1 00:00:11,512 --> 00:00:12,679 சுத்தமாக இருக்கிறது, இல்லையா? 2 00:00:13,639 --> 00:00:14,889 சோம்பேறியாக இருக்காதீர்கள். 3 00:00:14,890 --> 00:00:17,308 உண்மையிலேயே, நீ எப்போதுமே அழுக்காக இருக்கிறாய். 4 00:00:17,309 --> 00:00:18,893 ஆம்புலன்ஸ் 5 00:00:18,894 --> 00:00:20,354 வேலைக்குப் போகலாம், குடும்பத்தினரே! 6 00:00:25,943 --> 00:00:27,444 இரண்டு பெட்டிகள் காஸ்... 7 00:00:27,778 --> 00:00:29,154 - இரண்டா? - ஆமாம், இரண்டு. 8 00:00:30,489 --> 00:00:31,615 இரண்டு ஆல்கஹால்... 9 00:00:31,823 --> 00:00:33,242 மூன்று எத்தனால்... 10 00:00:33,951 --> 00:00:34,826 சரியா? 11 00:00:35,494 --> 00:00:37,120 இன்ஜெக்ஷனுக்காக நான்கு பேக்குகள் தண்ணீர்... 12 00:00:38,830 --> 00:00:40,666 இரண்டு பேக்குகள் சர்ஜிகல் சோப்... 13 00:00:41,917 --> 00:00:43,794 ஒரு பேக் ஊசி. 14 00:00:44,461 --> 00:00:46,129 இன்ஜெக்ஷனுக்கான தண்ணீர்... நான்கு. 15 00:00:46,713 --> 00:00:47,548 சரி? 16 00:00:48,841 --> 00:00:50,217 நான்கு சலைன் சொல்யூஷன்ஸ். 17 00:00:50,676 --> 00:00:52,051 அவ்வளவு தான்! 18 00:00:52,052 --> 00:00:53,135 ஆம்புலன்ஸ் 19 00:00:53,136 --> 00:00:54,220 சரி. 20 00:00:54,221 --> 00:00:55,304 அடிப்படை முதலுதவி பொருட்கள் 21 00:00:55,305 --> 00:00:56,515 அதை அங்கே வைக்க வேண்டும். 22 00:00:56,765 --> 00:00:58,057 அப்படியா? 23 00:00:58,058 --> 00:00:59,726 அங்கே என்ன மறைந்திருந்தது என்று பாருங்கள். 24 00:01:02,437 --> 00:01:03,604 அடச்சே. 25 00:01:03,605 --> 00:01:04,981 அடடா. 26 00:01:04,982 --> 00:01:07,192 - வேற ஏதாவது சேர்க்க வேண்டுமா, ரமோன்? - பாரேன். 27 00:01:11,405 --> 00:01:14,324 ஹஹ்... அவங்களைப் பற்றி பேசியதும் வந்துட்டாங்களே. 28 00:01:15,284 --> 00:01:16,951 ஆம்புலன்ஸைப் பற்றி கவலைப்படாதே, மகனே. 29 00:01:16,952 --> 00:01:20,289 அதை நன்றாக கவனித்துக்கொள்ளும் ஒரு புதிய சொந்தக்காரரை கண்டுபிடிப்பதாகச் சொன்னார்கள். 30 00:01:20,747 --> 00:01:23,333 விவரம் தெரியாத யாரிடமோ இதை நீங்கள் அனுப்பப் போகிறீர்கள். 31 00:01:23,625 --> 00:01:25,294 அதை நான் மறுபடியும் ஓட்ட முடியாமல் போய்விடும். 32 00:01:25,752 --> 00:01:27,171 குட்பை கூட சொல்ல முடியாது. 33 00:01:30,591 --> 00:01:33,010 அதை மறுபடியும் ஓட்ட முடியாது என்று யார் சொன்னார்கள், தம்பி? 34 00:01:34,178 --> 00:01:36,013 இன்றிரவு கடைசி ஷிஃப்டில் வேலை செய்வோம். 35 00:01:36,221 --> 00:01:37,764 மார்கஸ், நாம் இப்போது தான் அதைக் கழுவினோம். 36 00:01:37,973 --> 00:01:40,058 ஹுலியோவுக்காக, நாம் அதை மறுபடியும் கழுவுவோம். 37 00:01:41,226 --> 00:01:42,895 சம்மதம் சொல்லுங்கள், அப்பா. 38 00:01:44,980 --> 00:01:46,315 லெட்டி, நீ என்ன நினைக்கிறாய்? 39 00:01:48,567 --> 00:01:50,860 சரி. கடைசி முறை என்பதால் சரி. 40 00:01:50,861 --> 00:01:51,945 ஆமாம்! 41 00:01:52,529 --> 00:01:55,532 - நீயும் வருகிறாயா? - நான் நாளை காலை சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். 42 00:01:56,325 --> 00:01:57,784 இதை இன்னொரு நாள் செய்யலாம். 43 00:01:59,703 --> 00:02:00,954 சொல், டாக்... 44 00:02:01,872 --> 00:02:03,081 இன்றிரவே செய்யலாம். 45 00:02:03,665 --> 00:02:06,084 சரி, சரி. கடைசி பயணம், குடும்பத்தினரே. 46 00:02:06,793 --> 00:02:08,002 நன்றி. 47 00:02:10,047 --> 00:02:12,382 நாம் போகலாம். ஒரே ஒரு முறை, அதோடு முடித்துக்கொள்வோம். 48 00:02:52,214 --> 00:02:54,174 “மிட்நைட் ஃபேமிலி” என்ற ஆவணப்படத்தைத் தழுவியது 49 00:03:10,190 --> 00:03:11,315 பெர்னியைப் பார்த்தாயா? 50 00:03:11,316 --> 00:03:13,360 - அவன் கிச்சனில் இருக்கிறான். - நன்றி. 51 00:03:13,652 --> 00:03:16,864 நீ முட்டையை அடித்து, அந்த பாத்திரத்தில் போட வேண்டும். 52 00:03:23,120 --> 00:03:25,038 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி, நண்பா. 53 00:03:27,332 --> 00:03:28,834 நீ சாகவில்லையா? 54 00:03:30,669 --> 00:03:32,421 நீ பார்ட்டியில் இருந்திருக்கிறாய் போல. 55 00:03:34,923 --> 00:03:36,300 இப்படி இருக்காதே. 56 00:03:38,343 --> 00:03:40,220 நாங்கள் கொஞ்சம் தனியே பேசலாமா, ப்ளீஸ்? 57 00:03:40,512 --> 00:03:41,638 சரி. நிச்சயம் பேசலாம். 58 00:03:42,598 --> 00:03:43,432 மன்னித்துவிடு. 59 00:03:44,433 --> 00:03:45,267 நன்றி. 60 00:03:48,437 --> 00:03:49,604 நன்றி. 61 00:03:49,605 --> 00:03:51,023 - பை. - பை. 62 00:04:00,032 --> 00:04:02,367 அப்படி கிளம்பிப் போனது தவறு என்று எனக்குத் தெரியும். 63 00:04:03,827 --> 00:04:04,703 என்னை மன்னித்துவிடு. 64 00:04:05,787 --> 00:04:07,122 தயவுசெய்து கோபப்படாதே. 65 00:04:07,956 --> 00:04:09,082 நான் கோபப்படவில்லை. 66 00:04:10,667 --> 00:04:11,793 வருத்தப்பட்டேன். 67 00:04:12,169 --> 00:04:13,337 ஆனால்... 68 00:04:13,754 --> 00:04:16,297 ஒரு முறை ஃபோன் செய்திருக்கலாம், அல்லது மெசேஜ் அனுப்பியிருக்கலாம். 69 00:04:16,298 --> 00:04:17,341 நீ சொல்வது சரி. 70 00:04:18,175 --> 00:04:21,178 விஷயங்களை குழப்பி, பிறகு உன்னை அப்படியே விட்டுச் சென்றதற்கு வருந்துகிறேன். 71 00:04:25,015 --> 00:04:26,016 சரி, நடந்ததை விடு. 72 00:04:27,684 --> 00:04:29,686 உனக்கு தேவைப்பட்டதால் தான் நீ போனாய். 73 00:04:31,021 --> 00:04:32,356 எனக்கு அது புரிகிறது. 74 00:04:34,483 --> 00:04:35,901 நமக்குள் பிரச்சினை இல்லை, சரியா? 75 00:04:36,485 --> 00:04:37,486 சரி. 76 00:04:40,614 --> 00:04:41,907 ஏன் இவ்வளவு கனிவாக இருக்கிறாய்? 77 00:04:43,033 --> 00:04:44,743 நீ சற்று மோசமாக... 78 00:04:45,202 --> 00:04:47,370 முட்டாள், அல்லது கெட்டவனாக இருக்கலாமே... 79 00:04:47,371 --> 00:04:49,790 கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. 80 00:05:28,161 --> 00:05:29,621 நிறைய விஷயங்கள் மாறப் போகின்றன. 81 00:05:31,081 --> 00:05:32,541 குறிப்பாக ஹுலிடோவிற்கு. 82 00:05:33,250 --> 00:05:35,794 ஆமாம், ஆனால், அவன் பழகிக்கொள்வான். 83 00:05:37,212 --> 00:05:39,673 வீட்டில் தன் அம்மா இருந்தால் அவனுக்கு வசதியாக இருக்கும். 84 00:05:40,549 --> 00:05:41,800 மறுபடியும் அதே விஷயம். 85 00:05:42,050 --> 00:05:43,844 நீ விரும்புவதை நான் செய்கிறேன், லெட்டி. 86 00:05:45,721 --> 00:05:46,889 நான் ஆம்புலன்ஸை விட்டு விலகுகிறேன். 87 00:05:48,182 --> 00:05:50,893 நான் புது வாழ்க்கையைத் தொடங்குகிறேன். 88 00:05:52,269 --> 00:05:53,353 பாருங்கள், ரமோன். 89 00:05:55,355 --> 00:05:57,691 எப்போதுமே ஆம்புலன்ஸ் பிரச்சினையாக இருந்ததில்லை. 90 00:05:59,902 --> 00:06:01,695 நீங்கள் தான் பிரச்சினை. 91 00:06:06,158 --> 00:06:08,118 சரி, நாம் தொடர்ந்து முட்டாள்களாகவே இருந்துக்கொள்வோம். 92 00:06:09,286 --> 00:06:10,996 ஏனென்றால் நீ என்னைத்தான் காதலிக்கிறாய். 93 00:06:11,955 --> 00:06:13,373 நீங்கள் பேசுவதே எனக்குப் புரியவில்லை. 