1 00:00:07,007 --> 00:00:10,344 LAND OF WOMEN 2 00:00:32,281 --> 00:00:33,367 உள்ளே வரலாமா? 3 00:00:39,081 --> 00:00:40,290 ஹலோ. 4 00:00:45,671 --> 00:00:47,506 நான் தேவைப்பட்டால் மாடியில் இருப்பேன். 5 00:00:56,223 --> 00:00:57,599 குட் நைட். 6 00:01:04,647 --> 00:01:07,067 இது எங்களை நிர்க்கதியாக விட்டதற்காக. 7 00:01:07,693 --> 00:01:12,281 இது நீ என்னை அழைக்காததால் பல வாரங்களாக நான் இந்த ஊரில் இருந்ததற்காக. 8 00:01:13,115 --> 00:01:15,993 இது டோனியின் ரவுடிகள் எங்களை துரத்தும்போது 9 00:01:15,993 --> 00:01:18,287 நீ வேறொரு பெண்ணுடன் ஓடியதற்காக! 10 00:01:18,287 --> 00:01:19,830 என்னை விளக்கவிடு, அன்பே. தயவுசெய்து. 11 00:01:19,830 --> 00:01:22,875 இன்னொரு முறை என்னை அன்பே என்று அழைத்தால், இன்னும் பலமாக அறைவேன்! 12 00:01:22,875 --> 00:01:27,045 வெறும்... நான்... எனக்கு ஒருபோதும் உன்னை நிர்க்கதியாக விடும் எண்ணமில்லை. 13 00:01:27,045 --> 00:01:29,756 நான்... உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்பதற்காக நான் போக வேண்டியிருந்தது. 14 00:01:29,756 --> 00:01:31,633 நாங்கள் பாதுகாப்பாக இல்லை, ஃப்ரெட்! 15 00:01:31,633 --> 00:01:34,928 அது ஒரு தவறு! அது எனக்கு இப்போது தெரியும். 16 00:01:34,928 --> 00:01:36,013 - தவறா? - ஆம். 17 00:01:36,013 --> 00:01:39,516 ஹோட்டலில் இருந்து ஒரு உடையை திருடுவதுதான் தவறு. 18 00:01:39,516 --> 00:01:41,560 நீ 15 மில்லியன் டாலர்களை திருடியிருக்கிறாய்! 19 00:01:44,730 --> 00:01:47,733 இல்லை, நான்... நான் பணத்தைத் திருடவில்லை. 20 00:01:47,733 --> 00:01:49,568 திருடவில்லை. கடன் வாங்கினேன். 21 00:01:49,568 --> 00:01:51,278 - கடன் வாங்கினாய். அடக் கடவுளே. - ஆம். 22 00:01:51,278 --> 00:01:52,821 டோனியிடம் கடன் வாங்கினேன். 23 00:01:52,821 --> 00:01:55,657 புரூக்ளினில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முதலீடு செய்ய. 24 00:01:55,657 --> 00:02:00,287 எனக்கு மிகவும்... மோசமான அறிவுரை கொடுத்தார்கள்... 25 00:02:00,287 --> 00:02:05,501 திட்டங்களில் உள்ள சொத்துகளை சந்தை மதிப்பைவிட 40% கூடுதல் விலைக்கு விற்க முடியும் என்று. 26 00:02:05,501 --> 00:02:07,294 எனக்கு ஒரு முதலீட்டாளர் மட்டும்தான் தேவைப்பட்டார். 27 00:02:07,294 --> 00:02:09,463 ஒரு சாதாரண நபரைப் போல வங்கிக்கு ஏன் போகவில்லை? 28 00:02:09,463 --> 00:02:12,299 எனக்கு வங்கி கடன் கொடுக்காது என்பதால். 29 00:02:13,133 --> 00:02:14,676 ஏன் கொடுக்காது? 30 00:02:14,676 --> 00:02:17,930 ஏற்கனவே அவர்களிடம்... கடன் வாங்கியிருக்கிறேன் என்பதால். 31 00:02:18,555 --> 00:02:19,431 என்ன கடன்? 32 00:02:19,431 --> 00:02:22,935 ஏற்கனவே எனக்கு ஏழு மில்லியன் டாலர்கள் கடன் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். 33 00:02:25,103 --> 00:02:27,439 நான் அசிங்கப்பட்டேன், காலா. 34 00:02:28,565 --> 00:02:31,151 நான் தோற்றவன் என்று நீ நினைப்பதை நான் விரும்பவில்லை. 35 00:02:31,151 --> 00:02:34,780 நான்... என் தவறுகளை சரிசெய்ய நினைத்தேன். 36 00:02:36,073 --> 00:02:38,033 அதனால்தான் டோனியிடம் பணத்தை கடன் வாங்கினேன். 37 00:02:38,825 --> 00:02:39,868 எனவே என்னால்... 38 00:02:40,702 --> 00:02:43,121 நான்... நான்... உன்னை சந்தோஷப்படுத்த முயற்சித்தேன். 39 00:02:43,747 --> 00:02:46,792 அந்த இடத்தில் கட்டுமானம் தொடங்கியது, பிறகு முதலீட்டாளர்கள் 40 00:02:46,792 --> 00:02:49,378 தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறத் தொடங்கினார்கள். 41 00:02:49,378 --> 00:02:51,296 ஒருவர் பின் ஒருவராக. 42 00:02:51,296 --> 00:02:52,506 அதோடு... 43 00:02:53,507 --> 00:02:57,427 பிறகு முதலீடு வராததால், அந்த இடத்தில் கட்டுமானத்தை நிறுத்த வேண்டியிருந்தது, 44 00:02:57,427 --> 00:03:00,222 அப்போது டோனியின் பெரும்பகுதி பணத்தை ஏற்கனவே செலவு செய்திருந்தேன். 45 00:03:00,222 --> 00:03:01,348 அதோடு... 46 00:03:02,558 --> 00:03:04,518 அதனால் என்னால் அவனுக்கு திருப்பிக் கொடுக்க முடியவில்லை. 47 00:03:05,602 --> 00:03:07,145 எனவே, நான்... வெறும்... 48 00:03:08,188 --> 00:03:09,273 எனவே நீ ஓடிவிட்டாய். 49 00:03:11,400 --> 00:03:12,776 ஆம். ஓடிவிட்டேன். 50 00:03:25,163 --> 00:03:26,957 பிறகு இந்தப் பெண்ணை சந்தித்தேன். 51 00:03:27,916 --> 00:03:31,003 தூதரகத்தில் அதிகாரியாக இருக்கிறாள். 52 00:03:31,003 --> 00:03:33,922 அதிக சிரமம் இல்லாமல் நகைகளை நாட்டிற்கு வெளியே 53 00:03:33,922 --> 00:03:36,133 கொண்டுபோக முடியும் என்று அவள் சொன்னாள். 54 00:03:37,301 --> 00:03:39,136 ஃப்ரெட், அது என் நெக்லெஸா? 55 00:03:39,136 --> 00:03:40,345 ஆம், ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். 56 00:03:40,345 --> 00:03:41,680 ஒப்பந்தம் செய்துகொண்டாயா? 57 00:03:41,680 --> 00:03:43,015 புகைப்படத்தைப் பார்த்தேன். 58 00:03:43,015 --> 00:03:46,226 அவள் ஏதோ கவர்ச்சிக்கன்னி போல இருந்தாள், நீ அவளை மோனாகோவுக்கு கூட்டிச் சென்றிருக்கிறாய்! 59 00:03:46,226 --> 00:03:48,437 அன்பே, எனக்கு அவளுக்கும் இடையே எதுவும் நடக்கவில்லை. 60 00:03:48,437 --> 00:03:50,939 எங்கள் மொத்த வாழ்க்கையும் ஒரு பொய், ஃப்ரெட். 61 00:03:50,939 --> 00:03:53,025 இனி நான் யாரென்று கூட எனக்கு தெரியவில்லை. 62 00:03:54,151 --> 00:03:57,070 என்னால் டோனியின் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று தெரியும். 63 00:03:57,738 --> 00:04:00,741 திருப்பி கொடுக்க முடிந்திருக்கலாம், ஆனால் என்னால்... முடியவில்லை. 64 00:04:01,283 --> 00:04:05,120 ஆனால் நாம் ஒரு புது வாழ்க்கையை தொடங்க ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். 65 00:04:08,457 --> 00:04:10,792 புது வாழ்க்கையா? என்னை முட்டாள் என்று நினைக்கிறாயா? 66 00:04:11,835 --> 00:04:13,545 நான் சொல்வதைக் குறுக்கிடாமல் கேட்கிறாயா? 67 00:04:15,172 --> 00:04:17,716 நான் செலுத்த வேண்டியவை சட்டப்பூர்வமாக உன் பெயரில் இருக்கின்றன. 68 00:04:17,716 --> 00:04:19,426 நான் மிகவும் வருந்துகிறேன், காலா. 69 00:04:20,093 --> 00:04:24,223 நாம் புதிய வாழ்க்கை தொடங்கவும், குடும்பத்தைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் இதுதான் ஒரே வழி. 70 00:04:24,848 --> 00:04:26,558 நீ இல்லாமல் என்னால் அதைச் செய்ய முடியாது. 71 00:04:47,538 --> 00:04:52,251 நாளை இரவு பத்து மணிக்கு பார்சிலோனாவிலிருந்து 72 00:04:52,251 --> 00:04:55,629 அர்ஜென்டினாவிற்குப் புறப்பட ஒரு கப்பல் தயாராக இருக்கிறது. 73 00:04:55,629 --> 00:04:58,590 நம் எல்லோருக்கும் டிக்கெட்களும் போலி பாஸ்போர்ட்களும் ஏற்பாடு செய்திருக்கிறேன். 74 00:04:59,174 --> 00:05:04,346 நான் தொழில் செய்வதில் மோசமாக இருக்கலாம், ஆனால்... நான் செய்ததெல்லாம் நமக்காகத்தான். 75 00:05:04,346 --> 00:05:07,641 திரும்பப் போவதற்கு வாய்ப்பே இல்லை, இங்கே இருப்பதற்கும் தான். 76 00:05:08,350 --> 00:05:09,726 நீ என்னோடு வருவாயா? 77 00:05:12,145 --> 00:05:13,939 அவர்கள் என்னைக் கொல்ல நினைக்கிறார்கள், காலா. 78 00:05:15,566 --> 00:05:17,818 தயவுசெய்து ஏதாவது சொல், காலா. 79 00:05:26,285 --> 00:05:28,912 - அடடா. அது கெவின். - கெவினா? 