1 00:00:24,566 --> 00:00:28,487 ஸ்கல் தீவு 1973 2 00:00:42,501 --> 00:00:43,502 ஹே, நண்பா. 3 00:00:44,044 --> 00:00:46,547 இதை நீ பார்ப்பாயா என்று தெரியவில்லை. பார்ப்பாய் என்று நம்புகிறேன். 4 00:00:46,547 --> 00:00:49,091 உண்மையில், எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இறந்திருக்கலாம், 5 00:00:49,758 --> 00:00:51,635 அதற்கு நீ அதிகம் வருத்தப்படாமல் போகலாம். 6 00:00:53,136 --> 00:00:54,513 மன்னிக்கவும், இது சுருக்கமாக இருக்க வேண்டும். 7 00:00:54,513 --> 00:00:56,515 உன்னிடமிருந்து பறித்த விஷயங்களுக்காக, நீ என்னை மன்னிக்காமல் போகலாம், 8 00:00:56,515 --> 00:00:59,643 கடந்த காலத்திற்குச் சென்று, நான் செய்த தவறுகளையெல்லாம் என்னால் சரிசெய்ய முடியாது. 9 00:01:00,435 --> 00:01:02,771 ஆனால், எதிர்காலத்திற்காக ஏதாவதொன்றை நான் விட்டுச் செல்லலாம். 10 00:01:03,272 --> 00:01:04,272 ஒரு பாரம்பரியம். 11 00:01:05,147 --> 00:01:07,109 அது தகுதியானதுதான் என்பதை நீ உணர்வாய். 12 00:02:59,972 --> 00:03:01,473 {\an8}ராண்டா, டபுள்யூ. ஜே-இன் சொத்து 13 00:03:15,696 --> 00:03:17,447 {\an8}ஜப்பானின் கடல் 14 00:03:22,244 --> 00:03:23,871 அதை இழு. 15 00:03:24,413 --> 00:03:25,914 இழு. 16 00:03:26,540 --> 00:03:27,749 விடு. 17 00:03:51,648 --> 00:03:53,275 என்ன செய்கிறாய்? போய் வேலையைப் பாரு! 18 00:03:53,901 --> 00:03:55,027 போய் வேலையைப் பாரு! 19 00:05:17,776 --> 00:05:19,862 “காட்ஸில்லா” கதாபாத்திரத்தைத் தழுவியது 20 00:06:19,463 --> 00:06:20,672 நாம் காத்திருக்க வேண்டும். 21 00:06:25,969 --> 00:06:27,846 டோக்கியோவிற்கு வரவேற்கிறோம். 22 00:06:27,846 --> 00:06:31,433 தூய்மைப்படுத்த வேண்டும், தயவுசெய்து உட்காருங்கள். நன்றி. 23 00:06:35,145 --> 00:06:38,106 பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நமக்கு காண்பிப்பதற்கான மாயை இது. 24 00:06:39,107 --> 00:06:42,778 கிருமி பரவாமலிருக்க மருந்து தெளித்தால், இன்னொரு மான்ஸ்டர் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் போல. 25 00:07:12,850 --> 00:07:14,768 {\an8}வெளியேற்றும் பாதை 26 00:07:37,875 --> 00:07:39,710 ஜப்பானுக்கு நீங்கள் வருகை தருவதன் நோக்கம் என்ன? 27 00:07:42,212 --> 00:07:44,464 என் அப்பா சமீபத்தில் இறந்துவிட்டார். அவருடைய கணக்கு வழக்குகளை முடிக்க வந்துள்ளேன். 28 00:07:44,464 --> 00:07:47,259 அப்படியானால், இது குடும்ப பிசினஸ் விஷயம். 29 00:07:50,596 --> 00:07:52,639 இந்த கண்ணாடித் தட்டுக்களின் மேல் உங்கள் விரல்களை வையுங்கள். 30 00:07:58,729 --> 00:07:59,938 சரி. 31 00:07:59,938 --> 00:08:02,482 ஏப்ரல் 1 2015 32 00:08:03,734 --> 00:08:05,152 உங்களுடைய இழப்பிற்காக வருந்துகிறேன். 33 00:08:26,381 --> 00:08:27,883 என்னை இந்த விலாசத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், ப்ளீஸ். 34 00:08:38,143 --> 00:08:40,770 டோக்கியோ 2015 35 00:08:56,370 --> 00:08:58,038 தயாராகத்தான் இங்கே வந்திருக்கிறீகள் போலும். 36 00:08:58,038 --> 00:09:01,500 அரசு ட்ரோன்களிலும் ஏவுகணைகளிலும் நிறைய செலவழித்துக் கொண்டு இருக்கிறது. 37 00:09:01,500 --> 00:09:02,918 நீங்கள் வியாபாரத்தில் இருக்கிறீர்களா? 38 00:09:03,627 --> 00:09:04,670 வியாபாரமா? 39 00:09:04,670 --> 00:09:07,214 மான்ஸ்டருக்கான முன்னேற்பாடு. இப்போது அதுதான் பெரிய பிசினஸ். 40 00:09:09,132 --> 00:09:11,802 ஒருவருடைய சோகத்தில் ஆதாயமடைய மக்கள் ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். 41 00:09:11,802 --> 00:09:13,720 துக்கத்தைவிட ஆதாயம்தான் அதிகம். 42 00:09:15,097 --> 00:09:17,683 - என்ன சொல்ல வருகிறீர்கள்? - சான் ஃபிரான்சிஸ்கோவின் விஷயம் ஒரு புரளி. 43 00:09:17,683 --> 00:09:19,518 அது கணினி வைத்து உருவாக்கப்பட்ட படம். 44 00:09:21,436 --> 00:09:24,815 வந்து, அது உண்மையிலேயே நம் கண்களைத் திறந்த விஷயம். 45 00:09:25,566 --> 00:09:27,943 இன்னும் இருக்கிறது. என்னிடம் ஒரு பாட்காஸ்ட் இருக்கு. 46 00:10:06,940 --> 00:10:07,774 ஹாய், அம்மா. 47 00:10:07,774 --> 00:10:10,235 ஹே. நீ தரை இறங்கியதும் அழைக்கிறேன் என்று சொல்லியிருந்தாயே. 48 00:10:10,235 --> 00:10:12,779 - நான் இப்போது தான் இறங்கினேன். - ஆமாம், இரண்டு மணிநேரம் முன்பு. 49 00:10:13,780 --> 00:10:15,949 - கேட், நான் காத்துக்கொண்டே... - குடியேற்ற விசாரணை நடைமுறைகள், சோசதனை 50 00:10:15,949 --> 00:10:19,077 - எல்லாம் முடித்து டாக்ஸி பிடிக்க வேண்டியிருந்தது. - அடக் கடவுளே. 51 00:10:19,912 --> 00:10:22,414 சரி. அப்படியானால், நீ இப்போது அங்கேதானே இருக்கிறாய்? 52 00:10:23,707 --> 00:10:24,708 நான் இங்கேதான் இருக்கிறேன். 53 00:10:26,210 --> 00:10:27,461 அப்புறம்? 54 00:10:27,461 --> 00:10:28,879 அப்புறம் என்ன, அம்மா? 55 00:10:29,588 --> 00:10:32,549 யாராவது தன்னை வீட்டிற்குக் கூட்டிப் போவார்கள் என்று இங்கேயே காத்திருப்பார் என நினைக்கிறீர்களா? 56 00:10:33,050 --> 00:10:35,385 உன் திட்டத்தின் படியே நாம் நடந்திருக்க வேண்டுமோ? 57 00:10:35,385 --> 00:10:38,639 இங்கேயே உட்கார்ந்து, சுவரை வெறித்துக்கொண்டு, என்ன செய்வதென தெரியாமலிருக்கணுமா? 58 00:10:39,264 --> 00:10:41,433 கேட், கேட்? 59 00:10:41,975 --> 00:10:44,228 - நான் திரும்ப அழைக்கிறேன். - கேட், ஃபோனை வைத்துவிடாதே... 60 00:11:51,295 --> 00:11:52,296 யார் நீ? 61 00:11:52,588 --> 00:11:53,589 இங்கு என்ன செய்கிறாய்? 62 00:11:53,589 --> 00:11:55,215 - நீங்கள் யார்? - உனக்கு என்ன வேணும்? 63 00:11:55,674 --> 00:11:56,508 நிறுத்து! 64 00:11:56,508 --> 00:11:58,594 - அதைக் கீழே வை! அதைக் கீழே வை! - இது யாருடைய வீடு? 65 00:11:58,594 --> 00:11:59,845 என்ன ஆச்சு? 66 00:12:00,304 --> 00:12:01,180 திடீரென அவள் அங்கே நின்றுகொண்டிருந்தாள்! 67 00:12:01,638 --> 00:12:03,348 அவளுக்கு மனநிலை சரியில்லை போலும். 68 00:12:03,557 --> 00:12:04,766 நீ என்ன செய்கிறாய்? 69 00:12:04,766 --> 00:12:06,143 நீ ஏன் இந்தப் படங்களை வைத்திருக்கிறாய்? 