1 00:00:08,717 --> 00:00:11,803 பான்ஃபயர்களை சுற்றி உட்கார என்றே, இங்கிலாந்தில் ஒரு இரவு உள்ளது நன்றாக இருக்கிறது. 2 00:00:12,304 --> 00:00:14,139 எப்போதும் கைஸ் விழாவைக் கொண்டாடுகிறீர்களா? 3 00:00:14,139 --> 00:00:16,558 ஒவ்வொரு வருடமும். அது எப்போதும் ஒரு பெரிய விழா. 4 00:00:17,267 --> 00:00:18,477 எல்லோரும் எங்கே? 5 00:00:18,477 --> 00:00:21,605 இங்கு நம்மைப் பார்க்க யாரும் வராதது ஆச்சரியமாக உள்ளது. வேறு விருந்தினர்களும் இல்லையே. 6 00:00:21,605 --> 00:00:23,482 வழக்கமாக இது ஆர்ப்பாட்டம் மிகுந்த விழா. 7 00:00:24,983 --> 00:00:29,071 அதோ வந்துவிட்டார்! கை! உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்கள் பிரிவை உணர்ந்தோம். 8 00:00:30,614 --> 00:00:33,700 இதோ வந்துவிட்டார், நியூ யார்க்கிலிருந்து, திரும்பவும் புதிதாக. 9 00:00:33,700 --> 00:00:36,036 வருக. உங்கள் இருவருக்கும். 10 00:00:38,038 --> 00:00:39,081 மற்ற அனைவரும் உள்ளே இருக்கிறார்கள், எனவே... 11 00:00:39,081 --> 00:00:43,669 உங்கள் வேலையாட்கள் யாரையும் காணவில்லை. எங்கள் ஆட்கள் எங்கே... 12 00:00:43,669 --> 00:00:46,129 ஓ, ஆம், மேலே. நான் அவர்களுக்குக் காண்பிக்கிறேன். 13 00:00:50,050 --> 00:00:51,051 நேன்? 14 00:00:55,681 --> 00:00:57,808 நாங்கள் அனைவரும் சிலவற்றைப் பற்றி கேட்காமல் இருக்க... 15 00:00:57,808 --> 00:00:58,892 வேலையாட்கள் அனைவரும் எங்கே? 16 00:00:59,893 --> 00:01:03,313 தெரியுமா, இந்த வீட்டில் வேலை நடக்கும்வரை, இப்போது நான் மட்டும்தான் இங்கே இருக்கிறேன். 17 00:01:05,440 --> 00:01:06,567 நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா! 18 00:01:06,567 --> 00:01:09,444 - நாங்கள் அந்த புதிரைக் காணச் சென்றிருந்தோம். - மேபலுக்கு புதிர் எங்கேயென தெரியவில்லை. 19 00:01:09,444 --> 00:01:12,239 அவர் எப்படி வெளியே வரப்போகிறார் எனக் காண ஆவலாக இருக்கிறேன். 20 00:01:12,239 --> 00:01:16,034 சரி, எனவே, பான்ஃபயர் இரவு என் தாயாருக்கு மிகப் பிடித்த விஷயமாக இருந்தது. 21 00:01:16,743 --> 00:01:20,414 பல மாதங்களாக திட்டமிட்டு, ஒரு மாபெரும் விருந்து, நூற்றுக்கணக்கான விருந்தினர்கள். 22 00:01:20,414 --> 00:01:23,250 இவர்கள்தான் அனைவருமா? 23 00:01:23,250 --> 00:01:25,043 ஆம், நான் மிக நெருங்கியவர்களை மட்டும் அழைத்தேன். 24 00:01:25,043 --> 00:01:27,129 ஆனால் என்னால் அதையும் செய்யாமல் விட முடியவில்லை. 25 00:01:27,129 --> 00:01:30,632 எனவே, நாம் எல்லோருமே ஈடுபட வேண்டும், ஆனால் அதுதானே இதன் மூலக் கருத்தே, இல்லயா? 26 00:01:30,632 --> 00:01:32,426 நெருப்புக்கான விறகை வெட்டி வரும்படி அம்மா எப்போதும் எங்களை பணித்திடுவார். 27 00:01:32,426 --> 00:01:34,386 என்னால் உதவ முடியும். என்னால் விறகை பிளக்க முடியும். 28 00:01:37,681 --> 00:01:39,641 கண்டிப்பாக, பெண்கள் விறகு வெட்டுவதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். 29 00:01:41,518 --> 00:01:42,644 அதை எப்படி நீங்கள் எப்படி சொல்ல முடியும்? 30 00:01:43,145 --> 00:01:45,647 வழக்கமாக டிரீக்கிள் டாஃபி செய்வார்கள், எனவே சமையலறையில் இருப்பார்கள் என கூற வந்தேன். 31 00:01:45,647 --> 00:01:48,734 வெளியே நின்று விறகு வெட்டுவதைவிட அது இன்னும் நன்றாக இருக்கும் என நான் நினைத்தேன்... 32 00:01:48,734 --> 00:01:50,861 நல்லது. நாம் வேலைகளை மாற்றிக்கொள்வோம். 33 00:01:54,907 --> 00:01:57,326 நீங்க... எல்லாம் நலம்தானே? 34 00:02:01,163 --> 00:02:02,497 நான் ஏதாவது தவறாக சொல்லிவிட்டேனா? 35 00:02:05,375 --> 00:02:07,169 இன்றைய தினம் உங்களுக்கு உண்மையில் கஷ்டமாக இருக்கலாம். 36 00:02:08,211 --> 00:02:11,256 கண்டிப்பாக உங்கள் தாயாரின் நினைவுகள், உங்களை... 37 00:02:14,676 --> 00:02:15,677 நிறுத்து! 38 00:02:18,472 --> 00:02:21,225 நீ வந்து... 39 00:02:24,228 --> 00:02:25,229 நான் வந்து... 40 00:02:34,446 --> 00:02:36,907 உன் இடது கையை கீழே போடணும். 41 00:02:38,033 --> 00:02:39,368 இப்படி. அதன் பிறகு... 42 00:02:44,081 --> 00:02:45,082 இன்னும் கீழ் குனிய வேண்டும். 43 00:02:45,082 --> 00:02:46,834 அதன் பிறகு அதை இப்படி எடுத்து வீசி, கீழே கொண்டு வர வேண்டும். 44 00:02:46,834 --> 00:02:47,918 சரி. 45 00:02:48,460 --> 00:02:52,881 சுற்றி வீசணும். அதன் பிறகு கீழே கொண்டு வர வேண்டும். 46 00:02:52,881 --> 00:02:54,174 சரி. 47 00:02:54,174 --> 00:02:55,509 - சரியா? - சரி. 48 00:02:56,134 --> 00:02:58,345 இன்னும் சற்று நளினமாக வீச வேண்டும். 49 00:03:16,530 --> 00:03:18,448 - ரொம்ப நல்லது. - ஆம். 50 00:03:24,121 --> 00:03:25,706 அதனால்தான் நான் அதை வைத்துக்கொள்ள தீர்மானித்தேன். 51 00:03:29,543 --> 00:03:30,627 இந்த வாரயிறுதி. 52 00:03:33,005 --> 00:03:34,173 எனக்கு அவரை நினைவுகொள்ள விருப்பம். 53 00:03:35,340 --> 00:03:39,845 அந்த நினைவின் வலி, நான் அதை உணர விரும்புகிறேன். 54 00:03:39,845 --> 00:03:44,349 ஏனெனில் நான் மறந்துவிடும் வலியைக் கண்டு பதறுகிறேன். 55 00:03:48,896 --> 00:03:49,897 அவர் எப்படிப்பட்டவராக இருந்தார்? 56 00:03:51,315 --> 00:03:55,319 அவர் சுடர் நெருப்பு. அப்படித்தான் தோன்றும். 57 00:03:57,029 --> 00:04:02,701 அவர் ஆற்றலே உருவானவர். அன்பு நிறைந்தவர். எதிர்பார்ப்பை மிஞ்சியவர். 58 00:04:03,452 --> 00:04:07,331 இருப்பினும், அவர் தன் நிலையை குறைக்க விரும்பவில்லை. 59 00:04:07,331 --> 00:04:12,544 தந்தை அவரிடமிருந்து அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவர்கள் சமமானவர்கள். உற்ற நண்பர்களாக இருந்தனர். 60 00:04:13,086 --> 00:04:16,255 அதைத்தான் நான் எப்போதும் செய்ய விரும்பினேன் எனத் தோன்றுகிறது. 61 00:04:16,255 --> 00:04:19,885 நான்... நான்... 62 00:04:25,974 --> 00:04:26,975 மன்னிக்கணும். 63 00:04:27,601 --> 00:04:29,144 மன்னிப்புக் கேட்க வேண்டாம். 64 00:04:29,144 --> 00:04:32,898 நான் அங்கே திரும்பிப் போகணும்... மன்னிக்கணும். 