80 00:05:30,122 --> 00:05:32,416 பொறு. ஹேங்க்கோடு இருப்பானே அந்த "கெவினா"? டோனியின் அடியாளா? 81 00:05:32,416 --> 00:05:34,209 ஆம்! டோனியின் அடியாள்தான். 82 00:05:35,419 --> 00:05:36,587 அவர்கள் இங்கிருக்கிறார்களா? இப்போதா? 83 00:05:36,587 --> 00:05:38,589 ஆம். உனக்கு முன்பே அவர்கள் எங்களை கண்டுபிடித்து வந்துவிட்டார்கள், 84 00:05:38,589 --> 00:05:40,215 அதிலிருந்தே உன் லட்சணம் தெரிகிறது. 85 00:05:42,176 --> 00:05:43,719 அவர்கள் உன்னை ஏதாவது செய்தார்களா? 86 00:05:43,719 --> 00:05:46,763 ஓ, இல்லை, எதுவுமில்லை. எங்கள் தலையில்தான் துப்பாக்கியை வைத்தார்கள். 87 00:05:50,309 --> 00:05:53,020 நீ எங்களுக்கு ஏற்படுத்திய சிரமத்துக்கும் அவர்கள் உன்னை இழுத்துச் செல்ல விட வேண்டும். 88 00:05:53,020 --> 00:05:54,438 காலா. 89 00:05:56,398 --> 00:05:58,650 காலா, நிஜமாக நீ அப்படி நினைக்கவில்லைதானே... 90 00:05:59,693 --> 00:06:03,197 இல்லை. வா. பின்பக்க கதவு வழியாக போவோம். 91 00:06:11,872 --> 00:06:13,790 நான் உன்னை இங்கே விடமாட்டேன். 92 00:06:13,790 --> 00:06:16,543 - பொறு. அது மிகவும் ஆபத்தானது. - நீ இப்போது ஹீரோவாக பார்க்கிறாயா? 93 00:06:23,175 --> 00:06:24,676 ஹேய், ஜூலியா. நீங்கள் நலமா? 94 00:06:24,676 --> 00:06:26,762 - உன்னை உதைக்க வேண்டும்! - வேண்டாம், அம்மா! 95 00:06:26,762 --> 00:06:28,305 - போதும்! வாருங்கள். போகலாம். - முட்டாளே! 96 00:06:29,223 --> 00:06:32,309 இப்போது அவரை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். நீங்கள் அவனை திசைதிருப்ப வேண்டும். 97 00:06:32,309 --> 00:06:33,810 - யாரை? - கெவினை. 98 00:06:33,810 --> 00:06:35,020 அப்பா. 99 00:06:35,020 --> 00:06:37,231 ஹேய், செல்லம். ஹேய். இங்கே வா. 100 00:06:37,231 --> 00:06:40,317 இப்போது போக வேண்டும். சத்தியமாக சீக்கிரம் சந்திப்போம். 101 00:06:40,317 --> 00:06:41,944 - சத்தியமாக. - இல்லை. இப்போதுதானே வந்தீர்கள். 102 00:06:43,487 --> 00:06:44,530 ஹேய்! 103 00:06:44,530 --> 00:06:46,073 உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி. 104 00:06:46,073 --> 00:06:47,533 இங்கே என்ன கூச்சல்? 105 00:06:47,533 --> 00:06:51,119 எனக்கு காது சரியாக கேட்காது, அதோடு டிவி சத்தமாக இருக்கிறது. 106 00:06:51,828 --> 00:06:53,914 உள்ளே சென்று பார்த்தால் உங்களுக்குப் பிரச்சினை இல்லைதானே, பாட்டி? 107 00:06:53,914 --> 00:06:55,707 நிச்சயமாக. தாராளமாக பார். 108 00:06:57,751 --> 00:06:59,837 ஒரு கிளாஸ் பால் தரட்டுமா? 109 00:06:59,837 --> 00:07:01,213 நான் ஒரு கிளாஸ் குடிக்கப் போகிறேன். 110 00:07:01,213 --> 00:07:02,631 பால்? வேண்டுமா? 111 00:07:02,631 --> 00:07:04,842 பக்கத்து வீட்டுக்காரரின் மாட்டில் கரந்தது. 112 00:07:06,635 --> 00:07:07,469 பரவாயில்லை. 113 00:07:07,469 --> 00:07:09,179 - நீ அவரை பிறகு பார்க்கலாம். - உன்னை நேசிக்கிறேன். 114 00:07:09,179 --> 00:07:11,765 எங்களை சாலையில் சந்திக்கும்படி அமத்திடம் சொல், சரியா? 115 00:07:11,765 --> 00:07:12,850 சரியா? 116 00:07:15,519 --> 00:07:16,353 கேள்! 117 00:07:16,353 --> 00:07:18,689 ஓ, நீ வலிமையானவனா? 118 00:07:18,689 --> 00:07:20,440 மிகவும் வலிமையாக இருக்கிறாய். 119 00:07:20,440 --> 00:07:22,776 நிறைய உடற்பயிற்சி செய்வாயா? 120 00:07:24,653 --> 00:07:27,489 - நான் உடற்பயிற்சி செய்கிறேன். - இது நிஜம்தானே? 121 00:07:27,489 --> 00:07:30,993 ஒரு கிளாஸ் பாலும் கொஞ்சம் குக்கீகளும் தரவா? 122 00:07:30,993 --> 00:07:32,786 சரி. வா. 123 00:07:33,662 --> 00:07:37,708 எனவே, இந்த "அர்மண்ட்" இங்கே வசிக்கிறானா? 124 00:07:38,500 --> 00:07:40,085 அமத். அவன் பெயர் அமத். 125 00:07:40,085 --> 00:07:42,296 ஆம், இங்கேதான் வசிக்கிறான். என் சித்தியின் வீட்டை வாங்கியிருக்கிறான். 126 00:07:42,296 --> 00:07:43,213 ஆனால் அது முக்கியமில்லை. 127 00:07:43,213 --> 00:07:44,464 ஓ, பார், அவன் அங்கிருக்கிறான். 128 00:07:44,464 --> 00:07:46,341 - சீக்கிரம். சீக்கிரம், போகலாம். - ஹேய். 129 00:07:46,341 --> 00:07:48,218 நீ... நீ இங்கே தங்கக் கூடாது. 130 00:07:48,218 --> 00:07:50,137 நீ இங்கிருந்து தப்பிக்க உனக்கு உதவுகிறேன். 131 00:07:50,137 --> 00:07:53,557 துறைமுகத்தில். நாளை இரவு 10 மணிக்கு. 132 00:07:54,349 --> 00:07:57,019 - உனக்காக காத்திருப்பேன். - ஃப்ரெட், நாங்கள்... 133 00:07:57,019 --> 00:07:58,854 நாம் அவசரத்தில் இருக்கிறோமா இல்லையா? 134 00:07:59,563 --> 00:08:01,356 - போகலாமா? - சரி. 135 00:08:01,356 --> 00:08:02,608 நன்றி. 136 00:08:18,123 --> 00:08:20,834 குக்கீகள் நன்றாக இருக்கிறதுதானே? ஆம். 137 00:08:20,834 --> 00:08:22,169 மிகவும் நன்றாக இருக்கிறது. 138 00:08:22,169 --> 00:08:24,713 இருந்தாலும், தூக்கம் வர, 139 00:08:25,255 --> 00:08:27,299 என்னிடம் ஒரு மாயாஜால தீர்வு இருக்கிறது. 140 00:08:29,468 --> 00:08:30,761 நீங்கள் மிகவும் வினோதமானவர். 141 00:08:31,887 --> 00:08:32,846 என்ன அது? 142 00:08:33,514 --> 00:08:35,307 எனக்கு எதுவும் கேட்கவில்லையே. 143 00:09:07,756 --> 00:09:09,633 தெரியவில்லையா? நாங்கள் தூங்குகிறோம். 144 00:09:12,678 --> 00:09:13,929 மன்னித்துவிடு. 145 00:09:15,681 --> 00:09:16,515 இனிய இரவாகட்டும். 146 00:09:30,279 --> 00:09:33,448 அந்த முட்டாள் இங்கே என்ன செய்துகொண்டிருந்தான் என்று சொல்கிறாயா? 147 00:09:33,448 --> 00:09:34,867 அவருக்கு விஷயங்களை சரிசெய்ய வேண்டுமாம். 148 00:09:34,867 --> 00:09:36,952 அது எளிது. அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். 149 00:09:38,996 --> 00:09:41,582 வேண்டாம். எனக்குத் தெரியும். அவனிடம் பணமில்லை. 150 00:09:42,332 --> 00:09:43,917 அவரிடம் பணம் இல்லையா? 151 00:09:43,917 --> 00:09:45,210 அவரிடம் பணம் இல்லை. 152 00:09:45,878 --> 00:09:48,005 பிறகு எப்படி விஷயங்களைச் சரி செய்வான் என்று எதிர்பார்க்கிறான்? 153 00:09:49,756 --> 00:09:51,758 அம்மா, எனக்குத் தெரியாது. 154 00:09:51,758 --> 00:09:53,719 ஆனால் அவரிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 155 00:09:55,721 --> 00:09:57,181 நாமும் அவரோடு வரவேண்டும் என்கிறார். 156 00:09:57,181 --> 00:09:59,600 அவன் ஒரு கோழை. ஓடிப்போக விரும்புகிறான். 157 00:09:59,600 --> 00:10:01,518 சரி என்று சொல்ல தோன்றவில்லையா? 158 00:10:01,518 --> 00:10:04,521 இல்லை, அம்மா. சரி என்று சொல்லவில்லை. நான் எதுவும் சொல்லவில்லை. 159 00:10:04,521 --> 00:10:07,608 திடீரென்று எங்கிருந்தோ வந்து ஒரு கதையை சொல்கிறார், 160 00:10:07,608 --> 00:10:09,693 பிறகு கெவின் வந்துவிட்டான். 161 00:10:09,693 --> 00:10:12,237 அவன் அவரை கொல்லப் போகிறான் என்று நினைத்தேன். 162 00:10:12,237 --> 00:10:14,823 அவர் என் மகளின் அப்பா. என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? 163 00:10:15,490 --> 00:10:18,243 நிஜமாகவே என்னை கேட்கிறாயா அல்லது அது பதில் தெரியாத கேள்வியா? 164 00:10:18,785 --> 00:10:21,246 அப்பா வந்தால் எல்லா பிரச்சினையும் முடிந்துவிடும் என்று நினைத்தேன். 165 00:10:21,830 --> 00:10:23,123 நானும் அப்படித்தான் நினைத்தேன். 166 00:10:25,000 --> 00:10:26,543 இப்போது என்ன செய்யப் போகிறோம்? 