1 00:00:08,760 --> 00:00:10,845 ஹலோ, டைரி. முக்கியமான செய்தி. 2 00:00:10,929 --> 00:00:13,723 ஆம்பர் பிரவுனாகிய நான், பார்க் ரிட்ஜ் நடுநிலைப்பள்ளி 3 00:00:13,807 --> 00:00:16,101 இலையுதிர் கால நடனத்தில் அதிகாரப்பூர்வமாக கலந்துகொள்கிறேன். 4 00:00:16,183 --> 00:00:19,854 மூன்று விஷயங்கள். ஒன்று, நான் இதுவரை நடன நிகழ்ச்சிக்குச் சென்றதில்லை. 5 00:00:19,938 --> 00:00:23,024 இரண்டு, யாரும் என்னை ஆட அழைக்கவில்லை என்றால்? 6 00:00:23,108 --> 00:00:25,402 மூன்று, தனியாக ஆடினால் பரவாயில்லையா? 7 00:00:25,485 --> 00:00:27,612 அதோடு மற்றொரு செய்தி, நான் 8 00:00:27,696 --> 00:00:31,700 பிராண்டி, புதிய ஆடை இல்லாமல், நடனத்தில் கலந்துகொள்ளப் போகிறேன். 9 00:00:31,783 --> 00:00:35,704 நான் ஒருபோதும் நடன நிகழ்ச்சிக்குச் சென்றதில்லை. ஆனால் தனியாக ஆடுவது பரவாயில்லை என்று தெரியும். 10 00:00:36,204 --> 00:00:37,581 எனக்கு ஒரு ஆடை கடனாக கிடைக்குமா? 11 00:00:38,206 --> 00:00:39,708 கண்டிப்பாக. சில ஆடைகளே இருக்கின்றன. 12 00:00:40,292 --> 00:00:41,835 என்ன நிறம் வேண்டும்? 13 00:00:41,918 --> 00:00:43,920 -இளஞ்சிவப்பு. -சரி. 14 00:00:56,099 --> 00:00:57,767 உன்னுடைய ஆடைகளில் ஒன்று கிடைக்குமா? 15 00:00:57,851 --> 00:00:59,144 கண்டிப்பாக. என்ன வடிவம் வேண்டும்? 16 00:00:59,227 --> 00:01:00,562 வடிவமா? 17 00:01:00,645 --> 00:01:02,314 ஆம். நான் வடிவங்கள் உள்ள ஆடைகளையே வாங்குவேன். 18 00:01:02,397 --> 00:01:05,817 என்னிடம் நேரான, மென்மையான, சுழல்கின்ற அல்லது மணி வடிவ ஆடைகள் இருக்கின்றன. 19 00:01:06,401 --> 00:01:07,861 சுழலும் ஆடை. 20 00:01:08,361 --> 00:01:09,988 இந்த ஆடை நடனத்திற்கு பொருத்தமாக இருக்கும். 21 00:01:10,572 --> 00:01:12,449 இது நன்றாக சுழற்றுகிறது! 22 00:01:14,951 --> 00:01:16,912 ஆஹா. உன்னுடைய பாணி நடனத்தை உருவாக்கிவிட்டாய். 23 00:01:16,995 --> 00:01:18,955 இதை கோபமான மரம் எண் மூன்றிடம் கற்றுக்கொண்டேன். 24 00:01:24,169 --> 00:01:28,173 என் அம்மா... லோப் அண்ட் பிஹோல்ட்டில் செவ்வாய் அன்று எனக்காக ஒரு சந்திப்பு நேரத்தை வாங்கியிருக்கிறார்! 25 00:01:28,256 --> 00:01:31,343 என்ன? உன் காதுகளை குத்த உன் அம்மா அனுமதித்தாரா? 26 00:01:32,052 --> 00:01:35,430 நீ நன்றாக உணர்வாய் என்றால் நான் சந்தோஷமாக இல்லாதது போல இருப்பேன். 27 00:01:36,473 --> 00:01:38,266 இல்லை. பரவாயில்லை. சந்தோஷமாக இரு. 28 00:01:38,350 --> 00:01:41,353 நான் ஒரு திரைப்பட நட்சத்திரம் போல ஏனென்றால் நான் காதணிகளை அணிகிறேன்! 29 00:01:41,853 --> 00:01:43,688 அவ்வளவு சந்தோஷம் வேண்டாம். 30 00:01:44,689 --> 00:01:45,690 பிராண்டி! 31 00:01:45,774 --> 00:01:48,235 பிராண்டி மற்றும் காதணிகள்! பிராண்டி! 32 00:01:48,318 --> 00:01:50,153 இங்கே! பிராண்டி மற்றும் காதணிகள்! 33 00:01:50,237 --> 00:01:53,073 -நன்றாக சிரி, பிராண்டி! -காதணிகளுடன் பிராண்டி! 34 00:01:53,156 --> 00:01:54,991 -பிராண்டி! -பிராண்டி! 35 00:02:00,038 --> 00:02:01,081 பளபளப்பான காதணிகள். 36 00:02:01,164 --> 00:02:03,124 என் அம்மாவும் சம்மதிக்க வேண்டும் என்று ஆசைதான். 37 00:02:03,208 --> 00:02:04,960 -தொடர்ந்து கேள். -கேட்கிறேன். 38 00:02:05,043 --> 00:02:07,337 ஒவ்வோரு முறையும், "உனக்கு 13 வயதாகும் வரை கிடையாது" என்கிறார். 39 00:02:07,837 --> 00:02:10,173 ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை 40 00:02:10,674 --> 00:02:13,260 சிறப்பாக நடித்து வெளிப்படுத்தினாயா? 41 00:02:14,052 --> 00:02:16,054 அப்படித்தான் நினைக்கிறேன். 42 00:02:16,137 --> 00:02:17,347 -கெஞ்சினாயா? -ஆம். 43 00:02:17,430 --> 00:02:18,765 -உதட்டை பிதுக்கினாயா? -ஆம். 44 00:02:18,848 --> 00:02:20,350 "எல்லோரும் அணிந்திருக்கிறார்கள்" என்றாயா? 45 00:02:21,726 --> 00:02:24,354 -எல்லாவற்றையும் செய்தேன். -இவை உன் அம்மாவிடம் வேலை செய்திருக்கிறது. 46 00:02:24,437 --> 00:02:26,940 ஆம். நான் நிறைய படங்களைப் பார்ப்பேன். 