1 00:00:06,716 --> 00:00:09,886 அட கடவுளே. இது ஒரு நிச்சயதார்த்த மோதிரம். 2 00:00:10,470 --> 00:00:11,471 அதுபோலத்தான் இருக்கிறது. 3 00:00:12,347 --> 00:00:14,599 எனக்கு நிச்சயதார்த்தம் நடந்தால், எனக்கு மரகதம் தான் வேண்டும். 4 00:00:14,683 --> 00:00:16,768 நான் சைவம் என்பதால் பச்சை நிறம். 5 00:00:17,269 --> 00:00:18,270 இது யாருடையது? 6 00:00:28,780 --> 00:00:30,657 அது இன்னும் இங்கு தான் இருக்கிறது. 7 00:00:31,741 --> 00:00:36,371 மேக்ஸை காதலிப்பதாக என் அம்மா சொன்னதாக அவன் அம்மா சொன்னதாக ஜஸ்டின் சொன்னான். 8 00:00:36,454 --> 00:00:38,373 -யார் அந்த மேக்ஸ்? -என் அம்மாவின் காதலர். 9 00:00:39,541 --> 00:00:40,709 நான் ஜஸ்டினை அழைக்கப் போகிறேன். 10 00:00:46,006 --> 00:00:48,717 -என்ன விஷயம்? -ஜஸ்டின்! நாம் ஒரு திருமணத்தை நிறுத்த வேண்டும். 11 00:00:48,800 --> 00:00:50,260 ஹாய். நான் பிராண்டி. 12 00:00:50,844 --> 00:00:54,472 ஹேய், பிராண்டி. யாருடைய திருமணத்தை நிறுத்துகிறோம்? 13 00:00:54,556 --> 00:00:56,808 இவளது அம்மா மேட்டை மணக்கப் போகிறார். 14 00:00:56,892 --> 00:00:59,394 -மேக்ஸ். -பொறு, என்ன? 15 00:00:59,477 --> 00:01:01,354 பார், எனக்கு இது கிடைத்தது. 16 00:01:01,438 --> 00:01:02,480 மோதிரமா? 17 00:01:02,564 --> 00:01:05,317 ஏதோ மோதிரம் அல்ல. நிச்சயதார்த்த மோதிரம். 18 00:01:05,400 --> 00:01:07,861 கிடைத்தது என்று என்ன அர்த்தம்? எங்கே? 19 00:01:07,944 --> 00:01:10,238 இங்கிருந்து எனக்கு கிடைத்தது. 20 00:01:10,822 --> 00:01:12,365 குப்பை டிராயரிலா? 21 00:01:17,704 --> 00:01:19,456 -ஹேய். -சரி. 22 00:01:23,919 --> 00:01:25,212 என் அம்மா வந்துவிட்டார். 23 00:01:25,295 --> 00:01:26,838 சரி, மூச்சுவிடு. ஆசுவாசப்படுத்திக்கொள். 24 00:01:28,298 --> 00:01:29,716 இது எதையும் குறிக்கவில்லை. 25 00:01:30,508 --> 00:01:32,510 அதாவது, இது குப்பை டிராயரில் இருந்தது. 26 00:01:33,386 --> 00:01:35,972 அவன் சொன்னது சரிதான். இது ஒரு குறிப்பு. 27 00:01:36,056 --> 00:01:39,059 அவர் ஏன் மிகவும் விலையுயர்ந்த ஒன்றை குப்பை டிராயரில் வைக்க வேண்டும்? 28 00:01:39,643 --> 00:01:41,311 அதாவது, என்னுடைய முதல் பல் அதில் இருக்கிறது. 29 00:01:41,394 --> 00:01:42,938 நீ அதை உன் தலையணைக்கு அடியில் வைக்க வேண்டும். 30 00:01:43,021 --> 00:01:45,190 அது ஒருவேளை இப்போது அதிர்ஷ்டத்தை கொடுத்திருக்கும். 31 00:01:48,652 --> 00:01:50,987 என் பிரச்சினைக்கு நடுவில் பல் தேவதை நகைச்சுவைகளா? 32 00:01:51,613 --> 00:01:54,199 சரி, எனக்கு பிராண்டியை பிடிக்கும். அவளை நிஜமாக பிடிக்கும். 33 00:01:54,783 --> 00:01:57,827 உண்மையில், என்னைச் சுற்றி நேர்மறை ஆற்றல் இருப்பது நல்ல விஷயம் தான். 34 00:01:58,495 --> 00:02:02,332 ஆம்பர் பிரவுனாகிய எனக்கு என் உணர்ச்சிகளைப் பற்றி சிந்திக்கவும் பேசவும் ஒரு பாதுகாப்பான இடம் தேவை. 35 00:02:03,250 --> 00:02:05,418 ஆம், அன்புள்ள டைரி, இது ஒரு பிரச்சினை. 36 00:02:05,502 --> 00:02:09,004 என் அப்பா அமெரிக்கவிற்கு வரும் முன்பு என் அம்மாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்க விடமுடியாது. 37 00:02:09,548 --> 00:02:11,216 இது எல்லா நம்பிக்கையையும்... 38 00:02:12,634 --> 00:02:13,802 அழித்துவிடும். 39 00:02:15,595 --> 00:02:17,138 ஒருவேளை அவர் அதை ஒரு நண்பருக்காக வைத்திருக்கலாம். 40 00:02:17,222 --> 00:02:18,807 அல்லது அவரது கடந்த காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். 41 00:02:18,890 --> 00:02:21,810 அவர் நீண்ட காலம் பார்க்காத காதலரின் நினைவாக ஒரு மோதிரத்தை வைத்திருக்கிறார். 42 00:02:22,394 --> 00:02:24,187 இது நிச்சயமாக அவரது கடந்த காலத்தைச் சேர்ந்தது அல்ல. 43 00:02:24,771 --> 00:02:28,733 என் அம்மா பழையது எதுவும் எதிர்காலத்தை கெடுக்க அனுமதிக்காத அளவுக்கு மூடநம்பிக்கை உடையவர். 44 00:02:28,817 --> 00:02:31,778 என் அம்மா சமைக்காத போதும் துரதிர்ஷ்டத்தைத் தவிர்ப்பதற்கு சிந்திய உப்பை தன் மீது தூவிக்கொள்வார். 45 00:02:32,737 --> 00:02:33,947 அதேதான். 46 00:02:34,864 --> 00:02:36,283 என்ன இது? 47 00:02:36,908 --> 00:02:38,827 -என்ன எது? -இது. 48 00:02:40,328 --> 00:02:42,956 "உன் சலவை செய்த துணிகளை எடுத்து முன் அலமாரியில் வைத்துவிட்டேன். 49 00:02:43,039 --> 00:02:46,084 வார இறுதியில் உன்னுடனும் ஆம்பருடனும் ரெட் டிராகன் செல்வதை எதிர்நோக்குகிறேன். 50 00:02:46,167 --> 00:02:50,714 நடுநிலைப்பள்ளி மாணவியாக அவளது முதல் வார அனுபவத்தை நம்மிடம் கூறலாம்." 51 00:02:51,381 --> 00:02:52,549 அவர்கள் "நாம்" ஆகிவிட்டார்களா? 52 00:02:53,675 --> 00:02:56,678 இல்லை, அது நானும் அம்மாவும்தான். நாங்கள்தான் "நாம்". 