1 00:00:53,720 --> 00:00:54,930 குசிமாயு! 2 00:00:55,931 --> 00:00:58,517 செல்லம், மதிய உணவு தயார். 3 00:00:59,518 --> 00:01:02,187 உனக்குப் பிடித்ததைச் சமைத்திருக்கிறோம். 4 00:01:10,487 --> 00:01:12,114 அது அதுவா? 5 00:01:12,656 --> 00:01:14,825 அதுதான். 6 00:01:15,284 --> 00:01:17,077 இன்னும் ரொம்ப நேரம் ஆகாது. 7 00:01:17,578 --> 00:01:22,499 நீ உற்சாகமாக இருக்கிறாயா… அல்லது பதட்டமாக இருக்கிறாயா? 8 00:01:25,043 --> 00:01:26,712 உற்சாகமாக. 9 00:01:27,462 --> 00:01:29,965 நான் அரை மணிநேரமாக இந்த ஒரே இடத்தை 10 00:01:30,048 --> 00:01:31,967 கூட்டுவதைத் தவிர. 11 00:01:32,467 --> 00:01:34,928 நாங்கள் கவனித்தோம். 12 00:01:35,012 --> 00:01:37,931 ரொம்ப சுத்தமாக இருக்கிறது. 13 00:03:47,936 --> 00:03:51,899 இன்று வானம் அடர் நீலமாக இருக்கிறது. 14 00:03:52,733 --> 00:03:55,152 காற்றிலும் நல்ல வாசனை வீசுகிறது. 15 00:03:55,611 --> 00:03:58,071 நம்பிக்கை உணர்வு ஏற்படுகிறது. 16 00:04:23,013 --> 00:04:25,015 அது இங்கே வந்துவிட்டதா? 17 00:04:25,098 --> 00:04:26,099 ஆம். 18 00:04:28,060 --> 00:04:29,937 பயப்படாதே, செல்லம். 19 00:04:31,230 --> 00:04:33,482 நான் பயப்படவில்லை. 20 00:05:53,478 --> 00:05:54,813 இது வலிக்குமா? 21 00:05:54,897 --> 00:05:58,066 இல்லை, குசிமாயு. கொஞ்சம் கூட வலிக்காது. 22 00:05:58,150 --> 00:06:02,821 நாங்கள் ஒருபோதும் உன்னைக் காயப்படுத்த மாட்டோம். 23 00:06:05,449 --> 00:06:06,783 நீ தயாரா? 24 00:06:19,463 --> 00:06:24,134 மூன்று… இரண்டு… ஒன்று… 25 00:09:26,525 --> 00:09:28,652 அவன் இங்கே வர எவ்வளவு நேரம் ஆகும்? 26 00:09:28,735 --> 00:09:29,945 சுமார் இரண்டு மணிநேரம். 27 00:09:34,199 --> 00:09:37,286 நாம் விமானத்தில் இருந்தபோது நான் கத்தியது இவனிடம்தானா? 28 00:09:38,287 --> 00:09:39,830 உன் மனதில் நிறைய ஓடிக்கொண்டிருந்தது. 29 00:09:44,960 --> 00:09:46,170 அவன் ஆம்புலன்ஸிலா வருகிறான்? 30 00:09:50,507 --> 00:09:51,508 அது பெரிய கதை. 31 00:09:55,429 --> 00:09:56,430 அவனுக்கு என்ன வேண்டுமாம்? 32 00:09:57,681 --> 00:09:59,683 அவர் எங்களிடம் பேச மாட்டார். எனவே… 33 00:10:02,686 --> 00:10:04,271 அவருக்கு உன்னுடைய முதல் வீடியோ கிடைத்தது. 34 00:10:04,771 --> 00:10:05,772 அப்படியா? 35 00:10:06,732 --> 00:10:09,359 ஒருவேளை அவர் உன் அழைப்பைக் கவனித்திருக்கலாம்? 36 00:10:14,364 --> 00:10:15,949 நாங்கள் நினைக்கிறோம்… 37 00:10:16,033 --> 00:10:17,492 நான் நினைக்கிறேன்… 38 00:10:18,827 --> 00:10:22,289 அவர் வரும்போது அநேகமாக நான் இங்கே இருக்கக்கூடாது. 39 00:10:23,040 --> 00:10:24,291 அது அவரை வருத்தப்படுத்தும். 40 00:10:25,542 --> 00:10:29,963 நீயும் இங்கே இருக்க வேண்டியதில்லை, கேரோல். அது முழுக்க முழுக்க உன் இஷ்டம். 41 00:10:35,010 --> 00:10:38,764 அங்கே… பராகுவேவில் இருந்தா? 42 00:10:40,265 --> 00:10:42,684 தொலையட்டும். நான் அவனுக்குக் கடன்பட்டிருக்கிறேன், இல்லையா? 43 00:10:44,228 --> 00:10:46,313 அவன் சொல்வதைக் கேட்டுவிட்டு, அனுப்பி வைக்கிறேன். 44 00:10:47,814 --> 00:10:50,192 அதாவது, அவன் ஆபத்தானவன் இல்லை, இல்லையா? 45 00:10:56,281 --> 00:10:57,991 அப்படியா? ஆபத்தானவனா? 46 00:11:02,287 --> 00:11:04,081 அவர் உன்னைக் காயப்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. 47 00:11:57,134 --> 00:11:58,927 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 48 00:12:59,655 --> 00:13:01,281 என் பெயர் மனொசோஸ் ஒவியெடோ. 49 00:13:02,699 --> 00:13:04,368 நான் அவர்களில் ஒருவன் இல்லை. 50 00:13:05,452 --> 00:13:06,787 நான் உலகத்தைக் காப்பாற்ற விரும்புகிறேன். 51 00:13:10,290 --> 00:13:13,293 ஹலோ. என் பெயர் கேரோல் ஸ்ட்ருக்கா. 52 00:13:14,586 --> 00:13:17,589 வரவேற்கிறேன்… என்… என் வீட்டுக்கு. 53 00:13:21,552 --> 00:13:22,553 ஹாய். 54 00:13:23,887 --> 00:13:24,888 பேசலாமா? 55 00:13:27,349 --> 00:13:29,768 ஆம். ஆம், நாம் பேசலாம். 