94 00:06:14,166 --> 00:06:15,209 நீ மிகவும் பிடிவாதக்காரி. 95 00:06:16,043 --> 00:06:17,920 வேலைக்குச் செல்ல உங்களுக்கு நேரமாகவில்லையா? 96 00:06:23,509 --> 00:06:24,927 அது எப்படி நடக்கிறது என்று சொல்கிறேன். 97 00:06:25,552 --> 00:06:26,762 நீங்கள் அப்படி செய்யத் தேவையில்லை. 98 00:06:29,598 --> 00:06:30,599 பை. 99 00:06:31,934 --> 00:06:33,310 எதற்கும் உனக்குத் தகவல் சொல்கிறேன். 100 00:06:34,436 --> 00:06:35,521 சரி. 101 00:06:50,702 --> 00:06:53,579 பெர்னார்டோவுடன் உனக்கு இருக்கும் உறவினால் எந்த சலுகையும் கிடைக்காது என்று 102 00:06:53,580 --> 00:06:56,041 நீ புரிந்துகொள்ள வேண்டும். 103 00:06:58,001 --> 00:06:58,877 உண்மையில்... 104 00:06:59,503 --> 00:07:01,213 அது நேர் எதிரானது என்று சொல்வேன். 105 00:07:03,674 --> 00:07:06,385 நீ மறுபடியும் தவறு செய்தால், வெளியேற்றப்படுவாய் என்று சொன்னோம். 106 00:07:07,052 --> 00:07:08,637 ஆம், நான் சொதப்பிவிட்டேன் என தெரியும். 107 00:07:11,139 --> 00:07:12,808 அதாவது... நான் தவறாக பேசிவிட்டேன். 108 00:07:13,141 --> 00:07:16,812 கவலைப்படாதே. நீ யோசித்து பேசுவதில்லை என்று எனக்குத் தெரியும். 109 00:07:18,313 --> 00:07:21,692 என் வீட்டிற்கு நீ வந்த பிறகு, என் சொந்தக்காரர்கள் அனைவரும் வாயடைத்துப் போனார்கள். 110 00:07:24,027 --> 00:07:25,696 ஆனால், இந்த ஒரு முறையாவது 111 00:07:25,904 --> 00:07:29,032 நீ செய்ததை சரியாக விவரித்திருக்கிறாய். 112 00:07:32,202 --> 00:07:33,871 கேளுங்கள், டாக்டர். 113 00:07:35,622 --> 00:07:38,000 என் குழந்தை காலம் முதலே நான் இந்த ஆம்புலன்ஸில் பயணித்து இருக்கிறேன். 114 00:07:38,876 --> 00:07:40,501 என் வாழ்நாள் முழுவதும் அதில் வேலை செய்தேன். 115 00:07:40,502 --> 00:07:43,422 எனக்கு என்ன விருப்பம் என்று யாரும் என்னைக் கேட்டதே இல்லை. 116 00:07:44,673 --> 00:07:46,008 சரி சொல்லு, உன் விருப்பம் என்ன? 117 00:07:47,843 --> 00:07:49,136 நான் டாக்டர் ஆக வேண்டும். 118 00:07:52,431 --> 00:07:56,226 நீ மறுபடியும் காணாமல் போவதை நாங்கள் எப்படி தடுப்பது? 119 00:08:00,480 --> 00:08:02,149 என் அப்பா ஆம்புலன்ஸை விற்றுவிட்டார். 120 00:08:02,482 --> 00:08:03,733 எனவே, இதை முழு மூச்சோடு செய்யப் போகிறேன். 121 00:08:03,734 --> 00:08:06,570 அவர் அதை விற்காவிட்டாலும்... இதுதான் எனக்கு முக்கியமானது. 122 00:08:16,914 --> 00:08:19,166 நீ மிகவும் பின்தங்கியிருக்கிறாய், மேரிகபி. 123 00:08:22,044 --> 00:08:23,837 நான் படித்துவிடுவேன், டாக்டர். 124 00:08:24,880 --> 00:08:26,507 நீ பரீட்சை எழுதக்கூட வரவில்லை. 125 00:08:28,091 --> 00:08:30,427 உனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்பட்ட போதிலும். 126 00:08:33,472 --> 00:08:34,765 நான் என் ஆசிரியரிடம் பேசுகிறேன். 127 00:08:35,390 --> 00:08:38,018 நீ பேசுவதினால் அவர் சந்தோஷப்பட மாட்டார். 128 00:08:41,395 --> 00:08:44,024 நான் உன்னோடு யூஎஸ் வருகிறேன் எனத் தெரியும் தானே? 129 00:08:47,027 --> 00:08:48,904 அன்பே, இதை உண்மையில் விற்கிறீர்களா? 130 00:08:50,405 --> 00:08:51,281 ஆமாம், செல்லம். 131 00:08:51,990 --> 00:08:53,408 இது ஓய்வு பெறுகிறது. 132 00:08:55,911 --> 00:08:57,996 இதில் நாம் நிறைய அனுபவம் பெற்றோம், இல்லையா? 133 00:09:06,380 --> 00:09:08,048 இப்பவும் நான் உன் வாரிசை சுமக்கிறேன். 134 00:09:10,509 --> 00:09:11,717 என்ன? 135 00:09:11,718 --> 00:09:13,762 ஆம்புலன்ஸிற்கு குட்பை சொல்ல விரும்புகிறாயா? 136 00:09:14,012 --> 00:09:15,055 கடைசி முறையாக? 137 00:09:16,932 --> 00:09:17,933 உனக்கு சம்மதமா? 138 00:09:36,493 --> 00:09:37,411 அடச்சே. 139 00:09:38,245 --> 00:09:39,328 நண்பா. 140 00:09:39,329 --> 00:09:41,039 சரி, நண்பா. நான் கீழே இறங்குகிறேன். 141 00:09:41,665 --> 00:09:42,707 அடச்சே. 142 00:09:42,708 --> 00:09:43,791 நாசமாய் போச்சு. 143 00:09:43,792 --> 00:09:45,878 பார்த்தாயா? நீ எனக்கு கிறுக்கு பிடிக்க வைத்ததால் தான் இது நடந்தது. 144 00:09:50,048 --> 00:09:52,675 நாம் வேறு எங்காவது போய் மதிய உணவு சாப்பிடலாம், சரியா? 145 00:09:52,676 --> 00:09:54,136 ஏனென்றால், இந்த முட்டாள்கள் இங்கே இருக்கிறார்கள். 146 00:09:54,928 --> 00:09:57,681 ஞாபகம் வைத்துக்கொள், நாம் பயத்தை வெளிகாட்டக் கூடாது. 147 00:09:59,558 --> 00:10:01,810 அவர்கள் பணத்தை திருப்பித் தந்து விடலாமே. 148 00:10:02,561 --> 00:10:03,729 அது முடியாது. 149 00:10:04,062 --> 00:10:05,772 நாம் அதை செலவழித்துவிட்டோம், நினைவிருக்கா? 150 00:10:07,524 --> 00:10:09,484 எதற்காக அந்த கேவலமான ஃபோட்டோக்களை அவர்களுக்குக் கொடுத்தாய்? 151 00:10:09,776 --> 00:10:11,695 நம்மிடம் பழைய ஃபோட்டோக்கள் இருந்தனவே. 152 00:10:12,112 --> 00:10:13,155 அது, உன் தவறும் தான். 153 00:10:13,906 --> 00:10:16,282 - என் தவறு என்ன? - நீதான் நல்ல ஃபோட்டோக்களை எனக்குத் தரவில்லையே. 154 00:10:16,283 --> 00:10:17,993 அது, என் தவறு இல்லை. 155 00:10:18,785 --> 00:10:21,038 அதோடு, நான் அடி வாங்கப் போகிறேன். நீ அடி வாங்க மாட்டாய். 156 00:10:24,458 --> 00:10:26,542 - அடச்சே, அவன் மயங்கி விட்டான். - உதவி! 157 00:10:26,543 --> 00:10:28,211 - அவன் நலமா? - உதவி! 158 00:10:28,212 --> 00:10:30,379 - சீக்கிரம்! - அவன் மயங்கி விட்டானா? 159 00:10:30,380 --> 00:10:32,131 - அவன் நலமா? - நகருங்கள். நகருங்கள்! 160 00:10:32,132 --> 00:10:34,217 - என்ன ஆச்சு? - அவர்கள் தலையை மோதிக் கொண்டார்கள்... 161 00:10:34,218 --> 00:10:36,386 அவன் நலமாகிவிடுவானா? அசைவின்றி இருக்கிறான். 162 00:10:36,970 --> 00:10:38,430 அவன் தன் பணத்தைக் கேட்க மாட்டான். 163 00:10:38,680 --> 00:10:40,097 ஹைப்போரிஃப்ளெக்சிவ் கருவிழிகள். ஹே! 164 00:10:40,098 --> 00:10:41,642 நாம் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். 165 00:10:42,267 --> 00:10:43,267 உடனடியாக! 166 00:10:43,268 --> 00:10:44,269 போங்கள்! 167 00:10:46,563 --> 00:10:47,980 குட் மார்னிங், திரு. ரமோன். 168 00:10:47,981 --> 00:10:49,398 இப்போது இங்கே வேலை செய்கிறீர்கள், இல்லையா? 169 00:10:49,399 --> 00:10:51,234 - ஆமாம், பெண்களே. - அதே நல்லது, இல்லையா? 170 00:10:51,235 --> 00:10:53,278 - வாழ்த்துக்கள். - நன்றி. 171 00:10:53,529 --> 00:10:56,447 - மார்கஸைப் பார்த்தால் “ஹாய்” சொன்னதாகச் சொல்லுங்கள். - சொல்கிறேன்! 172 00:10:56,448 --> 00:10:57,741 டெரே! 173 00:10:58,951 --> 00:11:02,704 பார்த்தாயா? நீ இங்கே வந்தது எல்லோருக்கும் சந்தோஷம். 174 00:11:03,789 --> 00:11:07,417 உணவு நன்றாக இருக்கும், சில நல்ல இடங்களுக்கு உன்னை அழைத்துப் போகிறேன். 175 00:11:07,751 --> 00:11:10,419 நல்ல சலுகைகள் கிடைக்கும் டாக்கோ இடங்களுக்கு அழைத்துப் போகிறேன். 