53 00:02:57,220 --> 00:02:59,848 அது "நானும் மேக்ஸாகவும்" அல்லது "மேக்ஸ் நானாகவும்" இருக்கலாம். 54 00:02:59,931 --> 00:03:01,558 எத்தனை மேக்ஸ்கள் இருக்கிறார்கள்? 55 00:03:04,311 --> 00:03:05,312 பின்புறமும் எழுதியிருக்கிறது. 56 00:03:08,231 --> 00:03:10,817 "அதோடு நம்மைப் பற்றி நாம் ஆம்பரிடம் பேசலாம்"? 57 00:03:30,837 --> 00:03:32,756 பாலா டான்சிகர் எழுதிய "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. 58 00:03:51,608 --> 00:03:52,901 திருமணத்தை நிறுத்துபவர்கள் டேக் 1 - இயக்குநர் A.B. 59 00:03:52,984 --> 00:03:54,027 ஆக்ஷன்! 60 00:04:00,033 --> 00:04:01,117 கட்! 61 00:04:01,743 --> 00:04:02,744 காட்சியை மாற்றி எழுதுங்கள்! 62 00:04:03,662 --> 00:04:05,330 ஹாய், செல்லம்! அப்பா அழைக்கிறேன். 63 00:04:05,413 --> 00:04:08,166 அப்பா வீட்டிற்கு வருகிறேன். சில நாட்களில். நம்ப முடிகிறதா? 64 00:04:08,250 --> 00:04:11,253 தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும். இப்போது அந்த வேலையில் இருக்கிறேன். 65 00:04:11,336 --> 00:04:13,755 சரி, செல்லம். உன்னை நேசிக்கிறேன். பிறகு பேசுகிறேன். 66 00:04:15,382 --> 00:04:17,216 ஹாய், செல்லம்! அப்பா அழைக்கிறேன். 67 00:04:17,300 --> 00:04:19,886 அப்பா வீட்டிற்கு வருகிறேன். சில நாட்களில். நம்ப முடிகிறதா? 68 00:04:19,970 --> 00:04:22,764 -ஹாய்! -அட, பயமுறுத்திவிட்டாய். 69 00:04:22,847 --> 00:04:24,015 நன்றி. 70 00:04:24,099 --> 00:04:25,559 யாரிடம் பேசிக்கொண்டிருந்தாய்? 71 00:04:25,642 --> 00:04:27,727 -யாருடனும் இல்லை. -நானும் கூட அப்படி செய்வேன். 72 00:04:27,811 --> 00:04:29,354 இது ஒரு அழகான பைஜாமா பார்ட்டி. 73 00:04:29,938 --> 00:04:34,442 இசை, பிட்சா, அலங்காரம், ஸ்பா சிகிச்சைகள், பாட்டில் தண்ணீர். 74 00:04:35,026 --> 00:04:38,655 அழகான பைஜாமாக்கள், இசை, அலங்காரம், ஸ்பா சிகிச்சைகள், பாட்டில் தண்ணீர். 75 00:04:38,738 --> 00:04:40,699 விருந்தினர்களின் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறேன். 76 00:04:40,782 --> 00:04:42,617 விருந்தினர்களின் பட்டியலை தயார் செய்துகொண்டிருக்கிறாள். 77 00:04:42,701 --> 00:04:46,037 ஹானாவும் அவளது பைஜாமா விருந்தும். அதைப்பற்றி தான் பேசிக்கொண்டிருப்பாள். 78 00:04:46,121 --> 00:04:48,373 -இப்போதைக்கு அவ்வளவுதான். -இப்போதைக்கு அவ்வளவுதான். 79 00:04:51,626 --> 00:04:53,587 -பொறுங்கள், இன்னொரு விஷயம் இருக்கிறது. -இன்னொரு விஷயம் இருக்கிறது. 80 00:04:53,670 --> 00:04:57,048 -தண்ணீர் தெளிவாகவும், நுரையோடும் இருக்கும் -தெளிவாகவும், நுரையோடும் இருக்கும். 81 00:04:57,132 --> 00:05:01,428 உண்மை: அவர்கள் என்னை அழைக்க வேண்டும் என விரும்பவில்லை, ஆனால் நான் போக விரும்புகிறேன். 82 00:05:02,220 --> 00:05:03,221 அதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? 83 00:05:05,098 --> 00:05:06,933 சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 84 00:05:07,517 --> 00:05:10,979 விரும்பவில்லை, ஆனால் விரும்புகிறாய், இதுதான் கேள்வியா? 85 00:05:11,563 --> 00:05:13,607 ஆம். ஏன் அது பழக்கமானது போல தோன்றுகிறது? 86 00:05:14,232 --> 00:05:15,984 ஏனென்றால் இப்போதுதான் அதை சொன்னாய். 87 00:05:16,818 --> 00:05:17,819 அப்படித்தான் நினைக்கிறேன். 88 00:05:19,696 --> 00:05:21,323 அட கடவுளே. 89 00:05:21,406 --> 00:05:23,325 உனக்கு உன் விருப்பங்களில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறதா? 90 00:05:23,825 --> 00:05:25,118 எதைப் போல? 91 00:05:25,201 --> 00:05:30,498 என் அம்மா சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். ஆனால் என் அப்பாவுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். 92 00:05:31,124 --> 00:05:33,919 ஆனால் அவர் மேக்ஸுடன் இருக்க விரும்புகிறார், நான் அதற்கு சந்தோஷப்பட வேண்டும் என்றும். 93 00:05:34,628 --> 00:05:37,464 -சரி, ஆனால் விருப்பங்கள் மாறலாம். -அப்படி நினைக்கிறாயா? 94 00:05:37,547 --> 00:05:40,175 நான் என் பழைய வீட்டிலேயே வசிக்க விரும்பினேன், 95 00:05:40,258 --> 00:05:43,178 ஆனால் இப்போது நீ என் தோழியாக இருப்பதால், நான் புது வீட்டில் வசிக்க விரும்புகிறேன். 96 00:05:44,137 --> 00:05:49,059 ஹானா விருந்துக்கு என்னை அழைக்க வேண்டும் என்று ஆசைதான், ஆனால் அதை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. 97 00:05:49,142 --> 00:05:52,062 -அவள் எல்லோரையும் அழைப்பதாக சொன்னாள். -அப்படியென்றால் நாம் அழைக்கப்படுவோமா? 98 00:05:52,145 --> 00:05:54,231 நான் பிரபலமானவளாக இருந்ததில்லை என்று நினைக்கிறேன். 99 00:05:56,274 --> 00:05:58,193 ஆனால், என்னை அழைத்தார்கள் என்றால், 100 00:05:58,276 --> 00:06:00,946 என்னுடைய அழகான, சிறிய நாய்கள் பொம்மை கொண்ட இளஞ்சிவப்பு கம்பளி பைஜாமாவை அணிவேன். 