1 00:00:17,976 --> 00:00:19,645 நீ உன் நேரத்தை வீணாக்குற. 2 00:00:20,479 --> 00:00:22,648 நீ யாருக்காக வேலை பாக்குற? 3 00:00:26,860 --> 00:00:29,238 அவன் பெயர் தெரிஞ்சா கூட உன்கிட்ட சொல்ல மாட்டேன். 4 00:00:32,448 --> 00:00:33,450 அவன் ரொம்ப மோசமானவன். 5 00:00:36,036 --> 00:00:38,288 நீ செஞ்ச வெடிகுண்டால நூத்துக்கணக்கானவங்க சாகப் போறாங்க. 6 00:00:48,131 --> 00:00:51,260 உன்னை போலந்துக்குக் கூட்டிட்டுப் போக அவங்க ஜெட் அனுப்பியிருக்காங்க. 7 00:00:53,095 --> 00:00:55,264 உன் காதலியை நெனச்சு கவலப்படுறியா? 8 00:00:56,390 --> 00:00:57,724 உன் குழந்தையை நெனச்சு? 9 00:00:58,934 --> 00:01:00,853 நீ அவங்களை மறுபடியும் பாக்கணும்னா, 10 00:01:02,604 --> 00:01:04,815 அந்த குண்டுகளைச் செயலிழக்கச் செய்ய எனக்கு உதவு. 11 00:01:09,778 --> 00:01:11,446 அதுல ஒரு பிரச்சனை இருக்கு. 12 00:01:26,795 --> 00:01:27,963 சாம்? 13 00:01:35,012 --> 00:01:36,305 யாரு பேசுறது? 14 00:01:36,388 --> 00:01:37,723 நான் ஒலிவியா தாட்சர். 15 00:01:40,559 --> 00:01:41,935 நீ அங்க என்ன பண்ற? 16 00:01:43,520 --> 00:01:45,189 நாங்க மார்ஷா கூட தொடர்புல இருக்கோம். 17 00:01:47,191 --> 00:01:48,734 அவளை நெனச்சு நீங்க கவலைப்படுறீங்கனு எங்களுக்குத் தெரியும். 18 00:01:48,817 --> 00:01:51,153 அவளுக்காகத்தான் நீங்க இதெல்லாம் செய்றீங்கனும் எங்களுக்குத் தெரியும். 19 00:01:55,741 --> 00:01:58,911 மார்ஷா கூட பேசுனியா? 20 00:02:06,293 --> 00:02:09,170 சாம். நான்தான் பேசுறேன். 21 00:02:10,214 --> 00:02:13,175 பாருங்க, நீங்க என்னைப் பத்தி கவலைப்படுவீங்கன்னு எனக்குத் தெரியும், ஆனா நான் நல்லா இருக்கேன். 22 00:02:13,800 --> 00:02:16,303 என்னை வச்சு உங்களை மிரட்ட, அவங்களுக்கு இடம் கொடுக்காதீங்க. 23 00:02:16,386 --> 00:02:17,596 முக்கியமா இன்னைக்கு வேணாம். 24 00:02:19,181 --> 00:02:20,974 ஐயோ கடவுளே… நான் போகணும். 25 00:02:28,607 --> 00:02:29,608 அவ பத்திரமா இருக்காளா? 26 00:02:33,570 --> 00:02:34,821 அதுக்கான வேலையைத்தான் பாக்குறோம். 27 00:02:35,489 --> 00:02:36,823 அதெல்லாம் பத்தாது. 28 00:02:39,826 --> 00:02:42,955 நீங்க இதைச் செய்யக் கூடாதுனு அவ சொல்றா. 29 00:02:43,038 --> 00:02:46,625 இல்ல. இல்ல, அவ தனக்குத்தானே தியாகம் பண்ணிக்கப் பாக்குறா, நான் அதுக்கு விட மாட்டேன். 30 00:02:46,708 --> 00:02:49,920 அதுக்காக உங்களை நீங்களே பலி கொடுக்கலாமா? 31 00:02:50,712 --> 00:02:53,257 உங்க மகனைக் கொன்னவன் தப்பிக்க நீங்க உதவுறீங்க. 32 00:02:54,591 --> 00:02:56,301 அப்படி ஒரு ஒப்பந்தம்தான் நான் போட வேண்டியதா போச்சு. 33 00:02:56,969 --> 00:02:59,137 நீங்க இந்தப் பயணிகளைக் காப்பாத்தணும்னா, 34 00:02:59,221 --> 00:03:01,223 இந்தக் கைமாற்றம் நடந்தே ஆகணும். 35 00:03:17,781 --> 00:03:19,491 மாஸ்டர் ஓவர்ரைடு 36 00:03:19,575 --> 00:03:21,285 தயார் நிலை செயல்படுத்தப்பட்டது 37 00:03:29,209 --> 00:03:33,672 வானம் காணும் அளவு மட்டும் என் தலை நிமிர்த்துகிறேன் 38 00:03:34,756 --> 00:03:37,384 நாம் விடைபெறுகையில், தளர்ந்து செல்ல மாட்டோம் 39 00:03:37,467 --> 00:03:39,761 நாம் கடும் போர் புரிந்தே செல்வோம் 40 00:03:40,429 --> 00:03:45,058 ஒரு நாள் வரும் அதில் நீ நீயாக இருப்பாய் 41 00:03:45,559 --> 00:03:48,228 எப்போதும் தலை நிமிர்ந்தே நில் 42 00:03:48,312 --> 00:03:51,106 உன் கரத்தை முத்தமிட்டு, ஆகாயத்தைத் தொடு 43 00:03:51,690 --> 00:03:56,278 உலகத்தின் அழிவதைத் தடுக்க காலம் கடந்துவிட்டது 44 00:03:57,487 --> 00:03:59,239 என்றாவது ஒரு நாள் 45 00:04:01,658 --> 00:04:03,619 நாம் அனைவரும் அங்கே இருப்போம் 46 00:04:05,412 --> 00:04:08,207 ஆமாம், ஆமாம், ஆமாம் ஆமாம், ஆமாம், ஆமாம் 47 00:04:35,567 --> 00:04:37,861 யாரையாவது நடக்கக் கூட்டிட்டுப் போறீங்களா? 48 00:04:38,403 --> 00:04:40,447 SO15 அவனை நாள் பூரா உள்ளயே வெச்சிருந்தாங்க. 49 00:05:41,425 --> 00:05:45,846 லிண்டர், லைனுக்கு வா. நாங்க ப்ரிட்ஸ்-ஸூட் நோக்கி போறோம். 50 00:05:46,972 --> 00:05:48,056 கொஞ்சம் பொறு. 51 00:05:50,475 --> 00:05:52,102 ஆமா. இங்க எல்லாம் சரியா இருக்கு. 52 00:05:53,061 --> 00:05:54,980 எது மோசம்னு எனக்கே தெரியல. 53 00:05:55,063 --> 00:05:58,609 நிலைமை உன் கைமீறிப் போனது மோசமா, இல்ல அது உனக்கே தெரியாம இருக்கிறது மோசமான்னு தெரியல. 54 00:05:58,692 --> 00:06:00,235 இன்னும் ஒரு மணிநேரத்துல வேலை முடிஞ்சுடும். 55 00:06:01,570 --> 00:06:03,447 உன் ஸ்காட்லாந்து நண்பர்களைப் பத்தி சொல்லு. 56 00:06:03,947 --> 00:06:05,240 அவங்களை பத்தி என்ன? 57 00:06:05,324 --> 00:06:07,075 பிணைக்கைதி அவங்ககிட்ட இருந்து நழுவிப் போயாச்சு. 58 00:06:07,868 --> 00:06:10,746 அவ மட்டும் சிக்கலன்னா, ஆட்டம் முடிஞ்சுது. 59 00:06:10,829 --> 00:06:12,831 அப்போ யாருக்குப் பங்கு கிடைக்காதுன்னு நீயே யோசிச்சுக்கோ. 60 00:06:12,915 --> 00:06:15,584 - லேங். நாம போகணும். - சரி, சரி. 61 00:06:17,669 --> 00:06:19,087 பிரச்சனை மார்ஷா மட்டும் கிடையாது. 62 00:06:19,880 --> 00:06:23,217 இப்போ அவளோட அந்தப் போலீஸ் ஆளு வேற இதுல மூக்க நுழைக்கிறான். 63 00:06:23,300 --> 00:06:25,469 இதனால எனக்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது. 64 00:06:26,512 --> 00:06:29,264 சரி, இன்னொரு வழி என்னன்னா, நான் இப்பவே ரயிலை வெடிக்க வெச்சிடுறேன். 65 00:06:29,348 --> 00:06:30,599 நெல்சனை காலி பண்ணிடுறேன். 66 00:06:31,391 --> 00:06:33,101 நெல்சன் பாதி ஒப்பந்தம்தான். 67 00:06:33,685 --> 00:06:35,437 அப்போ, நீ எனக்குப் பாதிப் பணம் கொடுத்தா போதும். 68 00:06:35,521 --> 00:06:37,356 இல்ல. மொத்தமா முடிஞ்சாதான் பணம், இல்லன்னா ஒண்ணுமில்ல. 69 00:06:38,190 --> 00:06:40,192 பெய்லி-பிரவுன் அந்த ரயில்ல இருந்தாகணும், 70 00:06:40,275 --> 00:06:42,694 தேவைப்பட்டா நீயே அவனைத் தூக்கி உள்ள போடு. 