1 00:00:06,550 --> 00:00:09,177 சரி, அமைதியாக இருங்கள். இன்னும் சில நிமிடங்கள் தான். 2 00:00:09,261 --> 00:00:11,471 ஒரு வாரத்திற்கு அல்லது நீண்ட காலத்திற்கான உங்கள் 3 00:00:11,555 --> 00:00:13,974 தன்னார்வலர் சேவையைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்யுங்கள். 4 00:00:14,849 --> 00:00:17,060 தன்னார்வத் தொண்டு உங்கள் சுய சிந்தனையில் ஏற்படுத்தக்கூடிய 5 00:00:17,143 --> 00:00:19,813 நேர்மறையான தாக்கத்தைக் கண்டறிவதே மிக முக்கியமானது. 6 00:00:20,355 --> 00:00:21,565 இப்போது, வெளியே சென்று 7 00:00:21,648 --> 00:00:23,733 மீதமுள்ள நாளை பயனுள்ளதாக ஆக்குங்கள். 8 00:00:51,553 --> 00:00:52,596 காலை 7:30 மணியாக இருக்கும். 9 00:00:55,223 --> 00:00:57,142 சரியான நேரத்திற்கு வந்துவிட்டார்கள். 10 00:01:29,382 --> 00:01:30,926 ஆம். 11 00:01:38,892 --> 00:01:40,310 அன்புள்ள டைரி, 12 00:01:40,393 --> 00:01:44,272 நான் காலையில் பார்க்கும் அந்த வயதான ஜோடி கணவன் மனைவி என்றால், 13 00:01:45,065 --> 00:01:47,067 அவர்கள் விவாகரத்து பெறவில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. 14 00:01:48,485 --> 00:01:49,986 அவர்களுக்கு எங்கள் வீட்டையோ 15 00:01:50,695 --> 00:01:51,988 மரத்தையோ பிடித்திருக்கிறது. 16 00:01:52,697 --> 00:01:54,950 அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்று சரியாகத் தெரியாது, 17 00:01:55,033 --> 00:01:58,203 ஆனால் கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாள் காலையும் 18 00:01:58,286 --> 00:01:59,829 7:30 மணிக்கு வந்துவிடுவார்கள். 19 00:02:01,289 --> 00:02:02,582 கணவர் பேசுவார். 20 00:02:02,666 --> 00:02:04,668 மனைவி புன்னகைத்து சிரிப்பார். 21 00:02:05,293 --> 00:02:07,796 கணவர் எப்போதும் மனைவி கதகதப்பாக இருப்பதை உறுதி செய்கிறார். 22 00:02:09,381 --> 00:02:11,174 அது சிறந்த அன்பாகத் தெரிகிறது. 23 00:02:26,940 --> 00:02:28,858 பாலா டான்சிகரின் "ஆம்பர் பிரவுன்" புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 24 00:02:33,780 --> 00:02:35,782 முடிவெடுக்கும் நாளுக்கு ஒரு வாரம் தான் இருக்கிறது. 25 00:02:36,199 --> 00:02:37,450 ஆம். 26 00:02:37,534 --> 00:02:40,954 உனக்கு எப்படி தெரிவிப்பார்கள் என்று சொன்னார்களா? அழைப்பது, மின்னஞ்சல், மெசேஜ் ஏதாவது? 27 00:02:41,037 --> 00:02:43,498 மின்னஞ்சல் செய்யப்போவதில்லை என்று சொல்ல மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். 28 00:02:44,541 --> 00:02:46,209 ஆனால் வெளிப்படையாக, அதை அவர்களின் 29 00:02:46,293 --> 00:02:49,796 எல்லா ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் சமூக ஊடகங்களிலும் பதிவிடப்போகிறார்கள். 30 00:02:49,880 --> 00:02:51,673 மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 31 00:02:51,756 --> 00:02:53,258 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 32 00:02:53,341 --> 00:02:54,759 நமக்கு பெருமை. 33 00:02:54,843 --> 00:02:56,511 நீயின்றி என்னால் இதை செய்திருக்க முடியாது. 34 00:02:57,137 --> 00:03:00,015 பார். இந்த வாய்ப்பை வெல்கிறோமா இல்லையா என்பது முக்கியமில்லை, 35 00:03:01,099 --> 00:03:04,144 நாம் அனுபவத்தைப் பெற முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது... 36 00:03:04,227 --> 00:03:05,395 தெரியுமா... 37 00:03:06,271 --> 00:03:07,814 -அனுபவத்தை! -ஆம். 38 00:03:07,898 --> 00:03:09,649 ஆனால் நீ வெற்றி பெறலாம். 39 00:03:10,150 --> 00:03:12,152 அது முக்கியம் என்பதற்காக இல்லை ஆனால்... 40 00:03:12,235 --> 00:03:14,571 -முக்கியம் தான், ஆனால் நீ சொல்வது சரிதான். -சரி. 41 00:03:15,238 --> 00:03:18,241 பார், நாம் வென்றால், புதிய விஷயங்களைச் செய்ய வாய்ப்பாக இருக்கும். 42 00:03:18,325 --> 00:03:20,368 நாம் இன்னும் பெரிய வீட்டை வாங்கலாம். 43 00:03:21,536 --> 00:03:24,080 இந்த வீட்டை எனக்குப் பிடிக்கும். நான் வீட்டை மாற்ற விரும்பவில்லை. 44 00:03:24,164 --> 00:03:25,373 நாம் வீடு மாறுகிறோமா? 45 00:03:25,457 --> 00:03:26,499 நாம் மாறக் கூடாது. 46 00:03:26,583 --> 00:03:27,959 இல்லை, யாரும் மாறவில்லை. 