1 00:00:33,033 --> 00:00:35,326 அவங்க நேரா ஸ்கல் தீவு நோக்கி போயிட்டு இருக்காங்க. 2 00:00:35,327 --> 00:00:38,454 அது தன் முட்டையைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கு. இனிமே அத தடுக்க முடியாது. 3 00:00:38,455 --> 00:00:41,207 நிஜமாவே, இந்த ஏபெக்ஸ் சைபர்நெட்டிக்ஸ் ஆட்களைப் பாராட்டியே ஆகணும். 4 00:00:41,208 --> 00:00:43,543 உங்களுக்கு வேண்டியதை உங்க கண் முன்னால நிறுத்த வைக்கிறதுல அவங்க கெட்டிக்காரங்க. 5 00:00:43,544 --> 00:00:47,713 ஆனா, இது ஏபெக்ஸ் இல்ல. இதுல சம்பந்தம் இல்லன்னு ஏபெக்ஸ் மறுக்குறாங்க. 6 00:00:47,714 --> 00:00:52,260 அப்போ, வேற யாரு? இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்யுற அளவுக்கு யார்கிட்ட வசதி இருக்கு? 7 00:00:52,261 --> 00:00:53,845 மோனார்க் மற்றும் ஏபெக்ஸைத் தவிர, 8 00:00:53,846 --> 00:00:56,389 அந்த ஸ்கல் தீவு எங்கே இருக்குன்னு வேற யாருக்குத் தெரியும்? 9 00:00:56,390 --> 00:00:57,849 எனக்குத் தெரியல. 10 00:00:57,850 --> 00:01:01,435 ஆனா, ஸ்கல் தீவுக்கு மேல அனுமதி இல்லாமப் பறக்குற ஒரு விமானத்தை நாம ட்ராக் பண்ணிட்டு இருக்கோம். 11 00:01:01,436 --> 00:01:03,688 கேட்டும் கென்டாரோவும் அதுலதான் இருக்காங்கன்னு உறுதியாத் தெரியுமா? 12 00:01:03,689 --> 00:01:05,481 பீச்ல அந்த டிரிஸப்ப் ஆளுங்க ரெண்டு பேரைத் தூக்கினோம். 13 00:01:05,482 --> 00:01:08,609 கேட், கென்டாரோ ரெண்டு பேருமே அவங்க குழுவோடத்தான் போனாங்கன்னு அவங்க சொன்னாங்க. 14 00:01:08,610 --> 00:01:11,237 ஆமா, அதை நாங்களும் பார்த்தோம். ஆனா அவங்களே இஷ்டப்பட்டு போனாங்களா, 15 00:01:11,238 --> 00:01:12,823 இல்ல அவங்க இவங்களைக் கடத்திட்டுப் போனாங்களா? 16 00:01:13,699 --> 00:01:15,033 நாம அந்தப் புயல் சுவரை நெருங்கிட்டோம். 17 00:01:26,670 --> 00:01:30,215 சரி, பெரியவனே. வேலையை முடிக்கிற நேரம் வந்துடுச்சு. 18 00:01:36,972 --> 00:01:38,765 அதுங்க அங்க சும்மாதான் இருக்கு. 19 00:01:39,558 --> 00:01:40,641 புயல் சுவர் - கண்டுபிடிக்கப்பட்டது 20 00:01:40,642 --> 00:01:43,811 எந்த டைட்டனாவது தைரியமா தலையைக் காட்டுனா, காட்ஸில்லா அதை அடிச்சுத் தூக்கிடும்னு நெனச்சேன். 21 00:01:43,812 --> 00:01:45,898 ஆமா, அப்படித்தான் பண்ணும். வழக்கமா. 22 00:01:46,815 --> 00:01:48,650 ஒருவேளை அது காங்குக்கு பயப்படுதா? 23 00:01:49,401 --> 00:01:51,695 காட்ஸில்லா எதுக்கும் பயப்படாது. 24 00:01:52,738 --> 00:01:55,449 ஒருவேளை அது என்ன செய்யணுமோ, அதைச் செஞ்சிருந்தா? 25 00:01:59,912 --> 00:02:03,665 டைட்டன்களுக்கு நடுவுல ஒரு ஒழுங்கை கொண்டு வர்றது தான் காட்ஸில்லாவோட வேலைன்னு நீதானே சொன்ன. 26 00:02:05,083 --> 00:02:06,167 நமக்குத் தெரிஞ்ச வரைக்கும் அதுதான். 27 00:02:06,168 --> 00:02:09,463 எங்க இருக்கணுமோ, அந்த இடத்துல இருப்பதை காட்ஸில்லா உறுதி பண்ணிட்டு இருந்திருக்கும். 28 00:02:11,924 --> 00:02:14,968 அதை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல, அதனாலதான் கொல்லல. 29 00:02:33,946 --> 00:02:36,781 நம்மைவிட அதுக்குத்தான் அதோட இனத்தைப் பத்தி நல்லாத் தெரியும். 30 00:02:36,782 --> 00:02:38,534 என் திட்டம் அவ்ளோதான் போல. 31 00:02:40,536 --> 00:02:43,454 இப்போ நாம இதத்தான் பண்ணப் போறோம். பேரிஸையும், ஃப்ளீட் கமாண்டரையும் அழைப்போம். 32 00:02:43,455 --> 00:02:45,498 காட்ஸில்லா எவ்வளவு தூரம் போகுதோ, அவ்வளவு தூரம் அதை ட்ராக் பண்ணச் சொல்வோம். 33 00:02:45,499 --> 00:02:47,333 ஆனா, நாம இங்கயேதான் இருக்கப் போறோம். 34 00:02:47,334 --> 00:02:48,626 அப்போ அந்த டைட்டன் X? 35 00:02:48,627 --> 00:02:52,380 அதை யாரு இங்க இழுத்து வந்தாங்களோ, அவங்க நினைச்சதை இன்னும் செய்ய முடியும். 36 00:02:52,381 --> 00:02:53,881 அதை அவங்க கட்டுப்பாட்டுல வைக்கலாம், ஒரு ஆயுதமா மாத்தலாம். 37 00:02:53,882 --> 00:02:56,009 கேட்டும் கென்டாரோவும் அங்கதான் இருக்காங்க. 38 00:02:57,344 --> 00:02:58,846 நமக்கு ஒரு புது மிஷன் வந்திருச்சுன்னு நினைக்கிறேன். 39 00:03:00,097 --> 00:03:01,430 கேட்டையும் கென்டாரோவையும் காப்பாத்தணும், 40 00:03:01,431 --> 00:03:03,767 அப்புறம் அந்த டைட்டனை வீட்டுக்கு அனுப்ப ஒரு வழியைக் கண்டுபிடிக்கணும். 41 00:03:05,602 --> 00:03:07,020 லீ சொல்றது சரிதான். 42 00:03:09,523 --> 00:03:11,108 நாம திரும்பப் போகணும். 43 00:03:20,868 --> 00:03:22,201 சூப்பர், எனக்கு இது பிடிச்சிருக்கு. 44 00:03:22,202 --> 00:03:26,081 சரி, கப்பலைக் கிளப்புங்க, கதவை மூடுங்க, இல்ல வேற என்ன பண்ணுவீங்களோ அதைப் பண்ணுங்க. 45 00:03:26,790 --> 00:03:28,000 நாம உள்ள போறோம். 46 00:04:48,038 --> 00:04:50,165 "காட்ஸில்லா" கதாபாத்திரத்தைத் தழுவியது 47 00:05:17,401 --> 00:05:19,402 பிரமாதமா இருக்குல? 48 00:05:19,403 --> 00:05:21,195 இப்போ நாம இங்க என்ன பண்ணிட்டு இருக்கோம்னு சொல்லப் போறியா? 49 00:05:21,196 --> 00:05:22,780 ஏன்னா, நான் நம்பின ஒருத்தர் என்கிட்ட 50 00:05:22,781 --> 00:05:25,324 இந்தத் தீவுல இருக்கற எல்லாமே உன்னைக் கொல்ல பாக்கும்னு சொன்னார். 51 00:05:25,325 --> 00:05:27,034 நீ அதை காதுல வாங்கல. 52 00:05:27,035 --> 00:05:28,370 அப்பவும் கேட்கல, இப்பவும் கேட்கல. 53 00:05:29,705 --> 00:05:31,455 நீ வராம இருந்திருக்கலாம். 54 00:05:31,456 --> 00:05:33,416 நான் உன்னைத் தனியா விட மாட்டேன். 55 00:05:33,417 --> 00:05:35,627 இது என் முடிவு, நான் தனியா இல்ல. 56 00:05:39,339 --> 00:05:41,675 அந்த முட்டைய வச்சு என்னதான் பண்ண திட்டம் போட்டிருக்க? 57 00:05:42,509 --> 00:05:44,261 கென்டாரோ, அவள் உன்கிட்ட என்ன சொல்லி இதுல இழுத்துவிட்டாள்? 58 00:05:45,304 --> 00:05:47,514 அவள்தான் என்னை கோர்த்து விட்டாள்னு ஏன் நினைக்கிற? 59 00:05:49,600 --> 00:05:50,642 நாம வந்துட்டோம். 60 00:05:57,733 --> 00:06:02,028 அதோட குட்டியைத் தூக்கிட்டு வந்தா அதுக்குக் கோபம் வரும்னு உனக்குத் தோணலயா? 61 00:06:02,029 --> 00:06:04,322 இது… இது மனுஷத்தன்மை அற்றது. 62 00:06:04,323 --> 00:06:05,324 மனுஷத்தன்மை அற்றதா? 63 00:06:06,325 --> 00:06:08,076 அதுங்க மனுஷங்க இல்லங்கறத நீ மறந்திடுற. 64 00:06:08,785 --> 00:06:11,371 நீ ஏன் இவங்களுக்கு உதவற? ஏன் இவங்க பக்கம் இருக்க? 65 00:06:51,286 --> 00:06:53,287 டைட்டன் X சிக்னல் இன்னும் ஸ்ட்ராங்கா தான் இருக்கு. 66 00:06:53,288 --> 00:06:55,331 பேட்டரி இருக்கற வரைக்கும் நமக்கு பிரச்சனை இல்ல. 67 00:06:55,332 --> 00:06:57,166 நமக்கு டிராக்கர் எதுக்கு? 68 00:06:57,167 --> 00:06:58,919 அது எங்க போகுதுன்னுதான் தெளிவா தெரியுதே. 69 00:07:00,921 --> 00:07:02,422 அது போற வழியிலேயே போகலாம். 