56 00:13:30,602 --> 00:13:34,773 ஆ… ஆனால்… இல்லை, கத்தி கூடாது. 57 00:13:36,191 --> 00:13:38,026 நான் ஆபத்தானவள் இல்லை. 58 00:13:46,034 --> 00:13:47,035 இது பாதுகாப்பானது. 59 00:14:04,052 --> 00:14:05,804 சரி. வருகிறாயா? 60 00:14:14,730 --> 00:14:16,315 நாம் இங்கே பேசுவோம். 61 00:14:18,108 --> 00:14:20,194 என் வீட்டில் பேசுவோம். 62 00:14:22,404 --> 00:14:24,364 ஒருவேளை இது நன்றாக இருக்குமா? நன்றாக? 63 00:14:26,533 --> 00:14:27,784 நாம் ஆம்புலன்ஸில் பேசுவோம். 64 00:14:28,619 --> 00:14:30,996 இல்லை. நாம் வீட்டில் பேசுவோம். 65 00:14:59,775 --> 00:15:02,569 மன்னித்துவிடு, ஆனால் நான் பதட்டப்படுத்தும் ஆம்புலன்ஸில் ஏற மாட்டேன்… 66 00:15:02,653 --> 00:15:04,780 ஹேய்! நீ என்ன செய்கிறாய்? 67 00:15:04,863 --> 00:15:05,864 அதைக் கொடு. 68 00:15:09,618 --> 00:15:11,745 உனக்குப் பைத்தியமா? அவர்கள் கேட்கிறார்கள். 69 00:15:11,828 --> 00:15:13,372 நம் திட்டத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்துவிடும். 70 00:15:13,455 --> 00:15:18,293 நான் முட்டாள் இல்லை. அது ஏர்ப்ளேன் மோடில் இருக்கிறது. ஏர்ப்ளேன் மோடு. 71 00:15:18,377 --> 00:15:20,546 சிக்னல் இல்லை. அதை என்னிடம் கொடு. கொடு. 72 00:15:20,629 --> 00:15:23,799 வேண்டாம். அதைக் கொடு! கொடு… அதை! 73 00:15:24,383 --> 00:15:25,634 - வேண்டாம்! - இல்லை. 74 00:15:26,969 --> 00:15:28,762 அடடா. 75 00:15:32,683 --> 00:15:33,934 நீ என்னோடு விளையாடுகிறாயா? 76 00:15:37,229 --> 00:15:38,230 என்ன தெரியுமா? 77 00:15:38,730 --> 00:15:42,276 நீ உன் ஆம்புலன்ஸில் ஏறி, போய்த் தொலை. 78 00:15:42,359 --> 00:15:43,527 முடிந்தது. 79 00:15:51,034 --> 00:15:53,453 - கேரோல் ஸ்ட்ருக்கா. - தெரியாத சொல் அல்லது பெயர். 80 00:15:54,037 --> 00:15:55,038 பை. 81 00:16:12,181 --> 00:16:14,725 சரி, இது அருமையாக இருக்கப் போகிறது. 82 00:16:23,567 --> 00:16:25,235 இது வெறுப்பாக இருக்கிறது. 83 00:16:44,713 --> 00:16:46,632 இந்தக் கேவலத்துக்கு ஒன்பதாயிரம் கிலோமீட்டர். 84 00:16:47,633 --> 00:16:48,842 உங்கள் வாயை மூடுங்கள். 85 00:17:29,925 --> 00:17:33,679 சரி. நீ வென்றாய். ஃபோன், இருக்கட்டும். ஆம்புலன்ஸ், வேண்டாம். 86 00:17:33,762 --> 00:17:35,013 ஆனால் எனக்கு ஒரு குடை வேண்டும். 87 00:18:01,248 --> 00:18:02,249 வா. இங்கே. 88 00:18:04,751 --> 00:18:08,463 ஏன்? முக்கிய நேரம் ஏன். 89 00:18:15,012 --> 00:18:16,972 அந்த வினோதமானவர்களால் மேலே இருந்து பார்க்க முடியும். 90 00:18:19,558 --> 00:18:21,518 அவர்கள் வானத்தில் இருந்து உதடு அசைவுகளைப் படிக்க முடியும். 91 00:18:21,602 --> 00:18:24,605 அப்படியென்றால், உள்ளே போகலாம். அங்கே ட்ரோன்களால் நம்மை உளவு பார்க்க முடியாது. 92 00:18:31,486 --> 00:18:34,448 நிச்சயமாக அவர்களால் முடியும். மைக்ரோஃபோன்களுடன். ஒட்டுக் கேட்கும் மைக்ரோஃபோன்கள். 93 00:18:34,531 --> 00:18:36,450 அவர்கள் என் வீட்டில் பக்கைப் பொருத்தியிருப்பதாக நினைக்கிறாயா? 94 00:18:40,913 --> 00:18:43,207 - பூச்சியா? பூச்சியை வைத்தா? - பூச்… இல்லை, இல்லை… அது இல்லை… 95 00:18:43,290 --> 00:18:44,875 பூச்சி இல்லை. பக். 96 00:18:45,542 --> 00:18:47,294 பொறு. நிறுத்து. உன்னை இல்லை. 97 00:18:52,299 --> 00:18:54,760 அவர்கள் ஏன் என் வீட்டிற்குள் நம்மை உளவு பார்ப்பார்கள்? 98 00:19:00,974 --> 00:19:03,685 நீ அவர்களுக்கு எதிராக இருக்கிறாய், இல்லையா? உன் வீடியோவைப் பார்த்தேன். 99 00:19:07,648 --> 00:19:10,192 அந்த வினோதமானவர்கள் ஏன் அந்த வீடியோவை எனக்கு அனுப்ப வேண்டும்? 100 00:19:10,275 --> 00:19:11,276 நான் அவர்களிடம் அனுப்பச் சொன்னேன். 101 00:19:13,946 --> 00:19:14,947 கேரோல் ஸ்ட்ருக்கா. 102 00:19:18,825 --> 00:19:20,327 தெரியாத சொல் அல்லது பெயர். 103 00:19:20,410 --> 00:19:22,621 அவர்களை அழிக்க இரண்டு மனிதர்கள் ஒன்று சேர அவர்கள் ஏன் உதவுவார்கள்? 104 00:19:22,704 --> 00:19:24,623 அழிக்க, நான்… பொறு, நான் "அழிக்க" என்று சொல்லவே இல்லை. 