1 00:00:12,971 --> 00:00:15,598 ராபர்ட் எங்களை தனியா விட்டுவிட்டு 2 00:00:15,599 --> 00:00:18,519 லண்டன் திரும்பிய அன்று, நான் ரொம்ப பதட்டமாக இருந்தேன் என்பதுதான் உண்மை. 3 00:00:20,270 --> 00:00:21,896 அவர் போவதை நான் விரும்பவில்லை. 4 00:00:21,897 --> 00:00:25,442 அதாவது, நிக் பிறந்ததிலிருந்து எங்களுக்கு சேர்ந்து இருக்கக் கிடைத்த நேரம் மிகவும் கொஞ்சம்தான், 5 00:00:26,610 --> 00:00:31,281 ஆனால் குடும்பத்திற்காக அவர் கடமையிலிருந்து தவறுவதை நான் விரும்பவில்லை. 6 00:00:33,158 --> 00:00:36,953 கடற்கரையில் சூரியனும் நன்றாக ஒளி வீசியது, 7 00:00:36,954 --> 00:00:41,207 ஆனால் நான் அங்கே தனியாக இருப்பதை சற்றும் விரும்பவில்லை. 8 00:00:41,208 --> 00:00:45,212 அவசர உதவி டிபார்ட்மெண்ட் (ஏ&ஈ) 9 00:00:52,469 --> 00:00:53,470 போகலாம். 10 00:00:56,306 --> 00:00:57,182 வாங்க போகலாம். 11 00:00:59,393 --> 00:01:01,352 - சார்? சார்? உடல் நலமில்லையா? - உன்னைத்தான், சீக்கிரம் வா. 12 00:01:01,353 --> 00:01:03,480 - நன்றி. - நன்றி. 13 00:01:13,198 --> 00:01:14,366 நிக்கோலஸ்? 14 00:01:17,995 --> 00:01:18,996 அடக் கடவுளே. 15 00:01:27,838 --> 00:01:30,423 ராபர்ட்? எழுந்திரு. 16 00:01:30,424 --> 00:01:31,508 ராபர்ட்? 17 00:01:34,261 --> 00:01:35,596 ராபர்ட், எழுந்திரு. 18 00:01:37,264 --> 00:01:38,307 அட, எழுந்திரு. 19 00:01:39,391 --> 00:01:40,474 அட, கண்றாவியே. 20 00:01:40,475 --> 00:01:41,476 எழுந்திரு. 21 00:01:42,186 --> 00:01:43,394 நிக் எங்கே? 22 00:01:43,395 --> 00:01:45,897 - என்ன கண்றாவி இது, என்ன செய்யற நீ? - நிக் எங்கே? 23 00:01:45,898 --> 00:01:47,690 எனக்குத் தெரியாது. பெரும்பாலும் நண்பனுடன் போய் இருப்பான். 24 00:01:47,691 --> 00:01:49,692 சரி. ஆனால் அவன் எங்கே? நாம அவனை கண்டுபிடிக்கணும். 25 00:01:49,693 --> 00:01:51,694 நேற்று வேலைக்குப் போனான், அப்படியென்றால் இரவு டின்னருக்கு இங்கே வந்திருக்கணும், 26 00:01:51,695 --> 00:01:53,738 - அதுக்கென்ன? அவனுக்கு இருபத்து அஞ்சு வயசாகுது. - இல்ல, இல்ல. 27 00:01:53,739 --> 00:01:56,616 இன்னைக்கு காலை 4:00 மணிக்கு எனக்கு ஃபோன் செய்தான், இப்போ கிடைக்க மாட்டேங்குறான். 28 00:01:56,617 --> 00:01:59,785 - எடுக்க மாட்டேங்கிறான். திரும்பி கூப்பிடவில்லை. - ஆமாம், உன்னை நல்லாதான் கூப்பிடுவான். 29 00:01:59,786 --> 00:02:02,622 - இல்ல, அன்பே. அவன் மோசமான நிலையில இருந்தான். - ஓ, நிஜமாவா? 30 00:02:02,623 --> 00:02:05,374 - அவன் தேம்பி அழதான். - ஓ, அப்படியா? 31 00:02:05,375 --> 00:02:07,043 அவன் பேசலை. அவன் எதுவுமே சொல்லலை. 32 00:02:07,044 --> 00:02:09,378 - வெறுமனே அழுதுட்டே இருந்தான். - ஓ, நிஜமாவா? 33 00:02:10,631 --> 00:02:11,632 ஹை, நிக். 34 00:02:12,758 --> 00:02:15,134 ஆம், நண்பா. நான்தான் அப்பா பேசறேன். 35 00:02:15,135 --> 00:02:17,887 நீ எழுந்த உடனே என்னைக் கூப்பிடு. நீ உயிருடன் இருக்கயான்னு பார்க்க விரும்பினேன். 36 00:02:17,888 --> 00:02:19,848 சரி. நான் உன்னை நேசிக்கிறேன். பை. 37 00:02:20,807 --> 00:02:22,518 - அவனுக்குத் தெரிஞ்சு போச்சு. - என்ன தெரிஞ்சு போச்சு? 38 00:02:23,810 --> 00:02:25,728 - அவங்கிட்ட என்ன சொன்னீங்க? - ஹம்? 39 00:02:25,729 --> 00:02:28,147 - என்னைப் பத்தி அவங்கிட்ட என்ன சொன்னீங்க? - நான் எதுவுமே சொல்லலையே, 40 00:02:28,148 --> 00:02:29,565 ஆனால் சொல்லப் போறேன். 41 00:02:29,566 --> 00:02:31,526 சரி, அதுக்கு இப்போது கொஞ்சம் தாமதாகிவிட்டது, இல்லையா? 42 00:02:31,527 --> 00:02:33,945 - அதுல வேறு யாரோ உங்களை முந்திகிட்டங்களா? - நீ என்ன சொல்கிறாய்? யாரு? 43 00:02:33,946 --> 00:02:36,239 அந்த பைத்தியக்காரன், அவனையும் எட்டிவிட்டான் போலும். 44 00:02:36,240 --> 00:02:41,160 என்ன? நிக்கின் உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞனின் தந்தையைப் பத்திச் சொல்கிறாயா? 45 00:02:41,161 --> 00:02:43,454 - நீ புணர்ந்துவிட்டு, அப்புறம் அந்த இளைஞன்... - அட, இல்ல. 46 00:02:43,455 --> 00:02:45,831 ...நம்ம மகன் மூழ்கிப் போகாமல் காப்பாத்தினானே, அப்புறம் அவனை சந்தித்ததையே மறைத்தாயே, 47 00:02:45,832 --> 00:02:48,751 அந்த இளைஞனின் தந்தையைப் பத்தி சொல்றயா. 48 00:02:48,752 --> 00:02:51,295 அந்த பைத்தியக்காரனைப் பத்தியா பேசுற? 49 00:02:51,296 --> 00:02:53,214 - உன்னைப் பார்த்தால் ஆச்சரியமா இருக்கு. - உங்களுக்குப் புரியலையா? 50 00:02:53,215 --> 00:02:55,424 நம்ம மகனுக்கு ஆபத்து, ராபர்ட். 51 00:02:55,425 --> 00:02:57,052 அவன் அப்படிப் பேசி நான் கேட்டதேயில்லை. 52 00:02:58,053 --> 00:02:59,053 எனக்கு பயமா இருக்கு. 53 00:02:59,054 --> 00:03:01,305 ஓ, ஆமாம், நீ கெட்டவளாகத் தெரிவாயே என்கிற பயம், அப்படித்தானே? 54 00:03:01,306 --> 00:03:03,224 அதாவது, எப்படியானாலும் அவனுக்கு அது தெரியத்தான் போகுது. 55 00:03:03,225 --> 00:03:05,393 நானே அதை அவங்கிட்ட சொல்றதுதான் சரியா இருந்திருக்கும்னு விரும்பினேன். 56 00:03:05,394 --> 00:03:08,354 இது உன் தவறுதான், இல்லையா? நீதானே இதுக்குப் பொறுப்பு. 57 00:03:08,355 --> 00:03:10,940 - இது யாருடைய தவறு என்பது முக்கியமில்லை. - ஆமாம், அப்போ நீ என்ன எதிர்பார்த்தாய்? 58 00:03:10,941 --> 00:03:13,526 வந்து, அதைக் கேட்டு அவன் எப்படி நடப்பான்னு நீ எதிர்பார்த்தாய்? 59 00:03:13,527 --> 00:03:16,487 நீதான் அவனுடைய தாய், நீதான் இதெல்லாத்துக்கும் பொறுப்பு. 60 00:03:16,488 --> 00:03:18,699 - நீ அவனைப் பத்தி அக்கறை கொண்டதே இல்லை. - அவனுடைய கடவுச்சொல் தெரியுமா? 61 00:03:19,449 --> 00:03:21,284 நீ உன் காமுகனைப் பத்திய மயக்கத்துல இருந்த 62 00:03:21,285 --> 00:03:24,078 - எனவே அவனை கடற்கரையில தனியா விட்டுவிட்டாய்... - அவனுடைய கடவுச்சொல் தெரியுமா? 63 00:03:24,079 --> 00:03:26,247 - அப்போ அவனுக்கு நீச்சல் கூட தெரியாது. - அவனுடைய கடவுச்சொல் என்ன? 64 00:03:26,248 --> 00:03:27,415 அப்போ அவனால நீந்தவும் முடியாது. 65 00:03:27,416 --> 00:03:30,501 - அவனுடைய கடவுச்சொல்லை சொல்றீங்களா? - வந்து, எனக்கு அவனுடைய கடவுச்சொல் தெரியாது, 66 00:03:30,502 --> 00:03:35,381 ஏன்னா அவனுடைய பிரைவசியை நான் மதிக்கிறேன். எனக்கு சில அடிப்படை மரியாதைகள் தெரியும். 67 00:03:35,382 --> 00:03:37,884 ஆனால் அவன் உன்னைப் பத்தி எப்படி நினைப்பான், கேத்தரீன்? 68 00:03:37,885 --> 00:03:39,177 வந்து, நீ அவனுடைய அம்மா. 69 00:03:39,178 --> 00:03:41,804 நீதான் அவனை உண்மையில் காப்பாத்தி இருக்கணும். 