1 00:00:08,385 --> 00:00:10,804 அன்புள்ள டைரி, என் அப்பா திரும்ப வந்துவிட்டார். 2 00:00:10,887 --> 00:00:12,347 பாரிஸிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டார். 3 00:00:12,973 --> 00:00:16,768 வீட்டிற்கு என்றால், இந்த வீட்டிற்கு அல்ல, 4 00:00:16,851 --> 00:00:18,770 ஆனால் அமெரிக்கா வந்துவிட்டார். 5 00:00:18,853 --> 00:00:22,232 நாளை அவரைப் பார்க்கப் போகிறேன். அதோடு அவர் தங்கப்போகிற புதிய வீட்டையும், 6 00:00:22,983 --> 00:00:25,277 நானும் அவ்வப்போது அங்கே தங்கப்போகிறேன். 7 00:00:28,947 --> 00:00:34,536 நான் அப்பாவின் வீட்டை "வீடு" என்றழைத்தால் அம்மா வருத்தப்படுவாரா? 8 00:00:36,454 --> 00:00:39,457 அதை வீடு என்றழைக்கவில்லை என்றால் அப்பா வருத்தப்படுவாரா? 9 00:00:40,500 --> 00:00:44,880 ஆம்பர் பிரவுனாகிய நான், யாரையும் நோகடிக்க விரும்பவில்லை. 10 00:00:46,339 --> 00:00:49,009 எனவே, புதன்/வியாழனுக்கான அட்டவணை இதுதான். 11 00:00:49,092 --> 00:00:52,721 இப்போது, நாடகத்துக்கு ஆடிஷன் செய்ய விரும்புவோருக்கு வெள்ளிக்கிழமை 12 00:00:52,804 --> 00:00:56,600 ஒரு சுருக்கமான வரலாற்று வகுப்பை நடத்த இருக்கிறேன். 13 00:00:56,683 --> 00:00:59,352 எல்லா ஆடிஷன்களும் கலை அரங்கத்தில் நடக்க இருக்கிறது, 14 00:00:59,436 --> 00:01:01,897 எனவே கதையின் தலைப்பை அறிய 15 00:01:01,980 --> 00:01:03,189 அசெம்பிளி செய்தி பலகையை பாருங்கள், 16 00:01:03,273 --> 00:01:06,610 ஏனென்றால் அது அங்கு மட்டுமே ஒட்டப்படும். 17 00:01:06,693 --> 00:01:09,654 அதோடு நீங்கள்... 18 00:01:10,906 --> 00:01:12,574 கிளம்பலாம். 19 00:01:12,657 --> 00:01:13,700 நீங்கள் போகலாம். 20 00:01:28,256 --> 00:01:30,175 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 21 00:01:36,890 --> 00:01:38,350 ஹாய், ஆம்பர். 22 00:01:39,142 --> 00:01:41,686 ஹேய், என்னால் பார்க்க முடியவில்லை! 23 00:01:41,770 --> 00:01:43,438 சரி, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? 24 00:01:43,521 --> 00:01:46,358 நாமும் நாடகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். 25 00:01:46,441 --> 00:01:48,401 நான் வரவில்லை, நீ என்ன செய்கிறாயோ செய். 26 00:01:50,153 --> 00:01:51,738 அப்பா ஹாய் என் செல்ல மகளே, 27 00:01:51,821 --> 00:01:54,449 வேலை கடுமையாக இருக்கிறது, சத்தியமாக இந்த வாரத்தில் ஒருநாள் 28 00:01:54,532 --> 00:01:57,035 உன்னை பள்ளியிலிருந்து அழைத்துவர வருகிறேன். 29 00:02:00,789 --> 00:02:04,209 தொடர்ச்சியாக இது மூன்றாவது நாள், நான் மீண்டும் ஆம்பரை ஏமாற்ற விரும்பவில்லை. 30 00:02:05,043 --> 00:02:06,294 சரி, அழைப்பில் காத்திருக்கிறேன். 31 00:02:08,629 --> 00:02:10,674 உங்களுக்கு பில்டர்கள் தேவை என்று அப்பா சொன்னார்... 32 00:02:10,757 --> 00:02:12,300 ஆம். நன்றி, ஸ்டான்லி. 33 00:02:12,384 --> 00:02:14,678 -அவை கிடைத்தவுடன் கொண்டு வா. -சரி. 34 00:02:14,761 --> 00:02:18,056 ஜாக்கெட் பிடித்திருக்கிறது. என்னுடையதும் எங்கோ மோசமான நிலைமையில் இருக்கிறது. 35 00:02:18,139 --> 00:02:19,099 எந்த வகுப்பில் படிக்கிறாய்? 36 00:02:19,182 --> 00:02:21,268 -ஆறாம் வகுப்பு. -என்னுடைய மகளும் தான். 37 00:02:21,351 --> 00:02:22,435 நல்லது. 38 00:02:23,311 --> 00:02:24,688 உங்களிடம் கேரேஜ் சாவி இருக்கிறதா? 39 00:02:24,771 --> 00:02:26,356 -அல்லது இதை எங்கு வைப்பது? -சமையலறையில். 40 00:02:27,399 --> 00:02:28,608 -நிஜமாகவா? -ஆம்... 41 00:02:28,692 --> 00:02:30,735 -ஹலோ? -ராபர்ட். 42 00:02:30,819 --> 00:02:33,363 எனக்கு தினமும் 6 மணிவரை அடுத்தடுத்து சந்திப்புகள் இருந்தால், 43 00:02:33,446 --> 00:02:37,867 பிறகு நான் பாக்ஸ்டர் குழுவை, அதற்கடுத்து ICRF ஊழியர்களை இரவு உணவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 44 00:02:37,951 --> 00:02:41,288 இடமாறுதலை கேட்டது நீங்கள்தான், ஃபில். புரிந்துகொள்ளுங்கள். ஒரு வழியை யோசியுங்கள். 45 00:02:41,955 --> 00:02:45,041 ஆனால் இந்த வாரம் ஒரு நாள் 3 மணிக்கு குறைந்தது இரண்டு மணிநேர இடைவேளை வேண்டும். 