1 00:00:06,049 --> 00:00:07,342 அன்புள்ள டைரி, 2 00:00:07,425 --> 00:00:11,304 மேக்ஸின் புதிய ஷோவை படமாக்க நாளை ஹாலிவுட்டே என் வீட்டிற்கு வருகிறது. 3 00:00:11,388 --> 00:00:13,473 உண்மையில், அதை ஆடிஷன் சோதனை முயற்சி என்பார்கள், 4 00:00:13,557 --> 00:00:15,725 அது ஹெல்த் புட் நெட்வொர்க்கிற்காக நடக்கிறது. 5 00:00:15,809 --> 00:00:20,230 மேக்ஸும் அம்மாவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம், ஆனால் பதற்றமாக இருக்கும் அளவுக்கு அல்ல. 6 00:00:20,313 --> 00:00:22,023 அது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. 7 00:00:22,107 --> 00:00:24,776 பாம் அத்தையும் அதில் இருக்க விரும்புகிறார். 8 00:00:24,859 --> 00:00:28,196 பிராண்டியும் நானும் அதில் கலந்துகொள்கிறோம் என்பதில் உற்சாகமாக இருக்கிறோம். 9 00:00:28,280 --> 00:00:31,992 நாளை நாங்கள் சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் அவள் இன்றிரவு என் வீட்டிலேயே தங்குகிறாள். 10 00:00:49,801 --> 00:00:52,137 இதை கொஞ்சம் இறுக்குகிறாயா? 11 00:00:53,889 --> 00:00:55,223 முடிந்தது. 12 00:01:00,770 --> 00:01:03,398 மேலே ஒட்டு. இறுக்கமாக இருக்கிறதா என்று பார். 13 00:01:04,940 --> 00:01:07,360 நாம் எல்லா இருட்டில் மின்னும் நட்சத்திரங்களையும் பயன்படுத்துவதாக தெரிகிறது. 14 00:01:07,444 --> 00:01:10,030 கண்டிப்பாக. இவை என்றைக்கும் உன் வீட்டின் கூரையிலிருந்து விழுந்துகொண்டே இருக்கப்போகின்றன. 15 00:01:10,113 --> 00:01:12,407 நட்சத்திரங்கள் விழுவதால் கவலையில்லை. 16 00:01:12,490 --> 00:01:14,868 நீ வாயைத் திறந்துகொண்டே தூங்காத வரை. 17 00:01:16,453 --> 00:01:18,538 அன்புள்ள டைரி, விரைவு குறிப்பு, 18 00:01:18,622 --> 00:01:21,458 அப்பா இங்கே வந்தால், சின்னியை உடன் அழைத்து வரமாட்டார் என்று நம்புகிறேன். 19 00:01:22,792 --> 00:01:26,713 உண்மையில், சின்னியைப் பற்றி பேசும்போது, எனக்கு குறைவாகவே தெரிவதால் 20 00:01:26,796 --> 00:01:30,508 எனது கணித வீட்டுப்பாடத்தில் பிராண்டி உதவுவது கூடுதல் போனஸாக இருக்கும். 21 00:01:30,592 --> 00:01:34,846 உண்மையில், கணித ஆசிரியர் சின்னி என் அருகில் இல்லாமல் இருக்க அது பெரிதும் உதவுகிறது, 22 00:01:34,930 --> 00:01:36,640 குறிப்பாக என் அப்பா அருகில். 23 00:01:37,265 --> 00:01:41,228 கடந்த வாரம் பள்ளியில், நான் இதற்கு முன்பு அனுபவித்திராத ஒன்றை உணர்ந்தேன். 24 00:01:41,311 --> 00:01:43,563 என்னை நினைத்து நானே பெருமைப்பட்டேன். 25 00:01:44,064 --> 00:01:47,484 ஆம்பர் பிரவுன் ஆகிய நான், கணிதத் தேர்வை நன்றாக எழுதியிருக்கிறேன். 26 00:01:48,693 --> 00:01:51,696 பிராண்டி! 27 00:01:53,448 --> 00:01:54,616 நாம் சாதித்துவிட்டோம்! 28 00:01:58,745 --> 00:02:01,122 பி-பிளஸ்ஸா? நீ பி-பிளஸ் வாங்கியிருக்கிறாய். 29 00:02:01,206 --> 00:02:05,085 -ஆஹா. ஆஹா. -நன்றி, பிராண்டி. நன்றி. 30 00:02:09,213 --> 00:02:10,507 ஜஸ்டின், பார். 31 00:02:11,675 --> 00:02:13,927 ஆஹா. அருமை, ஆம்பர். 32 00:02:14,010 --> 00:02:16,388 நமக்கு இந்த சமன்பாட்டுக்கு பதில் தெரியும்தானே. 33 00:02:16,471 --> 00:02:18,390 பி-பிளஸ் என்றால் ஆசிரியர் தேவையில்லை! 34 00:02:18,473 --> 00:02:20,308 இனி சின்னி வரமாட்டார். 35 00:02:20,392 --> 00:02:22,185 ஆம். அதுவும் தான். 36 00:02:22,269 --> 00:02:23,645 அந்த இன்னொரு "அதுவும்" என்ன? 37 00:02:23,728 --> 00:02:25,355 நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன். 38 00:02:25,438 --> 00:02:27,315 நான் கணித்ததில் மேம்பட்டு இருக்கிறேன். 39 00:02:27,899 --> 00:02:30,777 ஒரு விஷயத்தில் கடினமாக உழைக்கும்போது நாம் அதில் நிபுணத்துவம் பெறாமல் போகலாம், 40 00:02:30,860 --> 00:02:33,280 ஆனால் அதில் சிறந்து விளங்குவது நிச்சயம் நல்ல உணர்வை தரும். 41 00:02:33,363 --> 00:02:35,448 தெரியவில்லை, இது மிகவும் நல்ல உணர்வை தருகிறது. 42 00:02:50,839 --> 00:02:52,757 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 43 00:02:57,512 --> 00:03:00,473 ஆம். நாளையை நினைத்து பதற்றமாக இருக்கிறேன். 44 00:03:00,557 --> 00:03:02,684 அதாவது, ஒரு நிஜ இயக்குநர் வரப்போகிறார். 45 00:03:02,767 --> 00:03:05,729 "ஆக்ஷன்" மற்றும் "கட்" என்று கத்தும் நிஜ இயக்குநர். 46 00:03:06,271 --> 00:03:09,274 அம்மாவும் மேக்ஸும் அவர்களின் வசனங்களை மனப்பாடம் செய்வது வேடிக்கையாக இருந்தது. 47 00:03:10,442 --> 00:03:12,652 நம்முடையதை ஏற்கனவே மனப்பாடம் செய்துவிட்டோம். 48 00:03:13,778 --> 00:03:15,238 இது மிக அழகாக இருக்கப்போகிறது. 