடுத்து வந்திருக்கிறது. 215 00:12:50,146 --> 00:12:51,731 ஸ்னோபால், இல்லை. 216 00:12:52,357 --> 00:12:54,192 இல்லை, பரவாயில்லை. 217 00:12:54,276 --> 00:12:56,778 அவர் ஒரு அலமாரி நிறைய பந்துகளை வைத்திருக்கிறார். 218 00:13:07,372 --> 00:13:09,082 ஓ, சிறுவனே. 219 00:13:11,293 --> 00:13:13,628 நான் ரொம்ப நாள் கழித்து இப்போதுதான் அதிகம் சிரிக்கிறேன். 220 00:13:17,090 --> 00:13:19,593 எப்படியிருந்தாலும், அது என்ன வகையான நாய்? 221 00:13:19,676 --> 00:13:21,720 அது ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வெஸ்ட் ஹைலேண்ட் டெரியர். 222 00:13:23,388 --> 00:13:24,848 அப்படியா? 223 00:13:25,807 --> 00:13:30,562 சரி, நான் அதை உனக்காக திருப்பி உதைக்க நீ அந்த பந்தை இன்னும் கொஞ்ச 224 00:13:30,645 --> 00:13:32,522 பக்கமாக கொண்டு வருவது எப்படி? 225 00:13:36,735 --> 00:13:39,070 அது பிடிவாதமானது, இல்லையா? 226 00:13:39,154 --> 00:13:40,280 நிச்சயமாக. 227 00:13:41,656 --> 00:13:43,742 எனக்குத் தெரிந்த ஒருவரை நினைவூட்டுகிறது. 228 00:13:43,825 --> 00:13:45,076 யாரை? 229 00:13:57,088 --> 00:13:58,465 இடைவேளைக்குத் தயாரா, செல்லம்? 230 00:14:00,508 --> 00:14:02,677 நீண்ட நேரமாக உன் வீட்டுப்பாடத்தை எழுதி வருகிறாய். 231 00:14:03,929 --> 00:14:04,930 பரவாயில்லை. 232 00:14:05,013 --> 00:14:07,557 அதோடு இது வீட்டுப்பாடம் அல்ல. நன்மை தீமைகளின் பட்டியல். 233 00:14:08,141 --> 00:14:10,685 -எதைப்பற்றிய நன்மை தீமைகள்? -வகுப்பு செல்லப்பிராணிகள். 234 00:14:12,229 --> 00:14:13,730 முடிந்தவரை நியாயமாக இருக்க முயற்சிக்கிறேன், 235 00:14:13,813 --> 00:14:16,983 ஆனால் நான் நன்மைகளை பட்டியலிடுவது மிகவும் கடினமாக உள்ளது, 236 00:14:17,067 --> 00:14:19,861 நான் இன்னும் என் உற்ற தோழியுடன் பேசுகிறேன் என்பதைத் தவிர. 237 00:14:20,654 --> 00:14:22,906 மரியாவின் கருத்துக்களை நீ கேட்டால் 238 00:14:22,989 --> 00:14:25,450 இன்னும் சிலவற்றை பட்டியலிட முடியும் என்பதில் ஆச்சரியமில்லை. 239 00:14:25,533 --> 00:14:26,534 ஆனால் அவள் சொல்வது தவறு. 240 00:14:26,618 --> 00:14:30,038 நீ அவளுடன் உடன்பட வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் கேட்பது தவறில்லையே. 241 00:14:31,581 --> 00:14:35,585 அம்மா, இதை ஏன் துவைத்தீர்கள்? இது ஸ்னோபாலுக்கு பிடித்தது. நினைவிருக்கிறதா? 242 00:14:35,669 --> 00:14:38,505 சொல்ல வருத்தமாக இருக்கிறது, ஆனால் ஸ்னோபால் அடுத்ததை தேர்வு செய்துவிட்டது. 243 00:14:48,306 --> 00:14:49,474 வா, ஸ்னோபால். 244 00:14:55,981 --> 00:14:57,274 ஹேய், திரும்பி வந்திருக்கிறாய். 245 00:14:58,775 --> 00:15:01,236 நீ வாரத்திற்கு இரண்டு முறை இங்கு வந்தால் போதும் என்பது உனக்கே தெரியும். 246 00:15:01,861 --> 00:15:04,781 இதைத் திருப்பித் தர விரும்பினேன். ஸ்னோபால் இதை எடுத்துவந்துவிட்டது. 247 00:15:06,283 --> 00:15:07,659 இது எங்கே போனது என்று யோசித்தேன். 