1 00:01:12,781 --> 00:01:14,366 தொடக்கம் கடினமான ஒன்றாக இருந்தது. 2 00:01:15,993 --> 00:01:16,994 அது நடக்கும். 3 00:01:19,496 --> 00:01:20,664 இது போன்ற வழக்குகளில். 4 00:01:23,750 --> 00:01:25,127 பணக்காரப் பெண் காணாமல் போவது. 5 00:01:25,127 --> 00:01:26,587 டிக்கியில் இறந்தவனின் சடலம் இருப்பது. 6 00:01:33,260 --> 00:01:35,971 பிறகு நான், என்னுடைய எல்லா... எனக்குத் தெரியவில்லை... 7 00:01:36,555 --> 00:01:37,556 பிரச்சினைகள். 8 00:01:41,185 --> 00:01:42,186 நான் தன்னடக்கமாக பேசவில்லை. 9 00:01:42,811 --> 00:01:44,646 என் வேலையில் நான் மிகவும் திறமையானவன். 10 00:01:44,646 --> 00:01:47,566 அப்படி இல்லையென்றால் ஜோனாதன் சீகல் போன்ற ஒருவர் என்னை அழைத்திருக்க மாட்டார். 11 00:01:48,567 --> 00:01:50,944 எனக்கு எல்லாம் பழக கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. 12 00:01:51,862 --> 00:01:54,948 எப்படியிருந்தாலும், வேலைக்குத் திரும்புவோம். 13 00:02:19,181 --> 00:02:20,724 பெர்னி சீகல், 14 00:02:21,391 --> 00:02:24,353 ஒலிவியாவின் அப்பா, மறைந்த ரேச்சல் கேயின் முன்னாள் கணவன். 15 00:02:24,937 --> 00:02:28,106 அதோடு திரைப்பட தயாரிப்பாளரும், அவனுடைய அப்பா அளவுக்கு திறமை இல்லாவிட்டாலும்கூட. 16 00:02:28,106 --> 00:02:31,527 தயவுசெய்து, என்னை பெர்னி என்று அழையுங்கள். ஹேய், எனக்கு இந்த இடம் பிடிக்கும். 17 00:02:31,527 --> 00:02:34,196 அவனுடைய கடைசி வெற்றிபெற்ற படம் சர்ஃபிங் செய்யும் குரங்கு பற்றியது. 18 00:02:34,196 --> 00:02:35,531 இது உயர்தரமானது. 19 00:02:35,531 --> 00:02:37,407 நான் நகரத்தில் இருக்கும்போது வேறு எங்கும் தங்க மாட்டேன். 20 00:02:37,407 --> 00:02:40,077 ஆம், நுணுக்கமான ரசனை கொண்டவர். நான் அதை பாராட்டுகிறேன். 21 00:02:40,077 --> 00:02:41,745 சரி. என்ன சாப்பிடுகிறீர்கள்? 22 00:02:41,745 --> 00:02:44,039 இரண்டு ஒயிட் டோஸ்ட். கொஞ்சம் சீஸ். 23 00:02:44,039 --> 00:02:46,917 - எலுமிச்சையுடன் சூடான நீர். - வெறும் காபி. பால் இல்லாமல். 24 00:02:46,917 --> 00:02:49,127 உண்மையில் பன்றி இறைச்சியும் முட்டைகளும் வேண்டும், 25 00:02:49,127 --> 00:02:50,921 ஆனால் சாதாரண உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கிறேன். 26 00:02:51,672 --> 00:02:53,841 எப்படியிருந்தாலும், உங்களுக்கு என்ன வேண்டும்? 27 00:02:54,383 --> 00:02:55,843 ஒலிவியாவைப் பற்றி பேச விரும்புகிறேன். 28 00:02:56,426 --> 00:02:59,096 ஆம். நான் சொல்ல வேண்டும், ஷுகர். 29 00:02:59,096 --> 00:03:02,099 நீங்கள் உங்கள் நேரத்தையும் என் அப்பாவின் பணத்தையும் வீணடிக்கிறீர்கள். 30 00:03:02,599 --> 00:03:07,104 ஒலிவியா எப்போது வேண்டுமானாலும் திரும்பி வருவாள். அவள் எப்போதும் செய்வது போலவே. 31 00:03:07,104 --> 00:03:08,814 மீண்டும் மறுவாழ்வு மையத்துக்கு செல்லத் தயாராக. 32 00:03:09,940 --> 00:03:11,900 நான் அவளுடைய அப்பாவாக இருந்தால், அது எனக்கு வருத்தம் தரும். 33 00:03:11,900 --> 00:03:13,151 நீங்கள் இல்லை, நானும் இல்லை. 34 00:03:13,735 --> 00:03:15,320 உங்கள் அப்பா கவலைப்படுகிறார். 35 00:03:15,320 --> 00:03:16,655 இதோ. 36 00:03:18,323 --> 00:03:19,408 உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். 37 00:03:19,908 --> 00:03:24,162 ஒலிவியாவை யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். நிச்சயமாக என் அப்பாவைவிட. 38 00:03:25,789 --> 00:03:29,293 அதோடு மெலனியை விட அவளைப் பற்றி நன்றாக தெரியும். அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 39 00:03:29,293 --> 00:03:31,503 நேற்றிரவு நீங்கள் அவளுடன் ஜாலியாக இருந்தீர்கள், இல்லையா? 40 00:03:32,504 --> 00:03:35,716 அதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். நான் சொல்ல வேண்டும். அதாவது, அவள் என் முன்னாள் மனைவி. 41 00:03:36,550 --> 00:03:39,303 அது உங்களுக்குத் தெரியாதா, திரு. தனியார் புலனாய்வாளரே? 42 00:03:39,303 --> 00:03:42,556 {\an8}நீங்களும் மெலனி மேத்யூஸும் நெவாடாவின் லாஸ் வேகாஸில் திருமணம் செய்துகொண்டீர்கள், 43 00:03:42,556 --> 00:03:43,891 1999 புத்தாண்டுக்கு முந்தைய நாள். 44 00:03:43,891 --> 00:03:46,476 மூன்று நாட்களுக்குப் பிறகு நீங்கள் இருவரும் பொது சொத்தை சேதம் செய்ததற்காகவும், போதைப்பொருள் 45 00:03:46,476 --> 00:03:48,353 வைத்திருந்ததற்காகவும், குடித்துவிட்டு ஒழுங்கற்ற நடத்தைக்காகவும், துப்பாக்கியை காட்டியதற்காகவும் 46 00:03:48,353 --> 00:03:50,063 கைது செய்யப்பட்டீர்கள். 47 00:03:51,982 --> 00:03:53,358 அது ஒரு பிரமாதமான தேனிலவு. 48 00:03:57,154 --> 00:03:58,822 தயவுசெய்து. கவனமாக. 49 00:04:02,993 --> 00:04:04,119 இது எங்கே கிடைத்தது? 50 00:04:05,787 --> 00:04:09,166 அந்த வகை போலராய்டு படம் 1996-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 51 00:04:11,001 --> 00:04:13,253 அப்போது உங்களுக்கு ரேச்சல் கேவுடன் திருமணமாகியிருந்தது, இல்லையா? 52 00:04:15,339 --> 00:04:16,339 அது உங்களுக்கே தெரியும். 53 00:04:17,966 --> 00:04:19,468 நீங்கள் அந்த புகைப்படத்தை எடுத்தீர்களா? 54 00:04:24,389 --> 00:04:25,390 இல்லை, நான் எடுக்கவில்லை. 55 00:04:26,099 --> 00:04:29,186 உண்மையைச் சொன்னதற்கு நன்றி, பெர்னி. அதை பாராட்டுகிறேன். 56 00:04:34,900 --> 00:04:38,487 நீங்கள் எப்போதாவது யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? அதாவது, மனப்பூர்வமாக? 57 00:04:39,071 --> 00:04:40,822 எமன் உங்களிடம் வந்து, 58 00:04:40,822 --> 00:04:43,116 "நீ உன் உயிரைக் கொடுக்காவிட்டால், 59 00:04:43,116 --> 00:04:46,411 நீ காதலிக்கும் நபரின் உயிரைப் பறிக்கப் போகிறேன்" என்று சொல்லும் அளவுக்கு. 60 00:04:49,248 --> 00:04:52,042 நான் என் உயிரைக் கொடுத்திருப்பேன். ரேச்சலுக்காக. 61 00:04:54,920 --> 00:04:56,797 அவளுடைய நினைவாக எஞ்சியிருப்பது ஒலிவியாதான். 62 00:04:58,298 --> 00:05:02,511 நான் என் மகளைப் பற்றி கவலைப்படவில்லை என்று நீ நினைத்தால், தொலைந்துபோ, 63 00:05:03,262 --> 00:05:05,264 பிறகு நாசமாய்போ, தொலைந்துபோ. 