49 00:03:15,322 --> 00:03:18,074 தெரியும். அடடா. எழுத்துக்களை வெட்டுவோம். 50 00:03:18,158 --> 00:03:19,534 சரி. 51 00:03:37,135 --> 00:03:40,889 நான் "M" செய்துவிட்டேன். ஆனால் "ஹாலிவுட்டில்" "M" என்ற எழுத்தே இல்லை. 52 00:03:40,972 --> 00:03:42,474 அது "W", முட்டாள். 53 00:03:44,851 --> 00:03:48,355 பிரபல நடிகைகள் யாராவது ஆரோக்கியமான ஸ்மூத்திகளுக்கு நற்சான்றிதழ்கள் கொடுக்கத் 54 00:03:48,438 --> 00:03:49,731 தொடங்கியிருக்கிறார்களா என வியக்கிறேன். 55 00:03:49,814 --> 00:03:54,569 அப்படி யாருமில்லை. அதைத் தேடினேன். நான்தான் முதல் நபராக இருப்பேன் என்று நம்புகிறேன். 56 00:03:55,695 --> 00:03:57,948 நாம் நிஜமாகவே ஸ்மூத்திகளை குடிக்க வேண்டுமா என்று வியக்கிறேன். 57 00:03:58,031 --> 00:04:02,786 நிச்சயமாக. அது நற்சான்றிதழ்கள், எனவே அது எவ்வளவு நல்லது என்று சொல்ல வேண்டும். நம்பும்படியாக. 58 00:04:03,870 --> 00:04:06,248 அது புல்லை சாப்பிடுவது போன்ற மோசமான சுவையில் இருக்கும், 59 00:04:06,331 --> 00:04:09,084 எனவே நான் அதை கண்டிப்பாக எதிர்பார்க்க மாட்டேன். 60 00:04:09,167 --> 00:04:11,294 அதனால்தான் அதை நடிப்பு என்கிறார்கள். 61 00:04:15,298 --> 00:04:17,591 ஹாலிவுட் 62 00:04:19,052 --> 00:04:20,470 மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. 63 00:04:20,554 --> 00:04:22,138 ஆம், மிகவும் வேடிக்கையாக. இருக்கிறது 64 00:04:23,223 --> 00:04:24,808 நாம் மேக்கப்பில் இருப்போம். 65 00:04:24,891 --> 00:04:28,395 கண்ணாடியைச் சுற்றி விளக்குகளுடன் நிஜ மேக்கப் அறை போலவா? 66 00:04:29,604 --> 00:04:33,316 மேக்கப் வண்டி என்று சொன்னதாக நினைக்கிறேன். ஆம், வண்டி என்று தான் சொன்னார்கள். 67 00:04:33,942 --> 00:04:35,235 மிகவும் அருமை. 68 00:04:35,318 --> 00:04:37,112 ஆம். மிகவும் அருமை. 69 00:04:48,039 --> 00:04:49,833 புகழ் நம்மை மாற்றது என்று நம்புகிறேன். 70 00:04:51,042 --> 00:04:53,420 நாம் மாறாமல் இருப்பதை ஒருவரையொருவர் உறுதி செய்ய வேண்டும். 71 00:04:53,920 --> 00:04:55,964 சரி, மிகவும் சுயநலமாக இருக்கக் கூடாது. 72 00:04:56,840 --> 00:05:00,343 கோபமான மரம் எண் 3 எங்கிருந்து ஆரம்பித்தாள் என்பதை மறக்க விடமாட்டேன். 73 00:05:05,640 --> 00:05:07,350 மிக அருமை. 74 00:05:07,434 --> 00:05:09,019 ஆம், மிக அருமை. 75 00:05:12,814 --> 00:05:16,568 ரிக், அதற்கு இரண்டு ஃபில்டர்களை மாட்ட முடியுமா? கண் கூசுகிறது. 76 00:05:16,651 --> 00:05:18,236 -வருகிறேன். -இன்னும் கொஞ்சமா? 77 00:05:18,320 --> 00:05:20,363 ஆம். கொஞ்சம் உயரமாக. 78 00:05:40,800 --> 00:05:42,928 அதை கவனமாக எடுத்துவைக்க முடியுமா? தயவுசெய்து? 79 00:05:58,526 --> 00:06:02,489 ஜூஸ் இருக்க வேண்டும் அல்லது இருக்கக்கூடாதா. அதுதான் கேள்வி. 80 00:06:03,114 --> 00:06:06,326 அருமை! 81 00:06:06,409 --> 00:06:08,745 அருமை! 82 00:06:14,084 --> 00:06:17,337 அன்பே, நாம் படப்பிடிப்பைத் தொடங்கப்போகிறோம். நீ உன் டிராக்சூட்டை அணிந்து வா. 83 00:06:17,420 --> 00:06:20,215 -ஆடை பொறுப்பாளரிடம் போ. -சொல், ஹாலிவுட்டே. 84 00:06:20,298 --> 00:06:23,593 -நான் இதை இயல்பாக செய்கிறேன், சரியா? -ஆம், என்னால் முடியுமா என்று தெரியவில்லை. 85 00:06:23,677 --> 00:06:27,138 இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். உற்சாகமாகவும், பயமாகவும் இருக்கிறது. 86 00:06:27,222 --> 00:06:28,640 -சாரா, உன்னால் முடியும். -அப்படியா? 87 00:06:28,723 --> 00:06:30,809 நாம் இதை நன்றாக செய்யப்போகிறோம். நீ சிறப்பாக செய்வாய். 88 00:06:30,892 --> 00:06:32,602 -சரி. -ஆஹா. 89 00:06:33,395 --> 00:06:34,813 இது வெறும்... 90 00:06:37,315 --> 00:06:39,818 இது மிகவும் அற்புதம். 91 00:06:39,901 --> 00:06:43,238 -ஹாய், பாம் அத்தை. அருமை, சரியா? -இது மிக அருமையாக இருக்கிறது. 92 00:06:43,321 --> 00:06:44,322 ஹலோ, மக்களே! 93 00:06:45,365 --> 00:06:46,616 ஹாய்! 94 00:06:48,577 --> 00:06:49,786 நிச்சயமாக. 95 00:06:49,869 --> 00:06:52,414 அட, இந்த இயக்குநர், அதிகாரம் செய்கிறார். 96 00:06:54,124 --> 00:06:57,919 மக்களே, என் பெயர் ஆர்ட். ஆர்ட் ராபின்ஸ். நான்தான் உங்கள் இயக்குநர். 97 00:07:00,297 --> 00:07:02,465 மக்களே, தயவுசெய்து. தயவுசெய்து வேலையை நிறுத்துங்கள். 98 00:07:03,383 --> 00:07:05,719 எந்த வேலையை? யாரும் நகரக் கூட இல்லை. 99 00:07:05,802 --> 00:07:07,554 "அடுத்த ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் நட்சத்திரம்" 100 00:07:07,637 --> 00:07:11,766 பட்டத்தை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ள நமது புதிய போட்டியாளர், 101 00:07:11,850 --> 00:07:13,977 திரு. மேக்ஸ் டேடனை எல்லோரும் வாழ்த்துங்கள். 