1 00:00:17,309 --> 00:00:18,310 நீ யார்? 2 00:00:20,521 --> 00:00:21,688 பாரு, இந்த மக்கள்... 3 00:00:23,690 --> 00:00:25,234 இவர்கள் யாரும் எனக்கு முக்கியமில்லை. 4 00:00:25,234 --> 00:00:27,736 இவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது, ஆனால் இவர்கள் ஏதாவது முயற்சித்து 5 00:00:28,737 --> 00:00:31,865 உங்களில் யாராவது அவர்களை சுட்டால், இந்த விமானம் சேதப்படும். 6 00:00:31,865 --> 00:00:34,743 - விமானம் பாதுகாப்பாக இருக்கிறது. - ஆமாம். இப்போதைக்கு, ஆமாம். 7 00:00:35,327 --> 00:00:36,662 எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. 8 00:00:36,662 --> 00:00:39,581 சரி, இப்போது தேவைப்படவில்லை, ஆனால் பிறகு பிரச்சினை வந்தால்? 9 00:00:40,165 --> 00:00:42,626 - யாருடா நீ? - நீ முன்பே செயல்படுத்திவிட்டாய், இல்லையா? 10 00:00:44,628 --> 00:00:46,338 பயணம் கொஞ்சம் நேரம் நீடித்த பிறகு செய்வதாக இருந்தாய், 11 00:00:46,338 --> 00:00:48,882 ஆனால் அந்த மனிதர் முதல் வகுப்பிற்குள் விரைந்து வந்தார் 12 00:00:48,882 --> 00:00:52,094 பயம் மற்றும் பதட்டத்துட்டன் வந்தார், பிறகு நீ அவரிடம் பச்சை நிற தொப்பியைக் கொடுத்தாய். 13 00:00:52,094 --> 00:00:54,012 உடனேயே, எல்லாம் ஆரம்பித்தது. 14 00:00:54,555 --> 00:00:56,974 அது உங்கள் திட்டமில்லை, சரியா? 15 00:00:56,974 --> 00:00:58,392 போய் இவனது பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வா. 16 00:00:58,392 --> 00:01:00,853 அது திட்டத்தின் பகுதியாக இருந்திருக்காது. 17 00:01:02,145 --> 00:01:04,022 கேளு, முதல் ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் தவறாக நடந்தால், 18 00:01:05,022 --> 00:01:07,067 அடுத்த ஆறு மணி நேரத்தில் நடக்கப் போவதைப் பற்றி யோசித்துப் பாரு. 19 00:01:09,778 --> 00:01:10,779 சரி. 20 00:01:32,176 --> 00:01:33,969 அவன் உங்கள் பக்கம் வருகிறான், எட்டி. 21 00:01:33,969 --> 00:01:36,388 ஹே, ஓய். என்ன செய்கிறீர்கள்? 22 00:01:37,723 --> 00:01:38,557 வாயை மூடு. 23 00:01:44,021 --> 00:01:45,772 நெல்சன் - சாம் ஆங்கிலேய குடிமகன் 24 00:01:46,690 --> 00:01:48,734 - “சாம் நெல்சன்.” - ஆமாம். 25 00:01:54,823 --> 00:01:56,158 நாங்கள் முட்டாள் என்று நினைக்கிறாய்... 26 00:01:58,577 --> 00:01:59,411 சாம் நெல்சன்? 27 00:01:59,411 --> 00:02:02,414 இல்லை. நீங்கள் முட்டாள் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் புத்திசாலி என்று நினைக்கிறேன். 28 00:02:03,832 --> 00:02:04,833 ஆனால்... 29 00:02:06,543 --> 00:02:08,169 நான் சொல்வது உனக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 30 00:02:14,551 --> 00:02:15,969 இவனை அவனது இருக்கைக்கு அழைத்துப் போ. 31 00:02:40,911 --> 00:02:41,912 அதைத் திற. 32 00:02:43,914 --> 00:02:46,583 இவர்களை மறுபடியும் பார்க்க வேண்டுமென்றால், அதைத் திற. 33 00:02:57,052 --> 00:02:57,886 மெசேஜுகள் மார்ஷா 34 00:02:57,886 --> 00:02:59,304 {\an8}நான் திரும்பி வருகிறேன். விளையாடாதீர்கள். 35 00:02:59,304 --> 00:03:00,222 என் விமானம் 9:12க்கு புறப்பட்டது 36 00:03:00,222 --> 00:03:01,557 அந்த விமானத்தில் ஏறாதீர்கள். தாமதமாக சொல்லிவிட்டாய். 37 00:03:01,557 --> 00:03:02,641 இவ்வளவு தானா? 38 00:03:16,697 --> 00:03:19,324 அவ்வளவுதான். நீ என்னைப் பின்தொடர்ந்து வா. சரியா? 39 00:03:22,077 --> 00:03:23,036 இல்லை! 40 00:03:25,247 --> 00:03:26,874 அவனைப் பிடி, எட்டி! அவன் கழுத்தை நெறி! 41 00:03:35,966 --> 00:03:37,009 கீழே உட்காருங்கள்! 42 00:03:38,510 --> 00:03:40,429 துப்பாக்கி! உதைத்து தள்ளு! 43 00:03:43,390 --> 00:03:44,766 உட்காரு. மரியாதையாக உட்காரு. 44 00:03:44,766 --> 00:03:46,268 நேராகப் பாரு! 45 00:03:46,268 --> 00:03:47,686 நகராதே! 46 00:03:49,229 --> 00:03:51,440 துப்பாக்கி! துப்பாக்கி எங்கே? 47 00:04:20,219 --> 00:04:23,847 நான் ஏற்கனவே சொன்னது போல, எனக்கு வீட்டிற்குப் போக வேண்டும். 48 00:05:26,493 --> 00:05:28,161 நான் சொல்லப் போகிறேன், சரியா? 49 00:05:28,161 --> 00:05:29,705 ஐந்து வருடங்களாக சந்தித்துப் பேசாத ஒருவருக்கு, 50 00:05:29,705 --> 00:05:33,083 காலை ஏழு மணிக்கு ஃபோன் செய்வது மிகவும் சீக்கிரம் தானே? 51 00:05:33,083 --> 00:05:36,795 தெரியும். மன்னித்துவிடு. எனக்கு ஒரு உதவி வேண்டும். 52 00:05:36,795 --> 00:05:39,214 இன்னும் 30 நொடிகளில் என் காரில் ஏறப் போகிறேன்... 53 00:05:39,214 --> 00:05:41,133 கேளு, இது அந்தளவிற்கு முக்கியமானது இல்லை, ஆனால்... 54 00:05:41,133 --> 00:05:43,385 ...“சீக்கிரமாக சொல்” என்பதை நான் இப்படித்தான் சொல்வேன். 55 00:05:43,385 --> 00:05:44,511 நன்றி. 56 00:05:44,511 --> 00:05:47,598 என் காதலியின் முன்னாள் கணவர் துபாயிலிருந்து லண்டனுக்கு விமானத்தில் வருகிறார். 57 00:05:47,598 --> 00:05:51,768 பயணம் ஆரம்பித்த உடனேயே ஏதோ பிரச்சினை என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினார். 58 00:05:52,311 --> 00:05:55,439 அவள் உடனே பதில் அனுப்பினாள், ஆனால் மெசேஜ் டெலிவரி ஆகவில்லை. 59 00:05:55,439 --> 00:05:57,107 என்னிடம் என்ன உதவி கேட்கப் போகிறாய்? 60 00:05:57,107 --> 00:05:58,567 எல்லாம் நலமா என்று சரிபார்க்க வேண்டும். 61 00:05:59,151 --> 00:06:00,569 உன்னோடு வேலை செய்யும் யாராவது இதை... 62 00:06:00,569 --> 00:06:04,198 சரி. இது தீவிரவாத எதிர்ப்பு பிரச்சினை இல்லை, டேனியல். 63 00:06:04,198 --> 00:06:05,574 அப்படியும் இருக்கலாம். 64 00:06:06,450 --> 00:06:08,785 அப்படி இல்லாவிட்டால்... உனக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கலாம்... 65 00:06:08,785 --> 00:06:10,746 அவருக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கலாம்... 66 00:06:11,413 --> 00:06:13,790 ப்ளீஸ், ஸாரா. முயற்சிப்பதாக சொல்லியிருக்கேன். 67 00:06:14,458 --> 00:06:15,959 சரி. விமானத்தில் பிரச்சினையா? 68 00:06:15,959 --> 00:06:17,211 ஒரு சம்பவம். 69 00:06:18,295 --> 00:06:21,798 பிறகு அவளை நேசிப்பதாகச் சொன்னார். எப்போதும் நேசிப்பாராம். 