1 00:00:06,049 --> 00:00:10,178 தனக்குப் பிடித்த கோட்டின் பாக்கெட்டுகளில் 2 00:00:10,262 --> 00:00:12,013 தன்னம்பிக்கையுடன் கைகளை வைத்துக்கொண்டு வெளிப்பட்ட துப்பறிவாளர் பிரானிகன் 3 00:00:12,097 --> 00:00:15,767 மனஉறுதிக்கு புயலின் தாக்குதலால் ஈடு கொடுக்க முடியவில்லை. 4 00:00:15,850 --> 00:00:19,938 "அவர் கடைசி தடயத்தை கண்டுபிடித்துவிட்டார்," என்று டிமான்டே முணுமுணுத்தார். "அது பிரானிகன்." 5 00:00:20,021 --> 00:00:24,276 துப்பறிவாளர் தொண்டையைச் சரிசெய்து, பிறகு சொன்னார், மெல்லிய குரலில்... 6 00:00:25,485 --> 00:00:29,072 விமானி உரிமம் பெற்ற 16வது பெண் அமீலியா ஏர்ஹார்ட் என்பது உங்களுக்குத் தெரியுமா? 7 00:00:29,155 --> 00:00:32,659 -லிஸ்ஸி, நீ என்ன செய்கிறாய்? -ஸ்டெஃப் சொன்ன சுயசரிதையைப் படிக்கிறேன். 8 00:00:32,741 --> 00:00:34,703 ஆனால் நாம் ஒரு மர்ம நாவலை கேட்டுக் கொண்டிருக்கிறோம். 9 00:00:34,786 --> 00:00:36,955 நாம் ஆயிரம் முறை கேட்ட மர்மம்தான். 10 00:00:37,038 --> 00:00:39,541 தவிர, நாம் இங்கே வந்துவிட்டோம். நாம் உள்ளே போக வேண்டும். 11 00:00:39,624 --> 00:00:41,418 நீ ஏற்கனவே ஸ்டெஃப் போல மாறிவிட்டாய். 12 00:00:41,501 --> 00:00:43,879 லிண்டா அத்தை வீட்டிற்கு போகும்போதெல்லாம் இவள் வித்தியாசமாக நடந்துகொள்கிறாள். 13 00:00:43,962 --> 00:00:45,547 -நான் அப்படி இல்லை. -ஆம், நடந்துகொள்கிறாய். 14 00:00:45,630 --> 00:00:47,507 போதும். நான் உங்களிடம் என்ன சொன்னேன்? 15 00:00:47,591 --> 00:00:50,969 லிண்டா அத்தை, ஸ்டெஃப் மற்றும் பெக்கி மன்ஹாட்டனில் இருந்து இப்போதுதான் 16 00:00:51,052 --> 00:00:52,679 "ஹன்டோவருக்கு" குடிபெயர்ந்துள்ளனர். 17 00:00:52,762 --> 00:00:53,889 அது அன்டோவர். 18 00:00:53,972 --> 00:00:55,515 ஸ்டெஃப் போல சொன்னேன். 19 00:00:58,643 --> 00:01:01,146 மீன்பிடி பயணத்தில் நீயும் என்னுடன் சேர்ந்து கொள்ளலாம். 20 00:01:02,147 --> 00:01:05,817 ஐஸ் போன்ற நதியின் இடுப்பளவு தண்ணீரில் நிற்பது இப்போது நல்லதல்ல. 21 00:01:07,110 --> 00:01:10,113 இந்த வார இறுதியில் நம் கவனம் குடும்பம் மீது இருக்க வேண்டும், சண்டையில் அல்ல. 22 00:01:10,864 --> 00:01:12,157 புரிகிறதா? 23 00:01:12,866 --> 00:01:14,075 -புரிகிறது. -ஆம். 24 00:01:15,368 --> 00:01:17,287 ஸ்டெஃப் என்ன திட்டமிட்டிருக்கிறாள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். 25 00:01:17,370 --> 00:01:20,498 கடந்த முறை நியூயார்க்கில், தெருவோர கடையில் ஷிஷ் கபாப்களை வாங்க சென்றோம். 26 00:01:20,582 --> 00:01:22,125 அதோடு ஒரு நாடகத்தைப் பார்த்தோம். 27 00:01:23,168 --> 00:01:25,962 அதைப் பார்த்தாயா? ஒரு நாய் ஓடியது என்று நினைக்கிறேன். 28 00:01:26,046 --> 00:01:28,798 நாம் கிராமத்தில் இருக்கிறோம். அது மானாக இருக்கலாம். 29 00:01:28,882 --> 00:01:31,259 உனக்கு எப்படித் தெரியும்? நீ மானை பார்த்ததே இல்லையே. 30 00:01:31,343 --> 00:01:33,845 -நீயும் தான். -அதனால்? 31 00:01:33,929 --> 00:01:36,514 பெட்டியில் ஒரு கூடுதல் தூண்டில் இருக்கிறது. உன்னிடம் சொல்கிறேன். 32 00:01:39,100 --> 00:01:42,604 "ஃபிளாஷ்" 33 00:01:44,022 --> 00:01:46,149 -வாருங்கள்! ஹேய்! -ஹாய். 34 00:01:48,777 --> 00:01:51,154 -ஆஹா! ஹாய், பால். -ஹேய். 35 00:01:52,197 --> 00:01:53,198 இங்கே வா. 36 00:01:55,116 --> 00:01:58,703 உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. நீ இன்னும் தலைவர் பதவிக்கு நிக்கவில்லையா? 37 00:01:58,787 --> 00:02:01,122 -இறுதி முடிவு எடுக்கவில்லை. -புத்திசாலி. 38 00:02:02,374 --> 00:02:03,833 லிண்டா அத்தை! 39 00:02:03,917 --> 00:02:06,127 நாய் காப்பாளன் வந்துவிட்டான்! 40 00:02:06,962 --> 00:02:10,090 தின்பண்டங்கள் சரக்கறையில் இருக்கின்றன. குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சை சாறு உள்ளது. 41 00:02:10,173 --> 00:02:12,926 அதோடு நாளை காலை, நான் உனக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, 42 00:02:13,009 --> 00:02:15,428 மூன்று எனது பிரபலமான ஆப்பிள் அப்பங்களை செய்து தருகிறேன். 