102 00:07:15,437 --> 00:07:18,773 நன்றி. நான் நன்றி சொல்ல விரும்பும் பலர் இருக்கிறார்கள். 103 00:07:18,857 --> 00:07:20,775 இது... இது ஒரு நம்பமுடியாத பயணம். 104 00:07:20,859 --> 00:07:22,736 -அதாவது... -சரி! அவ்வளவுதான். 105 00:07:23,570 --> 00:07:26,281 ஆஹா. அது நன்றாக இருந்தது. 106 00:07:26,364 --> 00:07:27,699 நான் திரைக்குப் பின்னால் நடப்பவற்றை எடுக்கிறேன். 107 00:07:27,782 --> 00:07:30,785 இது எப்படி இருக்கின்றது என்று பார்க்க பி-ரோல் எடுக்கிறோம். அதை விளம்பரத்துக்கு பயன்படுத்துவோம். 108 00:07:30,869 --> 00:07:32,871 -சரி. -அவர் படமெடுப்பதை நான் படம்பிடிப்பேன். 109 00:07:32,954 --> 00:07:34,539 நாங்கள் கொஞ்சம் ஆழமாக, அதிகமாக ஊடுருவி எடுப்போம். 110 00:07:34,623 --> 00:07:36,249 ஆஹா, சமையல் நிகழ்ச்சிக்கு இது ரொம்ப அதிகம். 111 00:07:36,333 --> 00:07:37,709 உன் வேலை பிடித்திருக்கிறது. 112 00:07:37,792 --> 00:07:40,128 சரி, அதேதான். உன் வேலை எனக்குப் பிடித்திருக்கிறது. 113 00:07:40,921 --> 00:07:43,548 நான் உங்களை கேள்வி கேட்க முடிந்தால், நன்றாக இருக்கும். 114 00:07:43,632 --> 00:07:45,217 என்னையா? நிச்சயமாக. சரி, கண்டிப்பாக. நான்... 115 00:07:45,300 --> 00:07:46,968 -இதோ. சரி. -உங்களுக்கு எங்கே... 116 00:07:47,052 --> 00:07:48,386 இங்கே. சரி. 117 00:07:49,804 --> 00:07:51,139 இந்த நிகழ்ச்சியைப் 118 00:07:51,223 --> 00:07:52,682 பற்றி எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கள். 119 00:07:52,766 --> 00:07:54,851 சரி, மேக்ஸும் நானும்... 120 00:07:56,937 --> 00:07:58,521 நான் பேசலாமா... சரி. 121 00:07:58,605 --> 00:08:02,525 மேக்ஸும் நானும் ஆரோக்கிய உணவு மற்றும் நல்வாழ்வு முயற்சியில் பங்குதாரர்கள். 122 00:08:02,609 --> 00:08:04,819 நமது தினசரி ஊட்டச்சத்தை பூர்த்தி செய்வதற்கும் இயக்கத்தை அதிகரிப்பதற்குமான 123 00:08:04,903 --> 00:08:07,948 வழிகளை மக்களுக்குக் கற்பிக்ககவும், மிகவும் பரந்த பார்வையாளர்களைச்... 124 00:08:08,031 --> 00:08:10,867 சென்றடைய இந்த வாராந்திர நிகழ்ச்சி எங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். 125 00:08:10,951 --> 00:08:12,702 நான் இரண்டு கேமராக்களையும் பார்க்க வேண்டுமா? 126 00:08:12,786 --> 00:08:13,787 -நான் பார்க்கவில்லை... -கச்சிதம். 127 00:08:13,870 --> 00:08:15,622 நன்றாக இருக்கிறதா? ஆம், நன்றாக இருந்தது. சரி. 128 00:08:15,705 --> 00:08:16,998 சரி. 129 00:08:17,082 --> 00:08:18,541 என்ன தெரியுமா, இது... 130 00:08:18,625 --> 00:08:22,212 சமையல் மேடை சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த பொருட்களை அங்கே வைக்கலாம். 131 00:08:22,295 --> 00:08:26,424 எடிபில் ஆர்ட் ஃபார் கேமராவிலிருந்து வருகிறேன். நான் பில்கி, உணவு வடிவமைப்பாளர். 132 00:08:26,508 --> 00:08:28,051 சரி. நிச்சயமாக. 133 00:08:28,134 --> 00:08:30,762 மன்னிக்கவும். நான் சாரா. உங்கள் வேலை பிடித்திருக்கிறது. என்ன? 134 00:08:30,845 --> 00:08:33,472 -இது புதுமையாக இருக்கிறதுதானே? -எல்லாவற்றையும் திரும்ப அதே இடத்தில் வைப்பார்களா? 135 00:08:33,557 --> 00:08:36,308 ஆம். ஆம், நிச்சயமாக. இது வெறும் நிகழ்ச்சிதான், அன்பே. 136 00:08:36,393 --> 00:08:37,769 நீ அப்படி பேசுவதை நிறுத்தலாம். 137 00:08:37,851 --> 00:08:39,980 -இல்லை, என்னால் முடியாது, அன்பே. -நிறுத்து. 138 00:08:40,063 --> 00:08:41,231 இல்லை, நிஜமாகவே, என்னால் முடியாது. 139 00:08:41,313 --> 00:08:44,609 இது கேமராக்கள் மற்றும் ஆற்றலைப் பற்றியது. இது எனக்குப் பிடித்திருக்கிறது. 140 00:08:44,693 --> 00:08:46,111 பெண்ணாக இருப்பது அதிர்ஷ்டம். 141 00:08:46,194 --> 00:08:48,989 -இது "கைஸ் அண்ட் டால்ஸ்" நாடகத்தின் பாடல். -நான் நாடகத்தில் தான் தொடங்கினேன். 142 00:08:49,072 --> 00:08:51,491 -நீ தொடங்கவில்லை. -நான் தொடங்கவில்லை. ஆனால் நன்றாக இருந்ததுதானே? 143 00:08:52,033 --> 00:08:54,536 ஹேய், சால். ஐஸ் கட்டிகள் கொண்டு வருகிறாயா? 144 00:08:54,619 --> 00:08:55,704 -கொண்டு வருகிறேன். -சால், ஹாய்! 145 00:08:55,787 --> 00:08:57,038 நான் ஒரு கோப்பை ஐஸ் கட்டிகளை தருகிறேன். 146 00:08:57,122 --> 00:08:59,082 என்னிடம் வண்டி நிறைய இருக்கிறது. நான் ஸ்பெஷல் எப்ஃபெக்ட்ஸ் குழுவில் இருக்கிறேன். 147 00:08:59,165 --> 00:09:01,626 கண்டிப்பாக. உங்கள் வேலை பிடித்திருக்கிறது. 