70 00:03:41,805 --> 00:03:43,556 நீ அவனைக் காப்பாத்தலை. நீ உன்னுடைய... 71 00:03:43,557 --> 00:03:45,516 மீண்டும் போதை மருந்து புகைக்கிறான், தெரியுமா? 72 00:03:45,517 --> 00:03:49,854 அவனிடமிருந்து விலகிப் போய் 20 ஆண்டுகள் கழித்து, நம்ம மகனை எப்படி வளர்க்கணும்னு எங்கிட்ட சொல்லாதே. 73 00:03:49,855 --> 00:03:51,105 உனக்கு எவ்வளவு தைரியம்? 74 00:03:51,106 --> 00:03:53,024 நான் என்ன செய்திட்டு இருந்தேன்னு நீ நினைக்கிற? 75 00:03:53,025 --> 00:03:54,442 அடக் கடவுளே. அவனுக்கு வேலையும் போயிடுச்சு. 76 00:03:54,443 --> 00:03:55,860 என்ன? இல்ல, அவனுக்கு வேலை போகலை. 77 00:03:55,861 --> 00:03:59,698 அப்போ நீங்க அவன் வேலைக்குப் போயிருப்பதாக நினைத்த இவ்வளவு நேரமும் அவன் எங்கே போயிருந்தான்? 78 00:04:01,366 --> 00:04:05,077 அவன் யாருடன் இருந்திருப்பான்னு உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? 79 00:04:05,078 --> 00:04:06,454 நண்பர்களுடனா? 80 00:04:06,455 --> 00:04:08,998 அது சரி, அவனுக்கு நண்பர்கள் இருப்பதாகவே எனக்குத் தெரியாது. 81 00:04:08,999 --> 00:04:10,459 உங்களுக்குத் தெரியுமா? 82 00:04:12,794 --> 00:04:14,921 அவனுக்கு ஒரு காதலி இருப்பதாகச் சொன்னான். 83 00:04:14,922 --> 00:04:17,506 ஆனால் நான் அவளை சந்தித்ததில்லை. எனக்கு அவளுடைய பெயர் தெரியாது. 84 00:04:17,507 --> 00:04:18,425 நான்... 85 00:04:19,676 --> 00:04:22,179 அப்படி ஒருவள் இருக்காளான்னும் எனக்குத் தெரியாது, கேத்தரீன். 86 00:04:25,349 --> 00:04:26,934 இல்ல, இல்ல, இல்ல, இல்ல, இல்ல. 87 00:04:34,525 --> 00:04:35,734 கண்ணே? 88 00:04:39,321 --> 00:04:40,447 இது நிக்கா? 89 00:04:42,407 --> 00:04:43,450 சொல்லுங்க? 90 00:04:45,702 --> 00:04:48,871 ஜோனதனுக்கும் கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டுக்கும் இடையே 91 00:04:48,872 --> 00:04:53,710 நடந்த சம்பவங்களை நேன்சி மிகத் துல்லியமாகவும், விவரமாகவும் வர்ணித்திருந்த போதிலும், 92 00:04:54,378 --> 00:04:56,964 அவள் சில உண்மைகளை கண்டிப்பாக மாற்றி கற்பனை செய்திருந்தாள். 93 00:04:58,215 --> 00:04:59,758 எழுத்தாளர்கள் அப்படித்தானே செய்வார்கள். 94 00:05:00,717 --> 00:05:04,929 உதாரணத்துக்கு, ஜோனதன் தன் காதலியுடன் ஐரோப்பாவிற்கு பயணம் செய்திருந்தான். 95 00:05:04,930 --> 00:05:08,183 அந்த உண்மை அப்படியே கூறப்பட்டிருந்தது. 96 00:05:09,101 --> 00:05:12,688 ஆனால் சாஷா சீக்கிரமாகவே பயணத்தை முடித்துக்கொண்டு வந்துவிட்டதன் காரணத்தை மாற்றிவிட்டிருந்தாள். 97 00:05:13,480 --> 00:05:15,398 உனக்கு சூரிய கிரகணம் நினைவிருக்கா? 98 00:05:15,399 --> 00:05:19,444 இங்கிலாந்தில் அப்படி ஒன்றை பார்க்க, நாம் நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும், 99 00:05:20,779 --> 00:05:22,281 அதுவும் ஒரு மேக மூட்டமான நாளில்தான் வந்தது. 100 00:05:25,909 --> 00:05:27,034 எல்லாம் வீண்தானே. 101 00:05:27,035 --> 00:05:28,244 சந்தேகமில்லாமல் ஆங்கிலேய குணம். 102 00:05:28,245 --> 00:05:29,912 அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட முடியாது. 103 00:05:29,913 --> 00:05:32,665 சரி, அதுதான் அப்படியொன்றை பார்க்க எனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பு. 104 00:05:32,666 --> 00:05:36,210 அடுத்த முறை வரும்போது, நாம் அதைப் பார்க்க முயற்சி செய்யலாமே. 105 00:05:36,211 --> 00:05:38,755 - பயணம் செய்யலாம். - மடகாஸ்கருக்கா? 106 00:05:39,339 --> 00:05:40,923 - ஏன் கூடாது? - அது சுத்த முட்டாள்தனம். 107 00:05:40,924 --> 00:05:42,801 கேவலம்தான். 108 00:05:43,677 --> 00:05:46,679 சும்மா வெட்டிப் பேச்சுல காலத்தை வீணடிக்காம, அந்த ஃபிரிட்ஜை ரிப்பேர் செய்யற வழியைப் பாருங்க. 109 00:05:46,680 --> 00:05:48,222 என்னை பைத்தியம் பிடிக்க வைக்குது. 110 00:05:48,223 --> 00:05:49,975 - ஹலோ? - ஹலோ, நேன்சி. 111 00:05:50,893 --> 00:05:53,145 ஹலோ, எம்மா. உன் குரலைக் கேட்பது நல்லாயிருக்கு. 112 00:05:55,105 --> 00:05:56,190 அப்படியா. 113 00:05:57,941 --> 00:06:00,068 இல்லை, இல்லை, எனக்குத் தெரியாது. இல்லை. 114 00:06:03,947 --> 00:06:07,701 சரி, அவங்களுக்குள்ள இருக்கிற கருத்து வேறுபாடுகளை, அவங்கதான் தீர்த்துக்கணும். 115 00:06:11,455 --> 00:06:13,956 சரி, நாம இப்போ விஷயங்களை பெரிசாக்க வேண்டாம், எம்மா. 116 00:06:13,957 --> 00:06:16,417 அதாவது, அங்கே என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியாது. 117 00:06:16,418 --> 00:06:20,088 அட, இல்ல. கண்டிப்பா உன் மகள் அதை பெரிசுபடுத்தறாள், ஏன்னா... 118 00:06:22,966 --> 00:06:24,259 அட, அதெல்லாம் சுத்த பொய். 119 00:06:27,387 --> 00:06:29,681 இல்லை, இது ரொம்ப அதிகமா போகுது, எம்மா. 120 00:06:30,641 --> 00:06:33,267 இல்லை, அதுக்கு அவசியம் இருக்காது, எம்மா. 121 00:06:33,268 --> 00:06:36,145 சரிதான், எம்மா, உன்னுடன் பேசியதில் சந்தோஷம். அழைத்ததுக்கு நன்றி. 122 00:06:36,146 --> 00:06:37,314 குட்பை. 123 00:06:37,940 --> 00:06:39,149 என்ன? 124 00:06:42,319 --> 00:06:43,403 என்ன? 125 00:06:44,321 --> 00:06:46,572 - என்ன நடந்தது? - அது சாஷாவுடைய அம்மா, எம்மா. 126 00:06:46,573 --> 00:06:48,408 சாஷா லண்டனுக்குத் திரும்பி வந்துட்டாளாம். 127 00:06:49,201 --> 00:06:50,243 எப்போது வந்தா... 128 00:06:50,244 --> 00:06:53,955 அவளுக்கும் ஜோனதனுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு, அதனால அவள் கோபத்துல வந்துட்டா. 129 00:06:53,956 --> 00:06:55,666 அந்த பெண் ஒரு கிறுக்கு. 130 00:06:56,542 --> 00:06:58,669 அப்படி கேவலமா சத்தம் செய்யறதை இப்போ நிறுத்தப் போறீங்களா இல்லையா? 131 00:07:00,295 --> 00:07:02,713 சாஷாவின் சித்தி இறக்கவில்லை. 132 00:07:02,714 --> 00:07:04,466 அவள் வீடு திரும்பியதன் காரணம் அதில்லை. 133 00:07:05,509 --> 00:07:07,344 அந்தப் புத்தகம் ஒரு கற்பனைக் கதை, 134 00:07:08,011 --> 00:07:11,180 ஆனால் அதன் அடிபாரமாக இருந்த உண்மையை விடுவித்துவிட்டதால், 135 00:07:11,181 --> 00:07:14,475 கற்பனை மட்டும் மேலே மிதந்து வந்து மேல்மட்டத்தை எட்டிவிட்டது. 136 00:07:14,476 --> 00:07:17,687 ஸ்கேன் ரிப்போர்ட்டுகளில் அவருக்கு ஒரு ஸ்ட்ரோக் வந்ததாகவும், இரண்டாம்... 137 00:07:17,688 --> 00:07:19,230 என்னது அவனுக்கு ஸ்ட்ரோக் வந்ததா? 138 00:07:19,231 --> 00:07:21,023 - அவனுக்கு ஸ்ட்ரோக் வந்ததா? - அது சாதாரணமாக நடப்பதுதான், 139 00:07:21,024 --> 00:07:22,733 - அதுவும் போதை மருந்துகள் எடுத்துக்குறவங்களுக்கு. - அடக் கடவுளே. அடக் கடவுளே. 