167 00:10:43,268 --> 00:10:44,311 ம்... 168 00:10:46,480 --> 00:10:50,817 சரி, என் குடும்பத்தை கவனித்துக் கொண்டதற்காக உனக்கு நன்றி. 169 00:10:52,277 --> 00:10:54,238 ஒன்றரை மணிநேரத்து ஒருமுறை பேருந்து சேவை இருக்கிறது. 170 00:11:00,661 --> 00:11:02,079 ஏற்கனவே ஒன்று வந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? 171 00:11:03,080 --> 00:11:07,459 ஒன்றரை மணிநேரத்துக்குப் பிறகு வரவில்லை என்றால், ஏற்கனவே ஒன்று போய்விட்டது என்று அர்த்தம். 172 00:11:08,627 --> 00:11:09,670 ஆம், சரி. 173 00:11:11,547 --> 00:11:12,381 ஆம். 174 00:11:14,550 --> 00:11:15,801 சரி. 175 00:11:20,931 --> 00:11:21,765 ஹேய். 176 00:11:21,765 --> 00:11:25,185 எனக்கு ஒரு உதவி செய். உன்னால்... இவற்றை அவர்களிடம் கொடுக்க முடியுமா? 177 00:11:25,936 --> 00:11:28,397 என்னால் இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது. 178 00:11:28,397 --> 00:11:32,276 அந்த அடியாட்கள் ஒரு பெரிய பிரச்சினையின் ஒரு பகுதிதான். 179 00:11:32,985 --> 00:11:37,614 உனக்கு நிஜமாகவே அவர்கள் மீது அக்கறை இருந்தால், அவர்களை என்னோடு வரச் சொல். 180 00:11:45,831 --> 00:11:46,832 நன்றி. 181 00:12:05,851 --> 00:12:07,477 இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னார். 182 00:12:09,730 --> 00:12:13,984 உன் கணவருக்கு என்ன பிரச்சினை என்று தெரியாது, ஆனால் அதில் உன்னையும் இழுத்துவிட்டுவிட்டார். 183 00:12:15,152 --> 00:12:17,279 எனவே நீ அவரோடு வர விரும்புகிறார். 184 00:12:18,947 --> 00:12:20,157 போகிறாயா? 185 00:12:21,783 --> 00:12:23,076 எனக்குத் தெரியவில்லை. 186 00:12:23,076 --> 00:12:24,995 அவர் சொன்ன எல்லா பொய்களுக்குப் பிறகுமா? 187 00:12:26,079 --> 00:12:27,956 அவர்கள் எங்களைக் கொன்றிருப்பார்கள். 188 00:12:29,249 --> 00:12:33,504 ஃப்ரெட்டைக் கண்டுபிடிப்பேன் என்று நினைத்து கொஞ்சம் அவகாசம் பெற்றேன், இப்போது எனக்குத் தெரியவில்லை. 189 00:12:35,589 --> 00:12:37,925 அவர்களுக்கு இப்போது ஃப்ரெட் மட்டும் போதவில்லை. 190 00:12:39,760 --> 00:12:42,513 நீ எங்கேயாவது 15 மில்லியன் டாலர்கள் வைத்திருக்கிறாயா? 191 00:13:04,576 --> 00:13:06,453 உன் உள்ளுணர்வை நம்பு, காலா. 192 00:13:35,774 --> 00:13:38,527 {\an8}கனடா பாஸ்போர்ட் 193 00:13:56,545 --> 00:14:00,424 எழுந்திருங்கள். நீங்கள் எங்களோடு வர வேண்டும். 194 00:14:00,424 --> 00:14:01,592 அடச்சே. 195 00:14:01,592 --> 00:14:05,679 சீக்கிரம். மெதுவாக எழுந்திரு, முட்டாள்தனமாக எதுவும் செய்யாதே. 196 00:14:05,679 --> 00:14:07,014 முட்டாள்தனமான விஷயங்கள் வேண்டாம். 197 00:14:07,014 --> 00:14:10,225 குயின்டனிலா, அவர்களை நோக்கி எதற்காக துப்பாக்கியை நீட்டுகிறாய்? 198 00:14:10,225 --> 00:14:12,519 - அவர்கள் ஆபத்தானவர்களாக இருந்தால்? - ஆபத்தானவர்களா? 199 00:14:12,519 --> 00:14:14,188 துப்பாக்கியை வைத்துக்கொண்டு நீதான் ஆபத்தானவனாக தெரிகிறாய்! 200 00:14:14,188 --> 00:14:16,190 சொல்வதைக் கேள். துப்பாக்கியை கீழே இறக்கு. 201 00:14:17,274 --> 00:14:20,402 அமைதியாக இருப்பதற்கும் பதிலளிக்க மறுப்பதற்கும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. 202 00:14:20,402 --> 00:14:23,405 அடச்சே, குயின்டனிலா. நீ சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை என்பது தெரியவில்லையா? 203 00:14:23,405 --> 00:14:26,491 ஆண்ட்ரேவ், இந்த வார்த்தைகளைச் சொல்ல என் வாழ்க்கை முழுவதும் கனவு கண்டேன். 204 00:14:26,491 --> 00:14:28,619 - எனக்கு அந்த திருப்தி போதும். - சரி. 205 00:14:28,619 --> 00:14:30,412 வக்கீல் வைத்துக்கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. 206 00:14:30,412 --> 00:14:32,539 உங்களால் முடியவில்லை என்றால், உங்களுக்கு ஒருவர் ஒதுக்கப்படுவார். 207 00:14:32,539 --> 00:14:33,749 இங்கே என்ன நடக்கிறது? 208 00:14:33,749 --> 00:14:37,920 உன் கணவரின் குடும்பத்தினர். அவர்கள் ஒரு காரை திருடி இருக்கிறார்கள். 209 00:14:37,920 --> 00:14:39,922 - உன்னால் நம்ப முடிகிறதா? - நிஜமாகவா? 210 00:14:42,508 --> 00:14:44,259 இனி குடும்பத்தை நம்ப முடியாது. 211 00:14:45,093 --> 00:14:48,180 நல்ல வேளை அவர்கள் நல்லவர்கள் இல்லை என்பதை அமத் கவனித்தான். 212 00:14:48,180 --> 00:14:49,181 - அமத்தா? - ஆம். 213 00:14:49,181 --> 00:14:50,724 அவன் எங்களை அழைத்தான். 214 00:14:50,724 --> 00:14:52,643 காரின் நம்பர் பிளேட்டை சரிபார்த்தோம், 215 00:14:52,643 --> 00:14:56,230 இது பெசலுவில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிந்தது. 216 00:14:56,730 --> 00:14:58,315 நீ நலமா? 217 00:14:58,941 --> 00:15:02,444 ஆம். அவர்கள் சிறைக்குப் போகிறார்களா? 218 00:15:02,444 --> 00:15:03,946 இப்போதைக்கு ஜெயிலுக்கு. 219 00:15:03,946 --> 00:15:06,865 அவர்கள் திருடியதாக குற்றம் சாட்டப்படுவார்கள், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும். 220 00:15:06,865 --> 00:15:09,117 இன்னும் சில மணிநேரங்களில் வெளியே வந்துவிடுவார்கள். 221 00:15:09,660 --> 00:15:10,827 சரி. 222 00:15:11,537 --> 00:15:13,080 அதாவது... 223 00:15:13,080 --> 00:15:17,793 குடும்பம் ஆச்சரியங்கள் நிறைந்தது. 224 00:15:17,793 --> 00:15:23,590 சில நேரங்களில் சங்கடப்படுத்துவார்கள்... சில நேரங்களில் நன்றாக இருப்பார்கள். 225 00:15:25,133 --> 00:15:31,723 இத்தனைக்குப் பிறகு நீயும் நானும் மாமா, மருமகளாக இருந்தால், 226 00:15:31,723 --> 00:15:33,976 நன்றாக இருக்கும். 227 00:15:35,269 --> 00:15:37,020 அது அற்புதமாக இருக்கும். 228 00:15:37,729 --> 00:15:38,856 ஆண்ட்ரேவ்! 229 00:15:40,732 --> 00:15:43,235 நமக்கு நிறைய வேலை இருக்கிறது. இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். 230 00:15:45,112 --> 00:15:46,864 வெளியே போகும்போது கவனமாக இரு, சரியா? 231 00:15:53,662 --> 00:15:57,875 சில மணிநேரங்களில் விடுவிக்கப்படுவார்கள், அவர்கள் கோபமாக திரும்பி வருவார்கள். 232 00:15:57,875 --> 00:16:00,586 நாம் போக வேண்டும். இப்போது போகவில்லை என்றால் எப்போதும் முடியாது. 233 00:16:01,587 --> 00:16:03,172 இது நல்லதுக்குத்தான். 234 00:16:04,298 --> 00:16:05,424 ஆம். இது நல்லதுக்குத்தான். 235 00:16:05,424 --> 00:16:07,593 நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள். 236 00:16:07,593 --> 00:16:08,677 திரும்பவும். 237 00:16:09,678 --> 00:16:12,723 நாம் இங்கேயும் இருக்க முடியாது, வீட்டுக்கும் திரும்பிப் போக முடியது. 238 00:16:12,723 --> 00:16:14,683 நம்மிடம் பணமில்லை. இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி. 239 00:16:18,604 --> 00:16:20,647 சரி. சரி. நீ சொல்வது சரிதான். 240 00:16:20,647 --> 00:16:25,068 இது மிகவும் முக்கியமானது, நாம் ஒன்றாக இந்த முடிவை எடுப்போம். 241 00:16:25,068 --> 00:16:26,195 நாம் என்ன செய்ய வேண்டும்? 242 00:16:26,778 --> 00:16:27,946 ஏதாவது யோசனைகள்? 243 00:16:34,953 --> 00:16:36,705 நிச்சயமாக அது நல்லதுக்குத்தானா? 244 00:16:40,792 --> 00:16:42,711 நீ என் மீது கோபமாக இருப்பது தெரியும். 245 00:16:42,711 --> 00:16:44,421 நான் உங்கள் மீது கோபமாக இல்லை. 