70 00:06:21,798 --> 00:06:24,259 சரி. கண்டிப்பாக நாம் அவளது முன்னாள் கணவர் பற்றி தான் பேசுகிறோமா? 71 00:06:24,760 --> 00:06:27,638 அவர் அப்படித்தான் சொன்னார். பிரச்சினையில்லை என்றால் அப்படி பேசி இருக்க... 72 00:06:28,138 --> 00:06:30,641 ஏதாவது ஆபத்து இல்லை என்றால் நிச்சயம் அப்படி சொல்லியிருக்க மாட்டார். 73 00:06:32,684 --> 00:06:34,186 சரி, விமான எண் என்ன? 74 00:06:35,729 --> 00:06:37,981 நன்றி. உண்மையாகவே. 75 00:06:38,482 --> 00:06:40,192 உனக்கும் எனக்கும் நடுவே நடந்தவற்றிற்கு பிறகும்... உதவுவதற்கு நன்றி. 76 00:06:40,192 --> 00:06:42,444 சரி, விமான எண்ணைச் சொல், டேனியல். 77 00:06:43,445 --> 00:06:47,491 KA29. கிலோ ஆல்ஃபா டூ நைன். ஒரு மணி நேரத்திற்கு முன்பு கிளம்பியது. 78 00:06:48,242 --> 00:06:49,535 சரி. புரிகிறது. 79 00:06:52,579 --> 00:06:55,666 கேஏ 29 80 00:06:57,668 --> 00:07:01,213 எதற்காக இப்படி செய்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தான் வேண்டும்? 81 00:07:01,213 --> 00:07:02,256 வாயை மூடு. 82 00:07:06,009 --> 00:07:07,010 டையைக் கொடுங்கள். 83 00:07:16,979 --> 00:07:17,980 ஐஸ். 84 00:07:19,439 --> 00:07:20,566 என்ன? 85 00:07:20,566 --> 00:07:21,984 விமானத்தில் ஐஸ் இருக்கிறதா? 86 00:07:23,694 --> 00:07:24,695 இருக்கிறது. 87 00:07:42,087 --> 00:07:46,508 இந்த முட்டாள்தனமான செயலைத் திட்டமிட்டது யார்? 88 00:07:53,265 --> 00:07:55,100 நான்தான். அது என் திட்டம். 89 00:08:05,652 --> 00:08:06,945 இது நல்ல திட்டமில்லை, நண்பா. 90 00:08:10,574 --> 00:08:11,909 இது எனக்கில்லை. 91 00:08:16,121 --> 00:08:19,208 அந்த தலைவன் இருக்கிறானே, அவன் பெயர் என்ன? 92 00:08:19,208 --> 00:08:20,292 என்னோடு பேசாதே, நண்பா. 93 00:08:22,628 --> 00:08:23,629 போய் உட்காரு. 94 00:08:29,134 --> 00:08:30,761 உன் பிதற்றலைக் கேட்க யாருக்கும் விருப்பமில்லை. 95 00:08:43,899 --> 00:08:45,609 என்னை அங்கே வரவழைக்காதீர்கள், மிஸ்டர். 96 00:08:47,361 --> 00:08:50,113 சரி, எனக்கு கோபம் வருகிறது. சீக்கிரம் வா. 97 00:08:50,113 --> 00:08:51,198 வருகிறேன். 98 00:08:51,990 --> 00:08:55,369 நேற்றை விட இன்று தாமதமாகிவிட்டது. அதுவே ஒரு சாதனை தான். 99 00:08:56,912 --> 00:08:58,539 இரு. வெல்குரோ. 100 00:08:58,539 --> 00:09:00,874 - அவை பி.இ-க்காக. - வெல்குரோ. 101 00:09:10,300 --> 00:09:11,760 - பாப்ஸ். - ஆலிஸ்? 102 00:09:11,760 --> 00:09:14,054 ஆம், ஹாய். ஆம், நான் ஐந்து நிமிடம் தாமதமாக வருவேன். 103 00:09:14,054 --> 00:09:16,932 - நேற்று போல் பத்து நிமிடம் இல்லையா? - இல்லை, ஐந்து. 104 00:09:16,932 --> 00:09:19,142 சரி, இப்போதெல்லாம் ஐந்து நிமிடங்கள் என்பது எவ்வளவு காலம்? 105 00:09:19,142 --> 00:09:22,271 சைமன், நான் “ஐந்து” என்றால் ஐந்து தான். உங்களிடம் பொய் சொல்ல மாட்டேன். 106 00:09:22,855 --> 00:09:25,190 சரி, நீ வேலைக்கு வருவதற்குள்ளாக 107 00:09:25,190 --> 00:09:27,276 நான் விமானத்தை வானிலேயே சுற்றிக்கொண்டிருக்கச் சொல்கிறேன், சரியா? 108 00:09:27,943 --> 00:09:29,903 கேளுங்கள், நேற்று தான் பாபியின் அப்பென்டிக்ஸ் அகற்றப்பட்டது, 109 00:09:29,903 --> 00:09:31,238 அதனால் இன்று அவன் பள்ளிக்குப் போகவில்லை, 110 00:09:31,238 --> 00:09:33,907 எனவே அவனைப் பார்த்துக்கொள்ள வேறு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. 111 00:09:33,907 --> 00:09:35,617 அந்த இடம் அவனது பள்ளியை விடவும் தொலைவாக இருக்கிறது. 112 00:09:35,617 --> 00:09:38,912 அதனால் தான், நான் பத்து நிமிடங்கள் தாமதமாக வருவேன், சைமன். 113 00:09:39,496 --> 00:09:41,415 - அதிகபட்சம் பதினைந்து நிமிடங்கள். - அப்படியா? 114 00:09:43,792 --> 00:09:45,085 சரி, சரி. 115 00:09:45,878 --> 00:09:47,045 இந்தப் பாடல். 116 00:10:13,906 --> 00:10:15,532 “உங்கள் கேபின் குழுவிலிருந்து பேசுகிறேன். 117 00:10:16,825 --> 00:10:20,454 சீட்பெல்ட்டுகளை அணிந்தவாறு உங்கள் இடத்தில் அமர்ந்திருங்கள். 118 00:10:21,622 --> 00:10:24,958 விமானத்தைக் கட்டுப்படுத்துபவர்கள் சொல்வது போலச் செய்யுங்கள். 119 00:10:26,668 --> 00:10:29,505 கடந்த சில நிமிடங்களில் நடந்த சம்பவத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. 120 00:10:30,797 --> 00:10:34,968 மேலும் எதிர்ப்பு தெரிவித்தால் இறப்பு ஏற்படும். 121 00:10:36,678 --> 00:10:38,055 இதை உங்கள் இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்.” 122 00:10:38,055 --> 00:10:39,640 சரி, என்னிடம் கொடு. 123 00:10:41,099 --> 00:10:42,559 இப்போது முன்பக்கம் போ. 124 00:10:53,570 --> 00:10:56,823 ஹே. இதற்கு ஏதாவது மருந்து கொண்டு வா. 125 00:12:18,363 --> 00:12:21,617 விமானி பிரச்சினையானவர் 126 00:12:28,582 --> 00:12:29,791 உனக்காக சரிபார்க்கிறேன். 127 00:12:31,168 --> 00:12:32,920 சரி. ஒரு நொடி. 128 00:12:34,588 --> 00:12:37,299 கிங்டம் 2-9, அது பற்றிய நேர விவரம் என்ன? 129 00:12:37,799 --> 00:12:39,885 13:06 மணிக்கு முன்னால் வராது. 130 00:12:40,385 --> 00:12:42,179 அது வெகு தொலைவில் இருக்கிறது. 131 00:12:42,179 --> 00:12:44,014 நம் எல்லைக்குள் வர ஐந்து மணி நேரங்கள் ஆகும். 132 00:12:44,014 --> 00:12:45,474 விமானத்தை நேராகத் தொடர்புகொள்ள முடியுமா? 133 00:12:45,474 --> 00:12:47,935 என்னால் முடியும், ஆனால் வை-ஃபை இருந்தால் யார் வேண்டுமானாலும் செய்யலாம். 134 00:12:47,935 --> 00:12:49,520 ஏதோ காரணத்திற்காக, வை-ஃபை தொடர்பில் இல்லை. 135 00:12:49,520 --> 00:12:51,104 அல்லது நாம் ஏடிசி இடம் பேசி... 136 00:12:51,104 --> 00:12:52,314 - எங்கே என்று சொன்னாய்? துபாயா? - ஆமாம். 137 00:12:53,232 --> 00:12:55,317 அது எங்கள் அதிகாரத்தில் இல்லை, ஆனால் முயற்சிக்கிறேன். 138 00:12:56,276 --> 00:12:57,277 கொஞ்சம் காத்திரு. 139 00:12:57,903 --> 00:13:01,114 ஷிபான், துபாய் ஏடிசி-யின் எண்ணைச் சொல்கிறாயா? 140 00:13:02,991 --> 00:13:06,620 கண்ட்ரோல், இது பிஏ9850 புறப்பட அனுமதி கேட்கிறோம். 