101 00:06:01,029 --> 00:06:04,449 -அவற்றை பேம் அத்தை எனக்கு கொடுத்தார். -எனக்கு அசல் பைஜாமாக்கள் வேண்டும். 102 00:06:04,532 --> 00:06:06,618 நான் படுக்கைக்கு பொதுவாக ஜிம் ஷார்ட்ஸும் டி-சர்ட்டும் அணிவேன். 103 00:06:06,701 --> 00:06:08,828 கவலைப்படாதே. நீ கடனாக பெற என்னிடம் சில இருக்கின்றன. 104 00:06:10,163 --> 00:06:12,540 -உணவு. -உணவு. 105 00:06:12,624 --> 00:06:14,751 -ஹேய், ஷான்டே. -இப்போது பேச முடியாது, ஆம்பர். 106 00:06:14,834 --> 00:06:16,086 ஹாய் சொன்னேன் அவ்வளவுதான். 107 00:06:16,169 --> 00:06:19,548 பேன்கேக்குகள், வாஃப்பில்கள், மற்றும் எல்லா வகையான ஸ்மூத்திகளும். 108 00:06:19,631 --> 00:06:21,383 காலை உணவு வழங்கப்படும். 109 00:06:22,259 --> 00:06:23,718 ஹாய், ஹானா! 110 00:06:23,802 --> 00:06:24,719 ஹாய். ஹலோ. 111 00:06:25,762 --> 00:06:27,305 பரவாயில்லை. 112 00:06:27,389 --> 00:06:28,682 -ஹலோ. -ஹாய். 113 00:06:28,765 --> 00:06:30,225 வா போகலாம். 114 00:06:30,892 --> 00:06:34,271 பார்த்தாயா? அவள் ஹாய் சொன்னாள். அவள் நம்மை அழைப்பாள் என்று நம்புகிறேன். 115 00:06:34,354 --> 00:06:36,314 ஒரு வகையில் செய்தாள். 116 00:06:36,398 --> 00:06:38,149 ஆனால் நாம் இரவிலும் தங்கலாம். 117 00:06:38,233 --> 00:06:40,986 என் அப்பா வீடு தேடுகிறார், அதோடு பாதி நேரம் நான் அவருடன் தான் இருப்பேன். 118 00:06:41,069 --> 00:06:42,237 நீ வந்து தங்க வேண்டும். 119 00:06:42,320 --> 00:06:46,074 ஆஹா. இரண்டு வீடுகளா? ஆடம்பரமாக இருக்கிறது. 120 00:06:46,157 --> 00:06:48,910 ஆனால் அதுதான் விஷயம். எனக்கு இரண்டு வீடுகள் வேண்டாம். 121 00:06:49,619 --> 00:06:51,871 அப்பா என்னோடும் அம்மாவோடும் வீட்டில் இருக்க வேண்டும். 122 00:06:51,955 --> 00:06:55,041 பள்ளிக்குப் பிறகு உடனடியாக திருமணத்தை நிறுத்துபவர்கள் சந்திப்பை நடத்த வேண்டும். 123 00:06:55,125 --> 00:06:56,585 நிச்சயமாக. என்னிடம் சில கூடுதல் யோசனைகள் உள்ளன. 124 00:06:58,920 --> 00:07:01,298 -ஹாய், ஸ்டான்லி. -ஹேய். 125 00:07:01,381 --> 00:07:03,341 -நான் பிராண்டி. டி கொண்ட பிராண்டி... -ஹேய், ஆம்பர். 126 00:07:03,425 --> 00:07:05,010 ஹேய், ஸ்டான்லி. 127 00:07:08,096 --> 00:07:09,639 அட, நீ நலமா? 128 00:07:10,515 --> 00:07:11,766 இவள் நன்றாக இருக்கிறாள். 129 00:07:11,850 --> 00:07:13,727 -நீ நலமா? -மிகவும் சங்கடமாகிவிட்டது. 130 00:07:13,810 --> 00:07:14,853 நன்றாக இருக்கிறேன்! 131 00:07:17,230 --> 00:07:19,274 அந்த தூணை நகர்த்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்! 132 00:07:19,357 --> 00:07:21,276 -திரும்பி பார்க்காதே! -சரி. சரி. 133 00:07:21,359 --> 00:07:23,945 -அமைதியாக. -மிகவும் அருமை. 134 00:07:24,029 --> 00:07:27,782 பலமானவள். ஆஹா. நீ அந்த தூணில் மோதினாய்! 135 00:07:27,866 --> 00:07:30,452 வலிக்கிறது. நாம் வெளியே சென்றதும் கத்த காத்திருக்கிறேன். 136 00:07:32,037 --> 00:07:33,872 இந்த பைஜாமாக்கள் அழகாக உள்ளன. 137 00:07:33,955 --> 00:07:37,042 நான் இவற்றை பொதுவாக பகலில், மதியம் உணவுக்கு அணிவேன். 138 00:07:37,125 --> 00:07:38,877 நான் இவற்றை ஹானாவின் பார்ட்டிக்காக கடனாகப் பெற்றேன். 139 00:07:38,960 --> 00:07:40,921 நான் இந்த சந்திப்பில் ஏதாவது குறிப்புகள் எடுக்க வேண்டுமா? 140 00:07:41,004 --> 00:07:42,797 அதிகாரப்பூர்வமாக சந்திப்பை தொடங்கிவிட்டோமா? 141 00:07:42,881 --> 00:07:45,842 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். ஆம்பர் ஒரு மைல் தூரம் நடந்ததும். 142 00:07:46,843 --> 00:07:48,136 பொறுங்கள். 143 00:07:48,220 --> 00:07:51,848 மேக்ஸ் என்னையும் அம்மாவையும் சனிக்கிழமை இரவு உணவிற்கு அழைத்துச் செல்லும் போது, 144 00:07:51,932 --> 00:07:54,226 அவர்கள் நிச்சயதார்த்தத்தைப் பற்றி என்னிடம் சொல்ல 145 00:07:55,393 --> 00:07:59,689 அவர்களுக்கு பாதுகாப்பான, கூட்டமுள்ள, பொது இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வார்கள். 146 00:07:59,773 --> 00:08:02,484 உன்னால் எதுவும் செய்ய முடியாது. இதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். 147 00:08:03,568 --> 00:08:05,862 ஒருவேளை உன் அம்மா சரி என்று சொல்லாமல் இருக்கலாம். 148 00:08:05,946 --> 00:08:08,531 ஒருவேளை அவர் திருப்பித் தருவதால் மோதிரம் டிராயரில் இருக்கலாம். 149 00:08:08,615 --> 00:08:10,659 பிறகு ஏன் அவர் அதை வைத்திருக்க வேண்டும்? 150 00:08:11,409 --> 00:08:13,912 வேண்டாம் என்று சொல்லும் ஒருவருக்கு மோதிரத்தை கொடுத்திருக்க மாட்டார். 151 00:08:14,496 --> 00:08:15,538 அதுதான் உண்மை. 152 00:08:16,206 --> 00:08:18,375 ஒருவேளை முதலில் சரி என்று சொல்லியிருக்கலாம். 