1 00:00:12,012 --> 00:00:16,058 ஜூலை 4, 1778 2 00:00:17,518 --> 00:00:24,191 உங்களை சந்தோஷப்படுத்துவது கடினம். 3 00:00:24,191 --> 00:00:27,194 என்னால் அது நம்ப முடியவில்லை. 4 00:00:30,155 --> 00:00:32,448 என்னால் அதை நம்பமுடியவில்லை. 5 00:00:33,283 --> 00:00:34,952 என்னால் அதை நம்பமுடியவில்லை. 6 00:00:34,952 --> 00:00:36,328 நான் நன்றாக பேசவில்லை. 7 00:00:38,330 --> 00:00:39,456 நான் நன்றாகச் சொல்லவில்லை. 8 00:00:39,456 --> 00:00:43,585 நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். 9 00:00:44,336 --> 00:00:46,839 நான் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். 10 00:00:46,839 --> 00:00:48,590 உங்கள் நாய்கள் கடிக்குமா? 11 00:00:49,716 --> 00:00:51,009 உங்கள் நாய்கள் கடிக்காதா? 12 00:00:51,009 --> 00:00:52,594 நான் கண்டிப்பாக அதைச் செய்வேன். 13 00:00:53,720 --> 00:00:55,305 நான் கண்டிப்பாக அதைச் செய்வேன். 14 00:00:55,973 --> 00:01:00,936 இன்று, நம் டிக்ளரேஷனின் 15 00:01:00,936 --> 00:01:05,232 அனிவெர்சரி தினம். 16 00:01:08,777 --> 00:01:12,656 நமக்குக் கிடைத்த சுதந்திரத்துக்கு 17 00:01:12,656 --> 00:01:16,910 இறைவனுக்கு நன்றி. 18 00:01:21,164 --> 00:01:28,172 நான் பிராங்கிளினை சகித்துக்கொள்ள முடியவில்லை. 19 00:02:22,768 --> 00:02:24,228 {\an8}போர் நெருங்குகிறது 20 00:02:26,939 --> 00:02:30,234 {\an8}டிக்ளரேஷன் 21 00:03:02,975 --> 00:03:03,976 {\an8}ஸ்டேசி ஷிஃப் எழுதிய 22 00:03:03,976 --> 00:03:05,644 {\an8}"ஏ கிரேட் இம்ப்ரோவைசேஷன்" என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 23 00:03:24,204 --> 00:03:27,291 நன்றாக உண்ணுங்கள், திரு ஆடம்ஸ், தாராளமாக இருக்கிறது. 24 00:03:27,291 --> 00:03:30,669 நான் ஏற்கனவே உண்டுவிட்டேன், சார், பல மணிநேரங்களுக்கு முன்னாலேயே. 25 00:03:35,716 --> 00:03:37,634 உங்கள் பாடங்கள் எப்படி நடக்கின்றன? 26 00:03:40,137 --> 00:03:41,430 என்ன? 27 00:03:41,430 --> 00:03:43,807 உங்கள் பிரெஞ்சு பாடங்களைப் பற்றிக் கேட்டேன். 28 00:03:45,809 --> 00:03:49,521 உங்கள் உச்சரிப்பு மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் சொல்வது புரியாததில் அதிசயமில்லை. 29 00:03:49,521 --> 00:03:54,151 நாம் செய்யும் செயலில் நேர்மையிருப்பதுதான் மேல், இல்லையா? 30 00:03:55,027 --> 00:03:56,904 நேற்று இரவு நீங்கள் மீண்டும் வண்டியைக் கொண்டுப் போனீர்களே. 31 00:03:56,904 --> 00:03:57,988 மன்னிக்கவும்? 32 00:03:58,572 --> 00:04:01,825 நான் ஆபெராவிற்குச் செல்ல எண்ணினேன். பதிலாக, நான் இங்கேயே சிக்கிக்கொண்டேன். 33 00:04:01,825 --> 00:04:06,538 என்னை மன்னித்துவிடுங்கள். பார்மான்டீயேக்காக நடந்த விருந்துக்குச் சென்றேன். 34 00:04:06,538 --> 00:04:07,623 யார்? 35 00:04:08,207 --> 00:04:09,750 அந்த புகழ்பெற்ற மருந்து தயாரிப்பாளர். 36 00:04:09,750 --> 00:04:10,918 நான் அவரைப் பற்றி கேட்டதேயில்லை. 37 00:04:12,127 --> 00:04:15,047 நான் அந்த இசையை கேட்க விரும்பினேன் என்றில்லை. அது வெறும் சத்தம்தான். 38 00:04:15,047 --> 00:04:19,551 அர்த்தமற்ற கத்தல்களின் குழப்பம்தான், ஆனால் நான் ஏற்கனேவே டிக்கெட்டை வாங்கிட்டேன். 39 00:04:20,469 --> 00:04:22,137 நான் ஒன்று கேட்கலாமா? 40 00:04:22,971 --> 00:04:25,641 - கேளுங்கள். - நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்? 41 00:04:26,767 --> 00:04:28,769 நான் அதை உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. 42 00:04:28,769 --> 00:04:30,979 அது என் வேலையை இன்னும் கடினமாக்கும். 43 00:04:31,563 --> 00:04:32,856 அது என்ன வேலை, சார்? 44 00:04:33,357 --> 00:04:36,151 உங்கள் கணக்குகள் எல்லாம் அலங்கோலமாக உள்ளன. நீங்கள் எந்த செலவுகளுக்கும் பதிவுகள் வைக்கவில்லை. 45 00:04:36,151 --> 00:04:41,281 உங்கள் கடிதத்தொடர்புகள், ஒரு பைத்தியக்காரனின் உளறல், பிரேக்ஃபாஸ்டை 10:14-க்கு உண்கிறீர்கள். 46 00:04:41,281 --> 00:04:44,910 இருந்தாலும் எப்படியோ நான் பிரான்ஸுடன் ஒரு நட்புறவு ஒப்பந்தத்தை சாதிக்க முடிந்தது. 47 00:04:44,910 --> 00:04:46,620 அது நமக்கு எந்த வகையில் உதவியுள்ளது? 48 00:04:47,454 --> 00:04:50,123 அந்த பிரெஞ்சு கடற்படைதான் நான் சந்தித்ததிலேயே 49 00:04:50,123 --> 00:04:52,209 அறிவில்லாத கடற்படையினர். 50 00:04:52,709 --> 00:04:55,712 நாம தனியாகவே போராடியிருக்கலாம், முன்பைவிட இன்னும் கடன் அதிகம். 51 00:04:55,712 --> 00:04:58,966 இருந்தாலும், உங்கள் மிக நெருங்கிய நண்பரான வெர்ஜெனை நீங்க ள் கொண்டாடுகிறீர்கள். 52 00:05:00,425 --> 00:05:02,845 அவருடைய நல்ல எண்ணங்களைப் பெறுவது நல்லதென்றே நினைக்கிறேன். 53 00:05:02,845 --> 00:05:05,764 அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவதே நல்லதென நினைக்கிறேன். 54 00:05:06,723 --> 00:05:08,517 நீங்கள் அதைச் செய்யவில்லையெனில், நான் செய்வேன். 55 00:05:08,517 --> 00:05:11,937 நிச்சயமாக, பிரெஞ்சுக்காரர்கள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் உங்கள் அணுமுறையைப் பார்க்கும்போது, 56 00:05:12,479 --> 00:05:15,274 அந்த திட்டம் அபார வெற்றியைப் பெறப் போகிறது. 57 00:05:16,525 --> 00:05:18,443 நாம் இப்போது பார்ட்டிக்குப் போவோம். 58 00:05:18,443 --> 00:05:21,780 நம் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் உங்களுக்கு கருத்து விரோதம் உண்டா? 59 00:05:21,780 --> 00:05:25,033 இந்த நாளில் நாம் தீவிரமாக யோசித்தணும், குதூகுலத்துடன் கொண்டாடக் கூடாது. 60 00:05:25,033 --> 00:05:28,579 நம்மை உபச்சரிப்பவர்கள் அப்படி நினைக்கவில்லை, மேலும் அவர்களை விருப்பத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 61 00:05:28,579 --> 00:05:31,290 நாம் அவர்களுக்குக் காட்டும் மரியாதைக்கு எவ்வளவு செலவாகும்? 62 00:05:31,290 --> 00:05:34,793 எதுவும் இல்லை. மிஸ்யூர் ஷௌமோன் செலவுகளை ஏற்கிறார். 63 00:05:35,961 --> 00:05:37,713 ஆம், அது இன்னும் மோசமாக்குகிறது. 64 00:05:42,134 --> 00:05:44,678 நாம் எவ்வளவு அமெரிக்கர்களை தங்க வைக்க வேண்டும்? 65 00:05:44,678 --> 00:05:46,680 பத்தா? ஐம்பதா? ஒரு ஆயிரமா? 66 00:05:46,680 --> 00:05:48,140 மூன்று பேர்கள்தான் உள்ளனர், என் அன்பே. 67 00:05:48,140 --> 00:05:50,517 - டாக்டர் பேன்கிராஃப்ட் என்ன செய்வார்? - அவர் இங்கே உறங்குவதில்லை. 68 00:05:50,517 --> 00:05:52,019 அவரும் இருக்கட்டும். 69 00:05:52,019 --> 00:05:54,771 ஒருவேளை, அவர்களிடமிருந்து வாடகை வாங்கும் நேரம் வந்துவிட்டதோ. 70 00:05:56,023 --> 00:06:00,110 விருந்தினர்களிடம் நான் எப்படி வாடகை கேட்க முடியும். 71 00:06:00,110 --> 00:06:06,116 ஏற்கனவே அவர்களுக்கு வீடு, உணவு, வாகனங்களும், வேலையாட்களும் தருகிறோம், இப்போது பார்ட்டி வேற. 72 00:06:06,116 --> 00:06:07,201 எவ்வளவு பணம் செலவாகிறது? 73 00:06:07,201 --> 00:06:12,039 நமக்கு எதிர்காலத்தில் வரப் போகும் லாபத்தைக் கணக்கிட்டால், இது அதிகமில்லை. 74 00:06:12,915 --> 00:06:17,503 இந்த எதிர்காலம் எப்போது வரும்? நாம் அதைப் பார்க்க உயிருடன் இருப்போமா? 75 00:06:17,503 --> 00:06:20,297 வர்த்தகத்தில் உள்ள நுணுக்கங்களை உன்னால் புரிந்துகொள்ள முடியாது. 76 00:06:20,297 --> 00:06:22,925 நல்லது. உங்கள் ஆட்டங்களைத் தொடருங்கள். 77 00:06:22,925 --> 00:06:26,011 ஆனால் நான் சொல்வது, இந்த ஆடம்பரங்கள் நம்மை அழித்துவிடப் போகிறது. 78 00:06:27,137 --> 00:06:30,516 ஒருவழியாக. நான் எழுவதற்கு உதவு, குண்டுக்கட்டையே. 79 00:06:40,150 --> 00:06:41,401 அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்? 80 00:06:42,027 --> 00:06:43,946 எனக்கு சரியாகக் கேட்கவில்லை. 