47 00:03:28,501 --> 00:03:29,586 சாரா? 48 00:03:29,669 --> 00:03:31,963 நான் வெற்றி பெற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டுடியோவில் நிகழ்ச்சியை 49 00:03:32,047 --> 00:03:34,841 -படமாக்க அவர்கள் விரும்பினால் என்ன செய்வது? -கவலை வேண்டாம். நாங்கள் வந்து பார்ப்போம். 50 00:03:36,092 --> 00:03:37,302 ஆம்பர். 51 00:03:37,385 --> 00:03:39,638 நீ... அது வேடிக்கையாக இருந்தது. 52 00:03:39,721 --> 00:03:41,932 -நன்றி. -அதற்காக சியர்ஸ். 53 00:03:42,015 --> 00:03:43,683 ஆனால் நாம் சில வீடுகளைப் பார்க்கலாமா? 54 00:03:43,767 --> 00:03:45,894 மேக்ஸ், இதை விவாதம் செய்ய இது சரியான நேரமில்லை. 55 00:03:45,977 --> 00:03:49,272 சரி. நிச்சயமாக. எனக்கு நானே சத்தமாக பேசிவிட்டேன். 56 00:03:49,356 --> 00:03:51,524 நீங்கள் ஒன்றாக இருப்பதில் வியப்பேதுமில்லை. 57 00:03:51,608 --> 00:03:54,069 நீ இன்று சரளமாக நகைச்சுவை செய்கிறாய். உனக்கு நல்லது தான். 58 00:03:58,448 --> 00:03:59,532 ஏதாவது செய்தி இருக்கிறதா? 59 00:03:59,616 --> 00:04:00,742 எதுவுமில்லை. 60 00:04:00,825 --> 00:04:02,827 என்னைப் பற்றி கூட எதுவும் சொல்லவில்லையா? 61 00:04:03,286 --> 00:04:04,287 சரி. 62 00:04:04,371 --> 00:04:05,580 இல்லை. 63 00:04:05,664 --> 00:04:07,916 நான் ரியல் எஸ்டேட் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டியதுதான். 64 00:04:08,625 --> 00:04:11,211 ஹெல்த் ஃபுட் நெட்வொர்க்கின் தற்போதைய நிகழ்ச்சிகளில் ஒன்றில் 65 00:04:11,294 --> 00:04:13,421 என்னை வழக்கமான நடிகையாக்க விரும்பாத வரை. 66 00:04:13,505 --> 00:04:15,423 அது நடக்குமா? 67 00:04:15,507 --> 00:04:16,925 -நடக்காது. -ஆம். 68 00:04:17,007 --> 00:04:18,300 -பாம். -மேக்ஸ். 69 00:04:19,344 --> 00:04:21,680 -உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். -என்ன? 70 00:04:21,763 --> 00:04:22,889 சாராவும், ஆம்பரும், நானும் 71 00:04:22,973 --> 00:04:25,767 ஒரு புதிய வீட்டைத் தேடுவது எப்படி? 72 00:04:25,850 --> 00:04:27,686 இந்த பகுதியில் சில வீடுகளை எங்களுக்கு காட்ட முடியுமா? 73 00:04:27,769 --> 00:04:29,479 -நான் வரமாட்டேன். -நானும் தான். 74 00:04:29,563 --> 00:04:31,439 அடடா. சில வீடுகளை பார்க்கலாமா? 75 00:04:31,523 --> 00:04:33,775 புதிய வீட்டை வாங்க இது சரியான நேரமாக இருக்கலாம், சாரா. 76 00:04:33,858 --> 00:04:35,860 நான் ஏற்றுக்கொள்கிறேன். 77 00:04:35,944 --> 00:04:38,863 -நிஜமாகவா? "நிஜமாகவா"? -இல்லை, "நிஜமாக" இல்லை. 78 00:04:38,947 --> 00:04:41,658 நிஜமாகத்தான், அதை கருத்தில் கொள்ளலாம். 79 00:04:41,741 --> 00:04:42,742 ஆம்பர், 80 00:04:42,826 --> 00:04:46,079 உனக்கென தனி ஷவர் மற்றும் குளியலறையுடன் உனக்குப் பிடித்த 81 00:04:46,162 --> 00:04:47,747 பெரிய படுக்கையறை 82 00:04:47,831 --> 00:04:49,291 கொண்ட ஒரு வீட்டை 83 00:04:49,666 --> 00:04:51,960 நாம் பார்த்தால் என்ன? 84 00:04:52,043 --> 00:04:55,130 என் குளியல் தொட்டியை எனக்குப் பிடிக்கும், ஏனென்றால் அது இந்த வீட்டில் இருக்கிறது. 85 00:04:55,213 --> 00:04:56,631 அதேதான். 86 00:05:01,636 --> 00:05:03,013 காலை வணக்கம். 87 00:05:03,096 --> 00:05:04,347 ஹாய். 88 00:05:04,431 --> 00:05:05,557 முட்டைகளா? 89 00:05:05,640 --> 00:05:06,766 ஆம். 90 00:05:07,350 --> 00:05:09,144 பிராண்டி, மேக்ஸும் அம்மாவும் புதிய வீடு வாங்க விரும்புகிறார்கள். 91 00:05:09,227 --> 00:05:10,729 -என்ன? -இல்லை, நாங்கள் வாங்கவில்லை. 92 00:05:10,812 --> 00:05:13,356 நாங்கள் விருப்பங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். 93 00:05:13,440 --> 00:05:16,484 நீங்கள் வீடு வாங்கினால், இரண்டு வீடுகள் அருகருகே இருப்பது போல தேடுங்கள். 94 00:05:16,568 --> 00:05:17,777 நான் பக்கத்து வீட்டில் வசிக்க வேண்டும். 95 00:05:17,861 --> 00:05:19,779 கூடவே முற்றத்தில் உள்ள நம் மரத்தை கொண்டு வர வேண்டும். 96 00:05:19,863 --> 00:05:21,907 நான் பக்கத்து வீட்டில் வசிக்க வேண்டியிருக்கலாம். 97 00:05:21,990 --> 00:05:24,200 ஆம்பர், தன்னார்வத் தொண்டு செய்வதற்கான யோசனை கிடைத்ததா? 