64 00:05:05,264 --> 00:05:08,517 உன் காபிக்கும் நானே பணம் செலுத்துகிறேன். 65 00:05:09,226 --> 00:05:10,227 நன்றி. 66 00:05:13,772 --> 00:05:17,067 அவன் எதையோ மறைக்கிறான். அல்லது குறைந்தபட்சம் கோபப்படுத்திவிட்டேன். 67 00:05:18,735 --> 00:05:21,947 அதாவது, தொலைந்துபோ என்று சொல்வது பொதுவாக முன்னேற்றத்தின் அறிகுறி. 68 00:05:52,394 --> 00:05:55,147 டேவி சீகலும் அவனுடைய வலதுகரமான கென்னியும். 69 00:05:59,985 --> 00:06:01,778 - வேகமாகச் செய்வோம், என்ன? - ஆம். 70 00:06:03,113 --> 00:06:04,781 - நீ இங்கே தேடுகிறாயா? - படுக்கையறையில் தேடு. 71 00:06:07,201 --> 00:06:10,162 ஹேய், அந்த ஒட்டு கேட்கும் சாதனத்தைப் பொருத்து. 72 00:06:10,162 --> 00:06:11,121 சரி. 73 00:06:11,121 --> 00:06:14,249 தனது சகோதரியைக் கண்டுபிடிக்க பணியமர்த்தப்பட்டவரை உளவு பார்ப்பது. 74 00:06:14,249 --> 00:06:17,711 அவன் ஏன் அப்படிச் செய்கிறான்? அவன் எதற்கு பயப்படுகிறான்? 75 00:06:19,379 --> 00:06:20,380 ஹேய்... 76 00:06:21,298 --> 00:06:22,341 எதாவது கிடைத்ததா? 77 00:06:22,341 --> 00:06:26,011 ஆம், ஆனால்... வெறும் வினோதமான மாத இதழ்கள்... 78 00:06:26,011 --> 00:06:27,095 ...என்னவோ. இல்லை... 79 00:06:27,095 --> 00:06:28,263 பர்ஸ் இல்லை. இல்லை... 80 00:06:28,263 --> 00:06:30,933 - அவர்கள் முட்டாள்களாக இருப்பது உதவும். - பொறு. சில கடிதங்கள் கிடைத்தன. 81 00:06:30,933 --> 00:06:33,101 அவற்றை இங்கே கொண்டுவாருங்கள். சில புகைப்படங்கள் எடுக்கிறேன். 82 00:06:34,853 --> 00:06:39,525 இது எப்போதும் வேடிக்கையாக இருக்காது, ஆனால் முன்னேற்றமடைய உதவும். 83 00:06:40,108 --> 00:06:42,694 - சினிமா வெறியனாக இருக்கிறான். - ஹேய், ஹெலன். நான்தான். 84 00:06:42,694 --> 00:06:45,030 - ஆம், சரிதான். - யாரோ உன்னை அழைப்பார்கள். 85 00:06:45,030 --> 00:06:46,698 அவர்கள் என் அம்மாவிடம் பேச விரும்புவார்கள். 86 00:06:46,698 --> 00:06:48,283 அது நீதான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 87 00:06:49,409 --> 00:06:50,786 கடிதங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. 88 00:06:52,538 --> 00:06:54,706 அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். 89 00:06:58,210 --> 00:07:01,255 டேவி வருவதை என்னால் பார்க்க முடிந்ததால், அவன் ஆபத்தானவன் அல்ல என்று அர்த்தம் இல்லை. 90 00:07:01,255 --> 00:07:04,049 ஒரு விஷயத்திற்காக, என் கடந்த காலத்தை அவன் தோண்டுவதை என்னால் அனுமதிக்க முடியாது. 91 00:07:04,049 --> 00:07:05,968 இல்லை, அதை ஏற்றுக்கொள்ள முடியாது. 92 00:07:05,968 --> 00:07:09,596 பெர்னி உதவில்லை, டேவிக்கு பெர்னியே பரவாயில்லை என்பதோடு, 93 00:07:09,596 --> 00:07:12,266 ஒலிவியாவின் நண்பர்களிடம் பேசினால் சில விஷயங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். 94 00:07:12,266 --> 00:07:14,184 திரைப்படங்களில் வருவது போல. 95 00:07:14,184 --> 00:07:16,270 நாங்கள் முதல்முறையாக போதையேற்றியது, ஆறாம் வகுப்பில். 96 00:07:16,270 --> 00:07:17,604 ஆறாம் வகுப்பிலா? அப்போது வயது என்ன? 97 00:07:17,604 --> 00:07:18,939 - 11. - ஆஹா. 98 00:07:18,939 --> 00:07:21,942 ஆனால் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நாங்கள் அவளைப் பார்க்கவில்லை. 99 00:07:22,651 --> 00:07:23,652 அவள் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதாலா? 100 00:07:23,652 --> 00:07:25,654 அவள் போதை பழக்கத்திலிருந்து விடுபட்டதாக ஏன் நினைக்கிறாய்? 101 00:07:25,654 --> 00:07:28,949 அவள் யாரையும் விட அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்தினாளா அல்லது அதிகமாக குடித்தாளா? 102 00:07:28,949 --> 00:07:33,245 ஆம். அவள் கொஞ்சம் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தாள் என்று நினைக்கிறேன். 103 00:07:33,245 --> 00:07:36,248 - நீ சொல்வது உறுதியா? - அவள் போதையில் இருப்பதைப் பார்த்திருக்க வேண்டும். 104 00:07:36,248 --> 00:07:39,084 பெரும்பாலானவர்களை ஜெயிலில் தள்ளக்கூடிய சில விஷயங்களை அவள் செய்தாள். 105 00:07:39,084 --> 00:07:40,043 என்ன மாதிரி? 106 00:07:40,043 --> 00:07:42,337 - நிறைய போதைப்பொருட்கள். - சரி. 107 00:07:42,337 --> 00:07:44,840 ஆனால் அவளை ஒருவிதத்தில் பயமுறுத்திய வாழ்க்கையை புரட்டிப்போடும் 108 00:07:44,840 --> 00:07:46,800 ஒரு தருணம் வந்தது என்று நினைக்கிறேன். 109 00:07:48,218 --> 00:07:51,221 அவளுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? காதலர்கள்? 110 00:07:51,972 --> 00:07:52,806 இல்லை. 111 00:07:52,806 --> 00:07:54,349 நீ என்னிடம் பொய் சொல்லவில்லை, சரிதானே? 112 00:07:55,058 --> 00:07:56,727 அவள் இவனுடன் இருந்தது நினைவிருக்கிறதா? 113 00:07:56,727 --> 00:07:58,145 இல்லை, எனக்கு ஞாபகமில்லை. 114 00:07:58,145 --> 00:07:59,730 வழக்கமான எதுவும் இல்லையா? அவளோடு பழகுபவர்? 115 00:07:59,730 --> 00:08:01,565 - நாங்கள் பார்ட்டி நடத்திய விதத்தில் இல்லை. - ஓ, அப்படியா? 116 00:08:01,565 --> 00:08:04,651 ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவன். அது எப்படி போகும் என்று உங்களுக்கே தெரியும். 117 00:08:05,319 --> 00:08:07,279 எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் நீ சொல்வதை நம்புகிறேன். 118 00:08:07,279 --> 00:08:08,322 {\an8}கொலை குற்றத்துக்காக தேடப்படும் நபர் 119 00:08:08,322 --> 00:08:09,990 - ஹேய். ஜான் ஷுகர். - ஹேய். 120 00:08:09,990 --> 00:08:11,533 இவனோடு அவளை எப்போதாவது பார்த்திருக்கிறாயா? 121 00:08:11,533 --> 00:08:13,160 - இவனைப் பார்த்ததில்லை. - நிச்சயமாகவா? 122 00:08:13,160 --> 00:08:17,497 நிச்சயமாக. அவள் என்னிடம் மட்டுமே வாங்குவாள். அவள் நீண்ட நாட்களாக வாங்கவில்லை. 123 00:08:17,998 --> 00:08:20,792 - மாதங்களா, வாரங்களா? நீண்ட நாட்கள் என்றால்? - தெரியவில்லை. குறைந்தது ஒரு வருடம். 124 00:08:21,919 --> 00:08:24,546 நீங்கள் எப்படி? இன்னும் போதைப்பொருள் பயன்படுத்துகிறீர்களா? என்ன நடக்கிறது? 125 00:08:26,089 --> 00:08:27,424 நான் என் பட்டப்படிப்பை முடிக்கிறேன். 