1 00:01:02,229 --> 00:01:04,565 ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தால் நேரம் நீண்டு தான் போகும் என்பது தெரியும் அல்லவா. 2 00:01:05,691 --> 00:01:07,109 ஆனால் அவர்கள் இவ்வளவு தாமதமாக வருகிறார்களே. 3 00:01:07,109 --> 00:01:10,279 இன்னும் சில மணி நேரத்தில், நியூ யார்க்கின் சிறந்த மனிதர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள். 4 00:01:10,279 --> 00:01:15,617 சரி, அப்படியானால் நியூ யார்க்கின் மிகச் சிறந்தவள் ஏற்கனவே இங்கிருக்கிறாள் என்பேன் நான். 5 00:01:16,535 --> 00:01:18,161 என் ஆடையை கசக்கிடுவீர்கள். 6 00:01:20,998 --> 00:01:22,791 அட, நன்றி, திரு. கர்னெல், அவர்களே. 7 00:01:27,421 --> 00:01:29,339 சரி, மற்றவர்கள் யார் வந்தாலும் எனக்கு அக்கறை இல்லை. 8 00:01:29,923 --> 00:01:33,177 உண்மையில், திருமதி. பாராமோர் இதை மிக ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பதிலளித்திருக்கிறார்கள். 9 00:01:33,177 --> 00:01:34,970 ஆனால் நான் அவர்களைப் பற்றி எல்லாம் கவலைப்படப் போவதில்லை. 10 00:01:35,470 --> 00:01:38,765 சரி, பேட்டி, நம் இரு பெண்களுக்கும் வெற்றி. 11 00:01:38,765 --> 00:01:42,603 ஏன், நாளிதழ்களுக்குக் கூட டியூக்கின் வருகையைப் பற்றித் தெரிந்துள்ளது. 12 00:01:44,396 --> 00:01:46,398 நியூ யார்க்கில் ஒரு டியூக் இந்த வருடத்தின் காதல் கதை 13 00:01:48,066 --> 00:01:52,738 தியோ இல்லாத போது நீ எனக்கு நல்ல தோழனாக இருக்கிறாய். உனக்கு சலிப்பு தட்டுகிறதா? 14 00:01:53,739 --> 00:01:54,740 சற்றும் இல்லை. 15 00:01:54,740 --> 00:01:57,492 எனக்கு சலிப்பாக இருக்கிறது. வழக்கமாக நீ உற்சாகமாக இருப்பாயே. 16 00:01:58,285 --> 00:02:00,204 நான் எனக் கவனத்தை திசைத் திருப்பும் பேச்சுகளுக்காக காத்திருந்தேன், 17 00:02:00,204 --> 00:02:02,331 ஆனால், வழக்கத்துக்கு மாறாக, உனக்கு பேச எதுவுமே இல்லை போலும். 18 00:02:02,331 --> 00:02:07,503 களைப்பாக இருக்கிறேன். நள்ளிரவுகள், உங்களுக்குத் தான் தெரியுமே. 19 00:02:07,503 --> 00:02:09,253 சமீபமாக இல்லை, துரதிர்ஷ்டவசமாக. 20 00:02:11,131 --> 00:02:13,217 ஆனால், விஷயம் அதுவல்ல. நீ யாரையாவது காதலிக்கிறாயா? 21 00:02:15,385 --> 00:02:16,220 மன்னிக்க வேண்டும்? 22 00:02:16,220 --> 00:02:19,264 உன் தந்தையை சந்தித்தப் பிறகு, உன் தாயார் அப்படித் தான் தோள்களை வைத்துக்கொண்டார். 23 00:02:21,475 --> 00:02:25,020 நான் நினைப்பது சரியானால், நடனம் ஆடும்போது அடிப்பட்டிருக்கும். 24 00:02:25,020 --> 00:02:30,400 கை, மென்மையாக கேட்கிறேன், தொங்கும் தோள்களுடன் இங்கே என்ன செய்கிறாய்? 25 00:02:30,400 --> 00:02:31,485 நீ எதற்காகக் காத்திருக்கிறாய்? 26 00:02:32,653 --> 00:02:34,279 தியோ ஒரு டியூக், அப்பாவி. 27 00:02:34,279 --> 00:02:37,324 அவன் பொருத்தமான ஒரு பெண் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். 28 00:02:37,324 --> 00:02:39,743 ஆனால், உன் நிலை அப்படியில்லை என நீயே அறிந்திருப்பாய். 29 00:02:40,536 --> 00:02:41,745 சரி, நன்றி. 30 00:02:41,745 --> 00:02:43,580 அவள் உனக்குப் பொருத்தமானவளாக இருந்தால், 31 00:02:44,623 --> 00:02:48,585 உன் தந்தையைப் போல, நல்லது தானே நடப்பதற்காக மரியாதையாகக் காத்திருக்காதே. 32 00:02:48,585 --> 00:02:50,003 உன் தாயார் வாழ சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டாள். 33 00:02:50,838 --> 00:02:53,090 அந்த ஏரியின் அருகில் அவள் உன் தந்தையை சந்தித்தப்போது, 34 00:02:53,090 --> 00:02:55,467 அவர் அவளைத் தேடி வருவார் என்று அவள் காத்திருக்கவில்லை. 35 00:02:55,467 --> 00:02:57,678 அவள் தன் காதலை ஒரு கடிதத்தின் மூலம் தெரிவித்தாள், 36 00:02:57,678 --> 00:03:00,764 அங்கே ஏரிக்கரையிலேயே, அப்போதே எழுதி அவரிடம் கொண்டு கொடுத்துவிட்டாள். 37 00:03:00,764 --> 00:03:02,558 உன் பாட்டி அதிர்ந்து போனார். 38 00:03:03,058 --> 00:03:08,272 ஆனால் உன் தந்தை, சரி, அவர் அவள் வாழ்ந்த நாள் வரை அவளை நேசித்தார். 39 00:03:09,815 --> 00:03:10,816 நாங்கள் யாவரும் நேசித்தோம். 40 00:03:12,401 --> 00:03:15,028 காதல் இல்லாத வாழ்க்கை, அரைக்குறையாக வாழ்ந்த வாழ்க்கை தான். 41 00:03:15,529 --> 00:03:18,240 வயதான என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், கை, உறுதியாகச் சொல்கிறேன், 42 00:03:18,240 --> 00:03:21,743 உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது, வயோதிகம் வரும் முன் தைரியமாக வாழ்ந்து விடு. 43 00:03:22,703 --> 00:03:24,037 இப்போது, அந்த உருளைக்கிழங்கை இப்படிக் கொடு. 44 00:03:28,083 --> 00:03:29,376 - நன்றி. - வரவேற்கிறேன். 45 00:03:56,653 --> 00:04:00,657 {\an8}என் பிரியமுள்ள நேனிற்கு, 46 00:04:03,202 --> 00:04:06,955 உன் மேல் எனக்கிருக்கும் உணர்ச்சிகளை 47 00:04:10,375 --> 00:04:16,380 இனிமேலும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது. 48 00:05:01,301 --> 00:05:02,928 எடித் வார்ட்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 49 00:05:30,163 --> 00:05:33,959 சரி, சரி, சரி, இதை எந்த நேரம் என்று சொல்லலாம்? 50 00:05:33,959 --> 00:05:36,962 - ஓ, கண்ணே, வாம்மா. - ஹை, அப்பா. 51 00:05:36,962 --> 00:05:39,631 நேன். வாருங்கள், என் மகள்களே. 52 00:05:40,799 --> 00:05:43,177 வேடிக்கையான தன் கைநடனத்தைச் செய்யப் போகிறாளா? 53 00:05:43,677 --> 00:05:44,887 போங்க, போங்க. 54 00:05:45,596 --> 00:05:47,097 என் அருமை பெண்களே. 55 00:05:49,016 --> 00:05:51,268 என் அருமையான இரண்டு பெண்கள் வீட்டுற்கு வந்துள்ளனர். 56 00:05:54,897 --> 00:05:56,356 - கர்னெல். - ஆம். 57 00:05:57,941 --> 00:06:00,527 திருமதி. செயின்ட் ஜார்ஜ். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 58 00:06:00,527 --> 00:06:03,488 ஓ, ஆம், எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. 59 00:06:04,823 --> 00:06:06,700 நான் உன்னை அணைத்துக் கொள்ள வேண்டும்! 60 00:06:06,700 --> 00:06:08,660 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 61 00:06:09,703 --> 00:06:12,247 மேலும் ஜின்னி தனக்கென்று ஒரு லார்டை தேர்ந்தெடுத்துள்ளாள். 62 00:06:12,247 --> 00:06:14,666 மேடிசன் அவென்யூ! பார்த்துக்கொள்ளுங்கள். 63 00:06:16,335 --> 00:06:17,669 உங்கள் பெட்டிகளை இறக்குவோம். 64 00:06:17,669 --> 00:06:20,214 இல்லை, நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஆகையால் த கிராண்டில் தங்குகிறோம். 65 00:06:21,924 --> 00:06:23,926 த கிராண்ட். என்ன அற்புதம். 66 00:06:24,676 --> 00:06:27,346 - யாரோ வணக்கம் சொல்கிறார்கள். - அனைவரும் இங்கிருக்கிறார்கள். ஆ! 67 00:06:28,514 --> 00:06:30,766 - அவளை எடுத்துக்கொள்ள விருப்பமா? - ஆம். ஆமாம், கண்டிப்பாக. 68 00:06:30,766 --> 00:06:34,686 மிஸ் டெஸ்வாலி, என் பெண்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வை அமைத்துக் கொண்டனர், 69 00:06:34,686 --> 00:06:35,938 அதற்கெல்லாம் நீங்கள் தான் உதவினீர்கள். 70 00:06:37,147 --> 00:06:38,315 ஆம். ஆம். 