153 00:08:18,458 --> 00:08:21,670 ஆனால் என் அப்பா திரும்ப வருவதால் பிறகு மனதை மாற்றிக்கொண்டிருக்கலாம். 154 00:08:22,254 --> 00:08:24,756 கடைசியாக சொன்னதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. 155 00:08:24,839 --> 00:08:26,591 நாம் பேசியதை மறுபரிசீலனை செய்வோமா? 156 00:08:26,675 --> 00:08:30,345 மேக்ஸ் காதலை சொன்னார், உன் அம்மா சரி என்றார், ஆனால் பிறகு மறுபரிசீலனை செய்தார், 157 00:08:30,428 --> 00:08:32,514 எனவே அவர் மோதிரத்தை பெட்டியில் வைத்துவிட்டார். 158 00:08:32,597 --> 00:08:34,349 அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக மேக்ஸ் நினைக்கிறார், 159 00:08:34,432 --> 00:08:37,686 ஆனால் தனது முன்னாள் கணவர் திரும்ப வருவதால், ஒருவேளை நாளை இரவே, 160 00:08:37,769 --> 00:08:40,813 அவர் மோதிரத்தைத் திரும்பக் கொடுத்து, அவரது காதலை மறுக்கலாம். 161 00:08:42,399 --> 00:08:44,776 இது திரைப்படம் போலவும் நான் அதில் துணை நடிகர் போலவும் இருக்கிறது. 162 00:08:44,859 --> 00:08:47,112 சரி, பிராண்டி, இது முக்கியமானது. 163 00:08:47,821 --> 00:08:51,783 சரி, எனக்குத் தெரியும். திரைப்படம் நாடகமாக இருக்கப்போகிறது. 164 00:08:52,701 --> 00:08:53,868 நீ வேடிக்கையானவள். 165 00:08:54,536 --> 00:08:55,662 நன்றி. 166 00:08:55,745 --> 00:08:57,372 -நிறுத்துங்கள். -என்ன? 167 00:08:57,455 --> 00:08:59,624 மிகவும் நெருக்கமாவதை. 168 00:08:59,708 --> 00:09:01,960 -ஆம், சரி. -அப்படியில்லை. 169 00:09:02,043 --> 00:09:03,920 நாம் கவனம் செலுத்த வேண்டும். 170 00:09:05,964 --> 00:09:09,968 என்னிடம் முதலில் சொல்ல வேண்டும் என்பதால் அம்மா மோதிரத்தை அணியவில்லை. 171 00:09:10,760 --> 00:09:13,263 ஒருவேளை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், முன்பே மோதிரத்தை அணிந்தது 172 00:09:13,346 --> 00:09:16,057 அபசகுனம் போய்விடலாம் என்று என் அம்மா கருதுகிறார். 173 00:09:17,267 --> 00:09:18,351 எனவே அவர் காத்திருக்கிறார். 174 00:09:19,102 --> 00:09:21,104 அது என்னை உணர வைக்கிறது. 175 00:09:21,771 --> 00:09:22,939 என்ன உணர்கிறாய்? 176 00:09:25,066 --> 00:09:26,318 உணர்ச்சிகளை. 177 00:09:28,528 --> 00:09:32,115 அப்பா வீட்டிற்கு வரும்போது அம்மா தனியானவர் என்பதை காட்ட அவர்களின் உறவை எப்படி தடுப்பேன்? 178 00:09:33,158 --> 00:09:34,159 எனக்கு வேண்டியது அவ்வளவுதான். 179 00:09:35,035 --> 00:09:40,832 அவர்கள் ஒருவரையொருவர் மீண்டும் பார்த்து காதலால் இணைய ஒரு வாய்ப்பு. 180 00:09:40,916 --> 00:09:42,000 எளிது. 181 00:09:42,083 --> 00:09:44,669 உன் அப்பா வீட்டிற்கு வரும்வரை அம்மா மகள் பேச்சை தவிர்ப்பது தான் 182 00:09:44,753 --> 00:09:45,962 நீ செய்ய வேண்டியது. 183 00:09:46,046 --> 00:09:47,088 என்ன? 184 00:09:47,172 --> 00:09:49,549 உன்னிடம் சொல்ல உன் அம்மாவிற்கு வாய்ப்பு இல்லாமல் போனால்... 185 00:09:49,633 --> 00:09:52,093 அவர் நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக்க மாட்டார்! 186 00:09:54,012 --> 00:09:54,846 சரி. 187 00:09:54,930 --> 00:09:56,765 திருமணத்தை நிறுத்துபவர்களில் இருந்து நிச்சயதார்த்தத்தைத் தடுப்பவர்கள் 188 00:09:56,848 --> 00:09:59,851 என்ற பெயர் மாற்றத்தை முன்மொழிய விரும்புகிறேன். 189 00:09:59,935 --> 00:10:02,312 -ஆதரவாக இருந்தால் ஆம் என்று சொல்லுங்கள். -ஆம். 190 00:10:03,021 --> 00:10:05,190 பொறு, சனிக்கிழமையன்று இரவு உணவில் நான் என்ன செய்வது? 191 00:10:05,273 --> 00:10:06,858 நமக்கு இன்னொரு கலந்துரையாடல் தேவை. 192 00:10:06,942 --> 00:10:10,028 அதுவரை, பேசுவதை தவிர்த்திடு. 193 00:10:10,612 --> 00:10:11,988 சரி. 194 00:10:45,480 --> 00:10:46,565 ஆம்பர்? 195 00:10:57,742 --> 00:10:59,327 ஹேய். 196 00:11:15,427 --> 00:11:19,890 நீ அதை உன் விரலில் மாட்டியிருந்தால், நான் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பேன். 197 00:11:22,475 --> 00:11:23,935 நீ நலமா? 198 00:11:24,728 --> 00:11:26,813 ஆம்பர் விநோதமாக நடந்துகொள்கிறாள். 199 00:11:28,148 --> 00:11:31,776 ஒருவேளை அவளது பக்கத்துவீட்டு, புதிய தோழியின் தூண்டுதலாக இருக்கலாம். 200 00:11:31,860 --> 00:11:32,903 -பிராண்டியா? -ஆம். 201 00:11:32,986 --> 00:11:34,237 இல்லை, அவள் நல்ல சிறுமி. 202 00:11:35,113 --> 00:11:36,573 ஆம்பருக்கு ஒரு தோழி தேவைப்படுகிறாள். 203 00:11:36,656 --> 00:11:38,867 அவ்வப்போது ஸ்கெட்ச் பேடை தாண்டியும் கொஞ்சம் 204 00:11:38,950 --> 00:11:40,952 அவளுடைய உலகம் விரிவடைய வேண்டும். 205 00:11:41,786 --> 00:11:46,333 நான் ஆம்பரைப் போல கலைஞனாக இருந்திருந்தால், எனது பெரும்பாலான நேரத்தை வரைவதில் செலவிடுவேன். 206 00:11:46,416 --> 00:11:49,419 -அதைத்தான் என் அப்பா எப்போதும் சொல்வார். -அதைத்தான் அவளது அப்பா எப்போதும் சொல்வார். 