43 00:02:15,512 --> 00:02:16,680 சரி! 44 00:02:16,763 --> 00:02:20,392 சிறந்த பகுதி, அவை கொட்டகையின் ஜன்னலில் குளிர்ச்சியாக இருக்கும். 45 00:02:20,475 --> 00:02:21,685 நான் கிராமத்து வாசி. 46 00:02:21,768 --> 00:02:23,395 விரைவில் கோழிகள் வளர்க்கப் போகிறீர்கள். 47 00:02:23,478 --> 00:02:26,106 கோழிகளைப் பற்றி பேசுகையில், பால், 48 00:02:26,189 --> 00:02:28,817 சதுரங்கத்தில் என்னிடம் தோற்காமல் இருக்க மீன் பிடிக்கப் போகிறாயா? 49 00:02:28,900 --> 00:02:31,444 என் வேலையை இழக்காமல் இருக்க மீன் பிடிக்கப் போகிறேன். 50 00:02:31,528 --> 00:02:35,532 கேப்டன் கார்ட்டர் வருடாந்திர ஃபயர்ஹவுஸ் மீன்பிடி பயணத்தை தீவிரமாக கருதுகிறார். 51 00:02:35,615 --> 00:02:39,119 ஞாயிறன்று பார்க்கிறேன். சந்தோஷமாக இருங்கள். என்னை நினைக்க வேண்டாம். 52 00:02:39,202 --> 00:02:40,704 -லிஸ்ஸி! -சார்ல்ஸ்! 53 00:02:41,329 --> 00:02:43,498 -ஹாய். -நீ கவலைப்பட வேண்டியதில்லை. 54 00:02:43,582 --> 00:02:44,583 ஹேய். 55 00:02:45,917 --> 00:02:47,419 -ஹாய், சிறுமிகளே. -ஹாய், பால் மாமா. 56 00:02:47,502 --> 00:02:48,503 ஹாய், பால் மாமா. 57 00:02:49,337 --> 00:02:51,590 -இப்போது இங்கிருந்து போக விரும்பவில்லை. -நான் வழி அனுப்ப வருகிறேன். 58 00:02:51,673 --> 00:02:53,300 நீங்கள் இங்கே வரமாட்டீர்கள் என்று நினைத்தோம். 59 00:02:53,383 --> 00:02:55,510 ஆஹா. இந்த இடம் பெரியதாக இருக்கிறது. 60 00:02:55,594 --> 00:02:58,054 -நான் சுற்றி காட்டுகிறேன். -இல்லை, நானே காட்டுகிறேன். 61 00:02:58,138 --> 00:02:59,848 வைக்கோல், கொட்டகை, வைக்கோல். 62 00:02:59,931 --> 00:03:01,433 எதை மறந்தேன்? கூடுதல் வைக்கோல். 63 00:03:02,642 --> 00:03:04,728 அட, ஸ்டெஃப். அவர்களுக்குச் சுற்றி காட்டலாம். 64 00:03:04,811 --> 00:03:06,897 -பண்ணையைப் பார்க்க விருப்பமில்லையா? -இப்போது வேண்டாம். 65 00:03:06,980 --> 00:03:09,316 நீயும் சார்ல்ஸும் சென்று விளையாடுங்கள். போகலாம், லிஸ்ஸி. 66 00:03:11,109 --> 00:03:12,110 வருகிறேன். 67 00:03:13,820 --> 00:03:16,781 கொட்டகைக்கு போகலாம். என் கையை எங்கே உடைத்துத்கொண்டேன் என்று காட்டுகிறேன். 68 00:03:16,865 --> 00:03:19,034 நாளை காலை. நேராமாகிவிட்டது, பெக்கி. 69 00:03:19,117 --> 00:03:20,118 நல்லது. 70 00:03:20,201 --> 00:03:22,829 நீ பரணில் கண்டெடுத்த பழைய ஓவியத்தை சார்ல்ஸிடம் காட்டு. 71 00:03:22,913 --> 00:03:23,914 ஓ, சரி! 72 00:03:23,997 --> 00:03:27,334 அது ஒரு விண்கலம், ஆனால் அதை தலைகீழாக திருப்பினால், எல்விஸ் பிரெஸ்லி உருவம் தெரியும்! 73 00:03:27,417 --> 00:03:28,627 -அற்புதம்! -வா. 74 00:03:31,504 --> 00:03:32,923 மெதுவாக செல்லுங்கள்! 75 00:03:33,632 --> 00:03:36,509 நமக்கு இங்கே வேண்டாதது இன்னொரு விபத்து. 76 00:03:39,721 --> 00:03:42,182 இப்படித்தான் ஏணியில் இருந்து விழுந்தேன். 77 00:03:44,017 --> 00:03:46,478 -உனக்கு ஒன்றும் ஆகாதது மகிழ்ச்சி. -எனக்கும் தான். 78 00:03:47,062 --> 00:03:49,272 இந்த கொட்டகை எவ்வளவு அற்புதமாக இருக்கிறது? 79 00:03:49,356 --> 00:03:51,608 நீயும் ஸ்டெஃபும் அதிர்ஷ்டசாலிகள். 80 00:03:52,234 --> 00:03:53,318 ஸ்டெஃபிற்கு இங்கே இருப்பது பிடிக்காது. 81 00:03:53,902 --> 00:03:55,820 -கொட்டகையா? -இல்லை, கிராமத்தை. 82 00:03:55,904 --> 00:03:58,365 நாங்கள் நியூயார்க்கை விட்டு வந்ததில் இருந்து அவள் மோசமான மனநிலையில் இருக்கிறாள். 83 00:03:58,448 --> 00:04:00,700 சென்ட்ரல் பூங்காவிற்குச் செல்வது போன்ற விஷயங்களை நாங்கள் செய்வோம், 84 00:04:00,784 --> 00:04:02,661 ஆனால் இப்போதெல்லாம் அவள் அறையை விட்டு வருவதே இல்லை. 85 00:04:02,744 --> 00:04:04,037 வருத்தமாக இருக்கிறது. 86 00:04:04,120 --> 00:04:05,830 அவள் இங்கே வர நான் கட்டாயப்படுத்த முடியாது. 87 00:04:05,914 --> 00:04:09,376 எனவே தனியாக என்னுடைய சாகசங்களை செய்கிறேன். நாம் இந்த வார இறுதியில் செய்யப்போவதைப் போல. 88 00:04:09,459 --> 00:04:12,837 -நாம் எங்கிருந்து தொடங்கலாம்? -பூமியில் சிறந்த இடத்திலிருந்து. 