176 00:11:10,420 --> 00:11:14,424 - எனக்கு வேலையைத் தொடங்க வேண்டும். - அது நல்ல மனப்பான்மை. 177 00:11:15,259 --> 00:11:20,012 உன் அலுவலகத்தை காண்பிப்பதற்கு முன்னால், அதன் அளவை வைத்து அதை மதிப்பிடாதே. 178 00:11:20,013 --> 00:11:22,641 அது வேலை செய்யும் என்பது தான் முக்கியம். 179 00:11:23,308 --> 00:11:25,394 அதற்கு இரட்டை அர்த்தமுண்டா? 180 00:11:41,410 --> 00:11:42,828 உனக்கு போகப் போகப் பிடிக்கும். 181 00:11:43,370 --> 00:11:44,705 நானும் அப்படித்தான் நம்புகிறேன். 182 00:11:45,038 --> 00:11:46,122 நான் கிளம்புகிறேன். 183 00:11:46,123 --> 00:11:48,625 - மதிய உணவிற்கு வருவேன். - பிறகு சந்திக்கலாம். 184 00:12:14,067 --> 00:12:16,320 இது எப்படி வேலை செய்யும் என்று யாருக்காவது தெரியுமா? 185 00:12:18,780 --> 00:12:20,240 நீ வண்டியை இங்கே நிறுத்தக் கூடாது. 186 00:12:20,657 --> 00:12:21,533 கூடாதா? 187 00:12:24,036 --> 00:12:25,412 யார் அப்படிச் சொல்வது? 188 00:12:26,914 --> 00:12:28,165 நாங்கள் தான். 189 00:12:28,790 --> 00:12:32,211 இது மிக விநோதமாக இருக்கு, அதிகாரியே. தினமும் இங்கே தான் வண்டியை நிறுத்துகிறேன். 190 00:12:32,669 --> 00:12:34,630 நீங்கள் கிளம்புவதற்கு, எவ்வளவு பணம் வேண்டும்? 191 00:12:35,714 --> 00:12:36,590 உன் பிரச்சினை என்ன? 192 00:12:37,341 --> 00:12:39,134 நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது புரியவில்லை? 193 00:12:39,551 --> 00:12:41,220 நீங்கள் எனக்கு பிரச்சினை கொடுப்பது போலத்தான் தெரிகிறது. 194 00:12:41,762 --> 00:12:45,224 மார்கஸ், நாம் போகலாம், சரியா? பரவாயில்லை விடு. 195 00:12:46,058 --> 00:12:47,184 அதோ, பார்த்தாயா? 196 00:12:49,019 --> 00:12:50,269 உன் காதலி சொல்வதைக் கேளு. 197 00:12:50,270 --> 00:12:52,814 நீ என்னிடம் பேசுகிறாய், முட்டாளே. அவளுக்கு இதில் என்ன சம்பந்தம் இருக்கு? 198 00:12:53,273 --> 00:12:56,275 சரி, நீ மிகப் பெரியவன் தான். ஒன்றை உனக்கு நினைவு படுத்துகிறேன். 199 00:12:56,276 --> 00:12:57,777 - என்ன அது? - நாங்கள் அதிகாரிகள்! 200 00:12:57,778 --> 00:12:59,737 - போ, முட்டாளே! அமைதியாக இரு! - ஹே! போதும் விடு! 201 00:12:59,738 --> 00:13:02,114 நாசமாய் போனவனே. நீ அப்படி... 202 00:13:02,115 --> 00:13:04,952 அவளை விடு! அவள் கர்ப்பமாக இருக்கிறாள், முட்டாளே! 203 00:13:05,452 --> 00:13:08,746 - கிரிஸ்டினா! நீ நலமா? பார்க்கலாம். - இங்கிருந்து கிளம்பு! சரியா, நண்பா? 204 00:13:08,747 --> 00:13:10,749 நீ கிளம்பு, முட்டாளே! 205 00:13:14,127 --> 00:13:14,961 நீ நலமா? 206 00:13:14,962 --> 00:13:17,630 - இல்லை. வலிக்கிறது. - ஐயோ. 207 00:13:17,631 --> 00:13:19,550 ஹாய், மிஸ். நீ நலமா? 208 00:13:20,092 --> 00:13:22,511 இதோ வந்து விட்டோம், கிரிஸிஸ். 209 00:13:29,768 --> 00:13:30,643 நல்ல வேலை செய்தாய், தம்பி. 210 00:13:30,644 --> 00:13:31,602 விரைவாக முடிவெடுத்தாய். 211 00:13:31,603 --> 00:13:33,397 நன்றி, நான் ஒரு மருத்துவ உதவியாளர். 212 00:13:33,689 --> 00:13:35,148 வந்து, என் அப்பா தான். 213 00:13:35,691 --> 00:13:37,150 என் அக்கா பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். 214 00:13:39,361 --> 00:13:42,865 சரி! நீ ரமோன் டமாயோவின் மகன், இல்லையா? 215 00:13:43,365 --> 00:13:44,365 பெப்பெ! 216 00:13:44,366 --> 00:13:45,826 இவன் டமாயோவின் மகன். 217 00:13:46,618 --> 00:13:48,036 நான் கண்டுபிடித்திருக்க வேண்டும். 218 00:13:48,328 --> 00:13:51,206 எனக்கு எல்லாவற்றையும் உன் அப்பா தான் சொல்லிக் கொடுத்தார். 219 00:13:51,748 --> 00:13:53,166 நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 220 00:13:53,500 --> 00:13:56,253 எட்கரின் உறவினர் “ஹலோ” சொன்னதாக உன் அப்பாவிடம் சொல்லு. 221 00:13:56,545 --> 00:13:58,004 நன்றாகப் போகிறது! 222 00:13:58,005 --> 00:13:59,423 நீ எங்களை காப்பாற்றிவிட்டாய், ஹுலியோ. 223 00:13:59,965 --> 00:14:00,841 என்ன? 224 00:14:01,550 --> 00:14:03,426 உனக்கு மருந்து பற்றித் தெரியும். 225 00:14:03,427 --> 00:14:04,803 எனவே... 226 00:14:07,014 --> 00:14:09,641 ஆனால் மறுபடி இப்படி முட்டாள்தனமாக யோசிக்காதே. 227 00:14:10,058 --> 00:14:12,102 அப்படித்தான் நம்மை பிரச்சினையில் மாட்டுகிறாய். 228 00:14:13,395 --> 00:14:14,897 உனக்கு குறிக்கோள் இல்லை, நண்பா. 229 00:14:15,898 --> 00:14:17,858 ஆனால் அறிவு உண்டு! 230 00:14:42,382 --> 00:14:45,635 ஹாய். புரோஃபசர், நான் மன்னிப்பு கேட்க... 231 00:14:45,636 --> 00:14:46,929 இது ஏற்கனவே நடந்தது போல இருக்கே. 232 00:14:49,056 --> 00:14:50,390 நானே சொல்கிறேன். நீ மறுபடியும்... 233 00:14:51,099 --> 00:14:53,894 மூன்றாவது முறையாக பரீட்சை எழுத நினைக்கிறாயா? 234 00:15:00,192 --> 00:15:02,236 உனக்கு சேவை செய்ய தான் நாங்கள் இங்கிருக்கிறோம் என நினைக்கிறாயா? 235 00:15:03,320 --> 00:15:05,072 ஆணவக்காரி. 236 00:15:06,156 --> 00:15:09,743 - இன்னொரு வாய்ப்பிற்கு தகுதி இல்லை என்று தெரியும். - அப்படியென்றால், நாம் ஒப்புதலுக்கு வந்துவிட்டோமே. 237 00:15:11,119 --> 00:15:12,538 என் எதிர்காலம் இதை நம்பி தான் இருக்கிறது. 238 00:15:12,871 --> 00:15:14,706 கொஞ்சம் பொறு, மிஸ் டமாயோ. 239 00:15:15,707 --> 00:15:18,126 உன் எதிர்காலம் என் பொறுப்பல்ல. 240 00:15:19,378 --> 00:15:21,213 நீயே சொந்தமாக ஏதாவது முயற்சி செய். 241 00:15:21,880 --> 00:15:24,800 நீ இருக்கலாமா கூடாதா என்பதை மட்டும் தான் என்னால் முடிவு செய்ய முடியும். 242 00:15:25,300 --> 00:15:26,510 கூடாது என்பது தான் என் பதில். 243 00:15:27,845 --> 00:15:29,346 இது உனக்கான இடமில்லை. 244 00:15:30,305 --> 00:15:31,472 ஆனால் நல்லதையும் பாரு. 245 00:15:31,473 --> 00:15:35,561 இனி நீ பிரச்சினையில் மாட்டாமல் உன் ஆம்புலன்ஸில் சுற்றி வரலாம். 246 00:15:36,645 --> 00:15:41,400 தெருக்களில் அலைவது உனக்கு பிடிக்குமென்றால், அங்கே போவது தான் உனக்கு நல்லது. 247 00:15:42,818 --> 00:15:45,028 பார்த்தாயா? உனக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கு. 248 00:15:51,201 --> 00:15:52,160 ஒன்று சொல்லட்டுமா? 249 00:15:53,829 --> 00:15:54,830 நீங்கள் சொல்வது சரி தான். 250 00:15:56,748 --> 00:15:58,500 பணக்காரியாகவோ, அல்லது... 251 00:15:59,293 --> 00:16:00,794 சிறந்த மருத்துவமனைகளில் வேலை செய்யவோ, 252 00:16:01,253 --> 00:16:03,338 அல்லது என் ஆய்வை வெளியிடவோ, 253 00:16:03,755 --> 00:16:05,215 நான் மருத்துவம் படிக்கவில்லை. 254 00:16:05,507 --> 00:16:09,469 அல்லது உன் பாடங்களை கவனிக்கவோ, தேர்வுகளை எழுதவோ இல்லை... 255 00:16:10,470 --> 00:16:13,182 மக்களுக்கு உதவ வேண்டுமென்பதால் தான் நான் மருத்துவம் படிக்கிறேன். 256 00:16:14,183 --> 00:16:16,435 தெருக்களில் மக்கள், என் கையில் இறந்துப் போவதை நான் விரும்பவில்லை. 