46 00:02:45,125 --> 00:02:47,335 நாம் எல்லோரும் தியாகம் செய்கிறோம், ஃபில். 47 00:02:47,419 --> 00:02:49,421 உங்களுக்கு மட்டும் குடும்பம் இல்லை. 48 00:02:49,504 --> 00:02:52,173 இந்த வாடிக்கையாளர்கள் நமக்கு முக்கியம், இந்த ஒப்பந்தத்தை முடிக்க உங்கள் நேரத்தை 49 00:02:52,257 --> 00:02:54,301 ஒதுக்கி நீங்களும் அணியில் ஒரு அங்கமாக இருக்கப்போகிறீர்களா 50 00:02:54,384 --> 00:02:56,720 என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். 51 00:02:56,803 --> 00:02:58,471 ஃபில், கேட்கிறதா? 52 00:02:59,055 --> 00:03:02,601 அது கண்டிப்பாக "ஹேர்ஸ்ப்ரே தி மியூசிக்கல்" ஆக இருக்க வேண்டும். 53 00:03:02,684 --> 00:03:03,685 நிஜமாகவா? 54 00:03:05,020 --> 00:03:07,564 -தயவுசெய்து, ஷான்டே. -என்ன? 55 00:03:08,899 --> 00:03:10,692 நீங்கள் இருவரும் நாடகத்திற்கு ஆடிஷன் செய்கிறீர்களா? 56 00:03:10,775 --> 00:03:14,362 இல்லை. நான் குழுவின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். ஸ்பாட்லைட்டை கட்டுபடுத்துவது. 57 00:03:14,446 --> 00:03:15,447 எதற்காக? 58 00:03:15,530 --> 00:03:19,117 அது விண்வெளியில் ஒரு கிரகத்திற்கு பின்னால் இருட்டில் இருப்பது போல இருக்கும். 59 00:03:19,200 --> 00:03:21,411 நீ இருட்டிலும் உடையணிவாய் போல தெரிகிறது. 60 00:03:21,494 --> 00:03:22,495 நன்றி. 61 00:03:22,579 --> 00:03:24,581 அதை பாராட்டாக நான் நினைக்கவில்லை. 62 00:03:24,664 --> 00:03:26,666 -அது பாராட்டு இல்லை. -எனக்கு பாராட்டுதான். 63 00:03:27,792 --> 00:03:30,253 -நீ வித்தியாசமானவள். -நன்றி. 64 00:03:30,337 --> 00:03:31,630 இது பாராட்டுதான். 65 00:03:31,713 --> 00:03:34,883 -நாங்கள் நாடகத்திற்காக ஆடிஷன் செய்கிறோம். -நிச்சயாமாக போகிறோம். 66 00:03:34,966 --> 00:03:36,468 நான் மேடைக்காகவே பிறந்தவள். 67 00:03:36,551 --> 00:03:38,261 நீ எப்போதாவது மேடை ஏறியிருக்கிறாயா? 68 00:03:38,845 --> 00:03:42,057 ஆம். வீட்டின் அடித்தளத்தில் என் அப்பா எனக்காக ஒன்றை அமைத்தார். 69 00:03:42,140 --> 00:03:44,142 அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்தான். 70 00:03:44,226 --> 00:03:46,269 -அப்படியெல்லாம் இல்லை. -நிச்சயமாக இருக்கிறது. 71 00:03:46,353 --> 00:03:49,773 ஹானாவைப் பார்க்க மரங்களில் ஏற விரும்பும் ஆட்கள் கூட இருக்கிறார்கள். 72 00:03:49,856 --> 00:03:50,857 ஐயோ. 73 00:03:50,941 --> 00:03:54,986 அதாவது, ஆஹா, ஹானா. உன் ஆடிஷனுக்கு வாழ்த்துக்கள். 74 00:03:55,070 --> 00:03:56,196 நன்றி. 75 00:03:56,279 --> 00:03:59,616 பொறு. எதற்காக ஆடிஷன்? எந்த கதாபாத்திரத்திற்காக? 76 00:03:59,699 --> 00:04:02,619 நாடகத்தின் கதை என்ன, என்ன கதாபாத்திரம் தேவை என்று கூட எங்களுக்குத் தெரியாது. 77 00:04:02,702 --> 00:04:04,955 அது என்ன நாடகம் என்பது முக்கியமல்ல. 78 00:04:05,038 --> 00:04:08,124 -முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றைப் பெறுவோம். -ஆம், அதேதான். 79 00:04:08,208 --> 00:04:11,628 பெரிய கதாபாத்திரம். சிறந்த ஒன்று. நட்சத்திரம். டா. 80 00:04:13,255 --> 00:04:16,716 உன்னை ஆடிஷனில் பார்க்கிறேன், ஹானா. "விசார்ட் ஆப் ஆஸ்." 81 00:04:16,800 --> 00:04:18,009 உங்கள் எல்லோரையும்தான். 82 00:04:18,093 --> 00:04:20,804 "விசார்ட் ஆப் ஆஸ்"? அது சிறந்த படங்களில் ஒன்று. 83 00:04:20,887 --> 00:04:22,264 நான் அதை பார்த்ததில்லை. 84 00:04:22,347 --> 00:04:25,183 என்ன? கடவுளே. நீ அதைப் பார்க்க வேண்டும். 85 00:04:25,267 --> 00:04:26,393 சரி. 86 00:04:26,977 --> 00:04:30,105 என் அப்பா இன்று வீட்டிற்கு அழைத்துப் போக வருகிறார். நாம் அதை அவர் வீட்டில் தான் பார்க்க வேண்டும். 87 00:04:30,188 --> 00:04:31,856 எனவே, அவர் நிஜம்தானா? 88 00:04:32,691 --> 00:04:34,901 -ஆம். -ஆம், அவர் நிஜம்தான். 89 00:04:34,985 --> 00:04:36,361 அவர் பாரிஸில் வாசித்தார். 90 00:04:36,444 --> 00:04:38,321 நீ பொய் சொன்னாய் என்று நினைத்தேன். 91 00:04:38,405 --> 00:04:39,864 நான் எதற்காக பொய் சொல்ல வேண்டும்? 