98 00:05:24,284 --> 00:05:27,287 தி சால்வேஷன் ஆர்மி கடையில் தன்னார்வத் தொண்டு செய்ய என் அம்மா ஏற்பாடு செய்திருக்கிறார். 99 00:05:27,370 --> 00:05:28,955 எதற்காக? கூடுதல் மதிப்பெண்களுக்காகவா? 100 00:05:29,039 --> 00:05:31,374 ஆம். அதோடு நம்மைப் பற்றி நாமே நல்ல விதமாக உணரவும். 101 00:05:31,458 --> 00:05:33,251 நீ எனக்கு தன்னார்வலராக இருக்கலாம். 102 00:05:33,335 --> 00:05:34,586 என் அலுவலகத்திற்கு வா. 103 00:05:34,669 --> 00:05:37,422 சம்பளம் தருகிறேன். நாம் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஷாப்பிங் போவோம். 104 00:05:37,505 --> 00:05:39,216 அதன் நோக்கம் அது இல்லை. 105 00:05:39,299 --> 00:05:41,301 சேவையாற்றும் போது என்னைப் பற்றி நானே நல்ல விதமாக உணர்வேன். 106 00:05:41,384 --> 00:05:42,677 நானும் தான். 107 00:05:42,761 --> 00:05:44,387 ஜிம்மில் நாம் தன்னார்வலர்களைப் பயன்படுத்தலாம். 108 00:05:44,471 --> 00:05:47,265 வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர், பவர்பார்ஸ் எடுத்துக் கொடுக்க. 109 00:05:47,349 --> 00:05:49,976 சுத்தம் செய்ய. உடற்பயிற்சி சைக்கிள் இயந்திரம், சைக்கிள்கள், 110 00:05:50,060 --> 00:05:53,063 உடற்பயிற்சி இயந்திரத்தைத் துடைக்க அதோடு மற்ற விஷயங்கள், தெரியுமா? 111 00:05:53,146 --> 00:05:56,441 வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் துண்டுகளை துவைத்து மடித்து வைக்கலாம். 112 00:05:56,942 --> 00:05:58,443 அதற்கான தகுதி எனக்கு இல்லை. 113 00:05:59,736 --> 00:06:02,155 என்னால் முடியாது. நான் நாய்களை நடக்க அழைத்துச் செல்வேன். 114 00:06:02,239 --> 00:06:04,658 ஏற்கனவே டாகி பேலஸ் ரெஸ்க்யூவை அழைத்துவிட்டேன். 115 00:06:04,741 --> 00:06:05,992 அவர்கள் தன்னார்வலர்களைப் பயன்படுத்துகிறார்கள். 116 00:06:06,493 --> 00:06:08,286 ஆனால் ஒரு நாயை... எல்லா நாய்களையும் வீட்டிற்கு 117 00:06:08,370 --> 00:06:10,664 -கூட்டி வந்துவிடுவேனோ என்று பயப்படுகிறேன். -ஆம். 118 00:06:10,747 --> 00:06:12,290 அது கடினமாக இருக்கும். 119 00:06:17,003 --> 00:06:18,588 நல்ல நாய்கள். 120 00:06:18,672 --> 00:06:19,965 அணில். 121 00:06:25,303 --> 00:06:28,598 ஹேய், ஆம்பர். நீ ஏன் புனித தாமஸ் முதியோர் இல்லத்திற்குப் போகக்கூடாது? 122 00:06:28,682 --> 00:06:29,891 நீ அங்கே தன்னார்வலராக இருக்கலாம். 123 00:06:29,975 --> 00:06:32,185 -தெரியவில்லை, அம்மா. -ஆம். அது அருகில் தான் இருக்கிறது. 124 00:06:32,811 --> 00:06:36,773 இந்த யோசனை பிடித்திருக்கிறது. நீ அவர்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுப்பாய். 125 00:06:36,856 --> 00:06:38,233 தெரியவில்லை. 126 00:06:38,316 --> 00:06:41,361 எனக்குத் தெரியும். அது என்னவாக இருந்தாலும், அதில் நிபுணத்துவம் பெறுவாய். 127 00:06:41,444 --> 00:06:44,155 நன்றி, பிராண்டி. தி சால்வேஷன் ஆர்மி கடையில் என்னவாக இருந்தாலும், 128 00:06:44,239 --> 00:06:46,992 -நீ அதில் சிறப்பானவளாக இருப்பாய். -நன்றி. 129 00:06:47,492 --> 00:06:49,411 -திரு. டேடன்? -என்ன, பிராண்டி? 130 00:06:49,494 --> 00:06:51,580 உங்கள் நிகழ்ச்சி குறித்த தகவலை எப்போது... 131 00:06:51,663 --> 00:06:52,914 தெரிந்துகொள்ள போகிறோம்? 132 00:06:54,249 --> 00:06:56,418 அடுத்த வாரம் வருகிறது, இப்போதே சரிபார்க்கலாம். 133 00:06:57,335 --> 00:07:00,338 முடிவை அவர்களின் எல்லா சமூக ஊடகங்களிலும் பதிவிடுவார்கள். 134 00:07:00,422 --> 00:07:01,756 இது வரிக்குதிரையின் படம். 135 00:07:01,840 --> 00:07:03,717 -இதை ஏன் வைத்திருக்கிறேன் என தெரியவில்லை. -இல்லை. சரி. அது... 136 00:07:03,800 --> 00:07:05,302 -இதோ. -இதுவா? ஆம். வந்துவிட்டது. 137 00:07:05,385 --> 00:07:06,595 முடிவு இன்னும் வரவில்லை. 138 00:07:07,512 --> 00:07:08,513 சரி. 139 00:07:11,057 --> 00:07:13,101 -என்ன? -ஃபில். அவர்... 140 00:07:13,184 --> 00:07:16,563 ஆம்பரை இந்த வார இறுதியில் கூட்டிப்போக முடியாது என்கிறார். உடல்நலம் சரியில்லையாம். 141 00:07:16,646 --> 00:07:19,232 ஆம், நான் கவனித்தேன். படப்பிடிப்பின் போது விநோதமாக நடந்துகொண்டார். 142 00:07:19,316 --> 00:07:21,610 சோர்வாகவும் கோபமாகவும் இருந்தார். 143 00:07:22,110 --> 00:07:23,486 அது எனக்கு மேக்ஸை நினைவூட்டியது. 