248 00:15:07,742 --> 00:15:10,245 நாங்கள் சென்றதிலிருந்து அது இதன் மேல்தான் தூங்கியது. 249 00:15:10,328 --> 00:15:11,705 நிஜமாகவா? 250 00:15:11,788 --> 00:15:13,707 ஆம். அதாவது அதற்கு உங்களை பிடித்துவிட்டது. 251 00:15:14,291 --> 00:15:15,292 ரொம்பவே. 252 00:15:17,460 --> 00:15:19,796 நான் அதை உனக்கு கொடுக்க விரும்புகிறேன், செல்லம், ஆனால்... 253 00:15:19,880 --> 00:15:23,258 இல்லை, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ஸ்னோபாலை வைத்துக்கொள்ள வேண்டும். 254 00:15:23,341 --> 00:15:26,261 நானா? நாயை வளர்ப்பதா? 255 00:15:26,344 --> 00:15:28,179 இல்லை. என்னால் முடியாது. 256 00:15:28,263 --> 00:15:29,264 ஆம், உங்களால் முடியும். 257 00:15:29,347 --> 00:15:31,600 ஸ்னோபால் தான் நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிதான நாய்க்குட்டி. 258 00:15:31,683 --> 00:15:33,518 நீங்கள் அரிதாகவே எதையும் செய்ய வேண்டியிருக்கும். 259 00:15:33,602 --> 00:15:35,645 இது நிஜமாகவே சுதந்திரமானது. உங்களைப் போலவே. 260 00:15:36,354 --> 00:15:37,856 சரி, சார்லி, நான்... 261 00:15:37,939 --> 00:15:40,400 நீங்கள் மறுத்தாலும் இதை உங்களுக்கு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். 262 00:15:40,483 --> 00:15:41,818 நிச்சயமாக எனக்கு அதை பிடித்திருக்கிறது. 263 00:15:41,902 --> 00:15:43,403 எனக்கு அதை மிகவும் பிடித்திருக்கிறது. 264 00:15:44,112 --> 00:15:45,864 பிறகு ஏன் இதை வளர்க்க மறுக்கிறீர்கள்? 265 00:15:47,908 --> 00:15:50,452 இங்கு நாய்களை அனுமதிப்பதில்லை. 266 00:16:10,472 --> 00:16:13,141 நிஜமாகவே வகுப்பு செல்லப்பிராணிகளின் நன்மை தீமைகள் பட்டியலை உருவாக்கினாயா? 267 00:16:13,225 --> 00:16:15,227 நிச்சயமாக நான் செய்தேன். நீயும் செய்திருக்கிறாய். 268 00:16:16,061 --> 00:16:17,062 வெளிப்படையாக. 269 00:16:17,145 --> 00:16:19,981 சரி, விவாதிப்பவர்களே. விவாதத்தை தொடங்குவோம். 270 00:16:20,065 --> 00:16:23,568 நம் இரு இணை கேப்டன்களான லிஸ்ஸி மற்றும் மரியா தொடங்குவார்கள். 271 00:16:23,652 --> 00:16:24,861 தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களா? 272 00:16:26,029 --> 00:16:27,364 வகுப்பு... 273 00:16:27,447 --> 00:16:29,157 செல்லப்பிராணிகளா? 274 00:16:29,241 --> 00:16:32,077 அதாவது, எங்களிடம் உண்மையான "செல்லப்பிராணிகள் கூடாது" என்ற விதி இல்லை. 275 00:16:32,160 --> 00:16:35,372 -பொறு... என் பேனா எங்கே போனது? -அப்போது ரோஸ் ஸ்னோபாலை வளர்க்கலாம். 276 00:16:35,997 --> 00:16:38,875 -அது நல்ல யோசனையாக தெரியவில்லை. -ஆனால் நீங்கள் தானே சொன்னீர்கள்... 277 00:16:38,959 --> 00:16:40,669 எனக்குத் தெரியும். ஆனால்… 278 00:16:42,087 --> 00:16:46,007 ரோஸுக்கு நாயை தனியாகப் பராமரிக்கும் சக்தி இல்லை என்று நான் கவலைப்படுகிறேன். 279 00:16:46,091 --> 00:16:48,260 ஆம், ஆனால் ஸ்னோபால் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும். 