1 00:00:09,384 --> 00:00:10,385 {\an8}இங்கிலாந்து, 1735 2 00:00:10,385 --> 00:00:13,055 {\an8}- லிட்டில், டிட்டில், கண்ணே? - நீ கேட்கவே மாட்டாய் என நினைத்தேன். 3 00:00:13,055 --> 00:00:14,139 {\an8}உறங்கும் நேரத்திற்கு முன் 4 00:00:18,936 --> 00:00:20,270 ஓ, சால்ட்லி, நிறுத்து. 5 00:00:26,902 --> 00:00:29,571 பெரிய வைரமா, கண்ணே? 6 00:00:42,000 --> 00:00:46,588 ஹட்! ஓடு! ஹீய்யா! ஹட், ஹட்! 7 00:00:46,588 --> 00:00:47,965 என்ன எழவு நடக்குதப்பா? 8 00:00:47,965 --> 00:00:51,593 ஹைவேமேன், சார். உங்களைத் கொள்ளையடிக்கப் போறாங்க. 9 00:00:56,139 --> 00:00:58,183 - நாம் என்ன செய்யலாம்? - உன்னுடைய சண்டை பிஸ்டல். 10 00:00:58,183 --> 00:01:00,185 ஆம். நிச்சயமா. 11 00:01:02,646 --> 00:01:04,522 இது இந்தா, ஓட்டுனரே. நல்வாழ்த்துகள். 12 00:01:05,107 --> 00:01:06,942 என்னுடையது இன்னும் பெரியது என நினைக்கிறேன். 13 00:01:08,318 --> 00:01:09,611 கடவுளே. 14 00:01:10,863 --> 00:01:13,699 - நாம தப்பி ஓட வேண்டி வரும். - இந்த உடையில் என்னால் முடியும் எனத் தோன்றவில்லை. 15 00:01:13,699 --> 00:01:16,618 - என் மனைவியை என்ன செய்தாய்? - நான் இங்கேதான் இருக்கிறேன். 16 00:01:21,832 --> 00:01:22,958 யாரப்பா நீ, கண்றாவி? 17 00:01:22,958 --> 00:01:25,502 கண்ணே, இது டிக் டர்பின். 18 00:01:27,337 --> 00:01:30,507 சரி, நீ ஏன் சொல்லவில்லை? அட்டகாசம். 19 00:01:30,507 --> 00:01:33,510 அனைவருமே டிக் டர்பினால் திருடப்படுவதை விரும்புகிறார்கள், 20 00:01:33,510 --> 00:01:36,805 இவர்தான் எந்த காலத்திற்கும், மிகப் பிரபலமான, அழகான ஹைவேமேன். 21 00:01:36,805 --> 00:01:38,432 இந்தா, என் பணத்தை எல்லாம் எடுத்துக்கொள். 22 00:01:38,432 --> 00:01:40,726 என் டிரௌசர்களையும். இன்னும் சொல்லப்போனால், என் மனைவியையும் வைத்துக்கொள். 23 00:01:40,726 --> 00:01:42,019 நான் போகிறேன். பை. 24 00:01:43,687 --> 00:01:44,730 வினோதமான மனிதர். 25 00:01:45,314 --> 00:01:48,483 மேடம், உங்களை முழுவதுமாக திருடியது மிக்க மகிழ்ச்சித் தருவதாக இருந்தது. 26 00:01:49,193 --> 00:01:50,277 ஒரு நல்ல முத்தம் தர முடியுமா? 27 00:01:50,277 --> 00:01:53,322 நான் அதை விரும்புவேன். ஆனால் இப்போதுதான் உணர்ந்தேன், வண்டியை ஓட்ட யாரும் இல்லை என்பதை. 28 00:01:53,322 --> 00:01:55,157 ஒரு சிறிய முத்தம் வலிக்காதே. 29 00:01:58,327 --> 00:01:59,369 ஓய், டர்பின். 30 00:02:00,120 --> 00:02:02,706 எழுந்துகொள். நீ மீண்டும் கனவு காண்கிறாய் என்று நினைக்கிறேன், நண்பா. 31 00:02:02,706 --> 00:02:04,041 அது டிக் டர்பின். 32 00:02:04,041 --> 00:02:06,043 அனைவருக்கும் டிக் டர்பினால் திருபோக ஆசைப்படுகிறார்கள். 33 00:02:07,419 --> 00:02:08,878 நீ மீண்டும் உறக்கத்தில் பேசினாய். 34 00:02:08,878 --> 00:02:11,131 ஒரு கட்டத்தில் நீ என்னை முத்தமிடப் பார்த்தாய், கிறுக்கனே. 35 00:02:11,131 --> 00:02:13,133 நிஜமாகவா? அது உனக்கு எப்படி இருந்தது? 36 00:02:13,717 --> 00:02:15,302 உன் பொருட்களை எடுத்துக்கொள். நாம் கிளம்புகிறோம். 37 00:02:15,302 --> 00:02:16,595 நல்லது, அது மதிய உணவா? 38 00:02:16,595 --> 00:02:18,430 இல்லை, உன்னை இப்போது தூக்கிலிடப் போகிறார்கள். 39 00:02:18,430 --> 00:02:20,224 அப்படியா. பிறகு மதிய உணவு? 40 00:02:22,351 --> 00:02:23,519 இப்படி ஒரு முட்டாளா. 41 00:02:29,608 --> 00:02:32,152 தேடப்படுகிறார்கள் எஸ்ஸெக்ஸ் கும்பல் 42 00:02:55,300 --> 00:02:57,678 உங்களைத் தூக்கிலிடும்போது, ஒப்பாரி வைக்க நபர் தேவையா, சார்? 43 00:02:57,678 --> 00:02:59,847 - நீ என்னவெல்லாம் வைத்திருக்கிறாய்? - ஒரு ஸ்பெஷல் ஆஃபர். 44 00:02:59,847 --> 00:03:03,642 இரு துக்கபடும் கிழவிகளும், துக்கத்தில் உள்ள ஒரு சிறுவனும். அரை காசு தருவாயா? 45 00:03:03,642 --> 00:03:05,561 அவன் அவ்வளவு துக்கமாக இல்லையே. 46 00:03:05,561 --> 00:03:06,812 சரி. 47 00:03:07,813 --> 00:03:10,190 சரி, உண்மையான விதவைகளை கூட்டி வரவா? 48 00:03:10,190 --> 00:03:13,068 - அப்படி வழிக்கு வா. - ஆம். அனைவருக்கும் இப்போதுதான் துக்கம் நடந்தது. 49 00:03:13,068 --> 00:03:14,695 உண்மையான கண்ணீர் வரும். 50 00:03:14,695 --> 00:03:17,489 மார்கரெட்டைப் பாரு. மார்கரெட்டைப் பாரு. 51 00:03:17,489 --> 00:03:19,366 கிளாசிக்கான சோக மூகம். 52 00:03:19,366 --> 00:03:21,201 - உங்கள் இழப்பிற்கு வருந்துகிறோம். - நன்றி. 53 00:03:21,201 --> 00:03:24,788 மார்கரெட்டை பிடித்துள்ளது. மார்கரெட்டிற்கு சரி. ஒரு டீல் உனக்கு. 54 00:03:24,788 --> 00:03:26,164 உன்னை அங்கே சந்திக்கிறேன். 55 00:03:29,918 --> 00:03:31,086 ரொம்ப சீக்கிரம். 56 00:03:39,344 --> 00:03:41,263 உண்மையில், மார்கரெட், நாம் அந்த இடத்தைச் சென்று அடையும் வரை, ஓலமிடத் தேவையில்லை. 57 00:03:41,263 --> 00:03:43,140 நீ இங்குள்ள மன நிலையை கீழே இழுக்கிறாய். 58 00:03:45,559 --> 00:03:46,768 அந்த கடைசி சொட்டு 59 00:03:46,768 --> 00:03:52,816 இப்போது சிற்றுண்டிகளுக்காக ஒரு சிறிய இடைவேளை இருக்கும். 60 00:03:53,692 --> 00:03:54,610 என்ன நடக்குது? 61 00:03:54,610 --> 00:03:56,945 அவர்கள் நம்மை தூக்கில் போடும் முன், ஒரு முறை நாம் குடிக்கலாம். 62 00:03:56,945 --> 00:03:58,363 பார்த்தாயா, நான் வாங்குகிறேன். 63 00:04:01,825 --> 00:04:05,454 அடுத்த அரை மணிநேரத்தில் யார் மீண்டும் வண்டிக்கு வரவில்லையோ, 64 00:04:05,454 --> 00:04:09,333 அவர்கள் இல்லாமலேயே நான் போய்விடுவேன். சரியா? 65 00:04:12,002 --> 00:04:15,380 ஹலோ. என் பெயர் பூர்லி மார்டின், நான் ஒரு சிக்கனைக் கொன்றேன். 66 00:04:15,964 --> 00:04:17,632 ஹலோ, பூர்லி மார்டின். 67 00:04:17,632 --> 00:04:19,343 ஹலோ. என் பெயர் லிஸ்ஸி ஃபிஷ், 68 00:04:19,343 --> 00:04:21,261 நான் ஒரு வைக்கோல் உருண்டையை தீ வைப்பதாக மிரட்டினேன். 69 00:04:21,261 --> 00:04:23,055 ஹலோ, லிஸ்ஸி ஃபிஷ். 70 00:04:23,055 --> 00:04:25,432 அடடே, இப்போதெல்லாம் எதற்கு வேண்டும் எனிலும் தூக்கிலிடுகிறார்கள். 71 00:04:25,432 --> 00:04:27,768 ஹலோ. என் பெயர், பில் த பிளேட், 72 00:04:28,477 --> 00:04:31,063 நான் என் குடும்பத்தைச் சேர்ந்த 26 உறுப்பினர்களை கொன்றேன். 73 00:04:35,609 --> 00:04:37,277 ஹலோ, பில் த பிளேட். 74 00:04:37,986 --> 00:04:39,071 நீ என்ன செய்தாய்? 75 00:04:39,071 --> 00:04:41,907 அவன் பெயர் டிக் டர்பின், அதோடு, அவன் ஒரு ஹைவேமேன். 76 00:04:41,907 --> 00:04:44,618 - நீ யார்? - என் பெயர் எலிசா பீன், மேலும் நான் ஒரு எழுத்தாளர். 77 00:04:44,618 --> 00:04:47,704 நகர்ந்து போ, நான் உண்மையான குற்றவியல் கதைகளை எழுதுறேன். 78 00:04:47,704 --> 00:04:48,789 - நிஜமாகவா? - ஆம். 79 00:04:48,789 --> 00:04:51,708 அதாவது நான் மிக அழகான நாடகங்களையும், செய்யுட்களையும் 80 00:04:51,708 --> 00:04:53,085 எழுதி வந்தேன், ஆனால் யாரும் அக்கறைக் காட்டலில்லை. 81 00:04:53,085 --> 00:04:55,587 நீ எழுதப் போவது, மிகக் கொடூரமான கொலை. அதோடு மக்களுக்கு அது அதிகம் வேண்டும். 82 00:04:55,587 --> 00:04:57,339 அது எதனால் என்று நினைக்கிறாய், எலிசா? 83 00:04:57,339 --> 00:04:59,800 எனக்குத் தெரியாது. குற்றவாளிகளைப் மக்களுக்குப் பிடிக்கிறது. 84 00:05:00,676 --> 00:05:02,469 என் புத்தகத்தைப் படித்தவர்கள் உன் கதையைக் கேட்க விரும்புகிறார்கள். 