140 00:07:22,734 --> 00:07:23,985 எனவே, அவனுக்கு எல்லாம் சரியாகுமா? 141 00:07:23,986 --> 00:07:25,403 இப்போதைக்கு எல்லாம் சீராக இருக்கு, 142 00:07:25,404 --> 00:07:28,239 ஆனால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்குன்னு இப்போ கணிப்பது கஷ்டம், 143 00:07:28,240 --> 00:07:30,032 - அவன் மயக்கத்திலிருந்து தெளிந்தால்தான் தெரியும். - பாதிப்பா? நீங்க என்ன சொல்ல... 144 00:07:30,033 --> 00:07:32,410 - எது பாதிக்கப்பட்டிருக்கும்னு நீங்க சொல்றீங்க? - பாதிக்கப்பட்டால், நரம்பு மண்டலம் தான். 145 00:07:32,411 --> 00:07:34,412 எந்த மாதிரியான நரம்பு பாதிப்பு? 146 00:07:34,413 --> 00:07:36,747 மோட்டர், காக்னிடிவ், பேச்சு. 147 00:07:36,748 --> 00:07:38,291 ஆனால் நாம் இப்போதே அதைப் பத்தியெல்லாம் யோசிக்க வேண்டாம். 148 00:07:38,292 --> 00:07:41,294 இந்த கட்டத்துல, அவர் நிலைமை சீராக இருக்கு, அதைத்தான் நாம கவனிக்கணும். 149 00:07:41,295 --> 00:07:42,378 டாக்டர்? 150 00:07:42,379 --> 00:07:43,921 - மன்னிக்கணும், நான் போகணும்... - எனவே, எப்போது... 151 00:07:43,922 --> 00:07:45,756 அவனை எப்போது நீங்க மயக்கத்திலிருந்து எழுப்புவீங்க? 152 00:07:45,757 --> 00:07:49,260 இன்னைக்கு பிற்பகலில் சில புதிய பரிசோதனைகளைச் செய்வோம், அவையெல்லாம் சரியாக இருந்தால், 153 00:07:49,261 --> 00:07:51,053 நாளை அவரை தெளிய வைக்க முயற்சி செய்வோம். 154 00:07:51,054 --> 00:07:54,223 - ஆனால் அவன் குணமாயிடுவான்தானே? முழுவதுமா. - ஆம். அதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆம். 155 00:07:54,224 --> 00:07:56,184 நீங்க அதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொன்னீங்க, ஆனால் அப்படி நடக்காம இருக்கும் வாய்ப்புகள் என்ன? 156 00:07:56,185 --> 00:07:58,144 அதாவது, மற்ற கேஸுகளை எல்லாம் வைத்து பார்த்து உங்களால் கூற முடியுமே, டாக்டர்? 157 00:07:58,145 --> 00:08:01,480 வந்து, ஒவ்வொரு கேஸும் வேறுபடும், அதோடு என்னை மன்னித்துவிடுங்கள், 158 00:08:01,481 --> 00:08:02,941 நம்மால் இப்போது காத்திருக்கத்தான் முடியும். 159 00:08:03,817 --> 00:08:06,861 அவற்றால் எந்த பயனும் இல்லை என தெரிந்தபோதும், 160 00:08:06,862 --> 00:08:08,739 கேத்தரீனும் ராபர்ட்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள், 161 00:08:09,573 --> 00:08:13,577 அப்படிச் செய்வதால் நம்பிக்கை பிறக்கும்படியாக, வித்தியாசமான பதில் கிடைக்கலாம் என நினைக்கின்றனர். 162 00:08:14,286 --> 00:08:16,287 - அவர்கள் கேட்க விரும்பும் ஒன்றை எதிர்பார்க்கின்றனர். - டாக்டர். டாக்டர். 163 00:08:16,288 --> 00:08:17,997 - என்னை மன்னிச்சிடுங்க. நான் உண்மையில்... - சரி. 164 00:08:17,998 --> 00:08:20,125 - நன்றி. - நன்றி. 165 00:08:23,879 --> 00:08:26,548 நீ விருப்பப்பட்டால் அவனுடன் முதலில் உட்காரலாம். 166 00:08:58,747 --> 00:09:02,416 இளம் வயதிலேயே மரணம் நிகழும் ஆபத்து எப்போதுமே நிக்கோலஸுக்கு இருந்துள்ளதா 167 00:09:02,417 --> 00:09:03,710 என நீ யோசிக்க ஆரம்பிக்கிறாய். 168 00:09:05,796 --> 00:09:08,006 ஏற்கனவே ஒரு முறை அவன் காப்பாற்றப்பட்டுள்ளான், 169 00:09:08,841 --> 00:09:13,053 ஆனால் இந்த முறை அவனுக்கு அவ்வளவாக அதிர்ஷ்டம் இருக்காதோ என அஞ்சுகிறாய். 170 00:09:20,477 --> 00:09:22,980 குழப்பத்தினால் ராபர்ட்டின் தலை சுற்றியது. 171 00:09:24,857 --> 00:09:30,279 நிக்கோலஸை மருத்துவமனையில் பார்த்ததால், ஆழமான குற்ற உணர்வும் கவலையும் அவனை வாட்டியது. 172 00:09:31,572 --> 00:09:34,532 ஆனாலும் அந்த உணர்வுகளால், தன் மனைவியுடன் முதலில் உறவுகொண்டு, 173 00:09:34,533 --> 00:09:39,120 பின் தன் மகனைக் காப்பாற்றிய அந்த இளைஞனின் மீது 174 00:09:39,121 --> 00:09:41,498 அவனுள் எழுந்த பொறாமையை தள்ளிவிட முடியவில்லை. 175 00:09:43,458 --> 00:09:46,795 அவன் ஒரு தியாகியாகி, இவனை நிரந்தர ஆண்மையற்றவனாக ஆக்கிவிட்டான். 176 00:09:50,841 --> 00:09:54,468 அதே சமயம், அதற்கு முன் தினம் ஸ்டீஃபன் பிரிக்ஸ்டோக்குடனான, 177 00:09:54,469 --> 00:09:55,846 அவனுடைய உரையாடலையும் நினைவுகூர்ந்தான். 178 00:09:57,139 --> 00:09:59,516 அந்த மனிதரின் பணிவும், எளிமையும், 179 00:10:00,184 --> 00:10:03,395 அவருடைய அளவற்ற புரிதலும், இறக்க குணத்தையும் பற்றி யோசித்தான். 180 00:10:04,771 --> 00:10:08,066 அதோடு எப்படி ஸ்டீஃபனும் அவரது மனைவியும், தங்கள் மகன் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய 181 00:10:08,692 --> 00:10:12,404 அந்த சிறுவனை பார்க்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்பினார்கள் என்பதையும் யோசித்தான். 182 00:10:14,072 --> 00:10:15,364 - கண்டுபிடிச்சயா? - ஆமாம்? 183 00:10:15,365 --> 00:10:16,741 - அப்படியே இருக்கலாமா? - அதாவது... 184 00:10:16,742 --> 00:10:18,785 எனவே, நான் ஏற்கனவே உங்கள் பெயரையும் கடவுச்சொல்லையும் பதிந்துவிட்டேன். 185 00:10:21,079 --> 00:10:23,623 அந்த உதவி மையத்தைத் தட்டுங்க, அதுல எப்படி என் அகௌண்டை டெலீட் செய்யணும்னு பார்த்து, 186 00:10:23,624 --> 00:10:25,791 அப்புறம் அதே போல செய்து, உங்க அகௌண்டை டெலீட் செய்துவிடுங்க. 187 00:10:25,792 --> 00:10:28,920 சரிதான். நான் எதுக்கு என் அகௌண்டை டெலீட் செய்ய விரும்புறேன்னு கேட்குதே? 188 00:10:28,921 --> 00:10:30,087 நான் அப்போ என்ன சொல்லணும்? 189 00:10:30,088 --> 00:10:31,673 ஏதோ ஒரு காரணம் சொல்லுங்க. பரவாயில்லை. 190 00:10:32,716 --> 00:10:37,304 சரிதான், என் பிரைவெசியைப் பற்றிய கவலை என்பதை தேர்வு செய்யறேன். 191 00:10:38,805 --> 00:10:41,682 இந்த டெலீஷன் திரும்பிச் செல்ல முடியாத ஒரு செயல்முறைன்னு சொல்லுது. 192 00:10:41,683 --> 00:10:44,101 ஆம். அது பரிதாபமா இருக்கு, தெரியுமா. 193 00:10:44,102 --> 00:10:46,020 என்னுடைய மிகச் சிறந்த வேலை. 194 00:10:46,021 --> 00:10:47,356 உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் பதிவு செய்யுங்க. 195 00:10:53,946 --> 00:10:55,072 "தயவுசெய்து உறுதி செய்யுங்கள்." 196 00:10:57,574 --> 00:11:00,077 "நீங்கள் உறுதியாக டெலீட் செய்ய விரும்புகிறீர்களா..." 197 00:11:07,543 --> 00:11:08,961 மன்னிக்கவும், இந்தப் பக்கம் தற்போது இல்லை. 198 00:11:10,170 --> 00:11:13,465 ஜோனதனின் இன்ஸ்டாகிராம் அகௌண்டை அழித்ததில் எனக்கு வருத்தம் இருந்தது. 199 00:11:14,508 --> 00:11:20,305 ஆனால் இப்போது சுத்தம் செய்யும் கட்டம் வந்துவிட்டது. என் தடயங்களை எல்லாம் அழிக்க வேண்டும். 200 00:11:22,474 --> 00:11:23,392 போய்விட்டது. 