47 00:02:27,023 --> 00:02:28,275 என் நடிப்பு நன்றாக இருக்கும். 48 00:02:30,652 --> 00:02:34,406 -இந்த ஆடையோடு பெல்ட் அணியட்டுமா? -நான் மாட்டேன், ஆனால் நிச்சயமாக. அணிந்து பார். 49 00:02:41,538 --> 00:02:44,791 எனக்கு பெரிய காதணிகள் கிடைத்தால் இது நன்றாக தெரியலாம். 50 00:02:45,375 --> 00:02:47,794 நடனம் ஆடுவதற்கு முன்பு என் காதுகளைக் குத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று 51 00:02:47,878 --> 00:02:50,046 என் அம்மாவை சம்மதிக்கவைக்க உன் அம்மாவிடம் பேசு! 52 00:02:50,130 --> 00:02:51,673 கண்டிப்பாக, நான் கேட்கிறேன். 53 00:02:52,674 --> 00:02:55,969 ஆனால் இன்று முடியாது. இன்று திங்கட்கிழமை. மௌன விரத நாள். 54 00:02:56,553 --> 00:02:58,221 அம்மா மாதத்தின் ஒரு திங்கட்கிழமை பேசமாட்டார். 55 00:02:58,305 --> 00:02:59,723 இது என்ன நகைச்சுவையா? 56 00:02:59,806 --> 00:03:01,099 இல்லை. நிஜமாகத்தான். 57 00:03:01,808 --> 00:03:04,936 அது வேடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றாகவும். 58 00:03:05,437 --> 00:03:06,605 மிகவும் நன்றாக இருக்கும். 59 00:03:07,772 --> 00:03:09,441 திங்கட்கிழமைகளை பிடிக்கும். 60 00:03:11,568 --> 00:03:14,446 நடனத்திற்கு முன் காதுகளை எப்படி குத்திக்கொள்வது? 61 00:03:15,572 --> 00:03:16,698 பாம் அத்தை! 62 00:03:17,991 --> 00:03:19,326 ஆஹா, என்னை பயமுறுத்திவிட்டாய். 63 00:03:20,869 --> 00:03:22,662 காபி குடித்தால் இந்த உணர்வு தான் ஏற்படும். 64 00:03:27,584 --> 00:03:30,587 SOS பாம் அத்தை 65 00:03:34,758 --> 00:03:38,887 -பாம் அத்தையால் அம்மாவை சம்மதிக்க வைக்க முடியும். -ஆம். உன் பாம் அத்தையால் முடியும். 66 00:03:38,970 --> 00:03:40,805 ஆஸ்கார் விருது கொடுக்கும் அளவுக்கு நடிப்பார். 67 00:03:56,488 --> 00:03:58,406 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 68 00:04:03,036 --> 00:04:04,996 புதன் அன்று உனக்கு கைப்பந்து பயிற்சி இருக்கிறது. 69 00:04:05,580 --> 00:04:08,333 வெள்ளியன்று நடன நிகழ்ச்சி. காதணிகளுடன். 70 00:04:08,416 --> 00:04:10,252 எனக்கு கேட்டது. முடியாது. 71 00:04:11,962 --> 00:04:13,588 கைப்பந்தை விட்டுவிடவா? 72 00:04:13,672 --> 00:04:16,423 இல்லை. இல்லை, மக்களை சந்திக்க, நண்பர்கள் கிடைக்க அது ஒரு சிறந்த வழி. 73 00:04:16,507 --> 00:04:18,843 எனக்கு ஏற்கனவே எல்லோரையும் தெரியும், அம்மா. 74 00:04:18,927 --> 00:04:23,390 ஹானா, ஷான்டே, அலிமா மற்றும் பலர். என்னைவிட எல்லோரும் உயரமானவர்கள், நன்றாக ஸ்பைக் செய்வார்கள். 75 00:04:23,473 --> 00:04:25,267 நீ அவர்களை ஒருநாள் வீட்டிற்கு அழைத்துவா. 76 00:04:25,350 --> 00:04:27,269 -சந்தேகம் தான்! -என்ன? நண்பர்கள் முக்கியம். 77 00:04:27,352 --> 00:04:30,522 எனக்கு எல்லா நண்பர்களும் இருக்கிறார்கள், அம்மா. ஜஸ்டின் மற்றும் பிராண்டி. 78 00:04:32,023 --> 00:04:33,608 ஆம். அவர்களை நேசிக்கிறோம். 79 00:04:34,651 --> 00:04:37,654 எனவே, உனக்கு வியாழக்கிழமை 3:30 மணிக்கு கணித வகுப்பு இருக்கிறது. 80 00:04:37,737 --> 00:04:39,239 வெள்ளியன்று நடன நிகழ்ச்சி! 81 00:04:39,739 --> 00:04:41,908 நான் நன்றாக கணக்கு போடுகிறேன். வகுப்பை நிறுத்திவிடலாமா? 82 00:04:41,992 --> 00:04:43,326 இல்லை! எனவே, 83 00:04:43,410 --> 00:04:46,454 வியாழக்கிழமை 3:30 மணிக்கு கணித வகுப்பு, பிறகு மேக்ஸுடன் இரவு உணவு சாப்பிடுகிறோம். 84 00:04:46,538 --> 00:04:48,039 வெள்ளிக்கிழமை நடனத்திற்குப் பிறகு, 85 00:04:48,123 --> 00:04:49,708 உன்னை அப்பாவிடம் விட்டுவிடுகிறேன். 86 00:04:50,375 --> 00:04:53,086 உண்மையில், இந்த வார இறுதியில் நீ உன் அப்பாவிடம் இருந்திருக்க வேண்டும், 87 00:04:53,169 --> 00:04:55,088 ஆனால் ஞாயிற்றுக்கிழமை செயின்ட் ஜூலியானாவில் நடக்கும் 88 00:04:55,171 --> 00:04:56,798 அப்ப விருந்துக்கு நம்மை பதிவு செய்துவிட்டேன். 89 00:04:56,882 --> 00:04:59,134 எனவே, நீ இங்கேயே இருப்பது நல்லது. 90 00:05:24,492 --> 00:05:25,577 எனக்கு ஒரு நாள் கிடைக்குமா? 