126 00:08:27,424 --> 00:08:29,134 - நான்... நான் கட்டுப்பாட்டோடு இருக்கிறேன். - நீ? 127 00:08:29,134 --> 00:08:30,844 - நீ? - கருத்து சொல்ல விரும்பவில்லை. 128 00:08:30,844 --> 00:08:31,803 நான் நினைத்தேன். 129 00:08:31,803 --> 00:08:35,224 சரி. வேறு ஏதாவது நினைத்தால், இந்த எண்ணை அழை. நன்றி. 130 00:08:35,224 --> 00:08:37,601 - நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. சரி. - ஆம். நிச்சயமாக. 131 00:08:37,601 --> 00:08:40,479 ஒலிவியா பழைய வாழ்க்கையிலிருந்து நிஜமாகவே நகர்ந்துவிட்டதைப் போல தெரிகிறது. 132 00:08:40,479 --> 00:08:41,563 அது ஒரு நல்ல செய்தி. 133 00:08:42,606 --> 00:08:45,108 கெட்ட செய்தி அவளுடைய புதிய வாழ்க்கை, 134 00:08:45,108 --> 00:08:48,487 அது எப்படியோ அவளை இன்னும் மோசமான சிக்கலில் மாட்டிவிட்டதாகத் தெரிகிறது. 135 00:08:49,821 --> 00:08:53,784 ஜோனாதன் சீகலிடம் தகவலை தெரிவிக்க வேண்டிய நேரம் இது. அவரிடமும் சில கேள்விகள் இருக்கின்றன. 136 00:08:55,494 --> 00:08:58,205 "தி பாய் இன் தி கார்னர்" பெரும் வெற்றி பெற்றது. நிஜமாகவே. 137 00:08:58,789 --> 00:09:00,832 "தி மேன் இன் தி கார்னரும்" பெரும் வெற்றியாக இருக்கும். 138 00:09:00,832 --> 00:09:04,044 இது டேவிட்டின் பெரிய மறுபிரவேசம், எதுவும் அதை மாற்றப் போவதில்லை. 139 00:09:05,337 --> 00:09:10,717 அந்த செய்திக்கட்டுரை வெளிவந்தால், எந்த ஸ்டுடியோவும் இந்தப் படத்தை வெளியிடாது, 140 00:09:10,717 --> 00:09:12,886 உங்களுக்கு 60 மில்லியன் டாலர் நஷ்டமாகும். 141 00:09:13,554 --> 00:09:15,806 பெர்னி, பட தயாரிப்பின் முக்கிய விதியை மீறிவிட்டீர்கள். 142 00:09:15,806 --> 00:09:17,099 உங்கள் சொந்த பணத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். 143 00:09:17,599 --> 00:09:19,476 அந்த கட்டுரை வெளியே வராது, சரியா? 144 00:09:19,476 --> 00:09:24,231 இல்லை. பாதிக்கப்பட்ட எட்டு பேரில் ஏழு பேருடன் கண்டிப்பான ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். 145 00:09:24,231 --> 00:09:25,357 "பாதிக்கப்பட்டவர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதே. 146 00:09:25,357 --> 00:09:29,069 ஆனால் எனக்குக் கவலை தருவது எட்டாவதாக குற்றம்சாட்டுபவள்தான். 147 00:09:29,069 --> 00:09:31,947 அவள் தொல்லைக் கொடுப்பவள், ஆனால் அதை சமாளிப்போம். என்னை நம்பு. 148 00:09:31,947 --> 00:09:33,866 எப்படியோ, அவள் நம் வழிக்கு வருவாள். 149 00:09:34,366 --> 00:09:37,286 சரி, மற்ற ஏழு பேரும் நீங்கள் தாராளப் பிரபு என்று நினைக்கிறார்கள். 150 00:09:37,286 --> 00:09:41,081 பொறுங்கள். பெர்னி, டேவி குற்றவாளி என்று சொல்கிறீர்களா? 151 00:09:41,081 --> 00:09:42,499 நான் அப்படிச் சொன்னேனா, அன்பே? 152 00:09:42,499 --> 00:09:44,543 - இவர் அப்படிச் சொல்லவில்லை. - அது டேவிட். 153 00:09:44,543 --> 00:09:46,211 எட்டாவது நபர் நம் வழிக்கு வரவில்லை என்றால்? 154 00:09:46,211 --> 00:09:48,797 இல்லை என்றால், அது வதந்தி என்று சொல்லி, அவளை நீதிமன்றத்துக்கு இழுப்போம். 155 00:09:48,797 --> 00:09:50,132 நாம் சமாளிப்போம். 156 00:09:50,132 --> 00:09:51,842 "பாதிக்கப்பட்டவர்" என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். 157 00:09:51,842 --> 00:09:53,719 "பாதிக்கப்பட்டவர்" என்ற வார்த்தையை யாரும் பயன்படுத்த வேண்டாம். 158 00:09:54,219 --> 00:09:57,181 - சரி, என்ன யோசிக்கிறாய், ஜான்? - தெரியவில்லை. 159 00:09:57,181 --> 00:09:59,933 அதாவது, இந்த சீகல் குடும்பம் குறிப்பிடத்தக்கது. 160 00:10:01,185 --> 00:10:02,769 சரி. ஏன்? 161 00:10:03,395 --> 00:10:04,980 - உங்களுக்கு ஒரு பானம் வேண்டுமா? - இல்லை, நன்றி. 162 00:10:05,689 --> 00:10:08,525 - மீண்டும் ஜோனாதனைப் பார்க்கச் சென்றேன். - ஓ, ஆஹா. அதனால்? 163 00:10:09,401 --> 00:10:12,279 நாம் கடைசியாக பேசியதிலிருந்து, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சிலரை சந்தித்தேன். 164 00:10:12,279 --> 00:10:16,283 அதற்காக வருந்துகிறேன். நான் யூகிக்கறேன். பெர்னி. 165 00:10:17,242 --> 00:10:19,328 ஆம். ஒலிவியா காணாமல் போனது பற்றிய உங்கள் கவலை 166 00:10:19,328 --> 00:10:21,622 - அவருக்கு இல்லை. - நிச்சயமாக, அவனுக்கு இருக்காது. 167 00:10:21,622 --> 00:10:22,748 - நிஜமாகவா? - நிஜமாகத்தான். 168 00:10:22,748 --> 00:10:26,251 ஆம், நாங்கள் காலை உணவு சாப்பிடும்போது அவன் தன்னுடைய மகன் டேவியையும் 169 00:10:26,251 --> 00:10:28,003 அவனுடைய பாதுகாவலனையும் அனுப்பி 170 00:10:28,003 --> 00:10:30,005 - என் ஹோட்டல் அறையில் தேடியிருக்கிறான். - அடக் கடவுளே. 171 00:10:30,005 --> 00:10:33,008 ஒலிவியா தவறு செய்பவள். அவள் எப்போதும் அப்படித்தான் செய்வாள். 172 00:10:33,008 --> 00:10:35,552 அதுதான் பெர்னிக்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. 173 00:10:36,053 --> 00:10:39,640 அவன் மோசமான திரைப்படங்களை தயாரிப்பதிலும், முட்டாள் மகன் மீதும் கவனம் செலுத்தட்டும். 174 00:10:41,683 --> 00:10:43,227 நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது, இல்லையா? 175 00:10:44,478 --> 00:10:46,230 பெர்னியின் எல்லா படங்களும் மோசமானவை இல்லை. 176 00:10:46,813 --> 00:10:47,981 அச்சச்சோ. 177 00:10:48,857 --> 00:10:51,485 டேவிட், மார்கிட் சோரன்சென் பெற்ற பெர்னியின் மகனா? 178 00:10:51,985 --> 00:10:53,237 - நீங்கள் அவளை இன்னும் சந்தித்ததில்லையா? - இல்லை. 179 00:10:54,404 --> 00:10:59,952 சுயநலத்துக்கு முன்னுதாரணமான இன்னொருவர். மோசமான பெண். 180 00:11:01,328 --> 00:11:04,581 உங்களுடையது மிக நெருக்கமான குடும்பம் அல்ல என்று தோன்றுகிறது. 181 00:11:08,168 --> 00:11:09,169 சரி... 182 00:11:12,548 --> 00:11:14,174 எங்களுக்கு சொந்தக் காரணங்கள் இருக்கின்றன. 183 00:11:18,345 --> 00:11:20,347 ஜான், எனக்குக் கொஞ்சம் உதவுகிறாயா? 184 00:11:22,349 --> 00:11:26,812 சரி, என் பேத்தியைத் தவிர எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டதாகத் தெரிகிறது. 185 00:11:27,646 --> 00:11:29,481 பொறுமையாக இருந்ததற்கு நன்றி. 186 00:11:29,481 --> 00:11:30,816 மன்னித்துவிடு. 