70 00:07:04,633 --> 00:07:06,425 இதுக்கு முன் நீங்க ஸ்கல் தீவுக்கு போயிருக்கீங்களா? 71 00:07:06,426 --> 00:07:07,510 ஏன்னா நான் போயிருக்கேன். 72 00:07:07,511 --> 00:07:09,554 உங்களை சின்னச் சின்ன பீஸா கிழிச்சு போட்டுறோங்களோ என்ற பயத்துல, 73 00:07:09,555 --> 00:07:11,806 எந்தப் பக்கம் போறோம்னே உங்களுக்குப் புரியாது. 74 00:07:11,807 --> 00:07:12,808 அதனால, தேவைதான். 75 00:07:13,767 --> 00:07:14,893 ஆமா, டிராக்கர் கண்டிப்பா தேவை. 76 00:07:15,853 --> 00:07:17,311 காங் என்ன ஆச்சு? 77 00:07:17,312 --> 00:07:20,148 டைட்டன் X அதனோட தீவுல இருக்குன்னு தெரிஞ்சா, 78 00:07:20,899 --> 00:07:22,525 அது ஓடி வந்திடும். 79 00:07:22,526 --> 00:07:25,987 அது ரொம்ப வேகமா நடக்கும், அதனால எப்ப வேணா இங்க வந்திடும். 80 00:07:25,988 --> 00:07:29,240 நம்ம எவ்ளோ சீக்கிரம் உள்ள போய் வெளிய வரோமோ, அவ்ளோ நல்லது. 81 00:07:29,241 --> 00:07:31,200 டைட்டன் X-ஐ அவங்க எங்க கூட்டிட்டு போறாங்கன்னு கண்டுபிடிச்சு, 82 00:07:31,201 --> 00:07:33,202 - அதைத் திரும்ப ஆக்ஸிஸ் முண்டிக்கே அனுப்பணும்… - அவளை அனுப்பணும். 83 00:07:33,203 --> 00:07:37,708 அவளை அவளுக்குச் சொந்தமான ஆக்ஸிஸ் முண்டிக்கே அனுப்பணும். 84 00:07:38,417 --> 00:07:40,501 சரியா? சாகாம இருக்க பாருங்க. 85 00:07:40,502 --> 00:07:41,628 சரிங்க, சார். 86 00:07:49,261 --> 00:07:53,264 அந்த டைட்டனை வீட்டுக்கு அனுப்ப இங்கே ஏதாவது உனக்குக் கிடைச்சதா? 87 00:07:53,265 --> 00:07:57,476 கிடைச்சதுன்னு நினைக்கிறேன். பில்லியிடம் லேண்ட்சாட்ல இருந்து எடுத்த ஃபோட்டோக்கள் இருந்தது. 88 00:07:57,477 --> 00:07:58,936 - லேண்ட்சாட்டா? - உனக்குத் தெரியுமா? 89 00:07:58,937 --> 00:08:00,605 இல்ல, இல்ல, கொஞ்ச்ம பொறு. 90 00:08:00,606 --> 00:08:05,276 அது 60-ல பூமிய படம் பிடிக்க அனுப்புன சாட்டிலைட் நெட்வொர்க் ஆச்சே. 91 00:08:05,277 --> 00:08:09,947 ஓ, டைட்டன் X-ஓட பயணம் ஸ்கல் தீவுலதான் முடியும்னு பில்லி நினைச்சிருக்கான். 92 00:08:09,948 --> 00:08:15,161 அவன் கணிப்பு சரியா இருந்து, டைட்டன் X இங்க இருந்து தான் 93 00:08:15,162 --> 00:08:19,207 ஆக்ஸிஸ் முண்டிக்கு போகுதுன்னா, இங்க கண்டிப்பா ஒரு பிளவு இருக்கணும். 94 00:08:19,208 --> 00:08:23,044 இந்த இடத்தையெல்லாம் பிளவு இருக்க வாய்ப்பு இருக்குன்னு பில்லி மார்க் பண்ணி வச்சிருக்கான், 95 00:08:23,045 --> 00:08:25,338 அதனால இதுல ஏதாச்சும் ஒண்ணு டைட்டன் X வீட்டுக்குப் போற வழியா இருக்கலாம். 96 00:08:25,339 --> 00:08:28,424 இருக்கலாம். இங்கிருந்து ஆரம்பிப்போம், எங்க போகுதுன்னு பார்ப்போம். 97 00:08:28,425 --> 00:08:29,635 சரி. 98 00:08:47,027 --> 00:08:48,361 இது ரொம்பப் பெரிய விஷயம், கெய்! 99 00:08:48,362 --> 00:08:49,445 அக்டோபர் 21, 1958 100 00:08:49,446 --> 00:08:51,489 - தெரியும், என்னால இன்னும் நம்ப முடியல. - பிளவு இருக்குன்னு உறுதியாயிடுச்சா? 101 00:08:51,490 --> 00:08:53,658 அப்படின்னா டைட்டன் நெட்வொர்க்னு ஒண்ணு நிஜமாவே இருக்கலாம். 102 00:08:53,659 --> 00:08:55,577 - ஆமா. - அது எங்க போய் முடியும்னு யாருக்குத் தெரியும்? 103 00:08:56,078 --> 00:08:59,164 பப்புவா மற்றும் நியூ கினி பிரதேசம் 104 00:09:01,375 --> 00:09:03,460 ஹலோ, வீட்ல யாராவது இருக்கீங்களா? 105 00:09:04,461 --> 00:09:06,046 இது எல்லாத்தையும் மாத்திடும். 106 00:09:08,507 --> 00:09:09,716 ஆமா. 107 00:09:11,844 --> 00:09:13,135 உனக்காக ரொம்ப சந்தோஷப்படுறேன். 108 00:09:13,136 --> 00:09:14,346 நமக்காக. 109 00:09:15,264 --> 00:09:17,015 ஆமா, நமக்காக. 110 00:09:18,934 --> 00:09:20,519 கதவைத் திறங்க. 111 00:09:23,605 --> 00:09:24,982 உங்களுக்கு என்னதான் வேணும்? 112 00:09:26,984 --> 00:09:28,735 நாங்க கல்யாணம் பண்ணிக்கணும். 113 00:09:31,738 --> 00:09:35,783 - மோதிரம் ஏதாச்சும் வச்சிருக்கீங்களா? - அது திடீர் முடிவு. 114 00:09:35,784 --> 00:09:37,577 - அதனால, வந்து… - ப்ரோப்ஸ். 115 00:09:37,578 --> 00:09:38,579 என்னது? 116 00:09:39,246 --> 00:09:42,415 ப்ரோப்ஸ். அந்த பிளவுக்குள்ள எதையாவது அனுப்பி, அது எங்க போகுதுன்னு பார்க்கணும். 117 00:09:42,416 --> 00:09:45,376 ஸூக் அந்த டைட்டன் டிராக்கரை செஞ்சான்ல, ஞாபகம் இருக்கா? 118 00:09:45,377 --> 00:09:47,837 - அந்த ரேடியோ டிரான்ஸ்மிட்டர் வச்சு? - ஆமா. 119 00:09:47,838 --> 00:09:51,675 - நாம அதை வச்சு… - பில்லி, நமக்கு இப்போ கல்யாணம் நடக்குது. 120 00:09:53,051 --> 00:09:55,511 - ஆமா, சரிதானே? ஆமா. - ஆமா. 121 00:09:55,512 --> 00:09:57,889 தொந்தரவு இல்லன்னா, இன்னைக்கே பண்ணிக்கலாம். 122 00:09:57,890 --> 00:09:59,056 - சரி. - மன்னிச்சிடுங்க. 123 00:09:59,057 --> 00:10:03,394 சரி. மிஸ் கெய்கோ மியுரா, நீங்க… 124 00:10:03,395 --> 00:10:06,815 "டாக்டர் கெய்கோ மியுரா." 125 00:10:07,816 --> 00:10:12,446 நீங்க வில்லியம் ராண்டாவை உங்க கணவரா ஏத்துக்கறீங்களா? 126 00:10:12,988 --> 00:10:14,739 நான் நினைக்கிறேன்… 127 00:10:14,740 --> 00:10:17,158 - சரி, நாம… சரி. - ஹேய். 128 00:10:17,159 --> 00:10:20,162 ஆமா, ஹாய். 129 00:10:21,580 --> 00:10:26,585 பில்லி, என்ன மாதிரியே பெருசா கனவு காணுற ஒருத்தரை கண்டுபிடிப்பேன்னு 130 00:10:27,878 --> 00:10:29,462 நான் நினைச்சுக் கூட பார்க்கல. 131 00:10:29,463 --> 00:10:32,215 என்னை மாதிரியே இந்த உலகத்தைப் பார்க்குற ஒருத்தர். 132 00:10:32,216 --> 00:10:36,720 இங்க எல்லாமே சாத்தியம், எல்லாமே ஒரு அதிசயம்னு நினைக்கிற ஒருத்தர். 133 00:10:38,055 --> 00:10:42,643 உன்னையும் உன்னோட கிறுக்குத்தனமான ஐடியாவையும் எப்பவும் நம்புவேன்னு சத்தியம் பண்றேன். 134 00:10:47,523 --> 00:10:48,649 எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். 135 00:10:51,443 --> 00:10:54,196 அப்புறம்… 136 00:10:56,406 --> 00:10:57,865 சம்மதம். 137 00:10:57,866 --> 00:10:58,950 ஆமா. 138 00:10:58,951 --> 00:11:04,080 நல்லது. வில்லியம் ராண்டா, நீங்க டாக்டர் கெய்கோ மியுராவை 139 00:11:04,081 --> 00:11:05,831 மனைவியா ஏத்துக்கிறீங்களா? 140 00:11:05,832 --> 00:11:08,167 இது நியாயமே இல்ல. நான்… எதுவுமே தயார் பண்ணல. 141 00:11:08,168 --> 00:11:09,378 பரவாயில்ல. 142 00:11:16,051 --> 00:11:18,052 எனக்கு வார்த்தையே வரல. 143 00:11:18,053 --> 00:11:19,763 "சம்மதம்"னு சொன்னா போதும், நண்பா. 144 00:11:22,432 --> 00:11:25,519 ஆமா, ஆமா, கண்டிப்பா சம்மதம். 145 00:11:26,562 --> 00:11:27,645 - சரி. - ஆமா. 