1 00:00:35,452 --> 00:00:36,453 பேராசிரியரே! 2 00:00:37,955 --> 00:00:38,956 என்ன நடந்தது? 3 00:00:40,040 --> 00:00:41,041 எண் 22! 4 00:00:42,793 --> 00:00:43,794 என்னோடு வாருங்கள்! 5 00:00:44,294 --> 00:00:48,215 இடம் 22 அட்டகாமா பாலைவனம், சிலி 6 00:01:00,686 --> 00:01:01,895 அது வேலை செய்தது. 7 00:01:05,065 --> 00:01:06,066 அழகாக இருக்கிறது. 8 00:01:06,900 --> 00:01:08,776 வெளியிடும் வரை காத்திருங்கள்… 9 00:01:08,777 --> 00:01:10,361 நீங்கள் உலகிற்குச் சொல்லும்போது… 10 00:01:10,362 --> 00:01:12,698 இதைப் பற்றி யாருக்கும் தெரியக்கூடாது. 11 00:01:13,824 --> 00:01:14,825 என்ன? 12 00:01:15,325 --> 00:01:17,703 இது தயாரானாதும் நாம் சொல்வோம். 13 00:01:19,121 --> 00:01:22,290 நாம் இதை மற்ற சூழல்களிலும் சோதித்துப் பார்க்க வேண்டும். 14 00:01:22,291 --> 00:01:23,374 காடுகள், 15 00:01:23,375 --> 00:01:25,335 பெருங்கடல்கள், ஆர்க்டிக். 16 00:01:27,838 --> 00:01:29,130 ஆம். 17 00:01:29,131 --> 00:01:30,549 எனக்குப் புரிகிறது. 18 00:01:41,602 --> 00:01:43,020 இது ரொம்ப அழகாக இருக்கிறது. 19 00:01:47,649 --> 00:01:49,610 அது யார்? 20 00:02:08,669 --> 00:02:10,380 - ஹேய். - எப்படி இருக்கிறாய்? 21 00:02:11,381 --> 00:02:12,382 நன்றாக இருக்கிறேன். 22 00:02:12,966 --> 00:02:13,967 சொல். 23 00:02:15,427 --> 00:02:19,847 அவர் உடலுறவு பற்றி, எவ்வளவு ஜாலியாக இருக்கிறார் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். 24 00:02:19,848 --> 00:02:20,933 நான் சொன்னேனே. 25 00:02:21,600 --> 00:02:24,228 நம்மில் சிறந்தவர்கள் கூட இங்கே வழிதவறிப் போக வாய்ப்பு இருக்கிறது. 26 00:02:25,854 --> 00:02:27,356 எங்கே இருக்கிறாய்? உன் குரல் வினோதமாக இருக்கிறது. 27 00:02:29,107 --> 00:02:32,069 அது… என்… நான் ஆங்கிலத்தில் பேசுவது ரொம்ப குறைந்துவிட்டது. 28 00:02:34,071 --> 00:02:36,990 எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் நான் போக வேண்டும். 29 00:02:38,492 --> 00:02:40,285 நான் உன்னை நேசிக்கிறேன் என்று சொல்ல விரும்பினேன். 30 00:02:41,537 --> 00:02:43,872 சரி. ஆம், நானும்தான். 31 00:02:50,879 --> 00:02:52,798 இல்லை! 32 00:02:56,552 --> 00:02:57,678 சாதித்துவிட்டாய். 33 00:03:04,434 --> 00:03:05,477 வாழ்த்துகள். 34 00:03:20,242 --> 00:03:22,369 என் சகோதரி. 35 00:04:28,435 --> 00:04:29,436 அது என்னவாக இருக்கப் போகிறது? 36 00:04:30,854 --> 00:04:32,481 ஏனென்றால் நான் உன்னை இப்போதே கொன்றுவிடுவேன். 37 00:04:39,321 --> 00:04:42,741 நம்முடைய சகோதர சகோதரிகள், பூமியில் இந்த வாழ்க்கைக்குப் பிறகு… 38 00:04:45,494 --> 00:04:47,203 …நமக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நித்திய வாழ்விற்கு 39 00:04:47,204 --> 00:04:51,124 நம்மைத் தயார்படுத்திக்கொள்ள ஒரு நினைவூட்டலாகத் திகழ்கிறார்கள். 40 00:04:52,209 --> 00:04:55,545 இந்தக் கடினமான காலங்களில் கடவுள் நம் எல்லோருக்கும் பலத்தையும், 41 00:04:55,546 --> 00:04:57,213 ஆறுதலையும், பொறுமையையும் அருளட்டும். 42 00:04:57,214 --> 00:04:58,548 நம்முடைய எஞ்சிய நாட்களில், 43 00:04:58,549 --> 00:05:02,093 மிகுந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறத் தேவையான 44 00:05:02,094 --> 00:05:03,594 மனஉறுதியை அவர் நமக்கு அருளட்டும். 45 00:05:03,595 --> 00:05:05,680 எனவே இந்த அழகான இடத்தில், இந்த அழகான தருணத்தில்… 46 00:05:05,681 --> 00:05:06,806 தகனம் செய்யப்பட்டவரின் எச்சங்கள் பெயர்: தெரியவில்லை 47 00:05:06,807 --> 00:05:10,893 …இனி நாம் யாரையும் இழக்க மாட்டோம் என்ற உறுதியுடன் 48 00:05:10,894 --> 00:05:14,188 இந்த மக்களை நாம் நினைவுகூர்கிறோம். 49 00:05:14,189 --> 00:05:19,069 இந்த 2,719 ஆன்மாக்களுக்கு முன்னால் நிற்கும்போது, 50 00:05:19,736 --> 00:05:21,195 நாம் இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியிருக்கிறது… 51 00:05:21,196 --> 00:05:22,823 அடையாளம் தெரியாதவர்களின் நினைவாக 2025-ஆம் ஆண்டில் இறந்தவர்கள் 52 00:05:23,407 --> 00:05:24,615 …என்பது தெளிவாகிறது. 53 00:05:24,616 --> 00:05:26,367 சட்டமன்ற உறுப்பினர் ஸ்பிரோ, நான் ஜான் ஷுகர். 54 00:05:26,368 --> 00:05:27,827 - ஆம். - உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 55 00:05:27,828 --> 00:05:31,539 எனக்கும்தான். நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் நன்றி. 56 00:05:31,540 --> 00:05:32,915 நிச்சயமாக. 57 00:05:32,916 --> 00:05:35,960 ஷெரிஃப் துணை அதிகாரிகள், மருத்துவப் பரிசோதகர், தலைமை அதிகாரி. 58 00:05:35,961 --> 00:05:37,796 அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டார்கள். 59 00:05:40,924 --> 00:05:42,885 அடச்சே. 