1 00:00:08,800 --> 00:00:10,761 நீ விரும்பினால் நாள் முழுக்க இப்படியே இருக்கலாம். 2 00:00:13,305 --> 00:00:14,681 நீ ஏன் அப்படி செய்தாய், எட்வர்ட்? 3 00:00:15,390 --> 00:00:17,267 இது பேச்சுத்திறமை காட்டும் இடமல்ல. எனக்கு பதில் வேண்டும். 4 00:00:18,143 --> 00:00:20,354 எதற்காக படிக்கட்டில் பியானோவை தள்ளினாய்? 5 00:00:23,857 --> 00:00:25,817 அது விழும்போது வரும் சத்தத்தை கேட்க விரும்பினேன். 6 00:00:27,778 --> 00:00:30,030 - இது உனக்கு வேடிக்கையா என்ன? - இல்லை. 7 00:00:30,030 --> 00:00:32,031 நல்லது, ஏனென்றால் இது வேடிக்கையாக இல்லை. 8 00:00:33,700 --> 00:00:35,410 சட்டவிரோத துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதம், 9 00:00:35,410 --> 00:00:37,996 வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து பாதுகாக்க 10 00:00:37,996 --> 00:00:40,707 இந்தப் பள்ளிக்கென்று நெறிமுறைகள் இருக்கின்றன. 11 00:00:40,707 --> 00:00:43,335 ஒரு நிர்வாகியாக நான் தயாராக வேண்டும் என்று நான் நினைக்காத விஷயங்கள். 12 00:00:43,335 --> 00:00:48,215 ஆனால் ஒரு மாணவன் பியானோவை படிக்கட்டில் கீழே தள்ளுவதற்கு என்னிடம் எந்த நெறிமுறையும் இல்லை. 13 00:00:50,509 --> 00:00:51,969 புதிய பியானோவிற்கு பணம் கொடுக்கிறேன். 14 00:00:51,969 --> 00:00:54,263 - இது அதைப் பற்றியது அல்ல. - அப்படியென்றால் இது எதைப் பற்றியது? 15 00:00:54,263 --> 00:00:55,514 இது பியானோவைப் பற்றியது அல்ல. 16 00:00:59,059 --> 00:01:00,060 என்னைப் பார். 17 00:01:03,605 --> 00:01:04,897 நீ நிறைய அனுபவித்திருக்கிறாய். 18 00:01:06,358 --> 00:01:08,068 இதை ஒரு காரணமாக வைத்து யாரும் உன்னை தவறாக நினைக்கவில்லை. 19 00:01:08,986 --> 00:01:11,697 ஆனால் அது நீ அதிர்ஷ்டசாலி என்பதால் மட்டுமே, அதோடு யாருக்கும் காயமாகவில்லை. 20 00:01:11,697 --> 00:01:14,032 நீ யாரையாவது கொன்றிருக்கக் கூடும். 21 00:01:14,032 --> 00:01:15,242 ஆனால் நான் செய்யவில்லையே. 22 00:01:16,159 --> 00:01:17,870 நான் யாரையும் கொல்லவோ காயப்படுத்தவோ இல்லை. 23 00:01:19,037 --> 00:01:22,249 உண்மையில், நான் அதை தள்ளிய போது யாரும் படிக்கட்டில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டேன். 24 00:01:22,249 --> 00:01:23,834 நீ அதை எதற்காக தள்ளினாய்? 25 00:01:30,090 --> 00:01:32,801 எட்வர்ட், ஒருவேளை நீ இந்த பள்ளியிலேயே புத்திசாலி மாணவனாக இருக்கலாம், 26 00:01:33,302 --> 00:01:35,846 அதனால்தான் நான் உன்னுடன் வெளிப்படையாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். 27 00:01:37,389 --> 00:01:40,601 நாம் உன் குடும்பத்துடனும் நம் பள்ளி உளவியலாளருடன் இணைந்து பணியாற்றப் போகிறோம், 28 00:01:40,601 --> 00:01:44,479 அதோடு உனக்கான சரியான கல்விச் சூழலை நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். 29 00:01:46,231 --> 00:01:48,400 ஆனால் நீ இனி ரிவர்வியூ பள்ளியில் படிக்கப் போவதில்லை. 30 00:01:58,410 --> 00:01:59,786 மன்னித்துவிடுங்கள், சரியா? 31 00:02:00,662 --> 00:02:03,749 உன் சித்தியையும், நம் பள்ளி உளவியலாளர் டாக்டர் பார்லோவையும் அழைக்கப் போகிறேன். 32 00:02:04,666 --> 00:02:05,959 நீ அவருடன் பேசப் போகிறாய். 33 00:02:13,467 --> 00:02:14,468 எட்வர்ட். 34 00:02:16,094 --> 00:02:18,931 இன்று திருமதி. ஃபாஸ்டரின் பிறந்தநாள். யாரோ கேக் கொண்டு வந்திருக்கிறார்கள். 35 00:02:21,600 --> 00:02:22,684 உனக்கு ஒரு துண்டு கொடுக்கவா? 36 00:02:29,566 --> 00:02:30,609 சரி, கொடுங்கள். 37 00:03:48,729 --> 00:03:50,522 {\an8}ஆன் நபோலிடனோ எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 38 00:04:08,874 --> 00:04:10,334 என்ன இது, சாம்? 39 00:04:13,295 --> 00:04:14,630 இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. 40 00:04:14,630 --> 00:04:18,216 இதற்கு எந்த அர்த்தமும் இல்லையா? என்ன நடக்கிறது? 41 00:04:18,216 --> 00:04:19,885 நாம் பொறுமையாக பேச வேண்டும்... 42 00:04:19,885 --> 00:04:21,928 - நீ ஓரினச்சேர்க்கையாளனா? - இல்லை. 43 00:04:23,055 --> 00:04:24,389 அப்படியென்றால், இருபாலின சேர்க்கையாளனா? 44 00:04:25,057 --> 00:04:27,434 இப்போது இங்கே என்ன நடக்கிறது என்று என்னிடம் சொல்கிறாயா? 45 00:04:30,020 --> 00:04:31,021 சாம். 46 00:04:31,522 --> 00:04:33,565 யார் என்னை பல் மருத்துவரிடம் அழைத்துப் போகிறீர்கள்? 47 00:04:34,191 --> 00:04:37,778 நான்தான், ஜீனா-பீன். அப்பாவுக்கு குட்பை சொல். 48 00:04:37,778 --> 00:04:39,154 - குட்பை, அப்பா. - பை, செல்லம். 49 00:04:40,572 --> 00:04:42,324 - சியானா. - உன்னிடம் பிறகு பேசுகிறேன். 50 00:04:48,830 --> 00:04:49,915 லிண்டா. 51 00:04:51,124 --> 00:04:52,251 செல்லம், நமக்குத் தாமதமாகிறது. 52 00:04:53,043 --> 00:04:54,044 டக், டக். 53 00:04:55,254 --> 00:04:56,255 எழுந்துவிட்டாயா? 54 00:05:00,884 --> 00:05:01,885 செல்லம். 55 00:05:05,722 --> 00:05:07,099 நாம் கிளம்ப வேண்டும். 56 00:05:08,350 --> 00:05:09,434 உடம்பு சரியில்லை. 57 00:05:09,434 --> 00:05:11,186 நீ நலமா? உடம்பு சரியில்லையா? 58 00:05:13,480 --> 00:05:15,858 தெரியவில்லை, ஆனால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை. 59 00:05:15,858 --> 00:05:18,443 - உடல் ரீதியாகவா மன ரீதியாகவா? - தெரியவில்லை. 60 00:05:18,443 --> 00:05:19,820 சரி. 61 00:05:22,739 --> 00:05:23,824 சரி. 62 00:05:25,701 --> 00:05:27,661 உனக்கு உடல்நிலை சரியில்லை என்றால், 63 00:05:28,328 --> 00:05:33,458 சில நேரங்களில் படுக்கையை விட்டு எழுந்து உன் நாளைத் தொடங்குவது நல்லது. 64 00:05:34,042 --> 00:05:37,212 நான் சமீபமாக மிகவும் வருத்தமாக இருக்கிறேன். 65 00:05:37,212 --> 00:05:40,591 இன்று, நான் மிகவும் சீக்கிரமாக எழுந்து, நதிக்கரைக்குப் போனேன், அது... 66 00:05:40,591 --> 00:05:43,802 உனக்கு நல்லதாக இருக்கலாம், ஆனால் அது எல்லோருக்கும் சரிபட்டு வராது. 67 00:05:45,345 --> 00:05:46,180 அதற்கு என்ன அர்த்தம்? 