71 00:06:38,315 --> 00:06:42,819 ஆம், நாங்கள் முடிந்ததைச் செய்வோம், நிச்சயமாக. ஆனால் உங்களுக்கு அது பழக்கமில்லை, தெரியும். 72 00:06:42,819 --> 00:06:44,655 எல்லா பொருட்களையும் நாங்களே தேர்ந்தெடுத்தோம், 73 00:06:44,655 --> 00:06:47,282 அதோடு, இந்த ஓவியங்கள் சறிதும் பழமையானவை எனச் சொல்ல முடியாது. 74 00:06:48,909 --> 00:06:50,911 - அந்த கூட்டில் இருப்பது ஒரு புறாவா? - ஆம். 75 00:06:50,911 --> 00:06:53,872 பல பேருடனும், உணவுடனும் நாம் ஒரு பார்ட்டி நடத்துகிறோம்... 76 00:06:53,872 --> 00:06:56,166 இல்ல, பார்ட்டி என்றால் என்னவென்று தெரியும். எதற்காக இந்த பார்ட்டி? 77 00:06:56,166 --> 00:06:57,417 உங்களை வீட்டிற்கு வரவேற்கத் தான். 78 00:06:57,417 --> 00:07:00,462 எங்களுக்கு பலரிடமிருந்து பதில்கள் வந்துள்ளன, நீ நம்பமாட்டாய். 79 00:07:00,462 --> 00:07:04,341 ஆஸ்டர் குடும்பம், கிளிஃப்பர்ட் குடும்பம். பாராமோர் குடும்பம் கூட வரலாம். 80 00:07:04,341 --> 00:07:06,051 ஆனால் அங்கே ஒரு கூட்டில் ஒரு புறா இருப்பதன் காரணம் என்ன? 81 00:07:06,051 --> 00:07:10,180 திருமதி கூப்பர்-லாக்கார்ட் ஒரு கொக்கை வைத்திருந்தார். இப்போது பறவைகளை வைப்பது நாகரீகம். 82 00:07:10,764 --> 00:07:12,391 அதோடு என் நிற அட்டவணை இன்று புறா நிறத்தைச் சார்ந்தது. 83 00:07:13,141 --> 00:07:15,394 அற்புதம். இப்போது, இந்த கூவும் பெண்களை பேசிக்கொள்ள விடுவோம், 84 00:07:15,394 --> 00:07:19,147 ஆண்களுக்கான பானத்திற்கு யார் தயாராக இருக்கிறீர்கள்? பெரியோர்களே. 85 00:07:19,147 --> 00:07:21,692 பெண்களே, சீக்கிரம், சீக்கிரம். நீங்கள் அனைவரும் குளிக்க வேண்டும். 86 00:07:21,692 --> 00:07:24,236 என்னை மன்னித்து விடுங்கள். பார்ட்டி இருக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது... 87 00:07:24,236 --> 00:07:27,364 இல்லை, எனக்கு சுவாரசியமாக உள்ளது. இந்த புறாக்களை, ஒரு கட்டத்தில் விடுவிப்பார்களா? 88 00:07:28,532 --> 00:07:30,242 அந்த திருமதி. யாரோ-யாரோ, அவருடைய கொக்கைக் கொண்டு வருவாரா? 89 00:07:31,952 --> 00:07:33,912 எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனத் தோன்றுகிறது. 90 00:07:36,039 --> 00:07:40,043 கண்ணே, தயவுசெய்து. எந்த நிமிடமும் விருந்தினர் வரத் தொடங்கலாம் 91 00:07:40,043 --> 00:07:41,837 - நான் உங்களை காண்பிக்க விரும்புகிறேன். - எதற்காக? 92 00:07:42,337 --> 00:07:44,006 சரி, ஏனெனில் நான் உங்களுடைய தாயார், அதனால். 93 00:07:48,927 --> 00:07:52,097 சரி, யார் குரலை தாழ்த்துகிறார் பாருங்கள். 94 00:07:52,931 --> 00:07:55,142 லிஸ்ஸி! 95 00:07:59,771 --> 00:08:01,064 - லிஸ்ஸி. - லிஸ்ஸி! 96 00:08:01,064 --> 00:08:03,442 - உங்கள் பிரிவை உணர்ந்தேன். ஹை. - ஹை. 97 00:08:03,442 --> 00:08:06,069 - ரொம்ப சந்தோஷம்! - என்ன செய்து கொண்டிருந்தாய்? 98 00:08:06,069 --> 00:08:08,155 - அல்லது யாருடன் செய்கிறாய் என்று கேட்க வேண்டுமா? - ஆமாம்! 99 00:08:08,155 --> 00:08:10,908 உன்னை எங்களிடமிருந்து பிரித்து இங்கே வைத்துள்ள அந்த பாக்கியம் செய்த மனிதர் யார்? 100 00:08:10,908 --> 00:08:12,576 எனக்கு ஆண்களைப் பற்றியோ, திருமணத்தைப் பற்றியோ அக்கறை இல்லை. 101 00:08:12,576 --> 00:08:15,621 லிஸ்ஸி? லிஸ்ஸியை காணவில்லையே? 102 00:08:17,372 --> 00:08:20,167 இப்போது, இங்கே ஒரு பார்ட்டி ஆரம்பிக்கப் போகிறது. 103 00:08:20,167 --> 00:08:22,211 எனவே, உங்கள் அனைவரையும் அலங்கரிக்கலாம். 104 00:08:22,794 --> 00:08:24,505 உங்களை விட்டில் பார்ப்பதில் மகிழ்ச்சி. 105 00:08:30,511 --> 00:08:31,929 பெரியோர்களே, நாம் தொடரலாமா? 106 00:09:08,841 --> 00:09:11,426 மிகவும் வருந்துகிறேன். மன்னிக்கவும். உங்களிடம் அனுப்ப ஒரு தந்தி கொடுத்ததாக நினைவு. 107 00:09:11,426 --> 00:09:13,178 - ஆம், சார். - ஆனால் எனக்கு அது திரும்ப வேண்டுமே. 108 00:09:13,679 --> 00:09:15,430 நான் அதை திரும்பிப் பெற வேண்டும். நான் அதைத் திரும்பிப் பெற... 109 00:09:15,430 --> 00:09:21,436 அதை அனுப்ப அவர்களுக்கு சிறிது காலம் ஆனது, சார். கட்டணமும் குறைவில்லை, நீண்டிருந்ததால். 110 00:09:22,604 --> 00:09:23,605 சரி தான். 111 00:09:24,773 --> 00:09:28,318 சரி. ஆம், அது நீண்டு தான் இருந்தது. 112 00:09:31,280 --> 00:09:32,364 மிக்க, மிக்க நன்றி. 113 00:09:33,615 --> 00:09:34,783 எனவே, மன்னிக்கவும்... 114 00:09:46,837 --> 00:09:49,131 நியூ யார்க் - கட்டணம் செலுத்தப்பட்டது 115 00:09:50,841 --> 00:09:51,717 கை 116 00:09:52,968 --> 00:09:55,220 {\an8}மிஸ் அன்னபெல் செயின்ட் ஜார்ஜ் நியூ யார்க் நகரம் 117 00:10:04,563 --> 00:10:08,734 எனக்கு மிக விருப்பமான இரு நடனக்காரர்கள். கேளுங்கள், போய் இன்புறுங்கள். 118 00:10:14,573 --> 00:10:15,574 டியூக்! 119 00:10:16,283 --> 00:10:19,953 அது வந்து, டியூக்கா இல்லை டூக்கா? 120 00:10:19,953 --> 00:10:23,332 எனினும், மது அருந்துகிறார்களா? தேனீர் இல்லாததற்கு மன்னியுங்கள். 121 00:10:25,250 --> 00:10:26,710 நேன் நம்முடன் சேர்ந்து கொள்வாளா? 122 00:10:27,753 --> 00:10:30,255 சந்தேகமில்லாமல் எங்காவது வம்பில் மாட்டியிருப்பாள். 123 00:10:30,255 --> 00:10:34,218 எனவே, எங்கள் குட்டி சுதந்திரப் பறவையை எப்படியப்பா சம்மதிக்க வைத்தாய்? 124 00:10:34,718 --> 00:10:37,346 அவள் நடக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து, யாருக்கும் அவளைப் பிடிக்க இயலவில்லையே. 125 00:10:37,846 --> 00:10:40,641 சரி, நான் அவளுக்கு ஈடாக பக்கத்தில் ஓட முடியும் என நம்புகிறேன். 126 00:10:40,641 --> 00:10:43,644 நன்று. அது மிக நல்ல சொற்கள். நேன் அதிர்ஷ்டசாலி தான். 127 00:10:48,607 --> 00:10:52,819 திருமதி. பாராமோர், வரவேற்கிறோம். உங்களுக்கு எவ்வளவு கோரல்கள் உள்ளதென்று தெரியும். 128 00:10:52,819 --> 00:10:54,613 நாங்கள் இதை தவற விட முடியாது. 129 00:10:55,113 --> 00:10:58,075 நீங்கள் புறாக்களை தேர்ந்துள்ளீர்கள், தெரிகிறது. 130 00:10:58,075 --> 00:11:02,246 ஆஸ்டர் குடும்பத்தினர், அவர்களுடைய பார்ட்டியில் கேனரிகளை வைத்திருந்தனர், பார்க்கவும் நன்றாகயில்லை. 131 00:11:03,163 --> 00:11:04,581 கேனரிகளா இல்லை ஆஸ்டர் குடும்பத்தினரா? 132 00:11:05,958 --> 00:11:06,959 இருவரும். 133 00:11:08,168 --> 00:11:12,589 நல்வாழ்த்துகள், திருமதி. செயின்ட் ஜார்ஜ். நீங்கள் நன்றாக முன்னேறி விட்டீர்கள். 134 00:11:28,105 --> 00:11:29,106 நேன்? 135 00:11:35,904 --> 00:11:36,905 நேன்? 136 00:11:38,115 --> 00:11:40,659 சரி, அப்போது நான் இங்கேயே காத்திருக்கப் போகிறேன், சரியா? 137 00:11:41,201 --> 00:11:42,786 நேன், நீ இன்று செய்யப் போவதில்லை என்றாய். 138 00:11:42,786 --> 00:11:46,957 இப்போது நான் இந்த வீட்டிற்கு வந்துவிட்ட பின், என்னால் முகத்தில் பாசாங்கு செய்ய முடியாது. 139 00:11:47,457 --> 00:11:48,458 பெண்களே. 140 00:11:49,209 --> 00:11:50,252 பெண்களே. 141 00:11:52,254 --> 00:11:53,797 சரி, எனக்கு அவர்களைப் பார்த்து சந்தோஷமாக உள்ளது. 142 00:11:54,506 --> 00:11:58,552 என் பங்கிற்கு, புறாக்கள் எல்லாம் மிக அதிகம். ஆனால் பேட்ரீஷியா மிகைப்படுத்த சளைப்பதில்லை. 