280 00:16:48,343 --> 00:16:51,930 அதனால்தான் அது அவருக்குப் பொருத்தமானது. அது இங்கே இருப்பதே உங்களுக்குத் தெரியாது. 281 00:16:52,013 --> 00:16:55,892 சார்ல்ஸ், நீ ரோஸை கவனித்து கொண்டிருப்பதை நான் பாராட்டுகிறேன். 282 00:16:55,976 --> 00:16:57,018 நன்றி. 283 00:16:57,102 --> 00:17:00,480 என்னை நம்பு, எங்கள் குடியிருப்பாளர்களின் நலன்கள்தான் எனது முதன்மையான முன்னுரிமை. 284 00:17:01,147 --> 00:17:03,275 ஆனால் இருக்கும் வேலைக்கே போதுமான பணியாளர்கள் இல்லை, 285 00:17:03,358 --> 00:17:06,945 அதோடு ஒரு நாய் கூடுதல் பணிச்சுமையாக ஆகிவிடும் என்று நான் பயப்படுகிறேன். 286 00:17:16,371 --> 00:17:19,373 நமது முதல் தலைப்பு வகுப்பு செல்லப்பிராணிகள். 287 00:17:19,457 --> 00:17:22,043 லிஸ்ஸியும் மரியாவும் நேர் எதிர் கருத்துக்களை வைப்பார்கள். 288 00:17:22,127 --> 00:17:24,629 மரியா சார்பு கருத்துக்களை, லிஸ்ஸி எதிர் கருத்துக்களை. 289 00:17:25,255 --> 00:17:27,340 -அதிர்ஷ்டம் உண்டாகட்டும். -அது தேவையில்லை. 290 00:17:27,424 --> 00:17:30,427 சார்பு கருத்துக்கள் தொடங்குகிறது. மரியா? 291 00:17:30,510 --> 00:17:31,678 நன்றி, திருமதி. டன். 292 00:17:31,761 --> 00:17:33,263 சக விவாத மன்ற உறுப்பினர்களே, 293 00:17:33,346 --> 00:17:35,724 ஒரு வகுப்பு செல்லப்பிராணி எந்த வகுப்பறைக்கும் ஒரு கூடுதல் சிறப்பாகும், 294 00:17:35,807 --> 00:17:37,934 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயனடைகிறார்கள். 295 00:17:38,018 --> 00:17:39,519 -அது... -செல்லப்பிராணிக்கு எப்படி, மரியா? 296 00:17:39,603 --> 00:17:40,937 அது அவற்றுக்கு எவ்வாறு பயனளிக்கும்? 297 00:17:41,021 --> 00:17:42,606 பதில்? அது பயனளிக்காது. 298 00:17:42,689 --> 00:17:45,984 லிஸ்ஸி, மறுப்பு தெரிவிக்க நீ காத்திருக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியும். 299 00:17:47,027 --> 00:17:49,195 ஆம், நீ சொல்வது சரிதான். எனக்குத் தெரியும். 300 00:17:49,696 --> 00:17:51,489 அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் பொருட்படுத்தவில்லை. 301 00:17:51,573 --> 00:17:54,826 அவள் எப்பொழுதும் போல ஏற்கனவே ஒரு முடிவை எடுத்துவிட்டாள். 302 00:17:55,327 --> 00:17:57,495 எப்போதுமா, மரியா? நிஜமாகவா? 303 00:17:57,579 --> 00:17:58,580 -நிச்சயமாக. -சரி. 304 00:18:01,625 --> 00:18:05,128 இங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் தொடர விரும்பினால், 305 00:18:05,212 --> 00:18:08,089 நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். 306 00:18:08,673 --> 00:18:11,968 நீங்கள் இணை கேப்டன்கள். தலைவர்கள். 307 00:18:12,761 --> 00:18:14,304 தயவுசெய்து அப்படி நடந்து கொள்ளலாமா? 308 00:18:16,681 --> 00:18:20,560 நாம் உற்ற தோழிகள். குறைந்தபட்சம் இன்னும் அப்படித்தான் என்று நம்புகிறேன். 309 00:18:21,394 --> 00:18:23,271 மரியா, நீ தொடர விரும்புகிறாயா? 