146 00:11:27,646 --> 00:11:31,107 ஆஸ்திரேலிய அரசாங்கம் எனக்குக் கொடுத்த அதிகாரத்தை வச்சு, 147 00:11:31,108 --> 00:11:34,278 இப்போலிருந்து உங்களை கணவன் மற்றும் டாக்டர் மனைவினு அறிவிக்கிறேன். 148 00:11:35,988 --> 00:11:38,323 - மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுங்க. - சரி, சரி. 149 00:11:49,251 --> 00:11:51,837 ஸ்கல் தீவு 150 00:11:53,589 --> 00:11:55,590 - இது மோனார்க் தளமா? - ஒரு காலத்துல இருந்துச்சு. 151 00:11:55,591 --> 00:11:59,844 பாதுகாப்புல ஏதோ பிரச்சனைன்னு இதைக் காலி பண்ணிட்டாங்க. 152 00:11:59,845 --> 00:12:03,182 அப்போ மோனார்க்காலேயே அவங்க ஆட்களைக் காப்பாத்த முடியல, உன்னால முடியும்னு நினைக்கிறியா? 153 00:12:06,518 --> 00:12:09,478 அப்பாவுக்காக பழிவாங்க அதைக் கொல்லப் பாக்குறியா? 154 00:12:09,479 --> 00:12:11,939 - இது பழிவாங்குற விஷயம் இல்ல. - அப்போ வேற என்ன? 155 00:12:11,940 --> 00:12:13,942 - நான் காட்டுறேன். - நான் என் தம்பிகிட்ட பேசிட்டு இருந்தேன். 156 00:12:15,944 --> 00:12:18,654 - திரும்ப வரவேற்கிறேன், மிஸ் சிம்மன்ஸ். - நன்றி. இப்போ என்ன நிலவரம்? 157 00:12:18,655 --> 00:12:20,615 டைட்டன் X தோரயமாக 12 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. 158 00:12:20,616 --> 00:12:22,158 நேரா நம்மை நோக்கித்தான் வருது. 159 00:12:22,159 --> 00:12:24,368 முட்டையை வச்சு தூண்டில் போடலாம்னு நீங்க சொன்னது சரிதான். 160 00:12:24,369 --> 00:12:26,246 அதுக்கு நம்ம கென்டாரோவுக்குத்தான் நன்றி சொல்லணும். 161 00:12:27,164 --> 00:12:28,789 நாம அதைக் கொல்ல வேண்டாம். 162 00:12:28,790 --> 00:12:30,542 ஒரு பிளவைத் திறக்க அது நமக்குத் தேவைப்படுது. 163 00:12:31,251 --> 00:12:32,543 நீ பிளவைத் திறக்க கூடாது. 164 00:12:32,544 --> 00:12:35,379 அதுக்குள்ள இருந்து என்ன வரும்னும், இல்லன்னா யாரு அதுக்குள்ள விழுவாங்கன்னும் தெரியாது. 165 00:12:35,380 --> 00:12:38,257 உலகம் முழுக்க இருக்க பிளவுகளை உங்க தாத்தாதான் கண்டுபிடிச்சாரு. 166 00:12:38,258 --> 00:12:42,011 சொல்லப்போனா, இந்தத் தீவுல எங்கயோ இன்னொரு பிளவு இருக்குன்னு அவர் கணிச்சிருக்காரு. 167 00:12:42,012 --> 00:12:44,848 டைட்டன் நெட்வொர்க்ல எங்க வேணாலும் போறதுக்கான ஒரு மையப் புள்ளி அது. 168 00:12:47,059 --> 00:12:50,812 நமக்குத் தேவையெல்லாம், நிலையான ஒரு பிளவை நிரந்தரமா திறந்து வைக்கிறது தான். 169 00:12:51,772 --> 00:12:53,648 அதனாலதான் நாம இதைக் கண்டுபிடிக்கணும். 170 00:12:53,649 --> 00:12:55,149 நாம ஆக்ஸிஸ் முண்டிக்கு போற வழி அதுதான். 171 00:12:55,150 --> 00:12:56,943 நீங்க எதுக்கு அங்க போக ஆசைப்படுறீங்க? 172 00:12:56,944 --> 00:13:00,112 நாசா நிலாவுக்குப் போறோம்னு சொன்னப்பவும் மக்கள் இப்படித்தான் கேட்டாங்க. 173 00:13:00,113 --> 00:13:03,366 ஆனா விண்வெளி வீரர்கள் திரும்பி வரும்போது 60 வருஷம் ஓடிப்போய், 174 00:13:03,367 --> 00:13:05,076 அவங்களுக்கு பிடிச்சவங்க செத்துட்டாங்கன்னு வந்து நிக்கலையே. 175 00:13:05,077 --> 00:13:07,746 அதேதான். ஆனா அப்படி நடந்திருந்தா யோசிச்சுப் பாரு. 176 00:13:08,622 --> 00:13:12,250 சரியா? தீர்க்க முடியாத வியாதி ஒருத்தருக்கு இருக்குன்னு வைப்போம், 177 00:13:12,251 --> 00:13:16,587 அவங்க ஒரு வாரம் இல்ல ஒரு மாசம் வேற ஒரு இடத்துக்கு போயிட்டுத் திரும்பி வந்தா, 178 00:13:16,588 --> 00:13:18,298 அதுக்குள்ள இங்க அதுக்கு மருந்து கண்டுபிடிச்சுருந்தா எப்படி இருக்கும்? 179 00:13:19,508 --> 00:13:21,093 நம்மால எதிர்காலத்துக்குப் போயிட்டு வர முடிஞ்சா? 180 00:13:23,178 --> 00:13:27,140 ஆக்ஸிஸ் முண்டியை உன்னோட சொந்த 'டைம் மெஷின்'னா மாத்தப் பாக்குறியா? 181 00:13:36,358 --> 00:13:39,277 கென்டாரோ, ப்ளீஸ், நீ என்ன நினைக்கிறன்னு எனக்குப் புரியுது, 182 00:13:39,278 --> 00:13:42,113 எதாச்சும் செய்யணும்னு நினைச்சு துடிக்கிற. 183 00:13:42,114 --> 00:13:44,365 அந்த பட்டனை அழுத்திய பிறகு நானும் அப்படித்தான் நெனைச்சேன், 184 00:13:44,366 --> 00:13:45,576 ஆனா அது தப்பு. 185 00:13:46,451 --> 00:13:50,747 எந்த ஆபத்தை இழுத்து விடப்போறேன்னு எனக்கு தெரியல, அப்பாவும் நீயும் சொன்னதை நான் கேட்டிருக்கணும். 186 00:13:54,293 --> 00:13:56,085 நான் செஞ்ச அதே தப்பை நீயும் செய்யாத. 187 00:13:56,086 --> 00:13:58,213 இது எதுவா இருந்தாலும், அப்பாவைத் திருப்பிக் கொண்டுவரப் போறதில்ல. 188 00:14:05,095 --> 00:14:07,598 நம்ம பக்கம் தான் வந்துட்டு இருக்கு. அதே வேகத்துலதான் வருது. 189 00:14:09,558 --> 00:14:12,978 டைட்டன் X மேல எப்படி டிராக்கிங் டிவைஸ் மாட்டுனேன்னு நீ சொல்லவே இல்லையே. 190 00:14:14,938 --> 00:14:16,356 ரொம்பக் கவனமா மாட்டுனேன். 191 00:14:18,275 --> 00:14:22,446 உண்மையைச் சொல்லணும்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கே ஞாபகம் இல்ல. 192 00:14:24,698 --> 00:14:25,948 எனக்குப் புரியல. 193 00:14:25,949 --> 00:14:26,950 எனக்கும்தான். 194 00:14:27,993 --> 00:14:29,536 சுஸுகிக்கும் முழுசா புரியல. 195 00:14:30,412 --> 00:14:33,457 அது ஏதோ விசித்திரமான அறிவியல், உனக்குப் புரியலாம், ஆனா எனக்கு ஒண்ணுமே புரியல. 196 00:14:34,750 --> 00:14:35,751 சொல்லிப் பாரேன். 197 00:14:37,544 --> 00:14:38,879 அப்புறம் சொல்றேன். 198 00:14:46,553 --> 00:14:48,221 அடச்சே. 199 00:14:48,222 --> 00:14:50,474 உங்களுக்கு ஒண்ணுமில்லயே? அது வந்து… 200 00:14:55,103 --> 00:14:56,313 இந்த இடம் கொஞ்சம் மொக்கையா இருக்குல? 201 00:14:57,231 --> 00:14:58,565 இதுக்குக் கீழே என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாருங்க. 202 00:14:59,358 --> 00:15:01,025 ஆக்ஸிஸ் முண்டி கூட ஒப்பிடும்போது இந்த இடம் ஒண்ணுமே இல்ல. 203 00:15:01,026 --> 00:15:03,611 நான் ரெண்டு வருஷம் இந்தத் தீவுல இருந்தேன், ஆனா தளத்தை விட்டு வெளியே போனதே இல்ல. 204 00:15:03,612 --> 00:15:05,530 "நான் ரெண்டு வருஷம் இங்க இருந்தேன், 205 00:15:05,531 --> 00:15:07,407 தளத்தை விட்டு வெளியவே போனதில்ல." 206 00:15:08,242 --> 00:15:09,784 வாயை மூடு. 207 00:15:09,785 --> 00:15:12,329 - அது என்ன சத்தம்? - ஹாட்லி? 208 00:15:13,163 --> 00:15:14,331 ஹாட்லி எங்கே? 209 00:15:20,254 --> 00:15:22,256 - ஓடுங்க! - போங்க, போங்க, போங்க! 210 00:15:23,715 --> 00:15:25,092 நகருங்க! நிக்காம போயிட்டே இருங்க! 211 00:15:29,179 --> 00:15:30,180 வேகமா போங்க. நகருங்க! 212 00:15:33,141 --> 00:15:34,685 எனக்கு அது தெரியல! 213 00:15:38,939 --> 00:15:40,815 - அடச்சே! - போயிட்டே இருங்க! 214 00:15:40,816 --> 00:15:42,526 பிரிஞ்சு போங்க! சிதறி ஓடுங்க! 215 00:15:44,862 --> 00:15:46,113 போ! போ! 