143 00:11:59,344 --> 00:12:01,305 நியூ யார்க்கில், யார் உள்ளார்கள்? 144 00:12:01,305 --> 00:12:02,764 இதுவே நானாக இருந்திருந்தால்... 145 00:12:03,348 --> 00:12:05,184 - லிஸ்ஸி, நீ மட்டும்... - குடும்பத்தை ஏமாற்றாமல் இருந்தாலா? 146 00:12:05,184 --> 00:12:06,393 நம் அனைவரையும் ஏமாற்றி விட்டேனா? 147 00:12:06,393 --> 00:12:10,105 ஏதோ ஒரு காரணத்திற்காக, நலக் குறைவோ, அதிக உற்சாகமோ, 148 00:12:10,105 --> 00:12:13,734 நீ அங்கிருந்து வந்துவிடாமல் இருந்திருந்தால், நாமும் இது போன்ற பார்ட்டியை வைத்திருப்போம். 149 00:12:15,277 --> 00:12:20,240 சரி, நான் சொல்ல வந்தது, அன்று அந்த பால் நடனத்தின் படிக்கட்டுகளில் நீதான் அழகாக இருந்தாய். 150 00:12:20,240 --> 00:12:24,953 அனைவரும் அதைத் தான் சொன்னார்கள். நீ மட்டும் இன்னொரு முறை இங்கிலாந்து போக சம்மதித்தால்... 151 00:12:24,953 --> 00:12:27,039 - என்ன? - ஓ, ஆம், அவள் மறுக்கிறாள். 152 00:12:27,039 --> 00:12:29,333 இப்போது அவள் மகாராணியை சந்தித்ததால், அவளும் அப்படி என நினைக்கிறாள். 153 00:12:29,333 --> 00:12:31,960 - ஒருவேளை என் பெண்கள் மட்டும் இன்னும்... - இனியாக இருந்திருந்தால்? 154 00:12:31,960 --> 00:12:33,420 - அடக்கமாக இருந்திருந்தால்? - வசீகரமாக இருந்திருக்க வேண்டும்! 155 00:12:33,420 --> 00:12:36,215 அதோ, என்னைச் சொல்ல வைத்து விட்டாய். நான் சொல்லிவிட்டேன், வசீகரமாக இருக்க வேண்டும். 156 00:12:37,841 --> 00:12:39,843 - நான் ஜின்னியைத் தேடுகிறேன். - பொறு, லிஸ்ஸி. 157 00:12:41,595 --> 00:12:45,807 நான் சொல்ல வந்தது, நீங்கள் இருவரும் இந்த வழிமுறையை வரவேற்திருந்தீங்கன்னா, 158 00:12:45,807 --> 00:12:47,059 இது நம்ம கொண்டாட்டமாக இருந்திருக்குமே. 159 00:12:47,059 --> 00:12:48,602 ஆம். சரி, புறாக்கள் மட்டும் இல்லாமல், இல்லையா? 160 00:12:48,602 --> 00:12:50,354 அந்த புறாக்கள் எல்லாம் மிக அதிகம், சொல்லி விடுகிறேன். 161 00:12:52,689 --> 00:12:55,526 நாகரீகமான சமூகத்தில், பானத்தை உண்மையில் பருகுவதில்லை, தெரியுமா? 162 00:12:55,526 --> 00:12:58,570 நீங்க பானங்களைக் குடிக்கத் தான் செய்கிறீர்கள், அம்மா. 163 00:12:58,570 --> 00:13:01,657 மேபல், நானும் ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தேன், அப்போது எல்லாமே என்னவென்று தெரியுமென நினைத்தேன். 164 00:13:02,157 --> 00:13:05,077 ஆனால், நாளிடைவில் மெல்ல நமக்கு எதுவுமே தெரியாது என்று புரிய வருகிறது. 165 00:13:06,662 --> 00:13:09,373 மற்றவர்கள் மீண்டும் இங்கிலாந்து போகும்போது, நீ என்னுடன் இங்கேயே இருக்க வேண்டும். 166 00:13:09,373 --> 00:13:12,209 என்ன? இல்லை, நான் மாட்டேன். 167 00:13:12,209 --> 00:13:13,919 லிஸ்ஸி இங்கே இருந்தால், நீயும் இங்கு தான் இருக்க வேண்டும். 168 00:13:13,919 --> 00:13:16,839 வெவ்வேறு கண்டங்களில் மகள்களை பிரித்து வைத்தால், ஊர் என்ன பேசும்? 169 00:13:16,839 --> 00:13:19,258 உன் சகோதரி, நம் அனைவருக்குமான வாய்ப்பை கெடுத்துவிட்டாள். 170 00:13:23,428 --> 00:13:24,763 அம்மா, தயவுசெய்து, அவள்... 171 00:13:26,598 --> 00:13:27,850 நேன், என்ன ஆயிற்று? 172 00:13:31,979 --> 00:13:33,105 அனைவரும் அங்கே கீழே இருக்கிறார்கள். 173 00:13:36,817 --> 00:13:41,697 நான் உங்களுக்கு யாரும் இல்லை. நீங்கள் என் தாயார் இல்லை. 174 00:13:44,950 --> 00:13:47,995 நீங்கள் என்னிடம் கூறியது எல்லாம், என் வாழ்க்கை முழுவதுமே முற்றிலும்... 175 00:13:47,995 --> 00:13:51,415 ஜின்னி, நீ கீழே போ, தயவுசெய்து. 176 00:13:51,415 --> 00:13:53,584 என்னை மன்னித்துவிடுங்கள். இதற்கு நான் தான் காரணம். 177 00:13:53,584 --> 00:13:59,506 இதற்கு யார் காரணம் என்பது பொருட்டல்ல, கண்ணே. இப்போது, போய் உன் தருணத்தை இன்புறு. 178 00:14:04,011 --> 00:14:07,556 தோள்களை நிமிர்த்து. தலையை உயர்த்து. 179 00:14:28,952 --> 00:14:29,953 மன்னிக்க வேண்டும்! 180 00:14:31,788 --> 00:14:32,789 மன்னிக்க வேண்டும். 181 00:14:35,959 --> 00:14:37,044 நாம் சந்தித்ததாக நினைவில்லை. 182 00:14:40,506 --> 00:14:43,133 - எலிசபெத். லிஸ்ஸி. - மிகுந்த சந்தோஷம். 183 00:14:46,178 --> 00:14:48,096 நீ இங்கே இருக்கிறாயா. என்னை மன்னித்து விடுங்கள். 184 00:14:48,096 --> 00:14:51,099 - நான் வந்து... நீங்கள் சௌரியமாக உள்ளீர்களா? - ஆம். 185 00:14:51,099 --> 00:14:52,893 நான் எலிசபெத்திற்கு அறிமுகம் ஆனேன். 186 00:14:53,936 --> 00:14:57,731 ஆனால் உங்களுக்கு லிஸ்ஸியைத் தெரியுமே. அவள் ரன்னிமீடில் உங்கள் வீட்டில் இருந்தாளே. 187 00:15:01,151 --> 00:15:03,153 அந்த வாரயிறுதியில் அங்கு நிறைய பேர் இருந்தனர். 188 00:15:04,112 --> 00:15:05,113 ஆமாம், நான்... 189 00:15:05,113 --> 00:15:06,615 நாங்கள் எல்லா இடத்திலும் சுற்றினோம். 190 00:15:06,615 --> 00:15:08,492 அதாவது, கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். 191 00:15:09,368 --> 00:15:10,369 மன்னிக்கணும், நான்... 192 00:15:12,287 --> 00:15:13,288 என்னை மன்னித்துவிடுங்கள். 193 00:15:22,381 --> 00:15:26,260 நான் பிறந்திருக்கவே இல்லையெனில் அல்லது நான் இல்லாவிடில்... 194 00:15:26,260 --> 00:15:27,386 தயவுசெய்து வேண்டாம். 195 00:15:27,386 --> 00:15:31,139 அது இன்னும் சுலபமாக இருந்திருக்கும். உங்களுக்கும் தந்தைக்கும் நன்றாக இருந்திருக்கும். 196 00:15:32,349 --> 00:15:34,935 குடும்பம் முழுவதும் சேர்ந்து கிசுகிசுப்பதும், உந்துவதாகவும் இருந்திருக்கும், 197 00:15:34,935 --> 00:15:37,855 நான் அறைக்குள் வரும்போது பேச்சை நிறுத்த அவசியம் இராது. 198 00:15:37,855 --> 00:15:40,065 ஒருநாளும் அப்படி இருந்ததில்லை. 199 00:15:40,065 --> 00:15:45,779 நீங்கள் ஏன் பொய் சொன்னீர்கள்? நீங்கள் கண் விழித்த ஒவ்வொரு நாளும், தினமும் என்னிடம் பொய் உரைத்தீர்கள். 200 00:15:47,781 --> 00:15:52,494 மீண்டும் அடுத்த நாளும் இதே தானே தொடர்ந்தது. 201 00:15:52,995 --> 00:15:56,874 - கண்ணே, நாம் தவறுகள் செய்துள்ளோம். - நீங்கள் தவறுகள் செய்துள்ளீர்கள். 202 00:15:58,458 --> 00:16:00,961 நான் உங்கள் மகள் அல்ல. என் கண்கள் உங்களுடையது இல்லை. 203 00:16:00,961 --> 00:16:02,754 என் கைகள் உங்களுடையது இல்லை. என் கால்கள் உங்களுடையது இல்லை. 204 00:16:02,754 --> 00:16:05,716 நான் சிறுமியாக இருந்தபோது, அதனால் தானோ என்னவோ, அப்பாவுடன் நெருக்கத்தை உணர்ந்தேன். 205 00:16:06,300 --> 00:16:10,345 அவர் வீடு திரும்பியதும் எனக்கிருந்த மகிழ்ச்சியைக் கண்டு எனக்கே குற்ற உணர்வு இருந்தது. 206 00:16:11,263 --> 00:16:17,060 ஆனால், அவர் என் தந்தையாக இருந்ததால் தான், ஆனால் நீங்களோ எனக்குச் சொந்தமில்லை. எனக்கு யாருமில்லை. 207 00:16:18,103 --> 00:16:20,314 - தயவுசெய்து, பொறு... - இங்கு வந்தால் வலி குறையும் என நினைத்தேன். 208 00:16:21,148 --> 00:16:22,733 ஒருவேளை உங்களுடன் பேச முடிந்தால்... 209 00:16:24,318 --> 00:16:27,237 நியூ யார்க்கில் எல்லோரிடமும் என்னை மகளாகப் பறைசாற்றுகிறீர்கள், என்னை ஒரு பொய்யாக்குகிறீர்கள் 210 00:16:27,237 --> 00:16:28,780 அதனால் என்னால் உங்களை பார்க்கவும் முடியவில்லை. 