310 00:18:24,773 --> 00:18:28,443 நான் சொன்னது போல், குழந்தைகளுக்கு பொறுப்பு மற்றும் பச்சாதாபத்தை கற்பிக்கும் 311 00:18:28,526 --> 00:18:31,404 கல்விக் கருவியாக ஆசிரியர்களுக்கு வகுப்பு செல்லப்பிராணி இருக்கும். 312 00:18:31,488 --> 00:18:34,407 சிறிய விலங்குகளை கவனித்துக்கொள்வது பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற பெரிய விலங்குகளை 313 00:18:34,491 --> 00:18:37,410 கவனித்துக்கொள்வதற்கு குழந்தைகள் மிகவும் தயாராக இருக்க வழிவகுக்கும். 314 00:18:38,370 --> 00:18:40,997 வீட்டில் செல்லப்பிராணிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படாத குழந்தைகளுக்கு, 315 00:18:41,081 --> 00:18:44,000 அவர்களால் முடியாத ஒன்றை இதன் மூலம் அவர்கள் அனுபவிக்கலாம். 316 00:18:44,668 --> 00:18:47,921 சில குழந்தைகள் வகுப்பு செல்லப்பிராணிகளை நன்றாக கவனித்துக் கொள்ளும்போது, 317 00:18:48,547 --> 00:18:51,299 இரக்கம் குறித்த விலைமதிப்பற்ற பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள். 318 00:18:54,678 --> 00:18:58,306 நல்ல நோக்கத்துடன் இருந்தாலும், இது விலங்குகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். 319 00:18:58,390 --> 00:19:01,643 எல்லா அளவிலான விலங்குகளுக்கும் நம்பிக்கையை ஏற்பட நேரம் தேவை, 320 00:19:01,726 --> 00:19:05,355 அவை வீடு வீடாக மாறிக்கொண்டே இருந்தால் அவற்றால் அதைச் செய்ய முடியாது. 321 00:19:11,528 --> 00:19:14,864 ஆனால் நான் நினைக்காத சில நல்ல விஷயங்களை மரியா சொன்னாள். 322 00:19:14,948 --> 00:19:19,035 மற்றொரு உயிரினத்தை கவனித்துக்கொள்வது தான் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம். 323 00:19:19,119 --> 00:19:20,120 அவற்றுக்கும்… 324 00:19:21,496 --> 00:19:22,539 நமக்கும். 325 00:19:23,331 --> 00:19:26,793 ஆனால் அது கேள்விக்குரிய உயிரினத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றால் இல்லை. 326 00:19:29,254 --> 00:19:31,673 மன்னிக்கவும், இருவரும் பக்கம் மாறிவிட்டீர்களா? 327 00:19:34,092 --> 00:19:37,554 இல்லை, உண்மையில், நாங்கள் ஒரே பக்கத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். 328 00:19:44,019 --> 00:19:45,395 இப்போது என்னால் முடிவெடுக்க முடியவில்லை. 329 00:19:46,104 --> 00:19:48,231 வகுப்பு செல்லப்பிராணி திட்டத்தில் நிறைய நல்லது உள்ளது, 330 00:19:48,315 --> 00:19:51,902 ஆனால் விலங்கின் நல்வாழ்வுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். 331 00:19:55,363 --> 00:19:57,782 திரு. கிரிஃபின், வகுப்பு செல்லப்பிராணியை வகுப்பு செடியாக... 332 00:19:57,866 --> 00:19:59,159 மாற்றினால் என்ன? 333 00:19:59,993 --> 00:20:03,246 இவற்றுக்கும் அன்பான பராமரிப்பு தேவை, அது பொறுப்பைக் கற்பிக்கும். 334 00:20:03,330 --> 00:20:06,750 அதோடு வீடு வீடாக மாறுவதைப் பற்றி ஒரு செடி வருத்தப்படாது. 335 00:20:07,542 --> 00:20:10,045 உண்மையில் அந்த யோசனை பிடித்திருக்கிறது. 