1 00:00:10,010 --> 00:00:12,137 யுவான் அதை எடுத்தான். 2 00:00:12,221 --> 00:00:13,972 -இங்கே வந்து உன் வேலையைச் செய். -பொய் சொல்லுபவர்கள். 3 00:00:14,056 --> 00:00:16,225 -எங்கே போகிறாய்? -ரோட்ரி, என்ன நடக்கிறது? 4 00:00:16,308 --> 00:00:18,519 -நாம் போகலாம், அப்பா. -அவனை அப்படியே விட்டு போகிறாயா? 5 00:00:19,228 --> 00:00:21,605 அப்படித்தான் “பிரொஃபெஷனல்” மருத்துவ உதவியாளர்கள் இருப்பார்களா? 6 00:00:21,688 --> 00:00:23,065 ஒரு நோயாளிக்கு உதவி செய்ய மறுப்பது. 7 00:00:23,148 --> 00:00:25,275 -அவன் பேக்கிங்சோடா போட்ட வினிகர் குடித்தான். -பதிவு செய்வதை நிறுத்து. 8 00:00:25,359 --> 00:00:27,569 இல்லை. அவன் கண்டிப்பாக இதில் ஒன்றையும் தின்றான். 9 00:00:27,653 --> 00:00:31,323 அவன் வினிகரும் பேக்கிங் சோடாவும் குடித்தான், சோப்பும் சாப்பிட்டான். அவன் வாயில் நுரை வருகிறது. 10 00:00:31,406 --> 00:00:35,244 இந்த பொய் கதைகளை சொல்லுவதை நிறுத்து. வெளியே மக்களுக்கு உண்மையான ஆபத்துகள் இருக்கின்றன. 11 00:00:35,327 --> 00:00:37,120 எனவே யோசித்துப் பேசு, சரியா? 12 00:00:37,204 --> 00:00:39,289 நீ எதை பற்றி பேசுகிறாய்? எது முட்டாள்தனமான கதைகள்? 13 00:00:39,373 --> 00:00:41,124 அவனைப் பார்த்தாய். அவன் இறந்து கொண்டிருக்கிறான். 14 00:00:41,208 --> 00:00:43,585 -நோயாளி வருகிறாரா இல்லையா? -இல்லை. நாம் போகலாம். 15 00:00:43,669 --> 00:00:46,296 -சரி போகலாம். -இல்லை, இல்லை. எங்களுக்கு உதவுங்கள். 16 00:00:46,380 --> 00:00:47,840 ஹுவாஞ்சி ஒரு முட்டாள், எனக்குத் தெரியும். 17 00:00:47,923 --> 00:00:51,009 அவன் முட்டாள் தனம் செய்தான் அவன் வாயில் நுரை தள்ளியது, 18 00:00:51,093 --> 00:00:53,428 ஆனால் அவன் சோப்பு சாப்பிட்டான். சத்தியமாக. 19 00:00:53,512 --> 00:00:56,139 உள்ளே ஏறச் சொல்லு, டாக். பயணத்தில் அவர்களுக்கு சலுகை கொடுக்கலாம். 20 00:00:56,223 --> 00:00:58,267 -உங்கள் பெயர் என்ன? -பௌலினா. 21 00:00:58,350 --> 00:00:59,935 பௌலினா, நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும். 22 00:01:00,018 --> 00:01:03,146 ஏனெனில் எங்கோ யாருக்கு உண்மையான உதவி தேவைப்படலாம், சரியா? 23 00:01:03,230 --> 00:01:05,858 இது எப்படி உண்மையில்லாதது என்கிறீர்கள்? என்ன சொல்கிறீர்கள்? 24 00:01:05,941 --> 00:01:07,734 நீங்கள் வேலை செய்ய போகிறீர்களா? 25 00:01:07,818 --> 00:01:09,611 என் நண்பன் இறக்கப் போகிறான். தயவு செய்து உதவுங்கள். 26 00:01:11,113 --> 00:01:12,364 சீக்கிரம். அவனை ஏற்று. 27 00:01:12,447 --> 00:01:14,199 அவனை மூச்சு முட்டி, சாக விடப் போகிறீர்களா? 28 00:01:14,741 --> 00:01:16,493 பதிவு செய்வதை நிறுத்துகிறாயா? சரியா? 29 00:01:17,870 --> 00:01:19,162 சத்தியமாக அவன் குடித்தான். 30 00:01:19,246 --> 00:01:20,831 எங்களுக்கு உதவுங்கள். என்னை நம்புங்கள். 31 00:01:21,331 --> 00:01:23,458 ஆம்புலன்ஸ் 32 00:01:24,626 --> 00:01:26,920 இந்த “ஹீரோக்களோடு” மருத்துவமனைக்குப் போகிறோம். 33 00:01:27,004 --> 00:01:29,756 நகர்ந்து போ. நீ பதிவு செய்ய வேண்டாம். 34 00:01:30,674 --> 00:01:31,925 ஏன் அப்படி? நான்… 35 00:01:32,009 --> 00:01:33,677 அவசர உதவி செய்வது உங்கள் திறமை என்று நினைத்தேன். 36 00:01:34,469 --> 00:01:36,388 சரி, இதோ இருக்கிறார் தாத்தா. 37 00:01:37,848 --> 00:01:39,391 உங்களுக்கு ஹீரோவாக பிடிக்கும், இல்லையா? 38 00:01:42,060 --> 00:01:44,605 என்ன செய்கிறோம் என்று, இந்த ஆளுக்குத் தெரியுமா? 39 00:01:45,522 --> 00:01:47,774 ஹே, தாத்தா, நீங்கள் எங்கே மருத்துவம் படித்தீர்கள்? 40 00:01:48,442 --> 00:01:50,944 அப்பா. இந்த முட்டாள் இப்போது இருமினான். 41 00:01:51,695 --> 00:01:53,989 அவனுக்கு நிலமை மோசமாகிறதா? 42 00:01:55,157 --> 00:01:58,702 இந்த நிலையில் இருக்கும் நபர் இருமவோ, தும்மவோ மாட்டார்கள். 43 00:02:00,871 --> 00:02:03,248 என்ன இது? என்ன சிரிப்பு சத்தம்? அங்கே என்ன நடக்கிறது? 44 00:02:03,332 --> 00:02:04,917 அந்த முட்டாள் பெண் பொய் சொல்லி இருக்கிறாள், அண்ணா. 45 00:02:05,459 --> 00:02:08,794 அடக் கடவுளே. இது ரோட்ரி நிடியேவா? அந்த யூடியூப் பைத்தியக்காரனா? 46 00:02:08,878 --> 00:02:10,506 அட, நண்பா, நீ ஃபாலோ செய்கிறாயா? 47 00:02:10,589 --> 00:02:12,591 இல்லை, குப்பையை நான் ஃபாலோ செய்ய மாட்டேன். 48 00:02:13,175 --> 00:02:15,469 நீங்கள் உண்மையான மருத்துவ உதவியாளர்கள் என்றால், கவனித்திருப்பீர்கள், 49 00:02:15,552 --> 00:02:17,513 ஆனால் நீங்கள் மோசமானவர்கள். 50 00:02:17,596 --> 00:02:19,848 இப்படி ஆம்புலன்ஸை அழைப்பதற்கு உங்களுக்கு துணிச்சல் வேண்டும், ஹஹ்? 51 00:02:20,849 --> 00:02:23,060 முட்டாள்கள். இதை ஒரு கதையாக்க வேண்டும். 52 00:02:23,143 --> 00:02:25,103 -மார்கஸ், நிறுத்து. -முடியாது, டாக். 53 00:02:25,187 --> 00:02:27,064 ஆனால் இந்த முட்டாள்கள் பணம் கொடுக்காமல் கிளம்ப முடியாது. புரிகிறதா? 54 00:02:28,774 --> 00:02:30,317 பாரு. நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். 55 00:02:30,400 --> 00:02:31,485 ஹுவாஞ்சி, நண்பா. 56 00:02:31,568 --> 00:02:34,112 -விளக்கை பார்த்தாயா, ப்ரோ? மறுபடியும்… -அங்கிருந்து கீழே இறங்கு. 57 00:02:34,196 --> 00:02:36,490 -மார்கஸ், போதும் நிறுத்து! -அங்கிருந்து கீழே இறங்கு! 58 00:02:36,573 --> 00:02:38,784 மார்கஸ், தயவு செய். நிறுத்து என்றேன்! 59 00:02:42,579 --> 00:02:44,414 அடச்சே. முட்டாளே! 60 00:02:45,541 --> 00:02:46,875 ஐயோ! என் தோள்பட்டை. 61 00:02:46,959 --> 00:02:48,335 சரி. ஆடாமல்… இரு. 62 00:02:48,418 --> 00:02:50,921 -ஹே, இவனை திருப்ப உதவி செய். -நான் அவனுக்கு உதவ மாட்டேன். 63 00:02:51,004 --> 00:02:52,214 அவனை திருப்ப உதவி செய் என்றேன்! 64 00:02:52,297 --> 00:02:55,008 அவன் சில சமயங்களில் தோளில் அடிப்பட்டுக் கொள்வான். ஐயோ, அவனுக்கு உதவு. 65 00:02:55,092 --> 00:02:56,635 -வழியை விட்டு விலகு. -வா. எழுந்திரு. 66 00:02:56,718 --> 00:03:00,389 -உன்னால் நடக்க முடியும். கொஞ்சாதே. எழுந்திரு. -ஓ, என் தோள்பட்டை வலிக்கிறது, நண்பா. 67 00:03:01,265 --> 00:03:02,391 அடச்சே, எழுந்திரு! 68 00:03:03,851 --> 00:03:06,645 மோசமான வெள்ளைக்காரன். இப்போது உதவி கேட்கிறாயா, என்ன? 69 00:03:08,397 --> 00:03:11,108 -அடச்சே! -அவனை இங்கேயே விடுங்கள். அப்படியே விடுங்கள். 70 00:03:12,234 --> 00:03:16,071 நண்பா. என், தோள்பட்டை, நண்பா. 71 00:03:16,154 --> 00:03:17,531 எனக்கு உதவு. 72 00:03:20,534 --> 00:03:21,952 எனக்கு உதவு என்று கேட்கிறேன்! 73 00:03:22,661 --> 00:03:25,455 -என்ன இது? அவனுக்கு உதவு. -ஐயோ. என் தோள்பட்டை. 74 00:03:31,211 --> 00:03:33,422 -ஐயோ, என் தோள்பட்டை, ப்ரோ. -உனக்கு உதவி தேவையா? 75 00:03:33,505 --> 00:03:34,506 இந்தா உதவி. 76 00:03:39,595 --> 00:03:40,929 எங்களை மருத்துவமனைக்கு அழைத்து போவீர்களா? 77 00:03:41,013 --> 00:03:42,598 -மார்கஸ், நிறுத்து! -என்ன இது? 78 00:03:42,681 --> 00:03:44,183 -நிஜமாகவா? -என்ன? மருத்துவமனைக்கு போகணும்! 79 00:03:44,266 --> 00:03:46,101 -செல்லம். -உனக்கு என்ன பிரச்சினை, முட்டாளே? 80 00:03:46,185 --> 00:03:49,313 -ஆம்புலன்ஸை நிறுத்து என்றேன்! -சரி, டாக். சரி. 