144 00:07:23,570 --> 00:07:25,113 வேடிக்கையாக இருந்தது. 145 00:07:25,196 --> 00:07:27,741 -என்ன இது? "மேக்ஸை கிண்டல் செய்யும் நாளா?" -எனக்குப் பிடித்திருக்கிறது. நான்... 146 00:07:27,824 --> 00:07:30,076 -எல்லா நாளும் தான். -எல்லா நாளும் தான்! நன்றி. 147 00:07:32,662 --> 00:07:34,080 புனித தாமஸ் முதியோர் இல்லம் 148 00:07:34,164 --> 00:07:37,208 அன்புள்ள டைரி, நான் அதிகாரப்பூர்வமாக தன்னார்வலர் ஆகிவிட்டேன். 149 00:07:37,292 --> 00:07:40,045 நேர்மையாக சொன்னால், இந்த வேலையைப் பற்றி எனக்கு சரியாக தெரியாது. 150 00:07:40,128 --> 00:07:41,796 உண்மையில், கொஞ்சம் பயந்தேன். 151 00:07:42,422 --> 00:07:44,382 ஒப்புக்கொள்ள வேண்டும், என்னுடைய சிறிய வயதில்... 152 00:07:44,466 --> 00:07:46,259 இப்போது இருப்பதை விட சிறிய வயதில், 153 00:07:46,343 --> 00:07:48,428 முதியவர்களைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன். 154 00:07:48,929 --> 00:07:50,805 அதை கேட்க நன்றாக இருக்காது. 155 00:07:50,889 --> 00:07:53,058 ஆனால் அது என் உண்மையான உணர்வு. 156 00:07:53,600 --> 00:07:55,644 ஆனால் இதுவரை, எதுவும் மோசமில்லை. 157 00:07:55,727 --> 00:07:58,188 படுக்கையை சரிசெய்கிறேன், சுத்தமான குளிர்ந்த தண்ணீரை கொண்டு வருகிறேன். 158 00:07:58,271 --> 00:08:00,941 நான் அறைகளுக்கு கடிதத்தை, பார்சல்களை, பூக்களை கொண்டு செல்கிறேன், 159 00:08:01,566 --> 00:08:04,986 அருமையான விஷயம், ஏனென்றால் முதியோர்கள் பூக்களைப் பெறும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். 160 00:08:05,987 --> 00:08:07,364 நன்றி. 161 00:08:08,156 --> 00:08:09,491 நன்றி. 162 00:08:10,075 --> 00:08:12,911 சுவாரஸ்யமான சிலர் இருக்கிறார்கள். திருமதி. ஹேமர்டன் போல. 163 00:08:12,994 --> 00:08:15,664 புளோரிடாவில் உள்ள அவரது சகோதரியிடமிருந்து செயற்கை பூக்கள் வந்தன 164 00:08:15,747 --> 00:08:17,999 அவற்றை தண்ணீரில் வைக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். 165 00:08:18,083 --> 00:08:19,626 நான் இவற்றை ஜன்னல் அருகே வைக்கிறேன், 166 00:08:19,709 --> 00:08:21,086 நீங்கள் இவற்றை நாள் முழுக்க பார்க்கலாம். 167 00:08:21,169 --> 00:08:24,130 அடுத்த சில நாட்களுக்கு இவற்றில் தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். 168 00:08:24,214 --> 00:08:27,926 நன்றி. ஆம், அவற்றுக்கு தண்ணீர் ஊற்றி 169 00:08:28,009 --> 00:08:31,555 ஜன்னல் அருகே சூரிய ஒளி படுமாறு வை. 170 00:08:35,933 --> 00:08:39,770 பிறகு எந்த பார்சல்களும் வராத மற்றவர்களும் இருக்கிறார்கள். 171 00:08:39,854 --> 00:08:41,815 புனித தாமஸ் முதியோர் இல்லம் 172 00:08:44,859 --> 00:08:48,989 நான் பூக்கள், புத்தகங்கள், மிட்டாய்கள் நன்றாக இருப்பதைப் பார்த்தேன், 173 00:08:49,489 --> 00:08:52,075 ஆனால் வயதானவர்கள் அதிகம் விரும்புவது, அவர்கள் சொல்வதை 174 00:08:52,534 --> 00:08:54,244 கேட்கும் ஒருவரைத்தான். 175 00:08:54,744 --> 00:08:57,831 சொல்வதைக் கேட்டால், அவர்கள் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருப்பார்கள். 176 00:08:57,914 --> 00:09:00,208 ஒரு வாழும், பேசும் வரலாற்று புத்தகம் போல. 177 00:09:01,042 --> 00:09:02,419 நான் நிறைய கற்கிறேன். 178 00:09:03,003 --> 00:09:04,254 இவருக்கு ஆரஞ்சு ஜூஸ் கொடு. 179 00:09:04,337 --> 00:09:06,715 இந்த நண்பருக்கு, மென்மையான, மெல்ல எளிதான ஒன்று. 180 00:09:06,798 --> 00:09:08,633 ஜெல்-ஓ. ஜெல்-ஓ இருக்கிறதா? அபாரம். 181 00:09:08,717 --> 00:09:10,051 இசை தட்டுகள் பற்றி ஏதாவது தெரியுமா? 182 00:09:10,135 --> 00:09:12,929 உன்னிடம் எப்போதாவது இசைப்பான் கருவி இருந்திருக்கிறதா? சரி, அது பெரிதாக இருக்கும். 183 00:09:13,013 --> 00:09:15,849 இவ்வளவு பெரிதாக இருக்கும், வினைலால் ஆனது, சரியா? 184 00:09:15,932 --> 00:09:17,601 அது அற்புதமானது. 185 00:09:17,684 --> 00:09:21,396 டேப்புகள் இருந்தன. அதாவது, 8 பாடல்கள் கொண்ட டேப்புகள் இருந்தன. 186 00:09:22,314 --> 00:09:23,398 ஒலி நாடாக்கள். 187 00:09:23,481 --> 00:09:25,609 சிடிக்கள் அல்ல. 188 00:09:25,692 --> 00:09:27,027 சிடி என்றால் என்ன? 189 00:09:28,320 --> 00:09:30,155 அது புதிய நவீன பொருள். 