91 00:05:25,660 --> 00:05:27,662 ஒரு நாளா? எதற்காக? என்ன சொல்கிறாய்? 92 00:05:27,746 --> 00:05:30,624 நான் செய்ய விரும்பும் விஷயங்களைத் தேர்ந்தெடுக்க. 93 00:05:31,583 --> 00:05:33,752 அப்ப விருந்தில் கலந்துகொள்ள நான் விரும்பவில்லை. 94 00:05:33,835 --> 00:05:35,879 ஏன் முடியாது? அது வேடிக்கையாக இருக்கும். 95 00:05:35,962 --> 00:05:38,673 -நண்பர்கள் கிடைக்க அது ஒரு நல்ல வழி... -அதை சொல்லாதீர்கள். 96 00:05:40,217 --> 00:05:41,801 காலை வணக்கம். 97 00:05:41,885 --> 00:05:43,136 காலை வணக்கம். 98 00:05:45,305 --> 00:05:47,432 நீங்கள் ஒருவரும் நல்ல மனநிலையில் இல்லை. 99 00:05:49,809 --> 00:05:51,311 இதோ உன் ஆடை. 100 00:05:51,394 --> 00:05:53,063 நான் இதை அணியவில்லை. மிகவும் பெரியதாக இருந்தது. 101 00:05:53,146 --> 00:05:54,147 இந்த வார இறுதியில் உன்னை மிஸ் செய்வேன் முத்தங்களுடன் அப்பா 102 00:05:54,231 --> 00:05:55,815 அடுத்த முறை சிறியதை கொடுக்க நியாபகப்படுத்து. 103 00:05:55,899 --> 00:05:57,817 -கண்டிப்பாக. -காலை வணக்கம், பாம். 104 00:05:57,901 --> 00:05:59,903 -காலை வணக்கம், மேக்ஸ். -பாம். 105 00:06:00,403 --> 00:06:01,613 மேக்ஸ். 106 00:06:02,447 --> 00:06:05,158 உங்களுக்கு திருமணமாகி இங்கே ஒன்றாக வசிக்கிறீர்களா, 107 00:06:05,242 --> 00:06:07,327 -என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை? -பாம்! 108 00:06:07,410 --> 00:06:11,122 என்ன? எப்போதும் இவர் இங்கேயே இருக்கிறார், சாரா. அதாவது, ஒவ்வொரு நாளும். 109 00:06:11,206 --> 00:06:13,250 என்னைக் குறை கூற முடியுமா? நீங்கள் எல்லோரும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். 110 00:06:13,333 --> 00:06:17,796 ஆம்பர், உனது முதல் பள்ளி நடனத்திற்கு, 111 00:06:17,879 --> 00:06:19,506 உனக்கு ஒரு பரிசை கொண்டு வந்திருக்கிறேன். 112 00:06:24,344 --> 00:06:27,556 காதணிகள்! ஆஹா, இவற்றைப் பிடித்திருக்கிறது! 113 00:06:27,639 --> 00:06:30,850 பாம், ஆம்பர் இன்னும் காது குத்தவில்லை என்று உனக்குத் தெரியுமே. 114 00:06:30,934 --> 00:06:32,811 அப்படியென்றால் குத்துவதற்கான நேரம் இதுதானே? 115 00:06:33,645 --> 00:06:35,355 நன்றி, நமக்குள் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. 116 00:06:35,438 --> 00:06:37,649 இவள் பருவ வயது அடையும் வரை அலங்காரமோ காதணிகளோ கிடையாது. 117 00:06:37,732 --> 00:06:40,277 ஆம், உன் அம்மாவைப் போல, நீ இயற்கையாகவே அழகானவள், ஆம்பர். 118 00:06:40,360 --> 00:06:42,279 -உனக்கும் தேவையில்லை. -உண்மைதான். 119 00:06:42,737 --> 00:06:43,780 நீங்கள் எந்த பக்கம்? 120 00:06:43,863 --> 00:06:46,366 -என் பக்கம் அல்ல. -உன் பக்கம் தான், ஆம்பர் பிரவுன். 121 00:06:46,449 --> 00:06:47,492 எப்போதும் உன் பக்கம் தான். 122 00:06:47,576 --> 00:06:50,870 உனக்கு அலங்காரமோ காதணிகளோ தேவையில்லை, ஆனால் நீ அவற்றை விரும்புகிறாய். 123 00:06:50,954 --> 00:06:55,292 தங்க காதணிகளை விட பளபளப்பான உதட்டுப் பூச்சு கொண்ட சிரிப்பு அற்புதமாக இருக்கும். 124 00:06:56,251 --> 00:06:57,752 அட, அம்மா. தயவுசெய்து? 125 00:06:57,836 --> 00:06:59,379 பளபளப்பான உதட்டுப் பூச்சு மற்றும் காதணிகள். 126 00:06:59,462 --> 00:07:00,964 கட்டாயப்படுத்துவது எனக்குப் பிடிக்காது. 127 00:07:01,047 --> 00:07:06,219 சாரா, சிறுமிகள் காது குத்துவார்கள், அலங்காரம் செய்வார்கள், சமூக ஊடகங்களில் இருப்பார்கள், 128 00:07:06,303 --> 00:07:09,347 -பச்சை குத்துவார்கள்! -என்ன? பச்சை குத்துவார்களா? 129 00:07:09,431 --> 00:07:11,016 -நானும் பச்சை குத்தியிருக்கிறேன். -நீங்கள் செய்வீர்கள். 130 00:07:11,099 --> 00:07:13,476 நாம் ஏன் பச்சை குத்துவதைப் பற்றி பேசுகிறோம்? நிறுத்துங்கள். 131 00:07:13,560 --> 00:07:17,230 ஆம்பர் ஒரு ஓவியராக இருப்பதால், பச்சை குத்துவதும் சிறந்த கலைப் படைப்பாக இருக்கலாம். 