257 00:16:16,935 --> 00:16:20,272 மருத்துவமனைக்கோ வீட்டிற்கோ அவர்களை உயிரோடு கொண்டுச் சேர்க்க நான் விரும்புகிறேன். 258 00:16:20,856 --> 00:16:22,774 எல்லோருக்கும் உதவ முடியாவிட்டாலும் பெரும்பாலானவர்களுக்கு உதவ வேண்டும். 259 00:16:24,484 --> 00:16:25,819 என் எதிர்காலத்தை உங்களால் விவரிக்க முடியாது. 260 00:16:26,320 --> 00:16:27,362 யாராலும் முடியாது. 261 00:16:28,488 --> 00:16:31,491 நான் மருத்துவராகப் போகிறேன் அதற்காக எதையும் செய்ய எனக்குப் பயமில்லை. 262 00:16:32,159 --> 00:16:36,121 நீங்களெல்லோரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களை, கேலி செய்து கொண்டே இருங்கள். 263 00:16:36,830 --> 00:16:38,874 ஆனால் நீங்கள் களத்தில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்க காத்திருக்கிறேன். 264 00:16:40,709 --> 00:16:42,920 உங்கள் கைகளில் கறை படியட்டும். 265 00:16:45,047 --> 00:16:46,089 கிளம்புகிறேன். 266 00:16:49,343 --> 00:16:51,011 உன் பரீட்சையை சரியாக எழுத வேண்டும். 267 00:16:53,263 --> 00:16:54,765 ஒரு தவறு செய்தால் கூட, நீ வெளியேற்றப்படுவாய். 268 00:16:57,643 --> 00:16:58,769 ஒரு தவறும் இருக்காது. 269 00:17:01,063 --> 00:17:02,356 நாளை காலை முதல் வேலையே அது தான். 270 00:17:03,148 --> 00:17:04,483 கண்டிப்பாக வந்துவிடு. 271 00:17:19,330 --> 00:17:20,290 பெர்னி. 272 00:17:21,124 --> 00:17:23,210 நான் பரீட்சை எழுத அனுமதித்துவிட்டார்கள், நண்பா! 273 00:17:24,211 --> 00:17:26,087 உண்மையாகவே, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். 274 00:17:26,088 --> 00:17:29,007 பிறகு இதைப் பற்றி விவரமாகச் சொல்கிறேன், சரியா? முத்தங்கள். 275 00:17:46,567 --> 00:17:47,568 டாக்டர் லூனா. 276 00:17:54,116 --> 00:17:56,410 என்னோடு வருகிறாயா, மிஸ் டமாயோ? 277 00:17:57,828 --> 00:17:58,871 இருக்கட்டும், பரவாயில்லை. 278 00:17:59,371 --> 00:18:01,707 சப்வேயில் சீக்கிரமாக போய்விடுவேன். 279 00:18:03,542 --> 00:18:05,711 சரி, என்னை ஏன் சந்தித்து பேசுகிறாய்? 280 00:18:07,129 --> 00:18:08,547 “ஹாய்”, சொல்ல வந்தேன், 281 00:18:09,548 --> 00:18:11,800 மேலும், அந்த நாளுக்காக நன்றி சொல்ல வந்தேன். 282 00:18:13,135 --> 00:18:14,303 எனக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. 283 00:18:16,597 --> 00:18:18,473 உனக்காக நான் எப்போதும் இருப்பேன், ஹ்ம்? 284 00:18:19,349 --> 00:18:22,144 உணர்ச்சிகரமாக பேசாதீர்கள். 285 00:18:22,686 --> 00:18:25,314 சரி, அவர்கள் உன்னை அனுமதித்து விட்டார்களா? 286 00:18:26,773 --> 00:18:28,232 நான் சொல்ல மாட்டேன். நீங்களே கண்டுபிடியுங்கள். 287 00:18:28,233 --> 00:18:30,569 கண்டிப்பாக அனுமதித்திருப்பார்கள். நீ வேண்டியதை எப்போதும் சாதிப்பாய். 288 00:18:31,195 --> 00:18:32,654 எப்போதும் இல்லை. 289 00:18:34,156 --> 00:18:37,117 சிறப்பான விஷயங்களைச் செய்யும் திறமை உன்னிடம் இருக்கு, மிஸ் டமாயோ. 290 00:18:48,003 --> 00:18:50,923 நான் கிளம்புவது நல்லது என தோன்றுகிறது. 291 00:18:51,131 --> 00:18:54,259 சரி, கிளம்பு. ஏனென்றால், உன்னை முத்தமிட ஆவலாக இருக்கிறேன். 292 00:18:54,635 --> 00:18:55,801 நான் அனுமதித்தால் தான், அது நடக்கும். 293 00:18:55,802 --> 00:18:57,512 அதனால் தான் நான் முயற்சிக்கூட செய்வதில்லை. 294 00:18:57,513 --> 00:18:58,597 அது தான் உங்களுக்கு நல்லது. 295 00:19:01,517 --> 00:19:03,143 நான் உன்னை நேசிக்கிறேன், மிஸ் டமாயோ. 296 00:19:05,479 --> 00:19:06,939 இனியும் நான் நடிக்கப் போவதில்லை. 297 00:19:08,106 --> 00:19:10,108 இப்போது முடிவு உன் கையில். 298 00:19:12,778 --> 00:19:14,738 நானே பிரச்சினைக்குள் மாட்டிக் கொண்டேன், இல்லையா? 299 00:19:16,156 --> 00:19:19,159 யாரை தேர்ந்தெடுப்பேன் என்றே தெரியவில்லை, எனவே ஆரம்பிக்க மாட்டேன். 300 00:19:20,452 --> 00:19:24,122 ஆனால் அந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்று, நான் தயார் என்பதைக் காட்ட வேண்டும். 301 00:19:33,131 --> 00:19:34,341 வந்ததுக்கு நன்றி, அம்மா. 302 00:19:34,800 --> 00:19:36,218 நான் வந்திருக்க மாட்டேன். 303 00:19:37,094 --> 00:19:38,720 அதிக வேலை இருக்கிறது. மிக அதிக வேலை. 304 00:19:41,014 --> 00:19:42,850 உனக்கும் அதிக வேலை இருக்கும், இல்லையா? 305 00:19:45,060 --> 00:19:47,145 ஆமாம். நாள் முழுவதும் வேலை செய்வதை நான் நிறுத்தவில்லை. 306 00:19:47,980 --> 00:19:48,856 செல்லம், 307 00:19:49,231 --> 00:19:51,024 கல்லூரியைப் பற்றிச் சொன்னேன். 308 00:19:51,942 --> 00:19:53,777 உன் காதலி கூட, தன் வாழ்க்கையைத் திரும்பப் பெற்றுவிட்டாள். 309 00:19:54,319 --> 00:19:56,697 அது முடிந்து போன கதை என்று நினைத்தேன், 310 00:19:57,865 --> 00:19:59,032 அவள் என்னை ஆச்சரியப்படுத்திவிட்டாள். 311 00:19:59,783 --> 00:20:02,703 அவளிடமிருந்து நீ ஓரிரண்டு விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். 312 00:20:06,498 --> 00:20:09,083 கற்றுக்கொண்டேன். அதனால் தான் அக்ஸோலோடில்ஸைப் பார்க்க உங்களை அழைத்தேன். 313 00:20:09,084 --> 00:20:10,878 அதைத்தான் நாம் இங்கே செய்கிறோம். 314 00:20:11,211 --> 00:20:12,378 இவை இரண்டும் ஒரே... 315 00:20:12,379 --> 00:20:14,923 அக்ஸோலோடில்ஸ் என்னவென்று எனக்குத் தெரியும். விளக்கம் தேவையில்லை. 316 00:20:20,846 --> 00:20:21,847 அப்படியென்றால், சரி. 317 00:20:23,682 --> 00:20:24,683 என்னோடு வாருங்கள். 318 00:20:30,814 --> 00:20:33,232 இவான்னா கெட்சைகோயாட்டில் 319 00:20:33,233 --> 00:20:35,776 மெக்ஸிகோ ஸோச்சிமில்கோ 320 00:20:35,777 --> 00:20:37,404 நான் மருத்துவ கல்லூரியிலிருந்து விலகுகிறேன், அம்மா. 321 00:20:41,074 --> 00:20:44,161 எஞ்சி இருக்கும் வாழ்க்கை முழுவதும் அக்ஸோலோடில்ஸைக் காப்பாற்றப் போகிறாயா? 322 00:20:45,621 --> 00:20:46,913 இல்லை. விஷயம் என்னவென்றால், 323 00:20:46,914 --> 00:20:50,082 உங்களையும் மேரிகபியையும் பார்க்கையில், என்னிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருப்பது தெரிகிறது. 324 00:20:50,083 --> 00:20:52,211 - வாழ்க்கையில் முன்னேறும் விருப்பமா? - இல்லை, ஆர்வம். 325 00:20:53,045 --> 00:20:54,296 மருத்துவத்தின் மீது ஆர்வம். 326 00:20:54,838 --> 00:20:56,423 நான் ஏன் என் நேரத்தை வீணாக்க வேண்டும்? 327 00:20:57,382 --> 00:21:00,885 அல்லது ஆசிரியரின் நேரத்தை, அல்லது அங்கே படிக்க வேண்டும் என்று 328 00:21:00,886 --> 00:21:02,679 விரும்பும் ஒருவரின் இடத்தை வீணாக்க வேண்டும்? 329 00:21:03,847 --> 00:21:06,850 என் மகன் என்பதால் இதைச் சொல்லவில்லை. அதை வைத்து நகைச்சுவை செய்ய மாட்டேன். 330 00:21:07,392 --> 00:21:08,727 ஆனால் உனக்கு திறமை இருக்கிறது. 331 00:21:09,436 --> 00:21:11,313 அதை இப்படி வீணடிக்காதே. 332 00:21:13,524 --> 00:21:14,942 புரிந்துக்கொள்ள முயற்சி செய். 