92 00:04:39,948 --> 00:04:42,117 தெரியவில்லை. பகட்டானவளாக காட்டிக்கொள்ள. 93 00:04:42,200 --> 00:04:45,120 எங்களைப் போல நீயும் அருமையானவளாக இருக்க முயற்சிக்க. 94 00:04:45,203 --> 00:04:48,081 -அது ஐந்தாம் வகுப்பு மனநிலை. -நான்காம் வகுப்பு! 95 00:04:48,164 --> 00:04:49,916 மூன்றாம் வகுப்பு! பொறு. 96 00:04:50,000 --> 00:04:51,459 வா, ஷான்டே. 97 00:04:52,294 --> 00:04:54,504 நான் வீட்டிற்கு நடந்து சென்றால், நீ உன் அப்பாவுடன் இருக்க நேரம் கிடைக்குமா? 98 00:04:54,588 --> 00:04:57,340 இல்லை. நீ எங்களுடன் வா. நீயும் அவரது அப்பார்ட்மெண்ட்டைப் பார்க்கலாம். 99 00:05:10,145 --> 00:05:11,354 வா போகலாம். 100 00:05:11,438 --> 00:05:13,106 அப்பா எங்கே? 101 00:05:13,189 --> 00:05:15,358 அவர் இப்படி உன்னை ஏமாற்றுவதை வெறுக்கிறேன். 102 00:05:16,067 --> 00:05:18,320 -பரவாயில்லை. -அது சரியில்லை. 103 00:05:18,403 --> 00:05:21,114 -அவர் நலமா? -ஆம். அவர் நன்றாகத்தான் இருக்கிறார். 104 00:05:21,197 --> 00:05:22,699 நீ நலமா? 105 00:05:22,782 --> 00:05:24,993 ஆம். நான் நன்றாக இருக்கிறேன். 106 00:05:26,912 --> 00:05:28,204 சரி. 107 00:05:28,288 --> 00:05:29,664 இனி "சரி" என்று சொல்லாதே. 108 00:05:29,748 --> 00:05:31,791 சரி. ஐயோ. மன்னித்துவிடு. 109 00:05:36,504 --> 00:05:37,589 வருந்தாதே, ஆம்பர். 110 00:05:38,298 --> 00:05:40,884 அவர் திரும்பி வந்து இரண்டு நாட்கள் தானே ஆகிறது, 111 00:05:40,967 --> 00:05:44,554 அதோடு பொருட்களை எடுத்துவைக்க வேண்டும், பிறகு அவரது வேலை... 112 00:05:44,638 --> 00:05:48,725 ஆம், எனக்கு நிறைய வேலை இருக்கும் என்பது புரிகிறது. 113 00:05:50,018 --> 00:05:52,187 நாம் ஐஸ் கிரீம் சாப்பிட நிறுத்தலாமா? 114 00:05:52,270 --> 00:05:54,147 நமக்கு நல்லதில்லாத வேறு எதுவாக இருந்தாலும்? 115 00:05:54,231 --> 00:05:55,941 -ஆம்! -சரி. 116 00:05:56,024 --> 00:05:57,776 இனி "சரி" என்று சொல்லாதே! 117 00:06:01,363 --> 00:06:02,781 நான் "காலை வணக்கம்" சொல்வேன், பாம், 118 00:06:02,864 --> 00:06:05,158 ஆனால் ஃபில் என்னிடம் கூட கேட்காமல் அவரது புதிய வீட்டில் 119 00:06:05,242 --> 00:06:07,494 அவள் தங்க வேண்டும் என்று ஆம்பரிடம் சொல்லிவிட்டார். 120 00:06:07,577 --> 00:06:11,414 விஷயம் என்னவென்றால், அவர் என்னிடம் சொல்லவில்லை, அது சரியில்லை. 121 00:06:11,498 --> 00:06:13,291 அவர் அவளுடைய அப்பா, சாரா. 122 00:06:14,167 --> 00:06:17,462 சரி, நான் அவளுடைய அம்மா. அவளுடைய அம்மா. 123 00:06:17,546 --> 00:06:22,592 அவளுடன் "முழுக்க, அனுதினமும், பயத்தில், கண்ணீரில், உற்சாகத்தில், ஒவ்வொரு இரவிலும் இருந்த, 124 00:06:22,676 --> 00:06:25,595 அவளுடைய அப்பாவைப் போல உலகின் மறு பக்கம் ஓடிவிடாத"அம்மா. 125 00:06:25,679 --> 00:06:27,639 அப்படித்தான் உன்னைப் பற்றி குறிப்பிடுவேன். 126 00:06:28,557 --> 00:06:30,725 வருந்தாதே, ஆனால் அழைப்பை துண்டிக்கிறேன். 127 00:06:31,726 --> 00:06:34,187 இதை ஆம்பரின் கண்ணோட்டத்தில் பார்க்க முயற்சி செய். 128 00:06:34,271 --> 00:06:36,022 அவர் திரும்பி வந்ததால் மிகவும் உற்சாகமாக இருக்கிறாள். 129 00:06:36,106 --> 00:06:38,483 அவர் ஒருவழியாக வீட்டிற்கு வந்துவிட்டார், எனவே அவளை அங்கே தங்கவிடு. 130 00:06:38,567 --> 00:06:40,026 அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தப்போகிறது? 131 00:06:40,110 --> 00:06:42,153 அவர் திரும்பி வந்த உடனேயே கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ள முடியாது. 132 00:06:42,237 --> 00:06:44,531 -சிறிய வெங்காயங்களை கொடுக்கிறாயா? -இவை ஸ்கேலியன்கள். 133 00:06:44,614 --> 00:06:46,992 -நல்லது. ஸ்கேலியன்கள். -இவை சைவ்கள். 134 00:06:47,075 --> 00:06:50,287 ஐயோ. சிறிய வெங்காயத்திற்கும், ஸ்கேலியன்களுக்கும், சைவ்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 135 00:06:50,370 --> 00:06:54,499 பள்ளி நாளில் ஆம்பர் அவரது வீட்டில் இரவில் தங்குவதைப் பற்றி விவாதிக்க 136 00:06:54,583 --> 00:06:55,584 ஃபில் என்னை அழைக்கவில்லை. 137 00:06:55,667 --> 00:06:56,960 பள்ளி பற்றி யாருக்குக் கவலை? 