70 00:12:06,143 --> 00:12:07,936 - இவை குடும்பத்தினரின் படங்கள். - என்ன? 71 00:12:07,936 --> 00:12:11,106 - இங்கு எப்படி நுழைந்தாய்? - என்னிடம் சாவி இருக்கு. 72 00:12:11,857 --> 00:12:14,193 - அது உனக்கு எப்படிக் கிடைத்தது? - என் அப்பாவின் மேஜையில் இருந்து, 73 00:12:14,193 --> 00:12:16,653 அவர் பேரில் உள்ள, இந்த வீட்டின் குத்தகை ஒப்பந்தத்துடன் சாவிகளும் கிடைத்தன. 74 00:12:16,653 --> 00:12:19,323 உன் அப்பா யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது எங்களுடைய வீடு. 75 00:12:21,074 --> 00:12:23,160 இவர்தான் என் அப்பா. 76 00:12:27,247 --> 00:12:28,123 கென்டாரோ... 77 00:12:31,001 --> 00:12:32,044 யார் இவள்? 78 00:12:34,213 --> 00:12:36,715 கஜகஸ்தான் 1959 79 00:12:40,427 --> 00:12:42,721 - மோசக்கார... - நான் ஓட்டட்டுமா? 80 00:12:43,305 --> 00:12:47,267 கொஞ்சம் நல்ல வண்டி மாதிரி எதையாவது எடுத்து வந்திருக்கலாம். 81 00:12:47,267 --> 00:12:50,354 “இது பொருத்தமாக இருக்கும்” என்றாயே. இதற்கு மாட்டு வண்டியே மேல் இல்லையா? 82 00:12:50,854 --> 00:12:51,813 ஆமாம், இருக்கலாம். 83 00:12:52,397 --> 00:12:54,691 அதற்குக் கொஞ்சம் வைக்கோல் போடு. இந்தளவுக்கு தொந்தரவு கொடுக்காமலாவது இருக்கும். 84 00:12:58,779 --> 00:13:00,322 பில்லி, இதில் பெடல் இடது பக்கம் இருக்கு. 85 00:13:00,322 --> 00:13:04,493 ஹே, பின்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டு, எதற்கு வெட்டிக்கதை பேசுகிறாய்? 86 00:13:06,620 --> 00:13:08,372 - அடுத்த இடது பெடல். - பின் இருக்கையில் இருக்கிறாய். 87 00:13:11,124 --> 00:13:13,502 - இது சரியான சாலை தான் என உறுதியாக தெரியுமா? - நான் பார்க்கிறேன். 88 00:13:17,965 --> 00:13:19,633 5,000 மில்லிரெம்கள். 89 00:13:21,218 --> 00:13:22,719 6,000. 90 00:13:23,679 --> 00:13:25,055 நாம் சரியான பாதையில்தான் இருக்கிறோம். 91 00:13:25,764 --> 00:13:28,350 பாழாய்ப் போச்சு. குழந்தைகள் பெற்றுக்கொள்ள மட்டும் யோசித்துவிடாதே. 92 00:13:29,393 --> 00:13:31,103 உண்மையாகவா? எப்பவுமே வேண்டாமா? 93 00:13:33,188 --> 00:13:35,941 ஒருகாலத்தில் அதைப் பற்றி நீ கொஞ்சமாவது யோசித்து சந்தோஷப்பட்டாய். 94 00:13:35,941 --> 00:13:38,861 ரொம்பவே சந்தோஷம் தரும் யோசனையாக இருந்ததெல்லாம் ஒரு காலம். 95 00:13:41,405 --> 00:13:42,322 ப்ளீஸ், இதெல்லாம் 96 00:13:42,322 --> 00:13:45,534 சரியான பெண்ணைச் சந்திக்காததால்தான் என்று சொல்லி சங்கடப்படுத்த வேண்டாம். 97 00:13:46,910 --> 00:13:48,829 இதெல்லாம் உங்களால்தான் நண்பர்களே இதை சாதாரண விஷயம் போல ஆக்கிவிட்டீர்கள். 98 00:13:48,829 --> 00:13:53,834 ஒரு அருமையான குழந்தையை வளர்த்து, மோனார்க்கையும் காப்பாற்றுவது என்பது சின்ன விஷயம் அல்ல. 99 00:13:54,793 --> 00:13:56,587 நாம் செய்த அனைத்தையும், ஒன்றாகச் செய்திருக்கிறோம். 100 00:13:58,839 --> 00:14:00,257 ஆமாம். 101 00:14:04,178 --> 00:14:07,389 7,000 மில்லிரெம்கள். மேலும் அதிகரிக்கிறது. 102 00:14:09,433 --> 00:14:11,226 சரி. வேலைக்கான நேரம் வந்துவிட்டது. 103 00:14:34,249 --> 00:14:36,043 முடிவுக்கு வந்தாகிவிட்டது. 104 00:14:37,044 --> 00:14:39,213 இவையெல்லாம் ஓரளவாவது நமக்குப் பாதுகாப்பு கொடுக்கும். 105 00:14:39,796 --> 00:14:42,674 அது, எதிலிருந்து நமக்குப் பாதுகாப்பு தேவை என்பதைப் பொறுத்தது. 106 00:14:43,217 --> 00:14:45,177 மிகப் பெரிய டைட்டனோடு மோத வேண்டும் என்று பயப்படுகிறாயா? 107 00:14:46,136 --> 00:14:49,181 - உன்னுடைய சாகச உணர்வு எங்கே போனது? - ராணுவம் எனக்கு ஒரு வேலை கொடுத்தது, 108 00:14:49,181 --> 00:14:51,016 அது நம் ஆராய்ச்சி மூளையை உயிர்ப்போடு வைத்திருக்கு. 109 00:14:51,016 --> 00:14:53,894 சரியா? அப்படியானால், ஒரு மாற்றத்துக்காக, தயவுசெய்து, நான் சொல்வதைப் பின்பற்று. 110 00:14:53,894 --> 00:14:55,687 சரி, சார். 111 00:14:56,647 --> 00:14:57,648 சரி. 112 00:14:58,148 --> 00:15:00,192 நெட்வொர்க் ஒழுங்காக இருந்தால், நாம் திரும்பி வந்து, 113 00:15:01,860 --> 00:15:03,654 நம் பயணம் வெறும் யதார்த்தமற்ற கற்பனை இல்லை என நிரூபிப்போம். 114 00:15:03,654 --> 00:15:04,738 சரி. 115 00:15:05,405 --> 00:15:07,741 தகுதியானவற்றுக்குத்தான் நாம் தியாகம் செய்தோம் என்று இது காண்பிக்கும். 116 00:15:32,516 --> 00:15:33,642 கியரை எடு. 117 00:15:46,655 --> 00:15:49,283 பில்லி, நான் செய்வது போலச் செய். 118 00:15:50,033 --> 00:15:51,368 இதோ, வருகிறேன். 119 00:16:16,226 --> 00:16:17,311 உங்கள் ஆயுதங்களைக் கீழே போடுங்கள்! 120 00:16:18,353 --> 00:16:20,355 அமைதி. அமைதி. 121 00:16:20,355 --> 00:16:21,481 இட... கெய்! 122 00:16:23,525 --> 00:16:25,611 கெய், உன் முகமூடியை கழற்றாதே. 123 00:16:25,903 --> 00:16:27,279 இது தடை செய்யப்பட்ட பகுதி. 124 00:16:29,907 --> 00:16:30,908 நீங்களெல்லாம் யார்? 125 00:16:34,661 --> 00:16:35,579 நாங்கள் விஞ்ஞானிகள். 126 00:16:36,747 --> 00:16:37,998 நாங்கள் உதவிசெய்யவே விரும்புகிறோம். 127 00:16:39,166 --> 00:16:40,751 இதை எல்லாம் நீ சாப்பிட்டால் உனக்கு நோய் வந்துவிடும். 128 00:16:41,919 --> 00:16:43,837 உன் குடும்பம் இறக்க நேரிடும். 129 00:16:45,797 --> 00:16:47,132 “மாசுபட்டது” என்றா சொல்கிறீர்கள்? 130 00:16:48,425 --> 00:16:50,093 இது ஆர்வமுள்ளவர்களை 131 00:16:50,385 --> 00:16:52,971 பயமுறுத்துவதற்கான ஒரு மாயாஜாலக் கதை. 132 00:16:54,306 --> 00:16:55,349 ஏன்? 133 00:16:55,557 --> 00:16:56,850 மக்கள் எதைப் பற்றி ஆர்வத்தோடு இருக்கிறார்கள்? 134 00:17:01,813 --> 00:17:03,023 அந்த காலத்து ஆட்கள் என்ன சொல்வார்கள் என்றால்... 135 00:17:03,982 --> 00:17:06,108 நேரே நரகத்துக்கு இட்டுச் செல்லும் விதத்தில், பூமிக்குள் அரசு 136 00:17:06,108 --> 00:17:07,402 ஒரு ஓட்டை போட்டு வைத்துள்ளது. 137 00:17:09,445 --> 00:17:10,864 அதை நீ நம்புகிறாயா? 138 00:17:13,450 --> 00:17:14,785 நீங்களே பார்த்து, தெரிந்துகொள்ளுங்கள். 139 00:17:30,801 --> 00:17:32,511 நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். 