207 00:11:52,130 --> 00:11:53,673 உன்னை நேசிக்கிறேன். 208 00:11:54,633 --> 00:11:55,800 நானும் உன்னை நேசிக்கிறேன். 209 00:11:57,093 --> 00:11:59,888 அதனால் என்ன? உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா இல்லையா? 210 00:12:00,597 --> 00:12:02,140 உனக்கு ஏதாவது கேட்டதா? 211 00:12:02,224 --> 00:12:03,225 இல்லை. 212 00:12:06,978 --> 00:12:08,605 இந்த திராட்சை சாறு எந்த ஆண்டு உற்பத்தியானது? 213 00:12:09,773 --> 00:12:13,610 அவர்கள் "நிச்சயதார்த்தம்" என்ற வார்த்தையை சொல்லவில்லை, ஆனால் மோதிரம் அங்கே இருந்தது. 214 00:12:13,693 --> 00:12:15,362 ஆம், இவள் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாள். 215 00:12:15,445 --> 00:12:18,907 அம்மா அப்பாவைப் பற்றி சொன்னபோது, அது எனக்கு நம்பிக்கை அளித்தது. 216 00:12:19,407 --> 00:12:22,327 நான் இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். 217 00:12:22,869 --> 00:12:26,248 ரெட் டிராகனில் ஃபார்ச்சூன் குக்கீகள் உள்ளன. உன் அம்மா மூடநம்பிக்கை கொண்டவர். 218 00:12:26,831 --> 00:12:27,832 என்ன? 219 00:12:27,916 --> 00:12:31,753 அவற்றை ஒன்றாக சேர், ஒருவேளை உன் அம்மாவுக்கு காத்திருக்க 220 00:12:31,836 --> 00:12:35,382 காரணத்தைத் தரும் ஒரு ஃபார்ச்சூன் குக்கீயை நீ வாங்கலாம். 221 00:12:35,465 --> 00:12:39,427 சரி, அது வசதியாக இருக்கும். ஆனால் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? 222 00:12:40,470 --> 00:12:44,099 நீயே அதில் உள்ளதை எழுதினால் 100%. 223 00:12:44,975 --> 00:12:46,560 அது ஒரு நல்ல யோசனை. 224 00:12:50,313 --> 00:12:52,774 என் கடவுளே. 225 00:12:52,857 --> 00:12:53,858 என்ன? 226 00:12:54,484 --> 00:12:57,487 இந்த வார இறுதியின் பைஜாமா பார்ட்டிக்கான விருந்தினர் பட்டியலை ஹானா வெளியிட்டிருக்கிறாள். 227 00:12:57,571 --> 00:12:59,781 "கத்ரீனா, மெலிசா, ஏரியல்..." 228 00:12:59,864 --> 00:13:01,992 ஏறக்குறைய ஆறாம் வகுப்பில் உள்ள எல்லா பெண்ணும் அழைக்கப்படுகிறார்கள். 229 00:13:02,492 --> 00:13:04,995 "பெலிஸ், மோலி, குளோரியா..." 230 00:13:05,078 --> 00:13:06,871 நம் பெயர் எங்கே? 231 00:13:08,039 --> 00:13:09,040 நம்மைத் தவிர. 232 00:13:11,334 --> 00:13:12,419 யாருக்கு கவலை? 233 00:13:13,545 --> 00:13:14,754 அழைக்காததே கெளரவம். 234 00:13:14,838 --> 00:13:15,839 சரியா? 235 00:13:20,594 --> 00:13:23,054 அச்சச்சோ. வருந்துகிறேன், உங்கள் இருவருக்காகவும். 236 00:13:24,598 --> 00:13:28,643 நிச்சயதார்த்தத்தைத் தடுப்பவர்களின் சந்திப்பு இப்போது இரவு 7:42 மணிக்கு முடிவடைகிறது. 237 00:13:29,185 --> 00:13:31,229 பேசாமல் தவிக்கும் திட்டம் செயலில் உள்ளது. 238 00:13:31,813 --> 00:13:35,442 திட்டம்: உன் நல்ல அதிர்ஷ்டத்தை உறுதிப்படுத்த ஒரு நல்ல ஃபார்ச்சூன் குக்கீயை எழுதுவது. 239 00:13:35,525 --> 00:13:36,818 பை, பிறகு பேசலாம். 240 00:13:37,485 --> 00:13:38,486 பை, பிறகு பேசலாம். 241 00:13:40,196 --> 00:13:41,197 நாம் போகிறோம். 242 00:13:41,281 --> 00:13:44,451 -எங்கே? -பைஜாமா பார்ட்டிக்கு. 243 00:14:02,302 --> 00:14:04,221 வா, எனக்கு ஒரு ஜன்னல் தெரிகிறது. 244 00:14:07,766 --> 00:14:09,267 எதுவும் இல்லை. 245 00:14:13,188 --> 00:14:15,732 நம்மால் எதையும் பார்க்க முடியாது. அவர்கள் அநேகமாக மாடியில் இருக்கலாம். 246 00:14:15,815 --> 00:14:18,818 ஸ்கேட்டிங் ரிங்க் அல்லது ஏதாவது கொண்ட பெரிய படுக்கையறை அவளிடம் இருக்கலாம். 247 00:14:19,569 --> 00:14:21,154 -உன்னால் ஏற முடியுமா? -என்ன? 248 00:14:22,155 --> 00:14:24,199 யானைகள், சிங்கங்கள் போன்றவற்றை அவற்றின் 249 00:14:24,282 --> 00:14:27,160 இயற்கையான வாழ்விடங்களில் ஆராய விஞ்ஞானிகள் புதர்களுக்குள் ஒளிந்திருப்பார்கள். 250 00:14:27,244 --> 00:14:29,204 நாம் இதைச் செய்வதை என்னால் நம்ப முடியவில்லை. 251 00:14:31,915 --> 00:14:32,916 ஐயோ. 252 00:14:35,085 --> 00:14:38,296 அவளிடம் அலங்கார கண்ணாடி இருக்கிறது. விளக்குகளை கொண்ட கண்ணாடி. 253 00:14:39,172 --> 00:14:42,175 அதோடு ஒரு முழு நீள கண்ணாடி. இல்லை, இரண்டு. 254 00:14:43,885 --> 00:14:45,053 அவள் படுக்கையைப் பார். 255 00:14:48,640 --> 00:14:50,725 அதற்கு சிறிய படிக்கட்டுகளா? நிஜமாகவா? 256 00:14:51,393 --> 00:14:56,273 இங்கு தங்கள் இயற்கை வாழ்விடத்தில் உள்ள பிரபல நண்பர்கள் குழுவைப் பார்க்கிறோம். 257 00:14:56,356 --> 00:14:59,776 அவர்கள் பள்ளியின் மக்கள் தொகையில் 2% மட்டுமே இருந்தாலும், 258 00:14:59,859 --> 00:15:03,780 அதன் நாடகத்தின் 50% க்கும் மேல் அவர்களே நடத்துகிறார்கள். 259 00:15:08,076 --> 00:15:09,327 இல்லை. என் கடவுளே. 