336 00:20:11,838 --> 00:20:15,717 இதோ. தயவுசெய்து இதை என்னை விட நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். என்ன? 337 00:20:16,343 --> 00:20:17,969 கவலை வேண்டாம். இது நல்ல கைகளில் இருக்கிறது. 338 00:20:19,512 --> 00:20:23,892 -இப்போது, எட்டியை என்ன செய்யப் போகிறோம்? -மரியா அதை வைத்துக்கொள்ளட்டும். 339 00:20:25,477 --> 00:20:28,271 நான் அதை விரும்புகிறேன், என் அப்பாவும் அதை விரும்புவார். 340 00:20:28,772 --> 00:20:30,815 அவரும் எட்டியும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். 341 00:20:31,441 --> 00:20:32,525 சரியானதாக தெரிகிறது. 342 00:20:33,193 --> 00:20:34,402 நன்றி. 343 00:20:35,070 --> 00:20:37,447 இனிமேல், எப்பொழுதும் நாம் ஏதாவது ஒன்றில் உடன்படவில்லை என்றாலும், 344 00:20:37,530 --> 00:20:39,449 நாம் எவ்வளவு சரி என்று நினைத்தாலும் சரி... 345 00:20:39,532 --> 00:20:41,618 எப்போதும் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கேட்போம். 346 00:20:42,244 --> 00:20:44,955 அதோடு, சட்டைகள் சிவப்பு நிறத்தில் நன்றாகவே இருக்கும். 347 00:20:45,538 --> 00:20:46,539 நிஜமாகவா? 348 00:20:47,540 --> 00:20:50,335 தெரியவில்லை. மஞ்சளும் எனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது. 349 00:20:54,631 --> 00:20:56,758 சார்ல்ஸ், நீ பார்த்தாயா... 350 00:20:59,302 --> 00:21:00,387 யாரையாவது? 351 00:21:00,971 --> 00:21:01,972 என்னைப் பின்தொடருங்கள். 352 00:21:10,772 --> 00:21:12,399 இதெல்லாம் என்ன? 353 00:21:12,482 --> 00:21:14,609 அது இங்கே இருக்கலாம் என்பதற்கு சான்று. 354 00:21:16,194 --> 00:21:20,532 ஹேய், லாயிட். இங்கு எப்போதும் ஒரு நாய் இருந்ததா? 355 00:21:20,615 --> 00:21:23,577 தெரிந்திருந்தால், நான் பல வருடங்களுக்கு முன்பே வெளியில் வந்திருப்பேன். 356 00:21:23,660 --> 00:21:26,413 லாயிட், அதை இரகசியமாக வைத்திருந்ததற்கு நீ வெட்கப்பட வேண்டும். 357 00:21:29,124 --> 00:21:32,043 ஹேய், லாயிட். நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? 358 00:21:32,836 --> 00:21:34,045 அதாவது, ஏதாவது? 359 00:21:34,129 --> 00:21:36,548 இல்லை, ஜெர்ரி, பரவாயில்லை. ஆனால் கேட்டதற்கு நன்றி. 360 00:21:37,215 --> 00:21:38,341 எப்போது வேண்டுமானாலும், நண்பரே. 361 00:21:38,425 --> 00:21:40,093 அதோடு... 362 00:21:40,176 --> 00:21:41,428 நீ இதை கீழே போட்டுவிட்டாய். 363 00:21:42,012 --> 00:21:46,391 ஸ்னோபால் சமூகத்திற்கு ஒரு அற்புதமான ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 364 00:21:46,474 --> 00:21:47,726 எனக்குப் புரிகிறது, ஜெர்ரி. 365 00:21:51,730 --> 00:21:53,690 எனவே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 366 00:21:53,773 --> 00:21:56,484 இங்குள்ள ஸ்னோபாலோடு எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 367 00:21:57,485 --> 00:21:59,070 ஹேய், லாயிட். 368 00:21:59,863 --> 00:22:03,491 நீ ஏன் இங்கு வந்து ஸ்னோபாலுக்காக பந்து வீசக்கூடாது? 