216 00:15:49,575 --> 00:15:51,075 அடக் கடவுளே. 217 00:15:51,076 --> 00:15:53,995 - டிம்! ஐயோ! காப்பாத்துங்க! - மே! மே! 218 00:15:53,996 --> 00:15:55,455 காப்பாத்துங்க! வேணாம்! 219 00:16:03,672 --> 00:16:04,715 வேணாம்! 220 00:16:08,552 --> 00:16:09,887 நான் உன்னை பிடிச்சுட்டேன். 221 00:16:15,642 --> 00:16:19,228 - போலாம்! நாம போகணும்! கிளம்புங்க! - போங்க! போங்க! 222 00:16:19,229 --> 00:16:20,939 - இருங்க. என் ஷூவை எடுங்க. - எடுத்துட்டேன். 223 00:16:26,028 --> 00:16:27,487 சரி, பதட்டப்படாத. 224 00:16:28,947 --> 00:16:30,073 டிம், கேட்குதா? 225 00:16:32,701 --> 00:16:35,078 மோனார்க் டீம், கேட்குதா? யாராவது இருக்கீங்களா? 226 00:16:35,954 --> 00:16:38,122 நம்ம ஆளுங்க நாலு பேர் இறந்துட்டாங்க. 227 00:16:38,123 --> 00:16:39,625 நீங்க எங்க இருக்கீங்க? 228 00:16:40,918 --> 00:16:42,752 …நீரோடைக்குப் பக்கத்துல. 229 00:16:42,753 --> 00:16:45,296 திரும்பச் சொல்லு, கிழக்கு பக்கமா போறீங்களா, டிம்? 230 00:16:45,297 --> 00:16:48,758 டிம், கிழக்கு பக்கம் போறீங்களா? கேட்குதா? 231 00:16:48,759 --> 00:16:50,552 பாழாப்போன தீவு. 232 00:16:51,345 --> 00:16:52,637 சரி. சரி. 233 00:16:52,638 --> 00:16:58,559 பில்லி சொன்ன அந்த பிளவு இங்க பக்கத்துலதான் இருக்குனு நிஜமாவே நம்புறியா? 234 00:16:58,560 --> 00:17:00,937 பிளவைத் தேடி அவன் உலகம் முழுக்க சுத்துனான்னு நமக்குத் தெரியும். 235 00:17:00,938 --> 00:17:03,022 ஏதோ ஒண்ணு அவனை இங்கே வரவச்சிருக்கு. 236 00:17:03,023 --> 00:17:05,775 நாம அதைக் கண்டுபிடிச்சா, டைட்டன் X-ஐ வீட்டுக்கு அனுப்பிடலாம். 237 00:17:05,776 --> 00:17:07,568 சரி. அதையே செய்வோம். 238 00:17:07,569 --> 00:17:08,861 பிரிஞ்சு போய் வேலையை முடிப்போம். 239 00:17:08,862 --> 00:17:09,987 அவங்ககிட்ட டிராக்கர் இருக்கு. 240 00:17:09,988 --> 00:17:11,072 அவங்க டைட்டன் X-ஐ கண்டுபிடிச்சிடுவாங்க. 241 00:17:11,073 --> 00:17:13,825 டைம் இருக்கறதுக்குள்ள பில்லி சொன்ன பிளவு கிடைக்குதான்னு நாம பார்ப்போம். 242 00:17:19,790 --> 00:17:23,125 அது இங்க வரும்போது, சும்மா ஒரு பிளவைத் தேடி உள்ள குதிச்சிட முடியாது தெரியுமில்ல. 243 00:17:23,126 --> 00:17:25,212 உண்மையயில், உள்ள போறதுக்கு ஒரு வாகனம் ரெடி பண்ணிட்டு இருக்கோம். 244 00:17:27,714 --> 00:17:30,258 கேட், நீ ஒன்னும் இதுல நிபுணர் இல்ல. என்ன நடக்குதுன்னே உனக்குத் தெரியாது. 245 00:17:30,259 --> 00:17:33,386 ஆமா, எனக்குத் தெரியாது. நான் ஒண்ணும் இயற்பியலாளர் இல்ல. வெறும் அறிவியல் டீச்சர் தான், 246 00:17:33,387 --> 00:17:36,055 ஆனா டைம் மெஷின்னு ஒண்ணு கிடையாதுன்னு எனக்குத் தெரியும். 247 00:17:36,056 --> 00:17:38,809 நாம எவ்ளோ ஆசைப்பட்டாலும் கடந்த காலத்தை மாத்த முடியாதுன்னு எனக்குத் தெரியும். 248 00:17:45,858 --> 00:17:47,818 நாம இப்படி இருக்கிறத அப்பா விரும்ப மாட்டார். 249 00:17:48,819 --> 00:17:51,113 அவருக்காக இன்னும் யாராவது கஷ்டப்படுறத அவர் விரும்ப மாட்டார். 250 00:17:51,738 --> 00:17:53,657 - அவருக்காகவாது வேணாம். - அவ சொல்றது சரிதான். 251 00:17:57,411 --> 00:18:00,873 நாம செய்றது ரொம்பவே ஆபத்தானது, மொத்தமா விபரீதமா முடியக்கூட வாய்ப்பிருக்கு. 252 00:18:01,498 --> 00:18:04,251 வீட்டுக்குப் போகணும்னா நீ போயிடு, கென்டாரோ. 253 00:18:04,960 --> 00:18:06,419 குடும்பத்தோட போய் இரு. 254 00:18:06,420 --> 00:18:10,591 உண்மையைச் சொல்லணும்னா, உன் மேல இவ்வளவு பாசம் வைக்க ஆள் இருக்கேன்னு எனக்குப் பொறாமையா இருக்கு. 255 00:18:12,843 --> 00:18:14,553 நிஜமாத்தான் சொல்றேன், ஹெலிகாப்டர்ல போயிடு. 256 00:18:15,262 --> 00:18:17,014 கரை ஓரத்துலதான் மோனார்க் கப்பல் நிக்குது. 257 00:18:18,140 --> 00:18:20,267 வேற யாரும் காயப்படுறத நான் விரும்பல. 258 00:18:21,393 --> 00:18:22,436 அதனால போ. 259 00:18:23,937 --> 00:18:25,022 கென்டாரோ. 260 00:18:26,190 --> 00:18:28,065 மிஸ் ராண்டாவை ஹெலிகாப்டர்ல ஏத்தி விடுங்க. 261 00:18:28,066 --> 00:18:29,318 - சரிங்க, மேடம். - கென்டாரோ, ப்ளீஸ். 262 00:18:30,652 --> 00:18:33,779 - கென்டாரோ. இப்படிப் பண்ணாதே! - ஹேய், எங்க கூட வா. 263 00:18:33,780 --> 00:18:35,657 அவ உன்னை பயன்படுத்தப் பாக்குறா! 264 00:18:36,325 --> 00:18:37,617 உனக்குச் சந்தேகம் இருந்தா பரவாயில்ல. 265 00:18:37,618 --> 00:18:40,244 என்னை விடுங்க! கென்டாரோ! 266 00:18:40,245 --> 00:18:41,663 எனக்கு சந்தேகம்லாம் இல்ல. 267 00:18:43,498 --> 00:18:44,750 நேரம் நெருங்கிடுச்சு. 268 00:18:45,751 --> 00:18:46,918 என்ன நிலவரம், கட்லர்? 269 00:18:46,919 --> 00:18:49,754 இப்போ வர்ற வேகத்தைப் பார்த்தா, டைட்டன் X இன்னும் 12 நிமிஷத்துல இங்க வந்துடும். 270 00:18:49,755 --> 00:18:51,881 - அப்புறம் காங்? - அடச்சே, அதுவும் நகர ஆரம்பிச்சுடுச்சு. 271 00:18:51,882 --> 00:18:53,591 - எங்கே? நம்மை நோக்கியா? - இல்ல. தென்கிழக்கு பக்கம். 272 00:18:53,592 --> 00:18:55,885 - அது டைட்டன் X-ஐ கண்டுபிடிச்சுருக்கும் போல. - கண்டுபிடிச்சுருக்குமா இல்ல கண்டுபிடிச்சுடுச்சா? 273 00:18:55,886 --> 00:18:58,012 இருக்கலாம். அது அந்தத் திசையில தான் போகுது. 274 00:18:58,013 --> 00:19:00,015 - சரி. அதன் கவனத்தைத் திசை திருப்புங்க. - சரி. 275 00:19:01,558 --> 00:19:02,851 நான் உனக்கு ஒண்ணு காட்டணும். 276 00:19:06,355 --> 00:19:10,400 பாலி, அந்த ஸ்கல்கிராலர் சத்தத்தைப் போடு. கவனத்தைத் திருப்பு. 277 00:19:34,216 --> 00:19:36,260 அடச்சே. அது காங்-ஆ? 278 00:19:37,469 --> 00:19:38,554 ஆமா. 279 00:19:39,304 --> 00:19:40,514 டிராக்கர் என்ன சொல்லுது? 280 00:19:41,682 --> 00:19:43,684 சிக்னல் இன்னும் பலமாத்தான் இருக்கு. 281 00:19:45,477 --> 00:19:46,895 அந்த டைட்டன் இந்தப் பக்கமா வருதுன்னு காட்டுது. 282 00:19:48,063 --> 00:19:50,648 சார், நாம ஏற்கனவே பாதிப் பேரை இழந்துட்டோம். 283 00:19:50,649 --> 00:19:52,900 நாம கரைக்குத் திரும்பிப் போறது பத்தி யோசிக்கணும். 284 00:19:52,901 --> 00:19:55,736 - மறுபடியும் தயராகி, ஒண்ணு சேர்ந்து… - இல்ல. கேட், கென்டாரோவோட கதி? 285 00:19:55,737 --> 00:19:57,238 கர்னல் ஷாவும் டாக்டர் ராண்டாவும் 286 00:19:57,239 --> 00:19:59,198 - முன்னாடி எங்கயோ இருக்காங்க. - அவங்க உயிரோட இருந்தாலொழிய. 287 00:19:59,199 --> 00:20:00,576 - என்ன சொன்ன? - ஹேய்! 288 00:20:02,786 --> 00:20:06,956 அவங்க உயிரோட இருந்தால், கண்டிப்பா இருப்பாங்க, அவங்க மிஷன்ல குறியா இருப்பாங்க. 289 00:20:06,957 --> 00:20:08,457 நாமும் அப்படித்தான் இருக்கணும். 