132 00:07:17,939 --> 00:07:19,482 இல்லை, அதனால் அல்ல. 133 00:07:20,609 --> 00:07:21,860 -என்னால் உதவ முடியாது. -பாம். 134 00:07:21,943 --> 00:07:25,196 சரா, நான் நினைக்கிறேன், எல்லா விஷயங்களையும் கருத்தில்கொண்டால், 135 00:07:25,280 --> 00:07:28,867 நீ நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால், ஆம்பர் கேட்கும் ஒரே விஷயம்... 136 00:07:28,950 --> 00:07:32,078 காது குத்த வேண்டும், அம்மா. எனக்கு வேண்டியது அவ்வளவுதான். 137 00:07:32,787 --> 00:07:34,956 -காது குத்திய குழந்தைகளை எனக்குத் தெரியும். -சரியாக சொன்னாய்! 138 00:07:35,040 --> 00:07:37,292 வைர காதணிகளும் குச்சி பணப்பையும் வைத்திருக்கும் மூன்று மாத குழந்தையை 139 00:07:37,375 --> 00:07:38,376 எனக்குத் தெரியும். 140 00:07:38,460 --> 00:07:41,046 -நான் காது குத்தியிருக்கிறேன். என்ன? -நிச்சயமாக செய்வீர்கள். 141 00:07:41,129 --> 00:07:43,465 -"முடியது" என்ற முடிவு தான். -அம்மா. 142 00:07:43,548 --> 00:07:46,259 -அப்படியென்றால் பச்சை குத்தலாமா? -நிறுத்து, பாம்! 143 00:07:46,343 --> 00:07:47,677 அடடா, அம்மா. தயவுசெய்து? 144 00:07:47,761 --> 00:07:49,554 கால்களை ஷேவ் செய்யும் வயதை அடைந்துவிட்டேன். 145 00:07:49,638 --> 00:07:51,014 நான் என் கால்களை ஷேவ் செய்வேன். 146 00:07:54,309 --> 00:07:56,561 -நான் வார இறுதியில் சைக்கிள் ஓட்டுபவன். -சரி. 147 00:07:57,145 --> 00:07:59,272 அம்மா, ஜஸ்டின் இங்கே இருந்திருந்தால், 148 00:07:59,356 --> 00:08:01,775 அவனும் ஒருவேளை என்னோடு சேர்ந்து காது குத்தியிருப்பான். 149 00:08:02,692 --> 00:08:03,777 ஆனால் அவன் இங்கில்லை. 150 00:08:03,860 --> 00:08:06,655 எனவே, உற்ற தோழன் இல்லாமல் தனியாக இருக்கிறேன். 151 00:08:07,239 --> 00:08:09,991 அதோடு இது எனது முதல் பள்ளி நடனம், 152 00:08:10,075 --> 00:08:12,494 இதற்கு இதைவிட சரியான நேரம் இருக்க முடியாது. 153 00:08:12,994 --> 00:08:16,414 பாம் அத்தையின் இந்த அருமையான 154 00:08:16,998 --> 00:08:20,377 காதணிகளை அணிவதற்கு எனக்கு ஒரு காரணம், தேவை, உரிமை இருக்கிறது. 155 00:08:24,381 --> 00:08:26,174 நீ ஒரு அற்புதமான ஓவியர், 156 00:08:26,258 --> 00:08:27,926 ஆனால் ஏதாவது தவறாக நடந்தால், நீ வழக்கறிஞர் 157 00:08:28,009 --> 00:08:31,012 -ஆவதை கருத்தில் கொள்ளலாம். -ஆம்பர், முடியாது. 158 00:08:31,096 --> 00:08:33,265 உனக்கு 13 வயதாகும் வரை காது குத்த முடியாது. 159 00:08:34,599 --> 00:08:36,308 உன் அம்மா நடுவர் மன்றத்தில் இருக்கக்கூடாது. 160 00:08:37,101 --> 00:08:38,602 கொட்டைகளை இங்கே போடுங்கள். 161 00:08:39,270 --> 00:08:44,150 சரி. நான் அப்பாவை கேட்டால், அவர் ஒருவேளை சரியென்று சொல்வாரா? 162 00:08:44,234 --> 00:08:47,195 மன்னித்துவிடு, செல்லம். வேண்டாம் என்பார். என் கருத்தை தான் ஏற்றுக்கொள்வார். 163 00:08:48,363 --> 00:08:49,906 மன்னித்துவிடு, செல்லம். 164 00:08:55,745 --> 00:08:59,082 ஆம்பர் பிரவுன் ஆகிய எனக்கு இந்த காதுகள் சொந்தம். 165 00:08:59,624 --> 00:09:00,959 இவை என்னுடைய காதுகள். 166 00:09:01,042 --> 00:09:05,088 என் வாழ்க்கையில் நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரே விஷயம் இதுதான். 167 00:09:05,171 --> 00:09:06,923 என் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் மாறி மாறி இருக்கிறேன், 168 00:09:07,007 --> 00:09:09,634 என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் திட்டமிடுகிறார்கள். 169 00:09:09,718 --> 00:09:12,012 குறைந்தபட்சம் என் காதுகளாவது என் கட்டுப்பாட்டில் இருக்க முடியாதா? 170 00:09:15,223 --> 00:09:17,309 ஆம்பருக்கு உரிமை இருக்கிறது! 171 00:09:23,773 --> 00:09:25,901 கணித ஆசிரியர் அது தவறு! 172 00:09:27,152 --> 00:09:30,155 காதணிகளுக்கு ஆம் என்று சொல்லுங்கள்! 173 00:09:39,706 --> 00:09:40,790 ஹேய். 174 00:09:40,874 --> 00:09:42,083 ஹேய். 175 00:09:42,167 --> 00:09:44,377 ஹேய், இது நம் சந்திப்புக்கான நேரமா? 176 00:09:44,461 --> 00:09:46,838 சரி, மாலை 6 மணிக்கு. 