65 00:05:26,243 --> 00:05:27,786 எடித் வார்டன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது 66 00:05:49,141 --> 00:05:50,142 இது முடிந்ததா? 67 00:05:51,268 --> 00:05:53,645 சரி, இதைக் கண்டுப்பிடிக்க என் தாயாரின் தந்திரம் உனக்கு நினைவில்லையா? 68 00:05:56,732 --> 00:05:59,067 இல்ல! ஜின்னி, நிறுத்து! 69 00:05:59,067 --> 00:06:01,570 - அடக் கடவுளே! - அது தயாராகிவிட்டதா எனப் பார்க்கணும், லிஸ்ஸி. 70 00:06:01,570 --> 00:06:03,655 எனவே, இங்குதான் எல்லாம் நடக்க இருக்கிறதா? 71 00:06:04,948 --> 00:06:05,949 ஹே. 72 00:06:09,203 --> 00:06:13,457 நான் சமையலில் தேர்ந்தவள் இல்லை, ஆனால், அதைப் பார்த்தால் டிரீக்கிள் டாஃபி போல இல்லை. 73 00:06:14,124 --> 00:06:15,292 சரி, அது மார்ஷ்மெல்லோ. 74 00:06:16,084 --> 00:06:19,922 அம்மா இதை நெருப்பில் சுட்டுத் தருவார். நிச்சயமாக இது உங்களுக்குப் பிடிக்கும். 75 00:06:32,935 --> 00:06:34,144 சுவையாக உள்ளது. 76 00:06:34,144 --> 00:06:36,104 நான் அதை சற்று மூடி வைத்துவிட வேண்டும். 77 00:06:52,496 --> 00:06:53,497 மன்னிக்கணும். ஈ. 78 00:06:57,459 --> 00:06:59,044 கோடைக்கால இறுதி வந்துவிட்டதால், அவை போயிருக்க வேண்டும், 79 00:06:59,044 --> 00:07:01,463 ஆனால் எப்போதுமே ஒன்றோ, இரண்டோ சுற்றி வரும். 80 00:07:03,841 --> 00:07:04,842 தொந்தரவு. 81 00:07:23,318 --> 00:07:24,945 மன்னிக்க வேண்டும், இது வந்து... 82 00:07:26,071 --> 00:07:27,072 லேடி ஹோப்லெ. 83 00:07:27,823 --> 00:07:30,826 முன் வாசல் திறந்து இருந்தது, மேலும் கேட்பதற்கும் யாரும் இல்லை... 84 00:07:30,826 --> 00:07:33,412 ஜீன்? நீ இங்கே என்ன செய்கிறாய்? 85 00:07:34,329 --> 00:07:39,001 அந்த அழைப்பைப் பார்த்தபோது, இது பெரிய பார்ட்டி எனத் தோன்றியது ஆனால் சீரமைப்பு நடக்கிறதா? 86 00:07:40,961 --> 00:07:42,713 நான் தாமதமாக வந்துவிட்டேனா? அல்லது சீக்கிரமா? 87 00:07:44,756 --> 00:07:45,841 இன்றைய முக்கிய விருந்தினர்! 88 00:07:46,592 --> 00:07:47,926 உங்களை பார்க்க சந்தோஷமாக உள்ளது, லேடி ஹோப்லெ. 89 00:07:47,926 --> 00:07:51,180 உங்கள் வரவை ஆவலாக எதிர்பார்ப்பதாக கை சொல்லிக்கொண்டிருந்தான். 90 00:07:51,847 --> 00:07:55,267 இப்போது, ஜீன் அவன் உங்கள் சாமான்களை எடுத்துச் செல்ல உதவவில்லையா? 91 00:07:55,267 --> 00:07:57,895 அவன் அரக்கன்தான், நிச்சயமாக, ஆனால் போகப் போக சரியாகிவிடும். 92 00:07:59,521 --> 00:08:01,481 மன்னிக்கணும், நேரத்தை கவனிக்கவில்லை. 93 00:08:02,191 --> 00:08:03,734 தியோ, நீ எனக்கு உதவி செய்வாயா? 94 00:08:04,651 --> 00:08:05,652 மிக்க நன்றி. 95 00:08:18,207 --> 00:08:20,334 சரி, சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அது சங்கடமாக இருந்தது. 96 00:08:20,334 --> 00:08:22,920 இது மிக நெருங்கியவர்களுக்கு மட்டும் எனத் தெரிந்திருந்தால், நான் அவரை அழைத்திருக்க மாட்டேன். 97 00:08:22,920 --> 00:08:24,171 என் சார்பில் நீ எதற்காக மக்களை அழைக்கிறாய்? 98 00:08:24,171 --> 00:08:26,173 நீ அவளை இன்னும் நன்றாக அறிய விரும்புவாய் என நினைத்தேன். 99 00:08:26,173 --> 00:08:27,508 நீ அவளை அறிந்துக்கொள்ள விரும்பவில்லையே. 100 00:08:27,508 --> 00:08:29,468 சரி, நான் தெரிந்து முட்டாள், நிச்சயமாக. 101 00:08:29,468 --> 00:08:31,595 அதோடு, ஜீன் மிக அழகாக இருக்கிறாள், நீ அதை உணரவில்லையா? 102 00:08:31,595 --> 00:08:35,515 அழகுதான், அதுவும், மிக மரியாதைக்குரிய குடும்பத்திலிருந்து வந்தவள். 103 00:08:36,475 --> 00:08:38,268 நீ ஏன் அவளை அதிகமாக அறிந்துகொள்ள விரும்பவில்லை? 104 00:08:38,894 --> 00:08:40,979 உனக்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. 105 00:09:00,832 --> 00:09:02,668 எனவே, இது உங்கள் அறையாக இருக்கும். 106 00:09:05,337 --> 00:09:06,964 உங்களுக்கு, அது சௌகரியமாக இருக்கும் என நம்புகிறேன். 107 00:09:07,965 --> 00:09:08,966 மிக்க நன்றி. 108 00:09:09,633 --> 00:09:11,927 எனவே, நான், உங்களைக் கீழே சந்திப்பேன், இல்லையா? 109 00:09:12,761 --> 00:09:15,764 நாம் மற்றவர்களுடன் சேரும் முன், உங்களால் சுற்றிக் காண்பிக்க முடியும்? 110 00:09:15,764 --> 00:09:17,140 நான் கீழே உள்ள இடத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். 111 00:09:17,140 --> 00:09:20,018 மன்னிக்கணும், எனக்கு பான்ஃபயருக்கு முன் செய்ய இன்னும் பல வேலைகள் காத்திருக்கின்றன... 112 00:09:20,018 --> 00:09:22,020 - கண்டிப்பாக! - அதுவும் இப்போது நான் மட்டும்தான்... 113 00:09:22,020 --> 00:09:23,605 - பல வேலைகளையும் பார்க்க வேண்டும்... - ஆமாம். 114 00:09:25,524 --> 00:09:27,734 - சரி, நான் வந்து... - ஆம், பிளீஸ். 115 00:09:33,824 --> 00:09:37,452 எனவே, தெளிவாகப் புரிந்துகொள்ளக் கேட்கிறேன், இந்த கைதான் பான்ஃபயர்களை ஆரம்பித்தானா? 116 00:09:37,452 --> 00:09:40,289 இல்லை, அவர் பாராளுமன்றத்தை பான்ஃபயரால் எரிக்கப் பார்த்தான். 117 00:09:40,956 --> 00:09:42,833 - அது சரிதானா? - இல்லை. 118 00:09:42,833 --> 00:09:45,169 அப்போது பான்ஃபயர் எல்லாம் இல்லை, இப்போதுதான் இப்படி கொண்டாடுகிறோம். 119 00:09:45,169 --> 00:09:47,212 பாராளுமன்றத்தை எரிக்க நினைத்ததை எதற்காக கொண்டாட வேண்டும்? 120 00:09:47,212 --> 00:09:49,256 அவனால் அப்படிச் செய்ய முடியவில்லையே. 121 00:09:49,840 --> 00:09:53,677 ஆங்கிலேயர்களுக்கே உள்ள குணம் அது. அவன் அதில் தோற்றான். எனவே நாம் கொண்டாடுவோம். 122 00:09:53,677 --> 00:09:56,722 ஜீன் சௌகரியமா இருக்க வேண்டும். அவர் சற்று சங்கடப்பட்டதுபோல இருந்தது. 123 00:09:57,514 --> 00:09:59,141 நிச்சயம் கை அவரை நன்றாக கவனித்திருப்பான். 124 00:09:59,141 --> 00:10:01,476 அந்த பெட்ரூமை அவருக்கு நன்றாகச் சுற்றி காண்பிக்கிறான் என நினைக்கிறேன். 125 00:10:05,397 --> 00:10:07,566 கைதான் அழைத்திருக்கிறார் என ஏன் ஜீனை எண்ண வைத்தீர்கள்? 