290 00:20:08,458 --> 00:20:10,127 இப்போ, காங் வந்துட்டு இருக்கான். 291 00:20:10,711 --> 00:20:14,547 அதனால நாம வேகமா போகணும், இனிமே யாரையும் விட்டுட்டுப் போகக் கூடாது. 292 00:20:14,548 --> 00:20:15,549 புரிஞ்சுதா? 293 00:20:16,550 --> 00:20:17,633 - சரிங்க, சார். - புரிஞ்சுதான்னு கேட்டேன்? 294 00:20:17,634 --> 00:20:19,636 - புரிஞ்சுது, சார். - புரிஞ்சுதா? சரி, நல்லது. 295 00:20:23,765 --> 00:20:27,352 கொஞ்சம் மோசமா நடந்துக்கிட்டதுக்கு சாரி, ஆனா தலைமையேத்து நடத்துறது நல்லாருக்கு. 296 00:20:43,994 --> 00:20:45,204 இந்தப் பக்கம் வா. 297 00:20:46,455 --> 00:20:49,957 இதுதான் அந்த இடம். இதுதான் நம்ம கேப் கனாவெரல். 298 00:20:49,958 --> 00:20:51,627 இங்கிருந்து தான் நம்ம மிஷனைத் தொடங்கப் போறோம். 299 00:21:11,647 --> 00:21:13,607 உன் அக்கா சொன்னத பத்தி யோசிக்கிறியா? 300 00:21:15,192 --> 00:21:18,694 இங்க பாரு, என் அப்பாவோட செல்வாக்கு எனக்கு இல்லன்னு தெரியும், சரியா? 301 00:21:18,695 --> 00:21:21,614 என்கிட்ட என் பணம் இருக்கு, நம்மால முடியும்னு நம்புற 302 00:21:21,615 --> 00:21:24,159 புத்திசாலிங்க இருக்காங்க, இப்போ நீயும் இருக்க. 303 00:21:24,868 --> 00:21:27,704 பாரு, என்னால இதுல என்ன பிரயோஜனம்னு எனக்கே தெரியல. 304 00:21:29,414 --> 00:21:33,293 நிலாவுல கால் வைக்க நாசா ஏன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கை தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரியுமா? 305 00:21:35,462 --> 00:21:36,671 அவர் சிறந்த விமானிங்கறதாலயா? 306 00:21:36,672 --> 00:21:38,549 எல்லாருமே சிறந்த விமானிகள் தான். 307 00:21:40,300 --> 00:21:43,261 அந்த முதல் அடியை எடுத்து வைக்கிறவர், உலகத்துலேயே ரொம்பப் பிரபலமான ஆளா 308 00:21:43,262 --> 00:21:45,596 ஆவார்னு அவங்களுக்குத் தெரியும். 309 00:21:45,597 --> 00:21:47,974 ஒருவேளை வரலாற்றுலேயே மிகப் பிரபலமானவரா கூட ஆகலாம். 310 00:21:47,975 --> 00:21:49,976 சிறந்த ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு அவங்க நினைக்கல. 311 00:21:49,977 --> 00:21:51,562 சரியான ஆளைத் தேர்ந்தெடுக்கணும்னு நினைச்சாங்க. 312 00:21:52,563 --> 00:21:56,274 நீ கென்டாரோ ராண்டா, பில் மற்றும் கெய்கோ ராண்டாவோட பேரன். 313 00:21:56,275 --> 00:21:57,693 ஹிரோஷி ராண்டாவோட மகன். 314 00:21:58,527 --> 00:21:59,778 நீதான் சரியான ஆள். 315 00:22:05,742 --> 00:22:07,536 அதுக்கு முன்னாடி நாம ஒண்ணு செய்யணும். 316 00:22:09,621 --> 00:22:11,832 காங் இந்தத் தீவுல சுத்திட்டு இருக்கும்போது நம்மால இங்க தளம் அமைக்க முடியாது. 317 00:22:13,417 --> 00:22:14,876 நாம அத திசை திருப்பி, 318 00:22:14,877 --> 00:22:17,588 - பிஸியா வச்சிருப்போம்னு நினைச்சேன். - எவ்வளவு நேரத்துக்கு அப்படிப் பண்ண முடியும்? 319 00:22:18,463 --> 00:22:20,132 அதனாலதான் டைட்டன் X-ஐ இங்க கொண்டு வந்தோம். 320 00:22:21,550 --> 00:22:23,634 அந்த பிளவைத் திறக்கத்தான் அது தேவைன்னு நினைச்சேன். 321 00:22:23,635 --> 00:22:25,386 அதுவும் வேணும், அப்புறம் காங்கைக் கொல்லவும் அது வேணும். 322 00:22:25,387 --> 00:22:27,638 காங்கைக் கொல்லணுமா? அது நடக்காத காரியம். 323 00:22:27,639 --> 00:22:29,599 - அது அவசியம். - உங்களால காங்கைக் கொல்ல முடியாது. 324 00:22:29,600 --> 00:22:31,517 ஏன்? அதைக் கொல்ல முடியாதா, இல்ல அது சாகுறது உனக்குப் பிடிக்கலையா? 325 00:22:31,518 --> 00:22:33,186 இதுவும் திட்டத்துல இருக்குன்னு நீ என்கிட்ட சொல்லவே இல்ல. 326 00:22:33,187 --> 00:22:34,896 - தெரியும், என்னை மன்னிச்சுடு. - ஏன் என்கிட்ட பொய் சொன்ன? 327 00:22:34,897 --> 00:22:36,231 ஏன்னா, எனக்கு பயமா இருந்துச்சு. 328 00:22:37,107 --> 00:22:38,357 நான்… 329 00:22:38,358 --> 00:22:40,902 நான் உண்மையச் சொன்னா நீ மறுத்திடுவியோ, 330 00:22:40,903 --> 00:22:43,696 அப்புறம் நான் தனியா இதையெல்லாம் செய்ய வேண்டியிருக்குமோன்னு பயந்தேன். 331 00:22:43,697 --> 00:22:45,991 கென்டாரோ, இது எவ்வளவு முக்கியம்னு உனக்கே தெரியும். 332 00:22:49,203 --> 00:22:50,704 அது வந்துடுச்சு. 333 00:22:51,580 --> 00:22:53,540 - சரி, நாம உள்ளே போய் இதைப் பார்க்கலாம். - இல்ல. 334 00:22:54,750 --> 00:22:56,835 நான் இதைப் பார்க்கணும். என் கூடவே இரு. 335 00:23:06,094 --> 00:23:07,346 செயல்படுறதுக்குத் தயாரா இருங்க. 336 00:23:08,138 --> 00:23:12,099 என்னை விடுங்க! என் மேல இருந்து கையை எடுங்க! 337 00:23:12,100 --> 00:23:15,186 எல்லாரும் தளத்துக்குத் திரும்பி வாங்க. முதல் கட்டம் தொடங்கிடுச்சு. 338 00:23:15,187 --> 00:23:17,772 திரும்பச் சொல்றேன், முதல் கட்டம் தொடங்கிடுச்சு. 339 00:23:17,773 --> 00:23:20,233 சரி, எல்லாரும் கவனிங்க. நாம போலாம். போலாம். 340 00:23:20,234 --> 00:23:22,777 இப்போ இல்லன்னா எப்பவுமே முடியாது. எல்லாரும் தயாரா இருங்க. 341 00:23:22,778 --> 00:23:23,946 என் உத்தரவுக்காகக் காத்திருங்க. 342 00:23:36,041 --> 00:23:38,084 இருங்க, இப்ப வேணாம். 343 00:23:38,085 --> 00:23:40,878 அவுட்போஸ்ட் 18, நாங்க கிளம்பத் தயார். 344 00:23:40,879 --> 00:23:43,298 ஹேய்! இரு! என்ன பண்ணுற? 345 00:23:47,761 --> 00:23:49,012 இப்போ பண்ணுங்க. 346 00:23:49,721 --> 00:23:50,722 செயல்படுத்து. 347 00:24:15,414 --> 00:24:16,540 நாம ஜெயிச்சுட்டோம். 348 00:24:17,332 --> 00:24:18,667 அடக் கடவுளே. நாம ஜெயிச்சுட்டோம்! 349 00:24:20,502 --> 00:24:21,503 இது நம்முடையது. 350 00:24:25,090 --> 00:24:28,718 அந்த ஒடுங்கிய பள்ளத்தாக்கு. அது இங்க இருக்கிற மாதிரி இருக்கு. 351 00:24:28,719 --> 00:24:32,430 அதேதான். சரி, அந்த வழியா போனா, 352 00:24:32,431 --> 00:24:34,016 - பில்லி குறிச்ச இடத்துக்குப் போயிடலாம். - சரி. 353 00:24:39,688 --> 00:24:42,982 ரெண்டாவது இடமும் சரியா இல்ல. நாங்க அங்கதான் இருக்கோம், 354 00:24:42,983 --> 00:24:45,109 - பிளவு இருக்கிற அறிகுறியே இல்ல… - உடனே தளத்துக்குத் திரும்புங்க. 355 00:24:45,110 --> 00:24:47,528 நாங்க இன்னும் மூணாவது இடத்தைப் பார்க்கல. 356 00:24:47,529 --> 00:24:49,530 அதை அப்புறம் பாத்துக்கலாம். ரெண்டாவது கட்டம் தொடங்கப் போகுது. 357 00:24:49,531 --> 00:24:53,117 - திரும்பச் சொல்றேன். ரெண்டாவது கட்டம் தொடங்குது. - சரி, புரிஞ்சது. 358 00:24:53,118 --> 00:24:55,954 சரி, பாஸ் சொல்றதக் கேட்டீங்கள்ல. வாங்க, விபரீதம் ஆகப்போகுது. 359 00:24:57,623 --> 00:24:59,124 நாம போலாம்! 