105 00:19:29,962 --> 00:19:30,963 இந்த வினோதமானவர்கள் தீயவர்கள். 106 00:19:33,131 --> 00:19:34,716 அவர்கள் எல்லோருடைய ஆன்மாவையும் திருடிவிட்டார்கள். 107 00:19:38,220 --> 00:19:40,472 நம்மால் அவர்களை சரிசெய்ய முடியாவிட்டால், அவர்கள் சாவது நல்லது. 108 00:19:41,598 --> 00:19:44,101 - அவர்கள் இன்னும் மனிதர்கள்தான். - அவர்கள் மனிதர்கள் இல்லை. 109 00:19:44,184 --> 00:19:46,728 ஆம், மனிதர்கள்தான். மனிதர்கள்… மனிதர்கள். 110 00:19:46,812 --> 00:19:49,606 அவர்கள் மனிதர்கள். அவர்கள் வெறும்… அவர்கள்தான்… அவர்கள் வித்தியாசமானவர்கள். 111 00:19:49,690 --> 00:19:52,067 அதாவது, அவர்கள் வினோதமானவர்கள், ஆம். 112 00:19:53,151 --> 00:19:55,445 - ரொம்ப இனிமையானவர்கள், ஆம், ஆனால் அவர்கள்… - மெதுவாக. 113 00:19:58,156 --> 00:20:00,075 அவர்கள் தீயவர்கள் இல்லை. 114 00:20:02,286 --> 00:20:03,996 அவர்கள் ஒரு எறும்பைக் கூட கொல்ல மாட்டார்கள். 115 00:20:10,043 --> 00:20:12,880 ஒரு மனிதனை ஒரு எறும்புக்கு சமமாக மதிப்பீடு செய்வது தீயது இல்லையா? 116 00:20:14,173 --> 00:20:17,384 நீ அவர்களுடன் பேச முயற்சியாவது செய்தாயா? நீ ஓரிரண்டு விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். 117 00:20:17,926 --> 00:20:19,553 அவர்களால் பொய் சொல்ல முடியாது. அது உனக்குத் தெரியுமா? 118 00:20:29,897 --> 00:20:31,648 அந்த வினோதமானவர்கள் உன்னை விட்டுவிட்டுப் போனதாகச் சொன்னாய்? 119 00:20:33,358 --> 00:20:35,569 ஆம். 40 நாட்களுக்கு. 120 00:20:40,991 --> 00:20:41,992 ஏன் திரும்பி வந்தார்கள்? 121 00:20:48,123 --> 00:20:49,124 எனக்குத் தெரியாது. 122 00:20:49,666 --> 00:20:50,918 ஏன் அவர்கள் ஒரு ஆப்பிளைப் பறிக்க முடியாது? 123 00:20:54,713 --> 00:20:56,882 - இது முட்டாள்தனம். - இது முட்டாள்தனம். 124 00:20:56,965 --> 00:20:57,966 நான் உள்ளே போகிறேன். 125 00:21:14,733 --> 00:21:16,735 ஹெலன் 126 00:21:30,666 --> 00:21:33,252 சொன்னேனே. மைக்ரோஃபோன் இல்லை. 127 00:21:34,294 --> 00:21:35,295 மகிழ்ச்சியா? 128 00:21:52,187 --> 00:21:53,397 நான் விரலை சுண்டிக் கூப்பிட்டால் பேச மாட்டேன். 129 00:22:07,828 --> 00:22:08,829 தயவுசெய்து? 130 00:22:23,719 --> 00:22:27,097 பாதிக்கப்படாத மற்ற 11 பேரைப் பற்றி என்ன? அவர்கள் உன் வீடியோவிற்குப் பதிலளித்தார்களா? 131 00:22:27,181 --> 00:22:28,432 - இல்லை. - இல்லை. 132 00:22:33,770 --> 00:22:35,272 அவர்கள் பேசக் கூட விரும்பவில்லையா? 133 00:22:35,355 --> 00:22:36,940 என்னிடம் பேச விரும்பவில்லை. 134 00:22:38,358 --> 00:22:40,819 ஆனால் அவர்களுக்குக் கண்டிப்பாக உன்னுடைய வசீகரமான ஆளுமையைப் பிடிக்கும். 135 00:22:47,534 --> 00:22:48,994 நீ எதையும் கண்டுபிடிக்க மாட்டாய். 136 00:22:51,496 --> 00:22:52,497 எனக்கு ஒரு பானம் வேண்டும். 137 00:22:53,332 --> 00:22:55,501 உனக்கு ஒரு பானம் வேண்டுமா? உனக்கு ஒரு பானம் வேண்டும். 138 00:23:03,050 --> 00:23:04,468 ஹேய். நகருகிறாயா? 139 00:23:06,136 --> 00:23:07,429 என்ன கொடுமை? 140 00:23:10,891 --> 00:23:14,228 சரி. நண்பா, பராகுவேயில் விருந்தினர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது, 141 00:23:14,311 --> 00:23:15,646 ஆனால் இங்கே அல்புகெர்கியில், 142 00:23:15,729 --> 00:23:20,025 நீ யாரையாவது மது குடிப்பதைத் தடுத்தால், அது பெரிய தவறு. 143 00:23:21,109 --> 00:23:22,277 நீ கேட்கவில்லை. 144 00:23:27,366 --> 00:23:28,825 தெரியாத சொல் அல்லது பெயர். 145 00:23:28,909 --> 00:23:30,035 இது என்ன? 146 00:23:35,082 --> 00:23:36,083 ஒரு சென்சாராக இருக்கலாம். 147 00:23:41,338 --> 00:23:43,966 - ஹாய், கேரோல். - நீங்கள் என்னை உளவு பார்த்தீர்களா? 148 00:23:44,049 --> 00:23:47,010 - உளவா? - என் மது அலமாரியில் ஒன்று இருக்கிறது. 149 00:23:47,553 --> 00:23:48,554 என்ன மாதிரியானது? 