1 00:00:06,716 --> 00:00:09,135 அன்புள்ள டைரி, இது மற்றொரு பெற்றோர் வீட்டிற்குப் போகும் நாள். 2 00:00:10,220 --> 00:00:12,222 அங்கும் இங்கும் சென்று வருவது பரவாயில்லைதான். 3 00:00:12,889 --> 00:00:16,893 அப்பாவுடன் இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. அங்கே அவருடன் இருப்பது. 4 00:00:19,020 --> 00:00:23,817 பெரும்பாலான நேரங்களில் சந்தோஷமாக இருக்கிறேன், ஆனால் பிறகு விவாகரத்து வருத்தம் வந்துவிடுகிறது. 5 00:00:24,317 --> 00:00:26,695 கடற்கரையில் அலைகளைப் போல. 6 00:00:27,237 --> 00:00:31,700 வருத்தத்தின் அளவு வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு நேரங்களிலும் வருகிறது. 7 00:00:32,449 --> 00:00:34,661 பெரும்பாலும் அப்பா வீட்டிற்கு போகும்போது 8 00:00:34,744 --> 00:00:37,747 பாரிஸிலிருந்து அவர் வீடு திரும்பியது சந்தோஷத்தைத் தருகிறது. 9 00:00:38,415 --> 00:00:42,586 அப்போதுதான் நாங்கள் ஒன்றாக இருக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன். 10 00:00:44,296 --> 00:00:48,216 நானும், அம்மாவும், அப்பாவும் எங்கள் குடும்ப வீட்டில் ஒன்றாக 11 00:00:48,300 --> 00:00:52,178 வசிப்பது போல இன்னும் எனக்கு கனவுகள் வருகின்றன. 12 00:00:54,639 --> 00:00:58,184 ஆம்பர் பிரவுனாகிய நான், வியக்கிறேன், 13 00:00:58,977 --> 00:01:01,187 மீண்டும் ஒன்றாக இருக்க வேண்டும் 14 00:01:01,271 --> 00:01:05,525 என்ற ஆசையும், நம்பிக்கையும், கனவும் போகப்போக மறைந்துவிடுமா? 15 00:01:12,198 --> 00:01:13,909 இந்த ஷோவைப் பார்த்ததுண்டா, அப்பா? 16 00:01:13,992 --> 00:01:15,660 இல்லை, இது எதைப் பற்றியது? 17 00:01:15,744 --> 00:01:17,579 இது மக்கள் தங்கள் தோற்றத்தை மாற்றும் ஒரு ஷோ. 18 00:01:18,079 --> 00:01:19,164 அது சரிதானா? 19 00:01:19,247 --> 00:01:23,960 பாருங்கள், இந்த பெண்ணுக்கு 60 வயதாகிறது ஆனால் 40 வயது தோற்றத்தை விரும்புகிறார். 20 00:01:24,044 --> 00:01:25,754 தான் 20 வயது பெண்ணாக தோற்றமளிக்க 21 00:01:25,837 --> 00:01:28,632 ஒப்பனை செய்த தனது 30 வயது மகளைப் பார்த்து பொறாமைப்படுகிறார். 22 00:01:28,715 --> 00:01:31,009 -உன் கணித கணக்குகளில் ஒன்று போல இருக்கிறது. -ஆம். 23 00:01:32,636 --> 00:01:37,974 அம்மாவான காத்லீன், 60 வயதில் 40 வயது தோற்றம் கொண்டவருக்கு இரண்டு மகள்கள். 24 00:01:38,058 --> 00:01:40,435 ஜூலி, 30 வயது. ஷீலா, 25 வயது. 25 00:01:40,518 --> 00:01:42,103 இருவருமே 20 வயது தோற்றத்தை விரும்புகிறார்கள். 26 00:01:42,979 --> 00:01:47,275 மகள்களின் நிஜ வயதின் கூட்டுத்தொகைக்கும் அம்மாவின் ஒப்பனை செய்த வயதுக்கும் இடையே 27 00:01:47,359 --> 00:01:49,110 எத்தனை வருட வித்தியாசம் இருக்கிறது? 28 00:01:49,194 --> 00:01:51,905 எதுவுமில்லை, ஏனென்றால் அவர்கள் தங்கள் வயதுக்கு ஏற்றபடி நடந்திருக்க வேண்டும். 29 00:01:52,656 --> 00:01:54,449 அல்லது ஒப்பனை செய்த வயதிற்கு ஏற்றபடி. 30 00:01:55,659 --> 00:01:57,494 பொருத்தமான வார்த்தைகளைக் கொண்டு வெற்றிகரமாக முடிந்துவிட்டாய். 31 00:01:57,577 --> 00:01:59,621 இன்னும் நன்றாக செய்ய வேண்டும், பர். 32 00:02:01,915 --> 00:02:05,544 எனக்குப் புரியவில்லை. எனக்கு 11 வயதாகிறது, 12 வயதாவதை மிகவும் எதிர்பார்க்கிறேன். 33 00:02:05,627 --> 00:02:08,129 எனவே ஐந்து வயது தோற்றம் தரும் ஒப்பனை எனக்கு எதற்கு? 34 00:02:08,212 --> 00:02:10,090 எல்லோரும் இளமையை விரும்புவார்கள். 35 00:02:10,590 --> 00:02:12,842 நீ எனக்கு எப்போதுமே ஐந்து வயது சிறுமிதான். 36 00:02:13,760 --> 00:02:17,556 நீ உன் புத்தகத்தை எடு, பேனா, காகிதங்களை எடு... 37 00:02:17,639 --> 00:02:21,101 -அழிப்பான்கள். நிறைய அழிப்பான்கள். -ஆம். 38 00:02:21,810 --> 00:02:24,437 உன் புதிய ஆசிரியர் விரைவில் வந்துவிடுவார். 39 00:02:25,146 --> 00:02:26,147 புதியவரா? 