71 00:06:48,033 --> 00:06:50,035 நாம இங்கிருந்து கிளம்புறோமா இல்லையா? 72 00:07:14,351 --> 00:07:15,477 ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 73 00:07:17,688 --> 00:07:19,231 இன்னைக்கு நாள் பயங்கரமா போகுது. 74 00:07:20,357 --> 00:07:24,152 கான்வாய் கிளம்பிருச்சு. இன்னும் 20 நிமிஷத்துல போயிருவோம். 75 00:07:25,654 --> 00:07:27,239 நாம நிஜமாவே இதைச் செய்யறோமா? 76 00:07:29,658 --> 00:07:31,618 டிவியில நேரலை ஒளிபரப்பின்போது ஒரு கைதியை ஒப்படைக்கிறதா? 77 00:07:32,286 --> 00:07:33,412 நீ காலி. 78 00:07:34,037 --> 00:07:36,665 அந்த வெடிகுண்டு யாரோட கட்டுப்பாட்டுல இருக்குனு தெரியற வரை, நமக்கு வேற வழி இல்ல. 79 00:07:37,958 --> 00:07:39,501 அந்த ரயில்ல இன்னும் எவ்ளோ பிணைக்கைதிகள் இருக்காங்க? 80 00:07:40,252 --> 00:07:41,920 நாம 54 பேரை காப்பாத்திட்டோம். 81 00:07:42,588 --> 00:07:44,798 இன்னும் குறைஞ்சது 100 பேராவது உள்ள இருப்பாங்க. 82 00:07:46,466 --> 00:07:49,845 சரி. பத்திரிகைகாரங்க வேடிக்கை பாக்க ஆசைப்படுறாங்கங்குறதுக்காக, 83 00:07:49,928 --> 00:07:51,930 நாம அவங்களுக்கு ஷோ காட்டத் தேவையில்ல. 84 00:07:53,891 --> 00:07:54,975 அங்க கீழே போங்க. 85 00:07:58,604 --> 00:08:01,607 யூ-பாஹ்ன் ரயிலில் தீவிரவாதத் தாக்குதல் 86 00:08:38,018 --> 00:08:39,561 அடக் கடவுளே. 87 00:08:45,526 --> 00:08:47,194 பாதுகாப்பு வளையம் போட்டோமே, அது இவ்ளோ தானா! 88 00:08:47,277 --> 00:08:50,364 குறைஞ்சது 500 மீட்டர் இடைவெளியாவது வேணும்னு நான் போலீஸ் கிட்ட சொன்னேன், 89 00:08:50,447 --> 00:08:54,493 ஆனா இன்னைக்கு எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு இருக்காங்க போல. 90 00:08:55,202 --> 00:08:56,745 உனக்கு பெரிய கூட்டம் பிடிக்கும் போல… 91 00:08:57,663 --> 00:08:59,122 இந்தக் குழப்பம் நல்லதுதான். 92 00:08:59,915 --> 00:09:02,960 நாம ரயிலுக்குப் பின்னாடி வழியா போவோம், அடியில இருந்து வெடிகுண்ட செக் பண்ணுவோம். 93 00:09:03,460 --> 00:09:05,128 அதுல ஒரு கெட்ட செய்தி இருக்கு. 94 00:09:05,921 --> 00:09:07,464 நான் வெடிகுண்டு செஞ்சவன விசாரிச்சேன்… 95 00:09:09,299 --> 00:09:10,884 அது கொலாப்ஸிங் சர்க்யூட்டா? 96 00:09:12,594 --> 00:09:16,139 ட்ரிக்கர் கையில வெச்சிருக்கவனால மட்டும்தான் இதை நிறுத்த முடியும். 97 00:09:48,005 --> 00:09:49,923 இது யாருமில்லாப் பிரதேசம். 98 00:09:54,970 --> 00:09:56,180 ப்ரிட்ஸ்-ஸூட். 99 00:09:56,930 --> 00:10:00,392 இன்னும் கொஞ்ச நிமிஷத்துல நாம டன்னல்ல இருந்து வெளிய போயிடலாம். 100 00:10:01,476 --> 00:10:03,187 எங்களை அந்த டிப்போவுக்குக் கூட்டிட்டுப் போ, ஆட்டோ. 101 00:10:05,314 --> 00:10:06,899 அதுக்கப்புறம் உனக்கு வேலை இருக்காது. 102 00:10:12,112 --> 00:10:13,238 ஆனா உங்களுக்கு முடியாது. 103 00:10:16,283 --> 00:10:17,367 இல்ல. 104 00:10:19,286 --> 00:10:20,287 எனக்கு முடியாது. 105 00:10:41,266 --> 00:10:45,103 நைட்ஸன், சீகேட்-1, உங்க இடம் மற்றும் நிலையைச் சொல்லுங்க. 106 00:10:45,187 --> 00:10:48,941 சீகேட்-1, இது நைட்ஸன். டார்கெட் பக்கத்துல நெருங்கிட்டோம். 107 00:10:49,024 --> 00:10:51,944 இன்னும் 30 நிமிஷத்துக்குத்தான் எரிபொருள் இருக்கு. 108 00:10:52,027 --> 00:10:53,111 அங்க ஆள் நடமாட்டம் எதுவும் தெரியல. 109 00:10:55,572 --> 00:10:56,740 நாம இன்னொரு ரவுண்டு போலாமா? 110 00:10:56,823 --> 00:10:59,201 சரி. இங்கிருந்து இன்னும் கொஞ்சம் பரவாலா தேட ஆரம்பிக்கிறேன். 111 00:11:09,503 --> 00:11:10,879 ஏதாவது தகவல் கிடைச்சதா? 112 00:11:11,630 --> 00:11:13,757 அந்த கடத்தல்கார பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்க. 113 00:11:13,841 --> 00:11:16,093 அவளோட உண்மையான பேரு மோனா ஹக்கீமி. 114 00:11:16,176 --> 00:11:19,221 மொராக்கோ சிறப்புப் படையில பயிற்சி எடுத்த ஆர்மி டாக்டர். 115 00:11:19,304 --> 00:11:21,390 அடுத்து வர்றத நீங்க பார்க்காம இருக்கிறது நல்லது. 116 00:11:23,100 --> 00:11:25,811 அவ பேரை வெச்சு எல்லா டேட்டாபேஸ்லயும் தேடிட்டோம், 117 00:11:25,894 --> 00:11:27,771 ஆனா இதுவரைக்கும் எதுவுமே சிக்கல… 118 00:11:27,855 --> 00:11:28,856 இருங்க. 119 00:11:30,607 --> 00:11:31,775 அந்த டாட்டூ. 120 00:11:32,568 --> 00:11:34,152 அது சாம் அந்த பார்ல சந்திக்க போன நபராத்தான் இருக்கும். 121 00:11:34,236 --> 00:11:35,737 எந்த பார்? 122 00:11:38,115 --> 00:11:39,116 "த ஃபாக்ஸ்ஹோல்?" 123 00:11:39,199 --> 00:11:41,994 ஆமா. ராணுவத்துல வேலை பார்த்தவங்களுக்கு அந்த இடம் ரொம்பப் பிடிக்கும். 124 00:11:45,330 --> 00:11:47,291 நாம இதைக் கண்டுபிடிக்கணும்னு சாம் நினைச்சிருக்காரு. 125 00:11:47,374 --> 00:11:49,334 தன்னை யாரு சிக்க வைக்கிறாங்கனு நாம தெரிஞ்சுக்கணும்னு அவர் விரும்பிருக்கார். 126 00:11:55,966 --> 00:11:57,092 புத்திசாலித்தனமான வேலை. 127 00:11:59,970 --> 00:12:01,346 ஆனா வருத்தமான விஷயம் என்னன்னா… 128 00:12:01,430 --> 00:12:02,431 ஆமா. 129 00:12:03,015 --> 00:12:04,850 அவ யாருக்காக வேலை பார்த்தானு அவளால சொல்ல முடியாது. 130 00:12:05,642 --> 00:12:08,478 இல்ல, இது நல்லது தான். நாம நெருங்கிட்டோம். தொடர்ந்து வேலையைப் பாருங்க. 131 00:12:08,562 --> 00:12:09,730 திரு. டீயல், இப்போ நம்ம நிலை என்ன? 132 00:12:09,813 --> 00:12:11,607 ரயில் இப்போ எங்க இருக்கு? 133 00:12:22,576 --> 00:12:24,536 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸே ஸ்டேஷன் 134 00:12:28,582 --> 00:12:29,791 மாலை வணக்கம். 135 00:12:29,875 --> 00:12:31,793 இங்க நடந்த பரபரப்பையெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன் போல. 136 00:12:33,212 --> 00:12:34,463 ஸ்டேஷனைப் பூட்டக் காத்திருக்கீங்களா? 