81 00:03:49,396 --> 00:03:51,440 முட்டாள் ஏழைகள். நாங்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாது! 82 00:03:54,193 --> 00:03:57,070 -எழுந்திரு. எழுந்திரு. எழுந்திரு. இப்போதே. -என்ன? 83 00:03:57,154 --> 00:03:58,322 -என்ன இது? -மேரிகபி. 84 00:03:58,405 --> 00:04:01,617 -நகரு. வெளிய போ. போய் விடு. -நீ என்ன செய்கிறாய்? 85 00:04:01,700 --> 00:04:03,702 -இல்லை, இல்லை, இல்லை. -போ, போ. 86 00:04:03,785 --> 00:04:05,412 -வெளியே போ. நகரு. வெளிய போ. -முட்டாள் மக்கள். 87 00:04:05,495 --> 00:04:06,580 அடச்சே போய்த் தொலை, முட்டாளே. 88 00:04:06,663 --> 00:04:08,749 ஹே, இரு! என் ஃபோன், முட்டாள்களே. 89 00:04:09,333 --> 00:04:12,211 -உன் ஃபோன் வேண்டுமா? -அடச்சி, என்னிடம் கொடு. 90 00:04:16,089 --> 00:04:17,716 வேண்டாம். வேண்டாம். 91 00:04:18,800 --> 00:04:20,177 நிறுத்து, செல்லம். நிறுத்து. 92 00:04:22,262 --> 00:04:23,430 இந்தா உன் ஃபோன். 93 00:04:24,640 --> 00:04:26,475 அடியேய், நீ யாரோடு விளையாடுகிறாய் தெரியுமா? 94 00:04:26,558 --> 00:04:30,062 -போய்த் தொலை, முட்டாளே. பைத்தியங்கள். -நீ போடா முட்டாளே. 95 00:05:06,473 --> 00:05:08,475 “மிட்நைட் ஃபேமிலி” என்ற ஆவணப்படத்தைத் தழுவியது 96 00:05:18,402 --> 00:05:21,363 போலிட்ராமா, அறுவை சிகிச்சை, பயங்கர தலைவலி, பெருமூளையில் இரத்தகுழாய் பிரச்சினை, 97 00:05:21,446 --> 00:05:22,906 அதே போன்று இதற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினைகள். 98 00:05:22,990 --> 00:05:24,575 ஃபாட் எம்பாலிசம் சின்ட்ரோம்? ஆஸ்பிரின் 99 00:05:24,658 --> 00:05:27,536 எப்போதும் முந்தைய வரலாறு என்பது இருக்கும். பிறரைப் பற்றி நாம் அறியாத ஏதாவதொரு விஷயம். 100 00:05:28,078 --> 00:05:29,997 அதைப் புரிந்துகொள்வது எனக்கு கடினமாகிக் கொண்டே போகிறது. 101 00:05:30,080 --> 00:05:31,081 நாள் 5 102 00:05:31,164 --> 00:05:35,169 ஃப்ரீஸ்டைல்லின் போது அந்த இடத்திலேயே உருவாக்கியதாக சொன்னாள், குட்டி. 103 00:05:35,252 --> 00:05:38,297 ஆனால் அது உண்மையில்லை. அவள் ஏற்கனவே எல்லாவற்றையும் திட்டமிட்டுவிட்டாள். 104 00:05:38,380 --> 00:05:40,090 இது எரிச்சல் தருகிறது, செல்லம். 105 00:05:40,632 --> 00:05:41,633 மேரிகபி? 106 00:05:42,843 --> 00:05:43,927 இதை கேட்கிறாயா, டாக்? 107 00:05:46,096 --> 00:05:49,850 அடச்சே. நான் உன்னிடம் மனம் திறந்து பேசுகிறேன், ஆனால், நீ கவனிக்கக்கூட இல்லை. 108 00:05:49,933 --> 00:05:51,810 ஹே, இல்லை. நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 109 00:05:52,311 --> 00:05:53,770 நீ தவறு செய்தாய் என்று புரிந்துகொள். 110 00:05:53,854 --> 00:05:56,356 -என்ன தவறு? நான் எதுவும் செய்யவில்லை. -“என்ன” என்றால் என்ன அர்த்தம்? 111 00:05:56,440 --> 00:05:58,192 நீ வெற்றி பெற்றால் என்ன ஆகியிருக்கும்? ஹஹ்? 112 00:05:58,692 --> 00:06:00,903 -அவள் எப்படி உணர்வாள் தெரியுமா? -இங்கேப் பாரு, டாக். 113 00:06:00,986 --> 00:06:03,238 இப்படி தொண தொணக்காதே. நான் நடந்ததைச் சொல்கிறேன். 114 00:06:03,739 --> 00:06:04,948 ஒரு அறிவுரை சொல்கிறேன், அண்ணா. 115 00:06:05,699 --> 00:06:06,992 கிரிஸிஸிடம் பேசு. 116 00:06:07,618 --> 00:06:10,829 விஷயங்களை பேசாமல் இருப்பதால், அவை அதிகமாகி, பிரச்சினை கொடுக்கும், 117 00:06:10,913 --> 00:06:13,165 பிறகு அது மோசமாகி, எங்கிருக்கிறாய், எங்கே போகிறாய் என்று கூட 118 00:06:13,248 --> 00:06:14,708 தெரியாமல் போய்விடும். அந்த மாதிரி நடக்கும். 119 00:06:15,417 --> 00:06:18,504 -நீ நலமா, செல்லம்? -ஆம். எதற்காகக் கேட்கிறாய்? 120 00:06:19,129 --> 00:06:21,048 ஏனென்றால் நீ சொன்னது எதுவும் எனக்குப் புரியவில்லை. 121 00:06:21,131 --> 00:06:24,593 நீ நாள் முழுவதும் உட்கார்ந்து பைபிளை எழுதிக் கொண்டிருக்கிறாய். 122 00:06:24,676 --> 00:06:27,304 பார்க்க கேவலமான காட்சி. நீ எங்களை கைவிட்டுவிட்டாய். 123 00:06:28,055 --> 00:06:30,390 சரி, அவன் இப்போது “ஜஸ்டிஸ் பீபர்” ஆயிற்றே. 124 00:06:31,558 --> 00:06:34,394 -உன்னை டிவியில் பார்த்தோம். அழகாக இருந்தாய். -அதைக் கேட்டாயா? 125 00:06:34,895 --> 00:06:37,272 எனக்கு புகழ் மற்றும் பணம் பற்றி அக்கறை இல்லை, தெரியுமா? 126 00:06:37,356 --> 00:06:39,066 மக்கள் பத்திரமாக இருப்பது பற்றி தான் அக்கறை. 127 00:06:39,149 --> 00:06:40,734 ஆம், என் சகோதரன் ஒரு ஹீரோ. 128 00:06:40,817 --> 00:06:43,278 அதாவது, அவன் ஒரு நல்ல அப்பாவாகவும் இருப்பான். 129 00:06:46,114 --> 00:06:47,115 என்ன? 130 00:06:47,199 --> 00:06:50,327 ஆம், யாருக்காவது விருப்பமிருந்தால், அவன் ஒரு முழுமையான மனிதன். 131 00:06:51,662 --> 00:06:53,372 -பிறகு சந்திக்கலாம். -குட் நைட். 132 00:06:53,455 --> 00:06:55,082 -பை. -அது வந்து… 133 00:06:57,459 --> 00:06:59,795 -ஹே, உனக்கு என்ன தான் பிரச்சினை? -ஏன் கேட்கிறாய்? 134 00:06:59,878 --> 00:07:02,089 ஒரு ப்ரோ கோட் உண்டு, மரியா கேபிரியலா. 135 00:07:02,172 --> 00:07:03,715 -ப்ரோ கோட் என்றால் என்ன? வாயை மூடு! -நாம் ப்ரோக்கள், நண்பா. 136 00:07:06,134 --> 00:07:07,135 உள்ளே வா. 137 00:07:13,475 --> 00:07:15,352 என்னால் இதை நம்ப முடியவில்லை. 138 00:07:15,435 --> 00:07:18,063 உனக்கு கோபம் என தெரியும். அதனால் தான் வந்தேன், மரியோ. 139 00:07:18,564 --> 00:07:20,023 விஷயங்களை உன்னிடம் விளக்க. 140 00:07:20,107 --> 00:07:21,275 என்ன விஷயங்கள்? 141 00:07:23,068 --> 00:07:24,611 நாம் நண்பர்கள் என்று நினைத்தேன். 142 00:07:25,153 --> 00:07:26,488 எனக்கு வேறு வழி இல்லை. 143 00:07:27,364 --> 00:07:31,618 நான் நிறைய கட்டுரைகளைப் படித்தேன், விரிவுரைகளுக்குப் போனேன்… 144 00:07:32,703 --> 00:07:34,371 நீ அறுவை சிகிச்சை செய்து கொண்டாய். 145 00:07:34,454 --> 00:07:35,706 ஆம், ஆனால்… 146 00:07:35,789 --> 00:07:38,876 உனக்காக காத்திருந்தால், நீ தயாராவதற்கு முன் நான் இறந்திருப்பேன். 147 00:07:39,835 --> 00:07:41,253 நான் காயப்பட்டுள்ளேன். 148 00:07:41,336 --> 00:07:45,382 ரொம்பவும் காயப்பட்டுள்ளதால், இனி நான் உன் நோயாளிகளுக்கு சிகிச்சை தர மாட்டேன். 149 00:07:45,883 --> 00:07:50,053 சரி, உன்னை சம்மதிக்க வைக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல். 150 00:07:50,137 --> 00:07:51,138 அந்த வார்த்தையை சொல்லு. 151 00:07:53,140 --> 00:07:54,141 எனக்காக வந்து வேலை செய். 152 00:07:57,394 --> 00:07:59,271 “எனக்காக வந்து வேலை செய்”, என்றால் என்ன அர்த்தம்? 153 00:07:59,813 --> 00:08:02,441 ஆம்புலன்ஸ்களை ஒருங்கிணைக்க எனக்கு ஒருவர் வேண்டும். 154 00:08:02,524 --> 00:08:04,735 உள்ளே வரும் நோயாளிகளை பிரிக்க வேண்டும். 155 00:08:05,402 --> 00:08:08,697 ஏதோ காபி குடிக்கப் போக வேண்டும் என்று சொல்வாய் என்று நினைத்தேன். 156 00:08:09,239 --> 00:08:10,240 எனக்கு உதவி செய், ரமோன். 157 00:08:10,949 --> 00:08:13,493 என் ஆள் ராஜினாமா செய்துவிட்டான் என் பாஸ் எனக்கு அழுத்தம் கொடுக்கிறார். 158 00:08:14,077 --> 00:08:16,288 அது உனக்கு நல்லது. அவசரங்களில் இருந்து விலகலாம். உடல் நலம் தேறலாம். 159 00:08:16,371 --> 00:08:17,289 எனக்குத் தெரியவில்லை. 160 00:08:17,789 --> 00:08:19,333 நல்ல சம்பளம் கிடைக்கும். 