40 00:02:26,231 --> 00:02:28,733 ஆம், திரு. செலியோஸ் வட மேற்கு பகுதிக்கு மாற்றமாகிவிட்டார், 41 00:02:28,817 --> 00:02:30,610 எனவே இன்று புதிய ஆசிரியர் வருகிறார். 42 00:02:31,194 --> 00:02:35,448 சொல்லியிருக்க வேண்டும். நீ இந்த இடத்திற்கு நிறைய சந்தோஷத்தை கொண்டு வருகிறாய். 43 00:02:35,532 --> 00:02:36,825 அது எனக்கு விஷயங்களை மறக்க செய்கிறது. 44 00:02:37,742 --> 00:02:38,743 நன்றி, அப்பா. 45 00:02:39,244 --> 00:02:41,079 சரி, கொஞ்சம் ஒழுங்குபடுத்த வேண்டும். 46 00:02:41,580 --> 00:02:45,375 எல்லாவற்றையும் இதில்... போட்டு விடலாம். 47 00:02:46,793 --> 00:02:49,754 பரவாயில்லை, அப்பா. எனக்கு இங்கிருக்க பிடித்திருக்கிறது. 48 00:02:49,838 --> 00:02:52,382 நாம் இருவரும் மட்டும், பிட்சாவையும் பாஸ்தாவையும் சாப்பிட்டுக்கொண்டு. 49 00:02:52,465 --> 00:02:55,260 இன்னும் அதிக பாஸ்தாவும் பிட்சாவும். 50 00:02:56,011 --> 00:02:57,637 என் சமைக்கும் திறனை எண்ணி வருந்துகிறேன், 51 00:02:57,721 --> 00:03:01,766 ஆனால் வீட்டை சுத்தம் செய்வதில் அதை சரிகட்டிவிடுவேன். 52 00:03:01,850 --> 00:03:02,851 அவ்வளவுதான். 53 00:03:04,603 --> 00:03:07,647 ஆம். நாம் சமையல் வகுப்பிற்குப் போக வேண்டும். 54 00:03:09,065 --> 00:03:11,693 -நல்ல யோசனையாக தெரிகிறது. -நிஜமாகவா? 55 00:03:11,776 --> 00:03:13,570 ஆம். கண்டிப்பாக. 56 00:03:14,571 --> 00:03:16,031 சரி. எப்போது? 57 00:03:16,948 --> 00:03:18,575 எப்போதாவது. வரும் கோடையில். 58 00:03:18,658 --> 00:03:22,203 சரி. நாம் அம்மாவையும் அழைப்போமா? 59 00:03:24,247 --> 00:03:25,957 சரி. பார்க்கலாம். 60 00:03:29,461 --> 00:03:30,462 உள்ளே வாருங்கள்! 61 00:03:31,046 --> 00:03:33,798 ஹாய்! கொஞ்சம் தாமதமாகிவிட்டது. 62 00:03:33,882 --> 00:03:35,008 நான்... 63 00:03:36,384 --> 00:03:38,428 -சின்னி? -ஆம். 64 00:03:39,346 --> 00:03:40,430 ஃபில்? 65 00:03:57,239 --> 00:03:59,199 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 66 00:04:03,286 --> 00:04:06,665 சரி, கடைசி ஒன்று. மீண்டும், ஒரு பகுதி... 67 00:04:07,249 --> 00:04:11,294 பிரிட்ஜில் இன்றிரவு மீதமான பிட்சாவில் ஒரு பாதி இருக்கிறது, 68 00:04:11,378 --> 00:04:16,632 காலை உணவிற்கு, அதில் மூன்றில் ஒரு பங்கை சாப்பிடுகிறாய் என்றால், அசல் பிட்சாவின் எவ்வளவு 69 00:04:16,716 --> 00:04:17,716 மீதம் இருக்கும்? 70 00:04:17,800 --> 00:04:21,388 மிச்சமிருக்காது. ஏனென்றால் நடு இரவிலேயே எல்லாவற்றையும் சாப்பிட்டு இருப்பேன். 71 00:04:24,391 --> 00:04:26,434 புத்திசாலி ஆனால் தவறான பதில். 72 00:04:26,518 --> 00:04:28,478 நீ காகிதத்தில் கணக்கைப் போட்டுப் பார். 73 00:04:28,562 --> 00:04:30,313 உனக்கு தண்ணீர் கொண்டு வரவா, சின்னி? 74 00:04:30,397 --> 00:04:33,108 -குடிக்க ஏதாவது தரவா? -சரி. தண்ணீர். நன்றி. 75 00:04:33,191 --> 00:04:35,569 மேல்நிலை பள்ளியிலிருந்தே உங்களுக்கு ஒருவரையொருவர் தெரியுமா? 76 00:04:35,652 --> 00:04:37,946 இல்லை. இளம் வயதில் இருந்தே. 77 00:04:38,029 --> 00:04:42,158 இருவரும் "12 ஆங்ரி மென்" நாடகத்தில் பங்கேற்ற போது உன் அப்பாவை சந்தித்தேன்... 78 00:04:42,242 --> 00:04:44,953 -ஆம். - ...பார்க் ரிட்ஜ் நடுநிலை பள்ளியில். 79 00:04:45,036 --> 00:04:47,163 -நாங்கள்... -எட்டாம் வகுப்பில் இருந்தோம். 80 00:04:50,000 --> 00:04:52,752 -என்ன பார்க்கிறாய்? -மீண்டும் சந்தித்தது. 81 00:04:52,836 --> 00:04:54,546 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, சின். 82 00:04:55,130 --> 00:04:56,923 எனக்கும் தான். 83 00:04:58,925 --> 00:05:00,427 -ஹேய், ஆம்பர். -ஹேய், ஸ்டான்லி. 84 00:05:03,847 --> 00:05:05,390 அட, நீ நலமா? 85 00:05:11,271 --> 00:05:14,274 அன்புள்ள டைரி, அந்த தருணத்தில், நான் விரக்தியில் இருந்தேன். 