137 00:12:35,005 --> 00:12:36,465 போலீஸ் இன்னும் கீழே தான் இருக்காங்க. 138 00:12:38,634 --> 00:12:40,219 அவங்க எதைத்தான் தேடுறாங்க? 139 00:12:40,928 --> 00:12:43,597 யாரோ காணாம போயிட்டாங்க போல. 140 00:12:43,680 --> 00:12:45,390 என்னைக் கேட்டா, இது கொஞ்சம் கவனக்குறைவுதான். 141 00:12:46,350 --> 00:12:47,351 ஒரு நிமிஷம். 142 00:12:51,271 --> 00:12:53,190 மார்ஷாவோட மெசேஜ் எடுபடல. 143 00:12:53,941 --> 00:12:57,569 வின்டரும் சாமும் எப்படியாவது பயணிகளை ரயிலிலிருந்து வெளிய கொண்டு வர்றதுலதான் 144 00:12:58,153 --> 00:12:59,154 குறியா இருக்காங்க. 145 00:12:59,238 --> 00:13:02,324 பெய்லி-பிரவுனை அந்த ரயில்ல ஏத்தவும் அவங்க தயாரா இருக்காங்க. 146 00:13:02,407 --> 00:13:04,701 பின்னால இருந்து யாரு இயக்குறாங்கனு தெரியலைனாலும் கூட. 147 00:13:05,202 --> 00:13:06,703 ஏதோ விஷயம் இருக்கு. 148 00:13:06,787 --> 00:13:09,122 இதுக்குப் பின்னால இருக்கிறவங்க கூலிப்படையினர். 149 00:13:09,206 --> 00:13:10,457 முன்னாள் ராணுவத்தினரா? 150 00:13:10,541 --> 00:13:11,542 அப்படித்தான் தெரியுது. 151 00:13:12,501 --> 00:13:14,378 அவங்க எல்லாரும் இங்க, பெர்லின்லதான் சந்திச்சிருக்காங்க. 152 00:13:15,170 --> 00:13:17,172 உள்ளுக்குள்ளயே யாரோ ஒருத்தர் இருக்கான். 153 00:13:23,846 --> 00:13:25,514 இன்னும் அஞ்சு நிமிஷத்துல டிப்போக்கு போயிடுவோம். 154 00:13:26,682 --> 00:13:27,891 சரி. 155 00:13:29,852 --> 00:13:33,355 சரி, உங்க ரயில் சரியான நேரத்துக்கு வரும்னு நம்புவோம். 156 00:13:41,405 --> 00:13:44,157 வா. இங்க நில்லு. 157 00:13:47,327 --> 00:13:49,204 அவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாம அவளைக் கண்டுபிடிக்கணும். 158 00:13:49,288 --> 00:13:51,331 அவள் மறுபடியும் மேடான இடத்துக்குப் போகத் துணிய மாட்டாள். 159 00:13:52,207 --> 00:13:54,418 சீக்கிரமே அவங்களும் எரிபொருள் நிரப்பப் போக வேண்டியிருக்கும். 160 00:13:57,629 --> 00:13:59,256 வேற யாருக்கோ தெரிஞ்சிருச்சு போல. 161 00:13:59,882 --> 00:14:00,924 அவன் சந்தோஷப்படல. 162 00:14:01,425 --> 00:14:02,593 நாம அவளைப் பிடிச்சிடலாம். 163 00:14:03,594 --> 00:14:05,762 அவளே சிக்கணும்னு நினைச்சா, கடைசியில அவளே சரணடைஞ்சிடுவாள். 164 00:14:06,471 --> 00:14:08,348 அவன வாய மூடிக்கிட்டு இருக்கச் சொல்லு. 165 00:14:09,016 --> 00:14:11,560 - ஓ, அதை நீயே அவன்கிட்ட சொல்றியா? - வா போலாம். 166 00:14:16,315 --> 00:14:17,357 இங்க ஒண்ணுமில்ல. 167 00:14:27,034 --> 00:14:28,035 நிறுத்துங்க. 168 00:14:29,369 --> 00:14:30,996 அந்த வண்டிக்கு கீழ பாரு. 169 00:14:31,079 --> 00:14:33,332 அடச்சே! அவள எங்கும் போக வேண்டாம்னு சொன்னேனே. 170 00:14:33,415 --> 00:14:34,708 ஒருவேளை அவ போக வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும். 171 00:14:34,791 --> 00:14:36,627 அவங்கள தொடர்ந்து தேடச் சொல்லு, சரியா? 172 00:14:37,377 --> 00:14:39,463 சரி, நான் அவளைத் தொடர்புகொள்ள முடியுமான்னு பாக்குறேன். 173 00:14:41,006 --> 00:14:44,092 இங்க பாரு, நாம ராத்திரி பூரா வண்டி ஓட்டுனா கூட, காலையிலதான் போய்ச் சேருவோம். 174 00:14:45,219 --> 00:14:48,305 இதைத் தடுக்க நமக்கு இருக்கிற ஒரே வழி, இங்கதான் இருக்கு. 175 00:14:49,681 --> 00:14:50,724 வா. 176 00:15:07,449 --> 00:15:08,909 ஆதாரம் - சாட்சி வாக்குமூலம் 177 00:15:08,992 --> 00:15:10,869 நான் பீட்டர் ஃபேபர் கிட்ட பேசினேன். 178 00:15:11,537 --> 00:15:12,788 உள்ளுக்குள்ள கருப்பு ஆடு இருக்குறதா அவர் நினைக்கிறார். 179 00:15:13,539 --> 00:15:16,583 ஒருவேளை சாம் நம்மை அவன்கிட்டதான் கொண்டுபோக முயற்சி பண்ணாரோ என்னவோ. 180 00:15:17,584 --> 00:15:21,922 "சாட்சி சொன்னதை வெச்சு பாத்தா, அவன் ஒரு பிரிட்டிஷ் ஆபீசர் மாதிரி இருப்பான்." 181 00:15:23,173 --> 00:15:25,676 உள்ளுக்குள்ள ஒரு கருப்பு ஆடு இருக்குன்னு ஃபேபர் நம்புனாருன்னா, 182 00:15:26,760 --> 00:15:28,846 ஒருவேளை அது அவரோட ஆளாத்தான் இருக்கும். 183 00:15:30,806 --> 00:15:35,060 நாங்கள் ப்ரிட்ஸ்-ஸூட் மெட்ரோ டிப்போவில் நேரலையில் இருக்கிறோம், 184 00:15:35,143 --> 00:15:37,563 இங்கே நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது… 185 00:15:37,646 --> 00:15:39,857 இன்று காலையில் கடத்தப்பட்ட அந்த யூ-5 ரயிலை 186 00:15:39,940 --> 00:15:42,401 இப்போது நம்மால் பார்க்க முடிகிறது. 187 00:15:43,110 --> 00:15:45,863 அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் பெரிய கேள்வி… 188 00:16:08,135 --> 00:16:09,219 சரி… 189 00:16:10,721 --> 00:16:12,014 இனிமே பின்வாங்க முடியாது. 190 00:16:17,686 --> 00:16:20,564 லைட்டை ஆஃப் பண்ணு. அவங்க உள்ளே என்ன இருக்குன்னு பார்க்கக் கூடாது. 191 00:16:22,816 --> 00:16:23,942 எல்லாரும் கவனியுங்க. 192 00:16:25,402 --> 00:16:29,281 உங்க பாதுகாப்புக்காக நான் லைட்டை ஆஃப் பண்ணப் போறேன். 193 00:16:33,619 --> 00:16:34,828 இப்போ, நாம கிட்டத்தட்ட வந்துட்டோம். 194 00:16:36,079 --> 00:16:38,540 ஆனா நீங்க நான் சொல்றத கவனமா கேக்கணும். 195 00:16:38,624 --> 00:16:42,044 ஏன்னா நீங்க எல்லாரும் இந்த ரயில விட்டு இறங்குற வரைக்கும், 196 00:16:42,127 --> 00:16:44,922 ஒருத்தர் கூட பாதுகாப்பாக இல்ல. 197 00:16:45,005 --> 00:16:46,507 சார், ஆனா நாம இறங்கிருவோம்ல? 198 00:16:47,299 --> 00:16:49,051 ஆமா, ஆமா. அவரு சொன்னதைத்தான் கேட்டீங்கள்ல. 199 00:16:49,968 --> 00:16:51,553 நாம சும்மா அமைதியா இருக்கணும், அவ்ளோதான். 200 00:16:51,637 --> 00:16:54,973 நீங்க ரொம்ப நேரமா இந்த ரயில்ல கஷ்டப்படுறீங்கனு எனக்குத் தெரியும், 201 00:16:55,057 --> 00:16:57,768 ஆனா இந்தப் பயணம் முடியப் போகுது. 