246 00:16:44,421 --> 00:16:45,797 அப்பா மீது கோபமாக இருக்கிறேன். 247 00:16:47,049 --> 00:16:48,550 நாம் நிஜமாகவே அவருடன் போகிறோமா? 248 00:16:49,426 --> 00:16:51,553 போலியான பெயர்களில் புதிய வாழ்க்கையை தொடங்கப் போகிறோமா? 249 00:16:52,596 --> 00:16:54,348 அவர் செய்த எல்லாவற்றுக்கும் பிறகுமா? 250 00:16:55,724 --> 00:16:59,478 அவர் நிலைமையை மிகவும் மோசமாக்கிவிட்டார்தான். 251 00:17:00,437 --> 00:17:01,605 ஆனால் அவர் உன் அப்பா. 252 00:17:02,940 --> 00:17:05,108 அவர் விஷயங்களைச் சரிசெய்ய வந்திருக்கிறார். 253 00:17:07,986 --> 00:17:11,156 நாமே நம்மை பார்த்துக்கொள்வதை விட அவருடன் பாதுகாப்பாக இருப்போம் என்று நினைக்கிறீர்களா? 254 00:17:12,741 --> 00:17:14,617 முதலில், நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும். 255 00:17:14,617 --> 00:17:15,868 சரியா? 256 00:17:21,083 --> 00:17:22,084 சரி. 257 00:17:22,084 --> 00:17:23,961 - சரி. - நாம் போவோம். 258 00:17:24,586 --> 00:17:26,338 உன் பொருட்களை பேக் செய். 259 00:17:26,338 --> 00:17:27,297 வா. 260 00:17:35,138 --> 00:17:37,891 - நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று தெரியும். - நான் எதுவும் சொல்லவில்லை. 261 00:17:37,891 --> 00:17:40,519 எனக்கு மட்டும் இப்படியே விட்டுவிட போக ஆசையா? 262 00:17:42,062 --> 00:17:44,022 எல்லாவற்றையும் பாதியிலேயே விட்டுவிட்டா? 263 00:17:44,022 --> 00:17:45,941 ஒயின் ஆலையை, நம் வீட்டை... 264 00:17:45,941 --> 00:17:48,235 ஹேய்... ஹேய், நான் எதுவும் சொல்லவில்லை. 265 00:17:50,487 --> 00:17:52,406 ஆனால் ஓடுவது நல்ல தீர்வு கிடையாது. 266 00:17:54,032 --> 00:17:56,285 என்னை நம்பு. நான் அதில் நிபுணர். 267 00:18:00,247 --> 00:18:01,206 எங்கே போகிறீர்கள்? 268 00:18:02,165 --> 00:18:05,002 விடைபெற போகிறேன். நீயும் அதை செய்ய வேண்டும். 269 00:18:20,267 --> 00:18:22,936 ஆஹா. நீ என்னைப் பார்த்து கதவைச் சாத்தவில்லை. 270 00:18:24,229 --> 00:18:25,647 நம் உறவில் முன்னேற்றம் இருக்கிறது. 271 00:18:26,732 --> 00:18:27,733 உனக்கு என்ன வேண்டும்? 272 00:18:28,317 --> 00:18:31,570 பல வருடங்களுக்கு முன்பு நான் செய்திருக்க வேண்டியதைச் செய்ய நினைக்கிறேன். 273 00:18:33,113 --> 00:18:34,198 விடைபெற. 274 00:18:36,366 --> 00:18:38,994 நீ போகிறாயா? மீண்டுமா? 275 00:18:38,994 --> 00:18:41,163 அட. முகத்தை அப்படி வைத்துக்கொள்ளாதே. 276 00:18:41,830 --> 00:18:43,165 இப்படி இருப்பதே நல்லது. இல்லையா? 277 00:18:44,082 --> 00:18:46,168 நான் வந்ததில் இருந்து உனக்கு தொந்தரவுதான் கொடுத்தேன். 278 00:18:47,377 --> 00:18:50,172 இத்தனை வருடங்களாக நான் எதை அதிகம் மிஸ் செய்தேன் தெரியுமா? 279 00:18:50,172 --> 00:18:53,926 இடிந்து விழும் நிலையில் இருந்த அந்த டிரெய்லருக்குப் பதிலாக ஒரு நல்ல வீட்டை இல்லை, 280 00:18:53,926 --> 00:18:57,638 அல்லது... நல்ல ஊதியம் கிடைக்கும் வேலையையோ, நல்ல காதலனையோ இல்லை... 281 00:18:57,638 --> 00:18:59,473 சரி, காதலன்கள் நிறைய இருந்தார்கள். 282 00:19:00,057 --> 00:19:04,686 இத்தனை வருடங்களில் நான் அதிகம் மிஸ் செய்தது உன்னிடம் பேசுவதைத்தான். 283 00:19:10,400 --> 00:19:13,487 சரி, நான் போக வேண்டும். 284 00:19:14,863 --> 00:19:16,907 நமக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கலாம். 285 00:19:18,867 --> 00:19:21,245 அப்படியென்றால் சரி. பயணம் நன்றாக அமையட்டும். 286 00:19:26,166 --> 00:19:27,292 என்ன? 287 00:19:28,293 --> 00:19:29,545 அறிவு கெட்டவளே. 288 00:19:30,337 --> 00:19:32,756 நிஜமாகவே நாம் இப்படித்தான் விடைபெறப் போகிறோமா? 289 00:19:32,756 --> 00:19:34,675 சரி... நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? 290 00:19:35,259 --> 00:19:37,427 தெரியவில்லை. ஏதாவது சொல். 291 00:19:39,847 --> 00:19:41,932 எனக்கு மட்டும் போக ஆசை என்று நினைக்கிறாயா? 292 00:19:41,932 --> 00:19:43,433 அப்படியென்றால் போகாதே! 293 00:19:47,688 --> 00:19:51,859 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் உன்னைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்தேன். 294 00:19:53,402 --> 00:19:59,157 இப்போது நீ இங்கே இருப்பதால், மீண்டும் உன்னோடு இருப்பது பழகிவிட்டது. 295 00:20:02,035 --> 00:20:07,165 நீ என்னை எரிச்சலூட்டினாலும், என்னை எரிச்சலூட்டுவது உனக்கு பிடித்திருந்தாலும் கூட. 296 00:20:07,708 --> 00:20:09,793 இதுதான் உலகில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். 297 00:20:13,088 --> 00:20:14,631 என் வீட்டில் ஒரு காலி அறை இருக்கிறது. 298 00:20:20,512 --> 00:20:21,763 பீப்பாய்களை எங்கே வைத்தீர்கள்? 299 00:20:21,763 --> 00:20:22,973 நால்டா, அமத் எங்கே? 300 00:20:23,640 --> 00:20:24,892 கொஞ்ச நேரமாக அவனைப் பார்க்கவில்லை. 301 00:20:26,059 --> 00:20:27,603 ஓ, இங்கே இருக்கிறாய்! 302 00:20:27,603 --> 00:20:29,354 கேள், எங்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. 303 00:20:29,354 --> 00:20:31,607 அமெரிக்கப் பெண் வரும்போது இந்த அலங்காரங்கள் எல்லாம் செய்ய. 304 00:20:31,607 --> 00:20:35,110 சில விஷயங்கள் மட்டும்தான். விளக்குகள், லாந்தர்கள், இசைக்குழு இசை வாசிப்பது. 305 00:20:35,110 --> 00:20:36,653 - நீ என்ன நினைக்கறாய்? - சரி! 306 00:20:36,653 --> 00:20:42,034 எனவே, அந்த வெளிநாட்டுகாரிக்காக செயின்ட் வின்சென்ட் தினத்தை முன்கூட்டியே கொண்டாடுகிறோம்! 307 00:20:42,034 --> 00:20:43,493 அருமை, அவளுக்கு இது பிடிக்கும்! 308 00:20:43,493 --> 00:20:47,247 ஆடுகள் வெளியில் இருக்கும், அது சுற்றுச்சூழலுக்கு உகந்தது போல தெரியும். 309 00:20:47,247 --> 00:20:48,957 அது அமத்தின் யோசனை. 310 00:20:48,957 --> 00:20:50,417 அமத் எங்கே? 311 00:20:50,417 --> 00:20:52,961 அவன் அங்கே பின்னால் இருக்கிறான், ஒயின் மாதிரிகளை தயார் செய்துகொண்டு. 312 00:20:53,629 --> 00:20:54,838 என்ன செய்கிறாய்? 313 00:20:57,299 --> 00:20:58,800 எட்னா நாளை வருவாள். 314 00:21:00,677 --> 00:21:02,304 எல்லாம் தயாராக இருக்க வேண்டும். 315 00:21:04,389 --> 00:21:05,849 அவளுக்கு இந்த ஒயினைப் பிடிக்கும். 316 00:21:06,642 --> 00:21:08,310 ஒயின் ஆலையை. 317 00:21:08,310 --> 00:21:09,520 ஆடுகளையும் கூட. 318 00:21:13,357 --> 00:21:14,441 நீ இதை வெற்றிகரமாக செய்வாய். 319 00:21:18,529 --> 00:21:19,738 நீ இங்கே இருக்க முடியாதது வருத்தம். 320 00:21:21,198 --> 00:21:23,659 அமெரிக்கக்காரி! 321 00:21:23,659 --> 00:21:24,785 - என்ன? - இல்லை, நீ இல்லை. 322 00:21:24,785 --> 00:21:26,036 இன்னொருவள்! அவள் வருகிறாள்! 323 00:21:26,036 --> 00:21:27,829 - எட்னாவா? - "வருகிறாள்" என்றால் என்ன? 324 00:21:27,829 --> 00:21:29,873 இல்லை, ஆனால் அவள் நாளைதான் வருவாள். 325 00:21:29,873 --> 00:21:32,251 இல்லை. அவளுடைய அலுவலகம் அழைத்து ஹெலிகாப்டர் மூலம் 326 00:21:32,251 --> 00:21:34,837 அவள் சீக்கிரம் வருவதாகச் சொன்னது. 327 00:21:34,837 --> 00:21:38,757 கேள், நாம் அவள் தகுதிக்கேற்ற வரவேற்பை தர நான் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன். 328 00:21:38,757 --> 00:21:40,008 வா! 329 00:21:40,008 --> 00:21:41,802 - அவளை திசை திருப்பு. - ஹேய், இல்லை. 