360 00:25:00,167 --> 00:25:02,211 - அவங்க யாரு? - அவங்க மோனார்க் ஆளுங்க இல்ல. 361 00:25:02,836 --> 00:25:04,921 பார்க்க ஏபெக்ஸ் ஆளுங்க மாதிரியும் தெரியல. 362 00:25:04,922 --> 00:25:07,382 கேட், கென்டாரோவை யாரு புடிச்சு வச்சிருக்காங்களோ, அவங்க ஆளுங்களாத்தான் இருக்கும். 363 00:25:09,218 --> 00:25:11,302 - அப்போ ரெண்டாவது கட்டம்னா என்ன? - ஏதோ விபரீதம்தான். 364 00:25:11,303 --> 00:25:12,846 அவங்க அவசர அவசரமா கிளம்புறாங்க. 365 00:25:13,514 --> 00:25:16,724 அவங்க அந்த பிளவைத்தான் தேடுறாங்க போல. 366 00:25:16,725 --> 00:25:19,937 பில்லி எதையோ கண்டுபிடிச்சிருக்கான்னு நாம மட்டும் நினைக்கல போல. 367 00:25:21,522 --> 00:25:22,689 சரி, இப்போ எங்க போகணும்? 368 00:25:23,774 --> 00:25:24,775 கெய்? 369 00:25:27,653 --> 00:25:28,945 எனக்கு இன்னும் புரியல. 370 00:25:28,946 --> 00:25:32,615 பில்லி எதைத்தான் தேடிட்டு இருந்தான்? அது… அவனோட டைரிலயே இல்லையே. 371 00:25:32,616 --> 00:25:34,368 ஏற்கனவே அரை டஜன் பிளவை குறிச்சு வச்சிருக்கான்… 372 00:25:35,911 --> 00:25:40,290 - ஆனா இந்த இடத்துல அப்படி என்ன விசேஷம்? - அவனைப் பத்திதான் உனக்குத் தெரியுமே. 373 00:25:41,250 --> 00:25:42,292 தெரியும்னுதான் நினைச்சேன். 374 00:25:43,502 --> 00:25:46,213 ஆனா ஹிரோஷியை விட்டுட்டு, அவன் இங்க வந்திருக்கான். 375 00:25:46,797 --> 00:25:48,965 ஏதோ வினோதமா நடந்திருக்கு. 376 00:25:48,966 --> 00:25:51,718 நான் போனதுக்கு அப்புறம் என்ன மாறுச்சு? 377 00:25:52,803 --> 00:25:55,973 என்ன மாறிச்சு, கெய்? உன்னை இழந்ததுக்கு அப்புறமா? 378 00:25:59,560 --> 00:26:01,186 எல்லாமே மாறிடுச்சு. 379 00:26:03,981 --> 00:26:05,023 எல்லாமே. 380 00:26:05,732 --> 00:26:06,816 வேணாம், என்னைக் கீழே விட்றாதீங்க! 381 00:26:06,817 --> 00:26:07,900 கஜகஸ்தான் - 1959 382 00:26:07,901 --> 00:26:10,319 நாம ரொம்ப கனமா இருக்கோம்! உன் கையைக் கொடு! 383 00:26:10,320 --> 00:26:11,696 என்னால் பிடிக்க முடியல! 384 00:26:11,697 --> 00:26:13,991 என் கையைப் பிடி, கெய்! என்னிடம் வா! 385 00:26:28,005 --> 00:26:29,840 பத்து நிமிஷத்துல ரயில் கிளம்பிடும். நாம போகணும். 386 00:26:34,428 --> 00:26:35,971 - நாம போகணும். - அவளை விட்டுட்டு நான் வரமாட்டேன். 387 00:26:40,225 --> 00:26:41,392 அவ போயிட்டா. 388 00:26:41,393 --> 00:26:42,728 - அது உனக்கு தெரியாது. - எனக்குத் தெரியும். 389 00:26:43,812 --> 00:26:45,730 நீ நிஜத்தை ஏத்துக்க ஆரம்பிக்கணும். 390 00:26:45,731 --> 00:26:47,524 அந்த உயிரினங்க, அதுங்க… 391 00:26:50,485 --> 00:26:53,821 அந்த நில அதிர்வு ரீடிங் எல்லாம் சரியா இருந்தா, 392 00:26:53,822 --> 00:26:55,239 பூமிக்கு அடியில பள்ளம் இருக்கும், அவள்… 393 00:26:55,240 --> 00:26:58,035 - …தப்பிக்க ஒரு இடம் கிடைச்சிருக்கும்… - பில்லி. நிறுத்து. கடவுளே, நிறுத்து! 394 00:27:03,457 --> 00:27:05,250 என்னால தாங்க முடியல, லீ. 395 00:27:06,710 --> 00:27:08,086 நான் முயற்சி பண்ணேன், ஆனா… 396 00:27:10,255 --> 00:27:11,548 நான் அவளைக் கோட்டை விட்டுட்டேன். 397 00:27:14,009 --> 00:27:15,052 நீ என் பேச்சைக் கேட்கல. 398 00:27:17,304 --> 00:27:18,889 அவளைப் போக வேணாம்னு சொன்னேன். 399 00:27:20,265 --> 00:27:21,600 நீ ஏன் நான் சொன்னதைக் கேட்கல? 400 00:27:25,145 --> 00:27:27,231 - என்னை மன்னிச்சிடு, லீ. - இனிமே சொல்லி என்ன பிரயோஜனம். 401 00:27:29,942 --> 00:27:32,444 நம் வாழ்க்கை முழுக்க இது நம்மள உறுத்திக்கிட்டே இருக்கப் போகுது. 402 00:27:50,546 --> 00:27:53,631 இந்த மயக்க மருந்து டைட்டனோட நரம்பு மண்டலத்துல வேலை செய்யுமான்னே நமக்குத் தெரியாது, 403 00:27:53,632 --> 00:27:55,759 அதனால இது எப்போ தெளியும்னு சொல்ல முடியாது. 404 00:27:56,760 --> 00:27:59,095 அது காங் கூட சண்டை போடலன்னா என்ன பண்றது? 405 00:27:59,096 --> 00:28:01,139 பீச்ல அது காட்ஸில்லா கூட மோதுனத பார்த்த தானே? 406 00:28:01,807 --> 00:28:03,016 அது அதோட முட்டையை காப்பாத்த போராடுச்சு. 407 00:28:03,725 --> 00:28:05,352 இப்போ நீ அப்படியே உன்அக்கா மாதிரி பேசுற. 408 00:28:06,395 --> 00:28:08,939 சரியான காரணத்தைக் கொடுத்தா, எதை வேணாலும் சண்டைக்கு இழுக்கலாம். 409 00:28:10,607 --> 00:28:14,026 பிரெண்டா திட்டம் தோத்தாலும், அதன் நரம்பு மண்டலத்த கட்டுப்படுத்த முடியும்னு நிரூபிச்சிருச்சு. 410 00:28:14,027 --> 00:28:16,070 ஆனா அதோட கோபத்தைக் குறைக்காம, 411 00:28:16,071 --> 00:28:17,865 நாம அதை வெறித்தனமா ஏத்தி விடப் போறோம். 412 00:28:24,246 --> 00:28:26,539 அந்த உயிரினங்க மேல இரக்கப்படாத, கென்டாரோ. 413 00:28:26,540 --> 00:28:29,042 அதுங்களுக்கு நம்ம மேலயோ இல்ல உன் அப்பா மேலயோ எந்த இரக்கமும் இல்ல. 414 00:28:30,210 --> 00:28:32,086 - கண்ட்ரோல் சென்டர் சிம்மன்ஸை அழைக்குது. - சொல்லுங்க. 415 00:28:32,087 --> 00:28:34,422 கேட் ராண்டா தப்பிச்சுட்டாள். அவ ஹெலிகாப்டர்ல ஏறல. 416 00:28:34,423 --> 00:28:35,924 அவ பேஸ்ல தான் சுத்திக்கிட்டு இருக்கா. 417 00:28:47,269 --> 00:28:48,352 தகவல் தொடர்பு அறை சிஏ3.7 418 00:28:48,353 --> 00:28:51,106 சிறையிலிருந்து ஆரம்பிச்சோம். ரெண்டுலயுமே இல்ல. 419 00:29:05,495 --> 00:29:07,079 மிஸ் சிம்மன்ஸ். 420 00:29:07,080 --> 00:29:09,791 மிஸ் சிம்மன்ஸ்! 421 00:29:11,168 --> 00:29:12,419 எங்களுக்கு இது கிடைச்சது. 422 00:29:13,128 --> 00:29:14,338 டைட்டன் உடம்புக்குள்ள இது பொருத்தப்பட்டிருக்கு. 423 00:29:15,339 --> 00:29:17,757 பார்க்க ஏதோ டிராக்கர் மாதிரி இருக்கு. 424 00:29:17,758 --> 00:29:19,468 அது பக்கத்துல வந்திருக்கணுமே. 425 00:29:20,260 --> 00:29:22,221 கிலோமீட்டர் கணக்கை சொல்லவா இல்ல…? 426 00:29:24,473 --> 00:29:26,224 - அடச்சே. - என்னாச்சு? 427 00:29:26,225 --> 00:29:28,643 அது… தெரியல. சிக்னல் போயிடுச்சுன்னு நினைக்கிறேன். 428 00:29:28,644 --> 00:29:31,646 - ரிசீவர் இன்னும் வேலை செய்யுதா? - எனக்குத் தெரியல. அது வேலை செய்யல… 429 00:29:31,647 --> 00:29:33,148 சிக்னல் அனுப்புறத நிறுத்திடுச்சு. 430 00:29:33,774 --> 00:29:36,568 சரி. இப்போ நாம எங்க இருக்கோம்? 431 00:29:38,278 --> 00:29:40,196 யாராவது இருக்கீங்களா? 432 00:29:40,197 --> 00:29:41,739 நாம அவுட்போஸ்ட் 18 எல்லையைத் தாண்டிட்டோம். 433 00:29:41,740 --> 00:29:45,535 - ஆனா இது மோனார்க் ஃப்ரீக்வென்சி. - நீங்க சத்தத்தைக் குறைக்கணும். 434 00:29:45,536 --> 00:29:47,703 - இல்ல, நீங்க கேளுங்க. - வெளிய எதாச்சும் இருந்தா நம்ம சத்தம் கேட்கும். 435 00:29:47,704 --> 00:29:49,413 - நீங்க சத்தத்தைக் குறைக்கணும். - ஆமா, அதுதான் விஷயமே. 