150 00:23:48,637 --> 00:23:53,183 எனக்குத் தெரியவில்லை. ஒரு பிளாஸ்டிக், செவ்வக வடிவ… தட்டையானத் தோற்றமுடையது… 151 00:23:53,267 --> 00:23:55,769 ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இருப்பது போல. 152 00:23:56,353 --> 00:23:58,772 அது நிச்சயமாக அலமாரியோடு வரவில்லை. 153 00:23:58,856 --> 00:24:00,649 நீ அதை அங்கே பொருத்தினாயா? 154 00:24:01,275 --> 00:24:03,610 சரி. அது நாங்கள் இல்லை, கேரோல். 155 00:24:04,236 --> 00:24:07,823 2011 மே மாதம் நினைவிருக்கிறதா? நீ உன் கரு முட்டைகளை உறைய வைத்தாய். 156 00:24:07,906 --> 00:24:09,157 ஆம். அதற்கு? 157 00:24:09,241 --> 00:24:11,410 அந்த சாதனம் நகர்வை கண்காணிக்கும் சென்சார். 158 00:24:11,493 --> 00:24:15,414 அது அலமாரி எப்போது திறக்கப்பட்டது என்பதைக் கண்காணித்து, அதைப் பதிவு செய்யும். 159 00:24:16,456 --> 00:24:18,792 மீண்டும் சொல்கிறேன், நாங்கள் அதை அங்கே பொருத்தவில்லை. 160 00:24:21,962 --> 00:24:22,963 ஹெலன். 161 00:24:23,881 --> 00:24:24,923 வருந்துகிறேன், கேரோல். 162 00:24:31,388 --> 00:24:32,389 இல்லை. 163 00:24:33,807 --> 00:24:34,808 பரவாயில்லை. 164 00:24:37,227 --> 00:24:38,270 நான் உன்னைப் பிறகு அழைக்கிறேன். 165 00:24:49,823 --> 00:24:50,824 அது அவர்கள் இல்லை. 166 00:24:53,368 --> 00:24:55,454 "வினோதமானவர்கள்" இல்லை. 167 00:24:55,954 --> 00:24:57,080 யார்? 168 00:24:59,374 --> 00:25:00,501 என் மனைவி. 169 00:25:01,752 --> 00:25:02,961 அவளுக்குப் பிடிக்காது… 170 00:25:06,256 --> 00:25:07,549 இப்போது நிஜமாகவே எனக்கு ஒரு பானம் தேவை. 171 00:25:10,219 --> 00:25:11,762 நீ யாருடன் ஃபோனில் பேசுகிறாய்? 172 00:25:12,804 --> 00:25:15,766 அவர்கள். எப்போதும் அவர்கள்தான். 173 00:25:17,059 --> 00:25:19,144 "மற்றவை." 174 00:25:25,526 --> 00:25:26,527 எனக்குச் சோர்வாக இருக்கிறது. 175 00:25:27,277 --> 00:25:28,820 நாம் நாளை உலகத்தைக் காப்பாற்றுவோம். 176 00:25:51,927 --> 00:25:53,387 எனவே… 177 00:25:55,889 --> 00:25:57,850 சமையலறையில் நிறைய உணவு இருக்கிறது. 178 00:26:01,061 --> 00:26:05,732 படுக்கையில் புதிய படுக்கை விரிப்புகள் இருக்கின்றன, குளியலறையில் துண்டுகள் இருக்கின்றன. 179 00:26:13,907 --> 00:26:16,493 நாளை இன்னும் நிறைய பேசுவோம். குட் நைட். 180 00:26:17,452 --> 00:26:18,912 நன்றாகத் தூங்கு. 181 00:26:21,832 --> 00:26:22,833 இது யார் வீடு? 182 00:26:24,710 --> 00:26:28,881 அவர்களின் பெயர் வில்சன் என்று நினைக்கிறேன். 183 00:26:32,634 --> 00:26:35,429 பார், அவர்கள் எப்போதாவது திரும்பி வந்தால் நான் அவர்களிடம் பேசி சமாளித்துக்கொள்கிறேன். 184 00:26:36,013 --> 00:26:37,848 கடவுளே, அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். 185 00:26:41,018 --> 00:26:42,186 இது உன் வீடு இல்லை. 186 00:26:43,187 --> 00:26:46,481 இது என் வீடு இல்லை, இல்லையா? நான் தங்க மாட்டேன். 187 00:26:47,316 --> 00:26:51,195 வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் பெரிய மஞ்சள் நிற வண்டி உன் ஆம்புலன்ஸா? 188 00:26:51,278 --> 00:26:52,988 போய் அதில் தூங்கு, எனக்குக் கவலையில்லை. 189 00:26:54,114 --> 00:26:55,866 என் ஓட்காவின் குளிர்ச்சி குறைகிறது. 190 00:26:55,949 --> 00:26:57,284 நீ வரவேற்கப்படுகிறாய். 191 00:27:26,480 --> 00:27:29,483 ஹலோ, மனொசோஸ். நீங்கள் அழைத்ததில் எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. 192 00:27:29,566 --> 00:27:31,401 நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? 193 00:27:31,485 --> 00:27:33,987 கேரோல் ஸ்ட்ருக்கா பேசிக்கொண்டிருந்த அதே வினோதமானவருடன்தான் நானும் பேசுகிறேனா? 194 00:27:34,071 --> 00:27:36,490 இல்லை. அது வேறொரு தனி நபர். 195 00:27:38,033 --> 00:27:41,119 அந்த நபரின் பெயர் என்ன? 196 00:27:42,037 --> 00:27:43,080 ஸோஷா. 197 00:27:45,040 --> 00:27:46,959 நான் ஸோஷாவுடன் பேச விரும்புகிறேன். 198 00:28:55,027 --> 00:28:56,278 என்ன நடக்கிறது? 199 00:29:22,679 --> 00:29:23,680 ஹாய், கேரோல். 200 00:29:26,058 --> 00:29:27,434 இங்கே என்ன நடக்கிறது? 