81 00:06:43,946 --> 00:06:46,281 கேக் கடையில் எப்படி பேக்கிங் செய்கிறார்கள் என்று பேசினார்கள். 82 00:06:47,241 --> 00:06:52,287 அது வெளியே சிகப்பாகவோ, பச்சையாகவோ இருக்கலாம், ஆனால் உள்ளே இருக்கும் கேக் ஒன்றுதான். 83 00:06:54,206 --> 00:06:56,458 வெளித் தோற்றத்தில் எல்லாம் வெவ்வேறான நம்பிக்கைகள் இருந்தாலும், 84 00:06:56,458 --> 00:06:58,836 அனைத்து மதங்களிலும் அடிப்படை உண்மை ஒன்றுதான் என்கிறார். 85 00:06:59,503 --> 00:07:00,921 எனக்கு அதெல்லாம் புரியாது. 86 00:07:02,047 --> 00:07:04,091 அப்படியென்றால் நமது மகளை அவருடைய பேரனுக்கு மணம் புரிய கோருவதற்கு முன் 87 00:07:04,091 --> 00:07:06,176 நீங்கள் இன்னும் கவனமாக யோசித்திருக்க வேண்டும். 88 00:07:06,176 --> 00:07:07,344 போதும். 89 00:07:09,721 --> 00:07:11,265 நீ என்னுடன் வாக்குவாதம் செய்ய அனுமதித்தால், நான் அழிந்துப் போயிவிடுவேன். 90 00:07:15,644 --> 00:07:19,773 ஒரு புரோடெஸ்டென்ட்டிற்கு இங்கு வாழ வழியில்லை என்று அவரிடம் சொல்லிவிடுங்கள். 91 00:07:19,773 --> 00:07:23,193 கூனேகாண்ட் குடும்பத்திற்கு அப்படி ஒரு தலைவிதி வரவே கூடாது. 92 00:07:23,193 --> 00:07:25,404 நான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிட்டேன். 93 00:07:26,822 --> 00:07:28,407 என்னை முட்டாள் போல தோன்ற வேண்டும் என்கிறாயா? 94 00:07:28,991 --> 00:07:31,577 நீங்கள் குடி போதையில் இதைச் செய்தீர்கள், நான் செய்யவில்லை. 95 00:07:31,577 --> 00:07:33,662 நீ என்ன பேசுகிறாய் என்று உனக்கு மட்டும் தெரியுமா என்ன. 96 00:07:33,662 --> 00:07:38,125 நமது குடும்பத்தின் நலனைவிட, உங்கள் கௌரவம்தான் உங்களுக்கு முக்கியமா? 97 00:07:40,085 --> 00:07:41,795 அமெரிக்காவில் அவருக்கு பெருமளவு தங்கம் உள்ளது. 98 00:07:41,795 --> 00:07:44,173 அது நமக்கு இங்கே எப்படி நலத்தைத் தரும்? 99 00:07:44,173 --> 00:07:49,094 நம் பெண் என்பவள், விரைவிலேயே வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டிய ஒரு சுமை. 100 00:07:50,554 --> 00:07:52,181 உன் தந்தை அதை நன்கு அறிந்திருந்தார். 101 00:07:52,973 --> 00:07:54,433 அது உனக்கு ஏன் புரியவில்லை? 102 00:07:56,476 --> 00:07:59,021 ஒருவேளை மேதமொய்செய்ல் ஜூப்பான் அதை எனக்கு விளக்கலாம். 103 00:07:59,021 --> 00:08:01,899 தெளிவாக அவருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். 104 00:08:01,899 --> 00:08:03,525 உனக்குத் தைரியம்தான். மேடம். 105 00:08:04,109 --> 00:08:05,235 எனக்கு மட்டும் தைரியம் இருந்திருந்தால். 106 00:08:05,235 --> 00:08:08,822 உன்னைவிட 40 வருடங்கள் வயது கூடியவருடன் நீ கொஞ்சுவது எனக்குத் தெரியாது என்று நினைத்தாயா? 107 00:08:09,406 --> 00:08:12,242 அவரை அப்பா என்று அழைப்பதும், அவர் மடியில் உட்காருவதும் 108 00:08:12,868 --> 00:08:16,538 பின் உன் நீண்ட கடிதங்களில் குழைந்து அவரிடம் கொஞ்சுவதும், எல்லாம்? 109 00:08:16,538 --> 00:08:17,956 எவ்வளவு அசாத்திய தைரியம். 110 00:08:17,956 --> 00:08:19,041 ஆம். 111 00:08:20,000 --> 00:08:25,214 எனக்கு மகிழ்ச்சி தருபவரின் நடப்பை நான் கோருவதற்கு மிகவும் தைரியம் வேண்டும். 112 00:08:25,214 --> 00:08:30,260 அதனால் என்னை அன்பாக கவனித்துக்கொள்ளும் கணவரின் நற்பெயரை நான் அவமானப்படுத்துவேன். 113 00:08:30,260 --> 00:08:35,182 அந்த பெயர் என்னுடையது. அந்த எஸ்டேட் என்னுடையது. என் விருப்பப்படிதான் நடப்பேன். 114 00:08:38,559 --> 00:08:39,686 மற்ற எதையும் பற்றி எனக்கு அக்கறையில்லை. 115 00:08:42,272 --> 00:08:45,234 ஒரு தையல் கிழிந்துவிட்டது, கெப்ரியெலே அதைத் தைக்க வேண்டியிருந்தது. 116 00:08:47,778 --> 00:08:49,029 நீ என்ன நினைக்கிறாய்? 117 00:08:49,780 --> 00:08:51,240 பிராங்கிளினெட்டுக்கு அது பிடிக்குமா? 118 00:08:52,491 --> 00:08:53,825 கொள்ளை அழகு. 119 00:09:05,963 --> 00:09:07,005 அப்படியா? 120 00:09:07,005 --> 00:09:08,173 என்ன? 121 00:09:08,674 --> 00:09:10,008 நீங்கள் ஏதோ சொல்ல இருந்தீர்கள். 122 00:09:10,801 --> 00:09:13,303 எதுவுமில்லை, நான் இந்த நாட்டிற்கு ஒரு சிறுவனுடன் வந்தேன், 123 00:09:13,303 --> 00:09:16,181 ஆனால் இப்போது ஒரு வளர்ந்த மனிதனைப் பார்க்கிறேன். 124 00:09:17,975 --> 00:09:20,143 சரி, நன்றி. 125 00:09:20,686 --> 00:09:23,146 நான் பிரென்சில் பெற இயலாத தேர்ச்சியை நீ இப்போதே பெற்றுவிட்டாய், 126 00:09:23,146 --> 00:09:25,899 நீ ஒரு கவனமான செக்ரெட்டரி... 127 00:09:26,567 --> 00:09:30,779 உன்னுடைய கபடமில்லாத குணம், ஆடவரையும் பெண்களையும் சமமாகக் கவர்கிறது. 128 00:09:33,699 --> 00:09:35,617 எனக்குக் கிடைத்த ஆசிரியர் மிகத் திறமைசாலியாக இருக்கலாம். 129 00:09:36,869 --> 00:09:38,370 என்னைச் சொல்கிறாயா? 130 00:09:43,041 --> 00:09:45,711 அன்பு மகனே, தெரியுமா, நம் குடும்பத்தில் உனக்கு ஒரு உகந்த மரியாதையைப் பெற்று தருவது 131 00:09:45,711 --> 00:09:49,381 எப்போதும் என் சிந்தையில் இருந்துகொண்டே இருக்கிறது, 132 00:09:49,381 --> 00:09:51,550 காங்கிரஸ் எனக்கு சம்பளம் எதுவும் தராதா? 133 00:09:51,550 --> 00:09:56,263 நாம் அதை எதிர்பார்க்கத்தான் முடியும், ஆனால் இன்னும் நிரந்தரமான ஏற்பாடுகளைச் சொல்கிறேன். 134 00:09:58,056 --> 00:09:59,516 எவ்வளவு நிரந்தரமாக? 135 00:09:59,516 --> 00:10:02,686 மிஸ்யூர் பிரையோனும் நானும் ஒரு நட்புறவைப் பத்தி வாதம் செய்தோம். 136 00:10:04,438 --> 00:10:05,731 எந்த வகையானது? 137 00:10:06,315 --> 00:10:07,983 திருமணம் பற்றியது. 138 00:10:10,986 --> 00:10:12,237 யார் யாரை திருமணம் செய்துகொள்வதாக? 139 00:10:13,363 --> 00:10:15,949 நீ மேதமொய்செல் கூனேகாண்டைத் திருமணம் செய்துகொள்வாய். 140 00:10:17,242 --> 00:10:21,079 அவள் படித்தவள், அழகானவள் மற்றும் நல்ல நிலையில் இருப்பவள். 141 00:10:22,331 --> 00:10:25,250 உனக்கு அவளைப் பிடித்துள்ளது என நான் நம்புகிறேன். 142 00:10:29,046 --> 00:10:30,088 அவளுக்குத் தெரியுமா? 143 00:10:30,088 --> 00:10:32,257 அவளுக்கு அது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 144 00:10:33,926 --> 00:10:34,968 எனக்குத் தெரிய வேண்டுமா? 145 00:10:34,968 --> 00:10:37,304 நாம் இப்போது பேசுகிறோம், இல்லையா? 146 00:10:39,473 --> 00:10:41,725 நான் செய்த தவறை நீ செய்யாதே. 147 00:10:41,725 --> 00:10:44,895 நீ திருமணம் செய்துகொள்ளும்போது, அது உனக்குச் சாதகமாக இருக்க வேண்டும். 148 00:10:44,895 --> 00:10:47,731 வேறு எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குத்தான் வழிவகுக்கும். 149 00:10:52,778 --> 00:10:56,865 கூனேகாண்ட் என் மனைவியானால், நான் என்னவாக இருப்பேன்? 150 00:10:57,366 --> 00:11:00,285 தோற்றத்தில் பிரெஞ்சுக்காரராக இருப்பாய். 151 00:11:01,411 --> 00:11:03,247 அப்போது நீங்கள்... 152 00:11:04,456 --> 00:11:06,375 நீங்கள் என்னை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவீர்களா? 153 00:11:09,795 --> 00:11:12,089 இந்த மணத்திற்கு ஒத்துக்கொள், 154 00:11:12,089 --> 00:11:16,510 அதன்பின் நான் என் மீதம் உள்ள காலத்தை சந்தோஷமாக பிரான்ஸிலேயே கழிக்கிறேன். 155 00:11:20,180 --> 00:11:24,935 நான் எதுவும் பார்க்காமல் போகும் முன், நீ நல்லவிதமாக வாழ்க்கைப் பாதையில் போவதை பார்க்க விரும்புகிறேன். 156 00:11:30,190 --> 00:11:33,235 சரிதான்... நான்... சரி. 157 00:11:34,194 --> 00:11:35,612 அப்போது சரி. 158 00:11:42,411 --> 00:11:44,037 நீ முன்னே செல். 159 00:12:49,228 --> 00:12:50,562 நான் எங்கே இருந்தேன்? 160 00:12:50,562 --> 00:12:52,523 "இரு பிச்சைக்காரர்கள் பயணித்து வந்தனர்"... 