333 00:21:15,400 --> 00:21:18,612 இது முக்கியமில்லை என்று நான் நினைப்பதாக, நீ நினைக்க வேண்டாம், 334 00:21:19,279 --> 00:21:23,115 ஏனென்றால் இது உனக்கு முக்கியம் என்பதால், எனக்கும் முக்கியம் தான். 335 00:21:23,116 --> 00:21:25,369 ஆனால், இதை நீ வாழ்க்கையின் பிற்பகுதியில் செய்யலாம். 336 00:21:26,245 --> 00:21:27,703 உன் பட்டப்படிப்பை முடித்த பிறகு. 337 00:21:27,704 --> 00:21:28,955 உன் மருத்துவ பயிற்சியை முடித்த பிறகு. 338 00:21:28,956 --> 00:21:31,624 உங்களுக்குப் புரியவில்லை. என்னை முழுமையாக்கும் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன். 339 00:21:31,625 --> 00:21:33,418 - நிஜமாகவே, முழுமையாக்குகிறது. - நிறுத்து, நிறுத்து. 340 00:21:33,919 --> 00:21:36,755 இதை ஒரு கேவலமான நாடகமாக்காதே. 341 00:21:42,845 --> 00:21:44,680 எதையும் செய்யச் சொல்லி நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். 342 00:21:46,181 --> 00:21:47,516 எப்போதும் அப்படி செய்ததில்லை. 343 00:21:48,809 --> 00:21:50,393 உன் அப்பாவை நான் விவாகரத்து செய்த பிறகு 344 00:21:50,394 --> 00:21:52,479 நீ ஸ்பெயினில் இருக்க விரும்பிய போது, 345 00:21:52,688 --> 00:21:55,440 அதை நீ விரும்பியதால், நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். 346 00:21:56,483 --> 00:21:57,317 ஆமாம். 347 00:21:58,777 --> 00:22:01,780 உன்னுடைய விருப்பம் எதுவானாலும் நான் அதை ஆதரிப்பேன் என நீ தெரிந்துகொள். 348 00:22:02,531 --> 00:22:03,407 எப்போதும். 349 00:22:06,952 --> 00:22:10,956 - உண்மையில் என்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்... - நன்றி. 350 00:22:20,465 --> 00:22:24,136 ஒன்றுமில்லை, மகனே. அவளைப் பரிசோதனை செய்கிறார்கள். ஒன்றும் பிரச்சினை இருக்காது. 351 00:22:25,137 --> 00:22:26,637 ரமோன், போய் ஹுலியோவை அழைத்து வாருங்கள். 352 00:22:26,638 --> 00:22:28,306 எப்படியாவது உங்களை அங்கே சந்திக்க முயற்சி செய்றேன். 353 00:22:28,307 --> 00:22:29,725 அதைப் பற்றி இப்போது கவலைப்படாதே. 354 00:22:33,478 --> 00:22:34,563 ஒருவேளை உனக்குத் தேவைப்பட்டால். 355 00:22:35,272 --> 00:22:37,399 இல்லை, ரமோன். அதை என்னிடம் கொடுக்காதீர்கள், அப்பா. 356 00:22:38,567 --> 00:22:41,236 நீ இல்லாமல் இந்த ஆம்புலன்ஸ் எங்களுக்குத் தேவையில்லை. நீயே வைத்துக்கொள். 357 00:22:41,570 --> 00:22:45,282 கிரிஸிற்கு ஏதாவது அவசரம் என்றால், உனக்கு இந்த வண்டி தேவைப்படும். 358 00:22:48,035 --> 00:22:49,995 அவள் நலமாக இருந்தால், நீ வா. 359 00:22:50,954 --> 00:22:51,997 நான் ஹுலிடோவிற்கு விளக்குகிறேன். ஹ்ம்? 360 00:22:56,376 --> 00:22:57,586 நன்றி, அப்பா. 361 00:22:58,962 --> 00:23:00,839 - உண்மையாகச் சொல்கிறேன், நண்பா. - எது தேவையென்றாலும் சொல்லு. 362 00:23:01,757 --> 00:23:02,925 - சரி. - சரி, போகலாம். 363 00:23:12,017 --> 00:23:15,270 தாய், 364 00:23:16,230 --> 00:23:17,606 சேய், 365 00:23:18,357 --> 00:23:19,525 இருவருமே நலம். 366 00:23:22,945 --> 00:23:23,987 மிகவும் நன்றி, மரியோ. 367 00:23:24,530 --> 00:23:25,864 நன்றியெல்லாம் தேவையில்லை. 368 00:23:27,324 --> 00:23:28,367 நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. 369 00:23:30,160 --> 00:23:31,370 கிரிஸ் இளமையானவள். 370 00:23:31,828 --> 00:23:32,955 வலிமையோடும் இருக்கிறாள். 371 00:23:33,664 --> 00:23:34,957 அதுதான் சாதகமாக இருந்தது. 372 00:23:35,666 --> 00:23:37,793 ஆனால் அவளை இப்படிப்பட்ட ஆபத்தில் தள்ளி விடாதே. 373 00:23:39,545 --> 00:23:42,422 - நான் போகலாமா? - உனக்கு ஓய்வு தேவை. 374 00:23:43,715 --> 00:23:47,010 இன்னும் இரண்டு மணி நேரம் நீயும், உன் குழந்தையும் எங்கள் கண்காணிப்பில் இருந்தால் நல்லது. 375 00:23:47,678 --> 00:23:48,762 சும்மா ஒரு ஜாக்கிரதைக்குத் தான். 376 00:23:49,888 --> 00:23:51,598 நான் கிளம்புகிறேன், நீங்கள் பேசிக்கொள்ளலாம். 377 00:23:52,975 --> 00:23:54,476 ஆனால் கொஞ்சம் தூங்கு. 378 00:24:00,649 --> 00:24:05,153 இதற்கான செலவை, உன் ஊதியத்தில் இருந்து எடுத்துக்கொள்ளும் படி மார்டிட்டாவிடம் சொல்கிறேன். 379 00:24:13,579 --> 00:24:15,163 இவர் கிடைக்கும் வாய்ப்பை விட மாட்டார். 380 00:24:17,207 --> 00:24:19,459 உண்மையாகவே போலீஸை எதிர்க்க நினைத்தாயா? 381 00:24:20,794 --> 00:24:24,423 - நான் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறாய்? அவங்க... - போலீஸ் எப்படிப்பட்டவர்கள் என்று உனக்கே தெரியும். 382 00:24:37,311 --> 00:24:40,314 நமக்குத் தேவைப்படக்கூடுமோ என்று இதை ரமோன் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார், சரியா? 383 00:24:40,856 --> 00:24:43,316 நாம் எங்கேயாவது போக வேண்டும் என்றாலோ அல்லது வேறு எதற்காகவோ. 384 00:24:43,317 --> 00:24:45,318 இன்றிரவு உனக்குச் சவாரி இருக்கிறது, இல்லையா? 385 00:24:45,319 --> 00:24:47,070 நீங்கள் சேர்ந்து வேலை செய்யும் கடைசி ஷிஃப்ட்? 386 00:24:47,654 --> 00:24:51,783 ஆமாம், அது என்னுடைய யோசனை தான். ஆனால், சத்தியமாகச் சொல்கிறேன், இது தான் கடைசி தடவை. 387 00:24:54,828 --> 00:24:57,664 அவர்கள் உனக்காகத் தான் காத்திருக்கிறார்கள் என தெரியும், மார்கஸ், ஆனால்... 388 00:24:59,458 --> 00:25:01,126 நான் தனியாக இருக்க மாட்டேன். 389 00:25:11,053 --> 00:25:13,096 உனக்குக் கொஞ்சம் ஒய்வு தேவை என டாக்டர் சொன்னார். 390 00:25:14,264 --> 00:25:15,723 நான் போய் அவர்களிடம் சாவிகளைக் கொடுத்துவிட்டு வருகிறேன். 391 00:25:15,724 --> 00:25:18,518 நான் என் பெற்றோர்களிடம் பேசிவிட்டேன். என் உடன் பிறந்தவர்களுடன் இனி தான் பேச வேண்டும். 392 00:25:18,519 --> 00:25:21,563 நாம் அமெரிக்கா போகிறோம் என்பதை, நான் அவர்களை நேரில் பார்த்துச் சொல்ல வேண்டும். 393 00:25:23,649 --> 00:25:25,359 இரண்டு மணி நேரம் தான். நான் திரும்பி வந்துவிடுவேன். 394 00:25:28,695 --> 00:25:29,655 நான் திரும்பி வந்துவிடுவேன். 395 00:25:36,370 --> 00:25:38,622 மார்கஸிடம் ஏன் ஆம்புலன்ஸைக் கொடுத்தீர்கள்? 396 00:25:39,122 --> 00:25:40,791 அதை வைத்துக் கொண்டு, அவன் நம்மை ஏமாற்றமாட்டான் என்று நம்புவோம். 397 00:25:41,500 --> 00:25:42,501 உன்னுடைய அண்ணன் ரொம்ப பிஸி. 398 00:25:43,669 --> 00:25:45,212 ஆனால், அவன் வருகிறான் தானே? 399 00:25:50,217 --> 00:25:52,219 மன்னியுங்கள், பஸ் கிடைக்கவில்லை! 400 00:25:52,678 --> 00:25:53,971 சாக்கு சொல்கிறாள்! 401 00:25:55,430 --> 00:25:56,515 அதனால்? 402 00:25:58,517 --> 00:25:59,935 நான் தேர்வில் வெற்றி பெற்றால், 403 00:26:00,269 --> 00:26:03,272 கல்லூரியிலேயே தொடர்ந்து படிக்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். 404 00:26:06,233 --> 00:26:08,777 அவர்களைப் போட்டுச் சாத்த வேண்டியது தான். 405 00:26:10,445 --> 00:26:13,115 - நீ ஒன்றும் சொல்ல மாட்டாயா? - ம், சொல்கிறேன், வாழ்த்துக்கள். 406 00:26:13,740 --> 00:26:15,242 சரி, ஆம்புலன்ஸ் எங்கே? 