161 00:08:20,626 --> 00:08:24,505 மருத்துவ காப்பீடு கிடைக்கும். உனக்கு சில கூப்பன்கள் கூட கொடுக்கிறேன். 162 00:08:26,590 --> 00:08:28,258 ரொம்ப சந்தோஷம், மரியோ. 163 00:08:29,885 --> 00:08:34,597 ஆனால் எனக்கு அலுவலக வாழ்க்கை பிடிக்காது. 164 00:08:34,681 --> 00:08:35,682 நான் சொல்வதைக் கேள், ரமோன். 165 00:08:37,267 --> 00:08:40,187 உன் வாழ்க்கை முறை, உன் இதயத்திற்கு நல்லதல்ல. 166 00:08:41,772 --> 00:08:43,607 உன் அறுவை சிகிச்சையை சரியாக செய்திருக்க மாட்டார்கள். 167 00:08:43,690 --> 00:08:44,983 எனக்கு பிறகு காண்பிப்பாய். 168 00:08:47,069 --> 00:08:49,738 உன் குடும்பத்திற்காக செய். அதை பற்றி யோசி. 169 00:09:04,795 --> 00:09:05,796 நான் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினேன். 170 00:09:08,215 --> 00:09:10,676 -இனி நாம் ஹலோ சொல்ல மாட்டோமா? -ஹலோ. 171 00:09:12,886 --> 00:09:13,887 உன் மெசேஜுக்கு பதில் அனுப்பினேனே. 172 00:09:15,389 --> 00:09:18,267 அதை… நான் பார்க்கவில்லை போலும். வேலை செய்து கொண்டிருந்தேன். 173 00:09:18,350 --> 00:09:20,519 ஆனால், நலேலிக்கு நடந்தது பற்றி எனக்கு சில கேள்விகள் உண்டு. 174 00:09:22,271 --> 00:09:24,690 மேரிகபி, நீ அதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. 175 00:09:24,773 --> 00:09:25,774 நான் அப்படி செய்யவில்லை. 176 00:09:27,109 --> 00:09:29,194 மக்கள் இறப்பார்கள், சரியா? எனக்கு அது தெளிவாகப் புரிகிறது. 177 00:09:30,028 --> 00:09:31,029 அப்படியென்றால், 178 00:09:31,613 --> 00:09:34,658 உன் நோயாளிகளோடு ரொம்பவும் நெருங்கிப் பழகக்கூடாது என்றும் உனக்குத் தெரிந்திருக்கும். 179 00:09:35,242 --> 00:09:36,243 சரியா? 180 00:09:36,326 --> 00:09:40,497 சொல்லவே தேவையில்லை. என் வேலையை எப்படிச் செய்வது என்று சொல்லுங்களேன். 181 00:09:42,499 --> 00:09:44,084 நீ நிறைய விஷயங்களை யோசிக்கிறாய். 182 00:09:44,585 --> 00:09:45,919 சரியா? பள்ளி இருக்கிறது. 183 00:09:46,795 --> 00:09:48,172 ஆம்புலன்ஸ், உன் குடும்பம். 184 00:09:49,590 --> 00:09:51,175 உன் பள்ளி நண்பன். 185 00:09:54,636 --> 00:09:56,180 அதைப் பற்றி இப்போது பேசப் போகிறீர்களா? 186 00:09:56,263 --> 00:09:58,182 நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்று அறிய வேண்டும். அவ்வளவு தான். 187 00:09:58,265 --> 00:09:59,766 நாம் எந்த நிலையிலும் இல்லை. 188 00:10:00,851 --> 00:10:02,102 நாம் விரும்பும் நபரோடு நாம் பழகலாம். 189 00:10:02,186 --> 00:10:04,229 -நாம் பெரியவர்கள். -எனில், அந்தப் பெண்ணை நினைத்து புலம்பாதே! 190 00:10:04,313 --> 00:10:05,355 அவள் இறந்துவிட்டாள். 191 00:10:05,439 --> 00:10:07,733 சரியா? அவ்வளவு தான். உன்னால் எல்லோரையும் காப்பாற்ற முடியாது. 192 00:10:12,446 --> 00:10:13,447 நீங்கள் மோசமானவர். 193 00:10:16,742 --> 00:10:19,203 நம் குணம் ஒத்துப் போய்யிருந்தது என்று நான் நினைத்தது என் முட்டாள்தனம். 194 00:10:20,204 --> 00:10:21,455 மேரிகபி, கொஞ்சம் இரு. 195 00:10:26,668 --> 00:10:28,462 சரி. என்னை இங்கே அழைத்து வந்துவிட்டீர்களே. 196 00:10:28,545 --> 00:10:30,589 இப்போது கிளம்புகிறீர்களா? 197 00:10:30,672 --> 00:10:32,007 இன்னும் கொஞ்சம் நேரம் இருப்போம். 198 00:10:33,592 --> 00:10:35,594 என்னை ரொம்ப கஷ்டப்படுத்துவது எது தெரியுமா? 199 00:10:37,012 --> 00:10:38,430 நீங்கள் நம்பிக்கை இல்லாது இருப்பது. 200 00:10:41,808 --> 00:10:44,520 சரி. உள்ளே போ. நாங்கள் இங்கிருந்தே உன்னைப் பார்க்கிறோம். 201 00:10:48,065 --> 00:10:49,066 ஹே. 202 00:10:49,691 --> 00:10:50,901 சமத்தாக இரு. 203 00:11:10,420 --> 00:11:11,839 -நீ என்ன செய்கிறாய்? -உள்ளே போ! 204 00:11:14,925 --> 00:11:17,177 -இது நன்றாக இருக்கிறது, இல்லையா? -எது? 205 00:11:17,928 --> 00:11:18,929 இது தான். 206 00:11:20,806 --> 00:11:22,641 குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவது. 207 00:11:23,809 --> 00:11:25,561 ஒன்றாகச் சேர்ந்து இதைச் செய்வது. 208 00:11:26,103 --> 00:11:27,312 பழைய நினைவுகள் வருகிறது. 209 00:11:28,188 --> 00:11:30,399 நீங்கள் எப்போதுமே குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றதில்லையே. 210 00:11:31,275 --> 00:11:34,862 வேலை செய்து விட்டு சோர்வாக வந்து ஒரு கரடி போல தூங்குவீர்கள், நினைவிருக்கா? 211 00:11:34,945 --> 00:11:38,824 அட, ஆமாம். இதை முதல்முறை செய்வது நன்றாக இருக்கிறது. 212 00:11:38,907 --> 00:11:41,285 என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. 213 00:11:41,910 --> 00:11:42,911 இதைப் பற்றி நாம் பேசிவிட்டோம். 214 00:11:43,412 --> 00:11:45,581 இல்லை, நான் சும்மா பேசுகிறேன். 215 00:11:46,582 --> 00:11:50,669 அன்றைக்கு நாம் முத்தமிட்டது, சற்று குழப்பத்தைக் கொடுத்திருக்கும். 216 00:11:51,170 --> 00:11:52,171 ஆனால்… 217 00:11:53,088 --> 00:11:54,089 சிறந்த முத்தம்! 218 00:11:55,465 --> 00:11:57,092 எப்போதும் நாம் மீண்டும் ஒன்று சேரப் போவதில்லை. 219 00:11:58,051 --> 00:11:59,344 எப்போதும் முடியாது என்று எப்போதும் சொல்லாதே, லெட்டி! 220 00:12:01,555 --> 00:12:02,639 அது குழப்பத்தை ஏற்படுத்தும். 221 00:12:03,307 --> 00:12:05,309 இல்லை. நாம் பழையபடி ஆகி விடுவோம். 222 00:12:06,101 --> 00:12:08,979 அப்படி இல்லை. நான் இப்போது மாறிவிட்டேன். 223 00:12:12,316 --> 00:12:14,276 நான் எதிர்காலத்தின் ரமோன். 224 00:12:14,359 --> 00:12:17,988 எதிர்கால ரமோனுக்கு கடந்த கால ரமோனிடம் எந்த சம்பந்தமும் இல்லை. 225 00:12:18,739 --> 00:12:20,741 -எனக்கு அதே போல தான் தெரிகிறீர்கள். -இல்லை, இல்லை, இல்லை. 226 00:12:20,824 --> 00:12:23,285 நான் ஒரு அலுவலக வேலையைத் தேடுகிறேன். 227 00:12:24,036 --> 00:12:25,537 -சில வேலைகள் வந்திருக்கின்றன. -அப்படியா? 228 00:12:25,621 --> 00:12:27,080 ஆம். நான் ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன். 229 00:12:27,164 --> 00:12:29,499 உங்களுக்காக மகிழ்கிறேன். 230 00:12:30,459 --> 00:12:34,087 ஆனால், நாம் நண்பர்களாக மட்டும் தான் இருக்க முடியும். 231 00:12:34,171 --> 00:12:36,340 அது தான் குழந்தைகளுக்கு நல்லது. 232 00:12:36,423 --> 00:12:38,008 சரி. பரவாயில்லை. 233 00:12:39,218 --> 00:12:40,802 -நண்பர்கள். -நண்பர்கள். 234 00:12:41,470 --> 00:12:42,679 ஆனால் சில நன்மைகளோடு. 235 00:12:42,763 --> 00:12:44,890 தயவுசெய்து, இப்படி பேசாதீர்கள், ரமோன். 236 00:12:44,973 --> 00:12:46,850 ஒழுங்காக நடந்துகொள்ளுங்கள்! 237 00:12:46,934 --> 00:12:48,435 நீ ஏன் அப்படி நடந்துக்கொண்டாய்? 238 00:12:48,519 --> 00:12:50,646 யார் தனியாகப் போகலாம் என சொன்னது? 239 00:12:50,729 --> 00:12:53,190 கிரிஸ்டினா, அது நம்மில் ஒருவர் வெற்றி பெறுவதற்காக. 240 00:12:53,273 --> 00:12:56,026 -நீ இறுதிப் போட்டிக்கு போய் வென்றாய். -அப்புறம் என்ன? 241 00:12:56,109 --> 00:12:59,321 என் குடும்பத்திற்கு எதிரில், என்னை அவமானப்படுத்தியிருக்க 242 00:12:59,404 --> 00:13:01,114 தேவையில்லை, செல்லம். 243 00:13:01,657 --> 00:13:05,077 என் அம்மா, என் அப்பா என் சகோதரன் இருந்தார்கள், ஆனால் நீ கண்டுகொள்ளவில்லை. 244 00:13:05,619 --> 00:13:06,620 ஏன்? 