60 00:05:44,052 --> 00:05:45,554 லெப்டினன்ட் வேகா என்ன ஆனான்? 61 00:05:47,306 --> 00:05:48,515 அவனை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 62 00:05:49,349 --> 00:05:50,975 FBI. 63 00:05:50,976 --> 00:05:52,351 - அசையாதே. - சரி. 64 00:05:52,352 --> 00:05:54,228 சில நேரங்களில் மோசமானவர்கள் தப்பித்து விடுகிறார்கள். 65 00:05:54,229 --> 00:05:56,315 அவன் அவ்வளவு மோசமானவன் இல்லை என்று நினைக்கிறேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? 66 00:05:57,566 --> 00:05:58,775 - எனக்குத் தெரியவில்லை. - இல்லையா? 67 00:06:00,068 --> 00:06:01,152 பீட்டர் புருனோ. 68 00:06:01,153 --> 00:06:03,863 போதைப்பொருள் விற்பனை, போலி இறப்புச் சான்றிதழ்களை தயாரிப்பது ஒரு விஷயம். 69 00:06:03,864 --> 00:06:06,073 ஆனால் அரசாங்க வீட்டு வசதி மானியங்களைப் பெறுவது, 70 00:06:06,074 --> 00:06:08,827 அதாவது, அதை முழுவதுமாக வேறு இடத்திலிருந்து செய்திருக்க வேண்டும். 71 00:06:09,578 --> 00:06:12,915 வேறு சிலரும் இருந்திருக்க வேண்டும். ஃபயர் சேல் போல இவ்வளவு பெரிய விஷயத்தில்? 72 00:06:13,457 --> 00:06:15,791 நீங்கள் தேர்தலில் போட்டியிட்டபோது ஜோனாதன் சீகல் 73 00:06:15,792 --> 00:06:17,752 - உங்கள் முதல் ஆதரவாளர்களில் ஒருவர், இல்லையா? - அது சரிதான். 74 00:06:17,753 --> 00:06:19,545 1998-இல். 75 00:06:19,546 --> 00:06:20,881 அவர் உங்களை… 76 00:06:22,132 --> 00:06:24,259 நம்முடைய பாதுகாப்பற்றவர்களின் அடுத்த சிறந்த பாதுகாவலர் என்று அழைத்தார். 77 00:06:32,684 --> 00:06:38,814 இந்த உலகத்தில், அரசியலில், அது ஒரு நீண்ட சமரசம். 78 00:06:38,815 --> 00:06:40,358 சில நேரங்களில் அது அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். 79 00:06:40,359 --> 00:06:42,653 - இந்த ஆட்டத்தில் வெற்றி பெற விரும்பினால்… - பெட்டி. 80 00:06:43,403 --> 00:06:45,405 நீங்கள் வெற்றி பெறவில்லை. மீண்டும் தோற்றுவிட்டீர்கள். 81 00:07:14,852 --> 00:07:16,478 எனவே, எப்படி இருக்கிறாய்? 82 00:07:18,814 --> 00:07:19,897 நன்றாக இருக்கிறேன். 83 00:07:19,898 --> 00:07:23,068 வேகா சம்பவத்திற்குப் பிறகு அதிகம் பேசவில்லை. 84 00:07:23,861 --> 00:07:25,361 நீ அதை எப்படி உணர்கிறாய் என்று யோசிக்கிறேன். 85 00:07:25,362 --> 00:07:26,446 பரவாயில்லை. 86 00:07:31,577 --> 00:07:34,078 நான் இந்தப் பாட்காஸ்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். 87 00:07:34,079 --> 00:07:36,832 மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நல்வாழ்வு அல்லது ஏதோ அபத்தமான பெயர். 88 00:07:38,834 --> 00:07:43,254 ஆண்கள் பேசுவதில்லை என்பதுதான் பெண்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு முதன்மையான காரணம் என்று 89 00:07:43,255 --> 00:07:44,882 அவன் சொல்கிறான். 90 00:07:48,135 --> 00:07:51,013 உரையாடல் குறைவது ஆரோக்கியத்திற்குத் தீங்கானது என்கிறான். 91 00:08:01,106 --> 00:08:03,233 - எப்படியிருந்தாலும்… - ஸ்டாலிங்ஸுக்கு செய்தது தற்காப்பு இல்லை. 92 00:08:06,153 --> 00:08:07,279 அப்படியா? 93 00:08:09,907 --> 00:08:12,242 ஆம், உங்களிடம் அது தற்காப்புக்காக செய்தது என்று சொன்னேன். அது அப்படி இல்லை. 94 00:08:14,661 --> 00:08:15,954 வேகாவுக்கும் அப்படித்தான். 95 00:08:17,164 --> 00:08:18,956 அதற்குப் பிறகு… டாம், எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. 96 00:08:18,957 --> 00:08:20,917 என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை… 97 00:08:20,918 --> 00:08:22,419 எனக்கு என்ன பிரச்சினை? 98 00:08:25,339 --> 00:08:27,840 என்னால்… அந்தத் தருணத்தை கூட ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை. 99 00:08:27,841 --> 00:08:29,259 அது கண்மூடித்தனமான கோபம் போன்றது. 100 00:08:30,427 --> 00:08:31,595 என்னால்… 101 00:08:35,057 --> 00:08:38,018 என்னால் என்னை சமாதானப்படுத்த முடியவில்லை. 102 00:08:39,061 --> 00:08:40,062 ஹேய், 103 00:08:41,188 --> 00:08:43,106 உலகில் இரண்டு குற்றவாளிகள் குறைந்துவிட்டார்கள். 104 00:08:43,649 --> 00:08:44,732 எனக்குப் பரவாயில்லை. 105 00:08:44,733 --> 00:08:48,236 ஆம், ஆனால் வேகாவை நேசித்த மகள் இருக்கிறாள். ஸ்டாலிங்ஸ்க்கு அம்மா இருக்கிறார். 106 00:08:48,237 --> 00:08:50,989 ஆனால் சில நேரங்களில் கொஞ்சம் குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் 107 00:08:51,907 --> 00:08:54,034 முடிவைத்தான் நம்மால் எடுக்க முடியும். 108 00:08:57,829 --> 00:08:58,830 அப்படித்தான் நினைக்கிறேன். 109 00:09:02,125 --> 00:09:06,212 பறவை போன்றது என்பதற்கான ஐந்து எழுத்துச் சொல் என்ன? 110 00:09:06,213 --> 00:09:07,214 ஏவியன். 