141 00:13:08,872 --> 00:13:11,959 எட்டு. ஒன்பதில் போக உங்களுக்கு எட்டைத் தருகிறோம். 142 00:13:13,168 --> 00:13:14,169 இன்னொரு முறை பாரு. 143 00:13:15,879 --> 00:13:16,755 நான் வீட்டிற்குப் போகிறேன். 144 00:13:16,755 --> 00:13:18,549 பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 145 00:13:18,549 --> 00:13:22,177 பிஏ9850, நீங்கள் புறப்படலாம். 146 00:13:22,177 --> 00:13:24,555 சரி. விமானத்துடன் பேசிவிட்டேன். 147 00:13:24,555 --> 00:13:27,641 இப்போது ஒன்றும் பிரச்சினை இல்லை. தவறான எச்சரிக்கை. 148 00:13:28,433 --> 00:13:30,227 கிங்டம் விமானம் பற்றியா பேசுகிறாய்? 149 00:13:31,144 --> 00:13:33,438 ஆமாம். ஆங்கிலேயர்கள் கூப்பிடுகிறார்கள். 150 00:13:33,438 --> 00:13:34,565 என்ன சொன்னாய்? 151 00:13:35,983 --> 00:13:38,443 ஒன்றும் பிரச்சினை இல்லை. தவறான எச்சரிக்கை என்றேன். 152 00:13:40,612 --> 00:13:42,906 இல்லை. இங்கு விளையாடக் கூடாது, நண்பா. 153 00:13:50,163 --> 00:13:51,248 தேவையில்லாமல் உதவி கேட்டவரா? 154 00:13:58,213 --> 00:14:01,758 ஹே. நீ விமானியிடம் பேசினாய். ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொன்னார். 155 00:14:01,758 --> 00:14:03,218 அவன் பேசியது தவறாக இருந்தால்? 156 00:14:03,218 --> 00:14:04,553 அது எப்படி தவறாக இருக்க முடியும்? 157 00:14:04,553 --> 00:14:05,679 அவர் பொய் சொல்லியிருந்தால்? 158 00:14:06,346 --> 00:14:07,556 எதற்கு பொய் சொல்ல வேண்டும்? 159 00:14:08,182 --> 00:14:10,058 யாராவது அவரை பொய் சொல்ல வைத்திருக்கலாம். 160 00:14:10,893 --> 00:14:12,019 அவரை மிரட்டி இருக்கலாம். 161 00:14:12,895 --> 00:14:14,229 ஆனால் அவரது குரல். 162 00:14:14,229 --> 00:14:17,482 அவர் பயப்படவில்லை. அமைதியாக நிதானமாக பேசினார். 163 00:14:17,482 --> 00:14:18,901 அப்படித்தான் பேசுவார். 164 00:14:18,901 --> 00:14:21,653 - விமானிகளா? - ஆங்கிலேயர். உணர்ச்சியற்றவர்கள். 165 00:14:21,653 --> 00:14:23,155 பேச்சை வைத்து எதுவும் கண்டுபிடிக்க முடியாது. 166 00:14:31,371 --> 00:14:33,123 நீ அவரை வெளியேற்ற வேண்டும். 167 00:14:33,707 --> 00:14:37,961 பாரு, அவரைத் தவிர, மற்ற எல்லோரும் நீ சொன்னபடி அவரவர் இடத்தில் இருக்கிறார்கள். 168 00:14:39,296 --> 00:14:40,839 அவர் இங்கே இருக்க வேண்டியதில்லை. 169 00:14:41,465 --> 00:14:45,010 டேக் ஆஃப் மற்றும் தரை இறங்குவதை மட்டும் தான் விமானிகள் செய்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். 170 00:14:45,594 --> 00:14:47,012 மற்றவை எல்லாம் ஆட்டோபைலட்டில் நடக்கும். 171 00:14:49,264 --> 00:14:50,265 அதனால் என்ன? 172 00:14:52,309 --> 00:14:53,852 அவர் நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். 173 00:14:59,399 --> 00:15:01,151 என்ன தகவல் வைத்திருக்கிறாய், ஹெய்டி? 174 00:15:01,652 --> 00:15:03,320 ஃபிளைட் பாத் கண்ட்ரோல் நிலையம் துபாய் நிலையத்தோடு பேசினார்கள். 175 00:15:03,320 --> 00:15:06,198 ஏற்கனவே விமானியோடு பேசினார்களாம். தவறான எச்சரிக்கையென்று உறுதி செய்யப்பட்டது. 176 00:15:06,198 --> 00:15:07,658 ச்சே. 177 00:15:09,368 --> 00:15:10,452 அது நல்ல விஷயம் தானே? 178 00:15:12,412 --> 00:15:13,830 மன்னிக்கவும், நான் அப்படி சொல்லவில்லை. 179 00:15:14,831 --> 00:15:16,750 உனக்கு நேரம் சரியில்லை. 180 00:15:16,750 --> 00:15:19,628 எனக்கு இது, உலகின் மோசமான பயணம். 181 00:15:43,819 --> 00:15:45,571 சரி. இதை ஆட்டோபைலட்டில் போடு. 182 00:15:46,154 --> 00:15:47,155 அதில் தான் இருக்கு. 183 00:15:48,198 --> 00:15:49,032 எனக்குக் காட்டு. 184 00:15:53,203 --> 00:15:55,247 சரி, அதைக் காட்டி, எனக்கு விளக்கு. 185 00:15:56,832 --> 00:15:59,418 சரி. இங்கே ஆட்டோபைலட் பொத்தானை அழுத்தினால், 186 00:15:59,418 --> 00:16:02,880 என் ஃபிளைட் ஸ்க்ரீனில் இந்த செய்தி இப்படி தோன்றும், 187 00:16:02,880 --> 00:16:07,342 இதில், ஏபி1 என்ற ஆட்டோபைலட் காட்டும். 188 00:16:07,342 --> 00:16:10,429 புரோகிராம் செய்யப்பட்ட இடங்கள் இதில் இருக்கின்றன. 189 00:16:11,054 --> 00:16:17,144 அது ஹீத்ரோ, இஜிஎல்எல், 320 டிகிரியை பொறுத்துக்கொண்டு. 190 00:16:18,645 --> 00:16:19,730 அது எனக்கு எப்படித் தெரியும்? 191 00:16:20,480 --> 00:16:22,024 டிகிரிகள் பற்றியா? 192 00:16:22,024 --> 00:16:23,483 அது லண்டன் என்று. 193 00:16:23,483 --> 00:16:26,236 இதோ இருக்கிறது. இஜிஎல்எல், அது தான் குறியீடு. 194 00:16:26,236 --> 00:16:27,905 ஐரோப்பா, கிரேட் பிரிட்டன், லண்டன். 195 00:16:29,615 --> 00:16:31,783 ஆக, நீயும் எதையும் தொட வேண்டாம் இல்லையா? 196 00:16:32,367 --> 00:16:36,830 வேண்டாம். ஹீத்ரோவை அடையும் ஒரு மணிநேரத்தில் முன்பு வரை. 197 00:16:54,932 --> 00:16:55,766 அமைதி உண்டாகட்டும். 198 00:16:55,766 --> 00:16:56,725 உங்களுக்கும் தான். 199 00:16:57,184 --> 00:16:58,435 - நீங்கள்தான் இங்கே அதிகாரி, சரியா? - ஆமாம். 200 00:16:58,435 --> 00:16:59,937 நான் ஏடிசியில் வேலை செய்கிறேன். 201 00:16:59,937 --> 00:17:02,231 இன்று காலை கிளம்பிய ஒரு விமானத்தில் 202 00:17:02,231 --> 00:17:04,316 எதோ பிரச்சினை இருப்பது போல தோன்றுகிறது. 203 00:17:04,316 --> 00:17:07,569 எனக்கு விமானம் பற்றியெல்லாம் தெரியாது. 204 00:17:07,569 --> 00:17:08,737 எனக்குத் தெரியும். புரிகிறது. 205 00:17:08,737 --> 00:17:09,655 கேமராக்கள். 206 00:17:10,196 --> 00:17:12,782 நான் காட்சிகளைப் பார்க்கலாமா? 207 00:17:14,076 --> 00:17:16,662 நான் காட்சிகளைப் பார்க்க அனுமதி கோரலாமா? 208 00:17:17,371 --> 00:17:19,540 கேட்கலாம். எப்போதும் கேட்கலாம். 209 00:17:20,123 --> 00:17:21,375 சரி. 210 00:17:21,375 --> 00:17:22,667 நன்றி. 211 00:17:26,672 --> 00:17:29,758 உன் சீட்பெல்ட்டைக் கழற்று. பெல்ட்டைக் கழற்று. 212 00:17:30,926 --> 00:17:31,885 எழுந்திரு. 213 00:17:35,347 --> 00:17:38,392 கையை விடு. நிறுத்து. 214 00:17:39,852 --> 00:17:41,144 என் கை வலிக்கிறது. 215 00:17:41,645 --> 00:17:42,813 என் கை! 