211 00:16:28,780 --> 00:16:33,702 நாமே நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். கண்ணே, வா இப்படி உட்காரு. 212 00:16:34,912 --> 00:16:38,332 உன் தந்தை தியோவை கவனித்துக் கொள்கிறார். ஆகையால் நாம் பேசலாம். 213 00:16:41,293 --> 00:16:42,711 மேலும் தியோவிடமும் என்னை பொய் சொல்ல வைக்கிறீர்கள். 214 00:16:43,629 --> 00:16:45,631 நான் யார் என்றே தெரியாத போது அவர் என்னை எப்படி மணம் புரிய முடியும்? 215 00:16:45,631 --> 00:16:48,759 எனக்கே என்னை யாரென்று தெரியாத போது? என் வாழ்வே ஒரு பொய்யாகிவிட்டதே. 216 00:16:49,676 --> 00:16:50,969 நான் அவரிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். 217 00:16:54,306 --> 00:16:57,768 நேன்? நேன்? 218 00:17:07,486 --> 00:17:08,529 நேன். 219 00:17:11,281 --> 00:17:12,324 நேன்! 220 00:17:32,553 --> 00:17:33,929 திருமதி செயின்ட் ஜார்ஜ், நான் வந்து... 221 00:17:37,474 --> 00:17:40,143 - இதோ இங்குள்ளாயா. நான் சொல்ல நினை... - இப்போது வேண்டாம், லவீனியா. 222 00:17:44,314 --> 00:17:45,315 தியோ. 223 00:17:49,486 --> 00:17:51,071 இதோ இங்கே இருக்கிறாள், சிறந்த அழகி 224 00:17:51,071 --> 00:17:53,490 - மணப்பெண்ணின் தாயாரில் சிறந்த அழகி. - இல்லை, நிறுத்துங்கள். நேன் எங்கே? 225 00:17:53,490 --> 00:17:54,950 - தெரியுமா இப்போது தான் சரியான நேரம்... - நான் போகணும். 226 00:17:55,450 --> 00:17:58,245 பெரியோர்களே தாய்மார்களே, இந்த ஆண்டின் திருமணத்தைக் காணாததைப் பற்றி 227 00:17:58,245 --> 00:18:00,289 மனமுடைந்துள்ளீர்கள் எனத் தெரியும். 228 00:18:00,289 --> 00:18:01,957 ஆகவே அதற்கு ஈடுகட்டுவதற்காக, 229 00:18:01,957 --> 00:18:05,085 லார்ட் மற்றும் லேடி சீடனுக்கு, நியூ யார்க்கில் நடக்கும் 230 00:18:05,085 --> 00:18:08,338 இந்தப் பெரிய வரவேற்பில் என்னுடன் சேர்ந்து கொள்ளுங்கள். 231 00:18:12,968 --> 00:18:16,263 நியூ யார்க்கில் ஆடாதவரை, அதை முதல் நடனமாகக் கருத முடியாது. வா, ஆடுவோம். 232 00:18:21,727 --> 00:18:24,688 அட, வா, பேட்டி. எப்படி ஆட வேண்டும் என இந்தக் குழந்தைகளுக்குக் காட்டுவோம். 233 00:18:24,688 --> 00:18:26,148 டிரேசி, நான் உங்களுடன் பேச வேண்டும். 234 00:18:28,567 --> 00:18:29,651 என் மீதிருந்து கையை எடுங்கள்! 235 00:19:02,434 --> 00:19:03,560 அடப் பாவமே, பேட்டி. 236 00:19:03,560 --> 00:19:05,854 உனக்கு நடனமாட விருப்பமில்லை எனில், நீ சொல்லியிருந்தால்... 237 00:19:08,815 --> 00:19:09,983 நேனுக்குத் தெரிந்துவிட்டது. 238 00:19:17,533 --> 00:19:19,826 இது நல்லதென்று நினைத்திருப்பார்கள், இப்படி... 239 00:19:19,826 --> 00:19:23,872 நம்மைப் காட்சிபொருளாக ஆக்குவதா? போலியாக முதல் நடனத்தை நடத்துவதா? 240 00:19:25,457 --> 00:19:28,752 அதுவும் சரி தான் போலும், ஏனெனில் அமெரிக்காவில் அனைத்துமே நகல் தானே. 241 00:19:36,051 --> 00:19:37,052 டியூக்கிற்குத் தெரியுமா? 242 00:19:37,845 --> 00:19:39,346 அவரிடம் சொல்லப் போவதாகக் கூறுகிறாள். 243 00:19:39,346 --> 00:19:41,765 சரி, அப்படியென்றால் அவள் ஒரு முட்டாள். அவரைத் தொலைத்து விடுவாள். 244 00:19:41,765 --> 00:19:44,726 அவளைப் போன்ற ஒரு பெண்ணை ஒரு டியூக் மணம் புரியவே முடியாது. 245 00:19:44,726 --> 00:19:48,021 - அவள் கதி என்ன? என் கதி என்ன? - சரி தான். 246 00:19:50,315 --> 00:19:51,483 நான் சரி செய்கிறேன். 247 00:19:51,483 --> 00:19:55,112 டிரேசி, நீங்கள் சென்று அவளை சிரிக்க வைக்கும் வேடிக்கை விஷயம் இல்லை இது. 248 00:19:55,112 --> 00:19:57,906 அவளுடன் சேரந்து உலகத்தை அலசி விட்டு, 249 00:19:57,906 --> 00:20:00,951 நான் எப்போதும் எப்படி முட்டாள்தனமாகவும், தமாஷாகவும் நடக்கிறேன் என்று சிரிப்பதற்கு. 250 00:20:01,994 --> 00:20:03,829 இது முற்றிலும் உங்கள் தவறு தான். 251 00:20:03,829 --> 00:20:07,791 நீங்கள் நினைத்தப் படி எல்லாம் செய்ய முடியும் என்ற உங்கள் எண்ணத்திற்காக, 252 00:20:07,791 --> 00:20:10,002 நாம் எதையெல்லாம் தியாகம் செய்துள்ளோம் என்று தெரியுமா உங்களுக்கு? 253 00:20:10,002 --> 00:20:12,379 சரி, அதோ அங்கே நடக்கும் கொண்டாட்டத்தையும், 254 00:20:12,379 --> 00:20:14,548 அந்த ஆர்கிட் மலர்களையும், உணவையும், ஆடம்பரப் பொருட்களையும் பார்த்தால், 255 00:20:14,548 --> 00:20:16,884 யாரும் எதையும் தியாகம் செய்ததுப் போல எனக்குத் தோன்றவில்லையே. 256 00:20:16,884 --> 00:20:19,595 எனக்கு அந்த ஆடம்பரங்களைப் பற்றி ஒரு துளியும் அக்கறையில்லை, ஒரு துளியும்! 257 00:20:19,595 --> 00:20:21,471 எங்களைப் பொய் சொல்பவர்களாக ஆக்கிவிட்டீர்கள்! 258 00:20:23,640 --> 00:20:27,853 நான் இந்த குடும்பத்தை இணைத்து வைக்க படாத பாடு பட்டுள்ளேன், அதையே இனியும் தொடர்வேன். 259 00:20:29,396 --> 00:20:32,232 ஆகவே, எல்லாம் சரியாக ஆனால், அது என்னுடைய முயற்சியால் ஆனது தான். 260 00:20:37,654 --> 00:20:38,655 நான் நியூ யார்க்கை நேசிக்கிறேன்! 261 00:20:38,655 --> 00:20:40,199 நியூ யார்க் உங்களை நேசிக்கிறது. 262 00:20:41,491 --> 00:20:42,951 என்னால் இங்கே சுவாசிக்க முடிகிறது. 263 00:20:44,661 --> 00:20:45,787 நான் சுதந்திரமாக உணர்கிறேன். 264 00:20:46,705 --> 00:20:47,956 அப்படியே... 265 00:20:48,457 --> 00:20:51,043 நான் சிறுவனாக இருந்தபோது, என்னால் எப்படி ஓடி வர முடிந்ததோ, அப்படி 266 00:20:51,043 --> 00:20:52,044 நாள் முழுவதும் இப்படி இறுக்கமான 267 00:20:52,628 --> 00:20:54,463 பிரீச்சுகளை உடுக்கும் அவசியம் வரும் முன்பு, இருந்ததைப் போல். 268 00:20:55,047 --> 00:20:57,466 எனக்கு, உங்களை தொளதொளப் பான்டுகளில் பார்க்கப் பிடிக்கிறது. 269 00:20:58,300 --> 00:21:01,220 கடவுளே, உனக்கு ஞாபகம் இருக்கா திருமணத்திற்கு முந்திய இரவுகள்? 270 00:21:01,220 --> 00:21:02,971 அந்த மதிய நேரங்கள். 271 00:21:02,971 --> 00:21:04,181 அந்த காலை நேரங்கள். 272 00:21:05,933 --> 00:21:06,934 நாம் போகலாமா... 273 00:21:08,143 --> 00:21:09,686 செயின்ட் ஜார்ஜ் வீட்டிற்குள் போவோமா? 274 00:21:10,187 --> 00:21:13,607 சரி, கான்சீட்டா, இது அமெரிக்கா. 275 00:21:15,609 --> 00:21:16,777 சுதந்திரமானவர்களின் பூமி. 276 00:21:18,362 --> 00:21:19,363 பாருங்கள். 277 00:21:28,288 --> 00:21:30,374 - ஜின்னி. - அங்கே இருக்கிறாயா. 278 00:21:30,374 --> 00:21:33,085 - நாங்கள் நல்வாழ்த்துகளைச் சொல்ல வந்தோம். - நல்வாழ்த்துகள். 279 00:21:33,085 --> 00:21:38,048 நீ ஒரு ஆங்கிலேயரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய். ஒரு லார்டை, பெரிய விஷயம். 280 00:21:38,048 --> 00:21:40,008 - அதோட நாங்கள் கேள்விப்பட்டது... - நீங்கள் ஓடிவிட்டீர்களென! 281 00:21:41,635 --> 00:21:44,388 - மிகவும் ரொமான்டிக். - மிக அருமை. 282 00:21:44,388 --> 00:21:48,100 எனவே, இங்கிலாந்து எப்படி இருக்கிறது? நீங்கள் அரண்மனையில் இருக்கிறீர்களா? 283 00:21:48,100 --> 00:21:49,893 நிஜமாகவே எல்லாம் புராதனமாக உள்ளதா? 284 00:21:49,893 --> 00:21:53,981 ஆமாம், அது புராதனமாகவும் அழகாகவும் உள்ளது, பழையதாகவும் அழுக்காகவும் இல்லை. 