68 00:05:46,180 --> 00:05:49,474 சில நேரங்களில் என் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையிலேயே படுத்துக்கொண்டு, 69 00:05:49,474 --> 00:05:51,727 என் ஃபோனில் கேம்ஸ் விளையாட விரும்புவேன், இது ஒன்றும் குற்றமில்லை. 70 00:05:51,727 --> 00:05:54,479 நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. நீ அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்தால்... 71 00:05:54,479 --> 00:05:55,647 - விரும்புகிறேன். - சரி. 72 00:05:56,273 --> 00:05:58,817 - இது பரவாயில்லை என்றால். - பரவாயில்லை... கண்டிப்பாக பரவாயில்லை. 73 00:05:58,817 --> 00:06:02,905 - உறுதியாக நீ நன்றாக இருக்கிறாயா? - நன்றாக இருக்கிறேன். 74 00:06:05,324 --> 00:06:08,660 கடவுளே. நல்லது... இது எட்வர்ட்டின் பள்ளியிலிருந்து. 75 00:06:10,329 --> 00:06:11,330 ஹலோ. 76 00:06:12,206 --> 00:06:17,419 ஆம், நான் லேசி தான் பேசுகிறேன். அவன் என்ன செய்தான்? 77 00:06:18,587 --> 00:06:21,048 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் ஏட்ரியானா வாஷிங்டன். 78 00:06:21,632 --> 00:06:24,718 எனவே நாளை வந்து ஓட்டுப் போடுங்கள் என்கிறேன். 79 00:06:25,344 --> 00:06:27,638 இந்த நகரத்துக்காக ஓட்டுப் போடுங்கள். இந்த மாவட்டத்துக்காக ஓட்டுப் போடுங்கள். 80 00:06:27,638 --> 00:06:29,306 உங்கள் மன நிம்மதிக்காக ஓட்டுப் போடுங்கள். 81 00:06:29,306 --> 00:06:31,892 ஏனென்றால் அதற்கான நேரம் வந்துவிட்டது, 82 00:06:31,892 --> 00:06:35,562 வீட்டுவசதியில் நிலையான மாற்றங்கள், குறைந்த வாடகை. 83 00:06:37,147 --> 00:06:38,649 இந்த மொத்த செயல்முறையிலும் 84 00:06:39,525 --> 00:06:42,611 உங்களுக்கு உதவவும் ஆதரவாகவும் நான் இருப்பேன் என்பதைச் சொல்ல நான் இங்கே இருக்கிறேன். 85 00:06:48,951 --> 00:06:51,286 - நீ வேறு எங்காவது போக வேண்டுமா? - இருக்கலாம். 86 00:06:51,286 --> 00:06:54,331 - செல்வி. வாஷிங்டன்? - ஹாய், நான் ஏட்ரியானா. சந்தித்ததில் மகிழ்ச்சி. 87 00:07:05,008 --> 00:07:08,512 நாளைக்குத்தான் தேர்தல். அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். 88 00:07:10,013 --> 00:07:11,557 அவர் குட்பை சொல்வதாக சொன்னார். 89 00:07:14,893 --> 00:07:16,687 விமான நிலையத்திலிருந்து அவருக்கு வீடியோ அழைப்பு செய்யலாம். 90 00:07:49,428 --> 00:07:50,429 நீ என்ன வரைகிறாய்? 91 00:07:53,932 --> 00:07:55,184 இதை அவருக்காக விட்டுச் செல்லப் போகிறேன். 92 00:07:58,562 --> 00:08:02,608 ஓ, பெக்ஸ். இது அழகாக இருக்கிறது. 93 00:08:04,026 --> 00:08:05,861 நாம் அவரை மீண்டும் பார்ப்போம், தெரியுமா? 94 00:08:07,988 --> 00:08:08,989 இருக்கலாம். 95 00:09:31,446 --> 00:09:32,614 என்னால் கற்பனை செய்ய முடியும் அவர்கள்... 96 00:09:33,282 --> 00:09:35,284 இப்போது ஒரு பிரச்சினை ஏற்படப் போகிறது... 97 00:10:20,370 --> 00:10:21,371 லிண்டா? 98 00:10:24,374 --> 00:10:25,667 911-ஐ அழை. 99 00:10:34,426 --> 00:10:35,469 சரி. 100 00:10:37,179 --> 00:10:38,805 911-ஐ அழை! 101 00:10:45,979 --> 00:10:48,065 கடவுளே. 102 00:11:26,645 --> 00:11:28,480 {\an8}நியக் சமூகம் 103 00:12:04,099 --> 00:12:05,767 பாறை, காகிதம், கத்தரிக்கோல்கள், ஷூட். 104 00:12:06,894 --> 00:12:09,313 - பை. - ஹேய், என் கையைப் பிடி. 105 00:12:11,315 --> 00:12:12,691 பாறை, காகிதம், கத்தரிக்கோல்கள், ஷூட். 106 00:12:13,692 --> 00:12:14,526 எடி. 107 00:12:14,526 --> 00:12:16,612 ...அவசரத் தரையிறக்கத்திற்கு தயாராக இருங்கள். முன்னோக்கி சாய்ந்து... 108 00:12:24,453 --> 00:12:26,288 - ஹாய். என்ன நடந்தது? - செல்வி. கர்டிஸ். 109 00:12:26,288 --> 00:12:28,916 - அவன் எங்கே? - ஒரு சிறு பிரச்சினையாகிவிட்டது. 110 00:12:28,916 --> 00:12:30,000 சரி. 111 00:12:30,542 --> 00:12:36,048 சரி, அதனால் எனக்குப் புரி... அவன் மறைந்துவிட்டானா? 112 00:12:36,048 --> 00:12:40,719 அதற்கு என்ன அர்த்தம்? அவன்... காற்றில் கரைந்துவிட்டானா? 113 00:12:40,719 --> 00:12:42,137 சுவருக்குள் மறைந்துவிட்டானா? 114 00:12:42,137 --> 00:12:43,639 அவன் ஜன்னல் வழியாக போய்விட்டான் என்று நினைக்கிறோம். 115 00:12:44,848 --> 00:12:46,016 ஜன்னல் வழியாக போய்விட்டானா? 116 00:12:46,016 --> 00:12:47,434 நாங்கள் தரைதளத்தில்தான் இருந்தோம். 117 00:12:47,434 --> 00:12:49,478 எனவே கடைசி வகுப்பின் போது எட்வர்ட் படிக்கட்டில் 118 00:12:49,478 --> 00:12:54,316 பியானோவை தள்ளிவிட்டதாகவும், 119 00:12:55,567 --> 00:12:57,653 பிறகு ஜன்னல் வழியாக குதித்து ஓடிவிட்டதாகவும் சொல்கிறீர்களா? 120 00:13:01,073 --> 00:13:02,699 அதற்கு தீர்வு காண நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 121 00:13:05,911 --> 00:13:08,664 அவன்தான். இது அவன்தான். இது எட்வர்ட் தான். இப்போதே பேசுகிறேன். 122 00:13:08,664 --> 00:13:10,123 ஹலோ. ஹாய். செல்லம், எங்கே இருக்கிறாய்? 123 00:13:10,999 --> 00:13:12,334 இது லேசி கர்டிஸா? 124 00:13:12,918 --> 00:13:13,961 ஆம். யார் பேசுகிறீர்கள்? 125 00:13:13,961 --> 00:13:17,673 ஆல் செயின்ட்ஸ் மருத்துவமனையிலிருந்து லிண்டா ஸ்டோலன் சார்பாக அழைத்திருக்கிறேன். 126 00:13:18,423 --> 00:13:19,758 நீங்கள் அவரது உறவினரா? 127 00:13:20,843 --> 00:13:22,177 லிண்டாவா? 128 00:14:02,467 --> 00:14:04,803 - டீ டீ. - மைலோ. 129 00:14:04,803 --> 00:14:07,723 - நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? - நான் உங்களிடம் விவரமாக பேச வேண்டும். 130 00:14:07,723 --> 00:14:09,057 நீங்கள் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். 131 00:14:09,057 --> 00:14:10,934 - அச்சச்சோ. - ஆம். 132 00:14:10,934 --> 00:14:14,438 ஓ, இல்லை. சரி, இரண்டு நிமிடங்கள்? அதாவது, நான் நேராக வந்துவிட்டேன். 133 00:14:14,438 --> 00:14:17,107 பிரச்சினை இல்லையே? சீக்கிரம் பேசிவிடுகிறேன். 134 00:14:17,608 --> 00:14:19,359 - வாருங்கள். சரி. - ஓ, நன்றி. 135 00:14:19,359 --> 00:14:21,445 - இது நன்றாக இருக்கிறது. - ஆம், நன்றாக வைத்திருக்க முயற்சிக்கிறோம். 