216 00:17:42,813 --> 00:17:46,108 ஹே! நீ சொல்வதைத்தானே அவள் செய்கிறாள். 217 00:17:55,868 --> 00:17:56,869 போ. 218 00:17:58,537 --> 00:18:00,038 அது துப்பாக்கியா என்று அவங்களிடம் கேளு. 219 00:18:00,622 --> 00:18:01,832 அது துப்பாக்கியா என்று கேளு. 220 00:18:08,964 --> 00:18:10,048 அங்கே உட்கார். 221 00:18:10,048 --> 00:18:11,300 அவள் என்ன செய்தாள்? 222 00:18:13,343 --> 00:18:14,344 அவள் இங்கே இருப்பாள். 223 00:18:21,018 --> 00:18:23,395 நீங்கள் நலமா, செல்லம்? என்ன நடக்கிறது? 224 00:18:23,395 --> 00:18:24,479 என்ன நடக்கிறது? 225 00:18:24,479 --> 00:18:27,024 அங்கே ஒருவன், இவர்களோடு சேர்ந்து விட்டான். 226 00:18:27,691 --> 00:18:30,569 தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, நம்மைக் காட்டிக் கொடுத்தான். அதுதான் நடக்கிறது. 227 00:18:31,945 --> 00:18:33,488 எனக்குப் புரியவில்லை. 228 00:18:46,418 --> 00:18:49,671 முதல் ஆள், அங்கே உட்கார். இங்கே உட்கார். 229 00:18:52,466 --> 00:18:53,800 மெதுவாகப் பேசு. 230 00:19:02,684 --> 00:19:06,396 அவளுக்குக் காயம் இருக்கிறது. நான் அவளுக்கு மருந்து கொடுக்க வேண்டும். 231 00:19:06,396 --> 00:19:07,731 - அவள் நலம் தான். - அவள் நலமில்லை. 232 00:19:07,731 --> 00:19:09,274 அவளுக்கு ரொம்ப இரத்தம் வருகிறது. 233 00:19:09,274 --> 00:19:11,235 நான் விமனத்தின் பின்புறம் போக அனுமதி கொடு. 234 00:19:11,235 --> 00:19:12,861 இல்லை, முடியாது. 235 00:19:15,531 --> 00:19:16,532 உட்காரு. 236 00:19:18,909 --> 00:19:20,827 ஹலோ? உட்காரு. 237 00:19:22,829 --> 00:19:23,830 உட்காரு. 238 00:19:49,690 --> 00:19:51,024 கேம் சென்டர் இப்போது விளையாடு 239 00:19:56,029 --> 00:19:57,614 ஒரு கை பார்ப்போம். 240 00:20:01,201 --> 00:20:02,452 {\an8}உன் எதிரியோடு பேசு 241 00:20:02,452 --> 00:20:03,912 {\an8}உண்மையாகவா? 242 00:20:03,912 --> 00:20:06,164 ஒன்றும் நடக்காதது போல நீங்கள் வெளியே போகிறீர்களா? 243 00:20:06,164 --> 00:20:07,749 சரி, அவருக்காக நாம் என்ன செய்ய முடியும்? 244 00:20:08,250 --> 00:20:10,460 - நம்மை கவலைப்பட வேண்டாம் என்பார். - உங்களுக்கு அது தெரியாது. 245 00:20:10,460 --> 00:20:13,088 - நம் வேலையைப் பார்க்கச் சொல்வார். - அதுவும் உங்களுக்குத் தெரியாது. 246 00:20:13,088 --> 00:20:15,716 இன்று எனக்கு முக்கியமான நாள், கைய். 247 00:20:25,893 --> 00:20:29,313 ஏதாவது தெரியவந்தால், நாங்கள் அழைக்கிறோம். 248 00:20:30,564 --> 00:20:31,690 அல்லது மெசேஜ் அனுப்புகிறோம். 249 00:20:32,983 --> 00:20:35,611 நான் உன்னோடு இருக்கிறேன். சரியா? 250 00:20:41,909 --> 00:20:42,951 என் ஃபோனை ஆனிலேயே வைக்கிறேன். 251 00:20:44,870 --> 00:20:46,663 எப்போது உன் ஃபோன் ஆஃப்பில் இருந்தது? 252 00:20:59,635 --> 00:21:00,511 என்ன? 253 00:21:00,511 --> 00:21:03,722 அவர்கள் துபாய் விமான நிலையத்தோடு பேசினார்கள். அது தவறான எச்சரிக்கையாம். 254 00:21:03,722 --> 00:21:04,932 உறுதியாகத் தெரியுமா? 255 00:21:04,932 --> 00:21:06,642 எல்லாம் தவறான புரிதல் தான். 256 00:21:09,144 --> 00:21:09,978 மார்ஷா. 257 00:21:10,896 --> 00:21:11,897 கேளுங்கள்? 258 00:21:12,481 --> 00:21:14,942 இதுதான் பிரச்சினை. அவர் அப்படித்தான் நடந்துகொள்வார். 259 00:21:14,942 --> 00:21:16,777 - மார்ஷா... - இல்லை, சாம் இப்படித்தான் செய்வார். 260 00:21:16,777 --> 00:21:19,238 எப்போதும் அவர் இப்படித்தான் நடப்பார். 261 00:21:19,238 --> 00:21:20,447 முக்கியமான விஷயம், 262 00:21:20,447 --> 00:21:23,075 அந்த விமானத்தில் என்ன நடக்கிறதோ என நாம் பயந்தோம், ஆனால் அவர் நலமாக இருக்கிறார். 263 00:21:23,825 --> 00:21:25,619 சாம் நலமாக இருக்கிறார். 264 00:21:27,454 --> 00:21:28,622 நன்றி. 265 00:21:41,927 --> 00:21:43,846 ஆக, அப்பா நலமா? 266 00:21:44,972 --> 00:21:46,515 ஒரு துப்பாக்கி வெடித்த சத்தத்தைக் கேட்டேன். 267 00:21:46,515 --> 00:21:48,559 - துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டாயா? - இல்லை, அப்படி கேள்விப்பட்டேன். 268 00:21:48,559 --> 00:21:54,898 துப்பாக்கி வெடித்தது, ஒரு சண்டை நடந்தது, இரண்டு நபர்கள் எதிர்த்தார்கள். 269 00:21:54,898 --> 00:21:56,733 மக்கள் அப்படித்தான் பேசுகிறார்கள். 270 00:21:56,733 --> 00:21:58,402 நீங்கள் அவர்களைப் பார்த்தீர்களா? அந்த ஆட்களை? 271 00:21:59,152 --> 00:22:02,698 என்னை இங்கே கொண்டு வந்த போது பார்த்தேன். அவர்கள் கட்டப்பட்டிருந்தார்கள். 272 00:22:02,698 --> 00:22:06,368 “பொறுத்துக்கொள்ள முடியாது” என்று அவர்கள் சொன்னதற்கு அதுதான் அர்த்தம். 273 00:22:06,368 --> 00:22:09,830 ஏன் இதைச் செய்கிறார்கள்? அது தெரிய வேண்டும். 274 00:22:09,830 --> 00:22:13,917 சரி, நீங்கள் என்ன செய்தீர்கள்? சொல்லுங்கள், நீங்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். 275 00:22:13,917 --> 00:22:15,252 அவங்களிடம் அப்படி பேசாதே. 276 00:22:15,252 --> 00:22:18,046 சரி, யோசி. காரணமில்லாமல் அவங்களை இங்கே அனுப்பியிருக்க மாட்டார்கள். 277 00:22:21,133 --> 00:22:22,176 திரும்பு. 278 00:22:23,969 --> 00:22:26,972 நீ. முன்பக்கம் பார்த்தபடி உட்காரு. 279 00:22:28,182 --> 00:22:31,101 நீ. வாயை மூடு. 280 00:22:33,729 --> 00:22:35,647 ஹே, எல்லாம் சரியாகிவிடும், சரியா? 281 00:22:35,647 --> 00:22:37,524 நான் இப்போது என்ன சொன்னேன்? 282 00:22:46,992 --> 00:22:48,994 {\an8}பயணி 1கே-க்கு ரிக்வஸ்ட் போனது 283 00:22:54,249 --> 00:22:56,543 பயணி 2டி சவால் விடுகிறார் ஏற்றுக்கொள் மறுத்துவிடு 284 00:23:00,589 --> 00:23:02,424 2டி 285 00:23:17,689 --> 00:23:18,982 {\an8}சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது 286 00:23:22,694 --> 00:23:28,617 KA29 விமானத்தின் பயணிகள், மற்ற பயணிகளோடு கலந்து இங்கே இருப்பார்கள். 287 00:23:31,119 --> 00:23:32,371 அது வழக்கமானது தான். 288 00:23:34,831 --> 00:23:36,834 சந்தேகப்படும்படி எதுவும் பார்க்கவில்லையா? 289 00:23:36,834 --> 00:23:38,293 இன்றா? இல்லை. 