285 00:21:53,981 --> 00:21:56,608 லார்டுகளுக்கும் லேடிகளுக்கும் மிகச் சிறப்பான ரசனை உள்ளது. 286 00:21:56,608 --> 00:21:59,111 ஜின்னி வெற்றி அடைவாள் என்று தெரியும். 287 00:21:59,903 --> 00:22:02,281 - சொல்லவில்லை என்றாலும், நினைத்தேன். - நினைத்தாயா. 288 00:22:02,281 --> 00:22:06,660 - நானும் அதே தான் சொன்னான். - அதோடு அந்த உடை ஜின்னி, மிகவும் அழகு. 289 00:22:06,660 --> 00:22:09,705 ரொம்ப அழகு. 290 00:22:11,164 --> 00:22:13,625 ஆம், ஏற்கனவே சொன்னதாக நினைக்கிறேன். 291 00:22:23,760 --> 00:22:26,513 லிஸ்ஸி, நீ என்ன சொல்ல வருகிறாய்? 292 00:22:26,513 --> 00:22:28,891 நாம் இங்கே அம்மாவுடன் இருக்க வேண்டும் எனில், நான் இறந்து விடுவேன். 293 00:22:28,891 --> 00:22:30,184 நீ இறக்க மாட்டாய். 294 00:22:30,184 --> 00:22:31,768 உனக்கு எப்படித் தெரியும்? இறக்கலாம். 295 00:22:32,477 --> 00:22:35,981 - இதெல்லாம் மிகவும் அறிந்தது போல் இருக்கு... - பாதுகாப்பாக. 296 00:22:37,191 --> 00:22:41,403 - ஆம். இப்போது... - அது வேறு. 297 00:22:46,158 --> 00:22:48,243 சீடன் அவளைத் தேர்ந்தார் என்பதாலா இன்னும் இப்படி? 298 00:22:51,663 --> 00:22:55,834 மேபல், உனக்கு எதைப் பற்றியுமே, சுத்தமாக எதுவுமே தெரியாததால் 299 00:22:55,834 --> 00:22:59,922 நீ எவ்வளவு தூரம் அம்மாவைப் போல இருக்கிறாய் என்பது உனக்குப் புரியவே புரியாது. 300 00:23:18,357 --> 00:23:19,650 முன் வாசல் 301 00:23:28,116 --> 00:23:31,078 - எனவே, நீங்கள் இன்னும் சொல்ல வேண்டும்... - பெரிய மாளிகையைப் பற்றியா. 302 00:23:32,621 --> 00:23:35,123 - உண்மையில் அது அரண்மனையே இல்லை. - அதை எப்படி அழைக்கிறார்கள்? 303 00:23:35,707 --> 00:23:38,502 டின்டாஜெல்... அரண்மனை. 304 00:23:41,713 --> 00:23:44,341 சரி, நிச்சயமாக செயின்ட் ஜார்ஜ் குடும்பத்தினர் அவர்களது அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்கள். 305 00:23:44,341 --> 00:23:49,513 அதாவது, சுற்றிப் பாருங்கள். இதெல்லாம் சற்று ரசனையில்லாமல் இல்லையா? இந்தப் புதுப் பணம்? 306 00:23:51,515 --> 00:23:54,101 சரி, அமெரிக்கா முழுவதும் புதுப் பணம் தான் என்று சொல்லலாம். 307 00:23:55,435 --> 00:23:57,437 என்னை மன்னியுங்கள், நான் என் மணப் பெண்ணைத் தேட வேண்டும். 308 00:24:19,668 --> 00:24:20,752 ரகசியம் 309 00:24:20,752 --> 00:24:23,005 அனுப்புனர் - கை துவார்ட் எஸ்குயர். 310 00:24:51,992 --> 00:24:55,037 அதில் ஏதாவது கட்டண பில்கள் இருந்து, நீ அதை கட்டிவிட நினைத்தால், நீ கட்டிவிடலாம். 311 00:24:55,037 --> 00:24:58,081 - தாராளமாக. - சில கடிதங்கள் உள்ளதாக ஜின்னி சொன்னாள். 312 00:25:04,713 --> 00:25:08,967 அவையெல்லாம் குழியைத் தோண்டி புதைத்தாகிவிட்டது என்பதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவெனில்... 313 00:25:09,718 --> 00:25:14,348 சரி, ஆனால் அவை மீண்டும் தலையைத் தூக்குகின்றன, அதனால் அவை நம்மை சந்தோஷமாக விடுவதில்லை. 314 00:25:14,890 --> 00:25:16,517 அது உன்னை எப்படி உணர்த்துகிறது? 315 00:25:17,142 --> 00:25:21,855 என் உணர்ச்சிகளைப் பற்றி பேச வேண்டுமா? சரி, உன் தாயிடமிருந்து இந்த குணம் வந்துள்ளது. 316 00:25:28,862 --> 00:25:30,155 உனக்கு உண்மைத் தெரிய வேண்டுமா? 317 00:25:31,573 --> 00:25:32,574 பழையது. 318 00:25:33,742 --> 00:25:36,078 நான் வயதான பழயதாகத் தான் உணர்கிறேன், நேன். 319 00:25:36,912 --> 00:25:38,622 இளமையில் அது புரியவே புரியாது என்று எனக்குத் தெரியும். 320 00:25:38,622 --> 00:25:40,958 ஆனால் நீ உன் தோழிகளுடன் ஓடியும், சிரித்தும், 321 00:25:41,667 --> 00:25:43,919 நடனமாடிக் கொண்டும் இருக்கும் போது கிடைக்கும் உணர்வு... 322 00:25:45,546 --> 00:25:46,630 சரி, ஒரு நாள்... 323 00:25:49,341 --> 00:25:51,385 அந்த உணர்வுக்காக நீ தேடிச் செல்வாய். 324 00:25:52,094 --> 00:25:53,303 என் வயதில் இருக்கும் யாரையும் கேட்டுப்பார், 325 00:25:53,303 --> 00:25:56,807 நாங்கள், நாங்கள் அனைவருமே, வளர்ந்தவர்களாக நடித்து வருகிறோம். 326 00:25:59,977 --> 00:26:02,020 என்னவென்றால், நம் வயிறு பெருத்து, 327 00:26:02,020 --> 00:26:04,398 தலை வழுக்கையாகும் போது, 328 00:26:04,398 --> 00:26:08,360 திடீரென ஒரு அழகான இளம் பெண் நம் முன் வந்து, நாம் செய்யும் வேடிக்கைக்கெல்லாம் சிரிக்கும் போது... 329 00:26:08,360 --> 00:26:11,238 சரி, எனினும், பார்ப்பதற்காக ஒரு ஆண் மகனைக் குற்றப்படுத்த முடியாது. 330 00:26:11,238 --> 00:26:13,365 அட, நீ பார்க்க வேண்டும் என்று தான் அவள் விரும்புகிறாள். 331 00:26:14,074 --> 00:26:15,200 ஆனாலும், அதே சமயத்தில், ஆம், 332 00:26:15,200 --> 00:26:18,287 உன் தாய் தான் இருப்பதிலேயே மிகவும் அழகான பெண், 333 00:26:18,287 --> 00:26:24,251 ஆனால், அவளுக்கும் சில சமயங்களில் களைப்பு, சலிப்பு உண்டு. எனவே, சில சமயங்களில்... 334 00:26:24,251 --> 00:26:27,129 அவர் எங்கே இருக்கிறார்? என் உண்மையான தாய். 335 00:26:30,215 --> 00:26:31,466 ஓ, என் கண்ணே... 336 00:26:33,510 --> 00:26:37,639 நீ பிறந்த சில நாட்களிலேயே அவள் காலமானதாக, அவளுடைய குடும்பம் தெரிவித்தது. 337 00:26:40,851 --> 00:26:41,852 அவர் யாராக இருந்தார்? 338 00:26:46,315 --> 00:26:47,316 நாம்... 339 00:26:48,108 --> 00:26:49,193 சரி, அவள் வந்து... 340 00:26:52,279 --> 00:26:54,198 அது வெகு காலத்திற்கு முன் நடந்தது. அதனால்... 341 00:26:54,198 --> 00:26:55,407 சரி, பார்க்க எப்படி இருந்தார்? 342 00:26:57,284 --> 00:26:59,369 கண்டிபாக அழகாக இருந்திருப்பாள். 343 00:26:59,369 --> 00:27:01,371 அதை மட்டும் என்னால் சொல்ல முடியும், ஏனெனில்... 344 00:27:01,371 --> 00:27:05,125 சரி, அதாவது, உன்னையேப் பார்த்துக் கொள். 345 00:27:07,336 --> 00:27:08,545 அதோடு, அவருடைய பெயர் என்னவாக இருந்தது? 346 00:27:15,886 --> 00:27:17,846 நான் அவளை சரியாகப் பார்க்கக்கூட இல்லை, நேன். 347 00:27:23,894 --> 00:27:25,312 நேன். நேன். 348 00:27:34,321 --> 00:27:40,285 நியூ யார்க்கை விட்டு, அம்மாவிடமிருந்து தள்ளி இருந்ததால், நான் இயல்பாக இருந்தேன். 349 00:27:40,285 --> 00:27:41,703 புரிகிறது. 350 00:27:42,329 --> 00:27:45,624 அதனால, நான் உங்க யாருடைய பிரிவையும் அதிகமா உணரவில்லை. 351 00:27:47,918 --> 00:27:49,169 எனவே... 352 00:27:49,837 --> 00:27:54,091 இங்கிலாந்தில் நம்மைப் போல யாராவது இருக்கிறார்களா? 353 00:27:55,175 --> 00:27:56,218 உன்னைப் போலவா? 354 00:27:58,303 --> 00:28:00,097 ஓ, சரி, நீ அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும். 355 00:28:02,266 --> 00:28:04,268 என்னைப் போல ஒருவரும் இல்லை. 356 00:28:40,846 --> 00:28:41,805 நன்றி. 357 00:28:57,946 --> 00:28:58,947 பெறப்பட்டது 358 00:29:01,074 --> 00:29:02,576 என் பிரியமுள்ள நேன், 359 00:29:03,869 --> 00:29:06,538 உன் மேல் எனக்கிருக்கும் உணர்ச்சிகளை இனிமேலும் இரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது. 360 00:29:08,081 --> 00:29:11,043 நான் பலவீனமானவன். அதோடு நான் மிகவும் குழம்பி உள்ளேன். 