89 00:04:12,921 --> 00:04:15,465 ட்ரக்கர்ஸ் 90 00:04:15,549 --> 00:04:17,216 ட்ரக்கர்ஸ் கார்னருக்கு வரவேற்கிறோம். 91 00:04:24,349 --> 00:04:27,394 ஆஹா. இந்த இடத்தில் எல்லாமே இருக்கின்றன. 92 00:04:29,187 --> 00:04:30,564 இந்த இடத்தில் ஒன்றுமே இல்லை. 93 00:04:31,231 --> 00:04:33,233 நியூயார்க்கில் சுரங்கப்பாதைகள், அருங்காட்சியகங்கள், 94 00:04:33,316 --> 00:04:36,069 சாப்பிட விரும்பும் எதுவும் நாளின் எந்த நேரத்திலும் கிடைக்கும். 95 00:04:36,152 --> 00:04:37,654 வியக்கத்தக்க திரையரங்கு. 96 00:04:37,737 --> 00:04:39,823 இது நாம் ஹட்சன் நதிக்கரையில் எடுத்தது. 97 00:04:41,324 --> 00:04:43,952 நான் அன்று ஏழு பீட்சா துண்டுகளை சாப்பிட்டேன் என்று நினைக்கிறேன். 98 00:04:45,662 --> 00:04:46,830 இது நினைவிருக்கிறதா? 99 00:04:49,249 --> 00:04:51,710 ஓ, கடவுளே. வாட்டர் டாக்ஸி பயணம். 100 00:04:51,793 --> 00:04:55,297 நாம் ஜூனியர் சுற்றுலா வழிகாட்டிகளாக நடிக்கும் அளவுக்கு நகரத்தைப் பற்றி தெரியும். 101 00:04:55,964 --> 00:04:59,342 நாம் அந்த ஜப்பானிய பேக்கரியில் சாப்பிட மழையில் வரிசையில் காத்திருந்தது நினைவிருக்கிறதா? 102 00:04:59,426 --> 00:05:02,429 வாரத்திற்கு ஒரு முறையாவது அந்த கிரீன் டீ சீஸ்கேக்குகளைப் பற்றி கனவு காண்கிறேன். 103 00:05:04,556 --> 00:05:06,850 பரிசு கடை. ஓ, கடவுளே! 104 00:05:09,311 --> 00:05:10,854 நாளை நாம் என்ன செய்யலாம்? 105 00:05:10,937 --> 00:05:13,189 சாலையின் முடிவில்தான் ஜோ பிட்மார்க்கின் பண்ணை உள்ளது. 106 00:05:13,273 --> 00:05:15,901 நாம் ஆடுகளுக்கு உணவளிக்கலாம், பீச் மரத்தில் ஏறலாம். 107 00:05:15,984 --> 00:05:18,695 -ஜோ நம்மை டிராக்டரில் சவாரி செய்யவிடலாம்! -அருமை. 108 00:05:18,778 --> 00:05:21,531 அதோடு பக்கத்திலேயே ஒரு பேய் வீடு இருக்கிறது. 109 00:05:21,615 --> 00:05:23,867 -உண்மையான பேய் வீடா? -ஆம். 110 00:05:24,451 --> 00:05:28,163 24 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பழைய பண்ணை வீடு. 111 00:05:28,246 --> 00:05:30,707 பழைய ஹாட்லியின் ஆவியைத் தவிர வேறு எதுவும் அங்கே இல்லை. 112 00:05:30,790 --> 00:05:32,250 ஹாட்லி விவசாயியா? 113 00:05:32,334 --> 00:05:33,668 ஹாட்லி ஒரு மாடு. 114 00:05:33,752 --> 00:05:37,380 ஆனால் புராணக்கதை உள்ளது, அது இன்னும் ஓட்ஸுக்காக அழைப்பதை நீ கேட்கலாம். 115 00:05:37,464 --> 00:05:40,884 அம்மா. 116 00:05:42,719 --> 00:05:45,013 -அது என்ன? -எனக்குத் தெரியாது. 117 00:05:55,190 --> 00:05:57,651 அது அம்மாவின் பை டின்களில் ஒன்று. 118 00:06:00,403 --> 00:06:01,780 நாய். 119 00:06:03,573 --> 00:06:05,242 பரவாயில்லை. நாங்கள் காயப்படுத்த மாட்டோம். 120 00:06:07,994 --> 00:06:10,789 நல்ல வேளை, அம்மா மூன்று ஆப்பிள் அப்பங்களை சுட்டார். 121 00:06:12,749 --> 00:06:15,460 அது நாய் பட்டையை அணியவில்லை, கைக்குட்டையை தான் கட்டியிருக்கிறது. 122 00:06:18,255 --> 00:06:20,507 ஒருவேளை நாம் ஸ்டெஃப் மற்றும் லிஸ்ஸியிடம் சொல்ல வேண்டும். 123 00:06:20,590 --> 00:06:24,135 அல்லது நீ சொன்னது போல் இதை நம் சாகசமாக ஆக்கலாம். 124 00:06:24,219 --> 00:06:27,806 -மர்மத்தை நாமே தீர்க்க முடியும். -நான் செய்கிறேன். 125 00:06:30,475 --> 00:06:33,228 கவலைப்படாதே. நாங்கள் உன் வீட்டைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 126 00:06:38,066 --> 00:06:39,442 அது இன்னும் பசியுடன் இருக்கிறது என நினைக்கிறேன். 127 00:06:43,613 --> 00:06:46,157 சரி. நடு அலமாரியில் எஞ்சியிருக்கும் மாட்டிறைச்சி இருக்கும். 128 00:06:46,241 --> 00:06:48,868 சரி, இருக்கிறது. வேறு என்ன? 129 00:06:48,952 --> 00:06:50,704 அதை செரிமானம் செய்ய சிறிது எலுமிச்சை சாறு? 130 00:06:52,122 --> 00:06:53,498 ஹாய், அம்மா. 131 00:06:53,582 --> 00:06:56,585 அட, லிண்டா. காணாமல் போன ஆப்பிள் அப்பத்தை யார் எடுத்தார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. 