85 00:05:02,469 --> 00:05:04,054 சரி, அதில் சொல்வதற்கு அதிகமாக இல்லை. 86 00:05:04,054 --> 00:05:05,806 நான் சிக்கனைக் குறி வைக்கவில்லை. 87 00:05:05,806 --> 00:05:08,183 இல்ல, இல்லை. உன்னை இல்லை, பூர்லி மார்டின். 88 00:05:08,183 --> 00:05:10,686 நீதான். டிக் டர்பின். 89 00:05:10,686 --> 00:05:13,355 டிக் டர்பின். நான் உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன். 90 00:05:13,355 --> 00:05:16,275 நீ டாம் கிங்கை சுட்டுவிட்டாய். அவன் முகத்தில் நேராக சுட்டுவிட்டாயே. 91 00:05:17,776 --> 00:05:18,777 நல்ல வேலை செய்தாய். 92 00:05:20,070 --> 00:05:22,239 என் கதையை மக்கள் நிஜமாகவே கேட்க விரும்புவார்கள் என நினைக்கிறீர்களா? 93 00:05:22,239 --> 00:05:24,241 - உண்மையில் இல்லை. - ஆம், பிளீஸ். 94 00:05:24,241 --> 00:05:25,868 என் அம்மா எனக்குக் கதைகள் சொல்வாள். 95 00:05:25,868 --> 00:05:27,327 பாரு, டிக். ரகசியத்தைச் சொல்லு. 96 00:05:27,327 --> 00:05:30,581 மக்கள் உன்னை அதிசயமாகப் பார்ப்பார்கள் என நினைக்கிறேன். 97 00:05:30,581 --> 00:05:32,958 எனக்குத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கு. நான்... 98 00:05:32,958 --> 00:05:36,461 நான் ஹேம்ஸ்டெட்டில் ஒரு கசாப்புக்காரருக்கு மகனாகப் பிறந்தேன். 99 00:05:36,461 --> 00:05:38,547 அடக் கடவுளே. நான் கழிப்பறைக்குப் போகிறேன். 100 00:05:42,134 --> 00:05:44,887 என் பிள்ளைப் பருவம் சந்தோஷமாக இருந்தது, என் தந்தையை நான் நேசித்தேன். 101 00:05:44,887 --> 00:05:48,891 ஆனால் வளர்கையில், ஒரு கசாப்புக்காரின் வாழ்க்கை எனக்கு சுவாரசியமாகயில்லை என உணர்ந்தேன். 102 00:05:51,143 --> 00:05:52,978 அந்த முயலை இன்னும் வெட்டவில்லையா? 103 00:05:52,978 --> 00:05:56,190 இல்லை, ஆனால் இந்த மொத்த கிராமத்தையே வெள்ளரிக்காயால் செய்துட்டேன். 104 00:05:56,690 --> 00:05:58,609 என்னையும் உங்களையும் பாருங்கள், நாம் குடமிளகாய்களால் செய்யப்பட்டுள்ளோம். 105 00:05:58,609 --> 00:06:01,361 ஆனால் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள். இப்போது உள்ளது போல் அவ்வளவு கோபம் இல்லை. 106 00:06:02,321 --> 00:06:04,156 உனக்கு எவ்வளவு நேரமாச்சு? 107 00:06:04,156 --> 00:06:05,240 ஒன்பது மணிநேரம். 108 00:06:06,658 --> 00:06:09,661 சரி, நீ அதை முடித்ததும், அந்த அன்னங்களை வெட்டி விடுகிறாயா? 109 00:06:09,661 --> 00:06:11,538 கேரலையும் சூவவையும் கொல்ல முடியாது, அவர்கள் உறவில் இருக்கிறார்கள். 110 00:06:12,122 --> 00:06:14,124 அதாவது, ஒரு அன்னத்தை எப்படிக் கொல்வது என்றும் தெரியாது. 111 00:06:14,124 --> 00:06:17,377 நீ அதை கொன்றயா? அதை வெட்டினாயா? நீ அதை ஷூவால் உதைத்தாயா? 112 00:06:17,377 --> 00:06:21,256 சில சமயம் நான் உன்னைப் பார்த்து நினைக்கிறேன், "உனக்கு கசாப்புக்காரனாக விருப்பம்தானா?" என்று. 113 00:06:21,256 --> 00:06:23,300 கண்டிப்பாக எனக்கு கசாப்புக்காரனாக விருப்பமில்லை. நான் ஒரு வீகன். 114 00:06:23,300 --> 00:06:26,261 எனது ஐந்தாவது வயதிலிருந்து நான் இதைச் சொல்லி வருகிறேன். எனக்கு விலங்குளைப் பிடிக்கும். 115 00:06:26,261 --> 00:06:28,805 அது என் வாழ்க்கை இல்லை, அப்பா. அது உங்களுடையதுதான். தெரியுமா? 116 00:06:28,805 --> 00:06:30,724 ஆம், நீ எப்போதுமே கொஞ்சம் விசித்திரமாகவே இருந்துள்ளாய். 117 00:06:30,724 --> 00:06:34,102 வரைவாய், ஏதேதோ யோசனைகளைச் சொல்வாய், வினோதமாக உடை உடுத்துவாய். 118 00:06:34,102 --> 00:06:36,813 என் குழந்தைகளிலேயே நீதான் விசித்திரமானவன். 119 00:06:36,813 --> 00:06:38,232 நான்தான் ஒரே மகன், அப்பா. 120 00:06:38,232 --> 00:06:41,068 நான் ஏதோ சாதிக்கப் பிறந்தவன் எனத் தோன்றுகிறது, தெரியுமா? 121 00:06:41,068 --> 00:06:42,861 ஏதோ பெரியதாக, எதோ ஆக்கப்பூர்வமானதாக. 122 00:06:44,530 --> 00:06:45,614 சரி. 123 00:06:45,614 --> 00:06:49,284 உனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றால் நான் உன் கசின் பென்னியை அழைக்கிறேன். 124 00:06:49,284 --> 00:06:51,161 அவனுக்கு விலங்குகளைக் கொல்வதென்றால் விருப்பம். 125 00:06:51,161 --> 00:06:53,413 நீ இங்கில்லாதபோது, அவன் ஏற்கனவே சில சமயங்களில் எனக்கு உதவியிருக்கிறான். 126 00:06:53,413 --> 00:06:54,957 - உண்மையில் அவன் திறமைசாலி. - தெரியும். 127 00:06:54,957 --> 00:06:56,041 அவனுக்கு இறைச்சி பிடிக்கும். 128 00:06:56,041 --> 00:06:57,751 அவனுக்கு இறைச்சி பற்றி பேச பிடிக்கும், தொடுவது பிடிக்கும். 129 00:06:57,751 --> 00:06:59,086 அவன் தனக்கென்று கத்திகள்கூட வைத்துள்ளான். 130 00:06:59,962 --> 00:07:01,880 பேசாமல் பென்னியை அழைத்துக்கொள்ளுங்கள், அப்பா. அதுதான் உங்களுக்கும் நல்லது. 131 00:07:01,880 --> 00:07:04,466 எனில், நானும் என் கனவுகளைத் தொடர்வேன். 132 00:07:04,466 --> 00:07:06,009 - உறுதியாகச் சொல்கிறாயா? - ஆம். 133 00:07:06,009 --> 00:07:08,637 சரி, நான் இதையெல்லாம் உனக்கு விட்டுச்செல்வதாக இருந்தேன். 134 00:07:09,763 --> 00:07:13,433 இப்போது அதெல்லாம் பென்னிக்குப் போகும். அத்துடன் உன் அறையும் தான். 135 00:07:13,433 --> 00:07:14,560 என் பொருட்கள் எல்லாம்? 136 00:07:14,560 --> 00:07:17,980 அதையெல்லாம் எரித்துவிடலாம். அதை வீதியில் தூக்கிப் போடு. 137 00:07:19,314 --> 00:07:23,652 சரிதான், அப்பா. பாரு, நான் என் ஊதா காலணிகளையும் என் தையல் மிஷினையும் கொண்டுப் போகிறேன். 138 00:07:23,652 --> 00:07:28,073 மிகச் சரி. ஆம், அதுதான் உன் முடிவு, அதை நான் பென்னியிடம் சொல்கிறேன். 139 00:07:28,073 --> 00:07:29,408 சரிதான். 140 00:07:31,451 --> 00:07:32,703 - சரிதான், பென்னியா? - சரிதானா? 141 00:07:32,703 --> 00:07:34,079 சிறப்பு, நீங்க ஏற்கனவே அவனிடம் சொல்லிவிட்டீர்களா? 142 00:07:34,079 --> 00:07:37,040 - விஷயங்களை முடிவு செய்யும் காலகட்டம் வந்தது. - எந்த வகையில்? 143 00:07:37,040 --> 00:07:39,626 நீ ஒன்பது மணிநேரங்களை ஒரு வெள்ளரிக்காய் கிராமத்தை உருவாக்குவதில் கழித்தாய். 144 00:07:40,627 --> 00:07:41,962 உன் வழியைப் பார்த்துக்கொள், மகனே. 145 00:07:41,962 --> 00:07:44,173 கேரலிடமும், சூவிடமும் என் பிரியாவிடையைச் சொல்லுங்கள், அப்பா. 146 00:07:44,173 --> 00:07:45,924 - சந்திப்போம், பென்னி. - சந்திப்போம். 147 00:07:48,719 --> 00:07:52,055 - அவன் உருப்படுவான் என நினைக்கிறாயா? - இந்த வார இறுதிக்குள் இறந்துவிடுவான். 148 00:07:58,979 --> 00:08:01,273 எனவே, நீ நிஜமாகவே ஒரு கிராமம் முழுவதையும் வெள்ளரிக்காயால் கட்டினாயா? 149 00:08:01,273 --> 00:08:04,109 ஆம். சரி, உண்மையில், அடிதளத்துக்கு பூசணிக்காயை உபயோகித்தேன். 150 00:08:04,109 --> 00:08:05,611 அதாவது, அடித்தளம் உறுதியாக இருக்க வேண்டும் தானே. 151 00:08:05,611 --> 00:08:07,029 ஆனால் உன் அப்பா உன்னை வெளியே துரத்திவிட்டாரா? 152 00:08:07,029 --> 00:08:09,907 ஆம், என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு வேலையில்லை, இருக்க இடமுமில்லை. 153 00:08:09,907 --> 00:08:12,075 இந்த உலகில் எனக்கு உள்ளதெல்லாம் இந்த தையல் மிஷினும் 154 00:08:12,075 --> 00:08:14,870 - இந்த ஆற்றல் மிகுந்த, ஊதா நிற காலணிகளும்தான். - நல்லது. 155 00:08:14,870 --> 00:08:16,413 இவற்றை நான் பாதுகாப்பாக வைக்க ஏதேனும் இடம் உள்ளதா? 156 00:08:16,413 --> 00:08:18,081 ஆம். அந்த அலமாரியில் அவற்றை வை. 