260 00:15:12,122 --> 00:15:13,665 -நீ மரத்தின் ஒரு பகுதி போல அசையாமல் இரு. -சரி. 261 00:15:18,420 --> 00:15:19,713 கிட்டத்தட்ட மாட்டியிருப்போம். 262 00:15:21,673 --> 00:15:24,092 சில நேரங்களில் ஒரு நாள் நான் அவர்களில் ஒருவளாக இருக்க விரும்புகிறேன். 263 00:15:24,175 --> 00:15:25,719 ஆம், நானும்தான். 264 00:15:25,802 --> 00:15:29,431 ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, நானே என்னை மிஸ் செய்வேன். 265 00:15:29,931 --> 00:15:33,101 ஆம். நானும் என்னை மிஸ் பண்ணுவேன். 266 00:15:33,727 --> 00:15:34,936 அதோடு உன்னையும். 267 00:15:36,980 --> 00:15:38,398 பார், ஷான்டே இருக்கிறாள்! 268 00:15:38,481 --> 00:15:40,358 ஹானாவுக்கு நிகராக பிரபலமானவள். 269 00:15:40,442 --> 00:15:42,485 ஆம், அவள் பள்ளியில் பிரபலமானவள். 270 00:16:05,091 --> 00:16:06,343 நகராதே. 271 00:16:10,263 --> 00:16:11,514 இல்லை, வேண்டாம், தயவுசெய்து வேண்டாம். 272 00:16:18,104 --> 00:16:19,147 அவள் என்ன செய்கிறாள்? 273 00:16:20,523 --> 00:16:22,192 கவலை வேண்டாம் 274 00:16:22,275 --> 00:16:24,361 அவள் டெய்லர் ஸ்விஃப்டின் ரசிகையாக இருக்க வேண்டும். 275 00:16:24,444 --> 00:16:26,863 இது "யூ பிளாங் டு மீ" பாட்டில் நடப்பது போல இருக்கிறது. 276 00:16:36,289 --> 00:16:38,708 நீங்கள் எனக்கு கடன்பட்டிருக்கிறீர்கள் 277 00:16:39,876 --> 00:16:41,253 சரி, அது பயமுறுத்துகிறது. 278 00:16:41,336 --> 00:16:42,879 ஆம். இங்கிருந்து போகலாம். 279 00:16:45,090 --> 00:16:47,884 என் தலையை வளிமண்டலத்துக்கு உயர்த்தி 280 00:16:47,968 --> 00:16:53,515 நான் நன்றாக இருப்பேன் என்று தெரியும் 281 00:17:00,397 --> 00:17:03,233 அன்புள்ள டைரி. நான் ஒரு சாகச பயணத்தில் சென்றிருந்தேன். 282 00:17:04,109 --> 00:17:08,905 நான் பக்கத்து வீட்டு பிராண்டியுடன் ஒரு மரத்தில் ஏறி, பிரபலமானவர்களை பார்த்தேன். 283 00:17:09,738 --> 00:17:10,949 நான் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். 284 00:17:11,533 --> 00:17:16,496 ஒன்று: அவர்கள் படுக்கைக்கு மாடிக்கு சென்ற பிறகு, படிக்கட்டுகளில் ஏற வேண்டியிருக்கிறது. 285 00:17:17,497 --> 00:17:21,626 பிராண்டியுடன் சாகசம் செய்வது எவ்வளவு வேடிக்கையானது என்பதை நான் கற்றுக்கொண்டேன்... 286 00:17:21,709 --> 00:17:23,920 அது மிகவும் வேடிக்கையாக இருந்தது... 287 00:17:24,004 --> 00:17:28,382 ஆனால்... பார்ட்டிக்கு எங்களை அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 288 00:17:29,009 --> 00:17:30,218 சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். 289 00:17:31,344 --> 00:17:34,306 எங்களைச் சேர்க்காததால், அவர்கள் எதை இழக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. 290 00:17:36,349 --> 00:17:39,686 சேர்க்காதது வலி ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தேன். 291 00:17:42,439 --> 00:17:46,276 இன்னொரு விஷயம், இன்று நடக்கும்போது ஒரு தூணில் மோதிக்கொண்டேன், 292 00:17:46,359 --> 00:17:48,778 பள்ளியிலேயே அழகான பையனுக்கு முன்னால். 293 00:17:49,613 --> 00:17:51,031 ஆம், அவன் ஸ்டான்லிதான். 294 00:17:51,865 --> 00:17:53,116 அது மிகவும் சங்கடமாக இருந்தது. 295 00:17:54,075 --> 00:17:55,952 ஆனால் நான் அவனை சிரிக்க வைத்தேன். 296 00:17:57,579 --> 00:18:00,415 -ஆம்பர்? -அம்மா! என் டைரியிடம் பேசுகிறேன்! 297 00:18:00,498 --> 00:18:03,168 மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கவும். 298 00:18:03,251 --> 00:18:06,296 நான் எதுவும் கேட்கவில்லை. இருந்தாலும் அந்த சிரிப்பைப் பார்த்தேன். 299 00:18:14,304 --> 00:18:15,889 அச்சச்சோ! 300 00:18:34,950 --> 00:18:36,660 இயற்கையானது 301 00:18:37,244 --> 00:18:39,996 ஜஸ்டின் ஃபார்ச்சூன் குக்கீ அதிர்ஷ்டத்தைக் கொடுத்ததா? 302 00:18:41,831 --> 00:18:44,000 எல்லாம் எக்காலத்துக்கும் தொடராது? 303 00:18:44,960 --> 00:18:46,044 இல்லை, அது நல்லதல்ல. 304 00:18:46,127 --> 00:18:47,337 சரி. 305 00:18:48,797 --> 00:18:52,217 நிச்சயதார்த்தம் செய்யாதது முன்னாள் கணவருக்கு வாய்ப்பு அளிப்பதோடு, 306 00:18:52,717 --> 00:18:54,344 மகளை சந்தோஷப்படுத்துகிறதா? 307 00:18:54,427 --> 00:18:56,763 நான் அப்படி நினைக்கவில்லை… 308 00:18:57,722 --> 00:19:00,350 பிறகு என்ன? அதிர்ஷ்டம் என்ன சொல்ல வேண்டும்? 309 00:19:01,393 --> 00:19:02,227 நீ எப்படி உணருகிறாய், 310 00:19:02,310 --> 00:19:04,479 ஒரு அதிர்ஷ்டமான வழியில் நீ எப்படி உணர்கிறாய் என்பதை அது கூற வேண்டும். 311 00:19:04,563 --> 00:19:05,564 சரி. 312 00:19:08,024 --> 00:19:10,944 மன்னிக்கவும். ஜன்னல் மூடப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். 