132 00:06:57,377 --> 00:07:00,630 எனவே, கேளுங்கள். எங்கள் குடும்பத்தில், எங்களுக்கு விதிகள் இருக்கின்றன. 133 00:07:00,714 --> 00:07:03,049 நீங்கள் முழு பையையும் எடுத்துச்செல்ல போகிறீர்கள் என்றால், 134 00:07:03,133 --> 00:07:05,719 அதோடு ஐஸ்கிரீமும் எடுத்துக் கொள்ள வேண்டும். 135 00:07:06,803 --> 00:07:07,929 ஆம், நீங்கள் சொல்வது சரிதான். 136 00:07:08,013 --> 00:07:09,723 நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம்? 137 00:07:09,806 --> 00:07:11,433 நன்றி. 138 00:07:16,396 --> 00:07:18,148 -பைக்கு. -போகலாம். 139 00:07:20,817 --> 00:07:21,985 கத்துக்குட்டிகள். 140 00:07:22,611 --> 00:07:24,738 -அவர்கள் எதையோ மறைக்கிறார்கள். -சந்தேகமே இல்லை. 141 00:07:26,489 --> 00:07:27,490 என்னிடம் ஒரு அப்பம் இருக்கிறது. 142 00:07:29,784 --> 00:07:31,161 நான் ஐஸ்கிரீம் எடுத்து வருகிறேன். 143 00:07:36,833 --> 00:07:39,419 லிஸ்ஸி, பார். இது எனது ஃபீல்ட் ஹாக்கி அணி. 144 00:07:39,502 --> 00:07:43,048 ஆம். நேற்றிரவு நீ காட்டிய எல்லா காணொளிகளிலிருந்து எனக்கு நினைவிருக்கிறது. 145 00:07:43,632 --> 00:07:47,052 நீ அவற்றை மிகக் குறுகிய முக்கிய காட்சிகள் கொண்ட ஒரு காணொளியாக அதை திருத்தலாம். 146 00:07:47,135 --> 00:07:48,845 அது வேடிக்கையாகத் தெரிகிறது. இன்றிரவு செய்வோம். 147 00:07:49,930 --> 00:07:53,099 அல்லது வேடிக்கையான வேறு ஏதாவது இங்கே செய்யலாம். 148 00:07:53,183 --> 00:07:56,811 எனக்குத் தெரியவில்லை, உன் அறைக்கு வெளியே ஏதாவது இருக்குமோ? 149 00:07:56,895 --> 00:07:58,897 என்னை நம்பு. ஒன்றுமில்லை. 150 00:08:02,651 --> 00:08:04,819 உனக்கு எப்படித் தெரியும்? நீ பார்த்திருக்கிறாயா? 151 00:08:04,903 --> 00:08:07,656 என்ன பயன்? என் நண்பர்கள் எல்லோரும் நியூயார்க்கில் இருக்கிறார்கள். 152 00:08:08,448 --> 00:08:13,036 சரி... ஒருவேளை நீ உன் புதிய பள்ளியில் ஃபீல்ட் ஹாக்கி அணியில் சேர்ந்தால், 153 00:08:13,119 --> 00:08:14,746 நிச்சயம் நீ புதிய நண்பர்களை பெறுவாய். 154 00:08:14,829 --> 00:08:17,123 இந்த கிராமத்தில் ஃபீல்டு ஹாக்கி இல்லை. 155 00:08:17,207 --> 00:08:19,292 இங்கே தண்ணீர் வசதி இருப்பதே ஆச்சரியம். 156 00:08:19,918 --> 00:08:22,837 ஹேய், ஸ்டெஃப். நீ அதை வாங்குகிறாயா? பீட்சா வந்திருக்கிறது. 157 00:08:24,297 --> 00:08:25,799 நாட்டு பீட்சா. 158 00:08:28,802 --> 00:08:30,345 "சுவையான" நாளாக அமையட்டும். 159 00:08:30,929 --> 00:08:32,889 இரண்டு பீட்சாக்களை ஆர்டர் செய்தோம் என நினைக்கிறேன்? 160 00:08:32,972 --> 00:08:35,517 சரி. அது என் பைக்கில் இருக்கிறது. இதோ வந்து விடுகிறேன். 161 00:08:36,685 --> 00:08:39,729 -அவள் இனிமையானவாக இருக்கிறாள். -இங்குள்ள யாரும் இனிமையானவர்கள் இல்லை. 162 00:08:39,813 --> 00:08:41,063 சரி. 163 00:08:41,773 --> 00:08:45,777 அவள் சட்டையில் பழைய விமானம் இருந்தது. உனக்கும் அமீலியா ஏர்ஹார்ட்டை பிடிக்கும். 164 00:08:46,736 --> 00:08:50,574 -நான் அவளை பள்ளியில் பார்த்திருக்கிறேன். -சரி. உன்னை அறிமுகம் செய்துகொள். 165 00:08:51,324 --> 00:08:52,325 எனக்குத் தெரியவில்லை. 166 00:08:52,909 --> 00:08:54,119 குறைந்தபட்சம் முயற்சி செய்யலாமா? 167 00:08:56,621 --> 00:08:57,622 அதற்காக வருந்துகிறேன். 168 00:08:58,373 --> 00:08:59,457 எந்த பிரச்சினையும் இல்லை. 169 00:09:00,458 --> 00:09:03,086 நாம் இருவரும் பாக்ஸ்டர் பள்ளியில் படிக்கிறோம் என நினைக்கிறேன். நான் ஸ்டெஃப். 170 00:09:03,712 --> 00:09:06,923 ஓ, ஆம். பென்னி. சரி, சந்திப்போம். 171 00:09:08,008 --> 00:09:09,259 அது நன்றாகவே நடந்தது. 172 00:09:21,146 --> 00:09:23,690 இப்போது, மர்மங்களைப் பற்றி எனக்கு சில விஷயங்கள் தெரியும். 173 00:09:23,773 --> 00:09:26,359 அதோடு தேவை என்னவென்றால் சில துப்புகள் தான். 174 00:09:27,319 --> 00:09:29,529 இந்த நாய் எங்கிருந்து வந்தது என்பதை தீர்மானிக்க, 175 00:09:29,613 --> 00:09:31,948 அதைப் பற்றி நமக்குத் தெரிந்த அனைத்தையும் பகுப்பாய்வு செய்ய வேண்டும். 