369 00:22:04,075 --> 00:22:07,329 நான் செய்வேன், ஆனால் நான் எனது உடல் சிகிச்சையை செய்கிறேன், 370 00:22:07,412 --> 00:22:09,539 இது எனக்குப் பிடிக்கும் என்று உனக்கே தெரியும். 371 00:22:10,790 --> 00:22:11,791 எனவே? 372 00:22:13,710 --> 00:22:14,961 வருகிறேன், ரோஸ். 373 00:22:15,837 --> 00:22:18,965 நல்லது, மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாய்க்குட்டியை பார். 374 00:22:36,733 --> 00:22:39,027 -நிச்சயமாகவா? -ஆம். 375 00:22:39,694 --> 00:22:42,822 ஆம், இந்த யுலிஸஸ் எஸ். செடி பிழைக்காது என்று நினைக்கவில்லை. 376 00:22:43,323 --> 00:22:44,866 அந்த மனோபாவத்துடன் அது பிழைக்காது. 377 00:22:44,950 --> 00:22:48,453 நிறைய குட்டிகளை பராமரித்திருக்கிறேன். இதை சமாளிக்க முடியும் என நினைக்கிறீர்கள். 378 00:22:48,536 --> 00:22:50,038 ஒருவேளை அதுக்கு சூரிய ஒளி தேவைப்படலாம். 379 00:22:50,664 --> 00:22:52,624 -நான் இதை முன்னால் வைக்கிறேன். -நன்றி, சார்ல்ஸ். 380 00:22:54,501 --> 00:22:57,087 ஹேய், சார்லி. நானே உள்ளே வந்துவிட்டேன். 381 00:22:57,837 --> 00:22:59,005 தெரிகிறது. 382 00:23:00,215 --> 00:23:01,633 இது என் கிராண்ட் பட்டி, ரோஸ். 383 00:23:01,716 --> 00:23:03,134 -ஹாய். -ஹாய். 384 00:23:03,218 --> 00:23:04,553 ஸ்னோபாலின் புதிய உரிமையாளர். 385 00:23:04,636 --> 00:23:07,722 உரிமையாளரை என்பதை விட நண்பரைப் போன்றவர். 386 00:23:14,729 --> 00:23:16,898 ஹாய், இதைப் பாருங்கள். 387 00:23:16,982 --> 00:23:19,568 இதை உங்கள் இடத்தில் இறக்கிவிடத் தயாராகிவிட்டோம். 388 00:23:19,651 --> 00:23:23,863 அதற்குப் பதிலாக நல்ல உடற்பயிற்சியாக இருக்கும் என என்னை லாயிட் 389 00:23:23,947 --> 00:23:25,407 இங்கு நடந்துவர பரிந்துரைத்தார். 390 00:23:25,490 --> 00:23:27,492 அதோடு நான் அவருடன் விவாதம் செய்யவில்லை. 391 00:23:28,243 --> 00:23:30,495 அவருக்கு அளவாகத்தான் தொல்லை கொடுப்போம். 392 00:23:31,121 --> 00:23:33,248 சரி, ஸ்னோபால். செல்வதற்கு தயார்? 393 00:23:37,627 --> 00:23:39,629 அதுதான் ஸ்னோபால் "சரி" என்று சொல்லும் முறை. 394 00:23:39,713 --> 00:23:41,256 அதனால்தான் எனக்கு அதை பிடித்திருக்கிறது. 395 00:23:42,048 --> 00:23:45,594 ஹேய், ரோஸ். மூத்த நண்பர்கள் திட்டம் முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும், 396 00:23:45,677 --> 00:23:48,263 ஆனாலும் நான் உங்களையும் ஸ்னோபாலையும் பார்க்க வரலாமா? 397 00:23:48,346 --> 00:23:50,849 செல்லம், நிச்சயமாக. 398 00:23:50,932 --> 00:23:53,810 -நீ மதிய உணவு கொண்டு வந்தால்... -கபாப் கூடாது. எனக்குத் தெரியும். 399 00:23:53,894 --> 00:23:55,312 அது சரிதான். 400 00:23:55,395 --> 00:23:58,481 சரி, ஸ்னோபால். நான் உனக்காக வருகிறேன். 401 00:24:16,708 --> 00:24:18,710 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 402 00:25:34,703 --> 00:25:36,705 வசனத் தமிழாக்கம் அருண்குமார்