190 00:09:30,238 --> 00:09:32,657 நான் அவற்றைப் பற்றி கேள்விப்படாததால் இருக்கலாம். 191 00:09:33,283 --> 00:09:34,409 அது... 192 00:09:34,492 --> 00:09:36,286 அறிந்துகொள்வாய், சரியா? 193 00:09:36,870 --> 00:09:40,832 நான் எல்லா விஷயங்களையும் பற்றி தெரிந்துகொள்ள முயற்சிப்பேன், சரியா? 194 00:09:40,916 --> 00:09:43,919 இப்போது சொல்கிறேன், சிடி பிரபலமானது. உனக்கு அதைப் பிடிக்கும். 195 00:09:44,002 --> 00:09:45,921 சரி. நம்மிடம் என்ன இருக்கிறது? 196 00:09:46,004 --> 00:09:47,380 யாராவது சீட்டு விளையாடுகிறீர்களா? 197 00:09:47,964 --> 00:09:50,008 உன் அம்மா அந்த வீட்டை விட்டு போக விரும்புவதை என்னால் நம்ப முடியவில்லை. 198 00:09:50,091 --> 00:09:51,843 -அவருக்கு அந்த வீட்டைப் பிடிக்கும். -ஆம். 199 00:09:51,927 --> 00:09:54,221 அது மேக்ஸின் விருப்பம் என்று எனக்கு உறுதியாக தெரியும். 200 00:09:54,304 --> 00:09:56,348 -எனக்கு அந்த வீட்டை பிடிக்கும். -எனக்கும்தான். 201 00:10:00,060 --> 00:10:03,563 ஆம், நீ என் கனவுகளை நனவாக்குகிறாய் 202 00:10:03,647 --> 00:10:05,565 ஹூ, ஹூ, ஹூ, ஹூ 203 00:10:05,649 --> 00:10:07,525 ஹூ, ஹூ 204 00:10:08,443 --> 00:10:12,447 ஒரு இரவில் கெட்ட கனவுகள் பயமுறுத்தின 205 00:10:12,530 --> 00:10:15,200 மேலும் அவை கனவு காண்பவரை குழப்புகின்றன 206 00:10:15,909 --> 00:10:18,286 என்னால் அதை ஏளனம் செய்ய முடியும் 207 00:10:18,370 --> 00:10:19,663 ஆம் 208 00:10:19,746 --> 00:10:23,917 நான் அலறிக்கொண்டு எழும்போது என்னை அணைத்துக்கொள் 209 00:10:24,501 --> 00:10:26,795 ஏனென்றால் நீ என்னை பார்த்தபோது இருந்தது போல நான் இல்லை 210 00:10:27,337 --> 00:10:30,006 நான் ஒருபோதும் அது போல இருக்க மாட்டேன் 211 00:10:38,306 --> 00:10:40,308 -அப்பா? -என்ன, செல்லம்? 212 00:10:41,518 --> 00:10:42,519 நீங்கள் நலமா? 213 00:10:42,602 --> 00:10:43,812 ஆம். ஏன்? 214 00:10:45,272 --> 00:10:46,398 உங்களுக்கு வியர்க்கிறது. 215 00:10:49,484 --> 00:10:50,569 ஆம், 216 00:10:51,403 --> 00:10:54,072 விலைமதிப்பற்ற ஒருவரை காரில் வைத்துக்கொண்டு ஓட்டுவது எளிதானது அல்ல. 217 00:10:54,739 --> 00:10:57,033 கடந்த வார இறுதியில் நீங்கள் நலமாக இல்லை. 218 00:10:57,659 --> 00:10:58,910 நீங்கள் இப்போது நன்றாக இருக்கிறீர்களா? 219 00:11:00,161 --> 00:11:02,414 ஆம். நான் சோர்வாக இருக்கிறேன். 220 00:11:02,497 --> 00:11:03,748 வேலைப் பளு அதிகம். 221 00:11:05,375 --> 00:11:06,501 எனவே, 222 00:11:06,877 --> 00:11:08,962 மேக்ஸுக்கு நிகழ்ச்சியைப் பற்றி எப்போது தெரியவரும்? 223 00:11:09,671 --> 00:11:10,672 எப்போது வேண்டுமானாலும். 224 00:11:11,756 --> 00:11:13,508 இதையெல்லாம் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? 225 00:11:13,592 --> 00:11:14,759 அருமை. 226 00:11:14,843 --> 00:11:16,177 சரி, 227 00:11:16,261 --> 00:11:17,596 அதாவது, பரவாயில்லை. 228 00:11:17,679 --> 00:11:21,224 அது பாரிஸில் உங்கள் வணிக வேலையைப் போல ஆடம்பரமானதோ மிகவும் அருமையானதோ இல்லை. 229 00:11:21,808 --> 00:11:22,976 எனக்குத் தெரியவில்லை. 230 00:11:23,059 --> 00:11:25,937 அந்த மேக்கப் வண்டியில் நீயும் பிராண்டியும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். 231 00:11:26,021 --> 00:11:27,731 பிராண்டி இருந்தாள். 232 00:11:27,814 --> 00:11:29,649 மேக்ஸ், சரி... என்னவோ. 233 00:11:29,733 --> 00:11:31,443 அவர் உங்கள் அளவுக்கு அருமையானவர் இல்லை, அப்பா. 234 00:11:31,943 --> 00:11:34,029 உனக்கு அவரைப் பிடித்திருந்தால் பரவாயில்லை, சரியா? 235 00:11:34,112 --> 00:11:35,238 ஆனால் நான் விரும்பவில்லை. 236 00:11:35,864 --> 00:11:39,993 அதாவது, சில நேரங்களில் பிடித்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால் உண்மையில் இல்லை. 237 00:11:40,744 --> 00:11:41,995 பரவாயில்லை, ஆம்பர். 238 00:11:42,537 --> 00:11:43,622 அது உண்மையில் பரவாயில்லை. 239 00:11:45,081 --> 00:11:47,709 எனக்கு சின்னியை பிடித்திருந்தால் அம்மாவிடம் பரவாயில்லை என்று சொல்வீர்களா? 