140 00:17:33,428 --> 00:17:34,721 நன்றி, பில்லி. 141 00:18:00,747 --> 00:18:01,957 ஏதும் பிரச்சினையா? 142 00:18:04,084 --> 00:18:05,794 ஹே, இப்படி செய்வதை நிறுத்துகிறாயா? 143 00:18:07,254 --> 00:18:09,381 ரேடியேஷன் இல்லை என்பதுதான் பிரச்சினை. 144 00:18:11,133 --> 00:18:12,426 அப்படியிருக்க வாய்ப்பே இல்லையே. 145 00:18:12,426 --> 00:18:16,054 1,000 மைல் தொலைவிலேயே இதைக் கண்டுபிடித்தோம். நாம் ஆரம்ப நிலைக்கே வந்திருக்க வேண்டும். 146 00:18:16,847 --> 00:18:17,681 ஆனால், அப்படியில்லையே. 147 00:18:21,268 --> 00:18:24,563 அந்தப் பையன் சொல்வது சரி. இது ஒரு மாயாஜாலக் கதைதான். 148 00:18:25,063 --> 00:18:26,940 சரி. எனில், நாம் இந்த பொருட்களை அகற்றுகிறோமா இல்லையா? 149 00:18:26,940 --> 00:18:28,692 - இங்கே நரகத்தைவிட அதிக உஷ்ணமாக இருக்கு. - இல்லை. 150 00:18:28,692 --> 00:18:29,776 ஆமாம். 151 00:18:33,238 --> 00:18:34,615 பிரமாதம். இப்போது, நீ சாக முயற்சிக்கிறாயா? 152 00:18:34,615 --> 00:18:36,283 வந்து, டாக்டர் பிரச்சினை இல்லை என்கிறார், எனவே... 153 00:18:36,283 --> 00:18:39,161 - நானும் டாக்டர்தான் தெரியுமா? - நிச்சயமாக. ஆமாம், எனக்குத் தெரியும். 154 00:18:57,930 --> 00:18:59,556 அவளுடைய முக ஜாடை அவரை மாதிரி இல்லை. 155 00:19:00,807 --> 00:19:01,808 ஆனால்... 156 00:19:01,808 --> 00:19:03,435 ...அவருடைய சாவி அவளிடம் இருக்கு. 157 00:19:04,144 --> 00:19:05,395 ஆனால், அவருடைய முக ஜாடை இல்லை. 158 00:19:07,064 --> 00:19:08,190 அதை நிரூபி. 159 00:19:10,359 --> 00:19:13,570 உனது ஆதாரம் எங்கே? கொஞ்சம் ஃபோட்டோக்கள் தானா? 160 00:19:15,030 --> 00:19:16,281 என்னிடமும் ஃபோட்டோக்கள் உள்ளன. 161 00:19:21,203 --> 00:19:23,664 இது, நாங்கள் ரெட்வுட்ஸில் கேம்ப் போனபோது எடுத்தது. 162 00:19:24,373 --> 00:19:27,960 அவருக்கு ஓக் மரத்தால் ஒவ்வாமை வந்து, கைகளில் எல்லாம் சிவப்பாகத் தடித்துவிட்டது. 163 00:19:29,211 --> 00:19:31,922 அது அவரை எரிச்சலூட்டியது. ஏதாவது ஞாபகம் வருகிறதா? 164 00:19:34,716 --> 00:19:36,677 இதுதான் எங்கள் வீட்டின் கொல்லைப்புறம். 165 00:19:37,886 --> 00:19:39,930 என் ஐந்து வயதில், நான் விளையாடுவதற்காக அவர் ஒரு பொம்மை வீட்டைக் கட்டினார். 166 00:19:42,307 --> 00:19:45,185 ஒரு வாரஇறுதி முழுவதையும் அவர் வீட்டிலேயே செலவிட்டார். 167 00:19:47,437 --> 00:19:48,897 இதோ ஒரு நல்ல ஆதாரம். 168 00:19:49,606 --> 00:19:52,359 அவர்களின் திருமணநாள் பரிசாக அவர்களுக்கு சூரிய அஸ்தமனக் கப்பல் டிக்கெட் வாங்கித் தந்தேன். 169 00:19:53,443 --> 00:19:54,528 முப்பது வருடங்கள். 170 00:19:55,737 --> 00:19:56,989 அது ஒரு சாதனை. 171 00:19:58,740 --> 00:20:01,660 - உங்களுக்கு திருமணமாகி எவ்வளவு காலம் ஆகுது? - அவங்களிடம் அப்படி பேசாதே. 172 00:20:02,828 --> 00:20:04,454 நான் அவங்களை தவறாக நினைக்கவில்லை. 173 00:20:04,454 --> 00:20:07,624 அவர் யாரை ஏமாற்றியிருக்கிறார் என்பதை அறியகூட நீ விரும்பவில்லையா? 174 00:20:07,624 --> 00:20:09,376 உன் அம்மாவையா அல்லது என் அம்மாவையா? 175 00:20:14,173 --> 00:20:16,175 பொறு... உனக்கு என்னதான் வேண்டும்? 176 00:20:17,676 --> 00:20:18,677 கென்டாரோ... 177 00:20:18,677 --> 00:20:20,345 ...என்ன நடக்கிறது? 178 00:20:22,222 --> 00:20:25,058 எங்களுக்கு நீ ஏதாவது சொல்ல முடியுமா? 179 00:20:25,851 --> 00:20:28,187 நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். 180 00:20:29,313 --> 00:20:30,397 எதிர்பார்த்து, 181 00:20:31,732 --> 00:20:36,653 ஆனால், ஹிரோஷி போய்விட்டார். 182 00:20:53,837 --> 00:20:57,758 நான் திடீரென்று இங்கே வந்ததற்கு மன்னிக்கவும். நடந்ததை நாம் மறந்துவிடுவோம். 183 00:20:57,758 --> 00:20:59,218 என்ன விளையாடுகிறாயா? 184 00:20:59,218 --> 00:21:01,678 தயவுசெய்து, நான் புரிந்துகொள்ள உதவேன். 185 00:21:07,184 --> 00:21:08,560 அதற்குத்தான் ஆசைப்படுகிறேன். 186 00:21:10,145 --> 00:21:13,148 இதோ, இதெல்லாம் உங்களுடையவை. 187 00:21:28,413 --> 00:21:29,873 எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. 188 00:21:30,707 --> 00:21:32,334 ஒவ்வொரு முறையும் ஏதாவது சின்னதாகக் கிளம்பும், 189 00:21:32,334 --> 00:21:35,045 அப்புறம், ஏதோ ஒன்று அதை முழுகடித்து, அது அப்படியே மறைந்துவிடும். 190 00:21:35,879 --> 00:21:37,339 ஆமாம். அல்லது சாப்பிட்டுவிடும். 191 00:21:40,467 --> 00:21:42,803 என்ன? நாம் இதற்கு முன் இதைப் பார்த்ததில்லை என்று சொல்ல முடியாதே. 192 00:21:42,803 --> 00:21:46,181 “அடாமிக் பாம்” என்றாலே “அபிடைஸர் பாம்” என்று இவையெல்லாம் நினைக்கின்றன. 193 00:21:47,474 --> 00:21:49,893 அட, விடு. கொஞ்சம் அறிவியல் பற்றியும் பார்ப்போமே. 194 00:22:09,955 --> 00:22:10,956 இந்தா. 195 00:22:20,549 --> 00:22:22,634 சரி. கடைசி வெடிபொருளையும் பொருத்தியாயிற்று. 196 00:22:22,634 --> 00:22:24,261 நமக்கு இன்னும் அதிக இடம் தேவைப்படும். 197 00:22:24,261 --> 00:22:26,221 இவை 50 மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட வேண்டியவை. 198 00:22:26,221 --> 00:22:28,473 அது, இவற்றைவிடப் பெரியவைகளுக்கு. 3.8 மெகாஜூல் சக்தி கொண்டவற்றிற்கு. 199 00:22:28,473 --> 00:22:30,976 - அதைத்தானே கொண்டு வந்திருக்கிறோம். - இல்லை, இவை 2.1 மெகாஜூல். 200 00:22:30,976 --> 00:22:34,229 இன்னும் அதிக ஆழம் வேண்டுமானால், அதிகபட்சம் 30 மீட்டரில்தான் ஒன்றன் மேல் ஒன்றாகக் கிடைக்கும். 201 00:22:34,229 --> 00:22:35,647 நாம் டைமண்ட் கிரிட்டை பயன்படுத்தினால்தான். 202 00:22:35,647 --> 00:22:37,608 - இது வட்டமாகப் பரவியுள்ளது - வெடிக்கப் போகிறது. 203 00:22:52,998 --> 00:22:55,709 கொஞ்சம் பொறு. அது... இரு. 204 00:22:55,709 --> 00:22:56,627 - வெற்றிடங்கள். - என்ன? 205 00:22:56,627 --> 00:22:58,629 அறைகள். ஆழமான பாறைப் பள்ளத்தில். 206 00:22:59,838 --> 00:23:01,465 அங்கே கீழே என்னவோ இருக்கிறது. 207 00:23:01,465 --> 00:23:02,716 இவை பெரிய அளவாக உள்ளன. 208 00:23:04,009 --> 00:23:05,135 அப்படித்தான் இருக்கிறது. 