86 00:05:15,942 --> 00:05:20,030 ஏற்கனவே என் நேரத்தை அம்மாவுடன் பகிர்கிறேன், இப்போதுதான் மேக்ஸுடனும் பழகிக்கொண்டிருக்கிறேன். 87 00:05:20,113 --> 00:05:24,117 என்னால் இப்போது முடியாது. என் அப்பாவையும் பகிர முடியாது. 88 00:05:24,951 --> 00:05:26,703 எனக்கு இப்போதுதான் திரும்ப கிடைத்திருக்கிறார். 89 00:05:29,247 --> 00:05:33,001 வருத்தம் தான். நான் வருத்தப்படுகிறேன். 90 00:05:33,084 --> 00:05:35,462 மன்னியுங்கள். என்னை மன்னியுங்கள்! 91 00:05:35,545 --> 00:05:37,130 பரவாயில்லை. 92 00:05:38,715 --> 00:05:41,343 என் தாள்கள். மதிப்பெண் வழங்கிய பிறகு லேமினேட் செய்திருக்க வேண்டும். 93 00:05:41,426 --> 00:05:42,719 நான் காப்பாற்றிவிட்டேன். 94 00:05:44,554 --> 00:05:47,557 உங்களுக்கு வாகனம் புக் செய்ய வேண்டுமா? 95 00:05:48,141 --> 00:05:49,809 உங்களை அழைத்துச் செல்ல? 96 00:05:49,893 --> 00:05:51,061 நீங்கள் வெளியே காத்திருக்கலாம். 97 00:05:51,144 --> 00:05:52,395 ஆம்பர். 98 00:05:52,979 --> 00:05:54,856 நான் இங்கே சிறிது நேரம் தான் இருப்பேன் என்பதால், 99 00:05:54,940 --> 00:05:56,942 அழைத்துச்செல்ல தானாகவே நேரத்துக்கு வண்டி வந்துவிடும். 100 00:05:57,025 --> 00:05:58,276 எனவே, அது போதும். 101 00:05:58,360 --> 00:06:00,695 உன் புத்தகத்தை எடுக்க முடியுமா, பர்? 102 00:06:01,446 --> 00:06:03,281 தண்ணீரை கொட்டியதற்கு மன்னித்துவிடுங்கள். 103 00:06:03,365 --> 00:06:04,366 கவலைப்படாதே. 104 00:06:06,159 --> 00:06:08,536 இன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து, இதே நேரமா? 105 00:06:08,620 --> 00:06:09,829 -ஆம். -இல்லை. 106 00:06:11,498 --> 00:06:13,250 அதாவது, தேவையில்லாமல் போகலாம். 107 00:06:13,333 --> 00:06:15,669 எனது அடுத்த தேர்வை எப்படி எழுதுகிறேன் என்று பார்ப்போம். சரியா, அப்பா? 108 00:06:15,752 --> 00:06:18,255 கண்டிப்பாக. பார்க்கலாம். 109 00:06:19,047 --> 00:06:20,632 உன்னை வழியனுப்ப வரவா? 110 00:06:23,260 --> 00:06:24,386 உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, ஆம்பர். 111 00:06:24,469 --> 00:06:26,179 உன்னை பயிற்றுவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 112 00:06:26,263 --> 00:06:28,723 நீ விரைவில் உன் கணித திறன்களில் தேறிவிடுவாய். 113 00:06:30,267 --> 00:06:31,518 அது விரைவாக நடப்பது நல்லது. 114 00:06:50,870 --> 00:06:52,038 ஆம்பர் அழகாக இருக்கிறாள். 115 00:06:52,122 --> 00:06:53,832 ஆம், நன்றி. அவள் என் அன்புக்குரியவள். 116 00:06:56,418 --> 00:06:57,711 அவள் மீதான முழு உரிமை உனக்கு கிடைத்துவிட்டதா? 117 00:06:58,628 --> 00:07:04,092 இல்லை. என் மனைவி... சாராவும் நானும் பகிர்த்து கொள்கிறோம். சாராவை நினைவிருக்கிறதா? 118 00:07:04,801 --> 00:07:06,636 இல்லை, ஞாபகமில்லை. 119 00:07:06,720 --> 00:07:09,973 அந்த வருடம்தான் அவளும் நம் வகுப்பில் சேர்ந்தாள். என் வீட்டிற்கு அருகில் குடியேறினாள். 120 00:07:10,056 --> 00:07:13,935 பல்பிடிப்பு, முட்டை கண்கள், ஆரஞ்சு நிற முடி, சிவந்த கன்னங்களைக் கொண்டவள். 121 00:07:14,019 --> 00:07:15,729 எப்போதும் மஞ்சள் நிற டாக் மார்டென்ஸ் அணிந்திருப்பாள். 122 00:07:15,812 --> 00:07:17,606 மிகவும் அன்பானவள். 123 00:07:17,689 --> 00:07:20,066 அப்படித்தான் நீங்கள் அம்மாவை விவரிப்பீர்களா? அடடா, அப்பா. 124 00:07:20,150 --> 00:07:22,319 அவர் ரொனால்ட் மெக்டொனால்ட் அல்லது ஏதோ போல. 125 00:07:23,778 --> 00:07:25,989 அந்த வருடம் தான் நான் மிஸ் டீனேஜ் இல்லினாய்ஸ் பட்டத்தை வென்றேன், 126 00:07:26,072 --> 00:07:27,782 எனவே... வேலையாக இருந்தேன். 127 00:07:29,492 --> 00:07:32,370 தங்க சட்டத்தாலான கரும்பலகையில் நீண்ட கணிதக் கணக்கை செய்வது தான் 128 00:07:32,454 --> 00:07:34,205 என் அறிவுக்கான சோதனையாக இருந்தது. 