157 00:08:18,081 --> 00:08:20,542 அற்புதம். நன்றி, லிட்டில் கேரன். நீ ஒரு வைரம். 158 00:08:25,005 --> 00:08:26,548 இது பெரிய அலமாரி ஆச்சே. 159 00:08:26,548 --> 00:08:28,967 இல்லை, அந்தக் கதவு இல்லை. அதுக்கும் அடுத்தது. 160 00:08:28,967 --> 00:08:30,594 அது ஒரு ரகசிய பாதை. 161 00:08:30,594 --> 00:08:32,763 இங்கே ரகசியப் பாதை இருப்பது எனக்குத் தெரியாதே. 162 00:08:32,763 --> 00:08:35,349 - ஆம், அதனால்தானே அது ரகசியப் பாதை? - ஆமாம். 163 00:08:35,349 --> 00:08:37,351 அனைவருக்கும் அது தெரிந்துவிட்டால், அது சாதாரண பாதை ஆகிவிடுமே. 164 00:08:37,351 --> 00:08:39,477 அது நல்லதில்லை, இல்லையா? 165 00:08:39,477 --> 00:08:42,022 அடடே, ஆனால் ரகசியப் பாதை. அதில் போய் பார்க்கணும். 166 00:08:42,022 --> 00:08:43,440 எனக்கு ஒரு ரகசிய பாதை இருந்தால் நன்றாக இருக்கும். 167 00:08:44,024 --> 00:08:46,485 - அது வினோதமாக உள்ளது. - ஆம், கொஞ்சம் வினோதம்தான். மன்னிக்கவும். 168 00:09:05,629 --> 00:09:07,923 ஐந்து கோப்பை கில் கிரீஃப். 169 00:09:09,341 --> 00:09:11,009 எங்களுக்குத் தெரியாத மக்களுக்கு நாங்கள் சேவை செய்வதில்லை. 170 00:09:15,639 --> 00:09:16,473 நல்லது. 171 00:09:17,182 --> 00:09:18,642 நான் டாம் கிங். 172 00:09:18,642 --> 00:09:20,310 ஹானெஸ்டி பேர்போன். 173 00:09:20,310 --> 00:09:21,645 நிக்கோலஸ் ஃபிரேஸர். 174 00:09:21,645 --> 00:09:23,730 மூஸ் பிளெக். அதோ... 175 00:09:26,817 --> 00:09:27,818 ஸ்டீவ். 176 00:09:28,402 --> 00:09:29,403 ஸ்டீவ். 177 00:09:29,403 --> 00:09:31,113 ஆம், உண்மையில், ஸ்டீவென் என அழைத்தால் எனக்குப் பிடிக்கும். 178 00:09:32,948 --> 00:09:34,324 பிரச்சினையில்லை, ஸ்டீவ் பரவாயில்லை. 179 00:09:34,324 --> 00:09:38,287 எங்கள் கும்பலில் ஒரு இடம் காலியாகப் போகிறது. 180 00:09:38,871 --> 00:09:39,705 அப்படியா? 181 00:09:46,545 --> 00:09:47,880 நீதான். 182 00:09:47,880 --> 00:09:53,802 நாளைக்கு, லார்ட் ரூக்வுட் டாகென்ஹாமில் உள்ள தன் கோடை விடுதிக்குப் பயணம் செய்வார். 183 00:09:53,802 --> 00:09:59,099 அவர் வண்டியை நிறுத்தி, ரௌனி உட்ஸுக்கு அதைத் திருப்பிவிடணும், நாங்கள் அங்கே காத்திருப்போம். 184 00:09:59,099 --> 00:10:01,393 நீங்கள் விளையாடுகிறீர்களா? எனக்கு எட்டு வயதுதான். 185 00:10:01,393 --> 00:10:04,813 அதேதான். அவர் உன்னை சந்தேகப்படமாட்டார். 186 00:10:05,731 --> 00:10:08,984 மன்னிக்க வேண்டும், அப்படியென்றால் நான் இனி இந்தக் கும்பலில் இல்லையா, தெளிவாக்குங்கள்? 187 00:10:11,320 --> 00:10:12,321 அவர்கள் நிறுத்தவில்லையென்றால்? 188 00:10:12,905 --> 00:10:15,324 அப்படியென்றால் நீ நம்முடைய குரைக்கும் இரும்பை வெளியே எடுத்து, அவர்களை நிறுத்து. 189 00:10:15,324 --> 00:10:16,742 குரைக்கும் இரும்பு என்றால் என்ன? 190 00:10:17,993 --> 00:10:19,203 இதில் ஒன்று. 191 00:10:19,703 --> 00:10:21,705 ஓ, ஆம். நான் இதைப் போல் ஒன்றை பார்த்துள்ளேன். 192 00:10:22,539 --> 00:10:23,582 புரியுது. 193 00:10:24,249 --> 00:10:25,292 யார் நீ? 194 00:10:25,959 --> 00:10:27,961 நான் இங்கே உள்ள கசாப்புக்காரன். உண்மையில் கசாப்புக்காரனாக இருந்தேன். 195 00:10:27,961 --> 00:10:31,298 என் கசின் பென்னியை என் இடத்தில் அமர்த்தினார்கள். அவனிடம் அவனுக்கென்று சொந்தக் கத்திகள் உள்ளன. 196 00:10:31,298 --> 00:10:33,258 உண்மையில், எனக்கும் அதைப்பத்தி வருத்தமில்லை. 197 00:10:33,258 --> 00:10:35,302 அதாவது, நான் ஒரு வீகன், ஆகவே... 198 00:10:35,302 --> 00:10:37,930 அதாவது, என்னிடம் தொழில் இருக்கு. ஆனால் எனக்கு அதைப் பயனுள்ளதாக மாற்றத் தெரியவில்லை. 199 00:10:37,930 --> 00:10:40,933 ஆனால் எனக்கு அங்கே ஏதோ காத்திருப்பது போல. 200 00:10:40,933 --> 00:10:44,019 தெரியுமா, அது மிகவும் கற்பனை வளத்துடன் உள்ளது. 201 00:10:45,395 --> 00:10:47,731 இது உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். 202 00:10:49,066 --> 00:10:50,192 - அப்படியா? - ஆம். 203 00:10:50,192 --> 00:10:51,860 உனக்கு ஒரு வேலை இருக்கு. 204 00:10:52,444 --> 00:10:53,779 நல்லது. அது என்னது? 205 00:10:54,488 --> 00:10:57,241 நான் அவளை செய்யச் சொன்னது! 206 00:10:58,575 --> 00:11:01,662 சரி, எனக்கு ஃபீட்பேக் கிடைச்சால் நன்றாக இருக்கும். 207 00:11:07,835 --> 00:11:08,836 இதோ. 208 00:11:10,128 --> 00:11:14,508 சரி. எனவே, நான் வெறுமனே பட்டனை அழுத்தினால், அது வரும். 209 00:11:14,508 --> 00:11:16,552 நான் அதை எங்கே அணித்துக்கொள்வது? உங்களுடையதை எங்கே வைக்கிறீர்கள்? 210 00:11:16,552 --> 00:11:19,847 அது அங்கே மேலேயா அல்லது ஒரு துப்பாக்கிப் பை இருக்கா? 211 00:11:19,847 --> 00:11:21,181 ஏதாவது பாதுகாப்புக் கேட்ச் உள்ளதா? 212 00:11:21,181 --> 00:11:24,017 ஏனெனில் அது என் பான்ட்டுக்குள் வெடிக்கலாம் என்று நினைக்கிறேன். 213 00:11:24,017 --> 00:11:27,271 இல்லை. பாதுகாப்பு கேச்சு இல்லை. 214 00:11:27,896 --> 00:11:31,358 சரி. அது கொஞ்சம் ஆபத்தானது. ஒருவேளை நான் அதை பையில் வைத்துக்கொள்ளலாம். 215 00:11:31,358 --> 00:11:34,611 ஆம். அப்படிச் செய். 216 00:11:35,237 --> 00:11:36,321 சரி. 217 00:11:36,321 --> 00:11:40,868 நாளைக்கு. பத்து மணிக்கு. திடீரென வெளியேறிடாதே. 218 00:11:43,495 --> 00:11:45,122 - ஸ்டீவ். - ஸ்டீவ். 219 00:11:48,208 --> 00:11:49,501 அது ஸ்டீவென். 220 00:11:51,879 --> 00:11:56,300 ஒ, என் ஆன்மா பாவம் அது எங்கே இருக்கோ 221 00:11:56,300 --> 00:11:59,511 டிக், நீ என்ன செய்கிறாய்? நீ இப்படிச் செய்யக் கூடாது. 222 00:11:59,511 --> 00:12:02,598 நான் உன்னைப் போகவிட முடியாது, என்ன? நீ ஒரு குழந்தை. அது ரொம்ப ஆபத்தானது. 223 00:12:02,598 --> 00:12:04,808 - நாம் இருவரும் போனால் என்ன? - அது இன்னும் மோசம். 224 00:12:04,808 --> 00:12:06,310 பாரு, நான் நலமாக இருப்பேன். 225 00:12:06,310 --> 00:12:09,271 ஒரே ஒரு கேள்வி. அவன் பாதுகாப்பு கேச்சு உள்ளது என்றானா, இல்லை என்றானா? 226 00:12:09,271 --> 00:12:10,355 ஜாக்கிரதையாக இரு. 227 00:12:10,355 --> 00:12:13,275 ஏனெனில் நீ இப்படிச் செய்யும்போது பிடிபட்டால், நல்ல தண்டனை கிடைக்கும். 228 00:12:13,275 --> 00:12:15,277 நான் பிடிபடமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்படாதே. 229 00:12:15,277 --> 00:12:17,362 நான் மாறு வேஷத்தில் வல்லவன். 230 00:12:20,407 --> 00:12:22,242 ஓடுங்க குதிரைகளே. ஆம், ஆம். 231 00:12:23,368 --> 00:12:26,121 எனவே, என் மேல்மட்ட வயலில், என் மானைத் திருடும் கும்பல் சிலரைப் 232 00:12:26,121 --> 00:12:28,707 பார்த்ததாகச் சொல்கிறீர்கள். 233 00:12:28,707 --> 00:12:30,542 அதை நீங்கள் சொல்லக் காரணம் என்னவெனில் 234 00:12:30,542 --> 00:12:34,379 நீங்கள் எதிர்காலத்திலிருந்து மிகச் சரியாக 15 நிமிடத்திலிருந்து வருகிறீர்கள். 235 00:12:34,963 --> 00:12:35,964 அதேதான். 236 00:12:35,964 --> 00:12:37,674 எதிர்காலம் எப்படி இருக்கும்? 237 00:12:38,383 --> 00:12:40,010 இப்போது எப்படி இருக்கிறதோ, அதே போலத்தான் இருக்கும். 238 00:12:40,010 --> 00:12:42,137 அதாவது, உடைகள் சில மாறியுள்ளன. 239 00:12:42,137 --> 00:12:43,472 என்னிடம் அந்த பையைக் கொடுங்கள். 