290 00:23:39,461 --> 00:23:42,673 இங்கே பாதுகாப்பு அதிகம். ஒன்றும் பிரச்சினையில்லை. 291 00:23:43,924 --> 00:23:44,925 பார்த்தீர்களா? 292 00:23:45,467 --> 00:23:46,969 அவளை எனக்குத் தெரியும். 293 00:23:49,888 --> 00:23:52,266 நீலா. அது தான் அவளது பெயர். 294 00:23:53,433 --> 00:23:56,103 அவளது மகளின் பார்ட்டிக்கு என் மகளை அழைத்துப் போனேன். 295 00:23:56,103 --> 00:23:57,396 நீலா, ஆமாம். 296 00:23:58,021 --> 00:24:01,567 போன வாரம், ஒரு கைத்துப்பாக்கியை கொண்டு வந்த ஆளை நிறுத்தினாள். 297 00:24:02,192 --> 00:24:05,863 வந்து, பந்தயத்தை துவக்கி வைக்கும் துப்பாக்கிச் சூடு. 298 00:24:06,947 --> 00:24:07,948 நீலா சிறப்பானவள். 299 00:24:07,948 --> 00:24:10,617 எந்த பிரச்சினையானாலும், அவள் கண்டுபிடித்து விடுவாள். 300 00:24:13,203 --> 00:24:14,204 வீடியோவை கொஞ்சம் முன்னே ஓட்டுங்கள். 301 00:24:30,637 --> 00:24:33,056 அவ்வளவுதானா? அவள் வீட்டிற்குப் போய்விட்டாளா? 302 00:24:34,308 --> 00:24:36,059 அவள் ஷிஃப்ட் முடிந்திருக்கலாம். 303 00:24:37,853 --> 00:24:41,148 இருக்கலாம். யாராவது செக் செய்தார்களா? 304 00:24:51,366 --> 00:24:53,327 2டி: இங்கே பேசலாம். 305 00:25:00,959 --> 00:25:02,294 மெசேஜை டைப் செய்யவும் 306 00:25:02,294 --> 00:25:04,296 2டி: தரை நிலையத்திற்கு என்ன தெரியும்? 307 00:25:08,884 --> 00:25:09,885 1கே: இன்னும் எதுவும் தெரியாது. 308 00:25:19,603 --> 00:25:20,437 நீ நலமா? 309 00:25:27,778 --> 00:25:29,279 சீட் பெல்ட்டைப் போடு. 310 00:25:52,094 --> 00:25:53,095 எல்லாம் எடுத்துக் கொண்டாயா? 311 00:25:53,762 --> 00:25:56,598 உன் தண்ணீர்? உன் உணவு? உன் டைரி? 312 00:25:58,267 --> 00:26:00,811 எடுத்துக்கொண்டாயா? சரி, உள்ளே போ. உள்ளே போ. போ. 313 00:26:01,353 --> 00:26:02,396 ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள். 314 00:26:03,647 --> 00:26:05,941 - என்ன சொன்னேன்? - என் அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை பற்றி. 315 00:26:06,733 --> 00:26:07,734 அப்படியா? 316 00:26:08,360 --> 00:26:09,778 போன டெர்மிலேயே சொன்னீர்கள். 317 00:26:09,778 --> 00:26:12,239 ஒருமுறை தான் அப்பெண்டிக்ஸ் எடுக்க முடியும், சரி இதை எதிர்கொள்வோம். 318 00:26:13,156 --> 00:26:14,783 யாராவது இரண்டு முறை என்று சொன்னால்... 319 00:26:14,783 --> 00:26:19,162 அதில் ஏதோ பிரச்சினை இருக்கும். ஆமாம். 320 00:26:19,162 --> 00:26:20,289 என்ன செய்யப் போகிறீர்கள்? 321 00:26:20,289 --> 00:26:23,333 உன்னைப் போல் என் பாஸ் புத்திசாலி இல்லை என நம்புகிறேன். இப்போது உள்ளே போ. 322 00:26:24,042 --> 00:26:25,711 உனக்குத் தாமதமாகிறது. உள்ளே போ. 323 00:26:26,712 --> 00:26:28,714 - உன்னை நேசிக்கிறேன். பை-பை - குட்பை, நானும் தான்! 324 00:26:36,680 --> 00:26:39,558 பிளாசாவில் இருவருக்கான மேஜை. 325 00:26:39,975 --> 00:26:42,311 என் பிறந்தநாளுக்கு அதுதான் வேண்டும். 326 00:26:43,353 --> 00:26:45,314 உனக்கு லாப்ஸ்டர் வாங்க வேண்டும். சரியா? 327 00:26:46,190 --> 00:26:47,608 சரி. 328 00:26:47,608 --> 00:26:49,484 சரி, அதை முறையாகச் செய்வோம். 329 00:26:49,484 --> 00:26:51,195 ஸ்டார்ட்டர்ஸ்... கடல் உணவுகள் எல்லாமே... 330 00:26:52,196 --> 00:26:54,448 ஒரு நல்ல ஆயா... 331 00:26:54,448 --> 00:26:57,409 ஃபாத்திமா. பிறகு அழைக்கிறேன். 332 00:26:58,535 --> 00:26:59,536 அப்துல்லா. 333 00:26:59,536 --> 00:27:02,497 நான் நட்டாலியா. விமான நிலைய பாதுகாப்பு. 334 00:27:03,040 --> 00:27:07,836 உங்கள் தோழி நீலா, சீக்கிரமாக கிளம்பினாள். உடம்பு சரி இல்லை என்றாள். 335 00:27:08,462 --> 00:27:10,255 பார்த்தால் அப்படித் தெரியவில்லையே. 336 00:27:10,255 --> 00:27:12,716 அவள் அப்படித்தான் சொன்னாள். 337 00:27:13,258 --> 00:27:14,384 சரி. நன்றி. 338 00:27:28,607 --> 00:27:33,612 1கே: ஈராக்கி ஏடிசி விமானத்தை தொடர்புகொள்வார். ஆனால் யாரும் பதிலளிக்கப் போவதில்லை. 339 00:27:33,612 --> 00:27:37,241 ஏனென்றால் காக்பிட்டில் யாரும் இல்லை. 340 00:27:39,993 --> 00:27:45,207 2டி: பிறகு என்ன நடக்கும்? 341 00:27:50,379 --> 00:27:54,466 1கே: ஈராக்கி இராணுவத்தை அவர்கள் தொடர்புகொள்வார்கள். 342 00:27:58,303 --> 00:28:00,097 துருக்கி - சிரியா - ஈராக் 343 00:28:04,226 --> 00:28:06,311 ஈராக் 344 00:28:07,229 --> 00:28:08,981 என் காதலி நன்றி சொல்கிறாள். 345 00:28:09,565 --> 00:28:10,774 பரவாயில்லை. 346 00:28:10,774 --> 00:28:14,444 அவள் கோபமாகவும் இருக்கிறாள். தெரியுமா? எதனால் கோபப்பட்டாள் என்றால்... 347 00:28:14,444 --> 00:28:17,614 ஆபத்தில் இல்லாத போது அவளது முன்னாள் கணவர் அப்படி சொன்னதால் தான். 348 00:28:17,614 --> 00:28:19,032 சரி. மறுபடியும், 349 00:28:19,032 --> 00:28:22,369 நீ ஏன் தீவிரவாத எதிர்ப்பு விஷயம் பற்றி என்னோடு பேசுகிறாய் என்று புரிகிறது... 350 00:28:22,369 --> 00:28:24,329 இல்லை, நான் வேலை சம்பந்தமாக அழைக்கவில்லை. 351 00:28:24,329 --> 00:28:26,498 ஆம், சற்று வினோதமாக இருக்கிறது. 352 00:28:27,416 --> 00:28:29,710 வந்து, நீ நினைப்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். 353 00:28:30,752 --> 00:28:31,753 நீ நினைக்கிறாய், அது... 354 00:28:31,753 --> 00:28:34,006 இது விசித்திரமான அழைப்பு என புரிகிறது. 355 00:28:34,006 --> 00:28:36,091 பிரிந்துப் போன ஒருவருக்காக... 356 00:28:36,592 --> 00:28:38,385 பிரிந்துப் போன ஒருவர் சொல்வதைப் பற்றியும், 357 00:28:38,385 --> 00:28:40,804 செய்வதைப் பற்றியும் அவள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறாள் என் யோசிக்கிறாயா? 358 00:28:42,139 --> 00:28:43,098 ஆம், அது... 359 00:28:44,975 --> 00:28:47,895 இந்த முன்னாள் கணவர் உண்மையிலேயே முன்னாள் கணவரா என்று நான் கேட்டது... 360 00:28:48,478 --> 00:28:50,689 ஹே, நீ சொன்ன போது, வந்து... 361 00:28:50,689 --> 00:28:54,610 அல்லது நமக்குள்ளே எல்லாம் முடிந்து விட்டதாக நாம் முடிவெடுத்த போது, எல்லாம் முடிந்துவிட்டது. 