202 00:16:58,810 --> 00:17:02,940 என் மேல சத்தியமா சொல்றேன், நீங்க எல்லாரும் ரயிலை விட்டு இறங்குவீங்க. 203 00:17:04,608 --> 00:17:05,651 கண்டிப்பா இறங்குவீங்க. 204 00:17:14,076 --> 00:17:15,868 - சரி. - இதெல்லாம் நமக்காகவா? 205 00:17:15,953 --> 00:17:17,329 ஹேய் மக்களே, அவ்ளோ தான். 206 00:17:32,803 --> 00:17:35,889 எல்லா யூனிட்டும், பாதுகாப்பான இடைவெளியில நில்லுங்க. 207 00:17:37,140 --> 00:17:38,141 சரி. 208 00:17:41,562 --> 00:17:42,980 அவங்க எல்லாரும் இறங்கினதுக்கு அப்புறம்… 209 00:17:44,356 --> 00:17:45,357 என்ன நடக்கும்? 210 00:17:46,149 --> 00:17:47,860 என்ன நடக்குதுன்னு பார்ப்போம். 211 00:17:49,486 --> 00:17:50,571 நான் அவங்ககிட்ட என்ன சொல்றது? 212 00:17:53,115 --> 00:17:54,491 அவங்க கிட்ட உண்மையைச் சொல்லு. 213 00:17:55,576 --> 00:17:56,869 உன்னைக் கட்டாயப்படுத்தி செய்ய வச்சதா சொல்லு. 214 00:17:57,995 --> 00:17:59,705 என்னை யாரும் கட்டாயப்படுத்தல. 215 00:18:01,290 --> 00:18:02,332 எனக்குப் பணம் கொடுத்தாங்க. 216 00:18:02,875 --> 00:18:04,376 நான் பணத்தை வாங்கிட்டேன். 217 00:18:05,919 --> 00:18:09,298 வாங்காம இருந்திருக்கலாம்னு தோணுது, ஆனா இப்போ அது எனக்கு வேணாம். 218 00:18:09,381 --> 00:18:10,382 ஆட்டோ. 219 00:18:11,675 --> 00:18:12,926 நீ பல உயிர காப்பாத்தியிருக்க. 220 00:18:16,138 --> 00:18:17,973 எனக்கு அப்படித் தோணலையே. 221 00:18:26,857 --> 00:18:28,400 சரி கிளாரா, நேரம் வந்துடுச்சு. 222 00:18:31,486 --> 00:18:32,696 நாங்க உங்களைப் பார்க்கிறோம், சாம். 223 00:18:34,573 --> 00:18:36,366 மார்ஷா பத்தி ஏதாச்சும் தகவல் இருக்கா? 224 00:18:50,172 --> 00:18:51,465 மன்னிச்சிடுங்க, சாம். 225 00:18:58,639 --> 00:19:00,390 இன்னும் இருபது நிமிஷத்துக்கான எரிபொருள்தான் இருக்கு. 226 00:19:01,391 --> 00:19:05,521 அவள் எங்க இருக்காள்னு தெரியல. நாம தேடுறத இதோட நிறுத்திக்க வேண்டியதுதான். 227 00:19:05,604 --> 00:19:07,272 வேணும்னா இன்னொரு ரவுண்டு போய் பாக்கலாம். 228 00:19:23,330 --> 00:19:25,624 வாரா வாரத்திற்கான ஃபோன் அழைப்பை அவன் பயன்படுத்தியதே இல்ல. ஒரு முறை கூட. 229 00:19:26,208 --> 00:19:27,584 அவன் ஒண்ணும் அவ்ளோ முட்டாள் இல்ல. 230 00:19:28,085 --> 00:19:29,503 யாராவது பார்க்க வந்திருந்தாங்களா? 231 00:19:29,586 --> 00:19:31,880 நீங்க வேணா ரிஜிஸ்டரை செக் பண்ணி பாருங்க, ஆனா அவன பாக்க யாரும் வர மாட்டாங்க. 232 00:19:32,464 --> 00:19:33,715 அவன் யார் வம்புக்கும் போக மாட்டான். 233 00:19:34,424 --> 00:19:35,968 என்னை பொறுத்தவரை, அவன் கொஞ்சம் பாவப்பட்ட ஆள்தான். 234 00:19:36,051 --> 00:19:38,679 சுத்த பொய். அவன் யார்கிட்டயோ பேசிட்டு இருக்கான். கண்டிப்பா பேசிட்டு இருக்கான். 235 00:19:39,471 --> 00:19:40,514 நீங்கதான் கவனிக்கல. 236 00:19:43,684 --> 00:19:45,602 இங்க ஈ எறும்பு கூட நுழைய முடியாது. 237 00:19:45,686 --> 00:19:47,813 எல்லா இடத்துலயும் சிசிடிவி இருக்கு, ஜெயில் செல்லுக்குள்ளேயும் தான். 238 00:19:47,896 --> 00:19:51,400 அதுவும் இல்லாம, அவங்க பாதி இடத்துல ஒட்டுக்கேக்குற மிஷின வேற வச்சிருக்காங்க. 239 00:19:51,483 --> 00:19:54,403 அதனால, நாங்க எதையாவது கோட்டை விட்டிருந்தா, நீங்களும்தான் விட்டிருக்கீங்க. 240 00:19:57,698 --> 00:19:58,866 அவன் எங்க போயிருந்தான்? 241 00:19:59,449 --> 00:20:00,784 இப்போதான் உடற்பயிற்சி முடிச்சிட்டு வர்றான். 242 00:20:01,451 --> 00:20:02,661 அவனுக்கு விதிகள் எல்லாம் நல்லா தெரியும். 243 00:20:02,744 --> 00:20:04,121 நடக்கறதுனா அவனுக்குப் பிடிக்கும். 244 00:20:04,997 --> 00:20:06,999 திரும்ப வந்த உடனே அங்க போயிட்டானா? 245 00:20:07,541 --> 00:20:08,625 கிட்டத்தட்ட அப்படித்தான். 246 00:20:17,301 --> 00:20:18,302 நில்லுங்க. 247 00:20:28,187 --> 00:20:29,188 கையை நீட்டு. 248 00:20:29,271 --> 00:20:30,772 அட, விடுங்க, க்ரெக்ஸி. 249 00:20:30,856 --> 00:20:32,107 நடைமுறை என்னனு உனக்கே தெரியும். 250 00:20:56,924 --> 00:20:58,091 இது என்னது? 251 00:21:04,348 --> 00:21:07,100 என் தம்பியோட செயின்ல கோர்த்த எங்க அம்மாவோட கல்யாண மோதிரம். 252 00:21:07,851 --> 00:21:10,437 - நிஜமாவே இத என்கிட்ட இருந்து கழட்டப் போறீங்களா - கழட்டு. 253 00:21:11,104 --> 00:21:12,773 - சரி, நான் அப்படி நினைக்கல. - போ. 254 00:21:22,115 --> 00:21:23,116 இதுக்கு மேல முடியாது. 255 00:21:24,660 --> 00:21:25,661 எனக்கு இதெல்லாம் போதும். 256 00:21:28,080 --> 00:21:29,456 எனக்காக வேலை பாக்குறவங்க… 257 00:21:30,624 --> 00:21:32,209 எப்போ நிறுத்தணும்னு நான்தான் முடிவு பண்ணுவேன். 258 00:21:38,799 --> 00:21:41,093 …பிணைக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த அந்த ரயில், 259 00:21:41,176 --> 00:21:44,388 இப்போது நகரத்தின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ப்ரிட்ஸ்-ஸூட் டிப்போவுக்கு வந்திருக்கு. 260 00:21:44,471 --> 00:21:47,641 இப்போது வரை, இந்தக் கடத்தலை செய்பவன் யார், அவனோட நோக்கம் என்ன, 261 00:21:47,724 --> 00:21:51,019 என்ன கோரிக்கை என்று உறுதியான தகவல் ஏதும் இல்ல. 262 00:21:51,103 --> 00:21:55,148 முக்கியமாக, ரயிலுக்குள் இருப்பவர்களின் நிலைமை என்னவென்றும் தெரியலை. 263 00:21:55,232 --> 00:21:58,110 ஆனால், போலீஸும் அதிரடிப்படையினரும் 264 00:21:58,193 --> 00:22:00,237 தீவிரமாக செயல்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது… 265 00:22:00,320 --> 00:22:01,989 பெர்லினில் தீவிரவாதத் தாக்குதல் யூ-பாஹ்ன் டிப்போவைச் சூழ்ந்த அதிரடிப்படை 266 00:22:19,631 --> 00:22:21,258 - இன்னொருத்தன் எங்கே? - எனக்குத் தெரியல. 267 00:22:21,341 --> 00:22:23,719 பெர்க்மேன்ஸ்ட்ராஸ்ஸேல எங்க கூடத்தான் இருந்தான். ஆனா இப்போ பதில் சொல்ல மாட்டேங்குறான். 