240 00:11:49,127 --> 00:11:51,296 சின்னியும் நானும் வெறும் நண்பர்கள்தான். 241 00:11:53,798 --> 00:11:55,508 நீ நிஜமாக எப்படி உணர்கிறாய்? 242 00:11:56,676 --> 00:11:59,971 அதாவது, அவர் குறுகிய மனப்பான்மை கொண்டவர். உங்கள் வகை அல்ல. 243 00:12:01,014 --> 00:12:02,015 நிஜமாகவா? 244 00:12:03,016 --> 00:12:04,017 எனது வகை யார்? 245 00:12:06,186 --> 00:12:07,479 அம்மா. 246 00:12:10,732 --> 00:12:11,775 அது உண்மைதான். 247 00:12:14,194 --> 00:12:15,320 ஒருவேளை, 248 00:12:15,403 --> 00:12:16,529 ஒருவேளை, 249 00:12:17,197 --> 00:12:19,324 வயதாகி, தலை நரைக்கும் வரை நீங்கள் ஒன்றாக இருக்கலாம். 250 00:12:20,784 --> 00:12:23,328 உன் பெற்றோராக இருக்கும் வரை நாங்கள் எப்போதும் ஒன்றாக இருப்போம். 251 00:12:23,411 --> 00:12:25,372 எங்களுக்கு வயதாகி தலை நரைத்தாலும் கூட. 252 00:12:25,872 --> 00:12:26,873 அதை நினைவில் கொள். 253 00:12:29,751 --> 00:12:31,044 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன், பர். 254 00:12:31,628 --> 00:12:34,756 தன்னார்வத் தொண்டு, வயதானவர்களைக் கவனித்துக்கொள்வது. 255 00:12:37,050 --> 00:12:38,343 அதுதான் நற்குணம். 256 00:12:39,427 --> 00:12:40,804 நன்றி. 257 00:12:41,888 --> 00:12:42,931 உனக்கும் நன்றி. 258 00:12:58,363 --> 00:12:59,489 7:29. 259 00:13:01,700 --> 00:13:03,618 இன்று அவர்களுக்கு பின்னணி இசை ஒலிக்க விரும்புகிறேன். 260 00:13:33,023 --> 00:13:34,232 அவர்கள் எங்கே? 261 00:13:40,280 --> 00:13:41,698 அட. 262 00:13:49,998 --> 00:13:51,625 இருவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். 263 00:14:09,434 --> 00:14:10,810 கொஞ்சம் நிற்கிறீர்களா? 264 00:14:10,894 --> 00:14:12,854 யாரோ அழும் சத்தம் கேட்கிறது என்று நினைக்கிறேன். 265 00:14:14,064 --> 00:14:16,566 ஆம், அவர் நலம்தான். சமீபத்தில் நிறைய மாற்றங்களை எதிர்கொள்கிறார். 266 00:14:16,650 --> 00:14:19,402 -உன் விநியோகங்களைத் தொடரு. -சரி. 267 00:14:36,419 --> 00:14:37,837 ஹலோ? 268 00:14:38,964 --> 00:14:40,006 உள்ளே வா. 269 00:15:02,237 --> 00:15:03,321 ஹலோ. 270 00:15:04,948 --> 00:15:06,157 நீங்கள் நலமா? 271 00:15:07,701 --> 00:15:09,911 என் நிலையை நினைத்து வருந்துகிறேன். 272 00:15:12,038 --> 00:15:13,331 நானும் அப்படி செய்வேன். 273 00:15:16,042 --> 00:15:17,252 அப்படியா? 274 00:15:18,169 --> 00:15:19,504 ஆம். 275 00:15:19,588 --> 00:15:20,922 ஒருவேளை கொஞ்சம் அதிகமாகவே. 276 00:15:24,968 --> 00:15:26,803 நான் என் கணவரை இழந்துவிட்டேன். 277 00:15:28,305 --> 00:15:29,389 அவர் இறந்துவிட்டாரா? 278 00:15:31,141 --> 00:15:32,392 அதாவது... 279 00:15:32,475 --> 00:15:33,810 நான் மிகவும் வருந்துகிறேன். 280 00:15:34,311 --> 00:15:35,353 மிகவும் வருந்துகிறேன். 281 00:15:36,271 --> 00:15:37,939 அவர் எனக்கு கணவராக கிடைத்தது என் அதிர்ஷ்டம். 282 00:15:38,440 --> 00:15:40,525 அவர் மிகவும் அற்புதமான மனிதர். 283 00:15:44,654 --> 00:15:45,864 என் பெயர் ஆம்பர். 284 00:15:46,448 --> 00:15:47,741 நான் சிசீல். 285 00:15:48,825 --> 00:15:49,993 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 286 00:15:54,247 --> 00:15:56,833 நீங்களும் உங்கள் கணவரும் கேன்டர்பரி தெருவில் நடந்து செல்வது வழக்கம். 287 00:15:58,251 --> 00:16:00,712 ஆம். அது சரிதான். 288 00:16:01,296 --> 00:16:03,465 அதுதான் என் தெரு. நான் கேன்டர்பரியில் வசிக்கிறேன். 289 00:16:04,049 --> 00:16:05,467 நான் உங்களையும் அவரையும் பார்ப்பேன்… 290 00:16:05,550 --> 00:16:06,927 ரிச்சர்ட். 291 00:16:07,010 --> 00:16:08,803 …பள்ளிக்கு கிளம்பும் முன், என் ஜன்னல் வழியாக. 292 00:16:08,887 --> 00:16:11,723 அந்தத் தெருவில்தான் நாங்கள் குடியிருந்தோம். 293 00:16:11,806 --> 00:16:14,434 நானும் என் ரிச்சர்டும். 294 00:16:15,018 --> 00:16:17,938 பிறகு என் மகள் எங்களை விஸ்கான்சினில் குடியமர்த்தினாள், 295 00:16:18,021 --> 00:16:19,773 சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 296 00:16:19,856 --> 00:16:22,359 அவளுக்கு அருகில் இருக்க. 297 00:16:22,859 --> 00:16:24,903 அதனால் அவள் எங்களைக் கண்காணிக்க முடியும். 