148 00:09:01,710 --> 00:09:02,544 என்ன? 149 00:09:03,503 --> 00:09:06,715 சொன்னேனே, இது ஹாலிவுட்டின் பாதிப்பு. சொல்லப் போனால்... 150 00:09:06,798 --> 00:09:09,134 -உங்கள் வேலை பிடித்திருக்கிறது! -பார், நான் பதற்றமடைகிறேன். 151 00:09:09,217 --> 00:09:12,470 தெரியும். நீ படப்பிடிப்பில் இடம்பெற விரும்பவில்லை என்றால், 152 00:09:12,554 --> 00:09:14,514 -நீ சொல்லியிருக்கலாம். -இல்லை, நான் சொன்னேன், 153 00:09:14,598 --> 00:09:17,309 ஆனால் இப்போது உறுதியாக இல்லை... நிஜமாகவே முடியும் என்று நினைக்கவில்லை, 154 00:09:17,392 --> 00:09:20,228 ஏனென்றால் எனக்கு நடுக்கமாக இருக்கிறது, அதைப் பற்றியே யோசிக்கிறேன், எனவே... 155 00:09:20,312 --> 00:09:22,647 -சரி. -பாம். பாம் இங்கிருக்கிறாள்! 156 00:09:22,731 --> 00:09:23,690 ஹாய். இங்கு வருகிறாயா? 157 00:09:23,773 --> 00:09:25,108 வருகிறேன்! 158 00:09:25,734 --> 00:09:29,362 என்ன... எப்படி போகிறது? 159 00:09:29,446 --> 00:09:31,573 நீ உன் யோகா உடையில் இருக்க வேண்டாமா? 160 00:09:31,656 --> 00:09:35,201 நீ இதை செய்கிறாயா? நான்... பயப்படுகிறேன், நான் கேமரா முன் நிற்க விரும்பவில்லை. 161 00:09:35,285 --> 00:09:36,745 -பொறு, என்ன? -இவளாக நான் நடிக்கவா? 162 00:09:36,828 --> 00:09:39,414 -இல்லை, என்னைப் போல வேண்டாம். நீ நீயாக இரு. -நான் நீயாக இருப்பேன். 163 00:09:39,497 --> 00:09:41,458 அந்த வசனங்களை நீக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். 164 00:09:41,541 --> 00:09:43,627 -எனக்கு எந்த வசனமும் இல்லை. -நான் உன் வசனத்தைப் பேசுவேன். 165 00:09:43,710 --> 00:09:46,546 -நான் உன்னைப் பார்த்து பேசும் வசனம். -இவன் கேமராவைப் பார்த்து விளக்கும்போது, 166 00:09:46,630 --> 00:09:49,007 நீ சில யோகா அசைவுகளை செய்ய வேண்டும். உன்னால் முடியும்தானே? 167 00:09:49,090 --> 00:09:50,467 அதை செய்வது மிகவும் எளிது. 168 00:09:51,426 --> 00:09:54,095 இயக்குநரே, சார். சார்? 169 00:09:54,179 --> 00:09:58,725 ஆம், செல்லுங்கள். இரண்டு நொடிகள் மட்டுமே காத்திருப்பேன். செல்லுங்கள். ஒன்று, இரண்டு. 170 00:09:58,808 --> 00:10:00,435 -மேக்ஸ். -சொல். 171 00:10:00,518 --> 00:10:02,562 இவர் என்னையே பார்க்கிறார், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 172 00:10:02,646 --> 00:10:06,608 நடிகரை மாற்றம் செய்து கொள்ளலாமா? இவர் பாம்... இது பாம். பாம், இது ஆர்ட். 173 00:10:06,691 --> 00:10:09,903 தொழில் பங்குதாரர் பாத்திரத்தில் இவர் இருக்கப் போகிறார். 174 00:10:12,781 --> 00:10:15,825 நிச்சயமாக. அழகானவர் நடிக்கட்டும். மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் உள்ளே, நீங்கள் வெளியே. 175 00:10:15,909 --> 00:10:18,536 -அழகானவரா? -யாரோ ஒருவர் அதை வெளிப்படையாக சொன்னார்களே. 176 00:10:18,620 --> 00:10:20,872 வேடிக்கையாக இருக்கிறது. அம்மா இதற்கு உடன்பட மாட்டார். 177 00:10:20,956 --> 00:10:23,541 அதற்குக் காரணம் நீ அம்மாவைப் போல் இருக்கிறாய். நான் அப்பா சொந்தங்களைப் போல, 178 00:10:23,625 --> 00:10:25,085 அவருடைய அம்மா பேரழகி! 179 00:10:25,168 --> 00:10:27,212 -பாம், யோகா உடையை அணிய முடியுமா? -என் பொருட்கள். 180 00:10:27,295 --> 00:10:29,714 ஆடை அலங்கார பெண் மாடியில் படுக்கையில் வைத்தார். 181 00:10:29,798 --> 00:10:32,342 நான் அணிந்திருக்கும் காலணிகளைத் தவிர. வேறு கொண்டு வா. மாற்றிக்கொள்வோம். 182 00:10:32,425 --> 00:10:33,552 ஆம், சரி. 183 00:10:33,635 --> 00:10:35,637 சரி, தொடங்குவோம், நண்பர்களே. 184 00:10:35,720 --> 00:10:38,723 நற்சான்றிதழ்களை வழங்குபவர்கள் தேவை. பிராண்டி, ஆம்பர். 185 00:10:38,807 --> 00:10:40,767 அவர்களின் வசனங்களை ஒத்திகைப் பார்த்துவிடுவோம். 186 00:10:40,850 --> 00:10:41,935 சரி, சிறுமிகளே, 187 00:10:42,018 --> 00:10:45,230 நீங்கள் மேஜையின் இந்தப் பக்கத்தில், திரு. டேடனுக்குப் பக்கத்தில் நிற்பீர்கள். 188 00:10:45,313 --> 00:10:47,691 -சரி. -ஆம், புரிந்தது. 189 00:10:47,774 --> 00:10:49,734 சரி, இந்த ஒத்திகையைப் பார்ப்போம், மக்களே. 190 00:10:49,818 --> 00:10:51,903 இதோ உங்கள் பானங்கள், திரு. டேடன். 191 00:10:51,987 --> 00:10:55,240 நீங்கள் இவற்றைப் பிடித்திருக்கலாம் அல்லது பிளெண்டரில் இருந்து ஊற்றலாம். 192 00:10:56,491 --> 00:10:58,702 அல்லது இவற்றை தயாராக மேஜையில் வைத்திருக்கலாம். 193 00:10:58,785 --> 00:11:00,620 ஆம், எது இயல்பாக தோன்றுகிறதோ அப்படி. 194 00:11:00,704 --> 00:11:02,414 சரி. நன்றி. 195 00:11:02,497 --> 00:11:04,457 நாங்கள் அவரிடம் கேட்க வேண்டுமா? 