138 00:06:57,043 --> 00:06:59,129 -எனக்கிருக்கிறது. -அவ்வளவு முக்கியமில்லை. 139 00:06:59,212 --> 00:07:02,841 அது மிகவும் முக்கியம். வேண்டாம். ஆம்பரிடம் இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம். 140 00:07:02,924 --> 00:07:05,051 -யாராவது கல்லூரிக்கு முன்பு சொல்ல வேண்டும். -நிறுத்து. 141 00:07:05,135 --> 00:07:06,761 ஆசுவாசப்படுத்திக்கொள், சாரா. 142 00:07:06,845 --> 00:07:09,097 பிலிப்பின் செயல்கள் உன் உணர்வுகளைப் பாதிக்கவிடாதே. 143 00:07:09,180 --> 00:07:13,560 நான் இல்லாமல் ஆம்பருடன் பிலிப் திட்டங்கள் போடுவது தவறு. 144 00:07:14,185 --> 00:07:16,313 என்ன? மன்னித்துவிடு, என்ன? 145 00:07:16,396 --> 00:07:18,440 இல்லை, தெரியப்படுத்துவதில் என்னை சேர்க்கவில்லை. 146 00:07:18,523 --> 00:07:20,609 அது பற்றிய விவாதத்தில். அது... 147 00:07:21,651 --> 00:07:25,363 அம்மா அவரை முதலில் சந்தித்தது நினைவிருக்கிறதா? அவர் அவரை பிரின்ஸ் சார்மிங் என்றுதான் அழைப்பார். 148 00:07:28,199 --> 00:07:32,871 எனவே, நீ ஃபில் மீது கோபமாக இருப்பதை பற்றி பேசுகிறோமா அல்லது அவரில்லாமல் வாடுவது பற்றியா? 149 00:07:41,755 --> 00:07:46,801 இது பொருந்துகிறது! மிகச்சரியாக இருக்கிறது! 150 00:07:48,136 --> 00:07:52,474 அன்புள்ள டைரி, லூயிஸ் ப்ரிமா, அப்பாவிற்கு பிடித்த பாடகர்களில் ஒருவர். 151 00:07:52,557 --> 00:07:55,227 குறைந்தபட்சம் அவரது ஒரு பாடலாவது அப்பாவிற்கு பிடிக்கும். 152 00:07:55,310 --> 00:07:56,728 அது "ஏஞ்சலினா" பாடல். 153 00:07:58,188 --> 00:08:01,983 நான் இருமுறை ஆன்டிபாஸ்டாவை உண்கிறேன் அவள் அன்பானவள் என்பதற்காக 154 00:08:02,067 --> 00:08:04,736 ஏஞ்சலினா 155 00:08:06,112 --> 00:08:07,489 எனக்கு பாட பிடிக்கும். 156 00:08:07,572 --> 00:08:10,283 "விசார்ட் ஆப் ஆஸுக்கு" ஆடிஷன் செய்ய எனக்கு தைரியம் இருந்திருக்கலாம். 157 00:08:12,244 --> 00:08:14,454 என்னுடைய எட்டாவது வயதில் என் அப்பா இந்த சட்டையை வாங்கிக் கொடுத்தார். 158 00:08:14,537 --> 00:08:15,538 லூயிஸ் ப்ரிமா ஏஞ்சலினா 159 00:08:15,622 --> 00:08:17,707 ஆச்சரியப்படுவதற்கில்லை, ஒருவேளை பொருத்தமாக இருக்கலாம். 160 00:08:19,042 --> 00:08:22,546 நான் ஒரு நாயை வாங்கினால், அதற்கு ஏஞ்சலினா என்று பெயர் வைக்க முடிவெடுத்தேன். 161 00:08:22,629 --> 00:08:24,965 என் அம்மாவின் நடுப்பெயர் ஏஞ்சலினா. 162 00:08:25,048 --> 00:08:28,051 என் பாட்டியின் சகோதரி, பெரிய அத்தை ஏஞ்சியின் நினைவாக வைத்தது. 163 00:08:28,134 --> 00:08:32,889 எனக்கு ஏஞ்சி அத்தையை பிடிக்கும். அதோடு என் பாட்டியை மிகவும் பிடிக்கும். 164 00:08:38,144 --> 00:08:44,901 அம்மா மேக்ஸை மணந்தால், அவரது அம்மா எனக்கு மூன்றாவது பாட்டியா? 165 00:08:47,612 --> 00:08:50,740 ஆம்பர் பிரவுனாகிய நான்... 166 00:08:51,658 --> 00:08:53,827 எத்தனை பேரை நேசிக்க வேண்டும் என்று வியக்கிறேன்? 167 00:08:55,412 --> 00:08:57,122 அவர்களும் என்னை நேசிப்பார்களா? 168 00:08:58,164 --> 00:09:02,460 எங்கள் வாழ்க்கைக்குள் சலனமின்றி வந்து திட்டங்கள் போடலாம் என்று அவரை 169 00:09:02,544 --> 00:09:04,296 நினைக்க வைத்தது எது என்று தெரியவில்லை. 170 00:09:05,297 --> 00:09:07,007 -நான்தான். -என்ன செய்தாய்? 171 00:09:08,008 --> 00:09:09,551 ஃபில்லை அழைத்து, அதை செய்யச் சொன்னேன். 172 00:09:10,552 --> 00:09:11,678 என்ன? 173 00:09:12,178 --> 00:09:13,179 பாம்! 174 00:09:13,263 --> 00:09:17,559 ஆம்பர் மிகவும் ஏமாற்றமடைவதை யாராவது அவருக்கு நினைவூட்ட வேண்டும். 175 00:09:17,642 --> 00:09:19,269 சரிசெய்ய அது உன் தவறு இல்லை. 176 00:09:19,352 --> 00:09:21,062 -அது அவருடைய தவறு. -சரி. 177 00:09:21,146 --> 00:09:23,732 ஆம்பர் வருத்தப்படும்போது அவரே அதை தெரிந்துகொள்ளும் வரை 178 00:09:23,815 --> 00:09:27,694 நான் அப்படியே காத்திருக்க வேண்டுமா? இல்லை! அது நடக்காது. 179 00:09:28,361 --> 00:09:31,239 அவளுக்கு அவளுடைய அப்பா வேண்டும். இப்போதே. 180 00:09:38,038 --> 00:09:42,000 "தி விசார்ட் ஆப் ஆஸ்" புத்தகம் என்னிடம் இருந்ததுதானே? புத்தகம்? 