362 00:28:55,777 --> 00:28:59,615 நாம் அதைப் பற்றி பேசவில்லை, நீ என்னை அழைக்கவில்லை அத்தோடு எல்லாம் முடிந்தது. 363 00:29:02,326 --> 00:29:05,120 - இணைப்பில் இருக்கிறாயா? - ஆமாம். பாரு... 364 00:29:05,120 --> 00:29:06,705 பாரு, டேனியல், நான் வேண்டாம் என விட்டுவிட்டேன், 365 00:29:06,705 --> 00:29:08,290 - அவள் போராட விரும்பினால்... - அப்படித்தான் செய்கிறாள். 366 00:29:08,290 --> 00:29:10,292 ...அவளுக்கு வேண்டியவரை, அந்த ஆளைப் பற்றி கவலைப்படலாம், 367 00:29:10,292 --> 00:29:12,794 அவள் என்னைப் பற்றி இன்னும் அதிகமாக கவலைப்படுவதை நான் உறுதி செய்யப் போகிறேன். 368 00:29:12,794 --> 00:29:15,172 உறுதிப்படுத்து, டேன், அல்லது எல்லாம் கைவிட்டு போய்விடும். 369 00:29:15,839 --> 00:29:17,257 சரி, அவர்களை அனுப்புங்கள். 370 00:29:18,008 --> 00:29:21,220 சரி, இந்த விஷயத்தைப் பற்றி இனி என்னை அழைக்காதே, சரியா? 371 00:29:22,763 --> 00:29:23,764 மன்னித்துவிடு. 372 00:29:24,431 --> 00:29:25,474 பரவாயில்லை. 373 00:29:39,738 --> 00:29:43,283 கிங்டம் 2-9, பாக்தாத் கண்ட்ரோலிலிருந்து பேசுகிறோம், உங்கள் நிலை என்ன? 374 00:29:49,331 --> 00:29:53,210 கிங்டம் 2-9, பாக்தாத் கண்ட்ரோலிலிருந்து பேசுகிறோம், உங்கள் நிலை என்ன? 375 00:30:00,175 --> 00:30:02,553 கிங்டம் 2-9, கட்டுப்பாட்டறையிலிருந்து பேசுகிறோம், விமானத்தின் நிலை என்ன? 376 00:30:03,136 --> 00:30:05,556 ஏதோ செய்தி வந்து கொண்டே இருக்கிறது. போய் கேளுங்கள். 377 00:30:08,058 --> 00:30:11,687 கிங்டம் 2-9, பாக்தாத் கண்ட்ரோலிலிருந்து பேசுகிறோம், உங்கள் நிலை என்ன? 378 00:30:12,729 --> 00:30:14,022 நாம் அதற்குப் பதிலளிக்க வேண்டும். 379 00:30:16,608 --> 00:30:19,236 அது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டறையென்றால், நாம் இப்போதே பதிலளிக்க வேண்டும். 380 00:30:19,236 --> 00:30:21,947 - உட்காரு. - இவர் தான் அதற்கு பதிலளிக்க வேண்டும். அவர் தான். 381 00:30:22,948 --> 00:30:24,867 போய் உட்காரு! 382 00:30:25,534 --> 00:30:28,036 இது கண்டிப்பாக நடக்க வேண்டும். 383 00:30:28,036 --> 00:30:31,081 - அவர் சொல்வது சரியா? அப்படியா? - இல்லை, அவர் பொய் சொல்கிறார். 384 00:30:31,081 --> 00:30:32,499 உனக்கு எப்படி தெரியும்? 385 00:30:32,499 --> 00:30:34,793 - நான் சொல்வதைக் கேளுங்கள். - உனக்கு எப்படித் தெரியும்? 386 00:30:34,793 --> 00:30:36,962 விமானக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பிரச்சினை தெரிய வேண்டும் என 387 00:30:36,962 --> 00:30:39,464 அவர் நினைக்கிறார், ஏனென்றால் அவர் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறார், 388 00:30:39,464 --> 00:30:41,717 ஆனால் உண்மையில் அது இன்னும் மோசமாகத்தான் ஆகும். 389 00:30:41,717 --> 00:30:43,719 நான் மீண்டும் சொல்லமாட்டேன், நண்பா. உட்காரு. 390 00:30:44,469 --> 00:30:48,515 கிங்டம் 2-9, விமான போக்குவரத்து 602, 391 00:30:48,515 --> 00:30:52,477 பாக்தாத் கட்டுப்பாட்டறையை 123 புள்ளி 52 என்ற அலைவரிசையில் தொடர்புகொள்ளுங்கள். 392 00:30:52,477 --> 00:30:53,562 அவளைக் கூப்பிடு. 393 00:30:57,733 --> 00:30:59,276 நீ பதிலளிக்கலாம் தானே? 394 00:31:02,237 --> 00:31:05,157 அவர்கள் அவளிடம் பேச மாட்டார்கள். கேப்டனிடம் தான் பேசுவார்கள். 395 00:31:05,157 --> 00:31:06,575 போய் உட்காரு! 396 00:31:06,575 --> 00:31:08,285 தயவுசெய்து, நான் பேசலாமா, நண்பா? தயவுசெய்து? 397 00:31:08,285 --> 00:31:10,329 கேளுங்கள், அவர்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது எனத் தெரிந்தால், 398 00:31:10,329 --> 00:31:12,456 இராணுவ ஜெட் விமானங்களை அனுப்பி... 399 00:31:14,499 --> 00:31:15,542 நம்மை சுட்டு பொசுக்கிவிடுவார்கள். 400 00:31:20,756 --> 00:31:22,257 {\an8}சேரும் இடத்தை சென்றடைவதற்கான நேரம் 05:20 401 00:31:22,257 --> 00:31:23,550 {\an8}கிங்டம் 2-9. 402 00:31:24,843 --> 00:31:28,388 அவசரம். பாக்தாத் கண்ட்ரோலிலிருந்து பேசுகிறோம். அடையாளம் காண விரும்புகிறோம். 403 00:31:30,390 --> 00:31:32,309 கிங்டம் 2-9ல் இருந்து பேசுகிறோம், பாக்தாத். 404 00:31:33,101 --> 00:31:35,103 அடையாளம் காண ஐந்து முறை முயற்சித்தோம். 405 00:31:36,188 --> 00:31:37,481 மன்னிக்கவும், பாக்தாத். இங்கு தான் இருக்கிறோம். 406 00:31:38,524 --> 00:31:40,234 நான் பேசுவது கேப்டனிடமா? 407 00:31:44,821 --> 00:31:46,657 பேசுவது கேப்டனா? 408 00:31:47,991 --> 00:31:49,368 ஆமாம். 409 00:31:49,368 --> 00:31:51,870 - நீங்கள் தான் கேப்டனா? - ஆமாம். 410 00:31:51,870 --> 00:31:52,913 {\an8}ஆலன், ராபின் கேப்டன் 411 00:31:52,913 --> 00:31:54,414 நீங்கள் தான் ராபின் ஆலனா? 412 00:31:59,461 --> 00:32:01,463 ராபின் ஆலன் தானே கேப்டன்? 413 00:32:01,463 --> 00:32:04,258 விமானக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு பிரச்சினை தெரிய வேண்டும் என அவர் நினைக்கிறார் 414 00:32:04,258 --> 00:32:07,219 ஏனென்றால் அவர் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறார், தயவுசெய்து, அவரிடம் சொல்கிறீர்களா? 415 00:32:07,219 --> 00:32:09,805 நான் கேப்டன் ஆலனிடம் பேச வேண்டும். 416 00:32:09,805 --> 00:32:11,348 அவர் காக்பிட்டில் இல்லை. 417 00:32:11,348 --> 00:32:15,143 - கேப்டன் காக்பிட்டில் இல்லையா? - ஆமாம். 418 00:32:15,143 --> 00:32:17,062 அப்படியென்றால், நீங்கள் ஏன் உங்களை கேப்டன் எனச் சொன்னீர்கள்? 419 00:32:21,692 --> 00:32:26,530 பாதுகாப்பு காரணங்களுக்காக, நான் ராபின் ஆலனுடன் இப்போதே பேச வேண்டும். 420 00:32:28,448 --> 00:32:30,242 நீங்கள் இப்போது காக்பிட்டிற்குச் சென்று 421 00:32:30,242 --> 00:32:32,244 இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனச் சொல்லுங்கள், சரியா? 422 00:32:32,244 --> 00:32:35,122 நான் இப்போது காக்பிட்டிற்குச் சென்றால், தற்போதிருக்கும் நிலைமையை விட 423 00:32:35,122 --> 00:32:37,332 - இன்னும் மோசமாகிவிடும். சொல்வதைக் கேளு... - பெல்ட்டிலிருந்து கையை எடுங்கள். 424 00:32:37,332 --> 00:32:39,543 - ...