201 00:11:23,892 --> 00:11:25,268 சரி. 202 00:11:25,269 --> 00:11:26,394 எல்லாம் முடிந்தது. 203 00:11:26,395 --> 00:11:27,479 எளிது. 204 00:11:34,903 --> 00:11:36,153 அழைப்பவர் ராபர்ட் ரேவன்ஸ்க்ரோஃப்ட் 205 00:11:36,154 --> 00:11:38,364 - அது உனக்குதான், டாமி. - சியர்ஸ். 206 00:11:38,365 --> 00:11:40,158 சில புதிய நண்பர்களை பெற்றுக்கொள். 207 00:11:42,703 --> 00:11:44,579 - ஹலோ? - திரு. பிரிக்ஸ்டோக். 208 00:11:44,580 --> 00:11:46,163 நான்தான் ராபர்ட் பேசுறேன். 209 00:11:46,164 --> 00:11:47,958 - சரி. - ராபர்ட் ரேவன்ஸ்க்ரோஃப்ட். 210 00:11:50,419 --> 00:11:51,920 இது உங்ககிட்ட பேச சரியான நேரமா? 211 00:11:52,671 --> 00:11:54,423 நிச்சயமா, திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட். 212 00:11:55,632 --> 00:11:58,260 நான் ஒரு சோகமான செய்தியைச் சொல்ல வேண்டியுள்ளது. 213 00:11:58,927 --> 00:12:00,803 நிக்கோலஸ் இப்போது மருத்துவமனையில் இருக்கான். 214 00:12:00,804 --> 00:12:04,140 அது பயங்கரம். கேட்கவே வருத்தமா இருக்கே. 215 00:12:04,141 --> 00:12:05,975 அவனுக்கு ஒண்ணுமில்லையே? 216 00:12:05,976 --> 00:12:09,313 இப்போ சொல்வதற்கு முடியாது, ஆனால் சீராக இருக்கான் போலதான் தெரியுது. 217 00:12:10,355 --> 00:12:13,733 சரி, என்ன ஆச்சுன்னு நான் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா? 218 00:12:13,734 --> 00:12:14,817 சரி. 219 00:12:14,818 --> 00:12:18,613 நிக்கோலஸ் கொஞ்ச காலமாகவே போதை பழத்துக்கு... 220 00:12:18,614 --> 00:12:20,449 - பை. - ...அடிமையாகி அவதிப்பட்டான். 221 00:12:21,617 --> 00:12:23,159 ரொம்ப வருத்தமா இருக்கு. 222 00:12:23,160 --> 00:12:26,370 உங்களுக்கு எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். 223 00:12:26,371 --> 00:12:29,416 ஆம், அது... அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு. 224 00:12:30,876 --> 00:12:32,085 ஒன்று கேட்கட்டுமா... 225 00:12:33,253 --> 00:12:40,009 நான் மருத்துவமனைக்குப் போய், நிக்கோலஸைப் பார்த்துவிட்டு வரலாமா? 226 00:12:40,010 --> 00:12:44,890 - அதாவது உங்களுக்கு பரவாயில்லைன்னாதான். - ஆம், கண்டிப்பாக நீங்கப் போகலாம். 227 00:12:45,807 --> 00:12:49,936 அவன் ஈஸ்ட் ஆக்டன் மருத்துவமனையில, தீவிர சிகிச்சை மையத்துல இருக்கான். 228 00:12:49,937 --> 00:12:51,145 மிக்க நன்றி. 229 00:12:51,146 --> 00:12:52,481 அதாவது... 230 00:12:54,650 --> 00:12:59,195 இன்னைக்கே, சற்று கழித்து, மாலைப் பொழுதில், நான் போய் மருத்துவமனையில் பார்க்க முடியுமா? 231 00:12:59,196 --> 00:13:02,198 நிச்சயமா. எனக்கும் உங்களைப் பார்த்தால் சந்தோஷமா இருக்கும். 232 00:13:02,199 --> 00:13:04,200 மிக்க நன்றி திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட். நன்றி. 233 00:13:04,201 --> 00:13:05,869 என் பிரார்த்தனையில் நிக்கோலஸ் இருக்கிறார். 234 00:13:06,662 --> 00:13:10,499 - குட்பை. பத்திரமாக இருங்க. - மிக்க நன்றி. 235 00:13:18,882 --> 00:13:23,178 நான் திட்டமிட்டப்படி எல்லாமே செயல்படுவது ஆச்சரியமாக இருந்தது. 236 00:13:24,596 --> 00:13:26,765 இவன் போதை மருந்து சாப்பிடறவனா இருக்கணும். 237 00:13:27,558 --> 00:13:29,434 கண்டிப்பாக அப்படித்தான். 238 00:13:30,602 --> 00:13:33,814 அதோடு அந்த தந்தை, அந்த உதவாக்கரை முட்டாள், 239 00:13:34,523 --> 00:13:37,651 நேர நான் விரித்த வலையில வந்து விழுந்துட்டான். 240 00:13:38,443 --> 00:13:41,029 இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்துக்கொள்ள வேண்டியதுதான். 241 00:13:58,797 --> 00:14:00,923 அன்னைக்கு கடற்கரையில் நடந்தது என்னவென்றால், 242 00:14:00,924 --> 00:14:05,429 அன்று, சூரிய வெளிச்சம் நிறைந்த, சூடு அதிகமாக இருந்த நாள் என நினைவுள்ளது. 243 00:14:05,929 --> 00:14:06,930 நிக்கோ... 244 00:14:16,106 --> 00:14:17,774 உன்னை! உன்னை! 245 00:14:18,567 --> 00:14:20,861 நான் தனிமையாக உணர்ந்தது நினைவிருக்கு. 246 00:14:24,072 --> 00:14:27,825 ஒரு தாயாக எனக்கு எவ்வளவு பொறுமை உள்ளதென்று என்னைப் பற்றி நினைத்துக்கொண்டதும், அப்படி நினைத்தது 247 00:14:27,826 --> 00:14:29,995 பற்றி பின்னர் எழுந்த குற்ற உணர்வும் ஞாபகம் இருக்கு. 248 00:14:38,921 --> 00:14:42,216 அப்போதுதான் நான் முதன்முறையாக அவனைப் பார்த்தேன். 249 00:14:45,594 --> 00:14:51,183 எவ்வளவு நேரமாக அவன் இப்படி எங்களையே பார்த்துக்கொண்டிருந்தான் என யோசித்தேன். 250 00:14:53,227 --> 00:14:58,649 எதனாலோ, எனக்கு கூச்சமாகவும், அனைவரும் என்னைப் பார்ப்பது போன்றும் இருந்தது. 251 00:15:00,275 --> 00:15:03,570 இவ்வளவு சிறிய வயதிலேயே இந்த இளைஞன் மிக விலை உயர்ந்த கேமராவை வைத்திருக்கிறானே என நினைத்தேன். 252 00:15:05,739 --> 00:15:08,282 அதற்குள்ளாகவே அவன் எங்களை வைத்து சில புகைப்படங்களை எடுத்திருக்க வேண்டும், 253 00:15:08,283 --> 00:15:10,702 ஆனால் அவன் எடுத்ததை நான் பார்த்ததாக நினைவில்லை. 254 00:15:13,580 --> 00:15:16,500 அவன் இருக்கும் இடத்தில் உன்னை ராபர்ட் நெருங்கவும் விடவில்லை. 255 00:15:17,835 --> 00:15:20,337 எனவே நீங்கள் மாறி மாறி நிக்கோலஸுடன் இருந்து வருகிறீர்கள். 256 00:15:22,297 --> 00:15:24,716 ஒரு வகையில், அவனைப் பார்க்காமல் இருப்பது உனக்கும் ஆசுவாஸத்தைத் தருகிறது. 257 00:15:25,884 --> 00:15:28,178 அவனைப் பற்றி யோசிப்பதற்கே உனக்கு அவகாசம் இல்லை. 258 00:15:29,054 --> 00:15:31,431 உன் மகனுடன் இருப்பதையே நீ விரும்புகிறாய், 259 00:15:32,641 --> 00:15:34,601 அவனுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமாகத் தோன்றுகிறது. 260 00:15:51,159 --> 00:15:52,160 ஹை, நண்பா. 261 00:15:58,333 --> 00:16:00,626 - ஹலோ? - ஹலோ, கேத்தரீன்? 262 00:16:00,627 --> 00:16:02,921 நான் மனித வளங்களிலிருந்து சாரா ஃபின்சம் பேசுகிறேன். 263 00:16:05,007 --> 00:16:08,134 ஹலோ, சாரா. சரி, என்ன விஷயம் சொல்லுங்க? 264 00:16:08,135 --> 00:16:10,928 நேற்று அலுவலகத்தில் ஏதோ ஒரு சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. 265 00:16:10,929 --> 00:16:13,389 முறையாக புகார் கொடுக்க விரும்பவில்லை என சைமன் சொல்லிவிட்டார். 266 00:16:13,390 --> 00:16:16,935 இருந்தாலும், நீங்கள் உடலால் அவரைத் தாக்கியுள்ளதை நாங்கள் பதிவு செய்ய வேண்டும். 267 00:16:17,769 --> 00:16:19,396 அது உங்களுடைய கோப்பினுள் அது பதிவாகும். 268 00:16:20,022 --> 00:16:21,314 புரிகிறது. 