196 00:11:04,541 --> 00:11:06,960 "நீங்கள் அந்த ஷேக்கை செய்யும் விதம் பிடித்திருக்கிறது" என்று நான் சொல்லலாம். 197 00:11:07,043 --> 00:11:08,420 அது வசனத்தில் இருக்கிறதா? 198 00:11:08,503 --> 00:11:10,422 பிறகு நான், "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. 199 00:11:10,505 --> 00:11:12,757 சமைத்த சுவையான, ஆரோக்கியமான ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்கலாம். 200 00:11:12,841 --> 00:11:14,843 -நல்ல வசனம். -இது வசனத்தில் இல்லை. 201 00:11:14,926 --> 00:11:17,345 இயல்பாகவே வைத்துக் கொள்வோம். எளிதான உரையாடல், என்ன? 202 00:11:17,429 --> 00:11:18,972 அப்போது வசனத்தின் படி தொடர்வோம். 203 00:11:19,890 --> 00:11:21,850 -மிகவும் பதற்றமாக இருக்கிறது. -எனக்கும்தான். 204 00:11:21,933 --> 00:11:25,770 இப்போது, ஆழமாக சுவாசியுங்கள், கவனம் செலுத்துங்கள். இருவரும் அழகாக இருக்கிறீர்கள். 205 00:11:26,479 --> 00:11:28,690 பொறுங்கள், எங்களுக்கு ஒப்பனை செய்யவில்லை. 206 00:11:28,773 --> 00:11:30,609 எங்களுக்கு ஒப்பனை தேவை. 207 00:11:31,484 --> 00:11:32,986 கவனம், கோபமான மரமே. 208 00:11:33,069 --> 00:11:34,571 அச்சச்சோ, மன்னிக்கவும். 209 00:11:34,654 --> 00:11:38,450 நன்றி. எங்களுக்கு ஒப்பனை செய்வார்கள் என்று சொன்னதால் உறுதிப்படுத்த விரும்பினேன். 210 00:11:38,533 --> 00:11:41,703 இது ஒத்திகைதான். படப்பிடிப்பு தொடங்கும் முன் உங்களுக்கு ஒப்பனை செய்து விடுவோம். 211 00:11:41,786 --> 00:11:44,456 சரி. என்ன நடக்கிறது? 212 00:11:44,539 --> 00:11:48,293 தகவலுக்காக சொல்கிறேன், இந்த இருவரும் வசனத்தைச் சேர்க்க நினைக்கிறார்கள். 213 00:11:48,376 --> 00:11:50,503 இல்லை. இல்லை. அதெல்லாம் வேண்டாம். 214 00:11:50,587 --> 00:11:54,007 சரி, படப்பிடிப்பு இடத்தை தயார் செய்யுங்கள். வெறும் நடிகர்களை. 215 00:11:54,090 --> 00:11:56,927 வசனத்தைப் பின்பற்றுவோம், மக்களே. 216 00:11:57,010 --> 00:11:58,136 நிஜமாகவா? அதாவது, 217 00:11:58,220 --> 00:12:00,972 பெரும்பாலும் வசனத்தைப் பின்பற்றலாம், கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் என நினைத்தேன். 218 00:12:01,598 --> 00:12:03,892 முதலில் சிறுமிகள் எப்படி பாராட்டுகிறார்கள் என்று பார்ப்போம், சரியா? 219 00:12:03,975 --> 00:12:05,602 சரி. 220 00:12:05,685 --> 00:12:07,479 இது என்ன? யார் இவர்? 221 00:12:07,562 --> 00:12:09,481 நான் சாரா. அழகாக இல்லாதவள். 222 00:12:09,564 --> 00:12:12,025 என் மகளின் கண்களை எல்லோருக்கும் தெரிவதை நான் உறுதி செய்ய விரும்புகிறேன். 223 00:12:13,151 --> 00:12:14,402 அழகு. 224 00:12:14,486 --> 00:12:17,322 இந்த செட்டின் கட்டுப்பாட்டைப் பெறுவோமா? இது பள்ளிக்கூட பிள்ளைகளை படமெடுப்பது அல்ல. 225 00:12:17,405 --> 00:12:20,116 -அம்மா, என் தலைமுடி நன்றாக இருக்கிறது. -சரி. 226 00:12:20,200 --> 00:12:22,744 -செல்லுங்கள். -நான் எப்படி? என் கண்கள் தெரிகின்றனவா? 227 00:12:22,827 --> 00:12:24,913 -ஆம். -இது ஒத்திகைதான். 228 00:12:24,996 --> 00:12:27,624 மன்னியுங்கள். என் தவறுதான். உங்கள் வேலை எனக்குப் பிடித்திருக்கிறது. 229 00:12:27,707 --> 00:12:29,960 ஆம். ஏற்கனவே சொன்னீர்கள். 230 00:12:30,043 --> 00:12:32,087 தயாரா? இதோ தொடங்குவோம். 231 00:12:32,170 --> 00:12:33,755 சரி, சிறுமிகளே. நீங்கள் தயாரா? 232 00:12:33,838 --> 00:12:35,632 -ஆம். -ஆம். 233 00:12:35,715 --> 00:12:39,219 சரி, மூச்சை இழுங்கள், கவனம் செலுத்துங்கள், 234 00:12:39,302 --> 00:12:41,346 கூடவே இயக்குநர் "ஆக்ஷன்" என்று சொல்வதை மட்டும் கேளுங்கள். 235 00:12:42,097 --> 00:12:43,890 ஆக்ஷன்! 236 00:12:54,693 --> 00:12:58,363 நானா? நான்தான் பேச வேண்டுமா? ஆம், நான்தான். சரி. 237 00:13:01,825 --> 00:13:02,784 சரி. 238 00:13:02,867 --> 00:13:06,079 வருக, "மேக்ஸின் உணவு பற்றிய பரிந்துரைக்கு" வரவேற்கிறேன்! 239 00:13:06,162 --> 00:13:07,747 நான் உங்கள் தொகுப்பாளர், மேட் டேடன். 240 00:13:07,831 --> 00:13:08,790 கட். 241 00:13:08,873 --> 00:13:10,250 மேக்ஸ். 242 00:13:10,709 --> 00:13:13,211 -உங்கள் பெயர் மேக்ஸ். -நான் என்ன சொன்னேன்? 243 00:13:13,295 --> 00:13:15,255 "மேட்" என்றீர்கள். "என் பெயர் மேட்" என்றீர்கள். 244 00:13:15,338 --> 00:13:18,842 -அப்படிச் சொன்னதாக நினைக்கவில்லை, இல்லையா? -நிஜமாக, நீங்கள் சொன்னீர்கள். 245 00:13:18,925 --> 00:13:20,260 -நிஜமாகவா? -நீங்கள் "மேட்" என்றீர்கள். 246 00:13:20,343 --> 00:13:22,512 -நிஜமாகவா? -நானும் கவனித்தேன். 247 00:13:22,596 --> 00:13:23,930 அட. 248 00:13:24,973 --> 00:13:26,349 நம் பெயர்களை மாற்ற வேண்டுமா? 