126 00:10:07,566 --> 00:10:10,319 சரி, நான் அழைத்ததாகத் தெரிந்திருந்தால், அவள் கண்டிப்பாக வந்திருக்க மாட்டாள். 127 00:10:10,319 --> 00:10:11,904 அதோடு, நான் அவளை விரும்பவில்லை என்பதற்காக, 128 00:10:11,904 --> 00:10:13,739 கைக்கு அவள் பொருந்த மாட்டாள் என்ற அவசியம் இல்லையே. 129 00:10:13,739 --> 00:10:16,867 நீங்கள் அவளை விரும்பவில்லை என்பதால் அவளை வேறு ஒருவரிடம் மாற்ற, அவள் தொப்பியில்லையே. 130 00:10:16,867 --> 00:10:20,329 - இல்லை, இல்லை, தெரியும். நான்... - அழையா விருந்தினராக வருவது, அவமானத்தைத் தரும். 131 00:10:21,038 --> 00:10:24,041 சரி, இன்னொரு சீசன் திருமணமாகாமல் இருக்கும் அவமானத்தைவிட, இது பரவாயில்லை. 132 00:10:24,750 --> 00:10:26,418 நீ ஏன் இதைப் பற்றி இவ்வளவு ஆத்திரப்படுகிறாய்? 133 00:10:26,418 --> 00:10:28,462 பாரு, கை என் உற்ற நண்பன். 134 00:10:29,838 --> 00:10:31,757 நம்மைப் போல அவனும் சந்தோஷமாக இருக்க வேண்டாமா? 135 00:10:31,757 --> 00:10:34,635 ஆம், கண்டிப்பாக. அதைவிட ஜீன் சந்தோஷமாக இருக்க வேண்டும். 136 00:10:34,635 --> 00:10:36,178 அப்போது என்னதான் பிரச்சினை? 137 00:10:43,101 --> 00:10:44,102 ஹை. 138 00:10:47,189 --> 00:10:49,441 - ஹலோ. - மன்னிக்கணும். 139 00:10:51,318 --> 00:10:53,612 - நான் நினைக்கிறேன் மின்னி, வந்து... - மிஸ் டெஸ்வாலி சொன்னார் மின்னி... 140 00:10:58,325 --> 00:11:00,953 நீ கிராமத்திற்கு, விடுமுறைக்குப் போயிருப்பதாக நான் மற்றவர்களிடம் சொல்லியிருக்கிறேன். 141 00:11:01,662 --> 00:11:04,498 ஏனெனில் நீயும் மின்னியும் வேறு இடத்திற்குப் போகிறீர்கள் என 142 00:11:05,374 --> 00:11:07,835 உண்மையைச் சொல்வது உகந்ததல்ல என நினைத்தேன். 143 00:11:07,835 --> 00:11:10,921 ஆமாம், நிச்சயமாக. எல்லாம் நல்லதுதான். 144 00:11:12,881 --> 00:11:14,591 ஆனால் அடுத்த வாரமும் நான் வந்து பார்க்கலாமா? 145 00:11:14,591 --> 00:11:17,469 - ஆம், எப்போது வேண்டுமானாலும். வீட்டிற்கு... - உங்களுக்கு எது சௌகரியமோ அப்படி. 146 00:11:17,469 --> 00:11:19,930 அவள் காலையில் சிற்றுண்டி சாப்பிடும்போதும் நீங்கள் வரலாம். 147 00:11:19,930 --> 00:11:21,640 எல்லா இடத்திலும் சிந்தியிருக்கும், அது உறுதி. 148 00:11:21,640 --> 00:11:23,433 சரி, அப்போது நீ சிந்துவதை நிறுத்திவிடு. 149 00:11:45,455 --> 00:11:49,293 நான் தப்பிக்கும் வழியைத் தேடினேன். ஆனால் நீ ஏற்கனவே சிறந்த இடத்தைப் பிடித்துவிட்டாய் எனத் தெரிகிறது. 150 00:11:49,918 --> 00:11:51,211 இன்னொருவருக்கும் இடமுள்ளது. 151 00:12:09,188 --> 00:12:10,272 மிகவும் தெய்வீகமாக இல்லை? 152 00:12:17,070 --> 00:12:20,782 நிறைவாக உணர்வதுதான் மிகச் சிறப்பான உணர்ச்சி, உங்களுக்கு அப்படித் தோன்றவில்லையா? 153 00:12:23,327 --> 00:12:24,578 நல்ல உணர்வுதான். 154 00:12:27,539 --> 00:12:32,628 ஆனால் காதல் என்னாவது? 155 00:12:35,589 --> 00:12:39,009 எப்போதும் நிறைந்து இருப்பதால்தான், காதலிப்பது இதைவிட சிறந்ததாக நினைக்கிறாய். 156 00:12:39,635 --> 00:12:41,178 எங்களுக்கு அது வேறு மாதிரி. 157 00:12:41,178 --> 00:12:42,262 அமெரிக்கர்களா? 158 00:12:43,096 --> 00:12:44,097 பெண்கள். 159 00:12:44,598 --> 00:12:48,227 நாங்க பசியுடன் இருக்க கற்பிக்கப் படுகிறோம். 160 00:12:48,727 --> 00:12:52,689 பசியின் வலியைப் புறக்கணிப்பதற்கு, ஏனெனில் சிறிய உருவமாக இருந்தால், 161 00:12:52,689 --> 00:12:55,984 ஆடவர்கள் எங்களை கவனிக்கக்கூடும். 162 00:12:56,818 --> 00:12:58,320 அதில் அர்த்தமே இல்லையே. 163 00:13:00,364 --> 00:13:01,782 காணப்படுவதற்காக மறைவதா? 164 00:13:03,992 --> 00:13:04,993 துளியும் அர்த்தம் இல்லை. 165 00:13:07,746 --> 00:13:11,458 எவ்வளவு நிம்மதி என்று சொல்ல முடியாது, ஏனெனில் ஒரு கணவருக்காக காத்திருப்பதை நிறுத்திவிட்டேன். 166 00:13:12,876 --> 00:13:15,587 அவ்வளவு நிம்மதியும், இனிப்புகளும். 167 00:13:18,131 --> 00:13:22,427 சரி, எது உன்னை அப்படிச் செய்ய வைத்ததோ, அதுவே உனக்கு சந்தோஷத்தையும் தருவது நல்லதுதான். 168 00:13:34,147 --> 00:13:35,274 எனக்கு சந்தோஷமா என்று உறுதியாக சொல்லத் தெரியவில்லை. 169 00:13:39,361 --> 00:13:42,406 ஒரு ஆடவர் இருந்தார்... 170 00:13:47,786 --> 00:13:51,790 நான் அவரை நம்பினேன், ஆனால் நம்பியிருக்கக் கூடாது. 171 00:13:52,749 --> 00:13:53,750 அவர்... 172 00:14:00,007 --> 00:14:03,510 அவர் என்னை அவமானப்படுத்திவிட்டார். பயமுறுத்திவிட்டார். 173 00:14:06,722 --> 00:14:08,307 மேலும் அதை எப்படி மாற்றுவது என்று எனக்குத் தெரியவில்லை. 174 00:14:10,684 --> 00:14:13,228 - இங்கே இங்கிலாந்தில் யாராவதா? - இல்லை. இல்லை. 175 00:14:16,481 --> 00:14:17,649 அங்கே நியூ யார்க்கில். 176 00:14:21,904 --> 00:14:22,905 நான் சொல்லலாம் எனில்... 177 00:14:27,993 --> 00:14:29,620 உன்னிடம் ஏற்கனவே அதற்கான பதில் உள்ளதென நினைக்கிறேன். 178 00:14:35,459 --> 00:14:41,715 நீ அவமானப்படும்படியான ஒன்றைச் செய்யவில்லை, அவர்தான் உன்னை அவமானப்பட வைத்துள்ளார். 179 00:14:49,431 --> 00:14:50,432 அவர் அப்படித்தான் செய்தார். 180 00:14:59,066 --> 00:15:02,236 அதனால் அந்த அப்போதிலிருந்து நான் அந்த அவமானத்தை சுமக்கிறேன். 181 00:15:18,836 --> 00:15:19,837 ஆனால்... 182 00:15:24,842 --> 00:15:30,889 ஆனால் அந்த அவமானம், அது அவருக்குச் சொந்தமானது என நான் யூகிக்கிறேன். 183 00:15:34,601 --> 00:15:36,103 அதை நான் வைத்துக்கொள்ளும் அவசியம் இல்லை. 184 00:15:39,147 --> 00:15:40,315 எனது தேர்வு அதை... 185 00:15:44,111 --> 00:15:45,612 அதை விட்டுவிடுவதுதான். 186 00:16:01,211 --> 00:16:03,714 மன்னித்து விடு, ஜீன். நான் வந்து... 187 00:16:05,090 --> 00:16:07,092 நீ வந்துவிட்டாய் என தெரிந்தது. நீ கையுடன் இருப்பாய் என நினைத்தேன். 188 00:16:09,553 --> 00:16:11,889 நான் வருவதே அவருக்குத் தெரியாது. 189 00:16:13,682 --> 00:16:15,184 கையின் அழைப்பு மிக விசித்திரமாக இருந்தது என்று நினைக்கிறேன். 