136 00:14:28,952 --> 00:14:30,454 எனவே, நீங்கள் மக்களுக்கு நேரடியாக ஆலோசனை கொடுக்கிறீர்களா? 137 00:14:30,454 --> 00:14:32,247 ஆம். அதுதான் என் வேலை. 138 00:14:32,247 --> 00:14:34,291 உங்களுக்கான சந்திப்பை ஏற்பாடு செய்வதில் மகிழ்ச்சியடைவேன், 139 00:14:34,291 --> 00:14:35,918 அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால். 140 00:14:35,918 --> 00:14:37,961 நாங்கள்தான் உங்களது வாடிக்கையாளர்கள் என்று நினைத்தேன். 141 00:14:37,961 --> 00:14:40,797 ஆதரவுக் குழுவா? இல்லை. நான் மற்றவர்களையும் பார்க்கிறேன். 142 00:14:40,797 --> 00:14:42,841 டீ டீ, எதற்காக வந்தீர்கள்? 143 00:14:42,841 --> 00:14:46,011 ஓ, நம்முடைய அடுத்த அமர்வுதான் கடைசி அமர்வு. 144 00:14:46,011 --> 00:14:47,513 ஆம். எனக்கு அது தெரியும். 145 00:14:47,513 --> 00:14:49,389 எனவே நாம் ஒரு பார்ட்டி வைக்க வேண்டும். 146 00:14:50,474 --> 00:14:53,101 ஒரு ஆதரவுக் குழுவுக்கு அது வினோதமானதாக இருக்கும். 147 00:14:53,101 --> 00:14:55,812 கேளுங்கள், மைலோ, மனநல ஆரோக்கியத்தில் நான் நிபுணர் இல்லை, 148 00:14:55,812 --> 00:14:59,399 ஆனால் எனக்கு என்ன தெரியும் என்றால், நீங்கள் ஒரு குழுவை ஒன்றிணைக்கும்போது, 149 00:14:59,399 --> 00:15:02,069 அவர்கள் எதையாவது பகிர்ந்து கொள்கிறார்கள், பிறகு அவர்கள் கடைசியாக சந்திக்கும்போது 150 00:15:02,611 --> 00:15:03,987 ஒரு பார்ட்டி இருக்க வேண்டும். 151 00:15:03,987 --> 00:15:05,614 அதற்கு என்ன தேவைப்படும்? 152 00:15:06,532 --> 00:15:11,703 - ஸ்நாக்ஸ். மது. கப்கேக்குகள். பார்ட்டி பொருட்கள். - சரி. சரி, அது பரவாயில்லை. 153 00:15:11,703 --> 00:15:14,164 - அது நல்லது. சரி. - யே. அது அருமையானது. 154 00:15:14,164 --> 00:15:16,542 விமான நிறுவனத்திடமிருந்து சிறப்பு நிதியோ 155 00:15:16,542 --> 00:15:18,293 வேறு ஏதாவதோ இருக்கிறதா? 156 00:15:18,293 --> 00:15:20,379 - ஸ்நாக்ஸுக்கும் மதுவுக்குமா? - ஆம். 157 00:15:20,379 --> 00:15:22,256 இல்லை. ஆனால் ஆம். 158 00:15:23,799 --> 00:15:26,677 - இதோ 40 டாலர்கள், சரியா? - நன்றி. 159 00:15:26,677 --> 00:15:28,303 - சரி. சரி. - நன்றி. 160 00:15:29,596 --> 00:15:35,102 நானும்... இந்த குழு, இந்த அனுபவம், 161 00:15:35,102 --> 00:15:40,649 எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று சொல்ல விரும்பினேன். 162 00:15:41,400 --> 00:15:42,901 எனவே நன்றி. 163 00:15:45,070 --> 00:15:46,947 நன்றி. அதாவது, அதை வரவேற்கிறேன். 164 00:15:46,947 --> 00:15:48,323 இது முடிவுக்கு வராமல் இருந்திருக்கலாம். 165 00:15:48,323 --> 00:15:51,994 - தெரியும். - இது ஏன் முடிவுக்கு வர வேண்டும்? 166 00:15:52,744 --> 00:15:56,456 சரி... அதாவது, உங்கள் குணப்படுத்தும் செயல்முறையைத் தொடர 167 00:15:56,456 --> 00:15:59,084 உங்களுக்கு வேறு இடங்களும் இருக்கின்றன, அதோடு... 168 00:15:59,084 --> 00:16:00,836 எனக்கு வேறு இடங்கள் வேண்டாம். 169 00:16:00,836 --> 00:16:04,840 அதாவது, எனக்கு இந்த குழுதான் வேண்டும். இந்த குழுவைப் பிடித்திருக்கிறது. 170 00:16:04,840 --> 00:16:06,466 இதுதான் நம்முடைய குழு, 171 00:16:06,466 --> 00:16:10,179 அதோடு நாம் தனித்துவமான ஒன்றை பகிர்ந்து கொள்கிறோம் என்று நினைக்கிறேன், தெரியுமா? 172 00:16:10,179 --> 00:16:11,889 ஆம். பகிர்ந்து கொள்கிறீர்கள். 173 00:16:11,889 --> 00:16:14,558 - இருந்தாலும் அது முடிய வேண்டும். - ஆம். 174 00:16:14,558 --> 00:16:17,686 ஏன்? விமான நிறுவனம் அதற்கு நிதி கொடுப்பதை நிறுத்தியதாலா, 175 00:16:17,686 --> 00:16:20,898 அவர்கள் ஏற்கனவே பிரச்சினைக்கான விமர்சனங்களை சட்டப்பூர்வமாக தவிர்த்துவிட்டாதாலா? அதாவது... 176 00:16:20,898 --> 00:16:22,566 அது சட்டப்பூர்வ நடவடிக்கை. 177 00:16:22,566 --> 00:16:24,026 அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 178 00:16:27,446 --> 00:16:28,906 அது ஆட்சேபனைக்குரியது என்று நினைக்கிறேன். 179 00:16:31,033 --> 00:16:33,744 அவர்கள் உங்களுக்குச் செய்வது மனிதாபிமானமற்ற செயல் என்று நினைக்கிறேன். 180 00:16:33,744 --> 00:16:34,703 ஆனால்... 181 00:16:37,122 --> 00:16:39,333 அதைச் சொல்ல எனக்கு அனுமதி கிடையாது, எனவே... 182 00:16:40,501 --> 00:16:42,544 உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன். 183 00:16:42,544 --> 00:16:43,629 சரி. 184 00:16:45,088 --> 00:16:46,423 சரி. 185 00:16:47,883 --> 00:16:49,134 சரி. 186 00:16:49,134 --> 00:16:52,346 கேரேஜ் விற்பனையில் இருந்தவன் இவன்தான். 187 00:16:53,347 --> 00:16:54,640 ஆம், இது அவன்தான். 188 00:16:54,640 --> 00:16:58,352 - அவனது பெயர் வெர்னன். - அவனது பெயர் வெர்னனா? பிறகு? 189 00:16:58,352 --> 00:16:59,645 எதுவும் நடக்கவில்லை. 190 00:16:59,645 --> 00:17:01,355 நீ அவனோடு உடலுறவு கொள்ளவில்லையா? 191 00:17:01,355 --> 00:17:03,190 - இல்லை. - நிச்சயமாகவா? 192 00:17:03,190 --> 00:17:04,358 சியானா, நான்... 193 00:17:04,358 --> 00:17:05,567 பென்னுடன் எப்படி? 194 00:17:06,859 --> 00:17:07,903 சொல்ல இன்னும் ஏதாவது இருக்கிறதா? 195 00:17:07,903 --> 00:17:09,320 சியானா... 196 00:17:09,946 --> 00:17:12,574 தயவுசெய்து சொல். 197 00:17:12,574 --> 00:17:14,492 நீ எனக்கு மிகவும் கடன்பட்டிருக்கிறாய். 198 00:17:19,080 --> 00:17:21,083 பென்... 199 00:17:25,087 --> 00:17:30,342 நான் நேசித்த முதல் நபர் பென் தான். 200 00:17:39,309 --> 00:17:40,769 உண்மையில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. 201 00:17:42,688 --> 00:17:43,814 நாங்கள் இளையவர்களாக இருந்தோம். 202 00:17:45,023 --> 00:17:49,236 எங்களுக்குள் ஈர்ப்பு ஏற்பட்டது. இரண்டு முறை முத்தமிட்டிருக்கிறோம். 203 00:17:50,487 --> 00:17:51,697 உனக்குத் தெரிந்திருக்கிறது. 204 00:17:52,990 --> 00:17:57,119 நீ என்னை சந்திப்பதற்கு முன்பே. உனக்குத் தெரிந்திருக்கிறது. 205 00:17:59,246 --> 00:18:01,957 உன்னை நேசிக்கிறேன். உன்னைத்தான் தேர்ந்தெடுத்தேன். 206 00:18:01,957 --> 00:18:05,752 நீதான் ஒரு முடிவெடுத்தாக வேண்டும், சாம். நானில்லை. 