298 00:16:25,612 --> 00:16:26,655 அது அருமை. 299 00:16:27,364 --> 00:16:29,407 ஆனால் ரிச்சர்டுக்கு அது பிடிக்கவில்லை. 300 00:16:29,491 --> 00:16:32,494 அவர் பார்க் ரிட்ஜ் வீட்டிற்கு திரும்பி வர விரும்பினார். 301 00:16:34,412 --> 00:16:36,998 எனவே டூஹி அவென்யூவில் ஒரு வீடு கிடைத்தது, 302 00:16:37,082 --> 00:16:41,670 6124 கேன்டர்பரி தெருவுக்கு அருகில் இருக்கும் விருப்பத்தில். 303 00:16:42,712 --> 00:16:44,130 என்ன? 304 00:16:44,214 --> 00:16:45,465 அதுதான் என் முகவரி. 305 00:16:46,091 --> 00:16:47,092 இல்லை. 306 00:16:47,175 --> 00:16:48,885 ஆம். ஆம், அதுதான். 307 00:16:48,969 --> 00:16:51,346 நீங்கள் எப்போதும் எங்கள் வீட்டைப் பார்ப்பீர்கள். 308 00:16:51,429 --> 00:16:54,891 ஏனென்றால், எங்கள் அற்புதமான நினைவுகள் எல்லாம் அங்கு உருவானவைதான். 309 00:16:55,892 --> 00:16:57,435 என் சமையலறை எப்படி இருக்கிறது? 310 00:16:57,519 --> 00:16:59,020 என்ன? 311 00:17:00,230 --> 00:17:01,356 நன்றாக இருக்கிறது. 312 00:17:01,439 --> 00:17:02,857 நன்றாகவே இருக்கிறது. 313 00:17:02,941 --> 00:17:03,984 நாங்கள் அதை நேசிக்கிறோம். 314 00:17:06,486 --> 00:17:08,237 நீங்கள் அதைப் பார்க்க விரும்புகிறீர்களா? 315 00:17:10,448 --> 00:17:12,367 நிச்சயம் அதை விரும்புவேன். 316 00:17:13,702 --> 00:17:17,831 ஆனால் என் மகளின் அனுமதி இல்லாமல் என்னால் இங்கிருந்து வர முடியாது. 317 00:17:17,914 --> 00:17:19,498 சரி, என்னால் அவரை அழைக்க முடியும். 318 00:17:20,792 --> 00:17:22,043 மன்னிக்கவும். 319 00:17:22,127 --> 00:17:25,130 திருமதி. வில்லியம்ஸ், இன்று வசிப்பவர்களுக்கு திறந்தவெளி ஓய்வு உள்ளது. 320 00:17:25,213 --> 00:17:27,674 ஆனால் அதற்கு முன்னதாகவே நீங்கள் குட்டித்தூக்கம் போடுவது நல்லது. 321 00:17:27,757 --> 00:17:28,884 இது உங்கள் குட்டித்தூக்கத்திற்கான நேரம். 322 00:17:28,967 --> 00:17:30,927 நான் வெளியில் செல்வேன் என்று நினைக்கவில்லை, 323 00:17:31,011 --> 00:17:32,762 அதோடு எனக்கு தூக்கத்திலும் ஆர்வம் இல்லை. 324 00:17:32,846 --> 00:17:34,514 நான் சோர்வடையவில்லை. இருப்பினும் உங்களுக்கு நன்றி. 325 00:17:34,598 --> 00:17:36,433 ஓய்வுக்காக வெளியில் செல்வதற்கு முன் நீங்கள் கொஞ்சம் தூங்குவீர்கள் என்று 326 00:17:36,516 --> 00:17:38,101 நான் உங்கள் மகளுக்கு உறுதியளித்தேன். 327 00:17:39,603 --> 00:17:41,771 என் மகள் என்னுடைய பெற்றோர் ஆகிவிட்டாள். 328 00:17:42,856 --> 00:17:46,109 இளம்பெண்ணே, உன் விநியோக வண்டியை வழியின் நடுவில் நிறுத்தியிருக்கிறாய். 329 00:17:46,192 --> 00:17:47,569 மன்னிக்கவும். 330 00:17:47,652 --> 00:17:48,862 தயவுசெய்து அதை நகர்த்து. 331 00:17:48,945 --> 00:17:50,196 ஆம், கண்டிப்பாக. 332 00:17:50,780 --> 00:17:52,741 திருமதி. வில்லியம்ஸ், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. 333 00:17:52,824 --> 00:17:55,243 நீ என்னை சிசீல் என்று அழை. 334 00:17:56,202 --> 00:17:57,621 நான் திரும்பி வருகிறேன், சிசீல். 335 00:18:03,209 --> 00:18:04,878 இப்போது நிறுத்தலாம் என்று நினைக்கிறேன். 336 00:18:04,961 --> 00:18:07,297 ஆம். 12 டசனுக்கும் மேல் இருப்பதாக நினைக்கிறேன். 337 00:18:07,380 --> 00:18:10,800 விற்பனையில் இந்த குக்கீகளை ஒன்று 25 காசுகள் என்று விற்றால் கூட, 338 00:18:10,884 --> 00:18:12,552 அவர்கள் எவ்வளவு பணம் சம்பாதிப்பார்கள் தெரியுமா? 339 00:18:12,636 --> 00:18:14,638 -எவ்வளவு? -சரி. பார்க்கலாம். 340 00:18:14,721 --> 00:18:16,556 இருபத்தைந்தை கூட்டி, ஒன்றை மனதில் கொண்டால்... 341 00:18:16,640 --> 00:18:17,933 நிறைய. 342 00:18:18,892 --> 00:18:20,143 நீ எப்படி வீடுகளை விற்கிறாய்? 343 00:18:20,227 --> 00:18:21,519 எல்லா தொகையையும் ரவுண்டு செய்துவிடுவேன். 344 00:18:22,854 --> 00:18:25,023 பள்ளி இதைப் பாராட்டும் என்று நம்புகிறேன், 345 00:18:25,106 --> 00:18:27,108 ஏனென்றால் நான் இங்கு இருப்பதை விட அங்கு அதிக நேரம் செலவிடுகிறேன். 346 00:18:27,192 --> 00:18:28,443 அவர்கள் செய்யமாட்டார்கள். 