249 00:13:26,433 --> 00:13:28,351 ஆம். நான் ஷானனாக இருப்பேன். 250 00:13:28,435 --> 00:13:29,519 நான் கிரிஸ்டலாக இருப்பேன். 251 00:13:29,603 --> 00:13:31,730 இல்லை! இல்லை, பெயர்களை மாற்ற வேண்டாம், மக்களே. 252 00:13:32,522 --> 00:13:34,524 நாம் மக்களா? 253 00:13:34,608 --> 00:13:36,651 நான் கிரிஸ்டல். எனக்கு அவ்வளவுதான் தெரியும். 254 00:13:36,735 --> 00:13:41,531 நான் மேட் இல்லை. நான் மேக்ஸ். மேக்ஸ். மேக்ஸ் டேடன். மேக்ஸ். 255 00:13:41,615 --> 00:13:43,033 சரி, தொடங்குவோம். 256 00:13:43,116 --> 00:13:44,993 சரி. ஆம், புரிந்தது. இதோ. 257 00:13:45,076 --> 00:13:47,120 நினைவிருக்கட்டும், ஆரம்பத்தில் இருந்து தொடங்கப்போவதில்லை, சரியா? 258 00:13:47,203 --> 00:13:49,831 வெறும் சான்றுகளைப் பெறுகிறோம், சரியா? 259 00:13:51,541 --> 00:13:53,376 ஆக்ஷன்! 260 00:13:54,461 --> 00:13:58,840 சரி, இவைதான் நாள் முழுவதுக்கும் தேவையான அத்தியாவசிய வைட்டமின்களையும் தாதுக்களையும் 261 00:13:58,924 --> 00:14:02,802 கொடுக்கும் எனது பிரத்தியேகமான ஸ்மூத்திகள். எல்லாம் ஒரே கோப்பையில். 262 00:14:03,553 --> 00:14:04,721 எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 263 00:14:06,973 --> 00:14:08,892 நன்றாக இருக்கிறது. சரிதானே, கிரிஸ்டல்? 264 00:14:09,476 --> 00:14:13,271 அற்புதம், ஆம். சுவையானது. நன்றாக இருக்கிறது, ஷானன். 265 00:14:14,397 --> 00:14:15,357 கட்! 266 00:14:15,440 --> 00:14:17,108 "ஷானனை" பயன்படுத்த வேண்டுமா என்று தெரியவில்லை. 267 00:14:17,192 --> 00:14:19,694 சரி, நாம் நிஜமாக படம் எடுக்கும்போது, 268 00:14:19,778 --> 00:14:23,114 ஸ்மூத்தி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை சொல்லும் முன் அதை நீங்கள் சுவைக்க வேண்டும். 269 00:14:23,198 --> 00:14:25,700 சரியா? சரி. 270 00:14:27,452 --> 00:14:28,536 அன்புள்ள டைரி, 271 00:14:28,620 --> 00:14:31,790 பிராண்டியும் நானும் நடிப்பில் பல்வேறு விதமான நிலைகளும் உண்டு என்பதை அறிந்து கொண்டோம். 272 00:14:32,290 --> 00:14:34,626 சாப்பிடுவது போல நடிப்பதுதான் கடினமான ஒன்று. 273 00:14:34,709 --> 00:14:38,713 குறிப்பாக ஒன்றை உங்களுக்கு பிடிக்காது என்று தெரிந்தே, அதை பிடிப்பது போல நடிப்பது. 274 00:14:42,008 --> 00:14:44,427 சமீபகாலமாக அப்படி நிறைய செய்ய வேண்டியிருந்தது. 275 00:14:44,511 --> 00:14:48,181 சரி, எல்லோரும் மேக்கப் போட செல்லுங்கள், இறுதி டச்-அப்கள். 276 00:14:48,265 --> 00:14:49,516 பத்து நிமிடத்தில் மீண்டும் தொடர்கிறோம். 277 00:14:49,599 --> 00:14:52,060 சரி, பெண்களே. சிறுமிகளே. 278 00:14:52,143 --> 00:14:53,979 ஹேய், ஷானன் மற்றும் கிரிஸ்டல். 279 00:14:54,062 --> 00:14:56,773 ஆம், மன்னிக்கவும், ஆம். நாங்கள் இங்கேயே காத்திருக்கட்டுமா? 280 00:14:56,856 --> 00:14:58,525 இல்லை, இது மேக்கப் நேரம். என்னைப் பின்தொடருங்கள். 281 00:15:02,571 --> 00:15:05,991 -இதுதான் மிகக்சிறந்த நாள். -இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 282 00:15:06,074 --> 00:15:07,492 மேக்கப் வண்டிக்கு போவதையா? 283 00:15:07,576 --> 00:15:10,370 ஆம், நாம் பிரபலமாகப் போகிறோம். மிக அருமை. 284 00:15:10,453 --> 00:15:12,163 உனக்கு பதற்றமாக இருக்கிறதா? 285 00:15:12,247 --> 00:15:14,624 கொஞ்சம். மேக்ஸ் மிகவும் பதற்றமாக இருந்தது போல தெரிந்தது. 286 00:15:14,708 --> 00:15:16,585 நிச்சயமாக. கூடவே உன் அம்மாவும். 287 00:15:16,668 --> 00:15:17,752 அவர் மிகவும் பதற்றமாக இருக்கிறார். 288 00:15:17,836 --> 00:15:22,757 பெண்களே, மேக்கப் வண்டி இங்கே உள்ளது. வாருங்கள், சீக்கிரம். 289 00:15:34,352 --> 00:15:37,105 மெதுவாக நடப்போம். மக்கள் நம்மைப் பார்க்க வேண்டும். 290 00:15:37,188 --> 00:15:39,024 ஆனால் ஏன் இங்கு யாரும் இல்லை? 291 00:15:39,107 --> 00:15:41,943 ஆம். நம்முடைய அருமையான தருணத்தின் போது அருகில் யாரும் இல்லை. 292 00:15:43,403 --> 00:15:46,156 நான் கம்பத்தில் மோதியதை பார்க்க சுற்றிலும் நிறைய பேர் இருக்கிறார்கள். 293 00:15:46,656 --> 00:15:49,576 அதுவும் முக்கிய விஷயம்தான், எனவே அதையும் கணக்கில் வைத்துக்கொள்வோம். 294 00:15:52,203 --> 00:15:53,204 HFN மேக்கப் நடிகர்களுக்கு மட்டும் 295 00:15:53,288 --> 00:15:54,497 மேக்கப் வண்டி. 296 00:16:03,006 --> 00:16:04,549 போகலாம். 297 00:16:08,053 --> 00:16:11,056 நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எனக்கு அது பிடித்திருக்கிறது. 298 00:16:11,139 --> 00:16:13,016 -நன்றி. -நன்றி. 