129 00:07:34,289 --> 00:07:36,416 -ஆஹா. உன்னைப் பார். -ஆம். 130 00:07:38,126 --> 00:07:40,462 அது தனித்துவமானது. 131 00:07:44,299 --> 00:07:45,717 உன்னை மீண்டும் பார்ப்பேன் என நினைக்கிறேன்... 132 00:07:46,301 --> 00:07:47,302 ஆம். 133 00:07:48,261 --> 00:07:54,351 எட்டாம் வகுப்பு நாடகத்தில் நடித்த சுறுசுறுப்பான பையனுக்கு உன் எண்ணை கொடுக்க மாட்டாயா? 134 00:07:58,355 --> 00:08:00,607 முடியாது. முடியாது என்று சொல்லுங்கள். 135 00:08:01,608 --> 00:08:02,609 சரி. 136 00:08:12,786 --> 00:08:16,206 பழைய தோழியைப் பார்த்தது அவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கலாம். 137 00:08:16,289 --> 00:08:17,666 நான் அது பற்றி கவலைப்படமாட்டேன். 138 00:08:17,749 --> 00:08:21,920 படித்து, படித்து, நான் நிறைய மதிப்பெண் பெரும் ஒரு திட்டம் இருக்கிறது, 139 00:08:22,003 --> 00:08:24,464 பிறகு எனக்கு ஆசிரியர் தேவைப்பட மாட்டார். 140 00:08:24,548 --> 00:08:26,633 எப்போதும் உன் திட்டம் அதுதானே? 141 00:08:26,716 --> 00:08:30,428 ஆம், ஆனால் இப்போது தீவிரமாக இருக்கிறேன். 142 00:08:30,512 --> 00:08:33,682 அவர் இங்கே வருவதை நான் விரும்பவில்லை. என் அப்பாவுடன் இருப்பது கேள்விக்குறியாகிவிடும். 143 00:08:33,765 --> 00:08:36,393 மேக்ஸை உனக்குப் பிடிக்கமால் இருந்தது நினைவிருக்கிறதா? 144 00:08:36,476 --> 00:08:38,227 ஆம். 145 00:08:38,311 --> 00:08:42,148 அவர் ஒரு வாரம் வணிக பயணம் சென்றபோது நீ அவரை மிஸ் செய்வதாக சொன்னாய். 146 00:08:42,231 --> 00:08:44,985 இல்லை, என் அம்மா ஏன் அவரை மிஸ் செய்கிறார் என்பதைப் பார்க்க முடிந்தது என்று சொன்னேன். 147 00:08:45,485 --> 00:08:47,195 -முன்பே சொன்னது தான். -இல்லை. 148 00:08:47,279 --> 00:08:48,905 என்னால் உனக்கு உதவ முடிந்திருக்கலாம். 149 00:08:48,989 --> 00:08:51,616 எனக்கு கணிதம் பிடிக்கும், ஆனால் அதை எனக்கு கற்பிக்கத் தெரியாது. 150 00:08:51,700 --> 00:08:56,663 சமூக அறிவியலோ அறிவியலோ, நன்றாக கற்பிப்பேன். சிறிய நிபுணராகிவிட்டேன். 151 00:08:56,746 --> 00:08:59,040 அறிவு என்று வரும்போது சிறிய என்று சொல்ல மாட்டேன். 152 00:08:59,124 --> 00:09:01,501 அதாவது அளவில் சிறியவன், நான் சிறுவன் என்பதால். 153 00:09:01,585 --> 00:09:05,088 எனக்கும் கணிதம் பிடிக்கும். என்னால் அதை மணக்க முடிந்தால், மணப்பேன். 154 00:09:05,589 --> 00:09:08,633 உன் திருமணத்தில் நிறைய சிக்கல்கள் இருக்கும். 155 00:09:10,010 --> 00:09:12,596 ஆம், அந்த திருமண வாழ்க்கை வெற்றிபெறாது என்பதை நீ எண்ணிப் பார்க்கலாம். 156 00:09:12,679 --> 00:09:15,515 ஆனால் அற்புதமான ஒன்றுக்கு அதால் சிலவற்றை சேர்க்க முடியும். 157 00:09:15,599 --> 00:09:17,684 அதோடு எங்களை எதுவும் பிரிக்க முடியாது. 158 00:09:21,396 --> 00:09:23,815 ஆளுக்கு ஒரு நகைச்சுவை என்ற நம் ஒதுக்கீடு முடிந்தது, 159 00:09:23,899 --> 00:09:25,483 போனஸ் நகைச்சுயையும் அனுமதித்தோம். 160 00:09:25,984 --> 00:09:29,279 இப்போது, வழக்கமான திட்டமிடப்பட்ட நெருக்கடிக்குத் திரும்புவோம். 161 00:09:30,614 --> 00:09:32,157 பிராண்டி, உன்னால் என் கணக்கு பாடத்திலும் வீட்டுப்பாடத்திலும் 162 00:09:32,240 --> 00:09:35,994 உதவ முடியுமா, அதனால் எனக்கு இனி ஆசிரியர் தேவையில்லை என்பதை நிரூபிக்க முடியுமா? 163 00:09:36,077 --> 00:09:40,206 ஆம். கண்டிப்பாக. இப்படித்தான் கடந்த காலங்களில் நண்பர்கள் வீட்டுப்பாடம் செய்வார்கள். 164 00:09:40,290 --> 00:09:41,708 ஆசிரியர்கள் யாரும் இல்லை. 165 00:09:41,791 --> 00:09:43,084 உன் அடுத்த கணிதத் தேர்வு எப்போது? 166 00:09:43,168 --> 00:09:44,419 அடுத்த வாரம். 167 00:09:44,502 --> 00:09:45,587 விரைவில் வருகிறது. 168 00:09:45,670 --> 00:09:46,671 நீ தயாராகிவிடுவாய். 