361 00:29:11,752 --> 00:29:15,088 ஆனால் நேன், உன் மீது எனக்கிருக்கும் காதல் வலவீனமானதும் இல்லை, குழம்பியதும் இல்லை. 362 00:29:18,509 --> 00:29:20,469 எனவே அவர் என்ன சொன்னார்? 363 00:29:21,720 --> 00:29:25,432 நான் இருவரிடமும் பேசினேன். அம்மா பேசவில்லை, அப்பா கேட்கவில்லை. 364 00:29:27,309 --> 00:29:31,563 அழகிய இளம் பெண்கள் அவருடைய கவனத்தை ஈர்க்கவே அவரைப் பார்ப்பார்கள் என்றார். 365 00:29:32,314 --> 00:29:33,690 அவரைக் குற்றப்படுத்த முடியாது என்றார். 366 00:29:34,691 --> 00:29:36,652 அம்மாவால் இதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது? 367 00:29:37,402 --> 00:29:40,572 பிரச்சினையை தள்ளிவைத்து காலத்தை நடத்துகிறார், போலும். 368 00:29:41,615 --> 00:29:43,700 திருமணம் என்பது அப்படித்தான் ஆகிவிடும் போலிருக்கிறது. 369 00:29:44,868 --> 00:29:48,163 அப்பா எப்போதுமே இப்படித்தான் மாறாமல் இருப்பார். 370 00:29:49,122 --> 00:29:52,793 ஆனால் நேன், அம்மா, நம் தாய், அவர்... 371 00:29:53,752 --> 00:29:55,879 அவர் உன்னை முற்றிலுமாக நேசிக்கிறார். 372 00:29:58,173 --> 00:29:59,633 உன் முகத்தை துடைத்துக்கொள், கண்ணே. 373 00:30:26,076 --> 00:30:29,162 நாளிதழ்கள் 374 00:30:30,747 --> 00:30:32,499 ஆங்கிலேய டியூக் ஒரு நியூ யார்க் மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கிறார் 375 00:30:33,584 --> 00:30:35,127 {\an8}சாராடோகா பெண் ஆங்கிலேய டியூக்கை மணக்கப் போகிறாள் 376 00:30:36,211 --> 00:30:39,464 டியூக் - திருமணம் - டச்செஸ் 377 00:30:46,013 --> 00:30:47,431 நீங்க பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும். 378 00:30:49,099 --> 00:30:50,642 நான் ஒரு உண்மையான நபரைப் போல. 379 00:30:52,102 --> 00:30:54,980 - மின்னி... - பாதுகாப்பாக மேலே உறங்குகிறாள். 380 00:30:59,026 --> 00:31:00,611 இங்கே இவ்வளவு உல்லாசமாக இருக்கிறாரே. 381 00:31:00,611 --> 00:31:03,405 அந்த குழந்தைகள் யாரும் உண்மையான உல்லாசத்துடன் இருக்கவே மாட்டார்கள். 382 00:31:08,827 --> 00:31:12,456 பிரிட்டில்சீ குடும்பத்தில் வளரும்போது, அது சாத்தியமே இல்லை எனத் தோன்றுகிறது. 383 00:31:13,332 --> 00:31:14,333 அவர்களை... 384 00:31:16,210 --> 00:31:17,753 அழித்து விடுவார்கள். 385 00:31:22,549 --> 00:31:24,343 நாம் அவருடைய குடும்பத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். 386 00:31:27,095 --> 00:31:28,889 லேடி மார்பிள், உங்கள் அனுமதியுடன் சொல்லலாம் எனில், 387 00:31:28,889 --> 00:31:32,851 லார்ட் ரிச்சர்ட் ஒரு ஆங்கிலேயர், மூத்தவர் மற்றும் ஒரு லார்ட். 388 00:31:34,186 --> 00:31:37,898 ஆம், ஆனால் அவரைப் பாருங்கள். இதை எப்படி அவர் விரும்பாமல் போவார்? 389 00:31:38,690 --> 00:31:42,194 அவர் வீட்டில் உள்ளபோது, அதை உணராமல் போகலாம், ஆனால் இங்கிலாந்தில் அவருக்கு அதிகாரம் உள்ளது. 390 00:31:43,904 --> 00:31:47,199 எந்த ஆங்கிலேயரும் அதிகாரத்தை விட்டு, சுதந்திரத்தை தேர்ந்தெடுக்க மாட்டார். 391 00:32:14,810 --> 00:32:16,436 நீ ஏதாவது சாப்பிட்டாயா? 392 00:32:45,299 --> 00:32:47,134 நீ சொல்வது சரிதான், கண்டிப்பாக. 393 00:32:49,136 --> 00:32:50,846 நான் தவறுகள் செய்துள்ளேன். பலதும். 394 00:32:51,972 --> 00:32:54,266 ஆனால் எந்த தாய் தவறு செய்யவில்லை என்றாலும் நான் நம்ப மாட்டேன். 395 00:32:55,350 --> 00:32:58,103 என்னால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்பட்டேன். நிச்சயமாக. 396 00:32:59,730 --> 00:33:01,732 நான் என் வயிற்றில் உன்னை சுமக்காமல் இருந்திருக்கலாம். 397 00:33:05,152 --> 00:33:10,449 ஆனால் உன்னைப் பார்த்த கணத்திலிருந்து, சத்தியமாக, உன்னை என் மனதில் வைத்துவிட்டேன். 398 00:33:21,835 --> 00:33:23,337 நீ என்னிடம் வந்த அந்த தினம் தான் 399 00:33:25,172 --> 00:33:29,843 என் வாழ்க்கையின் மிகவும் கடுமைனதும், அதே சமயம், சிறந்த தினமும் ஆகும். 400 00:33:33,472 --> 00:33:35,724 உன் தந்தை என் மனதை உடைத்து விட்டார். 401 00:33:38,519 --> 00:33:42,189 ஆனால் என்னுடைய இந்த பாழான மனம் உள்ளதே, வரப் போவதை அது அறியவில்லை. 402 00:33:44,191 --> 00:33:48,111 கண்களுடனும், குட்டி கைகளுடனும் நீ இருந்தாய். 403 00:33:48,820 --> 00:33:52,324 உன் தொடைகளோ, அவற்றை முழுவதும் என் கைகளில் பிடித்து விட முடியும். 404 00:33:54,660 --> 00:33:56,787 உனக்கு உள்ள கண்கள் என்னுடையது அல்ல என்று சொல்லாதே, 405 00:33:58,121 --> 00:34:01,792 ஏனெனில் நீ உறங்காமல் இருந்த எண்ணற்ற இரவுகளில் உன் கண்களையே நான் பார்த்திருந்தேன். 406 00:34:03,919 --> 00:34:08,422 அதோடு, உன் விரல்கள் என்னுடையவை தான், ஏனெனில் நான் அவற்றை மீண்டும் மீண்டும் முத்தமிட்டுள்ளேன். 407 00:34:09,882 --> 00:34:11,552 என் மனதினுள் நீ குடியிருக்கிறாய் 408 00:34:11,552 --> 00:34:17,558 ஆகையால் அதை இன்னும் பெரிதாகவும், பிரகாசமாகவும், முக்கியமாகவும் ஆனது. 409 00:34:20,435 --> 00:34:23,105 நீ இந்த உயரம் இருந்தபோது, நீ மேலே ஏற விரும்புவாய், 410 00:34:23,105 --> 00:34:25,023 அதை எப்படியோ செய்துவிடுவாய்... 411 00:34:26,608 --> 00:34:29,485 ஆனால் நான் என் முதுகைக் காட்டித் திரும்பிக் கொள்வேன், நீ என் பயத்தை பார்க்க வேண்டும் என்று. 412 00:34:30,779 --> 00:34:34,283 - ஆனால் நீ பயந்தாயா? - நீங்கள் நிஜமாகவா சொல்கிறீர்கள்? 413 00:34:34,949 --> 00:34:37,953 நான் ஒரு தாய், அதோடு நானும் ஒரு பெண். 414 00:34:37,953 --> 00:34:42,081 அந்த இரண்டுமே, தினம் தினம் பயங்கரங்களைத் தரும் விஷயம் தான். 415 00:34:43,375 --> 00:34:47,295 உன்னைப் பற்றிய கவலையில் என் முகத்திலிரு்து பயத்தை நீ அறிய விரும்பவில்லை. 416 00:34:48,213 --> 00:34:50,382 நீ தைரியசாலியாக இருக்க வேண்டும் என விரும்பினேன். 417 00:34:52,134 --> 00:34:54,094 அதனால் உனக்கு அது தெரிந்தால், நாங்கள் உன்னிடம் சொல்லியிருந்தால், 418 00:34:55,971 --> 00:34:57,723 நீ ரகசியத்தை வைத்திருக்கும் நேனாக மாறியிருப்பாய். 419 00:34:59,266 --> 00:35:01,852 சந்தேகங்களுடன் கூடிய நேன். தயக்கங்களுடனான, வேறு நேன். 420 00:35:03,729 --> 00:35:06,356 நான் நீ நேனாக இருப்பதைத் தான் விரும்பினேன். 421 00:35:06,982 --> 00:35:10,736 ஒருவேளை அது தவறாக இருக்கலாம், ஆனால் நான் காலப் போக்கில் அதற்கு ஈடுகட்டி வந்தேன். 422 00:35:11,778 --> 00:35:13,780 அப்பா, இந்த உலகில் அனைவருமே வளர்ந்தவர்கள் போல் 423 00:35:13,780 --> 00:35:15,949 நடிக்கிறார்கள் எனச் சொல்கிறார். 424 00:35:16,700 --> 00:35:18,202 நிச்சயமாக, அவர் சொல்வதும் சரி தான். 425 00:35:19,494 --> 00:35:22,414 எனினும், நம்மில் சிலர், மற்றவர்களை விட இன்னும் கடினமாக நடிக்க வேண்டியுள்ளது. 426 00:35:23,665 --> 00:35:25,083 அதோடு கண்ணே, தியோவைப் பொருத்தவரை... 427 00:35:26,668 --> 00:35:28,462 அது பொய் போலத் தோன்றலாம், 428 00:35:28,462 --> 00:35:32,216 அகராதியிலும் இதற்கு பொய் என்றே பெயர் இருக்கலாம், பொய் என்றும் கூறலாம், ஆனால்... 429 00:35:34,551 --> 00:35:35,677 நீ அவரை இழந்துவிடுவாய். 430 00:35:37,012 --> 00:35:40,265 நீ உண்மையாக நேசிக்கும் ஒருவரைக் காக்க விரும்பும் போது, அது பொய்யாகாது என்பது என் கருத்து. 