111 00:09:08,799 --> 00:09:09,882 கதிரியக்கவியல் 112 00:09:09,883 --> 00:09:11,175 ச்சே, அது சரியாக இருக்கிறது. 113 00:09:11,176 --> 00:09:12,177 திரு. ஃப்ளைபெர்க். 114 00:09:16,265 --> 00:09:18,100 ஹேய். நான் வரலாமா? 115 00:09:19,852 --> 00:09:20,853 சரி, கண்டிப்பாக. 116 00:09:23,313 --> 00:09:25,983 கோரஸோன் 117 00:09:39,705 --> 00:09:41,205 - ஒரு நிமிடம். - அப்படியென்றால் சரி. 118 00:09:41,206 --> 00:09:42,916 - ஹேய். - ஹேய். 119 00:09:49,673 --> 00:09:50,883 - நீ நலமா? - ஆம். 120 00:09:53,510 --> 00:09:54,887 இல்லை, நீ நலமாக இல்லை. 121 00:09:57,139 --> 00:09:58,389 உன் வழக்கு முடிந்துவிட்டது. 122 00:09:58,390 --> 00:10:00,475 நீ அமைதியில்லாமல் இருக்கிறாய், இப்போது என்ன செய்வது என்று உனக்குத் தெரியவில்லை. 123 00:10:01,685 --> 00:10:02,769 கொஞ்சம். 124 00:10:03,979 --> 00:10:05,271 ஒரு படம் பார்க்கலாமா? 125 00:10:05,272 --> 00:10:08,108 இந்த நகரத்தில் எங்காவது ஒரு கருப்பு வெள்ளைப் படம் ஓடிக்கொண்டிருக்கும். 126 00:10:08,817 --> 00:10:10,818 ஆம், 'அவுட் ஆஃப் தி பாஸ்ட்' படம் தி யுனைட்டட் தியேட்டரில் ஓடுகிறது. 127 00:10:10,819 --> 00:10:11,944 அது எந்தப் படம்? 128 00:10:11,945 --> 00:10:14,865 ராபர்ட் மிட்சம் நடித்தது. அவர் ஜேன் கிரீயரை ஆழமாக காதலிக்கும் படம். 129 00:10:15,699 --> 00:10:17,742 எனக்குத் தெரிந்த ராபர்ட் மிட்சம் போல தோன்றவில்லை. 130 00:10:17,743 --> 00:10:19,077 அப்படி நடக்கும். 131 00:10:21,413 --> 00:10:23,331 - நானும் உன்னுடன் வர விரும்புகிறேன். - வேண்டாம், நீ பிஸியாக இருக்கிறாய். 132 00:10:23,332 --> 00:10:26,375 ஆம், அது… இந்த விளக்கக்காட்சி. 133 00:10:26,376 --> 00:10:27,920 எல்லோரும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 134 00:10:28,670 --> 00:10:30,463 என்னைப் பற்றி கவலைப்படாதே, போய் ஓய்வெடு. 135 00:10:30,464 --> 00:10:31,507 ரொம்ப கடினமாக வேலை செய்யாதே. 136 00:10:32,591 --> 00:10:35,010 - நாளை கடற்கரைக்குப் போவது உறுதியா? - நிச்சயமாக. 137 00:10:38,388 --> 00:10:40,014 மீண்டும் யோசித்துப் பார்த்தால், 138 00:10:40,015 --> 00:10:41,558 எனக்குப் படம் பார்க்க விருப்பமில்லை. 139 00:10:57,699 --> 00:10:59,076 சரி. வந்து அடி. 140 00:11:00,118 --> 00:11:01,995 மனிதனாக இருப்பது என்பது இதுதானா? 141 00:11:03,413 --> 00:11:05,666 அடி, நண்பா. அடி, நண்பா! 142 00:11:40,576 --> 00:11:41,827 அடி! 143 00:11:56,341 --> 00:11:58,760 "அபுதாபியில் ஒரு புதிய வழக்குக்காக போய்க்கொண்டிருக்கிறேன்." 144 00:12:00,053 --> 00:12:01,597 இன்ஹெரண்ட் வைஸ் 145 00:12:02,764 --> 00:12:06,101 "தன் அப்பாவைக் கடைசியாகப் பார்த்தது பற்றி ஹென்ட்ரிக் பொய் சொன்னான்." 146 00:12:11,231 --> 00:12:15,694 "சாஸரியில் ஒன்றாகப் பறக்கும் ஸ்டார்லிங் பறவைகளைக் கவனித்தேன்." 147 00:12:21,617 --> 00:12:26,121 விறுவிறுப்பானது! 148 00:12:35,547 --> 00:12:37,673 {\an8}முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைச் சீட்டு டோக்கியோ - கியோடோ 149 00:12:37,674 --> 00:12:38,758 {\an8}வீடு 150 00:12:38,759 --> 00:12:40,385 {\an8}பாஸ்டன் 151 00:14:22,237 --> 00:14:25,240 {\an8}பிரீமியர் 152 00:14:38,253 --> 00:14:40,713 டாக்டர் லிவிங்ஸ்டன்தானே? 153 00:14:40,714 --> 00:14:42,048 நான் ஸ்டான்லி ஓண்டாட்ஜே. 154 00:14:42,049 --> 00:14:43,508 தயவுசெய்து செய்தியைப் பதிவிடுங்கள். 155 00:14:43,509 --> 00:14:45,093 ஸ்டான்லி, நான்தான். என்னைத் திரும்ப அழையுங்கள். 156 00:14:48,597 --> 00:14:49,598 தயாரா? 157 00:14:53,393 --> 00:14:54,394 ஆம். 158 00:14:57,814 --> 00:14:59,023 நீ அழகாக இருக்கிறாய். 159 00:14:59,024 --> 00:15:00,025 நன்றி. 160 00:15:28,512 --> 00:15:29,555 சரி. பிடித்துவிட்டேன். 161 00:15:35,853 --> 00:15:37,937 இந்தக் கிரகத்திலேயே பெரிய பெருங்கடல், தெருவைத் தாண்டிதான் இருக்கிறது, 162 00:15:37,938 --> 00:15:40,023 எப்படியோ, இது இங்கே இருப்பதை எப்போதும் மறந்துவிடுகிறேன். 163 00:15:40,732 --> 00:15:42,192 பெரும்பாலானவர்கள் மறந்துவிடுகிறார்கள். 164 00:15:46,488 --> 00:15:48,490 சமீப காலமாக ரொம்ப சிரமப்படுகிறேன். 165 00:15:50,325 --> 00:15:55,581 நான் யார், எங்கிருந்து வந்தேன், எப்படித் தொடங்கினேன் என்பதை மறக்கிறேனோ என்று தோன்றுகிறது. 166 00:15:58,166 --> 00:16:02,921 முன்பெல்லாம் விஷயங்களை ரொம்ப தெளிவாகப் பார்ப்பேன், புரிந்துகொண்டேன். ஆனால் இப்போது நான்… 167 00:16:04,840 --> 00:16:07,718 எனக்குத் தெரியவில்லை. சமீப காலமாக நான் ரொம்ப சிரமப்படுகிறேன். 168 00:16:09,052 --> 00:16:10,429 ஆம், அது எனக்குத் தெரிகிறது. 169 00:16:11,346 --> 00:16:12,431 வருந்துகிறேன். 170 00:16:14,892 --> 00:16:16,435 நாம் ஹோட்டலுக்குத் திரும்பிப் போக வேண்டுமா? 