169 00:09:46,755 --> 00:09:48,548 நம்பிக்கையான பேச்சு! 170 00:09:53,178 --> 00:09:54,429 இது எனக்குப் பிடித்தது, 171 00:09:54,512 --> 00:09:56,389 எனவே உனக்காக இதற்கு பிரேம் போட்டேன். 172 00:09:56,473 --> 00:09:58,725 இதில் காதணிகளைப் பார்க்க முடியாது. 173 00:09:58,808 --> 00:10:00,685 பாம், எனக்குப் பிடித்திருக்கிறது. 174 00:10:00,769 --> 00:10:02,896 செல்லம், சாப்பிட ஏதாவது வேண்டுமா? பள்ளி எப்படி சென்றது? 175 00:10:02,979 --> 00:10:04,606 உணவு, வேண்டாம். பள்ளி, நன்றாக இருந்தது. 176 00:10:04,689 --> 00:10:06,650 கற்கால மனிதன் போல அளவாக பேசுகிறாய். 177 00:10:06,733 --> 00:10:09,402 -சரிதானே? -வீட்டுப்பாடம் செய்ய பிராண்டி வருகிறாள். 178 00:10:09,486 --> 00:10:11,738 இந்த வாரம் இது மூன்றாவது நாள். பெருமையாக இருக்கிறது. 179 00:10:13,365 --> 00:10:15,116 ஹேய், திருமதி. பிரவுன். ஹாய், பாம் அத்தை. 180 00:10:15,200 --> 00:10:17,410 -எப்படி இருக்கிறாய்? -இந்த மேஜையில் அல்லது சமையலறை மேஜையில் 181 00:10:17,494 --> 00:10:21,039 நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்யலாம். உங்கள் பையை ஏதோவொரு நாற்காலியில் வை. 182 00:10:21,122 --> 00:10:22,123 நன்றி. 183 00:10:22,791 --> 00:10:24,167 நான் சாப்பிட ஏதாவது கிடைக்குமா? 184 00:10:24,251 --> 00:10:25,460 ஆம், நிச்சயமாக. 185 00:10:25,544 --> 00:10:27,546 புளூபெர்ரி ஸ்கோன்களை கொண்டு வந்தேன். உனக்கு ஒன்று வேண்டுமா? 186 00:10:27,629 --> 00:10:29,172 -ஆம், தயவு செய்து. -இதோ வருகிறது. 187 00:10:29,256 --> 00:10:31,508 வீட்டுப்பாடம் செய்யவும், நடன இடைவேளைகளுக்கு ஆற்றல் வேண்டும். 188 00:10:31,591 --> 00:10:34,344 குறைவான நடன இடைவெளிகள் இருந்தால், குறைவான ஆசிரியர்கள் தேவைப்படலாம். 189 00:10:34,427 --> 00:10:36,721 -என்ன ஆசிரியர்? எந்த பாடத்துக்கு? -கணிதம். 190 00:10:36,805 --> 00:10:39,182 ஆம்பருக்கு கொஞ்சம் கூடுதல் பயிற்சி தேவை. 191 00:10:39,266 --> 00:10:41,184 -கணிதம் பயனற்றது. -அப்படியா? 192 00:10:41,268 --> 00:10:43,603 -ஆம். -இல்லை. பாம், ஏன் இப்படி சொல்கிறாய்? 193 00:10:43,687 --> 00:10:46,523 நான் அதைப் பயன்படுத்துவதில்லை. பட்டப்படிப்புக்குப் பிறகு. 194 00:10:46,606 --> 00:10:49,067 ஆம்பருக்கு ஒரு ஆசிரியரை வைத்தால், கணிதத்திற்கு ஏதாவது மதிப்பு இருக்க வேண்டும். 195 00:10:49,150 --> 00:10:51,194 ஆம். அது உண்மை என்று நினைக்கிறேன். 196 00:10:51,861 --> 00:10:54,573 பண விரயம் என்று நினைக்கிறேன். 197 00:10:55,699 --> 00:10:57,492 கொஞ்சம் பால் கிடைக்குமா? 198 00:10:57,576 --> 00:10:58,577 நிச்சயமாக. 199 00:10:59,578 --> 00:11:03,540 இப்போது அது வேறு. புதிய ஆசிரியர் ஆண் அல்ல, பெண். சின்னி? 200 00:11:04,457 --> 00:11:07,669 அது மிகவும் எரிச்சலூட்டுகிறது. அவர் இருக்கும்போது அப்பா மகிழ்ச்சியாக இருக்கிறார். 201 00:11:09,462 --> 00:11:12,132 பல ஆண்டுகளுக்கு முன்பு திரு. பிரவுன் அவருடன் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். 202 00:11:12,215 --> 00:11:14,259 எட்டாம் வகுப்பில். 203 00:11:14,342 --> 00:11:16,052 பொறு. சின்னி? சின்னி ட்ரூப்பா? 204 00:11:16,136 --> 00:11:18,763 ஆம்பர் சொன்னாள், அவர் இளவரசியா அல்லது யார்? 205 00:11:18,847 --> 00:11:20,390 ஆம். சின்னி. அது அவர்தான். 206 00:11:20,473 --> 00:11:22,350 எனக்கு ஆசிரியர் தேவை என நான் நினைக்கவில்லை, அம்மா. 207 00:11:22,434 --> 00:11:24,185 அவள் யாரென்று பார்க்க வேண்டும். 208 00:11:24,269 --> 00:11:26,771 எல்லா இளவரசிகளும் கணித ஆசிரியர்களாக ஆவதில்லை. 209 00:11:28,148 --> 00:11:30,358 சின்னி. அவர் மிஸ் டீனேஜ் இல்லினாய்ஸ். 210 00:11:30,442 --> 00:11:33,695 அதுதான். இளவரசி அல்ல, அழகிப்போட்டியில் பங்கேற்றவர். 