431 00:35:40,265 --> 00:35:43,602 முதுகைக் காட்டித் திரும்பிக் கொண்டு நம் பயத்தை மறைப்பது தவறாகாது. 432 00:35:44,144 --> 00:35:48,023 ஆனால் தியோ மிகவும் நேர்மையானவர். அவர் அப்பாவைப் போல் இல்லை. 433 00:35:49,191 --> 00:35:50,984 மேலும், நீங்கள் பொய்கள் வந்துகொண்டே இருந்தாலும் அதைப் 434 00:35:50,984 --> 00:35:53,237 - பொருட்படுத்தாமல், சந்தோஷமாக இருக்கலாம், ஆனால்... - நான் சந்தோஷமாக இல்லை. 435 00:35:55,030 --> 00:35:57,407 மேலும், கண்ணே, நீயும் ஜின்னியும் அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். 436 00:35:58,283 --> 00:36:00,702 இவை எதையுமே பார்த்து நான் சந்தோஷமாக இல்லை. 437 00:36:04,581 --> 00:36:05,707 ஆனால் அது என்னைப் பொருத்தது. 438 00:36:07,876 --> 00:36:10,045 வாழ்நாள் முழுவதும் பொய்களை சுமக்க எனக்குத் தேவையில்லை. 439 00:36:11,755 --> 00:36:16,051 மேலும் என்னை தைரியமாக்க நீங்கள் முதுகைத் திருப்பினீர்கள் ஆனால் இப்போது நான் தைரியசாலி தான். 440 00:36:19,346 --> 00:36:23,767 பெரும்பாலும். ஆனால் இன்னும் உங்கள் முதுகு திரும்பியே உள்ளது. 441 00:37:27,414 --> 00:37:31,835 இதோ வந்துவிட்டாள், ஒருவழியாக, எனக்குரியவள். 442 00:37:33,420 --> 00:37:38,050 இப்போது நமக்கு ஒரு டியூக்கும் அவருடைய "டியூக்கெஸ்"ஸும் உள்ளார்களா. 443 00:37:39,051 --> 00:37:43,222 எனவே, இப்போது நீங்கள் இருவரும் நடனமாட வேண்டும். வாருங்கள், நாங்கள் காத்திருந்தது, போதும். 444 00:37:52,564 --> 00:37:55,609 ஏன், கர்னெல், இந்த இளைஞர்களுக்கு 445 00:37:55,609 --> 00:37:58,195 நம்மைப் போன்ற வயோதிகர்களுடன் இருக்க ஆர்வம் இருக்கும் என ஏன் நினைக்கிறீர்கள்? 446 00:37:58,195 --> 00:38:01,073 அவர்கள் இளைஞர்கள், மற்றும் காதலர்கள். நீங்கள் அதை நினைவில் வைக்க வேண்டும். 447 00:38:02,658 --> 00:38:06,119 இப்போது, அனைவரும் வாருங்கள், இது ஒரு நியூ யார்க் பார்ட்டி என்பதை காட்டுவோம். 448 00:38:36,692 --> 00:38:37,860 நேன் அவரிடம் சொல்லப் போகிறாள். 449 00:38:40,863 --> 00:38:43,198 மேலும் அவள் செய்வது முறிறிலும் சரியே என்று எனக்குத் தோன்றுகிறது. 450 00:38:53,417 --> 00:38:55,752 தியோ, நிதானம், நிதானம், நிதானம். 451 00:38:59,047 --> 00:39:02,176 நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? ஏதாவது நடந்துவிட்டதா? 452 00:39:14,646 --> 00:39:17,524 நான் உன்னை நேசிக்கிறேன், நேன். 453 00:39:20,527 --> 00:39:21,528 உனக்கு நான் வேண்டுமா? 454 00:39:23,989 --> 00:39:25,407 நீ என்னை விரும்புகிறாயா? 455 00:39:28,118 --> 00:39:29,411 நீ அதைச் சொல்ல வேண்டும். 456 00:39:30,537 --> 00:39:33,165 ஆமாம். ஆம், நான் விரும்புகிறேன். எனக்கு நீங்கள் வேண்டும். 457 00:39:56,438 --> 00:39:57,648 இங்கே வா. 458 00:40:04,821 --> 00:40:07,699 - நான் உன் பிரிவை உணர்ந்தேன். - மிகவும் மோசமாக இருக்கவில்லையா? 459 00:40:08,575 --> 00:40:14,373 பார், காத்திருந்தேன்... கண்ணே, மண வாழ்க்கை எப்படியுள்ளது? 460 00:40:16,083 --> 00:40:18,085 அதாவது, நான் சந்தோஷமாக இருக்கிறேன். 461 00:40:18,085 --> 00:40:20,504 நாங்கள் சேர்ந்துள்ள போது, நாங்கள் மட்டும் சேர்ந்துள்ள போது, 462 00:40:20,504 --> 00:40:23,590 - என்னைப் பார்த்துக்கொள்வதை மட்டும் செய்கிறார். - மிக்க சந்தோஷம். 463 00:40:23,590 --> 00:40:25,759 - அவர் என்னை நடத்துவது... - ஒரு லேடியைப் போலா? 464 00:40:25,759 --> 00:40:27,052 - கண்டிப்பாக. - நிஜமாகவே அப்படி நடத்துகிறாரா? 465 00:40:27,052 --> 00:40:30,973 கண்டிப்பாக. பார், நான் லேடி சீடன். 466 00:40:44,152 --> 00:40:47,406 நீ என்னை தனியாக விட்டுச் சென்றாய். மீண்டும். 467 00:40:47,406 --> 00:40:49,408 தெரியும், என்னை மன்னியுங்கள். நான் பேசிக்கொண்டிருந்தேன்... 468 00:40:49,408 --> 00:40:51,535 உன் வீட்டில், உன் குடும்பத்துடன், 469 00:40:51,535 --> 00:40:54,413 உள்ளாய், அவர்களும், நான் இப்போது உணர்கிறேன், பழக எளியவர்கள் அல்ல. 470 00:40:58,917 --> 00:41:02,045 எனக்கு இந்த வேண்டாத ஆடம்பரம், நூறு முறை நான் யார் எனச் சொல்வதும், சலிக்கிறது. 471 00:41:02,045 --> 00:41:04,131 நீ என்னை திருமணம் செய்துகொண்டது, என் பட்டத்திற்காக தானா? 472 00:41:05,382 --> 00:41:09,261 இல்லை, கண்டிப்பாக இல்லை. நான் உங்களை நேசிக்கிறேன். 473 00:41:09,761 --> 00:41:12,639 இந்த பார்ட்டி என்னை அவமானப் படுத்துகிறது. அவமானம். 474 00:41:13,515 --> 00:41:15,058 இந்த மிகக் கேவலமான நிகழ்ச்சி, 475 00:41:15,058 --> 00:41:17,895 நம்மை கௌரவப்படுத்துவதற்காக என்றால், இது மிக மோசமான ரசனையைக் காட்டுகிறது. 476 00:41:17,895 --> 00:41:20,189 நான் இன்னும் கொஞ்சம் மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்தேன். 477 00:41:21,565 --> 00:41:24,276 - எனக்குப் புரியவில்லை. - நீ என் மனைவியான உன்னிடமிருந்தும், 478 00:41:25,319 --> 00:41:26,320 உன் தாயாரிடமிருந்தும். 479 00:41:27,112 --> 00:41:30,032 இப்படித் தான் என்னையும் என் பட்டத்தை ஊருக்கெல்லாம் விளம்பரப்படுத்தி, 480 00:41:30,032 --> 00:41:33,952 தன் மாப்பிள்ளையை நியூ யார்க்கிற்கு அறிமுகம் செய்வாரா. கேவலப்படுத்துவதாக உள்ளது. 481 00:41:34,578 --> 00:41:38,081 இல்லை, நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. நான் மிகவும் வருத்தப் படுகிறேன். 482 00:41:38,081 --> 00:41:41,168 உன் தாயாரும் என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனச் சொல்வதில் எனக்கு எந்த ஆனந்தமும் இல்லை. 483 00:41:43,504 --> 00:41:46,173 இந்த பார்ட்டிக்கு. அந்த பொய்யான முதல் நடனத்திற்கு. 484 00:41:46,173 --> 00:41:49,009 நாம் இப்போது பார்த்தோமே. அதற்கெல்லாம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 485 00:41:50,886 --> 00:41:53,597 ஆனால் நீங்கள் உண்மையாகவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறீர்களா? 486 00:41:54,181 --> 00:41:55,933 நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் உனக்குச் சொல்லப் போவதில்லை, வர்ஜீன்யா. 487 00:42:06,652 --> 00:42:07,819 தியோ. 488 00:42:09,655 --> 00:42:12,574 நாம் உள்ளே போவதற்கு முன், உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். 489 00:42:15,118 --> 00:42:20,249 - நான் இதை உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைத்து... - நீ சந்தோஷமாக இருக்கிறாயா? அதாவது, என்னுடன். 490 00:42:20,958 --> 00:42:22,292 நிச்சயமாக. 491 00:42:22,292 --> 00:42:24,711 அப்படியென்றால், அதைக் கெடுத்து விடும்படியாக எதையும் என்னிடம் சொல்லாதே. 492 00:42:28,340 --> 00:42:29,341 நிஜமாகவா? 493 00:42:30,843 --> 00:42:32,052 நாம் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வோம். 494 00:42:33,804 --> 00:42:34,930 அது உனக்கு பரவாயில்லையா? 495 00:43:07,880 --> 00:43:08,881 அம்மா. 496 00:43:10,757 --> 00:43:15,179 இந்த பார்ட்டி, இந்த நிகழ்ச்சி எல்லாம், இந்த மொத்த மதியமே, அது... 497 00:43:22,728 --> 00:43:25,272 ஆம், இது ஒரு மோசமான ரசனையுடன் நிகழ்த்தப்பட்ட ஆடம்பர விமர்சனம். 