269 00:16:21,315 --> 00:16:23,357 என்னை மன்னியுங்கள், கேத்தரீன், 270 00:16:23,358 --> 00:16:26,777 எங்களுடைய சீர்திருத்த முறைகளைவிட மேன்மைப்பட்டவர்களாக யாரையும் கருத முடியாது. 271 00:16:26,778 --> 00:16:29,030 எனவே, திரு. ஸ்டீஃபனின் பிரிக்ஸ்டோக் உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை 272 00:16:29,031 --> 00:16:31,657 நாங்கள் விசாரிக்கத்தான் வேண்டும், ஏனென்றால் அவை சீரியஸானவை. 273 00:16:31,658 --> 00:16:34,368 - அப்படியா? - நிச்சயம் அது உங்களுக்குப் புரிந்திருக்கும்? 274 00:16:34,369 --> 00:16:35,871 ஆம். சரி. 275 00:16:36,622 --> 00:16:39,208 இந்தக் கட்டத்தில் நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? 276 00:16:41,710 --> 00:16:42,628 இல்லை. 277 00:16:43,420 --> 00:16:46,464 சரி, இப்போதைக்கு நான் உங்களை ஒரு வாரத்திற்கு வேலையிலிருந்து விலக்கப் போகிறேன், 278 00:16:46,465 --> 00:16:47,424 தற்காலிகமாகத்தான். 279 00:16:48,383 --> 00:16:51,552 - அந்த டிராலியை நிறுத்து. மூச்சை சரிபாரு. - கேத்தரீன்? நான் சொல்வது கேட்கிறதா? 280 00:16:51,553 --> 00:16:53,597 ஆம். நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 281 00:16:54,598 --> 00:16:57,517 நீங்கள் அதிகமான வேலை பளுவில் உள்ளீர்கள் என்பது புரிகிறது. 282 00:16:57,518 --> 00:17:01,187 அது என் அலுவலகப் பணியால் இல்லை. நான் வேலையில் அழுத்தத்தை உணர்ந்ததே இல்லை. 283 00:17:01,188 --> 00:17:03,022 சரி, அது நல்ல விஷயம்தான். 284 00:17:03,023 --> 00:17:05,817 சரி, எனவே, நலமில்லை என பதியலாமா? 285 00:17:09,070 --> 00:17:10,070 ஆம், பிளீஸ். 286 00:17:10,071 --> 00:17:12,155 பாருங்கள், உங்கள் கோபத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது குறித்து நீங்கள் 287 00:17:12,156 --> 00:17:14,784 உதவி பெற முடிந்தால் அது உங்களுக்கு நல்லது செய்யும் என நான் நினைக்கிறேன். 288 00:17:14,785 --> 00:17:16,868 நாங்கள் அதற்கு உதவ முடியும், உங்கள் சிக்ச்சைக்கு நாங்கள் நிதி உதவி செய்யலாம். 289 00:17:16,869 --> 00:17:19,622 எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒருவரிடமும், அதை முற்றிலும் ரகசியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். 290 00:17:19,623 --> 00:17:20,958 உங்களுக்கு இது உதவும் எனத் தோன்றுகிறதா? 291 00:17:22,709 --> 00:17:24,585 - அது உங்களுக்கு... - மன்னிக்கவும், இப்போது என்னால் பேச முடியாது. 292 00:17:24,586 --> 00:17:25,877 நான் மருத்துவமனையில் இருக்கிறேன். 293 00:17:25,878 --> 00:17:28,715 அடக் கடவுளே. என்னை மன்னித்து விடுங்கள். எல்லாம் நலமா? 294 00:17:30,092 --> 00:17:32,343 இல்லை. இல்லை. விஷயங்கள் சரியாக இல்லை. 295 00:17:32,344 --> 00:17:33,594 ஓ, மன்னிக்கணும். நான்... 296 00:17:33,595 --> 00:17:35,638 சரி. ஆம். மிக்க நன்றி. 297 00:17:35,639 --> 00:17:36,849 பை. 298 00:17:39,643 --> 00:17:42,311 நீ மிகப் பெருமையாக நினைத்திருந்த நற்பெயர் 299 00:17:42,312 --> 00:17:44,231 இப்போது ஏற்கனவே சிதைந்துவிட்டிருந்தது. 300 00:17:45,315 --> 00:17:48,068 இனிமேல் உனக்கு எதுவுமே முன்பைப் போல இருக்கப் போவதில்லை. 301 00:17:49,862 --> 00:17:51,154 ஆனால் உனக்கு அதைப் பத்தி அக்கறையில்லை. 302 00:17:56,034 --> 00:17:58,662 நான் ஜோனதனின் பாடி ஸ்பிரேயை பூசிக்கொண்டேன். 303 00:18:00,205 --> 00:18:02,749 ஏற்கனவே நேன்சியின் கார்டிகனை அணிந்திருந்தேன். 304 00:18:04,084 --> 00:18:08,130 நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தால் சம நிலைக்குத் திரும்ப முடியும். 305 00:18:14,344 --> 00:18:15,429 ஹலோ. 306 00:18:16,889 --> 00:18:19,808 நான் நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டைத் தேடுகிறேன். 307 00:18:20,350 --> 00:18:21,517 ஹலோ. 308 00:18:21,518 --> 00:18:27,273 நான் இங்கு வந்திருப்பது, நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டைப் பார்க்க. 309 00:18:27,274 --> 00:18:28,608 {\an8}ஹலோ. 310 00:18:28,609 --> 00:18:30,026 {\an8}சிங்க் & சாக்கடை அடைப்பு நீக்கி 311 00:18:30,027 --> 00:18:34,364 {\an8}நான் நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டைப் பார்க்க வேண்டும். 312 00:18:36,325 --> 00:18:37,451 ஹலோ. 313 00:18:38,535 --> 00:18:42,789 நான் இங்கிருப்பது, நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டைப் பார்ப்பதற்கு. 314 00:19:00,432 --> 00:19:01,767 அதுதான் நல்லப் பையன். 315 00:19:08,065 --> 00:19:09,900 குதி! குதி! 316 00:19:20,410 --> 00:19:23,914 அவன் என்னைப் பார்க்கும்போது நான் அவனை சல்லாபத்துடன் பார்த்தேனா? 317 00:19:24,706 --> 00:19:29,210 அவனை அழைக்கிறேன் என்று நினைக்கும்படியாக நான் நடந்துக்கொண்டேனா? 318 00:19:29,211 --> 00:19:30,795 அப்படிச் செய்ததாக நான் நினைக்கவில்லை. 319 00:19:30,796 --> 00:19:32,714 நாம போய் இரவு உணவை சாப்பிடலாம். 320 00:19:36,051 --> 00:19:37,261 உனக்குப் பசிக்குதா? 321 00:19:38,095 --> 00:19:41,264 ஆனால் அந்த சின்னப் புன்னகை, 322 00:19:41,265 --> 00:19:44,268 அந்த நொடிப் பொழுது தொடர்பு, அது எனக்கு ஊக்கத்தைத் தந்தது என ஒத்துக்கொள்கிறேன். 323 00:19:46,520 --> 00:19:53,151 நான் கடற்கரையிலிருந்து நடந்து வெளியேறும்போது, அவன் பின்னாலிலிருந்து என்னை பார்ப்பதை உணரந்தேன். 324 00:20:41,992 --> 00:20:44,536 உங்க அலுவலகம் முழுவதும் அந்தப் புத்தகத்தை இதற்குள் படித்திருக்க வேண்டும், 325 00:20:45,370 --> 00:20:46,537 ஆனால் இனிமேல் அதைப் பத்திக் கவலையில்லை. 326 00:20:46,538 --> 00:20:47,622 ஜிஸ்ஸூ கிம் 327 00:20:47,623 --> 00:20:48,998 எனக்கு நிக்கோலஸைப் பத்தி அறிய வருத்தமாக இருக்கு. நீங்க நலமாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன்? 328 00:20:48,999 --> 00:20:52,211 எதுவானாலும் சரி, அந்த பாகமாவது இப்போது முடிந்துவிட்டது. 329 00:20:54,421 --> 00:20:59,009 ஒருவேளே நிக்கோலஸ் பிழைத்துக்கொண்டால் இனிமேல் ரகசியங்களே இராது என நீயும் அறிவாய். 330 00:20:59,635 --> 00:21:01,386 அவனுக்கு அனைத்தும் தெரியும். 331 00:21:31,917 --> 00:21:34,169 நான் உறுதி செய்துகொண்டு பின்னர் உன்னிடம் வருகிறேன். 332 00:21:35,546 --> 00:21:38,757 சரி. சியர்ஸ். ஒரு நிமிடம். 333 00:21:41,593 --> 00:21:42,970 இதோ வந்தாச்சு. நன்றி. 334 00:21:45,305 --> 00:21:47,807 - ஹலோ. நான் உங்களுக்கு உதவலாமா? - நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட். 335 00:21:47,808 --> 00:21:49,852 மன்னிக்கவும், எனக்குப் புரியலை. 