407 00:26:15,951 --> 00:26:17,618 உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா? 408 00:26:17,619 --> 00:26:18,619 அப்படி இல்லை. 409 00:26:18,620 --> 00:26:21,373 நான் ஆம்புலன்ஸிற்காக ரொம்பவே ஏங்கப் போகிறேன். 410 00:26:24,084 --> 00:26:25,585 பாரு. அதைப் பற்றி பேசியதும், அது வருகிறது 411 00:26:25,586 --> 00:26:27,504 - பரவாயில்லை. - யார் வந்திருக்கிறார்கள் பார். 412 00:26:33,177 --> 00:26:35,261 - நீ வந்துவிட்டாயே. - தாமதமாக வந்துவிட்டாய். 413 00:26:35,262 --> 00:26:37,764 - கொஞ்சம் பொறுங்கள். - அங்கே ஒன்றும் பிரச்சினையில்லையே? 414 00:26:38,807 --> 00:26:40,266 ஒரு அவசரத்தில் இருக்கிறேன். நான் திரும்ப போகணும். 415 00:26:40,267 --> 00:26:42,727 - உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும். -“அவசரத்தில்” என்றாயே அது என்ன? 416 00:26:42,728 --> 00:26:46,189 சொல். இது தான் நாம் சேர்ந்திருக்கும் கடைசி இரவு என்று சொன்னாயே. 417 00:26:46,190 --> 00:26:48,024 - அமைதியாக இரு. - ஐயோ, முடியாது. 418 00:26:48,025 --> 00:26:50,027 நீங்கள் விரும்பியதைத் தான் நீங்கள் எல்லோரும் செய்கிறீர்கள். 419 00:26:50,485 --> 00:26:51,986 எனக்கு என்ன விருப்பம் என்று யாரும் கேட்பதில்லை. 420 00:26:51,987 --> 00:26:53,154 ஹுலியோ... 421 00:26:53,155 --> 00:26:55,574 ஒரே ஒருமுறை நான் எதையாவது கேட்டால், இந்த மாதிரி ஆகி விடுகிறது. 422 00:26:56,408 --> 00:26:57,451 இது நியாயமே இல்லை! 423 00:27:02,247 --> 00:27:04,249 இதுதான் கடைசி முறை, மார்கஸ். 424 00:27:06,418 --> 00:27:10,255 நீ சத்தியம் செய்திருக்கிறாய். இது உன்னுடைய யோசனை. 425 00:27:11,173 --> 00:27:13,467 முதல் அவசர அழைப்பிற்கு மட்டும் செல்லலாம். இரவு முழுவதும் வேலை செய்ய கூடாது. 426 00:27:13,675 --> 00:27:15,052 நான் கிரிஸிஸ்-ஐ பார்க்கப் போக வேண்டும். 427 00:27:15,385 --> 00:27:18,180 அப்படியானால் நாம் பேசுவோம். உன்னிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். 428 00:27:20,224 --> 00:27:21,849 ஹே, வேண்டாம். அது என்னுடைய இடம். 429 00:27:21,850 --> 00:27:23,769 இல்லை. நீ தாமதமாக வந்ததால் இந்த இடம் தான் உனக்கு. 430 00:27:26,063 --> 00:27:27,438 ஒன்றும் செய்ய முடியாது, ப்ரோ. 431 00:27:27,439 --> 00:27:29,524 இந்தச் சிறுவன் ரொம்பவே கெட்டுப் போய்விட்டான், ரமோன். 432 00:27:29,525 --> 00:27:31,276 - கொஞ்சம் தள்ளி உட்கார். - அடச்சே. 433 00:27:36,865 --> 00:27:38,742 ரமோன், உங்களுக்குக் கேட்கிறதா? 434 00:27:38,992 --> 00:27:41,160 கேட்கிறது, கார்மென். நாங்கள் தயாராக இருக்கிறோம். 435 00:27:41,161 --> 00:27:43,246 என்னை அழ வைக்கப் போகிறீர்கள், நண்பா. 436 00:27:43,247 --> 00:27:46,207 உங்கள் எல்லோரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். நாம் எவ்வளவு வருடங்கள் ஒன்றாகவே வேலை செய்துள்ளோம். 437 00:27:46,208 --> 00:27:49,502 என் அப்பா உங்களை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், கார்மென். 438 00:27:49,503 --> 00:27:52,129 உன் அப்பா கொஞ்சம் பொறுமையான ஆள். 439 00:27:52,130 --> 00:27:54,465 நான் அவரிடம் வலை வீசினேன், ஆனால், அவர் அதைப் பிடிக்கப் போவதில்லை. 440 00:27:54,466 --> 00:27:56,133 - ஓ. - சரி. 441 00:27:56,134 --> 00:27:58,345 - அட, ரமோன்! - இது உண்மையில் இங்கு தான் முடிவடைகிறதா? 442 00:27:59,471 --> 00:28:02,098 என்ன சொல்கிறாய், செல்லம்? நான் எனக்காகத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். 443 00:28:02,099 --> 00:28:05,018 எப்போதுமே நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த நபராகத்தான் இருப்பீர்கள், தெரியுமா? 444 00:28:05,519 --> 00:28:07,187 உங்கள் பிரிவால் ரொம்பவே வாடுவேன். 445 00:28:07,563 --> 00:28:10,148 அதை நிரூபிக்க, இன்றிரவு வரும் முதல் வாய்ப்பு, உங்களுக்குத் தான். 446 00:28:10,482 --> 00:28:13,109 டேபெயாக் பகுதியில் அவசர அழைப்பு. 447 00:28:13,110 --> 00:28:15,611 நான் அதை இன்னும் தெரியப்படுத்தவில்லை, அதனால் நீ சீக்கிரம் போனால் நல்லது. 448 00:28:15,612 --> 00:28:17,446 - புரிந்தது. - நாம் போகலாம். 449 00:28:17,447 --> 00:28:19,448 எல்லாவற்றிற்கும் நன்றி, அன்பு கார்மென். 450 00:28:19,449 --> 00:28:20,408 நன்றி, ரமோன். 451 00:28:20,409 --> 00:28:22,953 - எல்லாவற்றிற்கும். - நன்றி, செல்ல கார்மென். 452 00:28:43,390 --> 00:28:45,434 {\an8}கிரிஸ், இன்னும் கொஞ்சம் நேரம் வெளியில் இருக்க வேண்டியுள்ளது 453 00:28:45,726 --> 00:28:47,811 {\an8}நீ தூங்கிவிட்டாயா? 454 00:28:48,228 --> 00:28:50,147 {\an8}சீக்கிரமே வந்துவிடுவேன். 455 00:28:59,072 --> 00:29:00,240 என்ன... 456 00:29:03,827 --> 00:29:05,579 சுற்றிக்கொண்டு இருக்காதே, குட்டி. சரியா? 457 00:29:06,914 --> 00:29:08,080 - குட் ஈவ்னிங். - குட் ஈவ்னிங். 458 00:29:08,081 --> 00:29:09,582 என்ன அவசர அழைப்பு வந்தது? 459 00:29:09,583 --> 00:29:11,751 யார் மேலோ வாகனம் ஏறிவிட்டது. இரண்டு பேர் பலமாக அடிபட்டுள்ளனர், 460 00:29:11,752 --> 00:29:14,462 உள் காயங்கள் இருக்கலாம். அவசர முதலுதவி தேவை. 461 00:29:14,463 --> 00:29:15,672 அந்த இடம் பாதுகாப்பானது தானே? 462 00:29:15,923 --> 00:29:17,131 நிச்சயமாக. 463 00:29:17,132 --> 00:29:19,218 ஆனால், ஹே, இந்தச் சிறுவன் இங்கு என்ன செய்கிறான்? 464 00:29:20,052 --> 00:29:21,345 இது குழந்தைகளுக்கான இடம் இல்லை. 465 00:29:21,553 --> 00:29:22,887 அவன் என் மகன். அவனும் இந்தக் குழுவில் ஒருவன். 466 00:29:22,888 --> 00:29:25,389 சரி. உங்கள் இஷ்டம். நான் தான் அனுமதித்தேன் என்று யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். 467 00:29:25,390 --> 00:29:27,183 சரி, எங்களுக்கு இரண்டு ஸ்ட்ரெச்சர்கள் வேண்டும். 468 00:29:27,184 --> 00:29:29,101 சரி. சீக்கிரம், டாக். 469 00:29:29,102 --> 00:29:31,063 திடமான ஸ்ட்ரெச்சர்களையும், கழுத்துப்பட்டிகளையும் எடுத்துக்கொள்வோம். 470 00:29:31,605 --> 00:29:32,605 நாசமாய் போனவன். 471 00:29:32,606 --> 00:29:33,731 ஹாய், குடும்பத்தினரே. 472 00:29:33,732 --> 00:29:35,525 நாம் மட்டும் தான் குடும்பத்தினர் என்று நினைத்தேன். 473 00:29:35,526 --> 00:29:36,943 யார் இந்த ஆளைக் கூப்பிட்டது? 474 00:29:36,944 --> 00:29:39,695 - இவன் நம்மைப் பின்தொடர்கிறானா? - விடுங்கள், அப்பா, சரியா? 475 00:29:39,696 --> 00:29:41,364 - சரி, நாம் போகலாம். - போகலாம். 476 00:29:41,365 --> 00:29:43,825 நாம் கிளம்பலாம், மக்களே. ஹுலிடோ, ஏதாவது போட்டு மூடிக்கொள். 477 00:29:46,161 --> 00:29:47,913 ஹே, என்ன ஒரு தற்செயலான நிகழ்வு? 478 00:29:48,163 --> 00:29:49,373 இங்கு என்ன செய்கிறாய்? 479 00:29:49,665 --> 00:29:52,417 நான் “தி அயன் புல்ஸ்” கால்பந்தாட்ட அணியில் விளையாடுகிறேன். 480 00:29:52,668 --> 00:29:55,461 குழந்தைகள் தெருக்களில் சுற்றாமல் இருப்பதற்கு, விளையாட்டு தான் சிறந்த வழி. 