209 00:23:06,094 --> 00:23:07,679 இதைத்தான் நாம் தேடிக்கொண்டு இருந்தோம். 210 00:23:09,014 --> 00:23:09,848 ஆமாம். 211 00:23:32,412 --> 00:23:33,413 இது அதுதான். 212 00:23:41,922 --> 00:23:43,257 ஹாய், அம்மா. 213 00:23:43,257 --> 00:23:44,967 கேட், நீ ஏன் திரும்பவும் ஃபோன் பண்ணவில்லை? 214 00:23:45,884 --> 00:23:47,803 - என்ன ஆனது? - நமக்கானது எதுவும் இங்கு இல்லை. 215 00:23:49,304 --> 00:23:50,639 என்ன? அங்கே வேறு யாராவது இருக்கிறார்களா? 216 00:23:52,432 --> 00:23:53,600 - கேட்? - உங்களுக்குத் தெரியுமா? 217 00:23:54,852 --> 00:23:55,853 என்ன தெரியுமா? 218 00:23:58,021 --> 00:23:59,189 - கேட்? - நான் போக வேண்டும். 219 00:23:59,773 --> 00:24:02,943 கேட், என்ன கண்டுபிடித்தாய்? அது யாருடைய வீடு? 220 00:24:02,943 --> 00:24:03,944 அது அவருடையது. 221 00:24:05,279 --> 00:24:06,363 அம்மா, இணைப்பில் இருக்கீங்களா? 222 00:24:07,739 --> 00:24:09,074 அம்மா? அம்மா! 223 00:24:25,674 --> 00:24:27,134 - எழுந்திரு. - என்ன நடக்கிறது? 224 00:24:27,134 --> 00:24:29,469 - இது ஆரம்பக்கட்ட எச்சரிக்கை. - எதற்கான எச்சரிக்கை? 225 00:24:29,970 --> 00:24:30,971 காட்ஸில்லா. 226 00:24:41,773 --> 00:24:44,902 நியமிக்கப்பட்ட தங்குமிடம் 227 00:24:44,902 --> 00:24:47,487 {\an8}காட்ஸில்லா வெளியேற்றும் பகுதி 228 00:25:09,259 --> 00:25:12,679 - இது பயிற்சியாக இருக்கக்கூடும். - நாம் எவ்வளவு நாள் இங்கே தங்க வேண்டும்? 229 00:25:12,679 --> 00:25:14,056 நாம் இங்கேயே காத்திருக்கணும்... 230 00:25:14,056 --> 00:25:15,849 “எல்லாம் சரியாகும் வரைக்கும்.” 231 00:25:16,683 --> 00:25:17,768 இது பயிற்சியாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? 232 00:25:17,768 --> 00:25:21,021 நீ சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து வந்திருக்கிறாய். எங்களைவிட உனக்கு இன்னும் நன்றாகத் தெரியும். 233 00:25:31,865 --> 00:25:34,076 அவர் உங்களோடு இருந்தாரா என்று அம்மாவுக்குத் தெரிய வேண்டுமாம். 234 00:25:34,076 --> 00:25:35,160 என்ன? 235 00:25:35,786 --> 00:25:37,663 அது நடந்தபோது, அவர் உங்களுடன் இருந்தாரா? 236 00:25:41,041 --> 00:25:42,584 அது இப்போது தெரிந்து என்ன ஆகப்போகிறது? 237 00:25:42,584 --> 00:25:44,253 உங்களோடு இல்லாமல், அவர் எங்களோடு இருந்திருந்தால், 238 00:25:44,253 --> 00:25:46,004 விஷயமே மாறியிருக்கும் என உனக்குத் தோன்றவில்லையா? 239 00:25:49,466 --> 00:25:50,676 இல்லை, அவர் என்னுடன் இல்லை. 240 00:26:04,565 --> 00:26:06,817 இல்லை, இல்லை. ஐயோ. உங்களுக்கு ஒன்றுமில்லையே? 241 00:26:09,653 --> 00:26:12,447 எல்லோரும் கேளுங்கள், இது சரியாகிவிடும். 242 00:26:13,407 --> 00:26:14,741 இங்கிருந்து உங்களை வெளியேற்றப் போகிறேன். 243 00:26:15,617 --> 00:26:18,829 ஒன்றும் பிரச்சினையில்லை. எல்லோரும் என் பின்னால் வாருங்கள். என் பின்னால் வாருங்கள்! 244 00:26:35,137 --> 00:26:36,930 குழந்தைகளே! சீக்கிரம் வாங்க! 245 00:26:37,431 --> 00:26:39,516 நான் உன்னைப் பிடித்துவிட்டேன். பரவாயில்லை. சீக்கிரம். 246 00:26:41,935 --> 00:26:42,936 பரவாயில்லை. சீக்கிரம். 247 00:26:48,400 --> 00:26:50,319 வேண்டாம்! வேண்டாம்! ஓ! 248 00:26:58,911 --> 00:27:00,287 இல்லை! 249 00:27:00,287 --> 00:27:03,582 நான் போக வேண்டும்! நான் போக வேண்டும். மன்னிக்கவும். வழிவிடுங்கள். 250 00:27:03,582 --> 00:27:06,543 நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். நான் போகணும். என்னை விடுங்கள்! 251 00:27:36,281 --> 00:27:37,282 நான் நலம்தான். 252 00:27:39,701 --> 00:27:40,702 எனக்கு ஒன்றுமில்லை. 253 00:28:10,315 --> 00:28:11,733 அடச்சே. 254 00:28:11,733 --> 00:28:13,861 கண்டிப்பாக அங்கே கீழே ஏதோ இருக்கிறது. 255 00:28:13,861 --> 00:28:15,654 எம்.யூ.டி.ஓ. சிலவற்றின் புதிய வடிவம். 256 00:28:16,280 --> 00:28:17,781 அவை கருமுட்டை போலத் தெரிகிறது. 257 00:28:18,490 --> 00:28:21,451 லார்வா மாதிரி. கிட்டத்தட்ட மழலையர் காப்பகம் மாதிரி. 258 00:28:21,451 --> 00:28:22,536 ஆமாம். 259 00:28:23,412 --> 00:28:27,457 இது ஒரு காப்பகமாக இருந்தால், அம்மா தொலைவில் இருக்க முடியாது, சரிதானே? 260 00:28:28,041 --> 00:28:29,793 அவற்றின் மரபணுவின் மாதிரியை நாம் பெற வேண்டும். 261 00:28:31,837 --> 00:28:33,172 ஆக, நீ அங்கே போக விரும்புகிறாயா? 262 00:28:34,923 --> 00:28:38,635 ஆமாம். அதாவது, அவை செயலற்று இருப்பது மாதிரி தெரிகிறது, இல்லையா? 263 00:28:40,762 --> 00:28:41,680 அப்படித் தோன்றுகிறதா? 264 00:28:41,680 --> 00:28:44,391 ஒரு புதுவகை இனத்தைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம், லீ. 265 00:28:44,391 --> 00:28:48,729 நம்மால் என்னவெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் விடக்கூடாது. 266 00:28:48,729 --> 00:28:51,899 நம்மால் முடியும். அது நம்மை ஒருவழி பண்ணும் வரைக்கும் நம்மால் முடியும்தான். 267 00:28:51,899 --> 00:28:53,066 அப்புறம் ஏன் நாம இங்கு வந்தோம்? 268 00:28:55,944 --> 00:28:57,279 நான் நினைத்தேன், நாம்... 269 00:28:59,156 --> 00:29:01,116 இதைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை, சரியா? 270 00:29:01,116 --> 00:29:03,243 பில்லி சொல்வது சரிதான். நாம் வெறும் கையோடு திரும்பிப் போகப் போவதில்லை. 271 00:29:03,827 --> 00:29:04,912 நீ என்ன செய்கிறாய்? 272 00:29:04,912 --> 00:29:07,956 - எனக்கு மாதிரித் துகள்கள் பற்றித் தெரியும். - கெய், இந்தக் கம்பிகள் மேல் ஏறி வா. 273 00:29:07,956 --> 00:29:09,458 - அட, வா. - மூவரில் நான்தான் ஒல்லியானவள். 274 00:29:09,458 --> 00:29:11,210 நான் மாட்டிக்கொண்டால், நீங்கள் இருவரும் என்னை மேலே இழுத்துவிடலாம். 275 00:29:11,210 --> 00:29:14,046 சரி. நாங்கள் ஒன்றும் உன்னை விட்டுவிட மாட்டோம். 276 00:29:14,046 --> 00:29:15,172 வேண்டாம். 277 00:29:15,797 --> 00:29:16,965 என்னை விட்டுவிட மாட்டாயே? 278 00:29:18,342 --> 00:29:19,343 பில்லி. 