268 00:22:23,802 --> 00:22:25,971 பரவாயில்ல விடு. நாம சமாளிச்சுக்கலாம். 269 00:22:26,054 --> 00:22:27,514 முதல்ல இந்தக் கதையை முடிப்போம். 270 00:22:28,223 --> 00:22:31,727 பிணைக்கைதிகள் எல்லாரும் பத்திரமா வெளிய வர்ற வரைக்கும் இவன் எங்கேயும் போக கூடாது. 271 00:22:32,895 --> 00:22:33,896 என் பின்னால வாங்க. 272 00:22:33,979 --> 00:22:34,980 நகருங்க. 273 00:22:47,117 --> 00:22:48,827 கிளாரா, ஏதாச்சும் தகவல் இருக்கா? 274 00:22:48,911 --> 00:22:50,454 ஜான் பெய்லி-பிரவுன் எங்கே? 275 00:22:51,663 --> 00:22:54,249 போலீஸ் அவனை இப்போ டிப்போவுக்குள்ள கூட்டிட்டு வர்றாங்க. 276 00:22:54,833 --> 00:22:57,211 குண்டு வெடிச்சா பாதிக்காத தூரத்துல அவங்க காத்திருப்பாங்க. 277 00:23:01,340 --> 00:23:02,424 நாங்க தயார் நிலையில இருக்கோம். 278 00:23:06,762 --> 00:23:08,055 அவன்தானா? 279 00:23:15,437 --> 00:23:18,357 சரி, நான் பயணிகளை ஒவ்வொருத்தரா வெளியே அனுப்புறேன். 280 00:23:25,572 --> 00:23:26,907 நன்றி, சாம். 281 00:23:27,950 --> 00:23:31,328 கடைசி ஆள் வெளிய வந்ததும், கைதியை ரயிலுக்கு அனுப்பி வைப்போம். 282 00:23:32,329 --> 00:23:33,330 புரிஞ்சது. 283 00:23:33,413 --> 00:23:35,374 அப்படி ஒரு நிலைமை வராதுனு நம்புவோம். 284 00:23:37,000 --> 00:23:38,001 ஆட்டோ. 285 00:23:38,794 --> 00:23:40,420 எனக்கு உன் உதவி வேணும், சரியா? 286 00:23:42,297 --> 00:23:45,008 நீ போறதுக்கு முன்னாடி, இவங்களுக்கு வழிகாட்டிட்டுப் போ. 287 00:23:45,634 --> 00:23:47,177 பயணிகள் எல்லாரும் பத்திரமா இறங்குறாங்களான்னு பார்த்துக்கோ. 288 00:23:49,346 --> 00:23:50,597 கண்டிப்பா. 289 00:23:57,521 --> 00:23:58,647 அதுதான் என் வேலையே. 290 00:24:04,069 --> 00:24:05,696 பத்திரமா இருங்க. 291 00:24:25,591 --> 00:24:27,134 சரி, ஒவ்வொருத்தரா போங்க. 292 00:24:28,093 --> 00:24:29,219 டிரைவருக்குப் பின்னாலயே போங்க. 293 00:24:30,512 --> 00:24:33,932 நேரா போலீஸ் கிட்ட போங்க. எங்கும் நிக்காதீங்க, திரும்பிப் பார்க்காதீங்க. 294 00:24:36,435 --> 00:24:37,436 எல்லாம் முடிஞ்சுது. 295 00:24:38,687 --> 00:24:39,688 போங்க. 296 00:24:59,041 --> 00:25:01,126 மாஸ்டர் ஓவர்ரைடு தயார் நிலை - செயல்படுத்தப்பட்டது 297 00:25:01,210 --> 00:25:02,419 சரி, ஒவ்வொருத்தரா. 298 00:25:02,503 --> 00:25:04,588 நான் சொன்ன மாதிரியே, மெதுவா போங்க. 299 00:25:06,089 --> 00:25:07,090 வாங்க. 300 00:25:16,225 --> 00:25:18,977 சரி, இந்தப் பக்கம். கீழே, வாங்க… 301 00:25:24,900 --> 00:25:28,403 இந்தத் திசையிலயே போங்க. தயவுசெஞ்சு இந்தப் பக்கமா போங்க. 302 00:25:54,263 --> 00:25:55,556 நான் ஒண்ணு சொல்லவா… 303 00:25:55,639 --> 00:25:58,100 - என்ன? - அந்த ரயிலுக்குள்ள ஏறுறத விட, 304 00:25:58,183 --> 00:25:59,434 அதுல இருந்து இறங்குறதுதான் நல்லது. 305 00:26:00,352 --> 00:26:02,020 சரி, இனி எது வந்தாலும் நான் ஏத்துக்குறேன். 306 00:26:06,275 --> 00:26:08,360 எனக்கு சுத்தி காட்டுனதுக்கு ரொம்ப நன்றி. 307 00:26:09,236 --> 00:26:13,740 ஆமா, 1986 அக்டோபர்ல எப்படி விட்டுட்டுப் போனீங்களோ, அப்படியேதான் இருக்கு. 308 00:26:18,036 --> 00:26:19,705 அங்க உள்ள என்ன இருக்கு? 309 00:26:19,788 --> 00:26:21,582 உண்மையச் சொல்லணும்னா அது என்னோட பழைய இடம். 310 00:26:27,421 --> 00:26:29,381 இப்போ எல்லாம் கம்ப்யூட்டர் மயம் ஆகிடுச்சு, இல்லையா? 311 00:26:30,340 --> 00:26:31,550 அதை ஏன் கேக்குறீங்க. 312 00:26:39,683 --> 00:26:41,059 உங்களால இதை… 313 00:27:01,788 --> 00:27:03,040 அவனைக் கண்டுபிடிச்சுட்டோம்னு நினைக்கிறேன்! 314 00:27:05,250 --> 00:27:08,712 எல்லா யூனிட்டும் கவனிங்க. ஒரு ஆபீசர் அடிபட்டுருக்காரு. திரும்ப சொல்றேன்… 315 00:27:11,548 --> 00:27:13,884 மிஸ்டர் ஃப்ரோம்ஸ். தயவுசெஞ்சு என் கூட வாங்க. 316 00:27:16,261 --> 00:27:17,513 நீங்க இங்க இருந்தா பிரச்சனை இல்லயே? 317 00:27:30,776 --> 00:27:32,027 நடந்து போயிட்டே இருங்க. 318 00:27:32,110 --> 00:27:33,529 சரி, என்ன விஷயம்? 319 00:27:34,363 --> 00:27:36,156 - ஒரு பிரச்சனை… - சரி. 320 00:27:36,240 --> 00:27:37,908 உன்னோடு சகாவை கண்டுபிடிச்சுட்டாங்க. 321 00:27:37,991 --> 00:27:40,577 சரி, நான் உள்ளே போனதும் என்ன நடக்கும், என்ன டீல்? 322 00:27:41,787 --> 00:27:42,788 சும்மா போங்க. 323 00:27:42,871 --> 00:27:44,122 "சும்மா போவா?" 324 00:27:44,206 --> 00:27:45,707 எதை வெச்சுப் போறது? நீ என்கிட்ட எதையுமே சொல்லல. 325 00:27:45,791 --> 00:27:48,335 - நான் எங்க போகப் போறேன்? - வாயை மூடிட்டு சொல்றபடி நடந்துக்கோங்க. 326 00:27:48,418 --> 00:27:50,170 அவங்க மொத்தமா நிறுத்துறதுக்கு முன்னாடி. 327 00:27:50,254 --> 00:27:51,588 நிறுத்துறதுன்னு என்ன சொல்ற? 328 00:27:59,346 --> 00:28:00,806 நீங்களும் வர்றீங்க தானே? 329 00:28:00,889 --> 00:28:02,099 மெய், 330 00:28:03,851 --> 00:28:04,852 நீ கிளம்பு. 331 00:28:12,776 --> 00:28:15,821 அப்போ நெல்சன்? அவனுக்கான திட்டம் என்ன? 332 00:28:15,904 --> 00:28:17,906 - அதப் பத்தி உங்களுக்கு என்ன கவலை? - எனக்குக் கவலை இல்ல. 333 00:28:18,782 --> 00:28:20,909 ஆனா அவன்கிட்ட இருந்து என்னை எப்படி காப்பாத்துவ? 334 00:28:20,993 --> 00:28:23,620 அவன்கிட்ட துப்பாக்கி எதுவும் இல்லையே? அதனால ரிலாக்ஸா இருங்க. 335 00:28:24,204 --> 00:28:27,040 இல்ல. நீ உண்மையைச் சொல்ற வரைக்கும் நான் ரயில்ல ஏற மாட்டேன். 336 00:28:32,796 --> 00:28:34,631 வாங்க. நான்தான் கடைசி ஆளு. 337 00:28:34,715 --> 00:28:36,216 இல்ல, என்னால முடியாது. 338 00:28:37,259 --> 00:28:39,052 நீ இன்னும் எனக்குப் பதிலே சொல்லல. 339 00:28:39,636 --> 00:28:42,848 - கவலைப்படாதீங்க, நான் உத்திரவாதம் தரேன். - இது காமெடியா போயிட்டு இருக்கு. 