481 00:29:55,462 --> 00:29:57,964 நாங்கள் லாஸ் வல்கானிக்கோஸுக்கு எதிராக விளையாடுகிறோம். 482 00:29:57,965 --> 00:30:00,550 அவர்கள் உள்ளூர் அணி. எனவே, நிறைய ஆதரவாளர்கள் வந்திருந்தனர். 483 00:30:00,551 --> 00:30:02,468 நிலைமை கைமீறிச் சென்றது, 484 00:30:02,469 --> 00:30:05,805 ஒரு கட்டத்தில், கூட்டத்தில் ஒருவன் வண்டியை எடுத்துக்கொண்டு, 485 00:30:05,806 --> 00:30:07,598 வேகமாக வந்து, 486 00:30:07,599 --> 00:30:09,475 மைதானத்தில் இடித்துவிட்டான்! 487 00:30:09,476 --> 00:30:10,810 மானுவேல் மீது மோதிவிட்டான். 488 00:30:10,811 --> 00:30:12,895 - கோல் கீப்பரா? - அவரது கால் நொறுங்கிவிட்டது. 489 00:30:12,896 --> 00:30:14,313 ஐயோ, அவருடைய கால். 490 00:30:14,314 --> 00:30:17,984 இன்னொருவர் அதோ அங்கிருக்கிறார். இருக்கைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டார். 491 00:30:17,985 --> 00:30:20,903 - எங்களால் இவரை வெளியே எடுக்க முடியவில்லை. - அவர்களிருவருக்கு மட்டும் தானே காயம்? 492 00:30:20,904 --> 00:30:23,948 ஆம். ஆனால் அங்கு சண்டைப் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அனைவருக்கும் அடிபட்டிருக்கும். 493 00:30:23,949 --> 00:30:25,993 காயம் அதிகம் இருப்பவரை முதலில் பார்ப்போம். 494 00:30:26,910 --> 00:30:29,621 முதலில் இவர், பிறகு காரினுள்ளே இருப்பவர். 495 00:30:29,830 --> 00:30:31,122 கொஞ்ச நேரம் சுயநினைவின்றி இருந்தார். 496 00:30:31,123 --> 00:30:32,456 இவர் நாடித்துடிப்பு குறைவாக இருக்கு. 497 00:30:32,457 --> 00:30:35,168 இரத்தக்கசிவை நிறுத்த அவர் சட்டையை இழுத்துக் கட்டினேன். 498 00:30:35,169 --> 00:30:37,003 நல்ல வேலை செய்தீர்கள், லூக். 499 00:30:37,004 --> 00:30:39,380 இப்போது அவர் மீதிருந்து இதை எடுப்பதுதான் கடினமான விஷயம். 500 00:30:39,381 --> 00:30:40,965 இப்போதே, நாம் இவரை வெளியே எடுக்க வேண்டும். 501 00:30:40,966 --> 00:30:42,592 நாம் இரு குழுக்களாகப் பிரிந்துக்கொள்வோம். 502 00:30:42,593 --> 00:30:43,760 இங்கே வா, மார்கஸ். 503 00:30:44,052 --> 00:30:46,262 இவருக்கு சலைன் கொடுத்து, இடுப்புக்குக் கீழ் உணர்ச்சியில்லாத படி செய். 504 00:30:46,263 --> 00:30:49,098 - சரி, டாக். - என்னானது, அப்பா? 505 00:30:49,099 --> 00:30:52,436 இவர் சுயநினைவுடன் இருக்கிறார், ஆனால் இவரை காரிலிருந்து வெளியே எடுப்பது ரொம்ப கஷ்டம். 506 00:30:53,228 --> 00:30:55,396 - தீயணைப்பு வீரர்கள் வருகிறார்களா? - ஆம், உறுதியாகிவிட்டது. 507 00:30:55,397 --> 00:30:59,650 ஹுலியோ, உதவி செய். இதை நன்றாகப் பிடி. 508 00:30:59,651 --> 00:31:01,319 நான் கிரிஸ்டினாவைப் பார்க்கப் போக வேண்டும், தம்பி. 509 00:31:01,320 --> 00:31:03,529 இது ரொம்ப மோசம். என்ன செய்ய வேண்டும் என்று சொல். 510 00:31:03,530 --> 00:31:06,616 இந்த ஸ்ட்ரெச்சரை கீழ்புறமாகச் செலுத்தப் போகிறோம். அந்தக் கழுத்துப்பட்டையைக் கொடு. 511 00:31:06,617 --> 00:31:08,619 முன்புறத்தில் இருப்பவர்கள் தயாரானதும், நாம் இவரை நகரத்தணும். 512 00:31:09,745 --> 00:31:11,829 அவரது உடல் பேனல்களுக்கு நடுவே சிக்கியுள்ளது. 513 00:31:11,830 --> 00:31:13,749 நாம் உள்காயங்களைக் கண்டறிய வேண்டும். 514 00:31:14,333 --> 00:31:15,918 அங்கே என்ன நிலைமை, மார்கஸ்? 515 00:31:16,335 --> 00:31:18,170 வெளியே எடுப்பதற்கு டர்னிகேட் கருவியைப் பயன்படுத்துகிறோம். 516 00:31:19,129 --> 00:31:20,839 வெளியே எடுப்பதற்கு ஆட்கள் வேண்டும். 517 00:31:21,089 --> 00:31:23,341 வீணாய்ப்போன தீயணைப்பு வீரர்கள். இந்நேரம் அவர்கள் இங்கிருந்திருக்கணும். 518 00:31:23,342 --> 00:31:24,801 என்னை மேலே தூக்குங்கள், அப்பா. 519 00:31:25,052 --> 00:31:26,512 ஒன்று, இரண்டு, மூன்று, தூக்குங்கள். 520 00:31:27,763 --> 00:31:30,849 ஹே, நண்பா, நான் பேசுவது கேட்கிறதா? நான் ஒரு மருத்துவ உதவியாளர். உதவ வந்திருக்கிறேன். 521 00:31:31,183 --> 00:31:33,268 உங்கள் நாடித்துடிப்பைச் சரி பார்க்கிறேன். என்ன நடந்தது என ஞாபகமிருக்கா? 522 00:31:34,269 --> 00:31:35,562 என்னை கெட்டியாகப் பிடியுங்கள், அப்பா. 523 00:31:37,814 --> 00:31:40,358 வெளியே எடுப்பதற்கு காரைத் தூக்க வேண்டும். 524 00:31:40,359 --> 00:31:42,194 ஹுலியோ, சீக்கிரம், அவர்களை அழைத்து வா. நிலைமை மோசமாக இருக்கு. 525 00:31:48,116 --> 00:31:49,325 ஒன்றுமில்லை, நண்பா! ஒன்றுமில்லை. 526 00:31:49,326 --> 00:31:52,828 மார்கஸ் மானுவேலை ஆம்புலன்ஸில் அழைத்து வருகிறான். உங்களுக்கு வேறெதாவது வேண்டுமா? 527 00:31:52,829 --> 00:31:56,040 - இல்லை, வேண்டாம். - எதற்கும் நானும் போகிறேன். 528 00:31:56,041 --> 00:31:57,334 இல்லை, தேவையில்லை. 529 00:31:59,253 --> 00:32:02,713 சீக்கிரம். இது சரியாகப்படவில்லை. உள்ளுறுப்புகளில் இரத்தக்கசிவு ஏற்படுகிறது. 530 00:32:02,714 --> 00:32:04,967 சீக்கிரம் ஸ்ட்ரெச்சரை எடுத்து வாருங்கள். 531 00:32:06,760 --> 00:32:08,887 உள்காயத்தைச் சரிசெய்ய வேண்டும்! 532 00:32:09,221 --> 00:32:12,307 மூச்சை நன்றாக இழுத்துவிடுங்கள், அப்படித்தான், அப்படித்தான்! 533 00:32:14,017 --> 00:32:15,686 காலைப் பிடித்துவிட்டேன்! 534 00:32:16,603 --> 00:32:19,147 வெளியே வருகிறார். இன்னும், இன்னும், இன்னும். 535 00:32:20,649 --> 00:32:23,485 தயாரா? சீக்கிரம், அங்கே கொண்டு செல்லுங்கள். 536 00:32:28,615 --> 00:32:30,074 கிரிஸ்: நான் இன்றிரவு மருத்துவமனையிலேயே இருக்கிறேன் 537 00:32:30,075 --> 00:32:31,242 மார்கஸ்: சீக்கிரம் வந்துவிடுகிறேன் 538 00:32:31,243 --> 00:32:32,452 ஐயோ, மார்கஸ். இங்கே பாரு. 539 00:32:34,746 --> 00:32:37,748 இங்கே கவனம் செலுத்து, மார்கஸ். உன்னை அங்கே அழைத்து போகிறோம். ஆனால் முதலில் இவரைக் காப்பாற்றுவோம். 540 00:32:37,749 --> 00:32:40,085 ஐயோ, மேரிகபி, நான் இங்கு வந்திருக்கவே கூடாது. 541 00:32:40,377 --> 00:32:41,628 உதவி செய், மார்கஸ். 542 00:32:43,255 --> 00:32:45,883 சரி, சரி. உதவி செய்கிறேன், சரியா? 543 00:32:46,717 --> 00:32:49,511 நாம் ஏன் இதை விடுகிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. 544 00:32:50,470 --> 00:32:51,512 - டாக். - என்னானது? 545 00:32:51,513 --> 00:32:53,848 இவருக்கு உள்ளுறுப்புகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருக்குமோ? 546 00:32:53,849 --> 00:32:56,225 நாம் அங்கு சீக்கிரம் போக வேண்டும், வேகமாக ஓட்டுங்கள், அப்பா. 547 00:32:56,226 --> 00:32:57,394 முடிந்தவரை வேகமாக ஓட்டுகிறேன். 548 00:32:58,437 --> 00:32:59,562 தெரியவில்லை, 549 00:32:59,563 --> 00:33:02,149 நாங்கள் மிகப்பெரிய செயலைச் செய்வது போலத் தோன்றுகிறது. 550 00:33:02,816 --> 00:33:04,443 மாற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறோம். இல்லையா? 551 00:33:10,824 --> 00:33:12,533 சில நேரங்களில், நாங்கள் செயல்படாமல் இருந்தாலும், 552 00:33:12,534 --> 00:33:15,287 எங்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. 