347 00:18:28,526 --> 00:18:30,987 ஆனால் நினைவில் கொள், உன்னைப் போன்ற அம்மாக்களால்தான் உலகம் இயங்குகிறது. எனவே… 348 00:18:31,071 --> 00:18:32,656 -நன்றி. -பரவாயில்லை. 349 00:18:32,739 --> 00:18:35,158 என்னுடன் வந்து சில வீடுகளைப் பார்க்க நீ நிச்சயமாக விரும்பவில்லையா? 350 00:18:35,242 --> 00:18:36,660 ஆம், நிச்சயமாக! 351 00:18:37,953 --> 00:18:39,329 ஆம்பர் ஏற்கனவே எதிர்கொண்ட மாற்றங்களே போதும். 352 00:18:39,412 --> 00:18:41,581 நீ மீண்டும் அலங்கரிப்பது பற்றி யோசிக்க வேண்டும். 353 00:18:41,665 --> 00:18:42,999 மேக்ஸை அனுமதிப்பது... 354 00:18:43,083 --> 00:18:44,334 அவன் கருத்தை கேட்க வேண்டுமா? 355 00:18:44,417 --> 00:18:46,336 இந்த இடத்தில் அவனுடைய முத்திரையை பதிப்பதா? 356 00:18:47,212 --> 00:18:49,839 அதாவது, நீ சொல்வது சரிதான். அது மோசமான யோசனை அல்ல. 357 00:18:49,923 --> 00:18:53,134 இல்லை. இது அநேகமாக மோசமான யோசனை. ஆனால் அது சரியான தேர்வு என்று நினைக்கிறேன். 358 00:18:55,220 --> 00:18:57,097 சத்தம் கேட்டது... இங்கே இருக்கிறது. 359 00:18:57,472 --> 00:18:59,933 மேக்ஸ் திரும்பி வந்துகொண்டிருக்கிறான். சரி. 360 00:19:01,184 --> 00:19:04,104 ஹெல்த் ஃபுட் நெட்வொர்க் இன்றிரவு வெற்றியாளரை அறிவிக்கிறது. 361 00:19:05,272 --> 00:19:06,815 ஆம். இது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. 362 00:19:06,898 --> 00:19:09,609 நல்லது. அவன் அதைப் பெறுவான். அவன் அதைப் பெறுவான் என்று எனக்குத் தெரியும். 363 00:19:09,693 --> 00:19:11,528 அவன் மிகவும் நன்றாக இருந்தான், இல்லையா? 364 00:19:11,611 --> 00:19:12,946 ஆம். 365 00:19:15,490 --> 00:19:16,700 அதோடு? 366 00:19:19,786 --> 00:19:20,912 நீயும் நன்றாக இருந்தாய். 367 00:19:20,996 --> 00:19:22,455 -நிஜமாகவா? -நீ... மிகவும் அருமை. 368 00:19:22,539 --> 00:19:24,249 நீ அதைச் சொல்ல வேண்டியதில்லை. 369 00:19:24,332 --> 00:19:26,501 அதாவது, வீட்டில் யோகா, ஹீல்ஸ் உடன். 370 00:19:26,585 --> 00:19:28,628 -யார் நினைத்திருப்பார்கள்? -சரியா? 371 00:19:28,712 --> 00:19:30,589 -நான் நன்றாக இருந்தேன். -நீ நன்றாக இருந்தாய். 372 00:19:30,672 --> 00:19:33,466 -அதுதான் என் இயல்பே. -மிகவும் நல்லது. 373 00:19:34,384 --> 00:19:36,011 நான் பிரபலமாகப் போகிறேன். 374 00:19:36,970 --> 00:19:39,389 புனித தாமஸ் முதியோர் இல்லம் 375 00:19:39,472 --> 00:19:40,932 எந்த ஸ்வெட்டரை அணிய விரும்புகிறீர்கள்? 376 00:19:41,016 --> 00:19:42,517 பச்சை. ரிச்சர்டுக்கு பிடித்தது. 377 00:19:43,101 --> 00:19:44,853 எந்த நிமிடமும் பிராண்டி வந்துவிடுவாள். 378 00:19:45,896 --> 00:19:49,482 நன்றி. நன்றி, சார். நான் என் பாட்டியை மிகவும் நேசிக்கிறேன். 379 00:19:49,566 --> 00:19:50,901 ஏன் இப்படி பேசுகிறாய்? 380 00:19:50,984 --> 00:19:52,903 என்ன சொல்கிறாய், வாத்து முட்டாள்? 381 00:19:52,986 --> 00:19:55,614 நான் "நடிக்க" சொல்லவில்லை, இயல்பாக இருக்கும்படி சொன்னேன். 382 00:19:56,281 --> 00:19:58,658 அதோடு இந்த கண்ணாடி எதற்கு? நாம் உள்ளே இருக்கிறோம். 383 00:19:58,742 --> 00:20:00,452 நான் சந்தேகத்துக்குரியவளாக தெரிய விரும்பவில்லை. 384 00:20:00,535 --> 00:20:01,661 அப்போது நீ இதை அணிந்திருக்கக் கூடாது. 385 00:20:01,745 --> 00:20:04,122 எந்த வகையான இரகசிய உளவாளி கண்ணாடி அணியமாட்டார்? 386 00:20:04,205 --> 00:20:07,626 -அடக் கடவுளே. -சிறுமிகளே, நாம் தவறு எதுவும் செய்யவில்லை. 387 00:20:08,335 --> 00:20:10,879 -இல்லையா? -நாம் ஓய்வுக்காக வெளியே செல்கிறோம். 388 00:20:10,962 --> 00:20:12,964 நீங்கள் பிரச்சினையில் சிக்குவதை நான் விரும்பவில்லை, சிசீல். 389 00:20:13,048 --> 00:20:15,175 சிசீல், இந்த வெளியே செல்லும் ஓய்வு நேரம் எவ்வளவு? 390 00:20:15,258 --> 00:20:16,718 ஒரு மணிநேரம். 391 00:20:16,801 --> 00:20:18,136 அது போதுமான நேரம் என்று நினைக்கிறாயா? 392 00:20:18,220 --> 00:20:20,847 ஆம். தயவுசெய்து. நம்மால் முடியும். வா. 393 00:20:21,681 --> 00:20:23,350 -வாருங்கள். -இந்த வழியாக. 394 00:20:24,059 --> 00:20:25,310 அப்படி பேசாதே. 395 00:20:25,393 --> 00:20:26,394 மன்னித்துவிடு. 396 00:21:40,176 --> 00:21:42,178 வசனத் தமிழாக்கம் அருண்குமார்