279 00:29:23,680 --> 00:29:26,850 அவள் சரியாகச் சொல்கிறாள். அவளால்தான் இதைச் செய்ய முடியும். 280 00:29:26,850 --> 00:29:31,396 என்ன செய்கிறாய்? பில்லி, நீ என்ன... பில்... ஹே! பி... நிறுத்து. நிறுத்து! 281 00:29:31,396 --> 00:29:32,356 இருவரும் நிறுத்துங்கள். 282 00:29:34,024 --> 00:29:36,485 தேவையான மரபணுப் பொருட்களைச் சேகரிக்க, 283 00:29:36,485 --> 00:29:39,571 கீழே உனக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று சரியாகச் சொல். 284 00:29:39,571 --> 00:29:41,448 ஐந்து நிமிடங்கள். அதிகபட்சம். 285 00:29:41,448 --> 00:29:44,493 சரி. நாம் சேர்ந்து செய்வோம். 286 00:29:52,876 --> 00:29:54,044 ஜாக்கிரதை. 287 00:30:20,737 --> 00:30:23,949 பார்த்தாயா? சரியாகிவிட்டது. 288 00:30:23,949 --> 00:30:25,534 எல்லாம் சரியாக இருக்கு. 289 00:30:25,534 --> 00:30:30,330 அவசரகால எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம். 290 00:30:40,215 --> 00:30:42,176 அப்படியானால், எல்லாமே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுமா? 291 00:30:43,010 --> 00:30:45,304 நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டுக்கு ஓடிப்போய் அலமாரியில் ஒளிந்துகொள்ள வேண்டுமா? 292 00:31:04,406 --> 00:31:07,659 நீ வீட்டுக்கு வந்து, டீ குடித்து, உன் வாழ்க்கையைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்குறாங்க? 293 00:31:09,536 --> 00:31:13,540 அவங்களுக்கு பெரிய மனசு, உங்களுக்குத் தெரிய வேண்டியதை இப்போதே சொல்கிறேன் என அவங்களிடம் சொல். 294 00:31:13,540 --> 00:31:16,543 என் அம்மாவை ஏமாற்றிய, இன்னொரு பெண்ணோடு உட்கார்ந்து டீ குடிப்பது என்பதை 295 00:31:16,543 --> 00:31:19,338 என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. 296 00:31:19,963 --> 00:31:23,050 சரி. ஆனால், எங்கள் பார்வையில், உன் அம்மாதான் அந்த இன்னொரு பெண். 297 00:31:23,050 --> 00:31:24,510 அது நியாயம் தான். இப்போதே கிளம்புகிறேன். 298 00:31:25,093 --> 00:31:27,054 அந்த இன்னொரு பெண்ணிடம் இருந்து நிறைய கேள்விகள் எழப் போகின்றன. 299 00:31:27,554 --> 00:31:28,889 உனக்குப் பதில்கள் கிடைத்தனவா? 300 00:31:30,599 --> 00:31:32,768 எதையோ தேடி நீ பாதி உலகைச் சுற்றி வந்திருக்கிறாய். 301 00:31:34,561 --> 00:31:36,021 அல்லது திறந்துப் பார்க்க. 302 00:31:36,605 --> 00:31:39,066 ஆனால், உன் அப்பா ஒரு ஏமாற்றூ பேர்வழி என்பதை மட்டும் தான் நீ கண்டுபிடித்தாய். 303 00:31:40,442 --> 00:31:41,443 அதுவே உனக்குப் போதுமா? 304 00:31:41,443 --> 00:31:42,778 அவ்வளவுதான் செய்ய முடியும் என நினைக்கிறேன். 305 00:31:44,404 --> 00:31:46,240 நம் அப்பா அவ்வளவு மோசமானவர் என்று நினைக்கிறாயா? 306 00:31:48,408 --> 00:31:49,618 உன்னிடம் ஒரு விஷயத்தைக் காட்டணும். 307 00:32:14,476 --> 00:32:15,769 சரி. 308 00:32:16,937 --> 00:32:17,938 சுற்றிப் பார். 309 00:32:20,107 --> 00:32:22,818 குறிப்பிட்ட எதையாவது நான் பார்க்க வேண்டுமா? 310 00:32:24,945 --> 00:32:28,323 வந்து, அவரைத்தான். நீ சொன்னது மாதிரியான ஆள் அவர் இல்லை. 311 00:32:28,323 --> 00:32:30,117 உனக்கு அவரைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம். 312 00:32:33,328 --> 00:32:34,830 நீ இதை அவருக்கு கொடுக்க வேண்டும். 313 00:32:34,830 --> 00:32:37,875 இரண்டு குடும்பங்கள் இருந்தாலும், வேலையில் ஈடுபாடோடு இருக்க அவருக்கு நேரம் இருந்தது. 314 00:32:38,709 --> 00:32:40,335 - அது முக்கியமாக இருந்தது. - நிறுத்து. 315 00:32:41,086 --> 00:32:42,379 அவர் என்ன செய்தார் என்றாவது உனக்குத் தெரியுமா? 316 00:32:42,379 --> 00:32:46,341 - செயற்கைக்கோளுக்கான மென்பொருள். -“செயற்கைக்கோளுக்கான மென்பொருள்”. 317 00:32:50,888 --> 00:32:52,973 அவருடன் வேலை பார்த்த யாரையாவது சந்தித்திருக்கிறாயா? 318 00:32:54,141 --> 00:32:56,643 எப்போதாவது அவருடன் சேர்ந்து வேலைக்குப் போயிருக்கிறாயா? 319 00:32:57,686 --> 00:32:58,770 சரி, நீ என்ன வேலை செய்கிறாய்? 320 00:32:59,271 --> 00:33:01,648 நானே யூகிக்கிறேன். கணினிப் பொறியியல்? 321 00:33:01,648 --> 00:33:04,151 அன்பான அப்பாவை பெருமைப்படுத்தும்படி ஏதாவது செய்வாய். 322 00:33:09,573 --> 00:33:10,574 ஹே! 323 00:33:12,117 --> 00:33:13,076 இதில் என்ன இருக்கு? 324 00:33:14,077 --> 00:33:15,704 இது இங்கே இருப்பதே எனக்குத் தெரியாது. 325 00:33:19,249 --> 00:33:20,334 நீ என்ன செய்கிறாய்? 326 00:33:20,918 --> 00:33:22,711 - உன் பிறந்தநாள் என்ன? - அப்படி செய்யாதே. 327 00:33:23,253 --> 00:33:25,297 உன் அப்பாவிற்கு என்னை அறிமுகப்படுத்துவாய் என்று நினைத்தேன். 328 00:33:25,297 --> 00:33:26,798 அவரைப் பற்றி எனக்குத் தெரியாத எதையாவது காட்டு. 329 00:33:26,798 --> 00:33:30,344 இந்த அறையில் எனக்குத் தெரியாத ஒரே விஷயம் இதுதான். 330 00:33:33,305 --> 00:33:34,348 ஜூலை 7. 331 00:33:38,602 --> 00:33:39,478 உன் அம்மாவின் பிறந்தநாள்? 332 00:33:39,978 --> 00:33:41,230 அவ்வளவு வெளிப்படையானதை வைத்திருக்க மாட்டார். 333 00:33:41,939 --> 00:33:43,273 நாம் கண்டுபிடித்துவிடுவோம் என பயப்படுகிறாயா? 334 00:33:45,901 --> 00:33:47,069 ஆகஸ்ட் 17. 335 00:33:50,531 --> 00:33:52,950 தொடர்ந்து செய். உன்னால் அதைத் திறக்கவே முடியாது. 336 00:33:55,369 --> 00:33:57,538 உண்மையாகவே, நிறுத்து. என்னால் திறக்கவே முடியாது. 337 00:34:01,708 --> 00:34:02,918 இதை எப்படி திறந்தாய்? 338 00:34:04,378 --> 00:34:07,172 நீ பிறந்த மாதம், என்னுடைய பிறந்தநாள். உன் அம்மா பிறந்த மாதம், என் அம்மாவின் பிறந்தநாள். 339 00:34:21,895 --> 00:34:23,355 இது மீன் மாதிரி வாடை அடிக்கிறது. 340 00:34:38,536 --> 00:34:40,746 {\an8}ராண்டா, டபுள்யூ. ஜே-இன் சொத்து 341 00:34:59,474 --> 00:35:02,686 - இது என்னவென்று எனக்குத் தெரிந்தாக வேண்டும். - இது ஏதோ பழைய டேட்டா ஸ்டோரேஜ். 342 00:35:02,686 --> 00:35:04,855 - இது தனிப்பட்ட விஷயம். - உனக்கு ஒரு டீல் சொல்கிறேன். 