177 00:09:52,010 --> 00:09:53,762 நடனத்துக்கான என் ஆடையைப் பார்க்கிறாயா? 178 00:09:55,180 --> 00:09:57,432 சரி, நன்றாக இருக்கிறது. 179 00:09:58,308 --> 00:10:00,352 நான் அங்கே இல்லாமால் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 180 00:10:00,852 --> 00:10:04,022 நடனமாட வேண்டும் அல்லது யாரையாவது நடனமாட அழைக்க வேண்டும் 181 00:10:04,105 --> 00:10:06,107 என்பதை நினைத்தாலே பதட்டம் ஏற்படுகிறது. 182 00:10:06,733 --> 00:10:08,026 நான் உன்னுடன் நடனமாடுவேன். 183 00:10:08,693 --> 00:10:12,030 நன்றி. ஆனால் உன்னிடம் கேட்க எனக்கு தைரியம் இல்லை. 184 00:10:12,113 --> 00:10:13,198 யாரிடம் கேட்பதற்கும். 185 00:10:13,281 --> 00:10:14,407 நான் உன்னிடம் கேட்பேன். 186 00:10:14,908 --> 00:10:17,118 அருமை. அது அருமை. 187 00:10:17,869 --> 00:10:19,996 அவன் எப்படி நடனமாடுவான் என்பதை நீ முதலில் பார்க்கலாம். 188 00:10:20,080 --> 00:10:25,001 தொடக்க நேரம் அதிகாரப்பூர்வமாக மாலை 6:01. 189 00:10:26,002 --> 00:10:29,631 "ஆம்பரும் பிராண்டியும் முதல் பள்ளி நடனத்தில் எப்படி அழகாக இருக்கப்போகிறீர்கள்?" 190 00:10:30,131 --> 00:10:33,802 கூட்டம் இப்போது தொடங்குகிறது. ஏதாவது பரிந்துரைகள்? 191 00:10:33,885 --> 00:10:35,387 தொங்கும் காதணிகளா? 192 00:10:35,470 --> 00:10:37,597 நிஜமாகவா? அதைத்தான் நான் அணியப்போகிறேன். 193 00:10:38,098 --> 00:10:42,185 என் அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்தார். சிறிய அழகானவை. மிகவும் அருமையானது. 194 00:10:42,644 --> 00:10:44,604 என் காதுகள் எதுவுமில்லாமல் இருக்கும். 195 00:10:44,688 --> 00:10:47,732 சரி. நீ சொன்னது என் முகத்தை மிகவும் சிவக்க வைக்கிறது. 196 00:10:47,816 --> 00:10:49,526 அதாவது, எரிவது போல. 197 00:10:50,694 --> 00:10:52,445 சரி. மேலே பேசுவோம். 198 00:10:52,529 --> 00:10:54,197 நான் நடனம் ஆடியதில்லை. 199 00:10:54,864 --> 00:10:56,366 நான் ஒரு திருமணத்திற்கு சென்றிருக்கிறேன். 200 00:10:56,449 --> 00:11:00,662 நாம் என்ன செய்தாலும் பரவாயில்லை. அது உற்சாகமானது. நாங்கள் நடனமாடப் போகிறோம். 201 00:11:01,413 --> 00:11:03,915 நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமானது. 202 00:11:03,999 --> 00:11:06,918 நடனம். நாங்கள் நிஜமாக நடனமாடப் போகிறோம். 203 00:11:07,335 --> 00:11:08,503 -ஆம். -பிராண்டி, 204 00:11:08,587 --> 00:11:11,923 சில நேரங்களில் நீ என் உண்மையான உணர்வுகளின் பிரதிபளிப்பு என்று தோன்றுகிறது. 205 00:11:13,550 --> 00:11:17,888 பொறு, ஆனால் நீ இங்கே இருக்கமாட்டாய். வருந்துகிறேன், ஜஸ்டின். 206 00:11:18,388 --> 00:11:20,724 ஆம். வருந்துகிறேன், ஜஸ்டின். 207 00:11:21,433 --> 00:11:23,143 நீ இங்கே இருந்திருக்கலாம். 208 00:11:23,727 --> 00:11:24,728 ஆம். 209 00:11:26,730 --> 00:11:27,814 ஆனால் நிம்மதியாக இருக்கிறது. 210 00:11:28,315 --> 00:11:30,358 சரி, நடனத்தின் புகைப்படங்களை உனக்கு அனுப்புகிறோம். 211 00:11:30,442 --> 00:11:32,110 உன் கைபேசியை எப்போதும் ஆனில் வைத்திரு. 212 00:11:32,193 --> 00:11:33,486 பை, பிறகு பேசலாம். 213 00:11:33,570 --> 00:11:34,779 பை, பிறகு பேசலாம். 214 00:11:41,411 --> 00:11:43,496 -நீ எங்கே போகிறாய்? -பிராண்டி வீட்டுக்கு. 215 00:11:43,580 --> 00:11:46,958 -டிஷ்வாஷரை காலி செய்யும் வரை முடியாது. -நான் திரும்பி வந்ததும் செய்கிறேன். 216 00:11:47,042 --> 00:11:48,877 ஆனால் நீ இன்று காலை அதை செய்திருக்க வேண்டும். 217 00:11:48,960 --> 00:11:52,214 -நீ துணிகளை மடித்து வைக்கவும் மறந்துவிட்டாய். -நான் மறக்கவில்லை. நான்... 218 00:11:52,714 --> 00:11:53,757 என்ன? 219 00:11:54,716 --> 00:11:55,717 செல்லம், 220 00:11:55,800 --> 00:11:58,345 நீ பிராண்டி வீட்டுக்கு போவதற்கு முன், டிஷ்வாஷரை காலி செய். 221 00:12:00,138 --> 00:12:03,016 என் சொந்த வாழ்க்கைக்காக நானே எப்போதாவது ஒரு முடிவை எடுக்கலாமா? 222 00:12:04,351 --> 00:12:05,685 உனக்கு 11 வயதுதான். 