161 00:12:53,607 --> 00:12:57,653 "கண் தெரியாத பிளேயின்டிஃபும், முடவனான டிஃபென்டெண்ட்டும், பகிர்கிறார்கள், 162 00:12:58,570 --> 00:13:01,073 நட்புறவு விதியின் பாரபட்சமில்லாத கவனிப்பை, 163 00:13:02,366 --> 00:13:06,328 அவனக்கு ஒரு ஓடு, எனக்கும் ஒரு ஓடு" 164 00:13:07,913 --> 00:13:10,415 "அதற்கு நடுவில் உள்ளது வக்கீலின் கட்டணம்." 165 00:13:24,179 --> 00:13:25,597 நான் சொல்கிறேன். 166 00:13:38,527 --> 00:13:40,404 நட்பின் அற்புதமான வெளிப்பாடல்லவா இது. 167 00:13:42,155 --> 00:13:45,158 அவர்கள் ஒருவரின் குழத்தை மற்றவர் கழுத்தை எப்படி அறுக்காமல் உள்ளனர் என ஆச்சரியப்படுகிறேன். 168 00:13:47,077 --> 00:13:48,453 அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? 169 00:13:49,454 --> 00:13:51,164 எனக்கு கிடைத்த ஆதாரப்பூர்வமான தகவல்களின்படி 170 00:13:51,164 --> 00:13:55,169 அவர்கள் அனைவரும் வழக்கமாகவே சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும் 171 00:13:55,169 --> 00:13:59,131 திருமணம் என்ற பந்தமெல்லாம் வேறும் போலி என நம்புகிறவர்களாம். 172 00:13:59,131 --> 00:14:01,800 இல்ல. நிஜமாகவா? அடக் கடவுளே. 173 00:14:02,843 --> 00:14:05,262 பிரையோன் குடும்பத்தினரின் டின்னருக்கு என்னையும் இழுத்துச் சென்றார், தெரியுமா. 174 00:14:05,262 --> 00:14:07,014 நன்றாகத்தான் இருந்தது, சரி. 175 00:14:07,014 --> 00:14:10,809 ஆனால் எனக்கு அடுத்து அமர்ந்திருந்த பெண் ஒரு சாதாரணமானவள்... 176 00:14:11,810 --> 00:14:13,187 நீ என்ன நினைக்கிறாய்? 177 00:14:13,187 --> 00:14:14,354 என்னால் யூகிக்க முடியவில்லை. 178 00:14:14,855 --> 00:14:19,193 அவள்தான் கணவரின் வெளிப்படையான காதலியா. பிறகு மனைவி? 179 00:14:19,776 --> 00:14:20,777 மேடம் பிரையோன். 180 00:14:20,777 --> 00:14:24,865 அவள் தன்னை ஒரு மிஸ்யூர் ல காக்குடன் சமாதானம் செய்துகொள்கிறாள். 181 00:14:25,699 --> 00:14:28,285 - திரு ரூஸ்டர். - பொய் பெயரில்தான், நிச்சயமாக. 182 00:14:29,453 --> 00:14:30,871 இது உறுதியா உனக்குத் தெரியுமா? 183 00:14:30,871 --> 00:14:34,791 பிராங்கிளின்தான் என்னிடம் சொன்னார். அதுபோன்ற விஷயங்கள் தானே அவருக்குத் தெரியும். 184 00:14:37,753 --> 00:14:39,213 சிந்திக்க வேண்டிய விஷயம். 185 00:14:40,547 --> 00:14:42,341 இவர்கள் எல்லோரும்தான் நம் நட்புறவுளார்கள். 186 00:14:44,218 --> 00:14:46,803 சில சமயம் அவர்களுடைய சமநிலையை சந்தேகிக்கிறேன். 187 00:14:46,803 --> 00:14:48,972 பலதுக்கும் வாக்குக்கொடுக்கிறார்கள், ஆனால்... 188 00:14:50,349 --> 00:14:52,601 - நீங்கள் இவற்றை பிராங்கிளினுடன் விவாதித்துள்ளீர்களா? - இல்லை. அவர் இதற்கெல்லாம் செவி சாய்க்கமாட்டார். 189 00:14:52,601 --> 00:14:54,228 சரி... அதுதான். 190 00:14:57,731 --> 00:14:59,149 நீங்களும் நானும் பேச வேண்டும். 191 00:15:17,918 --> 00:15:20,003 அவர்கள் அனைவரும் உன்னை மேடையில் பார்த்துள்ளாரகளே. 192 00:15:20,587 --> 00:15:22,214 ஆனால் அவர்கள் யாரும் என்னை தங்கள் வீட்டிற்கு அழைக்கவில்லையே. 193 00:15:23,257 --> 00:15:24,466 இப்போது நீ அழைக்கப்பட்டுள்ளாய். 194 00:15:31,098 --> 00:15:32,182 பதிமூன்று பட்டைகள். 195 00:15:33,308 --> 00:15:34,518 நான் சரியாகப் புரிந்துக்கொண்டிருக்கிறேனா? 196 00:15:35,227 --> 00:15:38,355 சுதந்திரம் பெறுவதை நீ இன்னும் அழகாக்கிவிட்டாய். 197 00:15:38,981 --> 00:15:40,023 நீ பேசுவதைக் கேள். 198 00:15:40,566 --> 00:15:42,609 நாளுக்குநாள் இன்னும் பிரெஞ்சுக்காரனைப் போலவே பேசுகிறாய். 199 00:15:43,694 --> 00:15:45,028 அது மிகவும்... 200 00:15:45,028 --> 00:15:46,989 ஆனால் நான் அதை விரும்புகிறேன் என்று சொல்ல முடியாது. 201 00:15:48,282 --> 00:15:49,658 நீ அமெரிக்கனாக இருப்பதையே நான் விரும்புகிறேன். 202 00:15:51,952 --> 00:15:54,037 நீ அதைத்தான் விரும்புகிறாயா? அதாவது... 203 00:15:54,037 --> 00:15:57,541 அதாவது, அது போன்ற ஒரு மனிதரைத்தான் நீ... 204 00:15:59,042 --> 00:16:00,210 அதோ பாரு. 205 00:16:03,422 --> 00:16:05,257 அவன் ஒரு ஆப்பிரிக்கரை பார்ட்டிக்கு அழைத்து வந்துள்ளான். 206 00:16:05,841 --> 00:16:07,176 அவள் ஒரு நடிகை. 207 00:16:08,927 --> 00:16:10,095 உனக்கு எப்படித் தெரியும்? 208 00:16:11,013 --> 00:16:14,850 ம்ம், ஜாக் அவளைப் பற்றி ஏதோ சொன்னான். 209 00:16:16,226 --> 00:16:18,353 அது இன்னும் விவகாரமானது. 210 00:16:21,106 --> 00:16:22,858 அவர்கள் நாடகப் பெயர்களைப் பயன்படுத்துவார்கள், தெரியுமா. 211 00:16:24,693 --> 00:16:26,361 அவர்கள் உண்மையில் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைக்க. 212 00:16:30,115 --> 00:16:32,284 இப்படி நிகழ்வதற்கு நாம் என்ன தவறு செய்தோம்? 213 00:16:33,368 --> 00:16:35,204 எனக்கு வயதாகும் முன்னரே, என்னை கொன்றுவிடுவான். 214 00:16:35,204 --> 00:16:36,288 இப்போது எதையும் சொல்லாதீர்கள். 215 00:16:36,288 --> 00:16:38,248 நான் அவனை வெளியே போகச் சொல்லப் போகிறேன். விருந்தினர்கள் என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும். 216 00:16:38,248 --> 00:16:39,541 நீங்கள் அப்படி எதையும் செய்யக்கூடாது. 217 00:16:41,335 --> 00:16:43,128 அப்போது அவன் கடன்காரர்களிடமிருந்து ஒளிந்துகொள்ள முடியும், 218 00:16:43,128 --> 00:16:45,714 மேலும் வேசிகளிடமிருந்து கெஞ்ச முடியும், அவனுக்கு பிடித்ததை... 219 00:16:45,714 --> 00:16:46,965 நிறுத்துங்கள்! 220 00:16:48,634 --> 00:16:49,676 அம்மா. 221 00:16:50,177 --> 00:16:51,178 அப்பா. 222 00:16:52,179 --> 00:16:54,932 இதோ காமடீ-இத்தேலியெனாவான மேதமொய்செயேல் கால்லியட்டை அறிமுகம் செய்கிறேன். 223 00:16:57,768 --> 00:17:00,229 நிழலிலிருந்து வந்த இந்த ஏழைப் பெண்ணை வெளிச்சத்திற்கு வர அனுமதிக்க 224 00:17:00,229 --> 00:17:01,897 உங்களுக்கு எவ்வளவு பெருந்தன்மை. 225 00:17:02,773 --> 00:17:04,525 ஓ. சரி. நான்... 226 00:17:07,277 --> 00:17:10,739 நாங்கள் உன்னை அந்த கோல்டோனீ வேஷத்தில் பார்த்தோம். 227 00:17:10,739 --> 00:17:12,950 நீ மிகவும் ஆச்சரியமாக செய்தாய்! 228 00:17:16,203 --> 00:17:20,290 மேடம். உங்கள் முகம் ஏன் இன்று வாடியுள்ளது? 229 00:17:20,290 --> 00:17:21,875 என்னைப் பார்த்தால் துக்கப்படுவதாகத் தெரிகிறதா? 230 00:17:22,542 --> 00:17:23,669 இருக்கலாம். 231 00:17:24,752 --> 00:17:25,838 பிழை நேர்ந்துவிட்டது. 232 00:17:29,258 --> 00:17:31,677 அந்த ஷௌமோன் இளைஞன் தன் விருப்பப்படி செய்கிறான், 233 00:17:32,386 --> 00:17:34,721 உலகம் நினைப்பதைப் பற்றி அவன் கவலைப்படவேயில்லை. 234 00:17:35,347 --> 00:17:38,183 உலகமும் அவனை வெறுமனே விட்டுவிடப் போவதில்லை. 235 00:17:38,851 --> 00:17:43,522 ஆனால் அவனும் அதையெல்லாம் யோசித்திருப்பான். அப்போது அது விவரமானதுதான். 236 00:17:44,064 --> 00:17:45,732 இன்று நீங்கள் ஏதோ மறைக்கிறீர்கள். 237 00:17:50,654 --> 00:17:51,864 என் பிரியமான அப்பா... 238 00:17:54,241 --> 00:17:56,243 நமக்கு இடையில் ஏதேனும் குறுக்கிட முடியுமா? 239 00:17:57,327 --> 00:17:59,830 மேடம், நமக்குத்தான் ஒப்பந்தம் உள்ளதே. 240 00:18:00,455 --> 00:18:02,583 நான் இந்த மற்றப் பெண்களைப் பற்றி பேசவில்லை. 241 00:18:06,712 --> 00:18:09,756 நம் ஆன்மாக்களின் பந்தத்தை முறிக்கும் சக்தி எதற்கு உள்ளது? 242 00:18:09,756 --> 00:18:11,675 அப்படி எதையும் என்னால் யோசிக்க முடியவில்லையே. 243 00:18:12,176 --> 00:18:13,594 எனக்கு உங்கள் வாக்குறுதி கிடைக்குமா? 244 00:18:13,594 --> 00:18:15,762 நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 245 00:18:19,850 --> 00:18:23,562 சீமான்களே, சீமாட்டிகளே. தயவுசெய்து இங்கே கவனிக்கவும். 246 00:18:23,562 --> 00:18:27,524 அபோதியோஸிஸ் ஆஃப் லிபெர்டி இப்போது ஆரம்பிக்க இருக்கிறது. 