211 00:11:33,778 --> 00:11:35,989 நான் குழம்பிவிட்டேன். இருவரும் கிரீடங்களை அணிந்திருப்பார்கள். 212 00:11:36,072 --> 00:11:37,866 ஃபில்லுக்கு அவள் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. 213 00:11:37,949 --> 00:11:39,075 இருந்ததா? 214 00:11:39,826 --> 00:11:42,537 ஆஹா. மிக அழகாக இருக்கிறாள். 215 00:11:43,788 --> 00:11:44,789 ஃபில்லுக்கு அதிர்ஷ்டம்தான். 216 00:11:45,790 --> 00:11:47,125 மிகவும் நேர்மையாக சொன்னாய். 217 00:11:50,253 --> 00:11:52,047 ஹலோ. யார் அது? 218 00:11:52,130 --> 00:11:53,548 -நிறுத்துகிறீர்களா? -நிஜமாகவா? 219 00:11:53,632 --> 00:11:57,969 இல்லை. மன்னிக்கவும். அது தவறான எதிர்வினை. அல்லது வெறும் முட்டாள். 220 00:12:00,722 --> 00:12:03,266 ஹாய், நான் உங்கள் சமையலறையை பயன்படுத்தலாமா? 221 00:12:03,350 --> 00:12:06,645 ஹெல்த் ஃபுட் நெட்வொர்க்கிற்கான சிறிய அடையாள காணொளியை படமாக்க வேண்டும். 222 00:12:06,728 --> 00:12:07,729 ஆம், நிச்சயமாக. 223 00:12:07,812 --> 00:12:09,564 -நன்றி. -உங்களை பரிசீலிக்கிறார்களா? 224 00:12:09,648 --> 00:12:11,024 அதிர்ச்சியடைந்தது போல தெரிகிறது. 225 00:12:11,107 --> 00:12:13,193 பரவாயில்லை. வாய்ப்பு குறைவு என்று தெரியும். 226 00:12:13,276 --> 00:12:16,863 மன்னிக்கவும். அந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. ஆனால், நிஜமாகவா? 227 00:12:16,947 --> 00:12:18,281 பாம். நீ... 228 00:12:18,365 --> 00:12:19,366 ஆம், நிஜமாகத்தான். 229 00:12:20,200 --> 00:12:21,576 அட... அது அருமை. 230 00:12:21,660 --> 00:12:22,786 மிகவும் அருமை. 231 00:12:22,869 --> 00:12:24,287 நன்றி. 232 00:12:24,371 --> 00:12:26,414 இப்போது மிக முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். 233 00:12:27,332 --> 00:12:28,917 -அது யார்? -நிறுத்துகிறீர்களா? 234 00:12:29,000 --> 00:12:30,585 -இல்லை. -இது தனிப்பட்டது. 235 00:12:30,669 --> 00:12:32,087 அழகிப்போட்டியில் பங்கேற்ற இளவரசி. 236 00:12:32,921 --> 00:12:34,297 சுவாரஸ்யமானது. 237 00:12:34,381 --> 00:12:36,383 கணிதம் 238 00:13:03,243 --> 00:13:04,244 நீ கிட்டத்தட்ட முடித்துவிட்டாய். 239 00:13:04,869 --> 00:13:08,415 என்னிடம் ஏதாவது கேள்விகளை கேட்க தயங்காதே. அதுதான் மாதிரி தேர்வின் அழகே. 240 00:13:08,498 --> 00:13:10,250 இல்லை, பரவாயில்லை. 241 00:13:12,168 --> 00:13:14,379 அந்த ஒரு சுவரில் மங்கிய நிறத்தை நீதான் பூசினாயா? 242 00:13:14,462 --> 00:13:15,630 நான்தான் செய்தேன். 243 00:13:15,714 --> 00:13:16,923 அது எனக்குப் பிடித்திருக்கிறது. 244 00:13:17,007 --> 00:13:20,468 ஆம், நன்றி. இது ஒரு சீரமைப்பு. 245 00:13:29,144 --> 00:13:31,062 நீ எப்போதாவது திரு. ஹிகில்மேனிடம் பேசினாயா? 246 00:13:31,146 --> 00:13:33,481 -என்னவொரு அருமையான மனிதர். -சிறந்தவர். 247 00:13:34,649 --> 00:13:35,692 -நாம்... -அப்பா? 248 00:13:36,401 --> 00:13:37,694 என்ன? 249 00:13:40,030 --> 00:13:42,574 நீங்கள் என்னை அம்மாவிடம் அழைத்துச் செல்வீர்களா அல்லது… 250 00:13:42,657 --> 00:13:44,701 உன் அம்மா 8:30 மணிக்கு உன்னை அழைத்துச் செல்ல வருவார். 251 00:13:44,784 --> 00:13:46,119 பத்து நிமிடத்தில் முடித்து விடுவோம். 252 00:13:46,202 --> 00:13:49,456 நீ சோர்வடைந்துவிட்டாய், ஆம்பர். ஆனால் சிறப்பாக செயல்படுகிறாய். 253 00:13:50,332 --> 00:13:52,500 நாளை தேர்வில் நான் எப்படி எழுதுகிறேன் என்று பார்ப்போம். 254 00:13:54,753 --> 00:13:57,839 அன்றிரவு நீ என் நண்பர்களை சந்தித்தது அவர்களுக்குப் பிடித்தது. 255 00:13:57,923 --> 00:14:01,509 ஆம். அழைப்புக்கு நன்றி. வேலையில் இருந்து ஓய்வு எடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. 256 00:14:01,593 --> 00:14:06,306 உன்னுடைய "தனியான அப்பாவின் மெனு" பீட்சா மற்றும் பாஸ்தா கதைகளால் மகிழ்ந்தார்கள். 