336 00:21:51,436 --> 00:21:55,523 நான் நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டைப் பார்க்க வந்திருக்கேன். 337 00:21:55,524 --> 00:21:58,025 ஓ, ஆமாம். திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட் நீங்க வருவீங்கன்னு சொன்னார். 338 00:21:58,026 --> 00:22:00,612 நீங்க என்னை பின்தொட்ரந்து வந்தால், நான் உங்களை அழைத்துச் செல்கிறான். 339 00:22:04,533 --> 00:22:07,494 இப்போ, நான் உங்களை எச்சரிக்கணும், 340 00:22:08,245 --> 00:22:12,707 நிக்கோலஸுக்கு இப்போ நிறைய கருவிகளை இணைச்சிருக்கோம், 341 00:22:12,708 --> 00:22:15,544 அதனால, அவரை முதலில் பார்க்கும்போது சற்று பயமாகக் கூட தோணலாம். 342 00:22:16,128 --> 00:22:20,174 சரியா? ஆனால் அவர் இப்போது சீராக இருக்கிறார். 343 00:22:21,133 --> 00:22:23,968 ஹலோ. நான் இங்கே நிக்கோலஸின் தாத்தாவை அழைத்து வந்துள்ளேன். 344 00:22:23,969 --> 00:22:25,262 நன்றி. 345 00:22:26,013 --> 00:22:27,305 - ஹலோ. - ஹலோ. 346 00:22:27,306 --> 00:22:28,390 மிக்க நன்றி. 347 00:22:30,225 --> 00:22:31,894 அவர் இடது பக்க கடைசி பெட்டுல இருக்கிறார். 348 00:22:32,644 --> 00:22:33,645 மிக்க நன்றி. 349 00:23:10,557 --> 00:23:14,811 நான் கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டிடமிருந்து எல்லாத்தையும் பறித்துக்கொள்ள இருந்தேன். 350 00:23:16,939 --> 00:23:18,606 என் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 351 00:23:18,607 --> 00:23:23,487 என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது, வெற்றியின் எதிர்பார்ப்பில் என் காதுகள் அடைத்தன. 352 00:23:26,031 --> 00:23:29,826 எனினும் நிக்கோலஸ் மரணத்தை நோக்கி ஏற்கனவே பாதி தூரம் போயிருந்தான். 353 00:23:32,162 --> 00:23:35,290 அவன் மேலே என் சுண்டு விரலைக் கூட வைக்காமல், அவனை இந்த நிலைக்குத் தள்ளியிருந்தேன். 354 00:23:38,001 --> 00:23:39,503 அவனக்கு எந்த உணர்வும் இராது. 355 00:23:40,587 --> 00:23:42,631 உண்மையில் இறப்பதற்கு இது நல்ல வழி. 356 00:23:44,800 --> 00:23:46,260 தண்ணீரில் மூழ்குவதைவிட இது மேல். 357 00:23:48,345 --> 00:23:50,681 அவன் இறப்பதற்கு அவனை மெல்ல மெல்ல தள்ளினால் போதுமானது. 358 00:23:52,349 --> 00:23:54,351 எனக்கு பின்விளைவுகளைப் பற்றி அக்கறை இல்லை. 359 00:23:55,936 --> 00:23:57,687 என்னைப் பொறுத்த வரை, ஒரே ஒரு விஷயம்தான் முக்கியம், 360 00:23:57,688 --> 00:24:03,026 அது, நானும் நேன்சியும் துடித்தது போல, கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட்டும் துடிக்க வேண்டும். 361 00:24:06,029 --> 00:24:06,904 சாவிகள் இங்கே உள்ளன. 362 00:24:06,905 --> 00:24:10,408 - நன்றி. உங்க அப்பா இங்கே வந்துள்ளார். - என்னது? 363 00:24:10,409 --> 00:24:12,286 - உங்கள் அப்பா. அவர் நிக்கோலஸுடன் உள்ளார். - இல்லை, என் தந்... 364 00:24:28,969 --> 00:24:31,305 நீங்க இங்கே என்ன செய்யறீங்க? அவர் இங்கே இருக்க அனுமதியில்லை. 365 00:24:32,181 --> 00:24:33,389 நீங்க என்ன செய்யறீங்க? 366 00:24:33,390 --> 00:24:34,683 என் மகனிடமிருந்து தூர போங்க. 367 00:24:35,392 --> 00:24:36,727 என் மகனைத் தொடாதீங்க! 368 00:24:38,145 --> 00:24:40,479 நீங்க நலமா? அசையாதீங்க. அமைதியா இருங்க. 369 00:24:40,480 --> 00:24:42,565 - உங்க அப்பா, உங்க மகனை... - அவர் என் தந்தையில்லை. 370 00:24:42,566 --> 00:24:45,776 - ...வெறுமனே பார்க்கதான் விரும்பினார். - இங்கே வருவதற்கு நீங்க யாருன்னு நினைச்சீங்க? 371 00:24:45,777 --> 00:24:48,070 நான் உங்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்தேன். 372 00:24:48,071 --> 00:24:49,614 பேசுவதற்காக உங்க வீட்டிற்கு கூட வந்தேன். 373 00:24:49,615 --> 00:24:52,617 - நிக்கோலஸ் எப்படி இருக்கான்னு பார்க்கத்தான் வந்தேன். - நீங்க கதவையும் திறக்கவில்லை. 374 00:24:52,618 --> 00:24:53,868 அவள் இங்கே உள்ளே இருக்கக் கூடாது. 375 00:24:53,869 --> 00:24:56,121 - நான் கூப்பிட்டபோது, திரும்பி கூப்பிடவே இல்லை. - எனக்கு கொஞ்சம் உதவி தேவை. 376 00:24:59,583 --> 00:25:01,792 - நீங்க எங்களுடன் வர வேண்டும். - இல்ல, நீங்க எங்களுடன் வரணும். 377 00:25:01,793 --> 00:25:03,921 - நீங்க அமைதியாகணும். - அவர் என் மகனுக்கு தீங்கு செய்யப் பார்க்கிறார். 378 00:25:32,449 --> 00:25:34,535 நாம எல்லோரையும் அழைக்கணும். 379 00:25:35,494 --> 00:25:37,037 அவங்களுக்கு நடந்ததைச் சொல்லணும். 380 00:25:40,749 --> 00:25:42,501 நான் முதலில் சாஷாவை கூப்பிடணும். 381 00:25:44,753 --> 00:25:47,256 நாம் முதலில் சொல்லுவது அவளாகத்தானே இருக்கணும், அதுதான் சரி. 382 00:25:49,216 --> 00:25:52,344 அவள் வேறு ஒருவரிடமிருந்து அதை கேட்பதை நான் விரும்பவில்லை. 383 00:25:59,476 --> 00:26:01,228 பீஸாவிலிருந்து வாழ்த்துகள் 384 00:26:04,356 --> 00:26:05,899 ஹலோ, எம்மா. 385 00:26:07,025 --> 00:26:10,571 நான்தான் நேன்சி பிரிக்ஸ்டோக் பேசுறேன். நான் சாஷாவுடன் பேச முடியுமா, பிளீஸ்? 386 00:26:16,285 --> 00:26:17,870 அவள் எப்போது திரும்புவாள் என்று தெரியுமா? 387 00:26:25,127 --> 00:26:28,212 எனக்குப் புரிகிறது, ஆனால் இது ரொம்ப முக்கியமான விஷயம், எம்மா. 388 00:26:28,213 --> 00:26:30,965 நான் சொல்றதை மட்டும் கொஞ்சம் கேட்குறீங்களா, பிளீஸ். 389 00:26:30,966 --> 00:26:33,384 ரொம்ப துக்கமான செய்தி இது. 390 00:26:33,385 --> 00:26:35,095 ஜோனதன் இறந்துவிட்டான். 391 00:26:48,025 --> 00:26:49,026 அது... 392 00:26:49,735 --> 00:26:51,944 அதாவது ஜோனதன் இறந்துவிட்டான். அதைத்தான் சொல்ல வருகிறேன். 393 00:26:51,945 --> 00:26:54,948 அவன் இத்தாலியில் ஒரு குழந்தையை காப்பாற்றும்போது மூழ்கி இறந்துவிட்டான். 394 00:26:57,492 --> 00:26:58,660 அதைச் செய்யுங்க. 395 00:27:01,955 --> 00:27:02,915 மிக்க நன்றி. 396 00:27:07,085 --> 00:27:08,420 என்ன சொன்னாங்க? 397 00:27:10,088 --> 00:27:12,299 சாஷா வெளியே போயிருக்கா, ஆனால் நடந்ததை அவகிட்ட சொல்வாராம். 398 00:27:15,719 --> 00:27:17,012 வேற ஏதாவது சொன்னாங்களா? 399 00:27:17,763 --> 00:27:19,640 நம்ம இழப்புக்கு வருத்தப்படுவதாகச் சொன்னாங்க. 400 00:27:22,935 --> 00:27:24,061 வேற எதுவும் இல்லை. 401 00:27:26,021 --> 00:27:27,523 அவங்களுக்கு வேலையிருப்பதால் போகணும்னு சொன்னாங்க. 402 00:27:30,108 --> 00:27:33,027 சாஷாவின் தாயார், மகளிடம் நடந்ததை சொன்னார்களா 403 00:27:33,028 --> 00:27:34,737 சொல்லவில்லையா என எங்களுக்குத் தெரியவில்லை, 404 00:27:34,738 --> 00:27:36,990 ஏனெனில் அதற்குப் பின் அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. 