171 00:16:19,771 --> 00:16:23,150 உன்னுடன் இந்தக் கடற்கரையில் இருக்க வேண்டும் என்று விரும்புவது தவறா? 172 00:16:26,528 --> 00:16:29,907 நம் வலிகள் நீங்கும் வரை நாம் மகிழ்ச்சியாக இருக்கக் காத்திருந்தால், கடற்கரையே 173 00:16:30,824 --> 00:16:32,034 இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறேன். 174 00:16:52,679 --> 00:16:54,847 - எனவே விஷயம் இதுதான். - ம்? 175 00:16:54,848 --> 00:16:56,307 மிலான். 176 00:16:56,308 --> 00:16:57,767 மிலானா? 177 00:16:57,768 --> 00:16:59,101 இங்கே என் வேலை முடிந்தது, 178 00:16:59,102 --> 00:17:03,065 அதனால் பணி மீளாய்வு, அடுத்த பணி ஒதுக்கீட்டிற்காக மிலான் போகிறேன். 179 00:17:05,108 --> 00:17:06,317 நீ கிளம்புகிறாயா? 180 00:17:06,318 --> 00:17:07,569 ஆம். 181 00:17:09,863 --> 00:17:10,864 எப்போது? 182 00:17:11,448 --> 00:17:12,491 சீக்கிரத்தில். 183 00:17:14,326 --> 00:17:15,410 சரி. 184 00:17:16,703 --> 00:17:18,329 இது நன்றாக இருந்தது. 185 00:17:20,040 --> 00:17:21,290 நன்றாக இருந்திருக்கிறது. 186 00:17:22,416 --> 00:17:23,460 எனவே என்னோடு வா. 187 00:17:26,964 --> 00:17:28,423 உன்னுடன் வருவதா? மிலானுக்கா? 188 00:17:29,383 --> 00:17:30,384 அது எப்படி இருக்கிறது என்று பார். 189 00:17:34,263 --> 00:17:36,973 நான் போயிருக்கிறேன். அது… அது அழகாக இருக்கும். 190 00:17:36,974 --> 00:17:38,392 நாம் எப்படி இருப்போம் என்று பார். 191 00:17:44,106 --> 00:17:48,151 பெனலோபி என்ற என் தோழிக்கு, சின்க் வீயில் ஒரு கஃபே இருக்கிறது. 192 00:17:48,819 --> 00:17:52,154 நீ வெளியில் நாற்காலியில் அமர்ந்து, உன் எஸ்பிரெசோவைக் குடித்துக்கொண்டு, 193 00:17:52,155 --> 00:17:55,659 மக்கள் வியா சாண்டா மரியா வீதியில் நடப்பதை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்கலாம். 194 00:18:00,205 --> 00:18:02,832 எனவே, பேக் செய்துகொண்டு, கிளம்புகிறாயா? 195 00:18:02,833 --> 00:18:04,250 ஏன் கூடாது? 196 00:18:04,251 --> 00:18:08,504 உனக்கு ஓய்வு தேவை. உன் வேலை முடிந்துவிட்டது. நீ… உன் நண்பர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். 197 00:18:08,505 --> 00:18:11,216 - நாம் நன்றாகப் பழகுகிறோம். - என் நண்பர்கள் எல்லோரும் போய்விட்டார்களா? 198 00:18:12,551 --> 00:18:14,761 எது உன்னை இங்கே வைத்திருக்கிறது? குற்றமா? 199 00:18:16,346 --> 00:18:17,556 போக்குவரத்து நெரிசலா? 200 00:18:24,104 --> 00:18:25,564 எது உன்னை இங்கே வைத்திருக்கிறது? 201 00:18:58,597 --> 00:19:02,518 மிலான் விஷயத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை, சரியா? யோசித்துப் பார். 202 00:19:03,644 --> 00:19:04,645 யோசிக்கிறேன். 203 00:20:11,128 --> 00:20:14,131 நான் தவறு செய்துவிட்டேன். அவனுக்குத் தெரிந்துவிட்டது. மன்னித்துவிடுங்கள். 204 00:20:16,300 --> 00:20:17,301 நான் என்ன செய்ய வேண்டும்? 205 00:20:22,806 --> 00:20:23,890 சரி. 206 00:20:23,891 --> 00:20:27,226 அப்படியென்றால் இன்று இரவு சந்திப்போம். சரி, நன்றி. 207 00:20:27,227 --> 00:20:29,562 செல்வி. ஃபிஷ்ஷர். உங்கள் கார் தயாராக இருக்கிறது. 208 00:20:29,563 --> 00:20:30,564 நன்றி. 209 00:21:53,605 --> 00:21:54,898 மாலை வணக்கம், சார். 210 00:21:55,983 --> 00:21:57,066 இதோ. 211 00:21:57,067 --> 00:21:58,068 நன்றி. 212 00:22:04,491 --> 00:22:06,742 மாலை வணக்கம். நீங்கள் பதிவு செய்ய விரும்புகிறீர்களா? 213 00:22:06,743 --> 00:22:07,827 இல்லை. 214 00:22:07,828 --> 00:22:10,705 சார். மன்னிக்கவும், சார். 215 00:22:10,706 --> 00:22:13,625 அது பரவாயில்லை. அவர் ஜான் ஷுகர். 216 00:22:20,299 --> 00:22:21,300 வருந்துகிறேன். 217 00:22:26,680 --> 00:22:28,182 ஒருவர் உன்னைச் சந்திக்க விரும்புகிறார். 218 00:22:39,651 --> 00:22:42,237 {\an8}அகாலிகா கொண்டாட்டத்தின் தொடக்க நிகழ்விற்கு வரவேற்கிறோம் 219 00:22:45,324 --> 00:22:46,325 ஜான். 220 00:22:47,743 --> 00:22:48,744 ஜான். 221 00:23:12,893 --> 00:23:13,977 திரு. ஷுகர். 222 00:23:16,146 --> 00:23:17,147 செனட்டர் பாவிச். 223 00:23:18,398 --> 00:23:19,399 சந்தித்ததில் மகிழ்ச்சி. 224 00:23:20,234 --> 00:23:21,527 என் வீட்டிற்கு வரவேற்கிறேன். 225 00:23:26,281 --> 00:23:27,740 எங்கே போகிறாய்? 226 00:23:27,741 --> 00:23:29,409 அது பாவிச். நான் அவரிடம் பேச வேண்டும். 227 00:23:30,160 --> 00:23:32,287 நீ தேடும் நபர் அவர் இல்லை. 228 00:23:52,558 --> 00:23:53,892 இது கடினமாக இருக்கப் போகிறது. 229 00:23:55,269 --> 00:23:56,352 ஆனால் உனக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். 230 00:23:56,353 --> 00:23:57,354 நீ என்ன சொல்கிறாய்? 231 00:24:01,316 --> 00:24:02,693 பொறு. அது யார்? 