181 00:09:42,083 --> 00:09:44,794 அது இங்கேதான் எங்காவது இருக்கும். 182 00:09:46,963 --> 00:09:49,049 ஆம். இங்கிருக்கிறது. 183 00:09:50,967 --> 00:09:53,970 நான் அவரை பார்க்க விரும்பவில்லை, எனவே உன்னை அங்கே கூட்டிச்செல்வேன். 184 00:09:54,054 --> 00:09:56,598 அங்கே தங்க மாட்டேன். வீட்டிற்குள் வர மாட்டேன். காரை விட்டு இறங்கவே மாட்டேன், 185 00:09:56,681 --> 00:10:00,227 ஆனால் இன்றிரவு உன் அப்பாவின் வீட்டிற்கு உன்னை அழைத்துச் செல்வதில் சந்தோஷம். 186 00:10:00,310 --> 00:10:02,062 நன்றி! 187 00:10:02,145 --> 00:10:05,190 பிராண்டி வந்து இரவு தங்கலாம் என்று அப்பா சொன்னார். 188 00:10:06,066 --> 00:10:07,275 சிறப்பு. சரி. 189 00:10:09,736 --> 00:10:12,239 எனவே, ஆம்பர், செல்லம், 190 00:10:12,322 --> 00:10:15,200 இன்றிரவு வேறு எங்கோ தங்குவது உனக்கு பிரச்சினை இல்லையே? 191 00:10:15,283 --> 00:10:17,994 வீட்டிற்கு வெளியே? அடுத்த நாள் பள்ளி இருந்தாலும். 192 00:10:18,078 --> 00:10:20,580 ஆம். முற்றிலும். நிச்சயமாக. 193 00:10:21,373 --> 00:10:24,793 அப்பா அனுப்பிய இந்த பைஜாமாவை என்னால் அணிய முடியும். 194 00:10:24,876 --> 00:10:27,379 அதாவது, இவற்றை அணிவேன், அங்கு செல்லும்போது. அழகு, இல்லையா? 195 00:10:28,004 --> 00:10:30,340 ஆம், மிகவும் அழகாக இருக்கிறது. 196 00:10:30,423 --> 00:10:31,466 நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். 197 00:10:38,974 --> 00:10:42,018 இந்த பைஜாமாவை அணிந்துகொண்டு நான் முட்டாள்தனமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? 198 00:10:42,102 --> 00:10:44,813 இல்லை. இல்லை, உன் அப்பாவுக்கு வேடிக்கையாக இருக்கும். 199 00:10:44,896 --> 00:10:46,898 அவர் பாரிஸிலிருந்து இதை அனுப்பினார். 200 00:10:52,946 --> 00:10:54,155 அம்மா, என்ன செய்கிறீர்கள்? 201 00:10:54,239 --> 00:10:56,741 நான் அவரை இப்போது பார்க்க விரும்பவில்லை. நான்... 202 00:10:56,825 --> 00:11:00,120 நான் நன்றாக இல்லை... அவர் கட்டுமஸ்தாக இருக்கிறார். 203 00:11:00,203 --> 00:11:03,707 -என்ன? -நான்... தயாராக இல்லை... 204 00:11:03,790 --> 00:11:07,377 நீங்கள் இருவரும் செல்லுங்கள். காரை விட்டு இறங்குங்கள். போ. போ. 205 00:11:10,714 --> 00:11:12,340 ஆம்பர், என்ன செய்கிறாய்? 206 00:11:12,424 --> 00:11:13,633 ஸ்டான்லி. 207 00:11:13,717 --> 00:11:16,428 அவனை இப்போது பார்க்க விரும்பவில்லை. நான் பைஜாமா அணிந்திருக்கிறேன். 208 00:11:16,511 --> 00:11:18,138 பெல்ட் இல்லாமல். 209 00:11:19,306 --> 00:11:20,807 அவன் இங்கு என்ன செய்கிறான்? 210 00:11:20,891 --> 00:11:22,934 -ஸ்டான்லி, உன் பள்ளியின் பையனா? -ஆம். 211 00:11:23,018 --> 00:11:24,936 அது நிச்சயம் ஸ்டான்லி தான். 212 00:11:26,396 --> 00:11:28,231 ஸ்டான்லி உன் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கிறான். 213 00:11:31,067 --> 00:11:33,153 இருவரும் என்னைப் பார்க்கிறார்கள். நான் குனிந்துகொள்ளவா? 214 00:11:33,236 --> 00:11:35,280 -வேண்டாம்! -ஆம்பர், உன் தலைமுடி! 215 00:11:37,741 --> 00:11:38,950 அவர்கள் இந்த பக்கம் வருகிறார்கள். 216 00:11:39,534 --> 00:11:40,619 பொறு. 217 00:11:40,702 --> 00:11:42,245 ஸ்டான்லி சைக்கிளில் புறப்படுகிறான். 218 00:11:45,081 --> 00:11:47,250 அதனால்தான் நீங்கள் அப்பாவைப் பார்க்க தயாராக இல்லை. 219 00:11:47,334 --> 00:11:49,753 நான் நேரில் சொல்லக் காத்திருந்தேன் என்பது உனக்கே தெரியும். 220 00:11:50,587 --> 00:11:54,549 -அதாவது, நான் இப்போது அவரிடம் சொல்லட்டுமா? -இல்லை. இப்போது வேண்டாம். 221 00:11:54,633 --> 00:11:55,634 -வேண்டாமா? -தயவுசெய்து. 222 00:11:55,717 --> 00:11:56,718 -சரி. -அம்மா. 223 00:11:56,801 --> 00:11:59,763 -சரி. -ஹலோ? ஆம்பர்? 224 00:12:00,513 --> 00:12:02,766 உங்கள் காண்டாக்ட் லென்ஸைக் கண்டுபிடித்தீர்களா, திருமதி. பிரவுன்? 225 00:12:02,849 --> 00:12:03,892 நீ ஒரு மேதை. 226 00:12:03,975 --> 00:12:07,938 இல்லை, ஒருவேளை பிறகு கண்டுபிடிப்பேன். 227 00:12:09,606 --> 00:12:10,732 இதோ என் மகள்! 