247 00:18:36,783 --> 00:18:38,076 திரு ரூஸ்டர். 248 00:18:38,952 --> 00:18:40,245 - என்ன? - உங்களுக்குக் கேட்டது. 249 00:18:42,831 --> 00:18:45,918 "என் தோழர்களே, இந்தக் கொள்கைதான், 250 00:18:45,918 --> 00:18:48,712 அறிவுரை மற்றும் சமயோசிதம்." 251 00:18:48,712 --> 00:18:51,173 காரணம் மற்றும் சமயோசிதம். 252 00:18:51,882 --> 00:18:56,136 "ஆனால் உங்கள் கடின உழைப்பை மட்டுமே அதிகம் நம்பி இருக்காதீர்கள்." 253 00:18:56,136 --> 00:18:57,971 உழைப்பு. 254 00:18:57,971 --> 00:18:59,640 "இப்போது இறுதியாக, 255 00:18:59,640 --> 00:19:04,353 அனுபவம் கற்பிக்கும் பாடத்தின் விலை அதிகம்..." 256 00:19:04,353 --> 00:19:07,981 ஆனால் முட்டாள்கள் அப்படித்தான் கற்பார்கள். 257 00:19:08,982 --> 00:19:10,817 "புவர் ரிச்சர்ட் கூறுவது போல்... 258 00:19:11,485 --> 00:19:15,739 அவர்கள் அறிவுரைகளை ஏற்க மாட்டார்கள் அவர்களுக்கு உதவ முடியாது." 259 00:19:16,573 --> 00:19:19,952 ஆனால் சரியான அறிவுரைகளைக் கேட்காவிடில்... 260 00:19:19,952 --> 00:19:22,246 "அப்போது, அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும்." 261 00:19:22,246 --> 00:19:25,582 இதுவே பிராங்கிளினின் அறிவாற்றல். 262 00:19:45,602 --> 00:19:48,564 அவர் வானத்திலிருந்து மின்னலை பிடித்திழுத்தார்... 263 00:19:50,858 --> 00:19:53,402 அதைக்கொண்டு விரோதிகளை வதைத்தார். 264 00:20:00,909 --> 00:20:02,911 இது முட்டாள்தனமான வழிபாடு. 265 00:20:20,053 --> 00:20:22,139 இது உங்களுக்கு சொளகரியமாக இருக்கும் என நினைக்கிறேன். 266 00:20:22,139 --> 00:20:24,308 பொறுத்துக்கொள்ள முடியும், மிஸ்யூர் ஜெரார்ட். 267 00:20:24,308 --> 00:20:26,977 உங்கள் காங்கிரஸிலிருந்து கிடைத்த இந்த பொருட்களின் பட்டியில் விவரம் 268 00:20:26,977 --> 00:20:30,647 என்னைத் திணறச் செய்துள்ளது, திரு ஆடம்ஸ். 269 00:20:30,647 --> 00:20:34,234 சீருடைகள் 49,000, கிளாரிநெட்டுகள் மற்றும் டிரம்பெட்டுகள், 270 00:20:34,234 --> 00:20:39,865 ஸ்பூன்கள் மற்றும் ஷீட் இசை, பெயிண்ட் மற்றும் விரற்சிமிழ்கள். 271 00:20:41,116 --> 00:20:45,162 இதோடு சேர்த்து ஒரு போர்கப்பலும், இன்னும் எட்டு கப்பல்களும் இந்த பட்டியலில் உள்ளதென்று நினைக்கிறேன். 272 00:20:45,829 --> 00:20:51,126 எல்லாம் சேர்த்து இந்த அரசின் ஆண்டு பட்ஜெட்டின் பத்து சதவிகிதம் அளவாகிறது. 273 00:20:51,793 --> 00:20:55,339 மாண்புமிகு அரசர் ஏற்கனவே உங்கள் சுதந்திரத்தை உறுதி செய்ய நூறு, 274 00:20:55,339 --> 00:21:00,594 150 மில்லியன் லீவர்களைச் செலவழித்துள்ளார். 275 00:21:00,594 --> 00:21:06,225 ஆனால், இன்னும் நியூ யார்க், இரு கரோலினாக்கள், ஜார்ஜியா போன்றவை, பிரிட்டிஷிடமே உள்ளது. 276 00:21:06,225 --> 00:21:09,436 ஏனெனில் ஆட்மிரல் டெஸ்டாங்கின் படையெடுப்பால் அமெரிக்க கடற்கரைகளில் மீதான அவர்களின் 277 00:21:09,436 --> 00:21:10,812 பிடியை தளர்த்த முடியவில்லை. 278 00:21:10,812 --> 00:21:14,775 நியூ இங்கிலாந்திலிருந்து வந்த ஒரு கூட்டம் குடித்துவிட்டு, பிரான்ஸின் பெயரை 279 00:21:14,775 --> 00:21:15,859 சபித்ததாகவும் கேள்விப்பட்டோம். 280 00:21:15,859 --> 00:21:18,654 அதோடு, நானும் கேள்விப்பட்டேன், பிரான்ஸில், ஒரு ஆடவர், திருமணத்தை ஒரு... 281 00:21:18,654 --> 00:21:23,700 சில தவறான கருத்து வேறுபடுகள் போர்காலத்தில் நடப்பதை எதிர்பார்க்கத்தான் வேண்டும். 282 00:21:25,035 --> 00:21:27,204 நீங்கள் அதை ஒத்துக்கொள்கிறீர்கள் இல்லையா, திரு ஆடம்ஸ்? 283 00:21:27,704 --> 00:21:31,041 நான் இங்கு ஐரோப்பாவில் இன்னும் அதிக நாட்கள் இருந்து விஷயங்களை பரிசீலித்தால், 284 00:21:31,959 --> 00:21:33,919 நம் இரு நாடுகளின் நட்புறவு... 285 00:21:39,216 --> 00:21:42,386 நாம் மேற்கொண்டு வளர்க்கக்கூடிய ஒரு திடமான பாறையைப் போல் தோன்றுகிறது. 286 00:21:48,058 --> 00:21:51,687 ஆனால் பிரான்ஸ், நம்முடைய ஒப்பந்தத்தில் இன்னும் சிலவற்றை நிறைவேற்றாமல் உள்ளது. 287 00:21:51,687 --> 00:21:56,817 பீரங்கிகளும் குண்டுகளும் கொடுத்தோம். மஸ்கெட்டுகளும், பவுடர் பெயோநெட்டுகளும் அனுப்பியுள்ளோம். 288 00:21:56,817 --> 00:21:58,527 அதோடு... நேரடியாக போதுமான அளவு பணம்... 289 00:21:58,527 --> 00:22:02,406 எங்கள் நிலை, நீங்கள் போரில் ஈடுபடும் முன்பு இருந்தது போலத்தான் இப்போதும் உள்ளது. 290 00:22:02,406 --> 00:22:05,742 எங்களுக்கு இன்னும் ஆட்பற்றாக்குறை உள்ளது, இந்த நட்புறவு எதைக் கொடுக்கும் என நம்பியிருந்தோமோ 291 00:22:05,742 --> 00:22:08,036 அந்த அடிப்படை தேவைகளைக்கூட தர முடியவில்லை. 292 00:22:08,704 --> 00:22:10,247 இந்தப் போரை விரைவாக முடிப்பதற்கு 293 00:22:10,247 --> 00:22:13,375 ஆங்கிலேயர்களின் கடல் ஆதிக்கத்தை முறிக்கும், வலிமையான பிரெஞ்சு கப்பற்படைதான் தேவை. 294 00:22:14,251 --> 00:22:17,254 நீங்கள் கடற்படைப் போரில் திட்டம் தீட்டுவதிலும் வல்லவரா, திரு ஆடம்ஸ்? 295 00:22:17,254 --> 00:22:19,464 நான் எதுவாக இருப்பினும், குருடன் இல்லை. 296 00:22:20,174 --> 00:22:23,010 பிரான்ஸின் உத்தி, எங்கள் தலையை மட்டும் காப்பாற்றுவதற்காகத்தானே தவிர, 297 00:22:23,010 --> 00:22:24,970 நீரில் மூழ்குவதைத் தடுக்க அல்ல, எனப் புரிகிறது. 298 00:22:25,596 --> 00:22:27,139 நீங்கள் நலமாகத்தான் இருக்கிறீர்களா, டாக்டர் பிராங்கிளின்? 299 00:22:27,139 --> 00:22:30,684 இந்த கௌட்டின் வலி. கிங் ஜார்ஜுக்குக் கூட இது வர வேண்டாம். 300 00:22:30,684 --> 00:22:33,854 - வேறு எதுவும் உள்ளதா? - இல்லை. இல்லை, ஐயோ. 301 00:22:33,854 --> 00:22:36,481 - நான் அரச மருத்துவரை அழைக்கிறேன். - வேண்டாம், இல்லை. நன்றி. 302 00:22:36,481 --> 00:22:41,403 இதற்கு ஒரு மருந்து, ஓய்வும், வெறும் நம்பிக்கையும்தான். 303 00:22:44,156 --> 00:22:46,700 நான் அமைச்சரை கெஞ்சிக் கேட்கிறேன் 304 00:22:47,367 --> 00:22:52,039 அந்த சீருடைகளையும், துணியையும் கொஞ்சம் பரிசீலிக்க முடியுமானால் நல்லது. 305 00:22:52,039 --> 00:22:53,165 சரி. சரி. கண்டிப்பாக. 306 00:22:53,165 --> 00:22:54,625 ஜெரார்ட்? 307 00:22:56,210 --> 00:22:58,045 மூன்று மில்லியன் லீவர்கள். 308 00:23:04,051 --> 00:23:06,220 சிறியத் தொகைதானே, போகட்டும். ஹம்ம்? 309 00:23:13,268 --> 00:23:17,606 உங்கள் திடீர் பிரச்சினையை அவர் நம்பிவிட்டார் என்று நினைக்கிறீர்களா? 310 00:23:18,190 --> 00:23:21,401 நீங்கள் வெளியுறவுகளை நடத்தும் விதம், நம்மை ஒழித்துவிடும். 311 00:23:21,401 --> 00:23:26,198 இது போன்ற நிதானமான, மௌனமான, காணப்படாத அசைவை அமெரிக்காவால் இனி பொறுத்துக்கொள்ள முடியாது. 312 00:23:27,157 --> 00:23:31,453 நம் நடவடிக்கைகளின் மூலம் நம் எண்ணங்களை காட்ட வேண்டும். தைரியமாக. உழைப்பின் வெளிப்பாடு. 313 00:23:31,453 --> 00:23:34,540 பிரெஞ்சில் கடும் உழைப்பிற்கு வார்த்தையே இல்லை. 314 00:23:35,832 --> 00:23:40,128 நாம் கொஞ்சம்தான் சாதித்துள்ளோம் என்பது போல காட்டி, பெரியதாக சாதிப்பதுதான் இங்கே உள்ள தந்திரக் கலை. 315 00:23:40,128 --> 00:23:42,089 அந்தக் கலையில் நீங்கள் கைதேர்ந்தவர் போலும். 316 00:23:44,508 --> 00:23:46,677 நான் உயிருடன் உள்ளவரை, 317 00:23:46,677 --> 00:23:52,641 எனக்குச் சாதகமாக எதையெல்லாம் பெற முடியுமோ அவற்றைப் பெற, இந்த அரசை நான் சந்தோஷப்படுத்துவேன். 318 00:23:52,641 --> 00:23:56,353 ஒரு கொடுங்கோலனின் விலங்குச் சங்கிலிகளைத் களைந்து, இன்னொரு துரோகியின் கையில் பூட்டிக்கொள்வதற்கல்ல. 319 00:23:56,979 --> 00:23:59,439 கவுண்ட் வெர்ஜென் நம்முடைய நண்பர் இல்லை. 320 00:23:59,940 --> 00:24:03,610 இல்லை, ஆனாலும் எனக்கு அவரை பிடிக்கிறது. 321 00:24:22,504 --> 00:24:23,630 தள்ளிப் போங்கள்! 322 00:24:32,139 --> 00:24:33,599 சரியான போட்டிதான். 