176 00:09:32,032 --> 00:09:34,743 அது நேற்று வந்தது என்பது மட்டுமே நமக்குத் தெரியும். 177 00:09:35,952 --> 00:09:39,122 நேற்று இது ஓடும் அளவுக்கு என்ன நடந்திருக்கும்? 178 00:09:41,207 --> 00:09:43,835 இதன் பெயர் நமக்கு தெரிந்திருக்கலாம். இதோ, பெண்ணே. 179 00:09:45,462 --> 00:09:46,630 கொஞ்சம் தண்ணீர் குடி. 180 00:09:50,383 --> 00:09:51,384 ஐயோ. பொறுமை. 181 00:09:52,427 --> 00:09:54,095 அந்த உரத்த சத்தம் உன்னை பயமுறுத்திவிட்டதா? 182 00:09:57,557 --> 00:09:59,976 பொறு. உரத்த சத்தம். 183 00:10:00,060 --> 00:10:03,521 அதுதான்! நேற்று இடியும் மின்னலும் இதை பயமுறுத்தியது என்று உறுதியாக சொல்வேன். 184 00:10:03,605 --> 00:10:04,940 அதனால் தான் ஓடி வந்திருக்கிறது. 185 00:10:05,023 --> 00:10:08,026 மின்னல் மின்னுவதைப் போல நாம் இதை ஃபிளாஷ் என்று அழைக்க வேண்டும். 186 00:10:08,109 --> 00:10:11,529 நாங்கள் உனக்கு வீடு தேடுவோம், ஃபிளாஷ். எங்களுக்கு இன்னும் சில தடயங்கள் தேவை. 187 00:10:12,447 --> 00:10:14,950 பொறு. இந்த கைக்குட்டையை எங்கோ பார்த்திருக்கிறேன். 188 00:10:17,160 --> 00:10:19,371 ட்ரக்கர்ஸ்! ட்ரக்கர்ஸின் கைக்குட்டை. 189 00:10:19,454 --> 00:10:21,665 ஃபிளாஷ் எங்கிருந்து வந்தது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். 190 00:10:21,748 --> 00:10:23,083 ஃபிளாஷ் யார்? 191 00:10:23,166 --> 00:10:24,960 நானும் பெக்கியும் கண்டுபிடித்த நாய். 192 00:10:27,462 --> 00:10:29,965 ஒரு நாயைக் கண்டுபிடித்தீர்களா? ஏன் என்னிடம் சொல்லவில்லை? 193 00:10:30,048 --> 00:10:32,759 ஏனென்றால் நீ எங்களுடன் இருக்க விரும்பவில்லை, நினைவிருக்கிறதா? 194 00:10:33,760 --> 00:10:35,303 கொஞ்சம் பழக்கமானது போல் தெரிகிறது. 195 00:10:35,387 --> 00:10:38,139 நீ ஸ்டெஃப் உடன் இருக்கும்போது, என்னை மறந்துவிடுகிறாய். 196 00:10:38,223 --> 00:10:40,725 அதனால் ஃபிளாஷின் குடும்பத்தை நானே கண்டுபிடிக்க முடிவு செய்தேன். 197 00:10:43,019 --> 00:10:44,229 பெக்கியுடன். 198 00:10:46,898 --> 00:10:48,024 நீ சொல்வது சரிதான். 199 00:10:48,108 --> 00:10:49,859 நான் ஸ்டெஃப்பைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்தேன், 200 00:10:49,943 --> 00:10:52,070 ஆனால் நான் உன்னை அப்படி விட்டுச் சென்றிருக்கக் கூடாது. 201 00:10:52,654 --> 00:10:54,906 எனக்கும் நீ அதையே செய்ததற்காக நான் உன்னை குறை கூறமாட்டேன். 202 00:10:54,990 --> 00:10:55,991 என்னை மன்னித்துவிடு. 203 00:10:59,703 --> 00:11:01,204 இப்போதுதான் ஒரு பெரிய தடயம் கிடைத்தது. 204 00:11:01,288 --> 00:11:04,666 -நீ எங்களுடன் வருகிறாயா? -ஸ்டெஃப்பிடம் இருந்து இடைவெளி எடுக்கிறேன். 205 00:11:12,883 --> 00:11:14,050 அங்கே இருக்கிறது! பார்த்தீர்களா? 206 00:11:16,094 --> 00:11:19,264 -ஃபிளாஷ் அணிந்திருப்பதும் அதே தான். -திரு. ட்ரக்கர்! 207 00:11:21,016 --> 00:11:22,017 திரும்பி வந்துவிட்டீர்களா? 208 00:11:23,018 --> 00:11:26,688 இந்நேரம் இனிப்பு கோமா வந்திருக்கும் என நினைத்தேன். 209 00:11:26,771 --> 00:11:28,440 ஆனால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். 210 00:11:28,523 --> 00:11:31,651 இப்போதுதான் புதிய கேரமல் க்ரீம்கள் வந்தன. 211 00:11:31,735 --> 00:11:33,320 சாக்லேட் சுவையுடையதா? 212 00:11:33,403 --> 00:11:36,615 காணாமல் போன ஒரு நாயைக் கண்டுபிடித்தோம். உரிமையாளரைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 213 00:11:37,240 --> 00:11:39,576 இதன் கழுத்தில் கட்டியிருக்கும் கைக்குட்டை உங்கள் கடையுடையது. 214 00:11:39,659 --> 00:11:41,828 நீங்கள் அதை யாருக்கு விற்றீர்கள் என்று நினைவிருக்கிறதா? 215 00:11:41,912 --> 00:11:45,248 நான் ஒவ்வொரு மாதமும் டஜன் கணக்கான கைக்குட்டைகளை விற்கிறேன். 216 00:11:45,332 --> 00:11:48,251 அவற்றை யார் வாங்கியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 217 00:11:51,588 --> 00:11:53,423 யாரோ தாகமாக இருப்பது போல தெரிகிறது. 218 00:11:55,508 --> 00:11:57,010 இதோ. 