436 00:29:49,414 --> 00:29:52,250 - அது ரேடியோ. யாரோ இருக்காங்க, கொடுங்க… - ஹலோ? 437 00:29:52,251 --> 00:29:55,211 - ஹலோ? - ஹம்? நான் பேசுறது கேட்குதா? 438 00:29:55,212 --> 00:29:57,922 - கேட்குது, கேட். ஹேய். - மே? நீயா பேசுற? 439 00:29:57,923 --> 00:29:59,882 ஆமா, ஆமா. நாங்க உன்னைத் தேடித்தான் வர்றோம். 440 00:29:59,883 --> 00:30:01,634 வேணாம், வேணாம், வேணாம். தீவை விட்டு ஓடிடுங்க. 441 00:30:01,635 --> 00:30:02,928 அவங்க டைட்டனைப் பிடிச்சு வச்சிருக்காங்க. 442 00:30:03,720 --> 00:30:05,513 என்ன சொல்ற? கென்டாரோ உன் கூட இருக்கானா? 443 00:30:05,514 --> 00:30:08,933 - கென்டாரோ அவங்க கூட இருக்கான். - என்ன சொல்ற? யார் கூட? 444 00:30:08,934 --> 00:30:10,518 - யாரு? யார் கூட இருக்கான்? - இசபெல் சிம்மன்ஸ். 445 00:30:10,519 --> 00:30:13,187 - அவளுக்கு இங்க ஒரு பெரிய தளமே இருக்கு. - இசபெல் சிம்மன்ஸ். 446 00:30:13,188 --> 00:30:15,815 - அவ ஏதோ வில்லங்கம் பண்றான்னு அப்பவே தெரியும். - தளம். 447 00:30:15,816 --> 00:30:18,734 என்ன… என்ன மாதிரியான தளம் அது? எங்க இருக்கு? 448 00:30:18,735 --> 00:30:21,821 அது ஒரு பழைய மோனார்க் தளம். அவள் அந்த டைட்டனை இங்க வரவழைத்தாள். 449 00:30:21,822 --> 00:30:22,906 நான் போகணும். 450 00:30:24,157 --> 00:30:26,243 - ஒரு பள்ளத்தாக்கு இருக்கு. அதைக் கண்டுபிடிங்க. - இரு, கேட். 451 00:30:27,703 --> 00:30:28,704 கேட்! 452 00:30:30,831 --> 00:30:34,000 அவ என்ன… பழைய மோனார்க் தளம். இதைக் கேட்டா உங்களுக்கு ஏதாவது தோணுதா? 453 00:30:34,001 --> 00:30:35,043 ஆமா. 454 00:30:36,420 --> 00:30:39,547 சரி, கிளம்பலாம். காங் அங்க போறதுக்கு முன்னாடி நாம போகணும். 455 00:30:39,548 --> 00:30:40,966 - நாம போலாம்! - சரி! 456 00:30:59,359 --> 00:31:00,444 இன்னும் எவ்வளவு தூரம்? 457 00:31:01,153 --> 00:31:05,699 அடுத்த இடம் இதோ முன்னாடிதான் இருக்கு. 458 00:31:08,911 --> 00:31:10,162 அடக் கடவுளே. 459 00:31:12,789 --> 00:31:13,916 இது என்ன இடம்? 460 00:31:15,250 --> 00:31:17,211 ஏதோ கசாப்புக் கடை மாதிரி இருக்கு. 461 00:31:52,079 --> 00:31:55,874 அடடா. இங்க ஏதோ ரொம்ப மோசமா நடந்திருக்கு. 462 00:32:16,228 --> 00:32:17,855 அது என்னது? 463 00:32:27,489 --> 00:32:28,949 பில்லி. 464 00:32:34,997 --> 00:32:36,415 இது பில்லியோடது. 465 00:32:47,009 --> 00:32:48,802 இங்கதான் அவன் இறந்திருப்பான்னு நினைக்கிறேன். 466 00:32:59,146 --> 00:33:00,355 கெய். 467 00:33:04,610 --> 00:33:06,653 நாசமாப் போன, பில்லி! 468 00:33:11,742 --> 00:33:13,326 நான் உன்னை நம்பினேன். 469 00:33:13,327 --> 00:33:16,747 உன் மேல நம்பிக்கை வச்சேன், ஆனா நீ எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்ட, எதுக்காக? 470 00:33:28,759 --> 00:33:31,594 இந்தப் புள்ளிகள் எல்லாம் சக்தி சேர்ற இடம். 471 00:33:31,595 --> 00:33:33,513 நான் அதை பிளவுகள்னு சொல்றேன், சரியா? 472 00:33:33,514 --> 00:33:36,766 அவை ஒன்னோட ஒன்னு பின்னிப் பிணைஞ்சிருக்கு… 473 00:33:36,767 --> 00:33:37,934 ரீடிங், பென்சில்வேனியா - 1968 474 00:33:37,935 --> 00:33:41,062 …அது எல்லாம் இணைஞ்சிருக்குன்னு நான் நம்புறேன், இங்க இருக்கிற 475 00:33:41,063 --> 00:33:43,398 - மிருகங்கள் அது வழியா போக முடியும்… - மிருகங்களா? 476 00:33:45,067 --> 00:33:47,235 என்ன, இந்த பிக்ஃபுட் மாதிரியா? 477 00:33:47,236 --> 00:33:48,819 ஏன் கூடாது? 478 00:33:48,820 --> 00:33:51,031 பல கிராமத்துக் கதைகள் உண்மைச் சம்பவத்தை வச்சுதான் உருவாகியிருக்கு. 479 00:33:52,783 --> 00:33:55,744 அப்போ நம்ம நண்பரான அந்த பிக்ஃபுட், 480 00:33:56,703 --> 00:33:59,747 அந்த வழியா போய், 481 00:33:59,748 --> 00:34:03,710 வேற எங்கயாவது வெளிய வந்தால்? 482 00:34:04,545 --> 00:34:05,753 சுரங்கப் பாதை மாதிரியா? 483 00:34:05,754 --> 00:34:08,799 அதே தான். சுரங்கப் பாதை மாதிரி. 484 00:34:10,509 --> 00:34:14,179 சுரங்கப் பாதை மாதிரி தான், 485 00:34:15,429 --> 00:34:16,723 ஒரு முறை நீங்க உள்ள போனீங்கன்னா… 486 00:34:19,976 --> 00:34:23,021 அது வழியா போய், வேற எங்கயாவது வெளிய வரலாம். 487 00:34:25,607 --> 00:34:26,608 நான்… 488 00:34:28,485 --> 00:34:31,071 இன்னைக்கு அவ்ளோதான். வகுப்பு முடிஞ்சது. 489 00:34:35,367 --> 00:34:37,327 இரு, இரு, இரு. 490 00:34:38,620 --> 00:34:40,745 - கொடு, நான் வாங்கிக்கிறேன். - நான் உனக்கு நிறைய செஞ்சு கொடுத்தேன். 491 00:34:40,746 --> 00:34:44,000 - எதையாவது திரும்ப எடுத்தியா? - அப்படின்னா நான் தொடர்ந்து முயற்சி பண்ணனும். 492 00:34:44,001 --> 00:34:46,042 - வரைபடம் இன்னும் முழுசா முடியல. - உன் தியரிக்கு 493 00:34:46,043 --> 00:34:47,962 எந்த ஆதாரமும் இல்லைங்கறத ஒத்துக்குற நேரம் வந்திருச்சு. 494 00:34:47,963 --> 00:34:49,546 ஒரு விஷயம் இல்லவே இல்லை என்பதை நம்மால நிரூபிக்க முடியாது. 495 00:34:49,547 --> 00:34:52,301 - நம்ம கற்பனைதான் நம்ம எல்லை… - நிறுத்து! 496 00:34:53,969 --> 00:34:56,387 நாம ரெண்டு பேரும் கொஞ்சம் குறைவா கற்பனை பண்ணியிருக்கணும் போல. 497 00:34:56,388 --> 00:34:58,806 அப்படி பண்ணியிருந்திருந்தா கெய்கோவும் லீயும் இப்போ நம்ம கூட இருந்திருப்பாங்க. 498 00:34:58,807 --> 00:34:59,933 - அதை என்கிட்ட கொடு! - பில்லி! 499 00:35:01,059 --> 00:35:02,895 நீ என்ன பண்ற? நிறுத்து. 500 00:35:05,272 --> 00:35:07,274 - வீட்டுக்கு போய் உன் பையனை பாரு. - முடியாது. 501 00:35:08,358 --> 00:35:09,359 இப்போ முடியாது. 502 00:35:11,612 --> 00:35:13,155 நம்ம வேலை இன்னும் முடியல. 503 00:35:13,780 --> 00:35:17,326 இழந்தவங்களைத் தேடிப் போய், இருக்கிற குடும்பத்தை கோட்டை விட்டுடாதே. 504 00:35:19,912 --> 00:35:22,331 அவன் குறிச்ச கடைசி இடம் இங்க முன்னாடி தான் இருக்கணும். 505 00:35:23,916 --> 00:35:26,792 - கெய், நான் என்ன சொல்றேன்னா, பில்லி மனசுல… - நாம இதை முடிப்போம். 506 00:35:26,793 --> 00:35:29,378 - …என்ன இருந்துச்சுன்னு உனக்குத் தெரியாது. - நாம இதை முடிப்போம். 507 00:35:29,379 --> 00:35:31,965 கேட், கென்டாரோவைக் கண்டுபிடிச்சுட்டு, இந்தத் தீவை விட்டுப் போவோம். 508 00:35:36,929 --> 00:35:38,012 இதுதான் அந்த இடம். 509 00:35:38,013 --> 00:35:40,516 வரைபடத்துல அவன் குறிச்ச கடைசி இடம் இதுதான். 510 00:35:41,308 --> 00:35:43,310 ஆனா இதை சரிபாக்குறதுக்கு முன்பே அவன் இறந்துட்டான். 511 00:35:45,062 --> 00:35:46,647 பார்க்க அழகாவாச்சு இருக்கே. 512 00:35:47,856 --> 00:35:50,983 - கெய்… - எனக்கு இப்போ அட்வைஸ் எதுவும் வேணாம். 