343 00:35:06,398 --> 00:35:08,942 நீ எனக்கு உதவி செய், பிறகு, நான் உன் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டேன். 344 00:35:12,237 --> 00:35:13,447 எனக்குத் தெரிந்த ஒருவரால் உனக்கு உதவ முடியும். 345 00:35:15,490 --> 00:35:17,034 போய் தொலை. நான் சாப்பிட்டுகின்றேன். 346 00:35:18,035 --> 00:35:19,077 அட என்ன, மே. 347 00:35:20,370 --> 00:35:22,206 இது போன்ற ஒன்றை நீ பார்த்துள்ளாயா? 348 00:35:22,915 --> 00:35:24,124 இது 80-களைச் சார்ந்தது என நினைக்கிறாயா? 349 00:35:25,292 --> 00:35:26,793 இல்லை. 70-களைச் சார்ந்தது போலத் தெரிகிறது. 350 00:35:26,793 --> 00:35:31,089 உனக்கு உதவுவதற்காக, என் வேலைகளை விட்டு என்னால் வர முடியாது. வாழ்க்கை போய்க்கொண்டே இருக்கும். 351 00:35:33,217 --> 00:35:34,384 நான் உனக்கு பணம் தருகிறேன். 352 00:35:36,345 --> 00:35:38,138 ரொம்ப அல்ல, ஆனால், உன்னுடைய நேரத்திற்கு ஏற்ற அளவு. 353 00:35:40,557 --> 00:35:41,558 எனக்கு பணம் தருகிறாயா? 354 00:35:43,018 --> 00:35:44,019 எனக்கு பணம் தர விரும்புகிறாயா? 355 00:35:45,562 --> 00:35:47,064 சரி. என்னவோ. 356 00:35:50,609 --> 00:35:51,735 இங்கே காத்திரு. 357 00:35:55,572 --> 00:35:56,573 மே. 358 00:35:59,868 --> 00:36:00,911 மே! 359 00:36:01,828 --> 00:36:02,829 என்ன? 360 00:36:03,372 --> 00:36:05,207 இதை நாம் ப்ரொஃபஷனலாக வைத்திருக்கலாம். 361 00:36:05,207 --> 00:36:07,209 இப்போது நம் உறவு அப்படித்தான் இருக்கு, இல்லையா? 362 00:36:08,085 --> 00:36:09,294 பரிவர்த்தனை போல? 363 00:36:10,337 --> 00:36:12,464 அல்லது முன்பே அப்படித்தான் இருந்ததா, எனக்குத்தான் அது தெரியவில்லையா? 364 00:36:12,464 --> 00:36:13,882 எனக்கு அவகாசம் வேண்டும் என சொன்னேனே. 365 00:36:13,882 --> 00:36:15,884 ஆம். நான் உனக்கு அதை கொடுத்துவிட்டேன். 366 00:36:17,719 --> 00:36:20,681 இவ்வளவு நாள் இருந்தேனா செத்தேனா என்றுகூட கேட்காமல், இப்போது திடீரென வந்துவிட்டது 367 00:36:20,681 --> 00:36:22,391 என்னை ஏதோ வாடிக்கையாளர் சேவை போல நடத்துகிறாய். 368 00:36:24,226 --> 00:36:25,227 என்னை மன்னித்துவிடு. 369 00:36:25,727 --> 00:36:27,229 நான் ஏன் உனக்கு உதவி செய்ய வேண்டும்? 370 00:36:28,355 --> 00:36:30,858 மற்றும் அவள் சொல்வது உண்மையா? அது உண்மையா? 371 00:36:31,608 --> 00:36:32,609 எனக்குத் தெரியாது. 372 00:36:35,153 --> 00:36:37,489 ஆனால், ஏதோவொரு காரணத்திற்காக அந்த பழைய தரவுகளை என் அப்பா அலமாரியில் வைத்திருந்தார். 373 00:36:37,990 --> 00:36:41,326 அதில் இதை விளக்கக்கூடிய அல்லது அவள் பொய் சொல்கிறாள் என்பதை நிரூபிக்கக் கூடிய ஏதாவது... 374 00:36:41,326 --> 00:36:42,661 எதுவும் பிரச்சினை இல்லையே? 375 00:36:45,330 --> 00:36:46,164 நான் பணம் கட்டிவிட்டேன். 376 00:36:52,212 --> 00:36:53,630 நீ இங்குதான் வாழ்கிறாயா? 377 00:36:54,381 --> 00:36:57,885 ஆமாம். இங்கே எல்லாம் மலிவாக கிடைக்கும். அதாவது டோக்கியோ தரத்தின்படி. 378 00:36:58,427 --> 00:37:02,097 எல்லோரும் அவரவருடைய வேலையைப் பார்ப்பார்கள். கண்ணியமாக இருக்கும். எனக்கு இது பிடிச்சிருக்கு. 379 00:37:03,265 --> 00:37:06,101 ஆனால் நான் இதைப் பற்றி நிறைய அறியணும் ஏனென்றால் எனக்கு உடன் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். 380 00:37:06,101 --> 00:37:10,564 சில வருடங்களுக்கு ஒருமுறை குட்டிப்பாப்பா பிறக்கும். ஒன்பது மாதத்தில் இன்னொன்று பிறக்கும். 381 00:37:10,564 --> 00:37:14,276 உனக்கு திடீரென்று இவ்வளவு பெரிய தம்பி கிடைத்திருக்கிறான். 382 00:37:14,276 --> 00:37:15,903 ரொம்ப நன்றி. 383 00:37:15,903 --> 00:37:18,947 - மன்னிக்கவும். - இல்லை, அவன் சந்தோஷப்படுகிறான். 384 00:37:21,074 --> 00:37:22,075 எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. 385 00:37:25,537 --> 00:37:27,497 சரி. உன் வீடு போல நினைத்து சௌகரியமாக இரு. 386 00:37:28,916 --> 00:37:30,667 எல்லாம் எங்கு இருக்கிறது என உனக்கே தெரியும். 387 00:37:30,667 --> 00:37:31,752 நீ சேகரிப்பாளரா? 388 00:37:33,712 --> 00:37:37,716 இல்லை. வினைல் கேசட்டுகளைக் கேட்பதற்கான ஒரே வழி இதுதான் என ஒலிப்பதிவு மேதாவிகள் சொல்வார்கள். 389 00:37:38,884 --> 00:37:42,054 அது இதமாக, தத்ரூபமாக இருப்பதாகச் சொல்வார்கள். 390 00:37:42,054 --> 00:37:47,100 தாத்தாவின் கராஜிலிருந்து எடுத்த பழங்காலப் பொருட்களுக்கு இரண்டு, அல்லது 300,000 தருவார்கள். 391 00:37:47,809 --> 00:37:49,228 அதன்மீது புது பாலிஷை அடிக்கணும். 392 00:37:49,228 --> 00:37:52,231 ஒலி சிறந்தது என்று அறிவியல்கூட சொல்லவில்லை. 393 00:37:52,231 --> 00:37:54,191 - அப்படித்தான் சொல்கிறது. - இல்லை, அப்படி இல்லை. 394 00:37:54,191 --> 00:37:58,612 ஆனால், ஹே, மக்கள் அதைக் காதால் கேட்பதைவிட தங்கள் மனதால் கேட்க நினைக்கிறார்கள். 395 00:37:58,612 --> 00:38:00,614 சந்தோஷமாக அவர்கள் பணத்தை ஏற்றுக்கொள்வேன். 396 00:38:03,200 --> 00:38:04,952 மே ஒன்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆள் இல்லை. 397 00:38:04,952 --> 00:38:08,121 சரி. ஏனென்றால் உனக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். 398 00:38:09,206 --> 00:38:13,126 பணமில்லாத நாட்களில், ரமேனும் அசாஹியூம்தான் என் உணவு. 399 00:38:14,086 --> 00:38:17,881 நான் அதிகமாக பகுதி நேர வேலையாக கோடீங்கும், கேம் வடிவமைப்பும் செய்வேன். 400 00:38:18,632 --> 00:38:20,425 இதுவும் உன் கேம்களுள் ஒன்றா? 401 00:38:21,009 --> 00:38:24,137 இல்லை. சொல்லப் போனால், உன் தம்பிதான் அதைச் செய்தான். 402 00:38:24,137 --> 00:38:26,515 ஒன்றுவிட்ட சகோதரன். இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. 403 00:38:26,515 --> 00:38:28,100 நீ ஒரு பொறியாளன் என்று சொன்னாய். 404 00:38:28,851 --> 00:38:30,686 இல்லை, நீதான் அப்படி சொன்னாய். 405 00:38:31,353 --> 00:38:33,564 சரி. இதோ. 406 00:38:40,988 --> 00:38:41,989 சிதைந்துவிட்டதா? 407 00:38:42,573 --> 00:38:43,490 குறியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 408 00:38:43,991 --> 00:38:45,075 எனவே, உன்னால் அதை படிக்க முடியாதா? 