240 00:12:45,474 --> 00:12:47,809 - இது என்ன? - இது ஒரு வாழைப்பழம். 241 00:12:50,062 --> 00:12:51,146 இதுவோ? 242 00:12:51,146 --> 00:12:53,232 அது தண்ணீரை அனுமதிக்காத போஞ்சோக்களில் ஒன்று, மழைப் பெய்தால் தேவைப்படுமே. 243 00:12:53,232 --> 00:12:55,400 பிறகு இது என்ன? 244 00:12:55,400 --> 00:12:57,569 அதை, குரைக்கும் "அயான்" என அழைக்கிறார்கள். 245 00:12:57,569 --> 00:13:00,239 - அது ஒரு துப்பாக்கி. - ஆமாம், அதுதான். அது ஒரு துப்பாக்கி. 246 00:13:00,239 --> 00:13:04,284 அதில் டிகே என எழுதியுள்ளது. நீ டாம் கிங் கும்பலைச் சேர்ந்தவன். 247 00:13:04,284 --> 00:13:05,369 சண்டாளா! 248 00:13:05,369 --> 00:13:08,580 எவ்வளவு தைரியமிருந்தால் என் வண்டியில் ஏறி இது போன்ற கட்டுக்கதைகளைச் சொல்வாய்? 249 00:13:09,623 --> 00:13:10,457 பிளீஸ்! 250 00:13:12,918 --> 00:13:14,086 நிறுத்தாதே, ஓட்டுனரே! 251 00:13:14,086 --> 00:13:16,630 - இது ஒரு மோசமான திடீர்தாக்குதல். - பாருங்கள். 252 00:13:31,645 --> 00:13:34,022 பை-பை, எதிர்கால மனிதனே! 253 00:13:38,360 --> 00:13:39,361 வெளியே போ! 254 00:13:41,029 --> 00:13:43,198 அவமானம். எனக்கு அந்த போஞ்சோ மிகவும் பிடிக்கும். 255 00:13:43,198 --> 00:13:44,575 எங்கே அவன்? 256 00:13:45,826 --> 00:13:47,619 நாம் திட்டமிட்டப்படி அது நடக்கவில்லை. 257 00:13:49,788 --> 00:13:51,206 நீ யார் வேடத்தில் வந்தாய்? 258 00:13:51,874 --> 00:13:53,375 நான் எதிர்கால மனிதனாக வந்தேன். 259 00:13:53,375 --> 00:13:55,210 அதுவும் 15 நிமிடம் தான் வித்தியாசம். 260 00:13:55,210 --> 00:13:56,295 ம்ம்-ஹம். 261 00:13:56,295 --> 00:14:00,215 நீ எதிர்காலத்திலிருந்து வருபவனாக இருந்தால், உனக்கு இப்படி நடக்கும் எனத் தெரியணுமே. 262 00:14:07,222 --> 00:14:08,390 என்ன நடந்தது? 263 00:14:09,141 --> 00:14:10,601 நீ டாம் கிங்கை கொலை செய்தாயா? 264 00:14:11,393 --> 00:14:14,104 சொல்லப் போனால் ஆம். ஆனால் தோழர்களே, அது எப்படி நடந்தது என்று சொல்ல வேண்டும். 265 00:14:15,063 --> 00:14:16,607 அப்படியென்றால் நீ என்னைவிட தைரியசாலியானவன். 266 00:14:16,607 --> 00:14:18,358 அவன் மறைந்தான். நாம் இப்போது சுதந்திர மனிதர்கள்! 267 00:14:18,358 --> 00:14:19,735 ஆம்! 268 00:14:20,485 --> 00:14:21,486 அது பரவாயில்லை எனச் சொல்கிறீர்களா? 269 00:14:21,486 --> 00:14:23,906 நாங்கள் அவனை வெறுத்தோம். எங்களுக்கு நீ பெரிய உதவி செய்துள்ளாய். 270 00:14:23,906 --> 00:14:25,157 என்ன, தலையிலேயே சுட்டாயா, அப்படியா? 271 00:14:25,157 --> 00:14:28,243 - நல்லது. என்னால் அவர் மனதுள் பார்க்க முடியும். - ஒ, அது அருவருப்பாக உள்ளது. 272 00:14:28,243 --> 00:14:31,538 அவன் செய்ய நினைத்ததெல்லாம் மக்களைக் கொள்ளை அடிப்பதுதான், இது அதைப் பற்றியதே அல்ல. 273 00:14:31,538 --> 00:14:32,623 இல்லை. இல்லையா? 274 00:14:32,623 --> 00:14:33,916 - இல்லை. - இல்லை, நிச்சயம் இல்லை. 275 00:14:33,916 --> 00:14:35,584 பரம்பரை நில உடைமை நியாயமற்றது 276 00:14:35,584 --> 00:14:37,753 என்று அதை எதிர்க்கத்தான் நான் மக்களைத் திருட விரும்பினேன். 277 00:14:37,753 --> 00:14:38,837 மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்யவும்தான். 278 00:14:38,837 --> 00:14:40,172 இருந்தாலும் நாம் மனிதர்களை கொல்ல முடியுமா? 279 00:14:40,172 --> 00:14:41,840 ஆம், கண்டிப்பாக, நாம் இன்னும் மக்களைக் கொல்வோம். 280 00:14:41,840 --> 00:14:42,925 இனிமை. 281 00:14:44,384 --> 00:14:46,303 உங்களுக்கு டாம் கிங்கை பிடிக்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 282 00:14:46,303 --> 00:14:50,807 சரி, அவன் உண்மையில் என்னைப் பற்றி சில மோசமானவற்றை சொல்லியிருக்கிறான். 283 00:14:51,308 --> 00:14:53,810 நிஜமாகவே மிக மோசம். 284 00:14:54,895 --> 00:14:56,438 ஹே, நீ அதைப் பற்றிப் பேச விரும்புகிறாயா? 285 00:14:59,566 --> 00:15:01,360 {\an8}அதோட எனக்கு கேங்கிள்கள் இருப்பதை ஏற்க முடியாது என்றும் சொன்னான். 286 00:15:01,360 --> 00:15:02,277 {\an8}இரண்டு மணிநேரம் கழித்து 287 00:15:02,277 --> 00:15:03,195 {\an8}இல்லை. 288 00:15:03,195 --> 00:15:05,155 {\an8}ஏனெனில் என் கால்களைப் பற்றி யாராவது பேசினால் எனக்குப் பிடிக்காது. 289 00:15:05,155 --> 00:15:08,867 எனக்கு சரியான குட்டை பேன்ட்கள் கிடைக்காது, எனவே ஒரு பக்கமாக குதிரையில் செல்வேன். 290 00:15:08,867 --> 00:15:12,162 ஆனால் நான் அப்படிச் செய்யும்போது, ஒரு பெரிய பெண்ணின் சட்டையைப் போல் உள்ளேன் என்றான். 291 00:15:13,080 --> 00:15:15,791 ஒரு பெரிய பெண்ணின் சட்டையைப் போல இருப்பதில் தவறில்லை, என் பெரிய தோழனே. 292 00:15:15,791 --> 00:15:17,543 அவை நடைமுறைக்கு ஏற்றவாறு உள்ளன, அழகாக உள்ளன. 293 00:15:17,543 --> 00:15:19,711 அதாவது, நான் ஒரு உடையை கிட்டத்தட்ட ஒரு வருடம் அணிந்தேன். 294 00:15:19,711 --> 00:15:22,130 உள்ளாடை இல்லை, காற்று நன்றாக உள்ளே புகுந்தது. 295 00:15:22,130 --> 00:15:23,549 மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் அப்படிச் செய்து முயற்சிக்கணும். 296 00:15:23,549 --> 00:15:25,634 - ஆம், பிளீஸ். - நாம் பயமுறுத்துவது போல இருக்கணும். 297 00:15:25,634 --> 00:15:26,927 நான் சொல்வதெல்லாம், 298 00:15:26,927 --> 00:15:30,389 மூஸ் மட்டும் ஒரு அசத்தலான லூஸாக வெட்டியெடுத்த ஸ்மாக்-பிராக்கை தைத்தால், 299 00:15:30,389 --> 00:15:31,849 நான் அவன் பக்கம்தான். 300 00:15:31,849 --> 00:15:34,434 - அது இன்னும் சௌகரீயமாக இருக்கும். - அதோடு உங்கள் தன்னம்பிக்கை உயரும். 301 00:15:34,434 --> 00:15:35,853 ஆடைகள்தான் ஒரு மனிதரை உருவாக்குகிறது. 302 00:15:35,853 --> 00:15:37,688 - தெளிவாக. - அல்லது அந்தப் பெண். 303 00:15:37,688 --> 00:15:40,399 அதாவது, இந்த ஆளைப் பாருங்க? அந்த குட்டைப் பேன்ட்களில் அசத்துகிறான், இல்லையா? 304 00:15:40,399 --> 00:15:42,192 - தெளிவாக அது ஒரு பெண். - பொறு, என்ன? 305 00:15:42,192 --> 00:15:43,944 சரி, அது அப்படியே மாற்றிவிடும். 306 00:15:43,944 --> 00:15:45,028 என்ன, உனக்குத் தெரியாதா? 307 00:15:45,028 --> 00:15:46,655 ஆனால், உன் பெயர், நிக்கோலஸ். 308 00:15:47,656 --> 00:15:50,784 - ஆம், என் உண்மையான பெயர் நெல். - என்ன? 309 00:15:50,784 --> 00:15:53,495 ஹைவே திருட்டுகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. 310 00:15:53,495 --> 00:15:57,374 எனவே நான் என்னை நிக்கோலஸ் என்று அழைத்துக்கொண்டு, ஒரு ஆணாக மாற்றிக்கொண்டேன். 311 00:15:57,374 --> 00:15:59,626 அதாவது, பலருக்கும் அது தெளிவாகத் தெரிகிறதே. 312 00:15:59,626 --> 00:16:02,421 - இல்லவே இல்லை. - தெரியுமா, ஆணும் பெண்ணும் அதே சம்பளத்திற்காக, 313 00:16:02,421 --> 00:16:05,716 ஒரே பணியைச் செய்யும் ஒரு காலம் வரும் என்று என்னால் சொல்ல முடியும், தெரியுமா. 314 00:16:07,551 --> 00:16:09,386 எனக்குப் பிடித்துள்ளது. அவன் சொல்வது வேடிக்கைதான். 315 00:16:09,386 --> 00:16:11,638 - அது நல்லது. - நான் உண்மையில் சீரியஸாகச் சொன்னேன். 316 00:16:12,848 --> 00:16:15,559 அது இரட்டைப் பொய். இரண்டு. 317 00:16:19,354 --> 00:16:20,522 என்ன? 318 00:16:20,522 --> 00:16:23,275 அந்தக் குன்றின் பக்கமாக நான் ஒரு லூஸ் கார்ட்வீல் கிடப்பதைப் பார்த்தேன் என நினைக்கிறேன். 319 00:16:24,651 --> 00:16:25,652 உருளுகிறது. 