190 00:16:15,851 --> 00:16:20,814 நான் அதை ஏற்க அவசரப்படவில்லை, ஆனால் என் தாயார் அதைக் கேள்விப்பட்டு... 191 00:16:21,940 --> 00:16:24,526 - அது எங்கு போகும் என உங்களுக்குத் தெரியும்தானே. - ஆம். 192 00:16:28,363 --> 00:16:29,907 நமக்கு ஆர்வமில்லாத ஆடவர்களாலும் கூட 193 00:16:29,907 --> 00:16:31,867 அதிலிருந்து வேகமாக தப்பிக்க முடியவில்லை எனில், எதுவும் செய்ய முடியாது. 194 00:16:32,910 --> 00:16:34,453 அப்போது கை ஒரு முட்டாள்தான். 195 00:16:34,453 --> 00:16:37,122 நீங்கதான் இந்த சீசனின் மிகச் சிறந்த அழகி. அனைவரும் சொன்னார்கள். 196 00:16:37,122 --> 00:16:40,709 நீ கேள்விப்படவில்லையா? இப்போது அது மட்டும் இருந்தால் போதாது. 197 00:16:41,835 --> 00:16:44,087 என் பெரிய சகோதரிகள் திருமணத்திற்காக ஆடிய ஆட்டத்தைப் பார்த்தேன். 198 00:16:44,087 --> 00:16:47,966 நான் அதன் விதிகளை கற்பதோடு மட்டும் நிற்காமல், அதன்படி சிறப்பாக நடந்தேன். 199 00:16:50,552 --> 00:16:56,558 அதன் பின், அவர்கள் வந்தார்கள், அந்த அமெரிக்கர்கள். பிறகு விதிகள் மாறிவிட்டன. 200 00:16:57,684 --> 00:17:01,480 இப்போது, ஆடவர்கள், தங்களுக்கு சவாலாக இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள். 201 00:17:01,480 --> 00:17:05,233 அதோடு, அவர்களின் மனைவிமார்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். 202 00:17:06,944 --> 00:17:09,988 என் வாழ்க்கை முழுவதும், சத்தமில்லாமல் இருக்க பழகினேன். 203 00:17:12,241 --> 00:17:14,535 ஆனால் இப்போது, ஏன் நான் அமைதியாக இருக்கிறேன் என அனைவரும் யோசிக்கிறார்கள். 204 00:17:18,372 --> 00:17:20,415 முதலில் அவர்கள் வந்தபோது, என்னால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை, 205 00:17:20,999 --> 00:17:25,921 அவர்களின் ஒவ்வொரு எண்ணத்தையும் சொல்லிக்கொண்டும், அவர்கள் சபலங்களுக்கெல்லாம் இடம் கொடுப்பதும். 206 00:17:29,341 --> 00:17:31,552 ஆனால், அவர்கள் சந்தோஷமாக சிரிப்பதைப் போல் நாம் சிரித்து எவ்வளவு காலமாகிவிட்டது? 207 00:17:33,762 --> 00:17:35,764 என் குழந்தை பருவத்திற்குப் பிறகு இல்லை. 208 00:17:36,557 --> 00:17:40,811 எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென நினைத்தேன். 209 00:17:43,146 --> 00:17:44,147 ஆனால் இப்போது? 210 00:17:48,151 --> 00:17:50,779 நாம்தான் எப்படி வாழ்வது என கற்றுக்கொள்ள வேண்டுமோ எனத் தோன்றுகிறது. 211 00:18:09,173 --> 00:18:11,008 அப்போது சரி, விதிகள் மிகவும் எளியவைதான். 212 00:18:11,008 --> 00:18:12,676 முதலில் நடுப்பகுதியை யார் அடைகிறார்களோ, அவர்கள் டார்ச்சைக் கண்டுப்பிடிப்பார்கள். 213 00:18:12,676 --> 00:18:15,304 யார் டார்ச்சை கண்டுப்பிடிக்கிறார்களோ, அவரே பான்ஃபயரை ஏற்றுவார். 214 00:18:16,138 --> 00:18:19,224 பெண்களே, உங்களுக்கு முதல் வாய்ப்பு, ஏனெனில் நீங்கள் இதைச் செய்வது முதல் முறை. 215 00:18:19,224 --> 00:18:20,475 ஏதாவது கேள்விகள் உண்டா? 216 00:18:20,475 --> 00:18:23,937 ஆம். புதிர் எங்கே இருக்கிறது என அறிய மேபல் விரும்புகிறார். 217 00:18:27,024 --> 00:18:28,150 மேலும்... 218 00:18:30,194 --> 00:18:31,195 போ! 219 00:18:31,195 --> 00:18:32,487 இந்த வழிதான், வாங்க. 220 00:18:35,324 --> 00:18:36,325 இந்தப் பக்கமா வாங்க. 221 00:18:40,412 --> 00:18:44,082 ஜின்னி, எனக்கு வெளியே போக வழி தெரியும். அந்த வீடு காலியாக உள்ளது. 222 00:18:44,791 --> 00:18:47,920 இதை வைத்துக்கொள், புதருக்கு மேலே அசைத்தால், நான் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன். 223 00:18:47,920 --> 00:18:49,922 அப்போ நாம இருவரும் சேர்ந்துப் மறைந்துவிடலாம், சரியா? 224 00:19:01,099 --> 00:19:02,100 மேபல்? 225 00:19:04,686 --> 00:19:05,687 டின்டாஜெலில் அந்த இரவுக்குப் பின்... 226 00:19:07,856 --> 00:19:09,608 நான் உன்னைப் பத்தி யோசித்தேன். 227 00:19:11,318 --> 00:19:14,988 லேடி ஹோனோரியா, நீங்க சல்லாபிக்கிறீங்களா? 228 00:19:25,916 --> 00:19:29,503 ஆமாம். உங்களுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். 229 00:19:35,926 --> 00:19:37,678 தும்மல் வருவது போல உள்ளதா? 230 00:19:39,555 --> 00:19:40,556 இல்லை. 231 00:19:41,056 --> 00:19:44,643 புதருக்கு மேலே இதை அசைத்துக்காட்டினால், அவர் வந்து என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னார், 232 00:19:44,643 --> 00:19:45,978 அப்போது நாங்கள் இருவரும் தனியாக செல்ல முடியும். 233 00:19:47,396 --> 00:19:48,981 எவ்வளவு ரொமான்டிக்காக உள்ளது. 234 00:19:48,981 --> 00:19:52,442 ஆனாலும் உண்மையில், சுயநலத்துக்காக, நான் கொஞ்சம் வருத்தப்படறேன். 235 00:19:52,442 --> 00:19:55,112 இப்போதெல்லாம் நாம் அதிகம் சேர்வதே இல்லை. 236 00:19:55,112 --> 00:19:58,323 - தெரியும், இல்லவேயில்லை, உண்மையில். - அதோடு காலம் வேகமாகப் போகிறது. 237 00:19:58,323 --> 00:19:59,741 நாம் உணரும் முன், நியூ யார்க் திரும்பி விடுவேன் நான். 238 00:19:59,741 --> 00:20:02,828 அப்போது, எனக்கும் ஜேம்ஸுக்கும் தனியாக வீட்டில் இருக்க, அதிக நேரம் கிடைக்கும். 239 00:20:03,745 --> 00:20:08,542 நீ அந்த கைக்குட்டையை தவறவிடுவதற்கு வாய்ப்பிருக்குன்னுதான் நம்புறேன். 240 00:20:08,542 --> 00:20:09,835 நிச்சயமா, தற்செயலாகத்தான். 241 00:20:11,003 --> 00:20:15,674 இல்லை, நான் மாட்டேன். என்னால முடியாது. 242 00:20:16,675 --> 00:20:18,051 இப்போது போகலாம்! 243 00:20:19,386 --> 00:20:20,762 - நாம அதைச் செய்வோம். - பின்னாடிப் போ! 244 00:20:20,762 --> 00:20:22,014 நிஜமாத்தான் சொல்கிறேன். 245 00:22:13,375 --> 00:22:14,626 ஹலோ? 246 00:22:18,881 --> 00:22:19,923 இங்கே யாராவது இருக்கிறீர்களா? 247 00:22:24,595 --> 00:22:25,762 நான். 248 00:22:30,934 --> 00:22:32,186 நேன்? 249 00:22:36,732 --> 00:22:37,816 நீங்க தனியா இருக்கீங்களா? 250 00:22:40,527 --> 00:22:41,528 ஆம். 