313 00:19:11,027 --> 00:19:12,654 உன் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறேன். 314 00:19:12,737 --> 00:19:16,449 பரவாயில்லை. நான் இருந்த பதட்டத்தில் அதை உணரவில்லை. 315 00:19:16,533 --> 00:19:17,784 இன்றிரவுக்கு வாழ்த்துகிறேன். 316 00:19:17,867 --> 00:19:19,703 உன் ஃபார்ச்சூன் குக்கீயை முடிவு செய்துவிட்டாயா? 317 00:19:19,786 --> 00:19:23,123 இல்லை. அந்த நேரத்தில் எது சரி என்று படுகிறதோ அதையே நான் படிப்பது போல 318 00:19:23,206 --> 00:19:25,000 நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 319 00:19:25,083 --> 00:19:27,836 வாழ்த்துக்கள், தைரியமான நிச்சயதார்த்தத்தை நிறுத்துபவளே. 320 00:19:27,919 --> 00:19:29,754 நன்றி. ஆலோசனை ஏதாவது? 321 00:19:31,298 --> 00:19:32,299 இல்லை. 322 00:19:34,634 --> 00:19:35,677 என் அப்பா. 323 00:19:36,845 --> 00:19:38,763 அவர் கூப்பிட்டால் ஏன் நீ அழைப்பை எடுக்கவில்லை? 324 00:19:38,847 --> 00:19:40,015 ஏனென்றால்… 325 00:19:42,475 --> 00:19:46,021 ஏனென்றால், அவர் மிகக் குறைவான முறை அழைப்பதால், நான் குரல் செய்தியைப் பெற விரும்புகிறேன், 326 00:19:46,104 --> 00:19:47,439 எனவே அதை சில முறை கேட்கலாம், 327 00:19:47,522 --> 00:19:50,025 அது அவர் என்னை அதிகமாக அழைப்பது போல தோன்றும். 328 00:19:51,443 --> 00:19:52,527 அது விசித்திரமா இல்லையா? 329 00:19:52,611 --> 00:19:55,447 இல்லை. அது என்னை உணர வைக்கிறது. 330 00:19:56,531 --> 00:19:57,866 என்ன உணர்கிறாய்? 331 00:19:59,993 --> 00:20:00,994 உணர்ச்சிகளை. 332 00:20:02,579 --> 00:20:04,122 ஆம்பர்? நீ தயாரா? 333 00:20:12,631 --> 00:20:14,841 இந்த வாரம் முழுவதும் உன்னுடன் பேச நேரம் கிடைக்கவில்லை! 334 00:20:14,925 --> 00:20:16,968 ஜஸ்டின் குரல் செய்தி அனுப்பினான். இப்போது அதை கேட்கிறேன். 335 00:20:17,052 --> 00:20:18,261 சரி. 336 00:20:18,345 --> 00:20:20,180 சரி! நாம் தயாரா? 337 00:20:20,263 --> 00:20:21,681 -ஆம். -ஆம்? 338 00:20:28,063 --> 00:20:29,814 நான் உங்களுக்கு வேறு ஏதாவது உதவி செய்ய முடியுமா? 339 00:20:29,898 --> 00:20:32,359 பரவாயில்லை. இந்த இடத்தை மிஸ் செய்யப் போகிறேன். 340 00:20:32,442 --> 00:20:34,402 ஆம். ஆனால் நீங்கள் வீட்டிற்குச் செல்வீர்கள். 341 00:20:34,486 --> 00:20:36,696 ஆம். என் மனைவி மற்றும் மகளுடன் இருக்க. 342 00:20:36,780 --> 00:20:37,906 பொறுங்கள், நான் நினைத்தேன்... 343 00:20:37,989 --> 00:20:41,868 ஆம். முன்னாள் மனைவி. பழைய பழக்கம். 344 00:20:41,952 --> 00:20:44,162 ஆனால் ஆம், என் மகளுடன் இருப்பேன். 345 00:20:49,292 --> 00:20:50,669 பிலிப் பிரவுனின் அலுவலகம். 346 00:20:52,546 --> 00:20:53,964 ஆம், நிச்சயமாக, ஒரு நொடி. 347 00:20:54,047 --> 00:20:56,967 அமெரிக்காவில் உள்ள இரண்டு மாடி அப்பார்ட்மெண்ட் பற்றி மூஸ். 348 00:20:57,050 --> 00:20:58,051 நன்றி. 349 00:21:01,179 --> 00:21:02,180 ஃபில் பேசுகிறேன். 350 00:21:03,139 --> 00:21:05,600 மூஸ், எப்படியிருக்கிறாய், நண்பா? நலமா? 351 00:21:08,186 --> 00:21:11,690 ஆம், இணையத்தில் புகைப்படங்களைப் பார்த்தேன், நண்பா, அந்த இடம் அழகாக இருக்கிறது. 352 00:21:12,566 --> 00:21:16,361 என் மகளுக்கு அது பிடிக்கும் என்று நினைக்கிறேன். எனவே ஆம், அதை எடுத்துக்கொள்கிறேன். 353 00:21:18,822 --> 00:21:20,532 அந்த வியாழக்கிழமை சாவியை வாங்கிக்கொள்கிறேன். 354 00:21:21,575 --> 00:21:23,118 சரியா? சரி. 355 00:21:23,952 --> 00:21:25,453 உன்னையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். 356 00:21:26,204 --> 00:21:27,414 சரி, பை. 357 00:21:50,729 --> 00:21:53,648 அவர் சிறந்த ஆசிரியர், ஆனால் அது வகுப்பு பட்டியலில் கூட இல்லை. 358 00:21:53,732 --> 00:21:55,525 ஆம்பர், செல்லம், மேக்ஸும் நானும், நாங்கள்... 359 00:21:55,609 --> 00:21:57,527 அம்மா, என்னை முடிக்க விடுங்கள். 360 00:21:57,611 --> 00:22:00,572 எனவே நான் பெறக்கூடிய கூடுதல் மதிப்பெண்கள் அவ்வளவுதான். 361 00:22:01,406 --> 00:22:04,075 அதுவும், என்னுடைய எல்லா வீட்டுப்பாடத்தையும் நான் சரியான நேரத்தில் செய்தால். 362 00:22:04,868 --> 00:22:07,412 அதோடு எனது தன்னார்வப் பணிக்காக. 363 00:22:08,413 --> 00:22:10,874 உன்னை நினைத்து நீ மிகவும் பெருமைப்பட வேண்டும். 364 00:22:10,957 --> 00:22:13,585 -நன்றி. ஆம். -ஆம், உன்னைப் பற்றி பெருமைப்படுகிறேன், செல்லம். 365 00:22:13,668 --> 00:22:15,003 நன்றி. 366 00:22:16,671 --> 00:22:18,673 உனக்கே தெரியும், ஆம்பர்… 367 00:22:18,757 --> 00:22:21,009 நான் ஃபார்ச்சூன் குக்கீகளை வாங்கி வருகிறேன். 368 00:22:23,303 --> 00:22:25,513 ஜஸ்டின் - என்ன நடக்கிறது? இன்னும் ஃபார்ச்சூன் குக்கீகளுக்கு வரவில்லையா? 