245 00:13:09,122 --> 00:13:10,123 நான் வருத்தமாக இருந்தேன். 246 00:13:12,459 --> 00:13:14,002 நீ என்னோடு பாடவில்லை என வருத்தமாக இருந்தேன். 247 00:13:14,086 --> 00:13:17,047 வெற்றி பெற நினைத்தேனேத் தவிர, உன்னை விட்டுப் போக அல்ல. 248 00:13:17,756 --> 00:13:20,050 நான் கடந்த காலத்திற்குச் சென்று என் தவறுகளை சரிசெய்ய முடியாது, ஆனா… 249 00:13:21,301 --> 00:13:24,096 ஆனால் நம்மிடையே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் பேச முயற்சிக்கலாம். 250 00:13:25,722 --> 00:13:27,933 நான் கர்ப்பம் என்பது உனக்கு நினைவிருக்கா? 251 00:13:30,394 --> 00:13:33,063 என்ன இது, கிரிஸ்டினா. நான் மறக்கவில்லை. 252 00:13:33,146 --> 00:13:34,565 எனில், நாம் என்ன செய்வது? 253 00:13:35,691 --> 00:13:37,192 உனக்கு வேண்டியதைச் செய்வோம். 254 00:13:37,276 --> 00:13:39,736 தெரியும். என் விருப்பம் என்று தெரியும், மார்கஸ். 255 00:13:39,820 --> 00:13:42,698 ஆனால் தயவுசெய்து, என்னிடம் ஏதாவது சொல்லு. நான் முடிவு செய்ய எனக்கு உதவு. 256 00:13:42,781 --> 00:13:45,492 ஆனால் நான் சொல்லிவிட்டேன். உன் விருப்பம் போல செய்கிறேன். 257 00:13:48,579 --> 00:13:50,122 உனக்கு எது வேண்டுமோ அதைச் செய்கிறேன், கிரிஸிஸ். 258 00:13:50,205 --> 00:13:52,291 பொறுப்போடு பேசு. நாம் என்ன செய்யப் போகிறோம்? 259 00:13:52,875 --> 00:13:54,793 பாரு, கிரிஸிஸ். 260 00:13:55,919 --> 00:13:57,045 நான் யாரு, செல்லம்? 261 00:13:59,590 --> 00:14:00,591 மார்கஸ். 262 00:14:03,260 --> 00:14:05,095 மார்கஸ் மற்றும் கிரிஸிஸின் கூட்டணி இது. 263 00:14:06,346 --> 00:14:07,347 நான் சொல்வது சரியா? 264 00:14:13,604 --> 00:14:14,605 நம் உறவு சிறப்பாக இருக்கிறது. 265 00:14:20,569 --> 00:14:21,987 நாம் இப்படித்தான் செய்யப் போகிறோம். 266 00:14:24,031 --> 00:14:25,240 இந்த குழந்தையை பெற்றுக் கொள்வோம். 267 00:14:26,533 --> 00:14:28,744 நாம் கிளம்பப் போவதாக, நீ உன் குடும்பத்திடம் சொல்லு. 268 00:14:45,594 --> 00:14:46,887 டமாயோ, எங்கே இருக்கிறாய்? 269 00:14:54,645 --> 00:14:55,646 பரீட்சை ஆரம்பிக்கிறது! 270 00:14:57,189 --> 00:14:58,190 அடச்சே. 271 00:15:14,331 --> 00:15:15,958 ஹே, பார்த்துப் போ. 272 00:15:22,422 --> 00:15:24,174 அடச்சே. என்னை உள்ளே அணுமதியுங்கள். 273 00:15:36,728 --> 00:15:39,439 ஆம்புலன்ஸ் பெண்ணே, உனக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்? 274 00:15:41,316 --> 00:15:42,734 நான் ஆம்புலன்ஸில் வேலை செய்வதில்லை. 275 00:15:43,443 --> 00:15:45,112 டிவியில் வருவது உனக்கு போர் அடித்துவிட்டதா? 276 00:15:47,030 --> 00:15:48,448 பரீட்சை பற்றி இங்கே பேச வந்தேன். 277 00:15:49,783 --> 00:15:50,784 என்ன பரீட்சை? 278 00:15:52,244 --> 00:15:53,579 நீ எழுத போகாத பரீட்சையா? 279 00:15:54,913 --> 00:15:55,914 அது தவறு தான். 280 00:15:56,957 --> 00:15:59,376 அதனால் தான் என்னை அனுமதிக்குமாறு இப்போது உங்களிடம் அனுமதி கேட்கிறேன். 281 00:16:00,544 --> 00:16:02,629 அது உன் சக மாணவர்களுக்கு நியாயமாகாது. 282 00:16:03,422 --> 00:16:06,800 தெரியும். நான் சாதாரணமாகக் கேட்க மாட்டேன், 283 00:16:06,884 --> 00:16:08,802 ஆனால் எல்லாவற்றையும் சரியாக செய்ய முயற்சிக்கிறேன். 284 00:16:09,303 --> 00:16:10,470 உண்மையிலேயே முயற்சிக்கிறேன். 285 00:16:17,936 --> 00:16:18,937 சரி. 286 00:16:21,190 --> 00:16:24,276 இந்த முறை மட்டும், நீ நேரம் கழித்து பரீட்சை எழுதலாம். 287 00:16:25,194 --> 00:16:26,195 உண்மையாகவா? 288 00:16:27,112 --> 00:16:28,113 நான் தான் சொல்லிவிட்டேனே. 289 00:16:30,991 --> 00:16:31,992 நன்றி. 290 00:16:32,492 --> 00:16:35,454 அது வந்து… எனக்கு ஏற்றார் போல் எதுவும் நடக்கவில்லை. 291 00:16:35,537 --> 00:16:39,708 உன் அதிகபட்ச மதிப்பெண் 80% தான் என்பதால் மற்றவர்களுக்கும் அது நியாயமான விஷயமாகிவிடும். 292 00:16:39,791 --> 00:16:41,335 நன்றி. சரி. 293 00:16:41,418 --> 00:16:44,588 உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக நான் நம்புவதால் இதைச் செய்கிறேன். 294 00:16:44,671 --> 00:16:46,423 எல்லோரும் சொல்வது போல நீங்கள் மோசமானவர் அல்ல. 295 00:16:48,926 --> 00:16:50,385 இது தான் உனக்கான கடைசி வாய்ப்பு. 296 00:16:52,137 --> 00:16:53,138 இதை வீணாக்காதே. 297 00:16:55,766 --> 00:16:57,059 நன்றி. 298 00:17:01,563 --> 00:17:02,564 மேரிகபி. 299 00:17:06,484 --> 00:17:07,486 உங்களுக்கு என்ன வேண்டும்? 300 00:17:08,612 --> 00:17:10,071 நான் இங்கே கற்றுக் கொடுக்க வந்திருக்கிறேன். 301 00:17:11,490 --> 00:17:13,157 நீங்கள் எனக்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை. 302 00:17:14,535 --> 00:17:15,536 சரி. 303 00:17:17,621 --> 00:17:18,622 பை. 304 00:17:18,704 --> 00:17:19,705 பிறகு பார்க்கலாம். 305 00:17:27,839 --> 00:17:29,383 உன் வேலை நினைவிருக்கிறதா? 306 00:17:30,050 --> 00:17:31,468 ஆம், அது அவ்வளவு கடினமில்லை. 307 00:17:32,719 --> 00:17:34,763 சில சமயம் நீ கவனிக்காமல் இருக்கலாம். 308 00:17:34,847 --> 00:17:36,014 தலை நகரங்கள் போல. 309 00:17:36,098 --> 00:17:38,308 நிறைய மாநிலங்கள் இருக்கின்றன. அது என் தவறில்லையே. 310 00:17:39,268 --> 00:17:42,479 சரி. சீக்கிரம். நான் இங்கு வந்தது என் பெற்றோருக்குத் தெரியாது. 311 00:17:43,230 --> 00:17:44,231 அவர்களிடம் என்ன சொன்னாய்? 312 00:17:45,315 --> 00:17:47,234 கணக்கு போட்டிக்கான பயிற்சி இருக்கிறது என்றேன். 313 00:17:48,151 --> 00:17:51,238 கணக்கு வகுப்பில், பாலே பாடங்கள் இருக்கிறது என்றேன். 314 00:17:51,864 --> 00:17:53,949 பாலே வகுப்பில், நான் படிக்க வேண்டும் என்றேன். 315 00:17:54,825 --> 00:17:56,243 நீ எப்படி தப்பிக்கிறாய்? 316 00:17:59,162 --> 00:18:00,998 எப்போதும் ஒரு படி முன்னே இருக்க வேண்டும், சரியா? 317 00:18:01,081 --> 00:18:02,082 எனக்குத் தெரியாது. 318 00:18:02,708 --> 00:18:03,709 எனக்கு பயமாக இருக்கிறது. 319 00:18:04,585 --> 00:18:06,211 எனக்கு பிரச்சினை வேண்டாம். 320 00:18:09,006 --> 00:18:11,466 நம் வியாபாரத்திற்காக இதைச் செய்கிறோம் என்று ஞாபகம் வைத்துக்கொள். 321 00:18:11,967 --> 00:18:13,510 சொந்தமாக பணம் சம்பாதிக்க உனக்கு ஆசை இல்லையா? 322 00:18:13,594 --> 00:18:14,845 சுதந்திரமாக இருக்க? 323 00:18:16,013 --> 00:18:17,014 ஆம், இருக்கிறது. 324 00:18:18,891 --> 00:18:19,892 என்ன முடிவு எடுக்கப் போகிறாய்? 325 00:18:21,268 --> 00:18:22,519 நான் உனக்கு உதவ, நீ எனக்கு உதவு. 326 00:18:28,400 --> 00:18:31,236 அப்பா, பீக்காவின் அம்மா அவளை அழைத்துப் போக வருகிறார். 327 00:18:31,904 --> 00:18:33,906 தன் அம்மாவின் வீட்டிற்கு என்னை அழைத்துப் போவதாகச் சொல்கிறாள். 328 00:18:34,531 --> 00:18:36,158 ஆமாம், அது நாங்கள் போகும் வழியில் இருக்கிறது. 329 00:18:36,950 --> 00:18:38,785 சரி, சரி. மிக்க நன்றி. 330 00:18:39,411 --> 00:18:42,206 உன் அம்மா உன்னை மீண்டும் வெளியே அனுப்பியது எனக்கு மகிழ்ச்சி. 331 00:18:43,749 --> 00:18:48,295 ஆமாம், அவங்களுக்கு விளக்கிச் சொன்னேன், அவங்க புரிந்து கொண்டாங்க. 332 00:18:48,378 --> 00:18:49,379 நல்லது. 