207 00:18:06,628 --> 00:18:09,631 ஏனென்றால், நான் முடிவெடுக்க அனுமதிக்கும் கௌரவத்தை நீ எனக்குக் கொடுக்கவில்லை. 208 00:18:09,631 --> 00:18:11,550 சியானா, உன்னை அதிகமாக நேசிக்கிறேன்... 209 00:18:11,550 --> 00:18:14,469 இல்லை. நாசமாய் போ, சாம்! நாசமாய் போ! 210 00:18:21,143 --> 00:18:22,352 இன்னும் எந்த தகவலும் இல்லை. 211 00:18:33,071 --> 00:18:35,741 இன்று பள்ளியில் என்ன நடந்ததென்று என்னிடம் சொல்ல விரும்புகிறாயா? 212 00:18:38,452 --> 00:18:39,953 நான் பியானோவை படிக்கட்டில் தள்ளினேன். 213 00:18:40,954 --> 00:18:43,582 ஆம், நீ தள்ளினாய். 214 00:18:44,166 --> 00:18:45,584 எதற்காக அப்படி செய்தாய், எட்வர்ட்? 215 00:18:48,670 --> 00:18:50,005 அது விழும்போது வரும் சத்தத்தை கேட்க விரும்பினேன். 216 00:18:50,714 --> 00:18:52,549 - இது ஒன்றும் வேடிக்கை இல்லை. - நான் சிரிக்கவில்லை. 217 00:18:52,549 --> 00:18:55,928 "விழும்போது வரும் சத்தத்தை கேட்க விரும்பினேன்" என்பதை விட மேலான ஒன்றை சொல். 218 00:18:55,928 --> 00:18:57,346 எதை செய்தாலும் ஏன் செய்கிறேன் என்றே தெரியவில்லை. 219 00:19:00,098 --> 00:19:02,351 அதாவது, எனக்கே தெரியாத போது என்னால் ஏன் செய்தேன் என்று சொல்ல முடியாது... 220 00:19:03,018 --> 00:19:04,186 ஏன் அதை செய்தேன் என்று தெரியவில்லை எனும்போது. 221 00:19:05,229 --> 00:19:06,271 உங்களுக்கு என்ன அக்கறை? 222 00:19:06,772 --> 00:19:08,524 எனக்கு என்ன அக்கறையா? 223 00:19:08,524 --> 00:19:13,195 அதாவது, லிண்டா சாகக் கிடக்கிறார். அவரது குழந்தை இறக்கலாம். 224 00:19:13,195 --> 00:19:14,571 யாரும் இறக்கப் போவதில்லை. 225 00:19:15,697 --> 00:19:18,200 - எல்லோரும் நன்றாக இருக்கப் போகிறோம். - அது உங்களுக்குத் தெரியாது. 226 00:19:21,578 --> 00:19:22,746 அது யாருக்கும் தெரியாது. 227 00:19:25,541 --> 00:19:29,503 யாரும் நன்றாக இருக்கப் போவதில்லை. நாம் எல்லோரும் சாகப் போகிறோம். 228 00:19:41,431 --> 00:19:43,350 - உனக்கு இரவு உணவு வேண்டுமா? - எனக்குப் பசியில்லை. 229 00:19:44,059 --> 00:19:46,728 நான் உன் ஜான் சித்தப்பாவை அழைக்கிறேன். 230 00:19:46,728 --> 00:19:49,273 அவர் வந்து உன்னை அழைத்துப் போகட்டும். 231 00:19:49,273 --> 00:19:51,859 - நீங்கள் விவாகரத்து பெற்றவர்கள். - நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. 232 00:19:51,859 --> 00:19:54,820 நாங்கள் பிரிந்திருக்கிறோம். அவர் இன்னும் உன் சித்தப்பாதான். 233 00:19:54,820 --> 00:19:56,154 அதாவது, அவர் இன்னும் என் கணவர், 234 00:19:56,154 --> 00:19:58,740 அதோடு எல்லா நோக்கங்களுக்காகவும் எவ்வளவு செயலிழந்தாலும், 235 00:19:58,740 --> 00:20:00,075 நாம் இன்னும் ஒரு குடும்பம்தான். 236 00:20:00,659 --> 00:20:05,581 எல்லாம், எட்வர்ட், எல்லாம் சரியாகிவிடும். 237 00:20:07,332 --> 00:20:09,126 எல்லாம் சரியாகிவிடும். 238 00:20:13,672 --> 00:20:14,715 நான் உன் ஜான் சித்தப்பாவை அழைக்கிறேன். 239 00:20:55,756 --> 00:20:57,758 {\an8}குட்-பை பெக்ஸ் 240 00:22:32,936 --> 00:22:35,731 என்னுடன் இதைச் செய்ய ஒப்புக்கொண்டதற்கு நன்றி. 241 00:22:37,816 --> 00:22:41,111 இந்த சூப் உருண்டைகளில் நீ ஏன் மிகவும் ஆர்வமாக இருக்கிறாய்? 242 00:22:41,111 --> 00:22:45,657 எங்கள் பாட்டி நாங்கள் அவருடன் ஒரு குளிர்காலத்தில் தங்கியிருந்தபோது இதை செய்து கொடுத்தார், 243 00:22:45,657 --> 00:22:47,576 நானும் ப்ரெண்டும் அங்கே மிக மகிழ்ச்சியாக இருந்தோம், எனவே... 244 00:22:47,576 --> 00:22:51,496 - எனவே, நீ அதை மீண்டும் செய்ய நினைக்கிறாய். - மிகச்சரி. 245 00:22:53,165 --> 00:22:56,376 சூப் உருண்டைகள் தயாரிப்பது உனக்கு நல்ல உணர்வை தரப்போவதில்லை. 246 00:22:58,086 --> 00:22:59,796 ஆம், அநேகமாக இல்லாமல் போகலாம். 247 00:23:04,009 --> 00:23:07,346 அது டீ டீ. ஹாய், டீ டீ. 248 00:23:08,013 --> 00:23:09,181 ஹாய். 249 00:23:11,850 --> 00:23:16,730 நாம் நம் கடைசி ஆதரவுக் குழு சந்திப்புக்கு விருந்து வைக்குமாறு மைலோ சொன்னார். 250 00:23:16,730 --> 00:23:18,815 முதலில் நான் எளிமையான ஒன்றைச் செய்ய நினைத்தேன், 251 00:23:18,815 --> 00:23:20,859 ஜூஸ், கப்கேக்குகள் போன்றவற்றை. 252 00:23:20,859 --> 00:23:23,487 பிறகு இன்னும் சில வகை தின்பண்டங்களை கொடுக்கலாம் என்று நினைத்தேன். 253 00:23:23,487 --> 00:23:25,614 அதன் அடிப்படையில், நான் 254 00:23:25,614 --> 00:23:29,243 பசியை தூண்டும் இணையற்ற ரோமா தக்காளி தின்பண்டம் செய்கிறேன். 255 00:23:29,243 --> 00:23:31,161 குழுவின் கலாச்சார பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒன்றை 256 00:23:31,161 --> 00:23:34,623 நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் உன் ஞாபகம் வந்தது 257 00:23:35,332 --> 00:23:37,125 எனவே, பாரம்பரியமான ஏதாவது நான் கொண்டு வர வேண்டுமா? 258 00:23:37,125 --> 00:23:38,585 அப்படி நான் சொல்லவில்லை, நீயே சொல். 259 00:23:38,585 --> 00:23:39,920 சரி. 260 00:23:41,129 --> 00:23:45,425 சரி, நல்லதோ கெட்டதோ, நான் சூப் உருண்டைகளை கொண்டு வருகிறேன். 261 00:23:47,010 --> 00:23:49,346 - சரி, பாருங்கள், நான் போக வேண்டும். பை-பை, பை. - பொறு. ஸ்டீவ்? பொறு... 262 00:23:57,896 --> 00:23:59,022 நாம் இங்கே என்ன செய்கிறோம்? 263 00:24:00,482 --> 00:24:02,109 - சூப் உருண்டைகளை செய்ய வந்தேன். - பொய் சொல்லாதே. 264 00:24:02,109 --> 00:24:04,862 இல்லை, பொய் இல்லை. சத்தியமாக. சத்தியமாக சூப் உருண்டைகளை செய்யத்தான் வந்தேன். 265 00:24:04,862 --> 00:24:06,655 - நீ ஏன் இங்கு வந்தாய்? - இதைச் செய்ய. 266 00:24:07,406 --> 00:24:08,407 இல்லை. 267 00:24:10,617 --> 00:24:12,286 இல்லை. நீ ஏன் இங்கு வந்தாய்? 268 00:24:16,999 --> 00:24:20,419 என்னைப் பார். ஏன்? 269 00:24:22,629 --> 00:24:23,630 எனக்குத் தெரியவில்லை. 270 00:24:25,048 --> 00:24:29,761 ஏன் என்று எனக்குத் தெரியும். நான் உன்னை இங்கு வர அனுமதித்ததற்கும் அதுவே காரணம். 271 00:24:34,224 --> 00:24:35,225 நீ ஏன் இங்கு வந்தாய்? 