369 00:22:25,597 --> 00:22:28,934 அல்லது நீ மோதிரத்தைக் கண்டுபிடித்ததை சொல்லிவிட்டாயா? 370 00:22:33,521 --> 00:22:36,691 அருமை. சரி. இனிப்பு. 371 00:22:41,196 --> 00:22:42,197 பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். 372 00:22:42,280 --> 00:22:43,573 வாழ்க்கையில் சிறந்த விஷயங்கள் இலவசமாக கிடைக்கின்றன. 373 00:22:43,657 --> 00:22:45,742 அது காத்திருப்பது முக்கியம். 374 00:22:46,701 --> 00:22:48,286 எல்லாவற்றுக்கும் நேரம் கொடுங்கள். 375 00:22:49,704 --> 00:22:53,458 எனவே நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். 376 00:22:56,086 --> 00:23:00,590 நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் புத்திசாலித்தனமான ஃபார்ச்சூன் குக்கீ இதுதான் என நினைக்கிறேன். 377 00:23:00,674 --> 00:23:02,133 நான் ஒப்புக்கொள்கிறேன். 378 00:23:03,260 --> 00:23:04,177 நிஜமாகவா? 379 00:23:04,886 --> 00:23:06,763 ஆம். முற்றிலும். 380 00:23:13,270 --> 00:23:18,316 அன்புள்ள டைரி. நான் நினைக்கிறன்... அம்மா மேக்ஸுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது 381 00:23:18,400 --> 00:23:23,154 நான் அம்மாவிற்காக மகிழ்ச்சியாக இல்லை என்ற குற்ற உணர்வு ஏற்படுவதாக நினைக்கிறேன். 382 00:23:24,155 --> 00:23:25,907 நன்றி சொல்ல விரும்புகிறேன், பெண்களே. 383 00:23:25,991 --> 00:23:27,075 எதற்காக? 384 00:23:28,076 --> 00:23:32,080 இன்றிரவு உங்களின் இரவு உணவிற்கு என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு. 385 00:23:33,707 --> 00:23:34,791 அம்மா. 386 00:23:35,875 --> 00:23:36,918 என்ன? 387 00:23:37,711 --> 00:23:38,753 நீங்கள் மோதிரத்தை அணியலாம். 388 00:23:43,091 --> 00:23:46,344 என் அம்மா என் அப்பாவுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும், என் அப்பா என் அம்மாவுடன் 389 00:23:46,428 --> 00:23:48,513 மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். 390 00:23:49,014 --> 00:23:53,852 அவர்கள் ஒன்றாக இருந்தால், அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 391 00:23:55,145 --> 00:23:56,730 மிகவும் மகிழ்ச்சியாக. 392 00:23:58,064 --> 00:24:01,318 எனவே நான், ஆம்பர் பிரவுன், ஆச்சரியப்படுகிறேன்… 393 00:24:02,444 --> 00:24:05,196 யாருடைய மகிழ்ச்சி மிக முக்கியமானது என்பதை எப்படி தீர்மானிப்பது? 394 00:24:06,573 --> 00:24:09,618 ஹேய், என் செல்ல மகளே. ஒரு இடத்தைக் கண்டுபிடித்தேன். இரண்டு மாடி. 395 00:24:09,701 --> 00:24:12,704 நாம் கீழ் மாடியில் வசிப்போம், மேலே ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது. 396 00:24:12,787 --> 00:24:16,249 எனக்கு கல்லூரி காலத்திலிருந்து அவரைத் தெரியும். அவருக்கு உன் வயதில் குழந்தைகள் உள்ளனர். 397 00:24:16,333 --> 00:24:17,667 உனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். 398 00:24:17,751 --> 00:24:20,962 இணையத்தில்தான் பார்த்தேன், ஆனால் தனியாக சிறிய முற்றம் இருக்கிறது. 399 00:24:21,046 --> 00:24:23,006 நீ உன் சொந்த தோட்டத்தை உருவாக்கலாம் என்று நினைத்தேன். 400 00:24:23,089 --> 00:24:24,466 உன்னை நேசிக்கிறேன். பிறகு பேசலாம். 401 00:24:25,050 --> 00:24:28,470 பிறகு சனிக்கிழமை, உன் வீட்டில் வீடியோ கேம்களை விளையாடலாம். 402 00:24:28,553 --> 00:24:31,848 நாம் மட்டும் தங்குவதற்கு அந்த காலி அப்பார்ட்மெண்ட் மிகவும் அருமையாக இருக்கும். 403 00:24:31,932 --> 00:24:33,350 நண்பா, எனக்கு அந்த இடம் பிடித்திருக்கிறது. 404 00:24:33,433 --> 00:24:34,768 உன்னிடம் வேதியியல் புத்தகம் இருக்கிறதா? 405 00:24:34,851 --> 00:24:36,144 ஆம், இதோ. 406 00:24:36,228 --> 00:24:37,520 நன்றி. 407 00:24:37,604 --> 00:24:38,939 வேதியியல் 408 00:24:40,106 --> 00:24:45,153 காலி அப்பார்ட்மெண்டில் தங்குவதைப் பற்றி சிறிது காலத்திற்கு மறந்துவிடு. 409 00:24:45,237 --> 00:24:47,739 -என்ன? -அப்பா தோட்ட வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டார். 410 00:24:47,822 --> 00:24:49,199 அட. 411 00:24:49,282 --> 00:24:50,951 அவருடன் கல்லூரியில் படித்த ஒருவருக்கு. 412 00:24:51,034 --> 00:24:53,912 அவருக்கு உதவ முயற்சிக்கிறார். தனியாக இருக்கும் அப்பா. ஒரு மகள். 413 00:24:53,995 --> 00:24:56,122 அப்படியென்றால், நாம் எங்கே தங்கப் போகிறோம்? 414 00:24:56,915 --> 00:24:57,958 அதற்கு ஒரு வழி யோசிக்கிறேன். 415 00:24:59,125 --> 00:25:00,502 சரி, சீக்கிரம் செய். 416 00:25:00,585 --> 00:25:02,837 வீடியோ கேம்கள் இல்லாமல் என்னால் நீண்ட காலம் இருக்க முடியாது என்பது உனக்கே தெரியும். 417 00:25:02,921 --> 00:25:03,964 என்னை நம்பு. 418 00:25:04,047 --> 00:25:05,340 என்னவோ. 419 00:26:06,359 --> 00:26:08,361 வசனத் தமிழாக்கம் அருண்குமார்