251 00:22:42,237 --> 00:22:43,238 நல்லது. 252 00:22:44,865 --> 00:22:45,949 அப்படியா? 253 00:22:51,496 --> 00:22:52,748 நான் வந்து... 254 00:22:53,707 --> 00:22:56,376 சரி, இதற்கு முன் உங்க தாயாரும், தந்தையும் எப்படித் திருமணம் புரிந்தார்கள் 255 00:22:57,711 --> 00:23:00,297 என்று நீங்க கூறியதைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருந்தேன்... 256 00:23:01,465 --> 00:23:04,051 அவர்கள் எப்படி சமமானவர்களாக இருந்தார்கள் என்றெல்லாம், 257 00:23:04,718 --> 00:23:06,136 மேலும் அதே போல் உங்களுக்கும் அமைய வேண்டும் என நீங்கள் விரும்புவதையும் பற்றி. 258 00:23:07,387 --> 00:23:09,932 - சரி? - நீங்க திருமணத்திலிருந்து பெற விரும்புவது 259 00:23:09,932 --> 00:23:14,061 ஒரு நல்ல நண்பரை என்றீர்கள். 260 00:23:14,895 --> 00:23:19,858 அதோடு, நண்பர்கள், அவர்கள் சேர்ந்து இருக்கும்போது, சுதந்திரமாக இருக்க வேண்டும், அப்படித்தானே? 261 00:23:20,567 --> 00:23:22,903 அவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும்... 262 00:23:22,903 --> 00:23:25,113 எப்போது ஒருவரையொருவர் காணப்போகின்றனர் என்றும், எப்போது சேர்ந்திருப்பார்கள் என்றும் ஆவல் இருக்கும். 263 00:23:25,113 --> 00:23:26,865 ஒருவர் மற்றவரின் முன்னிலையில், பிரச்சினையாக உணர்வது கூடாது. 264 00:23:26,865 --> 00:23:29,326 எனவே நீங்களும் ஜீனும் உற்ற நண்பர்கள் என்று என்று எனக்குத் தோன்றவில்லை. 265 00:23:29,326 --> 00:23:31,203 அவளுடன் சேர்ந்து எதைப் பற்றியாவது சிரித்திருக்கிறீர்களா? 266 00:23:31,203 --> 00:23:32,829 அவளிடம் எதை பகிர்ந்துள்ளீர்கள்? 267 00:23:32,829 --> 00:23:35,582 நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வதில் எந்த அர்த்தமும் இருக்காது என நான் நினைக்கிறேன். 268 00:23:37,459 --> 00:23:39,169 நான் ஜீனைத் திருமணம் செய்துகொள்வதாகவே இல்லையே. 269 00:23:39,837 --> 00:23:42,256 நான் யாரையும் திருமணம் செய்வதாக இல்லை. உனக்கு ஏன் திருமணத்தில் இவ்வளவு ஈடுபாடு? 270 00:23:42,256 --> 00:23:45,133 - எனக்குத் திருமணத்தில் ஈடுபாடு இல்லை. - ஆனால் நீ திருமணம் செய்யப் போகிறாயே. 271 00:23:47,302 --> 00:23:49,888 - ஆம். - நான் அந்தத் தந்தியில் அவ்வளவு சொல்லிய பின்பும். 272 00:23:50,556 --> 00:23:51,640 எனவே, எனக்குப் புரியவில்லை 273 00:23:51,640 --> 00:23:53,517 - நீ ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறாய்... - பொறுங்க, தந்தியா, என்ன தந்தி? 274 00:23:55,978 --> 00:23:56,979 அந்தத் தந்தி. 275 00:23:59,940 --> 00:24:01,859 - உனக்கு நியூ யார்க்கில் தந்தி கிடைக்கவில்லையா? - இல்லையே. 276 00:24:03,110 --> 00:24:06,613 இல்லையே, எனக்கு எந்த விதமான தந்தியும் கிடைக்கவில்லையே. 277 00:24:08,782 --> 00:24:09,950 அதில் என்ன இருந்தது? 278 00:24:14,037 --> 00:24:15,038 அங்கேயே இரு. 279 00:24:45,444 --> 00:24:47,613 ஓ, கடவுளே! 280 00:24:47,613 --> 00:24:50,657 இந்த புதிர்கள் உள்ளனவே, அவற்றுக்கு நாம் வெளியேறும் வழி அறிவதில் விருப்பமில்லை போலும். 281 00:24:51,742 --> 00:24:52,910 என்ன ஆனது? என்ன தவறு நடந்தது? 282 00:24:55,579 --> 00:24:56,580 நேன்? 283 00:24:58,040 --> 00:24:59,041 சீக்கிரம். 284 00:24:59,041 --> 00:25:02,836 - நாம கடைசி வரைப் போக வேண்டுமா? - இதுதான். சரிதான். சொன்னேனே. 285 00:25:24,983 --> 00:25:26,026 ஒ, கடவுளே! 286 00:25:26,902 --> 00:25:28,862 ஒரு வருடமாவது நீ வெற்றி பெறாமல் இருந்துள்ளாயா என்ன? 287 00:25:30,614 --> 00:25:32,574 நீ சொல்வது சரிதான், நிச்சயமாக. இது நியாயமான போட்டியில்லை. 288 00:25:34,576 --> 00:25:36,662 நான் கையை அறிவதுப் போல, இந்தப் புதிரையும் அறிவேன். 289 00:25:39,373 --> 00:25:42,042 நிச்சயமாக. யார் அதை எதிர்பார்த்திருக்கக்கூடும்? 290 00:25:45,254 --> 00:25:47,798 என்ன? ஒவ்வொரு வருடமுமா? 291 00:25:48,674 --> 00:25:50,008 நாம் மது அருந்துவோம், சரியா? 292 00:25:50,676 --> 00:25:54,471 கொண்டாடுவதற்கு... நான் கையை தரைமட்டத்திற்கு எரித்துவிடும் முன். 293 00:26:13,031 --> 00:26:15,075 இந்த ஏரியை எங்க மாளிகையில் அமைப்பதென்று, 294 00:26:15,075 --> 00:26:17,119 எவ்வளவு நல்ல முடிவை எடுத்துள்ளோம், அன்பே. 295 00:26:17,119 --> 00:26:18,954 அது மிகச் சிறப்பான தேர்வுதான். 296 00:26:19,663 --> 00:26:22,165 உனக்கு, என் கண்ணே, நல்ல ரசனை உள்ளது. 297 00:26:22,165 --> 00:26:25,711 நம்ம வரவேற்பறைக்கு நீ தேர்வு செய்த திரைகள் அற்புதமாக உள்ளன. 298 00:26:29,256 --> 00:26:30,716 வீடு இனிய வீடு. 299 00:26:31,383 --> 00:26:33,760 என் நினைவில் இருப்பதைவிட, இது சற்றே சிறியதாக உள்ளது. 300 00:26:33,760 --> 00:26:35,762 ஆனால் சரியாக நமக்குத் தேவையான அளவு உள்ளது. 301 00:26:39,433 --> 00:26:40,517 இப்போது ரொம்ப நேரம் ஆகிறதே. 302 00:26:42,477 --> 00:26:45,022 நாம் ஓய்வெடுக்க வேண்டும். 303 00:26:48,901 --> 00:26:50,110 நீங்கள் நிச்சயமாகத் தயாராக உள்ளீர்களா? 304 00:26:51,945 --> 00:26:52,946 ஓய்வெடுக்கவா? 305 00:26:56,033 --> 00:26:57,034 கண்டிப்பாகத் தெரியும். 306 00:27:07,252 --> 00:27:10,547 - தந்தியில் என்ன இருந்திருக்கும் எனநினைக்கிறாய்? - எனக்குத் தெரியாது. 307 00:27:10,547 --> 00:27:14,843 நேன், உனக்குத் தெரியும். உறுதியாகத் தெரியும். 308 00:27:14,843 --> 00:27:18,138 அவன் காலை சிற்றுண்டிக்கு என்ன சாப்பிட்டான் எனச் சொல்ல, அவ்வளவு தூரம் கடந்து, 309 00:27:18,138 --> 00:27:19,431 உனக்கு ஒரு ரகசிய தந்தியை அனுப்பியிருக்க மாட்டான். 310 00:27:19,431 --> 00:27:22,434 ஒருவேளை அனுப்பியிருக்கலாம், ஏன்னா நாங்கள் நண்பர்கள், உற்ற நண்பர்கள். 311 00:27:23,560 --> 00:27:25,395 இருந்தாலும், நாங்கள் விறகு வெட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு தருணம், 312 00:27:25,395 --> 00:27:28,440 அப்போது ஏதோ போல இருந்தது. எல்லாம் குழப்பமாகவும் இருந்தது. 