187 00:11:30,816 --> 00:11:34,319 இது ஒலிவியாவின் காரில் இருந்த GPS-இன் பதிவு. 188 00:11:34,319 --> 00:11:36,154 அட. 189 00:11:36,154 --> 00:11:37,489 ஜான், உட்கார். 190 00:11:37,990 --> 00:11:40,534 ம், அவள் காணாமல் போனதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 191 00:11:40,534 --> 00:11:43,161 எனக்குக் கவலையை ஏற்படுத்திய ஒரு இடத்திற்கு அவள் திரும்ப திரும்ப சென்றதை கண்டுபிடித்தேன். 192 00:11:43,662 --> 00:11:46,331 இந்த முகவரியில் வசித்து வந்த பெண், கார்மென் வேஸ்கஸ், 193 00:11:46,331 --> 00:11:47,708 சமீபத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். 194 00:11:47,708 --> 00:11:50,794 செல்வி. வேஸ்கஸ் கொல்லப்பட்ட அன்று இரவு ஒலிவியாவின் கார் அங்கே இருந்திருக்கிறது. 195 00:11:50,794 --> 00:11:53,630 இதற்கும் செல்வி. வேஸ்கஸைக் கொன்றவனின் மரணத்திற்கும் 196 00:11:53,630 --> 00:11:55,340 ஏதாவது தொடர்பு இருக்கலாம். 197 00:11:55,340 --> 00:11:56,633 ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? 198 00:11:57,885 --> 00:12:00,971 ஏனென்றால் அவனுடைய சடலம் இப்போது ஒலிவியாவின் கார் டிக்கியில் இருக்கிறது. 199 00:12:04,892 --> 00:12:05,893 ச்சே. 200 00:12:09,438 --> 00:12:10,814 கிளிஃபோர்ட் கார்ட்டர். 201 00:12:11,356 --> 00:12:13,650 அடிதடி, வன்புணர்வு, ஆள் கடத்தலுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறான். 202 00:12:13,650 --> 00:12:14,735 ஜான். 203 00:12:14,735 --> 00:12:17,529 காணாமல் போன ஹாலிவுட் பிரபலத்தின் காரில் இப்போது இறந்து கிடக்கிறான். 204 00:12:18,030 --> 00:12:19,281 உட்கார். 205 00:12:21,033 --> 00:12:22,576 கொலை செய்யப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டால் 206 00:12:22,576 --> 00:12:25,037 போலீசில் புகார் செய்ய கடமைப்பட்டிருக்கிறேன், திரு. சீகல். 207 00:12:25,037 --> 00:12:26,997 ஆனால் நீங்கள் செய்யவில்லை, இல்லையா? 208 00:12:29,875 --> 00:12:32,586 நான் அந்த காரின் டிக்கியை திறக்காதது போல இருக்கப் போகிறேன். 209 00:12:32,586 --> 00:12:34,171 நான் அதை பாராட்டுவேன். 210 00:12:34,171 --> 00:12:36,798 ஆனாலும், அவளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தோன்றுகிறது. 211 00:12:37,299 --> 00:12:38,926 - கடவுளே. - ஆம். 212 00:12:38,926 --> 00:12:40,010 ஜான். 213 00:12:40,677 --> 00:12:43,388 நிறைய நடக்கிறது. அது... இந்த மக்கள், இந்த இடங்கள். 214 00:12:43,388 --> 00:12:44,848 நான் இப்போது கண்டுபிடித்திருக்க வேண்டும்... 215 00:12:44,848 --> 00:12:47,267 - உட்கார். - ...ஆனால் வழக்கு பெரிதாகிக்கொண்டே போகிறது. 216 00:12:47,267 --> 00:12:48,435 எனக்கு கேள்வி என்னவென்றால், 217 00:12:48,435 --> 00:12:50,479 ஒலிவியா காணாமல் போனதற்கும் இதே நேரத்தில் நடக்கும் 218 00:12:50,479 --> 00:12:55,484 - மற்றவைக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்குமோ... - சரி. அதைத்தான் சொல்கிறேன். 219 00:12:57,486 --> 00:12:58,570 என்ன? 220 00:13:00,113 --> 00:13:02,366 ஒன்றுமில்லை. உன்னை மிஸ் செய்தேன், ஷுகர். 221 00:13:03,742 --> 00:13:04,743 நானும் உன்னை மிஸ் செய்தேன். 222 00:13:05,410 --> 00:13:07,829 ஆம். அதனால்தான் நாம் ஒருவரோடு ஒருவர் நேரம் செலவு செய்வது 223 00:13:07,829 --> 00:13:10,832 நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். 224 00:13:10,832 --> 00:13:13,544 - வழக்கு. சரி. - அதைச் செய்வோமா? நாம் சும்மா ஒருவரோடு ஒருவர் 225 00:13:13,544 --> 00:13:14,962 - இருப்பதை அனுபவித்துக்கொண்டே... - நிச்சயமாக. 226 00:13:14,962 --> 00:13:16,547 - ...சாப்பிடுவோமா? - நிச்சயமாக. நாம்... 227 00:13:17,047 --> 00:13:18,715 - முயற்சி செய்து பார்ப்போமா? - சரி. 228 00:13:23,929 --> 00:13:25,013 இது ஒரு நல்ல யோசனை. 229 00:13:25,514 --> 00:13:26,765 மதிய உணவு. 230 00:13:28,851 --> 00:13:31,478 - எப்படி இருக்கிறாய்? - நன்றாக. பரபரப்பாக. 231 00:13:31,478 --> 00:13:34,314 உன்னைப் பார். பிரமாதமான சமையல்காரி. 232 00:13:34,314 --> 00:13:35,649 இப்போது 15-க்கும் மேற்பட்டவர்களை நிர்வகிக்கிறாயா? 233 00:13:35,649 --> 00:13:36,984 சமையல் செய்யப்படவில்லை என்றாலும். 234 00:13:36,984 --> 00:13:39,444 - பத்தொன்பது. - ஆஹா, 19, இல்லையா? 235 00:13:39,444 --> 00:13:40,821 வருகிறேன், மிரெம்பே. 236 00:13:42,739 --> 00:13:45,242 மறப்பதற்குள் சொல்லிவிடுகிறேன், ஏற்கனவே சார்லியை அழைத்தேன், 237 00:13:45,242 --> 00:13:48,954 - கண்காணிப்புக்கு உதவ. - ஆஹா. என்னிடம் கலந்தாலோசிக்காமலா? 238 00:13:49,788 --> 00:13:50,789 முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டேன். 239 00:13:51,373 --> 00:13:55,210 முன்னெச்சரிக்கை. சரி. நினைவிருக்கட்டும், நீ அதிகம் கவனத்தை ஈர்க்கக்கூடாது. 240 00:13:55,210 --> 00:13:56,837 எனக்குத் தெரியும். 241 00:14:01,633 --> 00:14:03,260 சரி. அது எவ்வளவு அடிக்கடி நடக்கிறது? 242 00:14:04,678 --> 00:14:06,013 ஒன்றுமில்லை. 243 00:14:06,013 --> 00:14:07,639 டாக்டர் விக்கர்ஸை அழைத்தாயா? 244 00:14:07,639 --> 00:14:09,933 - அதைப் பற்றி யோசித்தேன். - ஜான். 245 00:14:09,933 --> 00:14:12,853 நாளை சந்திப்பில் அவரைப் பார்க்கிறேன். அப்போது அவரிடம் பேசுவேன். சரியா? 246 00:14:12,853 --> 00:14:15,230 இல்லை, சரியில்லை. இன்று அவரை அழை. 247 00:14:19,526 --> 00:14:22,070 நன்றாக இருக்கிறது. மதிய உணவுக்கு நன்றி. 248 00:14:25,240 --> 00:14:28,243 ரூபி கவலைப்படுவாள், அதற்காகவே எனக்கு அவளைப் பிடிக்கும். 249 00:14:29,286 --> 00:14:30,495 ஆனால் எனக்கு வேலை இருக்கிறது. 250 00:14:32,122 --> 00:14:35,209 இப்போது ஒலிவியாவைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பு மெலனி மேத்யூஸ்தான், 251 00:14:35,209 --> 00:14:39,213 அவள் அழைத்து, சந்திக்க விரும்புவதாகச் சொன்னதால் அது வசதியாகப் போய்விட்டது. 252 00:14:40,881 --> 00:14:42,424 ஹாய், நான் மெலனி. 253 00:14:42,424 --> 00:14:44,051 ஹாய், மெலனி. 254 00:14:44,051 --> 00:14:45,344 நான் குடிக்கு அடிமையானவள். 