340 00:28:43,557 --> 00:28:45,058 என்ன பத்தி எனக்குக் கவலை இல்ல. 341 00:28:45,142 --> 00:28:46,476 என்னதான் நடக்குது? 342 00:28:47,269 --> 00:28:49,354 சும்மா சீன் போடாதீங்க. 343 00:28:49,438 --> 00:28:51,148 நான் திரும்பப் போகணும். போ. 344 00:28:58,739 --> 00:29:00,240 சாம். சாம்! 345 00:29:01,617 --> 00:29:03,785 - இது நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. - ஆட்டோ, நீ எதுக்கு இங்க வந்த? 346 00:29:03,869 --> 00:29:06,246 - இங்கிருந்து போயிடுரு. - இல்ல. ஏதோ சரியில்ல. 347 00:29:06,330 --> 00:29:07,456 அவனைப் பாருங்க. 348 00:29:10,125 --> 00:29:11,668 தப்பிக்கிறதுல அவனுக்குச் சந்தோஷம் இருக்கிற மாதிரியா தெரியுதா? 349 00:29:13,629 --> 00:29:14,838 இல்ல. 350 00:29:14,922 --> 00:29:15,964 வா. 351 00:29:16,798 --> 00:29:19,051 - அப்படின்னா, இது எதுக்கு? - இவன் இங்க என்ன பண்றான்? 352 00:29:19,718 --> 00:29:20,719 யாரு? 353 00:29:21,762 --> 00:29:23,805 நாம இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோமே, அது அவன்தான். 354 00:29:23,889 --> 00:29:25,974 - வெடிகுண்டின் ரிமோட் வச்சிருக்கறவனா? - ஆமா. 355 00:29:26,558 --> 00:29:27,684 என்ன விளையாடுறீங்களா! 356 00:29:27,768 --> 00:29:30,395 இல்ல இல்ல. இது நல்லதுதான். 357 00:29:30,479 --> 00:29:31,522 இது எப்படி நல்லதாகும்? 358 00:29:35,609 --> 00:29:38,487 இன்னைக்கு சாகுறதுக்கு நான் தயார், ஆனா கையில ரிமோட் வச்சிருக்கவன் சாகத் தயாரா இருக்க மாட்டான். 359 00:29:41,240 --> 00:29:43,492 அது லேங். ராபர்ட் லேங். 360 00:29:43,575 --> 00:29:44,701 உங்க கூட வேலை பாக்குறவரா? 361 00:29:44,785 --> 00:29:47,246 ஆமா. முன்னாள் ராணுவ அதிகாரி. 362 00:29:47,329 --> 00:29:48,705 எல்லா இடத்துக்கும் போக அவனுக்கு அனுமதி இருக்கு. 363 00:29:48,789 --> 00:29:52,459 சரியான இடத்துல இருந்துட்டு, என்கிட்டயே தன் வேலையைக் காட்டியிருக்கான். 364 00:29:52,543 --> 00:29:53,961 சாம் அவனைத்தான் சந்திச்சிருப்பாரு. 365 00:29:54,044 --> 00:29:57,548 என்னை நம்புங்க, எப்பேற்பட்ட கேவலமான வேலையையும் செய்ய அவன் தயங்க மாட்டான். 366 00:29:57,631 --> 00:30:00,092 - சரி. அவன் எங்க இருக்கான்னு தெரியுமா? - வேற எங்க இருப்பான்னு நினைக்கிறீங்க? 367 00:30:03,470 --> 00:30:04,638 அடக் கடவுளே. 368 00:30:08,433 --> 00:30:09,643 அது அவன்தான். 369 00:30:21,196 --> 00:30:23,198 இல்ல, இல்ல. இதுல ஏதோ தப்பிருக்கு. 370 00:30:28,871 --> 00:30:30,330 என்ன… என்னடா பண்ற… 371 00:30:30,414 --> 00:30:32,791 - என்ன… என்ன பண்ற? - இதுதான் நல்லது. 372 00:30:34,001 --> 00:30:35,127 நெல்சன்! 373 00:30:39,047 --> 00:30:41,133 என்னை கழட்டி விடு, லேங்! என்ன பண்ற நீ? 374 00:30:41,842 --> 00:30:43,051 லேங், நீ என்ன பண்ற? 375 00:31:03,197 --> 00:31:04,823 சாம் என்னதான் பண்ணுறார்? 376 00:31:06,742 --> 00:31:07,993 அவன் புத்திசாலித்தனமா நடக்குறார். 377 00:31:11,246 --> 00:31:15,792 லேங் கையில ரிமோட் இருந்தா, அவன் அதுல இருக்குறப்ப ரயில வெடிக்க வைக்க மாட்டான்னு சாமுக்கு தெரியும். 378 00:31:24,092 --> 00:31:26,261 எல்லாம் உன் கட்டுப்பாட்டுல இருக்குனு நினைச்சேன், லேங். 379 00:31:26,845 --> 00:31:28,972 நாம எங்க போறோம்? நெல்சன் எங்கே? 380 00:31:29,598 --> 00:31:31,266 அவன் இருக்கக்கூடிய ஒரே இடம்… 381 00:32:09,137 --> 00:32:11,181 நீ என்கிட்ட பொய் சொல்லிட்ட! என்ன இது? 382 00:32:12,266 --> 00:32:13,892 என் கைவிலங்க அவிழ்த்துவிடு, லேங்! 383 00:32:13,976 --> 00:32:15,269 இரு! என்ன பண்ற நீ? 384 00:32:17,145 --> 00:32:18,146 கடவுளே! 385 00:32:20,399 --> 00:32:21,775 துரோகிப் பயலே! 386 00:32:25,904 --> 00:32:27,197 நாசமா போனவனே! 387 00:32:37,916 --> 00:32:38,917 அவன் எங்கே? 388 00:32:40,711 --> 00:32:41,795 எனக்குத் தெரியாது. 389 00:32:41,879 --> 00:32:45,799 அது நல்ல வித்தைதான், ஆனா மறுபடியும் உன் கிட்ட கேட்குறேன். 390 00:32:49,595 --> 00:32:51,013 அவன் எங்கே? 391 00:32:54,558 --> 00:32:56,059 நீ முதல்ல சொன்னதுதான் சரி. 392 00:33:01,648 --> 00:33:04,151 சரி, வா பாக்கலாம். உன் திறமையை காட்டு. 393 00:33:14,036 --> 00:33:16,496 இல்ல. உனக்கு இன்னும் நல்லா குறி பார்க்கத் தெரியும்னு நெனச்சேன். 394 00:33:17,998 --> 00:33:19,041 திரும்ப முயற்சி பண்ணு. 395 00:33:27,132 --> 00:33:28,258 ஐயோ. 396 00:33:29,718 --> 00:33:32,304 சரி, நாம இதை வேற வழியில முடிப்போம். 397 00:33:36,934 --> 00:33:39,436 மாஸ்டர் ஓவர்ரைடு தயார் நிலை - செயல்படுத்தப்பட்டது 398 00:33:40,771 --> 00:33:42,439 இதை செய்யுற அளவுக்கு நீ தைரியசாலின்னு எனக்குத் தோணல, லேங். 399 00:33:44,149 --> 00:33:45,234 நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். 400 00:33:46,652 --> 00:33:47,819 நீ மார்ஷாவைக் கொன்னுடுவ. 401 00:33:48,820 --> 00:33:50,697 ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினா போதும், அதுதான் நடக்கும். 402 00:33:52,616 --> 00:33:54,368 அதனாலதான் உன் கூட ஒரு ஒப்பந்தம் பேசலாம்னு இருக்கேன். 403 00:34:19,643 --> 00:34:21,603 எரிஞ்சிடு, சீக்கிரம்… 404 00:34:30,445 --> 00:34:31,572 அடச்சே. 405 00:34:33,072 --> 00:34:35,033 அவ்ளோதான். மெல்லமா நிதானமா. 406 00:34:40,664 --> 00:34:42,123 நாங்க ரெண்டு பேரும் சாகணும்னு நீ ஆசைப்படுற. 407 00:34:42,916 --> 00:34:44,126 சரி, எனக்குப் புரியுது. 408 00:34:44,835 --> 00:34:47,379 ஆனா என்னை நம்பு, அவனை உயிரோட வச்சுக்க எனக்கு எந்தக் காரணமும் இல்ல. 409 00:34:49,547 --> 00:34:52,676 கைய்-க்கு நடந்ததுக்கு, அவனுக்கு இதுவாவது கிடைக்கணும். 410 00:34:53,177 --> 00:34:54,178 கடவுளே. 411 00:34:54,636 --> 00:34:55,804 யாரு அந்த கைய்? 412 00:34:55,888 --> 00:34:57,556 கைய் என்னோட மகன்! 