313 00:27:28,440 --> 00:27:29,608 நான் அதை... 314 00:27:30,651 --> 00:27:32,903 நான் என்னை தவிர்க்கப் பார்த்தேன், ஆனால் அவனையும் ஜீனையும் சேர்த்து பார்த்தபோது... 315 00:27:32,903 --> 00:27:35,239 - உனக்குப் பொறாமையா இருந்ததா? - இல்லை, கண்டிப்பாக இல்லை! 316 00:27:38,200 --> 00:27:42,829 - இருக்கலாம். - ஓ, நேன். ஓ, நேன். தெரியும். எனக்குத் தெரியும். 317 00:27:44,081 --> 00:27:46,959 நீீ கை துவார்ட்டை காதலிக்கிறாயா? 318 00:27:46,959 --> 00:27:48,460 இருக்க முடியாது. இதெல்லாம்... 319 00:27:48,460 --> 00:27:51,046 இந்த உலகில் மற்றவர்களைவிட அவர்தான் என்னை அதிகமாகக் கோபப்படுத்துகிறார். 320 00:27:51,046 --> 00:27:54,258 ஆம், சில சமயங்களில் நாங்கள் அதோடு சில சமயங்களில் மூச்சு விடாமல் சிரிக்கிறோம். 321 00:27:54,258 --> 00:27:55,884 ஆனால் அந்த சந்தோஷத் தருணங்களுக்கு இடையே, 322 00:27:55,884 --> 00:27:59,179 இன்னும் அதிகமாக எரிச்சலும், கோபமும் உள்ளது, அதோடு... 323 00:27:59,179 --> 00:28:03,267 - நேன், நீ வர்ணிப்பதற்குப் பெயர்தான் காதல். - இல்லை, காதலம் அமைதியானது. காதல் திடமானது. 324 00:28:03,267 --> 00:28:05,894 காதல் என்பது ஒரு மாரடைப்புதான். 325 00:28:06,603 --> 00:28:08,772 காதல்தான் எல்லாவற்றிலும் சிறந்தது மற்றும் மோசமானதும் கூட. 326 00:28:08,772 --> 00:28:13,026 காதலில், ஒவ்வொரு அணுவாலும் ஒருவரை வெறுப்பதும், 327 00:28:13,026 --> 00:28:16,905 அதே சமயம் அவரின்றி இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், தாங்க முடியாத வலியாகவும் உள்ளதுதான். 328 00:28:16,905 --> 00:28:20,409 கான்சீ, நீ டிக்கிடம், அவரை நீ இன்னும் நேசிப்பதாகச் சொல்ல வேண்டும். 329 00:28:20,409 --> 00:28:22,286 நேன், இது என்னயும் டிக்கையும் பற்றியது இல்லை. 330 00:28:22,828 --> 00:28:26,206 இது உனக்கும் கைக்கும் உள்ளதைப் பற்றி, மற்றும்... 331 00:28:26,206 --> 00:28:29,334 மற்றும் தியோ. தியோவும் நானும், திருமணம் செய்துகொள்ள இருக்கிறோமே 332 00:28:29,334 --> 00:28:31,712 - அதோடு எப்படி இதை அவ்வளவு... - நீ உறுதியாகச் சொல்கிறாயா? 333 00:28:31,712 --> 00:28:33,839 - நீ முற்றிலும் உறுதியாக இருக்கிறாயா? - அப்படித்தான் நினைத்தேன், நான்... 334 00:28:34,339 --> 00:28:35,674 எப்படி நீ அவ்வளவு உறுதியாகச் சொன்னாய்? 335 00:28:35,674 --> 00:28:39,011 அவர் இன்று ஜீனைப் பற்றி பேசியபோது, அவள் ஏதோ ஒரு உடைமையைப் போல பேசினார். 336 00:28:39,011 --> 00:28:41,555 - அந்த வேளையில், கை... அவர் வந்து... - அவர் மிகச் சிறந்தவர். 337 00:28:41,555 --> 00:28:44,183 - ஆம். ஆம், எளிமையானவர். - அக்கறையானவர். 338 00:28:44,183 --> 00:28:47,269 - அவர் நம்மில் ஒருவர். - எவ்வளவு கோபம் வரும்? 339 00:28:50,147 --> 00:28:53,609 கை எப்படி எனக்குத் தந்திகள் எல்லாம் அனுப்பலாம்... 340 00:28:53,609 --> 00:28:54,902 அவர் உன்னை காதலிக்கிறார் என்று? 341 00:28:54,902 --> 00:28:56,195 - ஆம்! எவ்வளவு தைரியம்? - அதுதானே. 342 00:28:56,195 --> 00:28:58,697 ஏன்னா அதை மட்டும்தான் என்னால் யோசிக்க முடிகிறது. அந்த மடத்தனமான தந்தியில் 343 00:28:58,697 --> 00:29:00,240 என்ன இருக்கிறது என்று மட்டும் தெரிந்தால் போதும். 344 00:29:00,240 --> 00:29:01,742 உனக்குத் தெரியும் என நினைக்கிறேன். நேன்? 345 00:29:01,742 --> 00:29:04,286 ஜாக்கிரதையாக இரு. அதோடு, உறுதி செய்துகொள். 346 00:29:05,621 --> 00:29:09,082 ஆனால் உற்சாகமாக இருக்கு, எப்படியானாலும். அதுதான்! 347 00:29:13,545 --> 00:29:14,546 ஆம்! 348 00:29:22,346 --> 00:29:24,264 பொய்கள், லிஸ்ஸி எல்ம்ஸ்வர்த். 349 00:29:24,264 --> 00:29:27,935 - நீதான் பொய் சொல்கிறாய். - இல்லை, அது நேற்றைய தினம் போல நினைவிருக்கிறது. 350 00:29:27,935 --> 00:29:30,562 ஜான் பால்ட்வின், தன்னால் சாராடோகாவில் உள்ள எவரையும்விட அதிகமான கார்ட்வீல்களை 351 00:29:30,562 --> 00:29:34,650 செய்ய முடியுமென்றான், ஆனால் நீ அவன் சொன்னது தவறென்று நிரூபிக்க விரும்பினாய். 352 00:29:34,650 --> 00:29:36,944 அந்த ஊர் மக்கள் அனைவரும் உன் உள்ளாடைகளைப் பார்த்தனர். 353 00:29:36,944 --> 00:29:38,820 இல்லை, நான் அப்படி ஒன்றைச் செய்யவே மாட்டேன். நான் ஒரு லேடி ஆயிற்றே. 354 00:29:40,364 --> 00:29:42,241 ஒரு லேடியால் 13 கார்ட்வீல்களை வரிசையாகச் செய்ய முடியும், 355 00:29:43,575 --> 00:29:44,576 அதாவது 14. 356 00:29:46,411 --> 00:29:49,873 ஜேம்ஸ் அளவு கடந்து கோபப்படுவார். நான் ஓடிவிட்டேன், ஆனால்... 357 00:29:53,210 --> 00:29:54,211 ஆனால் இதெல்லாம் அதற்கு இணையானதே. 358 00:30:56,565 --> 00:30:59,026 - அந்த தந்தியில என்ன இருந்தது? - என்னது? 359 00:30:59,026 --> 00:31:02,988 சரி, நிச்சயமா, வழக்கம் போலவே, நீ அனைத்து வகையிலும் சிறிதும் சகிக்க முடியாதவள். 360 00:31:03,697 --> 00:31:05,365 உங்களுக்கு எங்கிருந்த அந்த தைரியம் வந்தது? 361 00:31:05,365 --> 00:31:08,994 - நான் உங்கள் உற்ற தோழரை மணம் புரியப் போகிறேன். - அது எனக்கு புதிய செய்தியே இல்லை. 362 00:31:08,994 --> 00:31:12,956 சந்தோஷமான நிச்சயதார்த்தம், அதையும் சொல்லவா. நான் ஏன் உங்களுடன் பேச வேண்டும்? 363 00:31:12,956 --> 00:31:14,499 ரன்னிமீடில் நீங்கள் என்னை விட்டுச் சென்றபின். 364 00:31:14,499 --> 00:31:17,586 என்னுடைய மிக அந்தரங்கமான ரகசியத்தைச் சொன்ன பின், நீங்கள் இன்னும் வேகமாக என்னைப் பிரிந்தீர்கள். 365 00:31:17,586 --> 00:31:19,838 ஆனால் நான் மன்னிப்பு கேட்க மீண்டும் வந்தேன். 366 00:31:19,838 --> 00:31:21,924 நான் கிட்டத்தட்ட உடனே வந்தேன், ஆனால் அதற்குள் உனக்கு நிச்சயமாகிவிட்டது. 367 00:31:21,924 --> 00:31:23,008 அடடே, எவ்வளவு சௌகரியம். 368 00:31:24,468 --> 00:31:27,137 நீங்கள்தான் இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம், இந்த மரம் வெட்டுதல், 369 00:31:27,137 --> 00:31:29,389 நீங்கள் எப்படி உங்களுக்குச் சமமான ஒருவரைத்தான் நேசிக்கப் போவதாகப் பேசிய 370 00:31:29,389 --> 00:31:31,099 பெரும் பேச்சுகள் எல்லாம். எவ்வளவு தைரியம் உங்களுக்கு? 