299 00:16:13,099 --> 00:16:15,352 மிகவும் அருமையாக உள்ளது. 300 00:16:16,895 --> 00:16:19,814 சரி. சரி, உன் அம்மாவுக்குப் படங்கள் அனுப்புவதாக உறுதியளித்தேன். 301 00:16:19,898 --> 00:16:22,442 -நான் பார்க்கிறேன். ஹாய். -ஹேய். 302 00:16:22,525 --> 00:16:24,486 -நன்றி. -கண்ணாடியில். நன்றி. பார். 303 00:16:24,569 --> 00:16:26,446 அங்கே பார். காத்திரு. 304 00:16:27,989 --> 00:16:30,033 சரி, இங்கே கூட்டம் அதிகமாகிறது. 305 00:16:30,116 --> 00:16:32,118 சரி, மன்னிக்கவும், நாங்கள் வெளியேறுகிறோம். 306 00:16:33,203 --> 00:16:35,038 நாம் இங்கு இருக்கக் கூடாது. 307 00:16:35,538 --> 00:16:38,291 -ஹாய். நீ மிகவும் அழகாக இருக்கிறாய். -ஹாய், அப்பா. 308 00:16:38,375 --> 00:16:40,585 -உனக்கு பதற்றமாக இல்லைதானே? -கொஞ்சம். 309 00:16:40,669 --> 00:16:42,712 நீ பதற்றப்படக் கூடாது. சின்னி உனக்கு ஹாய் சொல்ல சொன்னார், 310 00:16:42,796 --> 00:16:44,923 அவர் உன் முன்னேற்றத்தைப் பற்றி பெருமைப்படுகிறார், நானும்தான். 311 00:16:45,006 --> 00:16:46,007 அவர் வந்திருக்கிறாரா? 312 00:16:46,091 --> 00:16:47,551 இல்லை. நான் மட்டும்தான் வந்தேன். 313 00:16:48,134 --> 00:16:49,261 செட்டில் பார்க்கலாம். 314 00:16:51,054 --> 00:16:52,264 நம்மை செட்டில் பார்க்கலாம். 315 00:16:52,347 --> 00:16:54,516 -எனக்குத் தெரியும். -மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். 316 00:16:54,599 --> 00:16:56,434 நீங்கள் நடிகைகளாக விரும்புகிறீர்களா? 317 00:16:56,518 --> 00:16:57,561 ஆம். 318 00:16:57,644 --> 00:17:00,021 இல்லை. இது நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். 319 00:17:00,105 --> 00:17:02,190 அதோடு என் தோழியுடன் இந்த மகிழ்ச்சியான நேரத்தைப் பிடித்திருக்கிறது. 320 00:17:02,691 --> 00:17:04,526 ஜஸ்டின் இங்கே இருந்திருக்கலாம். 321 00:17:04,609 --> 00:17:05,610 ஆம். 322 00:17:07,571 --> 00:17:10,991 நேர்மையாக சொல்வதென்றால், இது வெறும் பிராண்டியுடனான மகிழ்ச்சியான நேரம் மட்டுமல்ல. 323 00:17:11,074 --> 00:17:14,785 இந்த நேரத்தில் என் குடும்பத்தை ஒன்றாக பார்க்கிறேன், மேக்ஸையும் சேர்த்துத்தான். 324 00:17:15,704 --> 00:17:19,373 எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த அனுபவத்தைப் பகிர்கிறார்கள். 325 00:17:19,457 --> 00:17:22,960 அப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியான ஒரே குடும்பமாக இருக்க. 326 00:17:25,546 --> 00:17:28,925 இது கொஞ்சம் அதிக மேக்கப் இல்லையா? எனக்கு உண்மையில் மேக்கப் தேவையா? 327 00:17:29,009 --> 00:17:30,093 ஆம். 328 00:17:31,303 --> 00:17:33,138 சரி, இடங்களுக்கு செல்லுங்கள். செல்லுங்கள் மக்களே. 329 00:17:33,221 --> 00:17:34,389 குழந்தைகள் இன்னும் மேக்கப்பில் இருக்கிறார்கள், 330 00:17:34,472 --> 00:17:37,934 இப்போது "யோகா பெண்ணாக" நடிக்கும் உறவினருக்காக காத்திருக்கிறோம். 331 00:17:38,602 --> 00:17:39,644 நிச்சயமாக. 332 00:17:39,728 --> 00:17:42,606 சாரா, ஹாய். பாமிடம் போய் சீக்கிரம் வரச் சொல்கிறாயா? 333 00:17:42,689 --> 00:17:43,815 -சரி. -அது ஃபில்லா? 334 00:17:44,566 --> 00:17:46,234 ஆம். ஆம்பரைப் பார்க்க விரும்பினார். 335 00:17:46,318 --> 00:17:47,319 ஹேய் பார். 336 00:17:47,402 --> 00:17:49,404 குழந்தைகள் மேக்கப்பில் இருக்கும் இந்தப் படங்களைப் பார். 337 00:17:49,487 --> 00:17:51,072 குழந்தை நட்சத்திரங்கள் போல இருக்கிறார்கள். 338 00:17:51,156 --> 00:17:53,867 சரி, வேகமாக வேலை செய்வோமா? ஏனென்றால் ஒளி குறைந்துகொண்டிருக்கிறது. 339 00:17:54,743 --> 00:17:57,996 -இது பகல். உள்ளே இருக்கிறோம். என்ன சொல்கிறாய்? -சரி. 340 00:17:58,079 --> 00:17:59,956 தெரியவில்லை. சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. 341 00:18:00,040 --> 00:18:01,666 ஒரு நொடி சுயநினைவை இழந்துவிட்டேன். 342 00:18:01,750 --> 00:18:04,294 ஒரு ஓரத்தில் ஃபில் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அது என்னை பயமுறுத்துகிறது. 343 00:18:04,377 --> 00:18:05,587 பாம் எங்கே? 344 00:18:05,670 --> 00:18:08,548 குழந்தைகளுக்காக காத்திருக்கும் போது யோகா பெண்ணை ஒத்திகைக்கு அழைத்து வருவோம். 345 00:18:08,632 --> 00:18:10,300 நாங்கள் தயாராக இருக்கிறோம்! 346 00:18:10,383 --> 00:18:12,052 அதோடு கவனமாகவும்! 347 00:18:16,890 --> 00:18:18,058 வந்துவிட்டார். 348 00:18:25,273 --> 00:18:27,025 -இல்லை. -கடவுளே. 349 00:18:34,324 --> 00:18:35,367 இதைச் செய்வோம். 350 00:18:43,208 --> 00:18:44,709 டேக் 22. 