320 00:16:25,652 --> 00:16:27,946 அவன் என்னைப் பார்க்க வைத்தான்! மூன்று! ஹாட் டிரிக்! 321 00:16:28,780 --> 00:16:29,865 கிறுக்குத்தனம். 322 00:16:29,865 --> 00:16:31,283 அவர் சிறந்தவர், இல்லையா? 323 00:16:32,492 --> 00:16:33,702 எனக்கு அவரைப் பிடித்துள்ளது. 324 00:16:34,912 --> 00:16:36,163 சரிதான், தோழர்களே. இது உண்மையாக இருந்துள்ளது. 325 00:16:36,163 --> 00:16:38,248 நான் உடனே போகப் போறேன். சில விஷயங்களைச் செய்யணும். 326 00:16:38,248 --> 00:16:42,878 பொறு, நீ எங்கள் தலைவனாக, அதாவது ஆன்மீக குருவாக, வாழ்க்கைக் கோச்சாக இருக்க மாட்டாயா? 327 00:16:42,878 --> 00:16:45,547 - மன்னித்துவிடு, என்ன? - ஆம். அவர்தான் பொறுப்பில் உள்ளார், இல்லையா? 328 00:16:45,547 --> 00:16:46,840 நானா, தலைவரா? 329 00:16:47,633 --> 00:16:49,718 நான் இதைச் செய்யத்தான் பிறந்தேனோ என்னவோ. 330 00:16:49,718 --> 00:16:53,305 குன்றை தாண்டிப்போகும், திருடர்களின் கும்பலுக்குத் தலைமைத் தாங்குவதற்கு. 331 00:16:53,972 --> 00:16:55,974 - காற்று என் தலைமுடி வழியாகப் போகிறது. - ஆம். 332 00:16:58,894 --> 00:17:00,062 மன்னிக்க வேண்டும். 333 00:17:01,396 --> 00:17:02,397 "யார் நீ?" 334 00:17:02,397 --> 00:17:03,899 "நான்தான் டிக் டர்பின். " 335 00:17:03,899 --> 00:17:06,108 நீ ஒரு கசாப்புக்காரன் இல்லையா? "இல்லை, அது பல நாட்களுக்கு முன்." 336 00:17:06,108 --> 00:17:08,153 - ஆமாம். -"நான் உன்னிடம் இன்னும் சாப்ஸ் வாங்க இயலுமா?" 337 00:17:08,153 --> 00:17:10,321 "நிஜமா இல்லை. நீங்கள் அதைப் பற்றி என் தந்தையிடம்தான் பேச வேண்டும்." 338 00:17:10,321 --> 00:17:11,531 அவன் யாரிடம் பேசுகிறான்? 339 00:17:11,531 --> 00:17:13,992 - தன்னுடைய கற்பனை ஆன்மாவுடன். - அவன் மிகவும் சிறந்தவன். 340 00:17:13,992 --> 00:17:15,493 "அந்தப் போர்க் மெடால்லியன்கள் எல்லாம்?" 341 00:17:15,493 --> 00:17:18,038 "நாம் இதையெல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம், இல்லையா? நான் இப்போது ஒரு ஹைவேமேன்." 342 00:17:18,579 --> 00:17:19,830 நான் ஒரு ஹைவேமேன். 343 00:17:20,790 --> 00:17:23,126 - சரி, நான் அப்படிச் செய்கிறேன். - ஆம்! 344 00:17:23,126 --> 00:17:24,962 இது ரொம்ப உற்சாகமாக உள்ளது. நாம் ஸ்பெஷலாக கைகுலுக்கலாம். 345 00:17:24,962 --> 00:17:27,464 - ஆமாம்! - ஒரு சின்ன கைகுலுக்கல், ஒரு ஸ்லைட். 346 00:17:27,464 --> 00:17:28,966 கை முட்டி மோதல். பூட்டி பவுன்ஸ். 347 00:17:28,966 --> 00:17:30,467 பூட்டி பவுன்ஸ் இல்லை. 348 00:17:30,467 --> 00:17:32,469 சரி. யார் தலைவர் என முதலில் முடிவு செய்ய வேண்டும். 349 00:17:32,469 --> 00:17:35,138 யார் தலைவர் என நாங்கள்தான் தீர்மானிப்போம், அதோட நீ தலைவராகப் போவதில்லை. 350 00:17:35,138 --> 00:17:36,265 சரி. 351 00:17:36,265 --> 00:17:37,641 டிக்தான் தலைவராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 352 00:17:37,641 --> 00:17:40,394 எனக்குத் தெரியலை, ஆனால் அவர்தான் மிகச்சிறந்த தோழன் என நான் நினைக்கிறேன். 353 00:17:40,394 --> 00:17:43,063 நானும்தான்? அவன் எனக்கு ஒரு உடையை தயாரிக்கிறான். அவனுக்கு உற்ற தோழன் உள்ளான் என நினைக்கிறாயா 354 00:17:43,063 --> 00:17:45,774 பொறு. நான் என்ன செய்ய? சரிதானே? 355 00:17:45,774 --> 00:17:47,860 நான்தான் மிகச் சிறந்த ஹைவேமேன். அதெல்லாம் என் கீழ்தான் இயங்கும். 356 00:17:48,527 --> 00:17:52,823 நெல், உன்னை நேசிக்கிறோம். துப்பாக்கிச் சுடுவதில் நீ கெட்டிக்காரன், கோபக் குதிரையை வைத்துள்ளாய். 357 00:17:52,823 --> 00:17:54,867 ஆனால் நீ மன அழுத்தத்தில் உன் கொள்கைகளை விட்டுக்கொடுக்கிறாய். 358 00:17:54,867 --> 00:17:56,910 நான் விட்டுக்கொடுக்கவில்லை. எப்போதுமே விட்டுக்கொடுப்பதில்லை 359 00:17:56,910 --> 00:17:58,161 என்னை அழுத்தப்படுத்தவே முடியாது. 360 00:17:58,161 --> 00:17:59,997 அப்போ சரி. நீதான். நீ ஒரு தலைவனாக இருக்க முடியும். 361 00:17:59,997 --> 00:18:02,416 - ஆம். நாம் இப்போது எங்கே போகிறோம்? - திரும்புவோம் இல்ல உணவு வாங்குவோம்? 362 00:18:02,416 --> 00:18:06,336 சரி. மதிய உணவா அல்லது திரும்புவதா? 363 00:18:06,336 --> 00:18:07,838 இரண்டுமே அற்புதமான தேர்வுகள். 364 00:18:08,672 --> 00:18:09,756 அடக் கடவுளே. 365 00:18:12,843 --> 00:18:14,303 கடவுளே, என்னால் தாங்க முடியவில்லை! 366 00:18:14,303 --> 00:18:15,762 நல்லது. எதுவானாலும் சரி. எனக்குக் கவலையில்லை. 367 00:18:15,762 --> 00:18:18,515 - முடிந்துவிட்டது. டிக்தான் நமது புதிய தலைவன்! - ஆம்! 368 00:18:18,515 --> 00:18:21,435 அந்த அற்புதமான தருணத்துலதான் என் தலைவிதி முடிவாகி 369 00:18:21,435 --> 00:18:23,103 ஒரு சரித்திரம் பிறந்தது. 370 00:18:23,103 --> 00:18:24,730 இது ஒரு அழகான தருணம், மக்களே. 371 00:18:24,730 --> 00:18:26,398 இங்கேதான் நாங்கள் எங்களுடைய ஸ்பெஷல் கைகுலுக்கலைச் செய்ய முடியும். 372 00:18:26,398 --> 00:18:27,900 - சரி. - நான் கை குலுக்கப் போறதில்லை. 373 00:18:28,567 --> 00:18:29,943 - அவளை சரிக்கட்டிவிடலாம். - எனக்குத் தெரியும். 374 00:18:29,943 --> 00:18:34,072 இப்போது நான் என் தகுதியினால், தனிப்பட்ட ஒரு சட்டவிரோத கும்பலுக்கு தலைவர் ஆனேன். 375 00:18:34,072 --> 00:18:36,158 - செயற்கையாகத் தெரிகிறது. - இல்லை, அப்படியில்லை. 376 00:18:36,158 --> 00:18:37,576 - எந்தப் பகுதி? - அனைத்துமே. 377 00:18:37,576 --> 00:18:41,288 ஒரு நிமிடம் கசாப்புக்காரராக, உங்கள் வேடிக்கையான யோசனைகளுடன் விளையாடுற. 378 00:18:41,288 --> 00:18:44,041 நீ எதிர்கால மனிதனாக வேஷமிட்ட அந்தத் தருணமே எனக்குத் தெரியும். 379 00:18:44,041 --> 00:18:45,250 ஆம், அது கொஞ்சம் வினோதமாகத்தான் இருக்கு. 380 00:18:45,250 --> 00:18:48,420 அதன்பின் திடீரென, நீ ஒரு பழைய ரவுடிக் கும்பலுக்கு தலைவனாக ஆயிட்ட. 381 00:18:48,420 --> 00:18:51,924 சரிதான். அது கொஞ்சம் செயற்கையாகத்தான் தெரியுது. ஆனால் நிச்சயம் நடந்தது என்று உறுதி கூறுகிறேன். 382 00:18:51,924 --> 00:18:54,092 - நான் உன்னை நம்புகிறேன், டிக். - நன்றி, பூர்லி மார்டின். 383 00:18:54,092 --> 00:18:57,054 சரி, நான் இதுவரை எழுதியதை எல்லாம் ஒருமுறை சரி பார்ப்போம். 384 00:18:58,180 --> 00:19:01,225 டர்பின், தன் மகத்தான கருப்புத் தலைமுடியுடன், 385 00:19:01,225 --> 00:19:03,018 தன் குடை சாய்ந்த வண்டியிலிருந்து வெளியேறி, 386 00:19:03,018 --> 00:19:05,854 ஒளிமிக்க டாம் கிங்குடன் நேருக்கு நேர் மோதுகிறார். 387 00:19:05,854 --> 00:19:08,190 அதன்பின், தன்னைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், 388 00:19:08,190 --> 00:19:11,777 டிக் டர்பின், டாம் கிங்கை, வீரத்துடனும், தைரியமாகவும் முகத்திலேயே சுடுகிறார். 389 00:19:11,777 --> 00:19:14,571 டிக் அந்த கூட்டத்தை தந்திரமாக, அவன்தான் அந்தக் கும்பலின் தலைவன் என நம்ப வைக்கிறான். 390 00:19:14,571 --> 00:19:17,115 ஹானெஸ்டியை மயக்கி, மூஸுடன் குஸ்தி போட்டு அவனை வீழ்த்தி, 391 00:19:17,115 --> 00:19:20,077 முதலிலேயே அவன் மீது காதல் வயப்பட்டிருந்த நெல்லை வசீகரித்தான். 392 00:19:20,077 --> 00:19:21,828 - சரிதானே? - அதாவது, ஆம், கிட்டத்தட்ட. 393 00:19:21,828 --> 00:19:23,372 அருமை. நீ அற்புதமானவன். 394 00:19:23,372 --> 00:19:25,582 சரி. அற்புதம். சரி, அதெல்லாம் இருக்கட்டும். 