255 00:14:46,845 --> 00:14:48,889 நான் நீண்ட காலமாக கூட்டத்திற்கு வரவில்லை. 256 00:14:48,889 --> 00:14:54,603 அதாவது மிக நீண்ட காலமாக. நான் 23 வருடங்கள் குடிக்காமல் இருந்தேன். 257 00:14:56,855 --> 00:14:59,358 ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதிகமாக குடிக்க ஆரம்பித்தேன். 258 00:15:00,859 --> 00:15:04,530 ஆனால் அது எல்லாம் முடிந்துவிட்டது நேற்று இரவோடு. 259 00:15:04,530 --> 00:15:08,492 ஏனென்றால் நேற்று இரவு நான் ஒரு அந்நியரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன், 260 00:15:08,492 --> 00:15:13,038 என் 20-களில் இருந்து நான் செய்யாத ஒன்று அது. 261 00:15:15,040 --> 00:15:19,336 ஆனால் நான் போதையில் இருந்ததால், நான் ஒரு அந்நியரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். 262 00:15:24,299 --> 00:15:27,052 நாம் குடிப்பதற்கான காரணம் எளிமையானது என்று நினைக்கிறேன். 263 00:15:28,095 --> 00:15:29,847 - அவர்கள் தனிமையில் இருப்பார்கள். - நாம் தனிமையில் இருக்கிறோம். 264 00:15:34,893 --> 00:15:36,228 அதோடு பயப்படுகிறோம். 265 00:15:39,439 --> 00:15:41,942 இங்கே நாம் நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் திறன் கொண்ட 266 00:15:41,942 --> 00:15:45,237 லட்சக்கணக்கான மக்கள் வாழும் உலகில் வாழ்கிறோம், இருந்தாலும் எப்படியோ... 267 00:15:47,197 --> 00:15:49,241 ...நம்மால் கட்டுப்பாட்டோடு இருக்க முடிவதில்லை. 268 00:15:49,241 --> 00:15:51,660 அது நாம் பயப்படுவதால்தான் என்று நினைக்கிறேன். 269 00:15:53,370 --> 00:15:57,457 கடந்த காலத்தில் நாம் பாதிக்கப்பட்டோம், மீண்டும் பாதிக்கப்பட விரும்பவில்லை. 270 00:15:57,457 --> 00:16:01,295 அதனால்... நாம் தடம்மாறிச் சென்று, 271 00:16:03,005 --> 00:16:05,007 மோசமான முடிவுகளை எடுத்து, 272 00:16:05,007 --> 00:16:07,384 நமக்கு கிடைக்கக் கூடிய எந்த வகையான உறவுகளோடும் இருந்துவிடுகிறோம். 273 00:16:10,470 --> 00:16:12,139 ஆனால் நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா? 274 00:16:13,640 --> 00:16:16,518 அவர் என்னைக் காயப்படுத்தவில்லை. அவர் என்னிடமிருந்து திருடவில்லை. 275 00:16:16,518 --> 00:16:21,273 அந்த நேரத்தில் எனக்கு வேண்டும் என்று சொன்னாலும், அவர் என்னோடு உடலுறவுகொள்ளவில்லை. 276 00:16:22,983 --> 00:16:24,109 இல்லை. அவர் என்ன செய்தார் தெரியுமா? 277 00:16:26,737 --> 00:16:28,530 அவர் என்னை கவனித்துக்கொண்டார். 278 00:16:30,574 --> 00:16:34,620 அவர் என்னைத் தூங்கவைத்துவிட்டு பிறகு கிளம்பிவிட்டார். 279 00:16:35,412 --> 00:16:38,790 நான் வேலை செய்துகொண்டிருந்தேன். இன்னும் செய்துகொண்டிருக்கிறேன். 280 00:16:40,042 --> 00:16:42,127 அதோடு இன்று காலை நான் எழுந்தபோது, 281 00:16:42,127 --> 00:16:43,879 இந்த மனிதர் கடவுளால் என்னிடம் 282 00:16:43,879 --> 00:16:47,382 அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியம் அதிர்ச்சியளித்தது. 283 00:16:49,301 --> 00:16:50,844 அல்லது அவர் ஒரு நல்ல நபராக இருக்கலாம். 284 00:16:53,138 --> 00:16:54,640 அல்லது ஓரினச்சேர்க்கையாளராக. 285 00:16:58,519 --> 00:17:02,773 ஆனால், அவர் என்னவாக இருந்தார் அல்லது இருக்கிறார் என்பது முக்கியமல்ல. 286 00:17:04,191 --> 00:17:06,527 அவர் என்னை எப்படி உணர வைத்தார் என்பதுதான் முக்கியம், 287 00:17:06,527 --> 00:17:11,615 அதோடு நான் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவள் என்று அவர் என்னை உணர வைத்தார். 288 00:17:12,241 --> 00:17:14,159 எனவே, நன்றி. 289 00:17:23,877 --> 00:17:24,962 {\an8}வந்ததற்கு நன்றி. 290 00:17:25,587 --> 00:17:26,588 அழைத்ததற்கு நன்றி. 291 00:17:27,297 --> 00:17:29,383 - நீ ஒலிவியாவைப் பற்றி பேச வேண்டுமா? - ஆம். 292 00:17:29,883 --> 00:17:32,803 எனக்கு இன்னும் போதை தெளியவில்லை. உணவு வேண்டுமா? 293 00:17:32,803 --> 00:17:34,263 - நிச்சயமாக. - என்னை அழைத்துச் செல்ல முடியுமா? 294 00:17:34,263 --> 00:17:35,347 - ம். - நல்லது. 295 00:17:40,686 --> 00:17:44,565 நான் எழுந்தவுடன், எல்லா மதுவையும் கொட்டிவிட்டேன், அதனால் சோடாதான் இருக்கிறது. 296 00:17:44,565 --> 00:17:46,650 - பரவாயில்லை. - ஆம், தெரியும். 297 00:17:46,650 --> 00:17:47,860 உனக்கு போதையே ஏறாது. 298 00:17:49,278 --> 00:17:51,697 - நீ நினைவு வைத்திருக்கிறாய். - ஆம், அதை எப்போதும் மறக்கமாட்டேன். 299 00:17:53,949 --> 00:17:57,327 எனவே, நேற்று, நீ என்னைப் பின்தொடர்ந்திருக்கிறாய், ஜான் ஷுகர்... 300 00:17:57,327 --> 00:18:01,290 - இல்லை. இல்லை, தற்செயல் நிகழ்வு. - ...தனியார் புலனாய்வாளர்? இல்லையா? 301 00:18:01,290 --> 00:18:04,001 நான் வேறொரு விஷயத்தை விசாரித்துக்கொண்டிருந்தேன். 302 00:18:04,001 --> 00:18:05,169 இதை. 303 00:18:05,711 --> 00:18:06,837 - ஆம், அதுதான். - ஆம். 304 00:18:06,837 --> 00:18:09,673 நீ ஒலிவியாவைப் பற்றி பேச விரும்பினால், கேட்டிருக்கலாம். 305 00:18:09,673 --> 00:18:12,301 நேற்றிரவு நீ சொன்ன எல்லாவற்றையும் நம்பியிருப்பேனா என்று தெரியவில்லை. 306 00:18:12,301 --> 00:18:14,720 இதை சொல்வதை வெறுக்கிறேன். குடிபோதையில், நான் ஒரு திறந்த புத்தகம். 307 00:18:14,720 --> 00:18:16,096 போதையில் இல்லாதபோது, என்னிடம் ஒரு வார்த்தையை வாங்க முடியாது. 308 00:18:16,972 --> 00:18:19,057 ஒலிவியா என்று வரும்போதுகூட எதுவும் சொல்லமாட்டாய் என்று நினைக்கிறாயா? 309 00:18:19,057 --> 00:18:20,142 நான் அப்படிச் சொல்லவில்லை. 310 00:18:20,142 --> 00:18:21,435 நான் ஒரு கேள்வி கேட்கலாமா? 311 00:18:21,977 --> 00:18:24,980 அவள் காணாமல் போனதற்கு முந்தைய வாரத்தின் ஒவ்வொரு இரவும் அவள் ஏன் இங்கே வந்தாள்? 312 00:18:25,564 --> 00:18:27,065 எதை வைத்து அவள் இங்கே வந்தாள் என்று நினைக்கிறாய்? 313 00:18:27,065 --> 00:18:29,026 - அவள் இங்கே வந்தது எனக்குத் தெரியும். - எப்படித் தெரியும்? 314 00:18:29,526 --> 00:18:31,820 அவளுடைய காரின் GPS அமைப்பில் அது இருக்கிறது. 315 00:18:31,820 --> 00:18:33,614 அவள்தான் ஓட்டி வந்தாள் என்று உனக்கு எப்படித் தெரியும்? 