232 00:24:04,236 --> 00:24:05,237 அது யார்? 233 00:24:34,099 --> 00:24:37,769 - சகோதரா. - ஜென். 234 00:24:40,272 --> 00:24:41,273 அடக் கடவுளே. 235 00:24:42,649 --> 00:24:45,903 கடவுளே, நான் உன்னை ரொம்ப மிஸ் செய்தேன், சகோதரா. 236 00:24:48,822 --> 00:24:49,907 எனக்குத் தெரியும். 237 00:24:50,741 --> 00:24:51,867 நான் ரொம்ப வருந்துகிறேன். 238 00:24:57,080 --> 00:24:59,583 நீ எங்கே இருந்தாய்? இத்தனை வருடங்களாக. 239 00:25:01,585 --> 00:25:04,879 நீ என்னைத் தேடுகிறாய், நீ வலியோடு இருக்கிறாய் என்று தெரிந்தது எனக்கு 240 00:25:04,880 --> 00:25:06,214 பெரும் வேதனையை ஏற்படுத்தியது. 241 00:25:06,215 --> 00:25:08,633 நான் நிறுத்தவே இல்லை… உன்னை எல்லா இடங்களிலும் தேடினேன். 242 00:25:08,634 --> 00:25:10,427 - எனக்குத் தெரியும். - நீ இறந்துவிட்டாய் என்று நினைத்தேன். 243 00:25:11,053 --> 00:25:12,136 எப்படி? 244 00:25:12,137 --> 00:25:16,307 - கடவுளே, நான் உன்னை ரொம்ப மிஸ் செய்தேன். - நீ எங்கே இருந்தாய்? 245 00:25:16,308 --> 00:25:17,391 என்ன நடந்தது? 246 00:25:17,392 --> 00:25:20,354 - அதற்குக் காரணம் ஹென்றியா? அவன்… - இல்லை. 247 00:25:20,896 --> 00:25:22,271 ஹென்றி ஒருபோதும் என்னைக் காயப்படுத்த மாட்டான். 248 00:25:22,272 --> 00:25:25,525 நீ இறந்துவிட்டாய் என்று அவன்தான் சொன்னான். அவன் என்னை நம்ப வைத்தான்… 249 00:25:25,526 --> 00:25:26,735 ஏனென்றால்… 250 00:25:27,945 --> 00:25:29,279 ஏனென்றால் நான்தான் அவனிடம் சொல்லச் சொன்னேன். 251 00:25:32,533 --> 00:25:35,827 என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. அப்படி வலியோடு. 252 00:25:36,328 --> 00:25:40,039 நான் செய்ய வேண்டிய வேலை இருந்தது. நீ தயாராக இல்லை என்பதை என்னால் பார்க்க முடிந்தது. 253 00:25:40,040 --> 00:25:41,457 எதற்கு தயாராக? என்ன வேலை? 254 00:25:41,458 --> 00:25:44,127 எனக்கு வேலை இருந்தது. நம் எல்லோருக்கும் வேலை இருந்தது. நான் உனக்கு உதவியிருப்பேன். 255 00:25:44,878 --> 00:25:46,088 இந்த வேளையில் இல்லை. 256 00:25:51,051 --> 00:25:55,931 இந்த இடத்தை இன்னும் உனக்குத் தெரியாது. நீ இப்போதுதான் வந்திருக்கிறாய். 257 00:25:57,015 --> 00:26:01,186 நான் பார்த்ததை நீ பார்க்கவில்லை, அழகை மட்டுமில்லை, ஆனால்… 258 00:26:01,687 --> 00:26:04,314 ஆனால் திகிலும்தான், குரூரம். 259 00:26:05,399 --> 00:26:08,068 இயற்கையின் புனிதத்தைப் பற்றிய அவர்களின் அலட்சியம். 260 00:26:09,695 --> 00:26:13,698 அதோடு என்னால் உன்னை அந்த வேலைக்கு இழுக்க முடியவில்லை. 261 00:26:13,699 --> 00:26:15,033 அது ரொம்ப முன்கூட்டியே நடந்தது. 262 00:26:17,703 --> 00:26:19,871 என்ன வேலை? நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 263 00:26:19,872 --> 00:26:21,914 கவனித்து, அறிக்கை கொடு, அதுதான் நம் வேலையாக இருந்தது. 264 00:26:21,915 --> 00:26:24,084 அது போதாது என்று உனக்கே தெரியும். 265 00:26:25,669 --> 00:26:26,670 சரிதானே? 266 00:26:27,462 --> 00:26:31,924 இந்த கிரகம் இறப்பதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை, 267 00:26:31,925 --> 00:26:34,468 அதனால் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். 268 00:26:34,469 --> 00:26:36,053 - அந்த வட்டங்கள். - ஆம். 269 00:26:36,054 --> 00:26:37,346 - அது நீதான். - ஆம். 270 00:26:37,347 --> 00:26:39,016 ஹென்றி என்னை ஆதரித்தான். 271 00:26:39,975 --> 00:26:43,937 ரூபியும் மற்றவர்களும் அதற்கு எதிராக இருந்தார்கள். 272 00:26:44,980 --> 00:26:46,064 அதனால் நீ… 273 00:26:47,107 --> 00:26:48,192 செய்ய வேண்டியதைச் செய்தேன். 274 00:26:49,818 --> 00:26:51,111 அவர்களை வீட்டுக்கு அனுப்பினேன். 275 00:26:53,113 --> 00:26:54,323 நீ நம்மை வெளிப்படுத்தினாய். 276 00:26:56,742 --> 00:27:00,078 நாம் இங்கே இருக்கிறோம் என்று நீ மனிதர்களிடம் சொன்னாய். நீ பலி கொடுத்தாய்… 277 00:27:01,455 --> 00:27:02,539 நாங்கள் வேட்டையாடப்பட்டோம். 278 00:27:03,624 --> 00:27:05,876 நம்மில் சிலர் கொல்லப்பட்டார்கள், நம் நண்பர்கள். 279 00:27:06,627 --> 00:27:08,837 ஜென், இது தவறு, தவறான கைகளில். 280 00:27:09,421 --> 00:27:11,047 உன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றை வைத்து விளையாடுவது. 281 00:27:11,048 --> 00:27:12,549 நாம் தொடங்குவதற்கு தயாராக இருக்கிறோம். 282 00:27:13,091 --> 00:27:14,092 நாங்கள் உடனே வந்துவிடுவோம். 283 00:27:14,843 --> 00:27:16,136 இது நிறைய என்று எனக்குத் தெரியும். 284 00:27:17,304 --> 00:27:18,889 திறந்த மனதுடன் வருவாயா? 285 00:27:19,890 --> 00:27:21,475 நான் உருவாக்கியதை நீ பார்ப்பாயா? 286 00:27:22,559 --> 00:27:24,520 பிறகு நீ எப்படி உணர்கிறாய் என்று சொல்லலாம். 