413 00:34:59,558 --> 00:35:01,268 என் மகன்! நீதான் அவனைக் கொன்ன! 414 00:35:04,897 --> 00:35:06,398 கைய் யாருன்னு உனக்குத் தெரியும். 415 00:35:06,481 --> 00:35:08,400 அவன் உன்னை அப்படித்தான் நம்ப வெச்சிருக்கானா? 416 00:35:18,452 --> 00:35:21,121 நாங்க நினைச்சதை உன்னை செய்ய வைக்க இதுதான் ஒரே வழி. 417 00:35:21,205 --> 00:35:22,873 உன் இடத்துல நான் இருந்தா, இப்படி அவசரப்பட மாட்டேன். 418 00:35:24,249 --> 00:35:26,168 மார்ஷாவை இழக்க விரும்பலைன்னா அப்படி செய்யாத. 419 00:35:27,711 --> 00:35:29,213 நாசமாய் போனவனே! 420 00:35:54,154 --> 00:35:55,155 சரி. 421 00:36:00,285 --> 00:36:02,162 சரி சொல்லு, என்ன டீல்? 422 00:36:03,664 --> 00:36:04,831 எங்க ரெண்டு பேரையும் கொன்னுடு. 423 00:36:04,915 --> 00:36:06,250 நீ சத்தமில்லாம போயிடு. 424 00:36:07,376 --> 00:36:09,044 மார்ஷாவை மட்டும் உயிரோட விட்டுடு. 425 00:36:10,629 --> 00:36:11,797 நான் கேக்குறது அவ்ளோதான். 426 00:36:15,717 --> 00:36:16,802 என்னை மன்னிச்சுடு. 427 00:36:17,594 --> 00:36:19,930 - அட என்ன? - அது எனக்கு சரிப்பட்டு வராது. 428 00:36:21,139 --> 00:36:22,724 முடித்துவிடு 429 00:36:25,143 --> 00:36:26,603 நீ இப்படித்தான் சொல்லுவன்னு எனக்குத் தெரியும். 430 00:36:39,783 --> 00:36:40,951 சாம்! 431 00:36:41,034 --> 00:36:43,453 ஆட்டோ, போயிடு! நீ போயிடு! 432 00:36:47,124 --> 00:36:48,125 சாம்! 433 00:36:49,042 --> 00:36:50,043 அடச்சே. 434 00:36:51,545 --> 00:36:53,046 நாம இங்க இருந்து வெளிய போகணும். 435 00:36:58,927 --> 00:37:01,722 - சரி, மக்களே, அது தெரியுதா? - ஆமா, ஒரு மணி திசையில். 436 00:37:02,306 --> 00:37:03,348 அது அவளாத்தான் இருக்கும். 437 00:37:03,974 --> 00:37:06,894 - நம்மால அங்கே போக முடியுமா? - முயற்சி பண்ணி பார்க்கலாம். 438 00:38:11,792 --> 00:38:12,793 எல்லாம் முடிஞ்சுது. 439 00:38:15,337 --> 00:38:17,714 அதுக்கு அர்த்தம் அதுதானே? வெடிக்க வெச்சுட்டாங்க. 440 00:38:24,471 --> 00:38:26,098 அது இங்கிருந்து எவ்ளோ தூரத்துல இருக்கு? 441 00:38:29,101 --> 00:38:30,727 நடந்து போனா அஞ்சு நிமிஷம் ஆகும். 442 00:38:32,062 --> 00:38:33,063 ஏன்? 443 00:38:34,189 --> 00:38:35,357 ஒலிவியா… 444 00:38:36,650 --> 00:38:37,943 அங்க போறது பாதுகாப்பு கிடையாது. 445 00:38:44,283 --> 00:38:47,578 பீட்டர், நான்தான் பேசுறேன். நான் கத்தீட்ரல் நோக்கிப் போறேன். 446 00:38:54,001 --> 00:38:58,380 ஜெர்மனி தலைநகர் சுரங்கப்பாதையில் 447 00:38:58,463 --> 00:39:03,468 பெரிய குண்டுவெடிப்பு நடந்திருக்கு, புகை வெளியே வருவதாக தகவல்கள் வருகின்றன. 448 00:39:03,552 --> 00:39:06,847 சுரங்கப்பாதைக்கு மேலே இருந்தவர்கள் ஏதோ பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், நிலம் அதிர்வதை 449 00:39:06,930 --> 00:39:09,016 உணர்ந்ததாகவும் சொல்கின்றனர். 450 00:39:09,099 --> 00:39:11,685 எதனால் வெடிச்சது என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, 451 00:39:11,768 --> 00:39:12,978 ஆனால்… 452 00:39:21,778 --> 00:39:23,655 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டாலும், 453 00:39:23,739 --> 00:39:26,700 ரயில் சுரங்கப்பாதைக்கு உள்ளே திரும்பப் போகும்போது 454 00:39:26,783 --> 00:39:28,994 ரயிலுக்குள்ளே நிறைய பேர் இருந்திருக்கின்றனர். 455 00:39:34,750 --> 00:39:36,793 …முக்கியமான இடங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்… 456 00:39:38,378 --> 00:39:42,925 இதற்கு என்ன காரணம் என்று இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை… 457 00:39:43,008 --> 00:39:45,427 நீ எனக்குப் ஃபோன் பண்ணக் கூடாது. நான்தான் பண்ணுவேன். முறை என்னன்னு உனக்குத் தெரியும்ல. 458 00:39:45,511 --> 00:39:48,472 வேலை முடிஞ்சுது. அவங்க செத்துட்டாங்க. 459 00:39:48,972 --> 00:39:49,973 ரெண்டு பேருமா? 460 00:39:50,057 --> 00:39:51,558 ஆமா. 461 00:39:52,100 --> 00:39:54,937 நல்லது. அப்புறம் என்ன பிரச்சனை? 462 00:39:55,020 --> 00:39:56,104 நான்தான் செஞ்சேன்னு அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சு. 463 00:39:57,147 --> 00:39:59,858 நான் தப்பிக்க ஒரு வழி வேணும், நீ எனக்கு இன்னும் அதிகமா பணம் தரணும். 464 00:40:01,235 --> 00:40:02,986 நீங்க இதைக் கேட்கணும். 465 00:40:11,411 --> 00:40:12,412 சத்தத்தை அதிகப்படுத்துங்க. 466 00:40:13,956 --> 00:40:16,250 முடிஞ்சது முடிஞ்சு போச்சு, லேங். இப்போ நிபந்தனைகளையெல்லாம் மாத்த முடியாது. 467 00:40:16,333 --> 00:40:17,626 இதை ரெக்கார்ட் பண்றீங்களா? 468 00:40:17,709 --> 00:40:19,086 இப்போ பண்றேன். 469 00:40:19,169 --> 00:40:21,421 சீப்சைட் கம்பெனி இப்போ என்னோடது. நான்தான் ராஜா. 470 00:40:22,005 --> 00:40:23,590 அவங்களால என்னைத் தொட முடியாது. 471 00:40:24,174 --> 00:40:25,175 ஆமா, அதுக்கு நான்தான் காரணம். 472 00:40:25,259 --> 00:40:27,094 நான் கேட்ட மாதிரி அவங்க ரெண்டு பேரும் செத்திருந்தா, 473 00:40:27,177 --> 00:40:29,721 நாம பேசிக்கிட்ட மாதிரி அந்தப் பணம் உனக்குக் கிடைக்கும். 474 00:40:31,765 --> 00:40:33,225 நீங்க நல்லா இருக்கீங்களா? 475 00:40:33,308 --> 00:40:35,894 ஆமா, வா போலாம். லேங்! 476 00:40:36,478 --> 00:40:39,439 - லேங்! - யாரது? அங்க என்ன நடக்குது? 477 00:40:51,743 --> 00:40:52,995 - போங்க. - நன்றி. 478 00:41:02,754 --> 00:41:03,755 அவனைப் பிடிச்சுட்டோம். 479 00:41:06,383 --> 00:41:09,511 இப்போதைக்குத் தெளிவான பதில்கள் எதுவும் இல்லை. 480 00:41:09,595 --> 00:41:13,599 மீட்புப் படையினர் நிலைமையைச் சரிசெய்வதில் கவனமாக இருக்கின்றனர். 481 00:41:19,563 --> 00:41:20,689 லேங்! 482 00:41:26,111 --> 00:41:27,112 லேங்! 