395 00:19:25,582 --> 00:19:27,876 இப்போது, நீதான் அந்தக் கும்பலின் தலைவன். அடுத்தது என்ன? 396 00:19:27,876 --> 00:19:31,964 சரி, அடுத்தது, நான் என் கும்பலுக்கும் எனக்கும் சில அதிசயமான உடைகளைத் தயாரித்துள்ளேன். 397 00:19:31,964 --> 00:19:34,341 - உடைகளையா? - ஆமாம், பார்க்க நாங்கள் நன்றாக இருக்க வேண்டுமே. 398 00:19:35,008 --> 00:19:36,927 இந்த கட்டுக்கதையை என்னால் இனியும் கேட்க முடியாது. 399 00:19:37,845 --> 00:19:39,429 எனக்கு மிகவும் பிடித்துள்ளது. 400 00:19:39,429 --> 00:19:40,722 அந்த அங்கி என்ன ஆனது? மிகவும் நீண்டுவிட்டதா? 401 00:19:40,722 --> 00:19:43,141 - எப்போதாவது அங்கி நீளுமா? - சரியான பதில். 402 00:19:43,141 --> 00:19:44,518 நீங்கள் அனைவரும் எப்படி உணர்கிறீர்கள்? 403 00:19:45,352 --> 00:19:46,770 - கொஞ்சம் விசித்திரமாக உள்ளது. - எனக்குப் பிடித்துள்ளது. 404 00:19:46,770 --> 00:19:48,730 எனக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை. 405 00:19:48,730 --> 00:19:49,815 மன்னிக்கணும், இது லெதரா? 406 00:19:49,815 --> 00:19:53,277 இல்லை. ஆச்சரியம்தான், ஆனால் இது பிளீத்தர். பார்ஸ்னிப் லெதர். 407 00:19:53,277 --> 00:19:55,988 வெளிச்சத்தைத் தக்கவைக்கும், நீடித்து உழைக்கும், நன்றாக சுத்தம் செய்யும். 408 00:19:55,988 --> 00:19:57,739 - ரத்தக் கசிவிற்கும் சரிப்படும், இல்லையா? - ஆமாம். 409 00:19:57,739 --> 00:19:59,032 நாம் அற்புதமாக இருக்கிறோம். 410 00:19:59,032 --> 00:20:01,034 இன்னும் சொல்லப்போனால், யாராவது நம்மை வரையணும். 411 00:20:01,034 --> 00:20:02,119 ஆல்ஃப். 412 00:20:14,131 --> 00:20:15,424 டிக். 413 00:20:16,675 --> 00:20:17,759 வேறு யாராவது. எங்களை வரையலாம். 414 00:20:19,553 --> 00:20:21,555 ஜாக்கிரதை, டிக். ஜொனாத்தன் வைல்ட் இங்கு வந்துள்ளார். 415 00:20:22,556 --> 00:20:24,516 - யார் அவர்? - தீஃப்டேக்கர் ஜெனரல். 416 00:20:24,516 --> 00:20:27,728 நான் பொய் சொல்லப் போவதில்லை, ஆனால் நாம் தவிர்க்க வேண்டியவனைப் போலவே இவன் தோன்றுகிறான். 417 00:20:27,728 --> 00:20:29,188 இல்லை, டிக். அவன் ஒரு திருடன். 418 00:20:29,188 --> 00:20:30,731 அவன் டாம் கிங்குடன் ஒரு டீல் போட்டிருந்தான். 419 00:20:30,731 --> 00:20:32,941 - ஆம், ஆம், ஆம். அவன் ஆபத்தானவன். - ஆம். 420 00:20:32,941 --> 00:20:36,153 கேள், நீ இதைவிட்டு வெளியேற விரும்பினால், நான் உன்னைக் குறை சொல்ல மாட்டேன். 421 00:20:36,153 --> 00:20:38,197 - எனக்குப் பரவாயில்லை. - நாங்கள் இங்கேதான் இருப்போம், டிக். 422 00:20:39,406 --> 00:20:41,033 நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன், டிக். 423 00:20:41,033 --> 00:20:42,117 கேட்பதற்கு மிகவும் நன்றாக உள்ளது. 424 00:20:42,117 --> 00:20:45,871 சரிதான், மக்களே, என் பின்னாடி நில்லுங்கள். முயற்சி செய்து பயங்கரமாகத் தோன்றுங்கள். 425 00:20:45,871 --> 00:20:47,623 நெல், நான் பேசிக்கொள்கிறேன். 426 00:20:52,794 --> 00:20:54,004 திரு வைல்ட். 427 00:20:54,004 --> 00:20:56,715 நான் நினைத்ததைவிட, சிறிய உருவமாகவே உள்ளீர்கள். 428 00:20:57,799 --> 00:20:59,343 நான் ஜொனாத்தன் வைல்ட். 429 00:20:59,343 --> 00:21:00,802 ஆம். அது புரிகின்றது 430 00:21:00,802 --> 00:21:02,804 - இவன் என் மகன், கிறிஸ்டோஃபர். - ஹலோ, கிறிஸ்டோஃபர். 431 00:21:02,804 --> 00:21:05,516 தற்போது, என் மனைவிக்கும் எனக்கும் எந்த குழந்தைக் காப்பகமும் இல்லை. 432 00:21:05,516 --> 00:21:07,059 அது முற்றிலும் வலி தருவது. 433 00:21:07,684 --> 00:21:09,102 கிறிஸ்டோஃபர், அங்கே போய் உட்கார். 434 00:21:10,562 --> 00:21:12,231 எனவே, நம் வேலையைப் பார்ப்போம். 435 00:21:13,524 --> 00:21:14,691 வேலையைப் பார்ப்போம். 436 00:21:18,070 --> 00:21:21,073 திரு டர்பின், உங்கள் புகழ் உங்களுக்கு முன்னால் பரவியுள்ளது. 437 00:21:21,073 --> 00:21:22,074 அப்படியா? 438 00:21:22,074 --> 00:21:26,328 சரி, பெரும்பாலோருக்கு டாம் கிங்கை எதிர்த்து நிற்க தைரியம் இருக்காது. 439 00:21:26,328 --> 00:21:28,330 கிங் ஒரு கொடுமைக்காரன். எனக்கு கொடுமைக்காரர்களைப் பிடிக்காது. 440 00:21:28,330 --> 00:21:30,749 அப்படியென்றால், நான் ஒரு நண்பனாக இங்கு வந்திருப்பது நல்லதே. 441 00:21:31,542 --> 00:21:34,253 கிங்கும் நானும் ஒரு வகை ஒப்பந்தத்தில் இருந்தோம். 442 00:21:34,253 --> 00:21:37,047 ஆனால் இப்போது அவன் போய்விட்டான், நீங்கள்தான் புதிய தலைவர் எனத் தோன்றுகிறது, 443 00:21:37,047 --> 00:21:41,343 நாமும் அதேபோல ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு ஒத்துழைக்கலாமா என யோசித்தேன். 444 00:21:41,343 --> 00:21:43,136 - அது மிகவும் எளிதான விஷயம். - அப்பா. 445 00:21:43,136 --> 00:21:44,638 நீ செய்வதையே செய்துகொண்டிருக்கலாம், 446 00:21:44,638 --> 00:21:46,890 - தூக்கு மேடைக்குப் போக அவசியமில்லை. - அப்பா. 447 00:21:46,890 --> 00:21:49,518 நீ களவாடியுள்ளதை நாங்கள் ஒரு முறைப் பார்ப்போம். அதிலுள்ளவற்றில் பெருமளவை நான் வைத்துக்கொள்வேன், 448 00:21:49,518 --> 00:21:52,271 அதில் ஓரிரண்டை அதன் முன்னாள் சொந்தக்காரரிடமே விற்கலாம். 449 00:21:52,271 --> 00:21:53,438 - அப்பா. - என்ன? 450 00:21:53,438 --> 00:21:54,565 நான் ஒரு இறந்த விட்டில் பூச்சியைப் பார்த்தேன். 451 00:21:54,565 --> 00:21:57,317 கிறிஸ்டோஃபர், நாம் இங்கே வரும்முன் என்ன சொனேன்? 452 00:21:57,317 --> 00:21:58,735 நீ வேலை செய்யும்போது அமைதியாக இருக்க வேண்டும். 453 00:21:58,735 --> 00:22:00,696 எனவே எதற்காக இந்த இறந்த விட்டில்பூச்சியைப் பற்றி சொல்கிறாய்? 454 00:22:00,696 --> 00:22:01,989 அது மிகவும் பெரிதாக உள்ளது. 455 00:22:01,989 --> 00:22:02,990 அதை கீழே போடு. 456 00:22:02,990 --> 00:22:04,241 அது ஏற்கனவே இறந்துள்ளது. 457 00:22:04,241 --> 00:22:07,202 கிறிஸ்டாஃபர், நீ உடனே அந்த விட்டில்பூச்சியைக் கீழே போடு, இல்லை நீ போய் வண்டியில் காத்திருக்கலாம். 458 00:22:08,787 --> 00:22:10,998 மன்னிக்கணும். அதாவது, நல்ல பையன்தான், ஆனால் சில சமயங்களில்... 459 00:22:10,998 --> 00:22:13,584 சரி, எனவே, உங்களுக்கு துல்லியமாக எவ்வளவு கொடுக்க வேண்டும்? 460 00:22:13,584 --> 00:22:15,043 தொண்ணூற்றைந்து சதவிகிதம். 461 00:22:15,043 --> 00:22:17,921 தொண்ணூற்றைந்து சதவிகி... அது பகல்கொள்ளை. 462 00:22:17,921 --> 00:22:19,923 எனக்கு பல செலவுகள் உள்ளன, டர்பின். 463 00:22:19,923 --> 00:22:23,844 தகவல் சொல்பவர்களுக்கு லஞ்சம் தர வேண்டும், ஒற்றர்கள் நெட்வொர்க், கிறிஸ்டாஃபரின் நீச்சல் பாடங்கள். 464 00:22:23,844 --> 00:22:25,846 - நீச்சல் மிக முக்கியம்தான். - ஆமாம். 465 00:22:27,139 --> 00:22:29,224 நீங்கள் கொஞ்சம் குறைத்துக்கொள்ள முடியுமா? 466 00:22:30,142 --> 00:22:33,187 கேள், நான் பலரையும் தூக்கு மேடைக்கு அனுப்புகிறேன். 467 00:22:34,813 --> 00:22:37,900 ஜாக்கிரதை, டிக். அவர் நம்மை மிரட்டுகிறார் என நினைக்கிறேன். 468 00:22:39,151 --> 00:22:40,152 மிரட்டல் இல்லை. 469 00:22:41,904 --> 00:22:43,238 நாம் ஒரு அற்புதமான அணியாக பணிபுரியலாம். 470 00:22:43,238 --> 00:22:45,282 என்னிடம் ஏற்கனவே அனைத்தும் அற்புதமான குழு உள்ளது. 