219 00:11:57,093 --> 00:12:00,180 நீங்கள் எங்கள் சமூக அறிவிப்பு பலகையில் ஒரு அறிவிப்பை வெளியிடலாம். 220 00:12:00,263 --> 00:12:03,141 -உறுதியாக... ஹேய்! -ஃபிளாஷ்! 221 00:12:04,768 --> 00:12:06,978 -ஃபிளாஷ்! -ஃபிளாஷ்! 222 00:12:09,356 --> 00:12:11,733 ஒருவேளை இதன் குடும்பத்தை கண்டுபிடிக்கவில்லை என்றால்? 223 00:12:15,487 --> 00:12:16,613 இதுதான் எங்கள் சிறப்பம்சம். 224 00:12:17,197 --> 00:12:20,617 யாராவது ஃபிளாஷின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியும் என்றால், அது நீயும் நானும்தான். 225 00:12:22,661 --> 00:12:23,787 பெக்கியும். 226 00:12:24,788 --> 00:12:27,249 உங்கள் வளர்ப்பு நாய்க்குட்டிகளைப் பார்க்கவும் சந்திக்கவும் விரும்புகிறேன். 227 00:12:27,332 --> 00:12:29,000 நாங்களும் அதை விரும்புகிறோம். 228 00:12:29,626 --> 00:12:31,086 ஸ்டெஃப் வருவாள் என்று நம்புகிறேன். 229 00:12:31,670 --> 00:12:35,090 சந்தேகம்தான். அவள் இனி என்னுடன் எதுவும் செய்ய விரும்பவில்லை. 230 00:12:37,217 --> 00:12:39,219 என்ன, ஃபிளாஷ்? 231 00:12:39,302 --> 00:12:40,470 ஃபிளாஷ் யார்? 232 00:12:42,013 --> 00:12:44,140 ஹேய், ஸ்டெஃப். 233 00:12:44,224 --> 00:12:47,060 நான் பெக்கிக்கும் சார்லஸுக்கும் உதவி செய்து கொண்டிருந்தேன். 234 00:12:47,143 --> 00:12:50,230 தொலைந்த நாயைக் கண்டுபிடித்தோம், அதன் வீட்டை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். 235 00:12:50,855 --> 00:12:52,899 புரிந்தது. சரி, வா, லிஸ்ஸி. 236 00:12:52,983 --> 00:12:54,818 அவர்களால் கண்டுபிடிக்க முடியும் என நம்புகிறேன். 237 00:12:56,945 --> 00:12:58,446 லிஸ்ஸி, போகலாம். 238 00:12:59,281 --> 00:13:03,076 உண்மையில், ஸ்டெஃப், அதற்கு பதிலாக நான் இங்கே இருக்கப் போகிறேன் என நினைக்கிறேன். 239 00:13:03,994 --> 00:13:06,496 -அப்படியா? -ஆம். 240 00:13:08,957 --> 00:13:11,751 எனவே, இந்த சூழ்நிலையில் துப்பறிவாளர் பிரானிகன் என்ன செய்வார்? 241 00:13:11,835 --> 00:13:13,378 இன்னும் பல தடயங்களை சேகரிப்பார். 242 00:13:13,461 --> 00:13:16,715 சரி. பார்டர் கோலிகளைப் பற்றி எனக்குத் தெரிந்தவை இதுதான். 243 00:13:16,798 --> 00:13:20,302 அவை மிகவும் புத்திசாலிகள், நிறைய ஆற்றல் கொண்டவை, 244 00:13:20,385 --> 00:13:23,346 அதோடு அவை முதலில் ஆடுகளை மேய்ப்பதற்காக வளர்க்கப்பட்டன. அவை... 245 00:13:23,430 --> 00:13:27,309 ஆடுகளா? இங்கு ஆடுகளை வைத்திருக்கும் ஒரே இடம் ஜோ பிட்மார்க்கின் பண்ணைதான். 246 00:13:27,392 --> 00:13:29,978 ஃபிளாஷ் அவர்களின் நாய்களில் ஒன்றாக இருக்க வேண்டும். போகலாம்! 247 00:13:30,061 --> 00:13:31,104 சரி. 248 00:13:35,275 --> 00:13:36,776 நீயும் எங்களுடன் வரவேண்டும். 249 00:13:37,527 --> 00:13:39,529 ஆட்டு பண்ணைக்கா? பரவாயில்லை. 250 00:13:40,113 --> 00:13:41,615 ஸ்டெஃப், பொறு. 251 00:13:44,367 --> 00:13:45,577 இந்த ஒரு காரியத்தை செய். 252 00:13:45,660 --> 00:13:47,913 உனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றால், 253 00:13:47,996 --> 00:13:51,583 உன் அறையிலேயே இருப்போம் மீதமுள்ள வார இறுதி முழுக்க. 254 00:13:53,877 --> 00:13:55,212 தயவுசெய்து? 255 00:13:57,923 --> 00:13:59,174 அது அவ்வளவு மோசமாக இருக்காது. 256 00:14:00,550 --> 00:14:02,260 ஜாம்கள் 257 00:14:02,344 --> 00:14:03,345 தேன் 258 00:14:04,512 --> 00:14:07,557 -நீ ஃபிளாஷை பிடி. நான் ஜோவைத் தேடுகிறேன். -சரி. 259 00:14:08,934 --> 00:14:10,810 இந்த இடம் ஃபிளாஷுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். 260 00:14:15,732 --> 00:14:17,234 பிட்மார்க் பண்ணை மற்றும் நாட்டுச் சந்தை 261 00:14:17,317 --> 00:14:19,444 இந்த இடம் மிகவும் அருமையாக உள்ளது. 262 00:14:20,946 --> 00:14:22,322 நீ என்ன நினைக்கிறாய்? 263 00:14:22,822 --> 00:14:25,492 யூனியன் ஸ்கொயர் கிரீன்மார்க்கெட்டை மிஸ் செய்வதாக நினைக்கிறேன். 264 00:14:25,575 --> 00:14:28,328 அங்கே புதிதாக தயாரித்த ரொட்டிகள், உள்ளூர் தேன்... 