316 00:18:33,614 --> 00:18:35,949 ஒரு நண்பர் காரை ஓட்டி வந்திருக்கலாம், இல்லையா? 317 00:18:37,284 --> 00:18:38,410 அதுதான் நடந்ததா? 318 00:18:43,498 --> 00:18:45,334 இதைத்தான் நீ எதையும் வாங்க முடியாது என்றாய், இல்லையா? 319 00:18:49,379 --> 00:18:52,674 ஒலிவியாவின் பெரும்பாலான சமூக ஊடகங்களின் கடந்த ஆறு மாத பதிவுகளை 320 00:18:52,674 --> 00:18:53,759 பார்த்துவிட்டேன். 321 00:18:53,759 --> 00:18:55,969 பெரும்பாலானவை மிகவும் சாதாரணமான விஷயம், ஆனால் நீங்கள் 322 00:18:56,887 --> 00:18:59,473 இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவழிக்க தொடங்கியவுடன் அது மாறியது. 323 00:19:00,766 --> 00:19:02,017 அவளுடைய கவனம், அது மாறியது. 324 00:19:02,017 --> 00:19:04,811 - அது பெண்ணுரிமை பிரச்சினைகளுக்கு மாறியது. - என்ன... அதில் என்ன தவறு? 325 00:19:04,811 --> 00:19:06,313 இல்லை, இல்லை... தவறு இல்லை. 326 00:19:06,897 --> 00:19:09,983 அவளுக்கு ஆர்வமூட்டும் ஒன்றை இறுதியாகக் கண்டுபிடித்தாள் என்று நினைக்கிறேன். 327 00:19:11,401 --> 00:19:13,737 ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவள் காணாமல் போனபோது, 328 00:19:13,737 --> 00:19:15,906 அவளுடைய ஆன்லைன் இருப்பும் மறைந்துவிட்டது, அதுதான் கவலையளிக்கிறது. 329 00:19:15,906 --> 00:19:18,700 போதைக்கு அடிமையானவர் பற்றி பேசும்போது, நடத்தை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கும். 330 00:19:18,700 --> 00:19:21,912 அவள் ஒருவேளை மீண்டும் போதைப்பொருள் பயன்படுத்தலாம். பார், நான்... 331 00:19:21,912 --> 00:19:23,956 அவள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம், 332 00:19:23,956 --> 00:19:28,335 ஹேங்ஓவரில், சோர்வாக, மீண்டும் மறுவாழ்வு மையத்துக்கு செல்ல தயாராக. 333 00:19:29,920 --> 00:19:30,921 அது வேடிக்கையானது. 334 00:19:31,797 --> 00:19:33,632 உன் முன்னாள் கணவர் இன்று காலை என்னிடம் இதையேதான் சொன்னான், 335 00:19:33,632 --> 00:19:35,551 கிட்டத்தட்ட அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி. 336 00:19:37,010 --> 00:19:40,055 நிச்சயமாக, சொன்னான். பொதுவான நலனைப் பாதுகாப்பதில் ஒரே மாதிரி. 337 00:19:40,055 --> 00:19:42,850 ஆம், சரி, நீ அவருடன் காலை உணவு சாப்பிட்ட பிறகு என்னை அழைத்தார். 338 00:19:43,934 --> 00:19:47,312 பெர்னி ஒரு மோசமான கணவர், ஆனால் எப்போதும் ஒரு நல்ல நண்பர். 339 00:19:47,312 --> 00:19:48,480 - அப்படியா? - ஆம். 340 00:19:50,774 --> 00:19:53,861 - முடியை ஒதுக்குவது, அது சொல்லிவிடும். - இதைப் பார். 341 00:19:54,611 --> 00:19:56,822 இவனை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா என்று சொல். 342 00:20:00,158 --> 00:20:02,953 மெலனி, நீ சிக்கலில் இருந்தாலோ ஒலிவியா சிக்கலில் இருப்பது தெரிந்திருந்தாலோ, 343 00:20:02,953 --> 00:20:04,997 என்னால் உதவ முடியும். என்ன நடந்தது என்று மட்டும் சொல். 344 00:20:07,332 --> 00:20:09,459 இவனை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. 345 00:20:09,459 --> 00:20:11,170 - நீ ஏன் இப்படி செய்கிறாய்? - என்ன செய்கிறேன்? 346 00:20:11,170 --> 00:20:13,046 இது. உன்னுடைய சின்ன நடிப்பு. நான்... 347 00:20:14,131 --> 00:20:16,550 நீ பொய் சொல்வது எனக்குத் தெரியும். ஏன் என்றுதான் தெரியவில்லை. 348 00:20:18,218 --> 00:20:19,469 ஒருவேளை நீ எதையாவது மறைக்கலாம். 349 00:20:19,970 --> 00:20:21,180 என்ன மாதிரி? 350 00:20:21,180 --> 00:20:22,347 அவள் எங்கே இருக்கிறாள் என்று. 351 00:20:23,891 --> 00:20:25,809 அல்லது அவள் உடல் எங்கே இருக்கும் என்று. 352 00:20:28,437 --> 00:20:29,438 என் வீட்டைவிட்டு வெளியே போ. 353 00:20:29,438 --> 00:20:34,526 நீ அவளுக்கு உதவுவதாக நினைக்கிறாய், ஆனால் நீ அவளுக்கு நல்லதைவிட அதிகமாக தீமை செய்கிறாய். 354 00:20:34,526 --> 00:20:36,653 - சரி, என் வீட்டைவிட்டு வெளியே போ. - இதை தெளிவுபடுத்திவிடுகிறேன். 355 00:20:36,653 --> 00:20:38,739 நான் ஒலிவியாவைக் கண்டுபிடிப்பேன். 356 00:20:39,698 --> 00:20:41,158 அதுதான் என் வேலையே. 357 00:20:41,825 --> 00:20:43,035 நான் அதில் மிகவும் திறமைசாலி. 358 00:20:47,831 --> 00:20:48,832 இப்போதே. 359 00:21:04,139 --> 00:21:05,140 ஹேய், சார்லி. 360 00:21:05,682 --> 00:21:08,602 அவள் எங்கே என்று அவளுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன், நாளை நம்மை அங்கே அழைத்துச் செல்வாள். 361 00:21:08,602 --> 00:21:10,187 வேனை தயார் செய்வோம், சரியா? 362 00:21:10,771 --> 00:21:12,981 நான் உன்னை காலையில் பார்க்கிறேன். சரி. பை. 363 00:21:23,825 --> 00:21:26,161 திரைப்படங்கள் ஒரு சதித்திட்டம் என்று நினைக்கிறேன். 364 00:21:26,703 --> 00:21:27,746 நிஜமாகவே சொல்கிறேன். 365 00:21:28,372 --> 00:21:32,584 அவை உன்னை ஏமாற்றுவதால் அவை ஒரு சதி, ஃபுளோரன்ஸ். 366 00:21:32,584 --> 00:21:35,629 நீ சிறு குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே அவை உன்னை ஏமாற்றுகின்றன. 367 00:21:36,129 --> 00:21:38,674 நீ எல்லாவற்றையும் நம்புவதற்கு உன்னை ஏமாற்றுகின்றன. 368 00:21:38,674 --> 00:21:45,180 இலட்சியங்கள், வலிமை, நல்ல மனிதர்கள், நிச்சயமாக, அன்பு. 369 00:21:46,807 --> 00:21:51,603 ஆனால் என் வாழ்க்கையில் சார்லஸ் பூயர் இல்லை, ஃபுளோரன்ஸ். 370 00:21:51,603 --> 00:21:55,065 நான் கிளார்க் கேபிளை சந்தித்ததில்லை. நான் ஹம்ப்ரி போகர்ட்டை சந்தித்ததில்லை. 371 00:21:55,065 --> 00:21:56,692 நான் ஒருபோதும்... அவர்களில் யாரையும் சந்தித்ததில்லை. 372 00:21:56,692 --> 00:21:57,985 யாரைச் சொல்கிறேன் என்பது உனக்கே தெரியும். 373 00:21:57,985 --> 00:22:00,487 அதாவது, அவர்கள் நிஜமில்லை, ஃபுளோரன்ஸ். அதுதான் உண்மை. 374 00:22:12,875 --> 00:22:14,001 மீண்டும் அந்த கார். 375 00:22:15,460 --> 00:22:17,004 யாரோ என்னைக் கண்காணிக்கிறார்கள். 376 00:22:17,504 --> 00:22:19,339 அவ்வப்போது, விலகியே இருக்கிறார்கள். 377 00:22:20,674 --> 00:22:23,635 திறமையானவர்கள்தான், ஆனால் நான் அவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறேன். 