272 00:24:38,729 --> 00:24:39,980 நீ அதை சொல்வதை நான் கேட்க வேண்டும். 273 00:25:10,552 --> 00:25:14,264 - உனக்குப் பசிக்கிறதா? - இல்லை. 274 00:25:14,932 --> 00:25:17,267 என்னிடம் பார்ட்டி மிக்ஸ் நிறைய இருக்கிறது. 275 00:25:17,267 --> 00:25:19,394 உனக்குத் தெரியுமா, பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் 276 00:25:19,394 --> 00:25:21,021 சீட்டோக்கள், ப்ரீட்சல்கள் எல்லாமே இருக்கும். 277 00:25:21,021 --> 00:25:22,606 இப்படி, மிகவும் பெரியது. 278 00:25:26,527 --> 00:25:28,153 நான் ஏன் அப்படி செய்தேன் என்று நீங்கள் என்னிடம் கேட்க மாட்டீர்களா? 279 00:25:29,154 --> 00:25:32,074 பார், நண்பா, நான் சிறுவயதில் மிகவும் முட்டாள்தனமான செயல் செய்தேன், தெரியுமா? 280 00:25:32,074 --> 00:25:35,202 எனவே, நான் உண்மையில்... ஏன் என்றெல்லாம் கேட்கமாட்டேன். 281 00:25:35,202 --> 00:25:36,870 நீ அதைப் பற்றி பேச விரும்புகிறாயா? 282 00:25:38,997 --> 00:25:39,998 இல்லை. 283 00:25:40,666 --> 00:25:42,501 இல்லை. எனக்குப் புரிகிறது. 284 00:26:24,626 --> 00:26:26,253 எனக்கு 15 வயதாக இருந்தபோது என் பெற்றோர்கள் பிரிந்தனர். 285 00:26:28,922 --> 00:26:33,177 நான் எங்கள் வீட்டில் மின்விளக்குகளை திருடி 286 00:26:33,177 --> 00:26:35,971 அவற்றை எங்கள் கேரேஜின் சுவற்றில் அடித்து நொறுக்குவேன். 287 00:26:35,971 --> 00:26:40,767 எல்லா விளக்குகளும் எங்கு போகின்றன என்பதை என் அப்பா கண்டுபிடித்ததும், 288 00:26:41,393 --> 00:26:43,228 அவர் என்னை மனநல மருத்துவரை பார்க்கச் செய்தார். 289 00:26:43,228 --> 00:26:47,691 மனநல மருத்துவர், "ஏன் அப்படிச் செய்கிறாய்?" என்றெல்லாம் கேட்டார். 290 00:26:48,525 --> 00:26:52,029 "எனக்குத் தெரியாது" என்றேன். எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாது. 291 00:26:54,531 --> 00:26:55,866 எனக்கு பொருட்களை உடைப்பது பிடித்தது. 292 00:26:58,785 --> 00:27:00,495 அதன் சத்தம் எனக்குப் பிடித்திருந்தது. 293 00:27:02,581 --> 00:27:03,582 ஆம், மிகச்சரி. 294 00:27:07,127 --> 00:27:08,504 நான் அதைக் கேட்க விரும்பினேன். 295 00:27:10,422 --> 00:27:11,423 சரியா? 296 00:27:23,018 --> 00:27:24,269 நான் இறந்திருக்க வேண்டும், தெரியுமா 297 00:27:27,147 --> 00:27:29,191 ஹேய். இல்லை, அப்படியில்லை. 298 00:27:29,733 --> 00:27:31,193 நான் அந்த விமானத்தில் இறந்திருக்க வேண்டும். 299 00:27:36,782 --> 00:27:39,785 புறப்படுவதற்கு முன், ஜன்னல் இருக்கையில் ஜோர்டான் இருந்தான்... 300 00:27:45,499 --> 00:27:46,583 ஆனால் நான் அதை விரும்பினேன். 301 00:27:48,335 --> 00:27:52,714 நாங்கள் அதற்கு பாறை, காகிதம், கத்தரிக்கோல்கள் விளையாடினோம், அவன் பாறை என்றான், நான் காகிதம். 302 00:27:55,759 --> 00:27:56,844 அதனால், எனக்கு அவனுடைய இருக்கை கிடைத்தது. 303 00:27:59,972 --> 00:28:01,014 ஆனால் அது அவனுடைய இருக்கை. 304 00:28:06,645 --> 00:28:08,230 ஜோர்டான் பிழைத்திருப்பான், நான் அல்ல. 305 00:28:12,901 --> 00:28:14,319 நான் இங்கு இருக்கக் கூடாது. 306 00:28:25,789 --> 00:28:28,041 நான் உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் காகிதம் பாறையை ஜெயித்ததுதான். 307 00:28:45,058 --> 00:28:47,728 வசதிகள் 308 00:29:52,918 --> 00:29:56,463 உங்களுக்கு மின்சாரம் இல்லை, தண்ணீர் வருகிறதா? அது... ஆம், இல்லை, அதாவது, அது... 309 00:29:56,463 --> 00:29:58,298 நான் அதைப் பார்க்க வேண்டும், ஆனால் உங்களுக்கு ஒரே நேரத்தில் 310 00:29:58,298 --> 00:30:00,384 இரண்டு தனித்தனி சிக்கல்கள் இருப்பது போல தெரிகிறது. 311 00:30:01,802 --> 00:30:06,390 ஆம். பெரிய சிக்கல்தான். சரி. 312 00:30:12,521 --> 00:30:13,897 சரி. 313 00:30:14,857 --> 00:30:15,858 என் நண்பா. 314 00:30:18,652 --> 00:30:22,614 நான் வளாகத்தை தாண்டிப் போய் அவசரநிலையைச் சமாளிக்கப் போகிறேன். 315 00:30:23,490 --> 00:30:24,825 நீ அநேகமாக இங்கேயே இருக்கப் போகிறாய். 316 00:30:24,825 --> 00:30:28,287 என்னிடம் இணைய வசதி இருக்கிறது. வீடியோ கேம்கள் இருக்கின்றன. 317 00:30:28,287 --> 00:30:33,208 ஜே.ஆர்.ஆர். டோல்கீனின் முழுமையான படைப்புகள் இருக்கிறது, அது உனக்குப் பிடிக்கும் என்றால். 318 00:30:35,752 --> 00:30:38,005 நான் போன பிறகு நீ இங்கே இருப்பது பிரச்சினை இல்லையே? 319 00:30:38,797 --> 00:30:39,965 இல்லை. 320 00:30:39,965 --> 00:30:43,385 வருந்துகிறேன். நேர்மையாக, பெரும்பாலான இரவுகளில், நான் இங்கே ஒன்றும் செய்வதில்லை. 321 00:30:43,385 --> 00:30:45,554 நிச்சயமாக, ஒரு இரவுதான் துணைக்கு நீ கிடைத்திருக்கிறாய், 322 00:30:45,554 --> 00:30:46,972 நான் அவசரநிலையை சமாளிக்கப் போகிறேன். 323 00:30:48,056 --> 00:30:49,892 குளிர்சாதன பெட்டியில் சோடா இருக்கிறது. சிற்றுண்டி இருக்கிறது. 324 00:30:51,602 --> 00:30:52,769 உனக்குப் பிரச்சினை இல்லை. 325 00:30:52,769 --> 00:30:55,856 ஆம். நான் நன்றாக இருப்பேன். 326 00:30:57,191 --> 00:30:58,317 எட்வர்ட், கேள். 327 00:31:00,235 --> 00:31:01,612 இது உனக்கு உதவுமா என்று தெரியவில்லை, 328 00:31:01,612 --> 00:31:05,324 பாறை, காகிதம், கத்தரிக்கோல்கள் என்பது ஒரு ஒப்பந்தம். 329 00:31:06,658 --> 00:31:08,410 விளையாடும் எவரும் அதைப் புரிந்துகொள்வார்கள். 330 00:31:10,537 --> 00:31:14,333 எனவே, நீ ஜோர்டானை வென்ற நிமிடமே, அந்த இருக்கை உன்னுடையதாக ஆகிவிட்டது. 331 00:31:19,004 --> 00:31:20,923 நீ இங்கே இருக்க வேண்டியவன்தான். 332 00:31:53,956 --> 00:31:55,916 ...நாமும் செய்யக்கூடிய படகு சவாரிதான். ஒருவேளை... 333 00:31:55,916 --> 00:31:59,294 அது எவ்வளவு தூரம்? ஒரு மணி நேரமா? 334 00:31:59,962 --> 00:32:00,963 அப்படிதான் நினைக்கிறேன். 335 00:32:02,756 --> 00:32:04,758 - ஹாய், லூசி. - திருமதி. கேமரூன். ஹேய். 336 00:32:04,758 --> 00:32:06,802 - அம்மா, என்ன இது? - ஹாய், பெண்களே. ஹாய், ஸோயி. 337 00:32:06,802 --> 00:32:08,387 - எப்படி இருக்கிறாய்? - ஹாய். 338 00:32:08,387 --> 00:32:09,972 - உங்களுக்கு ராமன் வேண்டுமா? - இல்லை, அவருக்கு ராமன் வேண்டாம். 