323 00:24:34,641 --> 00:24:37,227 எப்படித்தான் சீர்திருத்தம் வெற்றி கண்டதோ என யோசிக்க வைக்கிறது. 324 00:24:37,227 --> 00:24:41,356 பாவம், பாவிகள், தங்கள் மாலைகளை உருட்டிக்கொண்டு, லத்தீனை உச்சரிக்கிறார்கள். 325 00:24:41,356 --> 00:24:43,275 அவர்களால் ஒரு சொல்லைக்கூட புரிந்துக்கொள்ள முடியாது. 326 00:24:43,859 --> 00:24:45,861 லண்டன் உங்களுக்கு நல்வாழ்த்துகளைச் அனுப்புகிறது. 327 00:24:46,570 --> 00:24:49,865 நான் சந்திக்கும் ஆபத்துக்களை புகழ்ச்சியால் மட்டுமே ஈடுகட்டிட முடியாது. 328 00:24:49,865 --> 00:24:52,993 பொறுமையாக இருங்கள். இதுவரை உங்களுக்கு தாராளமாக பரிசு கிடைத்துள்ளது. 329 00:24:54,494 --> 00:24:56,371 இன்னும் வரக் காத்திருக்கும் சொர்க்கத்தின் அருளை யோசித்துப் பாருங்கள். 330 00:24:56,371 --> 00:25:00,042 ஆம், சரி, நம் நட்பு எந்த விதமான தேவ அருளை பெற்றுத் தரும் என நான் நம்பவில்லை. 331 00:25:00,584 --> 00:25:02,377 இந்த வாழ்வில் கிடைக்கும் இழப்பீடுகளையே நான் விரும்புகிறேன். 332 00:25:02,377 --> 00:25:05,797 யார் ஒருவர் பணத்தின் மீது இவ்வளவு குறியாக உள்ளாரோ அவர்களுக்கு அது எங்கிருந்து வருகிறது 333 00:25:05,797 --> 00:25:07,132 என்பதில் அதிக அக்கறை இருக்காது. 334 00:25:07,132 --> 00:25:09,843 நான் உங்களுக்கும் லண்டனுக்கும், என் விசுவாசத்தின் ஆதாரங்களை நிறையக் காட்டியுள்ளேன். 335 00:25:14,306 --> 00:25:16,266 போர் அமெரிக்காவிற்கு சாதகமாக நடக்கவில்லை. 336 00:25:16,266 --> 00:25:19,102 இறுதி ஆப்பை பிளவினுள் அழுத்த, இப்போதுதான் தக்க சமயம். 337 00:25:19,978 --> 00:25:22,147 வெர்சாய்யின் எண்ணங்களில் சந்தேக விதைகளை விதைக்க வேண்டும். 338 00:25:22,147 --> 00:25:24,900 வந்து, கவுண்ட் வெர்ஜென் கெட்ட எண்ணத்துடன் செயல்படுகிறார் என 339 00:25:24,900 --> 00:25:26,818 டாக்டர் பிராங்கிளினை நம்ப வைப்பது எளிதான செயல் அல்ல. 340 00:25:26,818 --> 00:25:31,782 திரு ஆடம்ஸுக்கு அவ்வளவாக பிரெஞ்சுக்காரர்களின் மீது அபிமானம் இல்லை. 341 00:25:33,075 --> 00:25:35,077 ஒருவேளை டாக்டர் பிராங்கிளின் இந்த இடத்தை விட்டுப் போனபின்... 342 00:25:35,077 --> 00:25:37,246 - நான் அதற்கு உடந்தையாக இருக்க மாட்டேன். - இந்த போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர 343 00:25:37,246 --> 00:25:38,413 தீவிரமாக நீங்கள் இருப்பதாக நான் நினைத்தேன்! 344 00:25:51,260 --> 00:25:54,763 நம்முடைய டீலைப் பற்றி, தவறுதலாக டாக்டர் பிராங்கிளினிடமோ, திரு ஆடம்ஸிடமோ... 345 00:25:57,224 --> 00:26:00,143 பேஸ்ஸியில் ஏற்கனவே சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. 346 00:26:01,186 --> 00:26:03,730 என்னை வேறு நான் காட்டிக்கொண்டால் எந்த நன்மையும் நடக்காது. 347 00:26:03,730 --> 00:26:06,149 நீங்கள் ஒருவர்தான் பிரான்ஸில் மாண்புமிகு அரசரின் ஏஜென்ட் இல்லை, தெரியுமா. 348 00:26:06,149 --> 00:26:08,360 ஆனால் நான் ஒருவன்தான் டாக்டர் பிராங்கிளினின் நம்பிக்கையைப் பெற்றவன். 349 00:26:08,360 --> 00:26:10,028 திரு ஆடம்ஸின் நம்பிக்கையையும் பெற்றுள்ளீர்களா? 350 00:26:11,029 --> 00:26:13,615 வந்து, திரு ஆடம்ஸிற்கு மனித இனத்தின் மீதே மிக தாழ்மையான எண்ணம்தான் உள்ளது. 351 00:26:16,076 --> 00:26:17,452 ஒரு வகையில் அது நியாயமாகவும் இருக்கலாம். 352 00:26:23,500 --> 00:26:24,835 நீங்கள் சாமர்த்தியமானவர்தான். 353 00:26:24,835 --> 00:26:27,045 கண்டிப்பாக அவருடைய நம்பிக்கையைப் பெறவும் நீங்கள் ஏதேனும் வழியை உண்டாக்குவீர்கள். 354 00:27:13,800 --> 00:27:17,304 நீங்கள் ஜூலை 4 தினக் கொண்டாட்டத்திற்காக வந்திருந்தால், 355 00:27:18,263 --> 00:27:19,806 நீங்கள் சற்று தாமதமாக வந்துள்ளீர்கள். 356 00:27:19,806 --> 00:27:22,851 நீங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், டாக்டர். அதைப் பற்றிய முழு ரிப்போர்ட்டும் கிடைத்தது. 357 00:27:23,769 --> 00:27:26,104 தி அபோதியோஸிஸ் ஆஃப் லிபெர்டி. 358 00:27:26,104 --> 00:27:27,397 என்ன ஆச்சரியமானது. 359 00:27:27,397 --> 00:27:29,858 பின்னர் இங்கு வரக் காரணம் என்னவோ? 360 00:27:30,442 --> 00:27:34,363 நாங்கள் உங்களை அருகிலேயே வைத்துக்கொள்வதற்கு, நீங்கள் ஒருவேளை ஆட்சேபிக்கலாம். 361 00:27:36,615 --> 00:27:40,494 கட்டாயம் என் நலனைக் கருதிதான் நீங்கள் எதையும் செய்வீர்கள் எனத் தெரியும். 362 00:27:41,411 --> 00:27:45,832 உங்களுக்கு இந்த துரதிர்ஷ்டம் நேர்வது, போலீஸை கெட்டவர்களாகக் காட்டும். 363 00:27:45,832 --> 00:27:49,127 நான் உங்கள் பார்வையிலிருந்து அகலுவதே இல்லை எனும்போது, அது எப்படி சாத்தியம்? 364 00:27:49,127 --> 00:27:51,463 ஆனால் உங்களை கண்காணிப்பது நாங்கள் மட்டும் இல்லையே. 365 00:27:52,005 --> 00:27:55,175 அதோடு, எங்களைப் போல் நல்ல விதமாக உங்கள் வரவை, அனைவரும் ஏற்கவில்லையே. 366 00:27:55,926 --> 00:27:57,427 நீங்கள் என்னிடம் என்ன கூற விரும்புகிறீர்கள்? 367 00:27:58,053 --> 00:27:59,555 நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களில் 368 00:27:59,555 --> 00:28:01,974 சிறிது கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது என்று உரைக்க வந்தேன். 369 00:28:02,599 --> 00:28:03,976 ஏனெனில்? 370 00:28:03,976 --> 00:28:06,353 எங்களுக்கு கிடைத்த சில வதந்திகள். வேறெதுவும் இல்லை. 371 00:28:08,856 --> 00:28:13,110 மிஸ்யூர் லெனுவார், அதனால்தான் நீங்கள் எனக்கு உதவுகிறீர்களா அல்லது தீங்கிழைக்க 372 00:28:13,652 --> 00:28:17,573 நினைக்கிறீர்களா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை? 373 00:28:19,199 --> 00:28:21,869 ஒருவேளை நம்பிக்கையின்மைதான் உங்கள் இயல்போ? 374 00:28:22,786 --> 00:28:24,955 உண்மையில் நான் மிகவும் எளிமையானவன். 375 00:28:26,832 --> 00:28:28,542 தயவுசெய்து கவனமாக இருங்கள், டாக்டர். 376 00:28:29,209 --> 00:28:31,670 இப்போதே பாரீஸில் குழப்பம் நிலவுவது போலத்தான் உள்ளது. 377 00:28:40,762 --> 00:28:42,139 உள்ளே வரவும். 378 00:28:43,932 --> 00:28:46,727 உங்களுக்கு இன்னும் உணவு தேவைப்படும் என நினைத்தேன். 379 00:28:46,727 --> 00:28:49,479 திரு பேன்கிராஃப்ட். மிகவும் அன்பானவர். 380 00:28:49,479 --> 00:28:50,564 வாருங்கள். 381 00:28:51,899 --> 00:28:54,735 எனக்குச் சொந்தமான சூ ஜூவானிலிருந்து எடுத்து வந்தேன். 382 00:28:58,071 --> 00:28:59,156 மிக்க நன்றி. 383 00:28:59,156 --> 00:29:01,200 உங்கள் தேநீரில் ஏதேனும் வேண்டுமா? 384 00:29:01,200 --> 00:29:03,410 பாலில்லாமல், பிளீஸ். கருப்பாக இருந்தால் இன்னும் நல்லது. 385 00:29:07,372 --> 00:29:08,832 - அதோ. - மிக்க நன்றி. 386 00:29:12,461 --> 00:29:15,714 அவர் நேற்றிரவு மீண்டும் வண்டியைக் கொண்டுச் சென்றார். 387 00:29:16,381 --> 00:29:19,843 ஆம். மிஸ்யூர் பார்மான்டீயேக்கு நடந்த விருந்து என்று ஏதோ கூறினார். 388 00:29:20,427 --> 00:29:22,179 அந்த புகழ்பெற்ற மருந்துத் தயாரிப்பாளர். 389 00:29:22,179 --> 00:29:25,432 - அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். - அவருடைய நடத்தையை எப்படி சகிக்க முடிகிறது? 390 00:29:28,393 --> 00:29:32,523 அவருடன் இருக்கும் சந்தோஷத்திற்காக, அவருடைய குணங்களின் குறைகளை ஏற்கத்தான் வேண்டும். 391 00:29:33,357 --> 00:29:34,483 அப்படி என்ன சந்தோஷம்? 392 00:29:40,489 --> 00:29:42,032 உண்மையைச் சொல்கிறேன், திரு ஆடம்ஸ். 393 00:29:42,658 --> 00:29:46,203 நீங்கள் வந்ததைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன், அதனால் நம் வெளியுறவுகள் மீண்டும் மேம்படும். 394 00:29:46,203 --> 00:29:48,872 எனக்கு அதைக் கேட்டதில் சந்தோஷம், திரு பேன்கிராஃப்ட். மிக்க மகிழ்ச்சி. 395 00:29:49,456 --> 00:29:50,457 பாருங்கள். 