378 00:22:38,025 --> 00:22:40,527 ஹேய்! 379 00:22:46,241 --> 00:22:47,242 கார்ல்? 380 00:22:48,076 --> 00:22:49,077 வைலி. 381 00:22:50,162 --> 00:22:51,496 ஹேய், யாராவது கார்லை பார்த்தீர்களா? 382 00:22:53,207 --> 00:22:55,751 - உயரமானவன். பொன்னிற முடி. யாராவது? கார்ல். - இல்லை. 383 00:22:57,711 --> 00:22:59,755 - கார்ல்! - இங்கிருந்து போ. 384 00:23:06,053 --> 00:23:07,054 வருந்துகிறோம். 385 00:23:07,054 --> 00:23:08,222 - நீங்கள் துண்டிக்கப்பட்ட... - ச்சே. 386 00:23:08,222 --> 00:23:09,890 - ...எண்ணை அழைத்திருக்கிறீர்கள். - இங்கே வா. 387 00:23:10,682 --> 00:23:13,727 உள்ளே போ. வா. நல்ல நாய். 388 00:23:20,400 --> 00:23:23,403 காண்டாக்ட் ஃபைண்டர் இடத்தைக் கண்டுபிடிக்கிறது... 389 00:23:30,077 --> 00:23:31,662 எனக்குத் தெரியும். 390 00:23:32,454 --> 00:23:33,580 எனக்கு என்ன அக்கறை? 391 00:23:34,373 --> 00:23:35,874 இதில் எனக்கு என்ன வேலை? 392 00:23:37,501 --> 00:23:40,671 ஆம். எனக்கு நானே இதே கேள்வியை அடிக்கடி கேட்டுக்கொள்வேன். 393 00:23:45,801 --> 00:23:46,718 சரி. 394 00:24:38,854 --> 00:24:40,105 அடச்சே, கார்ல். 395 00:24:49,031 --> 00:24:50,407 யார் நீ? 396 00:24:50,407 --> 00:24:51,617 நீ அவனுக்கு என்ன கொடுத்தாய்? 397 00:24:55,662 --> 00:24:56,788 நீ அவனுக்கு என்ன கொடுத்தாய்? 398 00:24:59,041 --> 00:25:00,417 போய்விடு. 399 00:25:06,131 --> 00:25:07,090 ஹேய்! 400 00:25:16,141 --> 00:25:18,018 மக்களை காயப்படுத்துவது பிடிக்காது. 401 00:25:20,312 --> 00:25:21,313 நிஜமாகவே பிடிக்காது. 402 00:25:33,158 --> 00:25:34,159 நான் இங்கே வரவேயில்லை. 403 00:25:37,162 --> 00:25:38,789 ஆனால் இதைத்தான் நான் சொல்கிறேன். 404 00:25:38,789 --> 00:25:42,000 அதிக போதைப்பொருளால் மரணம். தினமும் நடப்பதுதான். 405 00:25:43,085 --> 00:25:44,419 எனக்கு என்ன அக்கறை? 406 00:25:46,421 --> 00:25:51,760 நான் ஏன் கோபப்படுகிறேன்? எனக்கு ஏன் ஏதாவது தோன்றுகிறது? 407 00:26:26,920 --> 00:26:28,297 - ஹேய். - ஹாய். 408 00:26:28,881 --> 00:26:30,632 நீ என் சீட்டு விளையாட்டில் குறுக்கிடுகிறாய். 409 00:26:31,800 --> 00:26:34,386 சரி. செவ்வாய் இரவு சீட்டு விளையாட்டு. ஜாலியானது. 410 00:26:35,262 --> 00:26:37,639 - சரி. குட் நைட், ஜான். - நான் உள்ளே வரலாமா? 411 00:26:38,640 --> 00:26:41,101 சீகல் வழக்கு தொடர்பாக ஏதாவது அவசர வேலை இருக்கிறதா? 412 00:26:41,101 --> 00:26:44,730 இல்லை, உண்மையில் இல்லை. இல்லை. நான்... 413 00:26:48,525 --> 00:26:50,819 - இதற்கு ஒரு இடம் தேவை. - ஜான். 414 00:26:54,281 --> 00:26:56,158 இது மிரெம்பேவின் வீடு. 415 00:26:59,494 --> 00:27:00,996 மிரெம்பேக்கு ஒரே ஒரு விதி மட்டும்தான் இருக்கிறது. 416 00:27:01,496 --> 00:27:02,873 - நாய்கள் கூடாது. - ஆம். 417 00:27:03,373 --> 00:27:04,374 சரி. 418 00:27:05,375 --> 00:27:07,211 ஓ, கிரே வோக்ஸ்வாகன். 419 00:27:08,420 --> 00:27:09,505 என்ன? 420 00:27:09,505 --> 00:27:13,592 இன்று ஒரு கிரே வோக்ஸ்வாகன் என்னைப் பின்தொடர்ந்தது. யாராக இருக்கும் என்று ஏதாவது யோசனை இருக்கிறதா? 421 00:27:14,259 --> 00:27:17,012 அது சீகல்களின் ஆளாக இருக்கும் என்று நினைக்கிறாயா, நீ என்ன செய்கிறாய் என்று கவனிக்க? 422 00:27:17,012 --> 00:27:18,972 இல்லை, அது வேறு யாரோ என்று நினைக்கிறேன். 423 00:27:21,683 --> 00:27:23,936 கார் டிக்கியில் இருந்தவனை அப்புறப்படுத்திவிட்டாயா? 424 00:27:28,190 --> 00:27:29,274 அதைச் செய். 425 00:27:30,901 --> 00:27:32,528 வா, வைலி. 426 00:27:33,153 --> 00:27:35,447 பெரிய தவறு. இவை நண்பர்களாக இருந்திருக்கலாம். 427 00:27:45,666 --> 00:27:50,587 அவன் கிளம்பிவிட்டான். தன்னைப் பின்தொடர்வதாகச் சொன்னான். இல்லை, அவர்கள் அவனைக் கண்காணிக்கிறார்கள். 428 00:28:11,066 --> 00:28:12,317 எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 429 00:28:16,154 --> 00:28:17,447 பிரமாதமாக உடலை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். 430 00:28:19,533 --> 00:28:20,659 யாரோ எனக்கு முன் முந்திக்கொண்டார்கள். 431 00:28:42,848 --> 00:28:44,016 நான் பார்ப்பது என்ன? 432 00:28:44,016 --> 00:28:46,518 திரைப்படங்களைப் பற்றிய இதழ்கள். நான் கேள்விப்படாத திரைப்படங்கள். 433 00:28:46,518 --> 00:28:49,146 யாரும் கேள்விப்படாத திரைப்படங்கள். 434 00:28:51,773 --> 00:28:52,774 இவை என்ன? 435 00:28:53,400 --> 00:28:54,735 அவனுடைய அம்மா எழுதிய கடிதங்கள், சார். 436 00:28:54,735 --> 00:28:55,819 ஆம், இதோ. 437 00:28:56,862 --> 00:28:57,863 நீ இதை எடுத்தாயா? 438 00:28:59,156 --> 00:29:00,574 என்ன? அவன் ஏற்கனவே படித்துவிட்டான். 439 00:29:00,574 --> 00:29:02,743 - அடுத்த முறை, டேவி... - டேவிட். 440 00:29:02,743 --> 00:29:07,497 அடுத்த முறை, டேவிட், கென்னி படங்களை எடுக்கட்டும், சரியா? 441 00:29:08,290 --> 00:29:10,292 சரி. என்ன கொடுமை இது? 442 00:29:10,792 --> 00:29:11,627 ஒரு அழைப்பிதழ். 443 00:29:11,627 --> 00:29:14,004 ஆம். அது தெரிகிறது, ஆனால் எதற்கு? 444 00:29:14,004 --> 00:29:16,882 தெரியாது. நான் அதை கூகிள் செய்தேன். எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 445 00:29:16,882 --> 00:29:19,009 அதில் இடம் கூட இல்லை, திரு. சீகல். 446 00:29:19,009 --> 00:29:20,969 வெறும் தேதியும் நேரமும் மட்டும். நாளை இரவு. 447 00:29:24,056 --> 00:29:25,182 ஒட்டுக்கேட்கும் கருவி? 448 00:29:25,182 --> 00:29:27,476 ஒன்றுமில்லை. அவன் அதைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். 449 00:29:30,020 --> 00:29:31,522 நான் சொல்வதைக் கேட்டு ஏதாவது கற்றுக்கொள்ளுங்கள். 450 00:29:31,522 --> 00:29:34,066 என் வாழ்க்கையை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பாக நான் நினைக்கிறேன். 451 00:29:35,442 --> 00:29:37,319 - அது என்ன தெரியுமா? - ஆம், அது என்னவென்று தெரியும். 