339 00:32:09,972 --> 00:32:12,349 - நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? - நான் என்ன செய்வது? 340 00:32:12,349 --> 00:32:13,684 நீ என் மெஸ்ஸேஜுக்கு பதிலளிக்கவில்லை. 341 00:32:13,684 --> 00:32:15,936 நான் இப்போது உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்பதற்கான 342 00:32:15,936 --> 00:32:17,855 அறிகுறியாக நீங்கள் அதை எடுத்துக்கொள்ளலாம். 343 00:32:17,855 --> 00:32:19,815 - எடுத்துக்கொள்கிறேன். - நிச்சயமாக, எடுத்துக்கொள்ளுங்கள். 344 00:32:19,815 --> 00:32:21,650 இது எப்போதும் டீ டீ பற்றியது. 345 00:32:21,650 --> 00:32:24,486 - நாம் தனியாக பேசலாமா? - இல்லை, முடியாது. நீங்கள் போகிறீர்களா? 346 00:32:24,486 --> 00:32:26,905 நல்லது. பிறகு நான் சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்கிறேன். 347 00:32:26,905 --> 00:32:28,615 - போகிறீர்களா? - ஒரு அம்மாவாக உன்னை ஏமாற்றிவிட்டேன். 348 00:32:28,615 --> 00:32:31,159 - ஓ, வாயை மூடுங்கள். - ஏனென்றால், கேள். 349 00:32:31,159 --> 00:32:34,204 - நான் தோற்றங்களில் அதிக கவனம் செலுத்தினேன். - இங்கேயா? 350 00:32:34,204 --> 00:32:37,499 தோற்றத்திலும், இது சரியான குடும்பம் போல தோற்றமளிப்பதிலும், 351 00:32:37,499 --> 00:32:41,962 உன் மீதும், உனக்கு என்ன தேவை என்பதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக. 352 00:32:41,962 --> 00:32:44,214 - நீ மிகவும் பலவீனமான சிறுமியாக இருந்தாய். - அம்மா, இங்கே வேண்டாம், சரியா? 353 00:32:44,214 --> 00:32:47,634 நான் வருந்துகிறேன். மிகவும் வருந்துகிறேன். நான் எவ்வளவு வருந்துகிறேன் என்று சொல்ல வேண்டும். 354 00:32:48,552 --> 00:32:50,429 தயவுசெய்து நான் சொல்வதைக் கேட்கிறாயா? 355 00:32:51,388 --> 00:32:52,764 சரி. 356 00:32:52,764 --> 00:32:54,224 உன் அப்பாவும் உன்னை ஏமாற்றிவிட்டார். 357 00:32:54,808 --> 00:32:55,934 நாங்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றிவிட்டோம். 358 00:32:57,227 --> 00:33:02,774 அவரும் நானும், இருவரும். எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாங்கள் தோல்வியடைந்தோம். 359 00:33:05,861 --> 00:33:08,780 அவர் என் மனதை புண்படுத்தினார். அவர் நம் மனதை புண்படுத்தினார். 360 00:33:09,323 --> 00:33:15,120 அவர் லாஸ் ஏஞ்சலஸ் சென்றபோது, ஸோயி, ஒருவரைச் சந்தித்திருக்கிறார். 361 00:33:15,996 --> 00:33:16,830 என்ன? 362 00:33:16,830 --> 00:33:20,626 அவர் அக்கறை காட்டிய ஒருவரை. 363 00:33:22,211 --> 00:33:27,090 - எப்படி அக்கறை காட்டினார்? - அவர்... அவர் நேசித்த ஒரு ஆண். 364 00:33:28,884 --> 00:33:31,470 - அம்மா, என்ன சொல்கிறீர்கள்? - அவர் ஒரு ஆணை நேசித்தார். 365 00:33:32,054 --> 00:33:34,806 எனக்குத் தெரியும். அது கடினம் இருக்கும். கேட்கவே கடினமாக இருக்கும். 366 00:33:35,641 --> 00:33:39,394 நான் மிகவும் கோபமாக இருந்தேன். நான் கடும் கோபத்தில் இருந்தேன். 367 00:33:39,895 --> 00:33:43,815 ஆனால் விஷயம் இதுதான். கடனில் மூழ்கியிருக்கிறார். அவர் பிழைக்க முயற்சி செய்திருக்கிறார். 368 00:33:44,691 --> 00:33:47,903 நீ தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீயும் நானும், ஸோயி, செல்லம், 369 00:33:47,903 --> 00:33:52,032 நாம் இன்னும் உயிருடன் இருக்கிறோம், இன்னும் நம்மால் மாற முடியும். 370 00:33:53,659 --> 00:33:55,702 மீண்டும் மீண்டும் அதே தவறுகளை நாம் தொடர்ந்து 371 00:33:55,702 --> 00:33:57,246 செய்ய வேண்டியதில்லை. 372 00:33:57,246 --> 00:33:58,455 நாங்கள் போக வேண்டுமா? 373 00:33:58,455 --> 00:34:00,624 - வாயை மூடு, லூசி. - மன்னித்துவிடுங்கள். 374 00:34:02,209 --> 00:34:04,211 நான் இந்த ஆதரவுக் குழுவுக்கு போகிறேன், தெரியுமா? 375 00:34:04,211 --> 00:34:05,879 இந்த குழு சிகிச்சை. அது நன்றாக இருந்தது. 376 00:34:05,879 --> 00:34:08,422 - ஆம், அம்மா, அப்படித்தான் தெரிகிறது. - இல்லை. இது அருமையானது. 377 00:34:08,422 --> 00:34:11,592 எங்கள் கடைசி அமர்வு நாளை, நான் ஒரு விருந்து வைக்கிறேன். 378 00:34:11,592 --> 00:34:14,221 ஏனென்றால், அவர்கள் யாரையும் நான் மீண்டும் பார்க்க முடியாது என்றாலும், 379 00:34:14,221 --> 00:34:16,849 நான் மாறுவேன் என்று எனக்குத் தெரிந்தாலும் நான் அவர்களை 380 00:34:18,475 --> 00:34:20,811 நம்பியிருந்தே பழகியது என்னை மிகவும் பயமுறுத்துகிறது, 381 00:34:21,562 --> 00:34:23,313 ஒருவிதத்தில், எனக்கு அவர்கள் உன் அப்பாவுக்கு மாற்றாக மாறிவிட்டார்கள். 382 00:34:23,313 --> 00:34:28,569 அதாவது... அவர் இல்லாமல் நான் யார் என்பதை அறிய அவர்கள் எனக்கு உதவினார்கள். 383 00:34:30,070 --> 00:34:32,281 எனவே, அது கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரிந்தாலும், 384 00:34:33,532 --> 00:34:35,324 என்னால் மாற்ற முடியும் என்று தெரியும். 385 00:34:38,203 --> 00:34:39,955 நான் இன்னும் சிறந்த அம்மாவாக மாற முடியும். 386 00:34:39,955 --> 00:34:41,915 நான் இன்னும் சிறந்த மனுஷியாக இருக்க முடியும். 387 00:34:45,627 --> 00:34:46,795 நான் அதை உனக்கு சத்தியம் செய்கிறேன். 388 00:34:51,216 --> 00:34:54,803 - சரியா? - சரி. 389 00:34:55,469 --> 00:34:56,763 உன்னை நேசிக்கிறேன், செல்லம். 390 00:35:05,647 --> 00:35:09,318 பை, பெண்களே. லூசி, நான் கோபப்பட்டதற்கு வருந்துகிறேன். 391 00:35:58,784 --> 00:36:01,828 - ஓ, ஹேய். - நான் இங்கே இருக்கிறேன். 392 00:36:10,671 --> 00:36:12,631 அம்மா, உங்கள் குழந்தையைப் பார்க்க தயாரா? 393 00:36:24,101 --> 00:36:26,478 மன்னிக்கவும். என்ஐசியு-வில் அம்மாவை மட்டும் உள்ளே அழைத்துச் செல்ல முடியும். 394 00:36:26,478 --> 00:36:28,647 சரி. நான் அங்கேயே இருக்கிறேன். 395 00:37:44,806 --> 00:37:46,058 - ஹேய். - ஹேய். 396 00:37:51,897 --> 00:37:56,276 நான் உன்னை நேசிக்கிறேன், சாம். நான் உன்னை இழக்க விரும்பவில்லை. 397 00:37:57,069 --> 00:37:59,530 ஆனால் நீ நூறு சதவிகிதம் உறுதியாக இருக்கிறாயா என்று எனக்குத் தெரிய வேண்டும். 