நான் இந்த இருக்கையிலிருந்து நகர மாட்டேன். - அவன் சொல்வதைச் செய். 425 00:32:39,543 --> 00:32:41,879 - உதவ முடியுமா? - என்னை வற்புறுத்தி செய்யவைக்க முடியாது. 426 00:32:41,879 --> 00:32:43,130 அந்த பெல்ட்டை இழு. 427 00:32:44,089 --> 00:32:45,924 உன் இருக்கைக்குத் திரும்பிப் போ. இதில் எந்தப் பயனுமில்லை. 428 00:32:45,924 --> 00:32:47,593 நீங்கள் போகாவிட்டால் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்... 429 00:32:47,593 --> 00:32:52,806 நான் நகர மாட்டேன்! என்மேலிருந்து கையை எடு! 430 00:32:52,806 --> 00:32:54,725 கடவுளே, அவளை இங்கு அழைத்து வா. இங்கு அழைத்து வா. 431 00:32:57,060 --> 00:32:58,687 ஐயோ. இங்கே வா. 432 00:32:58,687 --> 00:32:59,938 கடவுளே. 433 00:32:59,938 --> 00:33:01,899 - இதோ இப்படி. - ஹே! 434 00:33:01,899 --> 00:33:05,152 பாருங்கள். இதோ இப்படி? அவர்களை இப்படி செய்ய வைக்காதீர்கள். 435 00:33:06,695 --> 00:33:10,115 சரியா? எங்களை, அதாவது அவர்களை இப்படிச் செய்ய வைக்காதீர்கள். 436 00:33:13,368 --> 00:33:14,661 சரி. நான் போகிறேன். 437 00:33:15,621 --> 00:33:17,539 சரி. 438 00:33:33,096 --> 00:33:34,932 ஜி-கிங்டம் 439 00:33:34,932 --> 00:33:37,518 பாக்தாத் கண்ட்ரோல், கிங்டம் 2-9ல் இருந்து பேசுகிறோம். 440 00:33:37,518 --> 00:33:39,728 கேப்டன் ராபின் ஆலன் பேசுகிறேன். குட் மார்னிங். 441 00:33:41,021 --> 00:33:45,651 {\an8}விமானி ஆலன், நீங்கள் பிறந்த தேதியை உறுதிசெய்யுங்கள். 442 00:33:46,693 --> 00:33:49,446 இருபத்திரெண்டாம் தேதி, இரண்டாம் மாதம், 1970. 443 00:33:49,446 --> 00:33:53,408 பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்றும், எந்த உதவியும் தேவையில்லை என்றும் உறுதிசெய்யுங்கள், ஆலன். 444 00:33:53,408 --> 00:33:55,285 எல்லோரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறோம், நன்றி பாக்தாத். 445 00:33:55,285 --> 00:33:56,453 அவர் கழிவறைக்குச் சென்றிருந்தார். 446 00:33:59,414 --> 00:34:03,001 நான் கொஞ்சம் நேரம் கழிவறைக்குச் சென்றுவிட்டேன். 447 00:34:04,002 --> 00:34:05,546 ஆனால், துணை விமானி எங்கே இருந்தார்? 448 00:34:10,467 --> 00:34:12,553 வானொலியில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் 449 00:34:12,553 --> 00:34:15,681 இன்று காலை விமானத்தைச் சரியாக இயக்க முடியவில்லை. 450 00:34:16,764 --> 00:34:18,766 கிங்டம் ஏர்லைன்ஸ் G-கிங்டம் - KA29 451 00:34:31,780 --> 00:34:33,407 கிங்டம் 2-9. 452 00:34:33,407 --> 00:34:38,161 நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை உறுதிசெய்யுங்கள். பாதுகாப்பு சரிபார்க்கப்பட்டது. 453 00:34:39,204 --> 00:34:44,251 சரி, 4625-ஐ தொடர்புகொண்டு லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம். 454 00:34:51,216 --> 00:34:53,135 பேசி முடித்ததும், அவரது இருக்கைக்கு அழைத்துச் செல். 455 00:34:56,722 --> 00:35:00,017 ஆக, நீ ஒரு விமானத்தைக் கடத்தியிருக்கிறாய், ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. 456 00:35:03,854 --> 00:35:09,902 அங்கிருக்கும் ஒருவருக்குக் கூட, இந்த விஷயம் தெரியாது. 457 00:35:11,820 --> 00:35:13,655 அது வெற்றியைக் குறிக்கிறது. 458 00:35:21,622 --> 00:35:22,623 வாருங்கள். 459 00:35:41,183 --> 00:35:42,309 குட் மார்னிங். 460 00:35:53,320 --> 00:35:55,405 ஐந்து நிமிடம் என்றால் ஐந்து நிமிடம் தான் என சொன்னதற்கு என்ன ஆச்சு? 461 00:36:06,750 --> 00:36:08,585 லுஃப்தான்ஸா, 958, வலதுபுறம் திரும்புங்கள். 462 00:36:08,585 --> 00:36:12,297 329 வழியாகச் செல்கிறோம். தாழ்வாகச் செல்லுங்கள், விமான லெவலை 30க்கு மேல் போக விடாதீர்கள். 463 00:36:18,136 --> 00:36:19,721 இந்த லுஃப்தான்ஸாவிற்கு என்னானது? 464 00:36:19,721 --> 00:36:24,017 தாமதமாகிவிட்டது. கேஎல்எம் என் கட்டுப்பாட்டில் இருந்தது. ஸ்விஸ் ஏர்-ஐ மைக்கேல் பார்த்துக்கொண்டார். 465 00:36:24,017 --> 00:36:25,352 நன்றி, மைக்கேல். 466 00:36:25,853 --> 00:36:27,855 கிட்டத்தட்ட நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கிறாய். 467 00:36:27,855 --> 00:36:29,273 முக்கியமாக அந்த கிங்டம் விமானம். 468 00:36:29,857 --> 00:36:32,526 தீவிரவாத எதிர்ப்பு அணியினர் அழைத்தனர். ஏதோ சம்பவம் நடந்திருப்பதாக சந்தேகிக்கின்றனர். 469 00:36:33,110 --> 00:36:35,946 இருந்தாலும், இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. அது ஒரு தவறான எச்சரிக்கை என விமானி கூறினார். 470 00:36:39,408 --> 00:36:40,409 அது எப்படி சாத்தியம்? 471 00:36:41,618 --> 00:36:43,787 - என்ன சொன்னாய்? - தவறான எச்சரிக்கை, அது எப்படி வரும்? 472 00:36:45,163 --> 00:36:49,626 சைமனிற்கு அழைப்பு வந்தது, துபாயை அழைத்தார், அது பழைய செய்தி என்றனர். ஆக, தவறான எச்சரிக்கை. 473 00:36:49,626 --> 00:36:51,670 - சைமன்? - அவர் ஏன் இதற்குள் வந்தார்? 474 00:36:53,088 --> 00:36:54,923 - சைமன்? - ஏற்கனவே உங்களுக்கு நிறைய பிரச்சினை உள்ளன. 475 00:36:55,424 --> 00:36:58,343 கிங்டம் 2-9? உங்களுக்கு ஏதாவது சம்பவத்தைப் பற்றி அழைப்பு வந்ததா? 476 00:36:58,927 --> 00:37:00,804 - சந்தேகப்பட்டது. - சந்தேகப்பட்டதா? 477 00:37:00,804 --> 00:37:02,848 நீங்கள் துபாயை அழைத்தீர்களே அவர்கள் என்ன சொன்னார்கள்? 478 00:37:02,848 --> 00:37:04,308 - தவறான எச்சரிக்கை. - பார்த்தீர்களா? 479 00:37:04,308 --> 00:37:06,476 - அப்படியென்றால் இரு அழைப்புகள் வந்திருக்கின்றன? - என்ன சொல்கிறாய்? 480 00:37:06,476 --> 00:37:09,062 - இதோ. - உங்களுக்கு அழைப்பு வந்தது, துபாயை அழைத்தீர்கள், 481 00:37:09,062 --> 00:37:12,107 துபாய்க்கு ஏற்கனவே ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அது ஏற்கனவே பேசப்பட்டுவிட்டது. 482 00:37:12,691 --> 00:37:13,817 அதில் என்ன பிரச்சினை? 483 00:37:13,817 --> 00:37:15,360 ஒன்றுமில்லை, கண்டிப்பாக ஒன்றுமி... 484 00:37:15,360 --> 00:37:17,321 வந்து, இது விசித்திரமாக இருக்கிறது, இல்லையா? 