333 00:18:49,880 --> 00:18:51,840 நீ இங்கே எப்போதும் வரலாம். 334 00:18:53,050 --> 00:18:55,928 இந்த முட்டாளுக்கு நீ ஒரு நல்ல வழிகாட்டி. 335 00:18:57,346 --> 00:19:00,807 உன் தோழி சொல்லும் எல்லாவற்றையும் நீ கேளு. 336 00:19:01,683 --> 00:19:03,310 அதைத்தான் அவனிடம் எப்போதும் சொல்கிறேன். 337 00:19:04,311 --> 00:19:06,563 சரி, அம்மா வெளியே காத்திருப்பாங்க. 338 00:19:06,647 --> 00:19:08,690 -பிறகு சந்திக்கலாம், திரு. ரமோன். -பத்திரமாக போ. 339 00:19:08,774 --> 00:19:09,775 பிறகு சந்திக்கலாம், அப்பா. 340 00:19:20,410 --> 00:19:21,411 சரி… 341 00:19:22,996 --> 00:19:23,997 இது உன் முறை. 342 00:19:25,123 --> 00:19:28,627 நமக்கு எலும்புகளின் புகைப்படம் வேண்டும். 343 00:19:28,710 --> 00:19:32,756 உடைந்த எலும்புகள், வெளியே தெரியும் எலும்புகள், ரத்தம், குடல், எல்லாம். 344 00:19:32,840 --> 00:19:34,091 அதிக ரத்தம் என்றால் நல்லது, புரிகிறதா? 345 00:19:34,174 --> 00:19:35,259 -அவற்றை எனக்கு அனுப்பு. -சரி. 346 00:19:36,969 --> 00:19:39,263 அது சிறந்த யோசனையாக இல்லாமல் இருக்கலாம். 347 00:19:40,430 --> 00:19:41,849 நீ தைரியசாலி என்று சொன்னாயே? 348 00:19:41,932 --> 00:19:43,183 அதை நிரூபி. 349 00:19:45,811 --> 00:19:46,979 போ! 350 00:19:48,564 --> 00:19:49,940 போ. போ. 351 00:20:00,242 --> 00:20:01,243 அந்தப் பக்கம். 352 00:20:24,558 --> 00:20:26,226 உன் அம்மா வீட்டிற்குப் போய்விட்டு போகலாம். 353 00:20:26,310 --> 00:20:28,020 அட, எதற்காக, அப்பா? 354 00:20:28,854 --> 00:20:29,855 நீயே தெரிந்துகொள்வாய். 355 00:20:42,284 --> 00:20:43,285 என் ஃபோன். 356 00:20:44,453 --> 00:20:46,830 நான் சில புகைப்படங்கள் எடுக்க விரும்பினேன். 357 00:20:46,914 --> 00:20:48,498 “நான் சில புகைப்படங்கள் எடுக்க விரும்பினேன்.” 358 00:20:49,041 --> 00:20:50,125 போய் பின்னால் உட்காரு. 359 00:20:50,626 --> 00:20:51,627 சீக்கிரம் போ. 360 00:20:51,710 --> 00:20:54,296 -இங்கிருந்து போ. -நீ பிடிபட்டாய். 361 00:21:10,771 --> 00:21:12,272 ஹே, குட்டி. 362 00:21:13,315 --> 00:21:14,775 உன்னைத் தேடிப் போகலாம் என்றிருந்தோம். 363 00:21:15,275 --> 00:21:16,527 நாளை என்னை அழைத்துக் போவீர்களா? 364 00:21:17,027 --> 00:21:20,364 எனக்குத் தெரியவில்லை. பார்க்கலாம். 365 00:21:21,240 --> 00:21:23,450 சரி. பை, அப்பா. 366 00:21:24,952 --> 00:21:27,329 மறுபடி இப்படி என்னை ஏமாற்றாதே. இருவரும் தான். 367 00:21:27,412 --> 00:21:28,413 வா. 368 00:21:28,497 --> 00:21:31,083 -அந்தக் கண்ணாடி உனக்கு அழகாக இருக்கு. -ஆம், நன்றாக இருக்கு. 369 00:21:31,166 --> 00:21:32,793 -குட் நைட். -ஹே, லூக், கொஞ்சம் பொறு. 370 00:21:34,211 --> 00:21:36,088 என் குடும்பத்திடம் அன்பாக நடந்துக் கொண்டதற்கு நன்றி. 371 00:21:37,214 --> 00:21:39,299 அந்தக் கண்ணாடிக்கும் நன்றி. 372 00:21:40,676 --> 00:21:42,469 இல்லை, அதெல்லாம் ஒன்றுமில்லை. 373 00:21:43,804 --> 00:21:45,389 நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்லவா? 374 00:21:46,598 --> 00:21:48,725 உன் குழந்தைகளிடம் முதலாளி மாதிரி நடந்துகொள்ளாதே. 375 00:21:48,809 --> 00:21:50,727 அப்பாவாகவும் நடந்துகொள். 376 00:21:51,353 --> 00:21:53,397 அப்போதுதான் உன் நல்ல மனது அவர்களுக்குப் புரியும். 377 00:21:55,440 --> 00:21:56,525 எனக்கு எப்படி அது புரிந்தது தெரியுமா? 378 00:21:59,570 --> 00:22:02,281 ஏனென்றால், நீ இந்த சூழ்நிலையைச் சமாளித்த மாதிரி, 379 00:22:02,364 --> 00:22:03,991 என்னால் சமாளித்திருக்க முடியாது. 380 00:22:04,074 --> 00:22:07,035 நீ அவளின் இறந்தகாலம், நான் அவளின் எதிர்காலம். 381 00:22:07,119 --> 00:22:09,371 உண்மை என்னவென்றால்… நான் உன் குழந்தைகளின் அம்மாவுடன் இருக்கிறேன். 382 00:22:12,040 --> 00:22:14,209 ரமோன், கடவுளை நம்பு. 383 00:22:14,293 --> 00:22:16,962 அவர் கஷ்டமான சூழ்நிலையிலும் உன்னைக் கைவிடமாட்டார். 384 00:22:22,092 --> 00:22:23,969 -நன்றி. -கடவுள் ஆசீர்வதிக்கட்டும். 385 00:22:30,017 --> 00:22:33,645 அந்த பாதிரியார் அறிவுரை சொல்ல விரும்புகிறான். அவன் தன்னை யாரென்று நினைக்கிறான்? 386 00:22:36,690 --> 00:22:38,567 ஆம்புலன்ஸ் 387 00:22:38,650 --> 00:22:44,031 ஆனால் என் முன்னுரிமைகள் மாறிவிட்டன, நான் கட்டணம் கட்டுகிறேன், இல்லையா? 388 00:22:44,114 --> 00:22:46,950 நான் இனி குடிக்க மாட்டேன் நான் பரதேசி இல்லை 389 00:22:47,534 --> 00:22:50,662 என்னுள்ளே உள்ள நல்லதை தேடுவதற்கு என்னிடம் பணமில்லை… 390 00:22:51,371 --> 00:22:52,956 -உங்களுக்கு என்ன ஆச்சு? -பசங்களே. 391 00:22:54,541 --> 00:22:56,502 நான் உங்களுக்கு முதலாளி மட்டுமல்ல, அப்பாவும் கூட. 392 00:23:01,924 --> 00:23:03,509 எப்படியிருக்கிறாய், மார்கஸ்? 393 00:23:05,511 --> 00:23:06,512 நானா? 394 00:23:08,180 --> 00:23:10,140 நன்றாக இருக்கிறேன், அப்பா. ஒன்றும் பிரச்சினையில்லை, ரமோன். 395 00:23:11,016 --> 00:23:13,685 -உங்களிடம் யாராவது ஏதாவது சொன்னார்களா அல்லது… -என்ன சொல்லப் போகிறார்கள்? 396 00:23:13,769 --> 00:23:16,188 ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன், அப்பா. 397 00:23:17,898 --> 00:23:19,858 அப்புறம், மேரிகபி? நீ எப்படியிருக்கிறாய்? 398 00:23:20,609 --> 00:23:22,194 உங்களுக்கு என்ன ஆச்சு? வித்தியாசமாக நடந்துக்கொள்கிறீர்கள். 399 00:23:22,277 --> 00:23:23,320 இல்லை, எப்போதும் போல் தான் இருக்கிறேன். 400 00:23:23,904 --> 00:23:25,405 நீங்கள் நலமா எனத் தெரிந்துகொள்ள நினைத்தேன். 401 00:23:26,198 --> 00:23:27,282 ஏனென்றால் நான் உங்களை நேசிக்கிறேன். 402 00:23:29,034 --> 00:23:30,035 ஹே, ரமோன். 403 00:23:31,745 --> 00:23:33,080 மறுபடியும் உடம்பு சரியில்லையா, என்ன? 404 00:23:33,163 --> 00:23:34,164 அது… 405 00:23:34,248 --> 00:23:35,374 அப்படி இல்லை. 406 00:23:35,457 --> 00:23:37,459 எனக்குப் பிடித்த ஆம்புலன்ஸ் எப்படியிருக்கிறது? 407 00:23:38,502 --> 00:23:39,962 செல்ல கார்மென். நாங்கள் நன்றாக இருக்கிறோம். 408 00:23:40,921 --> 00:23:42,172 ஏதாவது விஷயம் இருக்கிறதா? 409 00:23:43,131 --> 00:23:44,842 நகரத்தின் வடக்கு பகுதியிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள்? 410 00:23:44,925 --> 00:23:46,134 பதினைந்து நிமிடங்கள்? 411 00:23:46,218 --> 00:23:47,219 -ஒரு அழைப்பு வந்தது. -பத்து நிமிடம். 412 00:23:47,302 --> 00:23:50,055 குழந்தை சுயநினைவுடன் இல்லை. குழந்தையின் அம்மா ரொம்ப கவலைப்படுகிறார். 413 00:23:50,138 --> 00:23:51,682 பிளாசா லூயிஸ் கப்ரேராவிற்கு அருகில். 414 00:23:52,266 --> 00:23:53,976 போய்க் கொண்டிருக்கிறோம். இடத்தை அனுப்பி வை. 415 00:23:54,476 --> 00:23:55,477 அனுப்புகிறேன். 416 00:23:57,896 --> 00:23:59,314 நான் சரியான நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட்டேன் 417 00:23:59,398 --> 00:24:02,192 பேண்ட்டை கழற்றி தொங்கவிட்டுவிட்டு ராப் செய்து முடித்துவிட்டேன் 418 00:24:19,501 --> 00:24:21,503 என்ன? இதுதான் அந்த இடமா? 419 00:24:23,380 --> 00:24:25,174 -வணக்கம். -வணக்கம். 420 00:24:25,883 --> 00:24:28,343 -நீங்கள் தான் சிறுவனின் அம்மாவா? -ஆம், உள்ளே வாருங்கள். 