513 00:35:50,984 --> 00:35:52,777 இல்ல, நான் அட்வைஸ் பண்ண நினைக்கல. 514 00:35:52,778 --> 00:35:56,739 கெய், அது… அது என்னது? அங்கே… 515 00:35:56,740 --> 00:35:59,785 - என்னது? - அதோ அங்கே. அது என்னது? 516 00:36:11,880 --> 00:36:14,340 இது சுஸுகி-சென்செய் செஞ்சது. 517 00:36:14,341 --> 00:36:16,843 ஆமா, ஹத்தேருமாவுல அவனோட வீட்ல பார்த்தோம்ல, அதே மாதிரி இருக்கு. 518 00:36:16,844 --> 00:36:18,427 ஆமா. 519 00:36:18,428 --> 00:36:23,308 அப்போ, பில்லி இங்க வரும்போது இதை எடுத்துட்டு வந்திருப்பானோ? 520 00:36:24,518 --> 00:36:26,603 ஒரு நிமிஷம் இரு. அங்க பாரு, இன்னொன்னு இருக்கு. 521 00:36:29,523 --> 00:36:32,401 இதைப் பாரு, கெய். ஹஹ். 522 00:36:33,944 --> 00:36:37,489 இன்னொன்னு, அப்புறம்… அவன் நிறையவே கொண்டு வந்திருக்கான். 523 00:36:41,118 --> 00:36:43,328 ஒருவேளை அவன் கொண்டு வரலன்னா. 524 00:36:44,746 --> 00:36:45,914 ப்ரோப்ஸ். 525 00:36:46,707 --> 00:36:48,959 பில்லி ப்ரோப்ஸை உள்ளே அனுப்பணும்னு நினைச்சான். இரு. 526 00:36:51,420 --> 00:36:52,503 பாரு. 527 00:36:52,504 --> 00:36:54,672 {\an8}வில்லியம் ராண்டா ஜூலை 1966. மடகாஸ்கர் 528 00:36:54,673 --> 00:36:58,760 "வில்லியம் ராண்டா, 1966, மடகாஸ்கரா?" 529 00:37:06,101 --> 00:37:08,604 "1971, நியூ கினி." 530 00:37:15,569 --> 00:37:17,905 "1968, லாக் நெஸ்." 531 00:37:18,906 --> 00:37:21,657 "1972, கஜகஸ்தான்." 532 00:37:21,658 --> 00:37:22,867 அவன் திரும்பிப் போயிருக்கான். 533 00:37:22,868 --> 00:37:26,996 உலகம் முழுக்க இருக்கிற பிளவுக்குள்ள இதைத் தூக்கிப் போட்டிருக்கான். 534 00:37:26,997 --> 00:37:29,541 - அது எல்லாமே இங்க வந்துருக்கு. - பில்லியோட பிளவு. 535 00:37:30,334 --> 00:37:34,838 கெய், நாம… நாம கண்டுபிடிச்சுட்டோம். இதுதான் அது. எல்லா இடத்துக்கும் போற வழி இதுதான். 536 00:37:39,885 --> 00:37:41,178 ஓ, பில்லி. 537 00:37:48,185 --> 00:37:51,355 இரு. இதுக்குள்ள ஏதோ இருக்கு. 538 00:37:52,773 --> 00:37:54,525 ஆமா, இதுலயும் இருக்கு. 539 00:38:00,239 --> 00:38:02,031 {\an8}கெய்கோ, சொல்ல வேண்டிய நேரத்துல எனக்கு வார்த்தை வரல, 540 00:38:02,032 --> 00:38:03,157 {\an8}ஆனா இப்போதாவது இது உனக்குக் கேட்கும்னு நம்புறேன். 541 00:38:03,158 --> 00:38:04,618 {\an8}"கெய்கோ… 542 00:38:09,081 --> 00:38:12,041 {\an8}சொல்ல வேண்டிய நேரத்துல எனக்கு வார்த்தை வரல, ஆனா 543 00:38:12,042 --> 00:38:13,836 {\an8}- இப்போதாவாது இது உனக்குக் கேட்கும்னு நம்புறேன்." - இது உனக்குக் கேட்கும்னு நம்புறேன். 544 00:38:19,758 --> 00:38:21,885 நீ என்னைக் காதலிக்குற என்பது 545 00:38:22,719 --> 00:38:24,221 என் அறிவுக்கு எட்டாத விஷயம். 546 00:38:29,351 --> 00:38:31,435 இந்த உலகத்துலயும் சரி, வேற எந்த உலகத்துலயும் சரி, 547 00:38:31,436 --> 00:38:33,021 உன்னைத்தான் நேசிப்பேன்னு உறுதி அளிக்கிறேன். 548 00:38:34,189 --> 00:38:36,399 இந்தக் காதல் நம்மை எங்கு கூட்டிட்டுப் போனாலும், 549 00:38:36,400 --> 00:38:40,028 இந்த உலகத்தோட எல்லை வரை, ஏன் அதுக்கும் மேலயும் நான் உன் கூடவே வருவேன். 550 00:38:49,705 --> 00:38:51,164 நீ என்னைக் கண்டுபிடிச்சுட்ட, பில்லி. 551 00:38:59,089 --> 00:39:01,508 அவன் அவ்வளவு நாளும் என்னைத்தான் தேடி இருக்கான். 552 00:39:03,969 --> 00:39:08,055 அதனாலத்தான் அந்த பிளவைத் தேடி இங்க வந்திருக்கான், என்னைக் கண்டுபிடிக்க. 553 00:39:08,056 --> 00:39:10,893 - ஆஹா. - அவன் என்னை கைவிடவே இல்ல. 554 00:39:45,844 --> 00:39:47,262 கிளாரன்ஸ், பதில் சொல்லு. 555 00:39:47,804 --> 00:39:49,680 மயக்கம் தெளிய ஆரம்பிச்சிடுச்சு. 556 00:39:49,681 --> 00:39:50,849 சரி, நேரம் வந்தாச்சு. 557 00:39:51,683 --> 00:39:53,226 நீங்க கேட்டைக் கண்டுபிடிச்சீங்களா? 558 00:39:53,227 --> 00:39:55,019 இல்ல, இன்னும் இல்ல. ஆனா நம்புங்க, கண்டுபிடிச்சிடுவோம். 559 00:39:55,020 --> 00:39:58,105 கேளு, இப்போ நாம கவனம் சிதறாம இருக்கணும். நமக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கு. 560 00:39:58,106 --> 00:39:59,107 நான் சொல்றது புரியுதா? 561 00:40:00,859 --> 00:40:02,194 ஆமா. 562 00:40:13,997 --> 00:40:16,833 டைட்டன் X மூளையில பயங்கர அசைவு இருக்கு. அது விழிச்சுக்குது. 563 00:40:16,834 --> 00:40:18,501 - இம்ப்லான்ட்ஸ் வேலை செய்யுதா? - செய்யுது, மேடம். 564 00:40:18,502 --> 00:40:20,921 - சிஸ்டம் சார்ஜ் ஆகி, தயாரா இருக்கு. - அதைத் தூண்டிவிட முடியுதான்னு பார்ப்போம். 565 00:40:21,547 --> 00:40:23,465 - செயல்படுத்துங்க. - செயல்படுத்துறேன். 566 00:40:54,162 --> 00:40:56,038 நமக்கு நேரம் இல்லன்னு நினைக்கிறேன். 567 00:40:56,039 --> 00:40:58,584 டைட்டன் X-ஐ இந்த பிளவுக்குள்ள தள்ள ஒரு வழியைப் பார்க்கணும். 568 00:41:12,598 --> 00:41:14,725 சினாப்டிக் இணைப்பு சரியா இருக்கு. 569 00:41:18,228 --> 00:41:19,479 கென்டாரோ? 570 00:41:36,330 --> 00:41:38,664 நீ ஹெலிகாப்டரை விட்டு இறங்கியிருக்கக் கூடாது. 571 00:41:38,665 --> 00:41:41,250 இந்தக் கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு வெறிபிடிச்ச டைட்டன் சுத்திட்டு இருக்கு. 572 00:41:41,251 --> 00:41:44,546 எனக்குத் தெரியும். நம்மால ஏதாச்சும் பண்ண முடியும். 573 00:41:47,007 --> 00:41:48,634 அதோட குட்டியை அதுகிட்டயே திருப்பிக் கொடுக்கலாம். 574 00:41:50,427 --> 00:41:53,221 அப்புறம் என்ன? அது வாங்கிட்டு, அதன் இடத்துக்கே போயிடுமா? 575 00:41:53,222 --> 00:41:55,724 ஆமா, நாம தலையிடாம இருந்திருந்தா அதுதான் நடந்திருக்கும். 576 00:41:59,061 --> 00:42:00,979 நான் தலையிடாமல் இருந்திருந்தால். 577 00:42:02,606 --> 00:42:05,150 நான்தான் இதை ஆரம்பிச்சேன். பூதத்தை ஜாடியில இருந்து விடுவிச்சது நான்தான். 578 00:42:07,361 --> 00:42:09,237 - அதை திரும்ப ஜாடியில போட எனக்கு உதவு. - உன்னால முடியாது, கேட். 579 00:42:09,238 --> 00:42:10,947 கென்டாரோ… 580 00:42:10,948 --> 00:42:13,367 ஆனா, அப்பா நம்மள இந்த மாதிரி பார்க்க விரும்ப மாட்டார்னு முன்னாடி சொன்னியே, 581 00:42:14,201 --> 00:42:15,576 அதுக்காகத்தான் நான் இத செய்யுறேன். 582 00:42:15,577 --> 00:42:17,746 அதனாலதான் டைட்டன் X-க்கோ இல்ல காங்குக்கோ என்ன ஆகும் என்பதை பத்தி எனக்குக் கவலையில்ல. 583 00:42:18,747 --> 00:42:21,083 - நீ என்ன பேசிட்டு இருக்க? - அப்பா. அவர் சாக வேண்டிய அவசியமில்லை. 584 00:42:22,626 --> 00:42:23,877 நம்மால அவரைக் காப்பாத்த முடியும். 585 00:43:31,653 --> 00:43:33,655 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்