483 00:41:38,415 --> 00:41:41,752 சந்தேக நபர்கள் ஓடுறாங்க, நதி ஓரமா கிழக்கு நோக்கிப் போறாங்க. 484 00:41:42,461 --> 00:41:44,421 - இங்கே. - ஹேய், நாம போலாம். 485 00:42:08,070 --> 00:42:11,073 அந்த இடத்தை விட்டுத் தள்ளி நில்லுங்க. 486 00:42:12,157 --> 00:42:14,743 துப்பாக்கி ஏந்திய போலீஸ் வந்துட்டு இருக்காங்க. 487 00:42:17,663 --> 00:42:19,081 போங்க, போங்க! 488 00:42:27,047 --> 00:42:28,090 முட்டி போடுங்க! 489 00:42:30,509 --> 00:42:31,969 கையைத் தலைக்குப் பின்னாடி வைங்க! 490 00:42:34,304 --> 00:42:35,305 ரெண்டு பேரும்தான். 491 00:42:36,515 --> 00:42:37,891 ரெண்டு சந்தேக நபர்களைப் பிடிச்சுட்டோம். 492 00:42:38,559 --> 00:42:39,685 சரி. 493 00:42:39,768 --> 00:42:43,021 அவங்க சரணடையறாங்க. பாதிக்கப்பட்டவங்களைப் பத்தி தகவல் சொல்றேன், காத்திருங்க. 494 00:42:48,026 --> 00:42:49,903 சரி! சரி! 495 00:42:57,578 --> 00:42:59,246 எல்லாம் முடிஞ்சுது, ராபர்ட்! 496 00:43:00,539 --> 00:43:02,207 முட்டி போடுங்க! 497 00:43:03,333 --> 00:43:04,918 முட்டி போடுங்கடா! 498 00:43:09,631 --> 00:43:12,467 அசையாதே, இல்லன்னா சுட்டுடுவோம்! 499 00:43:14,178 --> 00:43:15,762 உன் இடத்துல நான் இருந்தா, ஃபோனை எடுக்க மாட்டேன். 500 00:43:17,973 --> 00:43:19,266 அது யாருன்னு உனக்குத் தெரியும்ல? 501 00:43:20,851 --> 00:43:22,144 எனக்கு ஓரளவுக்குத் தெரியும். 502 00:43:24,646 --> 00:43:26,273 அப்போ, அவன் நிறுத்தவே மாட்டான்னு உனக்கே தெரியும். 503 00:43:31,445 --> 00:43:32,779 மிச்சம் இருக்கிறது நான் மட்டும்தான். 504 00:43:39,995 --> 00:43:43,916 கடைசி எச்சரிக்கை! திரும்பவும் அசைந்தால் சுட்டுடுவோம்! 505 00:43:50,380 --> 00:43:52,591 வேணாம்! வேணாம், வேணாம், வேணாம்! 506 00:44:07,564 --> 00:44:10,734 கேபினுக்குள்ள யாரோ அசையறது தெரியுது. காத்திருங்க. 507 00:44:29,336 --> 00:44:32,631 இன்றிரவு பெர்லின் வீதிகளில் நடந்த மிகவும் சோகமான காட்சிகள். 508 00:44:32,714 --> 00:44:36,510 ஆனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது போலத் தெரிகிறது, குற்றவாளிகள் எல்லாரையும் 509 00:44:36,593 --> 00:44:38,637 பிடித்துவிட்டோம், அல்லது கொன்றுவிட்டோம் என்று ஜெர்மன் போலீஸ் சொல்கின்றனர். 510 00:44:38,720 --> 00:44:40,097 கதவை விட்டு தள்ளி நில்லு! 511 00:44:43,642 --> 00:44:45,352 வாங்கடா! 512 00:44:47,855 --> 00:44:48,856 தரையில படு! 513 00:44:48,939 --> 00:44:51,066 கீழே! கையைப் பின்னாடி கட்டு! 514 00:44:51,733 --> 00:44:53,151 - நகரு! - நகரு! 515 00:45:12,254 --> 00:45:15,007 சாமும் மார்ஷாவும் உயிரோடத்தான் இருக்காங்க. 516 00:45:17,050 --> 00:45:21,305 நீ சாதிச்சது எல்லாம், உன் சொந்தக் குடும்பத்தை அழிச்சதுதான். 517 00:45:27,227 --> 00:45:29,479 இங்க வாடா! இங்க வா! 518 00:45:29,563 --> 00:45:32,149 உன்னைக் கொன்னுடுவேன்! கொன்னுடுவேன்! 519 00:45:33,066 --> 00:45:34,443 இப்போ நான் யாருன்னு தெரியுமா? 520 00:45:35,194 --> 00:45:36,570 இப்போ நான் யாருன்னு தெரியுமா? 521 00:45:41,617 --> 00:45:44,036 இனிமே நான் குடிக்கவே மாட்டேன். 522 00:45:44,119 --> 00:45:45,287 இதத்தான் நீ பிராக்லயும் சொன்ன. 523 00:45:50,792 --> 00:45:52,920 சூப்பர். இப்போ நாம பஸ்ல ஏறப் போறோம். 524 00:45:53,003 --> 00:45:54,338 நாம வீட்டுக்குப் போலாம், ஜார்ஜ். 525 00:46:16,985 --> 00:46:18,487 பிணைக்கைதிகள் எல்லாரும் பத்திரமா இருக்காங்க. 526 00:46:20,113 --> 00:46:21,949 நன்றி, சான்சலர். 527 00:46:22,032 --> 00:46:24,451 இதுல நிறைய பேர் வேலை செஞ்சிருக்காங்க. 528 00:46:27,913 --> 00:46:31,458 என்னை மன்னிச்சுடுங்க, இன்னும் நிறைய வேலை பாக்கி இருக்கு. 529 00:46:34,336 --> 00:46:35,504 சரி, மக்களே. 530 00:46:35,587 --> 00:46:37,381 நெட்வொர்க் மறுபடியும் வேலை செய்யுது. 531 00:46:38,173 --> 00:46:39,591 இன்னைக்கு ராத்திரி நிறைய வேலை இருக்கும் போல. 532 00:46:41,635 --> 00:46:42,636 மிஸ் பெர்கர்… 533 00:46:45,264 --> 00:46:47,891 வீட்டுக்குப் போய் நல்லா தூங்கு. 534 00:46:47,975 --> 00:46:50,060 பரவாயில்ல, என்கிட்ட பிரெஷ் காஃபி இருக்கு. 535 00:46:50,143 --> 00:46:51,311 உன் ஷிஃப்ட் முடிஞ்சிடுச்சு. 536 00:46:52,312 --> 00:46:54,147 என் ஷிஃப்ட் முடிஞ்சு எட்டு மணிநேரம் ஆச்சு! 537 00:46:58,068 --> 00:46:59,486 ரொம்ப நன்றி. 538 00:47:57,461 --> 00:47:59,505 வெறி என் கண்ணை மறைச்சிருச்சு. 539 00:48:01,632 --> 00:48:02,674 நம்ம ரெண்டு பேருக்கும் தான். 540 00:48:09,473 --> 00:48:10,474 சாம்? 541 00:48:11,517 --> 00:48:12,518 ஒலிவியா. 542 00:48:13,435 --> 00:48:16,146 சரி. தொலைஞ்சு போன ஒரு பொருளைத் திருப்பிக் கொடுக்க வந்தேன். 543 00:48:22,277 --> 00:48:23,904 நீங்க அவங்களுக்கு ஃபோன் பண்ண விரும்புவீங்கன்னு நினைச்சேன். 544 00:48:29,451 --> 00:48:30,494 அவ பத்திரமா இருக்காளா? 545 00:48:31,954 --> 00:48:32,955 ஆமா. 546 00:48:35,999 --> 00:48:37,084 நன்றி. 547 00:48:47,678 --> 00:48:48,762 சாம்? 548 00:48:48,846 --> 00:48:49,847 ஆமா. 549 00:48:51,849 --> 00:48:53,183 ஆமா, நான் இங்கதான் இருக்கேன். 550 00:48:55,269 --> 00:48:56,436 நான் இங்கதான் இருக்கேன். 551 00:48:59,606 --> 00:49:03,110 கூட்டத்தில் நான் நின்றிருந்தால் 552 00:49:03,694 --> 00:49:06,947 என் பெயரைச் சொல்லி, உரக்கக் கூப்பிடு 553 00:49:07,781 --> 00:49:09,783 அந்நியர்களிடம் போகாதே 554 00:49:10,492 --> 00:49:13,620 பெண்ணே, என்னை அழை 555 00:49:15,873 --> 00:49:19,459 உன் கைகளை காற்றில் அசை 556 00:49:20,169 --> 00:49:23,505 நீ அங்கே இருப்பதை எனக்குத் தெரியப்படுத்து 557 00:49:24,214 --> 00:49:29,428 சந்தேகம் வரும்போது ஓ, பெண்ணே, என்னை அழை 558 00:50:06,840 --> 00:50:08,842 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்