228 00:12:16,029 --> 00:12:18,114 நீங்கள் வீட்டுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. 229 00:12:18,198 --> 00:12:21,076 எனக்கும்தான் செல்லம். எனக்கும்தான் 230 00:12:21,159 --> 00:12:23,828 இந்த பைஜாமாக்களை அணிந்து என்னை சிரிக்க வைப்பது போல. 231 00:12:23,912 --> 00:12:26,206 உனக்கு பிடித்திருக்கிறதா? அப்பாவை முட்டாளாக நினைக்கவில்லையே? 232 00:12:26,289 --> 00:12:27,624 எனக்கு இதை பிடித்திருக்கிறது, அப்பா. 233 00:12:33,672 --> 00:12:34,673 சாரா. 234 00:12:36,550 --> 00:12:37,551 ஃபில். 235 00:12:38,385 --> 00:12:39,636 நீ அழகாக இருக்கிறாய். 236 00:12:39,719 --> 00:12:41,972 நன்றி. 237 00:12:44,391 --> 00:12:47,227 எனவே நாளை ஆம்பரை பள்ளிக்கு அழைத்துச் செல்வாய்தானே? 238 00:12:48,019 --> 00:12:50,355 ஆம், என்னால் செய்ய முடியலாம். பிரச்சினையில்லை. 239 00:12:50,438 --> 00:12:53,567 முடியலாமா? அவளை பள்ளி நாளில் இரவில் தங்குவதற்கு திட்டம் போடுவதற்கு முன்பு 240 00:12:53,650 --> 00:12:55,235 நீ யோசித்திருக்க வேண்டும். 241 00:12:56,736 --> 00:12:58,905 -என்ன? -உன்னிடம் எந்த திட்டமும் இல்லை. 242 00:13:01,533 --> 00:13:03,743 எல்லாம் சண்டையிட வேண்டாம், சாரா. 243 00:13:04,494 --> 00:13:06,705 நான் பார்த்துக்கொள்கிறேன், சரியா? நான் தயாராக இருக்கிறேன். 244 00:13:07,747 --> 00:13:09,332 எனக்கு என் மகளை பார்க்க ஆவலாக இருந்தது. 245 00:13:09,416 --> 00:13:11,376 ஆம், நீ இங்கு வந்து ஆறு நாட்களாகிவிட்டது. 246 00:13:11,459 --> 00:13:14,588 வேலையில் புதிய பதவி. புதிய வீடு. மிகவும் பிஸியாகிவிட்டேன். 247 00:13:14,671 --> 00:13:16,464 ஏன் ஆம்பரிடம் அதை சொல்லக் கூடாது? என்னிடம் இல்லை. 248 00:13:16,548 --> 00:13:18,216 ஆம்பருக்கும் எனக்கும் அதில் பிரச்சினையில்லை. 249 00:13:18,300 --> 00:13:20,343 அவள் நன்றாக இருக்கிறாள். சரிதானே, ஆம்பர்? 250 00:13:20,427 --> 00:13:22,637 ஆம், எனக்கு கவலையில்லை, அம்மா. 251 00:13:22,721 --> 00:13:24,764 பரவாயில்லை, அப்பா. 252 00:13:24,848 --> 00:13:28,184 நீ சில முறை ஏமாற்றம் அடைந்தாய். 253 00:13:28,268 --> 00:13:30,312 -பிராண்டி. -சும்மா சொன்னேன். 254 00:13:30,896 --> 00:13:33,523 -நீதான் பிராண்டி. -அது நான்தான், திரு. பிரவுன். 255 00:13:34,524 --> 00:13:35,984 சரி, ஸ்டான்லியை உங்களுக்கு எப்படித் தெரியும்? 256 00:13:36,902 --> 00:13:38,987 சைக்கிளில் வந்தவனா? அவன் இங்கு வசிக்கிறான். 257 00:13:39,654 --> 00:13:41,323 சரி. நீ எப்போதும் என்னை அழைக்கலாம். 258 00:13:41,406 --> 00:13:43,366 -எப்போது வேண்டுமானாலும் இவளை அழைத்துச் செல்வேன். -அம்மா. 259 00:13:43,450 --> 00:13:44,451 -என்ன? -தயவுசெய்து. 260 00:13:44,534 --> 00:13:46,369 இரண்டு இரவுகள்தான். 261 00:13:46,453 --> 00:13:48,288 ஆம். இரண்டு இரவுகள்தான். 262 00:13:50,624 --> 00:13:51,750 என்ன? 263 00:13:54,336 --> 00:13:55,545 ஆம். 264 00:13:57,339 --> 00:13:58,882 விடைபெறு, டோட்டோ. 265 00:13:58,965 --> 00:14:01,134 எனக்கு உதவியதற்கு நன்றி, பெண்களே. 266 00:14:02,177 --> 00:14:04,137 பார், பிராண்டி. இதுதான் சிறப்பான பகுதி. 267 00:14:06,473 --> 00:14:07,849 சரியா, அப்பா? 268 00:14:13,688 --> 00:14:15,273 சரி. 269 00:14:15,357 --> 00:14:17,692 அவருக்கு எத்தனை தொலைபேசி அழைப்புகள் வரும்? 270 00:14:18,193 --> 00:14:20,153 பார். 271 00:14:20,237 --> 00:14:24,991 பிறகு உன் கண்களை மூடிக்கொண்டு, குதிகால்களை ஒன்றாக மூன்று முறை தட்டு. 272 00:14:26,993 --> 00:14:31,623 இதுபோல நீயே நினைத்துக்கொள் "வீடு போன்ற இடம் எதுவுமில்லை. 273 00:14:32,290 --> 00:14:35,460 வீடு போன்ற இடம் எதுவுமில்லை. வீடு..." 274 00:14:35,544 --> 00:14:41,299 வீடு போன்ற இடம் எதுவுமில்லை. வீடு போன்ற இடம் எதுவுமில்லை… 275 00:14:42,884 --> 00:14:46,137 அம்மா அப்பா 276 00:14:47,764 --> 00:14:49,307 நன்றி. 277 00:14:49,391 --> 00:14:52,227 இரவு உணவு வந்துவிட்டது! 278 00:14:53,895 --> 00:14:54,938 ஆம். 279 00:14:55,438 --> 00:14:57,274 படத்தை தவறவிட்டதற்கு வருந்துகிறேன். 