371 00:31:31,099 --> 00:31:33,977 - நேன், கேளு, நான்... - இல்லை, இப்போது ரொம்ப தாமதம் ஆகிவிட்டது. 372 00:31:33,977 --> 00:31:36,897 நாம் முதலில் சந்தித்தபோது... எங்கே இருந்தது இந்த உணர்வுகளும், குழப்பமும்? 373 00:31:36,897 --> 00:31:38,357 நீ எனக்கு மேல் இருந்த ஜன்னல் வழியாக இறங்கி வந்தபோது? 374 00:31:38,357 --> 00:31:40,025 - ஆம்! - நாம் படிகளின் மீது நடனமாடி வந்தபோது? 375 00:31:40,025 --> 00:31:41,652 - ஆம்! - நாம் ஒருவரையொருவர் பார்த்தபோது. 376 00:31:41,652 --> 00:31:42,569 நாம் சிரித்தபோது. 377 00:31:42,569 --> 00:31:44,279 நாம் ஒருவரையொருவர் நன்கறிவோம் என்று உடனே உணர்ந்தபோதும் 378 00:31:44,279 --> 00:31:46,323 எல்லாமே சாத்தியம்தான் என்று உணர்ந்தபோதும்? 379 00:31:46,323 --> 00:31:49,368 நாம் சேர்ந்திருந்தால், எங்கும் செல்லலாம், அல்லது எதையும் செய்யலாம் என்று நினைத்தோமே. 380 00:31:49,368 --> 00:31:51,453 மாளிகையானாலும் மரமாக இருந்தாலும், நாம் சிரித்துக்கொண்டும், 381 00:31:51,453 --> 00:31:54,039 நடனமாடிக்கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும், மீண்டும் 382 00:31:54,039 --> 00:31:56,166 அறிந்து, மீண்டும் முத்தமிட்டுக்கொண்டும் இருந்தவரை, அது ஒரு பொருட்டல்ல. 383 00:31:56,166 --> 00:31:59,586 நான் உன்னை விபரீதமாக காதலிக்கிறேன் என்று உணர்ந்தேன், நேன். 384 00:31:59,586 --> 00:32:02,381 உன் மீது கண்களை பதித்த அந்த வினாடியிலிருந்து காதலித்திருக்கிறேன். 385 00:32:22,234 --> 00:32:25,612 நேன்! நேன், பொறு. 386 00:32:33,203 --> 00:32:35,330 நேன். நேன். 387 00:32:36,748 --> 00:32:39,209 நேன், வந்து... நேன், பிளீஸ், நாம... 388 00:32:43,213 --> 00:32:44,381 நீங்க இருவரும் இங்கேதான் இருக்கிறீர்களா. 389 00:32:46,508 --> 00:32:49,845 நான் சுவர் எழுப்பியுள்ள தோட்டத்தை நேனுக்குக் காட்டிக்கொண்டிருந்தேன். 390 00:32:52,055 --> 00:32:53,390 உன் தாயாரின் விருப்பப்பட்ட இடம். 391 00:32:54,558 --> 00:32:56,018 லிஸ்ஸியும் ஜின்னியும் இன்னும் திரும்பி வரவில்லை, 392 00:32:56,018 --> 00:32:58,228 ஆகவே நாங்கள் இப்போது ஒரு போக்கர் ஆட்டத்தை ஆடலாம் என்றிருக்கிறோம். 393 00:32:59,813 --> 00:33:03,317 - நீயும் வருகிறாயா? - தெரியவில்லை. 394 00:33:03,317 --> 00:33:04,401 கட்டாயமில்லை, நிச்சயம். 395 00:33:04,401 --> 00:33:07,613 மற்றவர்களைவிட, சிலருக்கு இதில் ஆபத்து அதிகம் என்று எனக்குத் தெரியும். 396 00:33:07,613 --> 00:33:08,697 பொருளாதார ரீதியாக. 397 00:33:09,531 --> 00:33:10,908 ஆனால், நேன், நீ விளையாடுவாயா? 398 00:33:10,908 --> 00:33:12,618 உனக்குத்தான் பணத்தைப் பற்றிய கவலையில்லையே. 399 00:33:14,828 --> 00:33:15,829 விளையாடுகிறேன். 400 00:33:18,665 --> 00:33:19,666 அற்புதம். 401 00:33:19,666 --> 00:33:21,752 ஆம். ஆமாம். பரவாயில்லை... 402 00:33:22,544 --> 00:33:23,879 அற்புதம். 403 00:33:50,906 --> 00:33:53,158 - நான் உனக்கு உதவ முடியும்... - அவசியம் இல்லை. 404 00:34:05,462 --> 00:34:07,297 உனக்குத் தெரியும், எனக்கு 15-வருட வெற்றியின் ராசி இருக்கிறது. 405 00:34:08,047 --> 00:34:11,051 நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நீ என்னை வெற்றிகொண்டிருக்கிறாய் 406 00:34:11,552 --> 00:34:13,469 பல்வேறு வழிகளிலும். 407 00:34:15,179 --> 00:34:16,306 அதற்காக அதுவே நிரந்தரம் என்றாகாது. 408 00:34:46,712 --> 00:34:49,339 அது அதிகமான அளவு பணம். நல்வாழ்த்துகள். நான்... 409 00:34:50,090 --> 00:34:51,300 உனக்குச் சாதகமானது பற்றி சந்தோஷம். 410 00:34:52,134 --> 00:34:54,844 ஒருவேளை நீ உன் பழைய வேலையாட்களில் சிலரை மீண்டும் வேலைக்கு அமர்த்தலாம். 411 00:34:55,512 --> 00:34:57,097 அவர்கள் விடுமுறையில் செல்லவில்லை என இங்குள்ள அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன். 412 00:35:02,436 --> 00:35:04,313 - தியோ. - அல்லது நீ மணப்பதற்காக ஒரு பணக்கார 413 00:35:04,313 --> 00:35:06,064 அமெரிக்க பெண்ணைத் தேடுவதையும் இனி நிறுத்திவிடலாம். 414 00:35:07,858 --> 00:35:10,819 அதுதானே உன் திட்டமாக இருந்தது, இல்லையா? நீ நியூ யார்க் போனபோது? 415 00:35:13,030 --> 00:35:14,990 உன் குடும்பச் சொத்துக்களைக் காப்பாற்ற ஒரு பணக்காரப் பொருத்தம். 416 00:35:20,120 --> 00:35:21,121 நான் சொல்வது சரிதானே? 417 00:35:25,250 --> 00:35:28,420 ஆனால் உனக்குத் தேவையாக இருந்ததெல்லாம், ஒரு சில ராசியான வாய்ப்புகள்தான். 418 00:35:34,343 --> 00:35:36,428 நான் இன்னும் என் கார்டுகளை காட்டவில்லையே. 419 00:35:45,479 --> 00:35:46,480 எனக்குத்தான் வெற்றி. 420 00:35:48,440 --> 00:35:54,655 அது விசித்திரமாக இருக்கிறது, ஏனென்றால், எனக்கு... எதுவுமே இல்லாததுப் போல 421 00:35:57,407 --> 00:35:58,408 உள்ளது. 422 00:36:17,219 --> 00:36:22,391 கை ஃபாக்ஸையும்... அவனுடைய தோல்வி அடைந்த துரோகத்தையும் நினைவுகொள்வோம். 423 00:36:53,422 --> 00:36:58,302 நான் ஒரு முட்டாள், அது உறுதிதான், நீங்க அன்னிக்கு ஒரு பார்ட்னர்தான் வேண்டும் 424 00:36:58,302 --> 00:36:59,803 மனைவியில்லை என்று சொன்னபோது நான் நம்பினேனே. 425 00:36:59,803 --> 00:37:02,264 நான் பார்ப்பது போலவேதான் நீங்களும் இந்த உலகை பார்க்கிறீர்கள் என நம்பினேனே, 426 00:37:02,264 --> 00:37:04,516 ஆனால் அப்போதெல்லாம் நான் கேட்க விரும்பியதை நீங்கள் சொன்னது மட்டும்தான் மீதம். 427 00:37:04,516 --> 00:37:07,144 - கடவுளே, இல்லை. நேன்... - ஆனால் அதைவிட மட்டம் 428 00:37:07,936 --> 00:37:10,564 என்னவென்றால், நான் மீண்டும் உங்களை நம்பியதால்தானே நீங்கள் அப்படிச் செய்ய முடிந்தது. 429 00:37:12,733 --> 00:37:14,693 நான் யாரிடமும் சொல்லாததை எல்லாம் உங்களிடம் சொன்னேனே. 