421 00:24:29,928 --> 00:24:32,890 இரண்டு நாட்களுக்கு முன்பு, என் மகன் உலோகத் துண்டினால் அறுத்துக் கொண்டான். 422 00:24:32,973 --> 00:24:36,560 அவனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது, நான் எங்கள் குடும்ப மருத்துவரை அழைத்தேன். 423 00:24:36,643 --> 00:24:41,148 அவர் அவனைச் சோதித்துவிட்டு, காய்ச்சலுக்கு மருந்து தந்தார், ஆனால் அவனுக்கு வியர்த்துக்கொண்டே இருந்தது. 424 00:24:41,940 --> 00:24:43,692 அதற்கு பிறகு உங்கள் மருத்துவரிடம் பேசினீர்களா? 425 00:24:44,193 --> 00:24:45,444 அவர் என் அழைப்புகளை எடுக்கவில்லை. 426 00:24:46,195 --> 00:24:48,572 நான் தனியாக இருக்கிறேன். என் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறார். 427 00:24:50,782 --> 00:24:53,702 சாங்கோ, ஸ்ட்ரெச்சர் எடுத்து வா. நான் அவருடன் செல்கிறேன், சரியா? 428 00:24:55,162 --> 00:24:56,830 சரி, டாக். இதோ எடுத்து வருகிறோம். 429 00:24:59,416 --> 00:25:01,668 -இந்தப் பக்கம் வாருங்கள். -சரி. 430 00:25:10,552 --> 00:25:12,471 உங்கள் மகனின் வயது என்ன? 431 00:25:12,554 --> 00:25:13,555 எட்டு. 432 00:25:17,017 --> 00:25:20,187 மருத்துவர் என்ன மருந்து கொடுத்தார் என ஞாபகமிருக்கிறதா? 433 00:25:20,729 --> 00:25:21,730 இல்லை. 434 00:25:22,606 --> 00:25:25,025 அது பரவாயில்லை. பிறகு, பெட்டியில் பார்த்துக்கொள்கிறேன், சரியா? 435 00:25:26,193 --> 00:25:27,361 இந்தப் பக்கம் வாருங்கள். 436 00:25:31,740 --> 00:25:33,283 என் பையன் அவனது அறையில் இருக்கிறான். அவன்… 437 00:25:34,910 --> 00:25:36,620 அவன் கொஞ்ச நேரமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். 438 00:25:54,179 --> 00:25:56,974 இங்கே வாருங்கள், டாக்டர். 439 00:25:57,057 --> 00:25:58,058 சரி. 440 00:26:05,899 --> 00:26:07,651 கடவுளே! 441 00:26:08,151 --> 00:26:09,611 காய்ச்சல் போய்விட்டது. 442 00:26:11,572 --> 00:26:12,573 இவன் தான் என் மகன் டானி. 443 00:26:13,282 --> 00:26:15,701 நான் அருகில் போய் பார்க்கிறேன், சரியா? 444 00:26:29,840 --> 00:26:32,509 டானியல். அன்பே, எழுந்திரு. 445 00:26:33,468 --> 00:26:35,053 காய்ச்சல் குறைந்திருக்கிறது, இல்லையா? 446 00:26:37,055 --> 00:26:38,640 போய்விட்டது. 447 00:26:39,433 --> 00:26:42,019 இங்கு கொஞ்ச நேரம் இருங்கள். நான் மருந்து எடுத்து வருகிறேன். 448 00:26:44,104 --> 00:26:45,355 அவனுக்குச் சரியாகிவிடும் இல்லையா? 449 00:26:45,856 --> 00:26:48,859 ஆம், கவலைப்படாதீர்கள். நான் கீழே போய் மருந்து எடுத்து வருகிறேன். 450 00:26:49,943 --> 00:26:52,946 கேட்டாயா, அன்பே? எல்லாம் சரியாகிவிடும். 451 00:26:55,741 --> 00:26:57,075 ஐயோ, ஐயோ, ஐயோ. 452 00:26:58,160 --> 00:27:00,454 குழந்தை இறந்துவிட்டது. அவன் இறந்துவிட்டான். 453 00:27:04,166 --> 00:27:06,502 அண்ணா, இப்போதேப் போலீஸைக் கூப்பிடு. 454 00:27:06,585 --> 00:27:09,004 -ஏன்? -சிறுவன் இறந்துவிட்டான். 455 00:27:09,087 --> 00:27:10,172 விளையாடுகிறாய். 456 00:27:10,672 --> 00:27:12,466 டையாஸிபம், 5 மில்லிகிராம் எடுத்து வாருங்கள், சரியா? 457 00:27:12,549 --> 00:27:13,550 டாக்டர்? 458 00:27:14,718 --> 00:27:17,137 -சீக்கிரம்! அதிர்ச்சியில் இருக்காங்க. -நீங்கள் அவனுக்கு சிகிச்சை அளிக்க மாட்டீர்களா? 459 00:27:18,347 --> 00:27:19,723 டையாஸிபம், டையாஸிபம். 460 00:27:20,432 --> 00:27:23,101 ஆம். கண்டிப்பாக அளிப்போம். அதற்காகத் தான் வந்திருக்கிறோம். 461 00:27:23,185 --> 00:27:25,187 -உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லணும்… -இல்லை, இல்லை. 462 00:27:25,270 --> 00:27:28,482 மருத்துவமனைக்கு வேண்டாம். அவன் எங்கேயும் வரமாட்டான். இல்லை, வேண்டாம். 463 00:27:28,565 --> 00:27:31,401 சரி, இங்கேயே பார்க்கிறோம். ஆனால்… 464 00:27:31,485 --> 00:27:33,195 அருகில் வராதீர்கள். அவனை குணமாக்குவீர்களா? 465 00:27:33,278 --> 00:27:35,280 ஆம், ஆனால் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும்… 466 00:27:35,364 --> 00:27:37,074 -என்னைத் தொடாதீர்கள்! -சரி. 467 00:27:37,157 --> 00:27:39,368 -அவனை குணமாக்குவீர்களா? -ஒன்றுமில்லை. உங்களுக்கு உதவ தான் வந்திருக்கிறோம். 468 00:27:39,451 --> 00:27:40,994 -அப்பா! அப்பா, உடனே வாருங்கள்! -ஏன்? 469 00:27:41,078 --> 00:27:42,996 டையஸிபம் இல்லை, டாக்டர், இதுதான் இருக்கிறது. 470 00:27:43,080 --> 00:27:44,623 இல்ல! என்னை விடுங்கள்! ஏன் இப்படி செய்கிறீர்கள்? வேண்டாம்! 471 00:27:44,706 --> 00:27:46,750 -அமைதியாக இருங்கள், மேடம். -உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கிறோம். 472 00:27:46,834 --> 00:27:48,919 -காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! -உங்கள் நல்லதுக்கு தான். 473 00:27:49,002 --> 00:27:50,546 -அவரைப் பிடியுங்கள், பிடியுங்கள். -உதவி! 474 00:27:50,629 --> 00:27:51,964 ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை. 475 00:27:52,047 --> 00:27:53,465 ஒன்றுமில்லை. கொடுத்துவிட்டாயா? 476 00:27:53,549 --> 00:27:55,425 ஆம். கொடுத்துவிட்டேன். 477 00:28:00,597 --> 00:28:02,516 வேறெதாவது தகவல் இருக்கிறதா, மேடம்? 478 00:28:02,599 --> 00:28:03,684 செம்பெஃபோ 479 00:28:03,767 --> 00:28:05,894 பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், 480 00:28:05,978 --> 00:28:09,523 ஆனால் உடல் அழுகியதை வைத்து பார்க்கும் போது, இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்களாகியிருக்கும். 481 00:28:11,233 --> 00:28:14,069 -சரி. -வேறெதாவது இருக்கிறதா? 482 00:28:14,152 --> 00:28:17,197 அவரை அமைதிப்படுத்த மயக்க மருந்து கொடுத்தோம். 483 00:28:18,156 --> 00:28:21,326 ஆனால், அந்தப் பெண்ணிற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. 484 00:28:21,410 --> 00:28:23,161 தயவுசெய்து, உதவி செய்யுங்கள். 485 00:28:23,245 --> 00:28:25,372 விதிமுறைகளை மீற முடியாது, அண்ணா. 486 00:28:25,455 --> 00:28:26,456 மன்னித்துவிடுங்கள். 487 00:28:28,208 --> 00:28:31,003 சரி, முடிந்துவிட்டதா? நாங்கள் கிளம்புகிறோம், சரியா? 488 00:28:33,046 --> 00:28:34,047 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 489 00:28:34,923 --> 00:28:36,967 இது எங்கள் பிரச்சினையில்லை என உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிவிட்டேன். 490 00:28:37,968 --> 00:28:39,261 எனில், நாங்கள் என்ன செய்வது? 491 00:28:39,761 --> 00:28:42,306 அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்தது யார்? நீங்களா அல்லது நாங்களா? 492 00:28:44,016 --> 00:28:47,019 அது மட்டுமில்லாமல், அவளை இப்படியே அழைத்துச் செல்ல முடியாது. 493 00:28:47,102 --> 00:28:49,104 -முடியாது, இல்லையா? -இல்லை, இது சிக்கலானது. 494 00:28:50,230 --> 00:28:55,485 அவள் மருத்துவமனையில் கண்விழித்து விட்டால், சாட்சி சொல்வாள், இல்லையா? 495 00:28:56,653 --> 00:28:57,654 குட் நைட். 496 00:28:58,322 --> 00:28:59,323 குட் நைட். 497 00:28:59,823 --> 00:29:00,824 போய்த் தொலை. 498 00:29:00,908 --> 00:29:02,826 -வேறென்ன எதிர்பார்த்தீர்கள், ரமோன்? -போகலாம்! 