330 00:21:41,802 --> 00:21:43,846 - ஐந்து நிமிடங்கள்தான். - நான் உடனே போக வேண்டும். உடனே. 331 00:21:43,846 --> 00:21:45,264 காலா, தயவுசெய்து. 332 00:21:53,438 --> 00:21:54,773 கூட்டுறவு லெஸ் பிட்லெஸ் 333 00:21:54,773 --> 00:21:56,191 கூட்டுறவு ஒயின் ஆலை 334 00:22:14,918 --> 00:22:16,044 எட்னா. 335 00:22:16,712 --> 00:22:18,005 காலா? 336 00:22:18,005 --> 00:22:19,339 - ஹாய். - அடக் கடவுளே. 337 00:22:19,339 --> 00:22:20,841 நீ இங்கே என்ன செய்கிறாய்? 338 00:22:20,841 --> 00:22:22,301 நீ காணாமல் போகவில்லையா? 339 00:22:22,301 --> 00:22:23,635 காணாமல் போனேனா? 340 00:22:23,635 --> 00:22:25,345 நான் இங்கே இருக்கிறேன். 341 00:22:26,263 --> 00:22:28,807 நான்தான் இங்கே அதிரடியாக வந்ததாக நினைத்தேன். 342 00:22:28,807 --> 00:22:30,851 ஆனால் உனக்கு என்ன ஆனது? 343 00:22:30,851 --> 00:22:32,769 ஓ, ஆம், சரி. 344 00:22:32,769 --> 00:22:37,649 அது ஒரு பெரிய கதை, ஆனால், நாங்கள் என் அம்மாவின் கிராமத்திற்கு வர முடிவு செய்தோம். 345 00:22:37,649 --> 00:22:40,736 ஆம். இந்த ஒயினை குடித்தேன், உடனே உன் ஞாபகம் வந்தது. 346 00:22:41,320 --> 00:22:44,406 சரி, நீ எல்லாவற்றையும் எனக்குக் காண்பிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன். 347 00:22:44,406 --> 00:22:46,283 நாம் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. 348 00:22:46,283 --> 00:22:47,492 எனவே, இவர்கள்தான் அந்த பெண்கள். 349 00:22:47,993 --> 00:22:48,827 அழகு. 350 00:22:48,827 --> 00:22:50,287 இவர்தான் எட்னா. 351 00:22:50,287 --> 00:22:52,164 - ஹலோ! - ஹாய். 352 00:22:52,164 --> 00:22:53,999 ஆனால், ரமோனா, பார், அன்பே. 353 00:22:53,999 --> 00:22:58,086 செயின்ட் வின்சென்ட் தினத்தை முன்கூட்டியே கொண்டாடுவது புனிதத்தைக் கெடுப்பது. 354 00:22:58,086 --> 00:22:59,379 பாதிரியாரே, மீண்டும் வேண்டாம்! 355 00:22:59,379 --> 00:23:01,673 அந்தப் பெண்ணை சந்தோஷப்படுத்தத்தான். 356 00:23:01,673 --> 00:23:03,884 மே மாதத்தில் நிஜ தினத்தைக் கொண்டாடுவோம். 357 00:23:03,884 --> 00:23:04,968 வா! 358 00:23:04,968 --> 00:23:08,305 இந்த ஊரை அழகாக்க நமக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு இதுதான். 359 00:23:08,889 --> 00:23:10,224 ஆசுவாசப்படுத்திக்கொள். 360 00:23:12,434 --> 00:23:13,477 காலாவுக்காக. 361 00:23:13,477 --> 00:23:15,354 சரி, காலாவுக்காக என்றால்... 362 00:23:15,354 --> 00:23:18,774 அற்புதம்! நான் இசைக்குழுவை தயாராக இருக்கச் சொல்கிறேன். 363 00:23:18,774 --> 00:23:20,317 இது ஒரு தனித்துவமான ஒயின். 364 00:23:20,317 --> 00:23:23,529 இது மிகவும் கவனத்துடன் தயாரிக்கப்படுகிறது என்பதால், உற்பத்தி ரொம்ப குறைவுதான். 365 00:23:23,529 --> 00:23:26,532 சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒயின் சான்றிதழ் அவர்களிடம் இருக்கிறதுதானே? 366 00:23:26,532 --> 00:23:28,200 - ஆம். நிச்சயமாக. - அருமை. 367 00:23:28,200 --> 00:23:29,826 அதுதான் இந்த இடத்தின் சிறப்பு. 368 00:23:29,826 --> 00:23:32,454 இங்கே இருக்கும் மண் அற்புதமானது, அவர்கள் எந்த இரசாயனங்களையும் பயன்படுத்துவதில்லை, 369 00:23:32,454 --> 00:23:34,248 இயற்கை உரங்களை வைத்திருக்கிறார்கள்... 370 00:23:37,209 --> 00:23:40,212 இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று சொல்கிறேன். சரிதானே? 371 00:23:40,212 --> 00:23:43,549 நிச்சயமாக. நூறு சதவீதம் ஆட்டு மலம், செல்லம். 372 00:23:44,258 --> 00:23:47,010 அவர் என்ன சொன்னார் என்று புரியவில்லை, ஆனால் நன்றாக இருந்தது. 373 00:23:47,010 --> 00:23:49,429 - சென்று அந்த ஒயினை குடித்துப் பார்ப்போம். - சரி. சரி, போகலாம். 374 00:23:54,268 --> 00:23:56,562 இந்த ஒயின் ஆலை மிகவும் அற்புதமானது. 375 00:23:56,562 --> 00:24:00,274 எங்களைப் போலவே உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 376 00:24:00,274 --> 00:24:03,402 ஆம். இது மிகவும் விசேஷமான கலவை. 377 00:24:03,402 --> 00:24:06,029 இது இரண்டு வெவ்வேறு பழங்கால ஒயின்கள் சேர்ந்தது, இவற்றை தனித்தனியாக சுவைத்தால், 378 00:24:06,029 --> 00:24:08,198 கலக்கும்போது நன்றாக இருக்காது என்று நினைப்பீர்கள். 379 00:24:08,198 --> 00:24:13,161 ஆனால், கலந்தால்தான் தெரிகிறது, இவை... மிகவும் நன்றாக இருக்கின்றன என்று. 380 00:24:13,161 --> 00:24:14,246 ஆம். 381 00:24:14,788 --> 00:24:18,667 ஆம், எங்களால் ஒரு தனித்துவமான கலவையை உருவாக்க முடிந்தது. 382 00:24:18,667 --> 00:24:20,043 கலவை. 383 00:24:20,544 --> 00:24:21,545 ஆம். 384 00:24:27,634 --> 00:24:28,635 எனவே? 385 00:24:29,178 --> 00:24:30,179 எனவே? 386 00:24:35,517 --> 00:24:36,560 எனக்குப் பிடித்திருக்கிறது. 387 00:24:38,729 --> 00:24:41,231 சரி. நேராக விஷயத்திற்கு வருகிறேன். 388 00:24:41,231 --> 00:24:42,482 இங்கே நல்ல வியாபாரம் இருக்கிறது. 389 00:24:42,482 --> 00:24:46,403 ஒயின் மட்டுமில்லை. நான் இந்த முழு விஷயத்தையும் சொல்கிறேன். 390 00:24:46,403 --> 00:24:49,406 ஒயின் ஆலை, பாரம்பரியம். 391 00:24:49,406 --> 00:24:51,658 இதில் வியாபாரம் செய்யும் முதல் நபராக நான் இருக்க விரும்புகிறேன். 392 00:24:53,076 --> 00:24:54,203 30,000 பாட்டில்கள். 393 00:24:54,203 --> 00:24:56,872 என்னால் 10% முன்பணம் கொடுக்க முடியும், மீதமுள்ள தொகையை பொருள் வந்தவுடன். 394 00:24:56,872 --> 00:24:58,040 அருமை! 395 00:24:58,040 --> 00:24:59,374 அது அருமை. 396 00:24:59,958 --> 00:25:00,959 என்ன? 397 00:25:01,502 --> 00:25:04,338 எங்களுக்கு ஒரு நிமிடம் தர முடியுமா? 398 00:25:04,338 --> 00:25:06,507 ஒரே ஒரு நிமிடம். 399 00:25:06,507 --> 00:25:07,674 வேண்டிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். 400 00:25:10,677 --> 00:25:11,845 என்ன பிரச்சினை? 401 00:25:13,055 --> 00:25:14,473 எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 402 00:25:14,473 --> 00:25:15,432 ஏன் முடியாது? 403 00:25:15,432 --> 00:25:17,601 கூட்டுறவு நிறுவனம் பெரும் கடனில் இருக்கிறது. 404 00:25:17,601 --> 00:25:20,395 10% முன்பணத்தால், அதில் பாதியைக் கூட எங்களால் அடைக்க முடியாது. 405 00:25:20,395 --> 00:25:23,273 எங்களுக்கு குறைந்தபட்சம் 30% தேவைப்படும். 406 00:25:23,273 --> 00:25:26,109 அமத், யாரும் உனக்கு அதிக பணம் கொடுக்கப் போவதில்லை. 407 00:25:30,948 --> 00:25:33,992 சரி. என்னைப் பேச விடு. 408 00:25:34,952 --> 00:25:38,038 எட்னா. எங்களிடம் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. 409 00:25:38,038 --> 00:25:40,707 இது போல இன்னொரு ஒயினை நீ கண்டுபிடிக்கப் போவதில்லை, அது உனக்கே தெரியும். 410 00:25:41,375 --> 00:25:44,586 நீ சொன்னது போல, இந்த கதையால், ஒயின் சிரமமில்லாமல் விற்கப் போகிறது. 411 00:25:44,586 --> 00:25:47,673 ஒவ்வொரு பாட்டிலும் தனித்துவமானது, வித்தியாசமானது, விசேஷமானது. 412 00:25:47,673 --> 00:25:52,135 மக்கள் ஒரு பாட்டிலை வாங்குவதற்கு நிறைய பணம் கொடுக்க போட்டி போடுவார்கள். 413 00:25:52,970 --> 00:25:56,598 எனவே நீ 30,000 பாட்டில்களை வாங்குவாய் என்று எனக்குத் தோன்றவில்லை. 