223 00:12:05,769 --> 00:12:08,188 ஆம், நீ நிறைய முடிவுகளை எடுக்கிறாய். 224 00:12:08,688 --> 00:12:10,941 நீ இப்போது நடந்துகொள்ளும் விதம் உன் முடிவுதான். 225 00:12:11,399 --> 00:12:14,027 அது சரியில்லை, இந்த அணுகுமுறை. 226 00:12:15,195 --> 00:12:17,697 நான் டிஷ்வாஷரை காலி செய்யத்தான் சொன்னேன், செல்லம். 227 00:12:17,781 --> 00:12:20,825 ஆம், காது குத்த வேண்டாம் என்றும், கைப்பந்து அணியில் சேரவும் சொன்னீர்கள். 228 00:12:20,909 --> 00:12:23,954 அப்பத்தை பரிமாறவும், கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறவும், நிறைய நண்பர்களை உருவாக்கவும்! 229 00:12:25,080 --> 00:12:26,790 ஆஹா, நீ நீண்ட காலமாக கோபத்தில் இருக்கிறாய். 230 00:12:27,749 --> 00:12:30,919 கவனம், நீ எதையாவது உடைத்துவிடாதே. 231 00:12:31,419 --> 00:12:33,713 சில நேரங்களில் மிகவும் கட்டுப்படுத்துகிறீர்கள். 232 00:12:34,714 --> 00:12:36,216 என்ன? 233 00:12:36,633 --> 00:12:37,926 என்னைப் பற்றியா சொல்கிறாய்? 234 00:12:38,009 --> 00:12:39,302 -இல்லை. -இல்லையா? 235 00:12:39,386 --> 00:12:41,930 ஆம். இருக்கலாம். 236 00:12:43,723 --> 00:12:45,850 உனக்கு என்ன ஆனது? 237 00:12:46,810 --> 00:12:50,397 பிராண்டி காது குத்திக்கொள்ளப்போகிறாள், நான் இல்லை. 238 00:12:50,480 --> 00:12:52,649 நான் பிராண்டி வீட்டுக்கு போக விரும்புகிறேன், சரியா? 239 00:12:57,654 --> 00:13:00,073 முடிந்தது. நான் இப்போது போகலாமா? தயவுசெய்து? 240 00:13:00,156 --> 00:13:01,533 ஆம், நீ போகலாம். 241 00:13:01,616 --> 00:13:02,701 நன்றி. 242 00:13:07,539 --> 00:13:08,540 ஹேய். 243 00:13:14,504 --> 00:13:16,506 -எல்லாம் நலம்தானே? -ஆம். 244 00:13:16,590 --> 00:13:17,591 இல்லை. 245 00:13:22,095 --> 00:13:24,431 அவளுக்கு என்னை பிடிக்காத போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 246 00:13:28,810 --> 00:13:29,811 என்ன தெரியுமா... 247 00:13:31,938 --> 00:13:33,690 எல்லைகளை அமைப்பதன் மூலம், அவர்களுக்கு 248 00:13:33,773 --> 00:13:37,736 சில சமயங்களில் பிடிக்காமல் போகும் அளவுக்கு, நீ உன் குழந்தைகளை போதுமான அளவு நேசிக்க வேண்டும். 249 00:13:42,365 --> 00:13:44,034 உண்மையில் அது அவ்வளவு எளிதல்ல. எனவே… 250 00:13:44,618 --> 00:13:46,494 இது காது குத்துவது பற்றியா? 251 00:13:46,578 --> 00:13:49,205 நிச்சயமாக. மற்ற எல்லாமும்தான், நான் 252 00:13:49,289 --> 00:13:53,710 அவளை கட்டுப்படுத்துவது, கண்டிப்பான, வெறுக்கத்தக்க அம்மா. 253 00:13:53,793 --> 00:13:55,670 பொறு, அவள் இப்படியெல்லாம் உன்னிடம் சொன்னாளா? 254 00:13:57,005 --> 00:14:00,842 உண்மையில் அவள் சொன்ன விஷயம் என்னை பாதிக்கவில்லை. அவளுடைய அணுகுமுறைதான். 255 00:14:01,676 --> 00:14:04,721 அவளுடைய எண்ணங்களை என்னால் மிகவும் சத்தமாக கேட்க முடியும். 256 00:14:04,804 --> 00:14:06,806 அவளால் என்னை சகித்துக்கொள்ள முடியவில்லை. 257 00:14:06,890 --> 00:14:10,769 அவளால் இப்போது சகித்துக்கொள்ள முடியவில்லை. இது காயப்படுத்துகிறது. 258 00:14:12,187 --> 00:14:14,773 சரி. அதற்காக வருத்தப்படாதே. உளறுவதை நிறுத்து. 259 00:14:15,440 --> 00:14:16,566 என்ன? 260 00:14:17,317 --> 00:14:19,819 நான் என் அம்மாவிடம் இப்படித்தான் நடந்துகொள்வேன். 261 00:14:19,903 --> 00:14:22,781 என் சகோதரி இன்னும் மோசம். ஆம்பரின் வயதில் இன்னும் மிக மோசமாக நடந்துகொள்வாள். 262 00:14:23,657 --> 00:14:24,908 உன் அம்மா என்ன செய்தார்? 263 00:14:26,493 --> 00:14:30,872 மென்மையானார். அனுசரித்துப்போனார். ஒவ்வொரு முறையும். 264 00:14:31,414 --> 00:14:33,917 அதுவே அவரை நீ அதிகம் நேசிக்கவைத்ததா? 