201 00:29:28,268 --> 00:29:29,520 நீ என்ன செய்கிறாய்? 202 00:29:30,854 --> 00:29:33,607 - நான் பேச வேண்டும் என்கிறாய். நான் பேசுகிறேன். - இவளோடு கூடாது. 203 00:29:34,608 --> 00:29:35,692 என்ன பேசினீர்கள்? 204 00:29:36,735 --> 00:29:39,821 ஸோஷா? அவனிடம் என்ன சொன்னாய்? 205 00:29:41,823 --> 00:29:44,785 எல்லாமே. அதை எப்படி சொல்வார்கள்? 206 00:29:45,327 --> 00:29:46,328 எல்லாமே. 207 00:29:47,663 --> 00:29:48,664 எல்லாம். 208 00:29:50,082 --> 00:29:51,708 எல்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். 209 00:29:53,001 --> 00:29:54,002 வா, நாம் கிளம்புகிறோம். 210 00:29:58,549 --> 00:30:00,050 ஸோஷா. இப்போதே. 211 00:30:24,867 --> 00:30:26,702 எனக்கு இன்னொருவரை அனுப்பு. 212 00:30:43,886 --> 00:30:44,887 எல்லாம். 213 00:30:45,554 --> 00:30:46,889 எல்லாம்? 214 00:30:47,639 --> 00:30:50,559 என்ன மாதிரியான எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாய்? 215 00:30:50,642 --> 00:30:52,102 - வருந்துகிறேன், கேரோல். - அவனிடம் சொன்னாயா… 216 00:30:54,563 --> 00:30:56,064 நீ சரியாக அவனிடம் என்ன சொன்னாய்? 217 00:30:57,065 --> 00:30:59,026 நாங்களாக முன்வந்து எதையும் சொல்லவில்லை. 218 00:30:59,526 --> 00:31:02,738 அவர் எங்களிடம் குறிப்பிட்ட கேள்விகள், விரிவான கேள்விகளைக் கேட்டார். 219 00:31:02,821 --> 00:31:05,199 அவர் ரொம்ப துல்லியமாகவும், பிடிவாதமாகவும் இருந்தார். 220 00:31:05,282 --> 00:31:06,283 பிறகு… 221 00:31:07,034 --> 00:31:09,912 அது எங்கள் இயல்பு. நாங்கள் அவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். 222 00:31:10,412 --> 00:31:13,624 ஆம். நீங்கள் சொல்லியாக வேண்டும். சரி. எனக்குத் தெரியும். 223 00:31:14,208 --> 00:31:16,251 நீங்கள் ஏன் இவ்வளவு நேர்மையாக இருக்க வேண்டும்? 224 00:31:16,335 --> 00:31:19,630 - உங்களிடம் பொய் சொல்வது எங்கள் இயல்பில் இல்லை. - ஆம், ஆனால் என்னிடம், அவனிடம் இல்லை. 225 00:31:21,006 --> 00:31:27,346 இதைப் புரிந்துகொள்வது கடினம்தான், ஆனால் நாங்கள் உன்னை நேசிப்பதைப் போலவே அவரையும் நேசிக்கிறோம். 226 00:31:31,266 --> 00:31:32,267 இல்லை. 227 00:31:34,478 --> 00:31:37,940 நீங்கள் அவனையும் அதே போல நேசிக்க முடியாது. ஒரே மாதிரி கூடாது. அது வேறு. 228 00:31:39,566 --> 00:31:40,567 அவன் ஒரு அந்நியன். 229 00:31:40,651 --> 00:31:43,237 உனக்கு அவனை அரிதாகத்தான் தெரியும். நீயே என்னிடம் சொன்னாய். 230 00:31:43,320 --> 00:31:44,530 அதோடு நாம்… நாம்… 231 00:31:47,032 --> 00:31:48,033 நீ என்… 232 00:31:49,993 --> 00:31:50,994 நீ என்… 233 00:31:54,331 --> 00:31:55,541 நீ என் பணிப்பெண். 234 00:31:57,251 --> 00:31:58,252 என்னுடையவள். 235 00:32:00,087 --> 00:32:01,088 ஆம். 236 00:32:02,631 --> 00:32:03,632 அது உண்மைதான். 237 00:32:04,341 --> 00:32:06,176 - ஆனால்… - நீ அவனிடமிருந்து விலகி இருக்க வேண்டும். 238 00:32:06,260 --> 00:32:07,511 சரியா? 239 00:32:07,594 --> 00:32:09,805 அதாவது, நீ அந்தக் கத்தியைப் பார்த்தாயா? 240 00:32:10,764 --> 00:32:14,935 அவன் உங்களைப் பற்றி சொல்லும் விஷயங்களை நீ கேட்க வேண்டும். வினோதமானவர்கள். தீயவர்கள்… 241 00:32:15,018 --> 00:32:16,854 - நீ என்ன செய்கிறாய்? - வருந்துகிறேன், கேரோல். 242 00:32:16,937 --> 00:32:18,397 ஒன்று நடக்கப் போகிறது. 243 00:32:18,480 --> 00:32:19,523 என்ன? 244 00:32:19,606 --> 00:32:21,567 தயவுசெய்து. பதறாதே. 245 00:32:23,443 --> 00:32:24,444 ஸோஷா? 246 00:32:28,365 --> 00:32:29,700 ஸோஷா? 247 00:32:29,783 --> 00:32:31,952 அடக் கடவுளே. ஸோஷா! ஸோ… 248 00:32:35,289 --> 00:32:36,832 ஹேய். ஹேய்! 249 00:32:37,958 --> 00:32:40,919 என்ன நடக்கிறது? நான் செய்யவில்லை… நான் இல்லை… எப்படி… 250 00:32:46,008 --> 00:32:47,259 அடச்சே. 251 00:32:58,395 --> 00:32:59,396 கடவுளே. 252 00:32:59,980 --> 00:33:02,191 அவனிடமிருந்து விலகு. 253 00:33:03,192 --> 00:33:04,526 ஹேய். 