351 00:18:45,377 --> 00:18:47,754 கேட்டதா, மக்களே? இருபத்து இரண்டு. 352 00:18:47,837 --> 00:18:50,715 சரி, இந்த முறை நாம் நிறுத்தாமல் படம்பிடிக்கப் போகிறோம். 353 00:18:50,799 --> 00:18:52,133 நிறுத்தாமல். என்ன? 354 00:18:52,217 --> 00:18:53,969 நீங்கள் தவறு செய்தாலும் அப்படியே தொடருங்கள். 355 00:18:54,052 --> 00:18:55,971 -அதை பிறகு சரிசெய்துகொள்வோம். -சரி. 356 00:18:56,054 --> 00:18:58,431 -என்னைத் தவிர யாரும் "கட்" என்று கத்தக்கூடாது. -மன்னிக்கவும். 357 00:18:58,515 --> 00:19:00,183 -சரி. -புரிந்ததா? நல்லது. 358 00:19:00,267 --> 00:19:03,645 சரி. ஆக்ஷன். 359 00:19:04,354 --> 00:19:07,148 வருக. மேக்ஸின் உணவு பற்றிய பரிந்துரைக்கு வரவேற்கிறேன். 360 00:19:07,232 --> 00:19:09,401 நான் உங்கள் தொகுப்பாளர், மேக்ஸ் டேடன். 361 00:19:09,484 --> 00:19:13,071 இன்று, நாம் சோர்வை எதிர்த்துப் போராடுவது, உங்கள் ஆற்றலை புதுப்பிப்பது 362 00:19:13,154 --> 00:19:16,449 மற்றும் உணவே மருந்து பற்றி பேசப் போகிறோம். 363 00:19:16,533 --> 00:19:17,867 இப்போது சோர்வு பற்றி பேசுவோம். 364 00:19:17,951 --> 00:19:20,412 நீங்கள் சோர்வாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 365 00:19:20,495 --> 00:19:22,998 போதுமான தூக்கம் இல்லாதது, சர்க்கரை நிறைந்ததை அதிகம் சாப்பிடுவது. 366 00:19:23,081 --> 00:19:24,374 அல்லது நீங்கள் என்னைப் போல இருந்தால், 367 00:19:24,457 --> 00:19:28,461 உங்களுக்கு வாயாடியான, மிகவும் அழுத்தம் கொடுக்கும் பாம் அத்தையும் இருக்கலாம். 368 00:19:28,962 --> 00:19:31,131 -உனக்கு பாம் அப்படித்தான், மேட். -நான் மேக்ஸ். 369 00:19:31,214 --> 00:19:33,174 மேக்ஸ். நீ சொல்வது போல, 370 00:19:33,258 --> 00:19:36,636 உணவில் உள்ள கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகிறது. 371 00:19:36,720 --> 00:19:40,307 இந்த யோகா மேட் மீது சில அடிப்படை உடற்பயிற்சியுடன் சேர்ந்து... 372 00:19:40,390 --> 00:19:42,142 உடற்பயிற்சிக்கு ஹீல்ஸ் கொண்ட காலணி. 373 00:19:42,225 --> 00:19:45,645 ஹை ஹீல்ஸ் அணிந்து நடப்பதே ஒரு உடற்பயிற்சிதான், நான் சொல்வது சரிதானே? 374 00:19:45,729 --> 00:19:47,856 அப்படி செய்யும்போது அற்புதமாக தெரிவீர்கள். 375 00:19:47,939 --> 00:19:49,983 சரி, ஒருவேளை ஹீல்ஸ் வேண்டாம். 376 00:19:50,066 --> 00:19:52,235 ஆனால் மேக்கப்பும் காதணிகளும் இருக்கட்டும். நான் சொல்வது சரிதானே, மேட்? 377 00:19:52,319 --> 00:19:53,361 மேக்ஸ். 378 00:19:53,445 --> 00:19:57,032 என்னவோ. இப்போது, நாம் விளம்பரதாரரிடம் இருந்து ஒரு விஷயம். 379 00:19:57,115 --> 00:19:59,117 எங்கள் நிகழ்ச்சியில் விளம்பரங்கள் இருக்காது. 380 00:19:59,200 --> 00:20:00,201 ஆம். 381 00:20:03,496 --> 00:20:05,206 நான் நன்றாக இருக்கிறேன், மேட். 382 00:20:08,501 --> 00:20:11,838 அன்புள்ள டைரி, இது ஒரு வேடிக்கையான நாள். அவ்வளவுதான் 383 00:20:11,922 --> 00:20:14,549 மேக்ஸின் காணொளி வெற்றிபெறுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன், 384 00:20:14,633 --> 00:20:17,219 அதன் மூலம் அவர் தனது சொந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்த முடியும். 385 00:20:17,761 --> 00:20:22,224 ஆம்பர் பிரவுனாகிய நான், அவர் அதற்கு தகுதியானவர் என்று நம்புகிறேன். 386 00:20:22,807 --> 00:20:25,602 இருந்தாலும், நாளின் சிறந்த விஷயம் எது தெரியுமா? அப்பா இங்கே இருக்கிறார். 387 00:20:26,811 --> 00:20:29,105 எனவே, சிறுமிகளே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். 388 00:20:29,189 --> 00:20:31,066 வீட்டிலுள்ள பெற்றோரிடம் அவர்களின் 389 00:20:31,149 --> 00:20:34,986 குழந்தைகளுக்கு இந்த வைட்டமின் கொண்ட ஸ்மூத்திகளை பிடிக்கும் என்று நாம் சொல்லலாமா? 390 00:20:36,321 --> 00:20:38,114 சுவையானது. 391 00:20:38,198 --> 00:20:39,241 மிகவும் நல்லது. 392 00:20:39,866 --> 00:20:42,202 உங்களுக்கு இந்த ஸ்மூத்திகளை பிடித்திருந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 393 00:20:42,285 --> 00:20:45,789 ஏனென்றால் நீங்கள் இருவரும் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது போல தெரிகிறது. 394 00:20:45,872 --> 00:20:47,707 22 டேக்குக்கு பிறகும் கூட. 395 00:20:53,922 --> 00:20:55,006 இல்லை. 396 00:20:55,090 --> 00:20:57,634 -செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். -இது ஒரு நல்ல டேக் என்று நினைக்கிறேன். 397 00:20:57,717 --> 00:20:58,843 கட்! 398 00:21:54,649 --> 00:21:56,651 வசனத் தமிழாக்கம் அருண்குமார்