396 00:29:50,457 --> 00:29:54,127 கண்டிப்பாக, டாக்டர் பிராங்கிளின் மீது நமக்குள்ள மரியாதை அப்படியே உள்ளது. 397 00:30:05,681 --> 00:30:10,561 என் கருத்தின்படி, பிரெஞ்சு சபையை யாராவது கடிந்து கேட்கும் நேரம் வந்துவிட்டது. 398 00:30:11,562 --> 00:30:15,315 ஏற்கனவே, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நான் வலியுறுத்தி... 399 00:30:15,315 --> 00:30:20,571 திரு பேன்கிராஃப்ட், நான் இங்குள்ளவரை, வெர்சாய்க்கு ஓய்வே இருக்காது. 400 00:30:22,114 --> 00:30:24,032 அதற்கு இறைவனுக்கு நன்றி. 401 00:30:26,493 --> 00:30:27,619 இன்னும் தேநீர் வேண்டுமா? 402 00:30:29,538 --> 00:30:30,581 மிக்க நன்றி. 403 00:31:37,940 --> 00:31:39,233 என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்! 404 00:31:44,196 --> 00:31:45,197 இது என்ன? 405 00:31:45,197 --> 00:31:47,533 - பார்த்தால் எப்படி உள்ளது? - நீங்கள் என்னை ஆட்கடத்தல் செய்கிறீர்களா? 406 00:31:49,493 --> 00:31:50,911 நீங்கள் மைதானத்தைத் தாண்ட மாட்டீர்கள். 407 00:31:50,911 --> 00:31:53,163 கண்டிப்பாகத் தாண்டுவோம். ஏன் தெரியுமா? 408 00:31:53,163 --> 00:31:55,249 ஏனெனில் காவல்காரரிடம் உனக்கு எங்களைத் தெரியும் எனச் சொல்வாய். 409 00:31:55,791 --> 00:31:57,376 என்னை கொன்றாலும் நடக்காது! 410 00:32:06,260 --> 00:32:07,261 பூ! 411 00:32:10,389 --> 00:32:15,310 அட, ஏமாற்றுக்காரர்களே! உங்களை... 412 00:32:23,068 --> 00:32:24,820 நாம் நினைத்ததைவிட வீரமானவன்தான்! 413 00:32:24,820 --> 00:32:26,655 "என்னை கொன்றாலும் நடக்காது!" 414 00:32:26,655 --> 00:32:28,824 முட்டாள்களே, உங்களுக்கு வேறு எதுவும் வேலை இல்லையா? 415 00:32:28,824 --> 00:32:31,994 ஒருவேளை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். 416 00:32:31,994 --> 00:32:33,620 நன்றாக குடி, அஷீலெ. 417 00:32:34,204 --> 00:32:35,414 உனக்கு அது தேவைப்படும். 418 00:32:43,046 --> 00:32:44,089 வண்டியோட்டுனரே, போகலாம்! 419 00:32:51,013 --> 00:32:54,308 - நீ அவளை மணப்பாயா? - தாத்தா அதைத்தான் விரும்புகிறார். 420 00:32:54,808 --> 00:32:57,311 ஆம். ஆனால், "உனக்கு என்ன வேண்டும்," என்பதே கேள்வி. 421 00:32:57,311 --> 00:32:59,605 அவள் இனிமையானவள். 422 00:32:59,605 --> 00:33:02,316 அவள் என்னை சீண்டுவதெல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது 423 00:33:02,316 --> 00:33:06,278 - அதோடு... நான் நினைக்கிறேன்? அவள் குடும்பம்... - பணக்காரக் குடும்பம் என்றா? 424 00:33:06,278 --> 00:33:08,280 - அவ்வளவு பணக்காரர்கள் இல்லை. - போதுமான அளவு வசதியானவர்கள். 425 00:33:08,280 --> 00:33:09,615 ஆனால் இளம் அஷீலெ... 426 00:33:09,615 --> 00:33:11,200 அவனுக்கு வேறு யார் மீதோ கண்ணுள்ளது. 427 00:33:11,200 --> 00:33:12,618 இல்லையா? 428 00:33:14,912 --> 00:33:16,997 இரவெல்லாம் நாம் இங்கேயே இருக்கப் போகிறோமா? 429 00:33:17,956 --> 00:33:19,333 நல்லப் பழக்கம் என்று நினைத்துக்கொள். 430 00:33:19,333 --> 00:33:20,584 எதற்காக? 431 00:33:23,712 --> 00:33:25,005 யாரோ வருகிறார்கள். 432 00:33:38,602 --> 00:33:40,604 அதை வைத்து என்னை குத்தப் போகிறாயா? 433 00:33:42,981 --> 00:33:43,982 ஜில்பெர்ட். 434 00:33:45,108 --> 00:33:47,361 ஜெனரல் லஃபயெட் என்று அழைக்க வேணடும். 435 00:33:49,071 --> 00:33:50,280 நிஜமாகவா? 436 00:33:54,952 --> 00:33:56,161 நிச்சயமாக இல்லை. 437 00:33:56,161 --> 00:33:57,955 உன்னை அணைத்துக்கொள்ள வேண்டும், என் நண்பா. 438 00:33:59,081 --> 00:34:00,624 நான் இப்போது அமெரிக்கனைப் போல் இருக்கிறேனா? 439 00:34:00,624 --> 00:34:02,584 வந்து, அப்படியில்லை. 440 00:34:02,584 --> 00:34:04,962 அவராங்கை கொஞ்சம் நியூ ஜெர்சியால் போர்த்தியது போல் உள்ளது. 441 00:34:04,962 --> 00:34:08,257 - அதிகாரியை அவமானப் படுத்துகிறாய். - அவனை இங்கேயே தூக்கிலிடுங்கள் என்கிறேன். 442 00:34:08,257 --> 00:34:09,424 அல்லது நாம் கத்தியாலும் குத்தலாம். 443 00:34:09,424 --> 00:34:10,759 ஆம், அதுவும் செய்யலாம். 444 00:34:10,759 --> 00:34:12,678 ஏன் இவ்வளவு ரகசியம்? ஹம்? 445 00:34:12,678 --> 00:34:14,554 சொல்லப்போனால், நான் வீட்டுக் கைதி. 446 00:34:14,554 --> 00:34:17,558 மற்றவர்களின் போரில் சண்டையிட தன்னுடைய மார்கீகள் ஓடிப் போவதில் அரசருக்கு விருப்பமில்லை. 447 00:34:18,308 --> 00:34:21,436 ஆனால் இப்போது போர் நமதாகிவிட்டது. நாம் இருவரும் சேர்ந்து போர் புரிகிறோம். 448 00:34:22,062 --> 00:34:23,605 அதைத்தான் நாம் இங்கே விவாதிக்க வந்துள்ளோம். 449 00:34:24,273 --> 00:34:25,649 உட்காருங்கள், தோழர்களே. 450 00:34:25,649 --> 00:34:29,735 சுதந்திரத்திற்கான நமது போரைப் பற்றிப் பேசுவோம். 451 00:34:29,735 --> 00:34:33,447 போர்ட்ஸ்மூத், லிவர்பூல், லாங்காஸ்ட்டர், பிளீமூத், கார்க். 452 00:34:33,447 --> 00:34:35,868 ஒவ்வொரு துறைமுகத்தையும் ஒரு ஸ்குவாட்ரன் கப்பல்கள் தாக்க வேண்டும். 453 00:34:35,868 --> 00:34:38,036 கடற்கரையைக் காக்க, ஆங்கிலேயர்களை கட்டாயப்படுத்த வேண்டும், 454 00:34:38,036 --> 00:34:41,164 அதனால் அவர்களுக்கு அமெரிக்காவைத் தாக்க ஒருசில கப்பல்களே இருக்கும்படி செய்ய வேண்டும். 455 00:34:41,164 --> 00:34:42,916 நீங்கள் என்ன சொல்கிறீர்கள், சீமான்களே? 456 00:34:44,083 --> 00:34:46,795 இந்தப் படைக்கு நாம் எப்படி பணம் திரட்டப் போகிறோம்? 457 00:34:46,795 --> 00:34:48,672 நாம் அந்தந்த ஊர்களிலிருந்து கப்பம் கேட்போம். 458 00:34:48,672 --> 00:34:49,965 சரி, அது தைரியமான முடிவுதான். 459 00:34:49,965 --> 00:34:54,344 ஒருவேளை அந்தந்த ஊர்கள் பாதுகாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்துவிட்டால்? 460 00:34:54,344 --> 00:34:56,179 தரை மட்டமாக அவற்றை எரித்துவிடுவோம். 461 00:34:56,179 --> 00:34:57,681 என்ன சொல்கிறார்? 462 00:34:57,681 --> 00:34:58,765 அவர்... 463 00:35:00,309 --> 00:35:03,353 தோழா, ஒரு சிறிய அறிவுரை சொல்கிறேன் இங்கே. 464 00:35:03,353 --> 00:35:07,733 லிவர்பூலை கொள்ளை அடித்தாலே, இரண்டு மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்குகள் கிடைக்கும். 465 00:35:07,733 --> 00:35:12,946 லாங்காஸ்ட்டரில் ஒரு கால் மில்லியன், கார்க்கில் அரை மில்லியன். 466 00:35:12,946 --> 00:35:15,782 நீங்கள் இந்த முட்டாள்தனமான திட்டத்திற்கு உங்கள் சம்மதத்தைத் தருகிறீர்களா என்ன? 467 00:35:16,366 --> 00:35:19,745 என்ன தவறு, திரு ஆடம்ஸ்? அதில் உங்களுக்கு வேண்டிய வீரியம் இல்லையா? 468 00:35:19,745 --> 00:35:22,456 இது மிகவும் ஆணவத்தனமானது. இது நடக்கவே நடக்காது. 469 00:35:22,456 --> 00:35:27,544 முடியாத திட்டங்கள் வெற்றிப் பெறும், ஏனெனில் யாரும் அவை வெற்றி அடைவதை எதிர்பார்ப்பதில்லை. 470 00:35:28,253 --> 00:35:31,173 மேலும் இந்த திட்டத்திற்கு எத்தனை ஆட்கள் தேவைப்படும்? 471 00:35:31,173 --> 00:35:33,050 சுமார் 2,000 வீரர்களுக்கு மேல் தேவை இருக்காது. 472 00:35:33,050 --> 00:35:35,219 இல்லை, இல்லை. மிகவும் குறைச்சல், மார்கீ. 473 00:35:35,219 --> 00:35:38,263 நான்கு அல்லது ஐந்தாயிரம் தேவை. நன்றாகச் சேதப்படுத்த வேண்டும். 474 00:35:38,263 --> 00:35:42,184 குதிரைப்படையை வைத்து கடற்கரையில் பீதியைப் பரப்பவிட்டால் என்ன? 475 00:35:42,184 --> 00:35:46,230 அது மிக நல்ல யோசனை. அவர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டும். பயம் அவர்களைத் தாக்கட்டும். 476 00:35:46,230 --> 00:35:51,235 ஆம், ஆனால்... பயங்கரவாதத்தை தூண்டுவது இருபக்கமும் அவதியை நீட்டிக்காதா? 477 00:35:51,235 --> 00:35:53,153 அவர்கள் நமக்குச் செய்தது போலவே 478 00:35:53,153 --> 00:35:57,032 நாம் அவர்களுக்குச் செய்து காட்டுவோம். அதுவே அவர்களுக்குச் சிறந்த பாடம். 