254 00:33:04,610 --> 00:33:05,611 ஹேய். 255 00:33:07,029 --> 00:33:08,030 ஹேய்! 256 00:33:11,909 --> 00:33:12,910 ஹேய். 257 00:33:52,699 --> 00:33:54,451 நீ ஒரு சைக்கோ, அது உனக்குத் தெரியுமா? 258 00:33:54,535 --> 00:33:57,329 நீ எத்தனைப் பேரைக் கொன்றாய் என்று உனக்குத் தெரியுமா? 259 00:34:01,625 --> 00:34:02,626 ஹேய். 260 00:34:03,335 --> 00:34:04,962 உனக்கு ஒன்றுமில்லை. உனக்கு ஒன்றுமில்லை. 261 00:34:05,045 --> 00:34:06,755 நிதானமாக இரு. 262 00:34:13,469 --> 00:34:15,973 என்ன கொடுமை இது? 263 00:34:46,378 --> 00:34:47,379 ரிக். 264 00:34:48,797 --> 00:34:50,382 நீ உள்ளே இருப்பது எனக்குத் தெரியும். 265 00:34:52,259 --> 00:34:53,260 நான் உனக்கு உதவுகிறேன். 266 00:34:55,929 --> 00:34:56,929 நான் இருக்கிறேன். 267 00:34:59,099 --> 00:35:02,436 கேள், ரிக். நான் இருக்கிறேன். 268 00:35:06,356 --> 00:35:08,692 நீ திரும்பி வா. சரியா? 269 00:35:10,068 --> 00:35:11,069 உன்னால் முடியும். 270 00:35:14,948 --> 00:35:16,909 கேள். கேள், ரிக். 271 00:35:17,492 --> 00:35:19,995 உனக்கு ஞாபகமிருக்கிறது. ஞாபகமிருக்கிறதா? 272 00:35:25,626 --> 00:35:28,879 நீ உள்ளே இருக்கிறாய். ஆனால் நீ திரும்பி வா. 273 00:35:29,713 --> 00:35:32,925 ரிக். நீ உள்ளே இருப்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ ஞாபகப்படுத்திப் பார்க்கலம். நீ… 274 00:35:33,008 --> 00:35:35,761 நீ திரும்பி வரலாம். 275 00:35:36,595 --> 00:35:37,971 நான் இருக்கிறேன். 276 00:35:38,055 --> 00:35:41,266 நான் சொல்வதைக் கேள், ரிக். ரிக், என்னைப் பார். 277 00:35:53,237 --> 00:35:55,239 பின்னால் வா. உடனே. 278 00:36:08,126 --> 00:36:09,127 ஹேய். 279 00:36:17,511 --> 00:36:19,346 இங்கே. நாற்காலி மீது சாய்ந்துகொள். 280 00:36:32,943 --> 00:36:33,986 நீ நலமா? 281 00:36:35,529 --> 00:36:36,530 ஆம். 282 00:36:39,199 --> 00:36:40,617 எங்களுக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? 283 00:36:41,159 --> 00:36:42,286 ஆம். ஆம், நிச்சயமாக. 284 00:36:53,255 --> 00:36:54,256 நன்றி. 285 00:37:03,182 --> 00:37:06,101 மெதுவாக. மெதுவாக குடி. 286 00:37:16,904 --> 00:37:17,988 உறுதியாக நீ நன்றாக இருக்கிறாயா? 287 00:37:19,573 --> 00:37:21,658 ஆம். தாகம், அவ்வளவுதான். 288 00:37:22,326 --> 00:37:23,327 நாங்கள்… 289 00:37:25,996 --> 00:37:28,081 நான் நன்றாக இருப்பேன். நன்றி. 290 00:37:35,088 --> 00:37:36,632 அது யார் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? 291 00:37:37,257 --> 00:37:38,258 அது யாரென்று எனக்குத் தெரியும். 292 00:37:59,363 --> 00:38:00,531 இந்த முறை நான் இல்லை. 293 00:38:05,369 --> 00:38:06,495 நாசமாய்ப் போ, லக்ஷ்மி. 294 00:38:16,630 --> 00:38:17,840 கேரோல், நான் ரொம்ப வருந்துகிறேன். 295 00:38:18,924 --> 00:38:20,259 நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியும். 296 00:38:55,252 --> 00:38:56,670 கேரோல், மனொசோஸ் எங்கே? 297 00:38:57,296 --> 00:38:58,922 அவன் நன்றாக இருக்கிறான். அவனைப் பற்றி கவலைப்படாதே. 298 00:39:00,757 --> 00:39:04,219 இது பெரிய விஷயம் இல்லைதான், அவர் முதலில் எங்களை எச்சரித்ததை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 299 00:39:04,887 --> 00:39:05,888 அவர் என்ன செய்தாரோ… 300 00:39:07,806 --> 00:39:08,807 அதைச் செய்வதற்கு முன்பு. 301 00:39:22,321 --> 00:39:24,198 இந்த நிலைக்கு வந்ததற்கு நாங்கள் வருந்துவதாக தயவுசெய்து அவரிடம் சொல். 302 00:40:10,410 --> 00:40:13,580 அவர்கள் மீண்டும் கிளம்புகிறார்கள். அவர்கள் எல்லோரும், முழு நகரமுமே. 303 00:40:15,666 --> 00:40:16,750 நான் உன்னிடம் சொல்ல முயற்சித்தேன். 304 00:40:23,465 --> 00:40:24,466 அதனால் என்ன? 305 00:40:29,680 --> 00:40:32,391 அது மதிப்புமிக்கதாக இருந்தது. முழுவதும். இப்போது எனக்கு அதிகம் தெரியும். 306 00:40:37,479 --> 00:40:40,858 நீ சொன்னது சரி. விஷயங்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற ஒரு வழி இருக்கிறது என நினைக்கிறேன். 