257 00:14:07,057 --> 00:14:09,226 நீ எப்போதாவது சமையல் வகுப்புக்கு போக நினைத்தால்… 258 00:14:09,309 --> 00:14:13,480 ஆம், நன்றி. ஆம்பரும் நானும் போக திட்டமிட்டிருக்கிறோம், அதனால்... 259 00:14:13,563 --> 00:14:15,774 இருவரும் கூட போகலாம். 260 00:14:29,996 --> 00:14:31,206 ஹாய். 261 00:14:41,174 --> 00:14:42,175 பார்க்காதே. 262 00:14:52,227 --> 00:14:55,355 அப்பா அவருடன் வெளியே செல்லப்போகிறார். அவருடன் டேட்டிங் செய்ய. 263 00:14:57,440 --> 00:14:58,692 எனக்குத் தெரியாது. 264 00:15:00,026 --> 00:15:02,696 அவர் செய்தால், அவர்கள் திருமணம் செய்துகொண்டால், 265 00:15:03,446 --> 00:15:05,865 அவர் உங்களை நேசித்த அளவுக்கு அவரை நேசிப்பாரா? 266 00:15:09,703 --> 00:15:10,870 நேசித்தாரா? 267 00:15:11,496 --> 00:15:12,497 ஆம். 268 00:15:17,419 --> 00:15:20,005 உன் அப்பாவும் நானும் இன்னும் ஒருவரையொருவர் நேசிக்கிறோம் என்று நினைக்கிறேன். 269 00:15:21,840 --> 00:15:22,841 அப்படியா? 270 00:15:23,842 --> 00:15:27,012 ஆம். ஆம், நிச்சயமாக. அதாவது, நான் அப்படித்தான் நினைக்கிறேன். 271 00:15:27,095 --> 00:15:31,224 அதாவது, அது இன்னும் நேசிப்பதுதான். அதன் வடிவம் இப்போதுதான் மாறிவிட்டது. 272 00:15:41,318 --> 00:15:45,447 அவர் அவளை நேசிக்க ஆரம்பித்தால், அவர் என்னை குறைவாக நேசிப்பாரா? 273 00:15:46,531 --> 00:15:48,742 இல்லை, செல்லம். இல்லை. 274 00:15:49,284 --> 00:15:50,994 நான் சொல்வதைக் கேள். 275 00:15:51,077 --> 00:15:56,917 உன் அப்பா உன்னை நேசிப்பதைப் போலவோ அல்லது அதிகமாகவோ யாரையும் நேசிக்கமாட்டார். 276 00:15:57,000 --> 00:16:00,003 அது நடக்காது. சரியா? 277 00:16:01,922 --> 00:16:04,799 அம்மா, நான் சோகமாக இருக்கிறேன். மிகவும் சோகமாக. 278 00:16:08,178 --> 00:16:09,179 சரி. 279 00:16:13,183 --> 00:16:15,644 நம் குடும்பம் மாறிவிட்டதால் வருத்தமாக இருக்கிறது 280 00:16:15,727 --> 00:16:20,440 அதோடு... அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். 281 00:16:23,318 --> 00:16:24,861 எனக்கும் வருத்தமாக இருக்கிறது. 282 00:16:26,780 --> 00:16:28,573 அப்பாவும் வருத்தமாக இருக்கிறார். 283 00:16:31,159 --> 00:16:32,160 எனக்குத் தெரியும். 284 00:16:40,335 --> 00:16:43,171 இது... இதற்கு கொஞ்சம் காலம் ஆகும். 285 00:16:47,133 --> 00:16:51,930 செல்லம், வாழ்க்கையில் சில நேரங்களில், நாம் சோகமாக இருப்போம். 286 00:16:55,100 --> 00:16:56,643 ஆனால் நாம் அதை நினைவில் கொள்ள வேண்டும், 287 00:16:56,726 --> 00:17:00,981 எப்படி மகிழ்ச்சியான நேரங்கள் என்றென்றும் நிலைக்காதோ, 288 00:17:01,064 --> 00:17:02,983 அதேபோலத்தான் சோகமான நேரங்களும். 289 00:17:06,902 --> 00:17:08,405 அலைகளாக வரும். 290 00:17:09,238 --> 00:17:13,410 ஆம். ஆம், செல்லம். அது அலைகளாக வரும். 291 00:17:20,125 --> 00:17:21,751 என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது. 292 00:17:22,419 --> 00:17:23,587 சரி. 293 00:17:23,670 --> 00:17:28,049 ஹாய். பொறு, நீங்கள் இருவரும் நலமா? 294 00:17:28,132 --> 00:17:29,718 கணிதத் தேர்வு எப்படி போனது? 295 00:17:29,801 --> 00:17:31,011 அது நாளைதான். 296 00:17:31,094 --> 00:17:32,512 சரி. அது முக்கியம். 297 00:17:32,596 --> 00:17:35,682 நீ அதை நன்றாக எழுத்தப் போகிறாய், பிறகு நாம் கொண்டாடுவோம். 298 00:17:35,765 --> 00:17:37,225 நாம் இரண்டு விஷயங்களைக் கொண்டாடுவோம். 299 00:17:37,309 --> 00:17:40,437 நீ கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெறுவாய், அதோடு… 300 00:17:44,608 --> 00:17:45,609 இதற்கும். 301 00:17:46,484 --> 00:17:49,446 அடுத்த ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் நட்சத்திரத்துக்கான முதல் 20 இடங்களுக்குள் வந்துவிட்டோம்! 