452 00:29:37,319 --> 00:29:39,238 நல்லது, நன்றாக கவனி. ஏனென்றால் எனது சுற்றுச்சூழல் அமைப்பில், 453 00:29:39,238 --> 00:29:43,492 நான், என் மனைவி, என் பிள்ளைகள், 454 00:29:43,492 --> 00:29:45,118 அதோடு என் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது. 455 00:29:45,827 --> 00:29:48,914 நான் என் சுற்றுச்சூழல் அமைப்பு பற்றி மட்டுமே கவலைப்படுவேன். 456 00:29:48,914 --> 00:29:52,042 எனவே ஒரு அந்நியன் அதற்குள் வரும்போது, நான் அதிக எச்சரிக்கையுடன், 457 00:29:52,042 --> 00:29:54,294 "இது நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியா?" என்று வியப்பேன். 458 00:29:54,294 --> 00:29:59,216 நான் அதற்கு உண்மையாக பதிலளிக்கக்கூடிய ஒரே வழி அந்த அந்நியனை புரிந்துகொள்வதுதான். 459 00:29:59,216 --> 00:30:03,053 அவன் ஒலிவியாவைத் தாண்டி வேறு யாரையும் பற்றி விசாரிக்கக் கூடாது, 460 00:30:03,053 --> 00:30:04,137 டேவிட் உன்னைப் பற்றி. 461 00:30:05,764 --> 00:30:08,892 எனவே, இந்த திரு. ஜான் ஷுகர் பற்றி உன்னால் முடிந்த எல்லாவற்றையும் கண்டுபிடி. 462 00:30:10,185 --> 00:30:11,061 சரி. 463 00:30:11,061 --> 00:30:13,522 - நாளை மாலைக்குள் எனக்கு தகவல் வேண்டும். - அது கிடைக்கும், அப்பா. 464 00:30:25,659 --> 00:30:28,495 {\an8}ஹோட்டல் டெல் கோரஸோன் 465 00:30:31,290 --> 00:30:33,417 கிளிஃபோர்ட் கார்ட்டர், கார்மென் வேஸ்கஸ். 466 00:30:33,917 --> 00:30:35,502 கிழக்கு லாஸ் ஏஞ்சலஸில் வன்புணர்வு செய்து கொலை 467 00:30:35,502 --> 00:30:39,882 இதற்கும் ஒலிவியாவிற்கும் என்ன தொடர்பு? என்னால் ஏன் பார்க்க முடியவில்லை? 468 00:30:43,635 --> 00:30:45,304 நான் இதில் ஈடுபடக் கூடாது. 469 00:30:53,353 --> 00:30:55,063 கவனித்து அறிக்கை கொடுத்தால் போதும். 470 00:30:57,024 --> 00:30:58,358 அதை எழுதிவை. 471 00:31:00,194 --> 00:31:01,403 அதுதான் உண்மையான பணி. 472 00:31:09,494 --> 00:31:11,038 எப்படியும் அதுதான் யோசனை. 473 00:31:16,793 --> 00:31:18,795 அதைத்தான் ரூபி எங்களிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறாள்... 474 00:31:21,173 --> 00:31:22,382 ஆனால் என்னால் அதைக் கேட்க முடியாது. 475 00:31:25,177 --> 00:31:26,178 என்னால் நிறுத்த முடியவில்லை. 476 00:31:28,680 --> 00:31:29,681 நான் ஈடுபட்டிருக்கிறேன். 477 00:31:31,683 --> 00:31:33,435 அவள் எனக்கு ஜென்னை நினைவுபடுத்துகிறாள். 478 00:31:35,145 --> 00:31:37,731 இந்த வழக்குக்கு வேறு முடிவு இருக்கும் என்று நம்புகிறேன். ஆனால், ஆம்... 479 00:31:41,235 --> 00:31:42,653 அவள் என் சகோதரியை நினைவுபடுத்துகிறாள். 480 00:31:45,155 --> 00:31:46,198 நான் அவளைக் கண்டுபிடிக்கப் போகிறேன். 481 00:31:47,115 --> 00:31:49,201 அவள் வெளியே எங்கோ இருக்கிறாள். 482 00:32:12,140 --> 00:32:15,644 இல்லை. மீண்டும் உள்ளே செல்லுங்கள். 483 00:32:16,979 --> 00:32:18,355 மாலை வணக்கம். 484 00:32:19,273 --> 00:32:20,357 டெரீஸா, இல்லையா? 485 00:32:22,651 --> 00:32:24,820 எனவே, இவள் பிள்ளைகளை படுக்கையறைக்கு அழைத்துச் செல்வாள் 486 00:32:24,820 --> 00:32:26,363 தொலைக்காட்சியைப் பார்க்க. 487 00:32:28,448 --> 00:32:30,826 அல்லது அவர்களை இவனிடம் கொடுப்பேன். 488 00:32:32,035 --> 00:32:33,745 வாருங்கள். படம் பார்க்கப் போவோம். 489 00:32:33,745 --> 00:32:35,455 சீக்கிரம். சரியா? 490 00:32:37,249 --> 00:32:40,919 எனவே, டெரீஸா, நான் என் நண்பனைத் தேடுகிறேன். 491 00:32:41,670 --> 00:32:43,881 கிளிஃபோர்ட் கார்ட்டர். இவன் உன் தங்கையோடு உறவு வைத்திருந்தான். 492 00:32:46,216 --> 00:32:47,217 எனக்கு இவரைத் தெரியாது. 493 00:32:47,718 --> 00:32:49,178 என்னிடம் பொய் சொல்லாதே, டெரீஸா. 494 00:32:50,179 --> 00:32:51,430 சரி, ஒன்று சொல்கிறேன் கேட்டுக்கொள். 495 00:32:51,430 --> 00:32:55,058 ஆனால் நீ மீண்டும் என்னிடம் பொய் சொன்னால், உன் முகத்தில் ஓங்கிக் குத்துவேன். 496 00:32:56,143 --> 00:32:57,144 சரியா? 497 00:32:57,853 --> 00:32:59,396 ஹேய், கிளிஃபோர்ட் என்னுடைய முக்கியமான ஆள். 498 00:33:00,105 --> 00:33:04,443 என்னையும் என் வாடிக்கையாளர்களைப் பற்றியும் அவனுக்கு தெரியும், மற்றவர்களுக்கு தெரியக்கூடாது. 499 00:33:05,277 --> 00:33:08,614 அதோடு அவன் இந்த விஷயங்களை, என்னைப் பற்றிய விஷயங்களை தன்னுடைய ஃபோனில் வைத்திருந்தான். 500 00:33:08,614 --> 00:33:14,494 ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேலாக கிளிஃபோர்டை நான் பார்க்கவில்லை, அவன் தொடர்புகொள்ளவில்லை. 501 00:33:17,414 --> 00:33:18,415 அது என்னைப் பதட்டப்படுத்துகிறது. 502 00:33:20,751 --> 00:33:22,085 அது உனக்குப் புரிகிறதா? 503 00:33:23,212 --> 00:33:24,213 ஆம். 504 00:33:25,130 --> 00:33:28,133 அவன் தொலைந்துபோவதற்கு முன் அவன் அனுப்பிய கடைசி மெஸ்சேஜ் இதுதான். 505 00:33:29,343 --> 00:33:30,344 {\an8}கிளிஃபோர்ட் இவளை வன்புணர்வு செய்வோம். 506 00:33:30,344 --> 00:33:31,595 {\an8}இது உன் தங்கை கார்மென், இல்லையா? 507 00:33:34,306 --> 00:33:35,307 ஆம். 508 00:33:36,475 --> 00:33:39,311 இந்த வேசி நாய் யார் என்று கண்டுபிடிக்க எனக்கு இரண்டு வாரங்கள் ஆனது. 509 00:33:43,357 --> 00:33:46,151 எனவே, வெளிப்படையாக, ஒரு சரியான உலகில் எங்கள் முக்கியமான ஆளுக்கு 510 00:33:46,151 --> 00:33:47,778 என்ன ஆனது என்பது பற்றி கார்மெனுடன் பேசுவோம். 511 00:33:47,778 --> 00:33:50,322 ஆனால் அவள் இறந்துவிட்டதால் அது சரியான உலகம் இல்லை. 512 00:33:50,322 --> 00:33:54,117 ஆனால் நாங்கள் உன்னோடு பேச முடியும், சரிதானே டெரீஸா? 513 00:33:56,078 --> 00:33:57,538 - ஆம். - சரி. 514 00:33:59,248 --> 00:34:02,501 எனவே, அதற்குப் பிறகு அவன் அனுப்பிய மெஸ்ஸேஜ் இது. 515 00:34:03,836 --> 00:34:05,712 இவள் யார் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? 516 00:34:07,464 --> 00:34:10,717 {\an8}இவள் உனக்கு பரிட்சயமானவளாகத் தெரிகிறாளா? 517 00:34:19,851 --> 00:34:21,018 நன்றி. 518 00:34:22,312 --> 00:34:23,563 நன்றி. 519 00:34:23,563 --> 00:34:25,399 இவளுக்கு... தெரிந்திருக்கிறது. 520 00:34:26,233 --> 00:34:27,484 அடுத்து அவளிடம் பேசுவோம். 521 00:35:38,805 --> 00:35:40,807 வசனத் தமிழாக்கம் அருண்குமார்