287 00:27:27,356 --> 00:27:29,065 சார்லெட் உனக்கு ஒரு இருக்கையை ஏற்பாடு செய்வாள். 288 00:27:29,066 --> 00:27:30,067 அவளுக்குத் தெரியுமா? 289 00:27:31,193 --> 00:27:33,278 நான் என்ன? நாம் என்ன? 290 00:27:35,822 --> 00:27:37,449 நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பேசலாம். 291 00:27:39,952 --> 00:27:41,161 எனக்குப் பயமாக இருக்கிறது. 292 00:27:42,037 --> 00:27:45,165 சகோதரி, நீ மாறிவிட்டாய். 293 00:27:49,336 --> 00:27:50,963 ஆனால் நீயும் மாறிவிட்டாய். 294 00:27:57,261 --> 00:27:59,972 எல்லோரும்தான், நேரமாகிவிட்டது. வெளிவே போவோம். 295 00:28:13,193 --> 00:28:14,278 நீ நலமா? 296 00:28:17,155 --> 00:28:19,365 தொடங்கப் போகிறது. நாம் வெளியே போக வேண்டும். 297 00:28:19,366 --> 00:28:22,743 நாம், எல்லோரும், இந்த விசேஷமான கிரகத்தில் வாழ்கிறோம். 298 00:28:22,744 --> 00:28:24,663 பலவீனமான உயிர்க்கோளம் 299 00:28:25,330 --> 00:28:32,004 மனித செயல் அல்லது செயலற்ற தன்மையால் வேகமாக வெப்பமடைகிறது. 300 00:28:33,130 --> 00:28:38,177 அதனால்தான் நான் அகாலிகா ப்ராஜக்டை பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினேன். 301 00:28:38,677 --> 00:28:42,556 இந்த வியக்கத்தக்க கிரகத்தின் வழங்களைப் பாதுகாக்க. 302 00:28:43,056 --> 00:28:48,270 அதோடு கவனக்குறைவாக அதை அழிப்பவர்களிடமிருந்து பாதுகாக்க. 303 00:28:49,104 --> 00:28:51,481 இன்றிரவு, அது நன்றாக நடக்கும் என்று நம்புவோம். 304 00:28:54,026 --> 00:28:56,528 இறுதியாக பூமி போராட தயாராக இருக்கிறது. 305 00:29:03,076 --> 00:29:04,995 நீ பார்க்கப் போவது… 306 00:29:06,205 --> 00:29:07,664 சரி, நீங்களே பாருங்கள். 307 00:29:53,043 --> 00:29:54,253 எல்லோரும் தயாரா? 308 00:30:36,837 --> 00:30:37,838 செய். 309 00:30:57,357 --> 00:31:01,028 கடைசியாக ஒன்று, பெண்கள் மற்றும் ஆண்களே, பரவட்டும்… 310 00:31:02,237 --> 00:31:03,238 ஒளி. 311 00:31:29,264 --> 00:31:30,432 - ஜான். - என்ன? 312 00:31:55,249 --> 00:31:56,959 இப்போது நான் மீண்டும் போக வேண்டும். 313 00:31:59,378 --> 00:32:00,629 எனக்கு சத்தியம் செய், சகோதரா. 314 00:32:01,171 --> 00:32:03,465 நீ தயாரானதும், என்னைத் தேடி வருவாய் என்று சத்தியம் செய். 315 00:32:04,174 --> 00:32:06,718 ஏனென்றால்… கேள். 316 00:32:08,804 --> 00:32:10,931 இது அவர்களுக்கானது என அவர்கள் நினைக்கிறார்கள். 317 00:32:12,140 --> 00:32:13,141 அவர்களுக்கானது. 318 00:32:13,851 --> 00:32:15,310 அவர்களுக்குத் தெரியாது… 319 00:32:17,104 --> 00:32:18,355 இது நமக்கானது என்று. 320 00:32:24,486 --> 00:32:26,321 "ஜான் ஷுகரை சந்தி. 321 00:32:26,989 --> 00:32:28,490 அவனோடு பேசு. 322 00:32:29,992 --> 00:32:32,035 அவன் எப்படிப்பட்டவன்? அவன் எப்படி இருக்கிறான்? 323 00:32:33,161 --> 00:32:35,664 உனக்குத் தோன்றும் பதிவுகளை எழுதி, எனக்கு அனுப்பு." 324 00:32:38,250 --> 00:32:40,794 அவ்வளவுதான். மீதி நான்தான். 325 00:32:44,548 --> 00:32:45,841 மீதி உண்மையானது. 326 00:32:49,344 --> 00:32:50,470 மீதி நான்தான். 327 00:32:58,604 --> 00:32:59,730 அவர் சொன்னது சரிதான். 328 00:33:01,356 --> 00:33:02,733 நீ வியக்கத்தக்கவன். 329 00:33:58,705 --> 00:34:00,999 'தி தேர்ட் மேன்' படத்தின் கடைசி காட்சி. 330 00:34:01,834 --> 00:34:05,420 வழக்கு முடிந்தது. கைதுகள் செய்யப்பட்டன. 331 00:34:06,797 --> 00:34:07,798 ஹீரோ வென்றான். 332 00:34:09,757 --> 00:34:13,971 தான் விரும்பும் பெண் ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொள்வதற்காக 333 00:34:14,804 --> 00:34:18,559 அவன் சாலையோரத்தில் காத்திருப்பதுதான் மிச்சம். 334 00:34:20,726 --> 00:34:21,937 எனவே அவன் யோசிக்கிறான். 335 00:34:23,856 --> 00:34:25,107 ஆனால் ஹீரோ ஒரு முட்டாள். 336 00:34:26,065 --> 00:34:28,985 தனக்குப் புரியாத ஒரு உலகத்தில் ஒரு அமெரிக்கக்காரன். 337 00:34:30,946 --> 00:34:32,697 அதோடு அவனுடைய காதலி கடந்து போகிறாள்… 338 00:34:34,992 --> 00:34:36,451 ஒரு பார்வை கூட பார்க்காமல். 339 00:34:46,712 --> 00:34:48,714 ஒருவேளை நான் முற்றிலும் ஆச்சரியப்படவில்லை. 340 00:34:49,797 --> 00:34:52,676 ஒருவேளை நான் மனதுக்குள் எங்காவது சந்தேகப்பட்டிருக்கலாம். 341 00:34:54,261 --> 00:34:55,554 என் சகோதரி. 342 00:34:56,679 --> 00:34:58,097 சார்லெட். இந்த இடம். 343 00:34:58,098 --> 00:35:01,185 ஒருவேளை எனக்குத் தெரிந்திருக்கலாம், நான் வேறு எதையாவது நம்ப விரும்பியிருக்கலாம். தெரியவில்லை. 344 00:35:02,811 --> 00:35:05,606 நான் தவறவிட முடியாத ஒரு சந்திப்பு எனக்கு இருந்தது எனக்குத் தெரியும். 345 00:35:17,576 --> 00:35:18,577 தாடை. 346 00:35:19,578 --> 00:35:20,661 தாடை. 