307 00:40:43,402 --> 00:40:44,403 வா. 308 00:40:45,988 --> 00:40:47,155 இப்போது வேலை தொடங்குகிறது. 309 00:40:54,204 --> 00:40:55,372 கேரோல் ஸ்ட்ருக்கா. 310 00:40:55,455 --> 00:40:56,540 தெரியாத சொல் அல்லது பெயர். 311 00:40:59,418 --> 00:41:00,919 தண்ணீரும் மின்சாரமும் இருக்கிறது. 312 00:41:02,087 --> 00:41:05,549 உனக்கு வேறு ஏதாவது தேவைப்பட்டால், உணவு அல்லது எதுவோ, பூஜ்ஜியத்தை டயல் செய்யவும். 313 00:41:12,931 --> 00:41:13,932 கேரோல் ஸ்ட்ருக்கா… 314 00:41:15,601 --> 00:41:18,812 தெரியாத சொல் அல்லது பெயர். உனக்கு உலகத்தைக் காப்பாற்ற வேண்டுமா அல்லது அந்தப் பெண் வேண்டுமா? 315 00:42:28,382 --> 00:42:31,385 தி லெஃப்ட் ஹேண்டு ஆஃப் டார்க்னஸ் உர்சுலா கே. லி குயின் 316 00:45:02,327 --> 00:45:03,620 நன்றி. 317 00:45:04,621 --> 00:45:05,622 இதோ. 318 00:45:05,706 --> 00:45:07,082 சரி. 319 00:45:15,340 --> 00:45:16,341 நன்றாக இருக்கிறது. 320 00:45:23,348 --> 00:45:24,641 நீ ரொம்ப அமைதியாக இருக்கிறாய். 321 00:45:24,725 --> 00:45:25,851 இல்லை. நான் யோசித்துக்கொண்டிருந்தேன். 322 00:45:26,351 --> 00:45:27,686 என்ன யோசிக்கிறாய்? 323 00:45:27,769 --> 00:45:28,770 ஒன்றுமில்லை. 324 00:45:32,191 --> 00:45:33,192 இல்லை, நான்… 325 00:45:35,652 --> 00:45:40,240 எனக்கு வியப்பாக இருந்தது, ஒருவேளை நீ இதற்கு முன்பு யாராக இருந்தாயோ, 326 00:45:40,324 --> 00:45:42,326 - ஒன்றிணையாத ஸோஷாவாக இருந்த நீ… - எனக்குப் புரிகிறது. 327 00:45:42,409 --> 00:45:43,744 …ஒருவேளை அவள்… 328 00:45:46,413 --> 00:45:49,875 அவளுக்கு யாராவது இருந்தார்களா? அவளுடைய கடந்த காலத்தில்? 329 00:45:51,210 --> 00:45:53,921 அவளுக்கு இருந்தார்கள். அது நீண்ட காலத்திற்கு முன்பு. 330 00:45:55,589 --> 00:45:58,217 அவர்களுக்கு என்ன நடந்தது? 331 00:46:00,427 --> 00:46:03,889 அவர்கள் உங்களுக்குள் இருக்கிறார்களா? இப்போது உன்னுடன்? 332 00:46:05,140 --> 00:46:06,141 இல்லை. 333 00:46:07,518 --> 00:46:08,519 அவர்கள் இல்லை. 334 00:46:15,025 --> 00:46:16,026 மன்னித்துவிடு. 335 00:46:19,404 --> 00:46:22,324 நான் நன்றாக உணர்வதில் கைதேர்ந்தவள் என்று நினைக்கவில்லை. 336 00:46:25,410 --> 00:46:26,411 அது உன்னை என்ன செய்யும்? 337 00:46:27,120 --> 00:46:30,916 - எது? - உனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. 338 00:46:32,084 --> 00:46:33,627 நம் உடலில் இருப்பதைப் போல. என்ன இரசாயனங்கள்? 339 00:46:34,753 --> 00:46:36,421 ஒரு கலவை இருக்கிறது. 340 00:46:36,505 --> 00:46:43,011 செரடோனின், டோபமின், வேசோப்ரசின், நிச்சயமாக ஆக்ஸிடோசின். 341 00:46:44,096 --> 00:46:45,097 வேடிக்கையான உண்மை. 342 00:46:45,889 --> 00:46:50,602 வரிக்குதிரை மீனைப் பற்றிய ஒரு ஆய்வு, சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே 343 00:46:50,686 --> 00:46:53,856 முதுகெலும்பு கொண்ட உயிரினங்களில் பச்சாதாப உணர்வு உருவாவதற்கு ஆக்ஸிடோஸின் 344 00:46:54,356 --> 00:46:55,983 காரணமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டுகிறது. 345 00:46:58,277 --> 00:47:02,197 என் இரத்தத்தில் ஒவ்வொரு மகிழ்ச்சியான இரசாயனமும் பாய்ந்து கொண்டிருக்கும். 346 00:47:05,117 --> 00:47:07,411 அந்த எண்ணம் போய்விடும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அது போகவில்லை. 347 00:47:10,706 --> 00:47:11,790 அது போக நான் விரும்பவில்லை. 348 00:47:12,541 --> 00:47:13,542 நான் மகிழ்ச்சி. 349 00:47:15,252 --> 00:47:16,670 அது இன்னும் சிறப்பாகிக்கொண்டே போகும். 350 00:47:22,551 --> 00:47:23,635 சிறப்பாகவா? 351 00:47:28,015 --> 00:47:31,143 நீ ஒன்றிணைதலைப் பற்றி பேசவில்லைதானே? 352 00:47:33,562 --> 00:47:35,230 அது கூட இல்லை… 353 00:47:36,315 --> 00:47:38,192 உங்களுக்கு என் ஸ்டெம் செல்கள் தேவை என்று சொன்னாய். 354 00:47:39,193 --> 00:47:40,319 என்ன, அது மாறிவிட்டதா? 