280 00:15:03,405 --> 00:15:05,657 இதற்கு பதிலளிக்க வேண்டும். 281 00:15:16,042 --> 00:15:17,961 அவருக்கு என்னை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறாயா? 282 00:15:18,628 --> 00:15:21,631 -உன் அப்பாவுக்கா? -ஆம். 283 00:15:22,674 --> 00:15:27,053 நிச்சயமாக அவருக்கு உன்னை பிடிக்கும். அவர் உன் அப்பா. அவர் உன்னை நேசிக்கிறார். 284 00:15:27,137 --> 00:15:29,681 அவர் என்னை நேசிக்கிறார் என்பது தெரியும். 285 00:15:29,764 --> 00:15:32,142 அவருக்கு என்னை பிடித்திருக்கிறதா என்று வியப்பாக இருக்கிறது. 286 00:15:33,143 --> 00:15:35,604 அவருக்கு எப்படி உனக்கு பிடிக்காமல் போகும்? 287 00:15:36,438 --> 00:15:38,815 நீ மிகவும் நல்லவள், ஆம்பர் பிரவுன். 288 00:15:41,818 --> 00:15:43,486 நன்றி, பிராண்டி. 289 00:15:43,570 --> 00:15:46,031 -நான் உங்களை அழைக்கிறேன். -பரவாயில்லை. 290 00:15:46,114 --> 00:15:47,365 டோட்டோ மிகவும் அழகாக இருந்தது. 291 00:15:47,449 --> 00:15:50,035 தெரியும். டோரத்தியின் சைக்கிளின் சிறிய கூடையில் சவாரி செய்யும். 292 00:15:57,792 --> 00:16:00,587 "12 ஆங்ரி மென்" என்ற நாடகத்தைப் பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறாயா? 293 00:16:00,670 --> 00:16:02,297 "மற்ற எதுவும் போல இல்லாத நீதிமன்ற அறை நாடகம்." 294 00:16:02,380 --> 00:16:03,757 என்னிடம் காட்டு. 295 00:16:05,842 --> 00:16:10,180 ஐயோ. நடுவர் மன்றம் மிகவும் கோபமாக இருந்தால், குற்றவாளி எப்படி இருப்பான்? 296 00:16:14,517 --> 00:16:17,229 "எட்டாவது நடுவராக பிலிப் பிரவுன் கவனத்தை ஈர்க்கிறார்." 297 00:16:18,605 --> 00:16:21,191 ஆஹா. உன் அப்பா ஒரு நட்சத்திரம். 298 00:16:21,274 --> 00:16:23,318 "பிலிப் பிரவுன் தனக்கு நாடகம் பிடிக்கும் என கூறுகிறார். 299 00:16:23,401 --> 00:16:26,238 நாடகத்தில் பங்குபெறுவதில் அவருக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டபோது, 300 00:16:26,321 --> 00:16:30,242 14 வயதான பிரவுன், குழுப்பணி மற்றும் அனுபவப் பகிர்வு. எங்களுக்குள் பொதுவானது 301 00:16:30,325 --> 00:16:34,246 நிறைய இருக்கிறது, மேடையிலும் மேடைக்கு வெளியேயும் ஒன்றாக இருப்போம்" என விளக்கினார். 302 00:16:35,538 --> 00:16:38,875 அது அருமை. நீ என்ன நினைக்கிறாய்? 303 00:16:40,252 --> 00:16:41,670 அருமைதான். 304 00:16:42,462 --> 00:16:44,756 ஆடிஷனுக்கு போக எனக்கு தைரியம் இருந்திருக்க வேண்டும். 305 00:16:51,346 --> 00:16:53,848 எனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தால் 306 00:16:53,932 --> 00:16:56,726 உன் அண்டை வீட்டாராக இருப்பதன் மூலமும், 307 00:16:56,810 --> 00:17:02,941 நட்பின் வலிமையாலும், நான் உனக்கு தைரியத்தை வழங்குகிறேன். 308 00:17:05,193 --> 00:17:07,654 தி விசார்ட் ஆப் ஆஸ் 309 00:17:11,116 --> 00:17:13,034 ஹாய். நான் ஆம்பர் பிரவுன், 310 00:17:13,118 --> 00:17:15,495 நான் டோரத்தியின் பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்கிறேன். 311 00:17:16,871 --> 00:17:19,498 நான் ஹானா பர்டன், டோரத்தியின் பாத்திரத்திற்காக ஆடிஷன் செய்கிறேன். 312 00:17:20,083 --> 00:17:23,795 ஹாய். நான் ஜிம்மி ரெண்டோர்ஸ்கி, டின் மேனுக்காக ஆடிஷன் செய்கிறேன். 313 00:17:23,879 --> 00:17:25,964 நான் சோளக்காட்டு பொம்மைக்காக ஆடிஷன் செய்கிறேன். 314 00:17:26,046 --> 00:17:30,427 "வீடு போன்ற இடம் எதுவுமில்லை. வீடு போன்ற இடம் எதுவுமில்லை." 315 00:17:30,510 --> 00:17:32,262 ஒரு நொடி. வசனத்தை மனப்பாடம் செய்துகொள்கிறேன். 316 00:17:36,558 --> 00:17:37,893 "எண்ணெய் கேன்." 317 00:17:44,274 --> 00:17:45,859 மீதமுள்ள வசனம் எங்கே? 318 00:17:45,942 --> 00:17:47,694 நான் "எண்ணெய் கேனை" தான் மனப்பாடம் செய்தேன். 319 00:17:48,361 --> 00:17:52,490 "வீடு போன்ற இடம் எதுவுமில்லை. வீடு போன்ற இடம் எதுவுமில்லை." 320 00:17:53,199 --> 00:17:54,326 நீ ஒரு சோளக்காட்டு பொம்மை. 321 00:17:54,409 --> 00:17:56,411 மூளையே இல்லாத போது நீ எப்படி பேசுவாய்? 