479 00:35:57,032 --> 00:35:59,868 ஆனால் யார் இந்தக் காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளை முன்னடத்துவார்கள்? 480 00:35:59,868 --> 00:36:03,330 வேறு யார், மிஸ்யூர்? நான்தான். என் தோழர்கள் என்னுடன் இருப்பார்கள். 481 00:36:03,330 --> 00:36:06,416 ஒரு குழந்தைகளின் போராட்டம். என்ன ஒரு முதன்மையான யோசனை. 482 00:36:06,416 --> 00:36:11,505 ஹானிபலை எதிர்க்க ஒரு யானைக் கூட்டம், லாங்காஸ்ஷையரை மிதித்துக்கொண்டுப் போகும். 483 00:36:11,505 --> 00:36:15,259 அங்கிருந்து சிறைப்பிடிக்கப்படுவபர்களின் மீது இரத்தம் ஆபரணமாகும். 484 00:36:15,259 --> 00:36:17,010 பிளீமூத் அழிக்கப்பட வேண்டும். 485 00:36:19,263 --> 00:36:21,473 வேடிக்கை செய்யும் விஷயம் இல்லை இது. 486 00:36:21,473 --> 00:36:23,767 இந்தத் திட்டம் மிகவும் தீவிரமானது. 487 00:36:23,767 --> 00:36:26,895 நாங்கள் கப்பலேறிப் போய், இங்கிலாந்தை தோற்கடிக்கப் போகிறோம். 488 00:36:28,188 --> 00:36:29,273 "நாங்களா"? 489 00:36:30,065 --> 00:36:33,610 ஆம். ஜில்பெர்ட், நோவாயில், செக்யூயெர், மற்றும் நான். 490 00:36:37,739 --> 00:36:39,449 சீமான்களே, எங்களுக்கு சற்று பேச அவகாசம் தரமுடியுமா, பிளீஸ்? 491 00:36:44,413 --> 00:36:47,541 ஒரு முட்டாள் இன்னொரு முட்டாளைப் பெற்றெடுக்கும்போது, இதுதான் நடக்கும். 492 00:36:51,503 --> 00:36:54,047 நான் எதற்காக உன்னை இங்கே அழைத்து வந்தேன் எனத் தெரியுமா? 493 00:36:55,924 --> 00:36:57,551 நான் வெற்றிகரமாக... 494 00:36:57,551 --> 00:37:01,471 நான் இறக்கும்போது என் கண்களை மூடிவிட ஒரு குழந்தை அருகில் இருப்பதற்கு. 495 00:37:02,764 --> 00:37:04,057 எனக்கு 19 வயதாகிறது. 496 00:37:04,057 --> 00:37:05,601 அது பரவாயில்லை. 497 00:37:06,101 --> 00:37:10,063 அப்போது நான் இங்கேயே காத்திருக்க வேண்டுமா? மரணம் உங்களை கொண்டு போகும் வரை. 498 00:37:10,063 --> 00:37:12,316 நான் உன் தந்தையிடம் என்ன சொல்வேன்? 499 00:37:12,858 --> 00:37:17,029 நான் உன்னை ஐரிஷ் கடலில் புதைக்கத்தான் இங்கு அழைத்து வந்தேன் என்று சொல்லவா? 500 00:37:18,822 --> 00:37:20,365 அதற்கு நீங்கள் அவருடன் பேச வேண்டும். 501 00:37:20,365 --> 00:37:22,367 இறப்பதால் புகழ் இல்லை, மகனே. 502 00:37:27,706 --> 00:37:33,045 "நாம் பரஸ்பரம், நம் உயிர்களை, எதிர்காலத்தை, மற்றும் கௌரவத்தை பணயம் வைக்க வேண்டும்." 503 00:37:33,045 --> 00:37:37,549 ஆம், திரு ஜெஃபர்சன் இது போன்ற உயர் சொற்களை மிகவும் மகிழ்ச்சியுடன் உபயோகிப்பார், 504 00:37:38,342 --> 00:37:40,385 ஆனால் நாம் அனைவரும் அதில் நம் பெயர்களை கையெழுத்திடுள்ளோம். 505 00:37:40,385 --> 00:37:43,555 நன்றாக உணவு உண்டு, சௌகரியமாக படுக்கைகளில் உறங்கினோம். 506 00:37:43,555 --> 00:37:46,517 அந்த வார்த்தைகளுக்காக ஜில்பெர்ட் குண்டால் சுடப்பட்டதை பொறுத்துக்கொண்டான். 507 00:37:46,517 --> 00:37:50,938 அந்த மார்கீயின் குடும்பம், போரையே பிசினஸாக பல நூற்றாண்டுகளாக வைத்துள்ளது. 508 00:37:51,438 --> 00:37:54,691 நாம் இரும்புக்கொல்லர்களாகவும், மெழுகுவர்த்தி செய்பவர்களாகவும் 509 00:37:54,691 --> 00:37:58,612 சமீப காலமாக பிரிண்டிங் தொழிலில் சற்று முன்னேறி வந்துள்ளோம். 510 00:37:59,613 --> 00:38:05,160 நம் குடும்பங்களின் தொழிலைப் பின்பற்றுவோம், நமக்கு இயல்பில்லாத ஒன்றில் எதிர்காலத்தை தேட வேண்டாம். 511 00:38:06,203 --> 00:38:07,788 நான் கோழையாக இருப்பதை விரும்புகிறீர்கள். 512 00:38:08,413 --> 00:38:12,668 நீ உயிருடன் இருக்க விரும்புகிறேன், டெம்பிள். என் அருகே. 513 00:38:14,336 --> 00:38:18,048 இந்த பைத்தியக்காரச் செயலைவிட, அது நம் நோக்கத்திற்கு அதிக நண்மை தரும். 514 00:38:20,551 --> 00:38:23,303 உனக்குத் தெரியவேண்டியது அனைத்தும் இன்னும் தெரியாது. 515 00:38:24,012 --> 00:38:25,097 ஆனால் உங்களுக்குத் தெரியுமா? 516 00:38:26,515 --> 00:38:30,018 நீ போகக் கூடாது, அவ்வளவுதான், அத்துடன் முடிந்தது. 517 00:38:37,943 --> 00:38:41,196 உனக்கு அதன் கஷ்டம் புரிகிறதா? 518 00:38:41,196 --> 00:38:43,323 அது மிக சங்கடமான விஷயம் என்று தெரியும். 519 00:38:43,323 --> 00:38:46,702 அவன் ஒரு பாதிரியாருடன் பேச சம்மதிப்பானா? 520 00:38:46,702 --> 00:38:50,038 அனைத்திற்கும் தயாராத இரு என நான் அவனுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறேன். 521 00:38:50,038 --> 00:38:52,666 உண்மையில், எனக்கு, அது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தப் போகிறது? 522 00:38:54,084 --> 00:38:58,630 தோற்றம்தான் முக்கியம். 523 00:38:58,630 --> 00:39:01,633 அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டால்? 524 00:39:01,633 --> 00:39:03,594 பாதிரியார் அதை ஏற்றுக்கொண்டால், நல்லது. 525 00:39:04,469 --> 00:39:06,138 கண்டிப்பாக, இவ்வளவு அமர்க்களத்திற்கும் பிறகு, 526 00:39:06,138 --> 00:39:09,641 அந்த பிசினஸில் சற்று மேம்படும். 527 00:39:09,641 --> 00:39:13,187 ஆனால் நமக்குள் உள்ள ஏற்பாடு அதேதானே? 528 00:39:13,770 --> 00:39:18,692 வந்து, எனக்கு அந்த யோசனை அவ்வளவாகப் பிடிக்கவில்லை 529 00:39:18,692 --> 00:39:21,361 அவள் ஒரு அமெரிக்கனாக மாறுவது... 530 00:39:22,029 --> 00:39:24,364 ஒரு அமெரிக்கனா? 531 00:39:26,533 --> 00:39:28,285 நாங்கள் பணம் கொடுப்பது... 532 00:39:28,911 --> 00:39:33,916 நான் பணம் கொடுப்பது அவள் இசை, நடனம் மற்றும் இத்தாலிய மொழி கற்பதற்கு, என நினைக்கிறேன். 533 00:39:35,042 --> 00:39:37,711 அதில் பெரும் அளவு பணம் வீணாகிறது. 534 00:39:37,711 --> 00:39:41,840 உங்களுக்கு திருப்தியான முறையில், நாம் இந்த மதம் சார்ந்த பிரச்சினைக்குத் தீர்வு கண்டால், 535 00:39:41,840 --> 00:39:48,722 நானும் டெம்பிளும் சந்தோஷமாக பிரான்ஸிலேயே இருந்துவிடுவோம் என உறுதி கூறுகிறேன். 536 00:39:48,722 --> 00:39:53,310 எங்களுக்கு பையனைப் பிடித்துள்ளது, டாக்டர். நிஜமாக பிடித்துள்ளது. 537 00:39:54,269 --> 00:39:55,646 அதில் சந்தேகமே இல்லை. 538 00:39:57,147 --> 00:39:58,398 நல்லது. 539 00:40:03,570 --> 00:40:06,782 அதை ஷெமீஸ் ஆ லா ரைன் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் அதை அரசியார்தான் முதலில் அணிந்தார். 540 00:40:06,782 --> 00:40:11,370 சரி, முதலில் அல்ல, சாமான்யர்களும் அணிவார்கள்... ஆனால் அவர் அதை அணிந்த போது... 541 00:40:11,370 --> 00:40:13,455 அதோடு அனைவரும் அவர்களிடம்தான் போகிறார்கள், மேடம் பெர்த்தான். 542 00:40:13,997 --> 00:40:16,792 நான் சொல்வது, "மாமன், உங்கள் உடைகள் அனைத்தையும் அவரிடமே தைத்துக்கொள்ளுங்கள் என்பது நியாயம்தானே, 543 00:40:16,792 --> 00:40:18,710 என்னிடம் ஏதோ சில பழைய"... 544 00:40:21,630 --> 00:40:23,757 - நீ கேட்கவில்லை. - கேட்கிறேன். 545 00:40:24,508 --> 00:40:25,634 நான்... 546 00:40:32,057 --> 00:40:33,600 நீ உன் ஓவியங்களை எனக்குக் காட்டுவதாக இருந்தாய். 547 00:40:33,600 --> 00:40:35,561 ஆனால் நீ கேட்டுக்கொண்டதால் தான். 548 00:40:46,822 --> 00:40:47,948 தோட்டம்... 549 00:40:50,158 --> 00:40:52,703 பிப்பூ, அவனுடைய மூக்கில் பிழையாகிவிட்டது. 550 00:40:54,913 --> 00:40:56,540 இதுதான் நான் பேசிக்கொண்டிருந்த உடை. 551 00:41:01,753 --> 00:41:03,213 நான் இவனுக்கு வாட்டர்கலரில் செய்த ஓவியங்களைக் காண்பிக்கிறேன். 552 00:41:03,213 --> 00:41:04,840 நீ அவரை சலிப்படையச் செய்யக்கூடாது. 553 00:41:04,840 --> 00:41:07,134 எனக்குச் சலிப்பாக இல்லை. நிஜமாக. 554 00:41:07,134 --> 00:41:10,637 நீங்கள் இருவரும் மேலிலிருந்து காட்சியை ரசித்தபடி நடக்க விரும்பலாம். இன்பமான மாலைப் பொழுது. 