471 00:22:45,282 --> 00:22:48,911 எங்களை எஸ்ஸெக்ஸ் கும்பல் என்று அழைக்கிறார்கள், நங்கள் யார் கீழும் வேலைச் செய்வதில்லை. 472 00:22:54,833 --> 00:22:55,918 அது அவமானம். 473 00:22:57,169 --> 00:23:00,464 ஆனால் நீங்களோ, சார், இப்போது உங்கள் மரண சாசனத்தை கையெழுத்திட்டீர்கள்... 474 00:23:00,464 --> 00:23:03,592 சத்தமாக அழுத காரணத்திற்காக, கிறிஸ்டாஃபர், நீ அதை எடுத்து பேக் செய்ய முடியுமா? 475 00:23:05,761 --> 00:23:08,639 டாம் கிங்கை கொலை செய்த குற்றத்திற்காக, நீங்களும் உங்கள் கும்பலும் 476 00:23:08,639 --> 00:23:11,058 கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்படுவீர்கள். 477 00:23:11,058 --> 00:23:13,560 ஓ, நிஜமாகவா? யார் எங்களைக் கைதுசெய்யப் போகிறார்கள்? 478 00:23:13,560 --> 00:23:15,812 - நான்தான். - நீங்கள் மற்றும் யாருடைய படையும்? 479 00:23:16,939 --> 00:23:18,106 நானும் என் படையும். 480 00:23:18,106 --> 00:23:20,067 உன் படையில் யாரெல்லாம் உள்ளனர்? 481 00:23:20,067 --> 00:23:22,444 கிறிஸ்டாஃபரும் அந்த இறந்த விட்டல் பூச்சியுமா? 482 00:23:22,444 --> 00:23:25,489 இல்லை, நானும் என் உண்மையான படையும். 483 00:23:33,789 --> 00:23:35,207 சரி, அது மிகவும் ஆச்சரியம்தான். 484 00:23:36,500 --> 00:23:38,919 தீஃப்டேக்கர் ஜெனரலிடமிருந்து யாரும் தப்பிக்க இயலாது 485 00:23:42,339 --> 00:23:44,508 - மக்களே, ரகசிய பாதை. - என்ன? 486 00:23:44,508 --> 00:23:47,135 - போ! போ. போ, போ! - போகலாம்! மூஸ்! 487 00:23:47,135 --> 00:23:48,679 - ஹானெஸ்டி! - டிக் சொல்வதைக் கேள்! 488 00:23:48,679 --> 00:23:50,514 இந்த இடத்தில் ரகசியப் பாதை இருப்பதே எனக்குத் தெரியாதே. 489 00:23:50,514 --> 00:23:51,890 ஆம், அதுதானே ரகசியம், இல்லையா? 490 00:23:51,890 --> 00:23:53,684 சரி, இல்லை, எனக்கு நீ சொல்வது புரிகிறது. 491 00:23:53,684 --> 00:23:56,895 அனைவருக்கும் அதைப் பற்றி தெரிந்தால், அது ஒரு சாதாரணப் பாதை ஆகிவிடும், என நினைக்கிறேன். 492 00:23:56,895 --> 00:23:58,230 அதைத்தான் நான் சொன்னேன். 493 00:23:58,230 --> 00:24:00,774 பார்த்தாயா, உனக்கும் எனக்கும் அதிக வித்தியாசம் இல்லை. 494 00:24:01,859 --> 00:24:03,235 நீ ஏன் என்னிடம் வேலை செய்யக்கூடாது? 495 00:24:07,281 --> 00:24:08,657 அது நடக்காது. 496 00:24:08,657 --> 00:24:11,285 அதாவது, டாம் கிங் ஒரு பழையகால ஹைவேமேனாக இருந்தான். 497 00:24:11,285 --> 00:24:12,870 நான் புதியவன். 498 00:24:12,870 --> 00:24:14,830 என்னுடைய பாணியில் அதிக வன்முறை இருக்காது, 499 00:24:14,830 --> 00:24:17,040 அதிகமான இணக்கம், சில சமயம் ஆடம்பரத்தையும் பார்க்கலாம். 500 00:24:17,040 --> 00:24:20,252 உன்னைப் போன்ற பெருச்சாளிகளுக்கு நாங்கள் பணம் தரப்போவதில்லை. 501 00:24:20,252 --> 00:24:22,462 நாங்கள் அதை உண்மையான மக்களுக்கு, ஏழைகளுக்குக் கொடுப்போம். 502 00:24:22,462 --> 00:24:24,381 லிட்டில் கேரன், மற்றும் வரைய முடியாத ஆல்ஃப் போன்றவர்களுக்கு. 503 00:24:24,381 --> 00:24:25,465 ஆம். 504 00:24:26,133 --> 00:24:27,926 உன்னை பலவீனமானத் தருணத்தில் சந்திக்கிறேன், பெரும் மனிதனே. 505 00:24:40,647 --> 00:24:41,815 ஹே. நான் உனக்கு உதவலாமா? 506 00:24:42,858 --> 00:24:45,402 அதாவது, ஒரு அலமாரிக்குப் பக்கத்தில் எங்காவது ரகசியப் பாதை இருக்குமா? 507 00:24:45,402 --> 00:24:48,822 - குறைந்தது கதவுகளாவது வேறு நிறத்தில் பூசணும். - அதேதான். நிறத்தால்-கோட் செய்வது. 508 00:24:48,822 --> 00:24:51,867 தெரியுமா, அலமாரி, மிகவும் நடைமுறைக்கு உகந்தது. அது ஒன்று பச்சை அல்லது பிரௌன், இல்லையா? 509 00:24:51,867 --> 00:24:54,328 ரகசியப் பாதையில் மர்மம் உள்ளது, எனவே அது ஊதா நிறம். 510 00:24:54,328 --> 00:24:56,330 - அல்லது நீல-பச்சை. - அதேதான். 511 00:24:56,330 --> 00:24:59,124 கதவுகளில் கழிப்பறை போன்ற அறிகுறிகள் இட்டால் போதும், அவ்வளவுதான். 512 00:24:59,124 --> 00:25:01,543 ரகசியப் பாதையின் கதவில் அறிகுறிகள் போட முடியாது, லிஸ்ஸி த ஃபிஷ். 513 00:25:01,543 --> 00:25:03,086 அதன்பின் அது ரகசியமாக இராதே, இல்லையா? 514 00:25:03,086 --> 00:25:05,547 நாம் உணர்வது போல் பிரேயில் அறிகுறி போட்டால் என்ன? 515 00:25:05,547 --> 00:25:07,299 உன்னால் பிரெய்லி படிக்க முடியுமா? 516 00:25:07,299 --> 00:25:10,135 இல்லை, ஆனால் நான் ரகசியப் பாதையில் போக மாட்டேன். எனக்குப் பயம். 517 00:25:10,135 --> 00:25:12,888 இந்த அலமாரியைப் பற்றி நாம் என்ன வியந்துப் பேசினாலும், 518 00:25:12,888 --> 00:25:14,973 இது சரிப்பட்டு வரும் என எனக்குத் தோன்றவில்லை. 519 00:25:14,973 --> 00:25:16,558 ஆனால் நமக்கு இன்னும் ஒரு திரில்லிங்கான முடிவு காத்திருக்கிறது. 520 00:25:16,558 --> 00:25:18,727 - அப்படியா? என்ன முடிவு? - நீதான். நீ தூக்கில் தொங்கப் போகிறாய். 521 00:25:18,727 --> 00:25:20,354 நான் தூக்கில் தொங்க மாட்டேன். உனக்குப் புரியவில்லையா? 522 00:25:20,354 --> 00:25:22,564 நான் பிடிபட்டேன், ஆனால் என் கும்பலை விடுதலை செய்துவிட்டுத்தான். 523 00:25:22,564 --> 00:25:25,025 விடுவிக்கப்பட்ட அவர்கள் என்னைக் காப்பாற்ற வருவார்கள். அது கச்சிதமான விஷயம். 524 00:25:25,526 --> 00:25:27,653 ஆம். இல்லை, அது கச்சிதம் தான். கண்டிப்பாக அவர்கள் வருவார்கள். 525 00:25:28,320 --> 00:25:31,740 அவர்கள் வருவார்கள். நான் வீரமாகவும் தைரியமாகவும் டாம் கிங்கை கொன்றேன். 526 00:25:31,740 --> 00:25:34,326 அதோடு நான் அவர்களை ஜொனாத்தன் வைல்ட்டிடமிருந்து காப்பாற்றினேன். அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். 527 00:25:35,077 --> 00:25:37,579 ஆம், இல்லை. கண்டிப்பாக நேசிக்கிறார்கள். அவர்கள் வந்து உன்னை விடுவிக்கும்போது, 528 00:25:37,579 --> 00:25:40,207 நான் பின்னாடியே சென்று, உன் சாகஸங்களைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதுவேன். 529 00:25:40,207 --> 00:25:41,834 டிக் டர்பினின் சாகஸங்கள். 530 00:25:41,834 --> 00:25:44,503 அவர்கள் உன்னை விடுவிக்க வராத காரணத்தால், உன்னைத் தூக்கிலிட்டால்? 531 00:25:44,503 --> 00:25:47,047 ஆம், வந்து, அது வெறும் விளம்பர நோட்டிஸ்மாதிரி இருக்கும். 532 00:25:47,047 --> 00:25:48,173 ஒரு விளம்பர நோட்டீஸா? 533 00:25:48,173 --> 00:25:50,467 - ஒர அட்டகாசமான விளம்பர நோட்டீஸ். - ஒரு அட்டகாசமான விளம்... 534 00:25:50,467 --> 00:25:53,387 நான் அட்டகாசமாக இருக்க விரும்பலை... யாருமே ஒரு அட்டகாசமான நோட்டிஸாக இருக்க விரும்பமாட்டார்கள். 535 00:25:53,387 --> 00:25:55,556 நான் ஒரு அட்டகாசமான நோட்டிஸாக இருக்க விரும்புகிறேன். 536 00:25:56,348 --> 00:25:57,683 அப்போது சரி. 537 00:25:57,683 --> 00:26:00,060 அனைவரும் வண்டிக்குத் திரும்புங்கள். 538 00:26:00,561 --> 00:26:04,022 கழிப்பறையை பயன்படுத்த இதுவே கடைசி வாய்ப்பு. 539 00:26:04,940 --> 00:26:06,066 எப்போதைக்குமே. 540 00:26:25,460 --> 00:26:28,881 உங்கள் சொந்தப் பொருட்களை எல்லாம் சோதனைச் செய்து எடுத்துச் செல்லுங்கள். 541 00:26:28,881 --> 00:26:29,965 மிக்க நன்றி. 542 00:26:34,636 --> 00:26:37,055 மார்கரெட், நீ விழித்துள்ளாய். உன் கணவரைப் பத்தி யோசி. 543 00:26:40,350 --> 00:26:41,351 கச்சிதம். 544 00:26:45,189 --> 00:26:48,233 அது ஆபத்தானது, அதுதான். அதெல்லாம் திடீரென வேகமெடுக்கலாம். 545 00:26:48,233 --> 00:26:50,611 - எதெல்லாம்? - அந்த உருண்டைப் பொருட்கள். 