265 00:14:34,000 --> 00:14:35,669 ஆம், முற்றிலுமாக. 266 00:14:36,336 --> 00:14:38,630 நீ இப்போது என்ன சொல்ல வருகிறாய் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 267 00:14:38,713 --> 00:14:40,465 -இது பயனுள்ளதாக இல்லை. -நான் சொல்கிறேன் 268 00:14:40,549 --> 00:14:45,637 அது நான் என் அம்மாவை நேசிக்க வைத்தது, ஆனால் என்னை அல்ல. 269 00:14:49,057 --> 00:14:52,352 ஆம். நான் ஒரு குழந்தையை சில சமயங்களில் உன்னை விரும்பாமல் இருக்க அனுமதிப்பது 270 00:14:52,435 --> 00:14:54,062 முக்கியம் என்று நினைக்கிறேன், 271 00:14:55,063 --> 00:14:59,818 அதனால் காலப்போக்கில் அவர்கள் தங்களை நேசிக்க முடியும். 272 00:15:02,737 --> 00:15:05,991 அப்படியென்றால், காது குத்த வேண்டாமா? 273 00:15:06,074 --> 00:15:07,784 வேண்டாம், உன் முடிவில் நில். 274 00:15:07,867 --> 00:15:09,578 -ஏனென்றால் நான் அவளை நேசிக்கிறேன். -ஆம். 275 00:15:09,661 --> 00:15:10,954 அவள் என்னை வெறுக்கிறாள். 276 00:15:11,037 --> 00:15:12,872 -சரியாக அப்படித்தான் நடக்க வேண்டும். -ஆம். 277 00:15:16,251 --> 00:15:19,546 என் அம்மாவும் அதை செய்வார். அவர் எப்போதும் பட்டியல்களை வைத்திருப்பார், 278 00:15:19,629 --> 00:15:24,134 "ஓய்வெடு, இசையைக் கேள், யாரும் பார்க்காதது போல நடனமாடு" என்று. 279 00:15:25,468 --> 00:15:27,971 இது என் அம்மாவின் பட்டியலை விட கொஞ்சம் வித்தியாசமானது. 280 00:15:28,555 --> 00:15:31,516 இந்த பூனை மிகவும் அழகாக இருக்கிறது. 281 00:15:34,269 --> 00:15:35,687 அங்கு என்ன கட்டுகிறார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. 282 00:15:35,770 --> 00:15:38,106 தெரியவில்லை. அது மால் என்று நம்புகிறேன். 283 00:15:40,317 --> 00:15:42,444 பார்க்கலாம். ஒன்று, இன்னும் இரண்டு பாதை கற்கள். 284 00:15:42,527 --> 00:15:44,404 பிராண்டி, ஏன் இன்னும் பெட்டிகளை பிரிக்கவில்லை? 285 00:15:44,487 --> 00:15:46,865 நான் தள்ளிப்போடுபவள் என்று என் அம்மா சொல்வார். 286 00:15:46,948 --> 00:15:48,325 அப்படியென்றால் என்ன? 287 00:15:49,075 --> 00:15:51,912 பிறகு சொல்கிறேன். இந்தப் பாதையை முடிக்க எனக்கு உதவு. 288 00:15:55,123 --> 00:15:56,958 என்னால் இனி தாங்க முடியாது. 289 00:15:57,042 --> 00:16:00,253 நான் செய்ய வேண்டியவற்றின் பட்டியல் அல்லது என்னால் செய்ய முடியாதவற்றின் பட்டியல். 290 00:16:00,837 --> 00:16:02,255 அதன் பெயர் அம்மாவின் பட்டியல். 291 00:16:02,672 --> 00:16:04,633 எனக்கு ஆம்பர் பட்டியல் தேவை என நினைக்கிறேன். 292 00:16:09,054 --> 00:16:11,097 நீ ஏன் இந்த பாதையை உருவாக்குகிறாய்? 293 00:16:11,181 --> 00:16:14,226 நான் மரத்திடம் வருவதற்காக. மழை பெய்தால் சேறும் சகதியுமாகிவிடும். 294 00:16:14,309 --> 00:16:16,019 என் காலணிகளை சேறாக்க விரும்பவில்லை. 295 00:16:17,062 --> 00:16:18,647 பொறு, நீ மரத்தை வந்து பார்ப்பாயா? 296 00:16:18,730 --> 00:16:20,941 ஆம். அதனால்தான் இந்த நாற்காலிகளை இங்கே வைத்திருக்கிறேன். 297 00:16:21,024 --> 00:16:26,154 வா, உட்கார். ஓய்வேடு, சுவாசி. மரத்தைப் பார்வையிடு. 298 00:16:28,323 --> 00:16:30,533 மரத்தைப் பார்வையிடுவது மகிழ்ச்சியானது என்று நினைக்கிறேன். 299 00:16:31,117 --> 00:16:32,494 இந்த நாற்காலிகளைப் பிடித்திருக்கிறது, 300 00:16:32,577 --> 00:16:34,871 ஆனால் சில சமயங்களில் இவை எனக்கு குமட்டல் ஏற்படுத்தும். 301 00:16:35,622 --> 00:16:36,998 நான் இந்த பெட்டி மீது உட்காரலாமா? 302 00:16:37,082 --> 00:16:38,166 நான் அதை காலி செய்திருக்கலாம்... 303 00:16:40,335 --> 00:16:41,461 ஓ, கடவுளே. 304 00:16:41,545 --> 00:16:42,629 உனக்கு ஒன்றுமில்லையே? 305 00:16:50,220 --> 00:16:51,763 என் அம்மா குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். 306 00:16:51,846 --> 00:16:52,931 என்ன அனுப்பியிருக்கிறார்? 307 00:16:53,014 --> 00:16:54,474 அதாவது, இதுவரை எங்கேதான் இருந்தேன். 308 00:16:55,433 --> 00:16:57,644 "கணித ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடம் உள்ளது என்பதை மறந்துவிடாதே. 309 00:16:57,727 --> 00:16:59,563 அதோடு உன் அறையை சுத்தம் செய்வதையும்." 310 00:17:01,731 --> 00:17:03,817 என்னைக் கட்டுப்படுத்துவது சலித்துவிட்டது. 