499 00:29:03,410 --> 00:29:05,412 இந்த அயோக்கியர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். 500 00:29:07,331 --> 00:29:09,082 நீங்கள் போங்கள். நான் இதோ வருகிறேன். 501 00:29:09,166 --> 00:29:10,792 சரி. சீக்கிரம் வா, டாக். 502 00:29:13,962 --> 00:29:15,839 ஹே, கவனமாக இரு. அவள் கண் விழிக்கக் கூடாது. 503 00:29:36,527 --> 00:29:40,447 குளோஸபைன் 10 மில்லிகிராம் 504 00:29:41,031 --> 00:29:42,199 ஹாலோபெரிடோல் 505 00:29:43,158 --> 00:29:45,702 ஸோடெபைன் 506 00:29:48,747 --> 00:29:49,915 ஐயோ. 507 00:29:57,923 --> 00:29:59,341 ஹே. ஹே. 508 00:29:59,842 --> 00:30:02,094 -நமக்கு பெரிய பிரச்சனை, புரிகிறதா? -என்ன? என்னானது? 509 00:30:02,177 --> 00:30:04,638 அவள் மருந்துகள் எடுத்துக்கொண்டு எத்தனை நாட்களாகின்றன என கடவுளுக்குத்தான் தெரியும். 510 00:30:04,721 --> 00:30:05,889 எவ்வித மருந்து? 511 00:30:05,973 --> 00:30:07,432 நிறைய மனநோய் மருந்துகள். 512 00:30:08,433 --> 00:30:10,394 அவளை இப்படியே தடயவியல் துறைக்கு அழைத்துச்செல்வது சரியில்லை. 513 00:30:10,477 --> 00:30:12,396 அவள் கண்விழித்தாலும், மறுபடியும் மயக்க மருந்து கொடுக்க வேண்டும். 514 00:30:12,479 --> 00:30:14,439 நாம் அவளை, “ஃப்ரே பெர்னாடினோ மனநோய் மருத்துவமனை”-க்கு 515 00:30:14,523 --> 00:30:17,109 அழைத்துச் செல்வதாக தடயவியல் துறையிடம் சொல்லப் போகிறேன். 516 00:30:17,192 --> 00:30:19,653 காப்பீடு இல்லையென்றாலும் அங்கு அவளை அனுமதிப்பார்கள். அவள் அமைதியாக இருந்தால் மட்டுமே. 517 00:30:19,736 --> 00:30:21,905 -சீக்கிரம் போகலாம், நண்பா. -சரி, வாங்க போகலாம். 518 00:30:40,465 --> 00:30:42,092 -டாக். -நான் எங்கிருக்கிறேன்? 519 00:30:43,802 --> 00:30:45,345 ஒன்றுமில்லை. அமைதியாக இருங்கள். 520 00:30:45,929 --> 00:30:48,932 -எங்கே என் மகன்? -மருத்துவமனையில் இருக்கிறான். அங்குதான் போகிறோம். 521 00:30:49,016 --> 00:30:50,601 கவலைப்படாதீர்கள், மேடம். 522 00:30:50,684 --> 00:30:52,269 ஒன்றுமில்லை, மேடம். 523 00:30:54,229 --> 00:30:56,315 அவ்வளவுதான். கண்களை மூடுங்கள். 524 00:30:56,899 --> 00:30:58,192 மீண்டும் தூங்குங்கள். அப்படித்தான். 525 00:30:59,985 --> 00:31:02,404 -ஒன்றுமில்லை. -மிடாஸோலம் கொண்டு வருகிறாயா? 526 00:31:03,447 --> 00:31:04,448 இதோ கொண்டு வருகிறேன். 527 00:31:09,369 --> 00:31:10,329 எங்கிருக்கிறது, டாக்டர்? 528 00:31:10,954 --> 00:31:13,415 இங்கு தான் இருக்கும், ஆனால் நீ இந்த இடத்தையே அலங்கோலமாக்கி வைத்திருக்கிறாய். 529 00:31:13,498 --> 00:31:15,042 அது இங்கில்லை, டாக். 530 00:31:15,125 --> 00:31:16,543 அதோ அங்கிருக்கும், அண்ணா. 531 00:31:17,920 --> 00:31:20,380 ஹே, வேண்டாம், வேண்டாம், வேண்டாம்! பெண்ணே, என்ன செய்கிறீர்கள்? 532 00:31:20,464 --> 00:31:22,466 -என்னைத் தொடாதீர்கள். -கேளுங்க, உங்களுக்கு உதவுகிறோம். சரியா? 533 00:31:22,549 --> 00:31:24,301 -ஹே, அமைதியாக இருங்கள்! -என் மகன் எங்கே? 534 00:31:24,384 --> 00:31:25,594 -இல்லை, இல்லை! -அப்பா, கவனமாக இருங்கள்! 535 00:31:26,094 --> 00:31:29,056 -உங்களுக்கு என்ன பிரச்சினை? -இல்லை! என் மகன் எங்கே? 536 00:31:32,059 --> 00:31:34,478 -கவனமாக இருங்கள்! -அப்பா. அப்பா! 537 00:31:51,537 --> 00:31:52,788 தயவுசெய்து, அமைதியாக இருங்கள், மேடம். 538 00:31:52,871 --> 00:31:55,123 -ஹே, வேண்டாம். அதைக் கீழே போடுங்கள், மேடம். -அருகில் வராதீர்கள். 539 00:31:55,207 --> 00:31:56,917 -அருகில் வராதீர்கள்! -அமைதியாகுங்கள். 540 00:31:57,000 --> 00:31:59,711 -நாங்கள் அமைதியாக இருக்கிறோம், பார்த்தீர்களா? -அமைதியாக இருங்கள். 541 00:31:59,795 --> 00:32:00,712 ஜாக்கிரதை, செல்லம். கவனமாக இரு. 542 00:32:02,130 --> 00:32:03,924 ஐயோ. சரி, அமைதியாக இருங்கள். 543 00:32:04,007 --> 00:32:05,384 -ஹே, ஹே! -வேண்டாம்! 544 00:32:05,467 --> 00:32:08,762 -அவள் கால்களைப் பிடி. ஒன்று, இரண்டு, மூன்று. -வேண்டாம், தயவுசெய்து விடுங்க! 545 00:32:08,846 --> 00:32:09,721 என்னைப் போக விடுங்கள்! 546 00:32:09,805 --> 00:32:10,806 டாக்டர்! 547 00:32:10,889 --> 00:32:12,140 ஒன்றும் பிரச்சினையில்லை. 548 00:32:12,224 --> 00:32:15,227 -நான் உங்களுக்கு உதவி விரும்புகிறேன், மேடம். -என்னை போக விடுங்கள்! 549 00:32:16,812 --> 00:32:18,105 ரமோன்! 550 00:32:18,188 --> 00:32:20,524 -பேண்டேஜ் கொண்டு வா, சீக்கிரம்! -டானியல்! டானியல்! 551 00:32:20,607 --> 00:32:22,734 -உங்களை அவனிடம் அழைத்துச் செல்கிறோம். -என்னைப் போக விடுங்கள்! 552 00:32:23,235 --> 00:32:25,153 என்னை விடுங்கள்! 553 00:32:25,237 --> 00:32:26,196 என் மகனிடம் போக விடுங்கள்! 554 00:32:26,280 --> 00:32:28,073 மருந்து டப்பாவைக் காணவில்லை, நண்பா. 555 00:32:29,074 --> 00:32:30,868 -இவள் பைத்தியமாகிவிட்டாள். -ஒன்று கொடு. 556 00:32:33,912 --> 00:32:36,957 -என் மகன். தயவுசெய்து, வேண்டாம். -ஒன்றுமில்லை. உங்களுக்கு ஒன்றுமில்லை. 557 00:32:37,040 --> 00:32:39,251 என் மகன்! என் மகன்! 558 00:32:39,751 --> 00:32:42,754 வேண்டாம்! 559 00:32:43,505 --> 00:32:48,719 தயவுசெய்து என்னை இங்கிருந்து போக விடுங்கள். உங்களை கெஞ்சிக் கேட்கிறேன், தயவுசெய்து, விடுங்கள். 560 00:32:49,887 --> 00:32:50,971 இது உடைந்துவிட்டது. 561 00:32:52,764 --> 00:32:54,349 உன் அப்பா கட்டு கம்பியைப் பார்த்தாரா? 562 00:32:54,433 --> 00:32:56,602 அதை விடுங்கள். இந்தச் சின்ன சக்கரம் உடைந்துவிட்டது. 563 00:32:57,603 --> 00:32:59,396 அவருக்கு இன்னொரு நெஞ்சு வலி வராமல் இருந்தால் சரி. 564 00:32:59,479 --> 00:33:00,480 ஐயோ. 565 00:33:01,106 --> 00:33:04,026 மன்னித்து விடுங்கள், ரமோன். மனநிலை பாதித்தவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளிப்பதில்லை. 566 00:33:05,360 --> 00:33:07,196 அவரை நாங்கள் அனுமதிக்க முடியாது, மன்னித்துவிடுங்கள். 567 00:33:07,738 --> 00:33:10,949 எதையும் இலவசமாகச் செய்யும் நிலையில் நாங்களில்லை என உங்களுக்கே நன்றாகத் தெரியும். 568 00:33:12,034 --> 00:33:14,786 டயரை மாற்றுவதற்கு பசங்க உதவி செய்வார்கள். 569 00:33:14,870 --> 00:33:15,996 ஆனால் அதை மட்டும் தான் செய்ய முடியும். 570 00:33:16,079 --> 00:33:17,456 அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. 571 00:33:19,708 --> 00:33:21,960 -புரிகிறது. இது… -“புரிகிறதா”? 572 00:33:23,170 --> 00:33:24,630 “புரிகிறதா” என்றால் என்ன அர்த்தம்? 573 00:33:25,339 --> 00:33:26,965 இது மாறவே மாறாது, இல்லையா? 574 00:33:27,049 --> 00:33:31,011 ஏதாவது பிரச்சினை வந்தால், எல்லோரும் பின்வாங்கி விடுவதைப் பார்த்து சலித்துவிட்டது, சரியா? 575 00:33:31,094 --> 00:33:32,930 ஆனால் டமாயோ குடும்பத்தினர் உதவி செய்வார்கள், இல்லையா? 576 00:33:33,013 --> 00:33:34,097 எனில், நாம் வீணாய்ப் போவோம். 577 00:33:36,183 --> 00:33:37,684 நீங்கள் எதுவும் சொல்ல மாட்டீர்களா? 578 00:33:43,232 --> 00:33:44,233 மேரிகபி! 579 00:33:49,696 --> 00:33:51,323 உன் மகளுக்கு என்ன ஆச்சு, ரமோன்? 580 00:33:57,663 --> 00:33:59,206 நீதான். 581 00:34:00,582 --> 00:34:02,835 நீதான் என் மகனைக் கொன்று விட்டாய். 582 00:34:04,837 --> 00:34:07,172 நீதான். 583 00:34:09,049 --> 00:34:11,635 நீதான் என் மகனைக் கொன்றுவிட்டாய். 