414 00:25:56,598 --> 00:25:59,101 நீ 1,00,000 பாட்டில்களை வாங்கப் போகிறாய். 415 00:26:04,690 --> 00:26:05,899 நீ சொல்வது சரிதான். 416 00:26:07,359 --> 00:26:08,694 எனவே, ஒப்பந்தம் செய்துகொள்வோமா? 417 00:26:09,528 --> 00:26:11,405 - ஒப்பந்தம் செய்துகொள்வோம். - ஆம்! 418 00:26:12,072 --> 00:26:13,532 அருமை. வா. 419 00:26:13,532 --> 00:26:16,451 நாங்கள் அற்புதமான ஒன்றுக்கு திட்டமிட்டிருக்கிறோம். உனக்கு இந்த நகரத்தைப் பிடிக்கும். 420 00:26:16,451 --> 00:26:18,996 வரவேற்கிறோம் 421 00:26:36,847 --> 00:26:39,016 எட்னா, எங்களுடன் வா, செல்லம். 422 00:26:40,142 --> 00:26:41,894 நீ அதை சாதித்துவிட்டாய், காலா! 423 00:26:48,192 --> 00:26:50,152 நீங்கள் நிஜமாகவே இதையெல்லாம் மிஸ் செய்ய மாட்டீர்களா? 424 00:26:52,070 --> 00:26:53,822 எல்லாம் சரியாகிவிடும். 425 00:26:53,822 --> 00:26:55,115 என்னை நம்பு. 426 00:26:56,366 --> 00:26:57,618 உன் பாட்டி எங்கே? 427 00:26:58,243 --> 00:27:00,454 மரியோனா சித்தியிடம் விடைபெற போயிருக்கிறார். 428 00:27:03,123 --> 00:27:04,625 நானும் அதைத்தான் செய்யப் போகிறேன். 429 00:27:11,340 --> 00:27:13,467 ஏன் முகத்தை சோகமாக வைத்திருக்கிறாய்? 430 00:27:13,467 --> 00:27:16,011 ஒயின் வாங்க வந்தவள் ஒப்புக்கொண்டுவிட்டாள். கொண்டாடு. 431 00:27:16,011 --> 00:27:17,429 நாங்கள் ஊரைவிட்டு போகிறோம். 432 00:27:22,142 --> 00:27:24,561 நீ செய்த எல்லாவற்றிற்கும் நன்றி சொல்ல நினைத்தேன். 433 00:27:26,271 --> 00:27:31,026 என்னை ஏமாற்றி விமான நிலையத்திற்கு கூட்டிச்செல்ல வைக்கலம் என்றால், அது நடக்காது. 434 00:27:33,403 --> 00:27:34,571 நீ போகக்கூடாது. 435 00:27:35,614 --> 00:27:36,823 எனக்குப் போக விருப்பமில்லை. 436 00:27:40,577 --> 00:27:44,081 சரி, சீக்கிரம் திரும்பி வா, ஏனென்றால் நீ எனக்கு ஒரு ஓவியத்தை வரைந்து தர வேண்டும். 437 00:28:28,250 --> 00:28:29,793 அம்மா நாம் இப்போதே கிளம்ப வேண்டும். 438 00:28:29,793 --> 00:28:31,587 அப்படியென்றால் நீ சீக்கிரம் கிளம்புவது நல்லது. 439 00:28:35,132 --> 00:28:36,425 என்ன? 440 00:28:36,425 --> 00:28:39,386 பாட்டி, நீங்களும் எங்களுடன் வருகிறீர்கள். நாம் ஒன்றாக இருக்க வேண்டும். 441 00:28:39,386 --> 00:28:43,015 கேட், என் வயதில் என்னால் ஓடிக்கொண்டே இருக்க முடியாது. 442 00:28:43,015 --> 00:28:44,308 நீங்கள் இல்லாமல் நான் போக மாட்டேன். 443 00:28:44,892 --> 00:28:46,935 பாட்டி, நீங்கள் இங்கே தனியாக இருக்கக் கூடாது. 444 00:28:46,935 --> 00:28:48,687 நான் இங்கே நன்றாக இருப்பேன். 445 00:28:48,687 --> 00:28:51,440 இது ஒரு சலிப்பான நகரம் என்று தெரியும், ஆனால் இது என் சொந்த ஊர். 446 00:28:52,024 --> 00:28:54,359 நீ எங்களை இங்கே கூட்டிவந்தது அவ்வளவு மோசமில்லை. 447 00:28:55,652 --> 00:28:58,363 நான் எவ்வளவு எரிச்சலூட்டுவேன் என்று உங்கள் இருவருக்கும் தெரியும். 448 00:28:58,363 --> 00:29:01,158 நான் எப்போதும் ஒரு கவலையாக, பிரச்சினையாக இருந்தேன். 449 00:29:02,367 --> 00:29:04,036 நீங்கள் எப்போதும் பிரச்சினையாக இருந்ததில்லை. 450 00:29:05,329 --> 00:29:06,830 ல முகாவில் வாழ்வது நன்றாக இருக்கும். 451 00:29:06,830 --> 00:29:08,290 இங்கே நல்லவர்கள் இருக்கிறார்கள். 452 00:29:09,041 --> 00:29:09,958 என் சகோதரி இருக்கிறாள். 453 00:29:10,626 --> 00:29:12,461 நாங்கள் அவளை நன்றாக பார்த்துக்கொள்வோம். 454 00:29:13,253 --> 00:29:15,088 சரி, உங்கள் பைகளை எடுத்து வருகிறேன். 455 00:29:17,758 --> 00:29:18,759 யாருக்குத் தெரியும்? 456 00:29:18,759 --> 00:29:24,056 ஒருவேளை இங்கே தங்குவதன் மூலம் உன் அப்பா யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியலாம். 457 00:29:24,806 --> 00:29:25,682 சரி. 458 00:29:25,682 --> 00:29:28,018 அவர் யாரென்று தெரிந்தால் நன்றாக இருக்கும். 459 00:29:29,269 --> 00:29:35,692 அவர் யாராக இருந்தாலும், அவர் ஒரு அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் நீ ஒரு அற்புதமான மகள். 460 00:29:42,824 --> 00:29:43,909 நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். 461 00:29:45,285 --> 00:29:46,119 ரொம்ப. 462 00:29:46,745 --> 00:29:48,080 நானும்தான். 463 00:30:09,977 --> 00:30:14,106 ல முகா 464 00:30:14,106 --> 00:30:17,484 பயணக் கப்பல் ரோமா 465 00:30:21,905 --> 00:30:23,407 இதோ வந்துவிட்டோம். 466 00:30:24,741 --> 00:30:26,201 எல்லாவற்றுக்கும் நன்றி. 467 00:30:28,996 --> 00:30:33,917 உன்னுடன் வாழ்வது ஒரு கெட்ட கனவு போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால்... 468 00:30:37,087 --> 00:30:37,963 அது நன்றாக இருந்தது. 469 00:30:38,589 --> 00:30:40,382 ஆம், நிஜமாகவே. 470 00:30:43,010 --> 00:30:44,720 அம்மா, உங்களுக்காக வெளியில் காத்திருக்கிறேன். 471 00:30:44,720 --> 00:30:45,679 சரி. 472 00:30:45,679 --> 00:30:47,806 - பை, அமத். - குட் லக், கேட். 473 00:30:56,982 --> 00:30:59,067 - கேள்... - அமத், வேண்டாம்... 474 00:31:00,027 --> 00:31:01,737 - நான் சொல்ல நினைத்தேன்... - வேண்டாம்... 475 00:31:10,412 --> 00:31:11,288 ச்சே. 476 00:31:16,335 --> 00:31:17,544 நன்றி. 477 00:31:36,939 --> 00:31:38,357 நன்றி. 478 00:31:41,068 --> 00:31:43,904 என் அம்மாவின் கருத்துப்படி, ஸாடார்ட் பெண்ணாக 479 00:31:43,904 --> 00:31:45,781 வாழும் வாழ்க்கை சீட்டாட்டம் போன்றது. 480 00:31:46,281 --> 00:31:49,117 முதல் விதி: நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்வது. 481 00:31:49,701 --> 00:31:52,079 எதை சமாளிக்க வேண்டியிருக்கும் என்று தெரியாது. 482 00:31:53,872 --> 00:31:55,207 நான் போக விரும்பவில்லை. 483 00:32:05,551 --> 00:32:07,010 நீ என்ன செய்கிறாய்? 484 00:32:08,762 --> 00:32:10,639 காகித கிளிப்பைப் பயன்படுத்துகிறேன். 485 00:32:12,015 --> 00:32:13,475 அதை ஒரு டுடோரியலில் கற்றுக்கொண்டேன். 486 00:32:22,109 --> 00:32:24,194 அதை நிறுத்து, மேக்கைவெர். 487 00:32:24,194 --> 00:32:25,612 நாங்கள் போகலாமா? 488 00:32:25,612 --> 00:32:28,073 போகலாமாவா? வழி இல்லை! வாய்ப்பே இல்லை. 489 00:32:28,073 --> 00:32:30,117 நான் இங்கே ராட்சத பொம்மைகளுக்காக வந்திருக்கிறேன். 490 00:32:31,118 --> 00:32:34,538 நான் இங்கே இருக்கும் வரை விதிகள் பின்பற்றப்பட வேண்டும். அவ்வளவுதான். 491 00:32:34,538 --> 00:32:36,790 நீண்ட காலம் இங்கே இருக்கப் போகிறீர்கள். 492 00:32:36,790 --> 00:32:38,959 சட்டத்தை மீறியிருக்கிறீர்கள். நடந்தது அதுதான். 493 00:32:40,794 --> 00:32:42,671 மிக நீண்ட காலம். 494 00:32:42,671 --> 00:32:44,631 எப்படியும், நீங்கள் வெளியே வரப்போவதில்லை. 495 00:32:44,631 --> 00:32:47,259 வெளிநாட்டுக்காரர்கள் ஸ்பெயினுக்கு வந்து என்ன வேண்டுமானாலும் செய்கிறீர்கள். 496 00:32:47,259 --> 00:32:49,803 பால்கனிகளில் இருந்து குதிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு செய்வது... 497 00:32:49,803 --> 00:32:52,389 தனிப்பட்ட சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. 498 00:32:52,389 --> 00:32:56,476 அது முடியாது. அந்த வேனை திருடியது குற்றம். 499 00:32:56,476 --> 00:32:59,646 எல்லோரையும் போல ஒரு காரை வாடகைக்கு எடுக்க முடியாதா? 