311 00:17:04,316 --> 00:17:05,443 அவர் நான் சொன்னதை கேட்கவில்லையா? 312 00:17:05,526 --> 00:17:07,529 எங்கள் சமையலறையில் சத்தமாக சொன்னேன். 313 00:17:09,238 --> 00:17:11,741 நான் அவர் பேச்சை கேட்காவிட்டால் என் அம்மா எப்படி உணருவார் என்று வியக்கிறேன். 314 00:17:12,324 --> 00:17:14,785 அல்லது நான் சொல்வதை அவர் கேட்காதது போல, அவர் சொல்வதை நான் கேட்டால். 315 00:17:17,162 --> 00:17:18,998 அதை கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 316 00:17:19,833 --> 00:17:22,294 -என் அம்மா பேச்சை கேட்கக் கூடாது என்கிறாயா? -ஆம். 317 00:17:22,377 --> 00:17:24,588 வீட்டுக்குள் ஹெட்ஃபோன்களை அணிந்து திரிவது போல. 318 00:17:24,670 --> 00:17:26,131 அல்லது டிவியின் ஒலியை கூட்டுவது. 319 00:17:26,631 --> 00:17:28,884 என் அம்மா பேசும் போது என் அப்பா அதை செய்வார். 320 00:17:30,719 --> 00:17:36,057 இல்லை, பொறு. ஒருவேளை நான் கேட்கவில்லை என்றால்? 321 00:17:36,850 --> 00:17:38,560 எதை? 322 00:17:39,352 --> 00:17:41,521 என் காதுகளை குத்துவது பற்றி. 323 00:17:49,237 --> 00:17:51,865 பார், தசமம் சரியான இடத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள். 324 00:17:52,949 --> 00:17:54,618 சரி. 325 00:17:58,121 --> 00:18:02,459 -உங்களுக்கு மகள் இருக்கிறாளா? -நீ 142.000 சேர்த்தால்… 326 00:18:04,211 --> 00:18:06,922 ஆம், இருக்கிறாள். சமந்தா, எட்டு வயது. 327 00:18:08,006 --> 00:18:10,342 -அவளுக்கு காது குத்தினீர்களா? -ஆம்பர். 328 00:18:11,259 --> 00:18:12,636 அவள் குழந்தையாக இருக்கும்போதே. 329 00:18:13,094 --> 00:18:15,430 அதை கொஞ்சம் சத்தமாகச் சொல்ல முடியுமா? 330 00:18:15,513 --> 00:18:16,598 எனக்குக் கேட்டது. 331 00:18:20,602 --> 00:18:22,354 ஹலோ? ஆம். 332 00:18:23,939 --> 00:18:24,940 ஹாய், லூசி. 333 00:18:25,023 --> 00:18:28,568 உடற்பயிற்சி கூடத்தை டிஸ்கோவாக மாற்றுவது எப்படி போகிறது? 334 00:18:31,738 --> 00:18:34,324 ஆம், நாம் உதவியாளர்களாக இருக்கலாம். 335 00:18:34,407 --> 00:18:35,700 -என்ன? -ஆம். 336 00:18:35,784 --> 00:18:39,329 எங்கள் இருவரையும் சேர்த்துக்கொள். சாரா பிரவுன் மற்றும் மேக்ஸ் டேடன். 337 00:18:39,412 --> 00:18:41,998 இல்லை, மேக்ஸ் அல்ல. அப்பா. 338 00:18:42,916 --> 00:18:45,085 சரி, ஆம்பர். கிட்டத்தட்ட முடிந்தது. 339 00:18:46,545 --> 00:18:50,674 இதுதான் கடைசி. சிக்கலில் கவனம் செலுத்து. 340 00:18:51,508 --> 00:18:52,509 நான் செய்கிறேன். 341 00:18:54,094 --> 00:18:57,806 ஆம், அழைக்க வேண்டியிருந்தது. ஜீரோ கிராவிட்டி இன்பினிட்டத்தில் பத்தாம் லெவலுக்கு போய்விட்டேன். 342 00:18:57,889 --> 00:18:59,558 அருமை. 343 00:19:02,394 --> 00:19:03,562 நீ என்ன செய்கிறாய்? 344 00:19:04,312 --> 00:19:05,564 வளர்கிறேன். 345 00:19:06,273 --> 00:19:07,524 என்ன? 346 00:19:07,607 --> 00:19:09,818 -ஆம். -நமக்கு 11 வயது. 347 00:19:09,901 --> 00:19:11,778 மிகச்சரி. நாம் இனி குழந்தைகள் இல்லை. 348 00:19:13,655 --> 00:19:15,156 நான் அப்படித்தான் உணர்கிறேன். 349 00:19:15,240 --> 00:19:18,243 ஆனால் சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு உன்னிடம் பணம் இருப்பது போல தெரிகிறது. 350 00:19:18,326 --> 00:19:20,495 கிறிஸ்மஸ் மற்றும் பிறந்தநாளுக்கு கிடைத்த பணமா அவை? 351 00:19:20,579 --> 00:19:22,163 அதோடு நாய் நடைபயிற்சி மூலம் கிடைத்த பணமும். 352 00:19:22,789 --> 00:19:24,457 பெரிய நாய்களாக இருந்திருக்க வேண்டும். 353 00:19:25,333 --> 00:19:27,002 -இதோ. -நன்றி, பிராண்டி. 354 00:19:27,085 --> 00:19:28,962 நீ பத்தாம் லெவலை அடைந்ததில் மகிழ்ச்சி. பை, பிறகு பேசலாம். 355 00:19:29,045 --> 00:19:32,674 -பை, பிறகு பேசலாம். -ஹலோ, ஜஸ்டின். பை, பிறகு பேசலாம், ஜஸ்டின். 356 00:19:36,803 --> 00:19:38,221 சரி. 357 00:19:54,237 --> 00:19:56,364 லோப் & பிஹோல்டு காது குத்தும் நிலையம் 358 00:20:57,634 --> 00:20:59,636 வசனத் தமிழாக்கம் அருண்குமார்