409 00:38:45,951 --> 00:38:48,537 குறியாக்க தொழில்நுட்பம் மிகுந்த வளர்ச்சி பெற்றுவிட்டது. 410 00:38:49,663 --> 00:38:53,542 40 வருடங்களுக்கு முன் ராணுவத் தரத்தில் இருந்தது இப்போது பழையதாகிவிட்டது. 411 00:39:09,141 --> 00:39:10,559 கணினி எச்சரிக்கை 412 00:39:10,559 --> 00:39:12,436 மோனார்க் 413 00:39:19,234 --> 00:39:21,278 ஹே, டேட்டா கல்லிங்கில் இருந்து காலின்ஸ் பேசுகிறேன். 414 00:39:21,778 --> 00:39:24,615 நீங்கள் இதைப் பார்க்க வேண்டும். 415 00:39:40,255 --> 00:39:41,340 என்ன? 416 00:39:43,800 --> 00:39:45,010 அது என்னது? 417 00:39:47,262 --> 00:39:50,807 யாரோ சில ஆன்லைன் டீகிரிப்ஷன் மென்பொருள் மூலம் அதை இயக்க முயற்சித்து உள்ளனர். 418 00:39:50,807 --> 00:39:53,852 அதில் மோனார்க் அங்கீகாரக் குறியீடு உள்ளதால், நமக்குத் தகவல் வந்துள்ளது. 419 00:39:54,603 --> 00:39:55,771 உனக்கு எவ்வளவு தகவல் கிடைத்தது? 420 00:39:55,771 --> 00:39:57,814 ரொம்ப இல்லை. சில மெகாபைட்டுகள் கிடைத்தன. 421 00:39:59,441 --> 00:40:01,902 வந்து, அதை வைத்திருப்பவர் கவனமாக இருக்கிறார். 422 00:40:01,902 --> 00:40:03,779 அவர்கள் டீகிரிப்ட் மென்பொருள் மூலம் ஒரு சிறிய மாதிரியை இயக்கினர், 423 00:40:03,779 --> 00:40:05,989 பின் மென்பொருள் வேலை செய்வதைப் பார்த்ததும் உடனடியாக அதை அகற்றினர். 424 00:40:05,989 --> 00:40:09,034 - ஐ.பி. முகவரி கிடைத்ததா? - பொதுவான ஒரு இடம் கிடைத்தது. டோக்கியோ. 425 00:40:11,828 --> 00:40:13,830 எனவே, நான் இதை வெர்டூகோவிடம் தெரிவிக்க வேண்டுமா? 426 00:40:15,624 --> 00:40:17,709 வந்து, நானே இதைப் பார்த்துக்கொள்கிறேன். 427 00:40:18,502 --> 00:40:21,839 நிச்சயமாகவா? ஏனென்றால் ஜீ-டேக்கு பிறகு, வெர்டூகோ எல்லாவற்றையும் கவனத்திற்கு கொண்டுவரச் சொன்னாங்க... 428 00:40:21,839 --> 00:40:26,260 எல்லாவற்றிற்கும் நன்றி. உதவிகரமாக இருந்தாய். சிறப்பான வேலையைச் செய்துள்ளாய். 429 00:40:38,480 --> 00:40:41,441 ஹேய். உங்கள் ஜப்பானிய மொழி திறன் எப்படி இருக்கும்? 430 00:40:51,952 --> 00:40:52,953 இது என்னது? 431 00:40:54,621 --> 00:40:56,415 எனக்குத் தெரியவில்லை. ஆனால், இங்கே நிறைய உள்ளன. 432 00:40:58,083 --> 00:40:59,251 அது பிக்ஃபூட்டா? 433 00:41:00,335 --> 00:41:04,089 இரு... பின்னால் போ. அது என்னது? 434 00:41:04,089 --> 00:41:06,466 அவரது அலுவலகத்தில் இருந்த பெரிய செயற்கைக்கோள் வரைபடம் போல இருக்கு. 435 00:41:10,554 --> 00:41:12,306 ஆமாம், ஆனால், அது என்ன வரைபடம்? 436 00:41:13,307 --> 00:41:14,766 எனக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை. 437 00:41:16,226 --> 00:41:17,603 “மோனார்க்” என்றால் என்ன? 438 00:41:19,521 --> 00:41:20,731 அவர்கள் அங்கு இருந்தார்கள். 439 00:41:21,899 --> 00:41:23,275 சான் ஃபிரான்சிஸ்கோவில். 440 00:41:24,276 --> 00:41:28,447 இதை தங்கள் சீருடைகளில் வைத்துக் கொண்டு, ராணுவ வீரர்கள் போல இருந்தார்கள். 441 00:41:31,158 --> 00:41:32,326 என்ன செய்துக்கொண்டிருந்தார்கள்? 442 00:41:33,452 --> 00:41:37,497 எனக்குத் தெரியாது. மொத்த நகரமும் நாசமாவது போலத் தோன்றியது. 443 00:41:37,497 --> 00:41:41,376 மக்கள் சிக்கிக்கொண்டு சாகும் தருவாயில் இருந்தனர், ஆனால் இவர்கள் ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். 444 00:41:42,211 --> 00:41:45,422 சுற்றுலா வந்த குழந்தைகள் போல அங்குமிங்கும் ஓடினர். ஏதோ அதற்காகவே காத்திருந்தது போல இருந்தார்கள். 445 00:41:46,381 --> 00:41:48,509 உங்க அப்பா அவர்களுக்காக வேலை செய்தார் என நினைக்கிறாயா? 446 00:41:49,718 --> 00:41:51,094 இது அவருடைய அலமாரியில்தான் இருந்தது. 447 00:41:52,221 --> 00:41:53,722 அவர் அப்படிப்பட்டவர் இல்லை. 448 00:41:58,852 --> 00:42:00,312 நாம் எதற்காக அவளிடம் பேசுகிறோம்? 449 00:42:01,188 --> 00:42:03,732 சான் ஃபிரான்சிஸ்கோவில் இல்லாமல், என் அப்பா என்னுடன் இங்கு இருந்திருந்தால், 450 00:42:03,732 --> 00:42:05,150 இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருப்பார். 451 00:42:05,150 --> 00:42:07,736 ஆனால் சம்பவம் நடந்த ஜீ-டே அன்று அவர் சான் ஃபிரான்சிஸ்கோவில் இல்லை. 452 00:42:08,779 --> 00:42:11,448 உனக்கு ஜப்பானிய மொழி தெரியாது என நினைத்தேனே? 453 00:42:12,866 --> 00:42:14,826 நான் அப்படி சொல்லவே இல்லையே. 454 00:42:16,328 --> 00:42:18,872 அது எனக்கும் என் அப்பாவிற்குமான ரகசிய மொழி. 455 00:42:20,832 --> 00:42:22,584 இப்போதெல்லாம் நான் அந்த மொழியில் பேசுவதில்லை. 456 00:42:25,003 --> 00:42:26,421 இப்பவும் நாங்க உன்னை நம்பணுமா என்ன? 457 00:42:27,089 --> 00:42:28,173 நீ எங்களை ஏமாற்றிய பிறகும்? 458 00:42:30,384 --> 00:42:32,177 நான் யாரையும் ஏமாற்ற முயற்சிக்கவில்லை. 459 00:42:42,229 --> 00:42:43,355 என்ன சொல்கிறாய்? 460 00:42:43,355 --> 00:42:45,566 அவர் அங்கு இல்லையா? 461 00:42:48,861 --> 00:42:50,696 சான் ஃபிரான்சிஸ்கோ 2014 462 00:42:50,696 --> 00:42:52,739 ஜீ - டே + 5 463 00:43:04,960 --> 00:43:06,461 - அப்பா? - கேட், எங்கு இருக்கிறாய்? 464 00:43:06,461 --> 00:43:09,756 அப்பா. அப்பாடா. நீங்கள் நலமாக இருக்கீங்களா? தொடர்ந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறோம். 465 00:43:09,756 --> 00:43:12,426 - எங்கே இருக்கிறாய்? - நாங்கள் ஒரு முகாமில் இருக்கிறோம். 466 00:43:13,343 --> 00:43:16,054 எங்கு உள்ளது? இப்போது எங்கு நிற்கிறாய்? 467 00:43:16,054 --> 00:43:18,390 வடக்கு வாயிலில் உள்ள “த ரெட் கிராஸ்” கூடாரத்தில் இருக்கிறேன். 468 00:43:20,350 --> 00:43:21,476 அப்பா? 469 00:43:22,394 --> 00:43:23,645 - அப்பா, இணைப்பில் இருக்கீங்களா? - கேட்! 470 00:43:25,272 --> 00:43:26,940 அப்பா. அப்பா! 471 00:43:29,234 --> 00:43:30,402 உனக்கு ஒன்றுமில்லையே? 472 00:43:30,402 --> 00:43:31,820 பல நாட்களாக உன்னைத் தொடர்புகொள்ள முயன்றேன். 473 00:43:31,820 --> 00:43:33,363 இப்போது தான் செல்ஃபோனின் சிக்னல் கிடைத்தது. 474 00:43:33,363 --> 00:43:34,364 நீங்கள் எங்கிருந்தீர்கள்? 