347 00:35:20,662 --> 00:35:22,413 - என் தாடைக்கு என்ன? - நீ அதைத் தூக்குகிறாய். 348 00:35:22,414 --> 00:35:23,581 - இல்லை, நான் செய்யவில்லை, சகோ. - சகோ, நீ… 349 00:35:23,582 --> 00:35:24,707 நீ 100% செய்கிறாய். ஆம். 350 00:35:24,708 --> 00:35:26,584 ஜி, நீ பெரும் முட்டாள். 351 00:35:26,585 --> 00:35:27,753 மீண்டும். ஷூஷைன். 352 00:35:30,464 --> 00:35:33,591 சரி! என்ன செய்கிறாய், நண்பா? நீ போகத் தயாரா? 353 00:35:33,592 --> 00:35:35,760 - சமூக ஊடகங்களுக்கு சண்டையிடும் படம் கிடைக்குமா? - நிச்சயமாக. சரி. 354 00:35:35,761 --> 00:35:37,470 தயவுசெய்து அதைச் செய்வோமா? இங்கே வா. 355 00:35:37,471 --> 00:35:39,848 எல்லாவற்றையும் இங்கேயே எடுங்கள். எல்லாவற்றையும் இங்கேயே எடுங்கள். 356 00:35:41,016 --> 00:35:42,017 ஹேய். 357 00:35:43,185 --> 00:35:44,186 என்ன? 358 00:35:44,686 --> 00:35:45,979 நேராக மறுவாழ்வு மையத்துக்குப் போக வேண்டும். 359 00:35:46,605 --> 00:35:49,316 சண்டைக்குப் பிறகு, சூதாட்ட விடுதிகள் கூடாது, இரவு கிளப்கள் கூடாது, எதுவும் கூடாது. 360 00:35:50,400 --> 00:35:52,860 அவன் என்னை ஒரு "மதுபானங்கள் பரிமாறாத ஸ்ட்ரிப் கிளப்புக்கு" கூட்டிப் போகக் கேட்டான். 361 00:35:52,861 --> 00:35:54,738 - என்ன? - அப்படி ஒன்று இருக்கிறதா என்று கேட்டேன். 362 00:35:56,323 --> 00:35:59,450 ஜி. எப்படியிருந்தாலும், அவன் நேராக அங்கே போகிறேன். 363 00:35:59,451 --> 00:36:02,204 சரி, இது ஒரு சேவை தொழில். இது எல்லாம் வேலையின் ஒரு பகுதி. 364 00:36:02,871 --> 00:36:04,665 இருந்தாலும் இதுதான் ஒரே பகுதி இல்லை. அதாவது, அவர்களைப் பார். 365 00:36:05,582 --> 00:36:06,707 ஆம். 366 00:36:06,708 --> 00:36:09,043 நீ இல்லையென்றால் அவர்கள் ஒன்றாக இருக்க மாட்டார்கள். 367 00:36:09,044 --> 00:36:10,504 ஆம், அந்தப் பகுதி நன்றாக இருக்கிறது. 368 00:36:12,089 --> 00:36:14,716 வால். நன்றி. 369 00:36:16,134 --> 00:36:18,345 சரி. பிறகு பேசுவோம். 370 00:36:25,060 --> 00:36:26,061 ஆம். ஆம், ஹேய். 371 00:36:28,272 --> 00:36:30,566 யோ, ஷுகர். எங்கே போகிறீர்கள்? 372 00:36:31,149 --> 00:36:33,568 நான் விடைபெற விரும்பினேன், ஆனால், நீ பிஸியாக இருந்தாய். 373 00:36:33,569 --> 00:36:35,528 - நீங்கள் சண்டையைப் பார்க்க மாட்டீர்களா? - இல்லை. நிச்சயமாக இல்லை. 374 00:36:35,529 --> 00:36:37,321 ஆனால் உன்னைச் சுற்றி நிறைய பேர் இருப்பார்கள், நான் இதற்குப் பிறகு 375 00:36:37,322 --> 00:36:38,406 உன்னைப் பார்க்காமல் போகலாம். 376 00:36:38,407 --> 00:36:39,825 ஓ, சரி. 377 00:36:45,038 --> 00:36:46,039 நன்றி. 378 00:36:47,583 --> 00:36:48,876 பரவாயில்லை. 379 00:36:51,461 --> 00:36:52,796 யோ, உங்கள் சூட்டை கசக்கிவிட்டேன். 380 00:36:53,338 --> 00:36:54,423 என்னிடம் மற்றவை இருக்கின்றன. 381 00:36:55,340 --> 00:36:56,341 நிச்சயமாக வைத்திருக்கிறீர்கள். 382 00:36:58,886 --> 00:36:59,887 ஹேய், டேனி. 383 00:37:01,305 --> 00:37:02,556 உன் தாடையைத் தூக்காதே. 384 00:37:22,159 --> 00:37:24,661 சீகல் ஸ்டூடியோஸ் 385 00:37:26,788 --> 00:37:32,126 அது 1970-கள், 1980-கள், 1990-கள் கூட. 386 00:37:32,127 --> 00:37:34,004 வேகாஸுக்குப் போவோம், படத்தைத் திரையிடுவோம். 387 00:37:34,922 --> 00:37:38,007 அதிர்ஷ்டவசமாக ஏதாவது நல்ல படத்தை எடுத்திருந்தால், அதைத் திரையிடுவதற்கான 388 00:37:38,008 --> 00:37:42,638 உரிமையைப் பெற திரையரங்குகள் கடுமையாகப் போட்டி போட்டு எதையும் செய்யத் துணிவார்கள். 389 00:37:43,263 --> 00:37:46,350 இப்போது, திரைப்பட வியாபாரம் நல்ல காலகட்டத்தில் இருந்திருக்கிறது. 390 00:37:48,018 --> 00:37:50,853 குறைந்தபட்சம் நான் எப்போது வேண்டுமானாலும் மதிய உணவிற்கு வரலாம். 391 00:37:50,854 --> 00:37:53,690 அப்படித்தான் நம்புகிறேன். இந்த இடத்தைக் கட்டியது நீங்கள்தான். 392 00:37:56,026 --> 00:37:57,236 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 393 00:37:59,446 --> 00:38:00,613 என்ன? 394 00:38:00,614 --> 00:38:04,909 ஒன்றுமில்லை. நான் ஒருநாள் மெலனியுடன் பேசிக்கொண்டிருந்தேன்… 395 00:38:04,910 --> 00:38:08,121 என்ன? அவள் சொன்னாளா? 396 00:38:10,040 --> 00:38:13,126 என்னைப் பற்றி… நான் எங்கிருந்து வருகிறேன் என்பது பற்றி. 397 00:38:18,966 --> 00:38:23,387 ஷுகர், நீங்கள் ஓஹையோவைச் சேர்ந்தவர். அது எல்லோருக்கும் தெரியும். 398 00:38:29,560 --> 00:38:30,602 கவலைப்படாதீர்கள். 399 00:38:32,479 --> 00:38:36,149 என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று வரும்போது, எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருந்திருக்கிறீர்கள். 400 00:38:37,609 --> 00:38:39,570 குறைந்தபட்சம் நான் செய்யக்கூடியது அதைத் திருப்பி செய்வதுதான். 