398 00:38:00,113 --> 00:38:03,534 யார் யாருடனும் சுற்றும் திருமண உறவு எனக்கு வேண்டாம். உன்னை பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. 399 00:38:04,201 --> 00:38:07,162 ஒருவேளை நீ வேறொருவரை அல்லது 400 00:38:07,162 --> 00:38:10,541 வேறு ஏதாவது விரும்புகிறாயோ என்று நான் ஒவ்வொரு நாளும் கவலைப்பட விரும்பவில்லை. 401 00:38:11,124 --> 00:38:13,252 எனவே நீதான் முடிவு செய்ய வேண்டும், சாம். 402 00:38:14,837 --> 00:38:17,798 உன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். 403 00:38:29,142 --> 00:38:31,228 உங்கள் ஐடியும் போர்டிங் பாஸும் வேண்டும். 404 00:38:31,937 --> 00:38:32,771 போர்டிங் பாஸா? 405 00:38:35,524 --> 00:38:37,526 டிஎஸ்ஏ 406 00:38:41,196 --> 00:38:42,197 நான் நினைக்கிறேன்... 407 00:38:46,034 --> 00:38:48,161 சார், நீங்கள் கோஜோ அன்சாவா? 408 00:38:48,745 --> 00:38:50,873 - ஆம். - சார், தயவுசெய்து என்னுடன் வாருங்கள். 409 00:38:52,207 --> 00:38:54,209 - இது எதற்கு? - என்னுடன் வாருங்கள். 410 00:38:54,877 --> 00:38:58,213 வரிசையில் அடுத்தது. எனக்கு உங்கள் போர்டிங் பாஸ் வேண்டும். 411 00:38:59,840 --> 00:39:01,550 எனது போர்டிங் பாஸ் என் ஃபோனில் இருக்கிறது. 412 00:39:01,550 --> 00:39:03,218 நீங்கள் எனக்கு காட்டலாம். 413 00:39:03,218 --> 00:39:04,303 சரி. நல்லது. 414 00:39:04,970 --> 00:39:07,764 என்ன பிரச்சினை? என் ஆவணங்கள் எல்லாம் புதுப்பித்த நிலையில் இருக்கின்றன. 415 00:39:08,765 --> 00:39:10,392 - ஏட்ரியானா! - ஹாய், நண்பர்களே. 416 00:39:10,392 --> 00:39:12,644 மிகவும் வருந்துகிறேன். நான்... உங்களை பார்க்க நினைத்தேன். 417 00:39:15,147 --> 00:39:17,441 காங்கிரஸ் வேட்பாளரான உங்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கிறதா? 418 00:39:17,441 --> 00:39:21,195 இல்லை, நானும் ஏடும் நடுநிலை பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். நான் எப்போதும் அவளுக்கு உதவுவேன். 419 00:39:21,195 --> 00:39:22,571 நன்றி. 420 00:39:22,571 --> 00:39:24,156 - நான் உங்களை தனியாக விடுகிறேன். - நன்றி. 421 00:39:26,283 --> 00:39:27,451 நான் உங்களுக்காக ஒன்று வரைந்தேன். 422 00:39:27,451 --> 00:39:30,245 தெரியும். எது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 423 00:39:30,245 --> 00:39:31,788 என்னால் இன்னொன்று வரைய முடியும். 424 00:39:31,788 --> 00:39:34,416 நிஜமாகவா? சரி. அதை வரை. 425 00:39:38,045 --> 00:39:42,549 எனவே, நீங்கள் என்னை வாயிலில் நிறுத்தி உங்கள் காதலை தெரிவித்து என்னை 426 00:39:42,549 --> 00:39:44,801 தங்க சொல்வதற்கான படத்தின் பகுதி இதுதானா? 427 00:39:46,136 --> 00:39:50,098 - இருக்கலாம். - அல்லது... 428 00:39:52,643 --> 00:39:57,231 நீங்கள் எங்களுடன் விமானத்தில் ஏறி, 429 00:39:57,231 --> 00:39:59,858 நாம் கானாவுக்குச் சென்று மகிழ்ச்சியாக வாழும் பகுதியா? 430 00:40:01,026 --> 00:40:02,486 நான் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை. 431 00:40:04,238 --> 00:40:05,239 இது ஒரு நல்ல படம். 432 00:40:07,991 --> 00:40:09,868 நாளை தேர்தல். 433 00:40:11,870 --> 00:40:15,791 - நீங்கள் வெற்றி பெறப் போகிறீர்களா? - நடாலி அப்படித்தான் நினைக்கிறார். 434 00:40:17,709 --> 00:40:18,710 நிச்சயமாக. 435 00:40:23,090 --> 00:40:26,635 உங்களுக்கு ஒரு வரைபடத்தை வரைகிறேன். கையைக் கொடுங்கள். 436 00:40:32,599 --> 00:40:38,397 - சரி, இதுதான் அக்ரா, உங்கள் கை. - சரி. 437 00:40:41,859 --> 00:40:45,737 உங்கள் உள்ளங்கை முடிவடையும் இந்த இடம்தான் கடல். 438 00:40:48,574 --> 00:40:51,785 இங்கே எங்கள் அருகில் உள்ள லபோனே. 439 00:40:56,331 --> 00:41:01,170 இங்கேதான் நாங்கள் வசிக்கிறோம். எங்கள் வீடு. 440 00:41:03,422 --> 00:41:07,718 என் அப்பாவும் என் மாமாவும் பல வருடங்களாக இந்த வீட்டை மெதுவாகக் கட்டினார்கள். 441 00:41:09,094 --> 00:41:10,679 நான் பிறப்பதற்கு முன்பே அவர்கள் தொடங்கினார்கள். 442 00:41:11,513 --> 00:41:16,018 இறுதியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு நானே தெற்குப் பகுதியை முடித்தேன். 443 00:41:17,769 --> 00:41:21,190 இந்த வீட்டில், என் அம்மா என் சகோதரிகளுடன் வசிக்கிறார், 444 00:41:21,190 --> 00:41:25,736 ஆறு உறவினர்கள். சிலர் இங்கே இருக்கிறார்கள். சிலர் வெளியூரில் இருக்கிறார்கள். 445 00:41:25,736 --> 00:41:27,237 சிலர் பெக்ஸின் வயதுடையவர்கள். 446 00:41:28,238 --> 00:41:31,408 எல்லோரும் உங்கள் பிரச்சாரத்தை மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். 447 00:41:32,993 --> 00:41:35,829 இதோ, இங்குதான் நான் புறா வளர்க்கிறேன். 448 00:41:35,829 --> 00:41:37,331 புறா வளர்க்கிறீர்களா? 449 00:41:37,331 --> 00:41:40,959 அவை இங்குள்ள புறாக்கள் போல இல்லை. அவை நேர்த்தியானவை. 450 00:41:44,046 --> 00:41:49,426 இங்கே இந்த அறையில், இங்குதான் பெக்ஸ் தங்குவாள். 451 00:41:51,970 --> 00:41:54,556 இந்த அறை, இது என் அறை. 452 00:41:56,808 --> 00:41:58,227 ஒரு நாள் வந்தால், 453 00:41:59,186 --> 00:42:03,732 நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் அல்லது அதற்கு அடுத்த வருடம், 454 00:42:05,150 --> 00:42:08,362 உலகின் இந்த சிறிய மூலையை நீங்கள் பார்க்க விரும்பும் நாள் வந்தால், 455 00:42:10,072 --> 00:42:11,323 நீங்கள் இங்கே வர வேண்டும். 456 00:42:15,786 --> 00:42:17,287 இப்போது உங்களை எங்கே பார்க்கலாம் என்று எனக்குத் தெரியும். 457 00:42:36,223 --> 00:42:37,558 நான் உங்களை நேசிக்கிறேன். 458 00:42:40,686 --> 00:42:41,728 நானும் உங்களை நேசிக்கிறேன். 459 00:42:48,026 --> 00:42:49,027 நான் உங்களை நேசிக்கிறேன். 460 00:44:30,587 --> 00:44:33,507 எடிக்கான கடிதங்கள் 461 00:45:13,297 --> 00:45:16,425 அன்புள்ள எட்வர்ட், நீ இருந்த அதே விமானத்தில் என் மனைவியும் இருந்தார். 462 00:45:17,509 --> 00:45:18,677 எப்படி வாழ்வை தொடர்வது என்று தெரியவில்லை. 463 00:45:19,720 --> 00:45:21,013 நீ எப்படி சமாளிக்கிறாய் என்று தெரியவில்லை. 