355 00:47:40,819 --> 00:47:42,529 இல்லை. அது சரிதான். 356 00:47:43,030 --> 00:47:45,115 எனவே என் ஸ்டெம் செல்கள் இல்லாமல், உங்களால் என்னை மாற்ற முடியாது. 357 00:47:46,408 --> 00:47:51,330 என் உடம்பில் ஒரு ராட்சத ஊசியைக் குத்துவதற்கு நான் உங்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், 358 00:47:51,413 --> 00:47:55,334 பிறகு உங்களால் அவற்றை எடுக்க முடியாது, நான் நானாக இருப்பேன். சரியா? 359 00:47:58,504 --> 00:47:59,963 அது சரியானதாக இருக்கும். 360 00:48:01,715 --> 00:48:02,716 இருக்கும். 361 00:48:06,720 --> 00:48:10,682 என் ஸ்டெம் செல்களைப் பெற வேறு வழி இல்லை, இல்லையா? 362 00:48:19,316 --> 00:48:20,901 இல்லை என்றால், நீ இல்லை என்று சொல்வாய். 363 00:48:26,949 --> 00:48:27,950 எனவே ஒரு வழி இருக்கிறது. 364 00:48:48,762 --> 00:48:49,763 என் கரு முட்டைகள். 365 00:48:50,973 --> 00:48:52,349 ஹெலனுடன் நான் உறைய வைத்தவை. 366 00:48:55,644 --> 00:48:56,812 அவை உங்களிடம் இருக்கின்றன, இல்லையா? 367 00:49:03,318 --> 00:49:04,319 எங்களிடம் இருக்கிறது. 368 00:49:05,404 --> 00:49:07,656 உங்களால் அவற்றை ஸ்டெம் செல்களாக மாற்ற முடியும், இல்லையா? 369 00:49:07,739 --> 00:49:10,409 அதற்கு நேரமும் பொறுமையும் தேவை, அதோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை. 370 00:49:10,492 --> 00:49:11,660 ஆனால் நீங்கள் அதற்கான ஆய்வை செய்கிறீர்கள். 371 00:49:14,580 --> 00:49:15,581 செய்கிறோம். 372 00:49:16,164 --> 00:49:18,959 அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும், கேரோல். 373 00:49:19,585 --> 00:49:21,920 நாங்கள் ஏன் அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை நீ பார்க்கலாம். 374 00:49:22,421 --> 00:49:25,757 நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாயோ, அது கடல் அளவில் ஒரு துளிதான். 375 00:49:26,758 --> 00:49:30,637 உண்மையில், குசிமாயு. அந்த இளம் பெருவியன் பெண்ணை ஞாபகமிருக்கிறதா? 376 00:49:31,346 --> 00:49:32,472 அவள் எங்களோடு ஒன்றிணைத்துவிட்டாள். 377 00:49:33,056 --> 00:49:38,187 நான் உனக்கு சத்தியம் செய்கிறேன், அவள் எப்போதும் இருந்ததைவிட மகிழ்ச்சியாக இருக்கிறாள். 378 00:49:39,855 --> 00:49:42,024 நீ விரும்பினால் அவள் வாயாலேயே நேரடியாகக் கேட்கலாம். 379 00:49:42,107 --> 00:49:43,317 எனக்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது? 380 00:49:44,860 --> 00:49:47,779 தூண்டப்பட்ட ப்ளூரிபொடென்ட் ஸ்டெம் செல்கள் ரொம்ப மென்மையானவை, 381 00:49:47,863 --> 00:49:49,489 - அதோடு நாங்கள் கையாளும் ஹாப்ளாய்ட்… - எவ்வளவு காலம்? 382 00:49:53,410 --> 00:49:54,536 ஒரு மாதம். 383 00:49:54,620 --> 00:49:57,122 இரண்டு அல்லது மூன்றுக்கு மேல் இல்லை என்று நம்புகிறேன். 384 00:50:07,591 --> 00:50:09,426 நீங்கள் என்னை நேசித்திருந்தால், இதைச் செய்ய மாட்டீர்கள். 385 00:50:11,178 --> 00:50:12,179 கேரோல். 386 00:50:14,306 --> 00:50:19,603 நாங்கள் உன்னை நேசிப்பதால்தான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள். 387 00:50:23,065 --> 00:50:25,150 ஏனென்றால் நான் உன்னை நேசிக்கிறேன். 388 00:50:32,991 --> 00:50:33,992 கேரோல். 389 00:51:15,200 --> 00:51:16,326 ஸ்டேண்டிங் வேவ்கள் 390 00:51:16,410 --> 00:51:20,497 இந்தப் புள்ளிகளை நாங்கள் கரண்ட் ஆன்டினோடுகள் அல்லது லூப்கள் என்று அழைக்கிறோம். 391 00:51:20,581 --> 00:51:22,291 மெரியம்-வெப்ஸ்டர் ஸ்பானிஷ் ஆங்கில அகராதி 392 00:51:28,338 --> 00:51:32,551 லூப் 393 00:51:32,634 --> 00:51:35,554 லூப் = சர்க்யூட் 394 00:52:36,448 --> 00:52:40,118 தீ 395 00:54:48,413 --> 00:54:49,540 நீ வென்றாய். 396 00:54:53,877 --> 00:54:54,878 நாம் உலகத்தைக் காப்பாற்றுவோம். 397 00:54:59,466 --> 00:55:00,467 கேரோல் ஸ்ட்ருக்கா. 398 00:55:03,929 --> 00:55:04,930 இது என்ன? 399 00:55:06,306 --> 00:55:07,307 அணுகுண்டு. 400 00:57:03,799 --> 00:57:05,801 வசனத் தமிழாக்கம் அருண்குமார்