500 00:32:59,646 --> 00:33:01,899 ஒரு காருக்கு உங்களிடம் பணம் இல்லையா? 501 00:33:01,899 --> 00:33:03,358 அட! நீங்கள் இங்கே வந்து... 502 00:33:05,360 --> 00:33:06,695 என்ன செய்ய விரும்புகிறீர்கள்? 503 00:33:06,695 --> 00:33:08,572 செல்லம், இது பைத்தியக்காரத்தனம் என்று தெரியும். 504 00:33:08,572 --> 00:33:11,909 ஆம், ஆனால் எல்லாம் சரியாக நடந்தால், நீ எங்கேயும் போக வேண்டியிருக்காது. 505 00:33:11,909 --> 00:33:15,245 தயவுசெய்து. இந்த திட்டத்தில் நீ என்னுடன் இருக்க வேண்டும். 506 00:33:20,501 --> 00:33:21,502 அப்பா! 507 00:33:21,502 --> 00:33:25,088 ஓ! அடக் கடவுளே. 508 00:33:25,088 --> 00:33:27,674 கடவுளே. நீ. 509 00:33:27,674 --> 00:33:30,761 அருமை. வா. கொடு. உன்னுடைய பைகளை நான் எடுத்துக்கொள்கிறேன். 510 00:33:34,932 --> 00:33:37,559 - ஆஹா. - ஆம். நன்றாக இருக்கிறதுதானே? 511 00:33:37,559 --> 00:33:38,936 எவ்வளவு அருமையான காட்சி. 512 00:33:40,896 --> 00:33:46,235 நாம் எல்லோரும் மீண்டும் ஒன்றாக இருப்பதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று என்னால் சொல்ல முடியாது. 513 00:33:48,779 --> 00:33:51,281 ஆம். உள்ளே பார்க்க வேண்டுமா? 514 00:33:51,907 --> 00:33:53,575 - வா. - ஆம். 515 00:33:54,284 --> 00:33:55,869 எனவே புறப்பட எவ்வளவு நேரம் இருக்கிறது? 516 00:33:56,537 --> 00:33:57,829 சீக்கிரம் என்று நினைக்கிறேன். 517 00:33:57,829 --> 00:34:01,166 உனக்கு சில ஆடைகளை கொண்டு வந்திருக்கிறேன். 518 00:34:02,125 --> 00:34:04,461 உனக்கு சில விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறேன், செல்லம். 519 00:34:04,461 --> 00:34:06,380 சென்று உன் அறையில் அவற்றை அணிந்து பார்க்கிறாயா? 520 00:34:07,214 --> 00:34:10,842 உங்களுக்கு பசியாக இருந்தால் 20 நிமிடங்களில் இரவு உணவு முன்பதிவு செய்துவிடுவோமா? 521 00:34:10,842 --> 00:34:11,885 - ஓ, அப்படியா? - ஆம். 522 00:34:11,885 --> 00:34:13,719 - நன்றி, அப்பா. - ஓ, பரவாயில்லை. 523 00:34:17,431 --> 00:34:21,270 உனக்குத் தெரியுமா... ஒரு நிமிடம், 524 00:34:21,270 --> 00:34:23,897 கப்பல்துறையில் உங்களுக்காக காத்திருந்தபோது, 525 00:34:25,274 --> 00:34:29,402 நான்... நீங்கள் அந்த கேவலமான ஊரிலேயே தங்க முடிவு செய்துவிட்டீர்களோ என்று நினைத்தேன். 526 00:34:32,614 --> 00:34:34,741 அது கேவலமான நகரம் இல்லை, அழகான நகரம். 527 00:34:34,741 --> 00:34:37,619 ஆம். என்ன சொல்கிறேன் என்று உனக்குத் புரிந்திருக்கும், அன்பே. 528 00:34:38,453 --> 00:34:40,873 நான்... உங்களால் முடிந்தவரை முயற்சித்தீர்கள் என்று நம்புகிறேன், 529 00:34:40,873 --> 00:34:44,877 ஆனால் புதிய வாழ்க்கையை தொடங்க அது நல்ல இடம் இல்லைதானே? 530 00:34:45,585 --> 00:34:46,587 தெரியுமா? 531 00:34:48,338 --> 00:34:51,800 ஹேய், ஒன்றுமில்லை, ஏனென்றால் நான் இப்போது இங்கே இருக்கிறேன். 532 00:34:51,800 --> 00:34:53,719 நான் உன்னைப் பார்த்துக்கொள்வேன். 533 00:34:56,889 --> 00:34:57,764 ஓ, வேண்டாம். 534 00:34:57,764 --> 00:35:00,267 நாம் எல்லாவற்றையும் நிதானமாக செய்வோம், சரியா? 535 00:35:00,767 --> 00:35:02,436 ஓ. ஆம், நிச்சயமாக. 536 00:35:03,020 --> 00:35:05,230 ஆம். நிறைய நேரம் இருக்கிறது. 537 00:35:12,446 --> 00:35:15,407 வேலைக்கான அழுக்கு உடையிலேயே உங்களைப் பார்த்து பழகிவிட்டேன். 538 00:35:15,407 --> 00:35:16,783 நீ விளையாடுகிறாயா? 539 00:35:16,783 --> 00:35:18,827 உன் அம்மாவா? வேலைக்கான அழுக்கு உடையில், நிஜமாகவா? 540 00:35:18,827 --> 00:35:19,745 ஆம்! 541 00:35:19,745 --> 00:35:25,000 நான் ஒரு டிரெய்லரில் வசித்துக்கொண்டு என் அம்மாவுடன் திராட்சை பறித்தது நினைவுக்கு வந்தது. 542 00:35:25,751 --> 00:35:27,461 நான் அதை மிஸ் செய்கிறேன். 543 00:35:27,461 --> 00:35:29,630 அது மட்டுமா அல்லது எல்லாவற்றையுமா? 544 00:35:30,547 --> 00:35:31,882 அது சரியாகிவிடும். 545 00:35:34,009 --> 00:35:37,429 இரண்டாவது விதி. திட்டங்களை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். 546 00:35:37,971 --> 00:35:39,681 உன்னிடம் ஒன்றும் இல்லை என்று அவர்களை நினைக்கவைக்க வேண்டும். 547 00:35:45,479 --> 00:35:46,605 சரி. 548 00:35:47,105 --> 00:35:48,607 இதோ வந்துவிட்டோம். 549 00:35:49,316 --> 00:35:50,984 கேப்டன் அங்கே இருக்கிறார், செல்லம். 550 00:35:50,984 --> 00:35:52,277 ஹேய், கேப்டன். 551 00:35:54,154 --> 00:35:55,113 நன்றி. 552 00:35:55,113 --> 00:35:57,032 இரண்டாவது வாய்ப்புகளுக்காக. 553 00:35:57,032 --> 00:36:01,328 இனிமேல் நாம் நன்றாக இருப்போம் என்று நான் உங்களுக்கு சத்தியம் செய்கிறேன். 554 00:36:02,996 --> 00:36:04,164 ஓ! 555 00:36:04,164 --> 00:36:06,083 அடக் கடவுளே. ஓ, மிகவும் வருந்துகிறேன். 556 00:36:06,083 --> 00:36:07,000 ஓ, குளிர்ச்சியாக இருக்கிறது. 557 00:36:07,000 --> 00:36:08,377 காட்டு. நான்... 558 00:36:08,377 --> 00:36:11,171 இல்லை, என்ன தெரியுமா? நான் அறைக்குச் சென்று இதைக் கழுவுகிறேன். 559 00:36:11,171 --> 00:36:12,756 - இதோ வந்துவிடுகிறேன். ஆம். - ஓ, சரி. 560 00:36:12,756 --> 00:36:15,592 நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளாதே, ராஜா நண்டு தீர்ந்துவிடும். 561 00:36:15,592 --> 00:36:16,969 ஓ! 562 00:36:20,305 --> 00:36:23,016 ஆண்கள் மற்றும் பெண்களே, நம்முடைய பயணக் கப்பல் பிளாங்கா டிஓர் 563 00:36:23,016 --> 00:36:25,519 துறைமுகத்தில் இருந்து சீக்கிரம் புறப்படும்... 564 00:36:25,519 --> 00:36:26,728 எப்படிப் போகிறது? 565 00:36:27,396 --> 00:36:28,605 நீண்ட நேரம் ஆகுமா? 566 00:36:29,273 --> 00:36:30,274 அட. 567 00:36:32,609 --> 00:36:34,570 நமக்கு அதிக நேரம் இல்லை. 568 00:36:35,821 --> 00:36:37,948 நான் கவனம் செலுத்த வேண்டும், காலா. 569 00:36:37,948 --> 00:36:39,491 சரி. 570 00:36:39,491 --> 00:36:41,159 நான் உன்னை வேலை செய்ய விடுகிறேன். 571 00:36:41,159 --> 00:36:43,620 அமைதி. கவனம் செலுத்த எனக்கு அமைதி தேவை. 572 00:36:43,620 --> 00:36:45,330 நமக்கு ஐந்து நிமிடம்தான் இருக்கிறது. 573 00:36:45,330 --> 00:36:48,125 என் உதவி உனக்கு வேண்டுமென்றால், நீ ஃப்ரெட்டை இன்னும் கொஞ்ச நேரம் திசை திருப்ப வேண்டும். 574 00:36:48,125 --> 00:36:50,210 என்னை என்ன செய்ய சொல்கிறாய்? அவரை கடலில் தள்ளவா? 575 00:36:50,210 --> 00:36:51,295 அது ஒரு வழி. 576 00:36:51,295 --> 00:36:53,213 இப்போது நாம் இதைத் திறக்க வேண்டும். 577 00:36:53,213 --> 00:36:54,590 நீ முயற்சி செய்து பார்க்கிறாயா? 578 00:36:54,590 --> 00:36:56,425 - இல்லை! நீதான் வேலைக்காரன். - ஓ, நானா? 579 00:36:56,425 --> 00:36:57,426 ஆம். 580 00:37:01,430 --> 00:37:03,432 நம்மால் செய்ய முடிவது ஏதாவது இருக்கலாம். 581 00:37:05,392 --> 00:37:07,561 அவள் ஏன் இவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறாள்? 582 00:37:08,687 --> 00:37:10,689 நான் போய் அவளைப் பார்க்கிறேன். 583 00:37:10,689 --> 00:37:13,150 இல்லை! அப்பா, உட்காருங்கள்! சரியா? உட்காருங்கள். 584 00:37:13,150 --> 00:37:14,985 ஒரு நிமிடத்தில் வந்து விடுவார். 585 00:37:15,777 --> 00:37:16,904 சரி. 586 00:37:17,654 --> 00:37:19,489 சரி. 