553 00:33:16,121 --> 00:33:19,208 எல்லாமே மாறினாலும், நாங்கள் ஒரு நல்ல அணியாகத்தான் இருப்போம். 554 00:33:37,809 --> 00:33:39,645 ஐயோ, கிரிஸ்டினா. 555 00:33:40,979 --> 00:33:42,773 அடச்சே. 556 00:33:47,694 --> 00:33:49,154 கிரிஸ் பற்றிய கவலையா? 557 00:33:52,199 --> 00:33:53,951 அவள் என் அழைப்புகளை எடுக்கவில்லை. 558 00:33:57,287 --> 00:33:59,163 சீக்கிரம் சாப்பிடுகிறாயா, தம்பி? 559 00:33:59,164 --> 00:34:00,623 அவள் எனக்காகக் காத்திருக்கிறாள். 560 00:34:00,624 --> 00:34:03,669 அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்திருப்பார்கள், அண்ணா. 561 00:34:04,253 --> 00:34:06,337 - அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்காது. - அவள் என் அழைப்பை எடுத்திருக்கணும், இல்லையா? 562 00:34:06,338 --> 00:34:07,839 மரியோ அலான்சோவை அழைத்துப் பேசு. 563 00:34:07,840 --> 00:34:09,049 அப்பா வருகிறார். 564 00:34:10,551 --> 00:34:13,512 காரில் சிக்கியவன் இறந்துவிட்டான். உள்ளுறுப்புகள் சிதைந்துவிட்டன. 565 00:34:14,096 --> 00:34:17,599 கோல் கீப்பர் தேறி வருகிறான். நிலையாக இருக்கிறான், ஆனால் அவன் கால்களை எடுத்துவிட்டனர். 566 00:34:18,516 --> 00:34:20,268 நான் அதை விடப் போவதில்லை. 567 00:34:20,518 --> 00:34:22,228 இந்த விபத்துக்களையெல்லாம் கேட்கவே கஷ்டமாக இருக்கு. 568 00:34:22,688 --> 00:34:25,649 - மோசமான மனநிலையில் இருப்பதால் இப்படி சொல்கிறாய். - உன்னை சீக்கிரம் சாப்பிடச் சொன்னேன். 569 00:34:26,024 --> 00:34:27,609 - போகலாம். - நன்றி. 570 00:34:29,485 --> 00:34:30,903 நிஜமாகச் சொல்கிறேன். 571 00:34:30,904 --> 00:34:32,280 ஐயோ, கிரிஸ்டினா. 572 00:34:32,281 --> 00:34:35,324 இறுதியில், அந்தக் கார்காரன் செய்தது சரிதான், இல்லையா? 573 00:34:36,659 --> 00:34:39,246 அவன் செய்தது சரி என்றால் என்ன அர்த்தம்? 574 00:34:39,496 --> 00:34:41,872 அவர் வன்முறை செய்ததால் இறந்துவிட்டார். 575 00:34:41,873 --> 00:34:44,543 ஆம், ஆனால் அவர் பிடித்ததைச் செய்துவிட்டு இறந்திருக்கிறார். 576 00:34:44,960 --> 00:34:46,170 என்ன சொல்கிறாய், ஹுலியோ? 577 00:34:46,670 --> 00:34:50,590 நம்மை போன்றில்லை. இந்த ஆம்புலன்ஸிலேயே வயதாகி, நம் காலத்தை ஓட்டிவிடுவோம் என்று நினைத்தேன். 578 00:34:50,591 --> 00:34:53,342 நாளைக்கு அதுவும் நம்மிடம் இருக்காது. 579 00:34:53,677 --> 00:34:57,222 ஆச்சரியமான விஷயம், தம்பி. ரமோனுக்கு ஏற்கனவே வயதாகிவிட்டது. 580 00:34:57,556 --> 00:34:58,682 அது பொய். 581 00:35:07,941 --> 00:35:10,944 எடு, ஃபோனை எடு. 582 00:35:22,414 --> 00:35:23,290 ஹலோ. 583 00:35:23,790 --> 00:35:27,794 கிரிஸிஸ்? என்ன இது, அன்பே. ஏன் என் அழைப்பை எடுக்கவில்லை? 584 00:35:28,086 --> 00:35:29,588 எப்படியிருக்கிறாய்? உனக்கு ஒன்றுமில்லையே? 585 00:35:31,089 --> 00:35:32,549 பதட்டப்படாதே, நான் நன்றாக இருக்கிறேன். 586 00:35:32,925 --> 00:35:36,844 மன்னித்துவிடு, ஹுலிடோ என்னை அவனுடன் வரச்சொல்லி தொந்தரவு செய்தான். 587 00:35:36,845 --> 00:35:38,721 ஆனால் நான் அங்கு சீக்கிரம் வந்துவிடுவேன், சரியா? 588 00:35:38,722 --> 00:35:40,014 இல்லை, இல்லை, வேண்டாம். 589 00:35:40,015 --> 00:35:43,477 வாழ்க்கையில் ஒரு முறையாவது, நீ செய்த வேலைக்கு பொறுப்பேற்றுக் கொள், மார்கஸ். 590 00:35:44,228 --> 00:35:48,315 அது மட்டுமில்லாமல், ஹுலியோ சின்ன பையன். அவன் உன்னை எதற்கும் வற்புறுத்தமாட்டான். 591 00:35:50,234 --> 00:35:54,112 ஹே, மன்னித்துவிடு. அவர்களால் கனமான பொருள்களைத் தூக்க முடியாது என உனக்கே தெரியும். 592 00:35:54,404 --> 00:35:57,073 ஆனால், நான் வந்து விடுகிறேன். நீ தூங்கிவிட்டாய் என நினைத்தேன், செல்லம். 593 00:35:57,074 --> 00:36:00,993 எனக்குத் தனியாக இருக்க பயமாகயிருக்கும் எனச் சொன்னேன் தானே. நீ அதைப்பற்றி கவலைப்படவே இல்லை. 594 00:36:00,994 --> 00:36:06,040 சரி, ஆமாம், நான் தவறு செய்துவிட்டேன். இப்போது என்ன செய்வது? 595 00:36:06,041 --> 00:36:09,086 ஆனால், இது ஒரு பெரிய விஷயமில்லை. 596 00:36:10,045 --> 00:36:13,673 பரவாயில்லை. நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முன்னுரிமைகள் இருக்கும். 597 00:36:13,674 --> 00:36:18,845 என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? பேசாமல் இரு, நான் இதோ வந்துவிடுகிறேன். 598 00:36:18,846 --> 00:36:21,097 - தயவுசெய்து விடு. - இல்லை. 599 00:36:21,098 --> 00:36:24,934 நான் டிஸ்சார்ஜ் ஆகப் போகிறேன், பிறகு கிளம்பிவிடுவேன். 600 00:36:24,935 --> 00:36:26,853 பிறகு, சொன்னது போல, இந்த நாட்டை விட்டு போய்விடுவேன். 601 00:36:26,854 --> 00:36:30,940 தெரியும், நாம் இருவரும் சேர்ந்து போவதாகத் தானே திட்டமிட்டிருந்தோம். 602 00:36:30,941 --> 00:36:32,818 வேண்டாம், இப்படி செய்யாதே, செல்லம். 603 00:36:33,068 --> 00:36:35,237 - பார், கிரிஸிஸ்... - நாம்... 604 00:36:36,238 --> 00:36:39,992 நாம் இருவரும் சேர்ந்து போக மாட்டோம், மார்கஸ். நான் தனியாகப் போகிறேன். 605 00:36:40,617 --> 00:36:44,496 கிரிஸிஸ், வேண்டாம் இப்படி செய்யாதே. கிரிஸிஸ். கிரிஸ்டினா. 606 00:36:46,498 --> 00:36:49,250 - ஐயோ. ரமோன், சீக்கிரம் போங்கள். - சரி. அமைதியாக இரு, மார்கஸ். 607 00:36:49,251 --> 00:36:53,087 - சீக்கிரம் போங்கள், அப்பா. அவள் மனநிலை சரியில்லை. - வேகமாகத்தான் போகிறேன். பொறுமையாக இரு! 608 00:36:53,088 --> 00:36:54,755 சரி, ஆனால், அவரிடம் கத்தாதே... 609 00:36:54,756 --> 00:36:57,593 நான் கத்தவில்லை, ஆனால் நான் இங்கு என்ன செய்கிறேன், சொல்லு? 610 00:37:07,686 --> 00:37:09,563 ஆம்புலன்ஸ் கே42, ஆம்புலன்ஸ். 611 00:37:10,355 --> 00:37:12,023 - எங்களுக்கு கருவிகள் வேண்டும். - ஏதாவது அவசரமா? 612 00:37:12,024 --> 00:37:13,400 ஆமாம், ஓவர். 613 00:37:17,863 --> 00:37:21,325 அனைத்து ஆம்புலன்ஸ்களின் கவனத்திற்கு, அவசர உதவி தேவை. மெட்ரோ லைன் விழுந்துவிட்டது. 614 00:37:24,578 --> 00:37:26,580 ...டெசோங்கோ மற்றும் ஒலிவோஸ் இடையில்... 615 00:37:28,665 --> 00:37:30,124 இன்னும் நிறைய உதவி தேவை, முன்வாருங்கள்! 616 00:37:30,125 --> 00:37:32,835 எங்களுக்கு நிறைய ஆம்புலன்ஸ்கள் தேவை... 617 00:37:32,836 --> 00:37:35,005 - கேட்கிறதா? - மீண்டும் சொல்கிறேன்: டெசோங்கோ மற்றும் ஒலிவோஸ். 618 00:37:38,467 --> 00:37:41,220 இரயில் பாதையில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. 619 00:37:44,515 --> 00:37:47,643 மீட்பு குழுவினரும், ஆம்புலன்ஸுகளும், தீயணைப்பு வீரர்களும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்... 620 00:37:51,522 --> 00:37:53,273 உங்களுக்குக் கேட்கிறதா, ரமோன்? 621 00:37:54,566 --> 00:37:59,738 இன்று தான் உங்கள் கடைசி நாள், ஆனால் அங்கு போவீர்கள் என நம்புகிறேன். அவர்களுக்கு நிறைய உதவி தேவை. 622 00:39:24,323 --> 00:39:26,325 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்