401 00:38:46,410 --> 00:38:47,619 கிட்டத்தட்ட. 402 00:38:49,288 --> 00:38:52,082 - உற்சாகமாக இருக்கிறீர்களா? - ஆம், கொஞ்சம் பதட்டமாகவும் கூட. 403 00:38:55,711 --> 00:38:58,547 நான் இன்று உங்களைப் பார்க்க வந்ததற்கு அது மட்டும் காரணம் இல்லை. 404 00:38:59,631 --> 00:39:00,715 சரி. 405 00:39:00,716 --> 00:39:03,552 ஒரு கேள்வி என்னை உறுத்திக்கொண்டே இருந்தது, 406 00:39:04,678 --> 00:39:07,055 அதை யாரிடம் கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. 407 00:39:07,681 --> 00:39:08,682 எனவே கேளுங்கள். 408 00:39:10,976 --> 00:39:12,186 நான் உங்களுக்கு எப்படித் தெரிகிறேன்? 409 00:39:13,979 --> 00:39:18,525 அதாவது நாம் கடைசியாக சந்தித்ததிலிருந்து. நான்… நான் வித்தியாசமாகத் தெரிகிறேனா? 410 00:39:19,693 --> 00:39:20,985 எவ்வளவு வித்தியாசமாக? 411 00:39:20,986 --> 00:39:22,738 என் நண்பர்கள் சிலர்… 412 00:39:24,364 --> 00:39:26,158 ஓஹையோவைச் சேர்ந்த நண்பர்கள், அவர்கள்… 413 00:39:27,201 --> 00:39:28,202 அவர்கள்… 414 00:39:30,120 --> 00:39:33,916 அவர்கள் என்னை ஒன்றிணைதல் பற்றி எச்சரித்தார்கள். 415 00:39:34,499 --> 00:39:37,419 ஒருவர் இங்கே எவ்வளவு காலம் தங்குகிறாரோ, அது அவரை அவ்வளவு மாற்றலாம். 416 00:39:39,004 --> 00:39:40,422 உங்கள் நண்பர்கள் சொல்வது சரியா? 417 00:39:42,841 --> 00:39:45,677 நான் இங்கே வந்ததிலிருந்து சில விஷயங்களைச் செய்திருக்கிறேன். விஷயங்கள்… 418 00:39:48,180 --> 00:39:51,058 என்னால் முடியும் என்று இதற்கு முன் நான் நினைக்காத விஷயங்கள். 419 00:39:51,934 --> 00:39:53,060 ம். 420 00:39:54,561 --> 00:39:58,190 சந்தேகம், கோபம், லட்சியம், பாவம். 421 00:39:59,274 --> 00:40:02,319 இது எல்லா இடங்களிலும் இருக்கிறது, அது வளரும். 422 00:40:04,071 --> 00:40:08,659 அது உங்களை பாதிக்காமல் தடுப்பது கடினம். ஒருவேளை சாத்தியமில்லாதது கூட. 423 00:40:11,578 --> 00:40:13,121 ஆனால் அது எல்லாம் மோசம் இல்லை. 424 00:40:15,916 --> 00:40:17,751 எங்களிடம் சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன. 425 00:40:21,046 --> 00:40:22,255 திரைப்படங்களைப் போல. 426 00:40:22,256 --> 00:40:23,840 சில திரைப்படங்களைப் போல. 427 00:40:23,841 --> 00:40:25,341 {\an8}ஹம்ப்ரி போகர்ட் 428 00:40:25,342 --> 00:40:26,676 அதோடு இன்னும் சிலர். 429 00:40:26,677 --> 00:40:27,844 {\an8}ஹாலிவுட் புலவார்டு 430 00:40:27,845 --> 00:40:29,179 அதோடு அந்தக் கடற்கரை, லேக்கர்ஸ் கூடைப்பந்து அணி. 431 00:40:29,847 --> 00:40:32,891 ஒரு லிமோசினில் வரப்போகும் அந்த நாய். 432 00:40:34,685 --> 00:40:38,564 ஆனால் நான் இவ்வளவுதான் சொல்வேன். அதை ஒரு பாராட்டாக சொல்கிறேன். 433 00:40:39,481 --> 00:40:41,942 கலிஃபோர்னியாக்காரர்களான எங்களைப் போல நீங்கள் ஒருபோதும் இருக்க மாட்டீர்கள். 434 00:40:44,194 --> 00:40:46,738 நீங்கள் ஓஹையோக்காரர்கள் போல கூட இல்லை என்று நான் பந்தயம் கட்டுவேன். 435 00:40:50,325 --> 00:40:51,827 நீங்கள் எனக்கு எப்படித் தோன்றுகிறீர்கள்? 436 00:40:53,704 --> 00:40:56,039 நீங்கள் ஷுகர் போல தெரிகிறீர்கள். 437 00:41:08,552 --> 00:41:09,635 நன்றி. 438 00:41:09,636 --> 00:41:11,471 எதற்கு? அது உங்கள் நாய். 439 00:41:15,267 --> 00:41:16,268 ஹேய். 440 00:41:16,810 --> 00:41:17,936 ஹாய், நண்பா. 441 00:41:29,573 --> 00:41:31,992 நான் தயாரானதும் தன்னைத் தேடி வரும்படி என் சகோதரி சொன்னாள். 442 00:41:33,327 --> 00:41:35,120 அதற்கு என்ன அர்த்தம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. 443 00:41:36,038 --> 00:41:37,121 ஆனால் இப்போதைக்கு… 444 00:41:37,122 --> 00:41:38,123 ஹாலிவுட் 445 00:41:38,707 --> 00:41:39,875 …நான் செட்டில் ஆகிறேன். 446 00:41:41,376 --> 00:41:42,669 என் நாய் எனக்கு திரும்ப கிடைத்துவிட்டது. 447 00:41:43,712 --> 00:41:46,214 நாங்கள் சில புதிய நபர்களை சந்திக்கப் போகிறோம். 448 00:41:46,215 --> 00:41:47,715 நான் சில திரைப்படங்கள் பார்ப்பேன். 449 00:41:47,716 --> 00:41:49,343 நாங்கள் நாய் பூங்காவிற்குப் போவோம். 450 00:41:51,428 --> 00:41:52,513 அதுதான் திட்டம். 451 00:41:53,514 --> 00:41:55,098 ஒருவேளை புதிய வழக்கைக் கண்டுபிடிக்கலாம். 452 00:41:55,724 --> 00:41:56,934 ஒருவேளை கண்டுபிடிக்காமல் போகலாம். 453 00:41:58,268 --> 00:41:59,686 அது எப்படி போகிறது என்று பார்ப்போம். 454 00:42:09,071 --> 00:42:10,364 எனக்குத் தெரிந்ததெல்லாம்… 455 00:42:11,782 --> 00:42:13,075 இந்த இடம்… 456 00:42:15,202 --> 00:42:17,913 இந்த மக்கள்… 457 00:42:22,084 --> 00:42:23,335 வீட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது. 458 00:43:48,545 --> 00:43:50,464 வசனத் தமிழாக்கம் அருண்குமார்