302 00:17:49,529 --> 00:17:50,614 என்ன? 303 00:17:50,697 --> 00:17:51,781 -ஆம். -மேக்ஸ்! 304 00:17:53,366 --> 00:17:55,660 நமக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்று தோன்றுகிறது. 305 00:17:55,744 --> 00:17:59,372 "நமக்கு" என்று நீ சொல்வது நன்றாக இருக்கிறது. ஆனால் உழைத்தது நீதான், மேக்ஸ். இது உனக்குத்தான். 306 00:17:59,456 --> 00:18:02,208 இல்லை, அது நாம்தான். இது நமக்கானது. 307 00:18:02,292 --> 00:18:03,501 இது மிகவும் அருமை. 308 00:18:04,044 --> 00:18:05,629 நம் வீட்டில் ஒரு படம் எடுப்பது போல. 309 00:18:06,338 --> 00:18:07,422 பிராண்டியிடம் சொல்லும் வரை காத்திருங்கள். 310 00:18:07,505 --> 00:18:09,174 நீங்கள் இருவரும் அதில் பங்கேற்கலாம் என்று அவளிடம் சொல். 311 00:18:09,257 --> 00:18:12,844 என்ன? உங்களுக்குத் தெரியாது. இது பிராண்டியின் கனவு. 312 00:18:14,054 --> 00:18:15,680 நானும் பங்கேற்க விரும்புகிறேன். 313 00:18:16,473 --> 00:18:18,683 உன்னைப் பார். சரி. 314 00:18:20,977 --> 00:18:23,730 அன்புள்ள டைரி, "நம்ப முடியாதது" பிரிவில், 315 00:18:23,813 --> 00:18:27,692 ஆம்பர் பிரவுனாகிய நான், கணிதத்தை தீவிரமாகப் படிக்கிறேன். 316 00:18:27,776 --> 00:18:29,611 அதற்கு மேல், 317 00:18:29,694 --> 00:18:34,032 ஆம்பர் பிரவுனாகிய நான், மேக்ஸின் ஆடிஷன் மாதிரி காணொளியில் 318 00:18:34,115 --> 00:18:36,576 நான் பங்கேற்க வேண்டும் என்று சத்தமாகச் சொன்னேன். 319 00:18:36,660 --> 00:18:37,994 என்ன? 320 00:18:38,078 --> 00:18:42,123 எனவே, கோபமான மரம் எண் 3 "வெவ்வேறு மக்கள் குழுவின், 321 00:18:42,999 --> 00:18:45,669 பாராட்டுகளின் தொகுப்புக்கு" சரியாக இருப்பாளா? 322 00:18:45,752 --> 00:18:47,754 சரி. நான் போய் பிராண்டியிடம் சொல்லட்டுமா? 323 00:18:47,837 --> 00:18:49,381 -நிச்சயமாக! -சரி! 324 00:18:50,757 --> 00:18:52,133 பிராண்டி! 325 00:18:55,929 --> 00:19:01,434 அந்த மகிழ்ச்சியாக, ஓடுகிற, உற்சாகமாக ஆம்பர்... 326 00:19:02,185 --> 00:19:05,188 -பார்க்க அழகாக இருக்கிறது, இல்லையா? -ஆம். 327 00:19:05,272 --> 00:19:08,149 குறிப்பாக என் காரில் ஒரு நிமிடத்திற்கு முன்பு அவள் பேசியதை நீ கேட்டிருந்தால். வெறும்… 328 00:19:09,317 --> 00:19:10,527 என் இதயம் கனக்கிறது. 329 00:19:12,112 --> 00:19:14,948 மேக்ஸ். மேக்ஸ், நன்றி. 330 00:19:15,615 --> 00:19:16,616 நன்றி. 331 00:19:19,077 --> 00:19:20,287 நிச்சயமாக. 332 00:19:21,204 --> 00:19:25,834 எனவே... இப்போது நீ என் மீது அன்போடு இருப்பதால்... 333 00:19:27,335 --> 00:19:30,297 உன் சமையலறையில் எடுத்துதான் அசல் காணொளியைச் சமர்ப்பித்தேன். 334 00:19:30,380 --> 00:19:33,633 -ஓஹோ. -இது அடுத்த வாரமும் கிடைக்குமா? 335 00:19:34,301 --> 00:19:35,552 -அடுத்த வாரமா? -ஆம். 336 00:19:36,136 --> 00:19:39,264 அதற்குள் நான் அதை சீரமைத்து, முழுமையாக புதுப்பிக்க முடியுமா? 337 00:19:40,140 --> 00:19:41,224 -இல்லை. -இல்லையா? 338 00:19:41,308 --> 00:19:45,061 ஆனால் நான் ஒரு கிண்ண எலுமிச்சையும் சில பூக்களையும் கொண்டு வருகிறேன், நாம்… 339 00:19:45,145 --> 00:19:47,230 சரி. அது போதும். 340 00:19:47,314 --> 00:19:48,315 சா... 341 00:19:49,232 --> 00:19:50,233 நான்... 342 00:19:52,152 --> 00:19:53,695 ஹேய். 343 00:19:54,279 --> 00:19:56,364 ஹாலிவுட், இல்லினாய்ஸின் பார்க் ரிட்ஜுக்கு வருகிறது… 344 00:19:56,448 --> 00:19:59,075 -சரி. - ...உன் மாதிரி விளக்கக்காட்சியை தயாரிக்க. 345 00:19:59,159 --> 00:20:01,036 எனக்கு பயமாக இருக்கிறது. 346 00:20:01,119 --> 00:20:03,747 -எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியவில்லை. -அது... நன்றாக வரும். 347 00:20:58,802 --> 00:21:00,804 வசனத் தமிழாக்கம் அருண்குமார்