430 00:37:16,320 --> 00:37:17,487 நாம் நண்பர்களாக இருந்தோம் என்று நினைத்தேனே, 431 00:37:18,655 --> 00:37:21,158 அதோடு, ஒரு வினாடி, அதற்கும் மேல் 432 00:37:23,160 --> 00:37:24,244 நம் உறவு இருந்ததோ என பதறினேன். 433 00:37:27,164 --> 00:37:30,334 என்னவெனில், இரண்டும் இல்லை என்பதுதான் உண்மை. 434 00:38:00,781 --> 00:38:03,325 - மன்னித்து விடுங்கள். - நீ ஏன் மன்னிப்புக் கேட்கணும்? 435 00:38:03,325 --> 00:38:06,745 நான் போய்விட்டேன். உங்களை விட்டுக்கொடுத்தேன், நான் எப்போதும் போல, 436 00:38:06,745 --> 00:38:07,829 - அதோடு... - ஹே. 437 00:38:08,914 --> 00:38:10,457 நீ என்னை விட்டுக்கொடுக்கவேயில்லை. 438 00:38:11,291 --> 00:38:14,628 நீ அழ வேண்டிய அவசியம் இல்லை, ஜின்னி. உன்னை இப்படிப் பார்ப்பதை வெறுக்கிறேன், வா. 439 00:38:15,337 --> 00:38:17,923 இங்கே வா. வா இங்கே. 440 00:38:24,304 --> 00:38:26,139 போய் உன் நண்பர்களுக்குப் விடை கொடு. 441 00:38:26,640 --> 00:38:30,978 நான் உன்னை அறையில் சந்திக்கிறேன், பிறகு நாம் இதைப் பற்றி பேசுவோம், சரியா? 442 00:38:30,978 --> 00:38:32,646 - சரி. - சரி. 443 00:38:33,272 --> 00:38:34,273 இப்போது போ. 444 00:39:18,108 --> 00:39:19,234 நீ என்னிடம் சொல்லியிருக்கலாம். 445 00:39:23,405 --> 00:39:24,865 உன் தாயாரின் படங்கள். 446 00:39:28,785 --> 00:39:30,120 நீ அவற்றை விற்க விட்டிருக்க மாட்டேன். 447 00:39:34,041 --> 00:39:35,751 அது வெறும் படங்கள் மட்டும் இல்லை, தியோ. 448 00:39:38,170 --> 00:39:42,758 இந்த வீடு முழுவதும்தான். எல்லாமே கையை விட்டுப் போனது. 449 00:39:44,510 --> 00:39:47,763 அதற்காகத்தான் இந்த பார்ட்டியே. 450 00:39:49,431 --> 00:39:50,641 நான் பிரியாவிடை கொடுக்க. 451 00:39:51,683 --> 00:39:53,602 என்னால் உதவ முடியும். 452 00:39:53,602 --> 00:39:56,021 உன்னிடமிருந்து நான் வாங்கிக்கொண்டே இருக்க முடியாது, தியோ. 453 00:39:59,608 --> 00:40:00,609 நான் அப்படிச் செய்யவும் மாடேன். 454 00:40:12,913 --> 00:40:14,248 ஜீன் நிஜமாகவே ஒரு அழகானப் பெண்தான். 455 00:40:46,697 --> 00:40:47,698 ஜேம்ஸ்? 456 00:40:51,368 --> 00:40:52,369 ஜேம்ஸ்? 457 00:40:56,582 --> 00:41:00,586 என்னை மன்னித்து விடுங்கள் ஜேம்ஸ். என்னை உள்ளே விடுங்கள். பிளீஸ்? 458 00:41:15,434 --> 00:41:16,435 எல்லாம் நலமா... 459 00:41:19,563 --> 00:41:20,564 நீ போய்விட்டாய். 460 00:41:22,316 --> 00:41:23,525 நாம் இல்லாது இருப்பதை அனைவரும் உணர்வார்கள் என நினைத்தேன். 461 00:41:34,328 --> 00:41:36,371 நீங்கள் என்னை தைரியசாலியாக ஆக்குகிறீர்கள், 462 00:41:38,874 --> 00:41:40,250 நான் அதை நிஜமாகவே சொல்கிறேன். 463 00:41:40,250 --> 00:41:42,836 நான் சந்தித்தவர்களில் நீதான் மிகவும் தைரியசாலி. 464 00:41:42,836 --> 00:41:47,424 நான் வெளியே நடந்துப் போனேன். உன்னை விட்டுச்சென்றேன். 465 00:41:49,676 --> 00:41:52,679 நம் குழந்தைகள் வீடு திரும்பும் முன், நீ வீட்டிற்குத் திரும்பிச் செல்ல விரும்பியதாக 466 00:41:53,430 --> 00:41:56,058 நான் நினைத்துக்கொண்டேன். 467 00:41:56,058 --> 00:41:57,142 ஹோனோரியா. 468 00:41:57,142 --> 00:41:58,852 குட்டி வில்லியமிற்கு பியானோ வாசிப்பது எவ்வளவு பிடிக்கும் என்று உனக்கே தெரியுமே, 469 00:41:58,852 --> 00:42:01,271 - எனவே... - ஹோனோரியா, நிறுத்து! பிளீஸ், நிறுத்து. 470 00:42:01,939 --> 00:42:02,940 ஏன்? 471 00:42:04,066 --> 00:42:07,569 ஏனென்றால் இது வடிகட்டிய முட்டாள்தனம். இது மடத்தனம். 472 00:42:08,862 --> 00:42:10,656 நாம் உண்மையாகவே குழந்தைகளைப் பெற முடியுமா என்ன. 473 00:42:12,824 --> 00:42:13,825 ஆனால் இது வெறும் ஒரு விளையாட்டுதானே. 474 00:42:15,160 --> 00:42:16,411 உனக்குப் புரியவில்லையா? 475 00:42:16,954 --> 00:42:18,664 நம்ம வாழ்வே ஒரு பாசாங்குதான். 476 00:42:19,248 --> 00:42:21,708 என்னுடைய ஒவ்வொரு தோழியாலும் சிரிக்கவும் நடனமாடவும் முடியும் 477 00:42:21,708 --> 00:42:24,878 அவர்களால் கையைக் கோர்த்து, பொது இடங்களுக்குச் சென்றாலும் யாரும் அக்கறை கொள்வதில்லை. 478 00:42:25,462 --> 00:42:28,549 அவர்கள் தைரியசாலிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களைக் கொண்டாடுவார்கள். 479 00:42:28,549 --> 00:42:30,759 அவர்களுக்குக்கெல்லாம் ஒரு மோதிரம் மற்றும் ஒரு பார்ட்டியும் உண்டு, 480 00:42:30,759 --> 00:42:33,303 அதோடு அவர்களைப் பார்த்து பெருமைப்படும் பெற்றோர்கள் உள்ளனர். 481 00:42:34,596 --> 00:42:37,891 ஹோனோரியா, இதெல்லாம் எதுவுமே எனக்குப் புதிதல்ல. 482 00:42:38,725 --> 00:42:42,855 இன்னும் சொல்லப் போனால், இது சலித்துவிட்டது. பாசாங்கு செய்வது சலித்துவிட்டது. 483 00:43:24,229 --> 00:43:28,567 நேன், நான் மன்னிப்பு... கேட்க வந்தேன். 484 00:43:29,610 --> 00:43:31,236 இன்று எதனாலோ நான் என் நிலையில் இல்லை. 485 00:43:34,740 --> 00:43:35,782 அப்படியா? 486 00:43:37,951 --> 00:43:39,411 நான் ஜீனை நடத்திய விதம், 487 00:43:39,411 --> 00:43:41,914 அதோடு, அந்த போக்கர் ஆட்டத்திற்குப் பிறகு நான் சொன்ன வார்த்தைகள்... 488 00:43:43,707 --> 00:43:45,125 அப்படிப்படவனாக நான் இருக்க விரும்பவில்லை. 489 00:43:46,502 --> 00:43:52,633 உண்மை என்னவெனில் நான் எப்போதுமே கையைப் பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன். 490 00:43:54,510 --> 00:44:01,141 அவனை சிரமமின்றி விரும்ப முடிகிறது, அவனுடைய குணத்தால், பதவியால் அல்ல. 491 00:44:03,685 --> 00:44:06,897 என் வாழ்க்கையோ முற்றிலும் அதிகாரம்தான், ஆனால் கட்டுப்படுத்த முடியவில்லை. 492 00:44:09,233 --> 00:44:12,819 அதோடு, இந்த காதல், எனக்கு உன் மீது உள்ள உணர்வுகள், 493 00:44:14,279 --> 00:44:19,034 அதன் வலிமை, அதன் பலம், என்னை ஆட்டிப் படைக்கிறது. 494 00:44:20,202 --> 00:44:23,455 எனக்கு விபரீதமான பயமும், ஒரு கட்டுப்பாடும் இல்லாத பீதியும் உள்ளது... 495 00:44:26,667 --> 00:44:27,960 உன்னை தொலைத்துவிடுவேனோ என்று. 496 00:45:38,906 --> 00:45:40,908 தமிழாக்கம் அகிலா குமார்