555 00:41:11,430 --> 00:41:13,932 வெறுமனே முன்னும் பின்னும் நடப்பதுதானே. 556 00:41:15,309 --> 00:41:16,768 தயவுசெய்து போய்வாருங்கள். 557 00:41:23,817 --> 00:41:24,902 இனிமையாக இருங்கள். 558 00:41:26,737 --> 00:41:27,779 நீ இருக்கலாம். 559 00:41:28,488 --> 00:41:29,948 அது புத்திசாலித்தனம் தானா, மேதாம்? 560 00:41:29,948 --> 00:41:32,284 அவர்களின் நல்ல வளர்ப்பை நாம் நம்பலாம் என நினைக்கிறேன். 561 00:41:32,284 --> 00:41:34,786 நல்லது. நான் வந்து... 562 00:41:36,163 --> 00:41:37,497 - மன்னிக்கவும். - நான் முடியாது என்றேன். 563 00:41:40,167 --> 00:41:42,586 ஒரு தாள். 100 லீவர்களுக்கு. 564 00:41:43,587 --> 00:41:44,880 அதை எடுத்துக்கொண்டு போகலாம். 565 00:41:49,092 --> 00:41:52,095 நீ அதை எடுத்துக்கொள்ளவில்லை எனில், இந்த வளாகத்தை விட்டு உன்னை வெளியே அனுப்பிவிடுவேன். 566 00:41:52,095 --> 00:41:55,933 பாரீஸைச் சுற்றி நூறு மைல் தூரத்தில் உன்னை எந்த வீட்டிலும், எந்த ஃபேஷன் தயாரிப்பு நிறுவனத்திலும் 567 00:41:55,933 --> 00:41:57,935 வேலையில் சேர்க்க மாட்டார்கள். 568 00:41:57,935 --> 00:41:59,645 அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 569 00:42:00,395 --> 00:42:02,064 நிதியை பட்டுவாடா செய்வதற்காகக்கூட அப்படிச் செய்ய மாட்டார்கள். 570 00:42:04,191 --> 00:42:05,400 மிஸ்யூர் பிரையோன்... 571 00:42:05,400 --> 00:42:06,568 அவ்வளவு சிரமம் வேண்டாம். 572 00:42:29,716 --> 00:42:31,009 - மேடம். - என்னங்க. 573 00:42:31,009 --> 00:42:32,928 நீங்கள் இங்கு வந்ததற்கு காரணம் என்னவோ? 574 00:42:32,928 --> 00:42:37,140 என் சிந்தையில் எப்போதும் இருக்கும் இரு ஆடவருக்கு இடையே இருப்பதே என் விருப்பம். 575 00:42:37,140 --> 00:42:42,062 பல விதமான மதங்களைப் பற்றியும் மனதின் நிலையான தன்மை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 576 00:42:42,563 --> 00:42:46,316 நீங்கள் எங்கள் மகள் மற்றும் உங்கள் பேரனின் திருமணத்தைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துகிறீர்கள். 577 00:42:46,900 --> 00:42:49,278 நீங்கள் அவரிடம் சொல்லவில்லை என நினைக்கிறேன். 578 00:42:50,654 --> 00:42:51,655 எதைச் சொல்லவில்லை? 579 00:42:51,655 --> 00:42:53,323 நாம் ஒப்புக்கொண்டதை. 580 00:42:53,824 --> 00:42:56,410 - எனக்கு நினைவில்லையே நாம்... - நல்லது. 581 00:42:58,829 --> 00:42:59,955 என் மதிப்பிற்குரியவரே. 582 00:43:01,540 --> 00:43:04,918 என் கணவர் உங்களை நேசிக்கிறார், அதே போல் நானும். 583 00:43:04,918 --> 00:43:09,631 எனினும், காட்டாயம் எதைச் சொல்ல வேண்டுமோ, அதைச் சொல்லத் தெரியாமல் திணறுகிறார். 584 00:43:09,631 --> 00:43:13,385 - நீ என்ன விஷயத்தைப் பற்றி... - எனவே, அவருக்காக நான் பேசுகிறேன். 585 00:43:14,678 --> 00:43:18,098 மனதளவில், நாங்கள் ஒரே மதம், ஒரே தார்மீகம்தான் 586 00:43:18,098 --> 00:43:20,767 என்ற கருத்தில் எங்களுக்கு விரோதமே இல்லை. 587 00:43:20,767 --> 00:43:22,895 பிரியமான பெண்ணே, அதன் அவசியம் எனக்குப் புரிகிறது... 588 00:43:22,895 --> 00:43:26,064 ஆனால் என்னதான் தனி மனிதர்கள் தங்கள் விருப்பப்படி செய்து 589 00:43:26,565 --> 00:43:28,984 அவரவர் நம்பிக்கைகளை அவரவருக்கு விட்டாலும், 590 00:43:29,526 --> 00:43:33,238 குடும்பங்கள் அதை குற்றமாகவே பார்க்கும். 591 00:43:33,238 --> 00:43:35,115 - ஆகையினாலே... - மேதாம், நான் எச்சரிக்கிறேன்... 592 00:43:35,115 --> 00:43:39,411 ...உங்கள் குழந்தைகளாக இல்லாமல், நாங்கள் உங்கள் நண்பர்களாக இருக்கிறோம். 593 00:43:41,330 --> 00:43:44,750 நீங்கள் மற்றவர்கள் இடத்தில் அன்பைத் தேடுவீர்கள் என்பதை ஏற்பது கடினமாக இருப்பினும், 594 00:43:45,959 --> 00:43:48,795 எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட அளவில் உங்கள் மீது அக்கறையாக இருப்போம். 595 00:43:49,796 --> 00:43:53,383 ஆனால் இந்த திருமணம் நடைபெறாது. 596 00:44:13,946 --> 00:44:18,534 சிலர் சுதந்திரமாகச் சிந்திக்கிறார்கள், மற்றவர்கள் கைகளை தாங்களே கட்டி, சுதந்திரம் என்கிறார்கள். 597 00:44:19,117 --> 00:44:20,786 அவர்களுக்கெல்லாம் புரிய வைக்க முடியாது. 598 00:44:22,579 --> 00:44:25,582 ஆனால் நீ சோர்வடையத் தேவையில்லை. நான் உனக்கு சிறந்த பெண்ணைத் தேடுகிறேன். 599 00:44:26,792 --> 00:44:29,711 அதோடு நம் பிராங்கிளின் குடும்பத்தினரால், உலகத்தையே பார்வையிட முடியும். 600 00:44:29,711 --> 00:44:31,547 அது சரியென்றால், நான் நடந்தே திரும்பிப் போகிறேன். 601 00:44:33,006 --> 00:44:34,466 வேண்டாம் எனத் தோன்றுகிறது. 602 00:44:35,509 --> 00:44:37,261 பேஸ்ஸியில் எதுவும் சம்பவிக்காது. 603 00:44:40,806 --> 00:44:42,850 எனக்கு சிறந்ததையே நீங்கள் விரும்புவீர்கள் என நான் அறிவேன். 604 00:45:11,670 --> 00:45:12,796 லிவர்பூலை கொள்ளயடிக்கப் போகிறோமா? 605 00:45:12,796 --> 00:45:14,047 அவர் தமாஷ் செய்தார். 606 00:45:14,047 --> 00:45:15,382 அது வேடிக்கையாக எனக்குத் தோன்றவில்லை. 607 00:45:15,382 --> 00:45:19,094 வெர்சாய் அதற்கு ஒத்துக்கொள்ளாது. இப்போதே அவர்களுக்கு போர் சலித்துவிட்டது. 608 00:45:19,094 --> 00:45:21,138 நீங்கள் அவருடைய பேச்சுத் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். 609 00:45:21,138 --> 00:45:23,056 தன் பேரனைப் போகத் தடை செய்துள்ளார். 610 00:45:23,056 --> 00:45:26,643 அந்த இடத்தை நிரப்ப இன்னும் 10,000 நபர்கள் உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவருக்கு என்ன? 611 00:45:26,643 --> 00:45:30,355 திரு ஆடம்ஸ் அதை எதிர்ப்பாரே. ஹம்ம்? அவர் இந்த கூட்டணியையே நம்பவில்லை. 612 00:45:31,732 --> 00:45:33,400 இவருக்கு அதில் முழு அதிகாரம் இருந்தால்? 613 00:45:34,735 --> 00:45:37,321 வந்து, டாக்டர் பிராங்கிளினை அவர்கள் மீண்டும் அழைக்க வேண்டும், 614 00:45:37,321 --> 00:45:41,200 ஆகையால் அதற்கு சிறிய வாய்ப்புதான் உள்ளது. பிலடெல்பியாவில் உள்ள பிரிவினைகள் அதிகம். 615 00:45:44,536 --> 00:45:45,662 நாம் வேறு ஒரு உத்தியை முயற்சி செய்வோம். 616 00:46:27,329 --> 00:46:28,997 ஓஹோ, ஓஹோ, ஓஹோ. லா. 617 00:46:32,334 --> 00:46:33,836 காண்பிக்க ஏதாவது உள்ளதா? 618 00:46:34,419 --> 00:46:35,629 நீங்களே பார்க்கலாம். 619 00:46:36,755 --> 00:46:39,424 உங்கள் அனுமதியுடன், சார். 620 00:47:00,946 --> 00:47:03,323 சீமான்களே, சீமாட்டிகளே! இரண்டாம் அழைப்பு! 621 00:47:05,701 --> 00:47:07,578 இறுதி அழைப்பு, சீமான்களே, சீமாட்டிகளே. 622 00:47:14,585 --> 00:47:16,128 இறுதி அழைப்பு! 623 00:47:46,325 --> 00:47:48,285 சூரிய உதயத்திற்கு முன் எழுவது எனக்குப் பிடிக்காது. 624 00:47:48,285 --> 00:47:51,205 - நீங்கள் புகழை விரும்பியதாக நினைத்தேன். - விரும்புகிறேன். நாளின் பிற்பகுதியில். 625 00:47:55,417 --> 00:47:56,502 எப்படி நீங்கள்... 626 00:47:57,544 --> 00:47:59,463 ஒரு ஊரை எப்படி கொள்ளையடிப்பீர்கள்? 627 00:48:01,507 --> 00:48:02,549 அவருக்குத் தெரியும். 628 00:48:06,094 --> 00:48:07,971 நாம் ல ஹாவ்ர் போய் சேர்ந்ததும் என்ன ஆகும்? 629 00:48:08,847 --> 00:48:10,974 நாம் அங்கே சில கப்பல்களை வாங்குவோம், 630 00:48:10,974 --> 00:48:12,809 சில ஆயிரம் ஆட்களை நியமிப்போம், 631 00:48:12,809 --> 00:48:14,228 கொஞ்சம் வெடி பொருளை சேர்த்துக்கொள்வோம்... 632 00:48:16,480 --> 00:48:17,481 யாரோ வருகிறார்கள். 633 00:48:23,820 --> 00:48:26,281 என் தோழா. உன் தாத்தா மனதை மாற்றிக்கொண்டாரா? 634 00:48:29,076 --> 00:48:30,327 நாம் இங்கிலாந்தை எரிப்போம். 635 00:48:31,870 --> 00:48:32,871 இங்கிலாந்தை எரித்து தரை மட்டமாக்குவோம். 636 00:50:25,859 --> 00:50:27,861 தமிழாக்கம் அகிலா குமார்