498 00:43:29,610 --> 00:43:32,321 இப்போது இங்கிலாந்து சென்றுள்ளீர்கள், அதனால் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என அறிவீர்கள். 499 00:43:32,321 --> 00:43:34,072 ஆனால், ஜேம்ஸிற்கு நீங்கள் அவமரியாதை செய்துவிட்டீர்கள் என எனக்குத் தோன்றுகிறது. 500 00:43:35,616 --> 00:43:39,036 நீங்கள் அவரை சங்கடப்படுத்திவிட்டீர்கள், அதோடு என்னையும் தான். 501 00:43:39,036 --> 00:43:43,957 எனவே, நீங்கள் மன்னிப்பு கேட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். 502 00:43:43,957 --> 00:43:46,376 ஜின்னி, என் அன்பே, உனக்கு என்ன ஆயிற்று? 503 00:43:48,128 --> 00:43:50,255 நாம் அனைவரையும் மீண்டும் நடனமாட விட வேண்டும் என நினைக்கிறேன், இல்லையா? 504 00:43:50,255 --> 00:43:55,052 திருமதி. செயின்ட் ஜார்ஜ், இந்த அன்பார்ந்த பார்ட்டிக்கு மிக்க நன்றி. 505 00:43:55,719 --> 00:43:58,472 நீங்கள் என்னையும் என் மனைவியையும் மிகவும் நன்றாக கவனித்தீர்கள். 506 00:43:59,556 --> 00:44:03,393 ஆம், கவனித்தோம், நிச்சயமாக. இது ஜின்னியின் வீடு. 507 00:44:05,896 --> 00:44:08,857 ஒருவேளை கடல்கடந்துச் சென்றது உன்னை சற்றே தடம் மாறச் செய்ததோ. 508 00:44:10,400 --> 00:44:11,527 இந்த பார்ட்டி நடத்தியதன் நோக்கம், 509 00:44:11,527 --> 00:44:14,530 ஏன் நம் வாழ்வின் நோக்கமே, சொல்லப் போனால், நாம் சந்தோஷமாக இருப்பது தான். 510 00:44:19,201 --> 00:44:20,619 நான் விரைவிலேயே ஒரு டச்செஸ்ஸாகப் போகிறேன் 511 00:44:21,370 --> 00:44:24,581 அதனால் அரச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் சந்திப்பேன். 512 00:44:24,581 --> 00:44:27,417 ஆனால், நான் அவர்களைப் பார்த்து அதிக அளவில் வியப்படைய மாட்டேன், 513 00:44:27,417 --> 00:44:31,004 ஏனெனில் நம்முடைய தாயார்... 514 00:44:34,716 --> 00:44:37,928 என் தாயார் ஒரு மகாராணி. 515 00:44:51,608 --> 00:44:53,318 தோள்கள் நிமிர்ந்திருக்க வேண்டும். தலை உயர்ந்திருக்க வேண்டும். 516 00:45:03,537 --> 00:45:04,997 நிச்சயமாக நீ சொல்வது சரி தான், ஜின்னி. 517 00:45:06,039 --> 00:45:09,251 இந்த பார்ட்டியைப் பற்றிய அனைத்துமே ஒரு பொருட்டல்ல, மட்டமான ரசனை உடையதும் தான். 518 00:45:10,669 --> 00:45:13,922 உண்மையில், இந்த அறை முழுவதிலும் நான் பெருமைக் கொள்வது என் பெண்களாகிய உங்களைப் பற்றி தான். 519 00:45:15,924 --> 00:45:17,092 உங்கள் இருவரையும் பற்றி. 520 00:45:18,218 --> 00:45:19,887 ஆனால் இத்தனை வருடங்களாக மற்றவர்கள் நினைப்பதைப் பற்றியே கவலைப்பட்டேனே 521 00:45:19,887 --> 00:45:23,140 என்பதற்காக, வருத்தமாகவும், அவமானமாகவும் உள்ளது எனக்கு. 522 00:45:23,891 --> 00:45:27,769 அதுவும் சாராடோகாவில் ஒரு இரவு நான் ஒரு சுவர் ஏறியபோது, அறியாமல் எனது 523 00:45:27,769 --> 00:45:30,480 சிறப்பில்லாத உள்ளாடையை மேயருக்கு காண்பித்ததற்கும் இப்போது வருந்தலாம். 524 00:45:32,733 --> 00:45:37,696 இப்போது, லவீனியா, இந்த பார்ட்டியில் இனி இருப்பது நமக்குத் தகாது. 525 00:45:37,696 --> 00:45:40,282 - ஆனால் இது உன் பார்ட்டி ஆயிற்றே. - நாம் இந்த அறையை விட்டுப் வெளியேறுகிறோம். 526 00:45:40,282 --> 00:45:41,491 - சரி. - வந்து... 527 00:45:51,293 --> 00:45:53,504 எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறாயா, லவீனியா? 528 00:45:53,504 --> 00:45:55,422 தெரியவில்லையே. எதுவும் தெரியவில்லை. 529 00:45:59,551 --> 00:46:02,262 டிரேசி எப்போதுமே நல்லவராக இருக்கவில்லை என நினைக்கிறேன். 530 00:46:02,262 --> 00:46:05,849 மிகவும் அரிதாகத் தான் அப்படி உள்ளனர். நான் என்ன செய்வது? 531 00:46:08,936 --> 00:46:11,063 நாம் செய்ய முடிந்ததெல்லாம், அவர்களை விட வளர்ந்து விடுவது தான். 532 00:46:28,455 --> 00:46:31,458 நான் நியூ யார்க்குக்கு உடனே மாறிவிட முடியாது. 533 00:46:32,167 --> 00:46:36,505 ஏன் முடியாது? தயவுசெய்து, டிக்கி. நாம் இங்கேயே இருந்துவிடலாமே. 534 00:46:37,089 --> 00:46:40,008 என்னால் அந்த வீட்டில் இருக்க முடியாது. என்னால் முடியாது. 535 00:46:41,593 --> 00:46:44,304 அதோடு உங்கள் குடும்பத்தினரால் மின்னி அழிந்து போவதை அனுமதிக்க மாட்டேன். 536 00:46:49,601 --> 00:46:51,520 உங்களுக்கு வேறு வழி இல்லை என தீர்மானித்தால், அது உங்கள் முடிவு. 537 00:46:51,520 --> 00:46:53,146 ஆனால் எனக்கு வேறு வழி உள்ளது. 538 00:46:57,901 --> 00:47:00,112 நான் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைத் தான் இப்போது தீர்மானிக்க வேண்டும். 539 00:47:34,646 --> 00:47:40,736 அம்மா, நான் மீண்டும் பெண்களுடன் இங்கிலாந்து செல்கிறேன். ஜின்னியுடன் இருப்பதற்காக. 540 00:47:42,321 --> 00:47:46,366 முடிந்தால், எனக்கென்று ஒரு கணவரைத் தேடுகிறேன். அதோடு, மேபலும் என்னுடன் வரலாம். 541 00:47:46,366 --> 00:47:48,660 ஓ, லிஸ்ஸி, அப்படித் தான் செய்ய வேண்டும். 542 00:47:50,329 --> 00:47:51,705 ஓ, நான் உன்னை நம்புகிறேன். நிச்சயம். 543 00:47:53,582 --> 00:47:55,417 - நன்றி. - கண்டிப்பாக. 544 00:47:57,961 --> 00:48:01,548 எனவே, டச்செஸ் நேன், நாம் எப்போது மீண்டும் இங்கிலாந்து போகிறோம்? 545 00:48:02,257 --> 00:48:04,384 ஓ, லிஸ்ஸி, நல்ல வேளை. 546 00:48:05,719 --> 00:48:06,970 அம்மா, முன்னாடி... 547 00:48:08,055 --> 00:48:11,266 நீ நலமாக இருக்கிறாயா, மேபல்? நீ நலம் தானே? 548 00:48:12,851 --> 00:48:15,604 - என் பெண்கள் நலமாக இருக்க விரும்புகிறேன். - ஆம், நிச்சயமாக. 549 00:48:16,230 --> 00:48:17,981 ஆனால் அம்மா, கேளுங்கள். மேலே... 550 00:48:17,981 --> 00:48:21,860 இப்போது, மேபல் உன் மேலாடையை சரி செய்துகொள், அத்துடன் விஷயம் முடிகிறது. 551 00:48:21,860 --> 00:48:26,156 நீ பாதி மேலாடையை மட்டும் போர்த்தியிருந்தால், உனக்கென்று ஒரு கணவனை எப்படித் தேடுவது? 552 00:49:42,441 --> 00:49:44,443 அதனால, நேன் இன்னும் அவரிடம் சொல்லவில்லை என புரிந்து கொள்வதா? 553 00:49:44,443 --> 00:49:46,361 நம் குடும்பத்தில் ஒரு டியூக் வருவதற்கு இன்னும் சாத்தியம் உள்ளதா? 554 00:49:53,577 --> 00:49:57,831 என்னால் இனியும் அதைத் தொடர முடியாது, டிரேசி. இது முடிந்து விட்டது. 555 00:50:02,461 --> 00:50:05,547 நீ தனியாக இருந்தால் யாராவது உன்னை ஏறெடுத்தும் பார்ப்பார்கள் என நினைக்கிறாயா? 556 00:50:05,547 --> 00:50:07,966 அல்லது உனக்கு ஏதாவது வாய்ப்பு தான் கொடுப்பார்களா? 557 00:50:08,467 --> 00:50:10,802 ஏன், அவர்கள் உன்னை மீண்டும் சாராடோகாவில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள், பேட்டி. 558 00:50:12,137 --> 00:50:15,557 அதோடு சரி, நீ எவ்வளவு குழம்புவாய் என உனக்கே தெரியும். 559 00:50:18,727 --> 00:50:19,895 நீ பிழைக்க வழியே இல்லை. 560 00:51:11,530 --> 00:51:16,201 அவள் கேட்டாள், நிச்சயமாக. அவளுடைய நிஜமான தாயாரைப் பற்றி. 561 00:51:20,497 --> 00:51:21,999 நீங்கள் அவளிடம் உண்மையைச் சொல்லவில்லையா? 562 00:51:22,958 --> 00:51:26,420 இல்லை, நிச்சயமாக இல்லை. என்னை யார் என்று நினைத்தாய்? 563 00:52:37,157 --> 00:52:39,159 தமிழாக்கம் அகிலா குமார்