587 00:37:21,533 --> 00:37:24,620 நான்... அவளைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுகிறேன், அவ்வளவுதான். 588 00:37:26,330 --> 00:37:27,789 கவலைப்படாதீர்கள். உறுதியாக அவர் நன்றாக இருப்பார். 589 00:37:27,789 --> 00:37:29,166 சரி. 590 00:37:33,378 --> 00:37:35,714 அட! கப்பல் கிளம்பப் போகிறது! 591 00:37:41,220 --> 00:37:42,095 தயார். 592 00:37:42,095 --> 00:37:43,347 இரண்டு, மூன்று... 593 00:37:43,347 --> 00:37:44,848 இழு! 594 00:37:53,273 --> 00:37:55,776 நீ செய்துவிட்டாய்! 595 00:38:13,168 --> 00:38:16,505 ஆண்கள் மற்றும் பெண்களே, ஐந்து நிமிடங்களில், நம்முடைய பயணக் கப்பலான 596 00:38:16,505 --> 00:38:19,550 பிளாங்கா டிஓர், பார்சிலோனா துறைமுகத்தில் இருந்து புறப்படவிருக்கிறது. 597 00:38:19,550 --> 00:38:22,052 அப்பா, நீங்கள் எங்களை நேசிப்பது எனக்குத் தெரியும். 598 00:38:22,052 --> 00:38:25,013 நானும் உங்களை நேசிக்கிறேன். ரொம்ப, நிஜமாகவே. 599 00:38:25,013 --> 00:38:26,557 - ஆனால்... - சரி? 600 00:38:27,224 --> 00:38:29,226 விஷயங்களைச் சரிசெய்ய இது சரியான வழி இல்லை. 601 00:38:29,226 --> 00:38:32,354 நான் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டியதில்லை. நான் யார் என்பதை மறக்க விரும்பவில்லை. 602 00:38:33,605 --> 00:38:36,149 அப்பா, நான் சொல்ல வருவது என்னவென்றால்... 603 00:38:38,277 --> 00:38:41,488 ஒரு நாள் பொறுப்போடு நடந்துகொள்ள நீங்கள் முடிவு செய்தால், 604 00:38:42,197 --> 00:38:44,700 உங்களை மீண்டும் என் வாழ்க்கையில் அனுமதிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைவேன். 605 00:38:51,540 --> 00:38:52,624 கேட்டி... 606 00:38:53,876 --> 00:38:55,252 உன் அம்மா எங்கே? 607 00:39:00,716 --> 00:39:02,134 அடக் கடவுளே. 608 00:39:08,765 --> 00:39:10,017 பொறு! 609 00:39:10,017 --> 00:39:11,268 நீ என்ன செய்கிறாய்? 610 00:39:18,233 --> 00:39:19,443 ஏன் திரும்பிச் சென்றாய்? 611 00:39:20,611 --> 00:39:21,862 விவரங்கள். 612 00:39:48,472 --> 00:39:52,017 என்னால் என்னைப் பார்த்துக்கொள்ள முடியும்! 613 00:39:58,190 --> 00:39:59,900 அப்பா நன்றாக இருப்பாரா? 614 00:39:59,900 --> 00:40:01,235 செல்லம், என்னை நம்பு. 615 00:40:01,235 --> 00:40:03,820 உன் அப்பாவை எனக்குத் தெரியும். அவர் நன்றாக இருப்பார். 616 00:40:09,952 --> 00:40:11,161 அட. 617 00:40:12,454 --> 00:40:13,497 ஆஹா. 618 00:40:14,373 --> 00:40:16,416 பார்ட்டி இன்னும் நடக்கிறதா? 619 00:40:19,670 --> 00:40:20,963 அடக் கடவுளே! 620 00:40:21,922 --> 00:40:23,465 - அம்மா! - பாட்டி! 621 00:40:23,465 --> 00:40:26,760 செல்லங்களே! இங்கே என்ன செய்கிறீர்கள்? என் செல்லங்களே! 622 00:40:26,760 --> 00:40:28,470 நீங்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது. 623 00:40:28,470 --> 00:40:31,306 நீங்கள் திரும்பி வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! 624 00:40:31,306 --> 00:40:32,641 ஃப்ரெட் எங்கே? 625 00:40:33,183 --> 00:40:35,269 அவர் லத்தீன் அமெரிக்காவுக்குப் போகிறார். 626 00:40:35,978 --> 00:40:40,232 இன்னும் நாம் இங்கே செய்ய நிறைய விஷயங்கள் இருக்கின்றன. 627 00:40:40,232 --> 00:40:41,692 அவனோடு போ. 628 00:40:43,277 --> 00:40:44,820 என்னுடன் வா, கேட். 629 00:40:44,820 --> 00:40:47,072 வா! மரியோனா, எங்களோடு வா! 630 00:41:05,966 --> 00:41:07,467 என்னவொரு இரவு! 631 00:41:08,510 --> 00:41:09,970 மோசமில்லை. 632 00:41:12,806 --> 00:41:14,057 இது இன்னும் சிறப்படையலாம், சரிதானே? 633 00:41:14,057 --> 00:41:15,142 காலா! 634 00:41:15,142 --> 00:41:17,519 நான் பிட்லெஸ் விளையாட்டில் வெற்றி பெற்றேன். 635 00:41:19,479 --> 00:41:21,106 எனக்கு இந்த நகரத்தைப் பிடித்திருக்கிறது! 636 00:41:21,106 --> 00:41:22,941 எனக்கு இந்தப் பெண்களைப் பிடித்திருக்கிறது! 637 00:41:25,527 --> 00:41:26,737 ஹாய், மாண்ட்சே. 638 00:41:27,362 --> 00:41:30,073 - அவள் சில பானங்கள் குடித்தாள், இல்லையா? - பாரில் இருந்த பாதியை. 639 00:41:31,617 --> 00:41:32,868 நாம் பேசலாமா? 640 00:41:33,869 --> 00:41:35,204 - இப்போதா? - ஆம். 641 00:41:36,038 --> 00:41:37,039 நிச்சயமாக. 642 00:41:44,505 --> 00:41:45,756 என்ன ஆனது? 643 00:41:46,548 --> 00:41:48,926 உனக்கு உன் வாழ்க்கை இருக்கிறது. எனக்கு என்னுடையது, அதோடு... 644 00:41:50,010 --> 00:41:52,095 நாம் நம் உறவைப் பற்றி நிறைய பேசிவிட்டோம். 645 00:41:52,095 --> 00:41:55,098 அருமையாக இருக்கிறது. நாம் ஜாலியாக இருக்கிறோம், எந்த பொறுப்புகளும் இல்லை. 646 00:41:56,058 --> 00:42:00,521 அது நடக்காமல் இருக்க நாம் கவனமாக இருந்தோம் என்று நினைக்கிறேன், 647 00:42:00,521 --> 00:42:01,855 ஆனால் அது நடந்துவிட்டது. 648 00:42:02,731 --> 00:42:05,067 இப்போது இதில் மூன்றாவது நபர் இருக்கிறார். 649 00:42:18,956 --> 00:42:19,998 ஜூலியா! 650 00:42:21,208 --> 00:42:23,877 அட! எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள், நீங்கள் ஏன் முகத்தை இப்படி வைத்திருக்கிறீர்கள்? 651 00:42:25,379 --> 00:42:27,214 சோதனை முடிவுகள் வந்துவிட்டன. 652 00:42:28,799 --> 00:42:30,884 ஜூலியா! ஜூலியா, இங்கே வா! 653 00:42:30,884 --> 00:42:32,135 என் சகோதரி கூப்பிடுகிறாள். 654 00:42:58,579 --> 00:43:01,290 எட்னா கொஞ்சம் போதையில் இருந்தாள். 655 00:43:02,249 --> 00:43:06,545 அவள் அடுத்த ஆண்டு பிட்லெஸ் போட்டிக்கு வர விரும்புகிறாள். 656 00:43:08,881 --> 00:43:09,882 ஹேய்? 657 00:43:11,967 --> 00:43:13,135 என்ன விஷயம்? 658 00:43:13,135 --> 00:43:14,261 ஒன்றுமில்லை. 659 00:43:15,012 --> 00:43:15,971 ஒன்றுமில்லையா? 660 00:43:17,264 --> 00:43:19,141 இப்போது நாம் எல்லாவற்றையும் சரிசெய்ய முடியும். 661 00:43:19,850 --> 00:43:21,310 உனக்கு மகிழ்ச்சியாக இல்லையா? 662 00:43:23,270 --> 00:43:25,063 ஆம். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 663 00:43:26,440 --> 00:43:29,443 இதுதான் உன் மகிழ்ச்சியான முகமா? நிஜமாகவா? 664 00:43:30,027 --> 00:43:32,946 வேறு ஏதாவது நடந்ததா? நீ என்னை நம்பலாம். 665 00:43:32,946 --> 00:43:34,489 அது அவ்வளவு எளிதில்லை, காலா. 666 00:43:34,990 --> 00:43:36,325 அது எனக்குத் தெரியும். 667 00:43:37,201 --> 00:43:39,661 நீ இப்படி இருக்கப் போகிறாய் என்றால், நாம் பேசுவதை நிறுத்தலாம். 668 00:43:39,661 --> 00:43:41,371 கொஞ்ச நேரம் விவாதிக்காமல் இருக்க முயற்சி செய்வோமா? 669 00:43:41,371 --> 00:43:42,706 எனக்குத் தெரியவில்லை. நம்மால் முடியுமா? 670 00:43:49,046 --> 00:43:50,214 என்ன அது? 671 00:43:57,346 --> 00:43:59,306 கடைசியாக மூன்றாவது விதி. 672 00:44:02,100 --> 00:44:03,936 திட்டத்தை மேம்படுத்த இடம் கொடுக்க வேண்டும். 673 00:44:05,020 --> 00:44:08,774 ஏனென்றால் சிறந்த திட்டங்கள் கூட தவறாக போகலாம். 674 00:44:37,427 --> 00:44:38,762 அவன் இறந்துவிட்டானா? 675 00:44:42,599 --> 00:44:44,017 நான் அப்படித்தான் சொல்வேன், காலா. 676 00:45:16,383 --> 00:45:17,593 எஸ். பர்னெடா எழுதிய "LA TIERRA DE LAS MUJERES" நாவலால் உந்தப்பட்டது 677 00:46:08,101 --> 00:46:10,103 வசனத் தமிழாக்கம் அருண்குமார்