405 00:27:39,451 --> 00:27:42,161 ஜோனதனின் காதலியான சாஷா, ஜோனதனை இத்தாலியில் தனியே விட்டுவிட்டு, 406 00:27:42,162 --> 00:27:46,375 தன் பெற்றோர்களிடம் அவசரமாகத் திரும்பிச் செல்லும்படியாக ஏதோ ஒன்று நடந்துள்ளது. 407 00:27:47,501 --> 00:27:51,964 அந்தத் தாய் அவ்வளவு கோபமாக ஃபோனில் பேசும்படியாக, ஏதோ ஒன்று அங்கே நடந்துள்ளது. 408 00:27:58,720 --> 00:28:02,139 அவன் கண் விழிக்கும்போது என்னை பார்க்க முடியும் வகையில், 409 00:28:02,140 --> 00:28:05,351 எங்கள் அறைகளுக்கிடையே இருந்த கதவு திறந்திருந்தால் மட்டும் போதும் என்று, 410 00:28:05,352 --> 00:28:08,689 நிக்கோலஸ் தனியாக படுத்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்தான். 411 00:28:11,567 --> 00:28:15,946 அதோடு அவன் உறங்க ஆரம்பித்தப் பின், ஒருபோதும் நடுவில் எழுந்ததே இல்லை. 412 00:28:19,992 --> 00:28:24,538 அன்று, நான் உணர்ந்த பொங்கி எழும் சந்தோஷத்தை, என்னால் மறக்கவே முடியாது. 413 00:28:27,833 --> 00:28:31,295 உண்மையாகவே நான் எந்த அழுத்தமும் இல்லாமல், ஆனந்தமாக இருப்பதை உணர்ந்தேன், 414 00:28:32,004 --> 00:28:34,423 அன்றைய மாலைப் பொழுது நன்றாகவே கழிந்திருந்தது. 415 00:28:35,924 --> 00:28:41,054 நிக்கோலஸ் என்னுடன் தனியாக நேரத்தை கழிப்பதில், நான் மிகவும் இன்புற்று இருந்தேன். 416 00:28:43,098 --> 00:28:46,185 எனவே, அந்த அழகிய மாலைப் பொழுதில் நான் 417 00:28:47,269 --> 00:28:50,272 என் டெரஸில், ஒரு கோப்பை அருமையான ஒயினைப் பருகிவிட்டு உறங்கலாம், எனத் தீர்மானித்தேன். 418 00:28:55,569 --> 00:28:57,403 கொஞ்சம் நேராக பார்க்க முடியுமா, பிளீஸ்? 419 00:28:57,404 --> 00:29:01,325 என்னை ஒரு பெண் பரிவன்புடன் நடத்தி வெகு காலம் ஆகிவிட்டது. 420 00:29:02,117 --> 00:29:07,331 அவளுடைய கைகள் எனக்கு நோகாமல், அக்கறையுடன் என்னை பிடித்திருப்பது, 421 00:29:08,123 --> 00:29:10,208 - எனக்குப் பிடித்திருந்தது. - பியூப்பிளின் சைஸ் 3-எம்ஐஎல். 422 00:29:10,209 --> 00:29:11,626 மிக்க நன்றி. 423 00:29:11,627 --> 00:29:13,962 அவளுடைய குரலும் மென்மையாகவே இருந்தது. 424 00:29:14,463 --> 00:29:20,009 உண்மையிலேயே அக்கறை காட்டியது, அவளுடைய அன்பிற்கு என்னை தலை வணங்கச் செய்தது. 425 00:29:20,010 --> 00:29:23,222 சரி. எல்லாம் ஆயிடுச்சு. 426 00:29:24,848 --> 00:29:28,768 - எப்படி இருக்கீங்க? - நல்லாயிருக்கேன்னு நினைக்கிறேன். 427 00:29:28,769 --> 00:29:30,979 கொஞ்சம் நடுக்கமாக இருக்கு. 428 00:29:31,480 --> 00:29:33,773 கண்டிப்பாக இருக்கும், பெரியவரே. உங்களுக்கு நல்ல அடி பட்டிருக்கு. 429 00:29:33,774 --> 00:29:36,275 அந்த பெண்மணி என் கணவரைப் போல. 430 00:29:36,276 --> 00:29:38,779 அப்படி தாக்குதல் நடந்தால் எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். 431 00:29:40,280 --> 00:29:42,073 அனைத்து முக்கிய செயல்பாடுகளும் நன்றாக உள்ளன. 432 00:29:42,074 --> 00:29:44,033 - உங்களுக்கு எதுவும் தேவைப்பட்டால் கூப்பிடுங்க. - மிக்க நன்றி. 433 00:29:44,034 --> 00:29:45,368 பத்திராமாக இருங்க, திரு. ஸ்டீஃபன். 434 00:29:45,369 --> 00:29:46,452 ரொம்ப நன்றி. 435 00:29:46,453 --> 00:29:47,454 இப்போ நீங்க நல்லா ஆயிட்டீங்க. 436 00:29:49,623 --> 00:29:50,957 நீங்க நலமாக இருக்கீங்க. 437 00:29:50,958 --> 00:29:53,543 அடுத்த ரெண்டு நாட்களுக்கு கொஞ்சம் வலி இருக்கும். 438 00:29:53,544 --> 00:29:55,711 அந்த வலியைப் போக்க நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தரப் போகிறேன். 439 00:29:55,712 --> 00:30:00,007 நான் தூங்குவதற்கு உதவும்படியா ஏதாவது தர முடியுமா? 440 00:30:00,008 --> 00:30:01,426 - எதுக்கும் இருக்கட்டுமே. - நிச்சயமாக. 441 00:30:04,680 --> 00:30:06,556 ஹலோ? உங்களைப் பார்க்க ஒருவர் வந்துள்ளார். 442 00:30:06,557 --> 00:30:08,349 என்னை ரொம்ப மன்னிக்கணும். 443 00:30:08,350 --> 00:30:11,269 நடந்ததைப் பத்திக் கேள்விப்பட்டேன். முடிந்தவரை வேகமா ஓடி வந்தேன். 444 00:30:11,270 --> 00:30:14,772 என் மனைவி செய்ததைப் பற்றி எனக்குத் தெரியும், அது அதிர்ச்சியாக இருக்கு. 445 00:30:14,773 --> 00:30:16,190 எனக்கு ரொம்ப, ரொம்ப வருத்தமாக இருக்கு. 446 00:30:16,191 --> 00:30:19,277 அதுல உங்க தவறு எதுவும் இல்லையே, திரு. ரேவன்ஸ்க்ரோஃப்ட். 447 00:30:19,278 --> 00:30:24,323 என்னை இங்கே பார்த்ததும், அவங்களும் அதிர்ச்சி ஆயிட்டாங்கன்னு நினைக்கிறேன். 448 00:30:24,324 --> 00:30:27,368 நீங்க என்னை அழைச்சிருக்கீங்கன்னு அவங்ககிட்ட சொல்லவில்லையா? 449 00:30:27,369 --> 00:30:28,953 நாங்க பேசிக்கொள்வதில்லை. 450 00:30:28,954 --> 00:30:32,582 புரியுது, ஆனால் நிக் சுகமில்லாம இருக்கும்போது, அது வினோதமா இருக்கு, 451 00:30:32,583 --> 00:30:33,584 ஆனால், நான்... 452 00:30:34,960 --> 00:30:37,628 ஆனால் எனக்கு என்ன புரியலைன்னா, அவங்க ஏன் அப்படி செய்தாங்க, 453 00:30:37,629 --> 00:30:39,672 இல்ல ஏன் அவங்க என்னிடம் சொல்லலை. 454 00:30:39,673 --> 00:30:42,008 நான் வெகு தூரம் பஸ்ஸுல பயணம் செய்து வந்திருக்கேன், 455 00:30:42,009 --> 00:30:47,221 ஏன்னா நான் நிஜமாவே நிக்கோலஸைப் பார்க்க விரும்பியதாலதான். 456 00:30:47,222 --> 00:30:51,434 எனக்குத் தெரியும், அதைத்தான் என் மனைவி, நேன்சி, அதைத்தான் விரும்பியிருப்பாள். 457 00:30:51,435 --> 00:30:56,564 என் மகன் தன் உயிரைத் தியாகம் செய்துக் காப்பாற்றிய அந்த இளைஞனைப் பார்க்கும் ஒரு வாய்ப்பைப் பெற 458 00:30:56,565 --> 00:30:59,358 அவள் சந்தோஷப்பட்டிருப்பாள். 459 00:30:59,359 --> 00:31:01,695 அப்போ நீங்க ஏன் இன்னொரு முறை வரக் கூடாது? 460 00:31:04,031 --> 00:31:07,075 - நீங்க நிஜமாகத்தான் சொல்றீங்களா? - ஆம். ஆமாம், சந்தேகமேயில்லாம. 461 00:31:08,368 --> 00:31:10,120 நிச்சயமா நிக்கோலஸ் அதை விரும்புவான். 462 00:31:10,913 --> 00:31:13,832 உங்களுக்கு அதைப்பத்தி பதட்டமா இருந்தால், அதுக்கு அவசியமே இல்லை. 463 00:31:15,000 --> 00:31:17,126 அது அவனுக்குக் கிடைக்கும் ஒரு அற்புதமான பரிசாக இருக்கும். 464 00:31:17,127 --> 00:31:22,507 அது ரொம்ப அன்பான வார்த்தை. ஆம். நான் அதை விரும்புகிறேன். 465 00:31:22,508 --> 00:31:24,800 - மிக்க நன்றி. - இவையெல்லாம் உங்க வலிக்கான மாத்திரைகள். 466 00:31:24,801 --> 00:31:26,093 ரெண்டு எடுத்தக்கலாம். 467 00:31:26,094 --> 00:31:28,846 நான் இதைக் கொடுக்கக் கூடாது, ஆனால் இவை இரவில் உங்களுக்கு நல்ல தூக்கத்தைத் தரும், 468 00:31:28,847 --> 00:31:30,182 ஆனால் ஒண்ணு மட்டும் எடுத்துக்கொள்ளுங்க. 469 00:31:31,099 --> 00:31:33,227 சரிதான். மிக்க நன்றி. சரி. 