475 00:43:35,115 --> 00:43:36,909 விமானம் கிடைக்கவில்லை. எல்லா விமானப் பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது. 476 00:43:36,909 --> 00:43:37,910 உன் அம்மா நலமாக இருக்கிறாளா? 477 00:43:38,911 --> 00:43:41,246 முகாமின் மறுபக்கத்தில் எங்களுக்கு ஒரு கூடாரம் கிடைத்துள்ளது. 478 00:43:41,246 --> 00:43:42,414 என்னால் தங்க முடியாது. 479 00:43:43,957 --> 00:43:47,169 இன்றிரவு 10:00 மணிக்கு அந்த இடத்திலிருந்து கிழக்கு நோக்கி ஒரு பேருந்து புறப்படுகிறது. 480 00:43:47,669 --> 00:43:50,380 உனக்கும் அம்மாவிற்குமான டிக்கெட்டுகள் இதில் உள்ளது. 481 00:43:51,798 --> 00:43:52,799 நீ ரினோவிற்குச் சென்ற பின், 482 00:43:52,799 --> 00:43:54,760 உன் பேரில் ஒரு அறையும், டாக்ஸியும் பதிவு செய்யப்பட்டிருக்கும். 483 00:43:56,220 --> 00:43:57,346 ரினோவா? 484 00:43:57,346 --> 00:43:58,430 என்ன...? 485 00:43:58,847 --> 00:44:01,767 நீங்கள் இப்போது வர வேண்டும். உங்களைப் பற்றி கவலைப்பட்டே அம்மாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது. 486 00:44:01,767 --> 00:44:03,727 நீ அம்மாவைப் பார்த்துக்கொள். 487 00:44:08,565 --> 00:44:09,441 வேண்டாம். 488 00:44:09,441 --> 00:44:11,026 நான் ஒரு விஷயத்தை செய்தாக வேண்டும். 489 00:44:11,026 --> 00:44:12,110 வேண்டாம்! 490 00:44:14,696 --> 00:44:15,989 மன்னித்துவிடு, கேட். 491 00:44:17,157 --> 00:44:18,200 ஆனால், நீ தைரியசாலி. 492 00:44:19,326 --> 00:44:20,869 நீ நலமாக இருப்பாய். 493 00:44:24,665 --> 00:44:25,666 என்னை மன்னித்துவிடு. 494 00:44:27,793 --> 00:44:28,794 “மன்னிப்பா”? 495 00:44:31,463 --> 00:44:32,714 உன் அம்மாவை நேசிக்கிறேன் என அவளிடம் சொல். 496 00:44:34,758 --> 00:44:35,759 உங்கள் இருவரையும் நேசிக்கிறேன். 497 00:44:40,556 --> 00:44:41,557 அப்பா! 498 00:44:43,976 --> 00:44:44,935 அப்பா! 499 00:44:50,607 --> 00:44:54,778 அது நடந்த ஒரு வாரம் கழித்து, அவர் இருந்த புஷ் விமானம் புயலில் மறைந்துவிட்டதாக, 500 00:44:54,778 --> 00:44:57,447 அலாஸ்காவில் உள்ள ஃபேர்பாங்க்ஸ் மாநில போலீஸிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. 501 00:44:59,032 --> 00:45:00,492 அந்த பாகங்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. 502 00:45:02,828 --> 00:45:04,162 இருவரும் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? 503 00:45:06,582 --> 00:45:09,543 அவர் குற்றமற்றவர் இல்லை, ஆனால், கொடூரமானவரும் இல்லை. 504 00:45:10,919 --> 00:45:12,880 அவர் அதையெல்லாம் செய்ததற்கு சில காரணங்கள் இருந்தன. 505 00:45:15,966 --> 00:45:17,676 அதற்கான பதில்கள் இதில்தான் இருக்க வேண்டும். 506 00:45:19,261 --> 00:45:20,762 வாழ்த்துக்கள். அதை நீ கண்டுப்பிடிப்பாய் என நம்புகிறேன். 507 00:45:21,555 --> 00:45:24,391 என்ன செய்தாலும் அவர் எனக்கும், என் அம்மாவிற்கு செய்ததற்கு அது ஈடாகாது. 508 00:45:28,437 --> 00:45:30,439 நிறுத்து. பின்னால் போ. 509 00:45:32,649 --> 00:45:33,650 அதுவா? 510 00:45:37,362 --> 00:45:38,655 அவங்க என்னுடைய பாட்டி. 511 00:45:39,615 --> 00:45:42,117 ஆமாம். அவரின் சின்ன வயதிலேயே அவங்க இறந்துட்டாங்க. 512 00:45:44,661 --> 00:45:46,496 இந்த கோப்புகளில் ஏன் அவங்களுடைய ஃபோட்டோ இருக்கு? 513 00:45:49,875 --> 00:45:51,084 அவங்க எதில் நின்றுக் கொண்டிருக்காங்க? 514 00:46:10,979 --> 00:46:11,980 சரி. 515 00:46:17,319 --> 00:46:18,403 உனக்கு என்ன தெரிகிறது? 516 00:46:18,904 --> 00:46:21,240 நீ பார்ப்பதேதான், பில்லி. இன்னும் அருகில் தெரிகிறது. 517 00:46:22,658 --> 00:46:23,575 நன்றி. 518 00:46:38,298 --> 00:46:40,509 ஏற்கனவே மூன்று நிமிடங்களுக்கு கீழே இருக்கிறாய், எனவே வேலையைப் பாரு. 519 00:46:42,094 --> 00:46:44,805 பின்னிணைப்புகளின் பல தொகுப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. 520 00:46:46,473 --> 00:46:47,850 நிச்சயம் இது பூச்சி போன்ற உயிரம்தான். 521 00:46:49,059 --> 00:46:50,060 இது அருமையாக உள்ளது. 522 00:46:52,020 --> 00:46:54,481 அவர்கள் அணுஉலையை இயக்கியபோது, 523 00:46:54,481 --> 00:46:57,067 அது உணவை நோக்கி அவற்றை மேற்பரப்பிற்கு ஈர்த்திருக்க வேண்டும். 524 00:47:00,654 --> 00:47:02,072 அடச்சே! 525 00:47:02,072 --> 00:47:04,324 அடக் கடவுளே. நாம் போக வேண்டும். 526 00:47:05,701 --> 00:47:08,495 கெய். கால அட்டவணையை விடு. நாம் கிளம்பணும். 527 00:47:08,495 --> 00:47:10,497 - ஒரு நிமிடம்தான். சரி. - இல்லை, நாம் இப்போதே கிளம்பணும். 528 00:47:10,497 --> 00:47:11,874 எழுந்திரு! 529 00:47:12,541 --> 00:47:15,085 - இருவரும், ஓடுங்கள்! - ஹேய், ஜாக்கிரதை! 530 00:47:15,085 --> 00:47:17,504 இருவரும், அங்கிருந்து கிளம்புங்கள்! இங்கே திரும்ப வாருங்கள்! 531 00:47:19,423 --> 00:47:20,632 வா! 532 00:47:25,220 --> 00:47:26,430 அடக் கடவுளே. 533 00:47:27,973 --> 00:47:30,517 அடக் கடவுளே. போ, போ! 534 00:47:35,063 --> 00:47:36,648 போ! போ! போய்க் கொண்டே இரு! 535 00:47:38,942 --> 00:47:39,776 இழு! 536 00:47:41,236 --> 00:47:42,237 இழு! 537 00:47:49,620 --> 00:47:53,332 - இழு! இழு! - அவை வருகின்றன! சீக்கிரம்! 538 00:47:56,418 --> 00:47:58,045 பில்லி! இழு! 539 00:47:58,629 --> 00:47:59,630 இல்லை! 540 00:48:01,298 --> 00:48:02,508 இல்லை, என்னைக் கீழே விடாதே! 541 00:48:03,258 --> 00:48:04,343 இல்லை! 542 00:48:04,343 --> 00:48:05,802 நிறைய இருக்கின்றன! 543 00:48:09,765 --> 00:48:11,266 - நாம் மிகவும் கணமாக உள்ளோம். - வேண்டாம்! 544 00:48:11,266 --> 00:48:12,726 உன் கையைக் கொடு! 545 00:48:13,644 --> 00:48:15,854 - என்னால் பிடிக்க முடியவில்லை! - என்னிடம் வா, கெய்! 546 00:48:16,897 --> 00:48:17,898 என்னிடம் வா! 547 00:48:17,898 --> 00:48:21,693 - என்னால் பிடிக்க முடியவில்லை! - இழு! இழு! 548 00:48:23,320 --> 00:48:24,613 இல்லை! 549 00:49:36,310 --> 00:49:38,312 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்