546 00:26:50,611 --> 00:26:52,696 - நீ சக்கரங்களைச் சொல்கிறாயா? - ஆம். 547 00:26:52,696 --> 00:26:54,531 - அது அமைக்கப்பட்டதே அப்படித்தான். - எனக்குத் தெரியும். 548 00:26:54,531 --> 00:26:56,909 நான் அதை நினைவுப் படுத்துகிறேன். யாரும் காயப்பட வேண்டாமே என்றுதான். 549 00:26:56,909 --> 00:26:59,828 சரி, அது மிக உன்னதமான நோக்கம், அதுவும் தூக்கில் தொங்கப் போகும் ஒருவர் அதைச் சொல்வது. 550 00:26:59,828 --> 00:27:01,955 ஜியாஃப்ரி, நாம் அனைத்திலும் ஒத்துக்கொண்டதில்லை எனத் தெரியும், 551 00:27:01,955 --> 00:27:04,708 ஆனால் நாம் சேர்ந்திருந்த காலத்தில் நான் சந்தோஷமாக இருந்தேன் எனக் கூற வேண்டும். 552 00:27:04,708 --> 00:27:06,585 சரிதான். நீ கவனமாகச் செல், டர்க். 553 00:27:06,585 --> 00:27:08,295 - உண்மையில் அது டிக். - ஏதோ ஒன்று. 554 00:27:08,295 --> 00:27:09,922 - தொடர்பு வைத்துக்கொள், சரியா? - ம்ம்-ஹம். 555 00:27:18,180 --> 00:27:19,640 கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? 556 00:27:19,640 --> 00:27:20,974 ஆம். எனக்கு ஒரு நிமிடம் கொடு. 557 00:27:22,935 --> 00:27:24,019 நீ என்ன யோசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். 558 00:27:24,019 --> 00:27:26,480 "உயர்ந்த கன்னங்களுடன் உள்ள இந்த நபர் யார்? 559 00:27:26,480 --> 00:27:29,566 அவன் தலை முடியை அவன் எங்கே நேர்த்தியாகத் திருத்துவான்? அவன் ஜாக்கெட்தான் அற்புதம்." 560 00:27:29,566 --> 00:27:31,902 அதெல்லாம் முக்கியமில்லை. சரி, கொஞ்சம் முக்கியம். 561 00:27:31,902 --> 00:27:35,781 எது முக்கியமென்னவெனில், என் பெயர் டிக் டர்பின், 562 00:27:35,781 --> 00:27:40,244 மேலும் ஒருநாள், நானே இங்கிலாந்தின் மிகப் பிரபலமான ஹைவேமேன் ஆவேன். 563 00:27:41,119 --> 00:27:45,040 உன்னை நிஜமாகவே இப்போது தூக்கிலிடப் போகிறார்கள், முட்டாளே! 564 00:27:46,166 --> 00:27:49,503 உண்மையில் நான் முட்டாள் இல்லை, ஏனெனில் என் கும்பல் வந்து என்னை காப்பாற்றப் போகிறது. 565 00:27:50,504 --> 00:27:52,673 உண்மையில், அவர்கள் ஏற்கனவே இங்குள்ளனர். 566 00:27:52,673 --> 00:27:55,551 நான் என்னுடைய உற்ற நண்பரை அறிமுகம் செய்துவைக்கிறேன். 567 00:27:56,134 --> 00:27:57,135 மூஸ். 568 00:27:59,847 --> 00:28:01,014 அது மிகவும் நன்றாக இருந்திருக்கும். 569 00:28:01,014 --> 00:28:02,891 இவன் விலை மதிப்பற்றவன். 570 00:28:04,893 --> 00:28:06,520 - அவனைத் தூக்கிலிடுங்கள்! - என்னை மன்னிக்க வேண்டும். 571 00:28:07,813 --> 00:28:09,064 அதை மட்டும் எடுக்க விடு. 572 00:28:09,064 --> 00:28:10,858 அடக் கடவுளே, அதை கண் ஓட்டைகளுக்கு நேராக வைக்கிறேன். 573 00:28:13,068 --> 00:28:15,320 இதோ, சரியாகிவிட்டது. உன்னால் பார்க்க முடிகிறதா? சரி, இப்போ நீ செய்யலாம். 574 00:28:15,320 --> 00:28:16,530 அது போதும். 575 00:28:25,205 --> 00:28:26,790 என் கும்பலுக்கு ஒரு குறிப்பு: 576 00:28:26,790 --> 00:28:28,250 நீங்கள் என்னைக் காப்பாத்த திட்டமிட்டிருந்தால், 577 00:28:28,250 --> 00:28:30,711 கயிறு என் கழுத்தில் ஏறும் முன்பு செய்வது நல்லதாக இருக்கும். 578 00:28:34,423 --> 00:28:35,757 மக்களே? 579 00:28:37,092 --> 00:28:41,054 அற்புதம். நான் பார்த்த சிறப்பான தூக்கிலிடும் சம்பவம் இதுதான். 580 00:28:41,930 --> 00:28:43,807 தோழர்களே? தோழர்களே. 581 00:28:44,391 --> 00:28:46,643 வாங்கப்பா, தோழர்களே. விளையாடாதீர்கள். 582 00:28:47,227 --> 00:28:48,520 தோழ... 583 00:28:54,610 --> 00:28:56,195 நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? அந்த கயிற்றை பார்த்து சுடு. 584 00:28:56,195 --> 00:28:57,905 - சீக்கிரம்! - என்னை அவசரப்படுத்துவதை நிறுத்து. 585 00:29:05,829 --> 00:29:07,915 இந்த விஷயங்கள் கொஞ்சம் குறி தவறிப் போகலாம். 586 00:29:07,915 --> 00:29:10,334 நீ அதை வேண்டும் என்றேதான் செய்தாய். உனக்கு அவனைக் காப்பாற்ற விருப்பமில்லை. 587 00:29:10,334 --> 00:29:12,336 அடக் கடவுளே. இப்போது அவன் இறக்கிறான். 588 00:29:12,336 --> 00:29:13,962 பார், அவன் உடல் நடுங்குகிறது. 589 00:29:13,962 --> 00:29:16,548 அமைதியா இரு. அவன் இறக்கவில்லை. நான் அவனை ரீலோட் செய்கிறேன். 590 00:29:16,548 --> 00:29:18,091 இதை மறந்துவிடு. நான் இதை என் வழியில் செய்யப் போகிறேன். 591 00:29:23,555 --> 00:29:25,140 நாங்கள் வருகிறோம், டிக்! 592 00:29:31,980 --> 00:29:34,191 காவலாளிகளே! பிடியுங்கள் அவனை! 593 00:29:34,191 --> 00:29:35,359 நீங்கள் வந்துவிட்டீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. 594 00:29:35,359 --> 00:29:37,569 கண்டிப்பாக. நீதான் உலகிலேயே சிறந்த மனிதன். 595 00:29:37,569 --> 00:29:38,654 தெரியும். 596 00:29:39,321 --> 00:29:41,823 இது மிக, மிக சுகமாக இருக்கிறது. 597 00:29:41,823 --> 00:29:43,408 - மூஸ்! - மன்னித்துவிடு, தோழா. 598 00:29:47,371 --> 00:29:48,372 ஓடிப் போங்கள். 599 00:29:52,042 --> 00:29:53,377 மீண்டுமா. 600 00:29:58,298 --> 00:30:00,092 சமீபத்துல ஏதாவது நல்ல அலமாரியில் இருந்துள்ளாயா? 601 00:30:00,843 --> 00:30:01,844 சரிதான், பெரிய மனிதரா? 602 00:30:03,053 --> 00:30:07,015 ஜொனாத்தன் வைல்ட்டை விட்டு தப்பி ஓடவே முடியாது என்பதை, இதற்குள் நீ உணர்ந்திருக்க வேண்டுமே. 603 00:30:08,058 --> 00:30:10,561 - நேரம் வந்துவிட்டது... - அப்பா. 604 00:30:10,561 --> 00:30:12,229 - நேரம் வந்துவிட்டது... - அப்பா! 605 00:30:12,229 --> 00:30:14,481 - சத்தம்போட்டு அழுவதற்கா, என்ன? - வண்டிச் சக்கரங்கள்! 606 00:30:16,692 --> 00:30:18,193 நான் அதை உண்மையில் கவனித்தேன். 607 00:30:35,502 --> 00:30:38,422 நான் எப்போதும் இந்த சிறிய குதிரையில்தான் பயணம் செய்ய வேண்டுமா? 608 00:30:38,422 --> 00:30:40,966 முனகுவதை நிறுத்து. இவ்வளவு குறுகிய காலத்தில் அதைதான் ஏற்பாடு செய்ய முடிந்தது. 609 00:30:40,966 --> 00:30:43,635 அதாவது, நான்தானே தலைவன். நான் இன்னும் பெரிய குதிரையில் இருக்க வேண்டும். 610 00:30:43,635 --> 00:30:45,095 நான் இன்னும் பெரிய நாய்கள் மீது உட்கார்ந்திருக்கேன். 611 00:30:58,317 --> 00:31:00,402 சரி. நாம் மேலே செல்ல வேண்டும். 612 00:31:04,156 --> 00:31:06,450 கிறிஸ்டாஃபர், ஒரு தேடப்படுபவரின் போஸ்டரின் முக்கிய அம்சமே 613 00:31:06,450 --> 00:31:08,785 மக்கள் அதைப் பார்த்து அடையாளம் காண வேண்டும் என்பதுதான். 614 00:31:08,785 --> 00:31:11,580 இது ஒரு ஆமைக்கு உடை உடுத்தியதுப் போல உள்ளது. 615 00:31:11,580 --> 00:31:12,831 - யார் இப்படிச் செய்தார்கள்? - ஆல்ஃப். 616 00:31:13,707 --> 00:31:15,667 ஆல்ஃப்பா? பப்பில் இருக்கும் ஆல்ஃப்பா? 617 00:31:15,667 --> 00:31:18,462 அவனால் வரையவே முடியாது என்று அனைவருக்கும் தெரியுமே. 618 00:31:18,462 --> 00:31:20,839 - இதுபோல் எவ்வளவு செய்துள்ளாய்? - 3000. 619 00:31:21,423 --> 00:31:24,593 ஒழிஞ்சு போனது போ, கிறிஸ்டாஃபர். ஸ்கூல் எப்போது திறக்கிறது? 620 00:31:26,094 --> 00:31:27,304 தேடப்படுகிறார் உயிருடன் அல்லது இறந்தவராக 621 00:31:27,304 --> 00:31:29,806 சட்டவிரோதமான ஹைவே கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக 622 00:31:29,806 --> 00:31:31,517 {\an8}டிக் டர்பின் 623 00:32:19,398 --> 00:32:21,400 தமிழாக்கம் அகிலா குமார்