584 00:34:11,717 --> 00:34:13,094 உங்கள் மகன் ஏற்கனவே இறந்திருந்தான். 585 00:34:19,184 --> 00:34:21,143 நாங்கள் காப்பாற்றுவதற்கு ஒன்றுமில்லை. 586 00:34:27,860 --> 00:34:30,779 அதற்காக வருந்துகிறேன். 587 00:34:30,862 --> 00:34:34,283 நாம் வெளிப்படுத்தாத உணர்வுகள் அப்படியே இருந்து விடாது என்பார்கள். 588 00:34:34,366 --> 00:34:35,367 அவை அழிந்துப் போகாது. 589 00:34:35,868 --> 00:34:39,121 அவை உயிர்ப்புடன் புதைக்கப்பட்டு, பிறகு மோசமான விதத்தில் வெளிவரும். 590 00:34:41,706 --> 00:34:44,376 ஆனால், வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அதை எளிதாகச் சொல்லி விடுவார்கள். 591 00:34:47,880 --> 00:34:48,880 ஐயோ, நலேலி. 592 00:34:49,590 --> 00:34:51,632 நாம் ஒருவரை ஒருவர் இன்னும் நன்றாக அறிந்திருக்கலாம். 593 00:34:51,717 --> 00:34:55,012 மெக்சிகோவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. 594 00:34:55,679 --> 00:34:59,558 நுகர்வோர் விலைக் குறியீடு 9.2% உயர்ந்துள்ளது… 595 00:34:59,641 --> 00:35:00,851 இன்னும் தூங்காமல் இருக்கிறாய். 596 00:35:09,860 --> 00:35:13,238 நான் ரமோனிடம் எதையும் சொல்லியிருக்கக் கூடாது. 597 00:35:15,115 --> 00:35:19,578 ஆனால், அவர் முயற்சியை நான் எந்தளவு மதிக்கிறேன் என அவருக்குத் தெரிய வேண்டும். 598 00:35:19,661 --> 00:35:22,289 அட, அது கடினமான விஷயம் தான். 599 00:35:22,372 --> 00:35:25,334 அவர் என்னைச் சகோதரனாக ஏற்றுக்கொள்வது. 600 00:35:28,837 --> 00:35:31,757 எனக்குத் தெரியவில்லை, அன்பே. ரமோனும், அவரது குடும்பமும் 601 00:35:31,840 --> 00:35:35,719 விரும்பிய போதெல்லாம் இங்கு வருவதை நினைத்து சில சமயம்… 602 00:35:35,802 --> 00:35:37,346 உண்மையிலேயே, ஏதோ ஒரு மாதிரி இருக்கிறது. 603 00:35:38,805 --> 00:35:41,099 ஆனால், உனக்கு அது தான் வேண்டுமென்றால், 604 00:35:42,226 --> 00:35:44,811 உனக்கு அதுதான் சந்தோஷம் என்றால், எனக்கும் அதுதான் சந்தோஷம். 605 00:35:44,895 --> 00:35:46,230 உன் குடும்பம் தான் என் குடும்பம். 606 00:35:51,902 --> 00:35:52,903 லூக். 607 00:35:55,030 --> 00:35:56,031 உங்களை நேசிக்கிறேன். 608 00:35:59,743 --> 00:36:01,328 சந்தோஷமாக இருக்கிறீர்கள் போலும், ரமோன். 609 00:36:01,411 --> 00:36:02,829 தென் மெக்ஸிகோவின் மனநோய் மருத்துவமனை 610 00:36:02,913 --> 00:36:05,249 அந்தப் பெண் நன்றாக இருக்கிறாள். ஆம்புலன்ஸ் தான் பழுதாகிவிட்டது. 611 00:36:05,958 --> 00:36:08,961 நாம் இதிலிருந்து ஒரு டாலர் கூட சம்பாதிக்கவில்லை. 612 00:36:09,044 --> 00:36:10,045 மறுபடியும் நடந்துவிட்டது. 613 00:36:11,213 --> 00:36:12,756 என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? 614 00:36:12,840 --> 00:36:15,717 உனக்கு எல்லாம் தெரியும்தானே. பைத்தியங்களை யாருமே பார்த்துக்கொள்ள தயாராகயில்லை. 615 00:36:15,801 --> 00:36:17,845 நாம் “பைத்தியங்கள்” என்று சொல்லக் கூடாது, ரமோன். 616 00:36:18,887 --> 00:36:20,013 அங்கே பாருங்கள். 617 00:36:22,724 --> 00:36:24,518 அதைச் சரி செய்ய சில டாலர்கள் செலவாகும். 618 00:36:25,853 --> 00:36:27,479 நம்மிடம் அந்தளவுக்கு பணமும் இல்லை. 619 00:36:29,064 --> 00:36:30,315 போகலாம், டாக். 620 00:36:31,233 --> 00:36:32,234 டாக்? 621 00:36:36,697 --> 00:36:37,781 டாக்! 622 00:36:39,616 --> 00:36:40,701 ஐயோ. 623 00:36:57,259 --> 00:36:58,343 பாரு! 624 00:37:00,512 --> 00:37:02,890 -என்ன இது? -நலேலிக்கு என்ன நடந்தது என கண்டுபிடித்துவிட்டேன். 625 00:37:07,686 --> 00:37:11,231 நலேலிக்கு சப்அரக்னாய்டு இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது, ஆனால் எந்த அறிகுறியும் தெரியவில்லை. 626 00:37:12,900 --> 00:37:13,901 அவர்கள் அவளை நிலைப்படுத்திய போது, 627 00:37:13,984 --> 00:37:17,196 அவள் விலாஎலும்பு, நுரையீரல், கால், 628 00:37:17,279 --> 00:37:19,823 மற்றும் முக்கியமான உறுப்புகளை மட்டும் சோதித்துள்ளனர். 629 00:37:21,450 --> 00:37:24,328 ஆனால் அதற்குப் பிறகும், தொடர்ந்து இரத்தக்கசிவு தொடர்ந்திருக்கிறது. 630 00:37:24,411 --> 00:37:28,290 எனவே தான், அவளுக்குத் தலைவலி வந்திருக்கிறது. 631 00:37:28,373 --> 00:37:30,292 -மேலும்… -டமாயோ. 632 00:37:30,375 --> 00:37:32,336 தலைவலிக்காக ஆஸ்பிரின் மாத்திரையை சாப்பிட்டதும்… 633 00:37:32,419 --> 00:37:36,298 -டமாயோ, உண்மையாகவா? -…இரத்தம் மிகவும் இலேசாகி… 634 00:37:36,381 --> 00:37:38,634 -டமாயோ. -…மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கு. 635 00:37:42,054 --> 00:37:43,680 தானாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் 636 00:37:44,848 --> 00:37:47,518 மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் 637 00:37:48,519 --> 00:37:51,897 இந்தக் காயத்தைக் கண்டுபிடித்து சரி செய்திருக்கலாம். 638 00:37:55,317 --> 00:37:57,027 இதனால்தான் நீ தேர்வு எழுதவில்லையா? 639 00:37:58,654 --> 00:37:59,988 இதைத்தான் செய்து கொண்டிருந்தாயா? 640 00:38:02,491 --> 00:38:03,742 எனக்குப் புரிய வேண்டியிருந்தது. 641 00:38:05,577 --> 00:38:07,621 அது என் தவறு தான். நான் அவளை மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால்… 642 00:38:07,704 --> 00:38:09,206 -இல்லை. இல்லை. -…அவள் சரியாகியிருப்பாள், 643 00:38:09,289 --> 00:38:11,208 -ஆனால் நான் அவளை ஆஸ்பிரின் சாப்பிட விட்டுவிட்டேன்! -இல்லை, இல்லை. 644 00:38:11,291 --> 00:38:12,793 அது உன் தவறில்லை. 645 00:38:12,876 --> 00:38:15,587 நீ இல்லையென்றால், அவள் நிலநடுக்கத்தின் போதே இறந்திருப்பாள். 646 00:38:15,671 --> 00:38:17,756 புரிகிறதா? அது உன் தவறில்லை… 647 00:38:23,428 --> 00:38:24,763 பொறு. பொறு. 648 00:38:26,557 --> 00:38:28,058 பொறு. பொறு, டமாயோ. டமாயோ. 649 00:38:31,019 --> 00:38:32,271 இப்படி வேண்டாம். 650 00:38:42,614 --> 00:38:44,116 டமாயோ, இரு! 651 00:38:44,658 --> 00:38:45,659 டமாயோ! 652 00:38:53,876 --> 00:38:56,420 மன்னித்துவிடுங்கள், பெரியவரே, இந்த முறை பழுது பெரிதாக உள்ளது. 653 00:38:56,503 --> 00:38:57,963 அப்படி சொல்லாதே, நண்பா. 654 00:38:58,046 --> 00:38:59,381 ஆம், பணமும் நிறைய செலவாகும். 655 00:38:59,965 --> 00:39:00,841 எவ்வளவு ஆகும்? 656 00:39:00,924 --> 00:39:03,218 -உனக்கு நெஞ்சுவலி வந்துவிடும்… -எப்படியிருக்கிறாய், குட்டி? 657 00:39:03,302 --> 00:39:04,303 மார்கஸ்? 658 00:39:04,887 --> 00:39:07,806 என்ன ஆச்சு, டாக்? எங்கே இருக்கிறாய்? நாங்கள் ரொம்ப பயந்துவிட்டோம். 659 00:39:08,515 --> 00:39:10,225 இதை நீயே தான் சமாளிக்க வேண்டும். 660 00:39:10,809 --> 00:39:12,060 ஹே, இரு. என்ன சொல்கிறாய்? 661 00:39:13,061 --> 00:39:14,479 “நானே” சமாளிக்க வேண்டுமா? 662 00:39:14,563 --> 00:39:17,316 எங்கே இருக்கிறாய்? உன்னிடம் நேரில் வந்து பேசுகிறோம். 663 00:39:19,985 --> 00:39:21,945 அப்பாவிடம் சொல்லு நான்… 664 00:39:29,620 --> 00:39:31,246 இனி ஆம்புலன்ஸில் வேலை செய்ய மாட்டேன். 665 00:39:31,914 --> 00:39:34,124 ஹே, மேரிகபி. வேண்டாம், அப்படி செய்யாதே… 666 00:41:14,224 --> 00:41:16,226 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்