322 00:17:56,995 --> 00:18:00,832 "மூளை இல்லாத சிலர் மிகவும் பெரிய விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், இல்லையா?" 323 00:18:02,292 --> 00:18:04,169 "வீடு போன்ற இடம் எதுவுமில்லை." 324 00:18:06,421 --> 00:18:09,132 நான் பிராண்டி, குழுவில் ஒரு பதவியை எதிர்பார்க்கிறேன். 325 00:18:09,216 --> 00:18:11,051 ஸ்பாட்லைட்டை இயக்கும் பணியை எதிர்பார்க்கிறேன். 326 00:18:13,553 --> 00:18:18,808 நாம் காணத் துணியும் கனவுகள் 327 00:18:18,892 --> 00:18:21,353 உண்மையில் நிஜமாகின்றன 328 00:18:28,526 --> 00:18:30,528 வந்துவிட்டாய். நாம் அவசரத்தில் இருக்கிறோம். 329 00:18:30,612 --> 00:18:32,739 இன்னும் 20 நிமிடத்தில் எனக்கு காணொளி சந்திப்பு உள்ளது. 330 00:18:32,822 --> 00:18:35,450 -நாம் அப்பார்ட்மெண்டுக்கு திரும்ப வேண்டும். -சரி. 331 00:18:35,533 --> 00:18:37,369 நான் பள்ளி நாடகத்துக்கு ஆடிஷன் செய்தேன். 332 00:18:37,452 --> 00:18:39,371 -என்ன? நிஜமாகவா? -ஆம். 333 00:18:39,454 --> 00:18:41,248 நான் "தி விசார்ட் ஆப் ஆஸின்" டோரத்திக்காக படித்தேன். 334 00:18:41,331 --> 00:18:44,793 ஆஹா. அபாரம். அது எப்படி போனது? 335 00:18:44,876 --> 00:18:46,127 உண்மையில் நன்றாக போனது. 336 00:18:46,211 --> 00:18:48,171 நான் நினைத்ததை விட நன்றாக. 337 00:18:48,255 --> 00:18:50,382 திரு. டான்சிகர் நான் நன்றாக செய்தாதாகச் சொன்னார். 338 00:18:50,465 --> 00:18:52,842 உனக்கு நல்லது. உன்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன். 339 00:18:52,926 --> 00:18:54,844 நான் ஆடிஷன் செய்தேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. 340 00:19:05,146 --> 00:19:07,983 அடுத்த வாரம் நடிகர்கள் பட்டியலை வெளியிடுகிறார்கள். 341 00:19:08,567 --> 00:19:12,070 எட்டாம் வகுப்பில் நான் ஒரு நாடகத்தில் நடித்தேன். 342 00:19:12,153 --> 00:19:15,031 அதன் பெயர் "12 ஆங்ரி மென்." 343 00:19:15,115 --> 00:19:18,660 -ஆம், அம்மா அதைப் பற்றி சொல்லியிருக்கிறார். -அப்படியா? 344 00:19:19,369 --> 00:19:21,871 ஆம், நீங்கள்தான் அதில் கதாநாயகன் என்று நினைவிருப்பதாக சொன்னாள். 345 00:19:22,497 --> 00:19:24,583 நாடகத்தின் முக்கிய பாத்திரம். 346 00:19:25,250 --> 00:19:27,335 டோரத்தியும் அப்படித்தான். 347 00:19:27,419 --> 00:19:29,921 நான் நாடகத்தில் நடித்தபோது இருந்ததை விட உனக்கு சின்ன வயது. 348 00:19:30,589 --> 00:19:31,590 மிக உற்சாகமாக இருக்கிறது. 349 00:19:32,173 --> 00:19:34,801 ஆம். நமக்குள் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. 350 00:19:35,594 --> 00:19:36,595 ஆம். 351 00:19:42,434 --> 00:19:44,769 இன்னும் ஒரு இரவுதான். பிறகு அவள் வீடு திரும்புவாள். 352 00:19:44,853 --> 00:19:47,564 ஆம், ஆனால் அவளுடைய காப்பு அட்டவணை பற்றி நாம் பேச வேண்டும், 353 00:19:47,647 --> 00:19:50,108 ஒவ்வொரு வாரமும் இப்படி நடக்கும் என்றால், நான் இல்லை... 354 00:19:50,191 --> 00:19:53,695 சரி. இப்போதைக்கு அதை விடு. 355 00:19:53,778 --> 00:19:55,363 சரி. ஆசுவாசப்படுத்திக்கொள்வோம். 356 00:19:55,864 --> 00:19:57,908 நான் நாளை காலை ஊருக்கு வந்துவிடுவேன், சரியா? 357 00:19:58,491 --> 00:20:00,869 சரி. பாம் வந்துவிட்டாள். பிறகு பேசவா? 358 00:20:01,661 --> 00:20:03,121 -உன்னை நேசிக்கிறேன். -நானும் உன்னை நேசிக்கிறேன். 359 00:20:03,204 --> 00:20:04,247 என்னை யாராவது நேசிக்கிறார்களா? 360 00:20:04,331 --> 00:20:07,709 நான் நேசிக்கிறேன். அதிகமாக. மீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி. 361 00:20:07,792 --> 00:20:10,003 ஆம்பர் ஃபில்லின் வீட்டுக்கு போகும் எல்லா இரவும் என்னால் இங்கு தங்க முடியாது. 362 00:20:10,086 --> 00:20:11,713 எனக்கு பழக்கமாகும் வரை? 363 00:20:11,796 --> 00:20:13,757 இன்னும் பத்து வருடங்கள் இதை என்னால் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. 364 00:20:19,304 --> 00:20:20,597 அவள் என்னை மிஸ் செய்வாள் என்று நினைக்கிறாயா? 365 00:20:23,350 --> 00:20:24,434 கண்டிப்பாக. 366 00:21:37,173 --> 00:21:39,175 வசனத் தமிழாக்கம் அருண்குமார்