470 00:31:34,478 --> 00:31:38,231 வந்து, நீங்க என்னிடம் ரொம்ப அன்பா இருந்தீங்க. அதுக்கு ரொம்ப நன்றி. 471 00:31:38,232 --> 00:31:40,733 கவலை வேண்டாம். பத்திரமா வீடு சேருங்க. 472 00:31:40,734 --> 00:31:42,194 நன்றி. 473 00:31:44,571 --> 00:31:46,280 இல்லை, நான் போகணும். 474 00:31:46,281 --> 00:31:48,533 - நான் ரொம்ப களைப்பாக இருக்கேன்... - ஆம், நிச்சயமாக. 475 00:31:48,534 --> 00:31:51,327 எல்லாமே இன்னும் சிக்கலாகிவிட்டது, 476 00:31:51,328 --> 00:31:56,667 அந்தத் தருணத்தில் என் தலைவிதிதான் எனக்கு நியாயத்தைப் பெற்று தர வேண்டும் என நினைத்தேன். 477 00:31:58,210 --> 00:32:02,589 என்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லாமலேயே, இயற்கையாகவே, 478 00:32:03,340 --> 00:32:05,759 நிக்கோலஸ் ரேவன்ஸ்க்ரோஃப்ட் தவறிப்போகும் வாய்ப்புள்ளது. 479 00:32:07,344 --> 00:32:09,805 அவனுக்கு ஸ்ட்ரோக் வந்துள்ளது, அப்படித்தான் அந்த நர்ஸ் சொன்னார். 480 00:32:11,139 --> 00:32:13,308 அவன் பிழைத்துக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளதென்று சொன்னார், 481 00:32:14,101 --> 00:32:18,063 ஆனால் வாழ்க்கை முழுவதும் மிகவும் செயலியழந்து இருக்கக்கூடும் என்றார். 482 00:32:19,398 --> 00:32:22,484 அது மிக விரும்பத்தக்கதாகவே இருந்தது, எனினும், அது பத்தாது. 483 00:32:24,570 --> 00:32:27,989 கேத்தரீன் ரேவன்ஸ்க்ரோஃப்ட் தன்னலம் பாராமல், பாதிக்கப்பட்ட தன் மகனை அன்புடனும், 484 00:32:27,990 --> 00:32:30,825 பரிவுடனும் பராமரிக்கும் ஒரு தாயாராக, ஒரு புதிய பாத்திரத்தில் வலம் வரும் 485 00:32:30,826 --> 00:32:34,663 வாய்ப்பைக் கொடுக்க நான் விரும்பவில்லை. 486 00:32:36,957 --> 00:32:41,295 கூடாது, அவள் அவன் இல்லாத வெறுமையால் அவள் தவிக்க வேண்டும் என விரும்பினேன். 487 00:32:42,880 --> 00:32:44,882 மரணம் மட்டுமே மாற்ற முடியாத ஒன்று. 488 00:32:46,717 --> 00:32:50,012 அப்போதுதான் நான் அவளைக் கொல்ல முடியும். 489 00:32:52,598 --> 00:32:55,349 எனக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டதாக நினைத்தேன். 490 00:32:55,350 --> 00:32:58,728 ஆனால், அவனுடைய தந்தை, சரியான ஈனப் பிறவி, 491 00:32:58,729 --> 00:33:02,023 - அதற்கு பொன்னான ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளான். - கதவுகள் திறக்கின்றன. 492 00:33:02,024 --> 00:33:06,028 அப்பாவி நிக்கோலஸை நான் இன்னொரு முறை வந்து பார்ப்பதுதான் நான் அதற்காகச் செய்ய வேண்டியது. 493 00:33:08,155 --> 00:33:09,531 கதவுகள் மூடுகின்றன. 494 00:33:14,203 --> 00:33:17,288 ஸ்கூசி. மன்னிக்கணும், ஒரு கோப்பை வெள்ளை ஒயினை, நான் என் அறைக்கு கொண்டு போகலாமா? 495 00:33:17,289 --> 00:33:18,665 செர்ட்டோ. 496 00:33:21,877 --> 00:33:23,836 நான் புன்னகைத்தேன், சரி. 497 00:33:23,837 --> 00:33:29,718 எனக்கு மிக வெட்கமாக இருந்ததாலும், நான் அகந்தையானவளாகத் தெரியக் கூடாதென்பதாலும், 498 00:33:30,636 --> 00:33:34,389 தனியாக இருக்கிறேன் என்பதை அவன் அறிவான் எனபதாலும் எனக்கு ஒரு நெருடல் இருந்தது. 499 00:33:39,686 --> 00:33:42,104 அப்போது நான் தனியாக இருந்து பழக்கப்படாதவளாக இருந்தேன். 500 00:33:42,105 --> 00:33:46,276 அதோடு, நிச்சயமாக யாரும் அப்படி என்னைத் தொடர்ந்து பார்த்து எனக்கு பழக்கமில்லை. 501 00:33:48,612 --> 00:33:52,156 அவனுடைய கேமரா, அவனுடைய இடைவிடாத கவனம். 502 00:33:52,157 --> 00:33:56,662 எனக்குப் பதட்டமாக இருந்தது, அதே சமயம், எனக்குள் குறுகுறுப்பாகவும் இருந்ததென ஒப்புக்கொள்கிறேன். 503 00:33:58,747 --> 00:34:03,001 ஒருவேளை பிற்பாடு இந்தத் தருணங்களைப் பற்றி நான் கற்பனை செய்யலாம். 504 00:34:06,171 --> 00:34:07,172 செய்யலாம். 505 00:34:08,799 --> 00:34:09,967 செய்யாமலும் போகலாம். 506 00:37:21,700 --> 00:37:25,870 உங்கள் மகனின் மறைவைப் பற்றி போலீஸ் உங்களுக்கு தகவல் சொல்ல வந்தபோது 507 00:37:25,871 --> 00:37:27,915 நீங்கள் இங்கேதான் இருந்தீர்கள். 508 00:37:33,712 --> 00:37:34,630 உட்காருங்கள். 509 00:37:39,718 --> 00:37:41,553 நான் முதலில் கொஞ்சம் தேனீர் பண்ணப் போகிறேன். 510 00:37:47,601 --> 00:37:48,685 நீங்கள் அதை சரிசெய்ய வேண்டும். 511 00:37:51,647 --> 00:37:53,731 சொல்பிடெம் டார்ட்ரேட் 512 00:37:53,732 --> 00:37:54,900 பில்டர்ஸ் தேனீரா? 513 00:37:56,568 --> 00:37:57,653 எதுவானாலும் பரவாயில்லை. 514 00:38:00,322 --> 00:38:05,285 உங்கள் புத்தகம், மிகவும் விவரமாக வர்ணிக்கிறது. 515 00:38:07,996 --> 00:38:10,958 நான் அதை எழுதவில்லை. நேன்சிதான் எழுதினாள். 516 00:38:13,085 --> 00:38:14,710 அவள் ஒரு சிறந்த எழுத்தாளர். 517 00:38:14,711 --> 00:38:19,633 அவங்க மிகத் துல்லியமாக இடங்களை எல்லாம் விவரிச்சிருக்காங்க. 518 00:38:22,427 --> 00:38:23,929 நாங்கதான் அங்கே போய் பார்த்தோமே, நினைவிருக்கா? 519 00:38:26,056 --> 00:38:28,224 அது நடந்த இடத்திற்குப் போனோம். 520 00:38:28,225 --> 00:38:30,643 இருப்பினும், ஒரு கட்டு புகைப்படங்களை வைத்து, 521 00:38:30,644 --> 00:38:35,524 அவங்களால இவ்வளவு தூரம் எல்லாத்தையும் சரியாக வடிவமைத்து சொல்ல முடிந்தது, அற்புதம்தான். 522 00:38:36,859 --> 00:38:40,237 அதுதானே சிறந்த எழுத்தாளர்களின் திறமையே. 523 00:38:41,238 --> 00:38:45,908 நூலிழை யதார்த்தங்களை வைத்துக்கொண்டு, பெரிய உண்மைகளை 524 00:38:45,909 --> 00:38:50,581 வெளியே கொண்டு வரும் வகையில், அவற்றை பின்னிப் பிணைத்துவிடுவார்கள். 525 00:38:51,123 --> 00:38:52,332 உட்காருங்க. 526 00:38:55,127 --> 00:38:56,378 ஆம். 527 00:38:57,880 --> 00:39:02,592 அந்த சம்பவங்கள் நடந்தபோது அங்கே இல்லாத போதிலும், அவர் இவ்வளவு நம்பக்கூடிய விதத்தில் 528 00:39:02,593 --> 00:39:05,261 பல விஷயங்களைப் பற்றி எழுத முடிந்தது 529 00:39:05,262 --> 00:39:07,222 என்பது, நிஜமாகவே அற்புதமான ஒரு திறமைதான். 530 00:39:09,683 --> 00:39:11,226 அவங்க ஆச்சரியமானவங்கதான். 531 00:39:25,782 --> 00:39:26,950 சரி. 532 00:39:29,286 --> 00:39:30,662 இப்போது, நான் ஆரம்பிக்கலாம். 533 00:39:47,346 --> 00:39:49,598 இப்போது என் தரப்பில் உள்ள வாதத்தை நான் வெளியே சொல்லும் நேரம் வந்துவிட்டது. 534 00:40:02,236 --> 00:40:04,696 ரெனீ நைட் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 535 00:42:51,154 --> 00:42:53,198 {\an8}சாந்தி சாந்தி சாந்தி 536 00:42:55,409 --> 00:42:57,411 {\an8}தமிழாக்கம் அகிலா குமார்