265 00:14:28,411 --> 00:14:31,957 அதிக விலையாக இருந்தாலும் சுவையான ஆப்பிள் சிடர் டோனட்கள். 266 00:14:32,040 --> 00:14:33,541 அவற்றை சாப்பிடுவதை நிறுத்த முடியாது, இல்லையா? 267 00:14:34,042 --> 00:14:35,835 -நீங்கள் நியூயார்க்கைச் சேர்ந்தவரா? -இல்லை. 268 00:14:35,919 --> 00:14:39,339 ஆனால் நகரத்தில் உள்ள சில உணவகங்களுக்கு விற்கிறேன், நிறைய முறை வந்திருக்கிறேன். 269 00:14:39,422 --> 00:14:40,423 எதற்கெல்லாம்? 270 00:14:40,507 --> 00:14:45,470 சொல்கிறேன். கேரிட்டி ஃபீல்ட் இன், போனகார்ட்டிஸ்... 271 00:14:45,554 --> 00:14:46,805 எனக்கு போனகார்ட்டிஸை பிடிக்கும்! 272 00:14:46,888 --> 00:14:49,224 -அவர்களின் கிழங்கு மிகவும் பிடித்தது. -எனக்கும் கூட. 273 00:14:49,307 --> 00:14:51,434 மேப்பிள் கடுகு தூவலை இங்கேதான் செய்கிறோம். 274 00:14:51,518 --> 00:14:54,312 -"இங்கே" என்றால்? -பண்ணை இல்லாமல் பண்ணையிலிருந்து வரும் 275 00:14:54,396 --> 00:14:55,814 உணவை சாப்பிட முடியாது, இல்லையா? 276 00:14:57,107 --> 00:14:59,901 -ஹாய், ஜோ. -ஹேய், பெக்கி. 277 00:14:59,985 --> 00:15:03,238 -பொறுங்கள். நீங்கள்தான் ஜோ பிட்மார்க்கா? -யார் கேட்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. 278 00:15:03,321 --> 00:15:07,033 இது என் சகோதரி, ஸ்டெஃப். இவர்கள் எனது உறவினர்கள் லிஸ்ஸி மற்றும் சார்ல்ஸ். 279 00:15:07,117 --> 00:15:10,328 பிட்மார்க்ஸிற்கு வரவேற்கிறேன். அந்த கை எப்படி இருக்கிறது, செல்லம்? 280 00:15:10,412 --> 00:15:11,580 கிட்டத்தட்ட புதியதைப் போல நன்றாக. 281 00:15:11,663 --> 00:15:15,166 நல்ல செய்தி. என் பீச் மரம் உன்னை மிஸ் செய்கிறது. 282 00:15:15,792 --> 00:15:17,711 இன்னும் நல்ல செய்திகள் உள்ளன. 283 00:15:19,379 --> 00:15:21,047 நாங்கள் யாரைக் கண்டுபிடித்தோம் பாருங்கள். 284 00:15:21,131 --> 00:15:22,841 ஹாய், அழகே. 285 00:15:24,050 --> 00:15:25,051 இதன் பெயர் என்ன? 286 00:15:27,012 --> 00:15:29,264 இது உங்களுடையது இல்லையா? 287 00:15:30,181 --> 00:15:31,308 இல்லை. மன்னிக்கவும். 288 00:15:33,226 --> 00:15:36,104 பாவப்பட்ட ஃபிளாஷ். இது வீட்டிற்குச் செல்ல விரும்புகிறது. 289 00:15:38,815 --> 00:15:41,192 சரி, நாம் தொடர்ந்து தேடுவது நல்லது. 290 00:15:41,276 --> 00:15:42,319 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 291 00:15:43,612 --> 00:15:45,530 -உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. -ஹேய், எனக்கும்தான். 292 00:15:45,614 --> 00:15:47,032 ஹேய், முடிந்தால் திரும்பி வா. 293 00:15:47,115 --> 00:15:50,493 நான் பேரிக்காய் பால்சாமிக் கிளேஸை செய்கிறேன், உன் யோசனைகளை விரும்புகிறேன். 294 00:15:50,577 --> 00:15:51,578 கண்டிப்பாக செய்வேன். 295 00:15:59,169 --> 00:16:00,545 நாம் இப்போது என்ன செய்வது? 296 00:16:01,171 --> 00:16:02,589 எனக்குத் தெரியவில்லை. 297 00:16:02,672 --> 00:16:04,758 நாம் தவறவிடும் ஏதோவொன்று இருக்கிறது. 298 00:16:05,592 --> 00:16:07,302 தகவல்களை மீண்டும் மதிப்பாய்வு செய்வோம். 299 00:16:08,511 --> 00:16:09,596 எனக்குத் தெரியும். 300 00:16:09,679 --> 00:16:12,015 உங்களுக்குத் தெரியுமா, சில நேரங்களில் ஓய்வு எடுப்பது நல்லது. 301 00:16:12,098 --> 00:16:14,100 உங்கள் மனதை தெளிவுபடுத்த வேறு ஏதாவது செய்யுங்கள். 302 00:16:14,684 --> 00:16:18,104 ஹேய், பெக்ஸ். எனக்கு படிப்பு இடைவேளை தேவைப்பட்டபோது செய்தது நினைவிருக்கிறதா? 303 00:16:18,188 --> 00:16:20,815 என்னை சென்ட்ரல் பூங்காவிற்கு அழைத்துச் செல்வாய். நாம் ஃபிரிஸ்பீ விளையாடுவோம். 304 00:16:20,899 --> 00:16:22,150 தூரமாக போ. 305 00:16:28,990 --> 00:16:30,867 -ஆஹா. -வாய்ப்பே இல்லை. 306 00:16:30,951 --> 00:16:32,744 அது ஆச்சரியமாக இருந்தது, ஃபிளாஷ். 307 00:16:33,578 --> 00:16:35,580 இது நிச்சயமாக இதை இதற்கு முன்பு செய்திருக்கிறது. 308 00:16:35,664 --> 00:16:38,416 வேறு எந்த இனத்தையும் விட நாய்களுக்கான ஃபிரிஸ்பீ உலக சாம்பியன்ஷிப்பை 309 00:16:38,500 --> 00:16:39,876 பார்டர் கோலிகளே அதிகம் வென்றுள்ளன. 310 00:16:39,960 --> 00:16:41,378 பொறு. ட்ரக்கர்ஸில் தண்ணீருக்காக 311 00:16:41,461 --> 00:16:44,422 குரைத்துவிட்டு பிறகு குடிக்காமல் போனது நினைவிருக்கிறதா? 