485 00:37:19,031 --> 00:37:21,283 விமானத்திலிருந்த யாரோ ஒருவர் லண்டனிற்கு அழைத்து, 486 00:37:21,283 --> 00:37:25,204 தீவிரவாத எதிர்ப்பு அணியின் மூலம் நமக்குச் மெசேஜ் அனுப்பியிருக்கின்றனரா? 487 00:37:26,079 --> 00:37:29,041 ஆனால் இதைச் செய்த அந்தப் பயணி, எல்லா பிரச்சினையையும் எதிர்கொண்ட அந்தப் பயணி, 488 00:37:29,041 --> 00:37:30,501 அவர்களும் இதைத் தவறாகப் புரிந்துக்கொண்டார்களா? 489 00:37:31,001 --> 00:37:32,085 அவர்கள் அதை சரிசெய்திருப்பார்கள். 490 00:37:34,087 --> 00:37:36,256 அப்படியென்றால் இரண்டாவது அழைப்பாளர் ஏன் அதைப்பற்றி சொல்லவில்லை? 491 00:37:36,840 --> 00:37:41,637 எல்லாம் சரியாகியிருந்தால், ஏன் இரண்டாம் அழைப்பாளர் எந்தச் செய்தியும் அனுப்பவில்லை? 492 00:37:41,637 --> 00:37:43,847 ஏதோவொரு காரணத்தினால், வை-ஃபை செயல்படவில்லை. 493 00:37:44,348 --> 00:37:46,558 ஏதோவொரு காரணத்தினால் வை-ஃபை செயல்படவில்லையா? 494 00:37:47,601 --> 00:37:48,810 சரி. சரி. 495 00:37:53,899 --> 00:37:55,484 அதில் ஏதோ பிரச்சினை இருக்கும். 496 00:38:06,787 --> 00:38:08,664 செனில் அழைக்கிறார்... 497 00:38:08,664 --> 00:38:09,748 ஜெபெல் அலி அபுதாபி 498 00:38:09,748 --> 00:38:11,166 ஹலோ, நான் செனில் பேசுகிறேன். 499 00:38:11,166 --> 00:38:13,335 உங்கள் ஃபோன் நம்பரைக் கொடுங்கள், நானே உங்களை அழைக்கிறேன். 500 00:38:16,839 --> 00:38:17,965 நீலா குமார் மொபைல் அழைப்பு... 501 00:38:20,008 --> 00:38:22,302 ஆம், இல்லை, துபாயிடம் இருமுறை விசாரித்துவிட்டோம், 502 00:38:22,302 --> 00:38:25,389 - இப்போது உங்களிடமும் இருமுறை விசாரிக்கிறோம். - அவர்களது திரையைப் பகிரமுடியுமா என கேளுங்கள். 503 00:38:25,389 --> 00:38:28,725 கிங்டம் 2-9 பதிலளிக்கவில்லை. அடையாளம் காண முடியவில்லை. 504 00:38:29,518 --> 00:38:30,769 பலமுறை முயற்சி செய்துவிட்டோம். 505 00:38:30,769 --> 00:38:34,022 - அவர்கள் திரைகளைக் காண்பிக்கச் சொல்லுங்கள். - சரி, இப்போது உங்கள் திரையைக் காண்பிக்க வேண்டும். 506 00:38:37,901 --> 00:38:40,320 சரி. அப்படியென்றால் பாக்தாத் இதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. 507 00:38:40,904 --> 00:38:43,740 கிங்டம் 2-9-யின் விமான போக்குவரத்து தனியாகச் செல்கிறது. 508 00:38:44,449 --> 00:38:46,326 அந்த வழியில் செல்வது பாதுகாப்பானதா? 509 00:38:46,326 --> 00:38:48,954 அது எப்போதும் போகும் வழிதானா? ஆம், பாதுகாப்பானது தான், 510 00:38:48,954 --> 00:38:50,747 விமானம் புறப்படுவதற்கு முன்பே இவ்வழி பதிவாகியிருக்கும். 511 00:38:50,747 --> 00:38:51,748 இன்னொரு வழி? 512 00:38:52,249 --> 00:38:53,584 அதோ அந்த வழி அங்கே தெரிகிறது. 513 00:38:53,584 --> 00:38:56,795 ஆனால் அந்த இன்னொரு வழி. இன்னும் கொஞ்சம் அருகே காட்டச் சொல்லுங்கள். 514 00:38:56,795 --> 00:38:58,463 இன்னும் கொஞ்சம் அருகில் காட்டுங்கள், ஜலால்? 515 00:38:58,463 --> 00:39:00,257 KA29 ஜி- கேஎன்டிஎம் டிராக் 323° 516 00:39:00,257 --> 00:39:01,341 ஆம். அங்குதான். 517 00:39:02,426 --> 00:39:03,427 விமானத்திற்குப் பின்னால். 518 00:39:08,807 --> 00:39:09,975 விலகியிருக்கிறது, இல்லையா? 519 00:39:11,977 --> 00:39:12,978 மைக்கேல்? 520 00:39:19,735 --> 00:39:21,111 {\an8}தேர்வு பட்டியல் - தொடருங்கள் 521 00:39:26,825 --> 00:39:27,826 மெசேஜை டைப் செய்யவும் 522 00:39:27,826 --> 00:39:29,578 {\an8}1கே: உங்கள் திட்டம் வேலை செய்தது. 523 00:39:29,578 --> 00:39:31,580 {\an8}2டி: சென்றடையும் இடத்தை நீங்கள் மாற்றிவிட்டீர்களா? 524 00:39:37,252 --> 00:39:40,964 அது ஒரு தகவல். அந்த விமானம் நம்மிடம் ஏதோ சொல்ல விரும்புகிறது. 525 00:39:40,964 --> 00:39:42,049 ஆம், நான் ஒப்புக்கொள்கிறேன். 526 00:39:42,049 --> 00:39:43,133 எனக்குப் புரியவில்லை. 527 00:39:45,010 --> 00:39:47,638 9/11க்கு முன், விமானங்கள் அடிக்கடி திசைதிருப்பப்பட்டன. 528 00:39:48,347 --> 00:39:49,973 இப்போது தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. 529 00:39:49,973 --> 00:39:52,351 ஏதாவது பிரச்சினையென்றால், அதை இப்படி தெரிவிப்பார்கள். 530 00:39:52,351 --> 00:39:54,686 ஆமாம், வாய்மொழியாகத் தெரிவிக்க முடியவில்லையென்றால். 531 00:39:54,686 --> 00:39:57,231 வானிலையினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என உறுதியாகத் தெரியுமா? 532 00:39:58,440 --> 00:39:59,566 இது மிகவும் நேரான கோடு. 533 00:40:00,192 --> 00:40:04,238 மூன்று டிகிரி வித்தியாசமிருக்கிறது. 320 டிகிரி தான் இருக்க வேண்டும் 534 00:40:04,238 --> 00:40:06,532 ஆனால் 323 டிகிரியாக மாறியிருக்கிறது. 535 00:40:08,033 --> 00:40:10,285 ஆக, கிங்டம் 2-9-க்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது... 536 00:40:12,371 --> 00:40:14,164 அங்கிருக்கும் யாரோவொருவர் உதவி கேட்கிறார். 537 00:41:14,266 --> 00:41:18,061 மன்னிக்கவும், நான் நீலாவைப் பார்க்க வந்திருக்கிறேன். 538 00:41:20,939 --> 00:41:23,400 - அவர் இங்கு இருக்கிறாரா? - அவர்கள் மாடியில் இருக்கின்றனர். 539 00:41:25,319 --> 00:41:26,320 நீங்கள் யார்? 540 00:41:27,237 --> 00:41:28,363 நாங்கள் சுத்தம் செய்பவர்கள், நண்பா. 541 00:41:29,198 --> 00:41:31,116 புரொஃபஷெனலாக சுத்தம் செய்பவர்கள். 542 00:41:32,576 --> 00:41:36,079 அவர்கள் அடுத்தவாரம் வெளியேறுகிறார்கள். மேலே போய் நீங்கள் வந்திருப்பதை அவர்களிடம் சொல்லவா? 543 00:41:36,079 --> 00:41:39,583 இல்லை. பரவாயில்லை, நன்றி. நானே போகிறேன். 544 00:41:42,628 --> 00:41:43,629 நீலா! 545 00:41:50,385 --> 00:41:51,595 அவ்வளவுதான், நண்பா. 546 00:41:56,016 --> 00:41:57,351 அங்கே வந்துகொண்டிருக்கிறோம். 547 00:41:59,144 --> 00:42:00,145 நீலா? 548 00:42:16,703 --> 00:42:17,704 நீலா? 549 00:42:32,886 --> 00:42:34,263 பாதுகாவலர் உரிமம் நீலா குமார் 550 00:42:45,440 --> 00:42:48,735 எனக்கு ஒரு உதவி செய். அப்படியே பின்னால் நகர்ந்து குளியலறைக்குள் போ. 551 00:42:51,405 --> 00:42:52,906 குளியலறையைச் சுத்தம் செய்வது சுலபம். 552 00:43:57,513 --> 00:43:59,515 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்