464 00:45:22,139 --> 00:45:23,849 உனக்கு நடந்தவற்றுக்கு நான் வருந்துகிறேன். 465 00:45:23,849 --> 00:45:27,186 எனக்கு மூன்று மகள்கள். எல்லி, எம்மா, ஈவ். 466 00:45:38,530 --> 00:45:42,951 என் பெயர் ஜிங்யாங் யாவ். நான் சீனாவின் டியன்ஜினில் வசிக்கிறேன். 467 00:45:42,951 --> 00:45:45,662 உனக்கு என்ன நடந்தது என்று கேள்விப்பட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது, 468 00:45:45,662 --> 00:45:47,414 நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன். 469 00:45:49,666 --> 00:45:50,876 அன்புள்ள எடி, 470 00:45:51,543 --> 00:45:53,962 விமானத்தில் என் மகளை நீ பார்த்தாயா என்று நான் வியக்கிறேன். 471 00:45:54,546 --> 00:45:57,049 நீ பொருட்படுத்த மாட்டாய் என்று நம்புகிறேன். ஒரு படத்தையும் சேர்த்திருக்கிறேன். 472 00:45:57,758 --> 00:45:59,676 உன்னைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 473 00:46:00,636 --> 00:46:05,349 உன் கதை சோகமானது என்று சிலர் சொல்லலாம், ஆனால் அது சோகமானது இல்லை. 474 00:46:05,349 --> 00:46:10,646 கடவுளின் கருணைக்கு இது ஒரு வியக்கத்தக்க உதாரணம். 475 00:46:10,646 --> 00:46:12,981 நான் அவளை விமான நிலையத்தில் இறக்கிவிட்டபோது, 476 00:46:12,981 --> 00:46:16,610 நான் அவள் முகத்தைப் பிடித்து அவள் மூக்கில் மூன்று முறை முத்தமிட்டேன். 477 00:46:16,610 --> 00:46:18,278 அதுதான் எங்கள் விடைகொடுக்கும் வழக்கம். 478 00:46:18,278 --> 00:46:20,030 உன் உயிரைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்தவர் கடவுள்தான். 479 00:46:20,030 --> 00:46:21,823 அவர்தான் உன்னைக் காப்பாற்ற முடிவு செய்தார். 480 00:46:21,823 --> 00:46:24,952 எல்லிக்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது. அவள் தொடர்ந்து அவள் அம்மாவை தேடுகிறாள். 481 00:46:24,952 --> 00:46:26,703 இறப்பது என்றால் என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. 482 00:46:26,703 --> 00:46:29,122 நிறைவேறாத ஆசைகள் இருந்தால் பேயாக சுற்றுவார்கள் என்று சொல்வார்கள். 483 00:46:29,122 --> 00:46:32,543 அன்புள்ள எட்வர்ட், நீ என் தாத்தாவை விமானத்தில் பார்த்தாயா? இருக்கை 12Cயில் இருந்தார். 484 00:46:32,543 --> 00:46:35,128 அவரது கடிகாரத்தை வைத்து மட்டுமே நான் அவரை நினைவில் கொள்ள விரும்புகிறேன். 485 00:46:35,128 --> 00:46:39,550 {\an8}அன்புள்ள "எட்வர்ட்", என்னும் ராண்டால் டிமோதி வேக்ஷயர். சத்தமாக சிரி. 486 00:46:39,550 --> 00:46:44,263 அது சரிதான். நீ யாரென்று எனக்குத் தெரியும். உன் நிஜ பிறப்புச் சான்றிதழைப் பார்த்தேன். 487 00:46:44,263 --> 00:46:47,057 நான் ஆதாரத்தைப் பார்த்தேன். யூடியூபில் ஆவணப்படங்களைப் பார்த்தேன். 488 00:46:47,558 --> 00:46:50,310 எனக்கு உண்மை தெரியும். நீ உண்மையில் யாரென்று எங்களுக்குத் தெரியும். 489 00:46:52,688 --> 00:46:57,067 அன்புள்ள எடி, நான் உனக்கு எழுதுவதற்கான காரணம் உன் அண்ணன் ஜோர்டானை எனக்குத் தெரியும். 490 00:46:57,693 --> 00:46:59,069 நன்றாகவே தெரியும். 491 00:46:59,611 --> 00:47:03,907 அவன் என்னைப் பற்றி எப்போதாவது சொன்னானா என்று தெரியவில்லை. யாரிடமும் சொல்லவில்லை என்றான். 492 00:47:03,907 --> 00:47:09,538 ஆனால் ஒருவேளை நீ யாரோ ஒருவனாக இல்லாமல் இருக்கலாம். ஜோர்டான் என் காதலன். 493 00:47:10,038 --> 00:47:12,332 நான் காதலித்த முதல் நபர் அவன்தான். 494 00:47:13,750 --> 00:47:15,169 நரகத்தில் உள்ளிழுக்கப்பட்ட பேரழிவு 495 00:47:15,169 --> 00:47:18,338 எடி அட்லரில் உள்ள எல்லா E மற்றும் D களையும் எடுத்துவிட்டால், 496 00:47:18,338 --> 00:47:21,300 "பொய்யர்" என்பதுதான் மிஞ்சும்! நாங்கள் அதை கவனிக்க மாட்டோம் என்று நினைத்தாயா? 497 00:47:21,300 --> 00:47:24,219 என்னுடைய மற்ற கடிதங்கள் கிடைத்ததா? நான் கவலைப்படுகிறேன். 498 00:47:24,219 --> 00:47:26,889 நான் உன் பதிலுக்காக ஒவ்வொரு நாளும் எழுதுகிறேன், இன்னும் எதுவும் வரவில்லை. 499 00:47:26,889 --> 00:47:29,308 உன் இருக்கை 15A என்று படித்தேன். 500 00:47:29,308 --> 00:47:32,603 அவள் ஒரு சில வரிசைகள் பின்னால் 20B-இல் இருந்தாள். 501 00:47:32,603 --> 00:47:34,146 கழிவறை போகும் வழியில் அவளைப் பார்த்திருக்கலாம். 502 00:47:34,146 --> 00:47:36,648 அன்புள்ள எட்வர்ட், நான் இன்று சாகப் போகிறேன். 503 00:47:36,648 --> 00:47:40,277 எனக்கு மூச்சுத்திணறும் வரை என் பெற்றோரின் காரை கேரேஜில் இயக்கப் போகிறேன். 504 00:47:41,820 --> 00:47:43,488 அன்புள்ள எட்வர்ட் 505 00:47:43,488 --> 00:47:45,115 உன்னிடம் செல்லப்பிராணிகள் உள்ளதா? 506 00:47:45,115 --> 00:47:47,576 உன்னால் முடிந்தால், எல்லியிடம் அவளுடைய அம்மா அவளை மிகவும் நேசிப்பதாகச் சொல். 507 00:47:47,576 --> 00:47:48,744 நீ விசேஷமான பையன். 508 00:47:48,744 --> 00:47:50,329 நன்றியோடு இரு! மகிழ்ச்சியாக இரு. 509 00:47:50,329 --> 00:47:51,997 கடவுளின் பெயரால் உனக்கு இந்த வாழ்வு கிடைத்தது. 510 00:47:51,997 --> 00:47:54,958 ஒரு சாதாரண தற்கொலைக் குறிப்பை வைக்க முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. 511 00:47:54,958 --> 00:47:57,461 என்னால் சாதாரணமாக எதுவும் செய்ய முடியவில்லை. ஒன்றும் செய்ய முடியவில்லை. 512 00:47:57,461 --> 00:47:58,462 நீ மட்டும் எப்படி வாழலாம்? 513 00:47:58,462 --> 00:48:00,380 நீ சுயநலமாக இருக்க விரும்பவில்லை என்று தெரிகிறது, ஆனால் நீ உயிரோடு இருக்கிறாய். 514 00:48:02,674 --> 00:48:04,343 - நான் என் மனைவியை மிஸ் செய்கிறேன். - எனக்கு என் மகள் திரும்ப வேண்டும். 515 00:48:04,343 --> 00:48:05,344 அவரை யாரென்று கூட எனக்குத் தெரியாது. 516 00:48:05,344 --> 00:48:06,762 நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே ஸ்தோத்திரம். 517 00:48:07,471 --> 00:48:08,430 எட்வர்ட்! எழுந்திரு! 518 00:48:09,598 --> 00:48:11,934 - நான் சாகும் நாள் வரை அவனை காதலிப்பேன். - எட்வர்ட்! 519 00:48:16,104 --> 00:48:17,314 எட்வர்ட். 520 00:49:34,892 --> 00:49:36,894 வசனத் தமிழாக்கம் அருண்குமார்