312 00:16:44,506 --> 00:16:48,468 -ஏனென்றால் இது தண்ணீரை கேட்கவில்லை. -இது ஃபிரிஸ்பீயை கேட்டிருக்கிறது! 313 00:16:48,552 --> 00:16:51,096 ஷெர்மன் க்ரீக்கில் அல்டிமேட் ஃபிரிஸ்பீ விளையாடும் சிறுவர்களை பார்த்திருக்கிறேன். 314 00:16:51,179 --> 00:16:53,682 அவர்களுக்கு ஏதாவது தெரிந்திருக்கும். அது தொலைவில் இல்லை. வாருங்கள். 315 00:16:59,437 --> 00:17:01,439 நீ கேட்க வேண்டியதில்லை. நானே வருகிறேன். 316 00:17:05,569 --> 00:17:07,487 இந்த இடம் ஃபிளாஷ்க்கு தெரிந்திருக்கிறது. 317 00:17:07,571 --> 00:17:08,780 அது ஒரு நல்ல அறிகுறி. 318 00:17:09,613 --> 00:17:12,909 பிட்மார்க்ஸில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் என் நம்பிக்கையை உயர்த்தவில்லை. 319 00:17:12,993 --> 00:17:15,870 கோலி! ஹேய், நண்பர்களே! பாருங்கள்! யாரோ கோலியைக் கண்டுபிடித்துவிட்டர்கள். 320 00:17:16,454 --> 00:17:18,915 கோலி! இங்கே வா. 321 00:17:18,998 --> 00:17:21,543 -நம்பிக்கை கொள்வது பரவாயில்லை. -ஹாய். 322 00:17:22,419 --> 00:17:23,545 எனவே, கோலி உன்னுடைய நாயா? 323 00:17:24,254 --> 00:17:25,921 நான் விரும்புகிறேன். அது பென்னியுடையது. 324 00:17:26,006 --> 00:17:28,091 நீ எங்கே போனாய்? நான் மிகவும் பயந்துவிட்டேன். 325 00:17:29,009 --> 00:17:32,262 கோலியை கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றி. நான் இதைப் பற்றி மிகவும் கவலைப்பட்டேன். 326 00:17:33,138 --> 00:17:35,599 ஹாய். நான் முன்பு உங்களுக்கு ஒரு பீட்சாவை டெலிவரி செய்தேன். 327 00:17:35,682 --> 00:17:38,518 -இரண்டு பீஸ்ஸாக்கள், உண்மையில். -ஆம். எனக்கு நினைவிருக்கிறது. 328 00:17:38,602 --> 00:17:40,770 -ஸ்டெஃப், சரியா? -ஆம். 329 00:17:40,854 --> 00:17:42,564 ஹேய், அப்படி நடந்துகொண்டதற்கு மன்னியுங்கள். 330 00:17:42,647 --> 00:17:46,026 நான் கோலி பற்றிய கவலையில் இருந்தேன். வேலையை முடிக்கும் முயற்சியில் இருந்தேன். 331 00:17:46,109 --> 00:17:48,403 கவலை வேண்டாம். நானும் அதைத்தான் செய்திருப்பேன். 332 00:17:48,486 --> 00:17:50,113 ஹேய், இதைப் பாருங்கள். 333 00:17:57,787 --> 00:17:59,164 ஆஹா. 334 00:17:59,247 --> 00:18:00,790 நல்ல நாய், கோலி. 335 00:18:01,374 --> 00:18:02,584 நீங்கள் விளையாடுகிறீர்களா? 336 00:18:02,667 --> 00:18:04,294 -நான் விளையாடுகிறேன். -நானும். 337 00:18:04,377 --> 00:18:06,880 ஆம். ஆனால் எச்சரிக்கிறேன், பெக்ஸும் நானும் இதில் வல்லவர்கள். 338 00:18:06,963 --> 00:18:08,840 அதாவது, நாங்கள் சென்ட்ரல் பூங்காவில் விளையாடியிருக்கிறோம் 339 00:18:10,508 --> 00:18:12,135 அப்போது வாருங்கள். 340 00:18:14,888 --> 00:18:16,806 நல்ல வேலை, துப்பறிவாளர் பிரானிகன். 341 00:18:27,484 --> 00:18:29,319 எனவே, இந்த வார இறுதியில் நான் எதை மிஸ் செய்தேன்? 342 00:18:29,986 --> 00:18:31,112 குளிப்பதை தவிரவா? 343 00:18:32,322 --> 00:18:34,074 நீ லிண்டா போல பேசுகிறாய். 344 00:18:34,157 --> 00:18:36,284 இங்கே வா. அதை நிறுத்து. 345 00:18:37,118 --> 00:18:40,163 எனவே ஃபிளாஷ் எனப்படும் ஃபிரிஸ்பீ நாயின் மர்மம் முடிகிறது. 346 00:18:42,249 --> 00:18:44,584 ஆனால் இந்த நேரத்தில், என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 347 00:18:46,169 --> 00:18:47,754 உண்மையில் யார் யாருக்கு உதவினார்கள்? 348 00:18:48,630 --> 00:18:50,840 அல்லது அது ஒரு "நபரா"? 349 00:18:51,758 --> 00:18:54,761 ஒருவேளை அது எப்போதும் ஒரு மர்மமாகவே இருக்கலாம். 350 00:18:59,391 --> 00:19:01,935 நீ சத்தமாக பேசுகிறாய் என்பது உனக்கே தெரியும், இல்லையா? 351 00:19:03,270 --> 00:19:04,729 நன்றி. 352 00:19:26,960 --> 00:19:28,962 எலென் மைல்ஸ் எழுதிய 'தி பப்பி ப்ளேஸ்' என்ற ஸ்கோலஸ்டிக் புத்தகத் தொடரை அடிப்படையாகக் கொண்டது 353 00:20:44,955 --> 00:20:46,957 வசனத் தமிழாக்கம் அருண்குமார்